privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

நாங்கள் சார்லி அல்ல !

-

து ‘கருத்துரிமை மற்றும் பத்திரிகை சுதந்திர’த்திற்கான போராட்டங்களின் காலம். ஐரோப்பிய மற்றும் பல்வேறு உலகத் தலைவர்களோடு மகா கனம் பொருந்திய பெட்ரோ பொரெஷென்கோ அவர்களும் கைகோர்த்து பாரீஸ் வீதிகளில் பத்திரிகை சுதந்திரத்திற்கான ஊர்வலத்தில் நடந்து சென்ற அழகை நீங்கள் பார்த்தால் பிரமித்திருப்பீர்கள். ஆனால், உக்ரைனியர்களோ இந்த ஆபாசக் கூத்தை காறித் துப்புகிறார்கள். கடந்த ஓரிரு ஆண்டுகளில் சுமார் 33 பத்திரிகையாளர்களை கடத்தி, 47 பத்திரிகையாளர்களை கைது செய்து சிறையிலடைத்த பெட்ரோ பொரெஷென்கோ உக்ரைனின் தற்போதைய அதிபர்.

சார்லி ஹெப்டோ கொலையாளிகள்சார்லியின் மேல் தாக்குதல் தொடுத்து பதினேழு உயிர்களைக் கொன்றொழித்த ஜிஹாதிகளின் செயல் காட்டுமிராண்டித்தனமானது;  கண்டனத்திற்குரியது. உலகமே காறித்துப்பும் தங்களது மூடத்தனமான செய்கையால் ஆகக் கீழ்த்தரமான கடைந்தெடுத்த ஒரு தெருப் பொறுக்கியான பெட்ரோ போன்ற கனவான்களுக்கெல்லாம் கருத்துரிமை போராளிகளாக பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள்.

சார்லி ஹெப்டோ படுகொலையும், அது குறித்த போராட்டங்களும், விவாதங்களும் அனைவரையும் உணர்ச்சி வேகத்தில் சில விசயங்களை பரிசீலிக்க அல்லது பார்க்க விடுவதில்லை.

சார்லி ஹெப்டோ ஒரு பிரெஞ்சு மஞ்சள் பத்திரிகை. அறுபதுகளில் பிரபலமாக இருந்த ஹாரா கிரி என்ற பத்திரிகையின் வழித்தோன்றல் தான் சார்லி ஹெப்டோ. எந்தப் பொறுப்புமின்றி சகலரையும் வம்பிழுப்பது சார்லியின் சிறப்பு. அவர்களது கார்டூன்களுக்குத் தப்பியவர்கள் மிகச் சிலரே. ஓரினச் சேர்க்கையாளர்கள், கத்தோலிக்கர்கள், பெண்கள், புலம்பெயர்ந்த கருப்பின மக்கள், ஆசியர்கள் என்று நீளும் இந்தப் பட்டியலில் அரிதாக யூதர்களும் இசுரேலும் கூட இடம் பெற்றதுண்டு. சார்லி ஹெப்டோ ப்ரெஞ்சு மக்களின் நாசூக்கான ரசனைக்கு தீனி போட்ட பத்திரிகை இல்லை என்பதால் அது எப்போதும் வணிக ரீதியில் வெற்றிகரமான பத்திரிகையாக நடந்ததில்லை.

ஐரோப்பிய கருத்து சுதந்திரம்2000 ஆண்டுகளின் துவக்கத்திலிருந்து (அல்லது 1990-களின் இறுதிப்பகுதியில் இருந்து) சார்லி ஹெப்டோவின் ‘பகடியின்’ தரம் ஆக கீழ்த்தரமாக செல்லச் செல்ல அதன் விற்பனை எண்ணிக்கையும் கணிசமாக சரியத் துவங்கியது. இந்நிலையில் தனது வர்த்தக இருப்புக்காக இசுலாமியர்களைக் குறிவைக்கத் துவங்கியது இப்பத்திரிகை. ஏறக்குறைய அதே சமயத்தில் இரட்டை கோபுரத் தகர்ப்பைத் தொடர்ந்து மேற்குலகில் கலாச்சார ஒதுக்குதலை எதிர்கொள்ளத் துவங்கியிருந்தனர் இசுலாமிய மக்கள்.

அமெரிக்கா தலைமையிலான ‘பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டணியில்’ அங்கம் வகித்து அமெரிக்காவின் போர் தந்திர நலன்களுக்கு கணிசமாக செலவு செய்யத் துவங்கின ஐரோப்பிய நாடுகள். அதே நேரம் இரண்டாயிரங்களின் பிற்பகுதியில் துவங்கவிருந்த பொருளாதாரப் பெருமந்தத்தின் வருகையை முன்னறிவிக்கும் விதமாக பல ஐரோப்பிய நாடுகள் சிக்கன நடவடிக்கையை நாடத் துவங்கியிருந்தன. இந்நடவடிக்கைகளின் உடனடி பலி – மக்கள் நலத் திட்டங்கள். இது பரவலாக ஐரோப்பாவெங்கும் மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியிருந்தது.

எழுந்து வரும் மக்களின் அதிருப்திக்கு இணையாக ஐரோப்பிய வலதுசாரிகளும் நியோ நாஜிகளும் மெல்லத் தலையெடுக்கத் துவங்கியிருந்தனர். அந்த சமயத்தில் ஐரோப்பாவெங்கும் தலைவிரித்தாடிய இசுலாமிய வெறுப்பின் அறுவடையில் சார்லி ஹெப்டோ தனது பங்கையும் எதிர்பார்த்தது. விளைவாக இசுலாமியர்களை தனிச்சிறப்பாக குறிவைத்து கார்ட்டூன்களை வெளியிடத் துவங்கினர்.

’இசுலாமியர்களை தனிச்சிறப்பாக குறிவைத்து’ என்ற இந்த மூன்று வார்த்தைகளை நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில், இன்று “ஜெசூயிஸ் சார்லி” (அதாவது ‘நான் சார்லி’) என்பது மேற்குலகில் ஒரு முழக்கமாகியுள்ளது. இந்த முழக்கம், பொதுவில் கருத்துரிமைக்கான அறைகூவலாக பார்க்கப்பட்டாலும், உண்மையில் மேற்குலகில் மெல்ல மெல்ல திட்டமிட்ட ரீதியில் உருவாக்கப்பட்டு வரும் இசுலாமிய வெறுப்பே இதன் அடிநாதமாக உள்ளது.

ஜனநாயகத்தின் தொட்டிலான ஐரோப்பியாவின் சிறப்பான தனிமனித சுதந்திரம், வாழும் உரிமை மற்றும் இவற்றின் வழி சொல்லப்படும் கருத்துரிமை என்பதெல்லாம் முக்காடிட்ட முல்லாக்களுக்கு புரியாத சமாச்சாரங்கள் என்ற கோணத்தில் ஒரு பொதுபுத்தி கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் கருத்துரிமை என்ற திரையை நாம் கொஞ்சம் விலக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பிரான்ஸ் நாடு ஐரோப்பிய ஜனநாயக விழுமியங்களின் ஒரு முன்மாதிரியாக போற்றப்பட்ட நாடு; தனிமனித சுதந்திரத்தின் உச்சங்களைத் தொட்ட தேசம் என்பதெல்லாம் பிரான்சைக் குறித்து வெளியுலகில் அறியப்படும் நைந்து போன பிரச்சாரங்கள்.  “சார்லி ஹெப்டோ மீதான தாக்குதல் என்பது மானுடத்தின் பின்தங்கிய பகுதியில் இருந்து மானுடத்தின் உச்சநிலை நோக்கி செய்யப்பட்ட தாக்குதல்” –  என்று கேட்டுத் தேய்ந்து போன அதே ரிக்கார்டை மீண்டும் ஓட்டுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

இதே பிரான்சில் தான் அல்ஜீரியாவிலிருந்தும் பிற ஆப்ரிக்காவின் முன்னால் பிராஞ்சு காலனிய நாடுகளில் இருந்தும் குடியேறிய கருப்பின மக்கள் இன்றும் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள். வெள்ளைத் தோல் மனிதர்களுக்கு இணையாக வேலை வாய்ப்புகள் வழங்கப்படாமல்பழுப்பு மற்றும் கருப்புத் தோல் மனிதர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வாடகைக்கு வீடு பிடிப்பதும் கூட அத்தனை சுலபமல்ல.

நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையை எதிர்த்து ஜனநாயகத்திற்கான – விடுதலைக்கான – முதல் குரலைக் கொடுத்தவர்கள் பிரெஞ்சு தொழிலாளர் வர்க்கமும் விவசாயிகளும் தான். ஆனால், உழைக்கும் மக்களின் வெற்றி வெகு சீக்கிரத்திலேயே முதலாளி வர்க்கத்தால் கைப்பற்றப்பட்டது; முதலாளித்துவ ஜனநாயகத்தின் ’மாண்பும்’ சந்தி சிரித்தது. அதன்பின் உலகுக்கே ஜனநாயகத்தை சொல்லிக் கொடுத்த ’உச்சநிலை மாந்தர்கள்’ தான் ஆப்ரிக்காவில் அடிமை வியாபாரம் செய்தார்கள். மூன்றாம் உலக நாடுகளைச் சூறையாடும் போட்டியில் முன்னிற்பதும் ஜெயமோகன் உச்சிமோந்த அதே ‘உச்சநிலை மாந்தர்கள்’ தாம்.

முகமது நபியின் கேலிச் சித்திரங்களை வரையவே கூடாது, குரானை விமரிசிக்கவே கூடாது, இசுலாமிய பிற்போக்குத்தனங்களை இடித்துரைக்கவே கூடாது என்பது போன்ற தலீபானிய கடுங்கோட்பாட்டுவாதத்தை யாரும் ஆதரிக்க முடியாது. ஆனால், பொருளாதார ரீதியிலும், சமூக கலாச்சார தளங்களிலும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஒருபிரிவு மக்கள் தேவதூதராக கருதும் ஒருவரின் நிர்வாணப் படங்களை வரைவது கருத்துச் சுதந்திரத்தில் சேர்த்தியா? அவர்களை மேற்குல வெறுப்பிற்கான பலனை முன்னிட்டு இழிவுபடுத்தவது சரியா?

கருத்துரிமை ‘போராளிகளுக்கு’ புரியும் விதத்தில் சொல்வோம். பார்ப்பனியத்தின் அடையாளமாக உழைக்கும் மக்களை ஒடுக்கும் ராமன்-கிருஷ்ணன் போன்ற பார்ப்பன தெய்வங்களை கிண்டலாக வரையும் நாம் அதே போன்று நாட்டுப்புறத் தெய்வங்களை வரைவோமா? இசக்கியும், சுடலைமாடனும், மதுரை வீரனும், முனியாண்டியும் என்னதான் சுருட்டு, சாராயம், கறி சகிதம் வணங்கப்பட்டாலும் இந்த தெய்வங்களையும் பார்ப்பனிய தெய்வங்களையும் ஒன்றாக பார்க்க மாட்டோம். அதே நேரம் இப்பிரிவு மக்களிடமும் நாத்திகமும், மூடநம்பிக்கை எதிர்ப்பும் பிரச்சாரம் செய்வோம். மறுபுறம் பார்ப்பனியத்தின் அஜென்டாவாக ஆடு கோழி பலி தடை சட்டம் வந்தால் அதை எதிர்த்தும் போராடுவோம்.

இசுலாமிய மதவெறியையும், மதப்பிற்போக்குத்தனங்களையும் எதிர்ப்பவர்கள், அதற்கு மேல் அவர்களது கடவுளையோ, தூதரையோ ஆபாசமாக படம் வரைந்து பேசுவது உண்மையில் இசுலாமிய மதவெறிக்குத்தான் வலு சேர்க்கும். ஏசுவையும், மேரியையும் கூட சமூக ரீதியிலான பின்புலத்தில் பரிசீலிப்பதற்கும் தனிப்பட்ட பாலியல் ரீதியில் இழிவு படுத்துவதற்கும் வேறுபாடு இருக்கிறது. பின்னதை நாம் செய்ய மாட்டோம். அதே போல பார்ப்பனியத்தின் மீதான நமது விமரிசனம் என்பது அதன் ஏற்றத்தாழ்வான சாதிய அமைப்பை நியாயப்படுத்தும் அதன் புராண, இதிகாச, கடவுள், சடங்குகள் மீதானே அன்றி வெறுமனே கடவுளை கிண்டல் செய்வது என்றல்ல.

வேறு ஒரு பின்புலத்தில் இதை வைத்துப் பார்க்கலாம். தமிழகத்தின் ஆதிக்க சாதி ஒன்று பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் பத்து அருந்ததியினர் குடும்பங்கள் மட்டும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவன் ஒரே நேரத்தில் – “_____ நாய்களே” என்று ஆதிக்க சாதியை ஏசுவதும், “______ நாய்களே” என்று அருந்ததினரை ஏசுவதும் ஒரே தரத்திலான ‘விமரிசனம்’ என்று சொல்ல முடியுமா? இல்லை இரண்டையும் நாம் ஒரே அளவில் பரிசீலிக்க முடியுமா?

ஏற்கனவே சமூக ரீதியிலான ஒதுக்குதலை சந்தித்து மனதளவில் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு தரப்பு மக்களின் தவறுகளையோ பிற்போக்குத்தனங்களையோ சுட்டிக்காட்டும் போது சொற் தேர்விலும், சொல்லும் தன்மையிலும் ஒரு குறைந்தபட்ச கவனம் தேவைப்படுகிறது. இங்கோ சார்லி ஹெப்டோ பத்திரிக்கை முகமது நபியைக் குறித்து வெளியிட்ட கேலிச் சித்திரங்கள் விமரிசனம் என்ற வரையறைக்குள் வருவன அல்ல. அவை கண்மூடித்தனமான வசைகள். எதிர்த்துப் பேசும் திராணியற்றவர்களை நோக்கி எறியப்பட்ட அமிலக் குண்டுகள்.

ஜெயமோகன் அராஜகவாதம்
வசைபாடும் உரிமையெ பண்பாட்டுக் கொடை என்றும் அதுவே ஐரோப்பிய ஜனநாயகத்தின் உச்சம் என்றும் சொல்கிறார் ஜெயமோகன்

ஒரு உள்ளடக்கத்தோடு வரும் போது தான் விமரிசனம் அல்லது எதிர்க்கருத்து என்பவை அவற்றுக்கான பொருளைப் பெறுகின்றன. தமிழ் பத்திரிகை உலகில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் மற்றும் வினவு இணையதளத்திற்கு இணையாக ஜெயலலிதாவை காட்டமாக விமர்சிக்கும் வேறு பத்திரிகைகள் இல்லை – ஆனால், நாங்கள் சிங்கள பத்திரிகை ஒன்றில் வெளியான ஜெயலலிதாவின் ஆபாச கேலிச்சித்திரத்தை எதிர்க்கிறோம் என்பதையும் சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் வசைபாடும் உரிமையெ பண்பாட்டுக் கொடை என்றும் அதுவே ஐரோப்பிய ஜனநாயகத்தின் உச்சம் என்றும் சொல்கிறார் ஜெயமோகன். இத்தனை ‘ராவாக’ சொல்வது 21-ம் நூற்றாண்டின் நாஸ்டர் டாமஸான ஜெமோவுக்கு உறுத்தலாக இருந்திருக்க வேண்டும். எனவே தான் ‘வசைபாடும் உரிமைக்கு’ அரசின்மைவாதம் (அராஜகவாதத்தின் ஜெயமோகனிய மொழிபெயர்ப்பு) என்ற மேக்கப்பை போட்டு விடுகிறார்.

அராஜகவாதம் என்கிற ‘ஐரோப்பிய மையவாத’ கருத்தியலை ஜெயமோகனின் வாயில் இருந்து வரவழைத்த அன்னிய சக்தி யார் என்று தெரியவில்லை.கட்டுப்பட்டிற்கும் சமூக ஒழுங்கிற்கும் எதிரான ’உன்னத’ நிலையான அரசின்மைவாதத்திற்கு காட்டுமிராண்டி இனக்குழு மனப்பான்மை கொண்ட நாம் சென்று சேர்வதில் இருக்கும் சிக்கலை ஜெயமோகன் பீராய்ந்துள்ளார் – அதில் உண்மை இருக்கத் தான் செய்கிறது. விஷ்ணுபுரம் வட்ட உன்னதர்களின் ஊட்டி சந்திப்புகளுக்கான விதிமுறைகளே புத்தகமாக அச்சிடும் அபாக்கிய நிலையில் தானே நாம் இன்னமும் இருக்கிறோம்.

அராஜகவாதத்தைப் போற்றிப் புகழும் ஜெயமோகன், அவரது வாசகர் சந்திப்புக் கூட்டங்களில் அராஜகவாத அணுகுமுறை பின்பற்றப்படுவதற்கு அவரே விதித்துள்ள தடைகளுக்கு என்ன காரணம்? என்னதான் அராஜகவாதத்தைப் பற்றி கதாகலாட்சேபம் நடத்தினாலும் கேட்பவர்கள் சரக்கடித்து விட்டு அராஜகாவாதத்தை கடைபிடித்தால் பிறகு பிரசங்கத்தை எப்படி நடத்துவது? ஆக ஒரு வீணாப் போன இலக்கியக் கூட்டத்திற்கே இத்தகைய ஒழுங்குகள் தேவையென்றால் பெருந்திரளான மக்கள் கூட்டம் அதன் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கும் ஒரு வரைமுறை தேவையா இல்லையா?

சார்லி ஹெப்டோவின் கேலிச்சித்திரம் ஒன்றை கவனியுங்கள்: (இங்கே பிரசுரிக்கப்படவில்லை)

க்வென்னொலி வணக்க முறை!
க்வென்னெல்லி வணக்க முறை!

அந்தப் படத்தில் உள்ளவர் பெயர் யூடோன்னெ ம்பாலா ம்பாலா (Dieudonne M’bala M’bala) – இவர் ஒரு ப்ரெஞ்சு நகைச்சுவையாளர். யூத வெறுப்பாளராகவும் நாஜி ஆதரவாளராகவும் அறியப்பட்டவர். இவர் க்வென்னெல்லி என்ற சைகை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தார் – அது நாஜி வணக்கத்தின் தலைகீழ் வடிவம். படத்தில் அவரது பின்புறத்தில் சொருகியிருப்பது வாழைப்பழம் போல் தோன்றும் ஒரு உணவுப் பதார்த்தம்; அதன் பெயரும் க்வென்னெல்லி தான்.

இந்தப் படத்தை இந்தளவுக்குத் தகவலோடு அவதானிக்கும் எவரும் அதில் இருக்கும் பகடியைப் புரிந்து கொள்ள முடியும். நியோ நாஜி ஒருவரின் மேலான கூர்மையாக விமரிசனமாக புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்தக் கேலிச்சித்திரத்தில் அது ஒரு அடுக்கு (Layer) மட்டும் தான்.

க்வென்னெல்லி உணவுப் பதார்த்தம் வேறு வேறு வடிவங்களில் செய்யப்படும் போது, ஏன் குறிப்பாக வாழைப்பழ வடிவத்தை ஓவியர் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஏன் வாழைப்பழத்தின் பெயரை நினைவூட்டும் தலைப்பு வைக்க வேண்டும்? (போன் அனானியா – பிரித்துச் சொன்னால் நல்ல பைனாப்பிள் / சேர்த்துச் சொன்னால் போனானியா)

போனானியா என்பது வாழைப்பழம் மற்றும் கோகோ கலந்து செய்யப்படும் ஒரு பானம். அதன் டப்பா முகப்பில் முதலாம் உலகப் போர் சமயத்தில் பிரெஞ்சு இராணுவத்தில் பிரான்சின் ஏகாதிபத்திய நலனுக்கான போரில் பங்கேற்ற செனகலைச் சேர்ந்த வீரர் ஒருவரின் படம் இடம்பெற்றிருக்கும். இன்றளவிற்கும், அவ்வாறு செனகல் வீரரை விளம்பர முகப்பில் பயன்படுத்துவது பிரான்சின் கடந்தகால இனவெறி மேலாதிக்கத்தின் குறியீடாக உள்ளது என்ற விமரிசனம் பிரான்சின் முற்போக்காளர்கள் மத்தியில் உண்டு.

இப்போது கேலிச்சித்திரத்தின் நாயகன் யுடொன்னே, காமரூன் தந்தைக்கும் ப்ரெஞ்சு தாய்க்கும் பிறந்த கலப்பினத்தவர் என்பதை சேர்த்துப் பாருங்கள். எமது இனப் பெருமையின் அன்றைய காலாட்படை கருப்பர்கள், இன்றைக்கு எமக்குத் தேவையானதை (நியோ நாஜிசம்) பேசும் வேலையையும் அவர்களே செய்வார்கள் (அதாவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் முட்டாள்கள்) என்ற ஒரு பொருள் வருகிறதா? இது இன்னொரு அடுக்கு.

மேலும் சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு –

இது பிரான்சில் வாழும் கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் பற்றிய சித்திரம்.

பிரெஞ்சு நீதித்துறை அமைச்சர்
கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் பற்றிய சித்திரம். (கருப்பின மக்களை குரங்குகள் என்று வெறுப்பை உமிழ்வது ஐரோப்பிய இனவாதிகளின் வழக்கம்)

இது போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட (கருவுற்ற) பெண்கள், தங்களுக்குச் சேர வேண்டிய ஈட்டுத் தொகைக்கான காசோலையை நிறுத்தாதீர்கள் என்று சொல்வது போன்ற படம்.

போகோ ஹராம் பாதிக்கப்பட்ட பெண்கள்இந்தச் சித்திரம் மேல் தோற்றத்தில் ப்ரான்சு அரசாங்கம் மக்கள் நலத் திட்டங்களை நிறுத்துவதாக சொல்லிவருவதற்கான விமரிசனமாக தெரியலாம். அனால், அதில் ஏன் வெளிநாட்டைச் சேர்ந்த போகோஹராம் பெண்கள்? அப்பெண்களின் கவலையெல்லாம் தீவிரவாதிகளிடம் தாம் பாலியல் அடிமைகளாக இருப்பதில் இல்லை – காசு தான் அவர்களது குறிக்கோள் என்று அவதூறு செய்வது உண்மை நோக்கம்.

Surrogacy என்ற வாடகைத் தாய் முறையைக் கேலி செய்வது போன்ற இந்த கேலிச் சித்திரத்தில், நிர்வாணமான கருப்பின பெண்ணை இழுத்து வருபவர்கள் இரண்டு ஐரோப்பிய ஓரினச் சேர்க்கையாளர்கள்.

வாடகைத் தாய் முறைமேல் விளக்கம் தேவையில்லை.

கருத்துச்சுதந்திரம் என்கிற வஸ்து அந்தரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் தொங்கும் மந்திர மாங்காய் இல்லை. அது வாழும் உரிமையோடு பிரிக்க முடியாதபடிக்கு இணைந்தது. சார்லி ஹெப்டோவின் கருத்துரிமை என்பது ப்ரான்சில் வாழும் சிறுபான்மையினரான கருப்பர்கள் மற்றும் இசுலாமியர்களின் வாழும் உரிமையை கருத்தியல் ரீதியில் பாதிக்கக் கூடியது. அல்லது சிறுபான்மை மக்களை வெறுக்கும் வெள்ளை நிறவெறியின் அதிகாரத்திற்கு மயிலிறகு ஆட்டுவது போன்றது. இந்துக்கள் அல்லாதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள் என்று சொல்வதும் கூட ஒரு ‘கருத்து’ தான். இதை வெளிப்படுத்துவதற்கு இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு இருக்கும் உரிமையை அறிவுள்ளவர்களால் ஆதரிக்க முடியுமா? இலக்கியத் தவளைகளை விடுங்கள், கிணற்றுக்கு வெளியே வாழும் மனிதர்களாக சிந்தித்துப் பார்ப்போம்.

நம்மால் சார்லியாக இருக்க முடியுமா? பாலஸ்தீனியர்களை தினம் தினம் கொன்று குவிக்கும் இசுரேலின் அதிபர் தன்னைச் சார்லி என்கிறார். தனது சொந்த நாட்டில் பத்திரிகையாளர்களை ஒடுக்கும் உக்ரேனிய அதிபர் தன்னைச் சார்லி என்கிறார். அபூகிரைபின் சொந்தக்காரர்கள் தம்மைச் சார்லி என்றழைத்துக் கொள்கிறார்கள். நரோதா பாட்டியாவின் கசாப்புக்காரர்கள் தம்மை சார்லி என்றழைத்துக் கொள்கிறார்கள். தங்கள் சொந்த நாட்டு மக்களை ஷரியா சட்டங்கள் என்கிற மத்தியகால இருட்டுப் பெட்டிக்குள் பூட்டி வைத்துள்ள அரபு நாட்டுத் தலைவர்கள் தங்களைச் சார்லி என்கிறார்கள்.

ஒட்டுமொத்த மனிதகுல விரோதிகள் எல்லோரும் சார்லிகளாக இருக்கும் உலகில், நீங்களும் சார்லியாக இருக்க முடியுமா?

– தமிழரசன்.

தொடர்புடைய சுட்டிகள் :

  1. அன்புள்ள தமிழரசன் & வினவு,

    //ஒட்டுமொத்த மனிதகுல விரோதிகள் எல்லோரும் சார்லிகளாக இருக்கும் உலகில், நீங்களும் சார்லியாக இருக்க முடியுமா?//

    அந்த படுகொலைகளை கண்டனம் செய்து அரச முறையில் அரங்கேற்றப்பட்ட அந்த அணிவகுப்பைப்பற்றி பேசுகிறீர்கள். அந்த தலைகளில் பலருக்கு, கிட்டத்தட்ட எல்லோருக்குமே, நான் சார்லி என்று கூற முடியாதுதான். அதற்காக நாமும் கூறமுடியாமல் எப்படி இருக்க முடியும். தவறு. நான் சார்லி தான்.

    இந்த பதிவில் ஜெமோ பற்றிய குறிப்புகள் தேவையற்றது.

    //தேவதூதராக கருதும் ஒருவரின் நிர்வாணப் படங்களை வரைவது கருத்துச் சுதந்திரத்தில் சேர்த்தியா?//

    கண்டிப்பாக இது தான் கருத்துச் சுதந்திரம். தூதன் என்று கூறிக்கொண்டவர்கள் பொய்யர்கள் தான் என்பதை எப்படி சொல்வது. இந்தியாவின் சில கற்பனைகளை ஏமாற்று வேலைகளை நாம் எப்படி அனுகுகிறோம்?

    //ஆபாசமாக படம் வரைந்து பேசுவது உண்மையில் இசுலாமிய மதவெறிக்குத்தான் வலு சேர்க்கும்//

    அதையும் தான் பார்க்கலாம். ஒரளவுக்கு இது சரியென்றாலும் அப்படியே பயந்து விட்டு விடமுடியாது. எதையும் செய்ய முடியாமல் போய்விடும்.

    //ஆதிக்க சாதி ஒன்று பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் பத்து அருந்ததியினர் குடும்பங்கள் //
    //சமூக ரீதியிலான ஒதுக்குதலை சந்தித்து மனதளவில் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு தரப்பு //
    //எதிர்த்துப் பேசும் திராணியற்றவர்களை நோக்கி எறியப்பட்ட அமிலக் குண்டுகள்.//

    மிக மிக தவறான உதாரணங்கள். _______________

    • ஒரு மனிதரை பொய்யர் என நிருபிக்க பல வழிகள் இருக்கு.. அவருடைய கருத்துகளை ஆராய்ந்து அதை தவறு என்று நிரூபிக்கலாம். ஒரு சமுதாயத்தை வெறியை உண்டாக்கி அதை நிருபிக்க அவசியமில்லை.

      • Best Ali,

        பெரிய பின்னூட்டங்களுக்கு பதில் கூறம்போது உங்களை மறந்து விட்டேன்.

        பொய்யர்கள் என்பதை பலவழிகளிலும் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒரு வழிதான் கேலிச்சித்திரங்கள். மற்ற வழிகளை விட இது அதிக வலுமிக்கதும் கூட.

  2. மனைவியிடம் நபியை கார்டூன் மூலம் இழிவு செய்தது சரியா ? என்று கேட்டேன் .தவறு தான் என்றார் . அதற்கு எதிர்வினையாக வரைந்தவர்களை சுட்டுகொன்றது சரியா ? என்று கேட்டேன் . அது மிக பெரிய தவறு என்றானர் .தராசின் ஒரு தட்டில் கார்டூனையும் ,மறு தட்டில் சுட்டுகொன்ற நிகழவையும் வைத்தது பாருங்கள் என்றார் . அதனையே இக் கட்டுரை எழுதியவருக்கும் என் கருத்தாகவே சமர்பணம் செய்கின்றேன்.

  3. ஜெயமோகன் ,உக்ரைன் அதிபர் ,தலித் மக்கள் மீதான தவறான வார்த்தைகள் , சிறுதெய்வங்கள் மீதான ஒப்புமைகள் இவற்றை எல்லாம் தாண்டி பிரச்ச்ச்னையின் சாரத்தை நேரடியாக அணுகி அதற்கு தன் கருத்தை வைக்க வினவுக்கு தெரியாதா ? நியோ நாசிசம் என்பது பிரான்ஸ் உட்பட பல நாடுகளிலும் ஐரோப்பா முழுவதும் பரவும் விசகிருமி தான் . அதனுடன் சார்லியின் கருத்தாகத்தை ,கார்டூனை ஒப்பிடுவது என்பது சரியானதே . நபியை கார்டூன் மூலம் இழிவு செய்தது எப்படி தவறானதோ அது போன்றே கார்டூன் வரைந்தவர்களையும் சுட்டு கொள்வது தவறானதே . அதற்க்கு எதிரான பிரான்சு மக்களின் பாரிஸ் ஆர்பாட்டம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு . கருத்தை கருத்தாலும் ,கார்டூனை கார்டூனாலும் வெல்லவேண்டிய தருணம் இது .

    • நபியை நிர்வாணமாக வரைந்த ஒரு கார்டூன் இந்திய சட்ட ,பண்பாடு ,கலாச்சார விழுமியங்கள் படி பார்த்தால் அவரை இழிவு செய்கின்றது, எனவே தவறானது . ஆனால் பிரான்சு இன கலாசாரத்தில் அது,அந்த கார்டுன் தவறு இல்லை. மதமும் அதன் அதிகாரமும் ,ஆளுமையும் ஒரு நாட்டின் [பிரான்சு இனத்தின் ] ஆளுமைக்கும் ,அதிகாரத்துக்கும் உட்பட்டு வரும்போது ,எந்த மதமும் அதிகாரத்தில் உள்ள இனத்திடம் தன் உரிமைகளை விட்டு கொடுத்து தான் செல்ல வேண்டும். ஒரு ஹிந்து பெண்ணுக்கு பிரான்சில் காது வளையல் அணியக்கூடாது என்று தடை இருக்கும் போது அதனை அவர் அனுசரித்து அந்த சட்டத்தை மதித்து தான் செல்லவேண்டும். பிரான்சு மத சார்பற்ற நாடு ,தனி மனித கருத்துரிமைகளை உரிமைகளை அதிகபச்சம் மதிக்கும் நாடு , தன் காலனியத்தில் வாழ்ந்த மக்களை [இன சிறுபான்மை மக்களை தமிழ் ,அல்ஜீரியா ] ]வரவேற்று ஆதரிக்கும் நாடு என்பதால் இந்த கார்டுனுக்கு எல்லாம் எதிராக வினவு கட்டுரை எழுதி ஜல்லி அடிக்க கூடாது ,சலம்பகூடாது . பிரான்சு ஒன்றும் வினவு மறைமுகமாக ஆதரிக்கும் போலியான கம்யுனிச சீனா அல்ல, கருத்துரிமைகளை,கார்டூன் வரையும் உரிமைகளை கொன்று ஒழிப்பதற்க்கு !

      //நபியை கார்டூன் மூலம் இழிவு செய்தது எப்படி தவறானதோ//

      • \\ நபியை நிர்வாணமாக வரைந்த ஒரு கார்டூன் இந்திய சட்ட ,பண்பாடு ,கலாச்சார விழுமியங்கள் படி பார்த்தால் அவரை இழிவு செய்கின்றது, எனவே தவறானது . ஆனால் பிரான்சு இன கலாசாரத்தில் அது,அந்த கார்டுன் தவறு இல்லை.\\

        இபிகோவின் அடிப்படையிலேயோ ஒரு நாட்டின் கலாச்சார அடிப்படையிலேயோ தான் கார்ட்டூன் கட்டுரையில் விமர்சிக்கப்படுகிறதா? உங்களது வாதப்படியே வந்தாலும் கூட பிரான்சு இன கலாச்சாரம், கருப்பின பெண்களை அம்மணமாக காட்டுவதை அனுமதிக்கிறதா? இனவாதத்திற்கு அங்கு கடுமையான தண்டனைகள் என்றெல்லாம் பேசுகிறார்களே! எங்கே போயிற்று சட்டவாதம்? எந்த வண்டு முருகனையும் இங்கு காணவில்லையே!

        \\ மதமும் அதன் அதிகாரமும் ,ஆளுமையும் ஒரு நாட்டின் [பிரான்சு இனத்தின் ] ஆளுமைக்கும் ,அதிகாரத்துக்கும் உட்பட்டு வரும்போது ,எந்த மதமும் அதிகாரத்தில் உள்ள இனத்திடம் தன் உரிமைகளை விட்டு கொடுத்து தான் செல்ல வேண்டும்.\\

        இது அப்பட்டமான பாசிசமாகும். ஆர் எஸ் எஸ் கூட்டமும் கோல்வால்கரும் ஹிட்லரும் முசோசலினியும் இதைத்தான் சொல்கிறார்கள். ஆகையால் இதன் வீரியத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்யவும். அதற்குத் தங்களின் எடுத்துக்காட்டையே பரிசீலிப்போம்.

        \\ ஒரு ஹிந்து பெண்ணுக்கு பிரான்சில் காது வளையல் அணியக்கூடாது என்று தடை இருக்கும் போது அதனை அவர் அனுசரித்து அந்த சட்டத்தை மதித்து தான் செல்லவேண்டும்.\\

        இந்த வாதமே தவறு. இதன்படி பார்த்தால் சவூதியில் பெண்கள் அடிமைப்பட்டு இருப்பது தான் சரி என்கிறது உங்களது கருத்து. ஜன நாயகவாதிகளும் சிவில் அமைப்புகளும் கம்யுனிஸ்டுகளும் இத்தகைய நாடுகளில் எதேச்சதிகாரத்திற்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டங்களை தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று ஆர் எஸ் எஸ் பிரச்சாரம் செய்வதை இந்து இசுலாமிய கிறித்தவ பெண்கள் எதிர்க்கின்றனரோ அதுபோன்று இசுலாமிய நாடுகளில் இசுலாமியர்கள் நடத்துகிற போராட்டங்களும் கணிசமானவை. ஆப்கனில் பெண்கல்விக்காக தாலிபானியத்திற்கு எதிராக போராடுகிற எண்ணிறந்த இசுலாமியர்களையும் கம்யுனிஸ்டுகளையும் அவர்களின் இப்பொழுதைய போராட்டங்களையும் இங்கு நினைவு கூர்கிறேன். இதைத் தாங்கள் பரிசீலிக்கிற பொழுது முசுலீம் என்றாலே மதவெறியர்கள் என்று சொல்கிற நச்சுப்பிரச்சார அயோக்கியர்களின் உண்மை முகத்தைக்கண்டு கொள்ள முடியும். இதில் கணிசமாக மதவெறியர்களை தாங்கள் அம்பலப்படுத்தியதாக நினைவு. இங்கோ மனநிலை பிறழ்ந்தவரைப் போன்று எழுதிவைத்திருக்கிறீர்கள்.

        \\ பிரான்சு மத சார்பற்ற நாடு ,தனி மனித கருத்துரிமைகளை உரிமைகளை அதிகபச்சம் மதிக்கும் நாடு , தன் காலனியத்தில் வாழ்ந்த மக்களை [இன சிறுபான்மை மக்களை தமிழ் ,அல்ஜீரியா ] ]வரவேற்று ஆதரிக்கும் நாடு என்பதால் இந்த கார்டுனுக்கு எல்லாம் எதிராக வினவு கட்டுரை எழுதி ஜல்லி அடிக்க கூடாது ,சலம்பகூடாது\\

        இந்தக் கருத்து முழுக்கவும் முட்டாள் தனமானது. பிரான்சு நாட்டு சேரிகளைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் பேசுகிற பேச்சு இது. இது ஒருபுறம் இருக்கட்டும். அல்ஜீரியா பிரான்சால் ஒட்டச் சுரண்டப்பட்ட நாடு! இதில் தன் காலனியத்தில் வாழ்ந்த மக்களை வரவேற்று ஆதரிக்கும் நாடு என்று சொல்வதன் அசிங்கத்தை சீரணிக்க இயலாது. அல்ஜீரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு அளித்த கடின உழைப்பையும் அதன் சுரண்டலையும் மறைக்கிறது தங்களின் கருத்து. பிரான்சு நாட்டு மேட்டுக்குடி தமிழர்களின் நிலைப்பாடு பற்றி அதிகமான கட்டுரைகளை கலையரசன் எழுதியிருக்கிறார். ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.

        \\ பிரான்சு ஒன்றும் வினவு மறைமுகமாக ஆதரிக்கும் போலியான கம்யுனிச சீனா அல்ல, கருத்துரிமைகளை,கார்டூன் வரையும் உரிமைகளை கொன்று ஒழிப்பதற்க்கு !\\

        பதில் சொல்கிற அளவிற்கு இந்தக் கருத்து தராதரமற்ற ஒன்று. இருப்பினும் இதில் இன்னொரு பூனைக்குட்டியும் வெளிவரவேண்டியிருக்கிறது. எப்படி மாதொருபாகனின் பொன்னாவைப் பார்த்து சமயம் கிடைக்கையில் என்ன இருந்தாலும் நீ வறடிதானே என்று சொல்கிற ஆதிக்கசாதிகள் திமிர்த்தனத்தைப் போன்றது நடுத்தரவர்க்கத்தின் இந்த மேட்டிமைவாதம் என்பது எமது துணிபு.

        மறைமுகமாக சீனாவை ஆதரிக்கிறது என்று சொல்பவர்களின் இரட்டை நாக்குகள் மாதொருபாகனில் பனை ஏறும் சாணார் வீட்டுப் பெண்ணை பார்த்து கவுண்டரை வச்சிருக்கும் தேவடியா என்று ஆதிக்க சாதிகள் நாக்கு மேல் பல்லைப் போட்டு பேசுவதைப்போன்று இருக்கிறது உங்களது வாதம். எதற்காக நாவலை சுட்டிக்காட்டினேன் என்றால் அங்கு தங்களின் விமர்சனம் ஆதிக்கசாதியை கிழித்தெறிந்தது. ஆனால் இங்கோ அதே உத்தியை கடைபிடிக்கிறது. சார்லி ஹெப்டோ செய்வதும் இதைத்தான்.

        • மக்களின் உரிமைகளை மதிக்கும் ,தனி மனித சுதந்தரத்தை ஆராதனை செய்யும் , கவிதை எழுதுவதை ,கார்டூன் வரைவதை வரவேற்கும் ,தன் இனத்தின் பெருமை பேசாதவர்கள் வாழும் ,இனவாதத்தை தவறாக உணர்ந்தவர்கள் வாழும் , மதமும் அதன் அதிகாரமும் ,ஆளுமையும் ஒரு நாட்டின் ஆளுமைக்கும் ,அதிகாரத்துக்கும் உட்பட்டு வரும்போது ,எந்த மதமும் அதிகாரத்தில் உள்ள இனத்திடம் தன் உரிமைகளை விட்டு கொடுத்து தான் செல்ல வேண்டும் என்ற பாசிசம் பேசாதவர்கள் தலைமை வகிக்கும் ,மனிதர்களின் உடை ,அலங்காரங்களில் தலையிடாத ஆட்சி நடக்கும் நாடு உலகிலேயே சீனா மட்டும் தான் என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் .

          • தங்களின் சீனாவைப் பற்றிய புரிதலை வரவேற்கிறேன். ஆனால் தாங்கள் வைத்த அவதூறுக்கு பதில் என்ன? மறைமுகமாக சீனாவை வினவு ஆதரிக்கிறது என்று சொல்லியிருந்தீர்களே அதற்கு பதில் என்ன? எந்த விளக்குப் பிடித்துப் பார்த்தீர்கள்? சார்லி ஹெப்டோவின் தன்மையும் உங்கள் ரகசிய கண்டுபிடிப்பைப் போல்தான் நயமாகவும் நேர்மையாகவும் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை பதிவு செய்கிறேன்.

            • என்னுடைய பின்னுட்டம் 3.1.1.1 கிண்டல் ,நையாண்டி என்பது கூட தென்றலுக்கு புரியவில்லை

              • சீனாவைப் பற்றிய உங்களது கருத்துக்கான எனது மறுமொழியும் கிண்டலாகத்தான் எழுதப்பட்டது. உங்களது 21 பின்னூட்டத்திற்கான மறுமொழியை படித்துப் பார்த்து அரசு ஒரு ஒடுக்கும் கருவியாக எப்படி இருக்கிறது என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். மற்றபடி அவதூறுக்கு பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள்.

      • தமிழ்,

        1. இந்த விவாதத்தில் சீனாவைப்பற்றியும் அதன் கருத்துச் சுதந்திரத்தைப்பற்றியும் இழுப்பதற்கு என்ன தேவை என்று புரியவில்லை. இந்த கிளை விவாதம் ஏற்கனவே மிகவும் நீண்டுவிட்டது. அதனால் சுருக்கமாக கூறினால் நலம்.

        2. இந்திய பெண்களின் காதனிகள் மத அடையாளங்களல்ல.

        • Univerbuddy, ஆம் இந்திய பெண்களின் அடையாளம் அல்ல காது வளையல் . அது ஹிந்து பெண்களின் மத அடையாளம் . எனவே தான் அனைத்து விதமான அனைத்து மதங்களின் மத அடையாளங்களை பள்ளிகளில் தவிர்க்க தான் பிரான்சு அரசு அந்த சட்டத்தை இயற்றி உள்ளது . மேலும் வேறு சில பழங்குடி மக்களும் அதனை அணிகின்றனர் என்பது உண்மையே . அது மத அடையாளம் அல்ல என்ற விவாதம் தேவையற்றது. ஏன் என்றால் பஞ்சாப் மக்கள் அணியும் டர்பன் மத அடையாளமா அல்லது அவர்களின் பண்பாட்டு அடையாளமா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்து ,காதணி பற்றிய விவாதத்தை மிகவும் நீண்டதாகலாம். ஆனால் ஒன்றை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். பிரச்சனை காதுவளையல் மட்டும் அல்ல .அனைத்து மத குறியீடுகளும் தான் .இந்தகைய ,பிரான்சு நிறைவேற்றியது போன்ற பொது சிவில் சட்டத்தை ஹிந்துத்துவாக்கள் தாங்கள் கோரும் இந்திய பொது சிவில் சட்டத்தில் கொண்டுவர முடியுமா ?

          சீனாவை பற்றிய விவாதத்தை பொருத்த வரை சற்று பொறுமையாக இருங்கள். முடிந்தால் பார்வையாளராக இருங்கள் . தரவுகள் இன்றி எதனையும் நான் கூறவில்லை .., கேள்வி எழுப்பவில்லை . பொறுமையாக இருங்கள்.

          • தமிழ்,

            காதனி உலகம் முழுக்க உள்ள பெண்களில் பலர் அணிவதுதான். எனவே இதற்கு மத அடையாளம் கொடுக்க முடியாது தேவையுமில்லை. சீக்கியர்களின் தலைப்பாகை மத அடையாளம் என்பதை அவர்களே ஒத்துக் கொள்வார்கள்.

    • \\ அதற்க்கு எதிரான பிரான்சு மக்களின் பாரிஸ் ஆர்பாட்டம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு .\\

      அர்னாப் கோஸ்வாமியைப் போன்று பேசுகிறீர்கள் தமிழ் அவர்களே. நிருபயா வண்புணர்வு செய்து கொல்லப்பட்ட போது நடுத்தரவர்க்க குளுவான்களின் மெழுகுவர்த்திப் போராட்டத்தையும் இப்படித்தான் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு என்றார்கள். ஆனால் இப்படியொரு எழுச்சி தலித் சகோதரிகள் வண்புணர்வு செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டபொழுது எந்த ஒரு ஆன்மாவையும் அது கிஞ்சித்தும் அசைத்துக் கூட பார்க்கவில்லையே ஏன்? ஆளும் வர்க்க ஊடகங்களின் செய்திகளைப் பார்த்து லேஸ் சிப்ஸ் கடித்துக்கொண்டு கருத்துரிமை பேசுகிற வர்க்கங்களின் நிலைப்பாட்டையே உங்களது கருத்தும் அச்சு அசலாக பிரதிபலிக்கிறது.

      முதன்மையாக தாங்கள் கட்டுரையை வாசிக்கவேயில்லை என்று கருதுகிறேன்.

      1. நாங்கள் சார்லி அல்ல என்று சொல்வதற்கு முன்வைக்கப்படும் காரணங்களையும் அரசியலையும் இக்கட்டுரை விரிவாகவே முகத்தில் அடித்தாற்போலவே சொல்கிறது.

      2. அதுதவிர நான் சார்லி என்று சொல்கிற கூட்டத்தின் மதவெறிப் பாசிசத்தையும் சிறப்பாக அம்பலப்படுத்துகிறது.

      3. இந்த இரு நிலைப்பாடுகளில் கருத்துரிமை எது? கார்ட்டூன் எது? நிலைப்பாடுகள் என்ன என்பதையும் இக்கட்டுரை பேசுகிறது.

      இதில் தாங்கள் சொல்லவருகிற கருத்து என்ன என்பதை இதன் அடியொற்றி விளக்குங்கள். தாங்கள் எழுதிய மற்ற மறுமொழிகள் வெறும் அவதூறுகளாக இருக்கின்றன. எப்படியென்று விவாதிக்கிற பொழுது எழுதுகிறேன்.

      • வினவு அலுவலக்த்தில் ஒரு இனிய ஞாயிற்று கிழமை மதியம் மதவாதிகள் குழுமி தோழர் பாண்டியனிடம் அராஜகமாக எழுப்பிய கேள்விகளும் அவற்றை பதிவு செய்த முறையும் , பாரிஸ் சார்லி அலுவலகத்தில் பாய்ந்த 50 மதவாதிய துப்பாக்கி தோட்டாக்களும் வேறு வேறானவை கிடையாது என்பதை வினவில் இந்த கட்டுரை எழுதிய தமிழரசன் உணரவேண்டும். சார்லி கார்ட்டூன் எழுப்பும் கேள்விகளை விட வினவின் மதவாதிகளுக்கு எதிரான கேள்விகள் மிகவும் அறிவு பூர்வமானவை என்பதையும் அவர் உணரவேண்டும்

  4. [After viewing all the cartoons i write this ] நபி அவர்கள் நம்மை போன்ற ஒரு மனிதர் தான். விமர்சனத்துக்கோ , கேள்விகளுக்கோ, கார்டூனுக்கோ அப்பாற்பட்டவர் அல்ல. அவர் தன்னை தானே இறைவனின் தூதுவராக பிரகடனப்படுத்திக்கொண்டவர். அவர் ஒன்றும் இறைவன் அல்ல ! மீண்டும் சொல்கிறேன் அவர் நம்மை போன்ற இப்புவியில் பிறந்த சக மனிதர் தான். வினவு கோருகின்றது என்பதற்காகவோ ,கடுங்கோட்பாளர்கள் சுட்டுகொல்கின்றார்கள் என்பதற்கோ பயந்து எல்லாம் நாம் கார்டூன் வரையும் சுதந்திரத்தை விட்டு கொடுக்க முடியாது. நபியை 5கார்டூன் வரைந்து சார்லி எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவே.

    “Muhammad overwhelmed by fundamentalists”
    “100 lashes if you don’t die of laughter!”
    “Charlie Hebdo must be veiled!”
    In a more recent issue, the magazine published a cartoon depicting a member of the Islamic State group beheading Muhammad.

    சார்லி கார்டூன்காரர்கள் கிருஸ்துவ ,யூத ,இஸ்லாமிய மத கொள்கைகளை அவற்றின் அட்டுழியங்களை கார்டூன் மூலம் கேள்வி எழுப்பும் நிலையில் கம்யுனிஸ்ட் வினவுக்கு என்ன பிரச்சனை ?

    கார்டூன் எழுப்பும் கருத்துக்கள் தவறு என்றால் விவாதிக்கலாம் ,சார்லியை மக்களிடம் அம்பலபடுத்தலாம்

    ஹிந்து மத பார்பன பாரிசத்தை பற்றியும் கார்டூன் வரையப்ட்டு இருப்பின் எமக்கு மிக்க மகிழ்வாக இருந்து இருக்கும்

    • நபி நபி என்று சொல்கிறீர்களே தவிர, பாசிச ஜெயலலிதாவையும் சார்லி ஹெப்டோ வரைவதைப் போல வரைய இயலாது என்று கட்டுரை முன்வைக்கிற வாதங்களை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

      என் பார்வையில் வினவு மட்டுறுத்திய ஜெயலலலிதாவின் படம் கலையரசனின் பதிவில் வந்திருக்கிறது. அதில் இலங்கைப் பத்திரிக்கையாளர்கள் ஜெயலலிதாவின் பாவாடையை தூக்கிப் பார்ப்பது போல் இருக்கிறது. இதன் தராதரத்திற்கு கீழேயாயன சார்லி ஹெப்டோவின் கார்டூன்களை எதன் அடிப்படையில் கருத்துச் சுதந்திரம் என்று சொல்கிறீர்கள் என்று விளக்குவீர்களா?

      இந்த இலட்சணத்தில் படம் அம்மணமாக இருப்பது பிரான்சின் கலாச்சாரம் என்று ஒருவாதம் வைக்கிறீர்கள். அப்படியானால் கருப்பினப் பெண்ணை அம்மணமாக நாயைப்போன்று மாற்றுப்பாலியாளர்கள் இழுத்துச் செல்வது பிரான்சின் கருத்துரிமையில் வருகிறதா?

      யூத வெறுப்பை கக்கும் பொருட்டு அங்கு கார்ட்டூன் வரைந்துவிட முடியாது என்பதற்கு தனிச்சட்டமே இருக்கிற பொழுது கறுப்பு இனத்தவர்களின் மீதான இனவெறியும் சிறுபான்மையினர்களின் மீதான மதவெறியும் எப்படி கருத்துரிமையின் கீழ் வருகிறது என்று விளக்குவீர்களா?

      • பண்பாட்டு ,கலாச்சார நிலைகளை கருத்தில் கொண்டால் இந்தியாவில் எவரையுமே நிர்வாணமாக வரையமுடியாது . அதே சமயம் பிரான்சு நாட்டில் நிர்வாணம் என்பதை அவர்களின் கலாசாரம் தவறாக கருதாத நிலையில் அவர்கள் நிர்வாணமாக வரையும் போது தென்றல் என்ன அவரின் கட்சி கூட கேள்வி எழுப்ப முடியாது .

        //நபி நபி என்று சொல்கிறீர்களே தவிர, பாசிச ஜெயலலிதாவையும் சார்லி ஹெப்டோ வரைவதைப் போல வரைய இயலாது என்று கட்டுரை முன்வைக்கிற வாதங்களை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?//

        வினவில் கருப்பர் இன மக்களை பற்றிய சார்லியின் கார்டூன்கள் காட்சி படுத்த பட்டு உள்ளன . ஆனால் நபியை பற்றிய கார்டூன்கள் காட்சி படுத்த படாததன் காரணம் என்ன ? நபியின் கார்ட்டூன் இஸ்லாமிய மக்களை வேதனையாக்கும் என்றால் கருப்பர் இன மக்களை பற்றிய சார்லியின் கார்டூன்கள் கருப்பர் இன மக்களை வேதனை படுத்தாதா ?

        //யூத வெறுப்பை கக்கும் பொருட்டு அங்கு கார்ட்டூன் வரைந்துவிட முடியாது என்பதற்கு தனிச்சட்டமே இருக்கிற பொழுது கறுப்பு இனத்தவர்களின் மீதான இனவெறியும் சிறுபான்மையினர்களின் மீதான மதவெறியும் எப்படி கருத்துரிமையின் கீழ் வருகிறது என்று விளக்குவீர்களா?//

        • \\ வினவில் கருப்பர் இன மக்களை பற்றிய சார்லியின் கார்டூன்கள் காட்சி படுத்த பட்டு உள்ளன . ஆனால் நபியை பற்றிய கார்டூன்கள் காட்சி படுத்த படாததன் காரணம் என்ன ? நபியின் கார்ட்டூன் இஸ்லாமிய மக்களை வேதனையாக்கும் என்றால் கருப்பர் இன மக்களை பற்றிய சார்லியின் கார்டூன்கள் கருப்பர் இன மக்களை வேதனை படுத்தாதா ?\\

          வினவின் பதிவில் கருப்பின பெண்களின் கார்ட்டூன் மட்டுமல்ல போகோ ஹராம் தீவிரவாதிகளால் சிதைக்கப்பட்ட கருப்பின இசுலாமிய பெண்களை இழிவுபடுத்துகிற கார்ட்டூனும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் இசுலாமியர் மக்கள் என்றில்லை எல்லா தரப்பு மக்களையும் வேதனைக்குள்ளாக்காதா?

          மேலும் உங்களது நபி கார்ட்டூன் பற்றிய கேள்வியின் நைச்சியத்தை ஜெயாவிற்குப் பொருத்தினால் ஜெயலலிதாவின் கார்ட்டூனை வினவு மட்டுறுத்தியதற்கும் இது அதிமுக காரர்களை வேதனைக்குள்ளாக்குகிற காரணி ஆகவே வினவு அதிமுகவிற்கு சார்பாக இருக்கிறது என்று கருதுவீர்களா? ஆக எந்த நியாய உணர்ச்சியும் அற்ற வெறும் வெற்று அவதூறுகளுடன் விசயத்தை திரிக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது இல்லையா?

      • நியோ நாசிசம் என்பது பிரான்ஸ் உட்பட பல நாடுகளிலும் ஐரோப்பா முழுவதும் பரவும் விசகிருமி தான் . அதனுடன் சார்லியின் கருத்தாகத்தை ,கார்டூனை ஒப்பிடுவது என்பது சரியானதே [My feedback 3]

        //யூத வெறுப்பை கக்கும் பொருட்டு அங்கு கார்ட்டூன் வரைந்துவிட முடியாது என்பதற்கு தனிச்சட்டமே இருக்கிற பொழுது கறுப்பு இனத்தவர்களின் மீதான இனவெறியும் சிறுபான்மையினர்களின் மீதான மதவெறியும் எப்படி கருத்துரிமையின் கீழ் வருகிறது என்று விளக்குவீர்களா?//

      • இந்தக் கருத்தைப் பார்த்ததும் “blind men and an elephant”, அதாவது பழந்தமிழர்களின் ‘ஆனைகண்டவாதம் (Anekantavada)’ தான் எனது நினைவுக்கு வந்தது. சார்லி ஹெப்டோ குழுமத்தினர் இனவாதிகளோ, மதவெறி பிடித்தவர்களோ அல்ல. அவர்களை ஒருவகையில் ம.க.இ.க வினருடன் கூட ஒப்பிடலாம். வேறுபாடு என்னவென்றால் இவர்களுக்கு முஸ்லீம்கள் என்றால் *புழுத்த பயம் ஆனால் சார்லி ஹெப்டோவினர்களுக்கு முஸ்லீம்களுக்குக் கொஞ்சமும் பயமில்லை. ( *ஈழத்தமிழில் புழுத்த என்றால் மிகவும் அல்லது அதிகம்).

        சார்லி ஹெப்டோ ஒரு அரசியல், சமூக, Satirical Magazine என்பதை மறக்காமல் இந்தக் கேலிச்சித்திரங்களைப் பார்த்தால் அவர்கள் அதன் மூலம் சொல்லவருவது என்னவென்று புரிந்து கொள்ளலாம். உண்மையில் இந்தக் கேலிச்சித்திரத்தின் கருத்து கறுப்பினப் பெண்ணை நாயைப் போன்று அழைத்து வந்து சிறுமைப்படுத்துவதல்ல.

        மேலை நாடுகளில் பெரும்பான்மை ஓரினச் சேர்க்கையாளர்கள் படித்தவர்கள் மட்டுமன்றி, பொருளாதார வசதி கொண்டவர்கள், முற்போக்கு சிந்தனையும், இனவாதம், மதவெறியற்றவர்கள் என்ற என்ற கருத்துமுண்டு. அவர்களும் பாலியல் சிறுபான்மையினராக இருப்பதால், சிறுபான்மை இனங்களின் உரிமைகள், மனிதவுரிமை என்பன பற்றியெல்லாம் பீற்றிக் கொள்வதுடன், சிறுபான்மை மக்களின் போராட்டங்களிலும் கலந்து கொள்வதுண்டு. பல மேலைநாடுகளில் அரசியலிலும் LGBT (Lesbian, Gay, Bisexual, Transgender) Lobby மிகவும் பலம் வாய்ந்தது, Liberal அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பெருமளவு நிதியுதவி செய்கிறவர்களும் அவர்கள் தான் (கிளின்ரன், ஒபாமா, ஹில்லரி மட்டுமன்றி பிரான்சின் அரசியல்வாதிகள் பலர் அவர்களின் ஆதரவாளர்கள்). அந்த lobby இன் மூலம், கத்தோலிக்கத் திருச்சபையின் எதிர்ப்பையும் மீறி, அநேகமான எல்லா ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் ஓரினச்சேர்க்கைத் திருமணத்தை சட்ட பூர்வமாக்கியதுடன், குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமையையும் பெற்றுக் கொண்டனர். அவர்களை நக்கலடிப்பது தான் இந்த கார்ட்டூனின் நோக்கமே தவிர கறுப்பினப் பெண்ணை அவமதிப்பதல்ல.

        முன்பு தமக்கு Heterosexuals போன்றே சமவுரிமை வேண்டுமென்று போராட்டங்கள் நடத்தும் போது சிறுபான்மை, மனிதாபிமானம், முற்போக்கு என்றெல்லாம் பேசிய ஓரினச்சேர்க்கையாளர்கள் இன்று, குழந்தையை தத்தெடுக்கும் உரிமையும், வாடகைத்தாய் (Surrogacy) முறையும் சட்டபூர்வமாக்கப்பட்டு, அவர்களுக்கும் உரிமை வழங்கப்பட்டதுன், அவர்கள் தாமும் ஒரு (பாலியல்) சிறுபான்மையினரென, எந்தச் சிறுபான்மை மக்களுடன் கூட்டுச் சேர்ந்து மனிதவுரிமையைப் பற்றிப் பேசினார்களோ, அந்தச் சிறுபான்மை மக்களை, அவர்களின் தேவைக்காகச் சுரண்டுகிறார்கள். தமது பணத்திமிரைக் காட்டி சிறுமைப் படுத்துகிறார்கள். அவர்களைத் தமது அடிமை போலவே நடத்துகிறார்கள் என்பது தான் இதன் கருத்து. இதில் இன்னொரு இரட்டைக் கருத்து என்னவென்றால், இப்படி வாடகைத்தாய் முறைக்கு, குறைந்த செலவில் சிறுபான்மையின மக்களைப் பயன்படுத்துவது ஓரினச் சேர்க்கையாளர்களின் Sadomasochistic இயல்பையும் காட்டுகிறது, அவர்கள் அதில் இன்பம் காண்கிறார்கள் என்று பிரான்சின், பலம்வாய்ந்த ஓரினனச் சேர்க்கை Lobby ஐச் சார்லிஹெப்டோ கேலி செய்கிறதே தவிர, அந்தக் கறுப்பினப் பெண்ணை சிறுமைப் படுத்துவதல்ல அவர்களின் நோக்கம். என்னை நம்பாது விட்டால், எந்தப் பிரஞ்சுக்காரரிடமாவது கேட்டுப் பாருங்கள். 🙂

        ///அப்படியானால் கருப்பினப் பெண்ணை அம்மணமாக நாயைப்போன்று மாற்றுப்பாலியாளர்கள் இழுத்துச் செல்வது பிரான்சின் கருத்துரிமையில் வருகிறதா?///

        • வியாசனை பொறுத்தவரை கறுப்பின சிறுபான்மையின பெண்ணை, சார்லி ஹெப்டோ இழிவுபடுத்தவில்லையாம். பிரான்சில் சிறுபான்மையினர் அல்ஜீரிய முஸ்லீம்கள் என்று நினைத்துக்கொண்டு ஜாலியாக ரசிக்கிறார் போலும். இதே கறுப்பின பெண் பிரான்ஸ் நாட்டு தமிழ்சிறுபான்மையினரின் அம்மாவாகவோ அம்மம்மாகவோ இருந்தால் இப்படித்தான் பேசுவாரோ என்னவோ? ஒருவேளை வியாசனுக்கு இது இழிவு இல்லாமல் இருக்கலாம்!!!!! ஆனால் பிரான்சில் மட்டுமில்ல உலகில் வாழும் எந்த மானமுள்ள தமிழுருக்கோ அல்ஜிரிய முசுலீமுக்கோ எந்த மக்களுக்கும் அப்படியில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

          • இதில் வேடிக்கை என்னவென்றால் அல்ஜீரிய பெண்கள் எப்படியிருப்பார்கள் என்று அண்ணன் தென்றலுக்குத் தெரியாது. சும்மா அளந்து விடுவது தான் வேலை. பெரும்பான்மையான அல்ஜீரியர்கள் மட்டுமல்ல, மொறோக்கோ, துனீசியா போன்ற வட ஆபிரிக்கர்கள் (North Africans), எல்லாம் அரபுக் கலப்புக் கொண்டவர்கள். அவர்கள் உயரமாக, தீர்க்கமான மூக்கைக் கொண்டவர்களாக வெள்ளை, அல்லது மாநிறமுடையவர்கள். இந்தக் கேலிச்சித்திரத்தில் சித்தரித்திருப்பது, Sub Saharan African woman, அதாவது ஒரு கருப்பர். ஆகவே இது ஒரு அல்ஜீரியப் பெண்ணின் படம் அல்ல. நான் கூறுவதெல்லாம், சார்லிஹெப்டோ இனவெறி, மதவெறியற்ற, முற்போக்கு, வலதுசாரிக் குழுவினர், அவர்களின் நோக்கம் ஒரு ஆபிரிக்கப் பெண்ணும் இழிவுபடுத்துவதல்ல என்பது தான்.

            • சார்லி ஹெப்டோவிற்கு வக்கலாத்து வாங்கப் போய் இப்பொழுது வியாசனுக்கு தன் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கவே நேரமில்லை! போதாது என்று சார்லி ஹெப்டோவிற்கே வகுப்பெடுக்கிறது வியசானின் வியாக்கியானம். அல்ஜர் பெண் என்று எந்த அறிவாளியும் சொல்ல மாட்டார் என்பதை சொல்கிற வியாசன் அந்தப் பெண் சப்-சகாரன்-ஆப்ரிக்க பெண்மணி, அரபுக் கலப்பு என்று இவரே சரோகசி பிசினஸ் செய்வதைப் போல இன்ச் பை இன்சாக துல்லியமாக வரையறுக்கிறார். முசுலீமுக்கு வந்தது தமிழர்களுக்கு வரவில்லை என்று வலிந்து விளக்கம் கொடுப்பதன் மூலமாக சார்லி ஹெப்டோ, பிரான்சு நாட்டு கருப்பின சிறுபான்மை தமிழச்சிகளை இழிவுபடுத்தவில்லை ஆனால் அது அரபுக் கலப்பு கொண்ட சப்-சகாரன் ஆப்ரிக்க பெண்மணியை தான் காட்டுகிறது என்கிறார். ஆகவே சார்லி ஹெப்டோ முற்போக்கு என்கிறார். இதைத்தான் தனக்கென்று வந்தால் உறுப்பும் களையெடுக்கும் என்பார்கள். இதை வெளியே வரவைத்ததில் வியாசனின் சேம் சைடு கோல் செம!

