privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்கோலப் போட்டியா மகளிர் தினம் ? மதுரையில் ஒரு மாற்றம்

கோலப் போட்டியா மகளிர் தினம் ? மதுரையில் ஒரு மாற்றம்

-

சர்வதேச உழைக்கும் மகளிர் தின ஆர்ப்பாட்டம் – மதுரை

சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்மதுரையின் ஒத்தக்கடை பகுதியில் இந்த ஆண்டின் உழைக்கும் மகளிர் தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஒத்தக்கடை பகுதி மக்கள் பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் ஊடாக உழைக்கும் பெண்களின் நிலையை தெரிந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த தோழர்களுக்கு வீர வணக்கமும், ஜான்சி ராணி, ஹஜ்ரத் பேகம் போன்ற போராளிகளின் வீரத்தை உயர்த்தி பிடிக்கும் விதமாக முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

சர்வதேச உழைக்கும் மகளிர் தின ஆர்ப்பாட்டம் - மதுரை

  • பாடம் நடத்த ஆசிரியர் இல்லை, ரேசன் கடையில் சரக்கு இல்லை
  • பள்ளிக்கு அருகே டாஸ்மாக்,  எல்லா பக்கமும் டாஸ்மாக்கு, டாஸ்மாக்கை நடத்துவது அரசு
  • பெண்கள் நலத்துறை எதற்கு இருக்கு
  • நண்டு பிராண்டு லுங்கிக்கும், ஆக்ஸ்பிரே சென்ட்டுக்கும் மயங்குவதாக பெண்களைக்காட்டும் ஆபாச வக்கிர விளம்பரங்களை அடித்து நொறுக்குவோம்
  • கோலப் போட்டியும், அழகு போட்டியும், பெண்கள் தினத்திற்கு அழகல்ல
  • வர்க்க போராட்டத்திற்கு முன்கை எடுத்து வர்க்க போருக்கு வா தோழி

தலைமையுரை : தோழர் இராணி

தோழர் இராணி
தோழர் இராணி

மார்ச் 8 என்பது வெறும் கொண்டாட்டத்திற்கான ஒரு நிகழ்வு அல்ல. காதலிக்க மறுக்கும் பெண்ணுக்கு ஆசிட் வீச்சு; அதை மீறி காதலித்த பெண்ணுக்கு ‘கவுரவ’ கொலை.  போலீசும், சட்டமும், ஊடகங்களும் குற்றவாளிகளுக்கு சாதகமாக கட்டபஞ்சாயத்துகளாக செயல்படும் சூழலே இன்று நிலவுகிறது.

எனவே, தற்போதைய அரசு அமைப்பின் ஊடாக பெண் விடுதலையை சாதிக்க முடியாது . ஒட்டு மொத்த சமூக விடுதலையின் ஒரு அங்கமே பெண்விடுதலை. புரட்சியினூடாக சமூக விடுதலையையும், சமூக விடுதலையின் ஊடாக பெண் விடுதலையையும் சாதிக்க வர்க்க போராட்டத்திற்கு பெண்கள் வர வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

பாடல் : கவிமலர்

பாடல் : கவிமலர்
பாடல் : கவிமலர்

தோழர் : கயல்விழி உரை

தோழர் : கயல்விழி உரை
தோழர் : கயல்விழி உரை

தோழர் உரையாற்றுகையில் பெண்களை திசைதிருப்பும் மூன்று விஷயங்களை பட்டியலிட்டார். 1. பெண் தெய்வ வழிபாடு, 2. தொண்டு நிறுவனம், 3. சுய உதவி குழு

1. பெண் தெய்வ வழிபாடு என்பது ஒரு பெண்ணை அவள் விருப்பத்திற்கு மாறாக அனுபவித்து கொலை செய்துவிடுவதும், பிறகு குற்றத்திலிருந்து தப்பிக்க அவளை தெய்வமாக மாற்றிவிடுவதும், இதன்மூலம் மேலும் பெண்களை அடிமைப்படுத்துவதும் என்ற நடைமுறைக்குத்தான் பெண் தெய்வ வழிபாடு உருவாக்கப்பட்டது என அதன் வரலாறு இழிவாக உள்ளது.

2. தொண்டு நிறுவனங்களைப் பெறுத்தவரை போராடும் மக்களுக்கு ஆதரவாக காட்டிக் கொண்டாலும் பெண்களின் முக்கிய பிரச்சினையாக டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களில் முக்கிய குற்றவாளியான அரசை அம்பலப்படுத்துவதில்லை; போலீஸ் அதிகார வர்க்க ஊடகங்களை அம்பலப்படுத்துவதில்லை.

மாறாக, டாஸ்மாக்கை ஒழிப்பதைவிட மக்கள் குடிக்காமல் இருந்தால் சரியாகி விடும் என்றும், பெண்கள் மேல் ஏவப்படும் வன்கொடுமைகளுக்கு பெண்கள் உடை உடுத்துவது சரியில்லை என்றும் கூறி பாதிக்கப்பட்டோரின் மீதே குற்றத்தை திருப்பி விடுகின்றன.

