privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்சட்டக்கல்லூரி மாணவர்களை ஆதரித்து பு.மா.இ.மு போராட்டம்

சட்டக்கல்லூரி மாணவர்களை ஆதரித்து பு.மா.இ.மு போராட்டம்

-

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை – 95, போன்; 9445112675

தேதி : 06.02.2015

சென்னை சட்டக்கல்லூரியைக் காக்க போராடிய மாணவர்கள் மீது
கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசாரைக் கைது செய்ய வேண்டும்.

பு.மா.இ.மு வின் கண்டன அறிக்கை.

  • 150 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க சென்னை சட்டக் கல்லூரியை இடம் மாற்றுவது என்ற பெயரில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதை பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது.
  • போராடும் மாணவர்கள் மீது போலீசார் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைக் கண்டிப்பதோடு இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்ட போலீசு அதிகாரி, தாக்குதல் நடத்திய போலீசார் ஆகியோர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

பல்வேறு சமூகப் பிரச்சனைகளில் அதை எதிர்த்து முதலில் குரல்கொடுப்பவர்கள் சட்டக்கல்லூரி மாணவர்களாகத்தான் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக சென்னையின் மையமான இடத்தில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஒரு தாக்கத்தை உருவாக்குவதாகவும், அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் இருந்துள்ளது. 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொட்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் வரை இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. பல அரசியல் தலைவர்களும், போராளிகளும் உருவாகும் களமாகவும் இக்கல்லூரி இருந்து வருகிறது.

இந்த மாணவர்களின் போர்க்குணத்தை மழுங்கடிக்கவும், சமூகப்பற்றை, நாட்டுப்பற்றை அறுத்தெரியவும், மிக முக்கியமாக ’மாணவர்களுக்கு அரசியல் கூடாது’ என்று கூறி அரசியல் அரங்கிலிருந்து மாணவர்களை விலக்கி வைக்கவும் தான் அரசு திட்டமிட்டே உரிமைக்காக போராடும் மாணவர்களை ரவுடிகள், பொறுக்கிகளாக சித்தரிக்கிறது.

மாணவர்களிடையே சாதி வெறியைத் தூண்டிவிட்டு மோதல்கள் உருவாக காரணமாக இருப்பதிலும் அரசின் பங்குண்டு. உதாரணம் 2008-ல் சென்னை சட்டக்கல்லூரியில் ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு வழிவகுத்துக் கொடுத்ததோடு. போலீசார் அதை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துவிட்டு, மோதல் உச்சத்திற்கு சென்ற பின்பு அதைக் கட்டுப்படுத்துகிறேன் பேர்வழி என மாணவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு பழிவாங்கியது. இன்று மாணவர்களிடையே வெளிப்படும் சில ஒழுங்கீனங்களை( அதற்கும் காரணம் அரசுதான் ) காரணம் காட்டி போலீசை ஏவி தாக்குவது, பொய் வழக்கு ஜோடித்து சிறையிலடைப்பது; கல்லூரிக்குள் கண்காணிப்பு கேமராவை வைத்து மாணவர்களுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச ஜனநாயக உரிமைகளையும் பறிப்பது என மாணவர்களை குற்றப்பரம்பரையினராகவே கருதி கல்லூரிகளை சிறைச்சாலைகளாக்கி வருகிறது அரசு.

அதே நேரத்தில் உழைக்கும் மக்களின் பிள்ளைகள் அதிகம் படிக்கக் கூடிய சில முக்கிய கல்லூரிகளை சென்னை மாநகரத்தில் இருந்தே அகற்றி சென்னையின் புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்ற அவ்வப்போது முயற்சித்தும் வருகிறது. ஏற்கனவே தலைமைச் செயலகம் கட்டுவதற்காக என்று கூறி மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரியை அகற்ற முயற்சித்தார்கள். அது அக்கல்லூரி மற்றும் பிற கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் தடுக்கப்பட்டது. அடுத்து மெட்ரோ ரயில்பாதைக்காக என்று சொல்லி பச்சையப்பன் கல்லூரியை அகற்ற முயற்சித்தார்கள் அதை எதிர்த்து மாணவர்கள் – பேராசிரியர்கள் போராடியதால் அந்த முயற்சி தகர்க்கப்பட்டது. இன்று சட்டக் கல்லூரியை குறி வைக்கிறது அரசு.

