Tuesday, July 23, 2024

நாங்கள் சார்லி அல்ல !

-

து ‘கருத்துரிமை மற்றும் பத்திரிகை சுதந்திர’த்திற்கான போராட்டங்களின் காலம். ஐரோப்பிய மற்றும் பல்வேறு உலகத் தலைவர்களோடு மகா கனம் பொருந்திய பெட்ரோ பொரெஷென்கோ அவர்களும் கைகோர்த்து பாரீஸ் வீதிகளில் பத்திரிகை சுதந்திரத்திற்கான ஊர்வலத்தில் நடந்து சென்ற அழகை நீங்கள் பார்த்தால் பிரமித்திருப்பீர்கள். ஆனால், உக்ரைனியர்களோ இந்த ஆபாசக் கூத்தை காறித் துப்புகிறார்கள். கடந்த ஓரிரு ஆண்டுகளில் சுமார் 33 பத்திரிகையாளர்களை கடத்தி, 47 பத்திரிகையாளர்களை கைது செய்து சிறையிலடைத்த பெட்ரோ பொரெஷென்கோ உக்ரைனின் தற்போதைய அதிபர்.

சார்லி ஹெப்டோ கொலையாளிகள்சார்லியின் மேல் தாக்குதல் தொடுத்து பதினேழு உயிர்களைக் கொன்றொழித்த ஜிஹாதிகளின் செயல் காட்டுமிராண்டித்தனமானது;  கண்டனத்திற்குரியது. உலகமே காறித்துப்பும் தங்களது மூடத்தனமான செய்கையால் ஆகக் கீழ்த்தரமான கடைந்தெடுத்த ஒரு தெருப் பொறுக்கியான பெட்ரோ போன்ற கனவான்களுக்கெல்லாம் கருத்துரிமை போராளிகளாக பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள்.

சார்லி ஹெப்டோ படுகொலையும், அது குறித்த போராட்டங்களும், விவாதங்களும் அனைவரையும் உணர்ச்சி வேகத்தில் சில விசயங்களை பரிசீலிக்க அல்லது பார்க்க விடுவதில்லை.

சார்லி ஹெப்டோ ஒரு பிரெஞ்சு மஞ்சள் பத்திரிகை. அறுபதுகளில் பிரபலமாக இருந்த ஹாரா கிரி என்ற பத்திரிகையின் வழித்தோன்றல் தான் சார்லி ஹெப்டோ. எந்தப் பொறுப்புமின்றி சகலரையும் வம்பிழுப்பது சார்லியின் சிறப்பு. அவர்களது கார்டூன்களுக்குத் தப்பியவர்கள் மிகச் சிலரே. ஓரினச் சேர்க்கையாளர்கள், கத்தோலிக்கர்கள், பெண்கள், புலம்பெயர்ந்த கருப்பின மக்கள், ஆசியர்கள் என்று நீளும் இந்தப் பட்டியலில் அரிதாக யூதர்களும் இசுரேலும் கூட இடம் பெற்றதுண்டு. சார்லி ஹெப்டோ ப்ரெஞ்சு மக்களின் நாசூக்கான ரசனைக்கு தீனி போட்ட பத்திரிகை இல்லை என்பதால் அது எப்போதும் வணிக ரீதியில் வெற்றிகரமான பத்திரிகையாக நடந்ததில்லை.

ஐரோப்பிய கருத்து சுதந்திரம்2000 ஆண்டுகளின் துவக்கத்திலிருந்து (அல்லது 1990-களின் இறுதிப்பகுதியில் இருந்து) சார்லி ஹெப்டோவின் ‘பகடியின்’ தரம் ஆக கீழ்த்தரமாக செல்லச் செல்ல அதன் விற்பனை எண்ணிக்கையும் கணிசமாக சரியத் துவங்கியது. இந்நிலையில் தனது வர்த்தக இருப்புக்காக இசுலாமியர்களைக் குறிவைக்கத் துவங்கியது இப்பத்திரிகை. ஏறக்குறைய அதே சமயத்தில் இரட்டை கோபுரத் தகர்ப்பைத் தொடர்ந்து மேற்குலகில் கலாச்சார ஒதுக்குதலை எதிர்கொள்ளத் துவங்கியிருந்தனர் இசுலாமிய மக்கள்.

அமெரிக்கா தலைமையிலான ‘பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டணியில்’ அங்கம் வகித்து அமெரிக்காவின் போர் தந்திர நலன்களுக்கு கணிசமாக செலவு செய்யத் துவங்கின ஐரோப்பிய நாடுகள். அதே நேரம் இரண்டாயிரங்களின் பிற்பகுதியில் துவங்கவிருந்த பொருளாதாரப் பெருமந்தத்தின் வருகையை முன்னறிவிக்கும் விதமாக பல ஐரோப்பிய நாடுகள் சிக்கன நடவடிக்கையை நாடத் துவங்கியிருந்தன. இந்நடவடிக்கைகளின் உடனடி பலி – மக்கள் நலத் திட்டங்கள். இது பரவலாக ஐரோப்பாவெங்கும் மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியிருந்தது.

எழுந்து வரும் மக்களின் அதிருப்திக்கு இணையாக ஐரோப்பிய வலதுசாரிகளும் நியோ நாஜிகளும் மெல்லத் தலையெடுக்கத் துவங்கியிருந்தனர். அந்த சமயத்தில் ஐரோப்பாவெங்கும் தலைவிரித்தாடிய இசுலாமிய வெறுப்பின் அறுவடையில் சார்லி ஹெப்டோ தனது பங்கையும் எதிர்பார்த்தது. விளைவாக இசுலாமியர்களை தனிச்சிறப்பாக குறிவைத்து கார்ட்டூன்களை வெளியிடத் துவங்கினர்.

’இசுலாமியர்களை தனிச்சிறப்பாக குறிவைத்து’ என்ற இந்த மூன்று வார்த்தைகளை நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில், இன்று “ஜெசூயிஸ் சார்லி” (அதாவது ‘நான் சார்லி’) என்பது மேற்குலகில் ஒரு முழக்கமாகியுள்ளது. இந்த முழக்கம், பொதுவில் கருத்துரிமைக்கான அறைகூவலாக பார்க்கப்பட்டாலும், உண்மையில் மேற்குலகில் மெல்ல மெல்ல திட்டமிட்ட ரீதியில் உருவாக்கப்பட்டு வரும் இசுலாமிய வெறுப்பே இதன் அடிநாதமாக உள்ளது.

ஜனநாயகத்தின் தொட்டிலான ஐரோப்பியாவின் சிறப்பான தனிமனித சுதந்திரம், வாழும் உரிமை மற்றும் இவற்றின் வழி சொல்லப்படும் கருத்துரிமை என்பதெல்லாம் முக்காடிட்ட முல்லாக்களுக்கு புரியாத சமாச்சாரங்கள் என்ற கோணத்தில் ஒரு பொதுபுத்தி கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் கருத்துரிமை என்ற திரையை நாம் கொஞ்சம் விலக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பிரான்ஸ் நாடு ஐரோப்பிய ஜனநாயக விழுமியங்களின் ஒரு முன்மாதிரியாக போற்றப்பட்ட நாடு; தனிமனித சுதந்திரத்தின் உச்சங்களைத் தொட்ட தேசம் என்பதெல்லாம் பிரான்சைக் குறித்து வெளியுலகில் அறியப்படும் நைந்து போன பிரச்சாரங்கள்.  “சார்லி ஹெப்டோ மீதான தாக்குதல் என்பது மானுடத்தின் பின்தங்கிய பகுதியில் இருந்து மானுடத்தின் உச்சநிலை நோக்கி செய்யப்பட்ட தாக்குதல்” –  என்று கேட்டுத் தேய்ந்து போன அதே ரிக்கார்டை மீண்டும் ஓட்டுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

இதே பிரான்சில் தான் அல்ஜீரியாவிலிருந்தும் பிற ஆப்ரிக்காவின் முன்னால் பிராஞ்சு காலனிய நாடுகளில் இருந்தும் குடியேறிய கருப்பின மக்கள் இன்றும் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள். வெள்ளைத் தோல் மனிதர்களுக்கு இணையாக வேலை வாய்ப்புகள் வழங்கப்படாமல்பழுப்பு மற்றும் கருப்புத் தோல் மனிதர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வாடகைக்கு வீடு பிடிப்பதும் கூட அத்தனை சுலபமல்ல.

நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையை எதிர்த்து ஜனநாயகத்திற்கான – விடுதலைக்கான – முதல் குரலைக் கொடுத்தவர்கள் பிரெஞ்சு தொழிலாளர் வர்க்கமும் விவசாயிகளும் தான். ஆனால், உழைக்கும் மக்களின் வெற்றி வெகு சீக்கிரத்திலேயே முதலாளி வர்க்கத்தால் கைப்பற்றப்பட்டது; முதலாளித்துவ ஜனநாயகத்தின் ’மாண்பும்’ சந்தி சிரித்தது. அதன்பின் உலகுக்கே ஜனநாயகத்தை சொல்லிக் கொடுத்த ’உச்சநிலை மாந்தர்கள்’ தான் ஆப்ரிக்காவில் அடிமை வியாபாரம் செய்தார்கள். மூன்றாம் உலக நாடுகளைச் சூறையாடும் போட்டியில் முன்னிற்பதும் ஜெயமோகன் உச்சிமோந்த அதே ‘உச்சநிலை மாந்தர்கள்’ தாம்.

முகமது நபியின் கேலிச் சித்திரங்களை வரையவே கூடாது, குரானை விமரிசிக்கவே கூடாது, இசுலாமிய பிற்போக்குத்தனங்களை இடித்துரைக்கவே கூடாது என்பது போன்ற தலீபானிய கடுங்கோட்பாட்டுவாதத்தை யாரும் ஆதரிக்க முடியாது. ஆனால், பொருளாதார ரீதியிலும், சமூக கலாச்சார தளங்களிலும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஒருபிரிவு மக்கள் தேவதூதராக கருதும் ஒருவரின் நிர்வாணப் படங்களை வரைவது கருத்துச் சுதந்திரத்தில் சேர்த்தியா? அவர்களை மேற்குல வெறுப்பிற்கான பலனை முன்னிட்டு இழிவுபடுத்தவது சரியா?

கருத்துரிமை ‘போராளிகளுக்கு’ புரியும் விதத்தில் சொல்வோம். பார்ப்பனியத்தின் அடையாளமாக உழைக்கும் மக்களை ஒடுக்கும் ராமன்-கிருஷ்ணன் போன்ற பார்ப்பன தெய்வங்களை கிண்டலாக வரையும் நாம் அதே போன்று நாட்டுப்புறத் தெய்வங்களை வரைவோமா? இசக்கியும், சுடலைமாடனும், மதுரை வீரனும், முனியாண்டியும் என்னதான் சுருட்டு, சாராயம், கறி சகிதம் வணங்கப்பட்டாலும் இந்த தெய்வங்களையும் பார்ப்பனிய தெய்வங்களையும் ஒன்றாக பார்க்க மாட்டோம். அதே நேரம் இப்பிரிவு மக்களிடமும் நாத்திகமும், மூடநம்பிக்கை எதிர்ப்பும் பிரச்சாரம் செய்வோம். மறுபுறம் பார்ப்பனியத்தின் அஜென்டாவாக ஆடு கோழி பலி தடை சட்டம் வந்தால் அதை எதிர்த்தும் போராடுவோம்.

இசுலாமிய மதவெறியையும், மதப்பிற்போக்குத்தனங்களையும் எதிர்ப்பவர்கள், அதற்கு மேல் அவர்களது கடவுளையோ, தூதரையோ ஆபாசமாக படம் வரைந்து பேசுவது உண்மையில் இசுலாமிய மதவெறிக்குத்தான் வலு சேர்க்கும். ஏசுவையும், மேரியையும் கூட சமூக ரீதியிலான பின்புலத்தில் பரிசீலிப்பதற்கும் தனிப்பட்ட பாலியல் ரீதியில் இழிவு படுத்துவதற்கும் வேறுபாடு இருக்கிறது. பின்னதை நாம் செய்ய மாட்டோம். அதே போல பார்ப்பனியத்தின் மீதான நமது விமரிசனம் என்பது அதன் ஏற்றத்தாழ்வான சாதிய அமைப்பை நியாயப்படுத்தும் அதன் புராண, இதிகாச, கடவுள், சடங்குகள் மீதானே அன்றி வெறுமனே கடவுளை கிண்டல் செய்வது என்றல்ல.

வேறு ஒரு பின்புலத்தில் இதை வைத்துப் பார்க்கலாம். தமிழகத்தின் ஆதிக்க சாதி ஒன்று பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் பத்து அருந்ததியினர் குடும்பங்கள் மட்டும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவன் ஒரே நேரத்தில் – “_____ நாய்களே” என்று ஆதிக்க சாதியை ஏசுவதும், “______ நாய்களே” என்று அருந்ததினரை ஏசுவதும் ஒரே தரத்திலான ‘விமரிசனம்’ என்று சொல்ல முடியுமா? இல்லை இரண்டையும் நாம் ஒரே அளவில் பரிசீலிக்க முடியுமா?

ஏற்கனவே சமூக ரீதியிலான ஒதுக்குதலை சந்தித்து மனதளவில் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு தரப்பு மக்களின் தவறுகளையோ பிற்போக்குத்தனங்களையோ சுட்டிக்காட்டும் போது சொற் தேர்விலும், சொல்லும் தன்மையிலும் ஒரு குறைந்தபட்ச கவனம் தேவைப்படுகிறது. இங்கோ சார்லி ஹெப்டோ பத்திரிக்கை முகமது நபியைக் குறித்து வெளியிட்ட கேலிச் சித்திரங்கள் விமரிசனம் என்ற வரையறைக்குள் வருவன அல்ல. அவை கண்மூடித்தனமான வசைகள். எதிர்த்துப் பேசும் திராணியற்றவர்களை நோக்கி எறியப்பட்ட அமிலக் குண்டுகள்.

ஜெயமோகன் அராஜகவாதம்
வசைபாடும் உரிமையெ பண்பாட்டுக் கொடை என்றும் அதுவே ஐரோப்பிய ஜனநாயகத்தின் உச்சம் என்றும் சொல்கிறார் ஜெயமோகன்

ஒரு உள்ளடக்கத்தோடு வரும் போது தான் விமரிசனம் அல்லது எதிர்க்கருத்து என்பவை அவற்றுக்கான பொருளைப் பெறுகின்றன. தமிழ் பத்திரிகை உலகில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் மற்றும் வினவு இணையதளத்திற்கு இணையாக ஜெயலலிதாவை காட்டமாக விமர்சிக்கும் வேறு பத்திரிகைகள் இல்லை – ஆனால், நாங்கள் சிங்கள பத்திரிகை ஒன்றில் வெளியான ஜெயலலிதாவின் ஆபாச கேலிச்சித்திரத்தை எதிர்க்கிறோம் என்பதையும் சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் வசைபாடும் உரிமையெ பண்பாட்டுக் கொடை என்றும் அதுவே ஐரோப்பிய ஜனநாயகத்தின் உச்சம் என்றும் சொல்கிறார் ஜெயமோகன். இத்தனை ‘ராவாக’ சொல்வது 21-ம் நூற்றாண்டின் நாஸ்டர் டாமஸான ஜெமோவுக்கு உறுத்தலாக இருந்திருக்க வேண்டும். எனவே தான் ‘வசைபாடும் உரிமைக்கு’ அரசின்மைவாதம் (அராஜகவாதத்தின் ஜெயமோகனிய மொழிபெயர்ப்பு) என்ற மேக்கப்பை போட்டு விடுகிறார்.

அராஜகவாதம் என்கிற ‘ஐரோப்பிய மையவாத’ கருத்தியலை ஜெயமோகனின் வாயில் இருந்து வரவழைத்த அன்னிய சக்தி யார் என்று தெரியவில்லை.கட்டுப்பட்டிற்கும் சமூக ஒழுங்கிற்கும் எதிரான ’உன்னத’ நிலையான அரசின்மைவாதத்திற்கு காட்டுமிராண்டி இனக்குழு மனப்பான்மை கொண்ட நாம் சென்று சேர்வதில் இருக்கும் சிக்கலை ஜெயமோகன் பீராய்ந்துள்ளார் – அதில் உண்மை இருக்கத் தான் செய்கிறது. விஷ்ணுபுரம் வட்ட உன்னதர்களின் ஊட்டி சந்திப்புகளுக்கான விதிமுறைகளே புத்தகமாக அச்சிடும் அபாக்கிய நிலையில் தானே நாம் இன்னமும் இருக்கிறோம்.

அராஜகவாதத்தைப் போற்றிப் புகழும் ஜெயமோகன், அவரது வாசகர் சந்திப்புக் கூட்டங்களில் அராஜகவாத அணுகுமுறை பின்பற்றப்படுவதற்கு அவரே விதித்துள்ள தடைகளுக்கு என்ன காரணம்? என்னதான் அராஜகவாதத்தைப் பற்றி கதாகலாட்சேபம் நடத்தினாலும் கேட்பவர்கள் சரக்கடித்து விட்டு அராஜகாவாதத்தை கடைபிடித்தால் பிறகு பிரசங்கத்தை எப்படி நடத்துவது? ஆக ஒரு வீணாப் போன இலக்கியக் கூட்டத்திற்கே இத்தகைய ஒழுங்குகள் தேவையென்றால் பெருந்திரளான மக்கள் கூட்டம் அதன் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கும் ஒரு வரைமுறை தேவையா இல்லையா?

சார்லி ஹெப்டோவின் கேலிச்சித்திரம் ஒன்றை கவனியுங்கள்: (இங்கே பிரசுரிக்கப்படவில்லை)

க்வென்னொலி வணக்க முறை!
க்வென்னெல்லி வணக்க முறை!

அந்தப் படத்தில் உள்ளவர் பெயர் யூடோன்னெ ம்பாலா ம்பாலா (Dieudonne M’bala M’bala) – இவர் ஒரு ப்ரெஞ்சு நகைச்சுவையாளர். யூத வெறுப்பாளராகவும் நாஜி ஆதரவாளராகவும் அறியப்பட்டவர். இவர் க்வென்னெல்லி என்ற சைகை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தார் – அது நாஜி வணக்கத்தின் தலைகீழ் வடிவம். படத்தில் அவரது பின்புறத்தில் சொருகியிருப்பது வாழைப்பழம் போல் தோன்றும் ஒரு உணவுப் பதார்த்தம்; அதன் பெயரும் க்வென்னெல்லி தான்.

இந்தப் படத்தை இந்தளவுக்குத் தகவலோடு அவதானிக்கும் எவரும் அதில் இருக்கும் பகடியைப் புரிந்து கொள்ள முடியும். நியோ நாஜி ஒருவரின் மேலான கூர்மையாக விமரிசனமாக புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்தக் கேலிச்சித்திரத்தில் அது ஒரு அடுக்கு (Layer) மட்டும் தான்.

க்வென்னெல்லி உணவுப் பதார்த்தம் வேறு வேறு வடிவங்களில் செய்யப்படும் போது, ஏன் குறிப்பாக வாழைப்பழ வடிவத்தை ஓவியர் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஏன் வாழைப்பழத்தின் பெயரை நினைவூட்டும் தலைப்பு வைக்க வேண்டும்? (போன் அனானியா – பிரித்துச் சொன்னால் நல்ல பைனாப்பிள் / சேர்த்துச் சொன்னால் போனானியா)

போனானியா என்பது வாழைப்பழம் மற்றும் கோகோ கலந்து செய்யப்படும் ஒரு பானம். அதன் டப்பா முகப்பில் முதலாம் உலகப் போர் சமயத்தில் பிரெஞ்சு இராணுவத்தில் பிரான்சின் ஏகாதிபத்திய நலனுக்கான போரில் பங்கேற்ற செனகலைச் சேர்ந்த வீரர் ஒருவரின் படம் இடம்பெற்றிருக்கும். இன்றளவிற்கும், அவ்வாறு செனகல் வீரரை விளம்பர முகப்பில் பயன்படுத்துவது பிரான்சின் கடந்தகால இனவெறி மேலாதிக்கத்தின் குறியீடாக உள்ளது என்ற விமரிசனம் பிரான்சின் முற்போக்காளர்கள் மத்தியில் உண்டு.

இப்போது கேலிச்சித்திரத்தின் நாயகன் யுடொன்னே, காமரூன் தந்தைக்கும் ப்ரெஞ்சு தாய்க்கும் பிறந்த கலப்பினத்தவர் என்பதை சேர்த்துப் பாருங்கள். எமது இனப் பெருமையின் அன்றைய காலாட்படை கருப்பர்கள், இன்றைக்கு எமக்குத் தேவையானதை (நியோ நாஜிசம்) பேசும் வேலையையும் அவர்களே செய்வார்கள் (அதாவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் முட்டாள்கள்) என்ற ஒரு பொருள் வருகிறதா? இது இன்னொரு அடுக்கு.

மேலும் சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு –

இது பிரான்சில் வாழும் கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் பற்றிய சித்திரம்.

பிரெஞ்சு நீதித்துறை அமைச்சர்
கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் பற்றிய சித்திரம். (கருப்பின மக்களை குரங்குகள் என்று வெறுப்பை உமிழ்வது ஐரோப்பிய இனவாதிகளின் வழக்கம்)

இது போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட (கருவுற்ற) பெண்கள், தங்களுக்குச் சேர வேண்டிய ஈட்டுத் தொகைக்கான காசோலையை நிறுத்தாதீர்கள் என்று சொல்வது போன்ற படம்.

போகோ ஹராம் பாதிக்கப்பட்ட பெண்கள்இந்தச் சித்திரம் மேல் தோற்றத்தில் ப்ரான்சு அரசாங்கம் மக்கள் நலத் திட்டங்களை நிறுத்துவதாக சொல்லிவருவதற்கான விமரிசனமாக தெரியலாம். அனால், அதில் ஏன் வெளிநாட்டைச் சேர்ந்த போகோஹராம் பெண்கள்? அப்பெண்களின் கவலையெல்லாம் தீவிரவாதிகளிடம் தாம் பாலியல் அடிமைகளாக இருப்பதில் இல்லை – காசு தான் அவர்களது குறிக்கோள் என்று அவதூறு செய்வது உண்மை நோக்கம்.

Surrogacy என்ற வாடகைத் தாய் முறையைக் கேலி செய்வது போன்ற இந்த கேலிச் சித்திரத்தில், நிர்வாணமான கருப்பின பெண்ணை இழுத்து வருபவர்கள் இரண்டு ஐரோப்பிய ஓரினச் சேர்க்கையாளர்கள்.

வாடகைத் தாய் முறைமேல் விளக்கம் தேவையில்லை.

கருத்துச்சுதந்திரம் என்கிற வஸ்து அந்தரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் தொங்கும் மந்திர மாங்காய் இல்லை. அது வாழும் உரிமையோடு பிரிக்க முடியாதபடிக்கு இணைந்தது. சார்லி ஹெப்டோவின் கருத்துரிமை என்பது ப்ரான்சில் வாழும் சிறுபான்மையினரான கருப்பர்கள் மற்றும் இசுலாமியர்களின் வாழும் உரிமையை கருத்தியல் ரீதியில் பாதிக்கக் கூடியது. அல்லது சிறுபான்மை மக்களை வெறுக்கும் வெள்ளை நிறவெறியின் அதிகாரத்திற்கு மயிலிறகு ஆட்டுவது போன்றது. இந்துக்கள் அல்லாதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள் என்று சொல்வதும் கூட ஒரு ‘கருத்து’ தான். இதை வெளிப்படுத்துவதற்கு இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு இருக்கும் உரிமையை அறிவுள்ளவர்களால் ஆதரிக்க முடியுமா? இலக்கியத் தவளைகளை விடுங்கள், கிணற்றுக்கு வெளியே வாழும் மனிதர்களாக சிந்தித்துப் பார்ப்போம்.

நம்மால் சார்லியாக இருக்க முடியுமா? பாலஸ்தீனியர்களை தினம் தினம் கொன்று குவிக்கும் இசுரேலின் அதிபர் தன்னைச் சார்லி என்கிறார். தனது சொந்த நாட்டில் பத்திரிகையாளர்களை ஒடுக்கும் உக்ரேனிய அதிபர் தன்னைச் சார்லி என்கிறார். அபூகிரைபின் சொந்தக்காரர்கள் தம்மைச் சார்லி என்றழைத்துக் கொள்கிறார்கள். நரோதா பாட்டியாவின் கசாப்புக்காரர்கள் தம்மை சார்லி என்றழைத்துக் கொள்கிறார்கள். தங்கள் சொந்த நாட்டு மக்களை ஷரியா சட்டங்கள் என்கிற மத்தியகால இருட்டுப் பெட்டிக்குள் பூட்டி வைத்துள்ள அரபு நாட்டுத் தலைவர்கள் தங்களைச் சார்லி என்கிறார்கள்.

ஒட்டுமொத்த மனிதகுல விரோதிகள் எல்லோரும் சார்லிகளாக இருக்கும் உலகில், நீங்களும் சார்லியாக இருக்க முடியுமா?

– தமிழரசன்.

தொடர்புடைய சுட்டிகள் :

 1. அன்புள்ள தமிழரசன் & வினவு,

  //ஒட்டுமொத்த மனிதகுல விரோதிகள் எல்லோரும் சார்லிகளாக இருக்கும் உலகில், நீங்களும் சார்லியாக இருக்க முடியுமா?//

  அந்த படுகொலைகளை கண்டனம் செய்து அரச முறையில் அரங்கேற்றப்பட்ட அந்த அணிவகுப்பைப்பற்றி பேசுகிறீர்கள். அந்த தலைகளில் பலருக்கு, கிட்டத்தட்ட எல்லோருக்குமே, நான் சார்லி என்று கூற முடியாதுதான். அதற்காக நாமும் கூறமுடியாமல் எப்படி இருக்க முடியும். தவறு. நான் சார்லி தான்.

  இந்த பதிவில் ஜெமோ பற்றிய குறிப்புகள் தேவையற்றது.

  //தேவதூதராக கருதும் ஒருவரின் நிர்வாணப் படங்களை வரைவது கருத்துச் சுதந்திரத்தில் சேர்த்தியா?//

  கண்டிப்பாக இது தான் கருத்துச் சுதந்திரம். தூதன் என்று கூறிக்கொண்டவர்கள் பொய்யர்கள் தான் என்பதை எப்படி சொல்வது. இந்தியாவின் சில கற்பனைகளை ஏமாற்று வேலைகளை நாம் எப்படி அனுகுகிறோம்?

  //ஆபாசமாக படம் வரைந்து பேசுவது உண்மையில் இசுலாமிய மதவெறிக்குத்தான் வலு சேர்க்கும்//

  அதையும் தான் பார்க்கலாம். ஒரளவுக்கு இது சரியென்றாலும் அப்படியே பயந்து விட்டு விடமுடியாது. எதையும் செய்ய முடியாமல் போய்விடும்.

  //ஆதிக்க சாதி ஒன்று பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் பத்து அருந்ததியினர் குடும்பங்கள் //
  //சமூக ரீதியிலான ஒதுக்குதலை சந்தித்து மனதளவில் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு தரப்பு //
  //எதிர்த்துப் பேசும் திராணியற்றவர்களை நோக்கி எறியப்பட்ட அமிலக் குண்டுகள்.//

  மிக மிக தவறான உதாரணங்கள். _______________

  • ஒரு மனிதரை பொய்யர் என நிருபிக்க பல வழிகள் இருக்கு.. அவருடைய கருத்துகளை ஆராய்ந்து அதை தவறு என்று நிரூபிக்கலாம். ஒரு சமுதாயத்தை வெறியை உண்டாக்கி அதை நிருபிக்க அவசியமில்லை.

   • Best Ali,

    பெரிய பின்னூட்டங்களுக்கு பதில் கூறம்போது உங்களை மறந்து விட்டேன்.

    பொய்யர்கள் என்பதை பலவழிகளிலும் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒரு வழிதான் கேலிச்சித்திரங்கள். மற்ற வழிகளை விட இது அதிக வலுமிக்கதும் கூட.

 2. மனைவியிடம் நபியை கார்டூன் மூலம் இழிவு செய்தது சரியா ? என்று கேட்டேன் .தவறு தான் என்றார் . அதற்கு எதிர்வினையாக வரைந்தவர்களை சுட்டுகொன்றது சரியா ? என்று கேட்டேன் . அது மிக பெரிய தவறு என்றானர் .தராசின் ஒரு தட்டில் கார்டூனையும் ,மறு தட்டில் சுட்டுகொன்ற நிகழவையும் வைத்தது பாருங்கள் என்றார் . அதனையே இக் கட்டுரை எழுதியவருக்கும் என் கருத்தாகவே சமர்பணம் செய்கின்றேன்.

 3. ஜெயமோகன் ,உக்ரைன் அதிபர் ,தலித் மக்கள் மீதான தவறான வார்த்தைகள் , சிறுதெய்வங்கள் மீதான ஒப்புமைகள் இவற்றை எல்லாம் தாண்டி பிரச்ச்ச்னையின் சாரத்தை நேரடியாக அணுகி அதற்கு தன் கருத்தை வைக்க வினவுக்கு தெரியாதா ? நியோ நாசிசம் என்பது பிரான்ஸ் உட்பட பல நாடுகளிலும் ஐரோப்பா முழுவதும் பரவும் விசகிருமி தான் . அதனுடன் சார்லியின் கருத்தாகத்தை ,கார்டூனை ஒப்பிடுவது என்பது சரியானதே . நபியை கார்டூன் மூலம் இழிவு செய்தது எப்படி தவறானதோ அது போன்றே கார்டூன் வரைந்தவர்களையும் சுட்டு கொள்வது தவறானதே . அதற்க்கு எதிரான பிரான்சு மக்களின் பாரிஸ் ஆர்பாட்டம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு . கருத்தை கருத்தாலும் ,கார்டூனை கார்டூனாலும் வெல்லவேண்டிய தருணம் இது .

  • நபியை நிர்வாணமாக வரைந்த ஒரு கார்டூன் இந்திய சட்ட ,பண்பாடு ,கலாச்சார விழுமியங்கள் படி பார்த்தால் அவரை இழிவு செய்கின்றது, எனவே தவறானது . ஆனால் பிரான்சு இன கலாசாரத்தில் அது,அந்த கார்டுன் தவறு இல்லை. மதமும் அதன் அதிகாரமும் ,ஆளுமையும் ஒரு நாட்டின் [பிரான்சு இனத்தின் ] ஆளுமைக்கும் ,அதிகாரத்துக்கும் உட்பட்டு வரும்போது ,எந்த மதமும் அதிகாரத்தில் உள்ள இனத்திடம் தன் உரிமைகளை விட்டு கொடுத்து தான் செல்ல வேண்டும். ஒரு ஹிந்து பெண்ணுக்கு பிரான்சில் காது வளையல் அணியக்கூடாது என்று தடை இருக்கும் போது அதனை அவர் அனுசரித்து அந்த சட்டத்தை மதித்து தான் செல்லவேண்டும். பிரான்சு மத சார்பற்ற நாடு ,தனி மனித கருத்துரிமைகளை உரிமைகளை அதிகபச்சம் மதிக்கும் நாடு , தன் காலனியத்தில் வாழ்ந்த மக்களை [இன சிறுபான்மை மக்களை தமிழ் ,அல்ஜீரியா ] ]வரவேற்று ஆதரிக்கும் நாடு என்பதால் இந்த கார்டுனுக்கு எல்லாம் எதிராக வினவு கட்டுரை எழுதி ஜல்லி அடிக்க கூடாது ,சலம்பகூடாது . பிரான்சு ஒன்றும் வினவு மறைமுகமாக ஆதரிக்கும் போலியான கம்யுனிச சீனா அல்ல, கருத்துரிமைகளை,கார்டூன் வரையும் உரிமைகளை கொன்று ஒழிப்பதற்க்கு !

   //நபியை கார்டூன் மூலம் இழிவு செய்தது எப்படி தவறானதோ//

   • \\ நபியை நிர்வாணமாக வரைந்த ஒரு கார்டூன் இந்திய சட்ட ,பண்பாடு ,கலாச்சார விழுமியங்கள் படி பார்த்தால் அவரை இழிவு செய்கின்றது, எனவே தவறானது . ஆனால் பிரான்சு இன கலாசாரத்தில் அது,அந்த கார்டுன் தவறு இல்லை.\\

    இபிகோவின் அடிப்படையிலேயோ ஒரு நாட்டின் கலாச்சார அடிப்படையிலேயோ தான் கார்ட்டூன் கட்டுரையில் விமர்சிக்கப்படுகிறதா? உங்களது வாதப்படியே வந்தாலும் கூட பிரான்சு இன கலாச்சாரம், கருப்பின பெண்களை அம்மணமாக காட்டுவதை அனுமதிக்கிறதா? இனவாதத்திற்கு அங்கு கடுமையான தண்டனைகள் என்றெல்லாம் பேசுகிறார்களே! எங்கே போயிற்று சட்டவாதம்? எந்த வண்டு முருகனையும் இங்கு காணவில்லையே!

