நண்பா…..
உன்னால் கேட்க முடிகிறதா?
அந்தக் குரலை!
சகிக்க முடியாத அடக்குமுறைகள்
உடைத்து
குர்கானில் ஒலித்தது
அந்தக் குரல்….
நாடி நரம்புகள்
நசுக்கப்பட்ட
பங்களாதேசின்
ஆயத்த ஆடைகளின்
இறுக்கத்தைத் தகர்த்து
வீதியில் வெடித்தது
அந்தக் குரல்….
இருப்புப் பாதையில் அழுத்தப்பட்டு
பிழிந்தெடுத்தப் பிடிகளை உடைத்து
இங்கிலாந்தை அதிர வைத்தது
அந்தக் குரல்….
கனவுகளையும் திவாலாக்கி
கடைசிச் சொட்டு உதிரத்தையும்
உறியும் அமெரிக்க – கார்ப்பரேட்டுகளை
வால்ஸ்ட்ரீட்டில் துளைத்தெடுத்தது
அந்தக் குரல்….
ஏதென்ஸ்… கிரீஸ்… மெக்சிகோ
திரும்பெரும்புதூர்… இருங்காட்டுக் கோட்டையென
மூலதனம் வாழ்வை முடக்கும் திசையெங்கும்
முடிவிலாது வெடிக்கிறது
கலகக் குரல்!
தாவரங்களும் உயிரினங்களும்,
மிதிக்கும் கால்களைத் தோற்கடிக்கும்
ஒற்றைப் பசும்புல்லும்
போராடும் உலகத்தில்
உன்னால் மட்டும்
தனித்திருக்க முடியுமா என்ன?
தவிர்க்கவியலாமல்
காற்றலைகளாய் பரவி
அது உன் சுவாசத்தில் கலப்பதை
உன்னால் உணர முடிகிறதா?
தயக்கங்களையும் தாண்டி
அது உன் விருப்பங்களை ஒலிப்பதை
உன்னால் கேட்க முடிகிறதா?
வர்க்கத்தை மறைக்க
யாரால் முடியும்?
நீயும் ஒரு தொழிலாளிதான் என்பதை
நிலைமைகள் உணர்த்தும் தருணத்திலாவது
பேசிவிடு!
இது பேசியதால் அல்ல,
பேசாததால் வந்த அவலம்!
வந்த அடக்குமுறைக்குப் பதிலாக
சொந்த அடக்குமுறை எதற்கு?
அடங்கமாட்டாமல்
கிளர்ந்தெழும் உணர்வுகளை
போராடும் வர்க்கத்தோடு சேர்ந்து
பேசிவிடு!
உலகம் கேட்க விரும்புகிறது
உனக்காக ஒருமுறை பேசிவிடு!
– துரை.சண்முகம்
TCS Siruseri Gate Meeting – Telugu
TCS Siruseri Gate Meeting – Comrade Mukundan – Malayalam
TCS Siruseri Gate Meeting – Advocate Indira
Join us…….
https://www.facebook.com/VinavuCombatsLayoff
Phone : 90031 98576
Mail: combatlayoff@gmail.com
Meeting at
Bharatha Mahal, Padur Bus Stop
On OMR 2 km from Siruseri towards Kelambakkam
Bus routs : 21H, 19B, 151C, 570
10.1.2015 Saturday at 5.00 pm
கலந்துரையாடல் கூட்டம்
பாரத மகால் மண்டபம், படூர் பேருந்து நிறுத்தம்
OMR சாலையில் சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் போகும் வழியில்
பேருந்து வழித்தடங்கள் – 21H, 19B, 151C, 570
10.1.2015 மாலை 5 மணி