privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்பாலிலும் இருக்குதய்யா பார்ப்பனியம்

பாலிலும் இருக்குதய்யா பார்ப்பனியம்

-

லையும் மலையும் சார்ந்த இடமும் எதுவென்று கேட்டால் குறிஞ்சி என்று சொல்வோம். பாலும் பால் சார்ந்த இடமும் எதுவென்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? பார்ப்பனியம் என்று சொல்கிறது தேசிய மாதிரி ஆய்வு கழகம் (National Sample Survey Organization). இதுபற்றிய செய்தி, இந்து ஆங்கில நாளேட்டில் 19-03-2015 அன்று “உண்ணும் உணவை சாதியும் தீர்மானிக்கிறது” எனும் தலைப்பில் வெளிவந்திருக்கிறது.

பார்ப்பன ஆதிக்கமும் பால் பொருள் நுகர்வும்
பால் பொருட்களுக்கான நுகர்வு பார்ப்பன ஆதிக்க சாதிகளிடையேதான் மிகுந்து காணப்படுகிறது.

மிகச்சமீபத்தில் NSSO, இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகக் குழுக்கள் செலவிடும் தனிநபர் செலவினங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. நாடெங்கிலும் உள்ள சீர் மரபினர் (ST), பட்டியல் வகுப்பினர் (SC), பிற்படுத்தப்பட்ட சாதிகள் (OBC) மற்றும் உயர்சாதிகளிடையே (FC) நடத்தப்பட்ட ஆய்வில் கல்வி, வேலைவாய்ப்பு, உணவுக்காக செலவிடும் தொகை என பல்வேறு வாழ்நிலைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதில் தனிநபர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு உணவிற்காக செலவிடும் தொகை அவர் சார்ந்திருக்கிற சாதியைப் பொறுத்து பாரதூரமாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது ஆய்வு.

குறிப்பாக பாலும் பால் சார்ந்த பொருட்களுக்காகவும் ஒவ்வொரு சாதிகளும் செலவிடும் தொகையைக் கணக்கிடுற பொழுது, மாதம் ஒன்றுக்கு தனிநபர் செலவினமாக, கிராமப் புறங்களில் சீர் மரபினர் 61 ரூபாயும், பட்டியல் வகுப்பினர் 89 ரூபாயும், பிற்படுத்தப்பட்ட சாதிகள் 119 ரூபாயும் உயர் சாதிகள் 156 ரூபாயும் செலவிடுகின்றனர். இதே நகர்ப்புறமாக இருக்கிற பொழுது, சீர் மரபினர் 122 ரூபாயும், பட்டியல் வகுப்பினர் 140 ரூபாயும், பிற்படுத்தப்பட்ட சாதிகள் 154 ரூபாயும் உயர் சாதிகள் 154 ரூபாயும் செலவிடுகின்றனர்.

கும்பகோணம் டிகிரி காப்பி
“கும்பகோணம் டிகிரி காப்பியின் ரகசியம் தெரியுமா?” என்று பஞ்சாமி ஐயரின் சிறப்பு குறித்து மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு மகாமத்யமே பாடி இருக்கிறது

சுருக்கமாகப் பார்க்கிற பொழுது கிராமப்புறங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர் சாதிகள் மட்டுமே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்காக ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்டவர்களின் செலவிடும் தொகையைச் செலவிடுகின்றனர். நகர்ப்புறங்களில் வாழ்வியல் சூழ்நிலைகள் கிராமங்களை விட வேறாக இருப்பினும் பால் பொருட்களுக்கான நுகர்வு பார்ப்பன ஆதிக்க சாதிகளிடையேதான் மிகுந்து காணப்படுகிறது.

வெண்ணெய் திருடித்தின்ற யாதவ குலத்து கிருஷ்ணனின் பெயரில் இயங்கும் ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பகம் ஹை கிளாஸ் பார்ப்பனர்களுக்காக பிரேத்யகமாக நேந்துவிடப்பட்ட ஒன்று. இதுதவிர “கும்பகோணம் டிகிரி காப்பியின் ரகசியம் தெரியுமா?” என்று பஞ்சாமி ஐயரின் சிறப்பு குறித்து மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு மகாமத்யமே பாடி இருக்கிறது. ஏழை ஆதிக்க சாதிகள் என்றாலும் அம்மையப்ப முதலியார்-கோதாவரி குடும்பம், காபி பொடி டப்பாவைச் சுரண்டுவதைக் காட்டுவதன் மூலமாக 80-களில் வெளிவந்த படங்கள் பார்ப்பனிய பண்பாட்டைக் கச்சிதமாக நிறுவி வந்திருக்கின்றன. மற்றபடி பலகாரம் சாப்பிட்டு நரசுஸ் காபி குடிக்கிற பேஷ் பேஷ் சாதிகளைத்தவிர மற்றவர்களுக்கு நீச்சத்தண்ணிதான் நீராகாரம்!