    \\ மதமும் அதன் அதிகாரமும் ,ஆளுமையும் ஒரு நாட்டின் [பிரான்சு இனத்தின் ] ஆளுமைக்கும் ,அதிகாரத்துக்கும் உட்பட்டு வரும்போது ,எந்த மதமும் அதிகாரத்தில் உள்ள இனத்திடம் தன் உரிமைகளை விட்டு கொடுத்து தான் செல்ல வேண்டும்.\\

    இது அப்பட்டமான பாசிசமாகும். ஆர் எஸ் எஸ் கூட்டமும் கோல்வால்கரும் ஹிட்லரும் முசோசலினியும் இதைத்தான் சொல்கிறார்கள். ஆகையால் இதன் வீரியத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்யவும். அதற்குத் தங்களின் எடுத்துக்காட்டையே பரிசீலிப்போம்.

    \\ ஒரு ஹிந்து பெண்ணுக்கு பிரான்சில் காது வளையல் அணியக்கூடாது என்று தடை இருக்கும் போது அதனை அவர் அனுசரித்து அந்த சட்டத்தை மதித்து தான் செல்லவேண்டும்.\\

    இந்த வாதமே தவறு. இதன்படி பார்த்தால் சவூதியில் பெண்கள் அடிமைப்பட்டு இருப்பது தான் சரி என்கிறது உங்களது கருத்து. ஜன நாயகவாதிகளும் சிவில் அமைப்புகளும் கம்யுனிஸ்டுகளும் இத்தகைய நாடுகளில் எதேச்சதிகாரத்திற்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டங்களை தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று ஆர் எஸ் எஸ் பிரச்சாரம் செய்வதை இந்து இசுலாமிய கிறித்தவ பெண்கள் எதிர்க்கின்றனரோ அதுபோன்று இசுலாமிய நாடுகளில் இசுலாமியர்கள் நடத்துகிற போராட்டங்களும் கணிசமானவை. ஆப்கனில் பெண்கல்விக்காக தாலிபானியத்திற்கு எதிராக போராடுகிற எண்ணிறந்த இசுலாமியர்களையும் கம்யுனிஸ்டுகளையும் அவர்களின் இப்பொழுதைய போராட்டங்களையும் இங்கு நினைவு கூர்கிறேன். இதைத் தாங்கள் பரிசீலிக்கிற பொழுது முசுலீம் என்றாலே மதவெறியர்கள் என்று சொல்கிற நச்சுப்பிரச்சார அயோக்கியர்களின் உண்மை முகத்தைக்கண்டு கொள்ள முடியும். இதில் கணிசமாக மதவெறியர்களை தாங்கள் அம்பலப்படுத்தியதாக நினைவு. இங்கோ மனநிலை பிறழ்ந்தவரைப் போன்று எழுதிவைத்திருக்கிறீர்கள்.

    \\ பிரான்சு மத சார்பற்ற நாடு ,தனி மனித கருத்துரிமைகளை உரிமைகளை அதிகபச்சம் மதிக்கும் நாடு , தன் காலனியத்தில் வாழ்ந்த மக்களை [இன சிறுபான்மை மக்களை தமிழ் ,அல்ஜீரியா ] ]வரவேற்று ஆதரிக்கும் நாடு என்பதால் இந்த கார்டுனுக்கு எல்லாம் எதிராக வினவு கட்டுரை எழுதி ஜல்லி அடிக்க கூடாது ,சலம்பகூடாது\\

    இந்தக் கருத்து முழுக்கவும் முட்டாள் தனமானது. பிரான்சு நாட்டு சேரிகளைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் பேசுகிற பேச்சு இது. இது ஒருபுறம் இருக்கட்டும். அல்ஜீரியா பிரான்சால் ஒட்டச் சுரண்டப்பட்ட நாடு! இதில் தன் காலனியத்தில் வாழ்ந்த மக்களை வரவேற்று ஆதரிக்கும் நாடு என்று சொல்வதன் அசிங்கத்தை சீரணிக்க இயலாது. அல்ஜீரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு அளித்த கடின உழைப்பையும் அதன் சுரண்டலையும் மறைக்கிறது தங்களின் கருத்து. பிரான்சு நாட்டு மேட்டுக்குடி தமிழர்களின் நிலைப்பாடு பற்றி அதிகமான கட்டுரைகளை கலையரசன் எழுதியிருக்கிறார். ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.

    \\ பிரான்சு ஒன்றும் வினவு மறைமுகமாக ஆதரிக்கும் போலியான கம்யுனிச சீனா அல்ல, கருத்துரிமைகளை,கார்டூன் வரையும் உரிமைகளை கொன்று ஒழிப்பதற்க்கு !\\

    பதில் சொல்கிற அளவிற்கு இந்தக் கருத்து தராதரமற்ற ஒன்று. இருப்பினும் இதில் இன்னொரு பூனைக்குட்டியும் வெளிவரவேண்டியிருக்கிறது. எப்படி மாதொருபாகனின் பொன்னாவைப் பார்த்து சமயம் கிடைக்கையில் என்ன இருந்தாலும் நீ வறடிதானே என்று சொல்கிற ஆதிக்கசாதிகள் திமிர்த்தனத்தைப் போன்றது நடுத்தரவர்க்கத்தின் இந்த மேட்டிமைவாதம் என்பது எமது துணிபு.

    மறைமுகமாக சீனாவை ஆதரிக்கிறது என்று சொல்பவர்களின் இரட்டை நாக்குகள் மாதொருபாகனில் பனை ஏறும் சாணார் வீட்டுப் பெண்ணை பார்த்து கவுண்டரை வச்சிருக்கும் தேவடியா என்று ஆதிக்க சாதிகள் நாக்கு மேல் பல்லைப் போட்டு பேசுவதைப்போன்று இருக்கிறது உங்களது வாதம். எதற்காக நாவலை சுட்டிக்காட்டினேன் என்றால் அங்கு தங்களின் விமர்சனம் ஆதிக்கசாதியை கிழித்தெறிந்தது. ஆனால் இங்கோ அதே உத்தியை கடைபிடிக்கிறது. சார்லி ஹெப்டோ செய்வதும் இதைத்தான்.

    • மக்களின் உரிமைகளை மதிக்கும் ,தனி மனித சுதந்தரத்தை ஆராதனை செய்யும் , கவிதை எழுதுவதை ,கார்டூன் வரைவதை வரவேற்கும் ,தன் இனத்தின் பெருமை பேசாதவர்கள் வாழும் ,இனவாதத்தை தவறாக உணர்ந்தவர்கள் வாழும் , மதமும் அதன் அதிகாரமும் ,ஆளுமையும் ஒரு நாட்டின் ஆளுமைக்கும் ,அதிகாரத்துக்கும் உட்பட்டு வரும்போது ,எந்த மதமும் அதிகாரத்தில் உள்ள இனத்திடம் தன் உரிமைகளை விட்டு கொடுத்து தான் செல்ல வேண்டும் என்ற பாசிசம் பேசாதவர்கள் தலைமை வகிக்கும் ,மனிதர்களின் உடை ,அலங்காரங்களில் தலையிடாத ஆட்சி நடக்கும் நாடு உலகிலேயே சீனா மட்டும் தான் என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் .

     • தங்களின் சீனாவைப் பற்றிய புரிதலை வரவேற்கிறேன். ஆனால் தாங்கள் வைத்த அவதூறுக்கு பதில் என்ன? மறைமுகமாக சீனாவை வினவு ஆதரிக்கிறது என்று சொல்லியிருந்தீர்களே அதற்கு பதில் என்ன? எந்த விளக்குப் பிடித்துப் பார்த்தீர்கள்? சார்லி ஹெப்டோவின் தன்மையும் உங்கள் ரகசிய கண்டுபிடிப்பைப் போல்தான் நயமாகவும் நேர்மையாகவும் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை பதிவு செய்கிறேன்.

      • என்னுடைய பின்னுட்டம் 3.1.1.1 கிண்டல் ,நையாண்டி என்பது கூட தென்றலுக்கு புரியவில்லை

       • சீனாவைப் பற்றிய உங்களது கருத்துக்கான எனது மறுமொழியும் கிண்டலாகத்தான் எழுதப்பட்டது. உங்களது 21 பின்னூட்டத்திற்கான மறுமொழியை படித்துப் பார்த்து அரசு ஒரு ஒடுக்கும் கருவியாக எப்படி இருக்கிறது என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். மற்றபடி அவதூறுக்கு பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள்.

   • தமிழ்,

    1. இந்த விவாதத்தில் சீனாவைப்பற்றியும் அதன் கருத்துச் சுதந்திரத்தைப்பற்றியும் இழுப்பதற்கு என்ன தேவை என்று புரியவில்லை. இந்த கிளை விவாதம் ஏற்கனவே மிகவும் நீண்டுவிட்டது. அதனால் சுருக்கமாக கூறினால் நலம்.

    2. இந்திய பெண்களின் காதனிகள் மத அடையாளங்களல்ல.

    • Univerbuddy, ஆம் இந்திய பெண்களின் அடையாளம் அல்ல காது வளையல் . அது ஹிந்து பெண்களின் மத அடையாளம் . எனவே தான் அனைத்து விதமான அனைத்து மதங்களின் மத அடையாளங்களை பள்ளிகளில் தவிர்க்க தான் பிரான்சு அரசு அந்த சட்டத்தை இயற்றி உள்ளது . மேலும் வேறு சில பழங்குடி மக்களும் அதனை அணிகின்றனர் என்பது உண்மையே . அது மத அடையாளம் அல்ல என்ற விவாதம் தேவையற்றது. ஏன் என்றால் பஞ்சாப் மக்கள் அணியும் டர்பன் மத அடையாளமா அல்லது அவர்களின் பண்பாட்டு அடையாளமா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்து ,காதணி பற்றிய விவாதத்தை மிகவும் நீண்டதாகலாம். ஆனால் ஒன்றை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். பிரச்சனை காதுவளையல் மட்டும் அல்ல .அனைத்து மத குறியீடுகளும் தான் .இந்தகைய ,பிரான்சு நிறைவேற்றியது போன்ற பொது சிவில் சட்டத்தை ஹிந்துத்துவாக்கள் தாங்கள் கோரும் இந்திய பொது சிவில் சட்டத்தில் கொண்டுவர முடியுமா ?

     சீனாவை பற்றிய விவாதத்தை பொருத்த வரை சற்று பொறுமையாக இருங்கள். முடிந்தால் பார்வையாளராக இருங்கள் . தரவுகள் இன்றி எதனையும் நான் கூறவில்லை .., கேள்வி எழுப்பவில்லை . பொறுமையாக இருங்கள்.

     • தமிழ்,

      காதனி உலகம் முழுக்க உள்ள பெண்களில் பலர் அணிவதுதான். எனவே இதற்கு மத அடையாளம் கொடுக்க முடியாது தேவையுமில்லை. சீக்கியர்களின் தலைப்பாகை மத அடையாளம் என்பதை அவர்களே ஒத்துக் கொள்வார்கள்.

  • \\ அதற்க்கு எதிரான பிரான்சு மக்களின் பாரிஸ் ஆர்பாட்டம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு .\\

   அர்னாப் கோஸ்வாமியைப் போன்று பேசுகிறீர்கள் தமிழ் அவர்களே. நிருபயா வண்புணர்வு செய்து கொல்லப்பட்ட போது நடுத்தரவர்க்க குளுவான்களின் மெழுகுவர்த்திப் போராட்டத்தையும் இப்படித்தான் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு என்றார்கள். ஆனால் இப்படியொரு எழுச்சி தலித் சகோதரிகள் வண்புணர்வு செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டபொழுது எந்த ஒரு ஆன்மாவையும் அது கிஞ்சித்தும் அசைத்துக் கூட பார்க்கவில்லையே ஏன்? ஆளும் வர்க்க ஊடகங்களின் செய்திகளைப் பார்த்து லேஸ் சிப்ஸ் கடித்துக்கொண்டு கருத்துரிமை பேசுகிற வர்க்கங்களின் நிலைப்பாட்டையே உங்களது கருத்தும் அச்சு அசலாக பிரதிபலிக்கிறது.

   முதன்மையாக தாங்கள் கட்டுரையை வாசிக்கவேயில்லை என்று கருதுகிறேன்.

   1. நாங்கள் சார்லி அல்ல என்று சொல்வதற்கு முன்வைக்கப்படும் காரணங்களையும் அரசியலையும் இக்கட்டுரை விரிவாகவே முகத்தில் அடித்தாற்போலவே சொல்கிறது.

   2. அதுதவிர நான் சார்லி என்று சொல்கிற கூட்டத்தின் மதவெறிப் பாசிசத்தையும் சிறப்பாக அம்பலப்படுத்துகிறது.

   3. இந்த இரு நிலைப்பாடுகளில் கருத்துரிமை எது? கார்ட்டூன் எது? நிலைப்பாடுகள் என்ன என்பதையும் இக்கட்டுரை பேசுகிறது.

   இதில் தாங்கள் சொல்லவருகிற கருத்து என்ன என்பதை இதன் அடியொற்றி விளக்குங்கள். தாங்கள் எழுதிய மற்ற மறுமொழிகள் வெறும் அவதூறுகளாக இருக்கின்றன. எப்படியென்று விவாதிக்கிற பொழுது எழுதுகிறேன்.

   • வினவு அலுவலக்த்தில் ஒரு இனிய ஞாயிற்று கிழமை மதியம் மதவாதிகள் குழுமி தோழர் பாண்டியனிடம் அராஜகமாக எழுப்பிய கேள்விகளும் அவற்றை பதிவு செய்த முறையும் , பாரிஸ் சார்லி அலுவலகத்தில் பாய்ந்த 50 மதவாதிய துப்பாக்கி தோட்டாக்களும் வேறு வேறானவை கிடையாது என்பதை வினவில் இந்த கட்டுரை எழுதிய தமிழரசன் உணரவேண்டும். சார்லி கார்ட்டூன் எழுப்பும் கேள்விகளை விட வினவின் மதவாதிகளுக்கு எதிரான கேள்விகள் மிகவும் அறிவு பூர்வமானவை என்பதையும் அவர் உணரவேண்டும்

 4. [After viewing all the cartoons i write this ] நபி அவர்கள் நம்மை போன்ற ஒரு மனிதர் தான். விமர்சனத்துக்கோ , கேள்விகளுக்கோ, கார்டூனுக்கோ அப்பாற்பட்டவர் அல்ல. அவர் தன்னை தானே இறைவனின் தூதுவராக பிரகடனப்படுத்திக்கொண்டவர். அவர் ஒன்றும் இறைவன் அல்ல ! மீண்டும் சொல்கிறேன் அவர் நம்மை போன்ற இப்புவியில் பிறந்த சக மனிதர் தான். வினவு கோருகின்றது என்பதற்காகவோ ,கடுங்கோட்பாளர்கள் சுட்டுகொல்கின்றார்கள் என்பதற்கோ பயந்து எல்லாம் நாம் கார்டூன் வரையும் சுதந்திரத்தை விட்டு கொடுக்க முடியாது. நபியை 5கார்டூன் வரைந்து சார்லி எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவே.

  “Muhammad overwhelmed by fundamentalists”
  “100 lashes if you don’t die of laughter!”
  “Charlie Hebdo must be veiled!”
  In a more recent issue, the magazine published a cartoon depicting a member of the Islamic State group beheading Muhammad.

  சார்லி கார்டூன்காரர்கள் கிருஸ்துவ ,யூத ,இஸ்லாமிய மத கொள்கைகளை அவற்றின் அட்டுழியங்களை கார்டூன் மூலம் கேள்வி எழுப்பும் நிலையில் கம்யுனிஸ்ட் வினவுக்கு என்ன பிரச்சனை ?

  கார்டூன் எழுப்பும் கருத்துக்கள் தவறு என்றால் விவாதிக்கலாம் ,சார்லியை மக்களிடம் அம்பலபடுத்தலாம்

  ஹிந்து மத பார்பன பாரிசத்தை பற்றியும் கார்டூன் வரையப்ட்டு இருப்பின் எமக்கு மிக்க மகிழ்வாக இருந்து இருக்கும்

  • நபி நபி என்று சொல்கிறீர்களே தவிர, பாசிச ஜெயலலிதாவையும் சார்லி ஹெப்டோ வரைவதைப் போல வரைய இயலாது என்று கட்டுரை முன்வைக்கிற வாதங்களை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

   என் பார்வையில் வினவு மட்டுறுத்திய ஜெயலலலிதாவின் படம் கலையரசனின் பதிவில் வந்திருக்கிறது. அதில் இலங்கைப் பத்திரிக்கையாளர்கள் ஜெயலலிதாவின் பாவாடையை தூக்கிப் பார்ப்பது போல் இருக்கிறது. இதன் தராதரத்திற்கு கீழேயாயன சார்லி ஹெப்டோவின் கார்டூன்களை எதன் அடிப்படையில் கருத்துச் சுதந்திரம் என்று சொல்கிறீர்கள் என்று விளக்குவீர்களா?

   இந்த இலட்சணத்தில் படம் அம்மணமாக இருப்பது பிரான்சின் கலாச்சாரம் என்று ஒருவாதம் வைக்கிறீர்கள். அப்படியானால் கருப்பினப் பெண்ணை அம்மணமாக நாயைப்போன்று மாற்றுப்பாலியாளர்கள் இழுத்துச் செல்வது பிரான்சின் கருத்துரிமையில் வருகிறதா?

   யூத வெறுப்பை கக்கும் பொருட்டு அங்கு கார்ட்டூன் வரைந்துவிட முடியாது என்பதற்கு தனிச்சட்டமே இருக்கிற பொழுது கறுப்பு இனத்தவர்களின் மீதான இனவெறியும் சிறுபான்மையினர்களின் மீதான மதவெறியும் எப்படி கருத்துரிமையின் கீழ் வருகிறது என்று விளக்குவீர்களா?

   • பண்பாட்டு ,கலாச்சார நிலைகளை கருத்தில் கொண்டால் இந்தியாவில் எவரையுமே நிர்வாணமாக வரையமுடியாது . அதே சமயம் பிரான்சு நாட்டில் நிர்வாணம் என்பதை அவர்களின் கலாசாரம் தவறாக கருதாத நிலையில் அவர்கள் நிர்வாணமாக வரையும் போது தென்றல் என்ன அவரின் கட்சி கூட கேள்வி எழுப்ப முடியாது .

    //நபி நபி என்று சொல்கிறீர்களே தவிர, பாசிச ஜெயலலிதாவையும் சார்லி ஹெப்டோ வரைவதைப் போல வரைய இயலாது என்று கட்டுரை முன்வைக்கிற வாதங்களை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?//

    வினவில் கருப்பர் இன மக்களை பற்றிய சார்லியின் கார்டூன்கள் காட்சி படுத்த பட்டு உள்ளன . ஆனால் நபியை பற்றிய கார்டூன்கள் காட்சி படுத்த படாததன் காரணம் என்ன ? நபியின் கார்ட்டூன் இஸ்லாமிய மக்களை வேதனையாக்கும் என்றால் கருப்பர் இன மக்களை பற்றிய சார்லியின் கார்டூன்கள் கருப்பர் இன மக்களை வேதனை படுத்தாதா ?

    //யூத வெறுப்பை கக்கும் பொருட்டு அங்கு கார்ட்டூன் வரைந்துவிட முடியாது என்பதற்கு தனிச்சட்டமே இருக்கிற பொழுது கறுப்பு இனத்தவர்களின் மீதான இனவெறியும் சிறுபான்மையினர்களின் மீதான மதவெறியும் எப்படி கருத்துரிமையின் கீழ் வருகிறது என்று விளக்குவீர்களா?//

    • \\ வினவில் கருப்பர் இன மக்களை பற்றிய சார்லியின் கார்டூன்கள் காட்சி படுத்த பட்டு உள்ளன . ஆனால் நபியை பற்றிய கார்டூன்கள் காட்சி படுத்த படாததன் காரணம் என்ன ? நபியின் கார்ட்டூன் இஸ்லாமிய மக்களை வேதனையாக்கும் என்றால் கருப்பர் இன மக்களை பற்றிய சார்லியின் கார்டூன்கள் கருப்பர் இன மக்களை வேதனை படுத்தாதா ?\\

     வினவின் பதிவில் கருப்பின பெண்களின் கார்ட்டூன் மட்டுமல்ல போகோ ஹராம் தீவிரவாதிகளால் சிதைக்கப்பட்ட கருப்பின இசுலாமிய பெண்களை இழிவுபடுத்துகிற கார்ட்டூனும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் இசுலாமியர் மக்கள் என்றில்லை எல்லா தரப்பு மக்களையும் வேதனைக்குள்ளாக்காதா?

     மேலும் உங்களது நபி கார்ட்டூன் பற்றிய கேள்வியின் நைச்சியத்தை ஜெயாவிற்குப் பொருத்தினால் ஜெயலலிதாவின் கார்ட்டூனை வினவு மட்டுறுத்தியதற்கும் இது அதிமுக காரர்களை வேதனைக்குள்ளாக்குகிற காரணி ஆகவே வினவு அதிமுகவிற்கு சார்பாக இருக்கிறது என்று கருதுவீர்களா? ஆக எந்த நியாய உணர்ச்சியும் அற்ற வெறும் வெற்று அவதூறுகளுடன் விசயத்தை திரிக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது இல்லையா?

   • நியோ நாசிசம் என்பது பிரான்ஸ் உட்பட பல நாடுகளிலும் ஐரோப்பா முழுவதும் பரவும் விசகிருமி தான் . அதனுடன் சார்லியின் கருத்தாகத்தை ,கார்டூனை ஒப்பிடுவது என்பது சரியானதே [My feedback 3]

    //யூத வெறுப்பை கக்கும் பொருட்டு அங்கு கார்ட்டூன் வரைந்துவிட முடியாது என்பதற்கு தனிச்சட்டமே இருக்கிற பொழுது கறுப்பு இனத்தவர்களின் மீதான இனவெறியும் சிறுபான்மையினர்களின் மீதான மதவெறியும் எப்படி கருத்துரிமையின் கீழ் வருகிறது என்று விளக்குவீர்களா?//

   • இந்தக் கருத்தைப் பார்த்ததும் “blind men and an elephant”, அதாவது பழந்தமிழர்களின் ‘ஆனைகண்டவாதம் (Anekantavada)’ தான் எனது நினைவுக்கு வந்தது. சார்லி ஹெப்டோ குழுமத்தினர் இனவாதிகளோ, மதவெறி பிடித்தவர்களோ அல்ல. அவர்களை ஒருவகையில் ம.க.இ.க வினருடன் கூட ஒப்பிடலாம். வேறுபாடு என்னவென்றால் இவர்களுக்கு முஸ்லீம்கள் என்றால் *புழுத்த பயம் ஆனால் சார்லி ஹெப்டோவினர்களுக்கு முஸ்லீம்களுக்குக் கொஞ்சமும் பயமில்லை. ( *ஈழத்தமிழில் புழுத்த என்றால் மிகவும் அல்லது அதிகம்).

    சார்லி ஹெப்டோ ஒரு அரசியல், சமூக, Satirical Magazine என்பதை மறக்காமல் இந்தக் கேலிச்சித்திரங்களைப் பார்த்தால் அவர்கள் அதன் மூலம் சொல்லவருவது என்னவென்று புரிந்து கொள்ளலாம். உண்மையில் இந்தக் கேலிச்சித்திரத்தின் கருத்து கறுப்பினப் பெண்ணை நாயைப் போன்று அழைத்து வந்து சிறுமைப்படுத்துவதல்ல.

    மேலை நாடுகளில் பெரும்பான்மை ஓரினச் சேர்க்கையாளர்கள் படித்தவர்கள் மட்டுமன்றி, பொருளாதார வசதி கொண்டவர்கள், முற்போக்கு சிந்தனையும், இனவாதம், மதவெறியற்றவர்கள் என்ற என்ற கருத்துமுண்டு. அவர்களும் பாலியல் சிறுபான்மையினராக இருப்பதால், சிறுபான்மை இனங்களின் உரிமைகள், மனிதவுரிமை என்பன பற்றியெல்லாம் பீற்றிக் கொள்வதுடன், சிறுபான்மை மக்களின் போராட்டங்களிலும் கலந்து கொள்வதுண்டு. பல மேலைநாடுகளில் அரசியலிலும் LGBT (Lesbian, Gay, Bisexual, Transgender) Lobby மிகவும் பலம் வாய்ந்தது, Liberal அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பெருமளவு நிதியுதவி செய்கிறவர்களும் அவர்கள் தான் (கிளின்ரன், ஒபாமா, ஹில்லரி மட்டுமன்றி பிரான்சின் அரசியல்வாதிகள் பலர் அவர்களின் ஆதரவாளர்கள்). அந்த lobby இன் மூலம், கத்தோலிக்கத் திருச்சபையின் எதிர்ப்பையும் மீறி, அநேகமான எல்லா ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் ஓரினச்சேர்க்கைத் திருமணத்தை சட்ட பூர்வமாக்கியதுடன், குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமையையும் பெற்றுக் கொண்டனர். அவர்களை நக்கலடிப்பது தான் இந்த கார்ட்டூனின் நோக்கமே தவிர கறுப்பினப் பெண்ணை அவமதிப்பதல்ல.

    முன்பு தமக்கு Heterosexuals போன்றே சமவுரிமை வேண்டுமென்று போராட்டங்கள் நடத்தும் போது சிறுபான்மை, மனிதாபிமானம், முற்போக்கு என்றெல்லாம் பேசிய ஓரினச்சேர்க்கையாளர்கள் இன்று, குழந்தையை தத்தெடுக்கும் உரிமையும், வாடகைத்தாய் (Surrogacy) முறையும் சட்டபூர்வமாக்கப்பட்டு, அவர்களுக்கும் உரிமை வழங்கப்பட்டதுன், அவர்கள் தாமும் ஒரு (பாலியல்) சிறுபான்மையினரென, எந்தச் சிறுபான்மை மக்களுடன் கூட்டுச் சேர்ந்து மனிதவுரிமையைப் பற்றிப் பேசினார்களோ, அந்தச் சிறுபான்மை மக்களை, அவர்களின் தேவைக்காகச் சுரண்டுகிறார்கள். தமது பணத்திமிரைக் காட்டி சிறுமைப் படுத்துகிறார்கள். அவர்களைத் தமது அடிமை போலவே நடத்துகிறார்கள் என்பது தான் இதன் கருத்து. இதில் இன்னொரு இரட்டைக் கருத்து என்னவென்றால், இப்படி வாடகைத்தாய் முறைக்கு, குறைந்த செலவில் சிறுபான்மையின மக்களைப் பயன்படுத்துவது ஓரினச் சேர்க்கையாளர்களின் Sadomasochistic இயல்பையும் காட்டுகிறது, அவர்கள் அதில் இன்பம் காண்கிறார்கள் என்று பிரான்சின், பலம்வாய்ந்த ஓரினனச் சேர்க்கை Lobby ஐச் சார்லிஹெப்டோ கேலி செய்கிறதே தவிர, அந்தக் கறுப்பினப் பெண்ணை சிறுமைப் படுத்துவதல்ல அவர்களின் நோக்கம். என்னை நம்பாது விட்டால், எந்தப் பிரஞ்சுக்காரரிடமாவது கேட்டுப் பாருங்கள். 🙂

    ///அப்படியானால் கருப்பினப் பெண்ணை அம்மணமாக நாயைப்போன்று மாற்றுப்பாலியாளர்கள் இழுத்துச் செல்வது பிரான்சின் கருத்துரிமையில் வருகிறதா?///

    • வியாசனை பொறுத்தவரை கறுப்பின சிறுபான்மையின பெண்ணை, சார்லி ஹெப்டோ இழிவுபடுத்தவில்லையாம். பிரான்சில் சிறுபான்மையினர் அல்ஜீரிய முஸ்லீம்கள் என்று நினைத்துக்கொண்டு ஜாலியாக ரசிக்கிறார் போலும். இதே கறுப்பின பெண் பிரான்ஸ் நாட்டு தமிழ்சிறுபான்மையினரின் அம்மாவாகவோ அம்மம்மாகவோ இருந்தால் இப்படித்தான் பேசுவாரோ என்னவோ? ஒருவேளை வியாசனுக்கு இது இழிவு இல்லாமல் இருக்கலாம்!!!!! ஆனால் பிரான்சில் மட்டுமில்ல உலகில் வாழும் எந்த மானமுள்ள தமிழுருக்கோ அல்ஜிரிய முசுலீமுக்கோ எந்த மக்களுக்கும் அப்படியில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

     • இதில் வேடிக்கை என்னவென்றால் அல்ஜீரிய பெண்கள் எப்படியிருப்பார்கள் என்று அண்ணன் தென்றலுக்குத் தெரியாது. சும்மா அளந்து விடுவது தான் வேலை. பெரும்பான்மையான அல்ஜீரியர்கள் மட்டுமல்ல, மொறோக்கோ, துனீசியா போன்ற வட ஆபிரிக்கர்கள் (North Africans), எல்லாம் அரபுக் கலப்புக் கொண்டவர்கள். அவர்கள் உயரமாக, தீர்க்கமான மூக்கைக் கொண்டவர்களாக வெள்ளை, அல்லது மாநிறமுடையவர்கள். இந்தக் கேலிச்சித்திரத்தில் சித்தரித்திருப்பது, Sub Saharan African woman, அதாவது ஒரு கருப்பர். ஆகவே இது ஒரு அல்ஜீரியப் பெண்ணின் படம் அல்ல. நான் கூறுவதெல்லாம், சார்லிஹெப்டோ இனவெறி, மதவெறியற்ற, முற்போக்கு, வலதுசாரிக் குழுவினர், அவர்களின் நோக்கம் ஒரு ஆபிரிக்கப் பெண்ணும் இழிவுபடுத்துவதல்ல என்பது தான்.

      • சார்லி ஹெப்டோவிற்கு வக்கலாத்து வாங்கப் போய் இப்பொழுது வியாசனுக்கு தன் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கவே நேரமில்லை! போதாது என்று சார்லி ஹெப்டோவிற்கே வகுப்பெடுக்கிறது வியசானின் வியாக்கியானம். அல்ஜர் பெண் என்று எந்த அறிவாளியும் சொல்ல மாட்டார் என்பதை சொல்கிற வியாசன் அந்தப் பெண் சப்-சகாரன்-ஆப்ரிக்க பெண்மணி, அரபுக் கலப்பு என்று இவரே சரோகசி பிசினஸ் செய்வதைப் போல இன்ச் பை இன்சாக துல்லியமாக வரையறுக்கிறார். முசுலீமுக்கு வந்தது தமிழர்களுக்கு வரவில்லை என்று வலிந்து விளக்கம் கொடுப்பதன் மூலமாக சார்லி ஹெப்டோ, பிரான்சு நாட்டு கருப்பின சிறுபான்மை தமிழச்சிகளை இழிவுபடுத்தவில்லை ஆனால் அது அரபுக் கலப்பு கொண்ட சப்-சகாரன் ஆப்ரிக்க பெண்மணியை தான் காட்டுகிறது என்கிறார். ஆகவே சார்லி ஹெப்டோ முற்போக்கு என்கிறார். இதைத்தான் தனக்கென்று வந்தால் உறுப்பும் களையெடுக்கும் என்பார்கள். இதை வெளியே வரவைத்ததில் வியாசனின் சேம் சைடு கோல் செம!

       இதுதவிர வியாசனுக்கு இருக்கும் இந்த நுணுக்கத்தின் தோற்றுவாய் அல்லது சார்லி ஹெப்டோவிற்கு இருக்கும் இந்த நுணுக்கத்தின் தோற்றுவாய் BMW ஆகும். அதாவது வெளிநாட்டில் செட்டிலாயிருக்கிற நண்டுவாசம் பட்டால் தீட்டாகிவிடும் என்று சொல்கிற ஆதிக்க சாதிவெறியர்களுக்கு B for Black, M for Muslim and W for White ஆகாதாம். இதுதான் வியாசனின் முகமூடி! ஆனால் வெள்ளையர்களுக்கு கால் கழுவுவது இங்கு வியாசனின் பின்னூட்டத்தைப் பார்த்தால் தெரியும். சார்லி ஹெப்டோவின் நிலைப்பாட்டை விளக்கித் தெரியவேண்டியது இல்லை. இவர் போன்ற பிழைப்புவாதிகளின் வாழ்க்கையை தோழர் கலையரசன் Ghettoக்கள் என்பார். நியோ நாசிசத்தின் பங்காளிகள் என்று கூட சொல்லலாம்.

      • வாசகர்களுக்கு,

       //வட ஆபிரிக்கர்கள் (North Africans), எல்லாம் அரபுக் கலப்புக் கொண்டவர்கள். அவர்கள் உயரமாக, தீர்க்கமான மூக்கைக் கொண்டவர்களாக வெள்ளை, அல்லது மாநிறமுடையவர்கள்.//

       வட ஆபிரிக்கர்கள் ஏன் வெள்ளை அல்லது மாநிறமுடையவர்கள் என்பதைப்பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இது அரபுக்கலப்பினால் அல்ல.

       முகமதியர்களால் வெல்லப்பட்ட வட ஆப்பிரிக்க பகுதி மக்கள் முகமதியர்களாகி தங்கள் பங்குக்கு அடிக்கடி ஐரோப்பாவை, குறிப்பாக அதன் கடற்கரை கிராமங்களை தாக்கி வெள்ளையின பெண்களை சிறை பிடித்து தங்கள் நாடுகளுக்கு கொண்டு வந்து அடிமைகளாக விற்றார்கள். இந்த பெண்கள் அரேபியா வரை கொண்டு வரப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.

