privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைஉனக்காக ஒருமுறை பேசிவிடு !

உனக்காக ஒருமுறை பேசிவிடு !

-

ண்பா…..
உன்னால் கேட்க முடிகிறதா?
அந்தக் குரலை!
சகிக்க முடியாத அடக்குமுறைகள்
உடைத்து
குர்கானில் ஒலித்தது
அந்தக் குரல்….

வால் ஸ்ட்ரீட் முற்றுகைநாடி நரம்புகள்
நசுக்கப்பட்ட
பங்களாதேசின்
ஆயத்த ஆடைகளின்
இறுக்கத்தைத் தகர்த்து
வீதியில் வெடித்தது
அந்தக் குரல்….

இருப்புப் பாதையில் அழுத்தப்பட்டு
பிழிந்தெடுத்தப் பிடிகளை உடைத்து
இங்கிலாந்தை அதிர வைத்தது
அந்தக் குரல்….

கனவுகளையும் திவாலாக்கி
கடைசிச் சொட்டு உதிரத்தையும்
உறியும் அமெரிக்க – கார்ப்பரேட்டுகளை
வால்ஸ்ட்ரீட்டில் துளைத்தெடுத்தது
அந்தக் குரல்….

ஏதென்ஸ்… கிரீஸ்… மெக்சிகோ
திரும்பெரும்புதூர்… இருங்காட்டுக் கோட்டையென
மூலதனம் வாழ்வை முடக்கும் திசையெங்கும்
முடிவிலாது வெடிக்கிறது
கலகக் குரல்!

தாவரங்களும் உயிரினங்களும்,
மிதிக்கும் கால்களைத் தோற்கடிக்கும்
ஒற்றைப் பசும்புல்லும்
போராடும் உலகத்தில்
உன்னால் மட்டும்
தனித்திருக்க முடியுமா என்ன?

தவிர்க்கவியலாமல்
காற்றலைகளாய் பரவி
அது உன் சுவாசத்தில் கலப்பதை
உன்னால் உணர முடிகிறதா?

தயக்கங்களையும் தாண்டி
அது உன் விருப்பங்களை ஒலிப்பதை
உன்னால் கேட்க முடிகிறதா?
வர்க்கத்தை மறைக்க
யாரால் முடியும்?

நீயும் ஒரு தொழிலாளிதான் என்பதை
நிலைமைகள் உணர்த்தும் தருணத்திலாவது
பேசிவிடு!

இது பேசியதால் அல்ல,
பேசாததால் வந்த அவலம்!
வந்த அடக்குமுறைக்குப் பதிலாக
சொந்த அடக்குமுறை எதற்கு?

அடங்கமாட்டாமல்
கிளர்ந்தெழும் உணர்வுகளை
போராடும் வர்க்கத்தோடு சேர்ந்து
பேசிவிடு!

உலகம் கேட்க விரும்புகிறது
உனக்காக ஒருமுறை பேசிவிடு!

– துரை.சண்முகம்

TCS Siruseri Gate Meeting – Telugu

TCS Siruseri Gate Meeting – Comrade Mukundan – Malayalam

TCS Siruseri Gate Meeting – Advocate Indira

Join us…….

https://www.facebook.com/VinavuCombatsLayoff

Phone : 90031 98576
Mail: combatlayoff@gmail.com

Meeting at

Bharatha Mahal, Padur Bus Stop
On OMR 2 km from Siruseri towards Kelambakkam
Bus routs : 21H, 19B, 151C, 570
10.1.2015 Saturday at 5.00 pm

கலந்துரையாடல் கூட்டம்

பாரத மகால் மண்டபம், படூர் பேருந்து நிறுத்தம்
OMR சாலையில் சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் போகும் வழியில்
பேருந்து வழித்தடங்கள் – 21H, 19B, 151C, 570
10.1.2015 மாலை 5 மணி

  1. its a truth. we hardly working for the company but they won’t response our requirement at all. their only goal is to achieve targeted profit and the company is not for employees. always we are the sufferers

  2. மாமேதை காரல் மார்க்ஸ்-ன் – சிந்தனைத்துளிகள் !!!!

    உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்பளிக்கும் மூலம்.
    மக்கள் இன்பமான வாழ்க்கை வாழவேண்டுமா? முதலில் மதங்களை ஒழித்துக் கட்டுங்கள்.