2008-ல் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த சாதி மோதலையும் (ஆதிக்க சாதி வெறியாட்டம் என்றே சொல்ல வேண்டும்), இன்று அவ்வழியே போடப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தையும் காரணமாக சொல்லி சட்டக்கல்லூரியை மாற்ற திட்டமிடுவதன் உண்மையான நோக்கம் முதலாளிகளும், மேட்டுக்குடிகளும், உயர் அதிகாரிகளும் சுகபோகமாக வாழ கல்லூரி மாணவர்களின் போராட்டம் இல்லாத மாநகரமாக சென்னையை மாற்றுவதுதான். அதாவது உரிமைக்கான போராட்டக் குரல்கள் எழும்பும் அரசு கலை, அறிவியல், சட்டக்கல்லூரிகளை மாநகரத்தில் இருந்து அப்புறப்படுத்துவதுதான்.

இது அபாயகரமானது. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் படிப்பு பாழாகும் என்பதுடன், தற்போது சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ( ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறங்களில் ) தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கொத்தடிமைகளைப் போல் இருக்கும் நிலைதான் இவர்களுக்கும் ஏற்படும். அதாவது இந்த அரசு கல்லூரிகள் எதிர்காலத்தில் தனியார்மயமாக்கப்படும் போது எவ்வித எதிர்ப்பும் காட்டமுடியாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதோடு ஆரம்பத்திலேயே சொன்னது போல் சமூகப்பற்று, நாட்டுப்பற்று அறுத்தெரியப்பட்டு இவர்கள் முடமாக்கப்படுவார்கள்.

எனவே, பல்வேறு அபாயங்களுக்கு வழிவகுக்கும் சட்டக்கல்லூரியை மாற்றும் அரசின் திட்டத்தை முறியடிக்க போராடும் மாணவர்களுக்கு அனைவரும் தோள்கொடுக்க வேண்டும். இதை அக்கல்லூரி மாணவர்கள் பிரச்சனையாக மட்டும் பார்த்து ஒதுங்கக் கூடாது. அப்படி ஒதுங்குவதால்தான் போராடிய மாணவர்கள் மீது போலீசார் கொலைவெறித் தாக்குதலை நடத்தினார்கள். இந்த கொடூரத்தை இனியும் அனுமதிக்காமல் இருக்க சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு அனைத்துக்கல்லூரி மாணவர்களும், பெற்றோர்களும், உழைக்கும் மக்களும் ஆதரவளிக்க வேண்டும். சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தற்போது உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகிறார்கள். நேரில் சென்று அந்த மாணவர்களை சந்தித்து ஆதரவை தெரிவிப்பதுடன் போராட்டத்தை வளர்த்தெடுக்க அவர்களுக்கு உதவுவதுதான் நம் அனைவரின் கடமை என பு.மா.இ.மு கருதுகிறது.

இவண்
த. கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு

கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

  • சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது  போலீஸ் கொலை வெறித்தாக்குதல்
  • மெட்ரோ இரயிலுக்காக கல்லூரியை இடிப்பதா?
  • எதிர்த்து கேட்ட மாணவர்களை மாட்டைப் போல் அடிப்பதா?
  • உரிமைக்காக போராடும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.
  • மாணவர் வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவோம்!

kovilpatti-rsyf-demo-4என்ற தலைப்பில் தூத்துக்குடி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர் மணிகண்டன் தலைமையில் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் 6.2.2015 அன்று காலை 9 மணியளவில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுவரை கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக கோவில்பட்டியை சுற்றிலுமுள்ள பத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து பேசி சட்டக்கல்லூரி மாணவர்களின் போரட்டத்தின் நியாயத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையின் ரவுடி ராஜ்யத்தை எதிர்த்து முழக்கங்கள் போடப்பட்டன.

kovilpatti-rsyf-demo-3ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை ஆற்றிய பு.மா.இமு. தூத்துக்குடி மாநகர குழு உறுப்பினர் தோழர் மணிகண்டன் பேசியதாவது :

“சடடக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஏதோ ஒரு தனிப்பட்ட கல்லூரியின் போராட்டமல்ல.