              இதுதவிர வியாசனுக்கு இருக்கும் இந்த நுணுக்கத்தின் தோற்றுவாய் அல்லது சார்லி ஹெப்டோவிற்கு இருக்கும் இந்த நுணுக்கத்தின் தோற்றுவாய் BMW ஆகும். அதாவது வெளிநாட்டில் செட்டிலாயிருக்கிற நண்டுவாசம் பட்டால் தீட்டாகிவிடும் என்று சொல்கிற ஆதிக்க சாதிவெறியர்களுக்கு B for Black, M for Muslim and W for White ஆகாதாம். இதுதான் வியாசனின் முகமூடி! ஆனால் வெள்ளையர்களுக்கு கால் கழுவுவது இங்கு வியாசனின் பின்னூட்டத்தைப் பார்த்தால் தெரியும். சார்லி ஹெப்டோவின் நிலைப்பாட்டை விளக்கித் தெரியவேண்டியது இல்லை. இவர் போன்ற பிழைப்புவாதிகளின் வாழ்க்கையை தோழர் கலையரசன் Ghettoக்கள் என்பார். நியோ நாசிசத்தின் பங்காளிகள் என்று கூட சொல்லலாம்.

            • வாசகர்களுக்கு,

              //வட ஆபிரிக்கர்கள் (North Africans), எல்லாம் அரபுக் கலப்புக் கொண்டவர்கள். அவர்கள் உயரமாக, தீர்க்கமான மூக்கைக் கொண்டவர்களாக வெள்ளை, அல்லது மாநிறமுடையவர்கள்.//

              வட ஆபிரிக்கர்கள் ஏன் வெள்ளை அல்லது மாநிறமுடையவர்கள் என்பதைப்பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இது அரபுக்கலப்பினால் அல்ல.

              முகமதியர்களால் வெல்லப்பட்ட வட ஆப்பிரிக்க பகுதி மக்கள் முகமதியர்களாகி தங்கள் பங்குக்கு அடிக்கடி ஐரோப்பாவை, குறிப்பாக அதன் கடற்கரை கிராமங்களை தாக்கி வெள்ளையின பெண்களை சிறை பிடித்து தங்கள் நாடுகளுக்கு கொண்டு வந்து அடிமைகளாக விற்றார்கள். இந்த பெண்கள் அரேபியா வரை கொண்டு வரப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.

              இந்த வெள்ளை பெண் அடிமைப்படுத்துதல் மொராக்கோ ஸ்பெயினைக் கைப்பற்றியதற்கு முன்பிருந்து பரான்ஸ் வட ஆப்பிரிக்காவை கைப்பற்றி இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை தொடர்ந்தது. அதாவது கிட்டத்தட்ட 800 ஆண்டுகள்.

              அதனால் தான் இன்று வட ஆபிரிக்கர்கள் மற்றும் அரேபியர்கள் வெள்ளை அல்லது மாநிறமுடையவர்களாக இருக்கின்றனர்.

          • வாசகர்களுக்கு,

            இனவெறியுடன் வரையப்பட்டிருந்தால் அது எந்த வண்ணத்தில் வரைந்திருந்தாலும் தவறுதான். ஆனால் இந்த சித்திரம் கறுப்பின பெண்களை இழிவு படுத்துவதற்காக போட்டவையில்லை என்றே நினைக்கிறேன்.

      • நபியை வரைந்தமைக்கு எதிர் வினையாக கார்ட்டூன் காரர்கள் கொல்ல பட்டு உள்ளார்கள் என்பதை அறிய தென்றலை தவிர வேறு யாரும் விளக்கு பிடித்து எல்லாம் அறிய வேண்டிய அவசியம் இல்லை

        • சனநாயக உணர்வுள்ள யாருக்கும் ஜிகாதிகள் கொன்றதை விளக்குப்பிடித்து பார்த்து தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது சரிதான் தமிழ். அலாவூதினின் அற்புத விளக்காக மதவெறியர்களை மத உணர்வுள்ள இறை நம்பிக்கையாளர்களே கண்டித்திருக்கிறார்கள். ஆனால் தாங்கள் மட்டும் எப்படி வினவு மறைமுகமாக சீனாவை ஆதரிக்கின்றது என்பதைக் கண்டுபிடித்தீர்கள் என்பதைச் சொல்லவேயில்லையே?

          • என்னா அறிவு தென்றலுக்கு ! பிரான்ஸ் நாட்டுல கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவா ,படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் கூடுவது என்பது வரவேற்க தக்கது என்று நான் கூறினால் அதை அர்னாப் கோஸ்வாமி ரேஞ்சுக்கு இருக்கு என்று புலம்புறாரு ! தென்றல் உங்களின் உளறல் பின்னுட்டத்துக்கு எல்லாம் வினவுல யாரும் அப்ரைசல் கொடுக்க மாட்டங்க என்பது தெரியுமா தெரியாதா ? அதே சமையத்துல “அலாவூதினின் அற்புத விளக்காக மதவெறியர்களை மத உணர்வுள்ள இறை நம்பிக்கையாளர்களே கண்டித்திருக்கிறார்கள்” என்று கூறுவதும் தாங்கள் தானே ! படுகொலையை உலகமே,சீனா உட்பட எவ்வித “””pre condition””” இல்லாம கண்டிகின்றது ! வினவு ,தென்றல் ,சின்னச்சாமி தவிர !

            A spokesperson for China’s Foreign Ministry said Beijing was “profoundly shocked by the terrorist attack”.
            “We strongly condemn that. The Chinese side mourns the victims and extends sincere sympathy to the bereaved families and the injured. The Chinese side resolutely opposes terrorism in all manifestations and supports the efforts by the French side to safeguard security of the country,” he added.

            • Pre-condition என்று தாங்கள் கருதிக்கொள்கிறீர்கள் தமிழ். ஆனால் கருத்து சுதந்திரம் என்று தாங்கள் மட்டும் அல்ல ‘நான் சார்லி’ என்று சொல்கிற கருத்துரிமை போராளிகள் எல்லாம் அர்னாப் கோஸ்வாமி ரேஞ்சுக்குத்தான் இருக்கிறார்கள். இதை ஒரு எடுத்துக்காட்டு மூலம் பார்ப்போம்.

              ஜெயலலிதா டிபி கிருமி தாக்கி இறந்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். இதில் டிபி கிருமிகளை அழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்று நிலைப்பாடும் இருக்கமுடியாது. ஏனெனில் டிபி கிருமிகள் பாசிஸ்டுகளை மட்டுமல்ல அனைவரையும் தாக்கும். இதில் ஜெயலலிதாவை ஆதரிக்க ஒரு நியாயமும் இல்லை. ஆனால் துப்புகெட்ட தனமாக சார்லி விசயத்தில் கருத்துரிமை என்று கதறுகிறீர்களே தவிர நாங்கள் ஜெயலலிதாவோ சார்லி ஹெப்டோவோ அல்ல என்று சொல்கிற வாதத்தை பிரி-கண்டிசன் என்று புரட்டுகிறீர்கள். இங்கேயே தாங்கள் சார்லியை ஆதரிக்கிற நிலைப்பாடு அறுந்துவிடுகிறது. நடுத்தரவர்க்கத்தின் மேட்டிமைத்தனமும் கிழிந்து விடுகிறது.

              இனி டிபி கிருமிக்கு வருவோம். தாங்கள் மதவெறியர் அல்லர் என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரியும். ஆகையால் டிபி கிருமியை அழிப்பதில் ஒட்டுமொத்த இசுலாமியர்களையும் கைகாண்பிக்கிற வெறியர்களை தாங்கள் அடையாளம் காண்பது எளிது. அனைத்து பாக்டீரியாக்களையும் கொன்றால் தான் டிபி பாக்டீரியாவையும் கொல்ல முடியும் என்று பலர் நஞ்சு கக்குகிறார்கள். ஆனால் அப்படிச் சொல்பவர்கள் எல்லாம் சமூகத்தை மெல்ல மெல்ல அரிக்கிற புற்று நோய்க் கட்டிகள். ஆர் எஸ் எஸ், அனைத்து ஆளும் வர்க்க ஊடகங்கள், எஞ்சிஓக்கள், பெராஷான்கோ போன்ற கைக்கூலிகள், அமெரிக்க ஏகாதிபத்தியம் எல்லாம் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த விவாதத்திலேயே பார்த்தீர்களானால் யுனிவர்படி, வியாசன், ஜோசப் போன்றவர்கள் எல்லாம் கண்மூடித்தனமான இசுலாமிய மதவெறியர்கள். இதில் ஜோசப்பிடம் கொஞ்சம் பேச முடியும். ஏனெனில் அவரும் உங்களைப் போல கருத்தின்றி மட்டுமே கத்திக் கொண்டிருப்பவர். மிச்ச ரென்டு பேரும் எனது திட்டத்தில் இல்லை. ஆக விவாதம் என்ன? பயோ வாராக இருந்தாலும் சரி பாய் வாராக இருந்தாலும் சரி அதை உருவாக்குகிற சமூகக் காரணிகளாக இவ்வளவு விசயங்கள் இருக்கிற பொழுது தாலிபான்கள், ஜிகாதிகள் என்று மட்டும் சொல்லிக் கொண்டிருப்பது என்ன வகையான நிலைப்பாடு?

              இதில் உலகத்திலேயே மதங்களின் முதன்மையான விரோதிகள் கம்யுனிஸ்டுகள். இவர்கள் தான் மதநம்பிக்கையாளர்களை மதவெறியர்களிடம் காப்பதற்கு இடையறாது மல்லுக்கட்டுகிறார்கள். இதில் தாங்கள் பார்க்காத நியாயத்தை கருத்துரிமையை கடப்பாடை வேறு எங்கு பார்த்தீர்கள்? இந்த அரசியல் பார்வையை எப்பொழுது பெற்றுக்கொண்டு போராடப் போகிறீர்கள்? இதைத்தாண்டி மாற்றுக்கருத்து வைப்பர்களின் அரசியல் என்ன? செயல் திட்டம் என்ன? தெளிவாக பேசுங்கள். அதைவிடுத்து ஜோசப்பைப் போன்று அற்பத்தனமாக கத்தி அடங்குவதோ அல்லது தங்களைப்போன்று ஒன்றும் இல்லாமல் கத்திக்கொண்டிருப்பதோ எதற்கும் உதவாது. முடிந்தவரை தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே விமர்சனமும் வைத்துவிட்டேன். மேற்கொண்டு இதையே ஒரு சலுகையாக எடுத்துக்கொள்ளாதீர்கள். ஏனெனில் இது ஒன்று மட்டுமே கம்யுனிஸ்டுகளுக்கு போராட்ட வடிவங்கள் அன்று.

              • பாரிஸ்சில் கார்ட்டூன் காரர்களை கொல்லப்பட்டதை ஆதரித்து நடந்த பேரணியை கிண்டல் அடிக்கும் நீங்கள் மதஉணர்வாளர்களும் கொலையை எதிர்கின்றார்கள் என்று கூறும் போது இரண்டு கருத்துமே ஒன்றுக்கு ஒன்று முரணாக இல்லையா ? மத உணர்வாளர்களும் கார்ட்டூன் காரர்களை கொல்லப்பட்டதை எதிர்கின்றார்கள் என்பது உண்மை என்பது போல பிரான்சு நாட்டு மக்களும் பேரணி மூலம் எதிர்க்க தானே செய்வார்கள் அதில் எதற்கு உங்களின் பிரத்தியோக நக்கல் ?

                உவமைகளுடனும் ,உதாரனங்க்ளுடனும் கருத்தை கூறுவது தவறு இல்லை என்றாலும் அவைகள் மட்டுமே உங்கள் கருத்துகளை வலிமையாக்காது .. தோழர் லெனின் அவர்களின் தேசியம் பற்றிய நூட்கலை படிக்க எடுத்துகொள்ளும் கால அளவை விட உங்கள் உவமைகளுடனும் ,உதாரனங்க்ளுடனும் கருத்தை புரிந்து கொள்ள அதிக நேரம் ஆகின்றது. காரணம் உங்கள் பின்னுட்டங்களில் உவமைகளுடனும் ,உதாரனங்க்ளும் மட்டுமே முதன்மையாக நிற்கின்றதே தவிர கருத்துக்கள் காணாமல் போய்விடுகிறது .

                நபியை பற்றிய 5 கார்ட்டூன்களை நான் விவாதித்து உள்ளேன். கடுங்கோட்பாளர்களுக்கு தான் அவை வெறியை உருவாகுமே தவிர எளிய மத உணர்வாளர்களுக்கு அவை எத்தகைய வலியையும் கொடுக்காது. அந்த கார்டூன்களை பிரன்சு மக்களின் மத சார்பற்ற கலை இலக்கிய பண்பாட்டுகளை மட்டுமே கருத்தில் கொண்டு விவாதிக்க வேண்டுமே தவிர நமது பண்பாட்டு விழுமியங்களை கொண்டு விவாதிக்க கூடாது. நபியை பற்றிய நான் விவாதித்த 5 கார்டூன்களை இந்திய சூழல்களை கொண்டு ஆராயும் போது நிர்வானமான கார்டூனை தவிர பிற யாவும் ஏற்க்க கூடியதே ! நன்றி

                • change: பாரிஸ்சில் கார்ட்டூன் காரர்களை கொல்லப்பட்டதை எதிர்த்து கருத்துரிமையை ஆதரித்து….

                • திரு தமிழ் , கருத்துக்களை கூறும் போது கவனம் தேவை . ஒரு வார்த்தை விடுபடுவது கூட தேவை அற்ற பொருளையும் ,விவாதங்களையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியாதா ?கருத்துக்களை கவனமாக எழுதுங்கள் . கார்டூனிஸ்ட்களால் குரங்காக வரையப்பட்ட பிரான்ஸ் பெண் மந்திரியை பற்றிய படமும் கருத்து உரிமையை தான் கேட்கின்றதா ?கருப்பர் இன மக்களை பற்றிய படங்கள் பிரதிபலிப்பது இனவாதம் தானே ? அதை பற்றி எழுதி பிரான்சு கார்டூனிஸ்ட்களை ஆதரிக்க முடியுமா உங்களால் ?

                • Susila, எனது கவனக்குறைவை கண்டு பிடித்து மாற்றி எழுதியமைக்கு மிக்க நன்றி . இனி கவனமாக இருக்கின்றேன். நான் எழுத நினைத்தது “பாரிஸ்சில் கார்ட்டூன்காரர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து நடந்த பேரணியை…..” என்று . ஆனாலும் உங்கள் திருத்தமும் மிக்க சரியானதே. நன்றி . கருப்பர் இன மக்களை பற்றி வரையப்பட்ட கார்டூன்களை பொறுத்தவரை அவை விவாதத்துக்கு உரியதே .பிரான்சு சூழலை மனதில் கொண்டு விவாதிப்போம் . இந்த கார்டூன்கள் பற்றிய பிரான்சு மக்களின் உணர்வுகளை இணையத்தில் படித்துக்கொண்டும் ,பிரான்சு நாட்டில் வாழும் ஈழ நண்பர்களுடன் சமுக வலை தளங்களில் விவாதித்துக்கொண்டும் தான் இருகின்றேன். அவை[கருப்பர் இன மக்களை பற்றி வரையப்பட்ட கார்டூன்கள் ] இனவாதத்தை வலியுறித்தினால் அது நிருபிக்கபட்டால் சார்லி இனவாத பத்திரிக்கை என்பதை ஏற்க்க தயார். அதே சமையம் அவர்கள் கொல்லபட்டதற்கு காரணம் அவர்களின் இனவாத கார்டூன்கள் அல்ல ! ஆனால் மதவெறிபிடித்த கடுங்கோட்பாளர்கள் தானே முழுமையான காரணம் ! பிரான்சு ,uk,Tamil Nadu நாடுகளை சேர்ந்த கம்யுனிஸ்டுகள் கூட சார்லியின் செயல்கள் “racism, sexism, and homophobia” என்று கூறுகிறார்கள் . விவாதிப்போம் .விடைகாண்போம்

                  Note: pls remove the cast based website indicated in your name link.

  5. நம்மை போன்றே நபியும் ஒரு சகமனிதர் என்பதால் அவரை [சக மனிதரை ] நிர்வாணமாக வரைந்த சார்லியின் கார்ட்டூன் மிக்க கண்டனத்துக்கு உரியது ,ஆபாசமானது ,அருவருப்பானது .

    [For the movie The Innocence of Muslims, Charlie Hebdo published a series of cartoons of the prophet. ]

  6. //ஒருபிரிவு மக்கள் தேவதூதராக கருதும் ஒருவரின் நிர்வாணப் படங்களை வரைவது கருத்துச் சுதந்திரத்தில் சேர்த்தியா?//அவங்களுக்கு மட்டுமா தேவதூதன் நமக்கும்தான்
    // மேரியையும் கூட சமூக ரீதியிலான பின்புலத்தில் பரிசீலிப்பதற்கும் தனிப்பட்ட பாலியல் ரீதியில் இழிவு படுத்துவதற்கும் வேறுபாடு இருக்கிறது. பின்னதை நாம் செய்ய மாட்டோம்//என்னண்ணே இது ஒரு பத்து நாளைக்கு யேசு கண்ணடிச்சுட்டு இருந்தாறு கண்ணடிக்கிறது பாலியல்ரீதியானது இல்ல அப்பிடினு விளக்கு செம்புகள பின்னாடியே அனுப்பி வைப்பீர்கள் என்று நம்புகிறேன் //– “_____ நாய்களே” என்று ஆதிக்க சாதியை ஏசுவதும், “______ நாய்களே” என்று அருந்ததினரை ஏசுவதும் ஒரே தரத்திலான ‘விமரிசனம்’ என்று சொல்ல முடியுமா? இல்லை இரண்டையும் நாம் ஒரே அளவில் பரிசீலிக்க முடியுமா?// இசுலாமியர்களையும் இசுலாமிய நாடுகளையும் நம்ம ஊர் அருந்ததியர்கள் ரேஞ்சுக்கு சித்தரிக்காதிங்க எனக்கு திருவிளைடால் படம்தான் ஞாபகத்துக்கு வருது அதுல பிரகாஸ் ராஜ துப்பாக்கி காட்டி மிரட்டுவார் தனுஸ் அப்ப இளவரசன் ஒரு டைலாக் பேசுவார் என்னங்க இது அவன் துப்பாக்கிய எடுத்து காட்டுரான் அவன் போய் லூஸி லூஸினு சொல்லுறீங்க அப்பிடீம்பார் அதுதான் இங்க நடக்குது 18 பேர கொன்னுறுக்கான் அவனுகள அப்பாவி அப்பாவினு சொல்லுறீங்க அது மட்டும் இல்லாம அருந்ததியர்களோட ஒப்பிடுறீக என்ன கருமமோ போங்க //அவை கண்மூடித்தனமான வசைகள். எதிர்த்துப் பேசும் திராணியற்றவர்களை நோக்கி எறியப்பட்ட அமிலக் குண்டுகள்.//
    இந்த அமிலக்குண்டு போட்டு இசுலாமியன் யாருயா செத்தது செத்த 18 பேரும் பிரான்ஸ்காரன் அப்பிடினு முதலாலித்துவ பத்திரிக்கைகள் கள்ள பரப்புரை செய்யுதே
    //பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட (கருவுற்ற) பெண்கள், தங்களுக்குச் சேர வேண்டிய ஈட்டுத் தொகைக்கான காசோலையை நிறுத்தாதீர்கள் என்று சொல்வது போன்ற படம்.//
    பெண்ணுரிமை அப்பிடி செய்ய சொன்ன இசுலாமிற்க்கு போகோ காரமிற்க்கும் அப்பாவி வேசம் போடுவதுதானா வினவின் பெண்ணுரிமை பாராட்டத்தக்கது
    //தங்கள் சொந்த நாட்டு மக்களை ஷரியா சட்டங்கள் என்கிற மத்தியகால இருட்டுப் பெட்டிக்குள் பூட்டி வைத்துள்ள // சரியா சட்டங்கள் இசுலாமிய சட்டங்கள் இல்லயா புதுசு புதுசா தினுசு தினுசா இசுலாமியர்கள் மாரியே தக்கியா பன்றீங்க வாழ்த்துகள் வினவு…

  7. இட்லருக்கும் இரங்க வேண்டுமோ?ஜெயமோகன் இதே கேள்விய வினவ பாத்துகூட கேக்கலாம் நாங்க எதுக்குடா இட்லர இரைத்தூதன்னு நம்பனும் சரி நான் கூடநம்பித்தொலையிறேன் பிரான்ஸ் பத்திரிக்கை ஏன்டா நம்பனும் திடீர் திடீர்ன்னு இட்லருக்கு இரக்கம் காட்டுனிகனா ஜெயமோகன் அண்ணனே உங்களப்பாத்து பொறாமைப்படப்போறாரு தாய்ப்பாசத்துல இவன் நம்மல ஓவர்டேக் பன்னிறுவான் போல இருக்கேன்னு …

  8. வெனவு, அப்போ கருத்து சுதந்திரம்னா என்ன ? பாதிக்கப்பட்ட சமுதாயத்தின் மூட நம்பிக்கைகளையும் / அறிவு கெட்ட நடத்தைகளையும் பேசக்கூடாது என்பது கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதி என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. ஆனாலும் வெனவின் நேர்மை தெரிந்ததே. பகவத்கீதையை விமர்சனம் செய்த புத்தகத்தை வெளியிடுவது கருத்து சுதந்திரம் என்பார்கள். மற்ற மதத்தினரை கொல்ல சொல்லும் குரானை விமர்சித்து புத்தகம் எழுதுவதும் கருத்து சுதந்திரம்தானே என்றால், வினவின் ஒட்டு மொத்த கூட்டமும் பின் கேட்டு வழியாக எகிறி குதித்து ஓடிவிடும். பின்னூட்டத்தையே வெளியிட மாட்டார்கள் என்றால் பாருங்களேன். தந்தரமா அரசியல் பண்றாங்களாமாம். ஆபாசம் இல்லாம “இயு” சட்டிபிகேட் போட்ட முகமது படத்த முஸ்லிம்க ஒத்துக்குவாங்களா ? எதுக்குயா இந்த கட்டுரை ? இந்து மதத்த வச பாடுவதையும் கார்டூன் போடுவதயும் ஒரு பொழப்பா வெச்சிருக்கற நீங்க, இஸ்லாம எதுக்கு தாங்கனும் ? அப்படியே தெரியாத மாதிரி இருந்து விட வேண்டியதுதானே ? முஸ்லிம் மக்கள் மனச கவர்ராங்களாம். தைரியமும் நேர்மையும் இருந்தா எல்லாத்தையும் ஒரே மாதிரி விமர்சனம் செய்யனும். இல்லனா நீங்களும் பத்தோட பதினொன்னுதான்னு ஒத்துக்கனும். ஒங்கள மாதிரி ஆளுங்க , கொண்ணாத்தான் அந்த விமர்சனம்/கார்டூன் சம்பந்தப் பட்ட மக்கள பாதிக்குதுன்னு ஒத்துக்குவீங்களா ?

  9. இந்தக் கட்டுரை அண்மைக்காலமாக வினவில் வெளிவரும் இஸ்லாமிய சார்புச் சளாப்பல்களினதும் சப்பைக்கட்டுகளினதும் உச்சமே தவிர வேறெதுவுமில்லை. இது போன்ற கட்டுரைக்குத் தெரிவிக்கப்படும் மாற்றுக் கருத்துக்களை மட்டுறுத்தல் என்ற பெயரில் அப்படியே இருட்டடிப்புச் செய்து விடும் வினவு, இப்படியான கட்டுரைகளை வெளியிடுவதே வெறும் அபத்தம். இங்கு வெளியிடப்படும் இத்தகைய கட்டுரைகளுக்கு, முஸ்லீம் ஆதரவுக் கருத்துக்களை மட்டும் தான் எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறது. யாரவது எதிர்க்கருத்துத் தெரிவித்தால் அப்படியே நீக்கி விடுவார்கள். வினவுக்கும் அரேபியாவிலிருந்து பணம் வருகிறதோ என்னவோ அல்லாவுக்குத் தான் வெளிச்சம். 🙂

    சார்லி ஹெப்டோவைப் பற்றி இந்தக் கட்டுரை கூறும் அனைத்தும் விவாதத்துக்குரியது, ஆனால் எதிர்க் கருத்துக்களை வினவு வெளியிடாது என்பதை பலமுறை அனுபவத்தில் உணர்ந்தவன் நான். ஆகவே இதற்கும் பதிலெழுதுவது வீண் வேலை. உண்மையில் சார்லி ஹெப்டோ வைப் பற்றி சரியாகத் தெரியாதவர் தான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார். சார்லி ஹெப்டோ ஒரு Satirical Magazine, அவர்கள் மதம், இனவாதம், குறுகிய அரசியல் நோக்கங்கள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்கள். கருத்துச் சுதந்திரத்தையும், பிரான்சின் அரசியலமைப்பின் அத்திவாரமாகிய மதச்சார்பின்மையையும் மதிக்கின்றவர்கள். அவர்கள் கறுப்பர்களையும், முஸ்லீம்களையும் மட்டுமல்ல, பிரான்சின் அரசியல்வாதிகள், பாப்பாண்டவர், கிறித்தவம், ஏசுநாதர், கத்தோலிக்கம், அமெரிக்கா, என அவர்கள் நக்கலடித்து கார்ட்டூன் போடாத விடயமேயில்லை எனலாம். அரசியல்வாதிகளையும், மதத்தையும், சமுதாயத்தில் நடைபெறும் சுத்துமாத்துகள் எல்லாவற்றையும் குறிப்பிட்டு, கார்ட்டூன் வெளியிட்டு, வெட்கப்படச் செய்வது தான் அவர்களின் நோக்கம்.’ ஒவ்வொரு கார்ட்டூனுக்கும் பின்னணியில் நகைச்சுவை மட்டுமன்றி, அதன் பின்னணியில் அவர்கள் கூற வரும் செய்தியுமுண்டு. பழமை வாதியான, இனவாதக்கட்சியின் தலைவர் Jean-Marie Le Pen இன் படத்துக்குப் பதிலாக Piece of shi_t இன் படத்தைப் போட்டு வர்ணித்தவர்கள்.

    அவர்கள் உண்மையில் இஸ்லாத்தை நக்கலடிக்கவில்லை, இஸ்லாமிய பயங்கரவாதத்தைத் தான் கேலி பண்ணுகிறார்கள். முகம்மது நபியே, இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்து சார்லி ஹெப்டோவுக்குச் சார்பாகப் பேசுவதாகக் கூட அவர்கள் கார்ட்டூன் வெளியிட்டார்கள். பிரஞ்சுப் புரட்சியினதும், பிரஞ்சுக் குடியரசினதும் ஆணி வேராகிய மதச்சார்பின்மையும், பேச்சுச் சுதந்திரமும், இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு அடிபணியக் கூடாது என்பது தான் அவர்களின் கருத்தாகும், அதன் அடிப்படையில் ‘நானும் சார்லி தான் – Je suis Charlie’. அதற்குப் பதிலாக, இந்தக் கட்டுரையாசிரியர், தமிழர்கள் எல்லோரும் ‘Je suis Coulibaly’ என்று கூற வேண்டுமென எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது. 🙂

  10. இந்துக் கடவுள்களை மட்டுமன்றி, இந்தியர்கள் அனைவரும் மதிக்கும் பாரதமாதாவையே நிர்வாணமாகப் படம் விரைந்து கேவலப்படுத்திய முஸ்லீம் ஒவியர் M. F. Husain ஐ வினவு எதிர்த்ததா என்று எனக்குத் தெரியாது ஆனால் இந்திய முஸ்லீம்கள் அவருக்கேதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன், அப்படி அவரை எதிர்த்தவர்கள் இங்கு யாராவது இருந்தால் கையை உயர்த்துங்கள், பார்ப்போம்.

    முகம்மது நபியின் ஓவியங்களை பாரசீக ஓவியர்கள் மட்டுமன்றி, எகிப்திலும் வரைந்துள்ளனர். அவை அரும்பொருள் காட்சியகங்களில் இன்றுமுள்ளன. வெறும் கூகிள் தேடுதலிலேயே அந்த ஓவியங்களைக் காணலாம். முகம்மது நபி அவர்கள் இந்துக்களின் காமதேனுவைப் போல் தோற்றமளிக்கும் Buraq எனப்படும், பெண்ணின் தலையும் குதிரையின் உடலும் கொண்ட மிருகத்திலேறி சொர்க்கத்துக்குச் செல்வதாக சித்தரிக்கப்படும் ஓவியங்கள் கூட இணையத்திலும், மியூசியங்களிலும் உண்டு. முகம்மது நபியின் படத்தை வரைவது வஹாபிகளால தடுக்கப்பட்டதா அல்லது அந்த தடை நபிகளின் காலத்திலேயே உண்டா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் முகம்மது நபியைச் சித்தரிக்கும், பழமையான இஸ்லாமிய ஒவியங்கள் உண்டு.

    //ஒருபிரிவு மக்கள் தேவதூதராக கருதும் ஒருவரின் நிர்வாணப் படங்களை வரைவது கருத்துச் சுதந்திரத்தில் சேர்த்தியா?//

  11. வினவு, தமிழரசன் கட்டுரையை மறுஆய்வு செய்யவேண்டியது அவசியம் ஆகிறது .

  12. சார்லி ஹெப்டோ, இஸ்லாத்தை கிண்டல் செய்தால் அமிலக்குண்டு. நீங்கள் இந்து மதத்தை கிண்டல் செய்தால், அது பகுத்தறிவு? எச்சக்கலை _______ உனக்கு மனசாட்சியே இல்லையா????

  13. விமர்சன மறுமொழி இட்டுள்ள பலரும் சளைக்காமல் விவாதிக்கும் திறன் கொண்டவர்கள்.
    ஆனால், எனது கருத்தின் படி நான் கட்டுரையின் பொருளோடு ஒத்துப் போகிறேன்.
    நண்பர்கள் கவனிக்கத் தவறிய சில அம்சங்களை சுட்டிக்காட்ட விழைகிறேன்.

    முதலில் யுனிவர்பட்டி

    1) //அந்த படுகொலைகளை கண்டனம் செய்து அரச முறையில் அரங்கேற்றப்பட்ட அந்த அணிவகுப்பைப்பற்றி பேசுகிறீர்கள்.//

    கட்டுரையாளர் அணிவகுப்பை பற்றி மட்டுமின்றி, சார்லி தாக்குதலைத் தொடர்ந்து இசுலாமியர்களுக்கு எதிராக ஐரோப்பாவில் வேகமெடுத்து வரும் கருத்தியல் ரீதியான முனைவாக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளார் என்று கருதுகிறேன். குறிப்பாக சில ஐரோப்பிய நாடுகள் தமது சொந்த வர்த்தக நலன்களுக்கு உட்பட்டு அமெரிக்காவின் ’பயங்கரவாதத்திற்கு எதிரான’ போர்களுக்கு நிபந்தனைக்குட்பட்ட ஆதரவை அளிக்கின்றன. தற்போதைய முனைவாக்கம் ஐரோப்பிய அரசுகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை நல்க வேண்டி ஒரு அழுத்தத்தை உண்டாக்கியுள்ளன.

    2) //கண்டிப்பாக இது தான் கருத்துச் சுதந்திரம். தூதன் என்று கூறிக்கொண்டவர்கள் பொய்யர்கள் தான் என்பதை எப்படி சொல்வது. இந்தியாவின் சில கற்பனைகளை ஏமாற்று வேலைகளை நாம் எப்படி அனுகுகிறோம்?//

    நான் இல்லை என்று கருதுகிறேன். கருத்துச் சுதந்திரம் என்பது அப்சொல்யூட்டானது அல்ல. வெளிப்படுத்தப்படும் கருத்துக்களை அதனதன் வெளிப்பாட்டுச் சூழலில் வைத்துப் பரிலீத்தே முடிவு செய்யமுடியும்.

    உதாரணத்திற்கு “ஐயம் சார்லி கவ்லிபாலி” என்று சொன்ன ட்யூடொன்னே ஏன் கைது செய்யப்பட்டார்? ஏன் அவரது கருத்தை சொல்லும் உரிமையை ப்ரான்ஸ் அரசாங்கம் வழங்கவில்லை. இங்கே கம்பு சுத்தும் கருத்துரிமைப் போராளிகளும் மௌனம் காப்பதேன்?

    ”ஹாலோகாஸ்ட் இல்லை” என்ற கருத்தை வெளியிடும் உரிமை ஐரோப்பாவில் இருக்கிறதா என்ன?

    ஆக, ஒரு கருத்தின் தாக்குதல் இலக்கு என்னவென்பதைப் பொறுத்து அதன் வெளிப்பாட்டு உரிமை அமைகிறதே ஏன்?

    3) //மிக மிக தவறான உதாரணங்கள்//

    சரியான உதாரணங்கள் என்றே கருதுகிறேன்.

    அடுத்து நண்பர் தமிழ் வெளியிட்ட மறுமொழி கருத்துக்கள் பற்றி

    1) //.தராசின் ஒரு தட்டில் கார்டூனையும் ,மறு தட்டில் சுட்டுகொன்ற நிகழவையும் வைத்தது பாருங்கள் என்றார்//

    கட்டுரையாளர் கொலைகளை ஆதரிக்கவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அநியாயமான முறையில் செத்துப் போனார்கள் என்பதற்காகவே அவர்கள் உயிரோடு இருக்கும் போது செய்த அயோக்கியத்தனங்களை ஆதரிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை நண்பர் தமிழ் அவர்களே.

    2) //பிரச்ச்ச்னையின் சாரத்தை நேரடியாக அணுகி அதற்கு தன் கருத்தை வைக்க வினவுக்கு தெரியாதா ?// //நபியை கார்டூன் மூலம் இழிவு செய்தது எப்படி தவறானதோ அது போன்றே கார்டூன் வரைந்தவர்களையும் சுட்டு கொள்வது தவறானதே// –

    பிரச்சினையின் சாரம் என்னவென்பதை கட்டுரை சரியானபடி அணுகியுள்ளதென்றே நினைக்கிறேன். சாரம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை முன்வைத்து வாதாடினால் நலம்.

    அடுத்து உங்களது இரண்டாவது கருத்தை கட்டுரையும் பிரதிபலிக்கிறது.

    3) உங்களது மறுமொழி எண் 3.1

    உங்களாது அடிப்படை புரிதலில் தவறு உள்ளது நண்பரே. முக்கியமான தன் காலனியத்தில் வாழ்ந்த மக்களை வரவேற்று ஆதரிக்கும் நாடு என்பதை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இணைப்பில் உள்ள சுட்டிகளில் அதற்கு மாறான தகவல்கள் உள்ளன. ஐரோப்பாவில் வசிக்கும் ஈழத்துப் பதிவர் திரு கலையரன் அவர்களது பதிவுகளை மேலதிகமாக வாசிக்க பரிந்துரைக்கிறேன்.

    4) //சார்லி கார்டூன்காரர்கள் கிருஸ்துவ ,யூத ,இஸ்லாமிய மத கொள்கைகளை அவற்றின் அட்டுழியங்களை கார்டூன் மூலம் கேள்வி எழுப்பும் நிலையில் கம்யுனிஸ்ட் வினவுக்கு என்ன பிரச்சனை ?//

    முதலில், பிரச்சினை எல்லா மதத்தையும் விமர்சிக்கிறார்களா இல்லையா என்பதல்ல. அந்த விமரிசனங்கள் எந்த சூழலில் செய்யப்படுகிறது என்பதே.

    அடுத்து, சார்லி செய்வது எதுவும் விமரிசனம் என்ற வரையரைக்குள் வருவன அல்ல. அது யூத கிருஸ்தவ மதங்களைப் பற்றிய அதன் கார்ட்டூன்கள் உள்ளிட்டு.
    விமரிசனம் என்பது எதிராளியின் நிலைப்பாட்டை பரிசீலிக்கக் கோருவதாக இருக்க வேண்டும் – ஒரு மாற்றை முன்வைக்கும் தன்மை அதில் வெளிப்பட வேண்டும்.

    தவறாக நினைக்க வேண்டாம் – தேவிடியாபயலே என்பது ஏச்சு; விமரிசனம் அல்ல. சார்லியின் கார்ட்டூன்கள் வெற்று வசைகள், விமரிசனங்கள் அல்ல.

    அடுத்து திரு P Joseph மற்றும் பிறர்

    திரு ஜோசப் அவர்களின் எல்லா கருத்தும் அப்பட்டமான முட்டாள்தனமாக இருப்பதால் இவர் விவாதிக்கத் தக்கவர் அல்ல என்று முடிவு செய்கிறேன். ஒன்றே ஒன்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.

    //இசுலாமியர்களையும் இசுலாமிய நாடுகளையும் நம்ம ஊர் அருந்ததியர்கள் ரேஞ்சுக்கு சித்தரிக்காதிங்க எனக்கு திருவிளைடால் படம்தான் ஞாபகத்துக்கு வருது அதுல பிரகாஸ் ராஜ துப்பாக்கி காட்டி மிரட்டுவார் தனுஸ் அப்ப இளவரசன் ஒரு டைலாக் பேசுவார் என்னங்க இது அவன் துப்பாக்கிய எடுத்து காட்டுரான் அவன் போய் லூஸி லூஸினு சொல்லுறீங்க அப்பிடீம்பார் அதுதான் இங்க நடக்குது 18 பேர கொன்னுறுக்கான் அவனுகள அப்பாவி அப்பாவினு சொல்லுறீங்க அது மட்டும் இல்லாம அருந்ததியர்களோட ஒப்பிடுறீக என்ன கருமமோ போங்க//

    இது அப்பட்டமான திரிபு. முதலில் ”இசுலாமியர்களையும் இசுலாமிய நாடுகளையும்” என்று பொதுமைப்படுத்தியது ஒரு அயோக்கியத்தனம் – கட்டுரை ப்ரான்சில் வாழும் சிறுபான்மை இசுலாமியர்களை (குறிப்பாக அல்ஜியர்ஸ்) பற்றி பேசுகிறது. அடுத்து, ”அப்பாவி அப்பாவினு சொல்லுறீங்க” – கட்டுரையில் எந்த இடத்திலும் கொன்றவர்களை அப்பாவிகள் என்று சொல்லவுமில்லை அவர்களை அருந்ததியினரோடு ஒப்பிடவுமில்லை.

    • நன்றாக விளக்கியுள்ளீர்கள் சின்னச்சாமி அவர்களே. வாழ்த்துக்கள்.

    • சின்னச்சாமி,

      சி.சா வின் ஜனநாயக உணர்வு பல் இளிகின்றது. நபியை கார்டுன் வரைவது அயோக்கியத்தனம் என்றால் நாளை அதே காரணத்துக்காக ஹிந்துத்துவா /அதிமுக வினவு மீதோ ,புதிய ஜனநாயகம் மீதோ கொலை வெறி தாக்குதல் நடத்தினால் அதனையும் நாம் ஆதரிக்க வேண்டுமா ? [அவர்களை பொருத்தவரை வினவு கார்ட்டூன் அயோக்கியத்தனமாக தானே தெரியும் ]. என்னுடைய பின்னுட்டத்தில் [ எண் 4] நபியை பற்றியகார்டூன்கள் 4 ன் கருத்துகளை பதிவு செய்து உள்ளேன். என்ன விதமான அயோக்கியத்தனங்களை அந்த கார்டுன் பிரதிபலிகின்றது என்று கண்ணை மூடிகொண்டு வினவுக்கு ஜிங் ஜங் போடும் சி.சா அவர்கள் தான் விளக்க வேண்டும். சி.சா, கார்டுன் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யபட்டதை ஆதரிக்காவிட்டாலும், கொலை செய்யபடுவ்தற்கு உரிய நியாயமான காரணங்கள் இருப்பதாகவே நினைகின்றார் என்றால் அந்த காரணங்களை அவர் தான் அடுக்க வேண்டும்

      //கட்டுரையாளர் கொலைகளை ஆதரிக்கவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அநியாயமான முறையில் செத்துப் போனார்கள் என்பதற்காகவே அவர்கள் உயிரோடு இருக்கும் போது செய்த அயோக்கியத்தனங்களை ஆதரிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை நண்பர் தமிழ் அவர்களே. //

    • சின்னச்சாமி,

      [1]கட்டுரையின் உள்ளடக்கம் ஆரம்பத்தில் ஜெயமோகனுக்கு பிரத்தியோகமாக எழுதபட்டு உள்ளது. இது தேவையா ?

      [2]இலச்ச கணக்கான மக்கள் பாரிஸ் நகரில் கருத்துரிமைக்கு ஆதரவாக குழுமியது எல்லாம் வினவுக்கு தெரியவில்லை ஆனால் அதில் கலந்து கொண்ட 50 வெளிநாட்டு தலைவர்கள் மட்டும் தான் வினவின் கண்களுக்கு தெரிகின்றது.

      [3]தலித் மக்களின் மீதான அவதூரு வார்த்தைகளால ஆன தக்குதல்களை நபியின் மீதாகார்ட்டூன்களுடன் ஒப்பிட்டது.

      இவை மூன்றும் கட்டுரையின் கருதாகமான “தாக்குதல் தவறு இல்லை ” என்பதை தான் வளியுருத்துகின்றதே தவிர தாக்குதலை கண்டனம் செய்ய உதவவில்லை.

      //பிரச்சினையின் சாரம் என்னவென்பதை கட்டுரை சரியானபடி அணுகியுள்ளதென்றே நினைக்கிறேன். சாரம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை முன்வைத்து வாதாடினால் நலம். //

    • சின்னச்சாமி,

      பாரிஸில் மனிதர்கள் கொல்லபடுகின்றார்கள் காரணம் நபியின் மீதான கார்டூன்கள் வரையபட்டது . எத்தகைய சூழலில் தாக்குதல் நடத்தப்பட்டது.? படிக்கவும் :

      At 11:28 a.m. Wednesday local time, the French satirical newspaper Charlie Hebdo tweeted a cartoon of ISIS leader Abu Bakr Al-Baghdadi. “Best wishes and good health,” the caption read. Minutes after the tweet was published, three armed and masked gunmen stormed the paper’s offices and opened fire, killing ten of its staff and two police officers.

      //அடுத்து, சார்லி செய்வது எதுவும் விமரிசனம் என்ற வரையரைக்குள் வருவன அல்ல. அது யூத கிருஸ்தவ மதங்களைப் பற்றிய அதன் கார்ட்டூன்கள் உள்ளிட்டு. விமரிசனம் என்பது எதிராளியின் நிலைப்பாட்டை பரிசீலிக்கக் கோருவதாக இருக்க வேண்டும் – ஒரு மாற்றை முன்வைக்கும் தன்மை அதில் வெளிப்பட வேண்டும். //

    • சின்னச்சாமி,

      //கட்டுரையாளர் அணிவகுப்பை பற்றி மட்டுமின்றி, *** கருத்தியல் ரீதியான முனைவாக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளார்//

      நான் கொடுத்த மேற்கோள் அதாவது கட்டுரையின் கடைசி பத்தி அந்த அணிவகுப்பின் தலைகளைப்பற்றி சுட்டுகிறது. அந்த தலைகளுக்கு நான் சார்லி என்று கூறிக்கொள்ள தகுதியில்லை என்று கூறுகிறது. அது சரி தான். இதைத்தான் நான் கூறுகிறேன். அவர்கள் அப்படி சொல்ல முடியாவிட்டாலும் நாம் சொல்லமுடியவேண்டும் என்று கூறியிருக்கிறேன்.

      முகமதியர்களுக்கு எதிராக உருவாகும் முனைவாக்கம் என்பது பின்விளைவு. அதைப்பற்றியும் விவாதிக்கலாம்.

      //கருத்துச் சுதந்திரம் என்பது *** வெளிப்பாட்டுச் சூழலில் வைத்துப் பரிலீத்தே முடிவு செய்யமுடியும்//

      இந்த விவாதம் இன்று நேற்று ஆரம்பித்ததில்லை. சல்மான் ரஸ்டிக்கு எதிரான பத்வா ஒரு முக்கிய கட்டம். அந்த காலத்தில் கணிணியில்லை. Thoe Van Gogh கொல்லப்பட்டது அடுத்த முக்கிய கட்டம். அப்போது கணிணி இருக்கிறது இணையமுமிருக்கிறது. இடையில் பலப்பல நிகழ்வுகள். Innocence of Muhammad என்ற படம் அதைத் தொடர்ந்து படுகொலைகள் அடுத்த கட்டம். முகமதை படம் போடக்கூடாது படம் எடுக்க்க்கூடாது என்று கூறினால் ஏன் என்று வீம்புக்காகவே செய்யத்தான் தோன்றும். ஒரு நாள் திடீரென்று அம்மனகுன்டியாக வரையவேண்டும் என்று வரையவில்லை. ஆரம்ப கட்ட மனநோயாளிகளுக்கு மிதமான shock கொடுப்பதைப்போலத்தான் இது ஆரம்பித்து இப்போது இந்த அளவிற்கு வந்திருக்கிறது. ஐரோப்பாவில் அம்மனகுன்டியாக படம் வரைவது மற்றது எல்லாம் வெகு சகஜம். சிறுவர்களின் மழலைகளின் புத்தகங்களில் கூட அம்மனகுன்டிகள் பல இருக்கும். துப்பாக்கியை வைத்து நினைவுக்குக் கொண்டுவருவதை விட பென்சிலை வைத்து நினைவுக்குக் கொண்டுவருவது மேன்மையானது. ஒருவர் மதிப்பதை மற்றவர்களும் மதிக்க வேண்டும் என்ற கட்டாயம் செல்லாது. அதிலும் மிரட்டி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக நடக்காது. நான் உரத்துச் சொல்கிறேன். I AM CHARLIE or rather ANONYMOUS CHARLIE.

      //ட்யூடொன்னே ஏன் கைது//

      இந்த பெயரை ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் இதைப்பற்றி என்னால் மேலதிக தகவல்களைப் பெறமுடியும்.

      // ஹாலோகாஸ்ட் இல்லை//

      Holocaust ன் கொடூரத்தை உணர்ந்து அதற்கு பரிகாரம் தேடும் வகையில் செய்த சில ஏற்பாடுகளில் சில சட்டங்களும் அடங்குகிறது. அவை காலாவதியாக வேண்டிய காலம் வந்து விட்டதென்றால் அவற்றை நீக்கி விடலாம். தற்போதைக்கு சட்டத்தில் இருக்கிறது போலிருக்கிறது. (Holocaust ஐ யார் மறுக்கிறார்கள் என்பதும் ஒரு முக்கியமான கேள்விதான்.)

      //சரியான உதாரணங்கள் என்றே கருதுகிறேன்.//

      நீங்கள் ஐரோப்பாவில் முகமதியர்கள் சிறுபான்மையினர் என்ற ரீதியில் அணுகுகிறீர்கள். இது பெரிய மோசடி. உலக அளவில் தான் இதைப் பார்க்கவேண்டும். அப்படித்தான் நான் பார்க்கிறேன்.

      தொடர்ந்த விவாதத்திற்கு தயாராகத்தான் இருக்கிறீர்கள் போலிருக்கிறது. மேலும் விவாதிக்கலாம்.

    • என்னை முட்டாள் என்று சொல்லுவாத்ற்க்கு உங்களுக்கு உரிமையை யார் கொடுத்தார்கள் மிஸ்டர் சின்னச்சாமி ,தம்பி சின்னசாமி கிறிஸ்துவன் அப்படினா உங்களுக்கு ரெம்ப கேவலமா போச்சு யேசுவ மட்டும் கேவலமா நீங்க சித்தரிக்கலாம் ஆனா சார்லி கெப்டோ பத்திரிக்கை முகமம்து நபியை அம்மனாமாக சித்தரிக்க கூடாது அதுக்காக யெத்தன பேர வேனா கொல்லலாம் அதுக்கு செம்பு தூக்கிட்டு அவன் தப்பு செஞ்ஞான் தண்டிக்கனும்தான் அனாலும் அவன் கொல்லப்பட்டது கண்டிக்கபடத்தக்கதுதான் அனாலும் அவனை கொன்னது தப்பில்லை ஏனென்றான் அவன் இசுலாமிய நபியை தவறாக சித்தரித்து விட்டான் அவன் நாட்டுல இசுலாமியன் குறைவாக இருக்கிறான் இதுதான் உங்கள் கட்டுறையின் சாராம்சம் இத சொல்லுறதுக்கு பதிலா நான் டிஎன்டிஜே அப்பிடினு சொல்லிட்டு போயேன் அத விட்டுட்டு நாங்க கம்மூனிஸ்டு எங்களுக்கும் பிஜை கும் 16 வித்தியாசம் இருக்குனு ஏன்டா மல்லாடுறீக….

      • மிகச் சரியானா கருத்து திரு. ஜோ அவர்களே…… அது என்னமோப்பா, பிரான்ஸ் நாட்டில் எவ்வளவோ சிறுபான்மை மக்கள் வாழ்கிறார்கள், அவர்கள் யாரும் எந்த துன்பமும் இல்லாமல் தான் வாழ்கிறார்கள், பிரான்ஸ் மட்டும்தான் என்றில்லை அனைத்து நாடுகளிலும் இந்தியர்கள், சீனர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என்று பல சிறுபான்மை மக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அமெரிக்கா போன்ற தேசம் சிறுப்பான்மை மக்களின் தாயகம் என்றே கூறலாம். அனைத்து விதமான தேசிய இனங்களும் அங்கே சிறப்பாக வாழ்கிறார்கள். ஆனால், இசுலாமியர்களைப் போன்று யாரும் வெறுத்து ஒதுக்கப்பட்டதில்லை. அப்படி என்றால் பிரச்சனை யாரிடம் உள்ளது? பிற மதத்தினரிடம் சகிப்பு தன்மையின்மை, பிற கலாச்சாரங்களோடு ஒத்துப் போகமால் வெறுத்து ஒதுக்குவது. ஒத்து போகவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் இசுலாமிய பண்பாட்டை விட மற்றைய இனங்களின் பண்பாட்டை மதிக்கத் தெரியாமை இவை போன்ற காரணங்களே. இதைவிட முக்கியம் எந்த நாட்டில் நாம் வாழ்கிறோமோ, எந்த நாடு நமக்கு வாழ்வளிக்கின்றதோ அந்த நாட்டிற்கு துரோகம் நினைக்க கூடாது தின்ற உப்புக்கு கொஞ்சமாவது விசுவாசமாக நடந்துக் கொள்ளவேண்டும்!!! இதை என்று தான் இந்த “நமக் ஹராமிகள்” உணர்வார்களோ.

      • சின்னசாமி மற்றவறை முட்டாள் என்று கூறும் போது Three Hermits by Leo Tolstoy கதை தான் நினைவுக்கு வருகின்றது . பாதிரியார் பாத்திரத்தில் சின்னசாமி…, மூன்று துறவிகளாக ஜோசப்[triple act] ! ஜோசப் கடல் நீர் மீது நடந்து வந்து பாதிரியாரிடம் மறந்து போன வாசகத்தை கேட்கின்றது இன்னும் கண்ணுக்குள் நிற்கின்றது . விடுங்க ஜோ ___________ !

  14. திரு ஜோசப் அவர்களின் எல்லா கருத்தும் அப்பட்டமான முட்டாள்தனமாக இருப்பதால் இவர் விவாதிக்கத் தக்கவர் அல்ல என்று முடிவு செய்கிறேன்.

    அது மட்டும் இல்லை அவர் ஒரு கிறுத்தவ காவி

  15. திரு தமிழ் அவர்களே,

    //நபியை கார்டுன் வரைவது அயோக்கியத்தனம் என்றால் நாளை அதே காரணத்துக்காக ஹிந்துத்துவா /அதிமுக வினவு மீதோ ,புதிய ஜனநாயகம் மீதோ கொலை வெறி தாக்குதல் நடத்தினால் அதனையும் நாம் ஆதரிக்க வேண்டுமா ? //

    மீண்டும் நீங்கள் பொதுமைப்படுத்துகிறீர்கள் கருத்து சொல்லும் ஜனநாயக உரிமை அப்சொல்யூட்டானது அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். எனது முந்தைய மறுமொழியில் குறிப்பிட்ட உதாரணங்களை கவனிக்க.

    மீண்டும் வேறு வகையில் சொல்ல முயல்கிறேன். நபியைக் கார்ட்டூன் வரைவதில் அயோக்கியத்தனம் இல்லை, ஆனால் அது எந்த சூழலில் வரையப்படுகிறது யாருக்கு வரையப்படுகிறது என்பதே எனது கவனத்திற்குரியது. அந்தக் கார்ட்டூன்கள் சிலவற்றில் முகமது நபி நிர்வாணமாக இருப்பது போன்றும் கூட இருந்தது – அதற்கும் இதே அளவுகோல் தான்.

    கீழ்வருவதை தேவைப்பட்டால் வினவு மட்டுருத்திக் கொள்ளலாம்.

    ஒரு கார்ட்டூனில் டர்பன் அணிந்த ஒரு நிர்வாண உருவம் குப்பறக் கிடக்கிறது, அதன் மலதுவாரத்தில் ஒரு மஞ்சள் நட்சத்திரம் சொருகப்பட்டுள்ளது காப்ஷனில் “ஒரு நட்சத்திரத்தின் பிறப்பு” என்று எழுதப்பட்டுள்ளது.

    இது தான் விமர்சனமா தமிழ்? ஒரே நேரத்தில் ஹாலோகாஸ்டில் கொல்லப்பட்ட யூதர்களையும், யூதர்கள் இசுலாமியர்களின் மலம் என்ற பொருளையும், நபியையும் மிகக்கீழ்த்தரமாக சித்தரிக்கிறது இந்த கார்ட்டூன். ஏன் யூதர்கள், ஏன் இது இசுலாமியர்களைப் பொருத்தவரை கீழ்த்தரமான கேவலம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் திறன் உள்ளவர் என்று நினைக்கிறேன். இவ்வளவும் சொல்லப்படுவது சௌதியில் உள்ள இசுலாமியர்களை நோக்கியல்ல, பிரான்சில் உள்ள சிறுபான்மையினரை நோக்கை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    இன்னொரு கார்ட்டூனில் டர்பன் அணிந்த ஒரு உருவம் நிர்வாணமாக குப்புறப் படுத்திருக்க, பின்னே காமராவுடன் ஒரு விடியோகிராபர். அதில் அந்த டர்பன் அணிந்த உருவம் சொல்வதன் ஆங்கில மொழிபெயர்ப்பு “My Ass? You love My Ass?”

    இது போன்ற கீழ்த்தரமான, பொறுக்கித்தனமான சித்தரிப்புகளை யாருடைய பார்வைக்கு சார்லி ஹெப்டோ வைக்கிறது தெரியுமா தமிழ்? ஏற்கனவே சமூக ரீதியில் ஒடுக்குதலுக்கு உள்ளான ப்ரென்ஸ் நாட்டின் இசுலாமியர்களின் பார்வைக்கு இந்தக் கார்ட்டூன்கள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு காண்டெக்ஸ்டில் ஒரு புதிய பொருளைப் பெறுகிறது என்பது உங்களுக்குத் தெரியும் தானே? ” ஐரோப்பாவில் இசுலாமியர்கள்” என்ற காண்டெக்ஸ்டில் சார்லி ஹெப்டோவின் கார்ட்டூன்கள் ஒவ்வொன்றும் மிக மோசமான வசைகளே. இந்தக் கார்ட்டூன்கள் வசைதானென்றாலும் சவுதி அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் செய்யப்பட்டிருந்தால் நாம் வேறு வகையில் அணுகமுடிந்திருக்கும்.

    இவையெல்லாம் விமரிசனம் என்றும் இவற்றையெல்லாம் வெளியிடுவது கருத்துரிமை என்றும் உங்களைப் போன்ற முற்போக்காளர்கள் கூட கருதுவது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.

    இதுவரை நான் சொல்லவில்லை என்பதால் ஒரு முறை சொல்லி விடுகிறேன்– “சார்லி ஹெப்டோவில் ஜிஹாதிகள் தாக்குதல் நடத்தில் 17 உயிர்களைக் கொன்றதை வன்மையாக கண்டிக்கிறேன் ண்டிக்கிறேன் டிக்கிறேன் கிறேன் றேன் ன்”

    சார்லியின் மீதான தாக்குதலையும் வினவையும் ஒரே தராசில் நீங்கள் நிறுத்தியிருப்பது அடுத்த அதிர்ச்சி. சார்லி ஒரு பொறுக்கி, பொறுப்பற்ற ஏச்சுக்களும் அதன்வழி வியாபாரமும் தான் அதன் நோக்கம் – வினவு தளம் இத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது அவ்வாறு செயல்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.

    வினவோ அல்லது புதிய ஜனநாயகமோ இந்துமதத்தை விமர்சிக்கத்தான் செய்கிறது. அந்த மதத்தின் உள்ளே இருக்கும் முரண்பாடுகளை சிலவேளைகளில் காட்டமாக சுட்டிக்காட்டவும் செய்கிறது – ஆனால், அவையெல்லாம் இந்துப்பெரும்பான்மை உள்ள நாட்டில், அந்தமதத்தில் உள்ள மக்களை அதன் பிற்போக்குத்தனங்களில் இருந்து விடுவிக்கும் நோக்கில் செய்யப்படுபவை. முக்கியமாக அவை விமரிசனங்கள் – வெற்று வசைபாடல்கள் அல்ல.

    இந்துமதத்தை விமரிசிக்கும் வினவு, ’ஹரஹரமகாதேவகீ’யை ஆதரிக்கவில்லை என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன். இந்துமதத்தை விமரிசிக்கும் அதே வினவு தான், பெந்தெகொஸ்தே லூசுகளின் இந்துக்கடவுள்கள் எல்லாம் சாத்தன்கள் என்ற பிரச்சாரத்தை ஆதரிக்கவில்லை என்பதையும் உங்களுக்கு கவனப்படுத்துகிறேன்.

    யாராவது அரை கிராக்குகள் இந்துக் கடவுள்களை கெட்டவார்த்தை போட்டு ஏசுவது வினவு நண்பர்களுக்கு மகிழ்ச்சியளிக்காது என்றே புரிந்து கொள்கிறேன். விமர்சனத்தையும் வசைகளையும் பிரித்துப் பார்க்கும் திறன்கொண்டவர்கள் அவர்கள் என்பது எனது அவதானிப்பு.

    பொதுவாக அறிவுப்பூர்வமாக விவாதிக்கும் நீங்கள் இந்தமுறை என்னை ஏமாற்றி விட்டீர்கள் 🙁

    • சின்னச்சாமி,

      [1] நீங்கள் [கட்டுரையாளர் ] ஒப்புமை செய்து எழுதும் போது அதனை காணத்தவறிய சின்னச்சாமி , நான் ஒப்புமை செய்யும் போது மட்டும் அதனை பொதுமைப்படுத்துகிறீர்கள் என்று புலம்புவது ஏன் ?கட்டுரையாளர் எந்த விடயங்களை ஒப்புமை செய்து பொதுமை படுத்துகின்றார் என்பதை அறிய எனது பின்னுட்டம் 13.3 ஐ படித்து அறியுங்கள். [தலித் மக்களின் மீதான அவதூரு வார்த்தைகளால ஆன தக்குதல்களை நபியின் மீதாகார்ட்டூன்களுடன் ஒப்பிட்டது .]

      [2] நிர்வாண படம் பற்றி விளக்கத்தை பின்னுட்டம் 3.1ல் கொடுத்து உள்ளேன். படிக்கவும் . மதத்தின் பெயரால் எல்லாவற்றையும்[ youtub move ]பிரச்சனை ஆக்கிய மதவாதிகளுக்கு உரைக்கும் படி வரையப்பட்ட கார்ட்டூன் அது.

      [3]மத வெறியர்களை விமர்சிக்கும் போது அவர்களுக்கு கொள்கை அளவில் ,தத்துவார்த்த அளவில் தலைமை வகிக்கும் நபியை தானே கார்டூனில் வரைய வேண்டும். ஹிந்து பாசிசத்தை தோலுரிக்க ராமன் படம் எப்படி வ்ரைய்ப்ப்டவேண்டுமோ அதுபோன்று !நீங்கள் எழுதுவது பாப்பாத்தி மாட்டுகரி சாப்பிட்டார் என்று எழுதிய நக்கிரன் மீதான அதிமுக தாக்குதலை ஆதரிப்பது போன்று உள்ளது.

      [4]கெட்டவார்த்தை ,அதன் பயன்பாடு எல்லாம் பிரான்சு நாட்டையும் ,அவர்கள் மொழியையும் ,அவர்கள் கலாச்சாரத்தையும் கருத்தில் கொண்டு மதிப்பிட வேண்டியது . அவற்றை நம் நாட்டின் விழுமியங்களுடன்சேர்த்து குழப்பி கொள்கின்றீர்கள்.

    • சின்னச்சாமி,

      //காப்ஷனில் “ஒரு நட்சத்திரத்தின் பிறப்பு”//

      இந்த கேலிச்சித்திரங்கள் Innocence of Muhammad என்ற படத்தின் முன்னோட்டப் படத்தின் வெளியீட்டைப்பற்றி செய்தி முகமதிய நாடுகளில் பரவி கலவரங்கள் உருவாகி பலர் எரித்துக் கொல்லப்பட்டதற்கு பதிலாக வரையப்பட்டவை. பலரை எரித்துக் கொன்றதற்கான கோபத்தை இப்படித்தான் காட்டமுடிந்தது. அந்த படத்தில் நடித்த நாயகனைப் பற்றிய கேலிச்சித்திரங்கள் தான் இவை.

      //இது போன்ற *** சித்தரிப்புகளை யாருடைய பார்வைக்கு சார்லி ஹெப்டோ வைக்கிறது//

      நீங்கள் மோசடியாக ஜோடிப்பதைப் போல அவை ப்ரான்சில் உள்ளவர்களுக்கு மட்டுமில்லை. அவை உலகம் முழுக்க படத்தைப் பற்றிக் கேள்வி பட்டு கொந்தளித்துப் போன, பல மக்களை எரித்துக் கொன்ற முகமதியர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டவை. மொழி புரியாதே என்று அப்பாவித்தனமாக கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். கேலிச்சித்திரங்களுக்கு மொழி முக்கியமில்லை. அந்த சித்திரங்கள் இப்போது எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றன.

  16. உண்மை 1:

    என்னுடைய கருத்து : ஒரு ஹிந்து பெண்ணுக்கு பிரான்சில் காது வளையல் அணியக்கூடாது என்று தடை இருக்கும் போது அதனை அவர் அனுசரித்து அந்த சட்டத்தை மதித்து தான் செல்லவேண்டும்

    தென்றலின் பதில் : இதன்படி பார்த்தால் சவூதியில் பெண்கள் அடிமைப்பட்டு இருப்பது தான் சரி என்கிறது உங்களது கருத்து.

    உண்மை என்ன/என் பதில் : பிரான்சு அரசு 2004ல் கொண்டு வந்த சட்டம் (law 2004-228 of 15 March 2004) அனைத்து விதமான மத அடையாளங்களையும் பள்ளிகளில் தடை செய்கின்றது என்பதே. இது மதசார்பற்ற நாட்டில் வரவேற்க தக்க விடயம் தானே !? சிலுவைகள் ,பர்தாக்கள் ,காது வளையல்கள் என்று அனைத்து விதமான மத அடையாளங்களும் தடை செய்யபடுவது என்பது நியாயமானது தானே ?