ஆக தாழ்த்தப்பட்டவர்கள் என்று வருகிற பொழுது பால் மற்றும் பால் சார் பொருட்கள் ஆதிக்க சின்னமாகத்தான் இருக்கிறது.

ambedkar-annihilation-of-casteசான்றாக அம்பேத்கர் “சாதியை ஒழிப்பது எப்படி?” எனும் நூலில் தலித்துகளுக்கு இழைக்கப்படும் கொடுமை என்று கீழ்கண்ட சம்பவத்தை முன்வைப்பார்;

“ஜெய்ப்பூர் சமஸ்தானத்தில் சக்வாராவில் மிக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. தீர்த்த யாத்திரை சென்று வந்த தீண்ட்த்தகாதவர் ஒருவர் தன்போன்ற இதர தீண்டத்தகாதவர்களுக்காக ஒரு மதக் கடமையாக சிறப்பான விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். விருந்திலே பறிமாறப்பட்ட பலவித உணவுகளில் நெய்யும் ஒன்று. என்ன நடந்தது தெரியுமா?

தீண்டத்தகாதோர் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது நூற்றுக்கணக்கான இந்துக்கள் தடிகளோடு அந்த இடத்துக்கு விரைந்தனர். உணவைக் கொட்டிக்  கவிழ்த்தனர். சாப்பிடுவதை விட்டுவிட்டு தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியவர்களை நையப்புடைத்தனர். ஆதரவற்ற தீண்டத்தகாதவர்கள் மீது இதுபோன்ற கொலைபாதகச் செயல் நடந்தது ஏன்? அதற்குக் கூறப்பட்ட காரணம் என்னவென்றால் விருந்தளித்தவர் விருந்திலே நெய் சேர்க்கும் அளவுக்கு ‘திமிர்’ பிடித்தவராக இருந்தாராம்! விருந்தாளிகளும் துணிந்து நெய் சாப்பிடும் அளவுக்கு விவரங் கெட்டவர்களாக இருந்திருக்கிறார்கள்!

தேசிய மாதிரி ஆய்வு நிறுவன தரவுகள் - பால் நுகர்வை சாதி தீர்மானிக்கிறது
தேசிய மாதிரி ஆய்வு நிறுவன தரவுகள் – பால் நுகர்வை சாதி தீர்மானிக்கிறது

நெய் பணக்காரர் பயன்படுத்தும் ஆடம்பரப் பொருள் என்றால் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அது ஒருவரின் சமூக அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் பொருள் என்று யாராவது நினைப்பார்களா? சக்வாரா இந்துக்கள் அப்படித்தான் நினைத்தார்கள். அதாவது தீண்டத்தகாதவர்கள் அவர்களின் உணவில் நெய்விட்டுக் கொண்டதின் மூலம் தம்மை அவமதித்து விட்டதாகவே சாதி இந்துக்கள் நினைத்துக் கொண்டார்கள். அதற்காகவே தீண்டத்தகாதவரை இப்படி பழி வாங்கினார்கள். நெய் என்பது இந்துக்களின் கவுரவப் பிரச்சனை. எனவே தீண்டத்தகாதவர்கள் நெய் வாங்கும் அளவுக்கு வசதி படைத்திருந்தாலும் கூட அதைப் பயன்படுத்தக் கூடாது. நெய் அவர்களுக்கு உரியது அல்ல. இந்த நினைப்புதான் இந்துக்களை தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக நிறுத்தியது. இது 1936 ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்தது.”

அம்பேத்கர் சுட்டிக்காட்டும் காலனிய காலத்து கொடூரத்திற்கும், 2015-ல் NSSO காட்டும் தரவுகளுக்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா? இதைத்தான் காலந்தோறும் பார்ப்பனீயம் என்று சுட்டிக்காட்டுகிறோம். உணவு சாதியின் குறியீடாக நிற்பதற்கு இவை இரண்டு மட்டும் சான்றுகள் அல்ல. பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பன இந்துமதம் முன்னிறுத்தும் தெய்வங்களும் இப்படித்தான்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன், பார்ப்பனியத்தின் ஐகான் என்பதை இஸ்கான் குழுவினர் பரப்பிவருவதை அறிவோம். இதுதவிர பாற்கடலை கடைந்து எடுக்கும் அமுதத்திற்காக முப்பத்து முக்கோடி அய்யர்களின் சார்பில், விஷ்ணு அரக்கர்களின் உழைப்பை அபகரிக்கும் பொருட்டு மோகினி அவதாரமே எடுத்திருக்கிறார். இதற்கு மணிகண்டனே சாட்சி!