மெட்ரோ ரயிலுக்காகவும், பறக்கும் பாலத்துக்காகவும் இந்த அரசால் அடித்து துரத்தப்படும் சென்னை கூவம் கரையோரம் வாழும் மக்கள் இந்த அரசை எதிர்த்த போராட்டத்தோடு இணைந்தது.

ஏழை – எளிய மக்களின் மீதான இந்த அரசின் அடக்குமுறைக்கு  எதிரானது.

அது மட்டுமில்லாமல் போராடும் மாணவர்களுக்கு இதுதான் கதி என நடந்து கொள்ளும் போலீசின் ரவுடி ராஜ்யத்திற்கு எதிரானது.”

kovilpatti-rsyf-demo-1தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தூத்துக்குடி.

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

போராட்டம் இது போதாது…போராடு இது பேயாட்சி…!

சென்னை சட்ட கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

kovai-rsyf-demo-supporting-law-students-3

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை

  1. பாவம் வினவு! எங்கே போராட்டம் நடந்தாலும் ஆதரித்து கட்டுரை எழுதுகிறது. அத்துடன் நில்லாமல் ஒரு சிறு கூட்டத்தை வைத்து பெரிய கூட்டம் போல குளோசப்பில் போட்டோ எடுத்து விளம்பரம் செய்கிறது. இதுதான் இப்போது நடக்கும் சட்டக்கல்லூரி மாணவர் போராட்டமும் அதுபோல்தான்.

    மாதொருபாலன் என்ற நாவலை எழுதிய பெருமாள்முருகன் அவர்களை வைத்து சிறிதுகாலம் காலம் தள்ளியது.

    இப்போது திருசெங்கோட்டில் பெண்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பெரிய போராட்டம் நடத்தி வருவது இவர்களுக்கு தெரியவில்லை போலும். பெண்கள் அமைப்புமட்டும் தனியாக இணைந்து வருவாய் துறை அலுவலகத்தில் பெரிய போராட்டம் நடத்தியதுடன் பல்வேறு கோசங்களை எழுப்பி உள்ளார்கள். இந்த அளவு குடும்ப பெண்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தியது இதுவே முதல் முறை. தங்களின் மானத்திற்கு இழுக்குவரும்போது தமிழ் பெண்கள் எப்படியெல்லாம் கொதித்தெழுவார்கள் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம். புத்தகத்தை தடை செய்ய கூறியதுடன் இதனை வைத்து பிழைப்பு நடத்தும் பிற்போக்கு தனமான முற்போக்கு(!) எழுத்தாளர்களையும் கைது செய்யும்படி கோசம் எழுப்பி உள்ளார்கள்.

      • தாஸ்மாக் கடை என்பது தனிப்பட்ட விவகாரம்! இதில் தங்கள் வீட்டில் உள்ளவர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளார்கள். இதற்கு போராட்டம் தேவையில்லை. அனைத்துமக்களும் தங்கள் விட்டில் உள்ளவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தால் இந்த தாஸ்மாக் தானாகவே போய் விடும்.

        ஆனால் தங்கள் மானத்திற்கு சிலர் விலை பேசும்போது அதனை தடுத்து நிறுத்த இப்படி ஆர்பாட்டம் நடத்துகிறார்கள். தாஸ்மாக் கடைக்கும் தன்மான பிரச்சனைக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு தெரியவில்லை போலும். உங்கள் வீட்டில் உள்ள பெண்களைப்பற்றி இது போன்று எழுதினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா!