  17. உண்மை 2:

    என்னுடைய கருத்து : நபியை நிர்வாணமாக வரைந்த ஒரு கார்டூன் இந்திய சட்ட ,பண்பாடு ,கலாச்சார விழுமியங்கள் படி பார்த்தால் அவரை இழிவு செய்கின்றது, எனவே தவறானது . ஆனால் பிரான்சு இன கலாசாரத்தில் அது,அந்த கார்டுன் தவறு இல்லை.

    தென்றலின் பதில் : இபிகோவின் அடிப்படையிலேயோ ஒரு நாட்டின் கலாச்சார அடிப்படையிலேயோ தான் கார்ட்டூன் கட்டுரையில் விமர்சிக்கப்படுகிறதா? உங்களது வாதப்படியே வந்தாலும் கூட பிரான்சு இன கலாச்சாரம், கருப்பின பெண்களை அம்மணமாக காட்டுவதை அனுமதிக்கிறதா? இனவாதத்திற்கு அங்கு கடுமையான தண்டனைகள் என்றெல்லாம் பேசுகிறார்களே! எங்கே போயிற்று சட்டவாதம்? எந்த வண்டு முருகனையும் இங்கு காணவில்லையே!

    என் பதில் : ஒவொரு நாட்டின் பண்பாடு ,கலாச்சார விழுமியங்கள் வேறுவேறாவை என்னும் போது அந்த நாட்டு மக்கள் கார்டூனை பற்றி மதிப்பிடுவதும் வேறுபடும் அல்லவா ? எனவே பிரான்சை பொறுத்தவரை அவர்கள ,பண்பாடு ,கலாச்சார ,சட்ட விழுமியங்கள் படிதான் கார்ட்டூன் பதிப்பிட வேண்டும்.

    • Yes it is Racist
      Anonymous
      4 upvotes by Aharon Konforti, Jennifer Yap, Bjorn Larsen, (more)
      Sorry, these answers have mostly been distortions of the reality of the magazine, and therefore incorrect. It is true that Charlie Hebdo is a mostly left-leaning publication, and that the specific image posted with the question is satire, but the apologists claiming that there is not a strong undercurrent of Islamophobia or racism in the magazine are entirely false. I will direct you to an article written by a former Charlie Hebdo writer: randomstatic.netNot racist? If you say so…

      http://posthypnotic.randomstatic.net/charliehebdo/Charlie_Hebdo_article%2011.htm

      This is the best summary of my feelings I’ve seen so far:
      What everyone gets wrong about Charlie Hebdo and racism

      Yes, the images have a layered sense of satire, but that doesn’t mean they don’t indulge in unnecessarily racist depictions of Black and Arab people.

      Additionally, the author makes a great point about how Charlie “punched down,” at oppressed minorities in France.

  18. உண்மை 3:

    என்னுடைய கருத்து :மதமும் அதன் அதிகாரமும் ,ஆளுமையும் ஒரு நாட்டின் [பிரான்சு இனத்தின் ] ஆளுமைக்கும் ,அதிகாரத்துக்கும் உட்பட்டு வரும்போது ,எந்த மதமும் அதிகாரத்தில் உள்ள இனத்திடம் தன் உரிமைகளை விட்டு கொடுத்து தான் செல்ல வேண்டும்.

    தென்றலின் பதில் :இது அப்பட்டமான பாசிசமாகும். ஆர் எஸ் எஸ் கூட்டமும் கோல்வால்கரும் ஹிட்லரும் முசோசலினியும் இதைத்தான் சொல்கிறார்கள். ஆகையால் இதன் வீரியத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்யவும். அதற்குத் தங்களின் எடுத்துக்காட்டையே பரிசீலிப்போம்.

    என் பதில் : பிரான்சு அரசு 2004ல் கொண்டு வந்த சட்டம் (law 2004-228 of 15 March 2004) பிரான்சு மக்களை முழுவதும் மத வேறுபாடு இல்லாமல் அனைவரையும் மத குறியீடுகளை பள்ளிகளில் துறக்க வைக்கின்றது. இது தவறான போக்கு என்று தென்றல் உணர்ந்தால் மிக்க நன்றி . நானும் பிரான்சு தேசமும் பாசிச்டுக்லாகவே வரலாற்றில் அடையாளம் காண பட போகின்றேம் . எமக்கு மிக்க மகிழ்வே

    • அடிக்கடி காப்பி பேஸ்ட் செய்யமுடியாது தமிழ் அவர்களே! இருந்தாலும் ஒரு முறை முயற்சிக்கிறேன்.

      “மதமும் அதன் அதிகாரமும் ,ஆளுமையும் ஒரு நாட்டின் [பிரான்சு இனத்தின் ] ஆளுமைக்கும் ,அதிகாரத்துக்கும் உட்பட்டு வரும்போது ,எந்த மதமும் அதிகாரத்தில் உள்ள இனத்திடம் தன் உரிமைகளை விட்டு கொடுத்து தான் செல்ல வேண்டும்.” இப்படி ஒரு பாசிசக் கருத்தை உதிர்த்துவிட்டு இப்பொழுது நான் பொதுசிவில் சட்டத்தைத் தான் சொன்னேன் என்று 2004 சட்டத்தைச் சுட்டிக்காண்பிக்கிறீர்கள்.

      அப்படியே உங்கள் வாதப்படியே வந்தாலும் ஒரு மதச்சார்பற்ற நாடு கல்வியிலும் அரசு அதிகாரத்திலும் மதத்தை தனியாகப் பிரித்துவிடுகிறது என்பதற்கும் இங்கு விவாதிக்கப்படுகிற மஞ்சள் பத்திரிக்கை சார்லி ஹெப்டோ விடயத்திற்கும் என்ன சம்பந்தம்?

      • என்னுடைய பின்னுட்டத்தில் 3.1ல் எந்த நாட்டை பற்றி பேசுகின்றேன்[பிரான்சை பற்றி ] என்பது தெளிவாக இருப்பினும் சவுதிக்கு காவடி எடுத்து கொண்டு போன தென்றல என்ன செய்ய ?மேலும் பின்னுடம் 3.1 ல் கூறும் கருத்துகளை கோர்வையாக புரிந்து கொள்ள இயலாத தென்றல் பிட்டு படம் போல துண்டு துண்டாக என் கருத்துகளை சிதைத்து அதற்கு பதில் அளித்தால் நான் பொறுப்பல்ல !

  19. உண்மை 4:

    என்னுடைய கருத்து : பிரான்சு மத சார்பற்ற நாடு ,தனி மனித கருத்துரிமைகளை உரிமைகளை அதிகபச்சம் மதிக்கும் நாடு , தன் காலனியத்தில் வாழ்ந்த மக்களை [இன சிறுபான்மை மக்களை தமிழ் ,அல்ஜீரியா ] ]வரவேற்று ஆதரிக்கும் நாடு என்பதால் இந்த கார்டுனுக்கு எல்லாம் எதிராக வினவு கட்டுரை எழுதி ஜல்லி அடிக்க கூடாது ,சலம்பகூடாது

    தென்றலின் பதில் :இந்தக் கருத்து முழுக்கவும் முட்டாள் தனமானது. பிரான்சு நாட்டு சேரிகளைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் பேசுகிற பேச்சு இது. இது ஒருபுறம் இருக்கட்டும். அல்ஜீரியா பிரான்சால் ஒட்டச் சுரண்டப்பட்ட நாடு! இதில் தன் காலனியத்தில் வாழ்ந்த மக்களை வரவேற்று ஆதரிக்கும் நாடு என்று சொல்வதன் அசிங்கத்தை சீரணிக்க இயலாது. அல்ஜீரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு அளித்த கடின உழைப்பையும் அதன் சுரண்டலையும் மறைக்கிறது தங்களின் கருத்து. பிரான்சு நாட்டு மேட்டுக்குடி தமிழர்களின் நிலைப்பாடு பற்றி அதிகமான கட்டுரைகளை கலையரசன் எழுதியிருக்கிறார். ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.

    என் பதில் : வரலாற்றில் ஒருநாடு பிற நாடுகளை அடிமை படுத்திய நிக்ழவு என்பது புதியது ஒன்றும் இல்லை. அடிமை பட்ட நாடு விடுதலை ஆகும் போது அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் நிகழ்வு என்பது பிரான்ஸ் தேசத்தில் நடந்த ஒரு சமத்துவ நிகழ்வு. தான் அடிமை படுத்திய நாட்டையும் அதன் மக்களையும் அவர்களின் விடுதலையின் போது மதித்து தன் நாட்டு குடிமக்களாக ஆக்கி உள்ளது பிரான்ஸ் . பிரான்சு குடியுரிமையை ஏற்பதும் மறுப்பதும் அல்ஜீரியர்கள் ,புதுசேரி தமிழ் மக்கள் உணர்வுகளை பொருத்தது.

    • மன்னிக்கவும். குடியுரிமை குறித்த உங்களது சமத்துவ பார்வையிலிருந்து மாறுபடுவதோடு தங்களது கருத்திற்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வெள்ளையனுக்காக துடிக்கிற மீசை என் அடிமயித்துக்குச் சமம் என்று சொன்ன சின்னமருதுவின் விடுதலை வீர மரபு அல்ஜீரிய விடுதலை இயக்கத்திற்கும் இருந்தது. புதுச்சேரி போராளிகளுக்கும் இருக்கின்றது. தாங்கள் ஆளும் வர்க்கம் தூக்கி எறியும் ஓட்டுச்சீட்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். ஆனால் புதுச்சேரியிலும் பிரான்ஸ்சேரியிலும் தனலாக எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனை என்பது வேறு. தாங்கள் மேற்கொண்டு அதுபற்றி தெரிந்துகொள்ளுமாறு கோருகிறேன். நன்றி.

      • அடிமயிறு துடிக்க வெள்ளையனுக்கு எதிரா போராடிய தீரனின் அன்னாச்சி திப்பு தான் பிரான்சு அரசுடன் முற்போக்கான உடன்படிக்கைகளை செய்து கொள்ள முயன்றாறு. அதன்மூலம் அவரின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியில் நில்பிரபுத்துவ்த்துக்கு எதிராக, அதன் அடுத்த கட்ட முதலாளித்துவத்தை நிலைநாட்ட முயன்ராறு. அத்தகைய திப்புவின் அரசியல் நடவடிக்கைகளை நான் அன்றைய காலகட்டத்தின் அரசியல் சூழல்களை கருத்தில் கொண்டு ஆதரிகின்றேன் . வரலாறு முக்கியம் தென்றலே !

        • அதே திப்பு ஆதரித்த புரட்சிகர பிரான்சு ஏகாதிபத்தியமாக சீரழிந்து போனபிறகு அது கருத்துரிமை நாடு என்று எந்த மங்குணி பாண்டியராவது சொல்வாரா? அங்குள்ள சிறுபான்மையினர் ஒட்டச் சுரண்டப்படுகிற பொழுது சமத்து வாழ்வு அளிக்கிறது பிரான்ஸ் என்று வாளை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வராதீர்கள் அமைச்சரே!

          • கொஞ்சம் இடம் கொடுத்தால், திப்பு சுல்தானைப் பற்றி புளுகித் தள்ளத் தொடங்கி விடுவார்கள். எல்லாம் ஒரு திட்டமிட்ட Television Documentary செய்த வேலை. 🙂 உண்மையில் திப்பு சுல்தான் தான் பிரான்சின் ஆதரவைக் கேட்டு முதலில் தூதனுப்பினான். “புரட்சிகர பிரான்சு” அதாவது பிரஞ்சுபுரட்சி (1787-1799) முடிவடைந்து பிரஞ்சுக் குடியரசு அமையு முன்பு அல்லது அந்த வருடத்திலேயே திப்பு சுல்தான் மண்டையைப் போட்டு (1799) விட்டான், அப்படியிருக்க திப்பு எப்படி “புரட்சிகர பிரான்சை” ஆதரித்திருக்க முடியும். இந்தியர் ஒருவர், அதிலும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை மாய்ந்து, மாய்ந்து நியாயப்படுத்தும் ஒருவர், பிரான்ஸ் ஒரு கருத்துரிமையுள்ள நாடு அல்ல என்று வாதாடுவதைப் பார்க்க, யாரும் தமிழ் தெரிந்த பிரஞ்சுக்காரர் வினவில் இல்லையே என்று எனக்கு, உண்மையிலேயே கவலையாக இருக்கிறது. ஆபிரிக்காவில் மட்டுமல்ல, அரேபியாவிலுள்ள அத்தனை முஸ்லீம்களும் கூட, வாய்ப்புக் கிடைத்தால், அவர்களிடம் இருக்கிற கடைசி ஒட்டகத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டுப் பிரான்சுக்குக் கப்பலேறி விடுவார்கள், இந்த லட்சணத்தில் சும்மா என்னென்னவோ எல்லாம் வெளுத்து வாங்குகிறார் தோழர் தென்றல்.

            • வியாசனுக்கு புரட்சி ஒரே நாளில் வந்து விட்டு கைதட்டி ரசித்து அண்ணனுடன் பீர் பாட்டிலோடு மாட்டுக்குடலை உவ்வே சொல்லிக்கொண்டே சியர்ஸ் போட்டு ரசித்துப் பார்த்த காமெடி பிலிம் என்று நினைத்துவிட்டார் போலும். இப்படிப்பட்ட அறிவாளிகள் எல்லாம் புரட்சிக்கு முன்பே, திப்பு இறந்துவிட்டார் என்று கதறுவதற்கு எத்தனை மஞ்சப் பந்துகள் போட்டாலும் தகும்!

              முசுலீம்கள் கடைசி ஒட்டகத்தை விற்றுவிடுவதைப் பற்றி வெளிநாட்டில் செட்டிலான இலங்கை வெள்ளாளசாதி வெறியர்கள் பேசுவது கடைந்தெடுத்த நக்கத்தனம்! சிங்களக்காடையனுக்கு நிலத்தைவிற்றுவிட்டு ஈழத்தமிழர்களையே பல்பெடிகள் எங்கள் காணி நிலத்தை ஆள்வதா? என்று சாதிவெறி கக்கிய வெள்ளாள மேட்டுக்குடி வர்க்கம் இன்றைக்கு கனடா நாட்டில் செட்டிலாகிவிட்டு வெள்ளாள இணையதளத்தில் நிலப்பெருமை பேசுவது வியாசனுக்குத் தெரியாது போலும். நாய் சிவலிங்கத்தை செக்குன்னு நினைச்சு நக்குன கதையாக இருக்கு வியாசனோட பின்னூட்டம்!

              • வியாசன் கூறியதில் தவறு இருந்தால் விளக்கவும். அதை விடுத்து உமது தனிப்பட்ட வெள்ளாள வெருப்பை காட்ட வேன்டிய தேவை என்ன.

                • அய்யா நன்மாறன். வெள்ளாள சாதிவெறி என்று குறிப்பிட்டுதான் எழுதியிருக்கிறேன். தாங்களோ தனிப்பட்ட வெள்ளாள வெறுப்பு என்பதாக கருதுகிறீர்கள். எல்லா சாதிவெறியையும் கண்டிக்கிற பொழுது, குறிப்பிட்ட சாதி மீது தனிப்பட்ட வெறுப்பு என்ற பேச்சுக்கே இங்கு இடம் கிடையாது.மேலும் இங்கு இந்த விவாதத்தில் எதற்காக வெள்ளாள சாதிவெறி என்று குறிப்பிடவேண்டும் என்று கருதுவீர்களேயானால் அதற்கு கீழ்கண்ட பதிலை பரிசீலிக்கக்கோருகிறேன்.

                  இந்த விவாதத்தில் குறிப்பிட்டிருக்கிற வெள்ளாள சாதிவெறி குறித்த தகவல் நிலம் தொடர்பானது. இதை முன்னமே வியாசனிடம் விவாதித்திருக்கிறேன். வியாசன் “ஆபிரிக்காவில் மட்டுமல்ல, அரேபியாவிலுள்ள அத்தனை முஸ்லீம்களும் கூட, வாய்ப்புக் கிடைத்தால், அவர்களிடம் இருக்கிற கடைசி ஒட்டகத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டுப் பிரான்சுக்குக் கப்பலேறி விடுவார்கள்” என்று கூறுகிற பொழுது ஆதிக்க சாதி மேட்டுக்குடி வெள்ளாள வெறியர்கள் எங்ஙனம் நிலத்தை எவ்விதம் விற்றுவிட்டு எப்படி பேசினார்கள் என்பதற்கு குறிப்பிட்ட இணைய தளத்தையும் மேற்கோள் காட்டித்தான் பேசுகிறேன். இந்துப் பாசிஸ்டுகளின் இசுலாமிய மதவெறியை அம்பலப்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பு.

                  இதையும் தாண்டி வியாசனையும் வெள்ளாள சாதிவெறியையும் ஏன் தொடர்பு படுத்த வேண்டும் என்று கருதுவீர்களேயானால் தாங்கள் நிலம் என்று மட்டுமல்ல, சைவம், மாலியம், பால் சொதி, நண்டு வாசம்-சாமி தீட்டு, அறவழியில் ஆடு கோழி பலியிடுதலைத் தடுத்தல், கலை, கலாச்சாரம் என்று வியாசன் கூறுகிற அத்துணை வாதங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது தான் பின்னணி.

                  குறிப்பு: என் இனத்தையே இவன் குறை கூறுகிறானே என்பதுதான் உங்களது ஆதங்கமா?

                  • சாதி வெறியை கண்டிப்பது சரி. ஆணால் வியாசனுக்கான உங்கல் பதில் பெரும்பாலும் வெள்ளால சாதி என்றெ வருகிறது. தனிப்பட்ட முறையில் சாதி பெயர் சொல்லி திட்டுவது சாதியை கூர்மையாக்குமே தவிர சாதி ஒழியாது. மாற்று கருத்து சொன்னால் நீ அந்த இனம் கூறுவது சரியல்ல. எனக்கு பார்ப்பான்,வந்தேறி என்று சொல்வதிலும் உடன்பாடு கிடையாது.

                  • //குறிப்பு: என் இனத்தையே இவன் குறை கூறுகிறானே என்பதுதான் உங்களது ஆதங்கமா?//

                    ஆதங்கம் ஒன்ரும் இல்லை நன்பரே. விமர்சிப்பது உஙகள் உரிமை.

          • “”””1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று “”””

            பிரஞ்சு புரட்சிக்கு முன்பே திப்பு பிரான்சுடன் தொடர்பு வைத்து இருந்தார் என்பதற்கான .., தென்றலின் மூக்கை உடைக்கும் ஆதாரம் —-வரலாற்றுக்கு நன்றி

          • “””பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.”””

            பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் , நடைபெறும் போது திப்பு பிரெஞ்சு அரசுடன் தொடர்பில் இருந்தார் —-வரலாற்றுக்கு நன்றி

  20. உண்மை 5:

    பிரான்சு அளவிற்கு சீனா ஒன்றும் அரசியல் ,பொருளாதார அகதிகளை வரவேற்கும் , தனிமனித சுதந்திரத்தை ஆறாதிக்கும் , கருத்து சுதந்திரத்தை உயிர் மூச்சாக நினைக்கும் நாடு ஒன்றும் கிடையாது. இன்றைய போலியான முதலாளித்துவ கம்யுனிசத்தை நடைமுறை படுத்தும் சீனாவை வினவோ ,தென்றலோ ஆதரிக்கவில்லை என்று கூறுவதை விட்டுவிட்டு ஏன் தேவை அற்ற கூச்சல் தென்றல் ? சீனாவின் இன்றைய அரசியல் ,பொருளாதார பாதையை ஆதரிக்கின்றீர்களா இல்லையா என்று கூறுங்கள் பார்ப்போம் ?

    மாதொருபனை பற்றி எழுதியதால் கேட்கின்றேன் :

    பெருமாளுக்கு கொடுத்த ஆதரவை சார்லிக்கு ஏன் வினவு கொடுக்க வில்லை ?

    • \\ இன்றைய போலியான முதலாளித்துவ கம்யுனிசத்தை நடைமுறை படுத்தும் சீனாவை வினவோ ,தென்றலோ ஆதரிக்கவில்லை என்று கூறுவதை விட்டுவிட்டு ஏன் தேவை அற்ற கூச்சல் தென்றல் ?\\

      தாங்கள் வேசிப் பட்டம் கட்டிவிட்டு அதற்கு ஆதாரத்தைத் தராமல் தேவைப்படுகிறவர் தன்னை கற்புள்ளவர் என்று நிரூபிக்கட்டும் என்று எதிர்பார்ப்பது வக்கிரம் இல்லையா? உங்களுக்கு இதில் சிறிதும் குற்ற உணர்ச்சியே இல்லை. இப்படி உங்களைப் பார்த்து தான் கேட்க முடியும். ஏனெனில் சீனாவை ஆதரித்தார்கள் வடகொரியாவை ஆதரித்தார்கள் என்பதெல்லாம் பொதுவெளியில் நம்மைப்போன்ற வாசகருக்கு வரக்கூடிய நியாயமான சந்தேகங்கள் என்பதைத்தான்டி இவையெல்லாம் முதலாளித்துவத்தின் நக்கனத்தனமான பிரச்சாரங்களாக இருக்கின்றன. கோடான கோடி முறை நாம் இந்த அவதூறு பிரச்சாரத்தை எதிர்கொள்ள வேண்டும்.

      அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்கும் கருவி. இதில் பாட்டாளிகளுக்கான அரசு என்பது முதலாளித்தவத்தை நொறுக்குவதற்கான கருவியும் உழைப்பாளிகள் தங்களுக்கான அதிகாரத்தை நிறுவிக்கொள்வதற்கான அதிகார அமைப்பும் ஆகும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த கருத்தில் எந்த நாட்டையும் பொருத்திப் பாருங்கள். அரசின் அடக்குமுறை அது சீனாவாக இருந்தாலும் பிரான்சாக இருந்தாலும் இந்தியாவாக இருந்தாலும் எளிதாக புரியும். வினவு போன்ற தளங்கள் எதை முன்னிறுத்துகின்றன என்பதும் புரியும். ஒன்றரை வருடங்களாக விவாதிக்கிற தங்களுக்கு இது தெரியவில்லை என்பது ஆச்சர்யமல்ல. இப்பொழுது தெரிந்துகொள்ளுங்கள். மேலும் இதை மக்களிடம் பல முனைகளில் பிரச்சாரமாக கொண்டு செல்லுங்கள். ஆனால் தாங்கள் செய்து கொண்டிருப்பது என்ன?

      இப்பொழுது தாங்களே பதில் சொல்லுங்கள்: “சீனாவின் இன்றைய அரசியல் ,பொருளாதார பாதையை ஆதரிக்கின்றீர்களா இல்லையா என்று கூறுங்கள் பார்ப்போம் ?”

      ——

      பெருமாளுக்கு கொடுத்த ஆதரவை சார்லிக்கு ஏன் வினவு கொடுக்க வில்லை ?

      வினவு சார்பாக பதில் சொல்ல இயலாது. ஆனால் எனது பார்வையை முன்வைக்க விரும்புகிறேன். சார்லிபோன்ற நியோ நாஜிக்களை பெருமாளோடு எப்படி ஒப்பிட முடிகிறது உங்களால்? வன்மத்திற்கும் ஒரு அளவில்லையா? சார்லி முஸ்லீம்களின் பிரச்சனையோடு மட்டும் சம்பந்தப்படவில்லை. ஆக தாங்கள் அர்த்தம் இன்றி உளறிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது எனது கருத்தாகும்.

      • ஒருவர் கம்யுனிஸ்ட்டா பிறந்துட்டா அரசியல் முடிவுகளில், சித்தாந்த முடிவுகளில் கற்புக்கு அரசனா/அரசியா இருக்கனும் என்று அவசியம் இருக்கா என்ன ?[ நேரடியாக வைக்க பட்டு உள்ள குற்ற சாட்டுக்கும் கேள்விக்கும் நேரடியாகவே பதில் அளிக்கலாம். உங்கள் அறிவுரைகள் , ஆலோசனைகள் எல்லாம் எமக்கு தேவை இல்லை ]

        [1]பிரான்சு ஒன்றும் வினவு மறைமுகமாக ஆதரிக்கும் போலியான கம்யுனிச சீனா அல்ல, கருத்துரிமைகளை,கார்டூன் வரையும் உரிமைகளை கொன்று ஒழிப்பதற்க்கு !

        [2]சீனாவின் இன்றைய அரசியல் ,பொருளாதார பாதையை ஆதரிக்கின்றீர்களா இல்லையா என்று கூறுங்கள் பார்ப்போம் ?”

        சார்லி நியோ நாஜிக்ககளா ? என்ற கேள்வி விவாதத்துக்கு உரியது . தமிழரசன் காட்டும் யூடோன்னெ உதாரணத்தில் கூட அந்த கார்ட்டூன் நியோ நாஜி ஒருவரின் மேலான கூர்மையாக விமரிசனமாக நாம் காண முடிகின்றது. [முதல் அடுக்கு ] இரண்டாவது அடுக்கில் காமரூன் தந்தைக்கும் ப்ரெஞ்சு தாய்க்கும் பிறந்த கலப்பினத்தவர் [யூடோன்னெ ] நியோ நாஜியாக இருப்பதை சார்லி கேள்வி எழுப்புகின்றது. வினவின் புரிதல் “சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் முட்டாள் தான் யூடோன்னெ” என்பதை சார்லி வலியுருத்துவதில் என்ன தவறு இருகின்றது ? இங்கே நியோ நாஜியான யூடோன்னெவை மிகவும் நுட்பமாக தொலுரிகின்ரது சார்லி. உங்களுக்கு மேலும் புரிதல் தேவை படுமாயின் ஒரு தலித் ஹிந்துத்துவாவை ஆதரிப்பதை சக மனிதர் என்ற அளவில் வினவு எதிர்கின்றது .[முதல் அடுக்கு ] . அவர் தலித்தாக இருப்பினும் அவருக்கு எதிரான அவரை இழிவு செய்யும் ஹிந்துத்துவாவை ஆதரிகின்றாரே என்றும் வினவு எதிர்கின்றது .[இரண்டாவது அடுக்கு ] இது என்ன நியோ நாஜிக்கொள்கையா ?

        • \\ நேரடியாக வைக்க பட்டு உள்ள குற்ற சாட்டுக்கும் கேள்விக்கும் நேரடியாகவே பதில் அளிக்கலாம். உங்கள் அறிவுரைகள் , ஆலோசனைகள் எல்லாம் எமக்கு தேவை இல்லை\\

          நேரடியாக தாங்கள் வைத்தது குற்றச்சாட்டு அல்ல என்பதையும் உங்களின் கருத்து, நாக்கு மேல் பல் போட்டு பேசும் நக்கத்தனமான பிரச்சாரம் என்பதையும் எனக்குத் தெரிந்தவரை சொல்லிவிட்டேன். இதை அறிவுரை, ஆலோசனை என்று கருதாமல் நேர்மை ரோசம் இருந்தால் கண்டனமாக கருதிக்கொள்ளுங்கள். இதனால் சனநாயகத்திற்காக போராடுவதாக கருதுகிற தாங்கள் மைய நீரோட்டத்தில் மேற்கொண்டு இணைந்தால் சரி.

          சிலர் வினவு போன்ற தளம் அரேபியாவில் காசுவாங்கிக் கொண்டு எழுதுகிறது என்று சொல்வதெற்கெல்லாம் வாசகனான நான் பதில் எழுதவில்லை. ஏனெனில் அதற்கான தராதரமமோ கண்ணியமோ நேர்மையோ ஏதும் அந்த வாதத்தில் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மறைமுகமாக சீனாவை ஆதரித்தார்கள் என்று தாங்கள் கூறுகிற அவதூறும் இதே வகையிலான கருத்துவிபச்சாரமே என்பதை மீண்டும் ஒருமுறை பதிவு செய்கிறேன்.

          \\ சார்லி நியோ நாஜிக்ககளா ? என்ற கேள்வி விவாதத்துக்கு உரியது .\\

          தாங்கள் சார்லி நியோ நாஜிக்கள் என்பதை ஆமோதித்து கருத்து கூறியவர் என்பதை மீண்டும் நினைவுபடுத்தி பாருங்கள். என்னை எதிர்க்கப்போய் இவ்வளவு சங்கடம் எதற்கு?

          \\தமிழரசன் காட்டும் யூடோன்னெ உதாரணத்தில் கூட அந்த கார்ட்டூன் நியோ நாஜி ஒருவரின் மேலான கூர்மையாக விமரிசனமாக நாம் காண முடிகின்றது. [முதல் அடுக்கு ] இரண்டாவது அடுக்கில் காமரூன் தந்தைக்கும் ப்ரெஞ்சு தாய்க்கும் பிறந்த கலப்பினத்தவர் [யூடோன்னெ ] நியோ நாஜியாக இருப்பதை சார்லி கேள்வி எழுப்புகின்றது. வினவின் புரிதல் “சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் முட்டாள் தான் யூடோன்னெ” என்பதை சார்லி வலியுருத்துவதில் என்ன தவறு இருகின்றது ? இங்கே நியோ நாஜியான யூடோன்னெவை மிகவும் நுட்பமாக தொலுரிகின்ரது சார்லி. உங்களுக்கு மேலும் புரிதல் தேவை படுமாயின் ஒரு தலித் ஹிந்துத்துவாவை ஆதரிப்பதை சக மனிதர் என்ற அளவில் வினவு எதிர்கின்றது .[முதல் அடுக்கு ] . அவர் தலித்தாக இருப்பினும் அவருக்கு எதிரான அவரை இழிவு செய்யும் ஹிந்துத்துவாவை ஆதரிகின்றாரே என்றும் வினவு எதிர்கின்றது .[இரண்டாவது அடுக்கு ] இது என்ன நியோ நாஜிக்கொள்கையா ?\\

          இந்தியாவில் ஆதிக்க சாதி திமிர் திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் மலத்தை திணித்தது. சார்லி ஹெப்டோ இனவெறி திமிரில் இதை தலை கீழாக கறுப்பினத்தவர்களின் குதத்தில் வாழைப்பழத்தை திணித்தது. இத்தகைய நாசிசத்தை புரிந்துகொள்ள துப்பில்லாத தாங்கள் மொட்டையாக வினவையும் நியோ நாஜி சார்லியையும் சேர்த்து எழுதி நுட்பம் என்று உளறிக்கொட்டுகிறீர்கள். இந்த முயற்சி எதற்காக?

          • சீனாவை வினவு ஆத்ரிக்கின்றது ,சீனாவின் இன்றைய அரசியல் ,பொருளாதார பாதையை ஆதரிக்கின்றீர்களா? என்ற என் கருத்துகளும் ,கேள்விகளும் தென்றலை ஹிஸ்டீரியா மன நோய் வந்த அளவிற்கு மாற்றி இப்படி கருத்து கூறுவதே கருத்துவிபச்சாரம் __________ மட்டுமே முன்னிற்கின்றது. வாழ்த்துக்கள் தென்றல் உங்களுக்கும் ,நீங்கள் சார்ந்து உள்ள கம்யுனிச அமைப்புக்கும்.

            நியோ நாசிசம் என்பது பிரான்ஸ் உட்பட பல நாடுகளிலும் ஐரோப்பா முழுவதும் பரவும் விசகிருமி தான் . அதனுடன் சார்லியின் கருத்தாகத்தை ,கார்டூனை ஒப்பிடுவது என்பது சரியானதே என்பது தான் என் கருத்து ! மேலும் சார்லி நியோ நாஜிக்ககளா ? என்ற கேள்வி விவாதத்துக்கு உரியது என்ற என் கருத்து எந்த விதமான முன்முடிவுகளும் இல்லாமல் சார்லியின் கார்டூன்களை ஆய்வு செய்ய உதவும்.யூடோன்னெ பற்றிய சார்லியின் கார்ட்டூன் ஒன்றும் நியோ நாசிசம் அல்ல என்று தெளிவாக விளக்கி உள்ளேன். யூடோன்னெ ஒரு நியோ நாசிச கொள்கை உடையவர் என்பதை தென்றல் தன் வசதிக்கு மறந்து விட்டு/மறைத்துவிட்டு தலித்துகளின் வாயில் மலத்தை திணித்தது போன்று சார்லி அவரை இழிவு செய்வதாக கூறுவது தென்றலின் அறிவு நானயத்தை சந்தேகத்துக்கு உட்படுத்துகின்றது .

            • தமிழ்,

              தாங்கள் முதலில் வினவின்/தென்றலின் மீது வைத்த குற்றசாட்டு.

              //பிரான்சு ஒன்றும் வினவு மறைமுகமாக ஆதரிக்கும் போலியான கம்யுனிச சீனா அல்ல, கருத்துரிமைகளை,கார்டூன் வரையும் உரிமைகளை கொன்று ஒழிப்பதற்க்கு !//
              —————————–
              தோழர் தென்றல் தங்களுக்கு அளித்த பதில்,

              //ஆனால் தாங்கள் வைத்த அவதூறுக்கு பதில் என்ன//
              //மற்றபடி அவதூறுக்கு பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள்.//

              அதாவது தாங்கள் சொன்ன அவதூறுக்கு பதில் சொல்ல முயற்சி செய்ய சொன்னார்.. அதை சொல்வதற்கு பதிலாக மடைமாற்றி பின்வருமாறு போகிறது தங்களது விவாதங்கள்……

              //சீனாவை வினவு ஆத்ரிக்கின்றது ,சீனாவின் இன்றைய அரசியல் ,பொருளாதார பாதையை ஆதரிக்கின்றீர்களா? என்ற என் கருத்துகளும் ,கேள்விகளும் //

              —————
              முதலில் அவதூறு சொன்னவர் தாங்கள். அதை தாங்கள் தான் நிரூபித்தாக வேண்டும். அதை விட்டு விட்டு….

              நன்றி.

              • சிவப்பு இதுவரை வினவில் இருந்தோ ,தென்றலிடம் இருந்தோ என் கருத்துக்கு நேரடியான மறுப்பு வரவில்லையே ! வரட்டும் அதன் பின் என் கருத்து அவதூறா ?,கருத்து விபச்சாரமா ? அல்லது உண்மையா ?என்று நிருபிக்கின்றேன் ! இல்லை என்று கூற சொல்லுங்கள் பார்போம் !

                நான் கூறும் கருத்து மடை மாற்றல் எல்லாம் இல்லை ! பக்கம் பக்கமாக வெட்டி ஞாயம் பேசும் தென்றல் பதில் கூறாமல் பம்வுவது ஏன் ? அவரிடமே பதில் அளிக்க கூறுங்கள் .

                • தமிழ்,

                  தாங்கள் வைத்த குற்றசாட்டை “அவதூறு” என்று அவர் கூறிவிட்டார். இது என்னைப் பொறுத்த வரை தங்களுக்கு அளித்த பதிலாகவே படுகிறது.

                  எனவே, அது அவதூறு அல்ல உண்மையாகவே வினவு மற்றும் தோழர் தென்றல் இன்றைய சீனாவை ஆதரிக்கிறார்கள் என்று தாங்கள் தான் நிறுவ வேண்டும்.

                  ஒருவேளை அவர் ஆம்/இல்லை என்ற பதில் தான் சொல்ல வேண்டும் என்று தாங்கள் நினைத்தால் அது விதண்டவாததிற்க்கே வழி வகுக்கும்.

                  நன்றி.

                  • சிவப்பு ,

                    பின்னுட்டம் 21.1.1ல் நான் வினவை பற்றி எழுப்பிய / கூறிய முதல் கருத்து “பிரான்சு ஒன்றும் வினவு மறைமுகமாக ஆதரிக்கும் போலியான கம்யுனிச சீனா அல்ல, கருத்துரிமைகளை,கார்டூன் வரையும் உரிமைகளை கொன்று ஒழிப்பதற்க்கு !” . இது ஒன்றும் அவதூரு கிடையாது .பிரன்சு தேசத்தில் அதன் நாட்டின் தலைவர் உட்பட எவர் மீது வேண்டுமானாலும் கருத்தை தெரிவிக்கலாம் .கார்ட்டூன் வரையலாம். ஆனால் போலியான கம்யுனிச நாடான சீனாவில் உள்ளூர் கம்யுனிச தலைவர்கள் மீது கூட பத்திரிகையில் கருத்து தெரிவிக்க முடியாது ,கார்டூன் வரைய முடியாது என்ற நிலை இருக்கும் போது அந்த நாட்டு மக்கள் கருத்து சுதந்திரத்துடன் தான் வாழ்கின்றார்களா ? என்பதே என்னுடைய கருத்தின் விளக்கம். வினவு சீனாவின் கருத்துரிமை அற்ற நிலையை பற்றிய இதுவ்ரை எந்த விமர்சனமும் எந்த கட்டுரையிலும் வைக்காத நிலையில் அது சீனாவின் கருத்துரிமை அற்ற நிலையை ஆதரிப்பதாக தான் பொருள். எனவே உண்மையில் வினவு கருத்து சுதந்திரத்தை உலகளாவிய நிலையில் ஆதரிகின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது . இனி என் கருத்துக்கு விளக்கம் கொடுக்க வேண்டியது தென்றலோ அல்லது வினவோ தானே ஒழிய நான் அல்ல !

                    பின்னுட்டம் 21.1.1ல் நான் கேட்கும் கேள்வி “சீனாவின் இன்றைய அரசியல் ,பொருளாதார பாதையை ஆதரிக்கின்றீர்களா இல்லையா என்று கூறுங்கள் பார்ப்போம் ?” என்பது என்னுடைய முதல் கருத்தை அடிப்படையாக கொண்டது என்பதை நீங்கள் எளிமையாக உணரமுடியும் .

                    ஒன்றை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன் : கருத்து சுதந்திரம் மட்டும் USSR ல் இருந்து இருந்தால் அங்கு கம்யுனிசம் தொழர் ஸ்டாலினுக்கு பின் வந்த போலியான கம்யுனிச தலைவர்களால்சீரழிக்கபட்டு பின்பு தகர்க்க பட்டு இருக்காது. இதே நிலை தான் சீனாவிலும் இன்று . மாவோவுக்கு பின் தலைமைக்கு வந்த கும்பல் சீனாவிலும் கம்யுனிச தத்துவத்தை சிதைத்து முதலாளித்துவ பாதையில் செல்லும் இன்றைய நிலையில் அவர்களை மிகவும் அடிப்படையான கருத்து சுதந்திரம் கூட இல்லாமல் அந்த நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் ? கம்யுனிசத்துக்கு எதிரி இப்போது யார் என்று உணருவிர்கள் என்று நம்புகின்றேன் !

                    • சிவப்பு நான் உங்களுக்கு பதில் அளித்து 18 மணி நேரத்துக்கு மேல் ஆகின்றது

                    • தமிழ்,

                      நான் உண்மையில் உங்களது கேள்விகளுக்கு இடையில் புகுந்தது தங்களது கேள்விக்கு பதிலளிக்கவல்ல. குறிப்பாக விவாதம் விதண்டவிவாதமாக ஆகாமல் இருக்கவே. அது மட்டுமல்லாமல் எனக்கு சிறிது வேலை பளு இருப்பதால் உங்கள் அனைவரது கருத்துக்களை படித்து மட்டும் வருகிறேன். பின்னூட்டங்களில் பங்களிக்க முடியவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

                      புரிதலுக்கு நன்றி.

    • அய்யா தமிழ்,நான் வினவை தொடர்ந்து வாசிக்கிறேன். வினவு எப்பொதும் தற்போதய போலி சீன கம்யுனிசத்தை ஆதரித்ததாக தெரியவில்லை.

      • Nanmaran,வினவு சீனாவின் கருத்துரிமை அற்ற நிலையை பற்றிய இதுவ்ரை எந்த விமர்சனமும் எந்த கட்டுரையிலும் வைக்காத நிலையில் அது சீனாவின் கருத்துரிமை அற்ற நிலையை ஆதரிப்பதாக தான் பொருள்.

        • அய்யா தமிழ்,குறிப்பிட்ட ஒன்றை(சீனாவின் கருத்துரிமை அற்ற நிலை) சொல்லி, அதற்கு வினவு கருத்து சொல்லவில்லை அதனால் ஆதரிக்கிரது என்று கூறுவது தவறு. சீனாவின் தற்போதய முதலாளித்துவம் சார்ந்த பொருளாதரத்தை வினவு தன் கட்டுரைகளில் விமர்சித்திருக்கிரது.நன்றி.

          • Nanmaran, சற்று பெறுமையாக இருங்கள் நான் உங்களுக்கு கண்டிப்பாக பதில் அளிக்கின்றேன் . அதற்க்கு முன் வினவு ,தென்றல் அல்லது சிவப்பு எனக்கு பதில் அளிக்கட்டும்

          • சரி நன்மாறன் இவர்கள் பதில் அளிப்பார்களா என்று தெரியவில்லை .என்னுடைய முதல் கருத்து குற்றச்சாட்டு : “பிரான்சு ஒன்றும் வினவு மறைமுகமாக ஆதரிக்கும் போலியான கம்யுனிச சீனா அல்ல, கருத்துரிமைகளை,கார்டூன் வரையும் உரிமைகளை கொன்று ஒழிப்பதற்க்கு !” . மக்களுக்கு கருத்துரிமையே இல்லாத சீனாவில் அம்மக்கள் எப்படி அவ் அரசின் தவறான அரசியல் பொருளாதார கொள்கைகளை எதிர்கொண்டு போராடுவார்கள் என்பது தான் நான் இப்போது எழுப்பும் கேள்வி ! வினவு சீனாவை அரசியல் ,பொருளாதாரம் போன்ற விடயங்களில் விமர்சனம் செய்வது உண்மை உண்மை உண்மை . அதனால் யாருக்கு பயன் . எனது இரண்டாவது கருத்து கேள்வி :“சீனாவின் இன்றைய அரசியல் ,பொருளாதார பாதையை ஆதரிக்கின்றீர்களா இல்லையா என்று கூறுங்கள் பார்ப்போம் ?” சீனாவின் மக்களின் கருத்துரிமைக்கு ஆதரவாக வினவு குரல் கொடுக்காமல் அதன் அரசியல் ,பொருளாதாரம் போன்ற விடயங்களை மட்டும் விமர்சனம் செய்வதால் தான் நான் வினவு ரகசியமாக சீன அரசின் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுகின்றது என்று கூறுகின்றேன் !

  21. ஒரு பதிவுக்கான மறுமொழி விவாதங்கள் கூட ஆரோக்கியமாகவும்,நாகரீகமாகவும் கருத்து செறிந்து இருப்பதும் பெருமை தருகிறது.

  22. “இந்துத்துவ அரசியலை இந்து எதிர்ப்பாளர்களால் ஒருபோதும் வெற்றிகரமாக நிகழ்த்த முடியாது. அதற்கு இந்துக்களின் மரபுடன், ஆன்மாவுடன் பேசும் காந்தியைப்போன்ற ஒருவராலேயே முடியும்.” (ஜெயமொகன்.இன்/69379)என கூறும் ஜெயமோகன். இஸ்லாமிய அடிபடைவாத அரசியலை இதே அளவுகோளுடன் அணுக மறுப்பதேன். இது ஜெயமோகனின் ஒரு பக்க சார்புக்கும் நேர்மையற்ற தன்மைக்கும் எடுத்துக்காட்டு.

  23. வினவு உங்களுடைய இந்த கட்டுரை உண்மைலயே நீங்கள் எழுதியத அல்லது தமுமுக கட்டுரைய? charlie hebdo பத்திரிகைய்ய நான் முழுமையாக ஆதரிக்கவில்லை அனால் இங்கு முதன்மை குற்றவாளி யார் ?

    Jyllands-Posten பத்திரிகை முகமது பற்றி 12 கார்ட்டூன் வெளியிட்டது அதற்கு முஸ்லிம்கள் பெரும் ஆர்ப்பட்டமும் முஸ்லிம் வெறியர்களால் 200 பேர் பலியானார்கள் எத்தனிக்கும் அது ஒன்றும் ஆபாசமாக வரைய வில்லை.

  24. சார்லி ஹெப்டோ ஒரு இடதுசாரி பத்திரிகை நாயமாக நீங்கள் சார்லி ஹெப்டோவை கண்டித்து எழுதியும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மற்றும் அடிபடைவாத்திகளை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திருக்க வேண்டும்.

  25. வினவுக்கு,

    நான் இந்த தளத்தில் பதில்கள் பதிவு செய்ய முடியவில்லை. நீல அளவுகள் ஏதேனும் உண்டா?

  26. அன்புள்ள வினவுக்கு,

    சார்லி ஹெப்டோ பற்றிய இந்த கட்டுரையை படித்தேன். இதில் இருக்கும் பொய்களும், சந்தர்பவாதமும் விவரிக்க முடியாதவை. ஏன் இந்த இரட்டை வேடம்? ஒரு கட்டுரை வரைவதற்கு முன்னர் அதில் கூறப்பட்டு இருக்கும் தகவல் சரியா என்று பார்க்க எவ்வளவு நேரம் பிடிக்கும்? இல்லை உங்கள் வசதிக்கு உண்மையை திரித்து பேசினால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற என்னமா? நான் கூறுவது எல்லாம் வெற்று குற்றச்சாட்டு அல்ல என்பதை இந்த பதிவு நிரூபிக்கும். இதில் எந்த பொய் பிரச்சாரமும், வெறியை தூண்டும் லிங்க், வார்த்தைகள் இல்லை. இதில் எதை சென்சர் செய்தாலும் சரியான விளக்கம் தர வேண்டும் (இதில் சென்சர் செய்யும் அளவுக்கு ஏதும் இல்லை என்பது ஏன் கருத்து. வினவு மாறுபட்டால் ஏன் என்று விளக்கவும்). ஒரு சில இடங்களில் சிறிது கடுமையாக பேசி இருப்பேன். அதை கொண்டு நான் கூறி உள்ள உண்மைகளை படிக்காமல் செல்ல வேண்டாம். நண்பர்கள் முழுவதுமாக இந்த பதிவை படித்து, இதில் உள்ள விசயங்களை தாங்களே ஆராய்ந்து வினவு பொய் பேசி இருக்கிறதா இல்லையா என்பதை தாங்களே முடிவு செய்து கொள்ளவும்.

    முதலில் சார்லி பத்திரிகை பற்றி ஒரு சிறு விளக்கம். அவர்களின் பெரும்பாலான படங்கள் பிரெஞ்சு வலதுசாரி கட்சியான நேஷனல் பிரான்ட் கட்சியின் பிற்போக்கு கொள்கைகளை சாடும். கட்சியை பற்றி படிக்க இங்கே செல்லலாம்:

    http://en.wikipedia.org/wiki/National_Front_%28France%29

    (இந்த கட்சியின் சின்னத்தை கவனிக்கவும். பிரெஞ்சு கொடியை நெருப்பு உருவில் இருக்கும். இதை நினைவில் கொள்ளவும். ஏன் என்று கொஞ்ச வரிகளில் புரியும்.)

    சார்லிக்கு சிறுபான்மை, பெரும்பான்மை மதம் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. எவன் தப்பு பண்ணாலும் சரமாரியாக நக்கல் வரும். அது போப் ஆனாலும் சரி, தீவிரவாதி ஆனாலும் சரி இல்லை யூத பாதிரி ஆனாலும் சரி. மதத்தை அவர்கள் எப்படி நினைகிறார்கள் என்பதற்கு ஒரு சிறு எடுத்துகாட்டு:

    http://www.understandingcharliehebdo.com/img/aux-chiottes.jpg

    இவ்வளவு தான் அவர்கள் மதத்திற்கும், பிரிவினைக்கும் கொடுத்த மரியாதை. அவர்கள் படங்கள் உங்களுக்கு அருவருப்பாக தோன்றலாம். ஆனால் பிரான்சையோ அல்லது பல மேற்குலக தேசங்களை பொறுத்தவரை இதல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. இதை போல் பல தொலைகாட்சி நிகழ்சிகளும், பத்திரிகைகளும் உண்டு. உதாரணத்துக்கு MAD Magazine மற்றும் South Park ஆகியவற்றை பார்க்கவும்.

    இது தவிர பல விசயங்களை கிண்டல் அடிக்கும் போது அந்த ஆதரவாளர்கள் எப்படி செய்வார்களோ, அப்படி படங்கள் அல்லது வார்த்தைகள் வரும். இதுவும் புதிது அல்ல. The Colbert Report, The Daily Show போன்ற பல தொலைகாட்சி நிகழ்சிகளும் இதை செய்கின்றன. ஒன்னும் தெரியாமல் பார்பவனுக்கு அவர்கள் வலது சாரி கட்சியின் பிரச்சாரத்தை சொல்லுவது போல தோன்றும். ஆனால் அது satire என்ற விஷயம் தெரிந்தால் தான் அவர்கள் வலது சாரி பிரச்சாரத்தை அவர்கள் பாணியில் கிண்டல் செய்கின்றனர் என்று விளங்கும். இது ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பரவலாக பின்பற்றப்படும் satire வடிவம்.

    இந்த கட்டுரையில் இதற்கு நேர் மாறாக என்னமோ கறுப்பின மக்களை அவதூறு செய்வது தான் சார்லிக்கு தலையாய கடமை போல தகவல் இருக்கிறது. இந்த பத்திரிகையின் எடிட்டர் (தாக்குதலில் கொல்லப்பட்டவர்) இனவாதத்தை வன்மையாக எதிர்த்தவர். இனவாதத்தை எதிர்க்கும் பல படங்களை வரைந்தவர் என்பது எல்லாம் இங்கு வினவு கண்ணனுக்கு தெரியாது. அவரை பற்றிய தகவலை இணையத்தில் தேடினாலே சுலபமாக இது தெரியும். ஆனால் இதலாம் வினவின் பத்திரிகை தர்மத்தை மீறும் செயல் அல்லவா. அதனால் நடக்காது. அவரை பற்றிய விக்கி பதிவு இங்கே:

    http://en.wikipedia.org/wiki/Charb

    இதில் இருந்தே சார்லி ஹெப்டோ, இந்த கட்டுரை கூறியது போல இனவாத, மதவாத பத்திரிகை இல்லை என்பது புரிந்து இருக்கும். இருந்தாலும் மக்களுக்கு தெளிவாக புரிய வேண்டும் என்பதால் இங்கு விமர்சிக்கப்பட்ட படங்களுக்கும் விளக்கம் அளிக்கிறேன்.

    1. முதலில் அந்த நாசி சின்னம் பற்றிய படம். படத்தை இங்கு பார்க்கலாம்:

    http://www.understandingcharliehebdo.com/img/bonne-annee-quenelle.jpg

    (லிங்க் வினவால் சென்சர் செய்ய பட்டால் நண்பர்கள் bonne annee quenelle charlie hebdo என கூகிள் தேடல் செய்யலாம்).

    இந்த கட்டுரையில் முதல் விளக்கம் சரி. உன் சின்னத்தை எடுத்து அங்கே சொருகி கொண்டு போ (நம்ம ஊரில் வாயையும் அதையும் மூடி கொண்டு போ என்பதன் கொஞ்சம் கடுமையான மேற்கத்திய வடிவம்), உன் பிரிவினை வாதம் இங்கே வேண்டாம் என்கிறது. இது வரை சரி. இதற்க்கு பிறகு தான் கட்டுரை ஆசிரியரின் பிரெஞ்சு ‘புலமை’ வருகிறது. போன் அனானியா என்பதற்கு அவரின் விளக்கம் – //பிரித்துச் சொன்னால் நல்ல பைனாப்பிள் / சேர்த்துச் சொன்னால் போனானியா//. அனானிய என்றால் பைனாப்பிள், போன் என்றால் நல்ல என்பது அவரின் புரிதல். இதில் பைனாப்பிள் பிரெஞ்சில் ananas என்று எழுதப்படும். அனால் இங்கு இருபதோ annee என்ற வார்த்தை. வார்த்தை விளக்கம் பல்லை இளித்து விட்டது. தன் வசதி, தன் தியரி படி வார்த்தை வேறுபாடு நடக்கிறது. சரி அப்போது bonne annee என்றால் என்ன விளக்கம் என்று கேட்பீர்கள் அல்லவா? இது வார்த்தை அல்ல, ஒரு phrase. பிரெஞ்சில் புது வருட வாழ்த்துக்கள் என்பதை இப்படி சொல்லுவார்கள்: bonne année (நம்பாத மக்கள் கூகுளில் Happy New Year in French என தேடி பார்துகொள்ள்ளலாம். இதையே அன்னாச்சி பழ விசயத்துக்கும் பயன் படுத்தி கொள்ளவும்). இந்த பதிப்பு வெளியான நாள் 25/12/2013. இந்த இனவெறியனை நக்கல் அடித்து நல்ல வருடம், நல்ல சின்னம் என வர்ணிக்கிறது சார்லி ஹெப்டோ.

    2. அடுத்து கருப்பின நீதிபதி பற்றிய படம். இது வரைய பட்டது ஒரு வலது சாரி அரசியல் வாதி, இந்த நீதிபதியின் முகத்தை குரங்கின் படத்தில் இணைத்து தன் முகநூலில் ஷேர் செய்ததை கிண்டல் அடித்து. அந்த செய்தி இங்கே:

    http://www.lemonde.fr/politique/article/2013/12/03/une-ex-candidate-du-fn-exclue-du-parti-pour-avoir-compare-taubira-a-un-singe_3524837_823448.html

    அதை கிண்டல் செய்து, நேஷனல் front கட்சியின் பிரச்சார போஸ்டர் போல வரைய பட்டு இருக்கிறது இந்த படம். படத்தில் இருக்கும் வாசகம் அவர்களின் முழக்கத்தின் கிண்டல் வடிவம். அதன் மொழிபெயர்ப்பு: இனவாத நீல படையே, இணை! என்பது. இது அந்த கட்சியின் போஸ்டர் என உணர்த்த அவர்களின் சின்னம் படத்தின் இடது பக்கம் உள்ளது (மேல கூறிய பிரெஞ்சு கொடியின் தீ சின்னம்).

    இந்த கிண்டல் புரியாமல் உடனே அவதூறு என குதிப்பது ஏன்?

    (நீள அளவு கட்டுபாட்டின் காரணமாக பதில் இரண்டு பகுதிகளாக பிரித்து உள்ளேன். இரண்டாம் பகுதி கீழே)

    • சந்துரு சார்,

      கணிசமான முயற்சிகள் எடுத்து பதிவு தொடர்பாக பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்கள். இதை வரவேற்கிறேன். தங்களது கருத்துக்களை படித்துவிட்டு வினவு கூறுவது பொய்யா மெய்யா என்று வாசகர்களே முடிவு செய்துகொள்ளட்டும் என்று ஒரு குறிப்பு தந்திருக்கிறீர்கள். தங்களது கருத்துக்களை வாசித்த பொழுது வினவு முன்வைக்கும் கண்ணோட்டம் சரி என்ற முடிவிற்கு வந்தேன். அதில் பொய்யும் சந்தர்ப்பவாதமும் கிடையாது என்பது நான் வந்தடைந்த முடிவாகும். அதற்கான எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

      ————————————————

      சார்லியைப் பற்றிய தங்களது புரிதலை, கார்ட்டூன்களுக்கான விளக்கத்தை வைப்பதற்குப் பின் விவாதிப்போம்.

      —————————————————–

      முதலில் நாசி சின்னம் குறித்து;

      எந்தக் கார்ட்டூனுக்கும் மொழிப்புலமை என்பது முதன்மையானது அல்ல. மொழி ஒரு கருவி மட்டுமே. வரலாற்று அறிவும் கண்ணோட்டமும் தான் முதன்மையானது. பிரெஞ்சு மொழிபெயர்ப்பு குறித்து தாங்கள் வழங்கிய விளக்கத்திற்கும் கார்ட்டூனுக்குமே ஒரு சம்பந்தமும் இல்லை. தங்கள் பார்வையின் படி, கேப்சனுக்கு கொடுக்கிற விளக்கம் “bonne année (நம்பாத மக்கள் கூகுளில் Happy New Year in French என தேடி பார்துகொள்ள்ளலாம்.” என்பதாகும். இதன் மூலம் “இந்த இனவெறியனை நக்கல் அடித்து நல்ல வருடம், நல்ல சின்னம் என வர்ணிக்கிறது சார்லி ஹெப்டோ.” என ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்.

      ஆனால் கட்டுரை முன்வைக்கிற கேள்வி என்ன? வாயையும் பொச்சையும் மூடிட்டு போ என்று சொல்வதற்கு வாழைப்பழம் போன்ற பொருளை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்று கேட்கிறது. இதற்கு எங்கேயாவது உங்களது பதில் விளக்கம் தருகிறதா? ஏன் தரவில்லை? நொறுக்குத்தீனி வர்க்கங்களையும் பாப்கார்ன் தலைமுறையையும் தன்னகத்தே கொண்டிருக்கிற வர்க்கங்களுக்கு சிரிப்பதற்கு எதைச் சொருகினால் என்ன? என்பதாக சார்லி ஹெப்டொ இதைத் தேர்ந்தெடுக்கவில்லை. இது முதல் கருத்து.

      நாஜி வணக்கத்தைப் பிரதிநிதிப்படுத்த வாழைப்பழ வடிவம் பயன்படுகிறது என்று எந்த முட்டாளும் கூறமாட்டான். இது இரண்டாவது கருத்து.

      ஆக வரைபடத்தின் கேப்சனுக்கும் வாழைப்பழம் போன்ற பொருளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று தெள்ளிதின் விளங்கும். இதனால் உங்களது வினவைப் பற்றிய அவதூறு தானாகவே அடிபட்டு போய்விடுகிறது. உங்களது விளக்கமும் முழுக்கவும் தவறு என்றாகிவிடுகிறது. இதை மேலும் கீழ்க்கண்டவாறு நிறுவலாம்.

      கட்டுரையாளர், பைனாபிள் குறித்து சொல்ல வேண்டிய விசயத்தை இங்கு பகிரவில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் நாம் முன்வைக்கிற கண்ணோட்டத்திற்கும் அது எதிரான ஒன்று. அதே வேளை கட்டுரையில் கொடுக்கப்பட்ட லிங்குகளில் பைனாபிள் தனிச்சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது (http://souciant.com/2015/01/why-context-matters/).

      வாதம் என்பது இதுதான்; ஒருவேளை சார்லி அந்நடிகரின் குதத்தில் பைனாபிளைச் சொருகியிருந்தால் அது இனவாதத்தை தோலுரிப்பதாக இருந்திருக்கும் என்று ஒரு வாதத்தை வைக்கிறது. ஏன்? Ananas என்ற பைனாபிள் வார்த்தை ஹோலோஹாஸ்டை குறிக்கும் Shoahnanas என்ற பாடலின் பிரதிநிதியாக இருக்கிறது என்பது தான். ஆனால் சார்லியால் அப்படி செய்ய முடியாது. சார்லியின் கருத்துரிமை ஹோலோஹாஸ்ட்டை தொடாது. சார்லியும் தாங்களும் சேர்ந்து அம்பலப்படுகிற இடம் அது. கருத்துரிமை கணவான்கள் நாணித் தலைகுனிய வேண்டிய இடமும் அது.

      ஆனால் அதே சார்லி என்ன செய்தது? வாழைப்பழத்தைச் சொருகியதன் மூலமாக தான் ஒரு இனவெறியன் என்று காட்டிக்கொண்டது. அது கட்டுரையில் சிறப்பாக விளக்கப்பட்டிருக்கிறது. அதை மேலும் இங்கு விளக்கவேண்டிய அவசியம் இல்லை.

      ஒரு வேளை காமெடி நடிகரின் இனவாதத்தை மேலும் அம்பலப்படுத்துகிற பைனாபிளைச் சொருகி கேப்சனை மாற்றினால் சரியாகிவிடுமா? என்ற கேள்விக்கும் வினவு நோ சொல்வதாகத்தான் எனக்குப் படுகிறது. இது ஏன்? ஏனெனில் அதுவும் வசவாகத்தான் இருக்கிறதே ஒழிய மஞ்சள் பத்திரிக்கையின் தராதரத்திற்கு இணையானதுதானே தவிர இதில் சட்டையரோ அரசியல் கூர்மையோ, விமர்சனக் கண்ணோட்டமோ இந்தவிதத்தில் வைக்கமுடியாது என்று சொல்வதன் மூலமாக நாங்கள் சார்லி அல்ல என்று திட்டவட்டமாக சொல்கிறது. புரிந்திருக்கிறேன். இதில் எனது புரிதல் கூடக் குறைய இருந்தாலும் உங்களது விளக்கம் இங்கு முற்றிலும் பொருந்தாமல் இருப்பதை காணலாம்.

      • திரு தென்றல்,

        தங்கள் கருத்துக்கள் மீண்டும் மீண்டும் ஒரு புரிதல் இல்லாமையை காட்டுகிறது.

        //எந்தக் கார்ட்டூனுக்கும் மொழிப்புலமை என்பது முதன்மையானது அல்ல. மொழி ஒரு கருவி மட்டுமே. வரலாற்று அறிவும் கண்ணோட்டமும் தான் முதன்மையானது.//

        இது ஏன் அய்யா? lost in translation என்று ஒரு வாக்கியம் உண்டு. நீங்கள் கூறியது:

        //வாயையும் பொச்சையும் மூடிட்டு போ என்று சொல்வதற்கு வாழைப்பழம் போன்ற பொருளை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?//

        அது வாழைபழம் அல்ல அய்யா. அது quenelle எனப்படும் மீன் கொண்டு செய்யப்படும் ஒரு பிரெஞ்சு பதார்த்தம். நீ செய்த quenelle சின்னத்தை பொச்சில் அடைத்து கொண்டு இங்கு இருந்து ஓடி விடு என்பதை சொல்லுவதற்கு அந்த quenelle பதார்த்தத்தை உபயோகிக்கிறது. நாசி சின்னத்தை நேரடியாக பத்திரிகையில் வெளியிடாமல் அதே சமயம் இந்த quenelle சின்னதுக்காக அவனை கண்டிக்கிறோம் என்று சொல்ல quenelle பதார்த்தம் வருகிறது. இதன் உருவம் வாழைபழம் போல இருபதால் ஒரு சில மக்கள் தலையை சுற்றி மூக்கை தொடும் விதமாக annee – annanas (வருடம்-அன்னாச்சி-வாழைபழம்) என்று விளக்க முயற்சிகின்றனர். ஆனால் இந்த வார்த்தை பிரிவு தவறு, bonne annee என்பது புது வருட வாழ்த்துக்கள் என்பது என்று மக்களுக்கு தெரியாது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ் இரட்டை கிளவியை (சல சல, பட பட) தனி தனியாக பிரித்து விளக்கம் காணுகின்றனர். இது எவ்வளவு அபத்தம் என்பது இப்போது தங்களுக்கு புரியும் என்று நினைகிறேன். இதில் எந்த பழத்துக்கும் வேலை இல்லை. அது பழமே இல்லை, வார்த்தையும் எந்த பழத்தையும் குறிக்கவில்லை என்னும்போது பழம் எப்படி அய்யா உள்ளே வந்தது? சார்லி இனவாதி என நிரூபிக்க துடிக்கும் ‘நல்லவர்கள்’ இந்த விளக்கத்தை தந்துள்ளனர்.

        தாங்கள் லிங்க் செய்த பதிப்பு என்ன சொல்லுகிறது என பார்த்து விடுவோமே:

        When I first saw the image, I did not think ‘racist’ but ‘Why a banana? Surely a pineapple would be more appropriate and potentially satisfying to see.’ After all, ‘Ananas’ or ‘pineapple’ references Shoahnanas, a song used to mock the Shoah or the Holocaust, and a perceived Jewish stranglehold on French culture and its commemoration porn. Like the quenelle, it is code, making context valuable even in this clumsy explanation.

        My question about the banana was soon answered though, when I went to his web page and saw his holiday wishes video: Bon Ananas! Perhaps it’s just me, but it sounds a bit like ‘banana’. Or more likely, it suggests ‘Y’a bon banania’, a reference to an advert that featured a Senegalese soldier- it is a fraught icon in France, a reminder of a racist colonial legacy as much as a good wish.

