privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திடி.சி.எஸ் கோட்டைக்குள்ளே புகுந்த புஜதொமு - படங்கள் !

டி.சி.எஸ் கோட்டைக்குள்ளே புகுந்த புஜதொமு – படங்கள் !

-

25,000 ஊழியர்களை வெளியேற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்திற்கு எதிராக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும், வினவு தளமும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றன. இதன் அங்கமாக இன்று 09.01.2015 சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ் அலுவலகத்தின் நுழைவாயில் அருகே காலை 8 மணி அளவில் தோழர்கள் நுழைந்தனர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் தொழிலாளர்களும், பு.ஜ.தொ.மு வழக்கறிஞர்களும் அங்கே வீச்சாக பிரச்சாரம் செய்தனர். நாளை நடைபெறும் அரங்க கூட்டத்தின் துண்டுப்பிரசுரத்தை நூற்றுக்கணக்கில் விநியோகித்தனர்.

ஆங்கிலம், தமிழ், மலையாளத்தில் தோழர்கள் உரையாற்றினர். வாயில் அருகே பேருந்துகள், கார்கள், ஆட்டோக்களில் வந்திறங்கிய டி.சி.எஸ் ஊழியர்கள் ஆர்வத்துடன் உரையை கேட்டதோடு, பிரசுரத்தையும் வாங்கி வைத்துக் கொண்டனர். பலர் கலந்துரையாடினர்.

இதுவரை இணையத்திலும், சிப்காட்டுக்கு வெளியேயும் நடந்த பிரச்சாரம் இன்று தமது அலுவலகத்திற்குள்ளேயே நுழைந்தது குறித்து டி.சி.எஸ் நிர்வாகம் கலகலத்துப் போனது. உடனே பாதுகாவலர்களும், அவர்களின் மேலதிகாரிகளும் தோழர்களிடம் காலி செய்யுமாறு மிரட்டினர். அசைந்து கொடுக்காத தோழர்கள் இது தமது அடிப்படை உரிமை என்றவாறு பிரச்சாரத்தை தொடர்ந்தனர்.

ஹெச்.ஆர் அதிகாரிகளும் உடன் வந்து அருகே கலவரத்துடன் கிசுகிசுத்துக் கொண்டனர். இத்தகைய போர்க்குணமிக்க தொழிற்சங்கத்தை அவர்கள் இதுவரை கண்டதில்லை போலும். பிறகு போலீசுக்கு போன் போட்டு வரவழைத்தனர். போலீசிடம் விவாதித்தவாறே தோழர்கள் பிரச்சாரத்தை தொடர்ந்தனர். இவ்வாறாக ஒரு மணிநேரம் பிரச்சாரம் தொடர்ந்தது.

ஐ.டி ஊழியர்களே இனி எதற்கு பயம்? ஆட் குறைப்பு அநீதிக்கு எதிராக அணிதிரளுங்கள். நாம் சேர்ந்தால் டாடா என்ன, அமெரிக்காவே நினைத்தால் கூட நமது வாழ்க்கையை பறிக்க முடியாது.

இன்றைய நிகழ்வைத் தொடர்ந்து ஐ.டி ஊழியர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள், டாக்டர் ருத்ரன் உள்ளிட்டோர் உரையாற்றும், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் வரும் சனிக்கிழமை ஜனவரி 10, 2015 அன்று மாலை 5 மணிக்கு சிறுசேரிக்கு அருகில் உள்ள படூரில் நடைபெறவுள்ளது. அனைவரும் வாருங்கள்!

டி.சி.எஸ்-ன் கார்ப்பரேட் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

தொழிற்சங்கமாய் அணிதிரள்வோம்!

Join us…….

https://www.facebook.com/VinavuCombatsLayoff
Phone : 90031 98576
Mail: combatlayoff@gmail.com

Meeting at
Bharatha Mahal, Padur Bus Stop
On OMR 2 km from Siruseri towards Kelambakkam
Bus routs : 21H, 19B, 151C, 570
10.1.2015 Saturday at 5.00 pm

கலந்துரையாடல் கூட்டம்

பாரத மகால் மண்டபம், படூர் பேருந்து நிறுத்தம்
OMR சாலையில் சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் போகும் வழியில்
பேருந்து வழித்தடங்கள் – 21H, 19B, 151C, 570
10.1.2015 மாலை 5 மணி

NDLF action in Chennai TCS (1)
சென்னை சிறுசேரி டி.சி.எஸ் அலுவலக நுழைவாயிலில் நுழைந்த தோழர்கள்!
NDLF action in Chennai TCS (8)
ஆங்கிலத்தில் உரையாற்றும் வழக்கறிஞர் தோழர்
NDLF action in Chennai TCS (3)
துண்டுப் பிரசுரத்தை ஆர்வமாக வாங்கிச் செல்லும் டி.சி.எஸ் ஊழியர்கள்

NDLF action in Chennai TCS (4)

NDLF action in Chennai TCS (6)

NDLF action in Chennai TCS (7)

NDLF action in Chennai TCS (9)

NDLF action in Chennai TCS (10)
டாடாவின் பாதுகாவலர்கள் என்ன செய்வார்கள்? தொழிற்சங்கம் நமது உரிமை, போராடுவது நமது கடமை!