      • ///all working women are prostitutes///

        அவர் எந்த மதத்தை சார்ந்த பெண்களை அல்லது அந்த ஜாதியை சார்ந்த பெண்களை பற்றி இப்படி கூறினார் என்று நிங்கள் கூறவில்லை. அவர் கூறியது இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ பெண்களையும் தேர்த்துதான என்பதை நீங்கள் விளக்கவில்லை. உங்களைப் போன்றவர்கள் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி அதனை உணமையாக்க முயற்சிக்கிறீர்கள். இதற்கு பெயர்தான் “கோயாபல்ஸ்” தியரி என்பது. இதனை எத்தனை காலம்தான் கூறி மக்களை ஏமாற்றுவீர்கள் பார்க்கலாம்!!!

    • மு.நாட்ராயன்,

      அந்த பெண்களெல்லாம் போராடியது சரி தான் எதுக்குப் போராடினோம் என்பது அவர்களுக்குத் தெரியுமா? எனக்கு தெரிந்த உறவுக்காரர்கள்(பெண்கள்-மோரூர்-நல்லபுல்லியம்மன் கோவிலருகே – திருசெங்கோடு) கூட போனார்கள். அவர்களிடம் கேட்டதற்கு, எவனோ பெருமாளாமே, நம்ம சாதிப் பொம்பளைகளைப் பற்றிக் கேவலமாக எழுதியிருக்கானாம். அதான் எதிர்ப்புத் தெரிவிக்க போனோம். சரி அப்படி என்ன கேவலமா எழுதியிருக்காங்க என்று படித்துப் பார்த்தீர்களா என்றுக் கேட்டதற்கு, ஒரு வரி கூட படிக்கவில்லை என்று பதில் வந்தது.

      என்ன எதுக்கு என்று ஒரு வரி கூட படிக்கவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்னாள் ஆர்.எஸ்.எஸ் முன்னோடி கோவல்கர் எழுதியதை விடவா இவர் எழுதி விட்டார்.
      இந்த மாத புதிய ஜனநாயக இதழில் இதைப் பற்றி(கொவல்கரின் வார்த்தைகள்) தோழர் மருதையன் எழுதியிருக்கிறார்.

      அதாவது “இன்று கலப்பினங்கள் மீதான சோதனைகளை விலங்குகள் மீது தான் செய்துப் பார்க்கிறோம். அதை மனிதர்கள் மீது செய்து பார்ப்பதற்கு அறிவியலாலர்களுக்குத் துணிவில்லை. இன்று நாம் காணும் கலப்பினத்திற்கு அறிவியல் காரணமல்ல கீழ்த்தரமான காமமே காரணம். இந்த விடயத்தில் நம் முன்னோர்கள் சோதனைகளைப் பார்ப்போம். கலப்பினை சேர்க்கை மூலம் மனிதர்களை மேம்படுத்தவே நம்பூதிரி பார்பனர்களை கேரளத்தில் குடியேற வைத்தனர். நம்பூதிரி குடும்பத்தின் முதல் மகன் வைசிய,சத்ரிய,அல்லது சூத்திர பெண்ணை தான் மணக்க வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. இதை விட தைரியமான இன்னொரு விதி என்னவென்றால், எந்த வர்க்கத்தை(சாதி) சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரி தான் அப்பனாக இருக்க வேண்டும். அதற்கு பின்னர் தான் அவளது கணவனுக்கு பிள்ளை பெற்றுத் தர வேண்டும். இன்று இதை ஒழுக்க கேடு என்றும் கூறுவர். ஆனால் இது முதல் பிள்ளைக்கு மட்டுந்தான் பொருந்தும் என்பதால் ஒழுக்க கேடு ஒன்றும் கிடையாது……..என்று போகிறது.

      ஆனால் பின்னர், கோவல்கர் எழுதிய நூற்களின் தொகுப்பில் இந்த வரிகளை நீக்கி விட்டுள்ளனர் ஆர்.எஸ்.எஸ் கடப்பாரைகள்.

