privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்திருவாரூர் : உழைக்கும் மகளிர் தினத்தில் சூளுரைப்போம்!

திருவாரூர் : உழைக்கும் மகளிர் தினத்தில் சூளுரைப்போம்!

-

மார்ச்– 8 உலக மகளிர் தினம். பெருவாரியான பெண்கள் மகளிர் தினத்தில் வீரம் செறிந்த வரலாற்றைப் பற்றியும் பெண்ணுரிமை என்னும் சொல்லாடலின் ஆழ்ந்த அர்த்தத்தையும் அறியாமலே இருப்பது இன்று நம்மை வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இன்னொரு பக்கம் ஆளும் வர்க்கப் பிழைப்புவாத அமைப்புகள் இந்நாளைக் கொச்சைப்படுத்திக் கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகிப் போட்டி, நடனம், குத்தாட்டம் என அறியாமை இருள் நிரம்பிய நுகர்வு கலாச்சார வெறியிலும் ஆழ்த்தி வைக்கின்றன.

17ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு புரட்சியின் போது பாரிசில் பெண்கள் அடிமைத்தனமாக நடத்தப்படுவதை எதிர்த்துக் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கிளர்ச்சியில் ஈடுப்பட்டனர். பெண்களோடு ஆண்களும் இணைந்து கொள்ள அந்த நாட்டு அரசாங்கமே ஆட்டங்கண்டது. இப்போராட்டம் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்கும் காட்டுத்தீ போல் பரவியது. இத்தாலியிலும் பெண்கள் தங்கள் வாக்குரிமைக்காக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அந்நாட்டு அரசு வேறு வழியில்லாமல் 1848 மார்ச் 8 அன்று வாக்குரிமையைக் கொடுத்தது. இது அனைத்துலகப் பெண்கள் தினம் மலர வித்தாக அமைந்தது.

நியூயார்க் நகரில் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் 16 மணி நேர வேலை செய்து மிகக் கொடூரமாகச் சுரண்டப்பட்டனர். அதை எதிர்த்து 1857–ல் உழைக்கும் வர்க்கப் பெண்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் இறுதியாக 1908-ல் வாக்குரிமைக்காகக் கொதித்தெழுந்து போராடியதில் அமெரிக்காவே அதிர்ந்து போனது. இவற்றின் விளைவு அனைத்துலகப் பெண்கள் மாநாடு 1910-ல் ஜெர்மன் கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடி உலக மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு, மார்ச் 8-ம் நாளை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடத் தீர்மானித்தனர். 1917-ல் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி நடந்த பின்பு 1920-ல் இருந்து மார்ச் -8 மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு தான் 8 மணி நேர வேலை, பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, வாக்குரிமை என அனைத்து உரிமையும் போராடித்தான் கிடைத்ததேயொழியே அரசு பாவ – புண்ணியம் பார்த்துக் கொடுக்கவில்லை.

சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்
ரசியாவில் 1917 அக்டோபர் புரட்சிக்கு சில மாதங்களுக்கு முன்பு மார்ச் 8-ம் தேதி, மோசமாகும் வாழ்நிலை, அடிப்படை உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, மற்றும் பற்றாக்குறையை எதிர்த்து பெருமளவு பெண்கள் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை நினைவுகூரும் விதமாக சோவியத் யூனியன் 1922 முதல் மார்ச் 8-ஐ உழைக்கும் மகளிர் தினமாக கொண்டாட ஆரம்பித்தது.