       இந்த வெள்ளை பெண் அடிமைப்படுத்துதல் மொராக்கோ ஸ்பெயினைக் கைப்பற்றியதற்கு முன்பிருந்து பரான்ஸ் வட ஆப்பிரிக்காவை கைப்பற்றி இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை தொடர்ந்தது. அதாவது கிட்டத்தட்ட 800 ஆண்டுகள்.

       அதனால் தான் இன்று வட ஆபிரிக்கர்கள் மற்றும் அரேபியர்கள் வெள்ளை அல்லது மாநிறமுடையவர்களாக இருக்கின்றனர்.

     • வாசகர்களுக்கு,

      இனவெறியுடன் வரையப்பட்டிருந்தால் அது எந்த வண்ணத்தில் வரைந்திருந்தாலும் தவறுதான். ஆனால் இந்த சித்திரம் கறுப்பின பெண்களை இழிவு படுத்துவதற்காக போட்டவையில்லை என்றே நினைக்கிறேன்.

   • நபியை வரைந்தமைக்கு எதிர் வினையாக கார்ட்டூன் காரர்கள் கொல்ல பட்டு உள்ளார்கள் என்பதை அறிய தென்றலை தவிர வேறு யாரும் விளக்கு பிடித்து எல்லாம் அறிய வேண்டிய அவசியம் இல்லை

    • சனநாயக உணர்வுள்ள யாருக்கும் ஜிகாதிகள் கொன்றதை விளக்குப்பிடித்து பார்த்து தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது சரிதான் தமிழ். அலாவூதினின் அற்புத விளக்காக மதவெறியர்களை மத உணர்வுள்ள இறை நம்பிக்கையாளர்களே கண்டித்திருக்கிறார்கள். ஆனால் தாங்கள் மட்டும் எப்படி வினவு மறைமுகமாக சீனாவை ஆதரிக்கின்றது என்பதைக் கண்டுபிடித்தீர்கள் என்பதைச் சொல்லவேயில்லையே?

     • என்னா அறிவு தென்றலுக்கு ! பிரான்ஸ் நாட்டுல கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவா ,படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் கூடுவது என்பது வரவேற்க தக்கது என்று நான் கூறினால் அதை அர்னாப் கோஸ்வாமி ரேஞ்சுக்கு இருக்கு என்று புலம்புறாரு ! தென்றல் உங்களின் உளறல் பின்னுட்டத்துக்கு எல்லாம் வினவுல யாரும் அப்ரைசல் கொடுக்க மாட்டங்க என்பது தெரியுமா தெரியாதா ? அதே சமையத்துல “அலாவூதினின் அற்புத விளக்காக மதவெறியர்களை மத உணர்வுள்ள இறை நம்பிக்கையாளர்களே கண்டித்திருக்கிறார்கள்” என்று கூறுவதும் தாங்கள் தானே ! படுகொலையை உலகமே,சீனா உட்பட எவ்வித “””pre condition””” இல்லாம கண்டிகின்றது ! வினவு ,தென்றல் ,சின்னச்சாமி தவிர !

      A spokesperson for China’s Foreign Ministry said Beijing was “profoundly shocked by the terrorist attack”.
      “We strongly condemn that. The Chinese side mourns the victims and extends sincere sympathy to the bereaved families and the injured. The Chinese side resolutely opposes terrorism in all manifestations and supports the efforts by the French side to safeguard security of the country,” he added.

      • Pre-condition என்று தாங்கள் கருதிக்கொள்கிறீர்கள் தமிழ். ஆனால் கருத்து சுதந்திரம் என்று தாங்கள் மட்டும் அல்ல ‘நான் சார்லி’ என்று சொல்கிற கருத்துரிமை போராளிகள் எல்லாம் அர்னாப் கோஸ்வாமி ரேஞ்சுக்குத்தான் இருக்கிறார்கள். இதை ஒரு எடுத்துக்காட்டு மூலம் பார்ப்போம்.

       ஜெயலலிதா டிபி கிருமி தாக்கி இறந்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். இதில் டிபி கிருமிகளை அழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்று நிலைப்பாடும் இருக்கமுடியாது. ஏனெனில் டிபி கிருமிகள் பாசிஸ்டுகளை மட்டுமல்ல அனைவரையும் தாக்கும். இதில் ஜெயலலிதாவை ஆதரிக்க ஒரு நியாயமும் இல்லை. ஆனால் துப்புகெட்ட தனமாக சார்லி விசயத்தில் கருத்துரிமை என்று கதறுகிறீர்களே தவிர நாங்கள் ஜெயலலிதாவோ சார்லி ஹெப்டோவோ அல்ல என்று சொல்கிற வாதத்தை பிரி-கண்டிசன் என்று புரட்டுகிறீர்கள். இங்கேயே தாங்கள் சார்லியை ஆதரிக்கிற நிலைப்பாடு அறுந்துவிடுகிறது. நடுத்தரவர்க்கத்தின் மேட்டிமைத்தனமும் கிழிந்து விடுகிறது.

       இனி டிபி கிருமிக்கு வருவோம். தாங்கள் மதவெறியர் அல்லர் என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரியும். ஆகையால் டிபி கிருமியை அழிப்பதில் ஒட்டுமொத்த இசுலாமியர்களையும் கைகாண்பிக்கிற வெறியர்களை தாங்கள் அடையாளம் காண்பது எளிது. அனைத்து பாக்டீரியாக்களையும் கொன்றால் தான் டிபி பாக்டீரியாவையும் கொல்ல முடியும் என்று பலர் நஞ்சு கக்குகிறார்கள். ஆனால் அப்படிச் சொல்பவர்கள் எல்லாம் சமூகத்தை மெல்ல மெல்ல அரிக்கிற புற்று நோய்க் கட்டிகள். ஆர் எஸ் எஸ், அனைத்து ஆளும் வர்க்க ஊடகங்கள், எஞ்சிஓக்கள், பெராஷான்கோ போன்ற கைக்கூலிகள், அமெரிக்க ஏகாதிபத்தியம் எல்லாம் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த விவாதத்திலேயே பார்த்தீர்களானால் யுனிவர்படி, வியாசன், ஜோசப் போன்றவர்கள் எல்லாம் கண்மூடித்தனமான இசுலாமிய மதவெறியர்கள். இதில் ஜோசப்பிடம் கொஞ்சம் பேச முடியும். ஏனெனில் அவரும் உங்களைப் போல கருத்தின்றி மட்டுமே கத்திக் கொண்டிருப்பவர். மிச்ச ரென்டு பேரும் எனது திட்டத்தில் இல்லை. ஆக விவாதம் என்ன? பயோ வாராக இருந்தாலும் சரி பாய் வாராக இருந்தாலும் சரி அதை உருவாக்குகிற சமூகக் காரணிகளாக இவ்வளவு விசயங்கள் இருக்கிற பொழுது தாலிபான்கள், ஜிகாதிகள் என்று மட்டும் சொல்லிக் கொண்டிருப்பது என்ன வகையான நிலைப்பாடு?

       இதில் உலகத்திலேயே மதங்களின் முதன்மையான விரோதிகள் கம்யுனிஸ்டுகள். இவர்கள் தான் மதநம்பிக்கையாளர்களை மதவெறியர்களிடம் காப்பதற்கு இடையறாது மல்லுக்கட்டுகிறார்கள். இதில் தாங்கள் பார்க்காத நியாயத்தை கருத்துரிமையை கடப்பாடை வேறு எங்கு பார்த்தீர்கள்? இந்த அரசியல் பார்வையை எப்பொழுது பெற்றுக்கொண்டு போராடப் போகிறீர்கள்? இதைத்தாண்டி மாற்றுக்கருத்து வைப்பர்களின் அரசியல் என்ன? செயல் திட்டம் என்ன? தெளிவாக பேசுங்கள். அதைவிடுத்து ஜோசப்பைப் போன்று அற்பத்தனமாக கத்தி அடங்குவதோ அல்லது தங்களைப்போன்று ஒன்றும் இல்லாமல் கத்திக்கொண்டிருப்பதோ எதற்கும் உதவாது. முடிந்தவரை தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே விமர்சனமும் வைத்துவிட்டேன். மேற்கொண்டு இதையே ஒரு சலுகையாக எடுத்துக்கொள்ளாதீர்கள். ஏனெனில் இது ஒன்று மட்டுமே கம்யுனிஸ்டுகளுக்கு போராட்ட வடிவங்கள் அன்று.

       • பாரிஸ்சில் கார்ட்டூன் காரர்களை கொல்லப்பட்டதை ஆதரித்து நடந்த பேரணியை கிண்டல் அடிக்கும் நீங்கள் மதஉணர்வாளர்களும் கொலையை எதிர்கின்றார்கள் என்று கூறும் போது இரண்டு கருத்துமே ஒன்றுக்கு ஒன்று முரணாக இல்லையா ? மத உணர்வாளர்களும் கார்ட்டூன் காரர்களை கொல்லப்பட்டதை எதிர்கின்றார்கள் என்பது உண்மை என்பது போல பிரான்சு நாட்டு மக்களும் பேரணி மூலம் எதிர்க்க தானே செய்வார்கள் அதில் எதற்கு உங்களின் பிரத்தியோக நக்கல் ?

        உவமைகளுடனும் ,உதாரனங்க்ளுடனும் கருத்தை கூறுவது தவறு இல்லை என்றாலும் அவைகள் மட்டுமே உங்கள் கருத்துகளை வலிமையாக்காது .. தோழர் லெனின் அவர்களின் தேசியம் பற்றிய நூட்கலை படிக்க எடுத்துகொள்ளும் கால அளவை விட உங்கள் உவமைகளுடனும் ,உதாரனங்க்ளுடனும் கருத்தை புரிந்து கொள்ள அதிக நேரம் ஆகின்றது. காரணம் உங்கள் பின்னுட்டங்களில் உவமைகளுடனும் ,உதாரனங்க்ளும் மட்டுமே முதன்மையாக நிற்கின்றதே தவிர கருத்துக்கள் காணாமல் போய்விடுகிறது .

        நபியை பற்றிய 5 கார்ட்டூன்களை நான் விவாதித்து உள்ளேன். கடுங்கோட்பாளர்களுக்கு தான் அவை வெறியை உருவாகுமே தவிர எளிய மத உணர்வாளர்களுக்கு அவை எத்தகைய வலியையும் கொடுக்காது. அந்த கார்டூன்களை பிரன்சு மக்களின் மத சார்பற்ற கலை இலக்கிய பண்பாட்டுகளை மட்டுமே கருத்தில் கொண்டு விவாதிக்க வேண்டுமே தவிர நமது பண்பாட்டு விழுமியங்களை கொண்டு விவாதிக்க கூடாது. நபியை பற்றிய நான் விவாதித்த 5 கார்டூன்களை இந்திய சூழல்களை கொண்டு ஆராயும் போது நிர்வானமான கார்டூனை தவிர பிற யாவும் ஏற்க்க கூடியதே ! நன்றி

        • change: பாரிஸ்சில் கார்ட்டூன் காரர்களை கொல்லப்பட்டதை எதிர்த்து கருத்துரிமையை ஆதரித்து….

        • திரு தமிழ் , கருத்துக்களை கூறும் போது கவனம் தேவை . ஒரு வார்த்தை விடுபடுவது கூட தேவை அற்ற பொருளையும் ,விவாதங்களையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியாதா ?கருத்துக்களை கவனமாக எழுதுங்கள் . கார்டூனிஸ்ட்களால் குரங்காக வரையப்பட்ட பிரான்ஸ் பெண் மந்திரியை பற்றிய படமும் கருத்து உரிமையை தான் கேட்கின்றதா ?கருப்பர் இன மக்களை பற்றிய படங்கள் பிரதிபலிப்பது இனவாதம் தானே ? அதை பற்றி எழுதி பிரான்சு கார்டூனிஸ்ட்களை ஆதரிக்க முடியுமா உங்களால் ?

        • Susila, எனது கவனக்குறைவை கண்டு பிடித்து மாற்றி எழுதியமைக்கு மிக்க நன்றி . இனி கவனமாக இருக்கின்றேன். நான் எழுத நினைத்தது “பாரிஸ்சில் கார்ட்டூன்காரர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து நடந்த பேரணியை…..” என்று . ஆனாலும் உங்கள் திருத்தமும் மிக்க சரியானதே. நன்றி . கருப்பர் இன மக்களை பற்றி வரையப்பட்ட கார்டூன்களை பொறுத்தவரை அவை விவாதத்துக்கு உரியதே .பிரான்சு சூழலை மனதில் கொண்டு விவாதிப்போம் . இந்த கார்டூன்கள் பற்றிய பிரான்சு மக்களின் உணர்வுகளை இணையத்தில் படித்துக்கொண்டும் ,பிரான்சு நாட்டில் வாழும் ஈழ நண்பர்களுடன் சமுக வலை தளங்களில் விவாதித்துக்கொண்டும் தான் இருகின்றேன். அவை[கருப்பர் இன மக்களை பற்றி வரையப்பட்ட கார்டூன்கள் ] இனவாதத்தை வலியுறித்தினால் அது நிருபிக்கபட்டால் சார்லி இனவாத பத்திரிக்கை என்பதை ஏற்க்க தயார். அதே சமையம் அவர்கள் கொல்லபட்டதற்கு காரணம் அவர்களின் இனவாத கார்டூன்கள் அல்ல ! ஆனால் மதவெறிபிடித்த கடுங்கோட்பாளர்கள் தானே முழுமையான காரணம் ! பிரான்சு ,uk,Tamil Nadu நாடுகளை சேர்ந்த கம்யுனிஸ்டுகள் கூட சார்லியின் செயல்கள் “racism, sexism, and homophobia” என்று கூறுகிறார்கள் . விவாதிப்போம் .விடைகாண்போம்

         Note: pls remove the cast based website indicated in your name link.

 5. நம்மை போன்றே நபியும் ஒரு சகமனிதர் என்பதால் அவரை [சக மனிதரை ] நிர்வாணமாக வரைந்த சார்லியின் கார்ட்டூன் மிக்க கண்டனத்துக்கு உரியது ,ஆபாசமானது ,அருவருப்பானது .

  [For the movie The Innocence of Muslims, Charlie Hebdo published a series of cartoons of the prophet. ]

 6. //ஒருபிரிவு மக்கள் தேவதூதராக கருதும் ஒருவரின் நிர்வாணப் படங்களை வரைவது கருத்துச் சுதந்திரத்தில் சேர்த்தியா?//அவங்களுக்கு மட்டுமா தேவதூதன் நமக்கும்தான்
  // மேரியையும் கூட சமூக ரீதியிலான பின்புலத்தில் பரிசீலிப்பதற்கும் தனிப்பட்ட பாலியல் ரீதியில் இழிவு படுத்துவதற்கும் வேறுபாடு இருக்கிறது. பின்னதை நாம் செய்ய மாட்டோம்//என்னண்ணே இது ஒரு பத்து நாளைக்கு யேசு கண்ணடிச்சுட்டு இருந்தாறு கண்ணடிக்கிறது பாலியல்ரீதியானது இல்ல அப்பிடினு விளக்கு செம்புகள பின்னாடியே அனுப்பி வைப்பீர்கள் என்று நம்புகிறேன் //– “_____ நாய்களே” என்று ஆதிக்க சாதியை ஏசுவதும், “______ நாய்களே” என்று அருந்ததினரை ஏசுவதும் ஒரே தரத்திலான ‘விமரிசனம்’ என்று சொல்ல முடியுமா? இல்லை இரண்டையும் நாம் ஒரே அளவில் பரிசீலிக்க முடியுமா?// இசுலாமியர்களையும் இசுலாமிய நாடுகளையும் நம்ம ஊர் அருந்ததியர்கள் ரேஞ்சுக்கு சித்தரிக்காதிங்க எனக்கு திருவிளைடால் படம்தான் ஞாபகத்துக்கு வருது அதுல பிரகாஸ் ராஜ துப்பாக்கி காட்டி மிரட்டுவார் தனுஸ் அப்ப இளவரசன் ஒரு டைலாக் பேசுவார் என்னங்க இது அவன் துப்பாக்கிய எடுத்து காட்டுரான் அவன் போய் லூஸி லூஸினு சொல்லுறீங்க அப்பிடீம்பார் அதுதான் இங்க நடக்குது 18 பேர கொன்னுறுக்கான் அவனுகள அப்பாவி அப்பாவினு சொல்லுறீங்க அது மட்டும் இல்லாம அருந்ததியர்களோட ஒப்பிடுறீக என்ன கருமமோ போங்க //அவை கண்மூடித்தனமான வசைகள். எதிர்த்துப் பேசும் திராணியற்றவர்களை நோக்கி எறியப்பட்ட அமிலக் குண்டுகள்.//
  இந்த அமிலக்குண்டு போட்டு இசுலாமியன் யாருயா செத்தது செத்த 18 பேரும் பிரான்ஸ்காரன் அப்பிடினு முதலாலித்துவ பத்திரிக்கைகள் கள்ள பரப்புரை செய்யுதே
  //பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட (கருவுற்ற) பெண்கள், தங்களுக்குச் சேர வேண்டிய ஈட்டுத் தொகைக்கான காசோலையை நிறுத்தாதீர்கள் என்று சொல்வது போன்ற படம்.//
  பெண்ணுரிமை அப்பிடி செய்ய சொன்ன இசுலாமிற்க்கு போகோ காரமிற்க்கும் அப்பாவி வேசம் போடுவதுதானா வினவின் பெண்ணுரிமை பாராட்டத்தக்கது
  //தங்கள் சொந்த நாட்டு மக்களை ஷரியா சட்டங்கள் என்கிற மத்தியகால இருட்டுப் பெட்டிக்குள் பூட்டி வைத்துள்ள // சரியா சட்டங்கள் இசுலாமிய சட்டங்கள் இல்லயா புதுசு புதுசா தினுசு தினுசா இசுலாமியர்கள் மாரியே தக்கியா பன்றீங்க வாழ்த்துகள் வினவு…

 7. இட்லருக்கும் இரங்க வேண்டுமோ?ஜெயமோகன் இதே கேள்விய வினவ பாத்துகூட கேக்கலாம் நாங்க எதுக்குடா இட்லர இரைத்தூதன்னு நம்பனும் சரி நான் கூடநம்பித்தொலையிறேன் பிரான்ஸ் பத்திரிக்கை ஏன்டா நம்பனும் திடீர் திடீர்ன்னு இட்லருக்கு இரக்கம் காட்டுனிகனா ஜெயமோகன் அண்ணனே உங்களப்பாத்து பொறாமைப்படப்போறாரு தாய்ப்பாசத்துல இவன் நம்மல ஓவர்டேக் பன்னிறுவான் போல இருக்கேன்னு …

 8. வெனவு, அப்போ கருத்து சுதந்திரம்னா என்ன ? பாதிக்கப்பட்ட சமுதாயத்தின் மூட நம்பிக்கைகளையும் / அறிவு கெட்ட நடத்தைகளையும் பேசக்கூடாது என்பது கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதி என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. ஆனாலும் வெனவின் நேர்மை தெரிந்ததே. பகவத்கீதையை விமர்சனம் செய்த புத்தகத்தை வெளியிடுவது கருத்து சுதந்திரம் என்பார்கள். மற்ற மதத்தினரை கொல்ல சொல்லும் குரானை விமர்சித்து புத்தகம் எழுதுவதும் கருத்து சுதந்திரம்தானே என்றால், வினவின் ஒட்டு மொத்த கூட்டமும் பின் கேட்டு வழியாக எகிறி குதித்து ஓடிவிடும். பின்னூட்டத்தையே வெளியிட மாட்டார்கள் என்றால் பாருங்களேன். தந்தரமா அரசியல் பண்றாங்களாமாம். ஆபாசம் இல்லாம “இயு” சட்டிபிகேட் போட்ட முகமது படத்த முஸ்லிம்க ஒத்துக்குவாங்களா ? எதுக்குயா இந்த கட்டுரை ? இந்து மதத்த வச பாடுவதையும் கார்டூன் போடுவதயும் ஒரு பொழப்பா வெச்சிருக்கற நீங்க, இஸ்லாம எதுக்கு தாங்கனும் ? அப்படியே தெரியாத மாதிரி இருந்து விட வேண்டியதுதானே ? முஸ்லிம் மக்கள் மனச கவர்ராங்களாம். தைரியமும் நேர்மையும் இருந்தா எல்லாத்தையும் ஒரே மாதிரி விமர்சனம் செய்யனும். இல்லனா நீங்களும் பத்தோட பதினொன்னுதான்னு ஒத்துக்கனும். ஒங்கள மாதிரி ஆளுங்க , கொண்ணாத்தான் அந்த விமர்சனம்/கார்டூன் சம்பந்தப் பட்ட மக்கள பாதிக்குதுன்னு ஒத்துக்குவீங்களா ?

 9. இந்தக் கட்டுரை அண்மைக்காலமாக வினவில் வெளிவரும் இஸ்லாமிய சார்புச் சளாப்பல்களினதும் சப்பைக்கட்டுகளினதும் உச்சமே தவிர வேறெதுவுமில்லை. இது போன்ற கட்டுரைக்குத் தெரிவிக்கப்படும் மாற்றுக் கருத்துக்களை மட்டுறுத்தல் என்ற பெயரில் அப்படியே இருட்டடிப்புச் செய்து விடும் வினவு, இப்படியான கட்டுரைகளை வெளியிடுவதே வெறும் அபத்தம். இங்கு வெளியிடப்படும் இத்தகைய கட்டுரைகளுக்கு, முஸ்லீம் ஆதரவுக் கருத்துக்களை மட்டும் தான் எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறது. யாரவது எதிர்க்கருத்துத் தெரிவித்தால் அப்படியே நீக்கி விடுவார்கள். வினவுக்கும் அரேபியாவிலிருந்து பணம் வருகிறதோ என்னவோ அல்லாவுக்குத் தான் வெளிச்சம். 🙂

  சார்லி ஹெப்டோவைப் பற்றி இந்தக் கட்டுரை கூறும் அனைத்தும் விவாதத்துக்குரியது, ஆனால் எதிர்க் கருத்துக்களை வினவு வெளியிடாது என்பதை பலமுறை அனுபவத்தில் உணர்ந்தவன் நான். ஆகவே இதற்கும் பதிலெழுதுவது வீண் வேலை. உண்மையில் சார்லி ஹெப்டோ வைப் பற்றி சரியாகத் தெரியாதவர் தான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார். சார்லி ஹெப்டோ ஒரு Satirical Magazine, அவர்கள் மதம், இனவாதம், குறுகிய அரசியல் நோக்கங்கள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்கள். கருத்துச் சுதந்திரத்தையும், பிரான்சின் அரசியலமைப்பின் அத்திவாரமாகிய மதச்சார்பின்மையையும் மதிக்கின்றவர்கள். அவர்கள் கறுப்பர்களையும், முஸ்லீம்களையும் மட்டுமல்ல, பிரான்சின் அரசியல்வாதிகள், பாப்பாண்டவர், கிறித்தவம், ஏசுநாதர், கத்தோலிக்கம், அமெரிக்கா, என அவர்கள் நக்கலடித்து கார்ட்டூன் போடாத விடயமேயில்லை எனலாம். அரசியல்வாதிகளையும், மதத்தையும், சமுதாயத்தில் நடைபெறும் சுத்துமாத்துகள் எல்லாவற்றையும் குறிப்பிட்டு, கார்ட்டூன் வெளியிட்டு, வெட்கப்படச் செய்வது தான் அவர்களின் நோக்கம்.’ ஒவ்வொரு கார்ட்டூனுக்கும் பின்னணியில் நகைச்சுவை மட்டுமன்றி, அதன் பின்னணியில் அவர்கள் கூற வரும் செய்தியுமுண்டு. பழமை வாதியான, இனவாதக்கட்சியின் தலைவர் Jean-Marie Le Pen இன் படத்துக்குப் பதிலாக Piece of shi_t இன் படத்தைப் போட்டு வர்ணித்தவர்கள்.

  அவர்கள் உண்மையில் இஸ்லாத்தை நக்கலடிக்கவில்லை, இஸ்லாமிய பயங்கரவாதத்தைத் தான் கேலி பண்ணுகிறார்கள். முகம்மது நபியே, இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்து சார்லி ஹெப்டோவுக்குச் சார்பாகப் பேசுவதாகக் கூட அவர்கள் கார்ட்டூன் வெளியிட்டார்கள். பிரஞ்சுப் புரட்சியினதும், பிரஞ்சுக் குடியரசினதும் ஆணி வேராகிய மதச்சார்பின்மையும், பேச்சுச் சுதந்திரமும், இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு அடிபணியக் கூடாது என்பது தான் அவர்களின் கருத்தாகும், அதன் அடிப்படையில் ‘நானும் சார்லி தான் – Je suis Charlie’. அதற்குப் பதிலாக, இந்தக் கட்டுரையாசிரியர், தமிழர்கள் எல்லோரும் ‘Je suis Coulibaly’ என்று கூற வேண்டுமென எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது. 🙂

 10. இந்துக் கடவுள்களை மட்டுமன்றி, இந்தியர்கள் அனைவரும் மதிக்கும் பாரதமாதாவையே நிர்வாணமாகப் படம் விரைந்து கேவலப்படுத்திய முஸ்லீம் ஒவியர் M. F. Husain ஐ வினவு எதிர்த்ததா என்று எனக்குத் தெரியாது ஆனால் இந்திய முஸ்லீம்கள் அவருக்கேதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன், அப்படி அவரை எதிர்த்தவர்கள் இங்கு யாராவது இருந்தால் கையை உயர்த்துங்கள், பார்ப்போம்.

  முகம்மது நபியின் ஓவியங்களை பாரசீக ஓவியர்கள் மட்டுமன்றி, எகிப்திலும் வரைந்துள்ளனர். அவை அரும்பொருள் காட்சியகங்களில் இன்றுமுள்ளன. வெறும் கூகிள் தேடுதலிலேயே அந்த ஓவியங்களைக் காணலாம். முகம்மது நபி அவர்கள் இந்துக்களின் காமதேனுவைப் போல் தோற்றமளிக்கும் Buraq எனப்படும், பெண்ணின் தலையும் குதிரையின் உடலும் கொண்ட மிருகத்திலேறி சொர்க்கத்துக்குச் செல்வதாக சித்தரிக்கப்படும் ஓவியங்கள் கூட இணையத்திலும், மியூசியங்களிலும் உண்டு. முகம்மது நபியின் படத்தை வரைவது வஹாபிகளால தடுக்கப்பட்டதா அல்லது அந்த தடை நபிகளின் காலத்திலேயே உண்டா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் முகம்மது நபியைச் சித்தரிக்கும், பழமையான இஸ்லாமிய ஒவியங்கள் உண்டு.

  //ஒருபிரிவு மக்கள் தேவதூதராக கருதும் ஒருவரின் நிர்வாணப் படங்களை வரைவது கருத்துச் சுதந்திரத்தில் சேர்த்தியா?//

 11. வினவு, தமிழரசன் கட்டுரையை மறுஆய்வு செய்யவேண்டியது அவசியம் ஆகிறது .

 12. சார்லி ஹெப்டோ, இஸ்லாத்தை கிண்டல் செய்தால் அமிலக்குண்டு. நீங்கள் இந்து மதத்தை கிண்டல் செய்தால், அது பகுத்தறிவு? எச்சக்கலை _______ உனக்கு மனசாட்சியே இல்லையா????

 13. விமர்சன மறுமொழி இட்டுள்ள பலரும் சளைக்காமல் விவாதிக்கும் திறன் கொண்டவர்கள்.
  ஆனால், எனது கருத்தின் படி நான் கட்டுரையின் பொருளோடு ஒத்துப் போகிறேன்.
  நண்பர்கள் கவனிக்கத் தவறிய சில அம்சங்களை சுட்டிக்காட்ட விழைகிறேன்.

  முதலில் யுனிவர்பட்டி

  1) //அந்த படுகொலைகளை கண்டனம் செய்து அரச முறையில் அரங்கேற்றப்பட்ட அந்த அணிவகுப்பைப்பற்றி பேசுகிறீர்கள்.//

  கட்டுரையாளர் அணிவகுப்பை பற்றி மட்டுமின்றி, சார்லி தாக்குதலைத் தொடர்ந்து இசுலாமியர்களுக்கு எதிராக ஐரோப்பாவில் வேகமெடுத்து வரும் கருத்தியல் ரீதியான முனைவாக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளார் என்று கருதுகிறேன். குறிப்பாக சில ஐரோப்பிய நாடுகள் தமது சொந்த வர்த்தக நலன்களுக்கு உட்பட்டு அமெரிக்காவின் ’பயங்கரவாதத்திற்கு எதிரான’ போர்களுக்கு நிபந்தனைக்குட்பட்ட ஆதரவை அளிக்கின்றன. தற்போதைய முனைவாக்கம் ஐரோப்பிய அரசுகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை நல்க வேண்டி ஒரு அழுத்தத்தை உண்டாக்கியுள்ளன.

  2) //கண்டிப்பாக இது தான் கருத்துச் சுதந்திரம். தூதன் என்று கூறிக்கொண்டவர்கள் பொய்யர்கள் தான் என்பதை எப்படி சொல்வது. இந்தியாவின் சில கற்பனைகளை ஏமாற்று வேலைகளை நாம் எப்படி அனுகுகிறோம்?//

  நான் இல்லை என்று கருதுகிறேன். கருத்துச் சுதந்திரம் என்பது அப்சொல்யூட்டானது அல்ல. வெளிப்படுத்தப்படும் கருத்துக்களை அதனதன் வெளிப்பாட்டுச் சூழலில் வைத்துப் பரிலீத்தே முடிவு செய்யமுடியும்.

  உதாரணத்திற்கு “ஐயம் சார்லி கவ்லிபாலி” என்று சொன்ன ட்யூடொன்னே ஏன் கைது செய்யப்பட்டார்? ஏன் அவரது கருத்தை சொல்லும் உரிமையை ப்ரான்ஸ் அரசாங்கம் வழங்கவில்லை. இங்கே கம்பு சுத்தும் கருத்துரிமைப் போராளிகளும் மௌனம் காப்பதேன்?

  ”ஹாலோகாஸ்ட் இல்லை” என்ற கருத்தை வெளியிடும் உரிமை ஐரோப்பாவில் இருக்கிறதா என்ன?

  ஆக, ஒரு கருத்தின் தாக்குதல் இலக்கு என்னவென்பதைப் பொறுத்து அதன் வெளிப்பாட்டு உரிமை அமைகிறதே ஏன்?

  3) //மிக மிக தவறான உதாரணங்கள்//

  சரியான உதாரணங்கள் என்றே கருதுகிறேன்.

  அடுத்து நண்பர் தமிழ் வெளியிட்ட மறுமொழி கருத்துக்கள் பற்றி

  1) //.தராசின் ஒரு தட்டில் கார்டூனையும் ,மறு தட்டில் சுட்டுகொன்ற நிகழவையும் வைத்தது பாருங்கள் என்றார்//

  கட்டுரையாளர் கொலைகளை ஆதரிக்கவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அநியாயமான முறையில் செத்துப் போனார்கள் என்பதற்காகவே அவர்கள் உயிரோடு இருக்கும் போது செய்த அயோக்கியத்தனங்களை ஆதரிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை நண்பர் தமிழ் அவர்களே.

  2) //பிரச்ச்ச்னையின் சாரத்தை நேரடியாக அணுகி அதற்கு தன் கருத்தை வைக்க வினவுக்கு தெரியாதா ?// //நபியை கார்டூன் மூலம் இழிவு செய்தது எப்படி தவறானதோ அது போன்றே கார்டூன் வரைந்தவர்களையும் சுட்டு கொள்வது தவறானதே// –

  பிரச்சினையின் சாரம் என்னவென்பதை கட்டுரை சரியானபடி அணுகியுள்ளதென்றே நினைக்கிறேன். சாரம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை முன்வைத்து வாதாடினால் நலம்.

  அடுத்து உங்களது இரண்டாவது கருத்தை கட்டுரையும் பிரதிபலிக்கிறது.

  3) உங்களது மறுமொழி எண் 3.1

  உங்களாது அடிப்படை புரிதலில் தவறு உள்ளது நண்பரே. முக்கியமான தன் காலனியத்தில் வாழ்ந்த மக்களை வரவேற்று ஆதரிக்கும் நாடு என்பதை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இணைப்பில் உள்ள சுட்டிகளில் அதற்கு மாறான தகவல்கள் உள்ளன. ஐரோப்பாவில் வசிக்கும் ஈழத்துப் பதிவர் திரு கலையரன் அவர்களது பதிவுகளை மேலதிகமாக வாசிக்க பரிந்துரைக்கிறேன்.

  4) //சார்லி கார்டூன்காரர்கள் கிருஸ்துவ ,யூத ,இஸ்லாமிய மத கொள்கைகளை அவற்றின் அட்டுழியங்களை கார்டூன் மூலம் கேள்வி எழுப்பும் நிலையில் கம்யுனிஸ்ட் வினவுக்கு என்ன பிரச்சனை ?//

  முதலில், பிரச்சினை எல்லா மதத்தையும் விமர்சிக்கிறார்களா இல்லையா என்பதல்ல. அந்த விமரிசனங்கள் எந்த சூழலில் செய்யப்படுகிறது என்பதே.