தோழர் சினேகா உரை

தோழர் சினேகா உரை
தோழர் சினேகா உரை

மார்ச் 8 என்பது பெண்கள் கொண்டாட்டத்திற்கான தினமல்ல. மாறாக, ஏற்கனவே சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் ஆணாதிக்கச் சிந்தனைக்கும் இப்போது மக்களை சுரண்டும் மறுகாலனியாக்க கொள்கைகளுக்கும் நெருப்பு வைக்க சிந்திக்க வேண்டியதே மார்ச் 8 மகளிர் தினத்தில் ஆற்ற வேண்டிய கடமை.

பெண்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுத்து அவர்கள் மேம்பட இந்த முதலாளித்துவ அமைப்பு உதவியுள்ளதாக சில அறிவுதுறையினர் வாதிடுகின்றனர். ஆனால் நிலைமை வேறாக உள்ளது.  வீட்டிலும் சரி அலுவலகத்திலும் வேலைக்கு மிஞ்சிய வேலை. அலுவலகத்திற்கு செல்லும் முன்பே துணி துவைப்பது, பாத்திரம் விளக்குவது, சமையல் செய்வது என விடியும் முன்னே பெண் குழந்தைகளுக்கு வேலை துவங்கி விடுகிறது.

அலுவலகத்திலும் ஒரே வேலை செய்யும் ஆண்களுக்கு கூடுதல் சம்பளம் பெண்களுக்கு குறைவான சம்பளம் என்றுதான் இருக்கிறது. இப்படி வேலை சுரண்டலுக்காகத்தான் பெண்களை அதிக அளவில் முதலாளித்துவ நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கின்றனர். இதை மாற்ற முதலாளித்துவத்தை வீழ்த்தி ஒரு ஜனநாயக புரட்சியை நடத்துவதன் மூலம்தான் பெண்கள் விடுதலையை சாதிக்க முடியுமென்று அறைகூவல் விடுத்தார்.

தோழர் பாண்டி : பாடல்

தோழர் பாண்டி : பாடல்
தோழர் பாண்டி : பாடல்

தோழர் போஸ் : உரை

தோழர் போஸ் : உரை
தோழர் போஸ் : உரை

ஒத்தக்கடை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர் போஸ் பேசும் போது “உரிமைகள் மறுக்கப்படும் பெண்களுக்கு சம உரிமை கோரும் ஆர்ப்பாட்டமாக பெ.வி.மு நடத்துகிறது. குடும்பத்தில் தொடங்கி பள்ளி, கல்லுர்ரி, அலுவலகம் என அனைத்து பொது நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. இதைத் தடுக்க வேண்டிய அரசே போலீஸ், ராணுவம், நீதிமன்றம் ஆகியவற்றின் மூலம் பெண்கள் மேலான தாக்குதலை நடத்தி கொண்டிருக்கிறது. அத்தகைய அரசை தகர்த்தெறிவதற்காக போராடாமல் அதற்காக வேலை செய்யாமல் பெண் விடுதலை சாத்தியமாகாது” எனக் குறிப்பிட்டார்.

நாடகம் : பெ.வி.மு. குழுவினர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

டாஸ்மாக் ஆல் பாதிக்கப்படும் குடும்பத்தை மையமாக வைத்து பெ.வி.மு தோழர்கள் நடத்திய நாடகத்தின் இறுதியில், “டாஸ்மாக் கை நடத்தி நம் குடியை கெடுப்பதே இந்த அரசுதான். எனவே டாஸ்மாக்கை மூடச் சொல்லி அரசிடம் மனு கொடுப்பது முட்டாள்தனம். எனவே, நாமே அதை அடித்து நொறுக்கினால்தான் உண்டு” என்று முடிந்தது மிக எழுச்சிகரமாக இருந்தது.

தூரத்தில் இருந்து பார்த்துகொண்டிருந்தவர்கள் எல்லாம் அருகே கூட்டமாக வந்து பார்த்தும் வாகனங்களில் செல்வோர் நிறுத்திவிட்டு வந்தும் பார்த்தபோது நாடகத்தின் எழுச்சிகரமான உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது.

தோழர் வாஞ்சிநாதன்

டாஸ்மாக்கின் வக்கிரங்கள் எத்தனை குடும்பங்களை பாதித்தாலும் அதற்கெதிராக எத்தனை போராட்டங்களை நடத்தினாலும் டாஸ்மாக் வருமானத்தை வைத்துதான் அரசாங்கத்தையே நடத்த முடியும் என்று திமிரோடு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது, அரசு.

நாங்கள் டாஸ்மாக்கை மூடினால் பக்கத்து மாநிலத்துக்காரன் வந்துவிடுவான் என்று அரசு கூறும் காரணம் எப்படி இருக்கிறது என்றால் நான் என் மனைவி பக்கத்திலேயே இல்லாவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன் வந்து விடுவான் என்று கூறுவது போல் கேவலமாக‌ உள்ளது. ஆனால் இதுவெல்லாம் பித்தலாட்டம். டாஸ்மாக்கை நடத்துவதே இந்த அரசுதான், அதுவே அதை மூடாது எனவே இப்போது தோழர்கள் நாடகத்தில் கூறியது போல டாஸ்மாக்கை நாமே அடித்து நொறுக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும்.