இப்படிப் பெண்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் இன்று தனியார்மயம்- தாராளமயம்-உலகமயம் எனும் சேற்றில் மூழ்கடிக்கப்படுகின்றன. ஐ.டி துறையில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் நவீனக் கொத்தடிமைகளாக இராப்பகலாகச் சுரண்டப்படுகின்றனர். ஷாப்பிங் மால்கள், ஜெராக்ஸ் கடைகளில் காலை முதல் மாலை வரை நொந்து கிடக்கின்றனர். விவசாயம் அழிக்கப்பட்டு விரட்டியடிக்கப்படும் பெண்களோ சித்தாள் வேலை தேடி வீதி வீதியாக அலைந்து பரிதவிக்கின்றனர். ஆயத்த ஆடைகள்,பஞ்சாலைகளிலும் தங்களின் இளமையை இழந்து விட்டுக் கோடிக்கணக்கான பெண்கள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இவை ஒருபுறம் போக, அரை நிலப்பிரபுத்துவ சமூகம் தாங்கிப் பிடிக்கும் ஆணாதிக்கப் பிற்போக்குத்தனமும், வளர்ச்சி என்ற பெயரில் திணிக்கப்படும் அமெரிக்க நுகர்வு வெறி வக்கிர கலாச்சாரமும், 6 வயது சிறுமி முதல் 60 வயது மூதாட்டி வரையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகி்ன்றன. பெண்களையும் சிக்கிக் சீரழிக்க வைக்கின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒவ்வொரு 7-வது நிமிடத்தில் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஒவ்வொரு 42 நிமிடத்திற்கும் ஒரு வரதட்சணை சாவு நடக்கிறது. இன்னும் இந்த புள்ளி விவரம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

அரசே முன்னின்று சாராயத்தை ஊத்திக் கொடுத்து, தமிழச்சியின் தாலியை அறுக்கிறது. அரசு அனுமதியுடன் பரப்பப்படும் ஆபாச இணையதளமும், ஆபாச பத்திரிகைகளும், போதைப் பொருட்களும் பெண்கள் தைரியமாகச் சமூகத்தில் நடமாட முடியாத நிலைக்கு ஆளாக்கியுள்ளது.

2013-ம் ஆண்டு டெல்லியில் ‘நிர்பயா’ என்ற மாணவி பாலியல் வல்லுறவுத் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து பெண்கள் – மாணவர்கள் போராட்டத்தையொட்டி அரசு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையில் கமிட்டி அமைத்து, அக்கமிட்டி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இழைக்கும் முதன்மைக் குற்றவாளிகள் சீருடையணிந்த போலீசு, துணை இராணுவம் மற்றும் இராணுவத்தினர் என்று கூறியது.

இவ்வாறு, பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறப்படும் அரசு எந்திரமே தற்போது பெண்களுக்கு எதிராக மாறி நிற்கிறது. திரும்பவும் சட்டத்தைக் கடுமையாக்கி இந்தக் குற்றக் கும்பல்களிடமே கொடுப்பதில் என்ன பயன்? உழைக்கும் பெண்கள், போராடும் ஆண்களுடன் வர்க்கமாகத் திரண்டு இந்த அரசுக் கட்டமைப்பையே நொறுக்கித் தகர்த்தெறிந்து, மக்கள் அதிகாரத்தை நிறுவுவதே ஒரே வழி. இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

உலக மகளிர் தினத்தில் சூளுரைப்போம்!

மத்திய – மாநில அரசுகளே…

  • ஆபாச இணையதளங்களைத் தடை செய்!
  • சாராய ஆலைகளை, டாஸ்மாக்கை இழுத்து மூடு!
  • போதைப் பொருட்களைத் தடை செய்!

ஆளும் வர்க்கங்களால் ஏவப்படும் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு எதிரான

பேரணி – ஆர்ப்பாட்டம்

தொடக்கம் : நகராட்சி அலுவலகம் எதிரில், திருவாருர் – மாலை 4.00 மணி
நாள் : 07-03-2015 சனிக்கிழமை
இடம் : பேருந்து நிலையம் அருகில், திருவாரூர்மாலை 5.30 மணி

தலைமை :  தோழர் ஆசாத், மாவட்ட அமைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சிறப்புரை :
தோழர் கு.ம.பொன்னுசாமி, மாவட்ட அமைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழு.
தோழர் நிர்மலா,  மாவட்டத் தலைவர், பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.
தோழர் காளியப்பன், மாநில இணைச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

தகவல்

புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
திருவாரூர். தொடர்புக்கு : 9943494590

Email: rsyftvr1917@gmail.com
தொடர்புக்கு : 9943495900

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க