நிலவுடமைச் சமூகத்தில் பார்ப்பனீயத்தின் பால் மீதான ஆதிக்கத்தை இராச இராசன் பெருமையோடு எழுதி வைத்தவிட்டுப்போன கல்வெட்டுகளிலிருந்து அறியலாம். பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயம் கொடுக்கிற இராசஇராசன் ஹிரண்ய கர்ப்ப தானமும் கொடுத்திருக்கிறான். ஆனால் உழைக்கிற மக்களோ சாவா மூவாப் பேராடுகள் எனும் பெயரில் கோயில் விளக்கேற்றுவதற்கு உழக்களவு நெய் தரும் பொருட்டு கோயிலிலேயே காலத்திற்கும் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தான் ‘வெட்டிக்குடிகள்’ என்று வரலாற்றில் அறியப்படுகிறார்கள்.

வேதகால அறிவியல் - மோசடி
“வேத காலத்தில் விமானத் தொழில் நுட்பம்” என்று இந்திய அறிவியல் பேரவையில் இந்துத்துவ காலிகள் வெட்கமின்றி அறிக்கை ஒன்றை வாசித்தனர்.

பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பனியத்தின் ஆதிக்கம் பால் என்று வருகிற பொழுது எப்படியெல்லாம் இருக்கிறது என்பதற்கு நாம் ஒரு பட்டியலே போடலாம். ஆனால் இப்பதிவின் நோக்கம் அதுமட்டுமன்று. இன்றைய மறுகாலனியாதிக்க சூழ்நிலையில் பார்ப்பனிய பண்பாட்டு ஆதிக்கம் எப்படி முன்னகர்த்தி எடுத்துச் செல்லப்படுகின்றது, அது எப்படி ஏகாதிபத்தியத்திற்கு உவப்பாக இருக்கிறது என்பதை பால் மற்றும் பால் சார் பொருட்களைக் கொண்டே இப்பதிவில் விளக்குவதும் நமது நோக்கம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக “வேத காலத்தில் விமானத் தொழில் நுட்பம்” என்று இந்திய அறிவியல் பேரவையில் இந்துத்துவ காலிகள் வெட்கமின்றி அறிக்கை ஒன்றை வாசித்தனர். ஒட்டுமொத்த உலகமும் எள்ளி நகையாடிய நிகழ்வு அது! வேத காலத்திலேயே 60-க்கு 60 அடியில் விமானங்கள் இருந்ததாகவும் அவற்றில் சில 200 அடிக்கு பெரியதாகவும், 40 சிறு எஞ்சின்களைக் கொண்டதாகவும் இருந்தது என தனது பங்களிப்பை நல்கினர். அதில் நாம் அதிகம் கவனிக்காத விசயம் என்னவென்றால் மகரிசி பரத்வாஜ், விமானிகளுக்கான டயட்டையும் சொல்லியிருந்தாராம்! அது என்ன டயட் தெரியுமா? பசும் பால், எருமைப் பால், ஆட்டுப்பால். இதுபோக விமானிகளின் உடை முழுக்கவும் வெஜிடேரியன் என்றும், அது நீர் வாழ் தாவரங்களால் உருவாக்கப்பட்டது என்றும் முன்மொழிந்திருந்தனர். ‘அவிங்கயெல்லாம் விஜிடேரியன்மா’ என்று வடிவேல் சொல்வதைத்தான் அழுத்தமாக முன்வைத்திருந்தனர். இந்த பால் மேட்டர் அல்லது பார்ப்பனியம் எங்க வரைக்கும் ஊடுருவி நிற்கிறது என்று பார்த்தீர்களா?

தர்ப்பை
தன்மானத்த தொலைச்சுபுட்டு தர்ப்பைய பத்தி சொன்னா எவனாவது கேட்பானா?

இரண்டாவது சம்பவம் இன்னும் சுவாரசியமானது. இது நடந்தும் ஒரு மாதம் தான் ஆகிறது. சாஸ்த்ரா பல்கலைக் கழகம் தர்ப்பையின் மகத்துவம் குறித்து நானோ தொழில்நுட்பம் அடிப்படையில் ஒர் ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கின்றனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருள் தயிர்! தர்ப்பை என்பது ஒரு புல் வகை. இதை வேதகாலத்தில் புனிதப் பொருளாக பயன்படுத்தியதற்கு காரணம் இதன் நானோ மகத்துவம் தான் காரணம் என்கிறது ஆய்வு.