      உண்மையில் நாம் இந்த வரிகளை ஆயிரக்கணக்கில் நகலெடுத்து நாடு முழுவதும் உள்ள பெண்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறன்.

      நன்றி.

      • ‘வினவு’ போன்ற மக்கள் விரோத இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் எதெற்கெடுத்தாலும் இந்துக்களையும் அதன் சார்பு அமைப்புக்களையும் குறை சொல்வதே தொழிலாக கொண்டு உள்ளன. இஸ்லாம் ஒரு பெரிய மதசார்பற்றது எனபது போல் ஒரு பொய் மூட்டையை அவிழ்த்துவிடுகின்றன! ஆனால் உலகம் எங்கும் இஸ்லாமியத்தால் இஸ்லாமியத்துவத்தால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை போலும். இதனை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. அதுபோன்று ஒரு சிறு நிகழ்வு இந்துக்களுடன் நடந்தால் உடனே அதனை பெரிதுபடுத்தி அவதூறு செய்துவருகிறது.மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்! அதனால் தான் ஒவ்வொரு தேர்தலிலும் இதற்கு தக்க பாடம் கற்று கொடுக்கிறார்கள்.

        ///இந்த வரிகளை ஆயிரக்கணக்கில் நகலெடுத்து நாடு முழுவதும் உள்ள பெண்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்///
        அத்துடன் பெருமாள் முருகன் எழுதிய நாவலில் உள்ளவரிகளையும் நகலெடுத்து அனைத்து பெண்களிடமும் சேர்பதுடன் நன்றாக படித்து காண்பியுங்கள். நீங்கள் செய்யாவிட்டாலும் திருச்செங்கோடு மக்கள் செய்வார்கள். உங்களைப் போன்றவர்களின் முகத்திரையை கிழிப்பார்கள். இந்த நாவல் உண்மைதான் என்று அங்கு சென்று உங்கள் தோழர்களுடன் ஒரு போராட்டம் நடத்துங்கள் பார்க்கலாம்!!

      • பெருமாள் முருகன் நாவலையும் அதைப்பற்றிய விவாதங்களையும் பார்த்து சிங்கள இணையத்தளங்களில் இப்படிக் கூறிச் சிரிக்கிறார்கள். 🙂

        “Tamil writer quits after book sparks protests in India.

        Imagine a world where these monkeys have a country of their own… :)”

    • ஐயா நாட்ராயன், உங்கள் கவுண்டர் சாதிப் பெண்களை நீங்கள் வீட்டில் மிகவும் மரியாதையாக நடத்துகிரிஈர்கள் என்று ஊருக்குத் தெரியும்! அவர்களின் தமிழ் இலக்கிய வாசிப்பு, எழுதப்படும் நாவல்களை தேடித்தேடி படிக்கும் இயல்பும் தெரியும், நீங்கள் அவர்கள் கேர்காமலேயே எவ்வளவோ நாவல்கள் கவிதைகள் என்று வாங்கித் தந்து படிக்கவைத்து, உங்களுக்குச் சமமாக உர்கார வைத்து இலக்கிய விவாதங்கள் நடத்துவதும் தெரியும்! குடும்பப் பெண்களை அக்குடும்ப ஆண்களைவிட அங்கே வேறு யார் கேவலப்படுத்த முடியும்? ஆனால் நாட்ராயன் அப்பெண்கள் தமது அவமானத்திற்கு எதிராக வெகுண்டெழுந்துவிட்டதாகக் கூறினால் அதனை நாம் நம்பவேண்டும்! அப்படி அவர்கள் உண்மையிலேயே வெகுண்டெழும்போது முதலில் வெளக்கமாத்து அடிவாங்குபவர்கள் அவர்கள் வீட்டு ஆண்களாகத்தான் இருப்பார்கள், நீங்களும்தான் நாட்ராயன்!