    மனிதன் என்பதற்கு மேலான எந்தக் கவுரவமும் இல்லை.

    நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாகிறது.

    உன்னால் எதைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நம்புகிறாயோ அதைத் தீவிரமாகச் செய்து முடிக்க முயற்சி செய். அதுவே வெற்றி பெற உற்ற வழி.

    பிழையை எடுத்துக் காட்டாமல் விடுவதானது. அறிவுத் துறையிலே ஒழுக்கமின்மையை ஆதரிப்பதாகும்.

    தலைவணங்குவதையும் கெஞ்சுவதையும் நான் பெரிதும் வெறுக்கிறேன்.

    மிகப்பெரிய தோல்வியை விடவும் மிகப்பெரும் வெற்றிக்கே நாம் மிகவும் அஞ்ச வேண்டும்.

    மதம் மக்களுக்கு அபின்.

    விஞ்ஞானம் என்னும் அழியா ஒளி அறியாமை என்னும் திரைக்குப் பின்னே பிரகாசிக்கிறது.

    உலகாயதத்தை மனிதனின் மனம் கிரகித்து அதனைச் சிந்தனை வடிவமாக மாற்றுவது தான் எண்ணம் ஆகும்.

    ஒருவன் தனக்காக தன்னுடைய வாழ்க்கைக்காக உழைக்கும்போது தான் அசலான மனிதனாகிறான்.

    நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு நொடியும் நமது வாழ்வில் மீண்டும் நாம் பெற முடியாத பெருஞ்செல்வமாகும்.

    மக்களே கலை, இலக்கியம், மொழி ஆகிய அனைத்துக்கும் வித்தும் வீரியமும் சத்தும் சாரமுமாய் இருக்கிறார்கள். அவர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள்.

    நமக்கு முந்தைய தலைமுறை தத்துவ தலைமுறை தத்துவ ஞானிகள் உலகத்தைப் பற்றி வியாக்யானம் செய்தார்கள். ஆனால் தத்துவ ஞானிகளின் உண்மையான வேலை உலகை மாற்றுவதுதான்.

    உள்நாட்டில் பல வகுப்பினரிடையே உள்ள வர்க்கப் பகைமை மறைகிற அளவை பொறுத்து. நாடுகளுக்கிடையே உள்ள பகைமையும் ஒரு முடிவுக்கு வந்து விடும்.

    மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லை.

  3. உலகை உலுக்கிய கவிதை: ……..

    கறுப்பாக இருப்பது…

    பிறக்கும்போது நான் கறுப்பாக இருக்கிறேன்

    பின் வளரும் போதும் கறுப்பு

    பனிக்காலத்திலும் கறுப்பு

    வெயிலில் நடக்கையிலும் கறுப்பு

    காய்ச்சலடித்துக் கிடக்கும் போதும் கறுப்பு

    சாகும் தறுவாயிலும் நான் கறுப்பு தான்..

    ஆனால் நீ

    பிறக்கும்போது ரோஜா நிறத்தில் இருக்கிறாய்

    வளர்கையில் வெள்ளை

    பனிக்காலத்தில் நீலம்

    வெயிலில் செல்கையில் சிவப்பு

    காய்ச்சலில் பச்சை நிறம்

    இறக்கும்போது நீ சாம்பல் நிறம்

    இந்த லட்சணத்தில்

    என்னைப் போய் ‘நிறத்துக்காரன்’ என்று

    அழைக்கத் துணிய முடிகிறது உனக்கு!

    மால்கம் எக்ஸ் அவர்களது மேற் கோளாகவும், யாரோ ஆப்பிரிக்கச் சிறுமி எழுதிய 2007-ம் ஆண்டின் சிறந்த கவிதை என்றும் விதவிதமாகச் சொல்லப்படும் மேற்படி கவிதை நிறவெறியின் வலியை – பல மணி நேர ஆவேச உரையோ, ஒரு நீண்ட நெடும் கட்டுரையோ சொல்லத் துடிக்கிற செய்தியை, காத்திரமாகச் சொல்லி விடுகிறது.

  4. படித்ததில் அதிர்ந்து போன கவிதை..!

    விலைமாது விடுத்த கோரிக்கை..!

    ராமன் வேசமிட்டிருக்கும்
    பல ராட்சசனுக்கு
    என்னை தெரியும்.

    பெண் விடுதலைக்காக போராடும்
    பெரிய மனிதர்கள் கூட
    தன் விருந்தினர் பங்களா
    விலாசத்தை தந்ததுண்டு.