சர்வதேச உழைக்கும் மகளிர் தின ஆர்ப்பாட்டம் - மதுரைமார்ச் 8-ல் மகளிர் தினத்தை உலகெங்கும் கொண்டாடுகிறார்கள். ஆனால் இந்த டாஸ்மாக்கால் பெண்கள் பாதிக்கப்படும் காரணத்தை எந்த ஊடகங்களும் கட்சிகளும் பேசுவதில்லை. நாங்கள்தான் இப்படி தெருவெங்கும் கூட்டம் போட்டு மக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கிறோம்.

மூன்று வருடத்திற்கு முன்பு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்கின்ற பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட நிகழ்வு பெரும் புயலைகிளப்பியது. இப்போது லண்டன் பி.பி.சி அந்த குற்றவாளிகளை பேட்டி எடுத்து ஒளிபரப்பியுள்ளது. இதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்து உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க போன்ற கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அப்படி என்னதான் அந்த பேட்டியில் உள்ளது என்றால், அதில் அந்தக் குற்றவாளிகள் நாங்கள் மாட்டிக் கொண்டவர்கள் அவ்வளவுதான். ஆனால் இந்தியாவில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் என அனைவருமே இப்படித்தான் உள்ளனர். வாய்ப்பு கிடைத்தால் பெண்களை வன்புணர்ச்சி செய்வதில் எந்த ஆணும் இந்தியாவில் சளைத்தவனல்ல என்று இந்திய ஆண்களின் உண்மை முகத்தை அப்படியே கூறியுள்ளான். உண்மையில் இந்திய ஆண்களின் மனநிலை பெரும்பாலும் அப்படித்தான் உள்ளது. பல சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேல் பாலியல் வன்புணர்வு வழக்கே நிலுவையில் உள்ளது. உண்மையில் இந்த கூட்டத்தின் நோக்கமே ஆண்களின் இந்த வக்கிர புத்தியை சுட்டிகாட்டுவதுதான். .

இன்னொரு புறம் பெண் தனக்கான துணையை தேடும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. மூன்று வருடத்திற்குமுன்பு தர்மபுரி நாயக்கன் கொட்டாயில் பாமாகா வின் வன்னிய சாதி வெறியால் திவ்யா இளவரசன் ஜோடி பிரிக்கப்பட்டது. அதே போல் தற்போது உசிலம்பட்டியில் தேவர் சாதி வெறியால் விமலாதேவி படுகொலை செய்யப்பட்டது என்று தொடர்ந்து நடந்துகொண்டுதானிருக்கின்றது. இரண்டிலும் போலிசும் நீதிதுறையும், அரசும் எப்படிநடந்து கொண்டது. வெளிப்படையாக சாதி வெறியர்களுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொண்டது.

போலீசை பற்றி நமக்கு நிறையவே தெரியும் ஆனால் நீதி துறையும் நீதிபதிகளும் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

நீதிபதிகள் மேல் சக பெண் நீதிபதிகளே கொடுத்த பாலியல் தாக்குதல் வழக்குகள் இன்னும் விசாரிக்காமல் நிலுவையில் இருக்கின்றன. இப்படித்தான் அதிகார வர்க்கமும் இருக்கின்றது.

காதலை மறுத்தால் பெண்கள் மேல் ஆசிட் வீசுகிறார்கள், காதலித்தால் குடும்பத்தாலேயே படுகொலை செய்யப்படுகிறார்கள். இதைத்தான் பெண்களுக்கு முடிவெடுக்கவே உரிமை இல்லாத சமூகம் என்கிறோம். இதைத்  தடுக்க வேண்டிய அரசும் அதிகார வர்க்கமும் சீரழிந்த போயுள்ளன.

அதனால், இந்த சமூக கட்டமைப்புக்குளாகவே பெண்களின் விடுதலையை பெற்றுவிடலாம் என்று நினைத்தால் அது முட்டாள்தனம். சோசலிச அடிப்படையிலான ஒரு புதிய ஜனநாயக அமைப்பில் தான் சமூக அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சமூக விடுதலை சாத்தியம்.

அப்படிப்பட்ட ஒரு ஜனநாயக சமூகத்தில் தான் பெண்களும் விடுதலையும் சாத்தியம். எனவே சீரழிந்து சீழ்பிடித்து போயுள்ள  இந்த சமூக‌த்தை மாற்றி ஒரு புதிய சமூகத்தை நிறுவும் வகையில் புரட்சிகர இயக்கமான பெண்கள் விடுதலை முன்னணியில் பெண்கள் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

உழைக்கும் மக்கள் பெருவாரியாக வாழக்கூடிய ஒத்தக்கடை பகுதியில் பெ.வி.மு வின் நாடகமும் ஆர்ப்பாட்ட உரையும் அம்மக்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் அமைப்பை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பகூடிய வகையில் நிகழ்ச்சி அமைந்தது என்றால் மிகையாகாது.

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி,
மதுரை