  அடுத்து, சார்லி செய்வது எதுவும் விமரிசனம் என்ற வரையரைக்குள் வருவன அல்ல. அது யூத கிருஸ்தவ மதங்களைப் பற்றிய அதன் கார்ட்டூன்கள் உள்ளிட்டு.
  விமரிசனம் என்பது எதிராளியின் நிலைப்பாட்டை பரிசீலிக்கக் கோருவதாக இருக்க வேண்டும் – ஒரு மாற்றை முன்வைக்கும் தன்மை அதில் வெளிப்பட வேண்டும்.

  தவறாக நினைக்க வேண்டாம் – தேவிடியாபயலே என்பது ஏச்சு; விமரிசனம் அல்ல. சார்லியின் கார்ட்டூன்கள் வெற்று வசைகள், விமரிசனங்கள் அல்ல.

  அடுத்து திரு P Joseph மற்றும் பிறர்

  திரு ஜோசப் அவர்களின் எல்லா கருத்தும் அப்பட்டமான முட்டாள்தனமாக இருப்பதால் இவர் விவாதிக்கத் தக்கவர் அல்ல என்று முடிவு செய்கிறேன். ஒன்றே ஒன்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.

  //இசுலாமியர்களையும் இசுலாமிய நாடுகளையும் நம்ம ஊர் அருந்ததியர்கள் ரேஞ்சுக்கு சித்தரிக்காதிங்க எனக்கு திருவிளைடால் படம்தான் ஞாபகத்துக்கு வருது அதுல பிரகாஸ் ராஜ துப்பாக்கி காட்டி மிரட்டுவார் தனுஸ் அப்ப இளவரசன் ஒரு டைலாக் பேசுவார் என்னங்க இது அவன் துப்பாக்கிய எடுத்து காட்டுரான் அவன் போய் லூஸி லூஸினு சொல்லுறீங்க அப்பிடீம்பார் அதுதான் இங்க நடக்குது 18 பேர கொன்னுறுக்கான் அவனுகள அப்பாவி அப்பாவினு சொல்லுறீங்க அது மட்டும் இல்லாம அருந்ததியர்களோட ஒப்பிடுறீக என்ன கருமமோ போங்க//

  இது அப்பட்டமான திரிபு. முதலில் ”இசுலாமியர்களையும் இசுலாமிய நாடுகளையும்” என்று பொதுமைப்படுத்தியது ஒரு அயோக்கியத்தனம் – கட்டுரை ப்ரான்சில் வாழும் சிறுபான்மை இசுலாமியர்களை (குறிப்பாக அல்ஜியர்ஸ்) பற்றி பேசுகிறது. அடுத்து, ”அப்பாவி அப்பாவினு சொல்லுறீங்க” – கட்டுரையில் எந்த இடத்திலும் கொன்றவர்களை அப்பாவிகள் என்று சொல்லவுமில்லை அவர்களை அருந்ததியினரோடு ஒப்பிடவுமில்லை.

  • நன்றாக விளக்கியுள்ளீர்கள் சின்னச்சாமி அவர்களே. வாழ்த்துக்கள்.

  • சின்னச்சாமி,

   சி.சா வின் ஜனநாயக உணர்வு பல் இளிகின்றது. நபியை கார்டுன் வரைவது அயோக்கியத்தனம் என்றால் நாளை அதே காரணத்துக்காக ஹிந்துத்துவா /அதிமுக வினவு மீதோ ,புதிய ஜனநாயகம் மீதோ கொலை வெறி தாக்குதல் நடத்தினால் அதனையும் நாம் ஆதரிக்க வேண்டுமா ? [அவர்களை பொருத்தவரை வினவு கார்ட்டூன் அயோக்கியத்தனமாக தானே தெரியும் ]. என்னுடைய பின்னுட்டத்தில் [ எண் 4] நபியை பற்றியகார்டூன்கள் 4 ன் கருத்துகளை பதிவு செய்து உள்ளேன். என்ன விதமான அயோக்கியத்தனங்களை அந்த கார்டுன் பிரதிபலிகின்றது என்று கண்ணை மூடிகொண்டு வினவுக்கு ஜிங் ஜங் போடும் சி.சா அவர்கள் தான் விளக்க வேண்டும். சி.சா, கார்டுன் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யபட்டதை ஆதரிக்காவிட்டாலும், கொலை செய்யபடுவ்தற்கு உரிய நியாயமான காரணங்கள் இருப்பதாகவே நினைகின்றார் என்றால் அந்த காரணங்களை அவர் தான் அடுக்க வேண்டும்

   //கட்டுரையாளர் கொலைகளை ஆதரிக்கவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அநியாயமான முறையில் செத்துப் போனார்கள் என்பதற்காகவே அவர்கள் உயிரோடு இருக்கும் போது செய்த அயோக்கியத்தனங்களை ஆதரிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை நண்பர் தமிழ் அவர்களே. //

  • சின்னச்சாமி,

   [1]கட்டுரையின் உள்ளடக்கம் ஆரம்பத்தில் ஜெயமோகனுக்கு பிரத்தியோகமாக எழுதபட்டு உள்ளது. இது தேவையா ?

   [2]இலச்ச கணக்கான மக்கள் பாரிஸ் நகரில் கருத்துரிமைக்கு ஆதரவாக குழுமியது எல்லாம் வினவுக்கு தெரியவில்லை ஆனால் அதில் கலந்து கொண்ட 50 வெளிநாட்டு தலைவர்கள் மட்டும் தான் வினவின் கண்களுக்கு தெரிகின்றது.

   [3]தலித் மக்களின் மீதான அவதூரு வார்த்தைகளால ஆன தக்குதல்களை நபியின் மீதாகார்ட்டூன்களுடன் ஒப்பிட்டது.

   இவை மூன்றும் கட்டுரையின் கருதாகமான “தாக்குதல் தவறு இல்லை ” என்பதை தான் வளியுருத்துகின்றதே தவிர தாக்குதலை கண்டனம் செய்ய உதவவில்லை.

   //பிரச்சினையின் சாரம் என்னவென்பதை கட்டுரை சரியானபடி அணுகியுள்ளதென்றே நினைக்கிறேன். சாரம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை முன்வைத்து வாதாடினால் நலம். //

  • சின்னச்சாமி,

   பாரிஸில் மனிதர்கள் கொல்லபடுகின்றார்கள் காரணம் நபியின் மீதான கார்டூன்கள் வரையபட்டது . எத்தகைய சூழலில் தாக்குதல் நடத்தப்பட்டது.? படிக்கவும் :

   At 11:28 a.m. Wednesday local time, the French satirical newspaper Charlie Hebdo tweeted a cartoon of ISIS leader Abu Bakr Al-Baghdadi. “Best wishes and good health,” the caption read. Minutes after the tweet was published, three armed and masked gunmen stormed the paper’s offices and opened fire, killing ten of its staff and two police officers.

   //அடுத்து, சார்லி செய்வது எதுவும் விமரிசனம் என்ற வரையரைக்குள் வருவன அல்ல. அது யூத கிருஸ்தவ மதங்களைப் பற்றிய அதன் கார்ட்டூன்கள் உள்ளிட்டு. விமரிசனம் என்பது எதிராளியின் நிலைப்பாட்டை பரிசீலிக்கக் கோருவதாக இருக்க வேண்டும் – ஒரு மாற்றை முன்வைக்கும் தன்மை அதில் வெளிப்பட வேண்டும். //

  • சின்னச்சாமி,

   //கட்டுரையாளர் அணிவகுப்பை பற்றி மட்டுமின்றி, *** கருத்தியல் ரீதியான முனைவாக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளார்//

   நான் கொடுத்த மேற்கோள் அதாவது கட்டுரையின் கடைசி பத்தி அந்த அணிவகுப்பின் தலைகளைப்பற்றி சுட்டுகிறது. அந்த தலைகளுக்கு நான் சார்லி என்று கூறிக்கொள்ள தகுதியில்லை என்று கூறுகிறது. அது சரி தான். இதைத்தான் நான் கூறுகிறேன். அவர்கள் அப்படி சொல்ல முடியாவிட்டாலும் நாம் சொல்லமுடியவேண்டும் என்று கூறியிருக்கிறேன்.

   முகமதியர்களுக்கு எதிராக உருவாகும் முனைவாக்கம் என்பது பின்விளைவு. அதைப்பற்றியும் விவாதிக்கலாம்.

   //கருத்துச் சுதந்திரம் என்பது *** வெளிப்பாட்டுச் சூழலில் வைத்துப் பரிலீத்தே முடிவு செய்யமுடியும்//

   இந்த விவாதம் இன்று நேற்று ஆரம்பித்ததில்லை. சல்மான் ரஸ்டிக்கு எதிரான பத்வா ஒரு முக்கிய கட்டம். அந்த காலத்தில் கணிணியில்லை. Thoe Van Gogh கொல்லப்பட்டது அடுத்த முக்கிய கட்டம். அப்போது கணிணி இருக்கிறது இணையமுமிருக்கிறது. இடையில் பலப்பல நிகழ்வுகள். Innocence of Muhammad என்ற படம் அதைத் தொடர்ந்து படுகொலைகள் அடுத்த கட்டம். முகமதை படம் போடக்கூடாது படம் எடுக்க்க்கூடாது என்று கூறினால் ஏன் என்று வீம்புக்காகவே செய்யத்தான் தோன்றும். ஒரு நாள் திடீரென்று அம்மனகுன்டியாக வரையவேண்டும் என்று வரையவில்லை. ஆரம்ப கட்ட மனநோயாளிகளுக்கு மிதமான shock கொடுப்பதைப்போலத்தான் இது ஆரம்பித்து இப்போது இந்த அளவிற்கு வந்திருக்கிறது. ஐரோப்பாவில் அம்மனகுன்டியாக படம் வரைவது மற்றது எல்லாம் வெகு சகஜம். சிறுவர்களின் மழலைகளின் புத்தகங்களில் கூட அம்மனகுன்டிகள் பல இருக்கும். துப்பாக்கியை வைத்து நினைவுக்குக் கொண்டுவருவதை விட பென்சிலை வைத்து நினைவுக்குக் கொண்டுவருவது மேன்மையானது. ஒருவர் மதிப்பதை மற்றவர்களும் மதிக்க வேண்டும் என்ற கட்டாயம் செல்லாது. அதிலும் மிரட்டி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக நடக்காது. நான் உரத்துச் சொல்கிறேன். I AM CHARLIE or rather ANONYMOUS CHARLIE.

   //ட்யூடொன்னே ஏன் கைது//

   இந்த பெயரை ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் இதைப்பற்றி என்னால் மேலதிக தகவல்களைப் பெறமுடியும்.

   // ஹாலோகாஸ்ட் இல்லை//

   Holocaust ன் கொடூரத்தை உணர்ந்து அதற்கு பரிகாரம் தேடும் வகையில் செய்த சில ஏற்பாடுகளில் சில சட்டங்களும் அடங்குகிறது. அவை காலாவதியாக வேண்டிய காலம் வந்து விட்டதென்றால் அவற்றை நீக்கி விடலாம். தற்போதைக்கு சட்டத்தில் இருக்கிறது போலிருக்கிறது. (Holocaust ஐ யார் மறுக்கிறார்கள் என்பதும் ஒரு முக்கியமான கேள்விதான்.)

   //சரியான உதாரணங்கள் என்றே கருதுகிறேன்.//

   நீங்கள் ஐரோப்பாவில் முகமதியர்கள் சிறுபான்மையினர் என்ற ரீதியில் அணுகுகிறீர்கள். இது பெரிய மோசடி. உலக அளவில் தான் இதைப் பார்க்கவேண்டும். அப்படித்தான் நான் பார்க்கிறேன்.

   தொடர்ந்த விவாதத்திற்கு தயாராகத்தான் இருக்கிறீர்கள் போலிருக்கிறது. மேலும் விவாதிக்கலாம்.

  • என்னை முட்டாள் என்று சொல்லுவாத்ற்க்கு உங்களுக்கு உரிமையை யார் கொடுத்தார்கள் மிஸ்டர் சின்னச்சாமி ,தம்பி சின்னசாமி கிறிஸ்துவன் அப்படினா உங்களுக்கு ரெம்ப கேவலமா போச்சு யேசுவ மட்டும் கேவலமா நீங்க சித்தரிக்கலாம் ஆனா சார்லி கெப்டோ பத்திரிக்கை முகமம்து நபியை அம்மனாமாக சித்தரிக்க கூடாது அதுக்காக யெத்தன பேர வேனா கொல்லலாம் அதுக்கு செம்பு தூக்கிட்டு அவன் தப்பு செஞ்ஞான் தண்டிக்கனும்தான் அனாலும் அவன் கொல்லப்பட்டது கண்டிக்கபடத்தக்கதுதான் அனாலும் அவனை கொன்னது தப்பில்லை ஏனென்றான் அவன் இசுலாமிய நபியை தவறாக சித்தரித்து விட்டான் அவன் நாட்டுல இசுலாமியன் குறைவாக இருக்கிறான் இதுதான் உங்கள் கட்டுறையின் சாராம்சம் இத சொல்லுறதுக்கு பதிலா நான் டிஎன்டிஜே அப்பிடினு சொல்லிட்டு போயேன் அத விட்டுட்டு நாங்க கம்மூனிஸ்டு எங்களுக்கும் பிஜை கும் 16 வித்தியாசம் இருக்குனு ஏன்டா மல்லாடுறீக….

   • மிகச் சரியானா கருத்து திரு. ஜோ அவர்களே…… அது என்னமோப்பா, பிரான்ஸ் நாட்டில் எவ்வளவோ சிறுபான்மை மக்கள் வாழ்கிறார்கள், அவர்கள் யாரும் எந்த துன்பமும் இல்லாமல் தான் வாழ்கிறார்கள், பிரான்ஸ் மட்டும்தான் என்றில்லை அனைத்து நாடுகளிலும் இந்தியர்கள், சீனர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என்று பல சிறுபான்மை மக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அமெரிக்கா போன்ற தேசம் சிறுப்பான்மை மக்களின் தாயகம் என்றே கூறலாம். அனைத்து விதமான தேசிய இனங்களும் அங்கே சிறப்பாக வாழ்கிறார்கள். ஆனால், இசுலாமியர்களைப் போன்று யாரும் வெறுத்து ஒதுக்கப்பட்டதில்லை. அப்படி என்றால் பிரச்சனை யாரிடம் உள்ளது? பிற மதத்தினரிடம் சகிப்பு தன்மையின்மை, பிற கலாச்சாரங்களோடு ஒத்துப் போகமால் வெறுத்து ஒதுக்குவது. ஒத்து போகவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் இசுலாமிய பண்பாட்டை விட மற்றைய இனங்களின் பண்பாட்டை மதிக்கத் தெரியாமை இவை போன்ற காரணங்களே. இதைவிட முக்கியம் எந்த நாட்டில் நாம் வாழ்கிறோமோ, எந்த நாடு நமக்கு வாழ்வளிக்கின்றதோ அந்த நாட்டிற்கு துரோகம் நினைக்க கூடாது தின்ற உப்புக்கு கொஞ்சமாவது விசுவாசமாக நடந்துக் கொள்ளவேண்டும்!!! இதை என்று தான் இந்த “நமக் ஹராமிகள்” உணர்வார்களோ.

   • சின்னசாமி மற்றவறை முட்டாள் என்று கூறும் போது Three Hermits by Leo Tolstoy கதை தான் நினைவுக்கு வருகின்றது . பாதிரியார் பாத்திரத்தில் சின்னசாமி…, மூன்று துறவிகளாக ஜோசப்[triple act] ! ஜோசப் கடல் நீர் மீது நடந்து வந்து பாதிரியாரிடம் மறந்து போன வாசகத்தை கேட்கின்றது இன்னும் கண்ணுக்குள் நிற்கின்றது . விடுங்க ஜோ ___________ !

 14. திரு ஜோசப் அவர்களின் எல்லா கருத்தும் அப்பட்டமான முட்டாள்தனமாக இருப்பதால் இவர் விவாதிக்கத் தக்கவர் அல்ல என்று முடிவு செய்கிறேன்.

  அது மட்டும் இல்லை அவர் ஒரு கிறுத்தவ காவி

 15. திரு தமிழ் அவர்களே,

  //நபியை கார்டுன் வரைவது அயோக்கியத்தனம் என்றால் நாளை அதே காரணத்துக்காக ஹிந்துத்துவா /அதிமுக வினவு மீதோ ,புதிய ஜனநாயகம் மீதோ கொலை வெறி தாக்குதல் நடத்தினால் அதனையும் நாம் ஆதரிக்க வேண்டுமா ? //

  மீண்டும் நீங்கள் பொதுமைப்படுத்துகிறீர்கள் கருத்து சொல்லும் ஜனநாயக உரிமை அப்சொல்யூட்டானது அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். எனது முந்தைய மறுமொழியில் குறிப்பிட்ட உதாரணங்களை கவனிக்க.

  மீண்டும் வேறு வகையில் சொல்ல முயல்கிறேன். நபியைக் கார்ட்டூன் வரைவதில் அயோக்கியத்தனம் இல்லை, ஆனால் அது எந்த சூழலில் வரையப்படுகிறது யாருக்கு வரையப்படுகிறது என்பதே எனது கவனத்திற்குரியது. அந்தக் கார்ட்டூன்கள் சிலவற்றில் முகமது நபி நிர்வாணமாக இருப்பது போன்றும் கூட இருந்தது – அதற்கும் இதே அளவுகோல் தான்.

  கீழ்வருவதை தேவைப்பட்டால் வினவு மட்டுருத்திக் கொள்ளலாம்.

  ஒரு கார்ட்டூனில் டர்பன் அணிந்த ஒரு நிர்வாண உருவம் குப்பறக் கிடக்கிறது, அதன் மலதுவாரத்தில் ஒரு மஞ்சள் நட்சத்திரம் சொருகப்பட்டுள்ளது காப்ஷனில் “ஒரு நட்சத்திரத்தின் பிறப்பு” என்று எழுதப்பட்டுள்ளது.

  இது தான் விமர்சனமா தமிழ்? ஒரே நேரத்தில் ஹாலோகாஸ்டில் கொல்லப்பட்ட யூதர்களையும், யூதர்கள் இசுலாமியர்களின் மலம் என்ற பொருளையும், நபியையும் மிகக்கீழ்த்தரமாக சித்தரிக்கிறது இந்த கார்ட்டூன். ஏன் யூதர்கள், ஏன் இது இசுலாமியர்களைப் பொருத்தவரை கீழ்த்தரமான கேவலம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் திறன் உள்ளவர் என்று நினைக்கிறேன். இவ்வளவும் சொல்லப்படுவது சௌதியில் உள்ள இசுலாமியர்களை நோக்கியல்ல, பிரான்சில் உள்ள சிறுபான்மையினரை நோக்கை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

  இன்னொரு கார்ட்டூனில் டர்பன் அணிந்த ஒரு உருவம் நிர்வாணமாக குப்புறப் படுத்திருக்க, பின்னே காமராவுடன் ஒரு விடியோகிராபர். அதில் அந்த டர்பன் அணிந்த உருவம் சொல்வதன் ஆங்கில மொழிபெயர்ப்பு “My Ass? You love My Ass?”

  இது போன்ற கீழ்த்தரமான, பொறுக்கித்தனமான சித்தரிப்புகளை யாருடைய பார்வைக்கு சார்லி ஹெப்டோ வைக்கிறது தெரியுமா தமிழ்? ஏற்கனவே சமூக ரீதியில் ஒடுக்குதலுக்கு உள்ளான ப்ரென்ஸ் நாட்டின் இசுலாமியர்களின் பார்வைக்கு இந்தக் கார்ட்டூன்கள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு காண்டெக்ஸ்டில் ஒரு புதிய பொருளைப் பெறுகிறது என்பது உங்களுக்குத் தெரியும் தானே? ” ஐரோப்பாவில் இசுலாமியர்கள்” என்ற காண்டெக்ஸ்டில் சார்லி ஹெப்டோவின் கார்ட்டூன்கள் ஒவ்வொன்றும் மிக மோசமான வசைகளே. இந்தக் கார்ட்டூன்கள் வசைதானென்றாலும் சவுதி அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் செய்யப்பட்டிருந்தால் நாம் வேறு வகையில் அணுகமுடிந்திருக்கும்.

  இவையெல்லாம் விமரிசனம் என்றும் இவற்றையெல்லாம் வெளியிடுவது கருத்துரிமை என்றும் உங்களைப் போன்ற முற்போக்காளர்கள் கூட கருதுவது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.

  இதுவரை நான் சொல்லவில்லை என்பதால் ஒரு முறை சொல்லி விடுகிறேன்– “சார்லி ஹெப்டோவில் ஜிஹாதிகள் தாக்குதல் நடத்தில் 17 உயிர்களைக் கொன்றதை வன்மையாக கண்டிக்கிறேன் ண்டிக்கிறேன் டிக்கிறேன் கிறேன் றேன் ன்”

  சார்லியின் மீதான தாக்குதலையும் வினவையும் ஒரே தராசில் நீங்கள் நிறுத்தியிருப்பது அடுத்த அதிர்ச்சி. சார்லி ஒரு பொறுக்கி, பொறுப்பற்ற ஏச்சுக்களும் அதன்வழி வியாபாரமும் தான் அதன் நோக்கம் – வினவு தளம் இத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது அவ்வாறு செயல்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.

  வினவோ அல்லது புதிய ஜனநாயகமோ இந்துமதத்தை விமர்சிக்கத்தான் செய்கிறது. அந்த மதத்தின் உள்ளே இருக்கும் முரண்பாடுகளை சிலவேளைகளில் காட்டமாக சுட்டிக்காட்டவும் செய்கிறது – ஆனால், அவையெல்லாம் இந்துப்பெரும்பான்மை உள்ள நாட்டில், அந்தமதத்தில் உள்ள மக்களை அதன் பிற்போக்குத்தனங்களில் இருந்து விடுவிக்கும் நோக்கில் செய்யப்படுபவை. முக்கியமாக அவை விமரிசனங்கள் – வெற்று வசைபாடல்கள் அல்ல.

  இந்துமதத்தை விமரிசிக்கும் வினவு, ’ஹரஹரமகாதேவகீ’யை ஆதரிக்கவில்லை என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன். இந்துமதத்தை விமரிசிக்கும் அதே வினவு தான், பெந்தெகொஸ்தே லூசுகளின் இந்துக்கடவுள்கள் எல்லாம் சாத்தன்கள் என்ற பிரச்சாரத்தை ஆதரிக்கவில்லை என்பதையும் உங்களுக்கு கவனப்படுத்துகிறேன்.

  யாராவது அரை கிராக்குகள் இந்துக் கடவுள்களை கெட்டவார்த்தை போட்டு ஏசுவது வினவு நண்பர்களுக்கு மகிழ்ச்சியளிக்காது என்றே புரிந்து கொள்கிறேன். விமர்சனத்தையும் வசைகளையும் பிரித்துப் பார்க்கும் திறன்கொண்டவர்கள் அவர்கள் என்பது எனது அவதானிப்பு.

  பொதுவாக அறிவுப்பூர்வமாக விவாதிக்கும் நீங்கள் இந்தமுறை என்னை ஏமாற்றி விட்டீர்கள் 🙁

  • சின்னச்சாமி,

   [1] நீங்கள் [கட்டுரையாளர் ] ஒப்புமை செய்து எழுதும் போது அதனை காணத்தவறிய சின்னச்சாமி , நான் ஒப்புமை செய்யும் போது மட்டும் அதனை பொதுமைப்படுத்துகிறீர்கள் என்று புலம்புவது ஏன் ?கட்டுரையாளர் எந்த விடயங்களை ஒப்புமை செய்து பொதுமை படுத்துகின்றார் என்பதை அறிய எனது பின்னுட்டம் 13.3 ஐ படித்து அறியுங்கள். [தலித் மக்களின் மீதான அவதூரு வார்த்தைகளால ஆன தக்குதல்களை நபியின் மீதாகார்ட்டூன்களுடன் ஒப்பிட்டது .]

   [2] நிர்வாண படம் பற்றி விளக்கத்தை பின்னுட்டம் 3.1ல் கொடுத்து உள்ளேன். படிக்கவும் . மதத்தின் பெயரால் எல்லாவற்றையும்[ youtub move ]பிரச்சனை ஆக்கிய மதவாதிகளுக்கு உரைக்கும் படி வரையப்பட்ட கார்ட்டூன் அது.

   [3]மத வெறியர்களை விமர்சிக்கும் போது அவர்களுக்கு கொள்கை அளவில் ,தத்துவார்த்த அளவில் தலைமை வகிக்கும் நபியை தானே கார்டூனில் வரைய வேண்டும். ஹிந்து பாசிசத்தை தோலுரிக்க ராமன் படம் எப்படி வ்ரைய்ப்ப்டவேண்டுமோ அதுபோன்று !நீங்கள் எழுதுவது பாப்பாத்தி மாட்டுகரி சாப்பிட்டார் என்று எழுதிய நக்கிரன் மீதான அதிமுக தாக்குதலை ஆதரிப்பது போன்று உள்ளது.

   [4]கெட்டவார்த்தை ,அதன் பயன்பாடு எல்லாம் பிரான்சு நாட்டையும் ,அவர்கள் மொழியையும் ,அவர்கள் கலாச்சாரத்தையும் கருத்தில் கொண்டு மதிப்பிட வேண்டியது . அவற்றை நம் நாட்டின் விழுமியங்களுடன்சேர்த்து குழப்பி கொள்கின்றீர்கள்.

  • சின்னச்சாமி,

   //காப்ஷனில் “ஒரு நட்சத்திரத்தின் பிறப்பு”//

   இந்த கேலிச்சித்திரங்கள் Innocence of Muhammad என்ற படத்தின் முன்னோட்டப் படத்தின் வெளியீட்டைப்பற்றி செய்தி முகமதிய நாடுகளில் பரவி கலவரங்கள் உருவாகி பலர் எரித்துக் கொல்லப்பட்டதற்கு பதிலாக வரையப்பட்டவை. பலரை எரித்துக் கொன்றதற்கான கோபத்தை இப்படித்தான் காட்டமுடிந்தது. அந்த படத்தில் நடித்த நாயகனைப் பற்றிய கேலிச்சித்திரங்கள் தான் இவை.

   //இது போன்ற *** சித்தரிப்புகளை யாருடைய பார்வைக்கு சார்லி ஹெப்டோ வைக்கிறது//

   நீங்கள் மோசடியாக ஜோடிப்பதைப் போல அவை ப்ரான்சில் உள்ளவர்களுக்கு மட்டுமில்லை. அவை உலகம் முழுக்க படத்தைப் பற்றிக் கேள்வி பட்டு கொந்தளித்துப் போன, பல மக்களை எரித்துக் கொன்ற முகமதியர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டவை. மொழி புரியாதே என்று அப்பாவித்தனமாக கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். கேலிச்சித்திரங்களுக்கு மொழி முக்கியமில்லை. அந்த சித்திரங்கள் இப்போது எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றன.

 16. உண்மை 1:

  என்னுடைய கருத்து : ஒரு ஹிந்து பெண்ணுக்கு பிரான்சில் காது வளையல் அணியக்கூடாது என்று தடை இருக்கும் போது அதனை அவர் அனுசரித்து அந்த சட்டத்தை மதித்து தான் செல்லவேண்டும்

  தென்றலின் பதில் : இதன்படி பார்த்தால் சவூதியில் பெண்கள் அடிமைப்பட்டு இருப்பது தான் சரி என்கிறது உங்களது கருத்து.

  உண்மை என்ன/என் பதில் : பிரான்சு அரசு 2004ல் கொண்டு வந்த சட்டம் (law 2004-228 of 15 March 2004) அனைத்து விதமான மத அடையாளங்களையும் பள்ளிகளில் தடை செய்கின்றது என்பதே. இது மதசார்பற்ற நாட்டில் வரவேற்க தக்க விடயம் தானே !? சிலுவைகள் ,பர்தாக்கள் ,காது வளையல்கள் என்று அனைத்து விதமான மத அடையாளங்களும் தடை செய்யபடுவது என்பது நியாயமானது தானே ?

 17. உண்மை 2:

  என்னுடைய கருத்து : நபியை நிர்வாணமாக வரைந்த ஒரு கார்டூன் இந்திய சட்ட ,பண்பாடு ,கலாச்சார விழுமியங்கள் படி பார்த்தால் அவரை இழிவு செய்கின்றது, எனவே தவறானது . ஆனால் பிரான்சு இன கலாசாரத்தில் அது,அந்த கார்டுன் தவறு இல்லை.

  தென்றலின் பதில் : இபிகோவின் அடிப்படையிலேயோ ஒரு நாட்டின் கலாச்சார அடிப்படையிலேயோ தான் கார்ட்டூன் கட்டுரையில் விமர்சிக்கப்படுகிறதா? உங்களது வாதப்படியே வந்தாலும் கூட பிரான்சு இன கலாச்சாரம், கருப்பின பெண்களை அம்மணமாக காட்டுவதை அனுமதிக்கிறதா? இனவாதத்திற்கு அங்கு கடுமையான தண்டனைகள் என்றெல்லாம் பேசுகிறார்களே! எங்கே போயிற்று சட்டவாதம்? எந்த வண்டு முருகனையும் இங்கு காணவில்லையே!

  என் பதில் : ஒவொரு நாட்டின் பண்பாடு ,கலாச்சார விழுமியங்கள் வேறுவேறாவை என்னும் போது அந்த நாட்டு மக்கள் கார்டூனை பற்றி மதிப்பிடுவதும் வேறுபடும் அல்லவா ? எனவே பிரான்சை பொறுத்தவரை அவர்கள ,பண்பாடு ,கலாச்சார ,சட்ட விழுமியங்கள் படிதான் கார்ட்டூன் பதிப்பிட வேண்டும்.

  • Yes it is Racist
   Anonymous
   4 upvotes by Aharon Konforti, Jennifer Yap, Bjorn Larsen, (more)
   Sorry, these answers have mostly been distortions of the reality of the magazine, and therefore incorrect. It is true that Charlie Hebdo is a mostly left-leaning publication, and that the specific image posted with the question is satire, but the apologists claiming that there is not a strong undercurrent of Islamophobia or racism in the magazine are entirely false. I will direct you to an article written by a former Charlie Hebdo writer: randomstatic.netNot racist? If you say so…

   http://posthypnotic.randomstatic.net/charliehebdo/Charlie_Hebdo_article%2011.htm

   This is the best summary of my feelings I’ve seen so far:
   What everyone gets wrong about Charlie Hebdo and racism

   Yes, the images have a layered sense of satire, but that doesn’t mean they don’t indulge in unnecessarily racist depictions of Black and Arab people.

   Additionally, the author makes a great point about how Charlie “punched down,” at oppressed minorities in France.

 18. உண்மை 3:

  என்னுடைய கருத்து :மதமும் அதன் அதிகாரமும் ,ஆளுமையும் ஒரு நாட்டின் [பிரான்சு இனத்தின் ] ஆளுமைக்கும் ,அதிகாரத்துக்கும் உட்பட்டு வரும்போது ,எந்த மதமும் அதிகாரத்தில் உள்ள இனத்திடம் தன் உரிமைகளை விட்டு கொடுத்து தான் செல்ல வேண்டும்.

  தென்றலின் பதில் :இது அப்பட்டமான பாசிசமாகும். ஆர் எஸ் எஸ் கூட்டமும் கோல்வால்கரும் ஹிட்லரும் முசோசலினியும் இதைத்தான் சொல்கிறார்கள். ஆகையால் இதன் வீரியத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்யவும். அதற்குத் தங்களின் எடுத்துக்காட்டையே பரிசீலிப்போம்.

  என் பதில் : பிரான்சு அரசு 2004ல் கொண்டு வந்த சட்டம் (law 2004-228 of 15 March 2004) பிரான்சு மக்களை முழுவதும் மத வேறுபாடு இல்லாமல் அனைவரையும் மத குறியீடுகளை பள்ளிகளில் துறக்க வைக்கின்றது. இது தவறான போக்கு என்று தென்றல் உணர்ந்தால் மிக்க நன்றி . நானும் பிரான்சு தேசமும் பாசிச்டுக்லாகவே வரலாற்றில் அடையாளம் காண பட போகின்றேம் . எமக்கு மிக்க மகிழ்வே

  • அடிக்கடி காப்பி பேஸ்ட் செய்யமுடியாது தமிழ் அவர்களே! இருந்தாலும் ஒரு முறை முயற்சிக்கிறேன்.

   “மதமும் அதன் அதிகாரமும் ,ஆளுமையும் ஒரு நாட்டின் [பிரான்சு இனத்தின் ] ஆளுமைக்கும் ,அதிகாரத்துக்கும் உட்பட்டு வரும்போது ,எந்த மதமும் அதிகாரத்தில் உள்ள இனத்திடம் தன் உரிமைகளை விட்டு கொடுத்து தான் செல்ல வேண்டும்.” இப்படி ஒரு பாசிசக் கருத்தை உதிர்த்துவிட்டு இப்பொழுது நான் பொதுசிவில் சட்டத்தைத் தான் சொன்னேன் என்று 2004 சட்டத்தைச் சுட்டிக்காண்பிக்கிறீர்கள்.