திவசத்தின் போது ஐயர்கள் தங்கள் விரல்களில் மோதிரம் போன்று மாட்டிக்கொள்வார்கள். ஏனெனில் தீய சக்திகள் ஏதும் அண்டாதாம்! முக்கியமாக அரக்கர்கள் யாரும் பாற்கடல் அமுதத்திற்கு சண்டையிட்டைதைப் போன்று பூசையின் பலன்களையெல்லாம் திரட்ட முடியாதாம்! அனைத்து பலன்களும் திவசம் கொடுப்பவருக்கே போய்ச்சேருமாம்!

முன்னோர்களை விரட்டிவிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்கிற இந்தக் கூத்து நம்ம மக்களுக்கும் புரியாது. ஏன்னா திவசம் கொடுக்குறவன் பூணுல் போட்டுத்தான் திவசம் கொடுக்கணும்! முதல்ல ஒரு சூத்திரனுக்கு தன்னோட பெத்தவங்களுக்கு திதி கொடுக்கிற உரிமையே இல்லன்றதுனாலதான் பூணுலே போடறதாக சொல்றாங்க! இதுல தன்மானத்த தொலைச்சுபுட்டு தர்ப்பைய பத்தி சொன்னா எவனாவது கேட்பானா? ஆனா இங்க மேட்டரு வேற.

பால் அபிஷேகம்
இந்தியாவில் நானோ தொழில்நுட்பம் தர்ப்பை, தயிர் என்கிற அளவிற்கு இருக்க காரணம் என்ன?

இப்பேர்பட்ட தர்ப்பையின் சிறப்பை சாஸ்த்ரா பல்கலைக் கழக பண்டிதர்கள் எலக்ட்ரான் நுண்ணோக்கி வைத்தெல்லாம் பார்த்தாலும் கூட அவர்களுக்கு முதன்மையாக உதவியது தயிர் தான். சூரிய கிரகணத்தின் போது உணவைப் பாதுகாக்கும் முக்கிய கதிர்வீச்சு தடைபடுதாம். இதனால் உணவுப் பொருள் பல்லுயிர் பெருக்கத்தால் சீக்கிரம் கெட்டுப்போய்விடுகிறதாம்! இதைத் தீர்ப்பதற்கு அஞ்சாறு தர்ப்பையக் கிள்ளி தயிர்ல போட்டா தயிர் லேட்டா புளிக்குமாம். ஏன்னா, தர்ப்பையோட நானோ பண்புகள் காரணமாக பல பாக்டீரியாக்கள் தர்ப்பையால கவரப்படுதாம்! இதுதான் மேட்டரு! இவ்வளவு காத்திரமான ஆய்விற்கு நானோ, பயோடெக்னாலஜியெல்லாம் உள்ள வந்தாலும் ஆய்விற்கு என்ன பயன்படுத்தினார்கள்? சாட்சாத் தயிர்தான்! இந்த ஆய்விற்கு நிதி வழங்கியது சாஸ்த்ரா பல்கலைக்கழகமுன்னு செய்தி போட்டது மவுண்ட் ரோடு மகா விஷ்ணு.

இந்தியாவில் நானோ தொழில்நுட்பம் தர்ப்பை, தயிர் என்கிற அளவிற்கு இருக்க காரணம் என்ன? இங்க அந்த வசதிகள் எல்லாம் அவாகிட்டதான் இருக்கு! அவாளுக்கு சுட்டுப்போட்டாலும் சயின்ஸ் வராது! கட்டுரையோட ஆரம்பத்துல உயர் சாதிகள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கு அதிகம் செலவிடுறதா மட்டும் தான் பார்த்தோம். ஆனா அவாளோட சிந்தனையே கோமியம், தயிர், நெய், பாலைத்தாண்டி இல்லைன்றது தான் இங்கு நிருபணமாகுது. ஆனா இருக்குற ஐ.ஐ.டி, அறிவியல் நிறுவனங்களில் எல்லாம் இவா தான் இருக்கா! அதுவும் எப்படி இருக்கான்னா? ஆளும் வர்க்கத்தோட தொங்கு சதையா இருக்கா!