      • ///உங்கள் கவுண்டர் சாதிப் பெண்களை நீங்கள் வீட்டில் மிகவும் மரியாதையாக நடத்துகிரிஈர்கள் என்று ஊருக்குத் தெரியும்///

        உங்கள் ஜாதி பெண்களை நீங்கள் உங்கள் வீட்டில் எப்படி வைத்திருக்கிறீர்கள் என்று நீங்கள் சொல்லவில்லையே ஏன்? தமிழ்நாட்டில் உள்ள பிற ஜாதி பெண்களை அவர்கள் எப்படி வைத்திருக்கிறார்கள் என்று ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். எழுதுங்கள்!! உங்களை தமிழர்களின் தலைவராக போற்றப்படுவீர்!!!! தமிழர்களை காக்க வேண்டியது ஜாதி மட்டுமே. உங்களைப் போன்றவர்களின் புண்ணியத்தால் ஜாதி இன்னும் வளரும். மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களையும் நீங்கள் ஜாதியால் வென்றுவிட்டீர்கள். வினவுவின் இஸ்லாமியத்துவமும் உங்களின் ஜாதியும் என்றென்றும் இருக்க வேண்டும்!!வாழ்க நீவீர்!!!!!

        • வாங்க ஐயா “நாட்டாம நாட்ராயன்”! (இவர்தான் எல்லாத்துக்கும் வாலன்ட்டரியா வந்து தீர்ப்பு சொல்றாரே!) உங்க தமிழே இப்படித்தானா, இல்ல ஆத்திரத்தில் இருந்த சிறு மதியையும் இலந்துவிட்டீரா? அது எப்படியும் போகட்டும், ‘நீ யோக்கியனா’ என்று கேட்டால், நீங்க எல்லாம் யோக்கியமா’ன்னு கேக்குறிங்க. ‘வேறொரு சாதிக்காரன் என்னைத் திட்ட வந்துட்டான்’ என்று முடிவுக்கு வரும் அளவுக்குத்தான் உங்களால் சிந்திக்க முடிகிறது என்றால், உங்களிடம் எல்லாம் என்ன மயிர்பிளக்கும் விளக்கங்கள் சொல்லி என்ன ஆகப் போகிறது? தங்கள் சாதிப் பெண்களைக் களங்கப்படுத்துகிறார்கள், அதுவும் பிறர், என்று சொல்லும் தகுதி எந்த பார்ப்பனிய, அரைப் பார்ப்பனிய சாதிக்கும் கிடையாது. சாதிப் படிநிலை தாளத்தால பெண்களின் (அவர்களின் உழைப்புப் பாத்திரம் காரணமாக) சுதந்திரமும் ஓரளவு அதிகரிக்கத்தான் செய்கிறது. இங்கு நான் கேற்பது: உங்கள் குடும்பப் பெண்களை ஆகக் கேவலமாக நடத்தி, அடிமையைப் போல வைத்திருக்கும் நீங்கள் அவர்களின் மான அவமானத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி உள்ளது? இதில் ராமதாசு, இசுலாம் என்று கதை வேறு! கீழ்சாதி இளைங்கர்களின் ஜீன்சுக்கும் கூலிங் கிளாசுக்கும் மயங்கி தங்கள் சாதிப் பெண்கள் அவர்களோடு ஓடிவிடுகின்றனர் என்று சொல்லும் உங்கள் எல்லோருக்கும்தான் இது: அப்படி அவர்கள் உண்மையிலேயே வெகுண்டெழும்போது முதலில் வெளக்கமாத்து அடிவாங்குபவர்கள் அவர்கள் வீட்டு ஆண்களாகத்தான் இருப்பார்கள், அதில் உங்களுக்குப் பங்கில்லாமல் இருந்தால் கொஞ்சம்கூட நல்லா இருக்காது “நாட்டாம நாட்ராயன் ஐயா…”