        With this context, the image takes on a different meaning. For those not familiar with Dieudonné, this is a random black man sodomised by a banana. But taken further, and read through a different set of interpretative grids, this offers something that pokes fun at a prominent figure through a combination of word play (for which he is known) and crudeness. It simultaneously deploys and reflects upon a racist and colonial legacy to boot. It’s not simply Dieudonné who is skewered here.

        கட்டுரை எழுதியவர் இந்த விளக்கத்தில் பிரான்சின் காலனி வரலாற்றை இது சாடுகிறது என்று தானே கூறி இருக்கிறார்? அவர் கூறுவது a reminder of a racist colonial legacy என்று. அதாவது இதே போல ஆப்ரிக்க காலனிகளை பிரான்ஸ் நடத்தியது என்று சார்லி பிரான்சின் காலனியாதிக்க வரலாற்றை குத்திக்காட்டி உள்ளதாக கூறுகிறார்.//It’s not simply Dieudonné who is skewered here.//
        (fucked in the ass என்பது ஆங்கில பேச்சு. தமிழில் இதை சரியாக மொழிபெயர்ப்பு செய்ய தெரியவில்லை. மன்னிக்கவும். வினவு இதை வேண்டுமானால் நீக்கி விட்டு, சரியான தமிழ் மொழி பெயர்ப்பை இங்கு பொருத்தலாம்.)

        இப்போது சொல்லுங்கள் தென்றல். இந்த படம் எப்படி நிறவெறி, இனவெறி கற்பிக்கிறது? தாங்கள் கொடுத்த லிங்கின் பதிப்பே தங்கள் கருத்தை தவறு என நிரூபித்து விட்டதே!

      • சின்னசாமி ,தென்றல் ,சந்துரு,

        தென்றலும் ,சின்னசாமியும் விளக்கம் அளிக்க பட்ட கார்டூனை பற்றி மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புகின்றார்க்லே தவிர கொடுக்கப்படும் விளக்கத்தை படிப்பது இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது.

        யூத எதிர்பிற்காக [நியோ நாஜி கொள்கைக்காக, (anti semitism)] பிரான்சு நீதிமன்றத்தில் தண்டிக்க பட்டவர் தான் Dieudonné. அவரை விமர்சிக்க வரையப்பட்ட கார்ட்டூன் வினவு கட்டுரையின் பார்வையில் இரண்டு அடுக்குகளை [layer ] கொண்டது.

        வினவு விமர்சனத்தின் முதல் அடுக்கு :

        அந்தப் படத்தில் உள்ளவர் பெயர் யூடோன்னெ ம்பாலா ம்பாலா (Dieudonne M’bala M’bala) – இவர் ஒரு ப்ரெஞ்சு நகைச்சுவையாளர். யூத வெறுப்பாளராகவும் நாஜி ஆதரவாளராகவும் அறியப்பட்டவர். இவர் க்வென்னெல்லி என்ற சைகை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தார் – அது நாஜி வணக்கத்தின் தலைகீழ் வடிவம். படத்தில் அவரது பின்புறத்தில் சொருகியிருப்பது வாழைப்பழம் போல் தோன்றும் ஒரு உணவுப் பதார்த்தம்; அதன் பெயரும் க்வென்னெல்லி தான். இந்தப் படத்தை இந்தளவுக்குத் தகவலோடு அவதானிக்கும் எவரும் அதில் இருக்கும் பகடியைப் புரிந்து கொள்ள முடியும். நியோ நாஜி ஒருவரின் மேலான கூர்மையாக விமரிசனமாக புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்தக் கேலிச்சித்திரத்தில் அது ஒரு அடுக்கு (Layer) மட்டும் தான்.

        இரண்டாவது அடுக்கு : கேலிச்சித்திரத்தின் நாயகன் யுடொன்னே, காமரூன் தந்தைக்கும் ப்ரெஞ்சு தாய்க்கும் பிறந்த கலப்பினத்தவர் என்றாலும் அவர் இனவாதத்துடன் ,நியோ நாஜி கொள்கையுடன் இருக்கின்றதை சுட்டி காட்டுகின்றது. நான் முன்பே கூறியது போன்று தலித் மக்கள் ஹிந்துத்துவாவுக்கு ஆதரவு அளித்தால் அவர்களை இரட்டை நிலைகளில் [layer ] விமர்சிக்கும் வினவின் கட்டுரை போன்றது இந்த கார்டூன் . ஒரு தலித் ஹிந்துத்துவாவை ஆதரிப்பதை சக மனிதர் என்ற அளவில் வினவு எதிர்கின்றது .[முதல் அடுக்கு ] . அவர் தலித்தாக இருப்பினும் அவருக்கு எதிரான அவரை இழிவு செய்யும் ஹிந்துத்துவாவை ஆதரிகின்றாரே என்றும் வினவு எதிர்கின்றது .[இரண்டாவது அடுக்கு ] இது என்ன நியோ நாஜிக்கொள்கையா ?

    • II. பிரெஞ்சு நீதி அமைச்சர் கார்ட்டூன் குறித்த பார்வை

      பிரெஞ்சு நீதி அமைச்சரை குரங்காக சித்தரிக்கும் கார்ட்டூனுக்கு தாங்கள் சார்ந்து நிற்கிற வாதம் என்ன? வலது சாரி கும்பல் வரைந்த கார்ட்டூனைத்தான் சார்லியும் பயன்படுத்தியது; இது சார்லியின் தனித்துவம் என்கிறீர்கள். முதலில் உங்களது வாதப்படியே வந்தாலும் இங்கு கார்ட்டூனுக்கு எந்த வேலையும் இல்லை. சார்லி சொல்கிற கேப்சனுக்குத் தான் முக்கியத்துவம் அதிகம். அதாவது மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்று ஆளும் வர்க்கம் பரிவோடு எச்சரிக்கை செய்துவிட்டு விற்பனையில் சக்கைபோடு போடுகிறபொழுது சார்லி ஹெப்டோவும் இனவாத நீலப்படையெ இணை! என்று காத்திரமாகச் செய்திருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் வினவோ இன்னபிறரோ டாஸ்மாக்கை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள் அதை எதிர்க்கிறார்கள் என்றுவருகிற பொழுது அவர்களுக்கு காப்சன் தெரியவில்லை என்று சொல்கிறீர்கள். டாஸ்மாக்கை விளம்பரப்படுத்தும் அரசோ இனவாத வெறியை விளம்பரப்படுத்தும் சார்லி ஹெப்டோவோ நியாயமானவர்கள் என்று முடிக்கிறது உங்களது வாதம்.

      இந்த மனநிலை சட்டவாத மனநிலை. செய்றத செஞ்சுக்கோ, ஆனா போடுறத போட்டுறு என்று சொல்கிறது. இதையும் மீறிக் கேள்வி வந்தால் கேள்வி கேட்பவனின் பாமரத்தனத்தை புரியவைத்துவிட்டால் போதுமானது என்று நினைக்கிறது உங்களது பதில். கருத்துரிமையைக் கொச்சைப்படுத்துகிற ஆபாசம் இது.

      குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் போன்று விரசமாக கதையை எழுதி விற்றுத் தீர்த்துவிட்டு கதையின் கடைசியில் வஞ்சகர்களின் பாலியல் கொடுமையை சட்டம் தண்டிக்குமா என்று முடிப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? இது கருத்துச் சுதந்திரமா?

      • உங்களுக்கு satire வடிவம் புரியவில்லையா, இல்லை இந்த விளக்கத்தில் என்ன குழப்பம் என்று தெரியவில்லை. satire பல வடிவங்களில் வரும். தாங்கள் The Colbert Report எனப்படும் நிகழ்ச்சியை பற்றி கேள்விப்பட்டு இருக்கலாம். அப்படி இல்லாவிட்டால் youtube மூலமாக சில நிமிடங்கள் அதை பார்க்குமாறு கேட்டுகொள்கிறேன். அமெரிக்காவின் வலதுசாரி பிரச்சார தொலைகட்சியான பாக்ஸ் நியூஸ், The O’Riley Factor எனும் நிகழ்ச்சியை நடத்திவருகிறது. நாட்டில் நடக்கும் எல்லா பிரச்சினைக்கும் சிறுபான்மையினர் காரணம், வஞ்சிக்க படுவது வெள்ளை இன மக்கள், முஸ்லிம் அனைவரும் அழிக்க படவேண்டியவர் என்பது இந்த பாக்ஸ் நியூஸ் உதிர்க்கும் சில தத்துவங்கள். Colbert Report இதே நிகழ்ச்சியின் பணியில் அரசியல் விமர்சனம், பாக்ஸ் நியூஸ் பற்றிய விமர்சனம், உலக நிகழ்வு விமர்சனம் உட்பட எல்லாம் செய்யும். இது satire என தெரியாத மக்களுக்கு Colbert report நிகழ்ச்சியும் ஒரு வலது சாரி பிரச்சார நிகழ்ச்சி போல தெரியும். satire என புரிந்தால் தான் அவர்கள் விமர்சனம் புரியும். நம் தேசத்தில் இது போல நிகழ்வுகள், நிகழ்சிகள் இல்லை. அதனால் நமக்கு அதை புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம். உங்கள் டாஸ்மாக் உதாரணத்தின் மூலமே அதை விளக்க முயல்கிறேன்.

        அரசு மதுவிற்பனை செய்கிறது. அதை எதிர்த்து, விமர்சித்த ஒரு தோழரை நாட்டின் வருமானத்தை திருட முயலும் திருடன் என ஒரு அரசியல்வாதி திருடன் போல புகைப்படம் வெளியிடுகிறார். இதற்க்கு வினவு அந்த திருடன் படத்தை சித்திரம் வரைந்து குடிகார தமிழர்களே எங்களை ஆதரியுங்கள் என தலைப்புடன் வெளியிடுகிறது. அந்த கட்சியின் முழக்கம் தமிழர்களே எங்களை ஆதரியுங்கள் என்பது என கொள்ளவும்(இவ்வாறு நடந்து என கொள்ளவும்). இப்போது இந்த கார்டூனை பார்க்கும் நம் மக்களுக்கு, வினவு அந்த கட்சி அவ்வாறு படம் வெளியிட்டதை கண்டித்து, அது மக்களை குடி மூலம் எப்படி சீரழித்து உள்ளது என்பதற்கான விமர்சனத்தையும் அதே படத்தில் செய்கிறது என்று புரியும். இதையே வினவை பற்றி ஒன்றும் தெரியாத ஒருவன் பார்த்தால் என்ன நினைப்பான்? வினவு அந்த கட்சியின் பிரச்சார பீரங்கி என்று தான் நினைப்பான். இது தான் சார்லி விசயத்திலும் நடந்தது. நக்கல் பண்ணும்போது கவுண்டமணி ஸ்டைளில் மட்டும் தான் நக்கல் செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. Sarcasm என்று ஒரு வார்த்தையை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நினைகிறேன். அது தான் இங்கும் நடந்துள்ளது.

        செய்யுறத செஞ்சிக்கோ ஆனா போடுறத போடு என்று சொல்லும் கட்சியை, அது இதை தான் சொல்கிறது என்று அவர்கள் பாணியில் நக்கல் செய்கிறது சார்லி ஹெப்டோ. ஒரு நீதி அமைச்சரை குரங்காக உருவாக படுத்திய கட்சி, தன் தொண்டர்களை எதன் அடிபடையில் இணைக்க சொல்கிறது (நிறவாதம்) என்பது தான் அந்த கார்ட்டூனின் நோக்கமே தவிர, அந்த நீதிபதியை குரங்கு என சொல்லுவது அல்ல. இந்த கட்சியின் லட்சணம் இது என காட்டுவது தான் அதன் நோக்கம். இதை நிறவெறி, இனவெறி என நினைப்பது மாபெரும் தவறு.

        • இது இன்னும் தெளிவாக புரிய வேண்டும் என்றால், ஏன் கார்டூனுக்கும் மொழி தேவை என்பதை வினவின் இந்த கேலி சித்திரம் பார்த்தால் புரியும்:

          https://www.vinavu.com/2014/12/17/bjp-foists-more-nuclear-plants-cartoon/

          மொழி தெரியாத ஒருவர் பார்பது இந்திய நாட்டின் சின்னம் அணுவை ஏந்தி பிடித்து கொண்டு இருப்பதை. இதில் மொழி தெரியாவிட்டால் இந்தியா அணுசக்தியை ஆதரிக்கிறது என்று எடுத்து கொள்வர். ஒருவேளை மொழி மட்டும் புரிந்தால், அணுஉலை விசயத்தில் இரண்டு கட்சிக்கும் ஒரே ரத்தம் என்பது புரியும். இதில் கூடங்குளம் என்ன என்பது புரிய இந்திய நிகழ்வை பற்றிய கொஞ்சம் அறிவு தேவை. சரி இரண்டு கட்சிக்கும் ஒரே ரத்தம் என்றால் ப.ஜ.க. புது அணுஉலைகளை திறக்க ஒப்பந்தம் இட்டு உள்ளது என்பது மட்டும் தான் புரியும். இதுவே காங்கிரஸ் ஆதரவு பத்திரிகையில் வந்து இருந்தால், பார்த்தாயா ப.ஜ.க. காங்கிரஸ் வழியை பின்பற்றுகிறது என கொக்கரிப்பதாக புரியும். ஆனால் வினவு என்ன, கூடங்குளம் என்ன, அந்த பிரச்னையில் வினவு என்ன நிலைபாட்டை கொண்டுள்ளது என்று தெரிந்தால் தான், இது கூடங்குளம் மக்களுக்கு செய்தி சொல்வது போல ப.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை வினவு கிண்டல் செய்கிறது என்று புரியும். இப்போது வினவு போல சார்லி ஹெப்டோவும் ஒரு சோசியலிச கருத்து கொண்ட, என்ன தப்பு நடந்தாலும் தட்டிகேட்கும் பத்திரிக்கை என்பதை நினைவில் கொண்டு இந்த விசயத்தை அணுகுங்கள். சார்லி மீது உள்ள அனைத்து குற்றச்சாட்டும் எவ்வளவு அபத்தம் என்று புரியும்.

          • வினவு தோழர்கள் பார்வைக்கு,

            en.wikipedia.org/wiki/Poe’s_law

            படித்து தெரிந்து கொள்ளவும். இதை சார்லீ கெப்டோவுடன் இணைத்து பார்த்தால் உங்கள் அபத்தம் புரியும்.

  27. 3. அடுத்து போகோ ஹராம் பற்றிய படம். இதற்க்கு கொஞ்சம் நீளமான விளக்கம் தேவை. போகோ ஹராம் பெண்கள் கடத்தப்பட்டு இருக்கும் போது வலதுசாரி கட்சி அதை பற்றி மூச்சு விடாமல் பிரெஞ்சில் அப்போது குழந்தை நலன் பற்றிய ஒரு சட்டத்தை பற்றி மட்டுமே பேசி வந்தது. பிரெஞ்சு சட்டப்படி குழந்தை பிறந்தால் அந்த குடும்பத்துக்கு அளிக்கப்படும் சலுகைகள் உயர்த்தப்படும். அதாவது அதிக குழந்தைகள் பெற்றால் குறைந்த வரிகள். இது பல நாடுகளில் உள்ள சட்டம் தான். இது அனைத்து மக்களுக்கும் பொருந்தும். பணக்கார மக்களுக்கு இது தேவை இல்லாத சலுகை. எனவே இந்த சட்டத்தில் ஒரு சிறு மாறுதல், அதாவது வருமானத்தை கொண்டு இந்த நலன் தொகை மாற்றப்படும் என அரசாங்கம் முடிவு செய்தது. இதனால் ஏழைகளுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. பணம் படைத்த பல பிள்ளைகள் உள்ளவர் குறைந்த நலனை பெறுவார். இதை எதிர்த்து அந்த கட்சி பிரச்சாரம் செய்தது. அவர்கள் கூறிய காரணம், இங்கு இருக்கும் சிறுபான்மை மக்கள் இந்த குழந்தை நலனுக்காக பிள்ளை பெற்று கொண்டே இருகின்றனர், அதை கொண்டு வேலை செய்யாமல் வாழ்கை நடத்துகின்றனர் என்று பிரச்சாரம் செய்தது. எனவே இந்த சட்டத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் நலன்கள் குறைக்கப்பட வேண்டும், மற்றவருக்கு அப்படியே இருக்க வேண்டும் என பேசி வந்தனர். இதை கண்டித்து தான் ஹெப்டோ கடத்தப்பட்ட பெண்கள் பிரெஞ்சில் தஞ்சமடிவதாய் படம் வரைந்தது. வலது சாரி கட்சியின் பணக்கார அனுசரணை போக்கை இடித்து, ஏன் இதை பேசுகிறாய், அப்போது இந்த பெண்கள் பற்றி ஏன் பேசவில்லை என முகத்தில் அறைந்து கேட்கிறது.
    தேவை இல்லாத விசயத்தில் கவனம் திருப்ப பார்க்காதே என்று சொல்ல இரு விசயத்தையும் இணைத்து ஒரு படமாக வெளி வந்தது.

    4. கடைசியாக அந்த surrogacy பற்றிய படம். பிரான்சின் வாடகை தாய் சட்டம் இது:

    In France, since 1994, any surrogacy arrangement that is commercial or altruistic, is illegal or unlawful and is not sanctioned by the law (art 16-7 of the Code Civil).[14] The French Courts the Cassation already took this point of view in 1991. It held that if any couple makes an agreement or arranges with another person that she is to bear the husband’s child and surrender it on birth to the couple, and that she is choosing that she will not keep the child, the couple making such an agreement or arrangement, is not allowed to adopt the child. In its judgment the court held that such an agreement is illegal on the basis of articles 6 & 1128 of the Code Civil, together with article 353 of the same code.[15]

    குழந்தை பெரும் தாய் எந்த பணமோ, இல்லை பொருளோ பெற முடியாது. அப்படி பெற்றால் அது சட்ட விரோதம். ஓரின சேர்க்கையாளர்கள் அவர்களுக்கும் இது பொருந்தும். இதை கொண்டு பல பணக்கார மக்கள் தங்கள் வீட்டில் வேலை செய்யும் சிறுபான்மை இன பெண்களை வாடகை தாயாக உபயோகிக்கின்றனர். இந்த சட்டத்தை பற்றிய விவாதம் வந்த பொது வலது சாரி கட்சி வழக்கம் போல பணக்கார மக்களின் பக்கம் பேசியது. அவர்களின் முழக்கங்களை கிண்டல் செய்து தான் இந்த படத்தின் கருத்து உள்ளது (படத்தில் உள்ள இருவரும் பணக்காரர் என்பது அவர்களின் v-கழுத்து ஆடை மூலம் குறிக்க படுகிறது. இது bourgeois மக்களை குறிக்கும் ஆடை சின்னம். அவர்கள் கூறுவது வலது சாரி கட்சியான நேஷனல் பிரான்ட் கூறும் முழக்கம், Marriage means Two parents என்பதை மாற்றி Surrogacy means Two Parents என்று கிண்டல் செய்கிறது சார்லி ). சட்டம் சிறுபான்மை மக்களுக்கு சாதகமாக மாற வேண்டும் என கூறும் ஒரு படத்தை தான் இனவெறியை கக்கும் படம் என புரியாமல் உளறி கொண்டு இருக்கிறது இந்த கட்டுரை.

    இதையும் மற்ற பல சார்லி ஹெப்டோவின் படங்களை பற்றி பிரெஞ்சு மக்கள் கொடுக்கும் விளக்கங்களை படிக்க இந்த இரு தளங்களுக்கு செல்லலாம்:

    http://www.understandingcharliehebdo.com/

    http://cecilial.tumblr.com/post/108030678127/charlie-hebdo-cover-analysis-part-ii

    இதை தவிர இணையத்தில் பிரெஞ்சு மக்கள் இது போன்ற அறிவற்ற உளறல்களை தடுக்க பல வலைப்பதிவு செய்துள்ளனர். நண்பர்கள் தேவை என்றால் தேடி படிக்கவும். இதில் சார்லி ஹெப்டோ வர்ணித்த வலது சாரி கட்சி மக்கள் சிலர் அவதூறு பரப்பும் நோக்குடன் ஒரு சில வலைப்பதிவு செய்துள்ளனர். எனவே படிக்கும் முன்பு எழுதியவர் யார் என பார்த்து படிக்கும் படி கேட்டுகொள்கிறேன். அதே போல பிரெஞ்சு கலாச்சாரம், மொழி தெரியாத மக்கள் எழுதிய வலைப்பதிவு படிக்க வேண்டாம். உண்மை வேண்டும் என்றால் அந்த தேசத்து மக்களின் பதிவுகளை படிக்கவும்.

    (மீண்டும் நீல அளவு தடை. பதில் மேலும் ஒரு பகுதி பிரிபடுகிறது)

    • (நீல அளவு ரொம்பவும் நெருக்குகிறது. எனவே இன்னும் சில பகுதிகளாக பிரிக்க படுகிறது இந்த பதிவு)

      வினவுக்கு ஒரு வார்த்தை. இதை போல இரண்டு மூன்று படங்களை எடுத்துக்கொண்டு, நான் என்ன நினைகிறேன் என்று எழுதி எதை வேண்டுமானாலும் திரிக்க முடியும். அதற்க்கு சிறந்த உதாரணம் இந்த கட்டுரை. தன் பார்வையை நிலை நாட்ட வார்த்தை, கருத்து திரிவு செய்து எழுதப்பட்டுள்ளது இங்கு. வினவின் தேவையை பூர்த்தி செய்ததால் இந்த விளக்கம், செய்தி, மொழிபெயர்ப்பு எல்லாம் சரியா என்று பார்க்காமல் அப்படியே இங்கு பதிக்கப்பட்டுவிட்டது. சார்லி ஹெப்டோவின் முழு அட்டை படங்களையும் பார்த்து இருந்தால் தானே இந்த விசயமெல்லாம் புரியும். உங்களுக்கு தேவை உங்கள் கருத்தை நியாயபடுத்த ஒரு சில படங்கள். பிரெஞ்சு மொழியில் இருப்பதால் நீங்கள் இங்கு அதை எப்படி வேண்டுமானாலும் கூற முடியும். பல மக்களுக்கு பிரெஞ்சு தெரியாது அல்லவா? இல்லை நீங்கள் கூறுவது சரி என்றால் நான் கூரியவற்றிக்கு விளக்கம் தரவும். அதிகமாக வேண்டாம். charab பற்றிய செய்தி, நாசி சின்னத்தின் மொழிபெயர்ப்பு தவறு, கறுப்பின நீதிபதி பற்றிய படத்திற்கு விளக்கம் தந்தால் போதும். மற்ற அட்டை படங்களையும் விவாதிக்க வேண்டும் என்றால் அதற்க்கும் நான் தயார்? (இங்கு நண்பர்களுக்கு ஒரு கொசுறு செய்தி. சார்லி போப்பாண்டவர், அமெரிக்கா ஏன் ஹோலோகாஸ்ட் பற்றி கூட படங்கள் வெளியிட்டு உள்ளது. ஏசுவின் பிரச்சனைக்குரிய Piss Christ எனும் படம் கிறிஸ்துவ மதவாதிகளால் தாக்க பட்டபோது அதை கண்டித்து படம் வெளியிட்டது சார்லி ஹெப்டோ. நண்பர்கள் இணையத்தில் இந்த முழு விசயத்தை தேடி படிக்கலாம். தகவல் தருவேன். ஆனால் வினவு அதை சிறுபான்மை மக்களை offend செய்யும் விஷயம் என எடிட் செய்து விடும்). இது எல்லாம் இல்லை என்றால் முகம்மது இப்போது வந்தால் அவர் தீவிரவாதிகளால் எப்படி நடதபடுவார் என்று சார்லி பிரசுரித்த படம் எவ்வாறு மதவாதத்தை தூண்டுகிறது என்று விளக்கம் தரவும்.படத்தை வேண்டுபவர் இங்கு செல்லலாம்:

      http://cdn.frontpagemag.com/wp-content/uploads/2015/01/charlie-hebdo-no1163-011014.jpg

      (வினவு கண்டிப்பாக இந்த படத்தை வெளியிடாது என்று நினைகிறேன். இங்கு நான் தந்துள்ள படம் தீவிரவாதி கையால் முஹம்மது அவர்கள் கழுத்து அறுபடுவது போன்ற படம். நான் தான் முஹம்மது என்கிறார் நபிகள். அதற்க்கு வாயை மூடு infidel என்கிறான் தீவிரவாதி)

  28. தென்றல் அவர்களுக்கு,

    திப்புகள், அம்பிகள், வியாசன்கள் போன்றவர்களிடம் கெட்டபெயர் வாங்குவதை நான் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் உங்களிடம் கெட்டபெயர் வாங்குவதற்கு எனக்கு வருத்தமாக இருக்கிறது.

    நான் இங்கே எனக்கு தெரியும் மற்றும் பகிர்ந்து கொள்ள விரும்பும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் எனது உரையை எப்படி மாற்றினால் அது ஏற்புடையதாக மாறும் என்று ஏதேனும் ஆலோசனைக் கூறமுடியுமா. தேவைப்பட்டால் Univerbuddy இல்லாமல் போகவும் தயாராக இருக்கிறான்.

    இந்த பதிவில் உள்ள எனது பின்னூட்டங்களை எடுத்துக்கொண்டோ அல்லது எனது பின்னூட்டங்களை பொதுவாக எடுத்துக்கொண்டோ விளக்க முயலுங்கள். நன்றி.

    • யுனிவர்படி அவர்களுக்கு,

      \\ இந்த பதிவில் உள்ள எனது பின்னூட்டங்களை எடுத்துக்கொண்டோ அல்லது எனது பின்னூட்டங்களை பொதுவாக எடுத்துக்கொண்டோ விளக்க முயலுங்கள். நன்றி.\\

      பொதுவான பார்வையை முன்வைக்கிறேன்.

      அப்பாவி இசுலாமியர்கள் கொல்லப்படுகிறார்களே என்ற ஒரு கேள்வி வருகிற பொழுதெல்லாம் தாங்கள் தயங்காமல் சொல்கிற பதில். ஆம். கொல்லப்படுகிறார்கள். இதெல்லாம் இசுலாமியர்களின் பின்விளைவுகள் என்பீர்கள். வரலாற்றில் இவர்கள் இவ்வளவு ஆட்டம் போடாமலிருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்பீர்கள். ஆகையால் இக்கொலைகள் தவிர்க்க இயலாத ஒன்று என்பீர்கள். இது முதல் தரப்பு.

      ஜிகாதிகள் சார்லி பத்திரிக்கையாளர்களை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றிருக்கிறார்களே என்று சொல்கிற பொழுது தாங்கள் சொல்கிற பதில் முசுலீம்கள் என்றால் அப்படித்தான். அதாவது உங்கள் வரையறைப்படி இது முசுலீம்களின் உடனடி விளைவு என்பீர்கள். இது இரண்டாவது தரப்பு.

      இரண்டு தரப்புகளையும் சேர்க்கிற பொழுது அது கொடுக்கிற முடிவு; இசுலாமியர்கள் தீயவர்கள் என்பது. இந்தக் கலையை ஜோசப், மேரி, வியாசனுக்கு போன்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

      எவர் ஒருவராலும் இதில் உள்ள மதவெறியை வன்மத்தைக் கண்டுகொள்ள முடியும். உங்களுக்கு இசுலாமியர்களைப் பொறுத்தவரை என்றைக்குமே புரிதல் தேவைப்பட்டதில்லை. அனைத்தும் விளங்கிக்கொண்டவர்களுக்கு விளக்கம் தேவைப்படாது இல்லையா? இப்படிப்பட்ட கூட்டத்திற்கு நான் எதிரானவன். நாங்கள் இதைப் பாட்டாளி வர்க்கப்போராட்டத்தின் மூலமாக முறியடிப்போம்.

      • தென்றல் அவர்களுக்கு,

        // அனைத்தும் விளங்கிக்கொண்டவர்களுக்கு விளக்கம் தேவைப்படாது இல்லையா?//

        எனது புரிதலில் ஏதேனும் தவறவிட்டுவிட்டேனா என்பதை சரிபார்த்துக்கொள்வதற்காகத்தான் உங்களுடன் உரையாடி தெளிவு பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் உங்கள் பதில்கள் எனக்கு எந்த தெளிவையும் கொடுப்பதற்கு மாறாக என்னை எதிரியாக பாவித்து எழுதுகிறீர்கள்.

        இந்த விவாதத்தை யார் யார் படிக்கிறார்கள் என்பதைப்பற்றி நமக்குத் தெரியாது. முகமதியத்தைப்பற்றிய விவாதத்தில் எனது பங்கு முகமதியத்தின் பரவல் தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான். அதைப்பற்றி awareness எல்லா பக்கத்திலும் பரவும் போது, இஸ்லாமியர்களே அதை ஒரு கடைசி முறையாக கைகழுவிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். இது ஒரளவுக்கு தவறாகவும் இருக்கலாம்.

        நீங்கள் சேர்த்துக்கொள்ளாவிட்டாலும் நான் பாட்டாளி வர்க்கம் தான். போராட்டத்தில் எனது பங்கும் கண்டிப்பாக இருக்கிறது. இருக்கும். எனது உரையாடல் புரட்சியை தாமதப்படுத்திவிடுமா அல்லது விரைவுபடுத்துமா என்று எனக்கு தெரியவில்லை. பாட்டாளி வர்க்கம் எல்லா அடிமைத்தளைகளையும் அறுத்தெறிந்து விட்டால் போராட்டம் எளிதாகவிடும் என்பது எனது எண்ணம். தொடர்ந்த உரையாடலுக்கு தயாராக இருக்கிறேன். நன்றி.

      • தென்றல் அவர்களுக்கு,

        சிறிது கூடுதல் நேரம் கிடைத்தது. ஆகையால் உங்கள் பின்னூட்டம் 29.1 ல் விடுபட்ட புள்ளிகளுக்கும் பதில் கொடுத்துவிடலாம் என்று இதை எழுதுகிறேன்.

        //இக்கொலைகள் தவிர்க்க இயலாத ஒன்று என்பீர்கள்.//

        இது நீங்கள் என் வாயில் திணித்த Quenelle. கஷ்டப்பட்டு மென்று முழுங்கினேன். சுவையாகத்தான் இருந்தது.

        நாம் முகமதியத்தைப் பற்றி பேசாமல் இருந்துவிட்டால் இக்கொலைகள் நடக்காமல் போகுமா என்பது தான் முன்னொரு பதிவில் நான் கேட்ட கேள்வி. பேசுவதனால் அதிகமாக நடக்கும் என்று நீங்கள் வாதிடலாம். பேசாவிட்டால் விளைவுகள் எதிர்திசையில் அதிகமாக இருக்கும் என்று நான் அஞ்சுகிறேன்.

        // முசுலீம்களின் உடனடி விளைவு என்பீர்கள் //

        நான் இங்கே முகமதியர்கள் என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்துவேன் என்பதை நீங்கள் அறிந்தது தான். இது சரிதான். இது தான் முகமதின் வழிகாட்டல்.

        // இந்தக் கலையை ஜோசப், மேரி, வியாசனுக்கு போன்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.//

        இவர்கள் இந்த கலையை கற்கும் அதேசமயத்தில் தங்களின் கொள்கைகளையும் ஒப்பிட்டுக் கொள்ள சீர்தூக்கிப்பார்க்க மாற்றிக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறார்கள். முகமதியத்தைப் பற்றி பேசும் போது மற்ற இயங்களும் பேசப்படுகின்றன என்பதை கூர்ந்து கவனித்தால் கண்டுகொள்ளலாம்.

  29. அன்புள்ள சந்துரு,

    உங்களது விரிவான மறுமொழியை வாசிக்க சுவாரசியமாக இருந்தது. அதன் கருத்துக்கள் பலவும் மண்டபத்தில் எழுதிக் கொடுத்தவையாக இருந்தாலும் சுவாரசியம் சுவாரசியம் தான். மண்டபத்தின் பெயர் – http://www.understandingcharliehebdo.com/

    மண்டப மேட்டரை பிறகு பார்க்கலாம். கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் சில கார்ட்டூன் உதாரணங்களுக்குள் புகுந்து ‘கலக்கும்’ உங்கள் ப்ரெஞ்சு மொழிப் புலமை பற்றிய டெக்னிக்கல் விவரத்தை முதலில் பார்த்து விட்டுத் தொடர்கிறேன்.

    கட்டுரையாளர், இந்த விவகாரத்தின் கண்ணோட்டம் குறித்து விளக்குவதற்கான அடிப்படை விவரங்களை எங்கே இருந்து எடுத்தாண்டுள்ளார் என்பதை கீழே உள்ள இணைப்புகளிலேயே காண முடியும்.
    அந்த இணைப்புகளில் இருந்து நண்பர் தென்றல் ஏற்கனவே ஒரு கார்ட்டூனைப் பற்றி பேசி விட்டதால் நான் வேறு ஒரு உதாரனத்தை எடுத்துக் கொள்கிறேன்.

    // நான் கூரியவற்றிக்கு விளக்கம் தரவும். அதிகமாக வேண்டாம். charab பற்றிய செய்தி, நாசி சின்னத்தின் மொழிபெயர்ப்பு தவறு, கறுப்பின நீதிபதி பற்றிய படத்திற்கு விளக்கம் தந்தால் போதும்//

    நாசி சின்னம் பற்றி தென்றலின் மறுமொழியில் உள்ளது.

    கறுப்பின அமைச்சர் கார்டூனுக்கு நீங்கள் அளித்திருக்கும் விளக்கம் என்பது அதன் நேர் பொருளில் சரி – ஆனால், எனக்கு சில கேள்விகள் எழுகின்றன.

    1) கருப்பின அமைச்சரை குரங்காம சித்தரித்த வலது சாரி அமைப்பை கிண்டல் செய்ய அவர்கள் பயன்படுத்திய அதே குரங்கு இமேஜை ஏன் இவர்களும் பயன்படுத்த வேண்டும்.
    2) சரி, அது ”ப்ரெஞ்சு கலாச்சார சூழலுக்கே” உரித்தான விஷயம் என்றும் பிறருக்கு அது புரியாது என்றும் Understanding Charlie Hebdo அல்லது I am charlie மக்கள் சொல்வது உண்மையாக இருந்தால், அந்த கட்டற்ற விமரிசன உரிமை I am charlie coulibali என்று சொன்ன ட்யுடொன்னேவுக்கு ஏன் வழங்கப்படவில்லை?
    3) ஹாலோகாஸ்ட் என்பது கட்டுக்கதை என்ற கருத்தை வலியுறுத்தும் ஒருவரை விமர்சிக்க ஹிட்லரோடு யூதர்கள் கூடிக் குலாவுவது போல் படம் போட்டு – “இது தப்பு” என்று தலைப்பு வைப்பதை ப்ரான்சின் ”கட்டற்ற கருத்துசுதந்திரம்” அணுமதிக்குமா?

    எதற்கு இந்த பம்மாத்து சந்துரு?

    நீங்கள் சொல்வது நம்ம ஊர் வடிவேலு காமெடியிலேயே வந்து விட்டது. “உன்னை செருப்பால அடிப்பேன் அப்படின்னு சொல்ல மாட்டேன் தெய்வமே” சீன் நினைவுக்கு வருகிறதா?

    கேலிச்சித்திரங்களின் விவரங்களுக்குள் புகுந்தால், அந்த விவரங்களை எப்படிப் புரிந்து கொள்வது என்பது குறித்த டெக்னிக்கலான விவாதங்களுக்குள் நாம் நுழையவேண்டியிருக்கும். விவாதம் அந்த திசையில் நகர்வதைக் காட்டிலும், கட்டுரையின் கண்ணோட்டம் சரியா தவறா என்ற திசையில் நடப்பது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    சார்லி ஹெப்டோ தாக்குதல் – அதைத் தொடர்ந்து ”ஐயேம் சார்லி” முழக்கம் – தொடர்ந்து பலநாட்டுத் தலைவர்கள் இணைந்த ஊர்வலம் : இந்த நிகழ்ச்சிப் போக்கு பொதுவில் ஐரோப்பாவிலும் குறிப்பாக பிரான்சிலும் ஏற்படுத்தியிருக்கும் விளைவு என்ன? இது கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது என்றாலும் நடக்கும் விவாதங்களைப் பார்க்கையில் கட்டுரையாளர் இந்தக் கண்ணோட்டத்தை மேலும் கொஞ்சம் விரிவாக பேசியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    ஒவ்வொரு இசுலாமிய பயங்கரவாத தாக்குதலும் உண்மையில் ஜிஹாதிகள் எதிர்பார்ப்பதற்கு நேர் எதிரான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் எதிரிகளை (அப்படி அவர்களே நம்பிக்கொண்டு கொல்லும் ஏதுமறியாத மக்களை) தண்டிக்கவில்லை – மாறாக, ஒரு பரந்துபட்ட அளவில் பல இசுலாமிய நாடுகளுக்கு எதிரான நேட்டோ தாக்குதல்களுக்கு இவை ஒரு தார்மீக அடிப்படையை வழங்குகின்றன. நேட்டோவின் தாக்குதல்கள் (அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு) எனும் போது அவை வெறும் “அவன் அடிச்சான் இவனும் திருப்பி அடிச்சான்” வகைப்பட்டவை அல்லவென்று உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

    மேற்கத்திய நாடுகளின் வியாபார மற்றும் புவியியல் நலன்களை காத்துக் கொள்ளும் போர்ந்தந்திர (Strategic) ரீதியிலான நடவடிக்கைகள் அவை. இரட்டை கோபுரத் தகர்ப்பு கடந்த பத்தாண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் என்ன? பதினேழு உயிர்கள் பறிக்கப்பட்டது அநியாயமான செயல் – இதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை – ஆனால், இதை ப்ரிடெக்ஸ்டாக கொண்டு ப்ரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் கட்டமைக்கப்படும் / முனைவாக்கம் செய்யப்படும் இசுலாமியர்களுக்கு எதிரான பொதுக்கருத்து கொல்லப்போகும் உயிர்களைப் பற்றியும் சேர்த்தே நான் கவலை கொள்கிறேன். அது ஏற்கனவே துவங்கி வேகமெடுத்து விட்டதை ஓரளவிற்காவது ஜனநாயகப்பூர்வமாக உள்ள மேற்கத்திய ஊடகங்களை வாசிக்கும் போது புரிகிறது.

    இசுலாமிய ஜிஹாதிகளின் கொலைகள் – இசுலாத்தின் கொலைகளாக்கப்பட்டு – இசுலாமியர்களின் கொலைகளாக்கப்பட்டு – இசுலாமியர்கள் தீவிரவாதிகள் என்று பொதுபுத்தியில் நிறுவப்படுகிறது. ஆக, இசுலாமியர்கள் என்றாலே ஜிஹாதிகள் என்றாகிறது. இனி, வீசப்படும் ஒவ்வொரு குண்டுகளுக்கும் பலியாலும் குழந்தைகளின் உடல்களை எண்ணி ”இத்தனை ஜிஹாதிகள் கொல்லபப்ட்டார்கள்” என்று சி.என்.என் சொல்லும் கணக்கை உறுத்தல் இல்லாமல் ஐரோப்பியர்கள் கேட்டுக் கொள்வார்கள். ஈராக் ஆப்கான் போர்களின் போது ஐரோப்பாவில் நடந்த போருக்கு எதிரான ஆர்பாட்டங்கள் இனி சாத்தியமில்லை. சார்லி ஹெப்டோ விவகாரத்தில் ஜிஹாதிகள் உண்மையில் சாதித்தது இதைத் தான்.

    • கூடுதலாக ஒரு விஷயம் Understandingcharlie தளம் சமீபமாக ஆரம்பிக்கப்பட்டது. சார்லியின் கார்ட்டூன்கள் குறித்த விவாதங்கள் ஐரோப்பாவில் மற்றும் மேற்குலகில் சூடாக நடந்து வரும் நிலையில், ”இதெல்லாம் எங்க ஊர் மேட்டரு.. உங்களுக்கு புரிய வைக்கிறேன் பார்” என்ற ரீதியில் சார்லியின் கார்ட்டூகளுக்கு விளக்கவுரை எழுதி வருகிறது இத்தளம்.

      உலகிலேயே கார்ட்டூன்களுக்கு எழுதப்பட்ட முதல் கோணார் உரை இத்தளமாகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன் 🙂

      மேற்கில் இசுலாமியர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் கருத்தியல் முனைவாக்கத்தை சார்லியின் கார்ட்டூன் பற்றிய விவாதங்கள் குலைத்து விடக்கூடாதே என்கிற அவஸ்த்தை இந்த விளக்கவுரைகளில் தெளிவாக தெரிகிறது.

      ஒரு டிஸ்க்ளெய்மர் :- இசுலாமியர்களுக்கு ஆதரவான மறுமொழிகளை இசுலாத்திற்கு ஆதரவானதாகவோ, கூடுதலாக ஜிஹாதிகளுக்கு ஆதரவானதாகவோ புரிந்து கொள்வதற்கு அவ்வாறு புரிந்து கொள்பவர்களே பொறுப்பு.

    • சின்னச்சாமி,

      //1) கருப்பின அமைச்சரை குரங்காம சித்தரித்த வலது சாரி அமைப்பை கிண்டல் செய்ய அவர்கள் பயன்படுத்திய அதே குரங்கு இமேஜை ஏன் இவர்களும் பயன்படுத்த வேண்டும்.//

      வினவும் சார்லி ஹெப்டோவின் கருப்பின அமைச்சரை குரங்காம வலதுசாரிகள் சித்தரித்த கார்டூனை விமர்சிக்க பயன்படுத்திய அதே படத்தை தான் பயன்படுத்தியுள்ளதால் வினவு என்ன நியோ நாஜியா, இனவாத இணையதளமா சின்னச்சாமி ? அப்படி யாராவது கூறினால் கேட்பவர்கள் சிரிக்க மாட்டார்களா ? மேலும் சார்லி ஹெப்டோ என்று உலகம் இப்போது விமர்சிக்கும் போது சார்லி ஹெப்டோவின் கார்டூன்களுக்கு தென்றல் நோட்ஸ், கோனார் நோட்ஸ் எல்லாம் போட்டு விளக்குவதில் என்ன தவறு இருக்கின்றது ? http://www.understandingcharliehebdo.com/ தளத்தில் உள்ள சார்லி ஹெப்டோவின் கார்டூன்கள் பற்றிய விளக்கங்கள் அதில் கொடுக்கப்பட்டு உள்ள தகவல்கள் சரி என்றால் அவற்றை ஏற்பதற்கு சின்னச்சாமிக்கு என்ன பிரச்சனை உள்ளது ?

    • யார் இந்த Coulibaly ? [I am charlie coulibali தெடர்பாக ]

      சார்லி படுகொலை நிகழ்வின் போது ,பிரான்சு மளிகை கடையில் மக்களை பினைய கைதிகளாக பிடித்துவைத்து அதில் 4 பேர்களை கொன்ற I S என்ற சிரிய நாட்டை சேர்ந்த தீவிரவாத இயக்கத்தின் ஆள் தான் Amedy Coulibaly. I am charlie என்பது கருத்துரிமைக்கான முழக்கம் . I am charlie coulibali என்பது எத்தைகைய முழக்கம் என்று கூறுங்கள் சின்னச்சாமி ? I S திவிரவாதத்துக்கு ஆதரவான முழக்கம். பிரான்சின் கருத்துரிமை என்பது அதன் சட்டத்துக்கு உட்பட்டது தான் என்பதை அறிந்து பின்னுட்டம் எழுதுங்கள் .மேலும் அந்த முழக்கதை கூறுபவர் யூடோன்னெ ம்பாலா ம்பாலா (Dieudonne M’bala M’bala) ஒரு இன வெறியர், யூத எதிர்பாளர் [நியோ நாஜி கொள்கைக்கையுடையவர் , (anti semitism)] என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

      சார்லிக்கு உள்ளது கட்டற்ற விமரிசன உரிமை எல்லாம் இல்லை . சார்லி மீது பல முறை பிரான்சு நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க பட்டு உள்ளது

      • Mr. chennaswamy try to understand…..

        The campaign against Dieudonné[I am charlie coulibali comment] is being led by one of his former bodyguards, Jérémie Maradas-Nado, alias Jo Dalton, a former leader of the Black Dragons, a gang which defended black people from attacks by white skinheads in the 1990s.

        Still Do you support the Slogan “I am charlie coulibali ” raised by Dieudonné?

        • Gosh….. Where did I supported Dieudonne???? All I am asking is “where is the space for the socalled french liberlism and french satire and french anarchism and french freedom of speech while they have jailed Dieuedonne?”

          • Bussssssssssssssssh…,

            நீங்கள் விளிர்க்கும் பிரஞ்சு தாராளவாதம் மற்றும் பிரஞ்சு நையாண்டி மற்றும் பிரஞ்சு அராஜகம், மற்றும் பிரஞ்சு பேச்சு சுதந்திரம் அனைத்துமே பிரஞ்சு சட்டத்துக்கு உட்பட்டது தானே ? யூடோன்னெ ம்பாலா ம்பாலா (Dieudonne M’bala M’bala) வின் கருத்து IS தீவிரவாதியை [Amedy Coulibaly] , அவரின் slogan [ [I am charlie coulibali ] மூலம் ஆதரிக்க தானே செய்கின்றார். இது எப்படி சரியானதாக இருக்கும்.? சட்டத்துக்கு உட்பட்டு இருக்கும் ?

            • //பிரஞ்சு சட்டத்துக்கு உட்பட்டது தானே//

              Sir, Can you list out what are all covered under freedom of speech and what is not in France.

              As a lazy ignorant, I am surprised to know that When French Freedom of Speech (with an approval stamp of French Law) supports portraying pope and Muhammad nudely But does not support mocking a popular slogan.

              For your info, Dieudonne mocked the slogan but never supported the killings. is this an act of terrorism?

              I am Surprised 🙂

              • ____________சி.சா அவர்களே , அவரின் யூடோன்னெ ம்பாலா ம்பாலா (Dieudonne M’bala M’bala) slogan [ [I am charlie coulibali ] மூலம் I S தீவிரவாதியை [Amedy Coulibaly] ஆதரிக்க தானே செய்கின்றார். இது எப்படி சரியானதாக இருக்கும்.? இது எப்படி சட்டத்துக்கு உட்பட்டு இருக்கும் ? நீங்கள் தான் விளக்க வேண்டும் .

    • சின்னசாமி ,
      ஹாலோகாஸ்ட் [Holocaust] நிகழ்வின் போது ஹிட்லரின் நாஜி படையால் 60 இலச்சம் யூதர்கள் கொல்லப்பட்டதை எவராவது கட்டுக்கதை என்று கூறினால் [யார் கூறினார்கள் என்று எனக்கு தெரியவில்லை ] , அத்தகைய வரலாற்று மோசடிக்கு எதிராக ,கூறுபவரை விமர்சிக்க ,நையாண்டி செய்ய “ஹிட்லரோடு யூதர்கள் கூடிக் குலாவுவது போல் கார்ட்டூன் படம் போட்டு” – “இது தப்பு” என்று தலைப்பு வைப்பதில் என்ன தவறு இருகின்றது ? அத்தகைய கார்ட்டூன் விளக்கும் கருத்தாக்கம் “ஹிட்லரோடு யூதர்கள் கூடிக் குலாவவில்லை” என்பது தானே முக்கியம். இது ஒன்றும் பிரான்சின் யூத எதிர்ப்பு (anti semitism) சட்டத்துக்கு எதிரானது கிடையாது.

    • திரு சின்னசாமி,

      எங்கு எழுதப்பட்டு இருந்தாலும் எது உண்மை, எது பொய் என ஆராய்ந்து அறியும் அறிவு என்னிடம் உள்ளது அய்யா. இந்த எழுதல்கள் நீங்கள் கூறும் மண்டபத்தில் மட்டும் அல்ல, வினவு அளித்துள்ள http://souciant.com/2015/01/why-context-matters/ எனும் லிங்கில் கூட உள்ளது. இதுவும் மண்டபம் தானா? முதலில் இங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குகளை நீங்கள் முழுமையாக படித்தீர்களா?

      உங்கள் இஸ்லாமிய பாதிப்பு, அதன் விளைவு என்ற கேள்விக்கு எல்லாம் நான் விவாதம் செய்ய வரவில்லை. நான் இங்கு புரிய வைக்க முயல்வது எல்லாம் சார்லி ஒரு இனவாத, நிறவாத, பிரிவினைவாத பத்திரிகை இல்லை என்பது மட்டுமே. இதை பற்றி மட்டுமே நான் பேசுவேன். மற்ற எதை பற்றியும் கேள்வி கேட்க வேண்டாம். இப்போது தாங்கள் கேள்விக்கு மட்டும் பதில்:

      1) கருப்பின அமைச்சரை குரங்காம சித்தரித்த வலது சாரி அமைப்பை கிண்டல் செய்ய அவர்கள் பயன்படுத்திய அதே குரங்கு இமேஜை ஏன் இவர்களும் பயன்படுத்த வேண்டும்.

      ஏன் பயன்படுத்த கூடாது? அந்த குரங்கு படத்தை கொண்டு அந்த நீதிபதியை எதாவது சொல்லி இருந்தால் நீங்கள் கூறுவது சரி. ஆனால் அது ஒரு நீதிபதியை, கறுப்பின பெண் என்பதற்காக மட்டுமே குரங்கு என்று அவமதித்த கட்சியை கிண்டல் செய்ய ஏன் பயன்படுத்தகூடாது? இதையே நம்ம ஊர் விசயத்துக்கும் பொருத்தி பாருங்களேன். சுஷ்மா ஸ்வராஜ் பகவத் கீதையை பற்றி பேசியதற்கு இவ்வாறு கார்ட்டூன் வெளியிட்டது வினவு:

      https://www.vinavu.com/2014/12/09/sushma-swaraj-wants-bhagavad-gita-to-be-national-scripture/

      இது கிருஷ்ணரை அவமானபடுத்தும் நோக்கில் தீடபட்டதா? இல்லை பகவத் கீதையை அவமானபடுத்தும் நோக்கில் தீடபட்டதா? இரண்டும் இல்லை. மதவாத rss அமைப்பை தானே கிண்டல் செய்கிறது? மதவாதத்தை காட்டும் கார்டூனை கொண்டு, மதவாத rss அமைப்பை கிண்டல் செய்ததால் வினவு மதவாத அமைப்பு ஆகி விடுமா?

    • 2) சரி, அது ”ப்ரெஞ்சு கலாச்சார சூழலுக்கே” உரித்தான விஷயம் என்றும் பிறருக்கு அது புரியாது என்றும் Understanding Charlie Hebdo அல்லது I am charlie மக்கள் சொல்வது உண்மையாக இருந்தால், அந்த கட்டற்ற விமரிசன உரிமை I am charlie coulibali என்று சொன்ன ட்யுடொன்னேவுக்கு ஏன் வழங்கப்படவில்லை?

      அய்யா அந்த உரிமை இல்லாமல் எப்படி ட்யுடொன்னே இன்றும் வெளியில் நடமாடி கொண்டு தன் நாசி வெறி கக்கும் பேச்சை பேசி வருகிறார்? இன்றும் அவர் அந்த நாட்டில் பேசிக்கொண்டு, உலவிக்கொண்டு, வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். இதில் coulibaly என்பவன் ஒரு பெண் போலிசை நடு ரோட்டில் சுட்டு கொன்றவன். அவன் செய்ததை ஆதரிக்கிறேன் என்று சொல்லும் இந்த மனிதரும் வெளியில் நடமாடிக்கொண்டு தான் இருக்கிறார். இது தான் சுதந்திரம். என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் சொல்வது வெறியை தூண்டுவதாய் இருந்தால் தண்டனை. சார்லி பத்திரிகையும் பல தடவை பல விசயங்களில் வழக்குகளை சந்தித்து உள்ளது. என்ன ஒரே வித்யாசம். அது இனவெறியை பேசுவது இல்லை என்பதால் நீதிமன்றம் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து விட்டது. பத்திரிகைகள் holocaust பற்றி பேச இருக்கும் சட்டங்களை விமர்சித்தும் பல படங்களை வெளியிட்டு உள்ளன. ஒரு சின்ன சாம்பிள் இங்கே:

      https://firstlook.org/theintercept/2015/01/09/solidarity-charlie-hebdo-cartoons/

      டயுடன்னே என்ற மனிதர் holocaust பற்றி மட்டும் பேசவில்லை. அவர் யூதர்களை எதிர்க்க காரணத்தை அவரின் பேட்டியில் தாங்களே கேட்கலாம்.

      https://www.youtube.com/watch?v=pt_jvLaskM8

      அவரின் பல நிகழ்சிகள் youtube தளத்தில் உள்ளன. பார்க்கவும். இதை கேட்ட பிறகு இவருக்கும் நம்ம ஊர் மேல்சாதி வெறியருக்கும் என்ன வேறுபாடு என்று கூற முடியுமா? இவர் இங்கு இருந்தால் இந்நேரம் என்ன ஆகி இருப்பார் என்று கூறவேண்டியது இல்லை.

    • சின்னச்சாமி,

      I am Coulibaly என்று சொல்வதும் I am Charlie Coulibaly என்று சொல்வதும் ஒன்றுதான். இது கொலைகளுக்கு ஆதரவாக இருத்தல் அல்லது புதிய கொலைகளுக்கு துணை போதல் என்ற குற்றம்.

  30. //திப்புகள், அம்பிகள், வியாசன்கள் போன்றவர்களிடம் கெட்டபெயர் வாங்குவதை நான் பெரிதுபடுத்துவதில்லை.///
    என்னிடம் ‘கெட்டபெயரா’? எனக்குப் புரியவில்லையே. என்னிடம் கெட்டபெயர் வாங்குமளவுக்கு நீங்கள் இங்கே பெரிதாக எதையும் பேசியதாகவோ, அல்லது என்னுடன் வாக்குவாதப்பட்டதாகவோ எனக்கு நினைவில்லையே.

    //ஆனால் உங்களிடம் கெட்டபெயர் வாங்குவதற்கு எனக்கு வருத்தமாக இருக்கிறது.//
    இவர்கள் இருவரும் சரியான ‘குரு-சிஷ்ய’ பரம்பரையில் வந்தவர்கள் போலிருக்கிறது, திண்ணைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார்களோ என்னவோ.. 🙂

    • வியாசன்,

      பரவாயில்லை. சாதி வெறியன் என்ற ரீதியில் பேசியிருக்கிறீர்கள். அதற்காதத்தான் உங்கள் Category ஐ சேர்த்தேன்.

  31. பிரான்சில் வாழும் கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் பற்றிய சித்திரம் தொடர்பாக :

    தேசிய முன்னணி[National Front]என்ற இனவாத கட்சியின் அரசியல்வாதி Le Monde சமுகவளை தளத்தில் கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் குரங்காக வரைந்த சித்திரத்தை கேள்வி எழுப்பும்,கண்டனம் தெரிவிக்கும் சித்திரம் தான் சார்லி வரைந்தது. நீதி அமைச்சரை குரங்காக வரைந்த சித்திரத்துக்காக அக் கட்சியை சேர்ந்தவர் Le Monde என்பவர் 9 மாத சிறை தண்டனையும் பெற்றார் .தேசிய முன்னணியின் [National Front] குறியிடான[symbol ] நீல மற்றும் சிவப்பு வளைவுகள் சார்லியின் கார்ட்டூனின் இடது கீழ் பகுதியில் வரைய பட்டு உள்ளது . கார்ட்டூனின் தலைப்பில் இனவாத நீல சங்கம்[ “RACIST BLUE UNION”] என்று உள்ளது . இந்த கார்ட்டூன் பிரெஞ்சு மக்களுக்கு அளிக்கும் செய்தி என்னவாக இருக்கும் என்பதை கட்டுரையை எழுதிய வினவுக்கு/தமிழரசனுக்கு தெரியாவிட்டாலும் வினவு தளத்தால் அரசியல் அறிவு அளிக்கபட்ட வினவு வாசகர்களுக்கு புரியும் அல்லவா ?

    ஆம் கார்ட்டூன் எழுப்பும் செய்தி இதுதான் :

    “””””நீல ,சிவப்பு வண்ணத்தை,வளையத்தை குறியீடாக கொண்ட பிரான்சு தேசிய முன்னணி[National Front] என்பது கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் குரங்காக வரைவதன் மூலம் தன்னை இனவாத கட்சி என்று கூறிக்கொள்கின்றது “”””””

    ஒருவேலை தேசிய முன்னணியின் கார்டூனை “சார்லி வெளியிடு ” விமர்சிப்பது தவறு என்று ,அதுவும் இனவெறி என்று யாராவது கூறுவார்கள் என்றால் அதே வேலையை இந்த கட்டுரையில் செய்து உள்ள வினவையும்[ அந்த படத்தை வினவு வெளியிட்டதன் மூலம் ] இனவாதஇணைய தளம் என்று கூறமுடியமா ?

    பிற்சேர்க்கை

    [1] தேசிய முன்னணி[National Front]என்ற இனவாத கட்சியின் குரியீடு [symbol ]
    http://en.wikipedia.org/wiki/National_Front_%28France%29

    Vinavu said://பிரான்சில் வாழும் கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் பற்றிய சித்திரம்.//

  32. திரு சந்துரு அவர்கள் முன்வைத்துள்ள பின்வரும் கருத்துக்கள்..

    //உங்களுக்கு satire வடிவம் புரியவில்லையா, இல்லை இந்த விளக்கத்தில் என்ன குழப்பம் என்று தெரியவில்லை. satire பல வடிவங்களில் வரும்.//

    //பிரெஞ்சு கலாச்சாரம், மொழி தெரியாத மக்கள் எழுதிய வலைப்பதிவு படிக்க வேண்டாம். உண்மை வேண்டும் என்றால் அந்த தேசத்து மக்களின் பதிவுகளை படிக்கவும்.//

    சார்லி ஹெப்டோவைக் குறித்து எழுதப்படும் கட்டுரைகள் பலவற்றிலும் இது French Satirical Magazine என்று குறிப்பிடுகிறார்கள். ப்ரென்ச் சட்டையர் என்பதைப் புரிந்து கொள்ளும் அறிவு அந்நாட்டிற்கு வெளியே உள்ளவர்களுக்குக் கிடையாது என்கிறார்கள். இதை அடிப்படையாக கொண்டே ஐயேம் சார்லி இணையதளங்கள் சார்லியின் ஆபாசக் குப்பைகளில் குறியீடுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றன.

    முதலில் சட்டையர் என்பது அதிகாரத்திற்கு எதிராக வெளிப்படுவது. ஒருவன் தன்னையே சுயஎள்ளல் செய்து கொள்வதோ, தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களை அல்லது அதன் உள்முரண்பாடுகளை எள்ளுவதையோ இவ்வடிவமென கொள்ள முடியும். சார்லி ஹெப்டோ செய்வது அதிர்ச்சி மதிப்பீடு கொள்ளச்செய்யும் இரட்டை அர்த்த கார்டூன்கள். மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு பொருளையும், குறிப்பிட்ட ஒரு காண்டெக்ஸ்டில் வேறு ஒரு பொருளையும் வழங்குகிறது இந்தக் கார்ட்டூன்கள்.

    நம்மூரில் கூட “நீ தண்ணீ அடிக்க நம்பள் வூட் மேலே வந்து நம்பள்கி கைமேலே துட்டு கேக்குது?” என்று தலைப்பாகை கட்டிய ஒரு முசுலீம் பத்தானி குடிப்பதற்காக தன்னிடம் காசு கேட்கும் ஒருவனைச் சாடுவது போல் கார்ட்டூன் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்தக் கார்ட்டூன் டாஸ்மாக்கால் சீரழிந்த தமிழன் ஒருவனைச் சாடுகிறது என்பதையும், குடிப்பதற்காக அவன் கடன் வாங்கிச் சீரழிகிறான் என்ற கருத்தையும் அவனை அப்படி செய்ய வைப்பது அரசு என்ற விமரிசனத்தையும் மேலோட்டமாக கவனிக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.

    ஆனால், ஏன் முசுலீம் பத்தான்? ஏன் “நம்பள்கி” மொழி?

    கார்ட்டூன் முசுலீம்களை கிண்டல் செய்யவே இல்லை என்று நீங்கள் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யலாம் – அது உண்மையும் கூட. ஆனால், அது ஏற்கனவே இசுலாமியர்கள் குறித்து சமூகத்தில் ஆழப் பதிந்திருக்கும் ஒரு படிமத்தை பயன்படுத்திக் கொள்கிறது. வேறு ஒரு சமூக பிரச்சினையை கிண்டல் செய்ய வேண்டி போகிற போக்கில் ஒரு தட்டு தட்டுகிறது.

    க்வென்னெல்லியை வாழப்பழத்தின் வடிவத்தில் வரைய வேண்டிய அவசியமும் ‘Y’a bon banania’ விளம்பர வாசகத்தை சம்பந்தமில்லாத இடத்தில் நினைவூட்ட வேண்டிய தேவையும் ஏன் வருகிறது?

    சரி இந்த சோ கால்ட் ப்ரென்சு சட்டையரிக்கல் உரிமை என்பது ஏன் செலக்டிவாக அந்த நாட்டில் வெளிப்படுகிறது என்ற கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை.

    அடுத்து, சார்லி ஹெப்டோவின் பல கார்ட்டூன்களின் நீலப்பட காட்சிகளும், அதில் வரும் குதப்புணர்ச்சி அமைப்புகளும் ப்ரான்சின் கலாச்சாரம் அவர்களுக்கு வழங்கியுள்ள அதியுன்னத மேண்மை போலவும், இதெல்லாம் கட்டுப்பெட்டித்தனமாக சிந்திக்கும் இந்தியர்களுக்குப் புரியாது என்ற உள்ளடக்கத்திலும் சொல்லப்படும் கருத்துக்கள் பற்றி –

    உண்மையில் இப்படிச் சொல்பவர்கள் சார்லியை விமரிசிக்கும் தரப்பை கிண்டலடிப்பதாக கருதிக் கொண்டு பிரான்சைத் தான் கிண்டலடிக்கிறார்கள். சேம் சைட் கோல்.
    ப்ரான்சில் LGBT உரிமைகள் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளன என்பதும், மன உறவுகளில் ஆசிய தன்மை இல்லாதிருப்பதும் உண்மை என்றாலும் – ஒட்டு மொத்த ப்ரான்சும் குதப்புணர்ச்சி செய்து கொண்டோ, சுதந்திர பாலுறவை அடிப்படையாக கொண்ட திருமண பந்தங்களிலோ தான் உள்ளதா?

    ஆம் அப்படித்தான் என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால்,இந்த ‘சுதந்திரத்தின்’ வளையத்திற்குள் வர விரும்பாதவர்களை விமரிசிக்கும் போது யாருடைய வரையறைகளின் கீழ் அந்த விமரிசனம் அமைவது கருத்து சுதந்திரம்?

    வடிவேலு காமெடி ஒன்று நினைவுக்கு வருகிறது “நானும் இவனும் சின்ன வயசிலேர்ந்து பிரெண்டு பாஸ். நான் இவன் குடும்பத்தைக் கேவலமாகவும் இவன் என் குடும்பத்தை கேவலமாகவும் பேசுவது வழக்கம்”

    அது அவர்களுக்குள் இருக்கும் வரை பிரச்சினையில்லை, பக்கத்தில் நின்று கொண்டிருப்பவரும் இந்த “கருத்து சுதந்திரத்தை” ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கோருவது என்ன வகையில் நியாயம்?