கல்வி மறுக்கப்படும் ஆதி திராவிடர் மாணவர்கள்
கல்வி மறுக்கப்படும் ஆதி திராவிடர் மாணவர்கள்

இதுல தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்டது பால் தயிர் மட்டுமல்ல. கல்வியும் தான். சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் இப்படி புல்லரிக்கும் புல்லாய்வு நடைபெறுகிற பொழுது தமிழ் நாட்டில் உள்ள ஆதிதிராவிட மாணவர்கள், பள்ளிக்கூடம் சரியில்லைன்றதுனாலே படிப்பை பாதியிலே நிப்பாட்டுகிறார்களாம்! 2014-2015 ஆதிதிராவிட நலத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் படி தமிழ் நாட்டில் மொத்தம் 798 ஆதி திராவிட ஆரம்ப பள்ளிகளில் மொத்தம் 62,110 மாணவர்கள் பயில்கின்றனராம். ஆனால் 81 உயர்நிலைப்பள்ளிகளில் 19,465 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனராம்.

மொத்தத்தில் மூன்றில் ஒருபங்கு மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதற்கு முதன்மையான காரணம் பள்ளிகளின் மிகவும் மோசமான பராமரிப்பு தான் என்கிறது சமீபத்திய ஆய்வு. மத்திய அரசு இவர்களின் நலன்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையான 14,757 இலட்சத்தில் இது வரை மாநில அரசுகள் 8,838 இலட்சங்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கின்றனவாம். 2005-2006இல் 1,54,040 ஆக இருந்த பயனாளிகள், 06-02-2014 கணக்கின் படி 19,525 ஆக சுருக்கப்பட்டிருக்கின்றனர் என்றால் இந்த அரசு யாருக்கானதுன்னு தெளிவா தெரியும்!

இனிமேலாவது நம்ம நாட்டுல அறிவியல் வளர்ச்சி! இட ஒதுக்கீட்ல தலித்துகள் பங்கு கேட்குறாங்க! தனிநபர் வருவாய் உயர்ந்திருக்குன்னு சொல்லாதீர்கள்! இதைவிட வெட்கக்கேடான விசயம் எதுவும் இருக்க முடியாது!

ஆக ஒரு விசயம் மிகத் தெளிவு. உண்மையில் நாம் அனைவரும் பாலுக்காக செலவழிக்கிற தொகையை அதிகரிக்க வேண்டும்! அப்போதுதான் பார்ப்பனியத்திற்கும் மறுகாலனியாதிக்கத்திற்கும் பாடை கட்டி பால் ஊற்றி இறுதி சடங்கு செய்ய முடியும்.

 – இளங்கோ

குறிப்புகள் எடுக்கப் பயன்பட்ட ஆதாரங்கள்

  1. Caste determines spending on food, choice of work: NSSO
  2. Here Dalits denied basic education
  3. ‘Darbha’ grass, a natural preservative
  4. ‘Rishi has given guidelines to make planes‘
  5. கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?
  6. சாதியை ஒழிப்பது எப்படி? – அம்பேத்கர்
  7. தமிழர்கள் இந்துக்களா?- தந்தை பெரியார்
  8. வரலாறும் வக்கிரங்களும் –ரொமீலா தாப்பர்
  1. வேத காலத்தில் விமானம்? ஆகாகா…
    அப்புறம் என்ன (ம.யி.க்கு) ராமன் விமானத்தில் ஏறி 3 நிமிடத்தில்
    இலங்கை சென்று,ராவனனை குவார்ட்டர் கோவிந்தன் மாதிரி புரட்டி புரட்டி
    போட்டு தாக்காமல்,அணில்,குரங்கு,கோட்டான் வகையறாவுடன்
    கடலில் பாலம் கட்டினான்?

  2. // உண்மையில் நாம் அனைவரும் பாலுக்காக செலவழிக்கிற தொகையை அதிகரிக்க வேண்டும்!

    Alternatively, everyone should move to urban areas!

    • வெங்கடசேன் அவர்களுக்கு,

      \\ Alternatively, everyone should move to urban areas!\\

      ஆளும்வர்க்கத்தினர், சட்டீஸ்கரில் கனிமவளங்களுக்காக பசுமைவேட்டை என்பதன் பெயரில் பச்சையாக ஒரு போரை நிகழ்த்திய பொழுது சொல்லப்பட்ட வார்த்தைகள் இவை. விவசாயம் பொய்த்து, இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட பொழுது, மன்மோகனும், சிதம்பரமும் விவசாயத்தை விட்டு நகரத்திற்கு வந்துவிட வேண்டும் என்று அப்பொழுதும் தாங்கள் சொன்னதைத்தான் சொன்னார்கள். அரசியல் வாதிகளும் இப்படித்தான் என்றால் அறிவுத்துறையினரும் இப்படித்தான் இருக்கின்றனர். ஆனால் NSSO மேலும் இரு தரவுகளை உங்கள் முன் வைக்கிறது.