NDLF action in Chennai TCS (11)

NDLF action in Chennai TCS (12)

NDLF action in Chennai TCS (13)

NDLF action in Chennai TCS (14)

_________________

வினவு – vinavu.com

New Democratic Labour Front

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

  1. அருமையான முயற்சி, நண்பர்களுக்கு வாழ்த்துகள். இதில் கண்டிப்பாக பலன் இருக்கிறது.

    தரமணி தொழிலாளர்கள் வெண்மணித் தொழிலாளர்கள் போன்றவர்கள்தான். அதிகாலையில் ப்ளாஸ்டிக் தூக்கைத்தூக்கிக்கொண்டு கிளம்பி 1-2 மணி நேரம் பயணித்து சூரியன் உதிக்குமுன் Data Farm க்குள் கால்வைக்க வேண்டும். வரப்புகள் (Tables & Columns) போடவேண்டும். வாய்க்கால் கால்வாய் போட்டு பராமரிக்கவேண்டும். அடைப்போ உடைப்போ சரி செய்ய வேண்டும். பூச்சிகள் ஆயிரம் சமாளிக்கவேண்டும். களை பிடுங்கவேண்டும். மாலையானாலும் வயிலிலிருக்கும் வேலையை முடிக்காமல் வெளியேற முடியாது. வேலையை முடித்து விட்டு கங்காணிக்கு status update கொடுத்து விட்டுத்தான். வெளியே வரவேண்டும். வயலில் வேலை யிருந்தால் சனி ஞாயிறு கிடையாது, நல்ல நாள் கெட்டநாள் எதுவும் கிடையாது. இளம் தாய்மார்கள் குழந்தையை வேளாவேளைக்கு பால் கொடுக்கா முடியாமல் creche ல் விட்டுவிட்டு வேலை செய்யவேண்டும்……

  2. நன்றி.. ஆனால் இன்னம் பல உதிரி அமைப்புகளுடன் இணைய முயற்சித்தால் நலம் ..

  3. நான் சுயநிதி பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக கடந்த ஐந்து வருடமாக வேலை பார்க்கிறேன். எனது கல்லூரி யுஜிசி கட்டுபட்ட தன்னாட்சி பெற்ற கல்லூரி மற்றும் என்பிஏ சான்றிதல் பெற்ற கல்லூரி. ஆனால் நாங்கள் இதுநாள் வரை ஒழுங்காக சம்பளம் குறித்தநாளில் பெற்றது கிடையாது. எனது கல்லூரியில் 4000 மாணவர்கள் படிக்கிறார்கள். சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரியில் சுமார் ஐந்து ஆயிரம் பேராசிரியர்கள் வேலை பார்க்கிறார்கள் தமிழ்நாட்டில் ஆனால் எஙகளுக்கு என்று ஒரு சஙகம் கிடையாது. வேலையிலும் உத்திரவாதம் கிடையாது. இது ப்ற்றி யுஜிசி, எஐசிடி இ புகார் அளித்தும் எந்தநடவடிக்கையும் இல்லை. வினவு தோழர்களே! எஙகளுக்கு உதவ வருவீர்களா!

    • தமிழன் சார் தன்னாட்சி பெற்ற கல்லூரிக்கும் நிகர்நிலை பல்கலை கழகத்துக்கும் என்ன வித்தியாசம் ஏன்னா ரெண்டுமே யு ஜி சி கண்ட்ரோலில்தான் வருது அத பத்தி எனக்கு கொஞ்சம் விளக்க முடுயுமா கண்டிப்பா வினவு உங்களுக்கு கெள்ப் பண்ணுவாகனு நினைக்கிறேன் இப்ப டிசிஎஸ் க்கு எதிரான போராட்ட்த்துல பிஸியா இருக்குறதால எப்பிடியும் கெல்ப் பண்ணுவாக தன்னாட்சி பெற்ற கல்லூரிகளை நிகர்நிலை பல்கலை கழகங்கள் கொஞ்சம் ஓவராத்தான் ஆடுறாங்க இப்பதான் ஜெ பி ஆர் காலேஸ்ல சங்கம் ஆரம்பிச்சதா வினவுல போட்டாக அதுவும் இல்லாம ஒரு வாத்தியாரயே போலிஸ்ல பிடிச்சு குடுத்துட்டதா வேற வினவுல சொல்லிறுந்தாக எது வந்தாலும் பரவா இல்ல நம்ம கஸ்டப்பட்டாலும் பின்னாடி வேலைக்கு வர்றவன ஏமாத்திர்க்கூடாது அப்பிடினு நினைச்சு துணிஞ்சு போராட தாயார இருப்பிகளா இல்லைனா வினவு மட்டும் இல்ல யாரு கெல்ப் பண்னாலும் வேஸ்டுதான்…

  4. செயல் ஊக்கம் உள்ள புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்களுக்கு எனது வாழ்த்துகள்

  5. This is going to be futile exercise.

    Lay-off in any company is not pleasant; but it needs to be accepted as part of our career.