    • அய்யா அறிவாளி திலகமே,

      வினவு தந்துள்ள why context matters என்னும் பதிப்பை முழுவதும் முதலில் படியுங்கள். படித்து வந்து விட்டு இந்த குதி எல்லாம் குதியுங்கள். நான் கூறிய (understandingcharliehebdo தளத்தில் உள்ள) அனைத்து விளக்கங்களும் அந்த பதிவில் இருக்கிறது. அதை படித்து விட்டுதான் என்னடா இது வினவு ஒரு மாதிரி சொல்கிறது, இந்த கட்டுரை வேறு மாதிரி சொல்கிறது என்று தேட போய் கிடைத்தது தான் அந்த இரு தளங்களும். அந்த context கட்டுரையில் கூறப்பட்டது:

      the presentation of the images used do not take into account a larger context of French political satire and cartooning, which includes inspiration from de Sade and Voltaire, and can seem positively Rabelaisian, with its focus on the lower bodily function. There is the gross and the gouaille that Arthur Goldhammer describes a populist, anarchic and obscene—something ingrained in Charlie Hebdo’s satire.

      அதாவது இது பிரான்சில் பிரெஞ்சு புரட்சிக்கு முன்பு இருந்தே வழக்கில் இருக்கிறது. மேற்குலகில் பல தேசங்களிலும் இது போல பல வழக்குகள் உள்ளன. சார்லி இந்த ஸ்டைலை பின்பற்றுகிறது. அவ்வளவே. நமக்கு அது மஞ்சள் பத்திரகை போல தோன்றும். ஆனால் அந்த தேசங்களில் அதற்க்கு பெரிய வரலாறு உண்டு. ஒரு தேசத்தின் பத்திரிகையை பார்க்கும்போது அதை அந்த தேசத்தின் மக்களின் பார்வையில் இருந்து தான் பார்க்கவேண்டும். நம் பார்வை கொண்டு அல்ல. ஏனெனில் தேசத்துக்கு தேசம் பழக்கங்கள், கலாச்சாரம் போன்ற அனைத்தும் மாறும். உங்களுக்கு அருவருப்பாக இருப்பது, மற்றவருக்கு சாதாரணம்.

      இப்படி எடுத்து கொள்ளுங்களேன். நம்ம ஊர் மயிலாட்டம், சிலம்பாட்டம், காவடி போன்றவற்றை எப்போது மற்றவருக்கு விளக்குவீர்கள்? அது என்ன, ஏன் அப்படி என்று கேட்டாலோ விளக்கலாம். இல்லை அதை பற்றி தவறான புரிதல் இருந்தால் அதை போக்க விளக்க முயற்சிப்போம். இதையே சார்லி விசயத்தில் பிரெஞ்சு மக்கள் செய்தால் (இப்போது ஏன் இந்த படங்கள் இப்படி இருக்கின்றன என்று மக்கள் கேட்பதாலும், அந்த படங்களை பற்றி பல தவறான செய்திகள் பரவுவதாலும்) தாங்கள் வடிவேலு காமெடி என ஏன் கூறுகிறீர்?

      • இந்தியக் கண்ணோட்டம், பிரெஞ்சுக் கண்ணோட்டம் என்பதெல்லாம் வெற்று வாதங்கள். கம்யுனிஸ்டுகள் சர்வதேசியவாதிகள். அதனடிப்படையில் தான் கட்டுரை தன் கண்ணோட்டத்தை வைக்கிறது என்பது எனது கருத்தாகும்.

        சார்லி வலது சாரி கும்பலைச் சாடுகிறது என்ற வாதத்தையும் ஏற்கவில்லை. சிலர் சார்லி இடதுசாரி என்றார்கள். இவையெல்லாம் இந்தியாவில் இடது ஓரம் நடந்துசெல்கிற பாதசாரிகளையும் இடது சாரி என்று சொல்கிற கேலிக்கூத்திற்கு ஒப்பானவை.
        சார்லி ஒர் உடோபிய லும்பனாக இருக்கிறது. இது மேற்குலகின் வார்த்தைகள் தான். கருத்து கந்தசாமிகள் இதற்கு அர்த்தம் கண்டுபிடித்து மேற்கொண்டு கூவலாம்.

        • சார்லியின் மீதான கட்டுரையின் குற்றச்சாட்டுகலாவது சார்லியின் கார்ட்டூன்கள் மீதான தவறனா புரிதல்கள் காரணமாக எழுதபட்டு உள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் தென்றலின் ,சார்லி மீதான குற்றச்சாட்டுகள் எவ்வித அடிப்படையும் உடையது இல்லை . “உடோபிய லும்பனாக” சார்லியை சித்தரிப்பது எல்லாம் ஜனநாயக பூர்வமான அந்த பத்திரிக்கையை உள்நோக்கத்துடன் அவதூறு செய்வதற்காக தென்றல் கூவும் குதர்க்கமான கருத்துகளே !

        • தென்றல்,

          நான் பார்த்த 100 கணக்கான சார்லியின் கார்டூன்கள் கம்யுனிச இயக்கத்தையோ ,கம்யுனிச கொள்கைகளையோ இழிவு செய்யாத நிலையிலும் ,அது மத ,இன வேறுபாடு இல்லாமல் அனைத்து விதமான சமுக லும்பன்களையும் கேலி செய்கின்றது என்பது தென்றலுக்கு எரிச்சல் ஊட்டுவது ஏன் ?

          • \\ நான் பார்த்த 100 கணக்கான சார்லியின் கார்டூன்கள் கம்யுனிச இயக்கத்தையோ ,கம்யுனிச கொள்கைகளையோ இழிவு செய்யாத நிலையிலும் ,அது மத ,இன வேறுபாடு இல்லாமல் அனைத்து விதமான சமுக லும்பன்களையும் கேலி செய்கின்றது என்பது தென்றலுக்கு எரிச்சல் ஊட்டுவது ஏன் ?\\

            இது எரிச்சல் என்றால் பிரச்சனையில்லை தமிழ். ஆனால் உங்களுடையது ஓர் அற்பவாத பார்வை. எச்சூழ்நிலையிலும் ஓர் ஒடுக்கப்படும் வர்கத்திற்கு சார்பாக நின்று அவர்களின் நலன்களை பிரதிபலிப்பவர்களே கம்யுனிஸ்டுகள். உங்களைப்போன்று உங்களை விமர்சிக்காதவர் உங்கள் நண்பர் என்றோ உங்களை விமர்சிக்கிறவர் எதிரி என்றோ சொல்வதற்கு கம்யுனிசம் ஒன்றும் உங்கள் அற்பவாத தராசு அன்று! ஓர் உடோபியன், கம்யுனிசத்தை விமர்சிக்கிற பொழுது அவன் பிரச்சாரகர்களைவிட அதிகம் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறான் என்பது தான் யதார்த்தம். ஆக உங்கள் பார்வையின் படி சார்லிபோன்ற மஞ்சள் பத்திரிக்கைகளோ உங்கள் நிலைப்பாடு கடுகளவும் இங்கு பொருந்தவில்லை என்பதைக் காணலாம்.

            • //உங்களைப்போன்று உங்களை விமர்சிக்காதவர் உங்கள் நண்பர் என்றோ உங்களை விமர்சிக்கிறவர் எதிரி என்றோ சொல்வதற்கு கம்யுனிசம் ஒன்றும் உங்கள் அற்பவாத தராசு அன்று! //

              அப்படிங்களா? கிறிஸ்துவ மதவாதி, இந்து மதவாதி, இஸ்ரேல் என எல்லாரையும் விமர்சிப்பவன் இஸ்லாமிய மதத்தில் ஒரு சிலர் மதத்தில் பெயரால் பெண்களின் பிறப்புறுப்பு சிதைக்கப்படும் கோரத்தை, பெண் போலீஸ் பணியில் சேர கன்னித்தன்மை சோதனை எடுத்துகொள்ள வேண்டும் எனும் சட்டத்தை, மதத்தை விமர்சித்து படம் வரைந்தால் கசையடி, சிறை என்பதை பேசினால் உடனே அவன் அற்பவாத தராசு. என்ன முட்டாள்தனம் இது?

              ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்பார்ப்பது சிறப்பு சலுகைகள் இல்லை அய்யா. சமமான உரிமை, சமமான மரியாதை, சமமாக நடத்தபடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. ஓரினசேர்கையாளர், இஸ்லாமியர்கள், தலித்துகள் என எவரை வேண்டுமானாலும் கேளுங்கள். சமமாக நடத்துங்கள் போதும் என்பர். என் அனுபவத்தில் (தர்மபுரியில் வளர்ந்தவன் நான். நான் வளர்ந்த தெருவின் பெயர் வன்னியர் தெரு.சாதி அட்டூழியங்களை கண்ணால் பார்த்தவன். எனவே உங்கள் பம்மாத்து, நக்கல் எல்லாம் வேண்டாம்.மனம் மரத்து போகும் அளவுக்கு கொடுமைகளை பார்த்தாகிவிட்டது) நான் உணர்ந்தது இதுவே.

              எல்லா மூடநம்பிக்கையும் எதிர்க்கணும். இதில் பாரபட்சம் ஏன்? ஒடுக்கப்பட்ட மக்கள் என்றால் மூடநம்பிக்கையை பற்றி பேசாம, அதை தவறு என்று சுட்டிக்காட்டாமல் எப்படி அய்யா அதை தவறு என்று பேசுவீர்? கம்யூனிஸ்ட் எல்லா ஒடுக்கப்பட்டவர் நலனுக்கு பேசுபவர் என்றால் உக்ரைன் போல பல பேசினால் பதில் இல்லாமல் ஓடுவது ஏன்? ருசியா பஞ்சத்தை பற்றி பேசினால் இங்கும் அது எடிட் செய்யப்படும். இதை எல்லாம் விட்டுவிடுவோம். இன்று கிட்ட தட்ட எல்லா மதத்தாலும் ஒடுக்கப்படும் ஓரினசேர்கையாளர் விசயத்தை எடுத்துகொள்வோம். அவர்களுக்கு சம உரிமை என்பதை மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தாமல் எப்படி கொடுப்பீர்கள்? குஷ்பு, கற்பு பிரச்சனையை அலசி ஆராய்ந்த வினவு இன்றும் இந்தயாவில் ஓரினசேர்க்கை சட்டப்படி தவறு என்று இருப்பதை பற்றி மூச்சு கூட விடாமல் இருப்பது ஏன்? இவர்கள் எந்த விடயத்தில் ஒடுக்கப்பட்டவர் இல்லை? அவர்களுக்கு உரிமையை, மத உணர்வை புண்படுத்தாமலும் எப்படி தருவீர் என கொஞ்சம் கூறவும்.

              • நான்கு பார்வையை முன்வைத்திருக்கிறீர்கள். சுருக்கமான எனது பதிலை ஐந்து பாயிண்டுகளாக வைத்துவிடுகிறேன்.

                1. இசுலாமிய மதவெறி என்று மட்டுமில்லை எந்த மதவெறியையும் கண்டிப்பது மட்டுமல்ல அதை ஒழிப்பதற்கும் கம்யுனிஸ்டுகளில் மட்டும் தான் தீர்வு உண்டு. அதற்கு வர்க்கப்போராட்டம் என்று பெயர். இது நிதர்சனம் என்கிற பொழுது முதல் பத்தியில் தாங்கள் வைத்திருப்பது முழுக்கவும் அவதூறு ஆகும். வினவு மார்க்சிய-லெனினிய அரசியலை பாட்டாளிகளுக்கான விடுதலையாக முன்வைக்கிறது என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். ஆப்கனில் இதே போன்ற மலெ குழுக்கள் தாலிபான்களால் கொடூரமாகச் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். உங்களைப் போன்ற கருத்து கந்த சாமிகளுக்கு இதைப் பற்றி எதாவது தெரியுமா? மலாலவைத் தெரிகிற உங்களுக்கு அதே மலாலாவைச் சுட்ட தாலிபான்களை எதிர்த்து கம்யுனிஸ்டு மலாலா என்ற பெண் உயிரைப் பணயம் வைத்து பெண் விடுதலைக்கான கல்வியை முன்னெடுக்கிறார் என்பது ஏன் இந்த ஆளும் வர்க்கத்திற்கு தெரியவில்லை? எந்த நாட்டு பத்திரிக்கையாவது உங்களது செவிகளில் இந்தச் செய்தியை ஊற்றியிருக்கிறதா? உங்களைப்போன்றவர்கள் ஆளும் வர்க்கம் செதுக்கி நிறுத்தும் நொறுக்குத் தீனி தலைமுறைகளாக இருக்கிறீர்கள் என்பதுதான் நிதர்சனம். ஆக அவதூறு வைக்காமல் ஆணித்தரமாய் உங்கள் கருத்துகளை விவாதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

                2. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமமான உரிமை, அதிகாரம் அனைத்தும் பாட்டாளி வர்க்க விடுதலையின் மூலம் தான் சாத்தியம் ஆகும். வேறு எந்த சால்ஜாப்புகளினாலும் அல்ல. அம்பேத்கர் சொன்னார் இப்படி; தலித்துகள் தங்களைக் தற்காத்துக்கொள்ள ஆயுதம் ஏந்தும் உரிமையை இரத்து செய்தது இந்துபாசிசம் என்றார். மாறாக இந்து பாசிசம் முன் நிறுத்துகிற அனைத்து கடவுளர்களும் ஆயுதபாணிகளாக மாற்றப்பட்டார்கள். இப்படிப்பட்ட இந்துத்துவத்தையே தாங்கள் ஒரு போதும் எதிர்த்தவர் அல்லர். பகவத் கீதைக்கும் பாசிச கிருட்டிணனுக்கும் பல்லக்கு தூக்கியவர். தாங்கள் இதைத் தாண்டி ஒடுக்கப்பட்ட மக்களின் சமஉரிமை என்று பேசுவதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது. வாழ்ந்த தெரு வன்னியர் தெரு, தர்மபுரி என்கிறீர்களே! அப்பு பாலனைத் தெரியாதா? இதே நாயக்கன் கொட்டையில் இளவரசனைக் கொலைசெய்த வன்னியசாதிவெறி தாண்டவம் ஆடிய இதே பகுதி மக்களின் சில பல வீதிகளிலேயே பத்துக்கும் மேற்பட்ட கலப்புத் திருமணங்களைப் பார்க்கமுடியும். இதைச் சாதித்தது புரட்சிகர அரசியல் தான். வேறெதுவும் அல்ல.

                3. உக்ரைனைப் பற்றியோ ரசியப் பஞ்சத்தைப் பற்றியோ நாணயமுள்ளவர் ஆதாரத்துடன் விவாதியுங்கள். ஊதிப்பெருக்கப்பட்ட அவதூறுகளை இங்கு பரப்புவது இத்தளத்தின் நோக்கம் இல்லை என்று கருதுகிறேன். இதற்கெல்லாம் அசந்தவர்கள் கம்யுனிஸ்டுகள் அல்லர். சொல்லப்போனால் இதை கோடிக்கணக்கான முறை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது என்பது என் புரிதல். முதலாளித்துவம் கட்டவிழ்த்திருக்கிற பொய்களை முறியடிப்பதில் நேர்மையிருந்தால் கைகோர்த்து வேலை செய்யுங்கள். இல்லை கம்யுனிசம் அப்படியல்ல என்று தாங்கள் கருதுவீர்களேயானால் தெருவுக்கு இறங்கிவந்து போராடுங்கள். எங்கும் எதிலும் கைக்கூலியாக இருப்பினும் கூட போராட்ட வாழ்க்கை முதன்மையாக இருப்பது நியாயமானது. சும்மா பின்னூட்டத்தில் டகால்டி அடிக்கக் கூடாது. மணல் குவாரி முற்றுகையிடும் போராட்டத்திற்கு வாங்க. ஆளத் திரட்டி ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராடுவோம். தாங்கள் தயாரா?

                4. இசுலாமிய மதவெறி என்றாலும் வாருங்கள் மேலப்பாளையத்திற்கு. உழைக்கும் இசுலாமியர்களை பிஜே போன்ற வெறியர்களுக்கு எதிராக அணிதிரட்டுவோம். ரேச்சல் கோரி பாலஸ்தீனர்களுக்காக களத்தில் இறங்கிப் போராடினாளே! அவள் என்ன கம்யுனிஸ்டா? இங்கே உங்களது பாசாங்கு வெளிப்படவில்லையா?

                5.ஓரின ஈர்ப்பாளருக்கு சம உரிமை என்ற ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறீர்கள். இங்கு மதம் கோணாமல் தீர்வு எப்படி தருவீர்கள் என்று கேட்டிருக்கிறீர்கள். மதம் கோணாமல் தீர்வெல்லாம் இதற்கு கிடையாது. பெரும்பான்மை மக்களின் பாலியல் உரிமைகளையை பறித்துக்கொண்டது இந்த முதலாளித்துவமும் மதங்களும் தான். அதை நோகாமல் ஒரு நோம்பியும் கொண்டாட இயலாது. இதற்கு தீர்வு ஒருவரியில் சொல்ல முடியாது என்றாலும் எனக்குத் தெரிந்த பார்வையை ஒரு வரியில் முன்வைக்கிறேன். சமூகப்புரட்சி சாத்தியமின்றி பாலியல் புரட்சி சாத்தியமில்லை. பாலியல் உரிமைகளை முதலாளித்துவமும் மதங்களும் பெரும்பான்மை மக்களிடம் இருந்து பறித்துவிடுகிற பொழுது ஆகச் சிறுபான்மையினரின் பாலியல் கோரிக்கைகள் பிங்க் புரட்சி என்பதன் பெயரில் முதலாளித்துவம் முன்னெடுப்பதன் சூட்சுமத்தை விளக்குங்கள். பதிவை விட்டு விலகாமல் இருந்தால் இதன் அரசியலை மேலும் பேசுவோம்.

            • கம்யுனிஸ்டுகளையோ , கம்யுனிச இயக்கத்தையோ ,கம்யுனிச கொள்கைகளையோ சார்லி இழிவு செய்யாத நிலையில் தென்றலுக்கு எரிச்சல் ஏன் ? என்று மட்டும் நான் கேட்டு இருந்தால் கண்டிப்பாக என் கருத்து அற்பவாதம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சார்லி அதன் கார்டூன்கள் மூலம் சமுக லும்பன்களையும் கேலி செய்கின்றது என்றும் நான் பதிவிட்டு இருக்கும் நிலையில் அதனை கண்டும் காணாமலும் போகும் தென்றல் அவர்களுக்கு தான் பித்தல் ஆட்ட காரர் ,அற்பவாதி ஆகிய பாராட்டுகள் மிகவும் பொருந்தும். சார்லியின் கார்டூன்கள் ஓவொன்றும் ஒரு குறிப்பிட்ட அரசியல் ,சமுக ,பொருளாதார பிரச்சனையை எதிர்த்து படம் கொடுக்கும் போது [குரல் கொடுப்பது போல வாசகர்கள் படிக்கலாம் ] அப்படி பிரச்சனையை எதிர்கொள்ளும் போது சார்லி இனவாதிகளை மிக தீவிரமாக எதிர்க்கும் போது அவற்றை எல்லாம் கண்டும் காணாமலும் போவதற்கு அர்சனை செய்வதற்கு கம்யுனிச அகராதியில் என்ன என்ன பாராட்டு வசை வார்த்தை எல்லாம் இருக்கின்றதோ அவற்றை எல்லாம் நடு விரலை உங்கள் நெத்தியின் மீது காட்டி உங்களையே பாராட்டி கொள்ளுங்கள் தென்றல் தென்றல் தென்றல். தென்றல் அவர்கள் கம்யுனிச வசை சொல் அகராதியை சர்வதேச அளவில் தெகுத்து பதிப்பிக்கும் அளவிற்கு மிக்க திறமையானவர் தான்

        • //கம்யுனிஸ்டுகள் சர்வதேசியவாதிகள். அதனடிப்படையில் தான் கட்டுரை தன் கண்ணோட்டத்தை வைக்கிறது என்பது எனது கருத்தாகும்.//

          அப்படியே ரஷ்யா உக்கரைனில் செய்வது பற்றியும், சீனாவில் தொழிலாளர் தற்கொலை செய்வதை தடுக்க கட்டிடங்களை சுற்றி வலை பரப்பி இருப்பதை பற்றியும், சவுதி அரேபியாவின் சட்டங்களை பற்றியும், இந்தோனேசியா போலீசில் பெண்கள் சேர அவர்கள் கன்னித்தன்மை பரீட்சை எடுத்துகொள்ள வேண்டும் என்பதை பற்றியும், கத்தார் உலககோப்பை மைதானம் கட்ட தொழிலாளிகள் கொத்து கொத்தாய் செத்து கொண்டு இருப்பதை பற்றியும், மத உரிமையை காட்டி பெண்களின் பிறப்புறுப்பு சிதைக்க படுவது பற்றியும் பேசிவிடுங்கள். அதை படித்துவிட்டு நீங்கள் சர்வதேசியவாதியா இல்லை சந்தர்ப்பவாதியா என்று நான் முடிவு செய்து கொள்கிறேன். வெற்று வீம்புகள், மார்தட்டுதல் இங்கு வேண்டாம்.

          • சந்துரு அவர்களே, தாங்கள் சொல்கிற நாட்டில் எல்லாம் ஆளும் வர்க்கத்தின் அடாவடித்தனங்களை கண்டிப்பது கம்யுனிஸ்டுகள் தான். இதை தாங்கள் முடிவு செய்து நிர்ணயிக்கிறீர்கள் என்ற பெருந்தன்மைக்கு நன்றி. இதை வரவேற்கிறேன். மற்றபடி மார்தட்டுவது எல்லாம் தேவையற்றது. பார்ப்பனர்களை வினவு விமர்சிக்கிறது என்று சொல்லியே பொத்துக்கொண்டு ஓடியவர் தாங்கள். ஆனால் இன்றோ சார்லிக்கு கருத்துரிமை என்று மார்தட்டுகிறேர்களே? அது ஏன் என்று விளக்குவீர்களா?

            • //தாங்கள் சொல்கிற நாட்டில் எல்லாம் ஆளும் வர்க்கத்தின் அடாவடித்தனங்களை கண்டிப்பது கம்யுனிஸ்டுகள் தான்//

              காமெடி பண்ணாதீங்க தென்றல். அந்த தேசங்களில் கம்முனிச சித்தாந்தம் கொண்ட கட்சி எதுவும் இல்லை. சீனாவில் இருப்பது ஒரே கட்சி, அதுவும் போலி கம்யூனிஸ்ட் (உங்கள் கூற்றுதான்). இந்தோனீசியாவில் இருப்பது இரண்டு வித கொள்கை கொண்ட கட்சிகள்: பஞ்சசீல கொள்கையை உடையவை ஒன்று, இஸ்லாமிய மதவாத கொள்கை இன்னொன்று. இதில் பேருக்கு சோசியலிசம் பேசும் United Development Party கூட முதல் மரியாதை இஸ்லாத்துக்கு.

              http://en.wikipedia.org/wiki/Politics_of_Indonesia, http://en.wikipedia.org/wiki/Pancasila_(politics)
              http://www.hrw.org/news/2014/11/17/indonesia-virginity-tests-female-police

              அரேபியா இன்னும் சுத்தம். இருப்பது மன்னராட்சி மட்டும்தான். இரண்டு தேசங்களிலும் இந்த மதவாத விசயத்துக்கு எதிராக போராடுபவர் எல்லாரும் உங்கள் So called Liberals. அரேபியாவில் ஷியா, லிபரல் மக்கள் தான் அடிப்படைவாத சுன்னி அரசனுக்கு எதிராக போராடுபவர்.
              http://www.brandeis.edu/crown/publications/meb/MEB33.pdf

              • விட்டா பார்லிமெண்டில் பெஞ்சு தேய்க்கும் கம்யுனிஸ்டுகளையெல்லாம் கம்யுனிஸ்ட் கட்சி என்று காட்டூவீர்கள் போல் இருக்கிறது. ஆளும் வர்க்கத்தை எதிர்ப்பவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கிறார்கள். இந்தோனோசியா எல்லாம் ரொம்ப டூ மச் சார். அமெரிக்க கைக்கூலி சுகர்த்தோவ் வெறியில் எத்துணை இலட்சம் கம்யுனிஸ்டுகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு ஏதாவது அவதூறு உள்ள அவதூறு அல்லாத தங்கள் கண்ணுக்கு கிடைக்கிற எந்த அறிக்கையாவது படிக்கலாம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான போராட்டம் என்பது உலகிங்கெலும் இருக்கிறார்கள். தொழிலாளர் போராட்டத்தில் இருந்து ஆரம்பிங்கப்பா. இதே பிரான்சு இருக்கிற குழுக்கள் என்னென்ன என்பதை பட்டியலிடுங்கள். வாசகர்களும் தெரிந்துகொள்ளட்டும். முசுலீம் நாடுகள் பற்றி தனியா எழுதலாம். சில பதிவுகள் இருக்கிறது. தங்கள் பார்வைக்கு சில சுட்டிகள் தருகிறேன்.

                • எழுபதுகளில் நடந்த அந்த கொடுரம் பற்றி எனக்கும் தெரியும் சார். நான் கேட்க்கும் சுட்டிகள் முடிந்தால் தரவும். ஆப்ரிக்கா, இந்தோனேசியா, வளைகுடா தேசங்களில் என்ன, என்ன பிரச்சனையை எப்படி கம்யூனிஸ்ட் போராடினார்கள் என்பதற்கு கம்முனிச ஆதரவு தளம் அல்லாதவை எதாவது தரவும்.

                  //தொழிலாளர் போராட்டத்தில் இருந்து ஆரம்பிங்கப்பா//

                  நீங்கள் உலக தொழிலாளர் சட்ட வரலாற்றை ஒரு முறை படிக்க வேண்டுகிறேன்.

                  http://www.britannica.com/EBchecked/topic/326911/labour-law/21751/Historical-development-of-labour-law

                  பிரான்ஸ் பற்றி பட்டியிலிட வேண்டும் என்றால் சார்லி தலைவர் charb கம்முனிச ஆதரவாளர் என்பது ஒரு ஆரம்பம் (இது உண்மை கம்யூனிஸ்ட் போலி கம்யூனிஸ்ட் பிரச்சனை எல்லாம் நீங்கள் பார்த்துகொள்ளுங்கள். அவர் கம்முனிச சிதந்தவாதியாக வெளிபடையாக பல ஆண்டுகள் பேசியவர்). அவரில் இருந்து ஆரம்பிப்போம்.

                  • \\நான் கேட்க்கும் சுட்டிகள் முடிந்தால் தரவும். ஆப்ரிக்கா, இந்தோனேசியா, வளைகுடா தேசங்களில் என்ன, என்ன பிரச்சனையை எப்படி கம்யூனிஸ்ட் போராடினார்கள் என்பதற்கு கம்முனிச ஆதரவு தளம் அல்லாதவை எதாவது தரவும்.\\

                    முதலாளித்துவத்தின் மூக்கு மேல் அமர்ந்து கொண்டு கம்யுனிச ஆதரவு தளம் அல்லாதவையிலிருந்து கம்யுனிஸ்ட் எப்படி போராடினார்கள் என்பதற்கு சுட்டிகள் தரவும் என்பதற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? ஏன் கேட்கிறேன் என்றால் முதலாளித்துவ ஆதரவு இல்லாத ஒரு தளம் முதலாளித்துவத்தை ஆதரிப்பதாக ஏதாவது செய்திகளை வெளியிட்டு இருக்கிறதா? புளிச்ச ஏப்பகாரனின் மனநிலை போல் இருக்கிறது இல்லையா? உங்க தோஸ்த் விக்கிபீடியாவிலிருந்து ஸ்டார்ட் பண்ணுங்க பாஸ். ஜெயில்ல இருக்கிற கம்யுனிஸ்டுகளையாவது தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு தமிழ் நாட்டு விவிமு பற்றி எதாவது தெரியுமா என்று கொசுறு கேள்வியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆப்ரிக்கா, சிரியா, ஈரான், ஈராக் பற்றி பேசுவோம்.

                    \\நீங்கள் உலக தொழிலாளர் சட்ட வரலாற்றை ஒரு முறை படிக்க வேண்டுகிறேன்.\\

                    உங்கப் பெருந்தன்மை ஜாஸ்தி. அதில் எனக்கு ஓரளவு தெரியும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே சயின்ஸ் சஞ்சிகையில் எடிட்டோரியலைக் காட்டி பியர் ரிவ்யூடு என்று தாங்கள் பீற்றிக்கொண்டதாக ஞாபகம். நானும் சில பல அறிவியல் சஞ்சிகைகளுக்கு பியர் ரிவ்யூவர் என்பதன் முறையில் தாங்கள் காட்டிய சுட்டியில் இருந்து என்ன படிக்க வேண்டும் என்பதைச் சொன்னீர்கள் என்றால் சிலேட்டு போட்டு கட்டப்பால் குச்சி வைத்து வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டுவந்து சமர்ப்பிப்பேன்.

                    \\ பிரான்ஸ் பற்றி பட்டியிலிட வேண்டும் என்றால் சார்லி தலைவர் charb கம்முனிச ஆதரவாளர் என்பது ஒரு ஆரம்பம் (இது உண்மை கம்யூனிஸ்ட் போலி கம்யூனிஸ்ட் பிரச்சனை எல்லாம் நீங்கள் பார்த்துகொள்ளுங்கள். அவர் கம்முனிச சிதந்தவாதியாக வெளிபடையாக பல ஆண்டுகள் பேசியவர்). அவரில் இருந்து ஆரம்பிப்போம்.\\

                    அப்படித் தாங்கள் ஆரம்பிப்பதாக இருந்தால் இடதுசாரிகளின் கணக்கில் சாலையின் இடது ஓரம் நடந்து செல்லும் பாதசாரிகளையும் கணக்கில் எடுத்துகொண்டு கம்யுனிஸ்டு என்பதைப் பற்றிச் சொல்லுங்கள். கம்யுனிச சிந்தாந்தவாதி என்றால் உங்கள் புரிதல் என்ன என்பதையும் விளக்குங்கள்.

                    • //முதலாளித்துவத்தின் மூக்கு மேல் அமர்ந்து கொண்டு கம்யுனிச ஆதரவு தளம் அல்லாதவையிலிருந்து கம்யுனிஸ்ட் எப்படி போராடினார்கள் என்பதற்கு சுட்டிகள் தரவும் என்பதற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? //

                      தென்றலுக்கு உலக ‘அறிவு’ எவ்வளவு இருக்கிறது என்பதற்கு இது போதும். நடுநிலை தளங்கள், மக்கள் வலைபதிவுகள், மனித உரிமை ஆணையம் போன்ற அமைப்பின் அறிக்கைகள், ஏன் வெளிநாட்டு தளங்கள், நிகழ்சிகளில் கூட நீங்கள் விமர்சிக்கும் எல்லா விசயத்தையும் (islamaphobia, முதலாளித்துவம்,drone strikes)அவர்களும் விமர்சிக்கிறார்கள். இரண்டொரு எடுத்துகாட்டுகள்:

                      https://www.youtube.com/watch?v=K4NRJoCNHIs
                      https://www.youtube.com/watch?v=LfgSEwjAeno
                      https://www.youtube.com/watch?v=8rjYuaQ1Zho
                      https://www.youtube.com/watch?v=Q-Ls31RiooQ
                      https://www.youtube.com/watch?v=uE80NuMkvg8
                      https://www.youtube.com/watch?v=zmCKZYKsiGM

                      எல்லாத்தையும் குடுக்கணும் நா இடம் போதாது. முதலாளித்துவ நாட்டில் இருக்கும், அவர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் சோசியலிசம் நல்லது, அதை ஆதரிக்க வேண்டும் என்று வெளிபடையாக கூற முடியும். எல்லோரும் சமம் என்று கூறவும் முடியும். ஆனால் தோழர்களிடம் காபிடலிச மாடலில் நல்ல விஷயம் இருக்கு என்று கூறினால் அடுத்த நிமிடம் அங்க நாம இருக்க முடியாது. எனக்கு விவிமு பற்றியும் தெரியும், மலாலா சோசியலிச பேச்சுகளும் தெரியும். உங்களை போல கடிவாளம் என் கண்ணில் இல்லை.

                      //ஏற்கனவே சயின்ஸ் சஞ்சிகையில் எடிட்டோரியலைக் காட்டி பியர் ரிவ்யூடு என்று தாங்கள் பீற்றிக்கொண்டதாக ஞாபகம்//

                      எடிட்டோரியல் காட்டியதாக எனக்கு நினைவில்லை. ஒரு வேலை காட்டி இருந்தால் அந்த கமெண்ட் காட்டவும். அது தவறான லிங்காக இருந்தால் திருத்தி கொள்கிறேன். அப்படியே தாங்கள் peer review செய்ததை காட்டவும். தாங்கள் எதில் எக்ஸ்பெர்ட் என்று அறிய ஆவல் உள்ளது.

                      //கம்யுனிச சிந்தாந்தவாதி என்றால் உங்கள் புரிதல் என்ன என்பதையும் விளக்குங்கள்.//

                      பெயரில் இருக்கிறது விளக்கம். இந்து என்றால் இந்து மதத்தை வாழ்கையின் அடிபடையாக பின்பற்றுபவன், இஸ்லாம் என்றால் இஸ்லாமிய மதத்தை வாழ்கையின் அடிபடையாக பின்பற்றுபவன், நீயோ நாசி என்றால் நாசி கோட்பாட்டை வாழ்கையின் அடிபடையாக பின்பற்றுபவன். அதே போல கம்யூனிஸ்ட் என்றால் கம்முனிச வாழ்கையின் அடிபடையாக பின்பற்றுபவன்.இதில் நல்லவர், கேட்டவர், உண்மை, போலி என உங்கள் சமாளிப்புகளுக்கு இடம் இல்லை. இந்து கடவுளை பின்பற்றுபவன் இந்து என்றால் கம்முனிச தத்துவத்தை பேசுபவன் கம்யூனிஸ்ட். இந்து கடவுளை கொண்டு அவன் தன் வாழ்கையை மேம்படுத்தலாம், இல்லை மதவெறியனாகவும் இருக்கலாம். இதே கம்முனிச வாதிகளுக்கும் பொருந்தும்.

            • அப்புறம் இந்த ஓடியது எல்லாம் இல்லை. வினவு பார்பனத்தை, பார்பனர்களை விமர்சிப்பது தவறு என்று நான் எப்போதுமே கூறியது இல்லை. வினவின் ஒரு சில blanket statement பற்றி மட்டுமே எனக்கு சில கேள்விகள் உண்டு. (எ.கா: நியூயார்க் டைம்ஸ் சித்திரத்தை விமர்சித்த அனைவரும் அம்பிகள் என்று கூறியதை போல. விமர்சித்தவர் ஏன் எல்லாரும் அம்பிகள்? அதில் தலித் மக்களோ, கீழ்சாதி மக்களோ, கிறிஸ்துவன், முஸ்லிம் இருந்தால் அனைவரும் அம்பிகள் தானா? என்பது என் கேள்வி.)

              அந்த விவாதம் வேலை பளுவின் காரணமாக தொடரமுடியவில்லை. இப்போதும் சிறிது நேரம் கிடைபதால் தான் பேச முடிகிறது. இதற்க்கு நான் பார்பன ஆதரவாளன் என்றோ, உங்கள் கேள்வி கணைகள் தாங்க முடியாமல் ஓடி விட்டேன் என்றோ பகல் கனவு காண வேண்டாம். ஒரே காரணம் நேரமின்மை.

    • //அது அவர்களுக்குள் இருக்கும் வரை பிரச்சினையில்லை, பக்கத்தில் நின்று கொண்டிருப்பவரும் இந்த “கருத்து சுதந்திரத்தை” ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கோருவது என்ன வகையில் நியாயம்?//

      எந்த பக்கத்துக்கு மனிதன் மேல் அய்யா இந்த சுதந்திரம் திணிக்க பட்டது? பிரெஞ்சு தேசத்தில், பிரெஞ்சு மொழியில் உலகில் நடக்கும் பிரச்சனையை பேசியதற்கு இது பரிசா? என்னமோ சார்லி விமானம் ஏறி சென்று ஆப்ரிக்காவில் நிறவெறியையும், அரேபியா தேசங்களில் இஸ்லாமிய வெறியை பரப்புவது போல பேசுகிறீர்! தன் தேசத்திற்குள், தன் பத்திரிகையை படிப்பவருக்கு மட்டும் தானே அந்த கருத்து பகிரப்பட்டது? பத்திரிகையை படித்துவிட்டு நீங்கள் அது தவறு என்று நினைத்தால் நீங்கள் பத்திரிகை வாங்காமல் போகவேண்டியது தானே? இதில் எனக்கு உடன்பாடு இல்லை, இதை செய்யாதே என்று நீங்கள் எப்படி சொல்லலாம்? சட்டத்தை மீறி இருந்தால், சட்ட வழியில் செல்லவும். உங்களுக்கு பிடிக்கவில்லை, அதனால் அவன் செய்யகூடாது என்றால் அது என்ன நியாயம்? இதே போல வினவு அலுவலகத்துக்கு ஒருவர் வந்து இந்து கடவுள்களை படத்தில் போடாதே, அது என் நம்பிக்கை படி செய்ய கூடாது என்றால் என்ன சொல்வீர்கள்? அவர்கள் தேசத்தில் அவன் வர்ணிக்கிறான்.அவன் வேறு எங்கும் அதை செய்யவில்லை.எந்த பக்கத்து வீட்டுக்காரன் மீதும் அது திணிக்க படவும் இல்லை.

    • உங்கள் மூன்றாவது கேள்விக்கு பதில் தர சில லிங்குகளை தர முயற்சி செய்து கொண்டுருக்கிறேன். என்ன காரணம் என்று தெரியவில்லை அந்த லிங்குகள் இருக்கும் பதில் போஸ்ட் ஆக மறுக்கிறது. பதில் இங்கு உள்ளது. படிக்கவும்:

      http://pastebin.com/FwViW5Xb

      (வினவுக்கு ஒரு வேண்டுகோள். இந்த பதிவில் இதை நீக்கி விட்டு என் லிங்கில் இருக்கும் பதிவை இங்கு பதிக்க முடிந்தால் செய்யவும். இது என் தரப்பில் டெக்னிகள் பிரச்சனையா என்று தெரியவில்லை. என் தரப்பில் எதாவது பிரச்சனை என்றால் எப்படி சரி செய்வது என கூறவும்.)

  33. தமிழரசனின் கருத்துக்களுக்கு எதிர்வாதம் செய்யும் தமிழ், வியாசன், சந்துரு மற் றும் அனைத்து பதிவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். தோழர் கலையரசனின் கீழே குறிப்பிட்டுள்ள பதிவை ஒருமுறை படிக்கவும்.

    “கருத்துச் சுதந்திரவாதிகள்” உங்களுக்கு கூறாமல் மறைத்த உண்மைகள் – January 18, 2015
    http://kalaiy.blogspot.in/2015/01/blog-post_18.html

    • கலையரசனோ அல்லது தமிழரசனோ, யாரோ, இந்தக் கட்டுரையை எழுதிய அரசன், இந்தக் கட்டுரையில் தனது தவறை ஒப்புக் கொள்வதற்குப் பதிலாக மேலே குறிப்பிட்ட இணைப்பில் வெறும் சப்பைக்கட்டுக் கட்டுகிறார். இபப்டியே போனால், அமெரிக்காவில் நியூயோர்க்கில் இரட்டைக் கோபுரத்தைத் தாக்கியது தலிபான்கள் அல்ல, அமெரிக்க அரசு தான் என்பது போல, பாரிசில் சார்லி ஹெப்டோவைத் தாக்கியதும், பிரான்ஸ் அரசு என்று கூட கூறுவார் போலிருக்கிறது. பாவம் அவர், இந்தக் கட்டுரையில் அவசரப்பட்டு விட்டார. எல்லாவற்றையும் சோசலிச, கம்யூனிசக் கண்ணாடி போட்டுப் பார்த்துக் கொண்டு, இஸ்லாமிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முனைந்தால் இப்படியான குழப்பங்கள், மாறாட்டங்கள் தான் ஏற்படும். சார்லி ஹெப்டோ குழுமத்தினர், கம்யூனிஸ்டுகள் என்று கூறக் கூடியளவுக்குச் சரியான இடது சாரிகள், அவர்கள் இனவாதிகளோ, மதவாதிகளோ அல்ல என்பது தான் உண்மை.

      // ………மாறாக, கிறிஸ்தவ – வெள்ளையின கலாச்சார மேலாதிக்கத்திற்காக பாடுபடும், தீவிர வலதுசாரி சக்திகள் தான். ஆகவே, பாரிஸ் தாக்குதலை நடத்திய சூத்திரதாரிகள், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்து விழுத்தி உள்ளனர் என்பது தெளிவாகின்றது.//

      • வியாசன் இது என்ன புதியமுறை ? அவரின்[கலையின்] கட்டுரையை வினவில் // …….// போட்டு நீங்கள் விவாதிப்பது ஏன் ? . அவர்[கலை] இங்கு வந்து வினவில் விவாதிக்கட்டும் . பிரான்சில் அவர் இணையத்தை பயன் படுத்த தடையா என்ன ?

      • சார்லி பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கியதே இசுலாமிய தீவிரவாதிகள் இல்லை அய்ரோப்பிய ஒன்றியத்தின் சதி வேலைதான் இது என் கிறார் கலை அரசன் எண்பவர் //பிரான்ஸ் அரசு என்று கூட கூறுவார் போலிருக்கிறது. பாவம் அவர்,//அதுக்கு ஆதரமாக அவர் சுட்டிக்காட்டுவது பத்திரிக்கை அலுவலகத்துல மீட்டிங் நடந்த்தது தாக்குதல்நடத்துனவனுக்கு முன்னமே தெரிஞ்சு இருக்கு அவன் ஒரு ராணுவ வீரனைப்போல மிகவும் நேர்த்தியாக துப்பாக்கியை கையாண்டி இருக்கிறான் என்று சொல்லுகிறார் என்னமோ புதுசு புதுசா யோசிக்கிறாங்க விட்டா இசுலாமிய தீவிரவாதிகள் என்று யாரும் இல்லை எல்லோரும் அமெரிக்க ராணுவ வீரர்கள் யூனிபார்ம் இல்லம அரபு டெரஸ் போட்டு ஒட்டுதாடி வச்சுக்கிட்டு ஈராக் பகுதிலயும், சிரியா பகுதிலயும் ,ஆப்கானிஸ்தான் பகுதிலயும் இன்னும் எங்கங்க தீவிரவாதிகள் இருக்கானு போட்டா வருதோ அங்க யெல்லாம் போய் போட்டோ பிடிச்சு போட்டு இசுலாமியர்கள் மீது வேண்டுமென்றே அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அவதூரை பரப்புகின்றன, உலக சமாதான போராளி அல்பத்தாதிதான் அவருக்கு துப்பாக்கி பிடிக்க கூட தெரியாது அப்பிடினு சொன்னாலும் ஆச்சிரியப்படுரதுக்கு இல்ல.நம்புரவக நம்புங்க அது உங்க இஸ்டம்

  34. KKN ,தோழர் கலையரசனின் கருத்துக்கள் பற்றி அங்கு சென்று விவாதிக்கவேண்டிய தேவை என்ன இருக்கின்றது .? அவரை வேண்டுமானால் இணையத்தில் வினவுக்கு வந்து நாங்கள் வைக்கும் எதிர்கருத்துக்களை படித்து அதற்கு எதிர் வாதம் வைக்க சொல்லுங்கள் பார்போம் . ஒவொரு கார்டூனாக ஆய்வு செய்து கொண்டு இருக்கின்றேன். சார்லி இனவாத பத்திரிக்கை அல்ல, அது இனவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் பத்திரிக்கை என்று உதாரனங்களுடன் நிருபித்துக்கொண்டு தான் இருக்கிறேம்.[சார்லி தேசிய முன்னணி[National Front], யூடோன்னெ ம்பாலா ம்பாலா (Dieudonne M’bala M’bala) போன்ற இனவாதிகளை தீவிரமாக எதிர்கின்றது ] . சார்லியை இனவாத பத்திரிக்கை என்று வினவில் வாதாடும் முற்போக்குகளின் முகத்திரையை கிழித்து எறிந்து கொண்டு தான் இருகிறேம். நன்றி

  35. ஒரு கொசுறு தகவல். இங்கு நிறவெறியை கக்குவதாக கூறப்படும் சார்லி பத்திரிகையின் தலைவர் (இங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் படங்களில் முதல் இரண்டை வரைந்தவர்) திரு. charab சிறுபான்மையினர் உரிமைக்காக பேசி வந்தவர். நிறவெறியை எதிர்த்து பல கார்டூன்களும் வரைந்தவர். ஒன்று மட்டும் தாங்கள் பார்வைக்கு:

    http://en.wikipedia.org/wiki/File:Mrap_discriminations.png

    (Title translates to Let’s break the silence! speech-bubble says I would hire you, but I don’t like the colour of … euh … your tie!)

    இந்த உண்மைகளை எல்லாம் மறந்துவிட்டு, மறைத்துவிட்டு தான் சார்லி, charab இனவாதி, நிரவாதி என உளறல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. உரிமைக்கு குரல் கொடுத்தவன், அதற்கு தன் உயிரை விலையாக கொடுத்தவனை பற்றி தான் அடுத்தவரின் உரிமையை பறித்தான் என்று பிதற்றல்கள் இன்னும் தொடர்கின்றன.

      • அது தான் சார் ஒரே கல்லில் ரெண்டு விசயத்தை நக்கல் பண்ணுவது. சிறுபான்மையினரை பற்றிய எண்ணங்களை பற்றி நக்கலும், தொழிலாளர் அமைப்புகள் பற்றி முதலாளிகள் கொண்டுள்ள பார்வையும் ஒரே நக்கல். இந்த சித்திரம் இன வேறுபாடை எதிர்த்து போராடும் அமைப்புக்காக தீட்டபட்டதால் அதை அவர் இனவெறியை எதிர்த்ததன் ஆதராமாக தந்தேன். இந்த இரண்டாம் விளக்கத்துக்கு போய் இருந்தால் சார்லி போலி கம்யூனிஸ்ட் என்ற பேச்சு எல்லாம் வரும். விவாதத்தை திசை திருப்பும். அதனால் தவிர்த்து விட்டேன்.

    • சந்துரு முன்வைக்கும் கொசுறு தகவல், சார்லி ஹெப்டோவிற்கு பின்ஜாமீன் தாக்கல் செய்வதாக இருக்கிறது. சந்துரு என்ன சொல்கிறார் என்றால் சார்லி இனவாத மதவாத பத்திரிக்கையென்று பிதற்றுகிறவர்களுக்கு அதன் தலைவர் இனவாதத்திற்கு எதிராக போராடியவர் நிறவெறிக்கு எதிராக பல கார்ட்டூன்களை வரைந்தவர் என்று தெரியவில்லை என்று கூறி ஒரு/பல கார்ட்டூனையும் ஆதாரமாகக் காட்டுகிறார்.

      இதை இரண்டு விதத்தில் பரிசீலிக்கலாம். ஒன்று சார்லியின் முன்னாள் ஊழியர்களே சார்லி தவறு என்று முன்வைக்கிற வாதங்கள். பின்னூட்டம் 18.1இல் நண்பர் அஞ்ஞானி இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதை அங்கு தெரிந்துகொள்ளலாம். அல்லது சந்துருவின் அளவுகோலை மேற்கொண்டு பரிசீலிப்பது. அதை சற்று முயற்சி செய்வோம்.

      சந்துருவின் அளவுகோலை ஆனந்தவிகடனிற்கு பொருத்தினால் ஆனந்தவிகடனில் உதயன் கார்ட்டூனிஸ்டாக பல கார்ட்டூன்களை வரைந்தவர் என்பதன் அடிப்படையில் ஆனந்தவிகடன், ஆளும்வர்க்கத்திற்கோ பாசிசமோடிக்கோ அரசியல் தரகனாக இருந்ததையோ பாலியல் சமாச்சாரங்களையும் நுகர்வு கலச்சாரமாக முன்வைப்பதையோ குற்றஞ்சாட்ட முடியாது எனக் கூறுகிறது சந்துருவின் நியாயம். ஏனெனில் உதயன் பல கார்டூன்களை சிறப்பாக நியாயமாக வரைந்திருக்கிறார். ஆகையால் விகடன் சரி என்கிறார் சந்துரு. இது சரியா?

      அல்லது ஒரு காலத்தில் பிஜேபியை விமர்சித்த பத்திரிக்கைகள் இன்றைக்கு மோடி அலையில் பீ தின்னும் பன்றிகளாக மாறி நிற்கிற பொழுது சந்துரு போன்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இந்த பத்திரிக்கைகள் எல்லாம் இந்துப் பாசிசத்தை பிஜேபியை கண்டித்த பத்திரிக்கைகள்; எனவே இப்பொழுது பிஜேபியை ஆதரிப்பதாக எப்படிச் சொல்லமுடியும் எனவும் கேட்கிறார். இந்தப் பார்வை சரியா?

      ஆக சிறுபான்மையினர் மீதான நிறவெறியும் மதவாதமும் ஏன் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு முனைவாக்க பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக மறைக்கிறது சந்துருவின் நிலைப்பாடு. கட்டுரை அந்தக் கண்ணோட்டத்தை முன்வைக்கிறது. நண்பர் சின்னச்சாமி இதைச் சிறப்பாக விளக்கியிருந்தார். இனி யாரைக்கொன்றாலும் அது ஜிகாதிகளைக்கொன்றதாக காண்பிக்கப்படும் கணக்கை நடுத்தரவர்க்க கருத்துரிமை கந்தசாமிகள் அலாதியான பிரியத்துடன் ஏற்றுகொள்வார்கள். அப்படி ஒரு நியாயத்திற்கு மக்களை மந்தைகளாக தயார்படுத்துவதுதான் இதன் நோக்கம் என்று தெளிவாகிறது.

      ஆகையால் தான் விசில் புளோயர்களுக்கு எதிராக பிராட்லி மேனிங் போன்றவர்களை சித்ரவதை செய்கிற அமெரிக்க ஆளும்வர்க்கம் சார்லி விசயத்தில் கருத்துரிமை என்று கண்கலங்குகிறது. பெட்ரோ பெராஷான்கோ, பத்திரிக்கையாளர்களை நாயைப்போன்று பந்தாடுகிறபொழுது அவன் நான் சார்லி என்று சொல்கிற விசயம் உலகம் முழுவதும் கருத்துரிமையாகப் பார்க்கப்படுகிறது. அதையும் முறுக்கு கடித்துக்கொண்டு நாவல் படிக்கும் அற்பவாத மேட்டிமைவாதிகள் கருத்துச் சுதந்திரம் என்று கதறுகிறார்கள். நிற்க.

      ————————————————————————-

      இதுதவிர, சந்துரு முன்வைக்கும் கார்ட்டூன் மீதும் ஒருபார்வையை வைத்துவிடுவோம். சந்துரு சொல்வதைப்போன்று கார்ட்டூன் நிறவாதத்தைக் கண்டிக்கிறது. ஆனால் கருத்துரிமை கணவான்கள் மெச்சுகிற படிமங்கள் சுதந்திரங்கள் பிரெஞ்சு கலாச்சாரம் எல்லாம் இந்தக் கார்ட்டூனில் ஏன் இல்லை என்பதை சந்துரு அவர்கள் விளக்க வேண்டும். அதாவது இதே வெள்ளையின முதலாளி தன் குதத்தைச் சுட்டிக்காட்டி, தன் குதம் போல் கருப்பின தொழிலாளியின் டை ஏன் வெள்ளையாக இல்லை என்று கூட கேட்டிருக்கலாம் இல்லையா? இதனால் சார்லியின் சட்டையர் இன்னும் ஒருபடி மேலாக இருப்பதுடன் வெள்ளையின வாதத்தையும் தோலுரித்திருக்கலாம் இல்லையா? ஒருவேளை அப்படி செய்தால் குற்றவாளியாக நிற்கிற வெள்ளையினவாதிகளை வீம்பாக அசிங்கப்படுத்துவதுபோல் ஆகிவிடும் என்று சார்லி ஹெப்டோ நினைக்கிறதா?

      ஏன் இதைக்கேட்கிறேன் என்றால் ஓரினஈர்ப்பாளர்கள், வியாசன் சொல்கிற சப்-சகாரன் அரபு கலப்புடைய கறுப்பின பெண்ணை அம்மணமாக இழுத்துச் செல்கிற பொழுது சந்துருவின் பார்வை ஓரின ஈர்ப்பாளர்கள் அணிந்திருக்கும் வி கழுத்துப்பட்டையை சார்லி சுட்டிக்காட்டியிருக்கிறது என திருப்திபட்டுக்கொண்டது. அது வலது கும்பலை கண்டிருக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொண்டது. ஆனால் கருப்பிணப் பெண் அம்மணமாக இழுத்துப்போவதை சட்டையர் என்று சாதித்தது.

      வெள்ளையின முதலாளி அம்மணமாக நின்று தன் குதத்தின் நிறத்தை டைக்கு ஒப்புமை செய்தாலும் இனவாதம் அம்பலப்படும் இல்லையா? இங்கு சிறுபான்மையினரை கேள்வி கேட்பாரின்றி மனக்கொலை செய்யத் துணிகிற சார்லி, வெள்ளையன் என்றால் அடக்கிவாசிப்பது ஏன்? சந்துரு அவர்கள் இதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      அதோடு ஜெயலலிதாவாக இருந்தாலுமே சார்லி முன்வைப்பதைப் போல கார்ட்டூன் இருக்கமுடியாது என வினவு முன்வைக்கிற கண்ணோட்டத்தையும் சேர்த்து பரிசீலிக்குமாறு கோருகிறேன்.

      • தென்றல்,

        ஆனந்தவிகடன் ஆளும்வர்க பத்திரிக்கை என்று தெரிந்தும் ம க இ க தலைவர் மருதையன் அதற்கு பேட்டி அளித்தது சரியா ?எனது கவனப்படி இரு முறை ம க இ க தலைவர் மருதையன் அவர்களின் பேட்டி ஆ.வி யில் வந்து உள்ளது. மோடியை அவரின் ஹிந்துத்துவ தேர்தல் பிரச்சாரத்தின் போது நடைபெற்ற திருச்சி ம க இ க பொது கூட்டம் சமயத்தில் ஆன்ந்தவிகடனுக்கு அவர் அளித்த பேட்டியும் அதற்கான பிஜேபியின் பேட்டியும் ஒரே வாரத்தில் வந்து உள்ளது. அந்த பேட்டி ம க இ கவின் ஹிந்துத்துவாவுக்கு எதிரான கருத்துகளை வெகு சிறப்பாக நடுத்தர மக்களிடன் கொண்டு சேர்த்து உள்ளது. அதில் பிஜேபியின் பதில்கள் எல்லாம் நமுத்து போன வெடிகலாகவே இருந்தன . தென்றல் கூறுவது போன்று “ஆனந்தவிகடன் ஆளும்வர்க பத்திரிக்கை” என்பதால் ம க இ க தலைவர் மருதையன் பேட்டி அளித்தது சரியா தவறா ?

        சில ஆண்டுகளுக்கு முன்பு ம க இ க தலைவர் மருதையன் அவர்களின் பேட்டி ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் வந்து உள்ளது . அதில் ம க இ க அமைப்பை பற்றியும் ,கலை இலக்கியம் பற்றியும் பதில் அளித்து உள்ளார். இது தவறா தென்றல் ? “ஆனந்தவிகடன் ஆளும்வர்க பத்திரிக்கை” என்பதால் ம க இ க தலைவர் மருதையன் பேட்டி அளித்தது சரியா தவறா ?

        • ஆனந்த விகடனை ஒரு நிமிடம் விட்டுவிடுவோம். அரசை எதிர்க்கிற மகஇக மருதையன் ஏன் அரசுப்பேருந்தில் பயணிக்கிறார்? என்று கேட்கிறீர்கள். அப்படித்தானே!

          இதே பாணியைத்தான் சார்லிக்கும் பயன்படுத்தியிருந்தீர்கள். உனக்குப் பிடிக்கவில்லையென்றால் சார்லியை ஏன் காசு கொடுத்துவாங்கிப் படிக்கிற. நீ பாட்டுக்குப் போகவேண்டியதுதானே என்று சொன்னீர்கள். இந்த வாதம் கேலிக்கூத்தாக சீரழிந்து நிற்பது தெரியவில்லையா?
          சரி. இதன் ஆழத்தைப் பார்த்துவிடுவோம்.

          தாங்களே சொல்லிவிட்டீர்கள், மருதையனின் பேட்டி நடுத்தர வர்க்கத்திடம் ஹிந்துப் பாசிசத்தை எடுத்துச் சென்றது என்று. போராட்டக்காரர்களின் நோக்கம் இது மட்டும் கிடையாது. இங்கே தான் விகடனும் அதைத் தூக்கிப் பிடிக்கிற தாங்களும் அம்பலப்படுகிறீர்கள். இதே நடுத்தர வர்க்கம் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகளின் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டுக் கிடப்பதையும் புரட்சிகர இயக்கங்கள் தோலுரிக்கின்றன. ஆளும் வர்க்கக் கைக்கூலியான இதே பத்திரிக்கைகளும் காட்சி ஊடகங்களும் இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்களா? பத்திரிக்கைக்காரன் தான் தனக்கேத்த மாதிரி ட்யூன் போடுகிறான் என்றால் உங்களைப்போன்ற நடுத்தரவர்க்கத்திடனரும் அதற்கேற்றாற் போல் ஆடுகிறீர்கள்.

          விசயத்தை தெரிந்து கொண்டு பேசுங்கள். விசயம் என்பது இதுதான், எப்படி சட்ட நீதி அரசாங்க அமைப்புகள் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளாக இருக்கின்றனவோ அதேபோன்று தான் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்கிற பத்திரிக்கைகளும். இதில் கஸ்தூரி ரங்கனும் உண்டு, விகடன் பேமிலியும் உண்டு; ராமசுப்பு அன் கோவும் உண்டு, திணமணி வைத்தியும் உண்டு. இவர்களையெல்லாம் அம்பலப்படுத்துவதை சார்லிக்கு வக்காலத்து வாங்குகிற உங்களைப்போன்ற ஆட்கள் இந்நேரம் எடுத்துச் சென்று இப்பத்திரிக்கைகளை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்.
          ————————————————

          ஆக உங்களின் கேள்விக்கு பதில் என்ன?
          ————————————————–

          நமக்கு பேட்டிச் செய்திகள் நிறைய இருக்கின்றன. மகஇக மருதையனின் பேட்டியை போட வேண்டியது சனநாயகம் என்றும் கருத்துரிமை என்றும் கண்கலங்குகிற பத்திரிக்கைகளின் கடமை. அதை ஆனந்தவிகடன் மட்டுமில்ல எந்தப் பத்திரிக்கைகளும் செய்ததில்லை. அப்படி செய்திருந்தால் ஒவ்வொரு பேட்டியும் அவர்களை புதைக்கிற சவப்பெட்டிகளில் அடிக்கிற ஒவ்வொரு ஆணிகளாக இருந்திருக்கும். நடுத்தரவர்க்கக் கோமான்கள் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான். ஆக பேட்டி கொடுப்பது நமது உரிமை. அது சரியா தவறா கேள்வி அல்ல. கருத்துரிமை என்று சொல்கிற பத்திரிக்கைகள் நாம் நடத்தும் போராட்டங்களை ஏன் கவர் செய்வதில்லை. இதற்கு பதில் சொல்லுங்கள். ஆளும் வர்க்க கைக்கூலிகளை இதனால் செவ்வனே அம்பலப்படுத்த முடியும். சார்லியும் விகடனும் ரூல்டு அவுட் ஆகவிடுகிறது இல்லையா?

          • தென்றலுக்கு _________________பின்னுட்டத்தில் உளறுகின்றார். “”””உனக்குப் பிடிக்கவில்லையென்றால் சார்லியை ஏன் காசு கொடுத்துவாங்கிப் படிக்கிற. நீ பாட்டுக்குப் போகவேண்டியதுதானே என்று சொன்னீர்கள். இந்த வாதம் கேலிக்கூத்தாக சீரழிந்து நிற்பது தெரியவில்லையா?”””” இதனை கூறியது யார் என்பது தென்றலுக்கு நினைவில்லை என்றால் என்மீது உள்ள சித்தாந்த வேறுபாட்டு வெறுப்பின் காரணமாக பொய்யாய் என்னை பலியாக்கி அதன் மூலம் தன் இன்பம் காணுகின்றார்.

            ஆனந்தவிகடனும் ,அரசு பேருந்தும் ஒன்றா ? என்பதை முதலில் தென்றல் அறிந்து கொண்டு அதற்கு பின் வினவில் வந்து அவருடைய அவதூரான நிந்தனையை என் மீது கழியட்டும் . நான் சரி தவறு என்ற எந்த விதமான முன்முடிவுகளும் இல்லாமல் தானே மருதையனின் பேட்டியை பற்றி கேள்வி எழுப்பி உள்ளேன்.

            “மருதையனின் பேட்டி நடுத்தர வர்க்கத்திடம் ஹிந்துப் பாசிசத்தை எடுத்துச் சென்றது என்று. போராட்டக்காரர்களின் நோக்கம் இது மட்டும் கிடையாது. இங்கே தான் விகடனும் அதைத் தூக்கிப் பிடிக்கிற தாங்களும் அம்பலப்படுகிறீர்கள்”

            என்று பொருள் இல்லாமல் பெனாத்துகின்றிர்கள் தென்றல். இங்கு அம்பலப்ட்டு போவது ஆனந்தவிகடனை நூலகத்தில் படித்த நானோ அல்லது அதற்கு பேட்டி கொடுத்த மருதையனோ கிடையாது. குழம்பி போய் நடுத்தர வர்கத்தையும் கிடைத்த சந்தர்பத்தில் சாடுகின்றிர்கள் தென்றல் . அந்தபேட்டியே நடுத்தர வர்கத்துகானது தான்.அவர்களை சென்று அடைய வேண்டியே கொடுக்கபட்டு உள்ளே உள்ளது.

            மீதி உங்களின் அனைத்து கருத்துகளுமே கோர்வை அற்ற ,தெளிவற்ற உளறல்கள் மட்டுமே . ________________________________________

            • \\ ”””உனக்குப் பிடிக்கவில்லையென்றால் சார்லியை ஏன் காசு கொடுத்துவாங்கிப் படிக்கிற. நீ பாட்டுக்குப் போகவேண்டியதுதானே என்று சொன்னீர்கள். இந்த வாதம் கேலிக்கூத்தாக சீரழிந்து நிற்பது தெரியவில்லையா?”””” இதனை கூறியது யார் என்பது தென்றலுக்கு நினைவில்லை என்றால் என்மீது உள்ள சித்தாந்த வேறுபாட்டு வெறுப்பின் காரணமாக பொய்யாய் என்னை பலியாக்கி அதன் மூலம் தன் இன்பம் காணுகின்றார்.\\

              தமிழ் இந்தக் கருத்து உங்களுக்காக எழுதப்பட்டதல்ல. சந்துரு என்று நினைத்துக் கொண்டு கூறப்பட்ட ஒன்றாகும். ஆகவே தவறுக்கு மன்னிக்கவும். மற்றபடி உங்களைப்போல் சார்லியை வக்காலத்து வாங்கப்போய் போராட்டக்காரர்களை அவதூறு செய்து தன் இன்பம் காணும் ஆள் நான் அல்லன் என்பதை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

              \\மீதி உங்களின் அனைத்து கருத்துகளுமே கோர்வை அற்ற ,தெளிவற்ற உளறல்கள் மட்டுமே.\\

              தங்கள் விமர்சனத்திற்கு நன்றி. விவாதத்தை உளறலின்றி மேம்படுத்த முயற்சி செய்கிறேன்.