   அப்படியே உங்கள் வாதப்படியே வந்தாலும் ஒரு மதச்சார்பற்ற நாடு கல்வியிலும் அரசு அதிகாரத்திலும் மதத்தை தனியாகப் பிரித்துவிடுகிறது என்பதற்கும் இங்கு விவாதிக்கப்படுகிற மஞ்சள் பத்திரிக்கை சார்லி ஹெப்டோ விடயத்திற்கும் என்ன சம்பந்தம்?

   • என்னுடைய பின்னுட்டத்தில் 3.1ல் எந்த நாட்டை பற்றி பேசுகின்றேன்[பிரான்சை பற்றி ] என்பது தெளிவாக இருப்பினும் சவுதிக்கு காவடி எடுத்து கொண்டு போன தென்றல என்ன செய்ய ?மேலும் பின்னுடம் 3.1 ல் கூறும் கருத்துகளை கோர்வையாக புரிந்து கொள்ள இயலாத தென்றல் பிட்டு படம் போல துண்டு துண்டாக என் கருத்துகளை சிதைத்து அதற்கு பதில் அளித்தால் நான் பொறுப்பல்ல !

 19. உண்மை 4:

  என்னுடைய கருத்து : பிரான்சு மத சார்பற்ற நாடு ,தனி மனித கருத்துரிமைகளை உரிமைகளை அதிகபச்சம் மதிக்கும் நாடு , தன் காலனியத்தில் வாழ்ந்த மக்களை [இன சிறுபான்மை மக்களை தமிழ் ,அல்ஜீரியா ] ]வரவேற்று ஆதரிக்கும் நாடு என்பதால் இந்த கார்டுனுக்கு எல்லாம் எதிராக வினவு கட்டுரை எழுதி ஜல்லி அடிக்க கூடாது ,சலம்பகூடாது

  தென்றலின் பதில் :இந்தக் கருத்து முழுக்கவும் முட்டாள் தனமானது. பிரான்சு நாட்டு சேரிகளைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் பேசுகிற பேச்சு இது. இது ஒருபுறம் இருக்கட்டும். அல்ஜீரியா பிரான்சால் ஒட்டச் சுரண்டப்பட்ட நாடு! இதில் தன் காலனியத்தில் வாழ்ந்த மக்களை வரவேற்று ஆதரிக்கும் நாடு என்று சொல்வதன் அசிங்கத்தை சீரணிக்க இயலாது. அல்ஜீரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு அளித்த கடின உழைப்பையும் அதன் சுரண்டலையும் மறைக்கிறது தங்களின் கருத்து. பிரான்சு நாட்டு மேட்டுக்குடி தமிழர்களின் நிலைப்பாடு பற்றி அதிகமான கட்டுரைகளை கலையரசன் எழுதியிருக்கிறார். ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.

  என் பதில் : வரலாற்றில் ஒருநாடு பிற நாடுகளை அடிமை படுத்திய நிக்ழவு என்பது புதியது ஒன்றும் இல்லை. அடிமை பட்ட நாடு விடுதலை ஆகும் போது அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் நிகழ்வு என்பது பிரான்ஸ் தேசத்தில் நடந்த ஒரு சமத்துவ நிகழ்வு. தான் அடிமை படுத்திய நாட்டையும் அதன் மக்களையும் அவர்களின் விடுதலையின் போது மதித்து தன் நாட்டு குடிமக்களாக ஆக்கி உள்ளது பிரான்ஸ் . பிரான்சு குடியுரிமையை ஏற்பதும் மறுப்பதும் அல்ஜீரியர்கள் ,புதுசேரி தமிழ் மக்கள் உணர்வுகளை பொருத்தது.

  • மன்னிக்கவும். குடியுரிமை குறித்த உங்களது சமத்துவ பார்வையிலிருந்து மாறுபடுவதோடு தங்களது கருத்திற்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வெள்ளையனுக்காக துடிக்கிற மீசை என் அடிமயித்துக்குச் சமம் என்று சொன்ன சின்னமருதுவின் விடுதலை வீர மரபு அல்ஜீரிய விடுதலை இயக்கத்திற்கும் இருந்தது. புதுச்சேரி போராளிகளுக்கும் இருக்கின்றது. தாங்கள் ஆளும் வர்க்கம் தூக்கி எறியும் ஓட்டுச்சீட்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். ஆனால் புதுச்சேரியிலும் பிரான்ஸ்சேரியிலும் தனலாக எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனை என்பது வேறு. தாங்கள் மேற்கொண்டு அதுபற்றி தெரிந்துகொள்ளுமாறு கோருகிறேன். நன்றி.

   • அடிமயிறு துடிக்க வெள்ளையனுக்கு எதிரா போராடிய தீரனின் அன்னாச்சி திப்பு தான் பிரான்சு அரசுடன் முற்போக்கான உடன்படிக்கைகளை செய்து கொள்ள முயன்றாறு. அதன்மூலம் அவரின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியில் நில்பிரபுத்துவ்த்துக்கு எதிராக, அதன் அடுத்த கட்ட முதலாளித்துவத்தை நிலைநாட்ட முயன்ராறு. அத்தகைய திப்புவின் அரசியல் நடவடிக்கைகளை நான் அன்றைய காலகட்டத்தின் அரசியல் சூழல்களை கருத்தில் கொண்டு ஆதரிகின்றேன் . வரலாறு முக்கியம் தென்றலே !

    • அதே திப்பு ஆதரித்த புரட்சிகர பிரான்சு ஏகாதிபத்தியமாக சீரழிந்து போனபிறகு அது கருத்துரிமை நாடு என்று எந்த மங்குணி பாண்டியராவது சொல்வாரா? அங்குள்ள சிறுபான்மையினர் ஒட்டச் சுரண்டப்படுகிற பொழுது சமத்து வாழ்வு அளிக்கிறது பிரான்ஸ் என்று வாளை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வராதீர்கள் அமைச்சரே!

     • கொஞ்சம் இடம் கொடுத்தால், திப்பு சுல்தானைப் பற்றி புளுகித் தள்ளத் தொடங்கி விடுவார்கள். எல்லாம் ஒரு திட்டமிட்ட Television Documentary செய்த வேலை. 🙂 உண்மையில் திப்பு சுல்தான் தான் பிரான்சின் ஆதரவைக் கேட்டு முதலில் தூதனுப்பினான். “புரட்சிகர பிரான்சு” அதாவது பிரஞ்சுபுரட்சி (1787-1799) முடிவடைந்து பிரஞ்சுக் குடியரசு அமையு முன்பு அல்லது அந்த வருடத்திலேயே திப்பு சுல்தான் மண்டையைப் போட்டு (1799) விட்டான், அப்படியிருக்க திப்பு எப்படி “புரட்சிகர பிரான்சை” ஆதரித்திருக்க முடியும். இந்தியர் ஒருவர், அதிலும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை மாய்ந்து, மாய்ந்து நியாயப்படுத்தும் ஒருவர், பிரான்ஸ் ஒரு கருத்துரிமையுள்ள நாடு அல்ல என்று வாதாடுவதைப் பார்க்க, யாரும் தமிழ் தெரிந்த பிரஞ்சுக்காரர் வினவில் இல்லையே என்று எனக்கு, உண்மையிலேயே கவலையாக இருக்கிறது. ஆபிரிக்காவில் மட்டுமல்ல, அரேபியாவிலுள்ள அத்தனை முஸ்லீம்களும் கூட, வாய்ப்புக் கிடைத்தால், அவர்களிடம் இருக்கிற கடைசி ஒட்டகத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டுப் பிரான்சுக்குக் கப்பலேறி விடுவார்கள், இந்த லட்சணத்தில் சும்மா என்னென்னவோ எல்லாம் வெளுத்து வாங்குகிறார் தோழர் தென்றல்.

      • வியாசனுக்கு புரட்சி ஒரே நாளில் வந்து விட்டு கைதட்டி ரசித்து அண்ணனுடன் பீர் பாட்டிலோடு மாட்டுக்குடலை உவ்வே சொல்லிக்கொண்டே சியர்ஸ் போட்டு ரசித்துப் பார்த்த காமெடி பிலிம் என்று நினைத்துவிட்டார் போலும். இப்படிப்பட்ட அறிவாளிகள் எல்லாம் புரட்சிக்கு முன்பே, திப்பு இறந்துவிட்டார் என்று கதறுவதற்கு எத்தனை மஞ்சப் பந்துகள் போட்டாலும் தகும்!

       முசுலீம்கள் கடைசி ஒட்டகத்தை விற்றுவிடுவதைப் பற்றி வெளிநாட்டில் செட்டிலான இலங்கை வெள்ளாளசாதி வெறியர்கள் பேசுவது கடைந்தெடுத்த நக்கத்தனம்! சிங்களக்காடையனுக்கு நிலத்தைவிற்றுவிட்டு ஈழத்தமிழர்களையே பல்பெடிகள் எங்கள் காணி நிலத்தை ஆள்வதா? என்று சாதிவெறி கக்கிய வெள்ளாள மேட்டுக்குடி வர்க்கம் இன்றைக்கு கனடா நாட்டில் செட்டிலாகிவிட்டு வெள்ளாள இணையதளத்தில் நிலப்பெருமை பேசுவது வியாசனுக்குத் தெரியாது போலும். நாய் சிவலிங்கத்தை செக்குன்னு நினைச்சு நக்குன கதையாக இருக்கு வியாசனோட பின்னூட்டம்!

       • வியாசன் கூறியதில் தவறு இருந்தால் விளக்கவும். அதை விடுத்து உமது தனிப்பட்ட வெள்ளாள வெருப்பை காட்ட வேன்டிய தேவை என்ன.

        • அய்யா நன்மாறன். வெள்ளாள சாதிவெறி என்று குறிப்பிட்டுதான் எழுதியிருக்கிறேன். தாங்களோ தனிப்பட்ட வெள்ளாள வெறுப்பு என்பதாக கருதுகிறீர்கள். எல்லா சாதிவெறியையும் கண்டிக்கிற பொழுது, குறிப்பிட்ட சாதி மீது தனிப்பட்ட வெறுப்பு என்ற பேச்சுக்கே இங்கு இடம் கிடையாது.மேலும் இங்கு இந்த விவாதத்தில் எதற்காக வெள்ளாள சாதிவெறி என்று குறிப்பிடவேண்டும் என்று கருதுவீர்களேயானால் அதற்கு கீழ்கண்ட பதிலை பரிசீலிக்கக்கோருகிறேன்.

         இந்த விவாதத்தில் குறிப்பிட்டிருக்கிற வெள்ளாள சாதிவெறி குறித்த தகவல் நிலம் தொடர்பானது. இதை முன்னமே வியாசனிடம் விவாதித்திருக்கிறேன். வியாசன் “ஆபிரிக்காவில் மட்டுமல்ல, அரேபியாவிலுள்ள அத்தனை முஸ்லீம்களும் கூட, வாய்ப்புக் கிடைத்தால், அவர்களிடம் இருக்கிற கடைசி ஒட்டகத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டுப் பிரான்சுக்குக் கப்பலேறி விடுவார்கள்” என்று கூறுகிற பொழுது ஆதிக்க சாதி மேட்டுக்குடி வெள்ளாள வெறியர்கள் எங்ஙனம் நிலத்தை எவ்விதம் விற்றுவிட்டு எப்படி பேசினார்கள் என்பதற்கு குறிப்பிட்ட இணைய தளத்தையும் மேற்கோள் காட்டித்தான் பேசுகிறேன். இந்துப் பாசிஸ்டுகளின் இசுலாமிய மதவெறியை அம்பலப்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பு.

         இதையும் தாண்டி வியாசனையும் வெள்ளாள சாதிவெறியையும் ஏன் தொடர்பு படுத்த வேண்டும் என்று கருதுவீர்களேயானால் தாங்கள் நிலம் என்று மட்டுமல்ல, சைவம், மாலியம், பால் சொதி, நண்டு வாசம்-சாமி தீட்டு, அறவழியில் ஆடு கோழி பலியிடுதலைத் தடுத்தல், கலை, கலாச்சாரம் என்று வியாசன் கூறுகிற அத்துணை வாதங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது தான் பின்னணி.

         குறிப்பு: என் இனத்தையே இவன் குறை கூறுகிறானே என்பதுதான் உங்களது ஆதங்கமா?

         • சாதி வெறியை கண்டிப்பது சரி. ஆணால் வியாசனுக்கான உங்கல் பதில் பெரும்பாலும் வெள்ளால சாதி என்றெ வருகிறது. தனிப்பட்ட முறையில் சாதி பெயர் சொல்லி திட்டுவது சாதியை கூர்மையாக்குமே தவிர சாதி ஒழியாது. மாற்று கருத்து சொன்னால் நீ அந்த இனம் கூறுவது சரியல்ல. எனக்கு பார்ப்பான்,வந்தேறி என்று சொல்வதிலும் உடன்பாடு கிடையாது.

         • //குறிப்பு: என் இனத்தையே இவன் குறை கூறுகிறானே என்பதுதான் உங்களது ஆதங்கமா?//

          ஆதங்கம் ஒன்ரும் இல்லை நன்பரே. விமர்சிப்பது உஙகள் உரிமை.

     • “”””1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று “”””

      பிரஞ்சு புரட்சிக்கு முன்பே திப்பு பிரான்சுடன் தொடர்பு வைத்து இருந்தார் என்பதற்கான .., தென்றலின் மூக்கை உடைக்கும் ஆதாரம் —-வரலாற்றுக்கு நன்றி

     • “””பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.”””

      பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் , நடைபெறும் போது திப்பு பிரெஞ்சு அரசுடன் தொடர்பில் இருந்தார் —-வரலாற்றுக்கு நன்றி

 20. உண்மை 5:

  பிரான்சு அளவிற்கு சீனா ஒன்றும் அரசியல் ,பொருளாதார அகதிகளை வரவேற்கும் , தனிமனித சுதந்திரத்தை ஆறாதிக்கும் , கருத்து சுதந்திரத்தை உயிர் மூச்சாக நினைக்கும் நாடு ஒன்றும் கிடையாது. இன்றைய போலியான முதலாளித்துவ கம்யுனிசத்தை நடைமுறை படுத்தும் சீனாவை வினவோ ,தென்றலோ ஆதரிக்கவில்லை என்று கூறுவதை விட்டுவிட்டு ஏன் தேவை அற்ற கூச்சல் தென்றல் ? சீனாவின் இன்றைய அரசியல் ,பொருளாதார பாதையை ஆதரிக்கின்றீர்களா இல்லையா என்று கூறுங்கள் பார்ப்போம் ?

  மாதொருபனை பற்றி எழுதியதால் கேட்கின்றேன் :

  பெருமாளுக்கு கொடுத்த ஆதரவை சார்லிக்கு ஏன் வினவு கொடுக்க வில்லை ?

  • \\ இன்றைய போலியான முதலாளித்துவ கம்யுனிசத்தை நடைமுறை படுத்தும் சீனாவை வினவோ ,தென்றலோ ஆதரிக்கவில்லை என்று கூறுவதை விட்டுவிட்டு ஏன் தேவை அற்ற கூச்சல் தென்றல் ?\\

   தாங்கள் வேசிப் பட்டம் கட்டிவிட்டு அதற்கு ஆதாரத்தைத் தராமல் தேவைப்படுகிறவர் தன்னை கற்புள்ளவர் என்று நிரூபிக்கட்டும் என்று எதிர்பார்ப்பது வக்கிரம் இல்லையா? உங்களுக்கு இதில் சிறிதும் குற்ற உணர்ச்சியே இல்லை. இப்படி உங்களைப் பார்த்து தான் கேட்க முடியும். ஏனெனில் சீனாவை ஆதரித்தார்கள் வடகொரியாவை ஆதரித்தார்கள் என்பதெல்லாம் பொதுவெளியில் நம்மைப்போன்ற வாசகருக்கு வரக்கூடிய நியாயமான சந்தேகங்கள் என்பதைத்தான்டி இவையெல்லாம் முதலாளித்துவத்தின் நக்கனத்தனமான பிரச்சாரங்களாக இருக்கின்றன. கோடான கோடி முறை நாம் இந்த அவதூறு பிரச்சாரத்தை எதிர்கொள்ள வேண்டும்.

   அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்கும் கருவி. இதில் பாட்டாளிகளுக்கான அரசு என்பது முதலாளித்தவத்தை நொறுக்குவதற்கான கருவியும் உழைப்பாளிகள் தங்களுக்கான அதிகாரத்தை நிறுவிக்கொள்வதற்கான அதிகார அமைப்பும் ஆகும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த கருத்தில் எந்த நாட்டையும் பொருத்திப் பாருங்கள். அரசின் அடக்குமுறை அது சீனாவாக இருந்தாலும் பிரான்சாக இருந்தாலும் இந்தியாவாக இருந்தாலும் எளிதாக புரியும். வினவு போன்ற தளங்கள் எதை முன்னிறுத்துகின்றன என்பதும் புரியும். ஒன்றரை வருடங்களாக விவாதிக்கிற தங்களுக்கு இது தெரியவில்லை என்பது ஆச்சர்யமல்ல. இப்பொழுது தெரிந்துகொள்ளுங்கள். மேலும் இதை மக்களிடம் பல முனைகளில் பிரச்சாரமாக கொண்டு செல்லுங்கள். ஆனால் தாங்கள் செய்து கொண்டிருப்பது என்ன?

   இப்பொழுது தாங்களே பதில் சொல்லுங்கள்: “சீனாவின் இன்றைய அரசியல் ,பொருளாதார பாதையை ஆதரிக்கின்றீர்களா இல்லையா என்று கூறுங்கள் பார்ப்போம் ?”

   ——

   பெருமாளுக்கு கொடுத்த ஆதரவை சார்லிக்கு ஏன் வினவு கொடுக்க வில்லை ?

   வினவு சார்பாக பதில் சொல்ல இயலாது. ஆனால் எனது பார்வையை முன்வைக்க விரும்புகிறேன். சார்லிபோன்ற நியோ நாஜிக்களை பெருமாளோடு எப்படி ஒப்பிட முடிகிறது உங்களால்? வன்மத்திற்கும் ஒரு அளவில்லையா? சார்லி முஸ்லீம்களின் பிரச்சனையோடு மட்டும் சம்பந்தப்படவில்லை. ஆக தாங்கள் அர்த்தம் இன்றி உளறிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது எனது கருத்தாகும்.

   • ஒருவர் கம்யுனிஸ்ட்டா பிறந்துட்டா அரசியல் முடிவுகளில், சித்தாந்த முடிவுகளில் கற்புக்கு அரசனா/அரசியா இருக்கனும் என்று அவசியம் இருக்கா என்ன ?[ நேரடியாக வைக்க பட்டு உள்ள குற்ற சாட்டுக்கும் கேள்விக்கும் நேரடியாகவே பதில் அளிக்கலாம். உங்கள் அறிவுரைகள் , ஆலோசனைகள் எல்லாம் எமக்கு தேவை இல்லை ]

    [1]பிரான்சு ஒன்றும் வினவு மறைமுகமாக ஆதரிக்கும் போலியான கம்யுனிச சீனா அல்ல, கருத்துரிமைகளை,கார்டூன் வரையும் உரிமைகளை கொன்று ஒழிப்பதற்க்கு !

    [2]சீனாவின் இன்றைய அரசியல் ,பொருளாதார பாதையை ஆதரிக்கின்றீர்களா இல்லையா என்று கூறுங்கள் பார்ப்போம் ?”

    சார்லி நியோ நாஜிக்ககளா ? என்ற கேள்வி விவாதத்துக்கு உரியது . தமிழரசன் காட்டும் யூடோன்னெ உதாரணத்தில் கூட அந்த கார்ட்டூன் நியோ நாஜி ஒருவரின் மேலான கூர்மையாக விமரிசனமாக நாம் காண முடிகின்றது. [முதல் அடுக்கு ] இரண்டாவது அடுக்கில் காமரூன் தந்தைக்கும் ப்ரெஞ்சு தாய்க்கும் பிறந்த கலப்பினத்தவர் [யூடோன்னெ ] நியோ நாஜியாக இருப்பதை சார்லி கேள்வி எழுப்புகின்றது. வினவின் புரிதல் “சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் முட்டாள் தான் யூடோன்னெ” என்பதை சார்லி வலியுருத்துவதில் என்ன தவறு இருகின்றது ? இங்கே நியோ நாஜியான யூடோன்னெவை மிகவும் நுட்பமாக தொலுரிகின்ரது சார்லி. உங்களுக்கு மேலும் புரிதல் தேவை படுமாயின் ஒரு தலித் ஹிந்துத்துவாவை ஆதரிப்பதை சக மனிதர் என்ற அளவில் வினவு எதிர்கின்றது .[முதல் அடுக்கு ] . அவர் தலித்தாக இருப்பினும் அவருக்கு எதிரான அவரை இழிவு செய்யும் ஹிந்துத்துவாவை ஆதரிகின்றாரே என்றும் வினவு எதிர்கின்றது .[இரண்டாவது அடுக்கு ] இது என்ன நியோ நாஜிக்கொள்கையா ?

    • \\ நேரடியாக வைக்க பட்டு உள்ள குற்ற சாட்டுக்கும் கேள்விக்கும் நேரடியாகவே பதில் அளிக்கலாம். உங்கள் அறிவுரைகள் , ஆலோசனைகள் எல்லாம் எமக்கு தேவை இல்லை\\

     நேரடியாக தாங்கள் வைத்தது குற்றச்சாட்டு அல்ல என்பதையும் உங்களின் கருத்து, நாக்கு மேல் பல் போட்டு பேசும் நக்கத்தனமான பிரச்சாரம் என்பதையும் எனக்குத் தெரிந்தவரை சொல்லிவிட்டேன். இதை அறிவுரை, ஆலோசனை என்று கருதாமல் நேர்மை ரோசம் இருந்தால் கண்டனமாக கருதிக்கொள்ளுங்கள். இதனால் சனநாயகத்திற்காக போராடுவதாக கருதுகிற தாங்கள் மைய நீரோட்டத்தில் மேற்கொண்டு இணைந்தால் சரி.

     சிலர் வினவு போன்ற தளம் அரேபியாவில் காசுவாங்கிக் கொண்டு எழுதுகிறது என்று சொல்வதெற்கெல்லாம் வாசகனான நான் பதில் எழுதவில்லை. ஏனெனில் அதற்கான தராதரமமோ கண்ணியமோ நேர்மையோ ஏதும் அந்த வாதத்தில் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மறைமுகமாக சீனாவை ஆதரித்தார்கள் என்று தாங்கள் கூறுகிற அவதூறும் இதே வகையிலான கருத்துவிபச்சாரமே என்பதை மீண்டும் ஒருமுறை பதிவு செய்கிறேன்.

     \\ சார்லி நியோ நாஜிக்ககளா ? என்ற கேள்வி விவாதத்துக்கு உரியது .\\

     தாங்கள் சார்லி நியோ நாஜிக்கள் என்பதை ஆமோதித்து கருத்து கூறியவர் என்பதை மீண்டும் நினைவுபடுத்தி பாருங்கள். என்னை எதிர்க்கப்போய் இவ்வளவு சங்கடம் எதற்கு?

     \\தமிழரசன் காட்டும் யூடோன்னெ உதாரணத்தில் கூட அந்த கார்ட்டூன் நியோ நாஜி ஒருவரின் மேலான கூர்மையாக விமரிசனமாக நாம் காண முடிகின்றது. [முதல் அடுக்கு ] இரண்டாவது அடுக்கில் காமரூன் தந்தைக்கும் ப்ரெஞ்சு தாய்க்கும் பிறந்த கலப்பினத்தவர் [யூடோன்னெ ] நியோ நாஜியாக இருப்பதை சார்லி கேள்வி எழுப்புகின்றது. வினவின் புரிதல் “சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் முட்டாள் தான் யூடோன்னெ” என்பதை சார்லி வலியுருத்துவதில் என்ன தவறு இருகின்றது ? இங்கே நியோ நாஜியான யூடோன்னெவை மிகவும் நுட்பமாக தொலுரிகின்ரது சார்லி. உங்களுக்கு மேலும் புரிதல் தேவை படுமாயின் ஒரு தலித் ஹிந்துத்துவாவை ஆதரிப்பதை சக மனிதர் என்ற அளவில் வினவு எதிர்கின்றது .[முதல் அடுக்கு ] . அவர் தலித்தாக இருப்பினும் அவருக்கு எதிரான அவரை இழிவு செய்யும் ஹிந்துத்துவாவை ஆதரிகின்றாரே என்றும் வினவு எதிர்கின்றது .[இரண்டாவது அடுக்கு ] இது என்ன நியோ நாஜிக்கொள்கையா ?\\

     இந்தியாவில் ஆதிக்க சாதி திமிர் திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் மலத்தை திணித்தது. சார்லி ஹெப்டோ இனவெறி திமிரில் இதை தலை கீழாக கறுப்பினத்தவர்களின் குதத்தில் வாழைப்பழத்தை திணித்தது. இத்தகைய நாசிசத்தை புரிந்துகொள்ள துப்பில்லாத தாங்கள் மொட்டையாக வினவையும் நியோ நாஜி சார்லியையும் சேர்த்து எழுதி நுட்பம் என்று உளறிக்கொட்டுகிறீர்கள். இந்த முயற்சி எதற்காக?

     • சீனாவை வினவு ஆத்ரிக்கின்றது ,சீனாவின் இன்றைய அரசியல் ,பொருளாதார பாதையை ஆதரிக்கின்றீர்களா? என்ற என் கருத்துகளும் ,கேள்விகளும் தென்றலை ஹிஸ்டீரியா மன நோய் வந்த அளவிற்கு மாற்றி இப்படி கருத்து கூறுவதே கருத்துவிபச்சாரம் __________ மட்டுமே முன்னிற்கின்றது. வாழ்த்துக்கள் தென்றல் உங்களுக்கும் ,நீங்கள் சார்ந்து உள்ள கம்யுனிச அமைப்புக்கும்.

      நியோ நாசிசம் என்பது பிரான்ஸ் உட்பட பல நாடுகளிலும் ஐரோப்பா முழுவதும் பரவும் விசகிருமி தான் . அதனுடன் சார்லியின் கருத்தாகத்தை ,கார்டூனை ஒப்பிடுவது என்பது சரியானதே என்பது தான் என் கருத்து ! மேலும் சார்லி நியோ நாஜிக்ககளா ? என்ற கேள்வி விவாதத்துக்கு உரியது என்ற என் கருத்து எந்த விதமான முன்முடிவுகளும் இல்லாமல் சார்லியின் கார்டூன்களை ஆய்வு செய்ய உதவும்.யூடோன்னெ பற்றிய சார்லியின் கார்ட்டூன் ஒன்றும் நியோ நாசிசம் அல்ல என்று தெளிவாக விளக்கி உள்ளேன். யூடோன்னெ ஒரு நியோ நாசிச கொள்கை உடையவர் என்பதை தென்றல் தன் வசதிக்கு மறந்து விட்டு/மறைத்துவிட்டு தலித்துகளின் வாயில் மலத்தை திணித்தது போன்று சார்லி அவரை இழிவு செய்வதாக கூறுவது தென்றலின் அறிவு நானயத்தை சந்தேகத்துக்கு உட்படுத்துகின்றது .

      • தமிழ்,

       தாங்கள் முதலில் வினவின்/தென்றலின் மீது வைத்த குற்றசாட்டு.

       //பிரான்சு ஒன்றும் வினவு மறைமுகமாக ஆதரிக்கும் போலியான கம்யுனிச சீனா அல்ல, கருத்துரிமைகளை,கார்டூன் வரையும் உரிமைகளை கொன்று ஒழிப்பதற்க்கு !//
       —————————–
       தோழர் தென்றல் தங்களுக்கு அளித்த பதில்,

       //ஆனால் தாங்கள் வைத்த அவதூறுக்கு பதில் என்ன//
       //மற்றபடி அவதூறுக்கு பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள்.//

       அதாவது தாங்கள் சொன்ன அவதூறுக்கு பதில் சொல்ல முயற்சி செய்ய சொன்னார்.. அதை சொல்வதற்கு பதிலாக மடைமாற்றி பின்வருமாறு போகிறது தங்களது விவாதங்கள்……

       //சீனாவை வினவு ஆத்ரிக்கின்றது ,சீனாவின் இன்றைய அரசியல் ,பொருளாதார பாதையை ஆதரிக்கின்றீர்களா? என்ற என் கருத்துகளும் ,கேள்விகளும் //

       —————
       முதலில் அவதூறு சொன்னவர் தாங்கள். அதை தாங்கள் தான் நிரூபித்தாக வேண்டும். அதை விட்டு விட்டு….

       நன்றி.

       • சிவப்பு இதுவரை வினவில் இருந்தோ ,தென்றலிடம் இருந்தோ என் கருத்துக்கு நேரடியான மறுப்பு வரவில்லையே ! வரட்டும் அதன் பின் என் கருத்து அவதூறா ?,கருத்து விபச்சாரமா ? அல்லது உண்மையா ?என்று நிருபிக்கின்றேன் ! இல்லை என்று கூற சொல்லுங்கள் பார்போம் !

        நான் கூறும் கருத்து மடை மாற்றல் எல்லாம் இல்லை ! பக்கம் பக்கமாக வெட்டி ஞாயம் பேசும் தென்றல் பதில் கூறாமல் பம்வுவது ஏன் ? அவரிடமே பதில் அளிக்க கூறுங்கள் .

        • தமிழ்,

         தாங்கள் வைத்த குற்றசாட்டை “அவதூறு” என்று அவர் கூறிவிட்டார். இது என்னைப் பொறுத்த வரை தங்களுக்கு அளித்த பதிலாகவே படுகிறது.

         எனவே, அது அவதூறு அல்ல உண்மையாகவே வினவு மற்றும் தோழர் தென்றல் இன்றைய சீனாவை ஆதரிக்கிறார்கள் என்று தாங்கள் தான் நிறுவ வேண்டும்.

         ஒருவேளை அவர் ஆம்/இல்லை என்ற பதில் தான் சொல்ல வேண்டும் என்று தாங்கள் நினைத்தால் அது விதண்டவாததிற்க்கே வழி வகுக்கும்.

         நன்றி.

         • சிவப்பு ,

          பின்னுட்டம் 21.1.1ல் நான் வினவை பற்றி எழுப்பிய / கூறிய முதல் கருத்து “பிரான்சு ஒன்றும் வினவு மறைமுகமாக ஆதரிக்கும் போலியான கம்யுனிச சீனா அல்ல, கருத்துரிமைகளை,கார்டூன் வரையும் உரிமைகளை கொன்று ஒழிப்பதற்க்கு !” . இது ஒன்றும் அவதூரு கிடையாது .பிரன்சு தேசத்தில் அதன் நாட்டின் தலைவர் உட்பட எவர் மீது வேண்டுமானாலும் கருத்தை தெரிவிக்கலாம் .கார்ட்டூன் வரையலாம். ஆனால் போலியான கம்யுனிச நாடான சீனாவில் உள்ளூர் கம்யுனிச தலைவர்கள் மீது கூட பத்திரிகையில் கருத்து தெரிவிக்க முடியாது ,கார்டூன் வரைய முடியாது என்ற நிலை இருக்கும் போது அந்த நாட்டு மக்கள் கருத்து சுதந்திரத்துடன் தான் வாழ்கின்றார்களா ? என்பதே என்னுடைய கருத்தின் விளக்கம். வினவு சீனாவின் கருத்துரிமை அற்ற நிலையை பற்றிய இதுவ்ரை எந்த விமர்சனமும் எந்த கட்டுரையிலும் வைக்காத நிலையில் அது சீனாவின் கருத்துரிமை அற்ற நிலையை ஆதரிப்பதாக தான் பொருள். எனவே உண்மையில் வினவு கருத்து சுதந்திரத்தை உலகளாவிய நிலையில் ஆதரிகின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது . இனி என் கருத்துக்கு விளக்கம் கொடுக்க வேண்டியது தென்றலோ அல்லது வினவோ தானே ஒழிய நான் அல்ல !

          பின்னுட்டம் 21.1.1ல் நான் கேட்கும் கேள்வி “சீனாவின் இன்றைய அரசியல் ,பொருளாதார பாதையை ஆதரிக்கின்றீர்களா இல்லையா என்று கூறுங்கள் பார்ப்போம் ?” என்பது என்னுடைய முதல் கருத்தை அடிப்படையாக கொண்டது என்பதை நீங்கள் எளிமையாக உணரமுடியும் .

          ஒன்றை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன் : கருத்து சுதந்திரம் மட்டும் USSR ல் இருந்து இருந்தால் அங்கு கம்யுனிசம் தொழர் ஸ்டாலினுக்கு பின் வந்த போலியான கம்யுனிச தலைவர்களால்சீரழிக்கபட்டு பின்பு தகர்க்க பட்டு இருக்காது. இதே நிலை தான் சீனாவிலும் இன்று . மாவோவுக்கு பின் தலைமைக்கு வந்த கும்பல் சீனாவிலும் கம்யுனிச தத்துவத்தை சிதைத்து முதலாளித்துவ பாதையில் செல்லும் இன்றைய நிலையில் அவர்களை மிகவும் அடிப்படையான கருத்து சுதந்திரம் கூட இல்லாமல் அந்த நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் ? கம்யுனிசத்துக்கு எதிரி இப்போது யார் என்று உணருவிர்கள் என்று நம்புகின்றேன் !