      1. நகரத்தில் வாழும் தாழ்த்தப்பட்டவரின் செலவீனம், கிராமத்தில் வாழும் உயர் சாதியினரின் செலவீனங்களை விட அதிகமாக இருக்கிறது. அதாவது எஸ்சி பிரிவினர் அதிகமாக சம்பாதிக்கின்றார்களாம். இதன் படி, கிராமத்தில் குறைவாக செலவு செய்யும் உயர் சாதியினர், பால் பொருட்களுக்கு மட்டும் ஏன் தாழ்த்தப்பட்டவர்களை விட ஏன் அதிகம் செலவிடுகின்றனர்? உணவு ஆதிக்க சின்னமாக இருக்கிறதா இல்லையா?

      2. NSSO வைக்கும் அடுத்த தரவு: நகரத்தில் உள்ள ஒட்டு மொத்த சாதியினரில் உயர்சாதியினர் (பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்களையும் சேர்த்து) தான் மாத சம்பளம் வாங்குபவர்களில் அதிகம். அப்படியானால் வசதி என்று நகரத்தை நோக்கி ஓடி வந்த தாழ்த்தப்பட்டவர்கள் பார்க்கும் வேலை கூலி வேலை. மறுகாலனியாதிக்கம் பார்ப்பனியம் உருவாக்கிய சாதியமைப்பை எவ்வளவு கச்சிதமாக பயன்படுத்துகிறது என்று பார்த்தீர்களா?

      அப்புறம் உங்கள் ஐடியாவ யோசிச்சா அம்மா கட்சியில சேர்ந்தா தீர்வு கிடைக்குமோன்னு தோணுது! மாதவரம் ராம மூர்த்தி பாலில் தண்ணீர் கலந்து இரண்டாயிரம் கோடி அடிச்சாராமே! ஆனாலும் சூத்ரா ராம மூர்த்திய மட்டும் பாலில் தண்ணி கலக்கவிட்ட மறுகாலனியாதிக்கம், தலித் சிறுவன் கோயிலில் தண்ணீர் கேட்டதற்காக மண்டையை உடைத்த பார்ப்பனியத்த கண்டிக்காம விட்டது ஏன்?

      பின் குறிப்பு: டார்வின் பதிவில் அனைவருக்கும் டீ ஸ்பான்சர் என்று அறிவிப்பு வெளியிட்டு ஒரு வருடம் ஆகப்போகிறது. ஆனால் டீ இன்னும் வர்ல. டில்லியிலிருந்து திவ்விய தேசம் தரிசிக்க அடிக்கடி இந்தப் பக்கம் வருவதைப்போல தெரிகிறது. அந்த டீ பாக்கிய கொடுத்தா தேவல! தலைக்கு ஒரு டீ, பச்சை வாழைப்பழம், ஆமை வடை, பொறை, கலைமான் புகையிலை, கற்பூர வெத்தலை, செய்யது பீடின்னு கணக்கு வைச்சா, 20ரூவா வருது. நீங்க பல்க்கா ஒரு அமவுண்டா டெபாசிட் பண்ணா நல்லாயிருக்கும். அக்கவுண்ட் நம்பர் வினவு தளத்தில் இருக்குன்னு நினைக்கிறேன்.

      • தென்றல்,
        உங்களோடும், டார்வின் விவாதத்தில் பங்கேற்ற மற்றவர்களோடும் காபி (ஸ்பான்சர் செய்து) சாப்பிட விரும்பியது வாஸ்தவம்தான். இப்போதும் அந்த ஆசை உள்ளது. ஆனால், வினவு கணக்குக்கு பணம் அனுப்பினால் இந்த ஆசை எங்கனம் பூர்த்தியாகும் என்பது தான் குழப்பமாக உள்ளது.

        தில்லியில் இருந்துகொண்டு திவ்யதேச, தேவார தல தரிசனம் செய்வது சிரமமாக இருந்தபடியால், பெங்களூருவுக்கு மாற்றல் வாங்கி வந்து விட்டேன். சமீபத்தில் கூட திருவன்பார்த்தான் பனங்காட்டூர் என்ற தேவார தல தரிசனம் கிட்டியது. சுந்தரர் பாடியருளிய அழகான தலம். காஞ்சிக்கு அருகில் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் சென்று வாருங்கள்.

        விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை
        அடையில் அன்புடையானை யாவர்க்கும் அறிவொண்ணா
        மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
        சடையிற் கங்கை தரித்தானைச் சாராதார் சார்வென்னே

  3. மார்க்சியதில் இருக்குதய பார்பனியம். பாலில் மட்டுமா பார்பனியகம்? போராட்ட வடிவத்தில் பார்ப்பனியம்.அனுகுமுரை பார்பனியம் நடைமூரை வாழ்க்கை பார்பனியாம். செயலில் பார்பனியம். முதலில் உங்களிடம் உள்ள பார்பனியதை அழி பிறகு சமுகத்தில் உள்ளதை சுட்டிகாட்டலாம்.

  4. Another article with full of crap…..
    You buy what you want and eat what you like.
    What does caste have to do anything in this?
    Eating habits / buying habits are based on so many factors; why should we look into everything wearing the “caste” glass?

    • “எது தேவையோ அதை வாங்கிக்கோ. எதை விரும்புகிறாயோ அதை தின்ணுக்கோ! இதில் சாதி எதற்கு?”

      பிறகு எதற்கு மதத்தின் பெயரால் மாட்டிறைச்சிக்குத் தடை?

      • Beef ban — it’s extremely controversial. We have few open questions…
        I am yet to understand their plan / arguments in favor of it. For instance, what would a farmer do with an old cow (no milk)? Old Cow can’t survive even few days when she’s left alone.

  5. இப்போ என்ன சொல்ல வர்றீங்க?
    “பேய் இருக்கா? இல்லையா?
    நம்பலாமா? நம்பப் படாதா?” மாதிரி
    எல்லாரும் பால் குடிக்கணுமா? குடிக்கப் படாதா?!

    நன்றி!

    சினிமா விரும்பி

    • சினிமா விரும்பி அவர்களே,

      விடுதலைப் போரின் வீரமரபில் சின்னமருதுவின் வசனம் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதுடன் அதன் மூலமாக உங்கள் பாணியிலேயே ஒரு கேள்வியும் கேட்க விரும்புகிறேன்.

      “வெள்ளையனுக்காக துடிக்கிற மீசை என் அடிமயித்துக்குச் சமமன்னு” சின்னமருது சொன்னாரு.
      இப்பொழுது உங்கள் பார்வையின் படி, மீசை வைக்கணும்னு சொல்வீங்களா? கூடாதுன்னு சொல்வீங்களா?” நீங்கள் என்ன பதில் சொல்வீங்கன்னு கொஞ்சம் எழுதுங்களேன்.

      • தென்றல் அவர்களே,

        நீங்கள் சொல்வது கொஞ்சம் விரசமா இருக்குன்னு மட்டும் புரியுது! ஆனா நான் அடிச்ச ஜோக்குக்கும் உங்க பதிலுக்கும் என்ன சம்பந்தம்னு புரியலயே!

        சினிமா விரும்பி

        • சினிமா விரும்பி அவர்களே! சின்ன மருதுவின் கருத்தை தாங்கள் விரசம் என்று சொல்கிற பொழுது வரலாறு அதை விடுதலைப்போரின் வீரமரபு என்று தான் பதிவு செய்திருக்கிறது. வாள் எடுத்து செயல்பட வேண்டிய நேரத்தில் அது விரசம் என்று யாரும் ஒதுங்கிவிடவில்லை. காலனியாதிக்கத்தைப் போன்றே பார்ப்பனியத்திற்கு எதிரான தேவையும் அப்படித்தான். அது நகைச்சுவையாக நிற்பதில்லை. இதைச் சுட்டிக்காட்டத்தான் தங்கள் பாணியில் அப்படி ஒரு கேள்வியை வடிவமைத்தேன்.

  6. பார்பனியத்தினை பார்பனியம் பேசும் போது தான் சிரிப்பு வருது. உதாரணம். மத்திய மந்திரி தருன் விஜயின் தமிழ் பற்று . அதை போன்றது தான் வினவின் பார்பனியம்

    • இலக்கியன் அவர்களே,

      பார்ப்பனியத்திற்கு பாடை கட்டி பால் ஊத்துவது பார்ப்பனிய முறைதானே என்று ஒரு காத்திராமான (!!!) கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள். இதை இப்படி அணுகலாமா என்று பரிசீலியுங்கள்.