              • தென்றல் நீங்கள் உணர்சி வேகத்தில் யாரின் பின்ன்ட்டத்துக்கு பதில் அளிக்கிறோம் என்பதை கருத்தில் கொள்ளாமல் அறிவை புறம் தள்ளுகிறீர்கள். நான் சார்லியை அதன் கார்டூன்களை ஆதரிப்பதன் மூலம் ம க இ க போராட்டகரர்களை அவதூறு செய்வதாக தாங்கள் கருதிக் கொண்டு போர் பறை அடித்து சண்டைக்கு வருவது அழகிய நாடகத்தனமான உங்கள் ஆளுமையை தான் காட்டுகின்றது. ம க இ க போராட்டகரர்களை அவதூறு நான் எப்படி அவதூறு செய்தேன் ,எந்த பின்னுட்டத்தில் அவதூறு செய்தேன் என்பதையும் உங்கள் நாடகத்தனமான பதில் முலமே கூறலாமே !

          • தென்றல் அவர்களுக்கு,

            //***பேட்டியை போட வேண்டியது சனநாயகம் என்றும் கருத்துரிமை என்றும் கண்கலங்குகிற பத்திரிக்கைகளின் கடமை. ***//

            சிறப்பான பதில். ஆனால் ரெபக்கா மேரிக்கு புரியுமா என்று தெரியவில்லை.

      • என்னமோ கருப்பர் இன மக்களை மட்டுமே அம்மணமாக சார்லி வரைவதாக உளறுகின்றார் தென்றல். கருத்தாக்கத்தை காட்சி படுத்தும் போது கடவுளும் ,ஏசுவும் கூட அவர்களின் அம்மன படத்தில் இருந்து தப்பவில்லை என்பதை ஆதாரம் கொண்டு நிருபிக்க Nov 2012 சார்லி கார்ட்டூன் கொண்டு இப்போது நிருபிக்கபோகின்றேன்.

        வலதுசாரி கத்தோலிக்க அமைப்புகள், பிரான்சு கொண்டு வந்த ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்தை சட்டபூர்வமாகிய போது அதனை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்த போது கடவுளை ஆணாக வரைந்து ,அவரின் தூதுவர் [ஏசு] கடவுளை பின்புறமாக புணரும் படியான படத்தை வரைந்து உள்ளது அம்மணமாக . அதில் எசுவின் பின்புறம் புனித ஆவியின் [Holy Spirit]வடிவம் சொருகப்பட்டு உள்ளது .

        இதுவும் தென்றலின் சிந்தனை படி கருப்பர் இன மக்களுக்கு எதிரான உணர்வு தானா ? அல்லது நிர்வாணமாக வரைவது என்பது சார்லியை பொறுத்தவரை மத .இன அடையாளங்களை தாண்டியதா என்பதை வினவு வாசகர்களின் சிந்தைக்கே விட்டு விடுகின்றேன்.

        ஆதாரம் :

        http://listverse.com/2015/01/09/10-incendiary-moments-in-the-history-of-charlie-hebdo/

        http://listverse.com/wp-content/uploads/2015/01/8-gay-marriage-charlie-hebdo.jpg

        • தமிழ் என்ன சொல்ல வருகிறார் என்றால் கருப்பின மக்களை மட்டும் சார்லி அம்மணமாக காட்டவில்லை கடவுளை ஆணாக வரைந்து ஏசுவை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தும் படி காட்டியிருக்கிறார்கள் என்று காத்திரமாகக் கூறுகிறார்.

          ஆக இயேசுவும் கடவுளும் வெள்ளையர்கள் என்று காட்டுகிறார் தமிழ். இயேசு வெள்ளையர் என்பதற்கு ஏதாவது சாட்சி உண்டா? கடவுளை வெள்ளையராக காட்டுகிற பொழுது இங்கு அம்பலப்படுவது சார்லியின் வெள்ளையினவாதமா? தமிழ் அவர்களின் வெள்ளையின வாதமா?

          • //ஆக இயேசுவும் கடவுளும் வெள்ளையர்கள் என்று காட்டுகிறார் தமிழ். இயேசு வெள்ளையர் என்பதற்கு ஏதாவது சாட்சி உண்டா….//

            இயேசு பெத்தலகம் நகரில் பிறந்த அராமிய மொழி பேசுகிற யூத ஆரிய இனத்தை சேர்ந்தவர், போதுமா. நிச்சயம் ஆப்ரிக்காவில் பிறந்தவரல்ல. இப்போது அவரின் பிறப்பினை ஆராய்ச்சி செய்வதை விட்டு திரு. தமிழ் அவர்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதில் தரவும்..

            ம.க.இ.க தோழர் ஒருவர் ஆனந்த விகடனில் பேட்டி அளித்த கேள்விக்கு இன்னும் உங்களிடம் இருந்து நேர்மையான பதிலில்லை. ஆ.வீ ஒரு வலது சாரி பத்திரிக்கை எனும் பொழுது உங்கள் இடது சாரி தோழர்களுக்காக சில பக்கங்களை ஒதுக்க வேண்டும் என்கிற அவசியம் என்ன வேண்டிக்கிடக்கிறது?

            • தாங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் தாயே. நிறவாதத்தை சார்லி கண்டிக்கிறது என்று கூவுகிற பொழுது, கறுப்பினத்தவர்களை அம்மணமாக காட்டுவதைப்போன்று வெள்ளையினத்தவர்களை காட்டுகிறதா என்ற கேள்விக்கு பதில் யாராவது சொல்லுங்கள். ஓரின ஈர்ப்பாளர்கள் கார்டூனிலே கறுப்பின பெண் அம்மணமாக நிற்கிறார். இதே போல் ஒரு கறுப்பினத்தவரின் முன்பாக வெள்ளையினத்தவர்களின் மீது சார்லியால் தன் சட்டையரைக் காண்பிக்கமுடியுமா? சட்டையருக்கு கருத்து காயத்ரிகளின் கடப்பாடு என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்கம் தரவும்.

              \\ ஆ.வீ ஒரு வலது சாரி பத்திரிக்கை எனும் பொழுது உங்கள் இடது சாரி தோழர்களுக்காக சில பக்கங்களை ஒதுக்க வேண்டும் என்கிற அவசியம் என்ன வேண்டிக்கிடக்கிறது?\\

              அவசியம் என்னவென்றால் பத்திரிக்கைகள் அனைத்தும் மக்களுக்கானவை. ஒரு பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்காக பாடுபடுகிற புரட்சிகர இயக்கங்கள் அரசு உறுப்பின் அனைத்து அம்சங்களையும் பாட்டாளிகளுக்கு உரியதாக்கிவிடும். அரசு உறுப்பிற்கே இப்படி என்கிற பொழுது முதலாளித்துவத்திற்காக கூவுகிற ஆனந்த விகடனையும் நாம் பாட்டாளிகளுக்காக பிடுங்கி கொள்வோம். தனியுடமையை அகற்றுவதில் முனைப்பாக இருக்கிற பொழுது அதன் கருத்துக்கு சிங்கி அடிக்கிற பத்திரிக்கைகள் பாட்டாளிகளுக்கான அரசில் இருக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லைதானே. தாங்களே வலது சாரி பத்திரிக்கை என்று ஒப்புக்கொள்கிறீர்கள் இல்லையா? பிறகு பாட்டாளிகளின் கைகள் பூப்பறிக்காது என்பதை கண்டு கொள்ளுங்கள்.

              பின் குறிப்பு: இந்திய இயேசு எல்லாம் எங்கள் பக்கத்து வீட்டு பால் பாண்டி அண்ணாவைப்போல் தான் இருக்கிறார். நாங்கள் எல்லாம் சார்லியைப்போன்றோ உங்களைப்போன்றோ நிறம் இனம் பார்த்துக் கார்ட்டூன் வரைவதும் இல்லை. அப்படி வரைபவர்களையும் அதை ஆதரிக்கிறவர்களையும் காறித்துப்ப தயங்குவதும் இல்லை.

              • பிரான்சு கத்தோலிக்க வலது சாரிகள் ஓரினசேர்க்கையாளரின் திருமனத்தை பிரான்சு அரசு சட்டப்படி அங்கிகரிப்பதை எதித்து போராடியபோது அதற்கு எதிர்வினையாக வரையபட்டது தான் இந்த கார்டூன். தென்றல் கோருவது படியே கடவுளை வெள்ளையராகவும் ஏசுவை வெள்ளையர் இல்லாதவராகவும் சார்லி வரைந்ததாக கொள்வோம்.அது எதனை காட்டுகின்றது ?:

                [1]வெள்ளையினத்தவரும் [கடவுள் ] மாற்று இனத்தவரும் [ஏசு ] ஓரினசேர்க்கையாளர்கள். அவர்களிடம் இனவேறுபாடு இல்லை,.

                [2] வெள்ளையர் இனத்தவராக வரையபட்டு உள்ள கடவுள் அம்மணமாக தான் வரையபட்டு உள்ளார். தென்றலே கடவுள் வெள்ளையராக வரைய்ப்ட்டதை ஒத்துக்கொள்கின்றார். அந்த வெள்ளை கடவுள் அம்மணமாக இருப்பதையும் தென்றல் கருத்தில் கொள்ள வேண்டும்

                ஒருவேளை கடவுள் கறுப்பர் இனத்தாராக வ்ரையபட்டு இருப்பின் இதே தென்றல் கடவுளை ஏன் கருப்பராக வரைந்தார்கள் ? அப்படி வரைந்து அவருடன் கருப்பர் அல்லாதா ஏசு புணருவதன் மூலம் கருப்பரை சார்லி மீண்டும் மீண்டும் இழிவு செய்கின்றது என்று தென்றல் விதண்டா வாதமாக பேசி முன்னால் போனால் முட்டுவார் ! பின்னால் போனால் எட்டி உதைப்பார் ! இப்படி தென்றல் அல்ல எந்த அறிவாளி விவாதித்தாலும் அதனை வெட்டி விவாதம் என்று கூறுவார்கள் எளிய மக்கள் !

                • வெட்டி விவாதம் என்று கூறமாட்டார்கள் தமிழ் அவர்களே. சார்லியை ஆதரிப்பவர்களையே காறித்துப்புவார்கள். சான்றாக உங்களையே எடுத்துக்கொள்ளுங்களேன். முகம்மதுவை அம்மணமாக வரைவது அருவெறுப்பாக இருக்கிறது என்று போலிப்பாசாங்கு செய்துவிட்டு இந்திய கலாச்சாரம் வேறு பிரான்சு கலாச்சாரம் வேறு என்று பல்டியடித்தவர் தான் தாங்கள். அதற்குப் பிறகு பிரான்சு கருத்துரிமை என்று கவிபாடினீர்கள். ஆனால் சார்லியை கொன்றவர்களை கண்டித்து தன் கருத்துரிமையை நிலைநாட்டி நான் சார்லி அல்ல என்று சொல்லும் போதே உங்களைப்போன்றவர்களின் நிலைப்பாடு சீரழிந்து நிற்கவில்லையா? புதுசா எதாவது டிரை பண்ணுங்க சார்?

                  • என்னுடைய பின்னுட்டம் 3 மற்றும் 3.1 மிக தெளிவாக உள்ளது . தென்றலுக்கு எதேனும் கருத்து வேறுபாடு இருப்பின் அந்த இழையில் வந்து விவாதிக்கலாமே !இந்திய சட்டங்கள் எவரையுமே அம்மணமாக வரைவதை குற்றமாக கூறும் போது அப்படி வரைவது தவறு தானே ? அதே நேரத்தில் பிரான்சு சட்டங்கள் எவரை வேண்டுமானாலும் அம்மணமாக வரைய அனுமதிக்கும் போது அப்படி வரைவதில் என்ன தவறு ?சாறுநிவேதிதா போன்று பிரான்சின் பின்நவினத்துவ கூறுகளை நாமும் உட்கொண்டு எழுதி ,வரைந்து அம்மணமாகவும் நிற்கமுடியாது . அதேபோன்று அவர்களும் நம்முடையை பண்பாட்டு ,கலாச்சார மதிப்பிடுகள் அடிப்படையில் இலக்கியம் படைக்கவும் முடியாது. தென்றல் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். கம்யுனிஸ்டுகள் சர்வதேசவாதிகள் என்பதன் பொருள் அனைத்து இன மக்களின் பண்பாட்டையும் சமமாக மதிப்பவர்கள் என்பது தான். அவர்கள் அனைத்து இன மக்களின் பண்பாட்டையும் மறுதலிப்பவர்கள் அல்ல !

                    • \\ கம்யுனிஸ்டுகள் சர்வதேசவாதிகள் என்பதன் பொருள் அனைத்து இன மக்களின் பண்பாட்டையும் சமமாக மதிப்பவர்கள் என்பது தான். அவர்கள் அனைத்து இன மக்களின் பண்பாட்டையும் மறுதலிப்பவர்கள் அல்ல !\\

                      மேலே இருப்பது தவறான வாதம். கம்யுனிஸ்டுகள் அனைத்து சர்வதேசிய பாட்டாளிகளின் பண்பாடுகளை மதித்து காப்பவர்கள். லும்பன்களின் பண்பாட்டை ஒழித்துகட்டுவார்கள் என்கிற பொழுது சமமாக மதிப்பவர்கள் என்று இட்டுக்கட்டி எழுதாதீர்கள். பிரான்சின் பாட்டாளிவர்க்க பிரதிநிதியாக சார்லியெல்லாம் கிடையாது. ஒரு மஞ்சள் பத்திரிக்கைக்கு வக்காலத்து வாங்குவது உங்கள் விருப்பமாகவே இருக்க முடியாது என்கிறபொழுது இங்கு எதற்கு இதைத் திணிக்கிறீர்கள்? நேரத்தை வீணடிக்காதீர்கள்.

                • அய்யா தமிழ் தாங்கள் காட்டிய அம்மணக்குண்டி கடவுள் மற்றும் குதப்புணர்ச்சி செய்யப்படுகிற ஏசு, நிறவாதத்தைக் கண்டிக்கிற சார்லி ஹெப்டோவின் நிலைப்பாடுகள் அல்ல. வெள்ளையின வாதிகளுக்கு முன்பாக கறுப்பின பெண்கள் அம்மணமாக காட்டப்படுகிற பொழுது உங்களைப்போன்ற கருத்து கந்தசாமிகள் சார்லியை நோக்கி ‘ஒரு கறுப்பினத்தவன் முன் வெள்ளையின அசிங்கமாக காட்ட முடியுமா என்று ஏன் கேட்கவில்லை?’ இதற்கு பதில் கூறவும். இந்த வாதத்திலிருந்து தப்பித்தால் எனக்கு நஷ்டமில்லை. தெரிந்தே சிறுபான்மையினத்தவர்களுக்கு செய்கிற மனக்கொலையாகத்தான் இதை எடுத்துக்கொள்வேன்.

                  உங்கள் பார்வைப்படியே வருவோம். இயேசு வெள்ளை, கடவுள் கறுப்பு, அல்லது கடவுள் கறுப்பு, இயேசு வெள்ளை, இந்த இரண்டிலும் சார்லி எப்படி இனவாதத்தைக் கண்டிக்கிறது என்று கொஞ்சம் பொறுமையாக விளக்குங்களேன்.

                  • இந்த படம்[ஏசு ,கடவுள் படம்] உங்கள் முன் எதற்க்கா என்னால் வைக்க பட்டு உள்ளது தென்றல் ? நீங்கள் புரிந்து கொள்பது எளிது என்றே நினைகின்றேன் .கருப்பர் இன மக்களை அம்மணமாக வரைந்தது போன்று வெள்ளையர் இன மக்களை சார்லி அம்மணமாக வரைந்து உள்ளதா ?என்று கேள்வி எழுப்பியது நீங்கள் தான் . இந்த படம் வெள்ளையரின் இனவெறியை சுட்டும் படம் அல்ல ? உங்கள் கேள்வியும் அதனை பற்றியது அல்ல என்பதை புரிந்து கொள்விர்கள் என நான் நம்பலாமா ?

                    //இயேசு வெள்ளை, இந்த இரண்டிலும் சார்லி எப்படி இனவாதத்தைக் கண்டிக்கிறது என்று கொஞ்சம் பொறுமையாக விளக்குங்களேன்.//

              • தோழர். தென்றல்…

                //நிறவாதத்தை சார்லி கண்டிக்கிறது என்று கூவுகிற பொழுது, கறுப்பினத்தவர்களை அம்மணமாக காட்டுவதைப்போன்று வெள்ளையினத்தவர்களை காட்டுகிறதா என்ற கேள்விக்கு பதில் யாராவது சொல்லுங்கள்.//

                இதற்கான பதிலை திரு. சந்துரு அவர்கள் ஏற்கனவே பின்னூட்டம் எண்.28இல் மிக தெளிவாக கூறிவிட்டார்கள் அது எதை குறிக்கிறதென்று. எதைக் கூறினாலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தால் அதற்க்கு யார் பொறுப்பு. ஒரு வேலை சார்லி ஹெப்டோவின் முகப்பில் “கதிர் அரிவாள் சுத்தியல்” படம் போட்டிருந்தால் இவ்வளவு விளக்கங்கள் தேவைப்பட்டு இருக்காதோ….

                //அவசியம் என்னவென்றால் பத்திரிக்கைகள் அனைத்தும் மக்களுக்கானவை…//

                சரியாக சொல்லுங்கள் அனைத்தும் மக்களுக்கானவையா அல்லது அனைத்து மக்களுக்கானவையா? ஏன் கேட்க்கிறேன் என்றால் ஆ.வி அனைத்து மக்களுக்கான ஒரு சுவாரசிய பத்திரிக்கை. சினிமா துணுக்குகள், அரசியல் விடயங்கள், விளையாட்டு சம்மந்தமான செய்திகள், சுவாரசியமான சிறுகதைகள், ஆன்மிகம் அப்புறம் நீயா நானா கோபிநாத் மற்றும் இறையன்பு போன்றோரின் சுயமுன்னேற்ற தொடர்களை கொண்ட Energy பக்கங்கள் என்று பல தரப்பு மக்களையும் கவர் செய்யும் ஒரு ஏடு. இப்படி அனைத்து தரப்பு மக்களுக்கானது எனும் பொழுது அதில் இடது சாரி அரசியலில் ஆர்வம் உள்ளவரும் இருப்பார்கள் என்பதாலேயே அதில் கருத்து சுதந்திரம் வேண்டி மேற்கண்ட தோழரின் பேட்டியையும் வெளியிட்டு இருப்பார்கள். என்ன இருந்தாலும் பத்திரிக்கை சுதந்திரம் என்னும் ஜனநாயகத்தை தூக்கிப் பிடிப்பது பாராளுமன்ற ஜனநாயகம் தானே..

                //அரசு உறுப்பிற்கே இப்படி என்கிற பொழுது முதலாளித்துவத்திற்காக கூவுகிற ஆனந்த விகடனையும் நாம் பாட்டாளிகளுக்காக பிடுங்கி கொள்வோம்.//

                நல்லது அப்படியே சோவின் துக்ளகையும் பிடிங்கிக் கொண்டால் மிக்க மகிழ்ச்சியே. முடிந்தால் அதை செய்யலாம்.

                //தனியுடமையை அகற்றுவதில் முனைப்பாக இருக்கிற பொழுது அதன் கருத்துக்கு சிங்கி அடிக்கிற பத்திரிக்கைகள் பாட்டாளிகளுக்கான அரசில் இருக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லைதானே//

                அது சரி, சோஷலிச நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் இருக்காது( அங்கு எந்த தனி மனித சுதந்திரமும் இருக்காது என்பது வேறு விசயம்) என்பது தெரிந்த விடயம் தான் என்றாலும், தங்கள் வாக்கினாலேயே அதனை ஒப்புக்கொண்டமைக்கு நன்றி!!!!!. அது சரி சோஷலிச ரஷ்யாவில் எந்த பத்திரிக்கையும் கிடையாதாமே அப்படியா!!!!!! ரஷ்ய அரசாங்கம் உலக நடப்புகள் அனைத்தையும் வடிகட்டி விட்டு பல்வேறு தணிக்கைகள், இருட்டடிப்புகள் செய்து விட்டு வெறுமனே தங்களின் சோஷலிச பராகிரமத்தை?!! மட்டுமே மக்களுக்கு கூறும் “ப்ராவ்தா” என்கிற ஒரே ஒரு அரசு ஏடு மட்டும் தான் இருக்குமாமே அப்படியா!!!.. ரஷ்ய மக்கள் ரொம்பப் பாவம் பண்ணி இருக்கிறார்கள்.

                //இந்திய இயேசு எல்லாம் எங்கள் பக்கத்து வீட்டு பால் பாண்டி அண்ணாவைப்போல் தான் இருக்கிறார். //

                நல்ல வேளை, இந்திய கார்ல் மார்க்ஸ் எல்லாம் எங்கள் பக்கத்து வீட்டு கரீம் மஸ்தான் பாய் போல் தான் இருக்கிறர் என்று சொல்லாமல் போனீர்களே. அதற்காகவே இந்த ரெபேக்கா சுல்தானாவின்… ச்சே.. ரெபெக்கா பேகத்தின்..ச்சே..சீ sorry, sorry….. ரெபேக்கா மேரியின் “குதா ஹாஃபீஸ்” தென்றல் அவர்களே …

                • மேரி அவர்களே,

                  கருத்துச் சுதந்திரம் என்று பாராளுமன்ற ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் ஒப்பிட்டு எழுதியது வழக்கம் போல என்பார்வையில் உங்கள் கழிசடைத்தனத்தைப் பறைசாற்றியிருந்தது. அதை எப்படியென்று காட்டிவிடுகிறேன்.

                  சீனி என்று பேப்பரில் எழுதி நக்கினால் இனித்து விடாது. ஆனந்த விகடனின் கருத்துச் சுதந்திரம் என்பது அத்தகையது தான். தாங்கள் குறிப்பிட்ட எனர்ஜி தொடர்கள் எல்லாம் நடுத்தரவர்க்க தாய் திண்ணி நண்டுகள் மனப்பான்மை உள்ளவர்களுக்காகத்தான். இந்த பாராளுமன்ற ஜனநாயகத்தில் தாங்கள் ஆனந்த விகடனின் காமசூத்ரா காண்டம், பரம்பரா பட்டு, மூலம், பவுத்தரம், விந்து முந்துதல், காந்தப் படுக்கை போன்றவற்றையெல்லாம் விட்டுவிட்டீர்கள்.

                  தாங்கள் சரியாகச் சொல்வதைப் போல இத்தகைய மூலம் பவுத்தர கருத்துச் சுதந்திரம் சோசலிச சமூகத்தில் இருக்காது; அதை கம்யுனிஸ்டுகள் ஒழித்துவிடுவார்கள் என்பதை உங்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.

                  இடது சாரிகளுக்கு இரண்டு பக்கம் ஒதுக்குகிறார்கள் என்பது கருத்துச் சுதந்திரத்தில் வராது. ஒருவேளை ஒரு தொடர் வந்தால் ஆனந்தவிகடனே இருக்காது. முதலாளித்துவ கைக்கூலிகள் அத்தகைய தொடை நடுங்கிகள் என்பதை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

                  என் பார்வையில் தாங்கள் ரெபேக்கா மேரியோ அல்லது ரெபேக்கா பேகமோ அல்லர். தாங்கள் ஓர் இந்துத்துவக் கைக்கூலி மற்றும் கலகக்காரர் என்பது என் நிலைப்பாடு. ஆகையால் முதலில் மனிதராக மாறுங்கள் பிறகு குதாபஸ் சொல்லலாம்.

                  • தோழர் தென்றல்…

                    //என் பார்வையில் தாங்கள் ரெபேக்கா மேரியோ அல்லது ரெபேக்கா பேகமோ அல்லர். தாங்கள் ஓர் இந்துத்துவக் கைக்கூலி…..//

                    எப்பா… இதை விட்டால் உங்களுக்கு வேற எதுவுமே பேசத் தெரியாதா? தமிழ்ஹிந்து தளத்தில் நான் கடுமையாக சமற்க்ருத திணிப்பை எதிர்த்து கருத்துக் கூறியபொழுது அங்கிருக்கும் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகள் என்னை கிறித்துவ கைக்கூலி என்றும் வாடிகனில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்வதாகவும்(சத்தியமா நான் அவ்ளோ பெரிய ஆளெல்லாம் கிடையாது) கதறினார்கள்.அதையே தான் நீங்களும் கூறுகிறீர்கள். என்ன இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் எதிர் முகாமில் இருப்பவர் தானே நீங்கள்.. கம்யுனிஸ்டுகளுக்கும்,ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் கிடையாது. சரி விடுங்கள் இப்போது அது தேவை இல்லாத ஒன்று.

                    //மற்றும் கலகக்காரர் என்பது என் நிலைப்பாடு.//

                    உங்களின் நிலைப்பாட்டை நான் தடுக்க மாட்டேன். அது உங்கள் இஷ்டம். உங்களின் ஜனநாயக உரிமை. ஏனென்றால் கலகக்காரர் என்று நீங்கள் என்னை நினைப்பது தங்களின் குற்றமல்ல, அது தாங்கள் சார்ந்திருக்கும் கம்யுனிச கொள்கையின் குறுகிய நோக்கங்களில் ஒன்று. கம்யுனிசத்தை ஏற்காதவர்கள் அல்லது மாற்றுக் கருத்து உடையவர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்களை கலகக்காரர்கள் என்றுக் முத்திரை குத்தி _____அனுப்புவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தானே.

                    //இடது சாரிகளுக்கு இரண்டு பக்கம் ஒதுக்குகிறார்கள் என்பது கருத்துச் சுதந்திரத்தில் வராது. ஒருவேளை ஒரு தொடர் வந்தால் ஆனந்தவிகடனே இருக்காது. //

                    அந்த இரண்டு பக்கம் போதும் உங்களுக்கு, இவர்களாவது 2,3 பக்கங்கள் கொடுத்தார்கள். ஆனால், உங்களின் சோஷலிச நிர்வாகத்தில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் நியாயத்தை பேசுவதற்கு 2 வார்த்தைகளுக்கான இடம் கூடக் கிடைக்காது.அது சரி நீங்கள் தான் “ஆனந்த விகடனையும் நாம் பாட்டாளிகளுக்காக பிடுங்கி கொள்வோம்”.என்றுக் கூறினீர்களே அப்புறமென்ன பிடுங்கி ஒரு 300 தொடர்கள் வரும்படி எழுத தள்ள வேண்டியது தானே..

          • என்ன தென்றல் …, உங்களின் பின்னுட்டத்தில் இருந்து எதனை தான் புரிந்து கொள்வது ? குழப்பமான தென்றல் தன்னுடைய குழப்ப வாதத்தை வைத்தே காலத்தை ஓட்டுகின்றார். “”””கடவுளை வெள்ளையராக காட்டுகிற பொழுது இங்கு அம்பலப்படுவது சார்லியின் வெள்ளையினவாதமா? தமிழ் அவர்களின் வெள்ளையின வாதமா? “””” ஏன் குழம்பி போய் கடவுளை வெள்ளையராகவும் ,ஏசுவை வெள்ளையர் இல்லை என்றும் பொனாத்துகின்றிர்கள் ? விளக்கவும். ஒருவேளை கடவுளை வெள்ளையர் என்று நிங்கள் நினத்துகொண்டாள் , ஏசுவை வெள்ளையர் அல்லாதவர் என்று நிங்கள் நினைத்துக்கொண்டால் அதே பாதையில் பயணித்துதான் கார்டூனை விமர்சனம் செய்ய முயலாமே ! முயன்று பாருங்கள் தென்றல் !

          • கடவுளை ஆணாக வரைந்ததையும் தென்றல் கேள்வி எழுப்புகின்றார் . ஏசு ஆணாக பிறந்ததை கத்தோலிக்க வலது சாரிகள் நம்புகின்றனர் . ஏன் எனக்கு தெரிந்தவரை அனைத்து கிருச்துவர்களுமே நம்புகின்றனர். ஓரினசேர்க்கையாளர்கள் திருணம் சட்டபடி பிரான்சில் அங்கிகரிக்க பட்டதை எதிர்க்கும் வலது சாரி கத்தோலிக்க சக்திகளை கேலி செய்யவேண்டும் என்றால் கடவுளை ஆணாக தானே வரைய வேண்டும். .கடவுளை பெண்ணாக வரைந்தால் அது ஆண் [ஏசு ] பெண் [கடவுள் ] என்ற வகைமைக்குள் வருவதால் அது எப்படி ஓரினசேர்க்கையாளர்கள் காட்சி படுத்தும் தென்றல் ?

            //கடவுளை ஆணாக வரைந்து ஏசுவை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தும் படி காட்டியிருக்கிறார்கள் என்று காத்திரமாகக் கூறுகிறார்.//

            • \\ ஓரினசேர்க்கையாளர்கள் திருணம் சட்டபடி பிரான்சில் அங்கிகரிக்க பட்டதை எதிர்க்கும் வலது சாரி கத்தோலிக்க சக்திகளை கேலி செய்யவேண்டும் என்றால் கடவுளை ஆணாக தானே வரைய வேண்டும். கடவுளை பெண்ணாக வரைந்தால் அது ஆண் [ஏசு ] பெண் [கடவுள் ] என்ற வகைமைக்குள் வருவதால் அது எப்படி ஓரினசேர்க்கையாளர்கள் காட்சி படுத்தும் தென்றல் ?\\

              முட்டாள் தனமான வாதம் இது தமிழ் அவர்களே. ஓரின ஈர்ப்பாளர்கள் என்றால் ஆண்கள் மட்டும் தானா? அப்படியானால் பிரான்சில் லெஸ்பியன் மணத்திற்கு அனுமதி கிடையாதா? சார்லியிடம் கேட்டுச் சொல்லுங்கள். ஏதாவது கார்ட்டூன் இருந்தால் காட்டுங்கள். பிரான்சின் பெண்களுக்கான கருத்துரிமை எந்த அளவிற்கு இருக்கிறது என்று பார்த்துவிடுவோம்.

              • யோவ்! எதாவது நல்லா கேட்டுட போறேன். ஏசு ஆண், அதனால் ஓரினசேர்கையாளர் போல காட்ட கடவுள் ஆணாக வரையபட்டார். ஒரு வேலை அந்த படத்தில் ஒன்று சரஸ்வதி, பார்வதி, இல்லை மேரி ஆக இருந்து இருந்தால் அங்கு கடவுள் பெண்ணாக வந்திருப்பார் (சரஸ்வதியும், பார்வதியும் சேருவது போல கூட வந்திருக்கலாம். யார் கண்டது). இது கூட புரியாமல் ஏன் ஆண்கள் மட்டுமா என்று கேள்வி? கிறிஸ்துவர்களுக்கு Father, Son and Holy Spirit தானே? இது கூட யோசிக்க முடியாமல் குத்தம் கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று கேள்வி வேற. அறிவு ரொம்ப தெளிவா தெரியுது. போங்க.

                • சந்துரு, ஏசு ஓரினச் சேர்க்கை குறித்து யார திட்டுறீங்க என்று பெயர் சொல்லிப் போடுங்க. அது எனக்கான மறுமொழியாக வந்துள்ளது. அதைச் சொன்னவர் தமிழ். டிஸ்கி போட்டே சாக மிடியல!!!

                  • சந்தேகமே வேண்டாம் தென்றல். திட்டுவது உங்களைத்தான். வாதத்தை முட்டாள் தனம் என்றது நீங்கள் தானே. அதில் ஏன் இரு பெண்கள் இல்லை என்பதற்கான விளக்கம் அது. மறுபடியும் நீங்கள் கேட்பதற்கு முன்னால், இரண்டு பெண்களை வைத்தும் படம் வந்துள்ளது, அது ஏற்கனவே கொடுத்த லின்குகளிலும் உள்ளது.படிச்சு இருந்தா தெரியும். இருந்தாலும் இரண்டொரு படங்கள் தங்கள் பார்வைக்கு:

                    http://www.understandingcharliehebdo.com/img/dykes-example-01.jpg
                    http://www.understandingcharliehebdo.com/img/non-aux-manifs-de-vieilles-gouines.jpg
                    http://www.understandingcharliehebdo.com/img/dykes-example-02.jpg

                    இந்த படங்களில் இருக்கும் இரு பெண்கள் Frigide Barjot and Christine Boutin. பிரான்ஸ் தேசத்தில் ஓரினசேர்கையாளர் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ‘தலமை’ தாங்கும் இருவரும். இந்த விஷயம் பற்றி கொஞ்சம் இணையத்தில் தேடினால் எல்லா விசயமும் கிடைக்கும். எனக்கு தட்டச்சு செய்ய நேரம் இல்லை, மன்னிக்கவும்.

                    • கொஞ்ச லேட்டாதான் பாஸ் புரிஞ்சுது. ஐ சாம் சாரி! உங்கள் பாணியிலே பதில் சொல்லிவிடுகிறேன்.

                      யோவ் சந்துரு. கழிசடையா இருக்குய்யா உமது வாதம்!

                      “ஏசு ஆண், அதனால் ஓரினசேர்கையாளர் போல காட்ட கடவுள் ஆணாக வரையபட்டார்.” இப்படிப்பட்ட ஒரு பதில் மீது முதலில் காறித்துப்புவதற்குதான் லெஸ்பியன் பெண்கள் குறித்து கேட்டது.

                      இப்பொழுது உங்கள் பின்னூட்டத்தை படித்துவிட்டு மேரி அங்கு வராததற்கு காரணம் தாங்களே முன்வந்து “கிறிஸ்துவர்களுக்கு Father, Son and Holy Spirit தானே?” என்பதைப் பரிசீலித்த பொழுது அது முட்டாள் தனமாக அல்ல நக்கத்தனமாக இருக்கிறது என்று சொல்வதற்குப் பதிலாக தமிழ் சொல்வதைப் போல எனக்கு திருகாணி கழன்று விட்டது என்பதை ஒப்புக்கொள்வது தேவலை என்று நினைக்கிறேன்!!!!!!

                      ஏனெனில் சார்லி ஹெப்டோ பெமினைன் பத்திரிக்கை என்று தன்னைத்தானே சப்புக்கட்டிக்கொள்கிறது. ஆனால் தாங்களோ Father, Son and Holy Spirit என்று கொடுக்காத காசுக்கு கூவு இருக்குறீர்கள். எனக்கு இது தெரியாம ஏதோ ஏசு ஆண் என்பதால் ஓரினச்சேர்கையாளராக காட்டப்பட்டிருக்கிறார் என்று நான் சொல்லி தாங்கள் திட்டியதாக கருதிவிட்டேன். ரொம்ப அசேம்டா இருக்கு பாஸ்!!!

                      அப்புறம் அந்த படங்களைப் பார்த்தேன் பாஸ்! இப்படி அடுக்கலாமா என்று சொல்லுங்கள்.

                      முதலில் இரண்டு வலது சாரி பெண்களும் டீசெண்டாக இருக்கிறார்கள். சார்லியின் பெண்ணினவாதம் இங்கு தூள்.

                      இதையே கறுப்பின வலதுசாரியாக இருந்திருந்தால் தங்களது கருத்துப்படி இப்படி இருக்கும்;

                      “ நான் காட்டியது marine lapen என்ற இனவாத பெண்மணி. அவளை பற்றி பேசவேண்டும் என்றால் நிறைய பக்கம் தேவைபடும். தன் இனவாத,நிறவாத போக்கால் பாரிஸில் நடந்த பேரணியில் கலந்து கொள்ள கூடாது என்று துரத்தி அடிக்கபட்டவள். அவளையும் அவள் வெறியையும் காட்ட பிறப்புறுப்பை ஹிட்லர் போல அமைப்பதாக, அவள் கட்சி எப்படி பட்டது என்று காண்பிக்க குதத்தில் அந்த கட்சியின் சின்னம், பிறகு அவளே மலம்.”
                      ————————————————————————-
                      ஆக மேற்கண்ட உங்களது வாதம் புளுக்கத்தனமாக இருக்கிறது இல்லையா? ஆனால் அந்த மூன்று படமுமே சிறப்பாக இருக்கின்றன. சார்லியின் பெண்ணுரிமை மெச்சத்தக்கது. ஏசுவுக்கு நபிக்கு பராவயில்லை!!!!

                  • தென்றல்,

                    “”””ஓரின ஈர்ப்பாளர்கள் என்றால் ஆண்கள் மட்டும் தானா? அப்படியானால் பிரான்சில் லெஸ்பியன் மணத்திற்கு அனுமதி கிடையாதா? சார்லியிடம் கேட்டுச் சொல்லுங்கள். ஏதாவது கார்ட்டூன் இருந்தால் காட்டுங்கள். பிரான்சின் பெண்களுக்கான கருத்துரிமை எந்த அளவிற்கு இருக்கிறது என்று பார்த்துவிடுவோம்.”””

                    இதனை எழுதிய அதி புத்திசாலிக்கு தான்,தென்றலுக்கு தான் சந்துருவின் பதில்[36.2.2.1.3.1.1] என்பது தென்றலுக்கே புரியாத மர்மம் என்ன ? திருகாணி கழன்று விட்டதா தென்றலுக்கு ?

      • //ஆக சிறுபான்மையினர் மீதான நிறவெறியும் மதவாதமும் ஏன் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு முனைவாக்க பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக மறைக்கிறது சந்துருவின் நிலைப்பாடு//

        ஆக உங்களை பொறுத்தவரை சிறுபான்மையினர் எவ்வளவு கேவலமாக நடத்த படுகிறார்கள் என்பதை காட்ட அவர்கள் அடிமை போல இருப்பதை வரைந்தால் உடனே அந்த பத்திரிகை சிறுபான்மையினர் எதிரான பிரச்சாரம் செய்ய துவங்கி விடுகிறது. லாஜிக் பின்னுது தென்றல்.

        //கறுப்பின பெண்ணை அம்மணமாக இழுத்துச் செல்கிற பொழுது சந்துருவின் பார்வை ஓரின ஈர்ப்பாளர்கள் அணிந்திருக்கும் வி கழுத்துப்பட்டையை சார்லி சுட்டிக்காட்டியிருக்கிறது என திருப்திபட்டுக்கொண்டது. அது வலது கும்பலை கண்டிருக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொண்டது. ஆனால் கருப்பிணப் பெண் அம்மணமாக இழுத்துப்போவதை சட்டையர் என்று சாதித்தது//

        முழுக்க முழுக்க பொய் தென்றல். அந்த படத்தில் சிறுபான்மையினர் எவ்வாறு நடதபடுகின்றனர் என்பதை காட்ட (அவர்கள் வாழ்கை இன்னும் அடிமை வாழ்கை என காண்பிக்க) satire வடிவில் அந்த ஓவியம் இருக்கிறது என்பது தான் நான் கூறியது. அந்த கறுப்பின பெண்ணின் சித்தரிப்பு satire அல்ல. அந்த படம் தான் satire. காலனி ஆதிக்க காலத்தில் எவ்வாறு கறுப்பின மக்கள் அடிமைகளாக நடத்தபட்டனரோ அதே போல இன்னும் நடக்கிறது என்று குத்தி காண்பிக்க. உங்கள் கூற்றுப்படி திண்ணியத்தில் வாயில் மலம் திணிக்க பட்டதை, ஒரு பறை அடிப்பவன் வாயில் மலம் திணிக்க படுவது போல சாதிவெறியை கண்டித்து படம் வரைந்தால் உடனே அந்த படம் சாதிவெறி கக்கும் படம். இதை யோசிக்கவும்.

      • //அதோடு ஜெயலலிதாவாக இருந்தாலுமே சார்லி முன்வைப்பதைப் போல கார்ட்டூன் இருக்கமுடியாது என வினவு முன்வைக்கிற கண்ணோட்டத்தையும் சேர்த்து பரிசீலிக்குமாறு கோருகிறேன்.//

        வினவை பொறுத்தவரை அவர்கள் பாலிசி அது அய்யா. சார்லி பத்திரிகையை வர்ணிக்க பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான வரி: They are equal opportunity offenders. குழந்தை பாலியல் வன்மம் பற்றி குற்றச்சாட்டு வந்த போது பாதிரியார் அனைவரும் ஒரு வட்டத்தில் ஒருவர் பின்புலத்தில் ஒருவர் ‘சேர்ந்து’ கொண்டு இருப்பது போல படம் வெளியிட்டது. படம் இங்கே:

        http://i0.wp.com/listverse.com/wp-content/uploads/2015/01/7-catholic-charlie-hebdo.jpg?resize=632%2C600

        நீங்கள் கூறுவது, ஏன் கறுப்பின மக்கள் என்றால் மட்டும் அம்மணமாக, அசிங்கமாக வரைகிறார் என்று. ஆனால் அவர்கள் வெள்ளையர், பிரெஞ்சு நாட்டு ஜனாதிபதி, கத்தோலிக்க தலைவரான போப்பாண்டவர், இஸ்ரேல் ஏன் ஏசு நாதர் என அனைவரையும் அம்மணமாக வரைந்து உள்ளனர்.

        http://i2.wp.com/julietjeskeblog.com/wp-content/uploads/2015/01/Nudity.jpg

        http://www.thestranger.com/binary/e8eb/1420672359-b6wbnhhcmaemplw.jpg

        http://i1.wp.com/julietjeskeblog.com/wp-content/uploads/2015/01/President.jpg

        ஒரு குற்றச்சாட்டு கூறுவதற்கு முன்பு அது எவ்வளவு உண்மை என ஆராய்ந்து குற்றச்சாட்டு கூறவும். எல்லாரும் அம்மணமாக இருக்கும் போது, வெள்ளையன் என்றால் அடக்கி வாசிக்கிறது சார்லி என்ற தவறான குற்றச்சாட்டு ஏன்?

        • \\ ஒரு குற்றச்சாட்டு கூறுவதற்கு முன்பு அது எவ்வளவு உண்மை என ஆராய்ந்து குற்றச்சாட்டு கூறவும். எல்லாரும் அம்மணமாக இருக்கும் போது, வெள்ளையன் என்றால் அடக்கி வாசிக்கிறது சார்லி என்ற தவறான குற்றச்சாட்டு ஏன்?\\

          தயவுசெய்து தாங்கள் அதைச் செய்யுங்கள். நிறவாதத்தை சார்லி கண்டிக்கிறது என்று சொன்னவர் தாங்கள் தான். அப்படிப்பட்ட படங்களில் எல்லாம் கருப்பினத்தவர் எவ்விதம் மனக்கொலை செய்யப்படுகின்றனர் என்பதைக் காட்டிவிட்டேன். இனி நிறவாதத்தை கண்டிக்கிற கார்ட்டூன்களில் வெள்ளையர்கள் எப்படி காட்டப்பட்டனர் என்பதை எடுத்துக்காட்ட வேண்டியது தங்கள் பொறுப்பு. அதைவிடுத்து போப்பாண்டவரை போட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் மேலும் மேலும் சார்லியை அம்பலப்படுத்துகிற வாதங்கள்.

          போப்பாண்டவரை அம்மணமாக போடுவதை நிறவாதத்தை கண்டிப்பதற்கு ஒரு அளவீடாக கருத முடியுமா. ஒரு கறுப்பினர் முன் வெள்ளைக்காரனை சார்லியின் அளவுப்படி விமர்சிக்க முடியுமா? அப்படி ஏதாவது சார்லிக்கு முகாந்திரம் இருக்கிறதா?

          இது கார்ட்டூனை பொறுத்தவரை சார்லியை ஒட்டி நாம் வைக்கும் விவாதம்.

          அதே சமயம் அம்மணமாக வருவதெல்லாம் கருத்து சுதந்திரத்தின் கீழ் வருவதில்லை என்று கட்டுரையும் பேசுகிறது. இதைத் தவறவிடக்கூடாது. லும்பன் கலாச்சாரமும் கருத்துரிமையும் ஒன்றல்ல என்பதையும் சேர்த்துப் பரிசீலிக்கவேண்டும்.

          • ஆப்பிரிக்க மக்களை மட்டுமே[கருப்பர் இனமக்களை மட்டுமே ] அம்மணமாக சார்லி வரைந்தார்கள் என்ற தென்றலின் குற்றசாட்டு பின்னுட்டங்கள் 36.2.4 and 36.2.2 அவை காட்சி படுத்தும் கார்டூன்கள மூலம் தவறு என்பது நிறுனம் ஆகின்றது என்பதை வினவு வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்

          • தென்றல், ஏன் இந்த விதண்டாவாதம். இப்படி இரு படங்கள் வரையப்பட்டதாக கொஞ்சம் கற்பனை செய்துகொள்ளுங்கள். திண்ணியத்தில் நடந்த சம்பவத்தை வர்ணித்து இரு படங்கள். ஒரு படம், ஒரு பறை அடிப்பவரின் வாயில் மேல்சாதி ஆள் ஒருவன் சாதிவெறி என்னும் மலத்தை திணிக்கிறான். இரண்டாவது படம், மேல்சாதி ஆள் ஒருவன் பன்றியை போல சாதிவெறி என்னும் சேற்றில் புரண்டு கொண்டு இருக்கிறன். உங்கள் கூற்றுப்படி முதல் படம் மேல்சதிகாரனின் சாதிவெறியை வெளிச்சம் போட்டு காட்டவில்லை. அதன் நோக்கம் பறையர் மலம் உண்பவர் என காட்டுவது.

            நீங்கள் //அப்படிப்பட்ட படங்களில் எல்லாம் கருப்பினத்தவர் எவ்விதம் மனக்கொலை செய்யப்படுகின்றனர் //. அப்போது இவர்களை இப்படி கீழாக நினைகிறார்கள் என்று காண்பிக்க, stereotype கிண்டல் செய்ய, ஒரு இஸ்லாமியரின் தாடியில் குண்டுக்கு சோதனை செய்வது போலவோ, இல்லை கறுப்பர் என்றால் எதாவது காரணம் சொல்லி வேலைதராமல் சாக்கு சொல்வதை, நீயோ நாசிகள் வெள்ளையர் தவிர அடிமை என சொல்வதை காண்பிக்க அவர்கள் மற்ற இனத்தவரை அடிமை போல நடத்துவது போல படம் வரைவதோ, அந்த வெறியின் செயலை கண்டிக்காது, அதுவே வெறியை பரப்பும் படம் என்பது உங்கள் வாதம். ஆனால் அதுவே பாதிரியார் சிறுவர்களை சூரையாடியாதை காண்பிக்க பாதிரி ஒருவர் மடியில் சிறுவன் அமர்ந்து இருப்பது போல வரைந்தாலோ, இல்லை இனவெறி கக்கும் ஒருவர் முகத்தில் இனவெறி என்னும் மலம் வழிவது போல வரைந்தாலோ அது அந்த மனிதரையோ இல்லை அமைப்பை கிண்டல் செய்யது, அவர்களின் இழி செயலை மட்டுமே கண்டிக்கும்.

            திண்ணியத்தில் நடந்ததை படமாக வரைந்தால் அவர் வாயில் மலம் திணிக்கப்பட்ட செயல் வரையப்படும். அது அந்த மனிதரை அல்லது சமூகத்தை கேவலபடுத்த வரையபட்டது அல்ல. அவர்கள் மீது உள்ள வெறியால் அவர்களை இழிவுபடுத்த வரையபட்டதும் அல்ல. உண்மை நிலையை மக்களுக்கு எடுத்து சொல்ல, மக்கள் முகத்தில் அறைந்து சொல்ல உண்மையை எந்த ஒளிவுமறைவு இல்லாமல் சொல்ல வேண்டியதன் அவசியம். அவ்வளவு தான்.

            • திண்ணியத்தையே எடுத்துக்கொள்வோம். ஓவியர் முகிலன் வரைந்த கார்ட்டூன் அடக்கி ஒடுக்கப்பட்டு கைகளில் விலங்கிடப்பட்ட தலித்தின் மீது ஆதிக்க சாதி மலத்தைத் திணிப்பதுபோன்று இருந்தது. படத்தைப் பார்க்கிறவர்கள் யாரும் ஆதிக்க சாதியின் அடக்குமுறையை கண்டு கொள்வார்கள். ஆனால் சார்லியின் படத்தில் சிறுபான்மையினரின் மனம் சிரிப்புக்காக, நாயாக, அம்மணக்குண்டியாக கொலைசெய்யப்படுகிறது என்பது தான் நிதர்சனம். முதலில் நடுத்தரவர்க்கம் தன் மனிதில் திணித்திருக்கும் மேட்டிமைவாதத்தை தூக்கி எறிந்துவிட்டு சார்லியை விமர்சிக்க கற்றுப் பழகட்டும்.

              • முகிலன் ஓவியம் உங்களுக்கு ஆதிக்க சாதியின் அடக்குமுறையை காண்பிக்கிறது. ஆனால் அதே போல வெள்ளையர் எப்படி கறுப்பின மக்களை அடிமை போல நடத்துகின்றனர் என்று (நாயை போல) என்று வரைந்தால் அது வெள்ளையரின் ஆதிக்க வெறியை காட்டவில்லை. மாறாக கறுப்பின மக்களை கேலி செய்து சிரிப்பு வர வைக்கும் முயற்சி. காரணம் உங்களை பொறுத்தவரை முகிலன் சமத்துவவாதி, சார்லி நிறவெறியன்.இந்த லாஜிக் பற்றி கொஞ்சம் யோசிக்கவும். ஆனால் அதே படம் கறுப்பினர் எப்படி அடிமை போல நடதபடுகின்றனர் என்பதற்கான விமர்சனம் என்று மட்டும் உங்கள் சலவை செய்யப்பட்ட கண்ணுக்கு தெரியாது.

              • தலித் மக்களை பற்றி BS என்ற சாதிவெறியன் வினவு பின்னுட்டத்தில் வெளியிட்ட தலித் மக்களை சாதி ரீதியாக இழிவு செய்யும் கருத்துகளை வினவு க்த்தரிகாமல் அப்படியே வெளியிட்டு இருந்து . அதன் மூலம் வினவு வாசகர்கள் BS என்ற சாதிவெறியனை அடையாளம் கண்டு அவனை பினுட்டங்க்ளில் தோலுரித்தார்கள். BS என்ற சாதிவெறியனின் வார்த்தை சட்டபடியே தவறு என்றாலும் [அது தீண்டாமையை வலியுறுத்துவதால் ] அதனை வினவு வெளியிட்டதன் நோக்கம் என்ன ? சாதிவெறியர்களை அடையாளம் கட்டுவதற்காக தானே ? இப்போது சார்லி கார்டூன்களை பற்றி சிந்தியுங்கள் தென்றல் ..,அவை கருப்பர் இன மக்களை இழிவு செய்கின்றதா ? அல்லது கருப்பர் இன மக்களை இழிவு செய்கின்றவ்ர்களை விமர்சிகின்றதா என்று ?

                இந்தியன் என்ற சாதிவெறி வினவு வாசகன் தலித் மக்களின் சாதி பெயரை கூறி வினவை திட்டுவது கூட க்த்தரிக்கபடாமல் அப்படியே வினவு பின்னுட்டத்தில் பதிவு செய்யபட்டு உள்ளது

          • உங்க லாஜிக் படி, வெள்ளையர் இனவெறியை காட்டும் படத்தில் அவர்கள் அம்மணமாக இருந்தால் தான் அது நிறவெறியை எதிர்க்கும் படம். சரி அதற்க்கும் ஆதாரம் தந்து விடுவோமே.

            நேஷனல் பிரான்ட் கட்சியின் தலைவர் marine lepen, இஸ்லாமியர்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிராக இருப்பவர். அவரின் கருத்து ‘முத்துக்கள்’ இணையத்தில் தேடினாலே பல கிடைக்கும். ஒரு சின்ன சாம்பிள்:
            http://www.telegraph.co.uk/news/worldnews/europe/france/8197895/Marine-Le-Pen-Muslims-in-France-like-Nazi-occupation.html

            வெள்ளையர் தான். ஆனால் இனவெறியர். உங்கள் பார்வைபடி இவர் வெறியை கண்டித்த படங்களில் சார்லி ‘அடக்கி வாசித்திருக்கும்’, இல்லையா? படங்களை பார்த்து விடுவோம்:
            http://newobserveronline.com/wp-content/uploads/2015/01/lepen-cartoons.jpg

            ஒரு படத்தில் அவர் மலத்துக்கு ஒப்பிட படுகிறார், இரண்டாவதில் அரை அம்மணம், மூன்றாவதில் முழு அம்மணம். ரொம்ப நன்றாகவே அடக்கி வாசிக்கிறது சார்லி.

            • இனவாதம் என்பதை Interracial என்பதன் அடிப்படையில் சார்லியின் நிலைப்பாட்டைக் கொண்டு விளக்குங்களேன். இந்தியாவிலேயே ஒரு ஆதிக்க சாதி மற்றொரு ஆதிக்க சாதியிடம் கலப்பு புரிவதை பெரிதாக எடுக்காது. ஆனால் ஒரு தலித்தும் ஆதிக்க சாதியும் சேர்ந்தால் இளவரசன்கள் கொல்லப்படுவார்கள். சார்லியின் இனவாதமும் அப்படித்தான். ஏன் இதற்கு இத்துணை அழுத்தம் என்றால் அப்படிப்பட்ட தைரியம் சார்லிக்கு இருந்தால் உலகளவில் நிறவாதத்திற்கு எதிரான குற்றச்சாட்டில் உங்களைப்போன்றவர்கள் முந்திக்கொண்டு முன் ஆலோசனையின்றி அப்பியிருப்பார்கள். அப்படி இருந்துமே சார்லியின் நிறவாதத்தை ரத்து செய்துவிட முடியாது என்றாலுமே அதற்கு கூட துப்பில்லை என்பது தான் நிலவரம்.

              • //இனவாதம் என்பதை Interracial என்பதன் அடிப்படையில் சார்லியின் நிலைப்பாட்டைக் கொண்டு விளக்குங்களேன். //

                என்னையா எதிர்பார்கிரீர்? Interracial (Whites-Blacks/Minorities) என்ற அடிப்படையில் தானே எல்லா விளக்கமும் இருக்கிறது? இதுல ஆதிக்கசாதி- ஆதிக்க சாதி, ஆதிக்க சாதி-தலித் என்ற இரு பிரிவு எங்கிருந்து வந்தது? வெள்ளையர்-கறுப்பர், வெள்ளையர்-minority என்பதற்கு ஒரே இணை ஆதிக்கசாதி-தலித் என்பது தானே? ஏன் இந்த உளறல்? உலகவில் நிறவாதத்திற்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக (கறுப்பர்கள், இஸ்லாமியர், பாலஸ்தீன மக்கள், ஓரினசேர்கையாளர் என எல்லாரும் ஒடுக்கப்பட்ட மக்கள் தாம். இதில் கொஞ்சம் ஒடுக்கப்பட்டவர், நிறைய ஒடுக்கப்பட்டவர் என்ற விவாதம் எல்லாம் இல்லை) படம் போட்டு தள்ளி இருந்தாலும் உங்கள் கண்ணுக்கு தெரிவது எல்லாம் அவர்கள் நிலையை ஏன் அப்படி வரைய வேண்டும்? அசிங்க படுத்த தானே என்று கேட்பீர்கள்? அவர்கள் எப்படி நடத்த படுகிறார்கள் என்ற நிலையை உள்ளபடி வரைந்தால் அது எப்படி அவர்களை அசிங்க படுத்துவதாகும்?

                • ஒன்று கூட அப்படியில்லை சந்துரு சார். நிறவாதத்தை சார்லி கண்டிக்கிறது என்பதற்கு போப்பை காட்டினார்கள். இயேசுவை காட்டினார்கள். தாங்கள் ஒரு வெள்ளையனை காட்டினீர்கள். இது எந்தவிதத்தில் நிறவாதத்தைக் கண்டிக்கிறது என்று எடுத்துச் சொல்லுங்கள். பிரான்சில் சிறுபான்மையினராக தமிழர்களும் தானே இருக்கிறார்கள். தங்களின் அம்மாவோ அம்மம்மாவோ அப்படியிருக்க யாராலும் கற்பனை செய்ய முடியுமா? ஏன் தமிழர் என்று தனித்துச் சுட்டுகிறேன் என்றால் இந்தக் கேள்விக்கு வியாசன் சார்லியைப் போன்று அரபுக்கலப்பு உள்ள சப்சகாரன் ஆப்ரிக்க பெண் என்றாரே! சார்லியின் வெற்றி இப்படி கார்ட்டூனை துல்லியமாக ரசிக்கிற வர்க்கத்திற்குத்தானே! ஆக ஒருவிதத்தில் இப்படி பாதந்தாங்கிகளாகத்தானே இருந்திருக்கிறீர்கள். இதுல எங்க இனவாதம் கண்டிக்கப்படுகிறது?

                  • //நிறவாதத்தை சார்லி கண்டிக்கிறது என்பதற்கு போப்பை காட்டினார்கள். இயேசுவை காட்டினார்கள். தாங்கள் ஒரு வெள்ளையனை காட்டினீர்கள்//

                    எப்பா தெய்வமே. போப்பும், ஏசுவும் எல்லா மதத்தையும் சார்லி சம கிண்டல் செய்கிறது என்பதற்கு காட்டியவை. நான் காட்டியது marine lapen என்ற இனவாத பெண்மணி. அவளை பற்றி பேசவேண்டும் என்றால் நிறைய பக்கம் தேவைபடும். தன் இனவாத,நிறவாத போக்கால் பாரிஸில் நடந்த பேரணியில் கலந்து கொள்ள கூடாது என்று துரத்தி அடிக்கபட்டவள். அவளையும் அவள் வெறியையும் காட்ட பிறப்புறுப்பை ஹிட்லர் போல அமைப்பதாக, அவள் கட்சி எப்படி பட்டது என்று காண்பிக்க குதத்தில் அந்த கட்சியின் சின்னம், பிறகு அவளே மலம். நீங்க கேட்பது ஏன் அவள் நிறவெறி கொண்டவள் என்று எங்குமே இல்லை என்று. கொஞ்சம் இதை நினைத்து பாருங்களேன். பிஜேபி ஆட்கள் படம் போட்டால் ஹிந்துத்வா ஆதரவாளர் என்றோ, பாக்ஸ் நியூஸ் படம் என்றால் கிறிஸ்துவ ஆதரவாளர் என்றோ போட வேண்டுமா? அவர்கள் அப்படி என்று எல்லோருக்கும் தெரியும். வேறு தேசத்தவருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் படம் வரையபட்டது அவர்கள் தேசத்துக்கு தானே? எல்லாருக்கும் தெரிந்ததை இன்னொரு முறை எதற்கு சொல்ல வேண்டும்?

                    இதே படத்தை தாங்கள் பார்த்ததும் அது வெள்ளயர் கறுப்பின மக்களை பார்த்து சிரிக்க வரைய பட்ட படம் என்று தோன்றியது. ஆனால் எனக்கு பணக்காரர் எப்படி சிறுபான்மை மக்களை நாய் போல நடத்துகின்றனர் என்பதன் விமர்சனமாக தோன்றியது. இந்த வேற்றுமை இதே ஓவியம் முகிலன் அல்லது வினவு செய்திருந்தால் உங்களுக்கு வராது. ஆனால் சார்லி வெறி அமைப்பு என நீங்கள் அழுத்தமாக நம்புவதால் இப்படி இருக்கலாம் என்று யோசிக்க கூட முடியவில்லை உங்களால். கொடுக்கும் விளக்கங்களும் ஒதுக்க படுகின்றன.இந்த bias விட்டுவிட்டு எல்லா படங்களையும் ஒரு முறை பாருங்கள்.

                    • \\பிஜேபி ஆட்கள் படம் போட்டால் ஹிந்துத்வா ஆதரவாளர் என்றோ, பாக்ஸ் நியூஸ் படம் என்றால் கிறிஸ்துவ ஆதரவாளர் என்றோ போட வேண்டுமா? அவர்கள் அப்படி என்று எல்லோருக்கும் தெரியும்.\\

                      பாசிச ஜெயலலிதாவை அப்படி வரையயிலாது. இது இந்தியக் கண்ணோட்டம் அல்ல. சர்வேத கண்ணோட்டம் தான். Nudity Sexism அவய்ங்கதானே விளக்கம் கொடுத்தாய்ங்க. இப்ப அண்டர்ஸ்டேண்டிங் சார்லி என்று அழுதுவடிந்தால் என்ன அர்த்தம்?

                    • தென்றல் இந்த பின்னுட்டம் சந்துரு இழையில் இருந்தாலும் உங்களுக்கானது தான் . கருப்பர் இன மக்களை அம்மணமாக வரைந்தது போன்று வெள்ளையர் இன மக்களை சார்லி அம்மணமாக வரைந்து உள்ளதா ?என்று கேள்வி எழுப்பியது நீங்கள் தான் . ஆம் வெள்ளையர் இன மக்களையும் அம்மணமாக வரைந்து உள்ளது என்று கார்ட்டூன் ஆதாரத்துடன் எத்துனை முறை நானோ ,சந்துருவோ பின்னுடம் அளித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள ,உங்கள் தவற்றை திருத்திக்கொள்ள உங்களின் ஈகோ ,வரட்டுவாத போக்கு , திரிபுவாத மனநிலை ,அற்பத்தனமான சிந்தனை போக்கு இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது. இத்தகைய உங்கள் போக்கு எனக்கு மிக்க வருத்தமாக இருக்கின்றது தென்றல் .

          • சார்லி இஸ்லாமிய வெறுப்பையும், சிறுபான்மை வெறுப்பையும் கொண்டு காசுபார்க்கும் பதிப்பு என்றால் அவர்கள் எவ்வளவு கேவலமாக முடியுமோ அவ்வளவு கேவலமாக சித்தரிக்க பட்டு இருப்பர். அப்படி என்றால் சார்லியின் முஹம்மது அவர்களின் படங்களையும் பார்த்து விடுவோமே:
            http://www.slate.com/content/dam/slate/articles/arts/brow_beat/2015/01/hebdo-covers/150107_BB_Hebdo2006_350.jpg.CROP.original-original.jpg

            http://cdn.frontpagemag.com/wp-content/uploads/2015/01/charlie-hebdo-no1163-011014.jpg

            நீங்கள் நினைப்பது போல சார்லி பொழப்பே இனவெறியையும், மதவெறியையும் வெய்த்து காசு பார்பது அல்ல. ஒரு வருட காலத்தில் சார்லியில் வெளிவந்த அட்டைப்படங்களின் அலசல் இங்கே:
            http://www.hoodedutilitarian.com/2015/01/a-year-in-the-merde/

            இதில் நீங்கள் பார்க்க கூடியது எல்லாம் அரசியல்வாதிகள், சந்தர்பவாதிகள் மேல் அவர்கள் சிறுபான்மையினர், இஸ்லாமியர்களை எப்படி நடத்துகின்றனர் என்பது பற்றிய விமர்சனம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுகிறது. உங்களை போன்ற சிலர் அவர்கள் islamaphobia பரப்புகிறார்கள் என்பதற்கு அவர்கள் பதில்:

            We reject the “cultural relativism” which implies an acceptance that men and women of Muslim culture are deprived of the right to equality, freedom and secularism in the name of the respect for certain cultures and traditions.

            We refuse to renounce our critical spirit out of fear of being accused of “Islamophobia”, a wretched concept that confuses criticism of Islam as a religion and stigmatisation of those who believe in it. (முழு பதிப்பு: http://news.bbc.co.uk/2/hi/europe/4764730.stm)

            உங்கள் சமத்துவ பார்வையும், அவர்கள் பார்வையும் வேறு. அவ்வளவு தான் வேறுபாடு.

            • சார்லியின் இசுலாமியப் பார்வையை நண்பர் அஞ்ஞானி பதிவிட்டிருந்தார். தாங்கள் படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.
              http://posthypnotic.randomstatic.net/charliehebdo/Charlie_Hebdo_article%2011.htm

              சார்லி காசு பார்க்கும் பதிப்பு என்பதற்கான பார்வை; சார்லியை வாங்கிய கோடிஸ்வரன் யார் என்று பார்த்து மேற்கொண்டு கூவுங்கள்.

