privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – மார்ச் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் – மார்ச் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

-

puthiya-jananayagam-postபுதிய ஜனநாயகம் மார்ச் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. செய்யாறு டாஸ்மாக் கடை உடைப்பு :  மக்களின் போர்க்கோலம்!

2. மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேசத்துரோகி!

3. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி :  மாற்றா? ஏமாற்றா?
தோற்றுப் போய், நிலைகுலைந்து மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கும் இந்த அரசமைப்பைச் சீராக்க முடியும் என்ற பிரமையை உருவாக்குகிறது ஆம் ஆத்மி.

4. மோடி ஆட்சியில்.. யாருக்கு நல்ல காலம்! யாருக்கு கேடுகாலம்!!
இந்து மதவெறியர்களும் அவர்களுக்கு நெருக்கமான அரசு பயங்கரவாதிகளும் சிறையிலிருந்து வெளியே வர, இக்கும்பலை எதிர்த்துப் போராடுபவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

5. தெருக்களில் இந்து பயங்கரவாதிகள்! பதவிகளில் அரசு பயங்கரவாதிகள்!!
குஜராத்தில் நடந்த போலி மோதல் கொலை வழக்குகளிலிருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டிருப்பதையும் வன்சாரா உள்ளிட்ட போலீசு அதிகாரிகளுக்குப் பிணை வழங்கப்பட்டிருப்பதையும் “அநீதி” என்ற வார்த்தைக்குள் மட்டும் அடக்கி விட முடியாது.

6. சிறீரங்கம் : தமிழகத்தின் அவமானச் சின்னம்
ஜெ. கும்பலின் முகத்தில் கரியைப் பூச ஒரு வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும், எவ்வித அறநெறியுமின்றி பணத்துக்கு விலை போயினர். ரூ 5,000-க்கும் ரூ 2,000-க்கும் விலை பேசப்பட்டு தன்மான உணர்வின்றி தரம் தாழ்ந்து போயினர்.

7. அதிர வைக்கும் அதிகார வர்க்க ஊழல்கள்
தனியார்மயத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டையும் மக்களையும் கொள்ளையடிப்பதில் ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகார வர்க்கம் விஞ்சி நிற்கிறது.

8. போபால் முதல் இராணிப்பேட்டை வரை  முதலாளி வர்க்கத்தின் ஆதாயக் கொலைகள்!
வளர்ச்சி, வேலைவாய்ப்பு, அந்நியச் செலாவணி என்ற மோசடியான சொல்லடுக்குகள், தொழிலாளி வர்க்கம் கொல்லப்படுவதையும், முடமாக்கப்படுவதையும் குற்றச் செயலாகக் கருதுவதை நிராகரிக்கின்றன.

9. சுண்டைக்காய் கால்பணம்! சுமைகூலி முக்கால் பணம்!!
தனது தேவையில் வெறும் 3.22 சதவீத மின்சாரத்தை, 4,940 கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்து தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குகிறது, தமிழக மின்சார வாரியம். இது, அதனின் ஆண்டு வருமானத்தில் 15 சதவீதமாகும்.

10. சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றங்களின் கள்ள ஆட்டம்
சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில் பவானிசிங் அரசு வக்கீலாக ஆஜராகி வருவது சட்டவிரோதமானது எனத் தெரிந்தும் உச்ச, உயர்நீதி மன்றங்கள் இந்த அநீதி தொடர்வதை அனுமதித்து வருகின்றன.

11. தனியார்மயம், கார்ப்பரேட்மயம்  மருத்துவத் துறையைச் சீரழித்து வரும் நோய்கள்!

12. ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன?

புதிய ஜனநாயகம் மார்ச் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

  1. 2. மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேசத்துரோகி !

    please Release this essay in Vinavu as a separate one

  2. இத்த இதழில் தேசத்துரோகி என்ற வார்த்தை சுருக்கமாகவும் கூர்மையாகவும் யாவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் நீண்ட விளக்கங்கள் தேவையின்றியும் அமைந்துள்ளது.
    பின் அட்டையில் காட்சியும் கமெண்டும் அருமை. இதுபோன்று தொடர்ந்து இடம்பெறும் வகையில் இருந்தால் சிறப்பாக இருக்கும். படிப்பதற்கும் பார்ப்பதற்கும் உணர்வதற்கும் … பல வார்த்தைகளால் பக்கம் பக்கமாக எழுதுவதை விட சிறப்பாக இருக்கிறது.
    புதிய ஜனநாயம் அட்டைப்படம் தொடர்பாக வழக்கமாக உள்தலைப்பு தொடர்பான ஒரு தலைப்பை மட்டும் அட்டையில் போடுகிறீர்கள். அத்துடன் இவ்விதழில் இடம்பெற்றுள்ள முக்கியமான கட்டுரைகளின் தலைப்புகளை ஆர்வத்தைத் தூண்டும் வகையில் முன் அட்டையில் பிரசுரிக்கலாம். ஃப்ரண்ட்லைன் போன்ற பத்திரிக்கைகளில் இடம்பெறுவது போல.

Leave a Reply to இளையோன். பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க