  2. கண்டிப்பாக இந்த பெண்கள் யாரும் மாதொருபாகன் நாவலை படித்திருக்க மாட்டார்கள்…

  3. ///சரி அப்படி என்ன கேவலமா எழுதியிருக்காங்க என்று படித்துப் பார்த்தீர்களா என்றுக் கேட்டதற்கு, ஒரு வரி கூட படிக்கவில்லை///

    ஒரு போராட்டம் என்றால் அனைத்தையும் தெரிந்து கொண்டு போராடுவதில்லை. ஒரு சிலருக்கு இது தெரியாமல் இருக்கலாம். அனால் அந்த போராட்டத்தில் ஈடுபட்ட பல பெண்கள் விலாவாரியாக அந்த நாவலின் கருப்பொருளை தெரிந்து வைத்துள்ளார்கள். போராட்டத்தின் போது அவர்கள் இட்ட கோசங்களை நீங்கள் கேட்கவில்லை போலும். எந்த போராட்டத்தில் அனைத்தையும் தெரிந்து கொண்டுதான் அங்கு வந்துள்ளார்கள் என்று கூறமுடியுமா? எதோ அங்கு கூடி இருக்கும் சிலர் வந்து இருக்கிறர்கள.

    ஒரு புத்தகத்தை முழுமையாக படித்து ஆய்வு செய்தவர்கள்தான் போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்றால் எந்த போராட்டமும் நடக்கக் கூடாது. அனைத்தையும் அறிந்தவர்கள் யாரும் இல்லை.

    தேர்தலை புறக்கணியுங்கள் ஓட்டுப்போடாதே என்று கோஷமிட்டு சென்றவர்களிடம் “நாட்டுக்கு” ஒரு தலைமை வேண்டுமே அதற்கு எந்த வழிமுறைகளை கையாளலாம் மாற்று வழிமுறை என்ன என்று கேட்டதற்கு யாருக்கும் பதில் சொல்ல தெரியவில்லை.

  4. Discussions have gone over to Madhorubagan.

    Regarding the proposed shifting of Law College: Because the location, both High Court and Law college can not be expanded/modified/modernised. One of them should be shifted. Better Law college be shifted.

    • It is not because of expansion, it is beacause of law students protecting for rights like Eelam, Anti-hindi movement etc. Please do read the article fully.

      Govt dont want the students to be politilized. They are always steadying towards generate a popcorn generation, whom will not ask or strike about their rights.

  5. ////Discussions have gone over to Madhorubagan////

    இதுவும் ஒரு சட்டப்பிரச்சனைதான்!! சட்டக்கல்லூரி சட்டத்தை பயிற்றுவிக்கும்!!! இங்கே சட்டப்படி பெண்கள் தங்களது மானப்பிரச்சனையை கூறுகிறார்கள்!! இதற்கு சட்டம் என்ன சொல்லுகிறது என்று சட்டக்கல்லூரி மாணவர்களை வைத்து சோதிக்கிறோம். தவறில்லை!!! பொறுத்திருந்து பாருங்கள்!!!

  6. அரசியல் ரவுடிஸ்சத்தை தடுக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். மக்களை பாதுகாக்கவேண்டிய காவல்த்துறை அரசியல் ரவுடியாக மாறியிருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்றே உணர்கின்றேன். இதை தடுக்க மாற்றம் ஒன்றே வழி!, இப்போது தேவை.அந்த சக்தி மாணவர்களிடம் தான் இருக்கிறது. அதற்கு உங்களின் ஆதரவு தேவை.

  7. ///மக்களை பாதுகாக்கவேண்டிய காவல்த்துறை அரசியல் ரவுடியாக மாறியிருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்றே உணர்கின்றேன்////

    காவல் துறையினர் ஏதேனும் ஒரு குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்தால் காவல் துறையினரின் அட்டுழியங்கள் என்று இந்த முற்போக்கு(!) எழுத்தாளர்கள் சங்கு ஊதுகிறார்கள் . காவல்துணையினரை கண்டிக்கின்றனர். இது காவல் துறையினரின் மனநிலையை பாதிக்கிறது.

    _________

Leave a Reply to மு.நாட்ராயன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க