          • சிவப்பு நான் உங்களுக்கு பதில் அளித்து 18 மணி நேரத்துக்கு மேல் ஆகின்றது

          • தமிழ்,

           நான் உண்மையில் உங்களது கேள்விகளுக்கு இடையில் புகுந்தது தங்களது கேள்விக்கு பதிலளிக்கவல்ல. குறிப்பாக விவாதம் விதண்டவிவாதமாக ஆகாமல் இருக்கவே. அது மட்டுமல்லாமல் எனக்கு சிறிது வேலை பளு இருப்பதால் உங்கள் அனைவரது கருத்துக்களை படித்து மட்டும் வருகிறேன். பின்னூட்டங்களில் பங்களிக்க முடியவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

           புரிதலுக்கு நன்றி.

  • அய்யா தமிழ்,நான் வினவை தொடர்ந்து வாசிக்கிறேன். வினவு எப்பொதும் தற்போதய போலி சீன கம்யுனிசத்தை ஆதரித்ததாக தெரியவில்லை.

   • Nanmaran,வினவு சீனாவின் கருத்துரிமை அற்ற நிலையை பற்றிய இதுவ்ரை எந்த விமர்சனமும் எந்த கட்டுரையிலும் வைக்காத நிலையில் அது சீனாவின் கருத்துரிமை அற்ற நிலையை ஆதரிப்பதாக தான் பொருள்.

    • அய்யா தமிழ்,குறிப்பிட்ட ஒன்றை(சீனாவின் கருத்துரிமை அற்ற நிலை) சொல்லி, அதற்கு வினவு கருத்து சொல்லவில்லை அதனால் ஆதரிக்கிரது என்று கூறுவது தவறு. சீனாவின் தற்போதய முதலாளித்துவம் சார்ந்த பொருளாதரத்தை வினவு தன் கட்டுரைகளில் விமர்சித்திருக்கிரது.நன்றி.

     • Nanmaran, சற்று பெறுமையாக இருங்கள் நான் உங்களுக்கு கண்டிப்பாக பதில் அளிக்கின்றேன் . அதற்க்கு முன் வினவு ,தென்றல் அல்லது சிவப்பு எனக்கு பதில் அளிக்கட்டும்

     • சரி நன்மாறன் இவர்கள் பதில் அளிப்பார்களா என்று தெரியவில்லை .என்னுடைய முதல் கருத்து குற்றச்சாட்டு : “பிரான்சு ஒன்றும் வினவு மறைமுகமாக ஆதரிக்கும் போலியான கம்யுனிச சீனா அல்ல, கருத்துரிமைகளை,கார்டூன் வரையும் உரிமைகளை கொன்று ஒழிப்பதற்க்கு !” . மக்களுக்கு கருத்துரிமையே இல்லாத சீனாவில் அம்மக்கள் எப்படி அவ் அரசின் தவறான அரசியல் பொருளாதார கொள்கைகளை எதிர்கொண்டு போராடுவார்கள் என்பது தான் நான் இப்போது எழுப்பும் கேள்வி ! வினவு சீனாவை அரசியல் ,பொருளாதாரம் போன்ற விடயங்களில் விமர்சனம் செய்வது உண்மை உண்மை உண்மை . அதனால் யாருக்கு பயன் . எனது இரண்டாவது கருத்து கேள்வி :“சீனாவின் இன்றைய அரசியல் ,பொருளாதார பாதையை ஆதரிக்கின்றீர்களா இல்லையா என்று கூறுங்கள் பார்ப்போம் ?” சீனாவின் மக்களின் கருத்துரிமைக்கு ஆதரவாக வினவு குரல் கொடுக்காமல் அதன் அரசியல் ,பொருளாதாரம் போன்ற விடயங்களை மட்டும் விமர்சனம் செய்வதால் தான் நான் வினவு ரகசியமாக சீன அரசின் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுகின்றது என்று கூறுகின்றேன் !

 21. ஒரு பதிவுக்கான மறுமொழி விவாதங்கள் கூட ஆரோக்கியமாகவும்,நாகரீகமாகவும் கருத்து செறிந்து இருப்பதும் பெருமை தருகிறது.

 22. “இந்துத்துவ அரசியலை இந்து எதிர்ப்பாளர்களால் ஒருபோதும் வெற்றிகரமாக நிகழ்த்த முடியாது. அதற்கு இந்துக்களின் மரபுடன், ஆன்மாவுடன் பேசும் காந்தியைப்போன்ற ஒருவராலேயே முடியும்.” (ஜெயமொகன்.இன்/69379)என கூறும் ஜெயமோகன். இஸ்லாமிய அடிபடைவாத அரசியலை இதே அளவுகோளுடன் அணுக மறுப்பதேன். இது ஜெயமோகனின் ஒரு பக்க சார்புக்கும் நேர்மையற்ற தன்மைக்கும் எடுத்துக்காட்டு.

 23. வினவு உங்களுடைய இந்த கட்டுரை உண்மைலயே நீங்கள் எழுதியத அல்லது தமுமுக கட்டுரைய? charlie hebdo பத்திரிகைய்ய நான் முழுமையாக ஆதரிக்கவில்லை அனால் இங்கு முதன்மை குற்றவாளி யார் ?

  Jyllands-Posten பத்திரிகை முகமது பற்றி 12 கார்ட்டூன் வெளியிட்டது அதற்கு முஸ்லிம்கள் பெரும் ஆர்ப்பட்டமும் முஸ்லிம் வெறியர்களால் 200 பேர் பலியானார்கள் எத்தனிக்கும் அது ஒன்றும் ஆபாசமாக வரைய வில்லை.

 24. சார்லி ஹெப்டோ ஒரு இடதுசாரி பத்திரிகை நாயமாக நீங்கள் சார்லி ஹெப்டோவை கண்டித்து எழுதியும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மற்றும் அடிபடைவாத்திகளை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திருக்க வேண்டும்.

 25. வினவுக்கு,

  நான் இந்த தளத்தில் பதில்கள் பதிவு செய்ய முடியவில்லை. நீல அளவுகள் ஏதேனும் உண்டா?

 26. அன்புள்ள வினவுக்கு,

  சார்லி ஹெப்டோ பற்றிய இந்த கட்டுரையை படித்தேன். இதில் இருக்கும் பொய்களும், சந்தர்பவாதமும் விவரிக்க முடியாதவை. ஏன் இந்த இரட்டை வேடம்? ஒரு கட்டுரை வரைவதற்கு முன்னர் அதில் கூறப்பட்டு இருக்கும் தகவல் சரியா என்று பார்க்க எவ்வளவு நேரம் பிடிக்கும்? இல்லை உங்கள் வசதிக்கு உண்மையை திரித்து பேசினால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற என்னமா? நான் கூறுவது எல்லாம் வெற்று குற்றச்சாட்டு அல்ல என்பதை இந்த பதிவு நிரூபிக்கும். இதில் எந்த பொய் பிரச்சாரமும், வெறியை தூண்டும் லிங்க், வார்த்தைகள் இல்லை. இதில் எதை சென்சர் செய்தாலும் சரியான விளக்கம் தர வேண்டும் (இதில் சென்சர் செய்யும் அளவுக்கு ஏதும் இல்லை என்பது ஏன் கருத்து. வினவு மாறுபட்டால் ஏன் என்று விளக்கவும்). ஒரு சில இடங்களில் சிறிது கடுமையாக பேசி இருப்பேன். அதை கொண்டு நான் கூறி உள்ள உண்மைகளை படிக்காமல் செல்ல வேண்டாம். நண்பர்கள் முழுவதுமாக இந்த பதிவை படித்து, இதில் உள்ள விசயங்களை தாங்களே ஆராய்ந்து வினவு பொய் பேசி இருக்கிறதா இல்லையா என்பதை தாங்களே முடிவு செய்து கொள்ளவும்.

  முதலில் சார்லி பத்திரிகை பற்றி ஒரு சிறு விளக்கம். அவர்களின் பெரும்பாலான படங்கள் பிரெஞ்சு வலதுசாரி கட்சியான நேஷனல் பிரான்ட் கட்சியின் பிற்போக்கு கொள்கைகளை சாடும். கட்சியை பற்றி படிக்க இங்கே செல்லலாம்:

  http://en.wikipedia.org/wiki/National_Front_%28France%29

  (இந்த கட்சியின் சின்னத்தை கவனிக்கவும். பிரெஞ்சு கொடியை நெருப்பு உருவில் இருக்கும். இதை நினைவில் கொள்ளவும். ஏன் என்று கொஞ்ச வரிகளில் புரியும்.)

  சார்லிக்கு சிறுபான்மை, பெரும்பான்மை மதம் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. எவன் தப்பு பண்ணாலும் சரமாரியாக நக்கல் வரும். அது போப் ஆனாலும் சரி, தீவிரவாதி ஆனாலும் சரி இல்லை யூத பாதிரி ஆனாலும் சரி. மதத்தை அவர்கள் எப்படி நினைகிறார்கள் என்பதற்கு ஒரு சிறு எடுத்துகாட்டு:

  http://www.understandingcharliehebdo.com/img/aux-chiottes.jpg

  இவ்வளவு தான் அவர்கள் மதத்திற்கும், பிரிவினைக்கும் கொடுத்த மரியாதை. அவர்கள் படங்கள் உங்களுக்கு அருவருப்பாக தோன்றலாம். ஆனால் பிரான்சையோ அல்லது பல மேற்குலக தேசங்களை பொறுத்தவரை இதல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. இதை போல் பல தொலைகாட்சி நிகழ்சிகளும், பத்திரிகைகளும் உண்டு. உதாரணத்துக்கு MAD Magazine மற்றும் South Park ஆகியவற்றை பார்க்கவும்.

  இது தவிர பல விசயங்களை கிண்டல் அடிக்கும் போது அந்த ஆதரவாளர்கள் எப்படி செய்வார்களோ, அப்படி படங்கள் அல்லது வார்த்தைகள் வரும். இதுவும் புதிது அல்ல. The Colbert Report, The Daily Show போன்ற பல தொலைகாட்சி நிகழ்சிகளும் இதை செய்கின்றன. ஒன்னும் தெரியாமல் பார்பவனுக்கு அவர்கள் வலது சாரி கட்சியின் பிரச்சாரத்தை சொல்லுவது போல தோன்றும். ஆனால் அது satire என்ற விஷயம் தெரிந்தால் தான் அவர்கள் வலது சாரி பிரச்சாரத்தை அவர்கள் பாணியில் கிண்டல் செய்கின்றனர் என்று விளங்கும். இது ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பரவலாக பின்பற்றப்படும் satire வடிவம்.

  இந்த கட்டுரையில் இதற்கு நேர் மாறாக என்னமோ கறுப்பின மக்களை அவதூறு செய்வது தான் சார்லிக்கு தலையாய கடமை போல தகவல் இருக்கிறது. இந்த பத்திரிகையின் எடிட்டர் (தாக்குதலில் கொல்லப்பட்டவர்) இனவாதத்தை வன்மையாக எதிர்த்தவர். இனவாதத்தை எதிர்க்கும் பல படங்களை வரைந்தவர் என்பது எல்லாம் இங்கு வினவு கண்ணனுக்கு தெரியாது. அவரை பற்றிய தகவலை இணையத்தில் தேடினாலே சுலபமாக இது தெரியும். ஆனால் இதலாம் வினவின் பத்திரிகை தர்மத்தை மீறும் செயல் அல்லவா. அதனால் நடக்காது. அவரை பற்றிய விக்கி பதிவு இங்கே:

  http://en.wikipedia.org/wiki/Charb

  இதில் இருந்தே சார்லி ஹெப்டோ, இந்த கட்டுரை கூறியது போல இனவாத, மதவாத பத்திரிகை இல்லை என்பது புரிந்து இருக்கும். இருந்தாலும் மக்களுக்கு தெளிவாக புரிய வேண்டும் என்பதால் இங்கு விமர்சிக்கப்பட்ட படங்களுக்கும் விளக்கம் அளிக்கிறேன்.

  1. முதலில் அந்த நாசி சின்னம் பற்றிய படம். படத்தை இங்கு பார்க்கலாம்:

  http://www.understandingcharliehebdo.com/img/bonne-annee-quenelle.jpg

  (லிங்க் வினவால் சென்சர் செய்ய பட்டால் நண்பர்கள் bonne annee quenelle charlie hebdo என கூகிள் தேடல் செய்யலாம்).

  இந்த கட்டுரையில் முதல் விளக்கம் சரி. உன் சின்னத்தை எடுத்து அங்கே சொருகி கொண்டு போ (நம்ம ஊரில் வாயையும் அதையும் மூடி கொண்டு போ என்பதன் கொஞ்சம் கடுமையான மேற்கத்திய வடிவம்), உன் பிரிவினை வாதம் இங்கே வேண்டாம் என்கிறது. இது வரை சரி. இதற்க்கு பிறகு தான் கட்டுரை ஆசிரியரின் பிரெஞ்சு ‘புலமை’ வருகிறது. போன் அனானியா என்பதற்கு அவரின் விளக்கம் – //பிரித்துச் சொன்னால் நல்ல பைனாப்பிள் / சேர்த்துச் சொன்னால் போனானியா//. அனானிய என்றால் பைனாப்பிள், போன் என்றால் நல்ல என்பது அவரின் புரிதல். இதில் பைனாப்பிள் பிரெஞ்சில் ananas என்று எழுதப்படும். அனால் இங்கு இருபதோ annee என்ற வார்த்தை. வார்த்தை விளக்கம் பல்லை இளித்து விட்டது. தன் வசதி, தன் தியரி படி வார்த்தை வேறுபாடு நடக்கிறது. சரி அப்போது bonne annee என்றால் என்ன விளக்கம் என்று கேட்பீர்கள் அல்லவா? இது வார்த்தை அல்ல, ஒரு phrase. பிரெஞ்சில் புது வருட வாழ்த்துக்கள் என்பதை இப்படி சொல்லுவார்கள்: bonne année (நம்பாத மக்கள் கூகுளில் Happy New Year in French என தேடி பார்துகொள்ள்ளலாம். இதையே அன்னாச்சி பழ விசயத்துக்கும் பயன் படுத்தி கொள்ளவும்). இந்த பதிப்பு வெளியான நாள் 25/12/2013. இந்த இனவெறியனை நக்கல் அடித்து நல்ல வருடம், நல்ல சின்னம் என வர்ணிக்கிறது சார்லி ஹெப்டோ.

  2. அடுத்து கருப்பின நீதிபதி பற்றிய படம். இது வரைய பட்டது ஒரு வலது சாரி அரசியல் வாதி, இந்த நீதிபதியின் முகத்தை குரங்கின் படத்தில் இணைத்து தன் முகநூலில் ஷேர் செய்ததை கிண்டல் அடித்து. அந்த செய்தி இங்கே:

  http://www.lemonde.fr/politique/article/2013/12/03/une-ex-candidate-du-fn-exclue-du-parti-pour-avoir-compare-taubira-a-un-singe_3524837_823448.html

  அதை கிண்டல் செய்து, நேஷனல் front கட்சியின் பிரச்சார போஸ்டர் போல வரைய பட்டு இருக்கிறது இந்த படம். படத்தில் இருக்கும் வாசகம் அவர்களின் முழக்கத்தின் கிண்டல் வடிவம். அதன் மொழிபெயர்ப்பு: இனவாத நீல படையே, இணை! என்பது. இது அந்த கட்சியின் போஸ்டர் என உணர்த்த அவர்களின் சின்னம் படத்தின் இடது பக்கம் உள்ளது (மேல கூறிய பிரெஞ்சு கொடியின் தீ சின்னம்).

  இந்த கிண்டல் புரியாமல் உடனே அவதூறு என குதிப்பது ஏன்?

  (நீள அளவு கட்டுபாட்டின் காரணமாக பதில் இரண்டு பகுதிகளாக பிரித்து உள்ளேன். இரண்டாம் பகுதி கீழே)

  • சந்துரு சார்,

   கணிசமான முயற்சிகள் எடுத்து பதிவு தொடர்பாக பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்கள். இதை வரவேற்கிறேன். தங்களது கருத்துக்களை படித்துவிட்டு வினவு கூறுவது பொய்யா மெய்யா என்று வாசகர்களே முடிவு செய்துகொள்ளட்டும் என்று ஒரு குறிப்பு தந்திருக்கிறீர்கள். தங்களது கருத்துக்களை வாசித்த பொழுது வினவு முன்வைக்கும் கண்ணோட்டம் சரி என்ற முடிவிற்கு வந்தேன். அதில் பொய்யும் சந்தர்ப்பவாதமும் கிடையாது என்பது நான் வந்தடைந்த முடிவாகும். அதற்கான எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

   ————————————————

   சார்லியைப் பற்றிய தங்களது புரிதலை, கார்ட்டூன்களுக்கான விளக்கத்தை வைப்பதற்குப் பின் விவாதிப்போம்.

   —————————————————–

   முதலில் நாசி சின்னம் குறித்து;

   எந்தக் கார்ட்டூனுக்கும் மொழிப்புலமை என்பது முதன்மையானது அல்ல. மொழி ஒரு கருவி மட்டுமே. வரலாற்று அறிவும் கண்ணோட்டமும் தான் முதன்மையானது. பிரெஞ்சு மொழிபெயர்ப்பு குறித்து தாங்கள் வழங்கிய விளக்கத்திற்கும் கார்ட்டூனுக்குமே ஒரு சம்பந்தமும் இல்லை. தங்கள் பார்வையின் படி, கேப்சனுக்கு கொடுக்கிற விளக்கம் “bonne année (நம்பாத மக்கள் கூகுளில் Happy New Year in French என தேடி பார்துகொள்ள்ளலாம்.” என்பதாகும். இதன் மூலம் “இந்த இனவெறியனை நக்கல் அடித்து நல்ல வருடம், நல்ல சின்னம் என வர்ணிக்கிறது சார்லி ஹெப்டோ.” என ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்.

   ஆனால் கட்டுரை முன்வைக்கிற கேள்வி என்ன? வாயையும் பொச்சையும் மூடிட்டு போ என்று சொல்வதற்கு வாழைப்பழம் போன்ற பொருளை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்று கேட்கிறது. இதற்கு எங்கேயாவது உங்களது பதில் விளக்கம் தருகிறதா? ஏன் தரவில்லை? நொறுக்குத்தீனி வர்க்கங்களையும் பாப்கார்ன் தலைமுறையையும் தன்னகத்தே கொண்டிருக்கிற வர்க்கங்களுக்கு சிரிப்பதற்கு எதைச் சொருகினால் என்ன? என்பதாக சார்லி ஹெப்டொ இதைத் தேர்ந்தெடுக்கவில்லை. இது முதல் கருத்து.

   நாஜி வணக்கத்தைப் பிரதிநிதிப்படுத்த வாழைப்பழ வடிவம் பயன்படுகிறது என்று எந்த முட்டாளும் கூறமாட்டான். இது இரண்டாவது கருத்து.

   ஆக வரைபடத்தின் கேப்சனுக்கும் வாழைப்பழம் போன்ற பொருளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று தெள்ளிதின் விளங்கும். இதனால் உங்களது வினவைப் பற்றிய அவதூறு தானாகவே அடிபட்டு போய்விடுகிறது. உங்களது விளக்கமும் முழுக்கவும் தவறு என்றாகிவிடுகிறது. இதை மேலும் கீழ்க்கண்டவாறு நிறுவலாம்.

   கட்டுரையாளர், பைனாபிள் குறித்து சொல்ல வேண்டிய விசயத்தை இங்கு பகிரவில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் நாம் முன்வைக்கிற கண்ணோட்டத்திற்கும் அது எதிரான ஒன்று. அதே வேளை கட்டுரையில் கொடுக்கப்பட்ட லிங்குகளில் பைனாபிள் தனிச்சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது (http://souciant.com/2015/01/why-context-matters/).

   வாதம் என்பது இதுதான்; ஒருவேளை சார்லி அந்நடிகரின் குதத்தில் பைனாபிளைச் சொருகியிருந்தால் அது இனவாதத்தை தோலுரிப்பதாக இருந்திருக்கும் என்று ஒரு வாதத்தை வைக்கிறது. ஏன்? Ananas என்ற பைனாபிள் வார்த்தை ஹோலோஹாஸ்டை குறிக்கும் Shoahnanas என்ற பாடலின் பிரதிநிதியாக இருக்கிறது என்பது தான். ஆனால் சார்லியால் அப்படி செய்ய முடியாது. சார்லியின் கருத்துரிமை ஹோலோஹாஸ்ட்டை தொடாது. சார்லியும் தாங்களும் சேர்ந்து அம்பலப்படுகிற இடம் அது. கருத்துரிமை கணவான்கள் நாணித் தலைகுனிய வேண்டிய இடமும் அது.

   ஆனால் அதே சார்லி என்ன செய்தது? வாழைப்பழத்தைச் சொருகியதன் மூலமாக தான் ஒரு இனவெறியன் என்று காட்டிக்கொண்டது. அது கட்டுரையில் சிறப்பாக விளக்கப்பட்டிருக்கிறது. அதை மேலும் இங்கு விளக்கவேண்டிய அவசியம் இல்லை.

   ஒரு வேளை காமெடி நடிகரின் இனவாதத்தை மேலும் அம்பலப்படுத்துகிற பைனாபிளைச் சொருகி கேப்சனை மாற்றினால் சரியாகிவிடுமா? என்ற கேள்விக்கும் வினவு நோ சொல்வதாகத்தான் எனக்குப் படுகிறது. இது ஏன்? ஏனெனில் அதுவும் வசவாகத்தான் இருக்கிறதே ஒழிய மஞ்சள் பத்திரிக்கையின் தராதரத்திற்கு இணையானதுதானே தவிர இதில் சட்டையரோ அரசியல் கூர்மையோ, விமர்சனக் கண்ணோட்டமோ இந்தவிதத்தில் வைக்கமுடியாது என்று சொல்வதன் மூலமாக நாங்கள் சார்லி அல்ல என்று திட்டவட்டமாக சொல்கிறது. புரிந்திருக்கிறேன். இதில் எனது புரிதல் கூடக் குறைய இருந்தாலும் உங்களது விளக்கம் இங்கு முற்றிலும் பொருந்தாமல் இருப்பதை காணலாம்.

   • திரு தென்றல்,

    தங்கள் கருத்துக்கள் மீண்டும் மீண்டும் ஒரு புரிதல் இல்லாமையை காட்டுகிறது.

    //எந்தக் கார்ட்டூனுக்கும் மொழிப்புலமை என்பது முதன்மையானது அல்ல. மொழி ஒரு கருவி மட்டுமே. வரலாற்று அறிவும் கண்ணோட்டமும் தான் முதன்மையானது.//

    இது ஏன் அய்யா? lost in translation என்று ஒரு வாக்கியம் உண்டு. நீங்கள் கூறியது:

    //வாயையும் பொச்சையும் மூடிட்டு போ என்று சொல்வதற்கு வாழைப்பழம் போன்ற பொருளை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?//

    அது வாழைபழம் அல்ல அய்யா. அது quenelle எனப்படும் மீன் கொண்டு செய்யப்படும் ஒரு பிரெஞ்சு பதார்த்தம். நீ செய்த quenelle சின்னத்தை பொச்சில் அடைத்து கொண்டு இங்கு இருந்து ஓடி விடு என்பதை சொல்லுவதற்கு அந்த quenelle பதார்த்தத்தை உபயோகிக்கிறது. நாசி சின்னத்தை நேரடியாக பத்திரிகையில் வெளியிடாமல் அதே சமயம் இந்த quenelle சின்னதுக்காக அவனை கண்டிக்கிறோம் என்று சொல்ல quenelle பதார்த்தம் வருகிறது. இதன் உருவம் வாழைபழம் போல இருபதால் ஒரு சில மக்கள் தலையை சுற்றி மூக்கை தொடும் விதமாக annee – annanas (வருடம்-அன்னாச்சி-வாழைபழம்) என்று விளக்க முயற்சிகின்றனர். ஆனால் இந்த வார்த்தை பிரிவு தவறு, bonne annee என்பது புது வருட வாழ்த்துக்கள் என்பது என்று மக்களுக்கு தெரியாது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ் இரட்டை கிளவியை (சல சல, பட பட) தனி தனியாக பிரித்து விளக்கம் காணுகின்றனர். இது எவ்வளவு அபத்தம் என்பது இப்போது தங்களுக்கு புரியும் என்று நினைகிறேன். இதில் எந்த பழத்துக்கும் வேலை இல்லை. அது பழமே இல்லை, வார்த்தையும் எந்த பழத்தையும் குறிக்கவில்லை என்னும்போது பழம் எப்படி அய்யா உள்ளே வந்தது? சார்லி இனவாதி என நிரூபிக்க துடிக்கும் ‘நல்லவர்கள்’ இந்த விளக்கத்தை தந்துள்ளனர்.

    தாங்கள் லிங்க் செய்த பதிப்பு என்ன சொல்லுகிறது என பார்த்து விடுவோமே:

    When I first saw the image, I did not think ‘racist’ but ‘Why a banana? Surely a pineapple would be more appropriate and potentially satisfying to see.’ After all, ‘Ananas’ or ‘pineapple’ references Shoahnanas, a song used to mock the Shoah or the Holocaust, and a perceived Jewish stranglehold on French culture and its commemoration porn. Like the quenelle, it is code, making context valuable even in this clumsy explanation.

    My question about the banana was soon answered though, when I went to his web page and saw his holiday wishes video: Bon Ananas! Perhaps it’s just me, but it sounds a bit like ‘banana’. Or more likely, it suggests ‘Y’a bon banania’, a reference to an advert that featured a Senegalese soldier- it is a fraught icon in France, a reminder of a racist colonial legacy as much as a good wish.

    With this context, the image takes on a different meaning. For those not familiar with Dieudonné, this is a random black man sodomised by a banana. But taken further, and read through a different set of interpretative grids, this offers something that pokes fun at a prominent figure through a combination of word play (for which he is known) and crudeness. It simultaneously deploys and reflects upon a racist and colonial legacy to boot. It’s not simply Dieudonné who is skewered here.

    கட்டுரை எழுதியவர் இந்த விளக்கத்தில் பிரான்சின் காலனி வரலாற்றை இது சாடுகிறது என்று தானே கூறி இருக்கிறார்? அவர் கூறுவது a reminder of a racist colonial legacy என்று. அதாவது இதே போல ஆப்ரிக்க காலனிகளை பிரான்ஸ் நடத்தியது என்று சார்லி பிரான்சின் காலனியாதிக்க வரலாற்றை குத்திக்காட்டி உள்ளதாக கூறுகிறார்.//It’s not simply Dieudonné who is skewered here.//
    (fucked in the ass என்பது ஆங்கில பேச்சு. தமிழில் இதை சரியாக மொழிபெயர்ப்பு செய்ய தெரியவில்லை. மன்னிக்கவும். வினவு இதை வேண்டுமானால் நீக்கி விட்டு, சரியான தமிழ் மொழி பெயர்ப்பை இங்கு பொருத்தலாம்.)

    இப்போது சொல்லுங்கள் தென்றல். இந்த படம் எப்படி நிறவெறி, இனவெறி கற்பிக்கிறது? தாங்கள் கொடுத்த லிங்கின் பதிப்பே தங்கள் கருத்தை தவறு என நிரூபித்து விட்டதே!

   • சின்னசாமி ,தென்றல் ,சந்துரு,

    தென்றலும் ,சின்னசாமியும் விளக்கம் அளிக்க பட்ட கார்டூனை பற்றி மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புகின்றார்க்லே தவிர கொடுக்கப்படும் விளக்கத்தை படிப்பது இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது.

    யூத எதிர்பிற்காக [நியோ நாஜி கொள்கைக்காக, (anti semitism)] பிரான்சு நீதிமன்றத்தில் தண்டிக்க பட்டவர் தான் Dieudonné. அவரை விமர்சிக்க வரையப்பட்ட கார்ட்டூன் வினவு கட்டுரையின் பார்வையில் இரண்டு அடுக்குகளை [layer ] கொண்டது.

    வினவு விமர்சனத்தின் முதல் அடுக்கு :

    அந்தப் படத்தில் உள்ளவர் பெயர் யூடோன்னெ ம்பாலா ம்பாலா (Dieudonne M’bala M’bala) – இவர் ஒரு ப்ரெஞ்சு நகைச்சுவையாளர். யூத வெறுப்பாளராகவும் நாஜி ஆதரவாளராகவும் அறியப்பட்டவர். இவர் க்வென்னெல்லி என்ற சைகை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தார் – அது நாஜி வணக்கத்தின் தலைகீழ் வடிவம். படத்தில் அவரது பின்புறத்தில் சொருகியிருப்பது வாழைப்பழம் போல் தோன்றும் ஒரு உணவுப் பதார்த்தம்; அதன் பெயரும் க்வென்னெல்லி தான். இந்தப் படத்தை இந்தளவுக்குத் தகவலோடு அவதானிக்கும் எவரும் அதில் இருக்கும் பகடியைப் புரிந்து கொள்ள முடியும். நியோ நாஜி ஒருவரின் மேலான கூர்மையாக விமரிசனமாக புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்தக் கேலிச்சித்திரத்தில் அது ஒரு அடுக்கு (Layer) மட்டும் தான்.

    இரண்டாவது அடுக்கு : கேலிச்சித்திரத்தின் நாயகன் யுடொன்னே, காமரூன் தந்தைக்கும் ப்ரெஞ்சு தாய்க்கும் பிறந்த கலப்பினத்தவர் என்றாலும் அவர் இனவாதத்துடன் ,நியோ நாஜி கொள்கையுடன் இருக்கின்றதை சுட்டி காட்டுகின்றது. நான் முன்பே கூறியது போன்று தலித் மக்கள் ஹிந்துத்துவாவுக்கு ஆதரவு அளித்தால் அவர்களை இரட்டை நிலைகளில் [layer ] விமர்சிக்கும் வினவின் கட்டுரை போன்றது இந்த கார்டூன் . ஒரு தலித் ஹிந்துத்துவாவை ஆதரிப்பதை சக மனிதர் என்ற அளவில் வினவு எதிர்கின்றது .[முதல் அடுக்கு ] . அவர் தலித்தாக இருப்பினும் அவருக்கு எதிரான அவரை இழிவு செய்யும் ஹிந்துத்துவாவை ஆதரிகின்றாரே என்றும் வினவு எதிர்கின்றது .[இரண்டாவது அடுக்கு ] இது என்ன நியோ நாஜிக்கொள்கையா ?

  • II. பிரெஞ்சு நீதி அமைச்சர் கார்ட்டூன் குறித்த பார்வை

   பிரெஞ்சு நீதி அமைச்சரை குரங்காக சித்தரிக்கும் கார்ட்டூனுக்கு தாங்கள் சார்ந்து நிற்கிற வாதம் என்ன? வலது சாரி கும்பல் வரைந்த கார்ட்டூனைத்தான் சார்லியும் பயன்படுத்தியது; இது சார்லியின் தனித்துவம் என்கிறீர்கள். முதலில் உங்களது வாதப்படியே வந்தாலும் இங்கு கார்ட்டூனுக்கு எந்த வேலையும் இல்லை. சார்லி சொல்கிற கேப்சனுக்குத் தான் முக்கியத்துவம் அதிகம். அதாவது மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்று ஆளும் வர்க்கம் பரிவோடு எச்சரிக்கை செய்துவிட்டு விற்பனையில் சக்கைபோடு போடுகிறபொழுது சார்லி ஹெப்டோவும் இனவாத நீலப்படையெ இணை! என்று காத்திரமாகச் செய்திருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் வினவோ இன்னபிறரோ டாஸ்மாக்கை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள் அதை எதிர்க்கிறார்கள் என்றுவருகிற பொழுது அவர்களுக்கு காப்சன் தெரியவில்லை என்று சொல்கிறீர்கள். டாஸ்மாக்கை விளம்பரப்படுத்தும் அரசோ இனவாத வெறியை விளம்பரப்படுத்தும் சார்லி ஹெப்டோவோ நியாயமானவர்கள் என்று முடிக்கிறது உங்களது வாதம்.

   இந்த மனநிலை சட்டவாத மனநிலை. செய்றத செஞ்சுக்கோ, ஆனா போடுறத போட்டுறு என்று சொல்கிறது. இதையும் மீறிக் கேள்வி வந்தால் கேள்வி கேட்பவனின் பாமரத்தனத்தை புரியவைத்துவிட்டால் போதுமானது என்று நினைக்கிறது உங்களது பதில். கருத்துரிமையைக் கொச்சைப்படுத்துகிற ஆபாசம் இது.

   குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் போன்று விரசமாக கதையை எழுதி விற்றுத் தீர்த்துவிட்டு கதையின் கடைசியில் வஞ்சகர்களின் பாலியல் கொடுமையை சட்டம் தண்டிக்குமா என்று முடிப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? இது கருத்துச் சுதந்திரமா?