              தோழர் கலையரசன் பதிவு

              சார்லி தாக்குதலில் இலாபம் சம்பாதித்த கோடீஸ்வரர்! http://kalaiy.blogspot.com/2015/02/blog-post_8.html

      • //தன் குதத்தைச் சுட்டிக்காட்டி, தன் குதம் போல் கருப்பின தொழிலாளியின் டை ஏன் வெள்ளையாக இல்லை என்று கூட கேட்டிருக்கலாம் இல்லையா? //

        நீங்கள் கூறுவது போல செய்து இருக்கலாம். ஆனால் படம் சார்லி பத்திரிகையில் வெளி வர வரையபடவில்லையே. ஆனால் படம் நிறவெறியை எதிர்த்து போராடும் MRAP என்னும் பிரெஞ்சு அமைபிர்க்காக வரையபட்டது (விக்கி பதிவு தான் மன்னிக்கவும். MRAP தளம் பிரெஞ்சு மொழியில் உள்ளது. தளம் இங்கே: http://www.mrap.fr/).

        http://en.wikipedia.org/wiki/MRAP_%28NGO%29

        சார்லி பத்திரிகையில் வரையப்படும் படத்தில் வெள்ளையர் என்றால் அடக்கி வாசிப்பது எல்லாம் இல்லை. நான் மேலே சில படங்கள் எடுத்துகாட்டாக தந்துள்ளேன். தமிழ் அவர்களும் சில எடுத்துகாட்டுகள் அளித்துள்ளார். எனவே சார்லி வெள்ளையன் என்றால் அடக்கி வாசிக்கிறது, இஸ்ரேல் என்றால் அடக்கிவாசிக்கிறது, அமெரிக்கா என்றால் அடக்கிவாசிக்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்கவும். பிஸ் கிரிஸ்ட் எனப்படும் படம் கிறிஸ்துவ மதவாதிகளால் சேதமான சமயம், அந்த தாக்குதலை எதிர்த்தும் கார்ட்டூன் வெளியிட்டது சார்லி.

      • கருப்பர் இன மக்களை மட்டும் தான் அம்மணமாக சார்லி வரைந்து உள்ளது என்ற தென்றலின் குற்றசாட்டும் முருக்கு சாப்பிட்டு கொண்டே நாவல் படிப்போரால் தர்க்க பட்டு விட்டது . அடுத்தது என்ன தென்றல் ?

        //அதையும் முறுக்கு கடித்துக்கொண்டு நாவல் படிக்கும் அற்பவாத மேட்டிமைவாதிகள் கருத்துச் சுதந்திரம் என்று கதறுகிறார்கள். நிற்க.//

        • தகர்ப்பதெல்லாம் அப்புறம் இருக்கட்டும் பாஸ். ஏற்கனவே தாங்கள் மூக்கை உடைக்கும் ஆதாரத்தை வைத்து இரத்தத்தை நிறுத்த முடியாமல் வலி வேதனையோடு பின்னூட்டம் எழுத வேண்டியதாய் போயிற்று!!!! ஆனாலும் இப்பவரைக்கு கலர் கலரா எரியிற எல் ஈ டி மாறி பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்துவிட்டீர்கள். முதலில் பிரெஞ்சு மக்களின் போராட்டத்தை ஆதரிக்கிறேன் என்று சொன்னவர் இப்பொழுது சார்லியை தடவிக்கொண்டிருக்கிறீர்கள். போராட்டத்தில் பங்கெடுத்த ஒரு சார்பாளர்களே கொல்லப்பட்டதை எதிர்க்கிறேன் ஆனால் நான் சார்லி அல்ல என்று அடித்து பேசுகிற பொழுது துப்புகெட்டதனமாக சீனாவையெல்லாம் இழுத்தீர்கள். இதற்கு காரணம் தாங்கள் படித்த செய்திமட்டும் தான் சரியாக இருக்க வேண்டும் என்கிற ஈகோ பார்வையாகும். இப்படிப்பட்டவர்கள் வறட்டுவாதியாக இருந்து பிறகு கோஷ்டிவாதியாக நிற்கவேண்டிவரும் என்பதை உங்களது பின்னூட்ட அணுகுமுறை காட்டுகிறது. அதைவிடுத்து உங்கள் நிலைப்பாடு என்னவென்று வாசகர்களுக்குச் சொல்லி அதன் படி நின்று விளக்குங்கள். இன்னொரு பிளேட் முறுக்கு ஆர்டர் வேண்டுமானாலும் பண்ணுவோம்.

          • குப்புற விழுநதாளும் முகத்தில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக இருக்குங்க உங்களின் பின்னுட்டம் . நீங்க மட்டுமே எழுதி நீங்க மட்டுமே படிக்கும் blog ஆக வினவு இருந்தா பரவாயில்லை. பல ஆயிரம் பேர் படிக்கும் தளம் அல்லவா வினவு !ஒவொரு விவாத இழையிலும் [திரியிலும்] பதில் சொல்ல வழியின்றி வசை பாடுவதையே வழக்கமாக கொண்டவரு யாருனு வினவு வாசகர்களுக்கு நன்கு தெரியும் ________ !

            என்னுடைய சீனாவை பற்றிய பதில் எவ்வளவு தெளிவாக இருந்தாலும் அதற்கு துப்புகெட்டதனமாக கூட பதில் சொல்ல முடியாத தென்றல் , அதனை கண்டும் காணாமலும் செல்லும் தென்றல் , அம்பலப்ட்டு போறாரு வினவுல ! சீனாவை பற்றிய என்னுடைய கருத்துகளை பின்தொடர்வதாக இருந்தால் எனது பின்னுட்டம் 21.1.1.1.1.1.1.1.1ல் இருந்து தொடரலாமே ! சீனா ஒன்றும் விவாதத்துக்கு அப்பாற்பட்ட நாடு இல்லையே ! தென்றலுக்கு ஏன் தயக்கம் ? சார்லி விடயத்தில் நான் முன்முடிவுகள் ஏதும் இல்லாமல் தானே விவாதிகின்றேன் !

            [1]முதலில் சார்லி கார்ட்டூன்காரர்களை கொன்றது தவறு என்றேன்

            [2]அடுத்து பிரான்சு மக்களின் கருத்துரிமைக்கு ஆதரவான ஊர்வலம் வரலாற்றில் பதிக்க படவேண்டியது என்றேன்

            [3]இப்பொது சார்லியின் கார்டூன்கள் வினவு கட்டுரை எழுப்பும் குற்ரசாட்டான இனவாதம் என்பது போல இல்லாததால் ஒவொரு கார்டூனையும் ஆய்வு செய்து என் கருத்துகளை பகிர்கின்றேன்.

            இது விவாதத்தின் வளர்சி போக்கில் கிடைக்கும் நிலைபடுகளா அல்லது முரண்பட்ட நிலைபாடுகளா என்பதை வினவு வாசகர்களின் சிந்தைக்கே விட்டுவிடுகிறேன்.

            மேலும் நீங்கள் என்னை பாராட்டுவது போன்று [வறட்டுவாதியாக , கோஷ்டிவாதியாக,முட்டாள் தனமானது, அர்னாப் கோஸ்வாமியைப் போன்று] நானும் உங்களை பாராட்டிஎழுதினேன் என்றால் வினவு அவற்றை கத்தரித்து விடுவதால் என்னால் உங்களை பாராட்ட இயலவில்லை அதற்காக என்னை மன்னிக்கவும் தென்றல் .

            நான் வரட்டு வாதியாக இருந்தால் விவாதத்தில் என் நிலைப்பாடுகள் வளர்ச்சி அடைந்து இருக்காது. நான் கோஷ்டிவாதியாக இருந்து இருந்தால் இந்த விவாதத்தில் யாரிடம் நான் கோஷ்டி சேர்ந்தேன் என்பதை நீங்கள் தானே நிருபிக்க வேண்டும் . எனவே உங்கள் ” பாராட்டுகளை ” உங்களிடமே திருப்பி கொடுத்து விடுகிறேன் !

            • \\என்னுடைய சீனாவை பற்றிய பதில் எவ்வளவு தெளிவாக இருந்தாலும் அதற்கு துப்புகெட்டதனமாக கூட பதில் சொல்ல முடியாத தென்றல் , அதனை கண்டும் காணாமலும் செல்லும் தென்றல் , அம்பலப்ட்டு போறாரு வினவுல !\\

              சீனாவைப் பற்றி உங்களுக்கு விளக்கியிருக்கிறேன். அதையும் தான்டி தங்களுக்கு கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. ஏனெனில் அது அவதூறு என்று சொல்லிவிட்டேன். தன் வீட்டு மனிதரை நடத்தை கெட்டவர் என்று யாராவது கூறினால் அப்படிக்கேட்பவரை செருப்பைக் கழட்டி அடிப்பதைவிட்டுவிட்டு அவதூறு சொன்னவரை நிரூபிக்கச் சொல்வதை வரலாற்றிலே மானங்கெட்ட பாசிச இராமன் செய்திருக்கிறான். அவனைப் போன்று இந்துத்துவ நாசகரக் கருத்தியல்களை தாங்கள் தாங்கிப்பிடிக்கலாம். ஆனால் மானம் ரோசம் உள்ள யாரும் இப்படி நிரூபிக்க தேவையில்லை என்பது என் புரிதல். மேற்கொண்டு இதையே ஒரு கேள்வியாக வைத்து தங்களைத் தராதரமற்ற மனிதராகக் காட்டிக்கொள்ளாதீர்கள். இதையும் தாண்டி எந்த வாசகருக்குமே சீனாவைப் பற்றி வரும் சந்தேகங்கள் இயல்பானவை. அதை விளக்கவேண்டியது கடமையாகும் என்பதை ஏற்கிறேன். அதை நான் எனக்குத் தெரிந்த வரை உங்களுக்குச் சொல்லியும் உமது விளக்கமோ அறிவுரையோ தேவையில்லை என்று கூறியவர் தாங்கள். ஆகையால் மேலும் மேலும் அம்மணமாக நிற்காதீர்.

              மற்றபடி சார்லியைப் பற்றிய உங்களது நிலைப்பாடு அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

              • பிரான்சு சார்லியின் கருத்துரிமை பற்றி பேசும் போது ,சார்லியை அவதூறு செய்தற்கு கம்யுனிச கொள்கைகளையே மதம் என்ற அபினிடம் திருபலி கொடுத்து ,கொள்கை அற்று அம்மணமாக நிற்கும் நீங்கள், சீனாவின் கருத்துரிமை அற்ற நிலையை பற்றி நான் விவாதிக்கும் போது அதனை அவதூறு என்று கூறி ஓடி ஒளியும் மர்மம் என்ன ? சார்லியை நீங்கள் நீங்கள் வினவில் அவதூறு செய்து கொண்டு தான் இருகின்றீர்கள். அதனை நான் எதிர் கொண்டு என் கருத்துக்கள் மூலம் முறியடித்துகொன்டு தான் இருகிறேன். அதனை போன்றே பக்கம் பக்கமாக சார்லியை அவதூறு செய்ய நீங்கள் பயன் படுத்தும் நேரத்தில் 10 % நேரத்தையாவது சீனாவின் மீது செலுத்தி சீனாவை பற்றிய என் குற்றசாட்டு தவறு என்றால் என்னை வினவில் அம்பலபடுத்த தென்றலுக்கு என்ன தயக்கம் ? என் குறசாட்டுகள் உண்மை என்பதால் தென்றல் அம்ப்லபட்டு போவார் என்பதாலா ? மீணடும் கூறுகின்றேன் உங்கள் வசைகள் எனக்கு தேவை இல்லை என்பதால் உங்களிடமே அவற்றை திருப்பி கொடுத்து விட்டேன் . [வசை அகராதி தொகுக்கும் வேலையில் தென்றல் இறங்கலாம் ]

                தென்றலு …, போலியான கம்யுனிச நாடான சீனாவில் மக்களுக்கு கருத்துரிமை சிறிதும் இல்லாத நிலையில் அந்த மக்கள் கம்யுனிசம் என்ற பெயரில் ஆட்சி செய்யும் முதலாளித்துவ சீர்குலைவு குப்பலை எப்படி எதிர்கொள்வார்கள் ?

    • சந்துரு,

      சார்லியை இனவெறியர்கள் என்று கூறி எதிர்க்கும் உலக கம்யுனிஸ்டுகள் எல்லாம் முட்டாள்கள் அல்ல சந்துரு. அவர்கள் சார்லியை எதிர்பதற்கு காரணம் .., ஒரு சில மதவெறியர்களின் தாக்குதல் அமெரிக்கா போன்ற உலகத்தை ஆதிக்கம் செய்யும் நாடுகளுக்கு அது சாதகமாக அமைந்து , மேற்காசிய இஸ்லாமிய நாடுகளில் மீண்டும் ஒரு பாரிய தாக்குதலை[ஈராக் மீதான தாக்குதலை போன்று ] ஏற்படுத்தி விடும் என்ற அச்சமாக இருக்கலாம். எனவே தான் சார்லியை இனவெறியர்களாக கலர் அடிப்பதன் மூலம் , சார்லியை அவதூரு செய்து இரண்டாம் பலி கொடுப்பதன் மூலம் கம்யுனிஸ்டுகள் பிரச்சனையை திசை திருப்புகிறனர். தாக்குதல் தொடுத்த மதவெறியர்களை சார்லியின் இனவெறியுடன் [so called only .., Charli is not really racist ] சமன் செய்து கம்யுனிஸ்டுகள் தங்கள் அரசியல் வேலை திட்டத்தை உலக போலீஸ்காரன் ,ஆதிக்க அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுத்த முனைகின்றார்கள் . ஆனாலும் கம்யுனிஸ்டுகளால் இனவெறியர்கள் என்று அவதூறு செய்யபட்டு இரண்டாம் பலி கொடுக்க பட்ட சார்லியின் நிலை தான் மிகவும் கவலைக்குறியது.

      உலக அரசியல் சதுரங்கத்தில் இரண்டு பக்கமும் அமர்ந்து கொண்டு காய்களை நகர்த்தும் ஆள் ,தனக்கு சாதகமாக மட்டும் தேவைபட்டால், தேவையான காய்களை பலிகொடுக்கும் ஆள் அமெரிக்கா எனபது தான் உண்மையே ! அல்கொய்தா முதல் ISIS வரை ஒருபுறம் உருவாக்கி ஆட்டுவிப்பது ,மறுபுறம் அவர்களையே தேவைபடும் போது அழித்து அடக்குவது என்று வெள்ளை ,கருப்பு காய்களை இரண்டையும் நகர்த்துவது உலக எசமானன் அமேரிக்கா தானே ?

      //அதற்கு தன் உயிரை விலையாக கொடுத்தவனை பற்றி தான் அடுத்தவரின் உரிமையை பறித்தான் என்று பிதற்றல்கள் இன்னும் தொடர்கின்றன.//

      • //எனவே தான் சார்லியை இனவெறியர்களாக கலர் அடிப்பதன் மூலம் , சார்லியை அவதூரு செய்து இரண்டாம் பலி கொடுப்பதன் மூலம் கம்யுனிஸ்டுகள் பிரச்சனையை திசை திருப்புகிறனர். தாக்குதல் தொடுத்த மதவெறியர்களை சார்லியின் இனவெறியுடன் [so called only .., Charli is not really racist ] சமன் செய்து கம்யுனிஸ்டுகள் தங்கள் அரசியல் வேலை திட்டத்தை உலக போலீஸ்காரன்//

        இதே விளக்கத்தை இறந்த மக்களின் குடும்பத்திடம் சொல்லி, அவர்கள் சரி என்று சொன்னால் ஏற்று கொள்வதற்கு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்னை ஏற்று கொள்ள சொன்னால், செருப்பால் அடித்து துரத்தி விடுவேன். அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கவோ, விமர்சிக்கவோ தைரியம் இல்லாமல் இப்படி செய்பவன் கம்யூனிஸ்ட் என்று வினவு சொல்லட்டும். நான் விவாதத்தை விட்டுவிடுகிறேன். ரெண்டு காய்களையும் நகர்த்துவது எசமான் அமெரிக்கா என்றால் அமெரிக்காவை எதிர்த்து பேசுங்கள். அதை விட்டு விட்டு அமெரிக்க போக்கை குத்திகாட்டி விமர்சித்த சார்லியை பலிகடா ஆக்குவது எல்லாம் வேண்டாம். அது குடும்பத்தை விற்று வாழ்வதை விட கேவலமானது (இது முழுக்க முழுக்க எனது கருத்து மட்டுமே).

        • சந்துரு,

          IS தீவிரவாதிகள் சார்லி கார்ட்டூன் காரர்களை துப்பாக்கி மூலம் association செய்தார்கள் .கம்யுனிஸ்டுகள் ஒட்டு மொத்த சார்லியையே அவதுறு செய்வதன் மூலம் character association செய்கின்றனர் .

          • அது association இல்ல தமிழ் assassination. இந்த செயலுக்கு பெயர் அது தான். இந்த சார்லி பலிடகா என்னும் விசயத்தை இத்துடன் நிறுத்திகொள்வோம்.

  36. வியாசன் – நான் கலையரசன் அல்ல, KKN. அவருடைய கட்டுரையைப் படித்துப் புரிந்து மேற்கொண்டு வினையாற்றத்தான் வேண்டினேன். தயவு செய்து கலையரசனை இந்த உரையாடலில் வம்புக்கிளுக்க வேண்டாம்.

    தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று எண்ணம் உள்ளவருக்கு குழப்பம் வரவே வராது. எந்த கலர் கண்ணாடியும் தேவைப்படுவதுமில்லை, உபயோகிப்ப்துமில்லை. அது சுய பிரதிபலன்களை எதிர்பார்ப்பவர்களுக்கு மட்டுமே தேவைப்படும்.

    ஜோசப் – பல பின்னூட்டங்களில் தங்களுடைய விவாதங்கள் நல்ல புரிதல்களோடு இருந்தன. ஆனால் இந்தக் கட்டுரையில் ‘கிறித்துவ தாலிபான்’களின் எண்ணங்களை தங்களுடைய கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. எனது கருத்து தங்களுக்கு பிடிக்காவிடின் மன்னிக்கவும்.

    தமிழ் மற்றும் சந்துரு – நான் கலையரசன் அல்ல, KKN. விவாதத்தைத் தொடருங்கள். தமிழரசனின் இந்தக்கட்டுரைக்கு வரும் எதிர் கருத்துக்களனைத்தையும் அறிய மிகுந்த ஆவலுடன் உள்ளேன்.

    • உங்களின் பதில் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற கதை போலிருக்கிறது. 🙂
      நானோ அல்லது இங்கு யாருமே நீங்கள் தான் கலையரசன் என்று கூறவில்லையே. நான் கூறியதெல்லாம் ‘கலையரசனோ அல்லது தமிழரசனோ, யாரோ, இந்தக் கட்டுரையை எழுதிய அரசன்,…. என்பது தான். மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

      //வியாசன் – நான் கலையரசன் அல்ல, KKN.//

    • //ஜோசப் – பல பின்னூட்டங்களில் தங்களுடைய விவாதங்கள் நல்ல புரிதல்களோடு இருந்தன. ஆனால் இந்தக் கட்டுரையில் ‘கிறித்துவ தாலிபான்’களின் எண்ணங்களை தங்களுடைய கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. எனது கருத்து தங்களுக்கு பிடிக்காவிடின் மன்னிக்கவும்.// இதுக்கு எதுக்கு மன்னிப்பு கேக்கனும் கிறிஸ்துவ தாலிபான்,கள் எங்க இருக்காக? எனக்கு தெரிஞ்சு யாரையும் கொல்லலாம் அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாற வில்லை என்றால், அப்பிடிப்பட்ட நோக்கோடு எந்த இயக்கமும் இருப்பதாக தெரியவில்லை இசுலாமிய தீவிரவாத குழுக்கள் செய்யும் கொலைகளுக்கு வக்காளத்து வாங்க கிறிஸ்தவ தீவிரவாதிகள் அப்பிடினு சும்மான சொல்லுறீக போல இருக்கு ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டின்ற மாறி பெந்தேகோஸ்தே மதவேறி இவர்கள் தாலிபான் களை விட ஆபத்தானவர்கள் அப்பிடினு பெந்தகொஸ்த டம்மி பீஸிகளை கை காமிக்கிறீக,நீங்க நினைக்குற மாறி நான் சர்ச்சுக்கு போறவனோ பெந்தகோஸோ இல்லை பாஸ்…

  37. Does criticizing Hindus for the most and Christians after them alone holds good? You people have drawn cartoons of Ram, and published cartoons of Pope! But why not muhammad? uyir bayama?

  38. according to Islamic law, drawing of any prophet is sin. Vinavu shamelessly draws cartoons of Jesus who is also considered as a prophet by the same people! What a contradiction!

  39. வினவுக்கு மற்றும் வாசகர்களுக்கு,

    இந்த விவாதம் கருத்துச் சுதந்திரத்தைப்பற்றி இருந்திருக்க வேண்டியது. குறிப்பாக மனித இனத்தின் நலனுக்கு எதிராக உள்ள மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அதாவது அடக்கியாளும் அதிகார சிஸ்டத்திற்கு எதிராக தனி நபர்கள் மற்றும் பொது நல சக்திகள் கருத்துக் கூறமுடியும் சுதந்தரத்திற்கு அல்லது உரிமைக்கு உள்ள தடைகளைப்பற்றியதாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் விவாதத்தை ஆரம்பிக்கும் கட்டுரையே அப்படியில்லை. கருத்துச் சுதந்திரத்தைப்பற்றி சிறிதும் பேசாமல் அல்லது டிஸ்கி போன்று ஒரு வரியைப்போட்டுவிட்டு இனவெறி மதவெறி சதி என்று பல விதங்களில் பேசுவதற்கு பேசாமலேயே இருக்கலாம். கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்தத் துணிந்ததால் தான் அந்த கருத்துச் சுதந்திர போராளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதைப்பற்றி பேசாமல் பத்திரிக்கையின் சில கேலிச்சித்திரங்களை பகுப்பாய்வு செய்வது திசை திருப்பும் வேலைதான்.

    பலகாரணங்களை அடுக்கிவிட்டு அதனால் நாங்கள் சார்லி இல்லை என்று சொல்வதை விட, நான் சார்லி தான் என்று சொல்லிவிட்டு பல டிஸ்கிகளைப்போட்டுக்கொள்வது மேன்மையானது. அல்லது இந்த விவாதத்தை நடத்தும் அளவுக்கு நிலைமை சரியாக இல்லை என்ற காரணத்தினால் இந்த பதிவை போடாமலேயே இருந்திருக்கலாம்.

    சில கொசுறுகள்.

    1. ஐரோப்பாவில் தனது எதிர்ப்பை, மற்றதை தெரிவிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் குறியீடு குதப்புணர்ச்சி என்று தெரிகிறது. Middle finger ஐக் காட்டுவதும் இதைக்குறிக்கத்தான். க்யுனெல் (Quenelle) என்பது வாழைப்பழத்தைப் போன்று ஆனால் அதனினும் பெரிதாக நேராக மொன்னையாக வழவழப்பாக இருக்கும் ஒரு பொருள். இந்த நான்கு அம்சங்கள்தான் அதனை தேர்ந்தெடுத்தற்கான காரணங்கள் என்று நினைக்கிறேன். எனவே அதீத எதிர்ப்பை காட்டுவதற்காக ஒரு சைகையை கண்டுபிடித்து அதற்கு க்யுனெல் என்ற பெயரும் இடப்பட்டிருக்கிறது. இந்த சைகை நாசி சல்யூட்டின் எதிர் வடிவமாகவும் எடுத்துக்கொள்ளமுடிகிறது. (Quenelle நேராக இருந்தாலும் அது குதத்தினுள் தினிக்கப்படும்போது சிறிது வளைந்துவிடுவது இயற்கையே. சைகைக்கு Quenelle என்று தான் பெயர் வைத்திருக்கிறார் அதை அறிமுகப படுத்திய Dieudonné. Banana இல்லை or Ananas (Pine apple) இல்லை.)

    2. கலையரசன் அவர்களின் பதிவில் பேசப்படும் Sine என்பவர் ஒரு தனி மனிதனைப்பற்றி யூகத்தின் அடிப்படையில் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அந்த கருத்து வெறும் அவதூறாகவே தெரிகிறது. முதலில் அந்த பதிவு CH ல் பிரசூரிக்கப்பட்டிருக்கிறது. பிறகு எதிர்ப்பு வந்தபோதுதான், அவர் மன்னிப்புக்கேட்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். அதை அவர் செய்யவிரும்பாததால் வெளியேற்றப்பட்டிருக்கிறார். பத்திரிக்கையின் பங்குக்கு அந்த கருத்தை பதிவுசெய்ததற்காக மன்னிப்புக் கேட்டிருக்கும் என நம்புகிறேன். இந்த விசயத்தை முகமது கார்ட்டூன் விசயத்துடன் முடிச்சு போடுவது மோசடியானது.

  40. இங்கே ஒருத்தர் கழுத்தை அடுத்தவர் கடித்து துப்பிக்கொண்டு ரத்தக்களறியாக பிறாண்டி கொண்டு இருக்கிறார்கள். _______வினவோ மூச்சே விடாமல் அமைதியாக இருக்கிறார்.

  41. வினவு கட்டுரையில் பதில் அளிக்கபடவேண்டிய மீதி ஒரேஒரு கார்ட்டூன் போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட (கருவுற்ற) பெண்கள் பற்றியது. பிரான்சில் 12%அதிக வருவாய் உள்ள குடும்பங்களுக்கு குழந்தைகளுக்கான மானியத்தை பிரான்சு அரசு நீக்கிய போது அந்த நாட்டின் வலது சாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன . மேலும் பிரான்சுக்குள் குடிபெயரும் மக்கள் அதிக குழந்தைகளை பெற்று சோம்பேறிகளாக குழந்தைகளுக்கான மானியத்தை அவர்களை பெற்றுகொள்கின்றனர் என்றும் வலது சாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன . இந்த நிலையில் வலது சாரி கட்சிகளை பரிகாரம் செய்ய ,நையாண்டி செய்ய அவர்களை நோக்கி வரையப்பட்டது தான் இந்த கார்ட்டூன் .

    ” தொ பார் குழந்தைகளுக்கான மானியத்தை அனுபவிப்பது பிரான்சுக்குள் குடிபெயரும் மக்கள் மட்டும் அல்ல .,போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட (கருவுற்ற) பெண்களும் தான் ”

    என்று வலது சாரிகளின் மன ஓட்டத்திலேயே சென்று சார்லி அவர்களை கிண்டல் அடிக்கிறது.வடகிழக்கு நைஜீரியாவில் ஹராம் தீவிரவாதிகளால் சிறைபிடிக்க பட்டு உள்ள பெண்கள் பிரான்சில் குழந்தைகளுக்கான மானியத்தை வாங்க முடியாது என்பதால் இந்த கார்ட்டூன் குரிப்பியுவது அவர்களை அல்ல

    //இது போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட (கருவுற்ற) பெண்கள், தங்களுக்குச் சேர வேண்டிய ஈட்டுத் தொகைக்கான காசோலையை நிறுத்தாதீர்கள் என்று சொல்வது போன்ற படம்.//

  42. தென்றலின் பின்னுட்டங்கள் flight of ideas என்ற முறையில் ஒரு கருத்துடன் மற்றது தெடர்ப்பின்றி ,புரியாத நிலையில் ,கோர்வையற்று உள்ளது . இது அவருக்கு மட்டும் பிரச்சனை அல்ல …, படிபவருக்கும் தான் !

  43. ” தொ பார் குழந்தைகளுக்கான மானியத்தை அனுபவிப்பது பிரான்சுக்குள் குடிபெயரும் மக்கள் மட்டும் அல்ல .,போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட (கருவுற்ற) பெண்களும் தான் ” அய்யா தென்றலு நல்லாதான் பேசுதீரு தீவிரவாதிகலுக்கு அடிமையா மாத்த சொல்லி அல்லாவும் முகமது நபியும் சொல்லவில்லை இவனுகளா செஞ்சுட்டானுக அப்பிடினு சொல்லுங்க பாஸ் வாழ்க உங்க முகமதிய தீவிரவாத ஆதரவு ஆனலும் வெளிப்படையா இப்பிடி ஆதரவு குடுக்காதீக அய்யா ….

    • அய்யா ஜோசப் , அந்த விளக்கம் சார்லி கார்டூனுக்கு என்னால் [தமிழ்] கொடுக்கபட்டது . அதில் என்ன தீவிரவாதிகளுக்கு ஆதரவான வாசகம் இருக்கு ? அவசர பட்டு மத்தவங்களை அடிச்சி தாக்காதிங்க!என்னுடைய பின்னுட்டத்தை[ 43] மீண்டும் ஒருமுறை படிங்க . விவாதத்தில் யாருமே அந்த பெண்கள் போகோ ஹராம் அடிமைகளாக மாற்றபட்டதை ஆதரிக்காத போது எதுக்கு MGR style மூலம் கத்தியை வீசிட்டு ,வடிவேலு மாதிரி மல்லாக்க விழறிங்க?

    • என்ன ஜோசப் நபியை சார்லி கார்ட்டூன் வரைந்ததை எல்லாம் ரசித்திர்கள் . ஆனா அதே சார்லி கத்தோலிக்க வலது சாரிகளை [traditional French people] கார்ட்டூன் மூலம் கிண்டல் அடிக்கும் போது[ref feedback 43] மட்டும் back fire ஆகிறிங்க ! ஆமாங்க போகோ ஹராம் கார்ட்டூன் பற்றிய உங்கள் கேள்வியின் அடிப்படையில் தான் பேசுறேன் !

    • யோசேப்பு வெறியென்று வந்தாயிற்று. பிறகு கண்ணை திறந்து படியுங்கள். தாங்கள் மேற்கோள் காட்டுவதை சொல்லியது தமிழ் அவர்கள். நான் இல்லை. தங்களின் மேலான ஒத்துழைப்பிற்கு நன்றி.

      • வெறி அப்பிடினா என்ன உங்களுக்கு முதலாளித்துவத்த ஒழிக்கனும் சாதிய ஒழிக்கனும் மதத்த ஒழிக்கனுமுனு அப்பிடினு வெறி இல்லையா அது மாறிதான் என் வெறியும் இசுலாம் அப்பிடின்ற பாஸிஸத்த ஒழிக்கனும் அப்பிடின்றது என் வெறி நீங்க முன்னத ஒழிக்கனும் அப்பிடினு நினைக்குறீக ஒழியும் கம்மூனிஸ ஆச்சி வருமுனு நம்புறீக அத மாறித்தான் இசுலாம் என்ற பாஸிஸ வெறி மதம் ஒழிக்கப்பட வேண்டியது அதை ஒழிப்பது முடியும் என்று நம்புகிறேன் இதுல என்னய்யா தப்பு உங்களுக்கு புரியிரமாறி சொல்ல எனக்கு தெரியாது ஆனாலும் சொல்லுறேன் அடிக்கடி எல்லா மதமும் தான் கொலை பன்னினது (இந்து கிறிஸ்தவம் பெளத்தம்) ஆனா இசுலாம் மட்டும் கொலைகார மதமுனு சொல்லுறாக அது தப்பு எல்லா மதமும் ஒழிக்கப்படவேண்டியது என்று பொத்தாம் பொதுவா சொல்லுறீக ஒரு விசய்த்த மட்டும் மறந்துட்டீகளா இல்ல வேணுமுனு சொல்லுறீகளா எனக்கு தெரியாது நம்ம இந்தியா சட்டத்துல உணர்ச்சி வசத்தாலும் கோவத்தாலும் நடந்த கொலைகளுக்கு தண்டனை வேற திட்டமிட்டு ரசித்து செய்கிற கொலைகளிக்கு தண்டனை வேற இரண்டையும் ஒன்று என்று கூற முடியாது அப்பிடித்தான் இசுலாம் கொலைகளை செய்கிறது அட் சின்ன புள்ள கையில துப்பாக்கிய குடுத்து கொல்ல சொல்லுறான் கத்திய குடுக்குறான் கேட்டா நபி வழி அப்பிடின்றான் எல்லா கொலையும் ஒன்னுதான் அப்பிடினு சொன்னா சொல்லுறவன் நீதி தெரியாத முட்டாள் அவன் கம்மூனிஸ்டு என்று சொல்லிக்கொள்(ல்)வவாக கூட இருக்கலாம் உங்கலை மாறி அனால் அப்பிடிப்பட்டவன் அடுத்தவனை வெறி பிடித்தவன் என்று சொல்ல எந்த வித தார்மீக உரிமையும் இல்லை…

          • நிரம்ப அபத்தமாக இருக்கு ஜோசப்பின் கருத்துக்கள் …, அதற்கு கொடுக்கப்ப்டும் Rebecca mary லைக் மங்குனி தனமாக இருக்கு

            • நான் சொன்னது அபத்தமாவே இருக்கட்டும் நான் உங்க கிட்ட அறிவாளினு சர்டிவிகேட் கேக்கலையே ,இசுலாமிய ஆளும் நாடுகளில் உள்ள சிறுபான்மை மக்கள் நித்தம் நித்தம் கொடுமைகளை அனுபவிச்சுகிட்டுதான் இருக்காங்க அதப்பத்தி எதுவும் பேசாதிக இங்க கூட பாகிஸ்தான்ல நடந்த கொலைய சாம்பிளுக்கு எழுதிட்டு அதுலயும் இசுலாத்தயும் இசுலாமிய மதவெறியையும் கண்டிக்காம விலைவாசி உயர்வு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புனு இதுல இது தேவயானு கேட்டுட்டு பல்லுக்குத்த போயிட்டாக வினவு ஆளுக, ஆனா இசுலாமிய நபிய பத்தி கார்ட்டூன் போட்டு அங்கு உள்ள சிறுபான்மை இசுலாமியர் மீது அமிலக்குண்டு போட்டுடாகனு உருமி அடிக்கிது வினவு அவக தாளத்துக்கு ஆட தமிழ் தென்றல் போன்ற கருத்து கந்தசாமிகள் .நீங்க கருத்து கந்தசாமிகளாக்வே இருங்க எனக்கு என்ன பயமுனா கபாலத்துல சேதுவையும் ,கண்ணுல காசியைய்ம் காட்டி நடிக்கிற தீவிரவாதிகள் கிறுக்கன் அப்பிடினு நினைச்சு விடுதலை செய்யுறீகளே ,என்ன எப்பிடினு பிரியலயா கொலை பன்ன ஐ எஸ் தீவிரவாதிய விடுவிக்கிறீக ரெம்ப நோன்டுனா அதான் அவிங்கல முத வரில கண்டிச்சிறுக்கோமுல்லனு பதில் வ்ரும் அய்யோ அய்யோ , …நன்றி சிஸ்டர் ரெபேக்கா மேரி என் கருத்துக்கும் லைக் போட்டதுக்காக அண்ணே தமிழ் நான் கருத்து கந்தசாமினு சொன்னதுக்கு பதிலா என்னை வெருத்து நொந்தசாமினு வேனா சொல்லிக்கிங்க

              • உங்க சமத்துவம் இசுலாமும் அதன் மத வெறியர்களும் எது செஞ்சாலும் அதுக்கு சப்போர்ட் பண்னனுமுனு இருந்தா அத தூக்கி குப்பைல போடு அது காரல் மார்க்ஸ் தன் கைப்பட எழுதி சொன்னதாவே இருந்தாலும், எனக்கு தெரிஞ்சு எல்லா கொள்கைகளும் அப்டேட் ஆகிட்டே இருக்கு அது மருத்துவம் சார்ந்ததாகவோ பொரியியல் சார்ந்ததாகவோ விஞ்ஞானம் சார்ந்ததாகவோ இருக்கலாம் ஆனா இப்ப இருக்குற டெரன்டுக்கு தக்க மாறிக்கிட்டே இருக்கு ,ஆனா இந்த அப்டேசன் வேணாமுனு அடம் பிடிக்கிற ஆளுக யாருனா மதத்துல முஸிலீம் அரசியல் அப்பிடினா கம்மூனிஸ்டுகள் இவனுக 2 பேரும் கி பி 700 லயும் கிபி 1800 லயும் சொன்ன கொள்கை மட்டும்தான் சரினு சொல்லிட்டு அலையுதானுக அதுவும் இல்லாம 2 பேரும் ஒருத்தனை ஒருத்தன் சப்போட் பண்னிட்டு அலையுதானுக …

              • யாரை பார்த்து __ “இவனுக 2 பேரும் ” என்று மரியாதை குறைவாக பேசுற லூசு ___ ! ஆமாம் என்னுடைய திரியியில் வந்து என்ன மயிருக்கு இப்படி கூவுர ? நானும் தென்றலும் சார்லியை பற்றி விவாதிக்கும் போது போச்சையை மூடிக்கொண்டு நின்னுகிட்டு இப்ப எதுக்கு வந்து ” உருமி அடிக்கிது வினவு அவக தாளத்துக்கு ஆட தமிழ் தென்றல் போன்ற கருத்து கந்தசாமிகள்” என்று பெனாத்தல் செய்யுர ? உனக்கு வக்கும் துப்பும் இருந்தா இந்தியாவில் உள்ள மக்களை விட்டுவிட்டு நேரா is தீவிரவாதிகள் இருக்கும் சிரியாவுக்கும் ,ஈராக்குக்கும் நீயி போயி சிலுவை போரை தொடங்கிக்கோ மதவெறி ராசா . எனக்கு ஒன்னும் அதை பற்றி கவலை இல்லை . உன்னுடைய சிலுவை போருக்கும் சிரியாவுக்கு எதிரா is தீவிர வாதிகளை வளர்த்து விட்ட அமெரிக்காவும் ஆதரவு தரும் . சதாம் அனுகுண்டு வைத்து இருந்தான் என்று கூறி ஒட்டு மொத்த ஈராக் மக்களையும் அழித்த பேய் தானே அமெரிக்கா ? நல்லா வருவிங்கடா இப்ப அமெரிக்காவுடன் கூட்டணி வைக்கும் நாதாரிங்க எல்லாரும் !

                //ஆனா இந்த அப்டேசன் வேணாமுனு அடம் பிடிக்கிற ஆளுக யாருனா மதத்துல முஸிலீம் அரசியல் அப்பிடினா கம்மூனிஸ்டுகள் இவனுக 2 பேரும் கி பி 700 லயும் கிபி 1800 லயும் சொன்ன கொள்கை மட்டும்தான் சரினு சொல்லிட்டு அலையுதானுக அதுவும் இல்லாம 2 பேரும் ஒருத்தனை ஒருத்தன் சப்போட் பண்னிட்டு அலையுதானுக …//

                • யெப்பபப்பா யெவ்வளவு வெறி நேத்து போட்ட சரக்கு ரெம்ப வாசம் இன்னும் போகல போல இருக்கே இப்பிடி நாறுது//விவாதிக்கும் போது போச்சையை மூடிக்கொண்டு நின்னுகிட்டு இப்ப எதுக்கு வந்து ” உருமி அடிக்கிது வினவு அவக தாளத்துக்கு ஆட தமிழ் தென்றல் போன்ற கருத்து கந்தசாமிகள்” என்று பெனாத்தல் செய்யுர ? உனக்கு வக்கும் துப்பும் இருந்தா இந்தியாவில் உள்ள மக்களை விட்டுவிட்டு நேரா இச் தீவிரவாதிகள் இருக்கும் சிரியாவுக்கும்//அய்யோ சமத்துவ வாதிகளின் லட்சனமான பேச்சு சூப்பரா இருக்கே வினவுக்கு ஜோசப் ,ராமன்,மேரினு பேரு வச்சவகளா இருந்த அவகள திட்டுறதுக்கு புல் ரைட்ஸ் குடுக்கும் போல இருக்கே அய்யா நான் உங்களயோ தென்றலையோ தனிச்சு திட்டல கமூனிஸ்டுகள் இசுலாமிய அடிப்படிவாதிகள் 2 பேரையும் பொதுவா சொன்னே அதுக்கு இவ்வலவு காண்டு ஆயிட்டீகளே எல்லாரும் சமாதானமா வாழனும் அப்பிடின்றதுதான் என் ஆசை போர் செய்யுரது சிரியாவுக்கு போறது எல்லாம் எங்க வேலை இல்லை அதுக்குனு ஆள் எடுக்காகலாம் நீங்க டிரை பன்னலாமே…

                  • முதலில் மக்கள் எல்ல தேசத்துலயும் அச்சமின்றி பயமின்றி திகிலின்றி வாழ வழி சொல்லுங்க கம்மூனிஸ்டு அண்ணனுகளா அப்புறமா பொருளாதர சமத்துவத்த ஏற்படுத்தலாம் நான் கம்மூனிஸம் வேணாமுனு சொல்ல மாட்டேன் கம்மூனிஸ்டுகளின் அளவுக்கதிகமான இசுலாமிய தீவிரவாதத்துக்கு சப்போர்ட் பண்ண வேணாமுனுதான் சொல்லுறேன் அமெரிக்காவ எதுக்குறோமுனு அப்பாவிகளை கொன்றதை ஆதரிக்காதீர்கள் என்றுதான் சொல்லுறேன் நாங்க ஆதரிக்கல அனாலும் அதுல உள்ள அரசியல பாக்கனும் ஏகாதிபத்தியத்த நோக்கனுமுனு சொல்லிக்கிட்டி தீவிரவாதத்துக்கு முதுகு சொறியாதிக…

                  • Who stop you to fight against IS ? Go ahead and destroy them . Instead of this you are making noise in the Indian society.

                    //வெறி அப்பிடினா என்ன உங்களுக்கு முதலாளித்துவத்த ஒழிக்கனும் சாதிய ஒழிக்கனும் மதத்த ஒழிக்கனுமுனு அப்பிடினு வெறி இல்லையா அது மாறிதான் என் வெறியும் இசுலாம் அப்பிடின்ற பாஸிஸத்த ஒழிக்கனும் அப்பிடின்றது என் வெறி நீங்க முன்னத ஒழிக்கனும் அப்பிடினு நினைக்குறீக ஒழியும் கம்மூனிஸ ஆச்சி வருமுனு நம்புறீக அத மாறித்தான் இசுலாம் என்ற பாஸிஸ வெறி மதம் ஒழிக்கப்பட வேண்டியது அதை ஒழிப்பது முடியும் என்று நம்புகிறேன் //

                    Who gave you rights to use abusive words like “இவனுக” against communist people? You foolish guy.
                    //கமூனிஸ்டுகள் இசுலாமிய அடிப்படிவாதிகள் 2 பேரையும் பொதுவா சொன்னே//

                    If you are really faithful to your own words then you would not type your feedback 45.3.1.

                    //எல்லாரும் சமாதானமா வாழனும் அப்பிடின்றதுதான் என் ஆசை போர் செய்யுரது சிரியாவுக்கு போறது எல்லாம் எங்க வேலை இல்லை அதுக்குனு ஆள் எடுக்காகலாம் நீங்க டிரை பன்னலாமே…//

              • தாலிபானையும் ,அல்கொய்தாவையும் வளர்த்து விட்டு ரஷ்யாவுக்கு எதிரா போராட வைப்பணுங்க இந்த அமெரிக்க நாதாரிங்க ! சிரியாவுக்கு எதிரா is திவிரவாதிகளை வளர்த்து விட்டு நிப்பானுங்க இதே நாதாரி அமெரிக்க பேய்ங்க ! அதை பற்றி கட்டுரையில் எழுதினா உனக்கு எங்க வலிக்குது ? இந்தியாவில் பிஜேபி மத வெறி ஹிந்துத்துவாவை பரப்பும் போது அதன் தாயி rss ஐ விட்டுட்டு எழுத முடியுமா ? அது மாதிரி தான் திவிரவாதிகளை வளத்து விட்ட அமெரிக்காவையும் குற்றம் சாட்டுவது .

                • தாலிபானையும் அல்கொய்தாவையும் வளர்து விட்டுச்சு அமெரிக்க ஆனா பெத்துப்போட்டது யாருயா அல்லாவும் அவர் அடிமையான முகமதுவும் தான் அமெரிக்க தத்தெடுத்து வளக்காட்டி அதுவாவே வளராது அப்பிடினு காரல் மார்க்ஸ் எந்த அத்தியாயத்துல சொல்லுதாரு தாஸ் கேபிடல் அப்பிடின்ற புத்தகத்துல சொன்னிங்கனா எனக்கும் கொஞ்சம் விளங்கும் ,எனக்கு வலிக்குது நான் எப்பய்யா சொன்னேன் 45.3.1.1.1.1.1நீங்கதான் வலி தாங்காம கத்துற மாறி தெரியுது

  44. திரு தென்றல்,

    இவ்வளவுக்கு பிறகும் சார்லி உங்கள் சமத்துவபடி நடக்கவில்லை என்பது உங்கள் குற்றச்சாட்டு என்றால் அது உங்களின், வினவின் சமத்துவ பார்வை என்பதை மட்டும் புரிந்துகொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். இஸ்லாமிய மதம் என்று, கிராமத்து கடவுள் என்று சிறப்பு சலுகைகள் தரவேண்டும் என்பது உங்களை பொறுத்தவரை சரியாக இருக்கலாம். அது அனைவரும் ஏற்க வேண்டியது அல்ல என்பதையும் நினைவில் கொள்ளவும். நீங்கள் ஏன் சிறப்பு சலுகைகள் வேண்டும் என ஆயிரம் அர்குமென்ட் தந்தால், ஏன் அது தேவையில்லை, அது ஏன் எதிர்மறை விளைவை தரும் என்பதற்கும் ஆயிரம் அர்குமென்ட் உள்ளது. உங்கள் சமத்துவ பார்வையை ஏற்கதாவன் எல்லாம் இன வெறி, நிற வெறி ஆதரவாளன் அல்ல. அதே போல வினவும், கம்முனிச்ட்களும் தவறு செய்யலாம். அனைவரும் மனிதர் தாம்.

  45. தென்றல்,

    உங்கள் பதிவுகளுக்கு மேலே இதற்க்கு மேல் பதில் தர வினவின் தளம் இடம் தரவில்லை. எனவே பதில் இங்கு.

    //பாசிச ஜெயலலிதாவை அப்படி வரையயிலாது. இது இந்தியக் கண்ணோட்டம் அல்ல. சர்வேத கண்ணோட்டம் தான். Nudity Sexism அவய்ங்கதானே விளக்கம் கொடுத்தாய்ங்க. இப்ப அண்டர்ஸ்டேண்டிங் சார்லி என்று அழுதுவடிந்தால் என்ன அர்த்தம்?//

    Nudity, Sexism என கதறியது நீங்கள் தென்றல்! அவர்கள் எல்லாரையும் அம்மணமாக கேலி செய்கின்றனர் என்று படங்கள் தந்ததற்க்கு, நீங்கள் ஜெயலலிதாவை அப்படி வரையால் ஆகாது என்பது உங்கள் கருத்து. உங்களை பொறுத்தவரை ஆதிக்க சாதி வெறியை காட்ட மேல்சாதிகாரன் எப்படி வேண்டுமானாலும் வரையப்படலாம். ஆனால் அவர்கள் எப்படி கீழ்சாதிமக்களை நடத்துகின்றனர் என்று உண்மையை வரையும் உரிமை கம்யூனிஸ்ட் தளம், அவர்கள் ஓவியர் என்பவருக்கு மட்டுமே உண்டு. இதையே ஆனந்த விகடன் இல்லை ஒரு பெருவாரி பத்திரிக்கை செய்தால் அது இனவெறியை தூண்ட செய்யப்பட்டது. ஏன் என்றால் உங்களை பொறுத்தவரை மட்ட்றவர் அனைவரும் பொறுக்கி திண்ணும் பார்பன அடிமைகள், முதலாளித்துவ அடிமைகள். இந்த பார்வை பெரியார், அரேபியாவில் போராடும் பழங்குடி இன பெண், மார்டின் லூதர் கிங், அமெரிக்காவில் சம உரிமைகள் கேட்டு போராடும் LGBT மக்கள், இவர்கள் அனைவருக்கும் ஆதரவாக பேசும் சமூக ஆர்வலர், பத்திரிக்கை ஆகியவட்ட்ருக்கு பொருத்தப்படும் பொது உங்கள் முட்டாள்தனம் வெளிபடுகிறது.

    ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். போராட்டத்தின் அடிப்படை சித்தாந்தம் கம்முநிசமாக இருந்தால் தான் அது சரியான போராட்டம் என்று இல்லை. உலகில் பல உரிமை போரட்டங்கள் எந்த சமூக, பொருளாதார தத்துவம் அடிப்படை இல்லாமல், அனைவரும் மனிதர், அனைவருக்கும் சம உரிமை என்னும் பார்வையை முன் வைத்து நடந்தவை. மதத்தை கருவியாக பயன்படுத்தி கூட பல போராட்டங்கள் நடந்தது உள்ளன. அவர்களிடம் சென்று நீங்கள் கம்யூனிஸ்ட் என்பது சரியா என்று கேட்டு பாருங்கள். சம உரிமை, சமத்துவம் கேட்டு போராடும் அனைவரும் தன்னை கம்யூனிஸ்ட் என்று கூறுவதும் இல்லை, கூறவேண்டிய அவசியமும் இல்லை. அநியாயத்தை யார் வேண்டுமானாலும் தட்டி கேட்கலாம். போராட்டம் சிகப்பு கொடிக்கும், பாட்டாளிகளுக்கும் மட்டுமே சொந்தம் இல்லை. IT வேலை பார்ப்பவன் விவசாயிக்கு ஆதரவாக போராடலாம். பாக்டரி தொழிலாளி LGBT மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கலாம். அடிப்படை சிந்தாந்தம் கம்முநிசமாக இருக்க வேண்டும் என்று எந்த ஒரு புண்ணாக்கு அவசியமும் இல்லை. மனிதம் இருந்தால் போதும். கம்முநிசம், வர்க்க போராட்டம் எல்லாம் மனிதத்தில் இருந்து வந்தவை. மனித இனம் என்பது ஒன்றே என கூறும் மனிதம் இல்லாமல் கம்முநிசம் இல்லை.

    • சந்துரு மேற்கொண்ட தங்கள் பதிலைப் படித்தேன்.

      அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களில் சில நியாயங்கள் உண்டு. அதே சமயம் தங்கள் பார்வையை ஏற்கவில்லை. மார்க்சிய ஆசான்கள் ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப்போராட்டங்களின் வரலாறு என்று அறைந்து கூறி நிரூபித்திக்கிறார்கள். இதன் சாரம் என்ன? தாங்கள் சொல்வதைப் போல போராட்டம் எல்லாம் ஒருவர் கம்யுனிஸ்டாக இருந்து ஆரம்பிக்கப்படவில்லை. ஆக முதலில் தாங்கள் புதிதாக எதையும் கூறிவிடவில்லை. கம்யுனிசத்தின் மீது உங்களுக்கு இருக்கிற முன்முடிவு என்றாகிறது. நிற்க.

      இரண்டாவது பார்வை, ஒரு பிரச்சனைக்கு தீர்வு என்கிற பொழுது இங்கு பலவிதமான கண்ணோட்டங்கள், அதை ஒட்டிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் கம்யுனிசத்தால் மட்டும் தான் பிரச்சனைகளை சுட்டுவதோடு பிரச்சனைகளின் அடிவேரையும் அகற்ற முடியும். பெண்ணியம், சாதியம், சுயமுன்னேற்றம், பாலியல் உரிமைகள் இவற்றிற்கான போராட்டங்கள் எல்லாம் தாங்கள் சொல்கிற அடையாள அரசியலுக்குள் வருபவை. இதில் எதிர் நோக்குகிற உடனடி விளைவுகளை சார்ந்து இயங்குபவர்கள் Pragmatist என்பார்கள். அதாவது பயனீட்டுவாதிகள். சான்றாக அம்பேத்கரின் தீர்வு இப்படித்தான் இருந்தது.

      அடிப்படை தீர்வாக பாட்டாளிவர்க்கப்போராட்டம் என்று சொல்கிற பொழுது இங்கே அரசியல் பொருளாதாரம், தத்துவம் (இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள் முதல்வாதம்) மற்றும் விஞ்ஞான சோசலிசம் (கம்யுனிசம்) ஆகிய பாத்திரங்கள் உண்டு. இது கம்யுனிஸ்டுகளின் கண்ணோட்டம் ஆகும். இங்கு நிறுத்துகிறேன். மேற்கொண்டு நேரம் கிடைக்கும் போது பேசுவோம்.

      • தென்றல் அவர்களுக்கு,

        அண்ணல் மார்க்ஸ் அவர்களின் சமூகத்தில் இரண்டு வர்க்கங்கள் மட்டுமே இருந்தன என எளிமைப்படுத்தலாம். அங்கே எல்லா சேரிகளிலும் வெள்ளைநிற மக்களே இருந்தார்கள். பெரிய சேரியிலிருந்து சின்ன சேரிக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை வெட்டிக்கொல்வது, குடிசைகளை கொழுத்துவது, பெண்களை வன்புணர்வது, கொல்வது போன்ற பதில் தாக்குதல்கள் இல்லாமல் இருந்திருக்கிறது. அல்லது குறைவாக இருந்திருக்கிறது. ஆகையால் அங்கே இருந்த பாட்டாளி வர்க்கத்திற்கு தனது போராட்டத்தின் போது இழப்பதற்கு அடிமைத்தளையைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது பெரியளவுக்கு சரியாக இருந்திருக்கிறது.

        அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சமூகத்தின் நிலை அப்படியில்லை. இங்கே பல வண்ணநிழல்களைக் கொண்ட மக்களைக் கொண்ட பெரிதும் சிறிதுமான பல அளவிலான சேரிகள். தலித் மக்கள் பொதுவுடைமைப் போராட்டத்தில் நின்றார்கள் என்றால் அவர்களில் எல்லோரும் அல்லது பெரும்பாலோர் அழித்தொழிக்கப்பட்டிருப்பர். பெரிய சேரிகளிலிருந்து சிறிய சேரிகளுக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை வெட்டிக்கொல்வது, குடிசைகளை கொழுத்துவது, பெண்களை வன்புணர்வது, கொல்வது போன்ற பாதகங்கள் இங்கே அன்றாட நிகழ்ச்சி. இவர்களுக்கு இழப்பதற்கு உலகின் உயரிய சொத்துக்களான உறவுகள் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் pragmatic அனுகுமுறையைத்தவிர வேறு போக்கு என்ன. அவர்களுக்கென்று பேசுவோர் போதிய அளவில் யாரும் இல்லாத நிலையில், பொதுநல சக்திகள் போதிய அளவு அணிதிரண்டு வரும் வரை, அப்படி வந்து அவர்களுக்கு தோள் கொடுக்கும் வரை, உயிரைக் காப்பாற்றி வைத்திருப்பதைத்தவிர அவர்களால் என்ன செய்ய முடியும்.

      • தென்றல்,

        //மார்க்சிய ஆசான்கள் ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப்போராட்டங்களின் வரலாறு என்று அறைந்து கூறி நிரூபித்திக்கிறார்கள்//

        இது போராட்டங்கள் வரை பெரும்பாலும் சரி என்றாலும் ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கபோராட்டம் என்பது தவறு தென்றல். பெருவாரி போராட்டங்கள் வர்க்க போராட்டம். ஆனால் போராட்டங்கள் வரலாற்றில் ஒரு பகுதி மட்டுமே. அவை மட்டுமே வரலாறு அல்ல.

        //தாங்கள் சொல்வதைப் போல போராட்டம் எல்லாம் ஒருவர் கம்யுனிஸ்டாக இருந்து ஆரம்பிக்கப்படவில்லை. ஆக முதலில் தாங்கள் புதிதாக எதையும் கூறிவிடவில்லை//

        இதே தான் நான் கம்யூனிஸ்ட் முன் வைக்கும் வாதமும். ரோம யூத புரட்சி, அடிமை புரட்சியில் இருந்து அக்டோபர் புரட்சிக்கு கொஞ்ச காலம் முன்பு வரை நடந்த young turk புரட்சி வரை எல்லா புரட்சிகளும் உரிமை மறுக்க பட்ட மக்கள் தங்கள் உரிமைக்காக போரடியவை. வர்க்க போராட்டம் என்பது என்னமோ மார்க்ஸ், கம்முனிச தத்துவம் கண்டுபிடித்தது என்று கூறுவது (ஒரு சிலர் அப்படி கூறி நான் கேட்டுள்ளேன். நீங்கள் அவ்வாறா என்று தெரியவில்லை) தவறு என்பது தான் என் கூற்று. இன்னும் எளிவாக சொல்ல வேண்டும் என்றால், I see existence of Communist and Marxist theories as an attempt at an universal solution to the class struggle they saw in the society and over the years, but the existence of class struggle is not a product of their theories.

        கம்முநிசதின் மீது எனக்கு உள்ள பார்வை இது தான். Its part of the solution but its not THE solution. It paints an ideal end goal but so does many other utopian theories. கம்முநிசம் ஒரு சில இடங்களில் கொஞ்சம் தடுமாறுகிறது, கம்முனிச சமுதாயத்தை நோக்கி நடக்க எடுக்கும் பாதையில் ரொம்பவே தடுமாறுகிறது என்பது என் கருத்து. அது கம்முநிசத்தை பற்றி நான் இன்னும் முழுவதும் புரிந்து கொள்ளாமல் இருப்பதால் இருக்கலாம். அவைகளை இங்கு கூறுகிறேன். சில கடைநிலை கம்முனிச சமூகத்தை பற்றியவை, சில மாற்றம் நடந்து கொண்டு இருக்கும் சமூகத்தை பற்றியவை. நேரம் கிடைத்தால் கொஞ்சம் உதவவும்:

        1. கம்முநிசதின் நோக்கம் வர்க்கம் இல்லாத சமூகத்தை உருவாக்குவது. ஆனால் வர்க்கம் இல்லாத சமூகம் உருவாக ஒரே வழி, யாருக்கம் எந்த பொருள் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமாலும் கிடைக்கும், எல்லா பொருட்களும் அனைவருக்கும் சம காலத்தில் அல்லது குறுகிய கால வித்யாசத்தில் கிடைக்க வேண்டும். உலகம் முழுதும் இதை செய்வதென்பது ரொம்ப கடினம். அதுவும் புதிய தொழில்நுட்பங்கள் வரும் போது இன்னும் கடினம் என்றாகிறது. மக்கள் இருக்கும் இடத்தை பொருத்து உடனே கிடைப்பவர், சிறிது காலம் கழித்து கிடைப்பவர் என்று இரு பிரிவுகள் உருவாகிறது.

        2. ஒரு சில தொழிற்சாலைகள், பொருட்கள் சில காலத்துக்கு பிறகு தேவை இல்லை அல்லது தேவை மிகவும் குறைவு என்று ஆகி விடும். உதாரணத்துக்கு, சூரிய ஒளி மின்சார தகடுகள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் ஆணி, screwdriver செய்யும் தொழிற்சாலை என்று எடுத்து கொள்வோம். தேசத்தில் (உலகில் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்) எல்லாருக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் தங்கு தடையின்றி வரும் என்ற நிலைமை வரும் போது அதற்க்கு மேல் பழுது அடையும் தகடுகளை மாற்றும் அளவுக்கு உற்பத்தி இருந்தால் போதும். ஒரு வேலை அந்த வருடம் எதிர்பார்த்த அளவு பழுது ஏற்படவில்லை என்றால் அடுத்த வருடம் உற்பத்தி இன்னும் குறைக்கலாம். இது நம் கடைநிலை சமூகத்தில் நடந்தால் பிரச்சனை இல்லை. லேபர் நோட்டுகள் போன்ற பணத்தை நாம் உபயோகிக்கும் போது இது நடந்தால் என்ன செய்வது?

        3. 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். நமக்கு வேண்டிய சிறு பொருள்களை வீட்டில் நாமே தயாரித்து கொள்ளலாம். இது போல ஒரு தொழில்நுட்பம் நமக்கு வேண்டிய அலைபேசியோ, கணிணியோ நாமே பிரிண்ட் செய்து கொள்ளலாம். தேவையான கனிமங்கள் மட்டும் இருந்தால் போதும் என்று வந்தால் அப்போது கணினி, அலைபேசி தயாரிக்கும் தொழில்களுக்கு தேவை இல்லை என்று ஆகிவிடுமே? அந்த தொழிலார்களை என்ன செய்வது?

        4. புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது அதை கையாள skilled labor தேவை. அவர்கள் வேலை செய்யும் நேரம் குறைவு என்றாலும் வேலையின் மதிப்பு, அவசியம் அதிகம். உதாரணத்துக்கு மேலே குறிப்பிட்ட இயந்திரத்தை எடுத்துகொள்வோம். இவர்களை, இவர்களின் ஒரு மணிநேர உழைப்பு எவ்வளவு என்று எப்படி கணக்கிடுவது?

        5. இதே போல பமருத்துவர், விஞ்ஞானிகள், எழுத்தாளர், விளையாட்டு வீரர், ஓவியர், etc. போன்ற மக்களின் உழைப்பை எப்படி கணக்கிடுவது? ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் சளி காய்ச்சல் கொண்ட நோயாளிகளை மாதம் முழுக்க பார்க்கும் மருத்துவருக்கும், பத்து மணிநேரம் எடுக்கும் இதய மாற்று அறுவை மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று செய்யும் மருத்துவருக்கும் எப்படி ஒரு மணி நேரம் வேலை செய்தால் அது இவ்வளவுக்கு சமம் என்று பொதுவான விதி வைக்க முடியும்?

        6. யாரேனும் ஒருவர் அல்லது ஒரு குழு எவருக்கு, எந்த தொழில் எவ்வளவு மூலபொருட்களை பெரும், என்ன பொருள், எவ்வளவு தயாரிக்கும் என்று நிர்ணயம் செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது. வழக்கமாக இது ஆளும் கட்சி. இப்போது ஆளும் வர்க்கம், மட்ட்றவர் என்னும் பிரிவு வந்துவிடுகிறது. இதை விட்டு கொடுக்காமல் இருக்க ஆளும் வர்க்கம் செய்யும் கோல்மால்களை எப்படி எதிர் கொள்வது.

        • சந்துரு,

          நீங்கள் தென்றல் அவர்களிடம் வைக்கும் கேள்விகளுக்கு நானும் எனது பதில்களை வைக்கிறேன்.

          1 //இருக்கும் இடத்தை பொருத்து உடனே கிடைப்பவர், சிறிது காலம் கழித்து கிடைப்பவர் என்று இரு பிரிவுகள்//

          இதில் பெரிதாக ஒன்றும் தவறில்லை. சுடும் முதல் தோசையை யார் சாப்பிடுவது. அடுத்தடுத்து யார் எடுத்துக்கொள்வது. இதெல்லாம் குடும்பத்தில் சுமூகமாக நடக்கவில்லையா. எல்லா தோசையும் சுட்டவுடன் தான் வீட்டில் எல்லோரும் சாப்பிட உட்காருகிறோமா. சில குடும்பத்தில் அப்படியும் செய்யலாம். அதுவும் நல்ல குடும்பம்தானே. யாரும் சாப்பிடாமல் போகக்கூடாது அவ்வளவு தானே. பெரியவர்கள் சிறிது நேரம் பசியைப் பொறுத்துக் கொள்வார்கள்.

          நமது விவசாயவிளைப்பொருட்களை வைத்தும் இதைப் புரிந்து கொள்ளலாம். நாம் ஆங்காங்கே விளையும் தாணியங்களையும் காய்கணிகளையும் உண்கிறோம். எல்லோரும் எல்லாவற்றையும் உண்பதற்கு வாய்ப்பே இல்லை. அதுவும் உடனேயே என்பது முடியாத காரியம். சில உணவுகள் கடல் கடந்து வருகின்றன போகின்றன. ஆனால் இதுவும் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வாய்ப்பே இல்லாமல் தான் இருந்தது. ஆனால் எல்லா உணவுகளும் எல்லோருக்கும் கிடைப்பது முடியாது ஏனென்றால் இயற்கை அதற்கு இடமளிக்கவில்லை. சிலர் அரிசி சாப்பிட்டால் சிலர் கோதுமை சிலர் சோளம் சிலர் கம்பு. அல்லது இவற்றின் கலவை. எல்லோருமே அரிசியே சாப்பிடவேண்டும் என்பது இயற்கையல்ல.