    Let’s say you construct a home by hiring 20 construction workers; after the job is done, you would let them go, wouldn’t you?

    Let’s look at this from the Employer’s (such as TCS) perspective: when they don’t have projects from clients, how would they be able to keep the employees in bench and pay for a long time?

    Indian companies / employees have been enjoying their honeymoon for a while. It’s going to get worse when other countries are going get into this outsourcing aggressively with low cost. It’s going to be rough-ride for us after few years.

    In the fast-paced, changing, competitive corporate world, this is inevitable. But, we need to move on; let’s look at the opportunities ahead of us and keep going…

  6. It seems uma shankar is on the wrong side of reality. Only equals shall be compared, not the contrary one. How can one compare a house construction, a one time objective with that of a life-dependent long and continual profession / work, based on which only one’s family life is planned. It is the top management’s duty to foresee the future avenues and draw strategies to keep the co going along its dependents / employees.The sick one has to consult a doctor, get treatment and cured, then start keep going, and never try to end life or push others to the extreme.
    As Uma S perceives, it is not the lack of jobs but the IT cos intentions are to trap more revenue at the cost of its own employees by retrenching them and inducting fresh hands with low salary structures. Right to live is synonymous with right to work.If US’s perception is to be accepted, well we have to adopt the stone-age type of lively-hood and forsake all sort of the so called advancement and civilization.

  7. Samuel,
    Reality as I understand: Life is bigger than career; career is bigger than a job; a job will have a beginning and end. Gone are the days when the job ends with the retirement.

    A software project can very well be compared with a construction project esp when it matters to staff augmentation. TCS or any Software consulting companies are resource providers. They thrive when their service can attract customers. It’s not easy for any consulting company in the world to meticulously foresee its future.

    We all need to understand that Employers need consultants as much as employees need the jobs. Companies would like to retain them as long as they are productive. When employees are free to choose their employers the same freedom should be extended to the employers too.
    India’s share is very negligible when it comes to software product development; we have plenty of opportunities ahead of us.

    When you are an entrepreneur or talk to one, you will understand the difficulties /challenges of them.

  8. //A software project can very well be compared with a construction project esp when it matters to staff augmentation. TCS or any Software consulting companies are resource providers. They thrive when their service can attract customers. It’s not easy for any consulting company in the world to meticulously foresee its future.

    We all need to understand that Employers need consultants as much as employees need the jobs. Companies would like to retain them as long as they are productive. When employees are free to choose their employers the same freedom should be extended to the employers too.// He didn’t even bother to find the TCS rationale behind this Lay Off. without any thoughts he accepts the lies of TCS as true and the laid off employees are non performers and/or the technology has no project in TCS etc. none of this is true. This Guys is very conveniently avoids the cliams of TCS employees – Over 30 age are removed – Longest serving with consistently productive and exemplary employees are removed. The only reason is to cut the salary overheads and cream their already 30% profit with more juice from these Cuts. These animals are man eaters.

  9. //When you are an entrepreneur or talk to one, you will understand the difficulties /challenges of them.// When you are an worker or talk to one you will understand with out a months salary he is begger.

    • Everyone is or would have been an employee. My point is to be prepared for any eventualities and sharpen your skills for the next job. In other words, let’s rely on our skills/knowledge rather than our current job.

  10. Angnaani,

    It is true that all of us, workers, depend on month’s salary.
    Normally, the month’s salary doesn’t last for 30 days and if we are not sharp enough, we end up borrowing after 20 days and fall in to a debt trap.

    My father was a government servant and he ended up into a serious debt trap.
    When I was talking to my North Indian friend (He is a Punjabi), he mentioned that all we South Indians reduce our expenditure according to our Income and they North Indians increase their income according to their expenses. That is the fundamental difference between us and them. This actually opened my eyes. Why should I settle for a job which hardly pays me just to survive. Why cant i look for better opportunities to earn.

    The Risk management is an important topic in all corporate companies. But the same Risk management is not handled by us, the employees. With the current scenario, we just cannot afford to be blind and hope that things will be rosy all the time. Unfortunately, this is the situation now. We have to look for both opportunities and threats and save ourselves accordingly.

    Everyone in this world are born naked, with nothing in hand.

    On Ideal conditions, Yes, Employee job security should be given.
    But unfortunately the world we live is not ideal. We can try to change the system, but it is a long process and we dont know whether it will happen in our life time. Atleast we should ensure that our family is not suffering. We need to save something for the future, against these unexpected calamities.

    Some people are born with rich parents, Some people get friends who can help them, Some people dont get anything and they need to fight it out, struggle it out and get what they deserve.

Leave a Reply to angnaani பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க