   • உங்களுக்கு satire வடிவம் புரியவில்லையா, இல்லை இந்த விளக்கத்தில் என்ன குழப்பம் என்று தெரியவில்லை. satire பல வடிவங்களில் வரும். தாங்கள் The Colbert Report எனப்படும் நிகழ்ச்சியை பற்றி கேள்விப்பட்டு இருக்கலாம். அப்படி இல்லாவிட்டால் youtube மூலமாக சில நிமிடங்கள் அதை பார்க்குமாறு கேட்டுகொள்கிறேன். அமெரிக்காவின் வலதுசாரி பிரச்சார தொலைகட்சியான பாக்ஸ் நியூஸ், The O’Riley Factor எனும் நிகழ்ச்சியை நடத்திவருகிறது. நாட்டில் நடக்கும் எல்லா பிரச்சினைக்கும் சிறுபான்மையினர் காரணம், வஞ்சிக்க படுவது வெள்ளை இன மக்கள், முஸ்லிம் அனைவரும் அழிக்க படவேண்டியவர் என்பது இந்த பாக்ஸ் நியூஸ் உதிர்க்கும் சில தத்துவங்கள். Colbert Report இதே நிகழ்ச்சியின் பணியில் அரசியல் விமர்சனம், பாக்ஸ் நியூஸ் பற்றிய விமர்சனம், உலக நிகழ்வு விமர்சனம் உட்பட எல்லாம் செய்யும். இது satire என தெரியாத மக்களுக்கு Colbert report நிகழ்ச்சியும் ஒரு வலது சாரி பிரச்சார நிகழ்ச்சி போல தெரியும். satire என புரிந்தால் தான் அவர்கள் விமர்சனம் புரியும். நம் தேசத்தில் இது போல நிகழ்வுகள், நிகழ்சிகள் இல்லை. அதனால் நமக்கு அதை புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம். உங்கள் டாஸ்மாக் உதாரணத்தின் மூலமே அதை விளக்க முயல்கிறேன்.

    அரசு மதுவிற்பனை செய்கிறது. அதை எதிர்த்து, விமர்சித்த ஒரு தோழரை நாட்டின் வருமானத்தை திருட முயலும் திருடன் என ஒரு அரசியல்வாதி திருடன் போல புகைப்படம் வெளியிடுகிறார். இதற்க்கு வினவு அந்த திருடன் படத்தை சித்திரம் வரைந்து குடிகார தமிழர்களே எங்களை ஆதரியுங்கள் என தலைப்புடன் வெளியிடுகிறது. அந்த கட்சியின் முழக்கம் தமிழர்களே எங்களை ஆதரியுங்கள் என்பது என கொள்ளவும்(இவ்வாறு நடந்து என கொள்ளவும்). இப்போது இந்த கார்டூனை பார்க்கும் நம் மக்களுக்கு, வினவு அந்த கட்சி அவ்வாறு படம் வெளியிட்டதை கண்டித்து, அது மக்களை குடி மூலம் எப்படி சீரழித்து உள்ளது என்பதற்கான விமர்சனத்தையும் அதே படத்தில் செய்கிறது என்று புரியும். இதையே வினவை பற்றி ஒன்றும் தெரியாத ஒருவன் பார்த்தால் என்ன நினைப்பான்? வினவு அந்த கட்சியின் பிரச்சார பீரங்கி என்று தான் நினைப்பான். இது தான் சார்லி விசயத்திலும் நடந்தது. நக்கல் பண்ணும்போது கவுண்டமணி ஸ்டைளில் மட்டும் தான் நக்கல் செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. Sarcasm என்று ஒரு வார்த்தையை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நினைகிறேன். அது தான் இங்கும் நடந்துள்ளது.

    செய்யுறத செஞ்சிக்கோ ஆனா போடுறத போடு என்று சொல்லும் கட்சியை, அது இதை தான் சொல்கிறது என்று அவர்கள் பாணியில் நக்கல் செய்கிறது சார்லி ஹெப்டோ. ஒரு நீதி அமைச்சரை குரங்காக உருவாக படுத்திய கட்சி, தன் தொண்டர்களை எதன் அடிபடையில் இணைக்க சொல்கிறது (நிறவாதம்) என்பது தான் அந்த கார்ட்டூனின் நோக்கமே தவிர, அந்த நீதிபதியை குரங்கு என சொல்லுவது அல்ல. இந்த கட்சியின் லட்சணம் இது என காட்டுவது தான் அதன் நோக்கம். இதை நிறவெறி, இனவெறி என நினைப்பது மாபெரும் தவறு.

    • இது இன்னும் தெளிவாக புரிய வேண்டும் என்றால், ஏன் கார்டூனுக்கும் மொழி தேவை என்பதை வினவின் இந்த கேலி சித்திரம் பார்த்தால் புரியும்:

     https://www.vinavu.com/2014/12/17/bjp-foists-more-nuclear-plants-cartoon/

     மொழி தெரியாத ஒருவர் பார்பது இந்திய நாட்டின் சின்னம் அணுவை ஏந்தி பிடித்து கொண்டு இருப்பதை. இதில் மொழி தெரியாவிட்டால் இந்தியா அணுசக்தியை ஆதரிக்கிறது என்று எடுத்து கொள்வர். ஒருவேளை மொழி மட்டும் புரிந்தால், அணுஉலை விசயத்தில் இரண்டு கட்சிக்கும் ஒரே ரத்தம் என்பது புரியும். இதில் கூடங்குளம் என்ன என்பது புரிய இந்திய நிகழ்வை பற்றிய கொஞ்சம் அறிவு தேவை. சரி இரண்டு கட்சிக்கும் ஒரே ரத்தம் என்றால் ப.ஜ.க. புது அணுஉலைகளை திறக்க ஒப்பந்தம் இட்டு உள்ளது என்பது மட்டும் தான் புரியும். இதுவே காங்கிரஸ் ஆதரவு பத்திரிகையில் வந்து இருந்தால், பார்த்தாயா ப.ஜ.க. காங்கிரஸ் வழியை பின்பற்றுகிறது என கொக்கரிப்பதாக புரியும். ஆனால் வினவு என்ன, கூடங்குளம் என்ன, அந்த பிரச்னையில் வினவு என்ன நிலைபாட்டை கொண்டுள்ளது என்று தெரிந்தால் தான், இது கூடங்குளம் மக்களுக்கு செய்தி சொல்வது போல ப.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை வினவு கிண்டல் செய்கிறது என்று புரியும். இப்போது வினவு போல சார்லி ஹெப்டோவும் ஒரு சோசியலிச கருத்து கொண்ட, என்ன தப்பு நடந்தாலும் தட்டிகேட்கும் பத்திரிக்கை என்பதை நினைவில் கொண்டு இந்த விசயத்தை அணுகுங்கள். சார்லி மீது உள்ள அனைத்து குற்றச்சாட்டும் எவ்வளவு அபத்தம் என்று புரியும்.

     • வினவு தோழர்கள் பார்வைக்கு,

      en.wikipedia.org/wiki/Poe’s_law

      படித்து தெரிந்து கொள்ளவும். இதை சார்லீ கெப்டோவுடன் இணைத்து பார்த்தால் உங்கள் அபத்தம் புரியும்.

 27. 3. அடுத்து போகோ ஹராம் பற்றிய படம். இதற்க்கு கொஞ்சம் நீளமான விளக்கம் தேவை. போகோ ஹராம் பெண்கள் கடத்தப்பட்டு இருக்கும் போது வலதுசாரி கட்சி அதை பற்றி மூச்சு விடாமல் பிரெஞ்சில் அப்போது குழந்தை நலன் பற்றிய ஒரு சட்டத்தை பற்றி மட்டுமே பேசி வந்தது. பிரெஞ்சு சட்டப்படி குழந்தை பிறந்தால் அந்த குடும்பத்துக்கு அளிக்கப்படும் சலுகைகள் உயர்த்தப்படும். அதாவது அதிக குழந்தைகள் பெற்றால் குறைந்த வரிகள். இது பல நாடுகளில் உள்ள சட்டம் தான். இது அனைத்து மக்களுக்கும் பொருந்தும். பணக்கார மக்களுக்கு இது தேவை இல்லாத சலுகை. எனவே இந்த சட்டத்தில் ஒரு சிறு மாறுதல், அதாவது வருமானத்தை கொண்டு இந்த நலன் தொகை மாற்றப்படும் என அரசாங்கம் முடிவு செய்தது. இதனால் ஏழைகளுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. பணம் படைத்த பல பிள்ளைகள் உள்ளவர் குறைந்த நலனை பெறுவார். இதை எதிர்த்து அந்த கட்சி பிரச்சாரம் செய்தது. அவர்கள் கூறிய காரணம், இங்கு இருக்கும் சிறுபான்மை மக்கள் இந்த குழந்தை நலனுக்காக பிள்ளை பெற்று கொண்டே இருகின்றனர், அதை கொண்டு வேலை செய்யாமல் வாழ்கை நடத்துகின்றனர் என்று பிரச்சாரம் செய்தது. எனவே இந்த சட்டத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் நலன்கள் குறைக்கப்பட வேண்டும், மற்றவருக்கு அப்படியே இருக்க வேண்டும் என பேசி வந்தனர். இதை கண்டித்து தான் ஹெப்டோ கடத்தப்பட்ட பெண்கள் பிரெஞ்சில் தஞ்சமடிவதாய் படம் வரைந்தது. வலது சாரி கட்சியின் பணக்கார அனுசரணை போக்கை இடித்து, ஏன் இதை பேசுகிறாய், அப்போது இந்த பெண்கள் பற்றி ஏன் பேசவில்லை என முகத்தில் அறைந்து கேட்கிறது.
  தேவை இல்லாத விசயத்தில் கவனம் திருப்ப பார்க்காதே என்று சொல்ல இரு விசயத்தையும் இணைத்து ஒரு படமாக வெளி வந்தது.

  4. கடைசியாக அந்த surrogacy பற்றிய படம். பிரான்சின் வாடகை தாய் சட்டம் இது:

  In France, since 1994, any surrogacy arrangement that is commercial or altruistic, is illegal or unlawful and is not sanctioned by the law (art 16-7 of the Code Civil).[14] The French Courts the Cassation already took this point of view in 1991. It held that if any couple makes an agreement or arranges with another person that she is to bear the husband’s child and surrender it on birth to the couple, and that she is choosing that she will not keep the child, the couple making such an agreement or arrangement, is not allowed to adopt the child. In its judgment the court held that such an agreement is illegal on the basis of articles 6 & 1128 of the Code Civil, together with article 353 of the same code.[15]

  குழந்தை பெரும் தாய் எந்த பணமோ, இல்லை பொருளோ பெற முடியாது. அப்படி பெற்றால் அது சட்ட விரோதம். ஓரின சேர்க்கையாளர்கள் அவர்களுக்கும் இது பொருந்தும். இதை கொண்டு பல பணக்கார மக்கள் தங்கள் வீட்டில் வேலை செய்யும் சிறுபான்மை இன பெண்களை வாடகை தாயாக உபயோகிக்கின்றனர். இந்த சட்டத்தை பற்றிய விவாதம் வந்த பொது வலது சாரி கட்சி வழக்கம் போல பணக்கார மக்களின் பக்கம் பேசியது. அவர்களின் முழக்கங்களை கிண்டல் செய்து தான் இந்த படத்தின் கருத்து உள்ளது (படத்தில் உள்ள இருவரும் பணக்காரர் என்பது அவர்களின் v-கழுத்து ஆடை மூலம் குறிக்க படுகிறது. இது bourgeois மக்களை குறிக்கும் ஆடை சின்னம். அவர்கள் கூறுவது வலது சாரி கட்சியான நேஷனல் பிரான்ட் கூறும் முழக்கம், Marriage means Two parents என்பதை மாற்றி Surrogacy means Two Parents என்று கிண்டல் செய்கிறது சார்லி ). சட்டம் சிறுபான்மை மக்களுக்கு சாதகமாக மாற வேண்டும் என கூறும் ஒரு படத்தை தான் இனவெறியை கக்கும் படம் என புரியாமல் உளறி கொண்டு இருக்கிறது இந்த கட்டுரை.

  இதையும் மற்ற பல சார்லி ஹெப்டோவின் படங்களை பற்றி பிரெஞ்சு மக்கள் கொடுக்கும் விளக்கங்களை படிக்க இந்த இரு தளங்களுக்கு செல்லலாம்:

  http://www.understandingcharliehebdo.com/

  http://cecilial.tumblr.com/post/108030678127/charlie-hebdo-cover-analysis-part-ii

  இதை தவிர இணையத்தில் பிரெஞ்சு மக்கள் இது போன்ற அறிவற்ற உளறல்களை தடுக்க பல வலைப்பதிவு செய்துள்ளனர். நண்பர்கள் தேவை என்றால் தேடி படிக்கவும். இதில் சார்லி ஹெப்டோ வர்ணித்த வலது சாரி கட்சி மக்கள் சிலர் அவதூறு பரப்பும் நோக்குடன் ஒரு சில வலைப்பதிவு செய்துள்ளனர். எனவே படிக்கும் முன்பு எழுதியவர் யார் என பார்த்து படிக்கும் படி கேட்டுகொள்கிறேன். அதே போல பிரெஞ்சு கலாச்சாரம், மொழி தெரியாத மக்கள் எழுதிய வலைப்பதிவு படிக்க வேண்டாம். உண்மை வேண்டும் என்றால் அந்த தேசத்து மக்களின் பதிவுகளை படிக்கவும்.

  (மீண்டும் நீல அளவு தடை. பதில் மேலும் ஒரு பகுதி பிரிபடுகிறது)

  • (நீல அளவு ரொம்பவும் நெருக்குகிறது. எனவே இன்னும் சில பகுதிகளாக பிரிக்க படுகிறது இந்த பதிவு)

   வினவுக்கு ஒரு வார்த்தை. இதை போல இரண்டு மூன்று படங்களை எடுத்துக்கொண்டு, நான் என்ன நினைகிறேன் என்று எழுதி எதை வேண்டுமானாலும் திரிக்க முடியும். அதற்க்கு சிறந்த உதாரணம் இந்த கட்டுரை. தன் பார்வையை நிலை நாட்ட வார்த்தை, கருத்து திரிவு செய்து எழுதப்பட்டுள்ளது இங்கு. வினவின் தேவையை பூர்த்தி செய்ததால் இந்த விளக்கம், செய்தி, மொழிபெயர்ப்பு எல்லாம் சரியா என்று பார்க்காமல் அப்படியே இங்கு பதிக்கப்பட்டுவிட்டது. சார்லி ஹெப்டோவின் முழு அட்டை படங்களையும் பார்த்து இருந்தால் தானே இந்த விசயமெல்லாம் புரியும். உங்களுக்கு தேவை உங்கள் கருத்தை நியாயபடுத்த ஒரு சில படங்கள். பிரெஞ்சு மொழியில் இருப்பதால் நீங்கள் இங்கு அதை எப்படி வேண்டுமானாலும் கூற முடியும். பல மக்களுக்கு பிரெஞ்சு தெரியாது அல்லவா? இல்லை நீங்கள் கூறுவது சரி என்றால் நான் கூரியவற்றிக்கு விளக்கம் தரவும். அதிகமாக வேண்டாம். charab பற்றிய செய்தி, நாசி சின்னத்தின் மொழிபெயர்ப்பு தவறு, கறுப்பின நீதிபதி பற்றிய படத்திற்கு விளக்கம் தந்தால் போதும். மற்ற அட்டை படங்களையும் விவாதிக்க வேண்டும் என்றால் அதற்க்கும் நான் தயார்? (இங்கு நண்பர்களுக்கு ஒரு கொசுறு செய்தி. சார்லி போப்பாண்டவர், அமெரிக்கா ஏன் ஹோலோகாஸ்ட் பற்றி கூட படங்கள் வெளியிட்டு உள்ளது. ஏசுவின் பிரச்சனைக்குரிய Piss Christ எனும் படம் கிறிஸ்துவ மதவாதிகளால் தாக்க பட்டபோது அதை கண்டித்து படம் வெளியிட்டது சார்லி ஹெப்டோ. நண்பர்கள் இணையத்தில் இந்த முழு விசயத்தை தேடி படிக்கலாம். தகவல் தருவேன். ஆனால் வினவு அதை சிறுபான்மை மக்களை offend செய்யும் விஷயம் என எடிட் செய்து விடும்). இது எல்லாம் இல்லை என்றால் முகம்மது இப்போது வந்தால் அவர் தீவிரவாதிகளால் எப்படி நடதபடுவார் என்று சார்லி பிரசுரித்த படம் எவ்வாறு மதவாதத்தை தூண்டுகிறது என்று விளக்கம் தரவும்.படத்தை வேண்டுபவர் இங்கு செல்லலாம்:

   http://cdn.frontpagemag.com/wp-content/uploads/2015/01/charlie-hebdo-no1163-011014.jpg

   (வினவு கண்டிப்பாக இந்த படத்தை வெளியிடாது என்று நினைகிறேன். இங்கு நான் தந்துள்ள படம் தீவிரவாதி கையால் முஹம்மது அவர்கள் கழுத்து அறுபடுவது போன்ற படம். நான் தான் முஹம்மது என்கிறார் நபிகள். அதற்க்கு வாயை மூடு infidel என்கிறான் தீவிரவாதி)

 28. தென்றல் அவர்களுக்கு,

  திப்புகள், அம்பிகள், வியாசன்கள் போன்றவர்களிடம் கெட்டபெயர் வாங்குவதை நான் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் உங்களிடம் கெட்டபெயர் வாங்குவதற்கு எனக்கு வருத்தமாக இருக்கிறது.

  நான் இங்கே எனக்கு தெரியும் மற்றும் பகிர்ந்து கொள்ள விரும்பும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் எனது உரையை எப்படி மாற்றினால் அது ஏற்புடையதாக மாறும் என்று ஏதேனும் ஆலோசனைக் கூறமுடியுமா. தேவைப்பட்டால் Univerbuddy இல்லாமல் போகவும் தயாராக இருக்கிறான்.

  இந்த பதிவில் உள்ள எனது பின்னூட்டங்களை எடுத்துக்கொண்டோ அல்லது எனது பின்னூட்டங்களை பொதுவாக எடுத்துக்கொண்டோ விளக்க முயலுங்கள். நன்றி.

  • யுனிவர்படி அவர்களுக்கு,

   \\ இந்த பதிவில் உள்ள எனது பின்னூட்டங்களை எடுத்துக்கொண்டோ அல்லது எனது பின்னூட்டங்களை பொதுவாக எடுத்துக்கொண்டோ விளக்க முயலுங்கள். நன்றி.\\

   பொதுவான பார்வையை முன்வைக்கிறேன்.

   அப்பாவி இசுலாமியர்கள் கொல்லப்படுகிறார்களே என்ற ஒரு கேள்வி வருகிற பொழுதெல்லாம் தாங்கள் தயங்காமல் சொல்கிற பதில். ஆம். கொல்லப்படுகிறார்கள். இதெல்லாம் இசுலாமியர்களின் பின்விளைவுகள் என்பீர்கள். வரலாற்றில் இவர்கள் இவ்வளவு ஆட்டம் போடாமலிருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்பீர்கள். ஆகையால் இக்கொலைகள் தவிர்க்க இயலாத ஒன்று என்பீர்கள். இது முதல் தரப்பு.

   ஜிகாதிகள் சார்லி பத்திரிக்கையாளர்களை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றிருக்கிறார்களே என்று சொல்கிற பொழுது தாங்கள் சொல்கிற பதில் முசுலீம்கள் என்றால் அப்படித்தான். அதாவது உங்கள் வரையறைப்படி இது முசுலீம்களின் உடனடி விளைவு என்பீர்கள். இது இரண்டாவது தரப்பு.

   இரண்டு தரப்புகளையும் சேர்க்கிற பொழுது அது கொடுக்கிற முடிவு; இசுலாமியர்கள் தீயவர்கள் என்பது. இந்தக் கலையை ஜோசப், மேரி, வியாசனுக்கு போன்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

   எவர் ஒருவராலும் இதில் உள்ள மதவெறியை வன்மத்தைக் கண்டுகொள்ள முடியும். உங்களுக்கு இசுலாமியர்களைப் பொறுத்தவரை என்றைக்குமே புரிதல் தேவைப்பட்டதில்லை. அனைத்தும் விளங்கிக்கொண்டவர்களுக்கு விளக்கம் தேவைப்படாது இல்லையா? இப்படிப்பட்ட கூட்டத்திற்கு நான் எதிரானவன். நாங்கள் இதைப் பாட்டாளி வர்க்கப்போராட்டத்தின் மூலமாக முறியடிப்போம்.

   • தென்றல் அவர்களுக்கு,

    // அனைத்தும் விளங்கிக்கொண்டவர்களுக்கு விளக்கம் தேவைப்படாது இல்லையா?//

    எனது புரிதலில் ஏதேனும் தவறவிட்டுவிட்டேனா என்பதை சரிபார்த்துக்கொள்வதற்காகத்தான் உங்களுடன் உரையாடி தெளிவு பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் உங்கள் பதில்கள் எனக்கு எந்த தெளிவையும் கொடுப்பதற்கு மாறாக என்னை எதிரியாக பாவித்து எழுதுகிறீர்கள்.

    இந்த விவாதத்தை யார் யார் படிக்கிறார்கள் என்பதைப்பற்றி நமக்குத் தெரியாது. முகமதியத்தைப்பற்றிய விவாதத்தில் எனது பங்கு முகமதியத்தின் பரவல் தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான். அதைப்பற்றி awareness எல்லா பக்கத்திலும் பரவும் போது, இஸ்லாமியர்களே அதை ஒரு கடைசி முறையாக கைகழுவிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். இது ஒரளவுக்கு தவறாகவும் இருக்கலாம்.

    நீங்கள் சேர்த்துக்கொள்ளாவிட்டாலும் நான் பாட்டாளி வர்க்கம் தான். போராட்டத்தில் எனது பங்கும் கண்டிப்பாக இருக்கிறது. இருக்கும். எனது உரையாடல் புரட்சியை தாமதப்படுத்திவிடுமா அல்லது விரைவுபடுத்துமா என்று எனக்கு தெரியவில்லை. பாட்டாளி வர்க்கம் எல்லா அடிமைத்தளைகளையும் அறுத்தெறிந்து விட்டால் போராட்டம் எளிதாகவிடும் என்பது எனது எண்ணம். தொடர்ந்த உரையாடலுக்கு தயாராக இருக்கிறேன். நன்றி.

   • தென்றல் அவர்களுக்கு,

    சிறிது கூடுதல் நேரம் கிடைத்தது. ஆகையால் உங்கள் பின்னூட்டம் 29.1 ல் விடுபட்ட புள்ளிகளுக்கும் பதில் கொடுத்துவிடலாம் என்று இதை எழுதுகிறேன்.

    //இக்கொலைகள் தவிர்க்க இயலாத ஒன்று என்பீர்கள்.//

    இது நீங்கள் என் வாயில் திணித்த Quenelle. கஷ்டப்பட்டு மென்று முழுங்கினேன். சுவையாகத்தான் இருந்தது.

    நாம் முகமதியத்தைப் பற்றி பேசாமல் இருந்துவிட்டால் இக்கொலைகள் நடக்காமல் போகுமா என்பது தான் முன்னொரு பதிவில் நான் கேட்ட கேள்வி. பேசுவதனால் அதிகமாக நடக்கும் என்று நீங்கள் வாதிடலாம். பேசாவிட்டால் விளைவுகள் எதிர்திசையில் அதிகமாக இருக்கும் என்று நான் அஞ்சுகிறேன்.

    // முசுலீம்களின் உடனடி விளைவு என்பீர்கள் //

    நான் இங்கே முகமதியர்கள் என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்துவேன் என்பதை நீங்கள் அறிந்தது தான். இது சரிதான். இது தான் முகமதின் வழிகாட்டல்.

    // இந்தக் கலையை ஜோசப், மேரி, வியாசனுக்கு போன்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.//

    இவர்கள் இந்த கலையை கற்கும் அதேசமயத்தில் தங்களின் கொள்கைகளையும் ஒப்பிட்டுக் கொள்ள சீர்தூக்கிப்பார்க்க மாற்றிக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறார்கள். முகமதியத்தைப் பற்றி பேசும் போது மற்ற இயங்களும் பேசப்படுகின்றன என்பதை கூர்ந்து கவனித்தால் கண்டுகொள்ளலாம்.

 29. அன்புள்ள சந்துரு,

  உங்களது விரிவான மறுமொழியை வாசிக்க சுவாரசியமாக இருந்தது. அதன் கருத்துக்கள் பலவும் மண்டபத்தில் எழுதிக் கொடுத்தவையாக இருந்தாலும் சுவாரசியம் சுவாரசியம் தான். மண்டபத்தின் பெயர் – http://www.understandingcharliehebdo.com/

  மண்டப மேட்டரை பிறகு பார்க்கலாம். கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் சில கார்ட்டூன் உதாரணங்களுக்குள் புகுந்து ‘கலக்கும்’ உங்கள் ப்ரெஞ்சு மொழிப் புலமை பற்றிய டெக்னிக்கல் விவரத்தை முதலில் பார்த்து விட்டுத் தொடர்கிறேன்.

  கட்டுரையாளர், இந்த விவகாரத்தின் கண்ணோட்டம் குறித்து விளக்குவதற்கான அடிப்படை விவரங்களை எங்கே இருந்து எடுத்தாண்டுள்ளார் என்பதை கீழே உள்ள இணைப்புகளிலேயே காண முடியும்.
  அந்த இணைப்புகளில் இருந்து நண்பர் தென்றல் ஏற்கனவே ஒரு கார்ட்டூனைப் பற்றி பேசி விட்டதால் நான் வேறு ஒரு உதாரனத்தை எடுத்துக் கொள்கிறேன்.

  // நான் கூரியவற்றிக்கு விளக்கம் தரவும். அதிகமாக வேண்டாம். charab பற்றிய செய்தி, நாசி சின்னத்தின் மொழிபெயர்ப்பு தவறு, கறுப்பின நீதிபதி பற்றிய படத்திற்கு விளக்கம் தந்தால் போதும்//

  நாசி சின்னம் பற்றி தென்றலின் மறுமொழியில் உள்ளது.

  கறுப்பின அமைச்சர் கார்டூனுக்கு நீங்கள் அளித்திருக்கும் விளக்கம் என்பது அதன் நேர் பொருளில் சரி – ஆனால், எனக்கு சில கேள்விகள் எழுகின்றன.

  1) கருப்பின அமைச்சரை குரங்காம சித்தரித்த வலது சாரி அமைப்பை கிண்டல் செய்ய அவர்கள் பயன்படுத்திய அதே குரங்கு இமேஜை ஏன் இவர்களும் பயன்படுத்த வேண்டும்.
  2) சரி, அது ”ப்ரெஞ்சு கலாச்சார சூழலுக்கே” உரித்தான விஷயம் என்றும் பிறருக்கு அது புரியாது என்றும் Understanding Charlie Hebdo அல்லது I am charlie மக்கள் சொல்வது உண்மையாக இருந்தால், அந்த கட்டற்ற விமரிசன உரிமை I am charlie coulibali என்று சொன்ன ட்யுடொன்னேவுக்கு ஏன் வழங்கப்படவில்லை?
  3) ஹாலோகாஸ்ட் என்பது கட்டுக்கதை என்ற கருத்தை வலியுறுத்தும் ஒருவரை விமர்சிக்க ஹிட்லரோடு யூதர்கள் கூடிக் குலாவுவது போல் படம் போட்டு – “இது தப்பு” என்று தலைப்பு வைப்பதை ப்ரான்சின் ”கட்டற்ற கருத்துசுதந்திரம்” அணுமதிக்குமா?

  எதற்கு இந்த பம்மாத்து சந்துரு?

  நீங்கள் சொல்வது நம்ம ஊர் வடிவேலு காமெடியிலேயே வந்து விட்டது. “உன்னை செருப்பால அடிப்பேன் அப்படின்னு சொல்ல மாட்டேன் தெய்வமே” சீன் நினைவுக்கு வருகிறதா?

  கேலிச்சித்திரங்களின் விவரங்களுக்குள் புகுந்தால், அந்த விவரங்களை எப்படிப் புரிந்து கொள்வது என்பது குறித்த டெக்னிக்கலான விவாதங்களுக்குள் நாம் நுழையவேண்டியிருக்கும். விவாதம் அந்த திசையில் நகர்வதைக் காட்டிலும், கட்டுரையின் கண்ணோட்டம் சரியா தவறா என்ற திசையில் நடப்பது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  சார்லி ஹெப்டோ தாக்குதல் – அதைத் தொடர்ந்து ”ஐயேம் சார்லி” முழக்கம் – தொடர்ந்து பலநாட்டுத் தலைவர்கள் இணைந்த ஊர்வலம் : இந்த நிகழ்ச்சிப் போக்கு பொதுவில் ஐரோப்பாவிலும் குறிப்பாக பிரான்சிலும் ஏற்படுத்தியிருக்கும் விளைவு என்ன? இது கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது என்றாலும் நடக்கும் விவாதங்களைப் பார்க்கையில் கட்டுரையாளர் இந்தக் கண்ணோட்டத்தை மேலும் கொஞ்சம் விரிவாக பேசியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

  ஒவ்வொரு இசுலாமிய பயங்கரவாத தாக்குதலும் உண்மையில் ஜிஹாதிகள் எதிர்பார்ப்பதற்கு நேர் எதிரான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் எதிரிகளை (அப்படி அவர்களே நம்பிக்கொண்டு கொல்லும் ஏதுமறியாத மக்களை) தண்டிக்கவில்லை – மாறாக, ஒரு பரந்துபட்ட அளவில் பல இசுலாமிய நாடுகளுக்கு எதிரான நேட்டோ தாக்குதல்களுக்கு இவை ஒரு தார்மீக அடிப்படையை வழங்குகின்றன. நேட்டோவின் தாக்குதல்கள் (அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு) எனும் போது அவை வெறும் “அவன் அடிச்சான் இவனும் திருப்பி அடிச்சான்” வகைப்பட்டவை அல்லவென்று உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

  மேற்கத்திய நாடுகளின் வியாபார மற்றும் புவியியல் நலன்களை காத்துக் கொள்ளும் போர்ந்தந்திர (Strategic) ரீதியிலான நடவடிக்கைகள் அவை. இரட்டை கோபுரத் தகர்ப்பு கடந்த பத்தாண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் என்ன? பதினேழு உயிர்கள் பறிக்கப்பட்டது அநியாயமான செயல் – இதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை – ஆனால், இதை ப்ரிடெக்ஸ்டாக கொண்டு ப்ரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் கட்டமைக்கப்படும் / முனைவாக்கம் செய்யப்படும் இசுலாமியர்களுக்கு எதிரான பொதுக்கருத்து கொல்லப்போகும் உயிர்களைப் பற்றியும் சேர்த்தே நான் கவலை கொள்கிறேன். அது ஏற்கனவே துவங்கி வேகமெடுத்து விட்டதை ஓரளவிற்காவது ஜனநாயகப்பூர்வமாக உள்ள மேற்கத்திய ஊடகங்களை வாசிக்கும் போது புரிகிறது.

  இசுலாமிய ஜிஹாதிகளின் கொலைகள் – இசுலாத்தின் கொலைகளாக்கப்பட்டு – இசுலாமியர்களின் கொலைகளாக்கப்பட்டு – இசுலாமியர்கள் தீவிரவாதிகள் என்று பொதுபுத்தியில் நிறுவப்படுகிறது. ஆக, இசுலாமியர்கள் என்றாலே ஜிஹாதிகள் என்றாகிறது. இனி, வீசப்படும் ஒவ்வொரு குண்டுகளுக்கும் பலியாலும் குழந்தைகளின் உடல்களை எண்ணி ”இத்தனை ஜிஹாதிகள் கொல்லபப்ட்டார்கள்” என்று சி.என்.என் சொல்லும் கணக்கை உறுத்தல் இல்லாமல் ஐரோப்பியர்கள் கேட்டுக் கொள்வார்கள். ஈராக் ஆப்கான் போர்களின் போது ஐரோப்பாவில் நடந்த போருக்கு எதிரான ஆர்பாட்டங்கள் இனி சாத்தியமில்லை. சார்லி ஹெப்டோ விவகாரத்தில் ஜிஹாதிகள் உண்மையில் சாதித்தது இதைத் தான்.

  • கூடுதலாக ஒரு விஷயம் Understandingcharlie தளம் சமீபமாக ஆரம்பிக்கப்பட்டது. சார்லியின் கார்ட்டூன்கள் குறித்த விவாதங்கள் ஐரோப்பாவில் மற்றும் மேற்குலகில் சூடாக நடந்து வரும் நிலையில், ”இதெல்லாம் எங்க ஊர் மேட்டரு.. உங்களுக்கு புரிய வைக்கிறேன் பார்” என்ற ரீதியில் சார்லியின் கார்ட்டூகளுக்கு விளக்கவுரை எழுதி வருகிறது இத்தளம்.

   உலகிலேயே கார்ட்டூன்களுக்கு எழுதப்பட்ட முதல் கோணார் உரை இத்தளமாகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன் 🙂

   மேற்கில் இசுலாமியர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் கருத்தியல் முனைவாக்கத்தை சார்லியின் கார்ட்டூன் பற்றிய விவாதங்கள் குலைத்து விடக்கூடாதே என்கிற அவஸ்த்தை இந்த விளக்கவுரைகளில் தெளிவாக தெரிகிறது.