          மற்ற பொருள்களை எடுத்துக் கொண்டாலும் கூட, இது ஒரளவுக்கு சரிதான். அதே சமயம், முதலில் பொதுப் பயன்பாட்டுக்கும் அடுத்தடுத்து சிறிய அளவிலான குழுப்பயன் பாட்டிற்கும் கடைசியாக தனிப்பயன்பாட்டுக்கும் விநியோகிப்பதன் மூலம் இந்த பிரிவினையை சரிகட்டலாம். கிராமத்திற்கு ஒன்று, தெருவிற்கு ஒன்று, கூட்டுக் குடும்பத்திற்கு/அப்பார்ட்மெண்ட்டுக்கு ஒன்று, குடும்பத்திற்கு ஒன்று தனி நபருக்கு ஒன்று என்று வளர்ச்சியடையலாம். இன்றைய நிலையிலும் இதே டimitation இருக்கிறது. எகா. நமது கிராமங்களுக்கு பொது தொலைக்காட்சி முதலில் வந்தது. (சில வீடுகள் விதிவிலக்காக இருந்திருக்கின்றன.) பிறகு தான் எல்லோரும் அதை வாங்க முடிந்தது.

          2 //அடுத்த வருடம் உற்பத்தி இன்னும் குறைக்கலாம். *** லேபர் நோட்டுகள் போன்ற பணத்தை நாம் உபயோகிக்கும் போது இது நடந்தால் என்ன செய்வது?//

          இந்த பிரச்சனை இப்போது மிகவும் கொடூரமான வடிவத்தில் இருக்கிறது. ஒரு தொழில் மூடும் போது அதன் தொழிலாளர்கள் எந்த தயக்கமுமின்றி வேலையில்லாமல் விடப்படுகின்றனர். பிழைத்துக்கொள்வது அவர்கள் சாமார்த்தியம். பொதுவுடமை சமூகத்தில் கண்டிப்பாக இந்த மனிதாபிமானமற்ற நிலை இருக்காது. முதலில் தொழில்கள் பொது நலனை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், அவைகள் அத்தியாவசியமானதாகவே இருக்கும். தற்போதைய அத்தியாவசியமற்றவைகளில் இருப்பவர்கள் அத்தியாவசியமானதற்கு மாற்றப்படுவார்கள். அத்தியாவசியமற்றவைகளை Recycling செய்வதிலும் இவர்கள் வேலைக்கமர்த்தப்படலாம். கற்பனை செய்தால் இவற்றை புரிந்து கொள்வது கடினமில்லை. மக்கள் at large பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் அனுகும் போது எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு உண்டு.

          3//3D பிரிண்டிங் தொழில்நுட்பம்//

          3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் வேலை இழப்பவர்கள் இந்த மெசின்களை தயாரிப்பதிலும் ரிப்பேர் செய்வதிலும் தேவையான பொருள்களை தேவைப்படும் வீடுகளுக்கு கொண்டு செல்வதிலும் ஈடுபடுமுடியும் என்பதை ஏன் உங்களால் யூகிக்கமுடியவில்லை.

          4 // புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது அதை கையாள skilled labor தேவை//

          புதிய தொழில்நுட்பங்கள் வந்து விட்டதால் மட்டும் புதிய வேலையின் மதிப்பு கூடவேண்டிய அவசியமில்லை. பழைய தொழிலாளர்களையே பயிற்சி கொடுத்து புதிய தொழில்நுட்பத்திற்கு மாற்றுவது ஒன்றும் பெரிய விசயமே இல்லை. பொதுவுடமை சமூகத்தின் மக்கள் அதன் மீது அக்கறையுள்ள மக்கள் எதையும் எதிர் நோக்கும் திறன் படைத்தவர்களாகவே இருப்பார்கள்.

          5//மருத்துவர், விஞ்ஞானிகள், *** எப்படி ஒரு மணி நேரம் வேலை செய்தால் அது இவ்வளவுக்கு சமம் என்று பொதுவான விதி வைக்க முடியும்?//

          ஒரு குடும்பத்தில் எல்லோரும் வேறு வேறு வேலை செய்தாலும் கிட்டத்தட்ட சமமாகத்தானே பயனை அனுபவிக்கிறார்கள்?. வேலைகள் Production/Service, Maintenance/Recycling, Cleaning, Supervision/Management என்று நான்கு வகை வேலைகளாக இருக்கட்டும். எல்லோருமே இந்த நான்கு வித வேலைகளையும் செய்யட்டும். ஒட்டு மொத்தமாக எல்லோரும் கிட்டத்தட்ட சம அளவு நேரம் வேலை செய்யட்டும். அதாவது 40h/week. கிட்டத்தட்ட சமஅளவு உணவு உடை உறைவிடம் போன்ற தேவைகள் கிடைக்கப்பெறட்டும்.

          6 //ஆளும் வர்க்கம், மட்ட்றவர் என்னும் பிரிவு வந்துவிடுகிறது//

          தவறு. மக்கள் தான் ஆளும் வர்க்கம். அதாவது மக்களின் பங்கெடுப்போடுதான் முடிவுகள் எடுக்கப்படும். மக்களின் பிரதிநிதிகள் தான் அதிகாரத்தில் இருப்பர். கூட்டு முடிவுகளே அமல்படுத்தப்படும். இன்றைய கணிணி வசதிகளை விட எதிர்காலத்தில் அதிகமாக இருக்குமென்பதால் எல்லா முக்கியமான முடிவுகளையும் போதுமான அளவு விவாதித்து Referendum வைத்து எடுக்கமுடியும்.

        • வாசகர்களுக்கு,

          விவாதம் கம்யூனிசத்தைப் பற்றியதாக கிளைத்து விட்டது. மையக்கிளையை ஜோசப் மட்டும் பற்றிக்கொண்டுள்ளார். மற்றவர்கள் அதை விட்டுவிட்டு இடத்தை காலி செய்து விட்டார்கள். தென்றல் வந்ததும் பார்ப்போம்.

    • சந்துரு,

      //சம உரிமை, சமத்துவம் கேட்டு போராடும் அனைவரும் தன்னை கம்யூனிஸ்ட் என்று கூறுவதும் இல்லை//

      கம்யூனிஸ்ட் என்ற பெயர் தேவையில்லை என்றால் எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தவறில்லை.

      IT வேலை பார்ப்பவன் விவசாயிக்கு ஆதரவாக போராடலாம். பாக்டரி தொழிலாளி LGBT மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கலாம். இந்த அடிப்படை சிந்தாந்தத்திற்கு நாம் மனிதம் என்றே பெயர் கொள்ளலாம். தவறில்லை.

      மனித சமூகத்தின் பிரச்சனைகளின் தோற்றவாய் அளவுக்கு மீறிய தனியுடைமைதான். தனியுடைமைக்கு ஒரு மிதமான அளவு இல்லாததால் தான், மக்கள் பேராசையில் போட்டி போட்டுக்கொண்டு எல்லா பாதகங்களையும் செய்யத்துணிகிறார்கள். விளைவு various abuses and exploitations leading to various poverties and various pollutions, etc. இந்த போட்டியை அனுமதித்து விட்டு என்னதான் போராடினாலும் ஒன்றும் நடக்காது. பலப்பல போராட்டங்கள். Religions, Political parties, NGOs ( environmental, social, medical, sexual, etc), charities, CSR, etc. ஆற்றல் சிதறி வீணாகிவிடுகிறது. அடிப்படையைத் தொடாமல் சில நுணிக்கிளைகளை மட்டும் கிள்ளி விடும் நிலை தான் இப்போது இருக்கிறது.

      பொதுவுடமையை ஏற்றுக்கொள்ளும் போது மட்டுமே இந்த எல்லா வீண் போராட்டங்களும் தேவையில்லாமல் போகும். மக்கள் இதைப் புரிந்து கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒன்று திரண்டால் இது சாத்தியமாகும்.

      அதனால் தான் கம்யூனிசம் என்கிறோம். விளக்கமாக பேசலாம். தென்றல் அவர்கள் வரும் வரை நான் முயற்சிசெய்கிறேன்.

      • //மனித சமூகத்தின் பிரச்சனைகளின் தோற்றவாய் அளவுக்கு மீறிய தனியுடைமைதான்//

        இதில் எனக்கு கொஞ்சம் மறுப்பு உண்டு தென்றல். நான் பிரச்சனையை சுயநலம், தனியுடமை என்று நினைக்கவில்லை. எனக்கு,என் குடும்பத்துக்கு உணவு வேண்டும், நான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது போன்றவை தான் மக்கள் வாழ்கை முறையில் பெரிய மாறுதல்களை கொண்டு வந்ததன் அடிப்படை காரணம். போட்டி நல்லது தான். ஆசை, போட்டி, சுயநலம் எல்லாம் தவறான உணர்சிகள் அல்ல. எல்லாம் அளவுடன் இருந்தால் நலமே. அளவுடன் இருக்கவும் வேண்டும். அது தான் நலம்.

        //மனித சமூகத்தின் பிரச்சனைகளின் தோற்றவாய் அளவுக்கு மீறிய தனியுடைமைதான்//

        தனியுடமை இருப்பதை ஏற்றுகொள்ளலாம். நான் சம்பாதித்ததில் சேமித்து தொழில் ஆரம்பித்தால் அது தவறு இல்லை. ஆனால் என்னுடன் வேலை செய்பவரின் பங்கை நான் தட்டி பறித்தால் அது தவறு. profit sharing முறையில் வேலை செய்வது தவரே இல்லை. Maximizing profit என்று வந்தால் தான் பிரச்சனை. நான் அடிப்படை பிரச்சனை தனியுடமை என்பதில் மாறுபடுகிறேன். அடிப்படை பிரச்சனை வேலை பார்பவரை மனிதன் என்று பார்க்காமல் மனித வளம் என்று பார்பது. மனிதனை பார்த்தால் அவனை abuse, exploit செய்யவோ தோணாது. இந்த abuse and exploit இல்லை என்றால் சமூகம் கம்முனிச சமூகமாக இருந்தாலும் சரி, முதலாளி சமூகமாக இருந்தாலும் சரி இப்போது இருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.

        நாம் செய்ய வேண்டியது அனைவரும் சம உரிமை, சம தளம் அமைத்து அவர்கள் exploit செய்யப்படா வண்ணம் பாதுகாக்க வேண்டியது மட்டுமே. லாப பங்கீடு தரும் , exploit செய்யாத தனியுடமை சமூகம், பொதுவுடைமை சமூகத்தை விட (என் பார்வையில்) சிறந்தது. இதை அடைவது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் கம்முனிச சமூகத்தை சென்று அடையும் வழியில் இருக்கும் பல தடங்கல்கள், கஷ்டங்கள், ஆபத்துகள் இதில் இல்லை.

        • நண்பர் சந்துரு,

          வேலை பளுவின் காரணமாக இந்த கட்டுரையின் விவாதத்தில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.

          கட்டுரையின் பேசு பொருளுக்கு பங்கமில்லாமல் எனது கருத்துக்களை “பெப்சியில் இருப்பது சூரியூர் இரத்தம் – நேரடி ரிப்போர்ட்” என்ற கட்டுரையில் பதிக்கிறேன்

          நன்றி.

      • சந்துரு,

        // எனக்கு கொஞ்சம் மறுப்பு உண்டு தென்றல்//

        பரவாயில்லையே. எனது பின்னூட்டங்களில் சிறிது தென்றலின் சாயல் தெரிகிறது போலிருக்கிறதே. Congrats Univerbuddy, Keep it up.

        //ஆசை, போட்டி, சுயநலம் எல்லாம் தவறான உணர்சிகள் அல்ல. எல்லாம் அளவுடன் இருந்தால் நலமே.//

        ‘அளவுக்கு மீறிய’ தனியுடைமை தான் பிரச்சனைகளின் தோற்றவாய் என்று தானே நானும் சொல்கிறேன்.

        // அடிப்படை பிரச்சனை தனியுடமை என்பதில் மாறுபடுகிறேன்.//

        அடிப்படை பிரச்சனை ‘அளவுக்கு மீறிய’ தனியுடமை என்று தானே நானும் சொல்கிறேன். அதாவது ‘அளவுக்கு மீறிய’ ஆசை, ‘அளவுக்கு மீறிய’ போட்டி, ‘அளவுக்கு மீறிய’ சுயநலம். இதை எப்படி கட்டுப்படுத்துவது. தனியுடைமைக்கு ஒரு அளவு இல்லாமல் இந்த ஒருவரையொருவர் மீறும் போட்டியை எப்படி கட்டுப்படுத்துவது. கட்டுக்கடங்கா நுகர்வு, அதனால் வரும் வீண்விரயம் ஆகியவை நமது பூமியை உயிர்வாழ தகுதியற்றதாகவும் மாற்றிவிடும். அப்போது இயற்கைக்கு மக்களின் வர்க்கமெல்லாம் தெரியாது.

        //நாம் செய்ய வேண்டியது அனைவரும் சம உரிமை, சம தளம் அமைத்து அவர்கள் exploit செய்யப்படா வண்ணம் பாதுகாக்க வேண்டியது மட்டுமே// என்கிறீர்கள். நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். ஆனால், நீங்கள் கூறிய படியே, முதலில் சம தளம் அமைக்கப்பட வேண்டுமல்லவா. சம உரிமை வாய்க்கப்பெற வேண்டுமல்லவா. இன்றைய நிலையில் பரந்த நிலங்களை அபரிமிதமான இயற்கை வளங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு சென்ட் நிலம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். முதலில் ஒரு சம பங்கீடு நடக்கவேண்டுமல்லவா. முன்னவர்கள் அவர்களின் தற்போதைய நிலையை அடைந்தது காத்துக்கொள்வது பெருக்குவது காலம்காலமான வன்முறையின் மூலமும் மற்ற தவறுகளின் முலம் தான் என்பதை சற்று ஆழ்ந்து யோசித்தால் புரிந்து கொள்ளலாம். இது சரிசெய்யப்படாமல் அனைவரின் நலனைப்பற்றி எப்படிப் பேச முடியும்.

        //லாப பங்கீடு தரும் , exploit செய்யாத தனியுடமை சமூகம், பொதுவுடைமை சமூகத்தை விட (என் பார்வையில்) சிறந்தது.// என்கிறீர்கள். //இதை அடைவது கொஞ்சம் கஷ்டம் தான்.// என்று சொல்கிறீர்கள். அதாவது பொதுவுடைமை சமூகத்தை அடைவதில் இருக்கும் கஷ்டத்தை விட கொஞ்சம் அதிக கஷ்டம் என்று சொல்கிறீர்கள் என்று புரிந்து கொள்கிறேன். பரவாயில்லையே. உங்களின் நேர்மை மெச்சத்தக்கதுதான்.
        இது நாள் வரை பலர் பொதுவுடைமை சமூகத்தை அடைவது சாத்தியமில்லை ஆகிர வேலையை பாருங்கள் என்று சொல்லித்தான் கேள்வி பட்டிருக்கிறேன்.

        //லாப பங்கீடு தரும் , exploit செய்யாத தனியுடமை சமூகம்// எப்போது உருவாக முடியும். தற்போதைய முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களின் மீதும் மற்ற வளங்களின் மீதும் மற்றவர்களுக்கு உரிமையிருக்கிறதல்லவா. அதை முதலில் பங்கிட்டுக்கொடுத்துவிட்டு பிறகு புதிதாக உருவாகும் முதலாளிகளுக்கு நீங்கள் கூறுவது பொருந்தும்.

        கம்முனிச சமூகத்தை சென்று அடையும் வழியில் இருப்பதாக நீங்கள் பல தடங்கல்கள், கஷ்டங்கள், ஆபத்துகளைப் பற்றி சுருக்கமாக சொல்லவும். நன்றி.

        • //அடிப்படை பிரச்சனை ‘அளவுக்கு மீறிய’ தனியுடமை என்று தானே நானும் சொல்கிறேன்//

          முழு உண்மை அய்யா. ஆனால் எது அளவு என்பதை எப்படி நிர்ணயிப்பது? கட்டுக்கடங்கா நுகர்வு என்று கூறுகிறீர்கள். நுகரப்படும் பொருட்களை ஒருவருக்கு இவ்வளவு தான் என்று அளவை கட்டுபடுத்தாமல் இதை கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி? அப்படியே கொண்டு வந்தாலும் அதிலும் சில பிரச்சனைகள் வருமே. உதாரணத்துக்கு ஒருவருக்கு மாதம் இரண்டு கிலோ சர்க்கரை என்று கொள்வோம். எனக்கு சர்க்கரை வேண்டாம் என்றால் அந்த செலவு செய்யாத பணத்தை நான் என்ன செய்வது? மாதம் இருநூறு ருபாய் என்றாலும் என் கையில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேருமே? இல்லை எல்லாருக்கும் எல்லா பொருளும் ஒருவருக்கு இவ்வளவு தான் என்று கொடுக்கப்படும் என்றால் நான் உபயோகிக்காத, ஆனால் மற்றவர் உபயோகிக்க கூடிய பொருட்கள் வீண் ஆகின்றன? இதை எப்படி சமாளிப்பது? இந்த பிரச்சனையின் ரொம்ப எளிமை வடிவம் இது. ஒவ்வருவரும் தனி மனிதர். எல்லோருக்கும் அளவு வைக்க முடியாது.

          //தனியுடைமைக்கு ஒரு அளவு இல்லாமல் இந்த ஒருவரையொருவர் மீறும் போட்டியை எப்படி கட்டுப்படுத்துவது//

          இன்றைய சமூகத்தில் அதற்க்கு அளவு இருக்கிறது. பணம். உங்களிடம் இருக்கும் பணம் தான் உங்கள் தனியுடைமையை கட்டுக்குள் வைக்கிறது. பணம் இல்லாமல் நீங்கள் கடன் வாங்கி வீடு வாங்கினாலும், அந்த கடனை அடைக்கும் வரை அந்த வீடு உங்களுக்கு சொந்தம் இல்லை. தனக்கு என்ன வேண்டும் என்பதை தன் கையில் கொண்டுள்ள பணத்தை கொண்டு தீர்மானிகின்றனர் மக்கள். கட்டுபடுத்த படவேண்டியது இந்த பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற விசயத்தை தானே தவிர நாம் எவ்வளவு பணம் வைத்திருக்க அல்லது சம்பாதிக்க முடியும் என்பதை அல்ல.

          //இது சரிசெய்யப்படாமல் அனைவரின் நலனைப்பற்றி எப்படிப் பேச முடியும்.//

          இது சரி செய்யப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. நாட்டில் உள்ள எல்லா பணத்தையும் எல்லாருக்கும் பிரித்து கொடுத்து விட்டால், பிரச்சனை வராது என்பது உங்கள் கருத்தா? எல்லாருக்கும் ஒரே ஆரம்பம் கொடுத்தாலும் நான் புதிதாக எதாவது செய்தால், (என் நேரத்தில் நான் புதிதாக ஒரு மென்பொருள் எழுதுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்) அதை விற்று பணம் செய்தால், இல்லை இரு வேலைகள் செய்தால் அது சட்டத்திற்கு புறம்பானதா? நான் மட்டுமே வேலை செய்கிறேன். என்னிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் என் உழைப்பில் வாங்கியவை. அரசாங்கம் அதை எடுத்துக்கொண்டு எனக்கு எதுவும் தராமல் விற்றால் அது உழைப்பு திருட்டு. விற்கப்படும் விலையில் ஒரு காபி ஒரு ருபாய் என்று எனக்கு வந்தாலும், ஒரு லட்சம் காபி விற்றால் நான் மற்றவரை விட ஒரு லட்சம் ருபாய் அதிகம் கொண்டுள்ளேன். இதையே ஒரு பத்து லட்சம் பேர் செய்தால் அந்த சம ஆரம்பம் கொடுத்ததும் இப்போதைய நிலைமைக்கு வந்துவிடுகிறது.

          //இது நாள் வரை பலர் பொதுவுடைமை சமூகத்தை அடைவது சாத்தியமில்லை ஆகிர வேலையை பாருங்கள் என்று சொல்லித்தான் கேள்வி பட்டிருக்கிறேன்//

          அடைவது சாத்தியம். ஆனால் அண்ணல் மார்க்ஸ் காலத்தில் இருந்து பல சிக்கல்கள், கேள்விகள் புதிதாக முளைத்து உள்ளன. வாழ்கையும், சமூகமும் பலவாறாக மாற்றம் அடைந்து விட்டது. நாம் கட்டுபாட்டில் வைத்து இருக்க வேண்டிய பொருட்களின் எண்ணிக்கை, தேவை என்பவை நிரம்ப பெருகிவிட்டன. இந்த புதிய கேள்விகள், சிக்கல்கள், தேவைகள் ஆகியவற்றுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு தெளிவு இல்லாமல், அதற்க்கு சரியான திட்டமிடல், தலைவர், தொழில்நுட்பம் இல்லாமல் பொதுவுடைமை சமுதாயத்தை அமைக்க முயன்றால் நிச்சயம் தோல்வியில் முடியும். இதில் சந்தேகமே வேண்டாம்.

          //அதை முதலில் பங்கிட்டுக்கொடுத்துவிட்டு பிறகு புதிதாக உருவாகும் முதலாளிகளுக்கு நீங்கள் கூறுவது பொருந்தும்.//

          பிரச்சனை மீண்டும் முதலுக்கு வந்துவிடுகிறது. சொத்து பிள்ளைகளுக்கு போகாது, இறப்புக்கு பிறகு அனைத்தையும் அரசாங்கம் எடுத்துகொள்ளும் என்றால் தவிர பல தலைமுறைகளின் பிறகு பணக்காரன், ஏழை என்ற பிரிவை உருவாகாமல் இருப்பது சாத்தியம் இல்லை. ஒரு தலைமுறையில் ஒருவர் பெரும் வெற்றி பெற்றாலும் (சக்தி மசாலா போன்றோ, முகநூல் போன்றோ ஒரு வெற்றி என கொள்வோம்)இந்த சமன் உடைந்து விடும். அந்த மனிதன் சம்பாதித்தது அனைத்தும் அவன் உழைப்பில். எல்லாருக்கும் ஒரே சமதளம், சம ஆரம்பம் தந்தாலும் அவனின் திறமையால் அவன் சம்பாதித்து. இதை உன் இறப்புக்கு பிறகு அரசாங்கம் எடுத்துகொள்ளும் என்று மக்களிடம் எப்படி கூறுவது? ஒரு பகுதியை நாம் எடுத்துகொள்ள கொஞ்சம் நியாயம் உண்டு. அப்படியே சட்டம் இருந்தாலும் ஒரு வேலை அவன் influence உள்ளவனாக இருந்தால், நம் தலைவர் கொஞ்சம் சரி இல்லை என்றால் சட்டத்தை அவனுக்கு சாதகமாக வளைத்து விடுவான்.

          பொதுவுடைமை சமூகம் எல்லா விசயத்திலும் சரியாக இயங்க வேண்டும். இயந்திரம் போல. ஒரு சக்கரம், ஒரு பிசகு, ஒரு ஆணி கழன்றாலும் மொத்த இயந்திரமும் உடைந்து விழும் அபாயம் மிக மிக மிக அதிகம். தலைவன் சரியாக இருக்க வேண்டும், மக்கள் எப்போதும் பொதுவுடமை என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும், மாற்று பார்வைகள், இன்னொன்று இதை விட சிறந்தது போன்ற பார்வைகள் மக்களிடம் பரவாமல் இருக்க வேண்டும், கட்டளைகள் சரியாக கொடுக்க பட வேண்டும், கொடுக்கப்படும் கட்டளைகள் சரியாக பின்பற்றப்பட வேண்டும், யாரும் எந்த குறுக்கு வழிகளும் எடுக்க கூடாது (இதை பற்றி ஒரு சுவையான கதை படித்தேன். உண்மையா என்று தெரியவில்லை. கீழே கூறுகிறேன்), எந்த ஒரு குழுவும் ஆட்சியாளர் மேலோ, வேறு எந்த குழுக்கள் மேலோ influence இருக்க கூடாது, எல்லா பொருட்களும் எவ்வளவு தயாரிக்க பட வேண்டும் என்று சரியான திட்டமிடல் வேண்டும், எதிர்பார்க்கா நடப்புகள் அறவே இருக்க கூடாது, புதிய தொழில்நுட்பம் வரும் போது புதிய தொழிலாளர் தேவை உடனே பூர்த்தி செய்யப்படவேண்டும், காலாவதியான தொழில்கள் மூடப்படும்போதோ அல்லது மனிதன் செய்யும் வேலையை செய்ய ஒரு புது இயந்திரம் வந்தாலோ அந்த தொழிலார்லர்களுக்கு குறைந்த நேர அளவில் புது வேலைகள் வர வேண்டும், skilled labor/unskilled labor நேர, உழைப்பு மதிப்பீடு கணக்கிடுதல் எல்லாருக்கும் ஒதுவரவேண்டும்.

          இவை கம்முனிச சமூகம் அமைக்கும் பயணத்தில் நாம் கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் என்பது என் கருத்து.

        • Goodheart’s Law பற்றி நீங்கள் கேள்வி பட்டு இருக்கலாம். ஒருவருக்கு அல்லது ஒரு குழுவுக்கு இதன் அடிபடையில் சன்மானம், சம்பளம் வழங்கப்படும் என்று முடிவு செய்தால், மிக சரியான அளவீடுகள் இல்லாமல் நாம் அதை தெரிவிக்க கூடாது. அப்படி செய்தால் பலவித பிரச்சனைகள் வரும். தங்கள் பார்வைக்கு சில லிங்குகள்:

          http://lesswrong.com/lw/1ws/the_importance_of_goodharts_law/
          http://www.vdare.com/articles/my-time-with-soviet-economics
          http://ingrimayne.com/econ/IndividualGroup/CentralPlanning.html

          இதை போன்ற குளறுபடிகள் தான் மிக பெரும் பிரச்சனைகளில் ஒன்றாக நான் கருதுகிறேன்.

        • சந்துரு,

          விவாதத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். நிறைய யோசித்திருக்கிறீர்கள். சிறப்பாக இருக்கிறது. இதற்கு முதலில் எனது நன்றிகள். நானும் இந்த கட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன் தான் கடந்தேன்.

          //ஒருவருக்கு இவ்வளவு தான் என்று அளவை கட்டுபடுத்தாமல் இதை கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி?//

          கண்டிப்பாக கட்டுப்பாடு இருக்கும். இது மிகவும் கண்மூடித்தனமாக இருக்க வேண்டியதில்லை. சற்று முன் பின் இருக்கலாம். இயற்கையே கட்டுப்பாடு வைத்திருக்கிறது. நமது வயற்றிற்கு ஒரு அளவு இருக்கிறது. உற்பத்திக்கும் ஒரு இயற்கையான வரம்பு இருக்கிறது. இயற்கையின் விளைச்சலுக்கும் ஒரு வரம்பு இருக்கிறது. எ.கா. சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்காவண்ணம் பருத்தி உற்பத்தி செய்யும் போது கிடைக்கும் விளைச்சலை வைத்து கிடைக்கும் ஆடைகளை வைத்து சராசரி அளவைக் கண்டறியலாம். 7 ஆடை கிடைத்தால் 7 ஆடைகள், 5 கிடைத்தால் 5. சிலர் ஒன்றிரண்டு குறைவாக வாங்கிக்கொண்டால் சிலர் ஒன்றிரண்டு அதிகமாக வாங்கிக்கொள்ளலாம். குறிப்பிட்ட அளவு மீதமிருந்தால் அடுத்த ஆண்டு பயிரிடும் பரப்பை குறைத்துக் கொள்ளலாம். அல்லது அதிகரித்துக் கொள்ளலாம். இது சர்க்கரைக்கும் மற்றவற்றிற்கும் பொருந்தும். இவ்வாறாக ஆற்றல் மற்றும் பொருட்கள் வீணாவது குறையும். தற்போது பதுக்கல் நடப்பதாலும் பிரச்சனை உருவாகிறது.

          //கட்டுபடுத்த படவேண்டியது இந்த பணத்திற்காக எனன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற விசயத்தை தானே தவிர நாம் எவ்வளவு பணம் வைத்திருக்க அல்லது சம்பாதிக்க முடியும் என்பதை அல்ல. //

          இது ஒரளவுக்குச் சரிதான். அதே சமயம் பொதுவுடமை சமூகத்தில் நாம் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் என்பதில் ஒரு இயற்கையான வரம்பு ஏற்பட்டுவிடும். சம்பாதித்த பணத்தை வைத்து என்ன செய்யமுடியும் என்பதற்கும் ஒரு இயற்கையான வரம்பு ஏற்பட்டுவிடும். அதாவது நீங்கள் உங்கள் ஓய்வு நேரத்தில் புதிதாக ஒரு மென்பொருள் எழுதி அதை காப்பி 1 ரூ க்கு விற்று 1 லட்சம் தேற்றியிருந்தாலும், அதை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள். 10 சட்டை வாங்கிக்கொள்ளலாம் 20 முடியுமா. 2 கணினி வைத்துக் கொள்ளலாம், 2 வீட்டில் வசிக்க முடியுமா. பணமாக உங்கள் வாரிசுகளுக்கு கொடுத்து விடமுடியுமா. அதற்கு தேவை யிருக்காது. அடிப்படை தேவைகள் ( புதிதாக கண்டுபிடிக்கப்படும் பொருள்கள் உட்பட) பூர்த்தியாகும் போது பணம் சேர்த்து வைக்கத்தேவையிருக்காது.

          மென்பொருள் பொருத்த வரையில் தேவையானதை ஒரு முறை உருவாக்கிவிட்டால் அதை எல்லோரும் பயன்படுத்த முடியும். இங்கே Reinventing the wheel எல்லாவிதத்திலும் தடுக்கப்படவேண்டும். தடுக்கப்பட்டிருக்கும். ஆகையால் நீங்கள் நினைப்பதை ஏற்கனவே செய்யப்பட்டிருக்கிற வாய்ப்புகளும் இருக்கும். அதுவும் விலையில்லாமல். பதிலுக்கு நீங்கள் எழுதம் மென்பொருளையும் விலையில்லாமல் தரத்தான் முன்வருவீர்கள்.
          ஏற்கனவே செய்யப்பட்டதையும் இவ்வாறு விலையில்லாமல் மேம்படுத்தலாம். Potential is mind boggling, all for free. All because of collective, incremental effort with near-zero repetition.

          சுருக்கமாக கூறினால் உலகமே உங்கள் சொத்து.

          பணம் என்பதைப்பற்றி நாம் புரிந்து கொண்டால் பணத்தின் தேவையே இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். குறிப்பாக நன்கு அமைக்கப்பட்ட பொதுவுடமை சமூகத்தில் பணத்தின் தேவையே இல்லாமல் போய்விடலாம். எனென்றால் நாம் பணத்தை தயாரிப்பதில்லை. அதை சாப்பிடவோ அணிந்து கொள்ளவோ கூட செய்வதில்லை.

          //அண்ணல் மார்க்ஸ் காலத்தில் இருந்து பல சிக்கல்கள், கேள்விகள் புதிதாக முளைத்து உள்ளன.//

          பல புதிதாக தோன்றி சிக்கல்கள் பொதுவுடமை சமூகமாக மட்டுமே தீர்க்க முடியும் என்பதும் தெளிவு. எ.கா. Environmental pollution.

          //சரியான திட்டமிடல், *** இல்லாமல் பொதுவுடைமை சமுதாயத்தை அமைக்க முயன்றால் நிச்சயம் தோல்வியில் முடியும்//

          100% true. கம்முனிச சமூகம் அமைக்கும் பயணத்தில் நாம் கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளைப் பற்றி அருமையாக பட்டியலிட்டுள்ளீர்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையில் முன்னோடிகள் இருக்கும் போது இவைகளை எதிர்கொண்டுவிடமுடியும்.

          //பல தலைமுறைகளின் பிறகு பணக்காரன், ஏழை என்ற பிரிவை உருவாகாமல் இருப்பது சாத்தியம் இல்லை//

          உங்கள் வாரிசுகள் சமூகத்தின் வாரிசுகள் தான். நீங்கள் வசிக்கும் வீட்டை வாரிசில் ஒருவர் எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு சமூகம் வீட்டைக்கொடுக்கும். முகநூல் விளம்பரத்தில் இருந்து தான் பணத்தைப் பெறுகிறது. பொதுவுடைமை சமூகத்தில் விளம்பரத்திற்கான தேவை குறைவுதான். எனவே எத்தனை தலைமுறைகள் ஆனாலும் பணக்காரன், ஏழை பிரிவினை உருவாகாது. வாய்ப்பில்லை. வாய்ப்பில்லாத நிலையை தொடர்ந்து பராமரிப்பது சமூக உருப்பினர்களின் கடமை.

          //எதிர்பார்க்கா நடப்புகள் அறவே இருக்க கூடாது//

          மனிதனால் இதை சமாளிக்க முடியும். குறிப்பாக பொதுவுடமை சமூகத்து வாரிசுகளால் கண்டிப்பாக இதை எதிர்கொள்ள முடியும். பயப்படவே தேவையில்லை.

          // Goodheart’s Law//

          இதைக் கேள்வி பட்டதில்லை. முதல் தொடுப்பிலிருந்து ஒரு மேற்கோள் கீழே.

          //
          The most famous examples of Goodhart’s law should be the soviet factories which when given targets on the basis of numbers of nails produced many tiny useless nails and when given targets on basis of weight produced a few giant nails.
          //

          இது அவதூறு போன்று தான் இருக்கிறது (இவற்றிற்கு பஞ்சமில்லை). ஆணிகள் எண்ணிக்கை அடிப்படையிலோ எடையின் அடிப்படையிலோ செய்யப்படுவதில்லை. ஒவ்வாரு ஆணிக்கும் ஒரு அளவு இருக்கிறது. அவற்றிற்கு Nomenclature இருக்கிறது. அதை வைத்தே ஒரு ஆணியின் எல்லா குணங்களையும் தெரிந்து கொள்ளமுடியும். ஒரு குறிப்பிட்ட வகை ஆணியில் இவ்வளவு எடை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதுதான் சரி. இதில் தவறு ஏற்படாது. நாம் ஆணியை எடையில் தான் வாங்குகிறோம். யாரும் எண்ணிக்கொண்டு இருக்க மாட்டார்கள். பெரிய வகைகளைக் கூட எடையில் தான் வாங்க முடியும் என்று நினைக்கிறேன்.

          • நண்பருக்கு,

            //கண்டிப்பாக கட்டுப்பாடு இருக்கும். இது மிகவும் கண்மூடித்தனமாக இருக்க வேண்டியதில்லை. சற்று முன் பின் இருக்கலாம்//

            இந்த முன் பின் சில மக்களுக்கு என்றால் சரிவரும் அய்யா. நூறு கோடி மக்கள், ஆளுக்கு வருடம் மூன்று ஆடைகள் என்று அளவு நிர்ணயிப்பதாக கொள்ளலாம். இதில் ஒரு பத்து சதவீதம் மக்கள் நான் ஒரு ஆடை எக்ஸ்ட்ரா வாங்குகிறேன் என்றாலும் பத்து கோடி ஆடைகள். நாம் இந்த வருடம் பத்து கோடி ஆடைகள் என்று contigency கொண்டால் அடுத்த வருடம் அதற்க்கு கம்மியாகவும் தேவைபடலாம், அதிகமாகவும் தேவை படலாம். இதில் ஏற்றுமதி, இறக்குமதி கணக்கில் கொள்ளப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். இதை விட இந்த எல்லா விசயத்திற்கும் அடிப்படை நமக்கு துல்லிய விவரம் கிடைக்கிறது, அது மிக சரியான விவரம் என்னும் assumption. இந்த ஒரு விஷயம் தவறானால் என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்து தான் 2001ஆம் ஆண்டில் Joseph Stiglitz நோபல் பரிசு பெற்றார். இந்த துல்லிய விவரத்தை கொஞ்சம் ஆராய்வோமே. இந்த எல்லா விசயத்திலும் ஆடைகளின் நிறம், வடிவம், சைஸ் போன்றவை கணக்கில் கொள்ளப்படவில்லை. ஆடை என்று பேசினால் கொஞ்சம் சுலபமாக நாம் அதை சமாளிக்கலாம். ஆனால் நாம் சமாளிக்கவேண்டியது ஆடை என்பதை அல்லவே! எல்லா விதமான ஆடை, எல்லா வடிவ ஆடை, எல்லா நிற ஆடை ஆகிய அனைத்து combination இதில் அடக்கம். 10 நிறம்,4 அளவு (S,M,L,XL),5 விதம் (சட்டை, pant, பனியன், உள்ளாடை,etc.), 3 வடிவம் (v நெக் t-shirt, முழு/அரை கை சட்டை, etc.) என்று மிக சிம்பிள் assumptions கொண்டாலும் 10x4x5x3 = 2400 வித ஆடை நாம் பிளான் செய்ய வேண்டும். இதை இரு பாலருக்கும் என்றால் ஆடை எளிமையான கணக்கீடு நாம் 4800 வித ஆடைகளை பிளான் செய்ய வேண்டும். இவை அனைத்திற்கும் துல்லிய விவரம் கிடைக்கும், மக்கள் போன வருடம் வாங்கியது போலவே இந்த வருடமும் வாங்குவர், பேஷன் மாறது, எவ்வளவு மக்கள் இறப்பர், யார் இறப்பர், எத்தனை பிள்ளைகள் பிறப்பர், எந்த பால் போன்ற பல அறிய முடியாத பாக்டர் உள்ளன. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நாம் இந்த ஆடை இவ்வளவு என்று contigency கொண்டு பிளான் செய்வது எளிதா அல்லது மக்கள் இந்த ஆடை இவ்வளவு வாங்குகிறார்கள், எனவே இப்போது இந்த ஆடை செய்து அதை வார கடைசிக்குள் கடைக்கு அனுப்பலாம் என்று செய்வது எளிதா?

            • நண்பர் சநதுரு,

              // தேவைகள் அதிகமாக அதிகமாக அதை பூர்த்தி செய்ய புதிய தொழிற்சாலைகள், மின்நிலையம் போன்றவை வந்தே தீரும்//

              தற்போதைய தனியுடைமை சமூகத்தின் முக்கிய பண்பு வரம்பற்ற போராசையும் வரம்பற்ற நுகர்வும் என்று பார்த்தோம். பொதுவுடைமை சமூகத்தில் கட்டுப்பாடு இயற்கையாக வந்துவிடும் என்றும் பார்த்தோம். இந்த கட்டுப்பாடு வளங்களின் பகிர்வினால் வருகிறது என்பதை தனியாக சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதனால் பொதுவுடைமை சமூகத்தில் தற்போதையதை விட தேவைகள் அதிகமாகும் என்பது தவறு. குறையத்தான் செய்யும். குறைய வைக்கவேண்டியதில் தான் நமது பொது நலன் இருக்கிறது. ஒரு பாதி மக்கள் வரம்பற்று நுகர்வதற்கு இன்னொரு பாதி மக்கள் இல்லாமையில வாழந்து சுற்றுப்புறத்தை பாதுகாக்க தியாகம் செய்யவேண்டும் என்றால் குரூரமானதாக தோன்றவில்லையா. அவர்களுக்கு அப்படிப்பட்ட உலகமே தேவையில்லை என்று முடிவெடுக்கலாமில்லையா.

              தொழிற்சாலைகள், அணைகள் போன்றவற்றின் விளைவுகள் எல்லா நாடுகளிலும் இருக்கிறது. சோவியத் சீனா மட்டும் விதிவிலக்குகளில்லை. இந்த ‘வளர்ச்சிகளின்’ தீமைகளைப்பற்றி இப்போது கூட பெருமளவிலான உலக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலை நாடுகள் தங்களின் பெரும்பாலான தேவைகளை மற்ற நாடுகளிலிருந்து செய்வித்துக் கொள்வதால் சிறிது தூய்மையாக இருப்பதாக தோன்றுகிறது. கூட்டு முயற்சிகளினால் அதாவது பொதுவுடமையாக்கத்தினால் (central an regional planning) மட்டுமே தேவைகளைக் குறைத்துக் கொள்ள முடியும். அப்படியாக நமது பூவுலகை காப்பாற்றிக்கொள்ள முடியும். தனியுடைமையில் கண்டிப்பாக இது சாத்தியமேயில்லை. யார் தியாகம் செய்வது யார் அனுபவிப்பது என்ற கேள்வி வருகிறதில்லை. இதை இதற்கு மேலும் உங்களுக்கு விவரிக்க வேண்டியதில்லை என்றே நம்புகிறேன. தேவை பட்டால் செய்யவும் தயார்.

              //அவர்களுக்கு வேறு எந்த சித்தாந்தமும் தெரியாமல் இருந்தால் ஒழிய இது சாத்தியம் அல்ல//

              பொதுவுடமை சமூகத்து வாரிசுகளுக்கு வரலாறு தெரிந்திருக்கும். அதுவும் சரியான வரலாறு. reservation ஏன் வேண்டும் என்று கேட்பவர்கள் பொதுவுடைமைக்குத் தடையாகத்தான் இருப்பார்கள். இந்த தடையையும் கடக்கத்தான் வேண்டும். எல்லாருக்கும்,எல்லாமும் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்க வேண்டும் என்பது என்றுமே வாய்ப்பில்லாதது. இயற்கையில் இதற்கு இடமில்லை. இதைப்புரிந்து கொள்வதற்கு ஏன் இவ்வளவு கடினம் என்று எனக்கு புரியவில்லை. இருப்பதை பகிர்ந்து கொள்வதற்கு என்றுமே வாய்ப்பிருக்கிறது. இன்றும் பங்கீட்டில் தான் வாழ்கிறோம். ஆனால் சமத்துவமான பங்கீட்டில் இல்லை.

              பங்கீடு சரிசெய்யப்படும்.

              பொதுவுடமை ஒரு பகுதியில் அமலுக்கு வரும்போது, அங்கேயுள்ள அதிருப்தியாளர்கள் வேறு பகுதிக்கு தாராளமாக போகட்டும். (இரும்புத்திரை இருந்ததாக சொல்கிறார்கள். எந்த அளவுக்கு உன்மையென்று தெரியவில்லை. அப்படியிருந்திருந்தால் அதற்கு இருந்த தேவையை என்னால் யூகிக்க முடியவில்லை. தெரிந்த நண்பர்கள் எனக்கு விளக்கம் கொடுக்க வேண்டிக் கொள்கிறேன்.)

              //Warwick//

              இந்த கட்டுரைகளை நான் இன்னும் படிக்கவில்லை. நேரமிருந்தால் படிக்கிறேன். எனது நிலை, பொதுவுடைமை சமூகம் அமைக்கப்படவேண்டும். குறைகள் தோன்றத்தோன்ற சரியான விதத்தில் களையப்படவேண்டும். We live together. Or. We perish together.

              • நண்பர் சந்துரு,

                //brezhnev2002.pdf//
                Title: Economic Growth and Slowdown
                //அமெரிக்க statistics மூலம் வந்திருந்தாலோ, ***இதை அவதூறு பிரச்சாரம் என்று நம்புவதில் எந்த கஷ்டமும் இல்லை// என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், this document is fully based on CIA figures. We may never know how they collected these figures. But I am sure the Goodhart’s law is applicable to these figures.

                Productivity, rewards, penalties, plans, performance, bonuses, targets, controls, incentives etc are some themes that are listed in this document.

                //information2005.pdf//

                Title: Economic Information in the Life and Death of the Soviet Command system

                Information collection, production, processing, dissemination, usage, etc are the topics of this document.

                The problems in the system in Russia, enumerated in the above 2 documents, hold well to all the societies. If we change few words, the document can apply to US, India, etc.

                [I will give my feedbacks soon on 2 documents on ‘Pollution’]

          • தயவு செய்து pollution போன்ற பிரச்சனைகள் பொதுவுடைமை தீர்க்கும் என்று கூற வேண்டாம். தேவைகள் அதிகமாக அதிகமாக அதை பூர்த்தி செய்ய புதிய தொழிற்சாலைகள், மின்நிலையம் போன்றவை வந்தே தீரும். புதிய நிலங்களை பாசனம் செய்ய வேண்டும் என்றால் புதிய அணைகள், ஆறுகள் திருப்பிவிடபடுதல் போன்றவை நடந்தே தீரும். சோவியத் முறை central planning, ரஷ்யாவில் நடந்த pollution பற்றி சில லிங்குகள் தருகிறேன்:

            http://www.ascecuba.org/c/wp-content/uploads/2014/09/v08-22diaz.pdf
            http://users.nber.org/~confer/2002/env02/kahn.pdf
            http://www.researchgate.net/publication/265678780_The_Soviet_Experiment_Lessons_for_Development
            http://www.nytimes.com/2002/12/09/world/grand-soviet-scheme-for-sharing-water-in-central-asia-is-foundering.html
            http://thediplomat.com/2014/10/how-the-soviet-union-created-central-asias-worst-environmental-disaster/

            நாம் சோவியத் முறை central planning தான் பின்பற்றுவோம் என்றால் ஒரு சில துறைகள் தவிர பலவும் நாம் கண்டிப்பாக தோர்ப்போம். நம்பிக்கை மிகுந்த, administrative branch பெரிதாக, ஒவ்வொரு பகுதிக்கும் வேண்டும்.

            /குறிப்பாக பொதுவுடமை சமூகத்து வாரிசுகளால் கண்டிப்பாக இதை எதிர்கொள்ள முடியும். பயப்படவே தேவையில்லை//

            மன்னிக்க வேண்டும். அவர்களுக்கு வேறு எந்த சித்தாந்தமும் தெரியாமல் இருந்தால் ஒழிய இது சாத்தியம் அல்ல. நாசி சித்தாந்தம், அடிமை, முறை போன்றவை எவ்வளவு கொடுரம் என்று நமக்கு தெரியும். ஆனால் இன்று நீயோ நாசிக்கள் உள்ளனர். reservation ஏன் வேண்டும் என்று நமக்கு தெரியும். ஆனால் இன்றைய தலைமுறை பிள்ளைகளை கேட்டு பாருங்கள். ஏன் இன்னும் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு இத்தனை ஆண்டுக்கு பிறகும் reservation வேண்டும் என்று கேட்பவர் கணிசம். இது இரு தலைமுறைகளுக்கு பிறகே நடந்துள்ளது. காலா காலத்துக்கும் பொதுவுடைமை சமூகம் நிலைக்க வேண்டும் என்றால் ஒன்று எல்லாருக்கும்,எல்லாமும் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்க வேண்டும். அல்லது வேறு சித்தாந்தம், எண்ணங்கள் அறவே கூடாது. உலகம் மொத்தமும் கம்முனிச சித்தாந்தத்தை பின்பற்றாமல், அல்லது தேசத்தில் தகவல் முழு கட்டுபாட்டில் இல்லாமல் இது சாத்தியம் இல்லை.

            //இது அவதூறு போன்று தான் இருக்கிறது//

            எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் உண்டு. இன்னும் இந்த விசயத்தை நான் முழுதாக நம்பவில்லை. இது அமெரிக்க statistics மூலம் வந்திருந்தாலோ, அல்லது பத்திரிகைகளில் வந்திருந்தாலோ இதை அவதூறு பிரச்சாரம் என்று நம்புவதில் எந்த கஷ்டமும் இல்லை. ஆனால் பல economist நன்கு ஆராய்ந்து இதை கூறுவதால் உண்மை என தோன்றுகிறது. இதன் சம்பந்தமான அனைத்து literature நான் இன்னும் படித்து முடிக்கவில்லை. ஆனால் பெரும்பான்மை ஆய்வுகள் கூறுவது இதை தான். இதில் பல factors (உலகபோரின் போது பழைய தலைமுறை மறைந்து புதிய தலைமுறை வேலைக்கு வந்தது, புரட்சியின் மீது இருந்த பற்று, பொதுவுடைமை கொள்கையின் மீது இருந்த பற்று ஆகியவை குறைய துவங்கியது, etc.) இருந்தாலும் சோவியத்தின் பொருளாதாரம் அலசும் அனைவரும் இதை முக்கிய காரணமாக முடிவுக்கு வருகின்றனர். தங்கள் பார்வைக்கு Warwick University ஆசிரியரின் கட்டுரைகள்:

            http://www2.warwick.ac.uk/fac/soc/economics/staff/mharrison/public/brezhnev2002.pdf
            http://www2.warwick.ac.uk/fac/soc/economics/staff/mharrison/public/information2005.pdf

            goodhart law பற்றிய கொஞ்சம் எளிய, அவதூறு இல்லாத,அது எப்படி மற்ற பல துறைகளுக்கும் பொருந்தும் என்பது பற்றிய ஒரு சின்ன பதிப்பு:

            http://magazine.mbird.com/when-a-measure-becomes-a-target-inside-the-economics-of-repentance/

          • நண்பர் சந்துரு,

            முதல் தேவை பொதுவுடைமையை ஏற்றுக்கொள்வது. பிறகு தான் மற்றதெல்லாம். நமது எல்லா ஆக்கப்பூர்வத்தையும் அதை நடைமுறைப்படுத்துவதில் பயன்படுத்தவது நமது கடமை. நடைமுறைப்படுத்துவதை எந்த அளவுக்கு சிறப்பாக நடத்துகிறோமோ அந்த அளவுக்கு நல்லது. இயற்கை மனிதர்களுக்கு கொடுத்திருக்கும் உயரிய கொடை நமது கைகள். விலங்குகளுக்கும் நமக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு இது. நமது கைகளை வைத்து பூவுலக சொர்க்கத்தை படைக்க முடியும் என்பது எனது கணிப்பு

            // நூறு கோடி மக்கள்//

            உலக அளவிலேயே கூட இதை நடைமுறைப்படுத்த முடியும். சில முடிவுகளை கிராமத்தின் அடிப்படையிலும் சில முடிவுகளை மாவட்ட அளவிலும் சில மாநில அளவிலும் சில நாடளவிலும் செய்யலாம். போகப்போக சிலவற்றை ஒருங்கிணைக்கலாம். சிலவற்றை பகுத்து விடலாம். ஆரம்பம் பொதுவுடைமையை ஏற்றுக்கொள்வது தான்.

            //4800 வித ஆடைகளை பிளான் செய்ய வேண்டும்//

            இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பது ஒன்றும் கடினமில்லை.

            முதலில் நாம் சிலவற்றை மறந்து விடக்கூடாது. சில பத்தாண்டுகளுக்கு முன்னால் நமக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய வகை ஆடைகளே இருந்தன. 50 ஆண்டுகளுக்கு முன் ஆணுக்கும் பெண்ணுக்கும் 2-3 வகை ஆடைகளே இருந்தன and so on.

            தற்போதை நிலையில் நமக்கு 4800 வித ஆடைகளை உற்பத்தி செய்வதற்கான capacity இருக்கிறது. இதை பயன்படுத்திக் கொள்ளலாம். பயனை மட்டும் பொதுவில் வைக்கப்போகிறோம். இந்த எண்ணிக்கைப் பெருக்கம் தனியுடைமையின் வெளிப்பாடு. எனவே இது பொதுவுடைமையில் தானாகவே குறைந்து விடும். அது உடனே நடக்கத்தேவையில்லை. மத்தியநீண்டகாலத்தீர்வுதான். மாற்றங்கள் படிப்படியாக வரும். ‘பேஷன்’ ஆடைத்தேவையை எளிமைப்படுத்துவதில் குறைப்பதில் மட்டும் பயன்படுத்தப்படலாம்.

            இப்போது சொல்லுங்கள். இது எளிதா இல்லை கடினமா.

            தொடரும்…

            • சந்துரு ,
              அடுத்தவர்கள் என்ன உன்ன வேண்டும் , உடுத்த வேண்டும் , எனற்கு உறங்க வேண்டும் , எப்படி பயணிக்க வேண்டும் என்று ஒரு சிலர் முடிவு செய்வார்களாம் . உலக நலன் கருதி இந்த அறிவு ஜீவிகளின் முடிவை , பொது மக்கள் ஏற்று அதன் படி நடக்க வேண்டுமாம் .

              எதுக்கு வீடுகட்ட வேண்டும் , குடிசையில் இருந்தால் போதாதா என்று கேட்டவர் இந்த யூனிவர்பட்டி .

              இப்படி அடுத்தவர் வாழ்கையை முடிவு செய்யும் ஆசை கொண்ட இவர்களுக்கு ஒரு சவால் , உங்களுடைய வாழ்கையை ஒரே ஒரு வருடம் நங்கள் முடிவு செய்கிறோம் . எங்களுடைய முடிவுப்படி உங்கள் வாழ்கையை ஏற்று நடத்த தயாரா ? சாகும் வரை எனது பொன்னான முடிவுகளை பின்பற்றி அப்படி உங்களால் தொடரமுடியுமா ?

            • எல்லாம் சரிதான் பொது உடமையை கரெக்ட் தான் எல்லாருமே ஏற்றுக்கொள்ளாம் அனா அதுக்கும் சார்லி கெப்டோ பத்திரிக்கை காரன சுட்டு கொன்ன இசுலாமிய தீவிரவாதிக்கும் என்ன சம்மந்தமுனு வினவு ஆளுக கிட்டு கேட்டு சொல்லுங்க அதான் தென்றல் வீசலயே ஒரே புழுக்கமா இருக்கு மனசுக்குள்ள எதுக்குடா பொது உடமைவாதிகள் இசுலாத்துக்கும் அதன் தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் சப்போர்ட் பன்ற மேரி அவன் சரி இல்ல அதான் சுட்டான் ,பாஸ்கித்தான்ல மட்டுமா தாலிபான்,அமெரிக்காவில் இசுலாமியர் உயிரை கொலவது சகஜம் வன்முறை இல்லை அப்பிடினு வண்டிவண்டியா ஏன் எழுதுரானுக இசுலாமிய நாடுகளில் சிருபான்மை மக்கள் படும் துன்பங்களை கண்டும் காணாம போறானுக இவனுகதான் சம தர்ம சமுதாயத்த உருவாக்க போறானுகளா இவனுக பதில் சொல்லுவானுகளா உலகத்துல இசுலாமியன் மட்டும்தான் பாதிக்க படுரானா மத்தவன் இசுலாமியனால பாதிக்க படவே இல்லையா இதெல்லாம் வினவு தோழர்களிடம் கேளுங்கள் என்னா நீங்களும் கம்மூனிஸ்டுனு சொல்லுறீக …

          • நண்பர் சந்துரு,

            // goodhart law பற்றிய கொஞ்சம் எளிய, அவதூறு இல்லாத,*** ஒரு சின்ன பதிப்பு://

            This document starts with a history. Romans invade Armenian empire and are at the gates of the Capital. The King kills the messenger as he was not prepared to hear the bad news.

            The document goes on. The Soviet leaders did not like bad news. So messengers made up the good news. The author seems to ignore the fact that, as for as Russia was concerned, the enemies were at the gate, all around the border and also inside.
            Then the document speaks about Goodhart law: “When a measure becomes a target, it ceases to be a good measure.”

            The first example this document gives on this law is the number of factories in Soviet Russia (none other). It says Russia built more and more factories as this number was thought to be the measure of success and so irrespective of whether those factories produced or not, they simply built more to achieve the target.
            2nd example is the police department of US, exposed by HBO’s The Wire. The quotes are given within //…………..//

            //there are “artificial” ways to tamper with the clearance rate once it has become a target rather than a measure. In that show, murders which are difficult to solve will sometimes be passed off to other jurisdictions or, worse, declared accidental deaths or suicides or “missing” runaways. These actions may raise the clearance rate, but they no longer reflect a better performance from the police department—if anything, the police department is doing worse.//

            //the problem isn’t so much the theoretical impossibility of detectives doing better work; they theoretically could. But it’s more a deficiency of willpower and motivation, a proclivity to cut corners; in other words, the actual impossibility of coercing progress. Practically speaking, tampering with the indicators is all they can do.//

            Campbell’s law

            //use of a social indicator as a target may not only corrupt the indicator’s usefulness as a measurement of success, but may even sabotage the success itself//

            As an example,

            //think about education and standardized testing. In order to increase performance, you must first have a reliable way to measure performance, so you can have a way to judge whether or not your program is successful. Standardized tests have naturally presented themselves over the years as a common-sense answer to this problem. On the surface, this seems like a great idea. But there are downsides. First, teachers will begin to measure their own success by their students’ standardized test scores, especially if those scores are being used to evaluate the teacher’s performance (they often are).//

            We see that these laws holds good for all the societies, not specific to Socialist societies. I wonder why Chandru has to mention them in relation to Communism. These laws hold well very well for the ‘Appraisals’ in IT, to give a recent example. Chandru could have made the above points explaining the futility of appraisal in recent posts related to them in Vinavu.

            Strangely, around half of the document approaches the topic through ‘Christian’ themes.

            The document ends with a quote.

            //The only wisdom we can hope to acquire is the wisdom of humility: humility is endless.//

            This humility can be translated as getting oneself freed from selfish greed and working towards common good of the community.

            • நண்பர் சந்துரு,

              //Pollution//

              //v08-22diaz.pdf //

              Title: SOCIALISM AND ENVIRONMENTAL DISRUPTION: IMPLICATIONS FOR CUBA

              This document starts to speak about Cuba but out of 16 pages (+ pages of references) only 2 pages do it while the rest speaks about Soviet Russia. 2 pages on Cuba are miserable in that they contain nothing substantial.

              Main pollution problems of SR dealt in this document are:

              1. Air pollution due to burning of locally available ‘low-quality’ coal (lignite)
              2. Water diversion to cotton cultivation and there by shrinking and polluting the inland seas.
              3. Only 30% of sewage is treated as per norms, 50% sewage got improper treatment and remaining 20% was not treated.

              My replies to above 4 points.

              1. Coal is burnt everywhere. Some coal may produce less pollution and some other may produce more. SR cannot help if it has only the later variety. We should remember that from Neyveli, we only get this ‘low-quality’ stuff and we burn it to get our power, with no complaints
              2. Water diversion from River is also a worldwide phenomenon. But only SR has inland seas. (It seems nature itself schemes against Communism. Nature gives to SR a ‘low-quality’ coal and Inland seas which cannot get filled in from polar glaciers.)
              3. Even today, In India, we treat 0% sewage. SR’s situation has been far better in this count.

            • வாசகர்களுக்கு,

              தென்றல் அண்ணனைக் காணவில்லை. திண்ணையில் பேசிக்கொண்டிருந்த சந்துருவையும் காணவில்லை. மற்றவர்களையும் காணவில்லை. இப்படி தனியாக புலம்பவிட்டுவிட்டார்களே.

              • தென்றல் பயணத்திலிருக்கிறாறோ இல்லை மார்க்ஸின் சித்தாந்தத்த மீண்டும் அல்லாவை காப்பாற்ற படித்துகொண்டு இருக்கிறாரோ தெரியல விரைவில் வருவார் தீவிரவாத இசிஸ் குழு சார்லிகெப்டோவுக்கு செய்த்து சரிதான் என்று சொல்ல இன்று இரவே வருவார் என்று எனக்கு அல்லா வகி மூலம் அறிவித்து இருக்கிறார்…

              • Mr. Univerbuddy,

                I had some unexpected personal issues come up. So i would not be able to make it to the discussion anytime soon. I look forward to continuing the discussion with you once my life gets a bit more sorted out.

                • நண்பர் சந்துரு,

                  வருத்தமான செய்தியை பகிர்ந்திருக்கிறீர்கள். உங்கள் உணர்வுகளை நானும் சிறிது பகிர்ந்து கொள்கிறேன். தகுந்த சமயத்தில் திரும்பிவருவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன்.

  46. நண்பர்களுக்கு,

    பயணத்தில் இருப்பதால் மேற்கொண்டு விவாதத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. கூடிய மட்டும் இந்த வார இறுதியில் கலந்துகொள்கிறேன்.

    நண்பர் சின்னச்சாமி விவாதிக்கவேண்டிய ஒரு முக்கிய விசயத்தைச் சுட்டியிருந்தார்.
    சார்லியின் ஹெப்டோவின் கார்டூன்கள் சரியா தவறா என்பதில் கணிசமான நேரம் கடந்துவிட்டது. அதே சமயம் சார்லி கார்ட்டூன்கள் தாக்கம் என்னவென்பதையும் இதைச்சுற்றிய அரசியல் என்னவாக இருக்கிறது என்பதைப் பற்றியும் கவனம் எடுக்கவில்லை. இதை நாம் கறாராக கட்டுரையை ஒட்டி விவாதிப்பது அவசியமாகும்.

    நன்றி.

    • தென்றல் அவர்களுக்கு,

      உங்களின் அறிவிப்புக்கு நன்றி.

      திண்ணை காலியாக இருக்கும் போது நான் சந்துருவுக்கு சிறிது விளக்கங்கள் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். நன்றி.

    • தென்றல் அவர்களுக்கு,

      அடுத்த வாரஇறுதியில் இருக்கிறோம். நீங்கள் இன்னும் ஒரு வரி பின்னூட்டம் கூட இடவில்லையே. 🙁

  47. ///நாம் சோவியத் முறை central planning தான் பின்பற்றுவோம் என்றால் ஒரு சில துறைகள் தவிர பலவும் நாம் கண்டிப்பாக தோர்ப்போம். //

    நண்பர் சந்துரு,

    உங்கள் வாதங்கள் சிறப்பாக இருக்கின்றன. ஹேயக் என்ற பெரும் பொருளியல் அறிஞர் (நோபல் பரிசு பெற்றவர்) எழுதிய பழைய நூலான The Fatal Conceit அய் நீங்க அவசியம் படிக்க வேண்டும்.
    சோசியலிச அமைப்பில் திட்டமிடலுக்கு தேவையான முழு தகவல்களுக்கும் எந்த காலகட்டத்திலும்
    கிடைக்காது என்பதால் அது தோல்வியுறும் என்பதை விவரிக்கிறார்.

    ..statist (“socialist” is Hayek’s terminology) economies cannot be efficient because of the dispersed knowledge required in a modern economy. Additionally, since modern civilization and all of its customs and traditions naturally led to the current order and are needed for its continuance, any fundamental change to the system that tries to control it is doomed to fail since it would be impossible or unsustainable in modern civilization.

    Price signals are the only means of enabling each economic decision maker to communicate tacit knowledge or dispersed knowledge to each other, in order to solve the economic calculation problem.

    http://en.wikipedia.org/wiki/The_Fatal_Conceit

    முழு நூல் பிடிஃப் வடிவில் இங்கு : http://www.libertarianismo.org/livros/fahtfc.pdf

    • ஐயோ மானு ,

      தமிழ் நாட்டில் ஒரு வீட்டில் 3 பேர் என்றால் உணவு தேவையான அரிசி 12 கிலோ[per head 4kg ] , கோதுமை 6 கிலோ[per head 2 kg ] என்று வைத்துகொள்வோம். ஒவொரு மாநிலத்துக்கும் அளவு வேறுபடுமே தவிர ஆனால் அரிசியும் ,கோதுமையும் தேவை என்பது நிரந்தரமானதே ! சரி தமிழ் நாட்டில் 7 கோடி மக்கள் என்றால் ஒரு மாதத்தில் ……

      அரிசிக்கான தேவை 7 கோடி * 4 = 28 கோடி கிலோகிராம்.

      கோதுமைக்கான தேவை 7 கோடி * 2 = 14 கோடி கிலோ கிராம்

      இதனை கணக்கு செய்வதற்கு ஹேயக் எல்லாம் தேவை கிடையாது.

Leave a Reply to தமிழ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க