    என்னிடம்
    கடன் சொல்லிப் போன
    கந்து வட்டிக்காரகளும் உண்டு.

    சாதி சாதி என சாகும்
    எவரும் என்னிடம்
    சாதிப் பார்ப்பதில்லை.

    திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
    என்னை தீண்டியவர்கள் யாரும்
    திரும்பவிட்டதில்லை.

    பத்திரிக்கையாளர்களே!
    விபச்சாரிகள் கைது என்றுதானே
    விற்பனையாகிறது..
    விலங்கிடப்பட்ட ஆண்களின்
    விபரம் வெளியிடாது ஏன்…?

    பெண்களின் புனிதத்தை விட
    ஆண்களின் புனிதம்
    அவ்வளவு பெரிதா?

    காயிந்த வயிற்றுக்கு
    காட்டில் இரை தேடும்
    குருவியைப் போல்
    என்னை யாரும் பரிகசிக்கவில்லை.

    கட்டில் மேல் கிடக்கும்
    இன்னொரு கருவியைப் போலத் தான்
    என்னை கையாளுகிறார்கள்.

    நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்
    பகலில் அது பணமாக மாறும்.
    பின்தான்
    என் குடும்பத்தின் பசியாறும்.

    நிர்வாணமே என்
    நிரந்தர உடையானல்தான்
    சேலை எதற்கென்று
    நினைத்ததுண்டு.
    சரி
    காயங்களை மறைப்பதற்கு
    கட்டுவோம் என்று
    கட்டிக்கொண்டு இருக்கிறேன்.

    என் மேனியில் இருக்கும்
    தழும்புகளைப் பார்த்தால்
    வரி குதிரைகள் கூட
    வருத்தம் தெரிவிக்கும்.

    எதையும் வாங்க வசதியில்லாத
    எனக்கு
    விற்பதற்க்காவது இந்த
    உடம்பு இருக்கிறதே!
    நாணையமற்றவர் நகங்கள்
    கீறி கீறி என்
    நரம்பு வெடிக்கிறதே!

    வாய்திறக்க முடியாமல்
    நான் துடித்த இரவுகள் உண்டு

    எலும்புகள் உடையும் வரை
    என்னை கொடுமைப் படுத்திய
    கொள்கையாளர்களும் உண்டு.

    ஆண்கள்
    வெளியில் சிந்தும் வேர்வையை
    என்னிடம் ரத்தமாய்
    எடுத்து கொள்கிறார்கள்.

    தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
    கீறல் படாத வேசி தேகமில்லை.

    என்னை வேசி என்று
    ஏசும் எவரைப் பற்றியும்
    கவலைப் பட்டதே இல்லை..

    ஏனெனில்
    விதவை – விபச்சாரி
    முதிர்கன்னி – மலடி
    ஓடுகாலி – ஒழுக்கங்கெட்டவள்
    இதில் ஏதேனும்
    ஒரு பட்டம்
    அநேக பெண்களுக்கு
    அமைந்திருக்கும்.

    இது இல்லாமல் பெண்கள் இல்லை.
    எப்போதும்
    இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.

    முதுமை என்னை
    முத்தமிடுவதற்க்குள்
    என் மகளை மருத்துவராய்
    ஆக்கிவிட வேண்டும்.
    என் மீது படிந்த தூசிகளை
    அவளை கொண்டு
    நீக்கி விட வேண்டும்.

    இருப்பினும்
    இந்த சமூகம்
    இவள்
    மணிமேகலையை என்பதை மறந்துவிட்டு
    மாதவியின் மகள் என்பதை மட்டுமே
    ஞாபகம் வைத்திருக்கும்.

    இறுதியாக
    இரு கோரிக்கை.

    என்னை
    மென்று தின்ற ஆண்களே!
    மனைவிடமாவது கொஞ்சம்
    மென்மையாக இருங்கள்.
    எங்களுக்கு இருப்பது
    உடம்பு தான்
    இரும்பல்ல.

    என் வீதி வரை
    விரட்டிவரும் ஆண்களே!
    தயவு செய்து விட்டுவிடுங்கள்.
    நான் விபச்சாரி என்பது
    என் வீட்டுக்கு தெரியாது.

    கவிஞர்:தமிழ்தாசன்

    **************************
    http://www.facebook.com/puradsifm

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க