   ஒரு டிஸ்க்ளெய்மர் :- இசுலாமியர்களுக்கு ஆதரவான மறுமொழிகளை இசுலாத்திற்கு ஆதரவானதாகவோ, கூடுதலாக ஜிஹாதிகளுக்கு ஆதரவானதாகவோ புரிந்து கொள்வதற்கு அவ்வாறு புரிந்து கொள்பவர்களே பொறுப்பு.

  • சின்னச்சாமி,

   //1) கருப்பின அமைச்சரை குரங்காம சித்தரித்த வலது சாரி அமைப்பை கிண்டல் செய்ய அவர்கள் பயன்படுத்திய அதே குரங்கு இமேஜை ஏன் இவர்களும் பயன்படுத்த வேண்டும்.//

   வினவும் சார்லி ஹெப்டோவின் கருப்பின அமைச்சரை குரங்காம வலதுசாரிகள் சித்தரித்த கார்டூனை விமர்சிக்க பயன்படுத்திய அதே படத்தை தான் பயன்படுத்தியுள்ளதால் வினவு என்ன நியோ நாஜியா, இனவாத இணையதளமா சின்னச்சாமி ? அப்படி யாராவது கூறினால் கேட்பவர்கள் சிரிக்க மாட்டார்களா ? மேலும் சார்லி ஹெப்டோ என்று உலகம் இப்போது விமர்சிக்கும் போது சார்லி ஹெப்டோவின் கார்டூன்களுக்கு தென்றல் நோட்ஸ், கோனார் நோட்ஸ் எல்லாம் போட்டு விளக்குவதில் என்ன தவறு இருக்கின்றது ? http://www.understandingcharliehebdo.com/ தளத்தில் உள்ள சார்லி ஹெப்டோவின் கார்டூன்கள் பற்றிய விளக்கங்கள் அதில் கொடுக்கப்பட்டு உள்ள தகவல்கள் சரி என்றால் அவற்றை ஏற்பதற்கு சின்னச்சாமிக்கு என்ன பிரச்சனை உள்ளது ?

  • யார் இந்த Coulibaly ? [I am charlie coulibali தெடர்பாக ]

   சார்லி படுகொலை நிகழ்வின் போது ,பிரான்சு மளிகை கடையில் மக்களை பினைய கைதிகளாக பிடித்துவைத்து அதில் 4 பேர்களை கொன்ற I S என்ற சிரிய நாட்டை சேர்ந்த தீவிரவாத இயக்கத்தின் ஆள் தான் Amedy Coulibaly. I am charlie என்பது கருத்துரிமைக்கான முழக்கம் . I am charlie coulibali என்பது எத்தைகைய முழக்கம் என்று கூறுங்கள் சின்னச்சாமி ? I S திவிரவாதத்துக்கு ஆதரவான முழக்கம். பிரான்சின் கருத்துரிமை என்பது அதன் சட்டத்துக்கு உட்பட்டது தான் என்பதை அறிந்து பின்னுட்டம் எழுதுங்கள் .மேலும் அந்த முழக்கதை கூறுபவர் யூடோன்னெ ம்பாலா ம்பாலா (Dieudonne M’bala M’bala) ஒரு இன வெறியர், யூத எதிர்பாளர் [நியோ நாஜி கொள்கைக்கையுடையவர் , (anti semitism)] என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

   சார்லிக்கு உள்ளது கட்டற்ற விமரிசன உரிமை எல்லாம் இல்லை . சார்லி மீது பல முறை பிரான்சு நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க பட்டு உள்ளது

   • Mr. chennaswamy try to understand…..

    The campaign against Dieudonné[I am charlie coulibali comment] is being led by one of his former bodyguards, Jérémie Maradas-Nado, alias Jo Dalton, a former leader of the Black Dragons, a gang which defended black people from attacks by white skinheads in the 1990s.

    Still Do you support the Slogan “I am charlie coulibali ” raised by Dieudonné?

    • Gosh….. Where did I supported Dieudonne???? All I am asking is “where is the space for the socalled french liberlism and french satire and french anarchism and french freedom of speech while they have jailed Dieuedonne?”

     • Bussssssssssssssssh…,

      நீங்கள் விளிர்க்கும் பிரஞ்சு தாராளவாதம் மற்றும் பிரஞ்சு நையாண்டி மற்றும் பிரஞ்சு அராஜகம், மற்றும் பிரஞ்சு பேச்சு சுதந்திரம் அனைத்துமே பிரஞ்சு சட்டத்துக்கு உட்பட்டது தானே ? யூடோன்னெ ம்பாலா ம்பாலா (Dieudonne M’bala M’bala) வின் கருத்து IS தீவிரவாதியை [Amedy Coulibaly] , அவரின் slogan [ [I am charlie coulibali ] மூலம் ஆதரிக்க தானே செய்கின்றார். இது எப்படி சரியானதாக இருக்கும்.? சட்டத்துக்கு உட்பட்டு இருக்கும் ?

      • //பிரஞ்சு சட்டத்துக்கு உட்பட்டது தானே//

       Sir, Can you list out what are all covered under freedom of speech and what is not in France.

       As a lazy ignorant, I am surprised to know that When French Freedom of Speech (with an approval stamp of French Law) supports portraying pope and Muhammad nudely But does not support mocking a popular slogan.

       For your info, Dieudonne mocked the slogan but never supported the killings. is this an act of terrorism?

       I am Surprised 🙂

       • ____________சி.சா அவர்களே , அவரின் யூடோன்னெ ம்பாலா ம்பாலா (Dieudonne M’bala M’bala) slogan [ [I am charlie coulibali ] மூலம் I S தீவிரவாதியை [Amedy Coulibaly] ஆதரிக்க தானே செய்கின்றார். இது எப்படி சரியானதாக இருக்கும்.? இது எப்படி சட்டத்துக்கு உட்பட்டு இருக்கும் ? நீங்கள் தான் விளக்க வேண்டும் .

  • சின்னசாமி ,
   ஹாலோகாஸ்ட் [Holocaust] நிகழ்வின் போது ஹிட்லரின் நாஜி படையால் 60 இலச்சம் யூதர்கள் கொல்லப்பட்டதை எவராவது கட்டுக்கதை என்று கூறினால் [யார் கூறினார்கள் என்று எனக்கு தெரியவில்லை ] , அத்தகைய வரலாற்று மோசடிக்கு எதிராக ,கூறுபவரை விமர்சிக்க ,நையாண்டி செய்ய “ஹிட்லரோடு யூதர்கள் கூடிக் குலாவுவது போல் கார்ட்டூன் படம் போட்டு” – “இது தப்பு” என்று தலைப்பு வைப்பதில் என்ன தவறு இருகின்றது ? அத்தகைய கார்ட்டூன் விளக்கும் கருத்தாக்கம் “ஹிட்லரோடு யூதர்கள் கூடிக் குலாவவில்லை” என்பது தானே முக்கியம். இது ஒன்றும் பிரான்சின் யூத எதிர்ப்பு (anti semitism) சட்டத்துக்கு எதிரானது கிடையாது.

  • திரு சின்னசாமி,

   எங்கு எழுதப்பட்டு இருந்தாலும் எது உண்மை, எது பொய் என ஆராய்ந்து அறியும் அறிவு என்னிடம் உள்ளது அய்யா. இந்த எழுதல்கள் நீங்கள் கூறும் மண்டபத்தில் மட்டும் அல்ல, வினவு அளித்துள்ள http://souciant.com/2015/01/why-context-matters/ எனும் லிங்கில் கூட உள்ளது. இதுவும் மண்டபம் தானா? முதலில் இங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குகளை நீங்கள் முழுமையாக படித்தீர்களா?

   உங்கள் இஸ்லாமிய பாதிப்பு, அதன் விளைவு என்ற கேள்விக்கு எல்லாம் நான் விவாதம் செய்ய வரவில்லை. நான் இங்கு புரிய வைக்க முயல்வது எல்லாம் சார்லி ஒரு இனவாத, நிறவாத, பிரிவினைவாத பத்திரிகை இல்லை என்பது மட்டுமே. இதை பற்றி மட்டுமே நான் பேசுவேன். மற்ற எதை பற்றியும் கேள்வி கேட்க வேண்டாம். இப்போது தாங்கள் கேள்விக்கு மட்டும் பதில்:

   1) கருப்பின அமைச்சரை குரங்காம சித்தரித்த வலது சாரி அமைப்பை கிண்டல் செய்ய அவர்கள் பயன்படுத்திய அதே குரங்கு இமேஜை ஏன் இவர்களும் பயன்படுத்த வேண்டும்.

   ஏன் பயன்படுத்த கூடாது? அந்த குரங்கு படத்தை கொண்டு அந்த நீதிபதியை எதாவது சொல்லி இருந்தால் நீங்கள் கூறுவது சரி. ஆனால் அது ஒரு நீதிபதியை, கறுப்பின பெண் என்பதற்காக மட்டுமே குரங்கு என்று அவமதித்த கட்சியை கிண்டல் செய்ய ஏன் பயன்படுத்தகூடாது? இதையே நம்ம ஊர் விசயத்துக்கும் பொருத்தி பாருங்களேன். சுஷ்மா ஸ்வராஜ் பகவத் கீதையை பற்றி பேசியதற்கு இவ்வாறு கார்ட்டூன் வெளியிட்டது வினவு:

   https://www.vinavu.com/2014/12/09/sushma-swaraj-wants-bhagavad-gita-to-be-national-scripture/

   இது கிருஷ்ணரை அவமானபடுத்தும் நோக்கில் தீடபட்டதா? இல்லை பகவத் கீதையை அவமானபடுத்தும் நோக்கில் தீடபட்டதா? இரண்டும் இல்லை. மதவாத rss அமைப்பை தானே கிண்டல் செய்கிறது? மதவாதத்தை காட்டும் கார்டூனை கொண்டு, மதவாத rss அமைப்பை கிண்டல் செய்ததால் வினவு மதவாத அமைப்பு ஆகி விடுமா?

  • 2) சரி, அது ”ப்ரெஞ்சு கலாச்சார சூழலுக்கே” உரித்தான விஷயம் என்றும் பிறருக்கு அது புரியாது என்றும் Understanding Charlie Hebdo அல்லது I am charlie மக்கள் சொல்வது உண்மையாக இருந்தால், அந்த கட்டற்ற விமரிசன உரிமை I am charlie coulibali என்று சொன்ன ட்யுடொன்னேவுக்கு ஏன் வழங்கப்படவில்லை?

   அய்யா அந்த உரிமை இல்லாமல் எப்படி ட்யுடொன்னே இன்றும் வெளியில் நடமாடி கொண்டு தன் நாசி வெறி கக்கும் பேச்சை பேசி வருகிறார்? இன்றும் அவர் அந்த நாட்டில் பேசிக்கொண்டு, உலவிக்கொண்டு, வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். இதில் coulibaly என்பவன் ஒரு பெண் போலிசை நடு ரோட்டில் சுட்டு கொன்றவன். அவன் செய்ததை ஆதரிக்கிறேன் என்று சொல்லும் இந்த மனிதரும் வெளியில் நடமாடிக்கொண்டு தான் இருக்கிறார். இது தான் சுதந்திரம். என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் சொல்வது வெறியை தூண்டுவதாய் இருந்தால் தண்டனை. சார்லி பத்திரிகையும் பல தடவை பல விசயங்களில் வழக்குகளை சந்தித்து உள்ளது. என்ன ஒரே வித்யாசம். அது இனவெறியை பேசுவது இல்லை என்பதால் நீதிமன்றம் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து விட்டது. பத்திரிகைகள் holocaust பற்றி பேச இருக்கும் சட்டங்களை விமர்சித்தும் பல படங்களை வெளியிட்டு உள்ளன. ஒரு சின்ன சாம்பிள் இங்கே:

   https://firstlook.org/theintercept/2015/01/09/solidarity-charlie-hebdo-cartoons/

   டயுடன்னே என்ற மனிதர் holocaust பற்றி மட்டும் பேசவில்லை. அவர் யூதர்களை எதிர்க்க காரணத்தை அவரின் பேட்டியில் தாங்களே கேட்கலாம்.

   https://www.youtube.com/watch?v=pt_jvLaskM8

   அவரின் பல நிகழ்சிகள் youtube தளத்தில் உள்ளன. பார்க்கவும். இதை கேட்ட பிறகு இவருக்கும் நம்ம ஊர் மேல்சாதி வெறியருக்கும் என்ன வேறுபாடு என்று கூற முடியுமா? இவர் இங்கு இருந்தால் இந்நேரம் என்ன ஆகி இருப்பார் என்று கூறவேண்டியது இல்லை.

  • சின்னச்சாமி,

   I am Coulibaly என்று சொல்வதும் I am Charlie Coulibaly என்று சொல்வதும் ஒன்றுதான். இது கொலைகளுக்கு ஆதரவாக இருத்தல் அல்லது புதிய கொலைகளுக்கு துணை போதல் என்ற குற்றம்.

 30. //திப்புகள், அம்பிகள், வியாசன்கள் போன்றவர்களிடம் கெட்டபெயர் வாங்குவதை நான் பெரிதுபடுத்துவதில்லை.///
  என்னிடம் ‘கெட்டபெயரா’? எனக்குப் புரியவில்லையே. என்னிடம் கெட்டபெயர் வாங்குமளவுக்கு நீங்கள் இங்கே பெரிதாக எதையும் பேசியதாகவோ, அல்லது என்னுடன் வாக்குவாதப்பட்டதாகவோ எனக்கு நினைவில்லையே.

  //ஆனால் உங்களிடம் கெட்டபெயர் வாங்குவதற்கு எனக்கு வருத்தமாக இருக்கிறது.//
  இவர்கள் இருவரும் சரியான ‘குரு-சிஷ்ய’ பரம்பரையில் வந்தவர்கள் போலிருக்கிறது, திண்ணைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார்களோ என்னவோ.. 🙂

  • வியாசன்,

   பரவாயில்லை. சாதி வெறியன் என்ற ரீதியில் பேசியிருக்கிறீர்கள். அதற்காதத்தான் உங்கள் Category ஐ சேர்த்தேன்.

 31. பிரான்சில் வாழும் கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் பற்றிய சித்திரம் தொடர்பாக :

  தேசிய முன்னணி[National Front]என்ற இனவாத கட்சியின் அரசியல்வாதி Le Monde சமுகவளை தளத்தில் கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் குரங்காக வரைந்த சித்திரத்தை கேள்வி எழுப்பும்,கண்டனம் தெரிவிக்கும் சித்திரம் தான் சார்லி வரைந்தது. நீதி அமைச்சரை குரங்காக வரைந்த சித்திரத்துக்காக அக் கட்சியை சேர்ந்தவர் Le Monde என்பவர் 9 மாத சிறை தண்டனையும் பெற்றார் .தேசிய முன்னணியின் [National Front] குறியிடான[symbol ] நீல மற்றும் சிவப்பு வளைவுகள் சார்லியின் கார்ட்டூனின் இடது கீழ் பகுதியில் வரைய பட்டு உள்ளது . கார்ட்டூனின் தலைப்பில் இனவாத நீல சங்கம்[ “RACIST BLUE UNION”] என்று உள்ளது . இந்த கார்ட்டூன் பிரெஞ்சு மக்களுக்கு அளிக்கும் செய்தி என்னவாக இருக்கும் என்பதை கட்டுரையை எழுதிய வினவுக்கு/தமிழரசனுக்கு தெரியாவிட்டாலும் வினவு தளத்தால் அரசியல் அறிவு அளிக்கபட்ட வினவு வாசகர்களுக்கு புரியும் அல்லவா ?

  ஆம் கார்ட்டூன் எழுப்பும் செய்தி இதுதான் :

  “””””நீல ,சிவப்பு வண்ணத்தை,வளையத்தை குறியீடாக கொண்ட பிரான்சு தேசிய முன்னணி[National Front] என்பது கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் குரங்காக வரைவதன் மூலம் தன்னை இனவாத கட்சி என்று கூறிக்கொள்கின்றது “”””””

  ஒருவேலை தேசிய முன்னணியின் கார்டூனை “சார்லி வெளியிடு ” விமர்சிப்பது தவறு என்று ,அதுவும் இனவெறி என்று யாராவது கூறுவார்கள் என்றால் அதே வேலையை இந்த கட்டுரையில் செய்து உள்ள வினவையும்[ அந்த படத்தை வினவு வெளியிட்டதன் மூலம் ] இனவாதஇணைய தளம் என்று கூறமுடியமா ?

  பிற்சேர்க்கை

  [1] தேசிய முன்னணி[National Front]என்ற இனவாத கட்சியின் குரியீடு [symbol ]
  http://en.wikipedia.org/wiki/National_Front_%28France%29

  Vinavu said://பிரான்சில் வாழும் கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் பற்றிய சித்திரம்.//

 32. திரு சந்துரு அவர்கள் முன்வைத்துள்ள பின்வரும் கருத்துக்கள்..

  //உங்களுக்கு satire வடிவம் புரியவில்லையா, இல்லை இந்த விளக்கத்தில் என்ன குழப்பம் என்று தெரியவில்லை. satire பல வடிவங்களில் வரும்.//

  //பிரெஞ்சு கலாச்சாரம், மொழி தெரியாத மக்கள் எழுதிய வலைப்பதிவு படிக்க வேண்டாம். உண்மை வேண்டும் என்றால் அந்த தேசத்து மக்களின் பதிவுகளை படிக்கவும்.//

  சார்லி ஹெப்டோவைக் குறித்து எழுதப்படும் கட்டுரைகள் பலவற்றிலும் இது French Satirical Magazine என்று குறிப்பிடுகிறார்கள். ப்ரென்ச் சட்டையர் என்பதைப் புரிந்து கொள்ளும் அறிவு அந்நாட்டிற்கு வெளியே உள்ளவர்களுக்குக் கிடையாது என்கிறார்கள். இதை அடிப்படையாக கொண்டே ஐயேம் சார்லி இணையதளங்கள் சார்லியின் ஆபாசக் குப்பைகளில் குறியீடுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றன.

  முதலில் சட்டையர் என்பது அதிகாரத்திற்கு எதிராக வெளிப்படுவது. ஒருவன் தன்னையே சுயஎள்ளல் செய்து கொள்வதோ, தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களை அல்லது அதன் உள்முரண்பாடுகளை எள்ளுவதையோ இவ்வடிவமென கொள்ள முடியும். சார்லி ஹெப்டோ செய்வது அதிர்ச்சி மதிப்பீடு கொள்ளச்செய்யும் இரட்டை அர்த்த கார்டூன்கள். மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு பொருளையும், குறிப்பிட்ட ஒரு காண்டெக்ஸ்டில் வேறு ஒரு பொருளையும் வழங்குகிறது இந்தக் கார்ட்டூன்கள்.

  நம்மூரில் கூட “நீ தண்ணீ அடிக்க நம்பள் வூட் மேலே வந்து நம்பள்கி கைமேலே துட்டு கேக்குது?” என்று தலைப்பாகை கட்டிய ஒரு முசுலீம் பத்தானி குடிப்பதற்காக தன்னிடம் காசு கேட்கும் ஒருவனைச் சாடுவது போல் கார்ட்டூன் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்தக் கார்ட்டூன் டாஸ்மாக்கால் சீரழிந்த தமிழன் ஒருவனைச் சாடுகிறது என்பதையும், குடிப்பதற்காக அவன் கடன் வாங்கிச் சீரழிகிறான் என்ற கருத்தையும் அவனை அப்படி செய்ய வைப்பது அரசு என்ற விமரிசனத்தையும் மேலோட்டமாக கவனிக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.

  ஆனால், ஏன் முசுலீம் பத்தான்? ஏன் “நம்பள்கி” மொழி?

  கார்ட்டூன் முசுலீம்களை கிண்டல் செய்யவே இல்லை என்று நீங்கள் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யலாம் – அது உண்மையும் கூட. ஆனால், அது ஏற்கனவே இசுலாமியர்கள் குறித்து சமூகத்தில் ஆழப் பதிந்திருக்கும் ஒரு படிமத்தை பயன்படுத்திக் கொள்கிறது. வேறு ஒரு சமூக பிரச்சினையை கிண்டல் செய்ய வேண்டி போகிற போக்கில் ஒரு தட்டு தட்டுகிறது.

  க்வென்னெல்லியை வாழப்பழத்தின் வடிவத்தில் வரைய வேண்டிய அவசியமும் ‘Y’a bon banania’ விளம்பர வாசகத்தை சம்பந்தமில்லாத இடத்தில் நினைவூட்ட வேண்டிய தேவையும் ஏன் வருகிறது?

  சரி இந்த சோ கால்ட் ப்ரென்சு சட்டையரிக்கல் உரிமை என்பது ஏன் செலக்டிவாக அந்த நாட்டில் வெளிப்படுகிறது என்ற கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை.

  அடுத்து, சார்லி ஹெப்டோவின் பல கார்ட்டூன்களின் நீலப்பட காட்சிகளும், அதில் வரும் குதப்புணர்ச்சி அமைப்புகளும் ப்ரான்சின் கலாச்சாரம் அவர்களுக்கு வழங்கியுள்ள அதியுன்னத மேண்மை போலவும், இதெல்லாம் கட்டுப்பெட்டித்தனமாக சிந்திக்கும் இந்தியர்களுக்குப் புரியாது என்ற உள்ளடக்கத்திலும் சொல்லப்படும் கருத்துக்கள் பற்றி –

  உண்மையில் இப்படிச் சொல்பவர்கள் சார்லியை விமரிசிக்கும் தரப்பை கிண்டலடிப்பதாக கருதிக் கொண்டு பிரான்சைத் தான் கிண்டலடிக்கிறார்கள். சேம் சைட் கோல்.
  ப்ரான்சில் LGBT உரிமைகள் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளன என்பதும், மன உறவுகளில் ஆசிய தன்மை இல்லாதிருப்பதும் உண்மை என்றாலும் – ஒட்டு மொத்த ப்ரான்சும் குதப்புணர்ச்சி செய்து கொண்டோ, சுதந்திர பாலுறவை அடிப்படையாக கொண்ட திருமண பந்தங்களிலோ தான் உள்ளதா?

  ஆம் அப்படித்தான் என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால்,இந்த ‘சுதந்திரத்தின்’ வளையத்திற்குள் வர விரும்பாதவர்களை விமரிசிக்கும் போது யாருடைய வரையறைகளின் கீழ் அந்த விமரிசனம் அமைவது கருத்து சுதந்திரம்?

  வடிவேலு காமெடி ஒன்று நினைவுக்கு வருகிறது “நானும் இவனும் சின்ன வயசிலேர்ந்து பிரெண்டு பாஸ். நான் இவன் குடும்பத்தைக் கேவலமாகவும் இவன் என் குடும்பத்தை கேவலமாகவும் பேசுவது வழக்கம்”

  அது அவர்களுக்குள் இருக்கும் வரை பிரச்சினையில்லை, பக்கத்தில் நின்று கொண்டிருப்பவரும் இந்த “கருத்து சுதந்திரத்தை” ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கோருவது என்ன வகையில் நியாயம்?

  • அய்யா அறிவாளி திலகமே,

   வினவு தந்துள்ள why context matters என்னும் பதிப்பை முழுவதும் முதலில் படியுங்கள். படித்து வந்து விட்டு இந்த குதி எல்லாம் குதியுங்கள். நான் கூறிய (understandingcharliehebdo தளத்தில் உள்ள) அனைத்து விளக்கங்களும் அந்த பதிவில் இருக்கிறது. அதை படித்து விட்டுதான் என்னடா இது வினவு ஒரு மாதிரி சொல்கிறது, இந்த கட்டுரை வேறு மாதிரி சொல்கிறது என்று தேட போய் கிடைத்தது தான் அந்த இரு தளங்களும். அந்த context கட்டுரையில் கூறப்பட்டது:

   the presentation of the images used do not take into account a larger context of French political satire and cartooning, which includes inspiration from de Sade and Voltaire, and can seem positively Rabelaisian, with its focus on the lower bodily function. There is the gross and the gouaille that Arthur Goldhammer describes a populist, anarchic and obscene—something ingrained in Charlie Hebdo’s satire.

   அதாவது இது பிரான்சில் பிரெஞ்சு புரட்சிக்கு முன்பு இருந்தே வழக்கில் இருக்கிறது. மேற்குலகில் பல தேசங்களிலும் இது போல பல வழக்குகள் உள்ளன. சார்லி இந்த ஸ்டைலை பின்பற்றுகிறது. அவ்வளவே. நமக்கு அது மஞ்சள் பத்திரகை போல தோன்றும். ஆனால் அந்த தேசங்களில் அதற்க்கு பெரிய வரலாறு உண்டு. ஒரு தேசத்தின் பத்திரிகையை பார்க்கும்போது அதை அந்த தேசத்தின் மக்களின் பார்வையில் இருந்து தான் பார்க்கவேண்டும். நம் பார்வை கொண்டு அல்ல. ஏனெனில் தேசத்துக்கு தேசம் பழக்கங்கள், கலாச்சாரம் போன்ற அனைத்தும் மாறும். உங்களுக்கு அருவருப்பாக இருப்பது, மற்றவருக்கு சாதாரணம்.

   இப்படி எடுத்து கொள்ளுங்களேன். நம்ம ஊர் மயிலாட்டம், சிலம்பாட்டம், காவடி போன்றவற்றை எப்போது மற்றவருக்கு விளக்குவீர்கள்? அது என்ன, ஏன் அப்படி என்று கேட்டாலோ விளக்கலாம். இல்லை அதை பற்றி தவறான புரிதல் இருந்தால் அதை போக்க விளக்க முயற்சிப்போம். இதையே சார்லி விசயத்தில் பிரெஞ்சு மக்கள் செய்தால் (இப்போது ஏன் இந்த படங்கள் இப்படி இருக்கின்றன என்று மக்கள் கேட்பதாலும், அந்த படங்களை பற்றி பல தவறான செய்திகள் பரவுவதாலும்) தாங்கள் வடிவேலு காமெடி என ஏன் கூறுகிறீர்?

   • இந்தியக் கண்ணோட்டம், பிரெஞ்சுக் கண்ணோட்டம் என்பதெல்லாம் வெற்று வாதங்கள். கம்யுனிஸ்டுகள் சர்வதேசியவாதிகள். அதனடிப்படையில் தான் கட்டுரை தன் கண்ணோட்டத்தை வைக்கிறது என்பது எனது கருத்தாகும்.

    சார்லி வலது சாரி கும்பலைச் சாடுகிறது என்ற வாதத்தையும் ஏற்கவில்லை. சிலர் சார்லி இடதுசாரி என்றார்கள். இவையெல்லாம் இந்தியாவில் இடது ஓரம் நடந்துசெல்கிற பாதசாரிகளையும் இடது சாரி என்று சொல்கிற கேலிக்கூத்திற்கு ஒப்பானவை.
    சார்லி ஒர் உடோபிய லும்பனாக இருக்கிறது. இது மேற்குலகின் வார்த்தைகள் தான். கருத்து கந்தசாமிகள் இதற்கு அர்த்தம் கண்டுபிடித்து மேற்கொண்டு கூவலாம்.

    • சார்லியின் மீதான கட்டுரையின் குற்றச்சாட்டுகலாவது சார்லியின் கார்ட்டூன்கள் மீதான தவறனா புரிதல்கள் காரணமாக எழுதபட்டு உள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் தென்றலின் ,சார்லி மீதான குற்றச்சாட்டுகள் எவ்வித அடிப்படையும் உடையது இல்லை . “உடோபிய லும்பனாக” சார்லியை சித்தரிப்பது எல்லாம் ஜனநாயக பூர்வமான அந்த பத்திரிக்கையை உள்நோக்கத்துடன் அவதூறு செய்வதற்காக தென்றல் கூவும் குதர்க்கமான கருத்துகளே !

    • தென்றல்,

     நான் பார்த்த 100 கணக்கான சார்லியின் கார்டூன்கள் கம்யுனிச இயக்கத்தையோ ,கம்யுனிச கொள்கைகளையோ இழிவு செய்யாத நிலையிலும் ,அது மத ,இன வேறுபாடு இல்லாமல் அனைத்து விதமான சமுக லும்பன்களையும் கேலி செய்கின்றது என்பது தென்றலுக்கு எரிச்சல் ஊட்டுவது ஏன் ?

     • \\ நான் பார்த்த 100 கணக்கான சார்லியின் கார்டூன்கள் கம்யுனிச இயக்கத்தையோ ,கம்யுனிச கொள்கைகளையோ இழிவு செய்யாத நிலையிலும் ,அது மத ,இன வேறுபாடு இல்லாமல் அனைத்து விதமான சமுக லும்பன்களையும் கேலி செய்கின்றது என்பது தென்றலுக்கு எரிச்சல் ஊட்டுவது ஏன் ?\\

      இது எரிச்சல் என்றால் பிரச்சனையில்லை தமிழ். ஆனால் உங்களுடையது ஓர் அற்பவாத பார்வை. எச்சூழ்நிலையிலும் ஓர் ஒடுக்கப்படும் வர்கத்திற்கு சார்பாக நின்று அவர்களின் நலன்களை பிரதிபலிப்பவர்களே கம்யுனிஸ்டுகள். உங்களைப்போன்று உங்களை விமர்சிக்காதவர் உங்கள் நண்பர் என்றோ உங்களை விமர்சிக்கிறவர் எதிரி என்றோ சொல்வதற்கு கம்யுனிசம் ஒன்றும் உங்கள் அற்பவாத தராசு அன்று! ஓர் உடோபியன், கம்யுனிசத்தை விமர்சிக்கிற பொழுது அவன் பிரச்சாரகர்களைவிட அதிகம் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறான் என்பது தான் யதார்த்தம். ஆக உங்கள் பார்வையின் படி சார்லிபோன்ற மஞ்சள் பத்திரிக்கைகளோ உங்கள் நிலைப்பாடு கடுகளவும் இங்கு பொருந்தவில்லை என்பதைக் காணலாம்.

      • //உங்களைப்போன்று உங்களை விமர்சிக்காதவர் உங்கள் நண்பர் என்றோ உங்களை விமர்சிக்கிறவர் எதிரி என்றோ சொல்வதற்கு கம்யுனிசம் ஒன்றும் உங்கள் அற்பவாத தராசு அன்று! //

       அப்படிங்களா? கிறிஸ்துவ மதவாதி, இந்து மதவாதி, இஸ்ரேல் என எல்லாரையும் விமர்சிப்பவன் இஸ்லாமிய மதத்தில் ஒரு சிலர் மதத்தில் பெயரால் பெண்களின் பிறப்புறுப்பு சிதைக்கப்படும் கோரத்தை, பெண் போலீஸ் பணியில் சேர கன்னித்தன்மை சோதனை எடுத்துகொள்ள வேண்டும் எனும் சட்டத்தை, மதத்தை விமர்சித்து படம் வரைந்தால் கசையடி, சிறை என்பதை பேசினால் உடனே அவன் அற்பவாத தராசு. என்ன முட்டாள்தனம் இது?

       ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்பார்ப்பது சிறப்பு சலுகைகள் இல்லை அய்யா. சமமான உரிமை, சமமான மரியாதை, சமமாக நடத்தபடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. ஓரினசேர்கையாளர், இஸ்லாமியர்கள், தலித்துகள் என எவரை வேண்டுமானாலும் கேளுங்கள். சமமாக நடத்துங்கள் போதும் என்பர். என் அனுபவத்தில் (தர்மபுரியில் வளர்ந்தவன் நான். நான் வளர்ந்த தெருவின் பெயர் வன்னியர் தெரு.சாதி அட்டூழியங்களை கண்ணால் பார்த்தவன். எனவே உங்கள் பம்மாத்து, நக்கல் எல்லாம் வேண்டாம்.மனம் மரத்து போகும் அளவுக்கு கொடுமைகளை பார்த்தாகிவிட்டது) நான் உணர்ந்தது இதுவே.

       எல்லா மூடநம்பிக்கையும் எதிர்க்கணும். இதில் பாரபட்சம் ஏன்? ஒடுக்கப்பட்ட மக்கள் என்றால் மூடநம்பிக்கையை பற்றி பேசாம, அதை தவறு என்று சுட்டிக்காட்டாமல் எப்படி அய்யா அதை தவறு என்று பேசுவீர்? கம்யூனிஸ்ட் எல்லா ஒடுக்கப்பட்டவர் நலனுக்கு பேசுபவர் என்றால் உக்ரைன் போல பல பேசினால் பதில் இல்லாமல் ஓடுவது ஏன்? ருசியா பஞ்சத்தை பற்றி பேசினால் இங்கும் அது எடிட் செய்யப்படும். இதை எல்லாம் விட்டுவிடுவோம். இன்று கிட்ட தட்ட எல்லா மதத்தாலும் ஒடுக்கப்படும் ஓரினசேர்கையாளர் விசயத்தை எடுத்துகொள்வோம். அவர்களுக்கு சம உரிமை என்பதை மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தாமல் எப்படி கொடுப்பீர்கள்? குஷ்பு, கற்பு பிரச்சனையை அலசி ஆராய்ந்த வினவு இன்றும் இந்தயாவில் ஓரினசேர்க்கை சட்டப்படி தவறு என்று இருப்பதை பற்றி மூச்சு கூட விடாமல் இருப்பது ஏன்? இவர்கள் எந்த விடயத்தில் ஒடுக்கப்பட்டவர் இல்லை? அவர்களுக்கு உரிமையை, மத உணர்வை புண்படுத்தாமலும் எப்படி தருவீர் என கொஞ்சம் கூறவும்.