      பார்ப்பனர்கள் அஸ்வமதயாகம் என்று குதிரையை குண்டத்தில் கொளுத்தி, ஊரையே புகைமண்டலமாக ஆக்கினார்களாம். புத்தர் இதைப் பார்த்துவிட்டு, ஏப்பா இப்படி குதிரைய கொளுத்தேறுன்னு கேட்டாராம். அதுக்கு பார்ப்பான் சொன்னானாம்; குதிரை மோட்சத்துக்கு போவும், இது பெனிபிட்டுதானே என்று! புத்தர் திருப்பி சொன்னாராம்; “ஐந்தறிவு படைச்ச மிருகத்த கொளுத்துனா சொர்க்கத்து போவோமேன்னு சொல்றீயே, ஆறறிவு படைச்ச நீ குதிச்சா என்ன?” இது தத்தாச்சாரியார் பார்ப்பனிய பாசிசத்தை அம்பலப்படுத்திய எழுதிய ஒன்றாகும்.

      இப்ப இத படிக்கிற உங்களைப் போன்ற பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள், புத்தர் பார்ப்பனியத்திற்கு ஆதரவா கோமம் குண்டம் வளர்க்கச் சொன்னாருன்னு சொல்வீகளா?

      “எதிரிகளிடம் இருந்து ஆயுதத்த பிடுங்கனா மட்டும் போதாது; அத எதிரிகளுக்கு நேர நீட்டவும் செய்யணும்னு சொல்வாரு தோழர் மாவோ” இதை இப்படி பார்ப்பது சரியான்னு சொல்லுங்க.

      நந்தன எரிச்சா மாதிரி தீட்தப் பார்ப்பனர்களோட கனவுல கம்யுனிஸ்டுகள் தோன்றி சிவபெருமான் உன்னை அணைத்துக்கொள்ள விரும்புகிறார், அஞ்சு லிட்டர் கெரசினோட ரெடியாகுன்னு சொல்ற வரைக்கும் நாம் சிதம்பரம் கோயிலுக்குள்ள நுழைய முடியாதுன்றது என்னோட கருத்து. நீங்க என்ன சொல்றீங்க? பார்ப்பனர்களும் ஒரு முறை ஜோதியில் கலந்துதான் பார்க்கட்டுமே!

  7. இளங்கோ போன்ற “அரை வேக்காடுகள்” கடைசி வரைக்கும் “பார்பனீயத்தை” எதிர்க்கிறேன் என்று முட்டாள்களான சில சமூகத்தை ஏமாற்றி கொண்டே இருப்பார்கள்… இவனுங்க பேசி, பேசியே ஒரு மயித்துக்கும் பிரோயோஜனம் இல்லாம் போயிட்டானுங்க…ஆனா ஜயருங்க,ஜனத்தோகையில 2 சதவீகத்துக்கும் குறைவாக இருந்தாலும், எல்லா துறையிலும் சாதித்து இன்னும் இவனுங்களை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்…. எப்போ இவனுங்க எல்லாத்தையும் மூடிகிட்டு வேலையில மட்டும் கவனம் செலுத்துரானோ, அப்பத்தான் தலித் முன்னேருவான், இல்லைனா கடைசி வரைக்கும் ” கக்கூஸ்” கழுவிட்டுத்தான் இருப்பான்… இது இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் மாறாது….

  8. தென்றல் அவர்களே,

    நீங்கள் சொல்வது கொஞ்சம் விரசமா இருக்குன்னு மட்டும் புரியுது! ஆனா நான் அடிச்ச ஜோக்குக்கும் உங்க பதிலுக்கும் என்ன சம்பந்தம்னு புரியலயே!

    சினிமா விரும்பி

  9. என்ன பெருசா பேச வந்துட்டேள் ? சும்மா எல்லாத்துலயும் பார்பனீயம் அது இதுனு உளறி கொட்டிண்டு .அப்டி தாண்டா பால் அபிஷேகம் பண்ணுவோம். நாங்க சாம்பாதிச்சு எங்க பைசால எங்க பகவானுக்கு நிறைய அபிஷேகம் பண்ணுவோம். என்னடா பண்ணுவேள்? உங்களுக்கு என்ன பைத்தியமா? website host பண்ணி domain வேஸ்ட் ஆனது தான் மிச்சம். கடந்து அலையைர்துகள்

  10. What do you all mean by “பார்ப்பனியம்” ??

    Every article talks about this; everyone mentions this every now & then. No reader can sleep without mentioning this, I guess. Karunanidhi mentions this often; he does it to run his political business, feed massive appetite of his family.

    But what happened to you all? Why are you all feeling that others get on top of you? It’s not true.

    Do you think these Brahmins acting all Imperialistic? If my memory serves right, Non-Brahmins in the state are > 95%. Do you think a small bunch of people are making such an impact in your life? Being a salesman, I traveled many nooks and corners of this state for 12+ years. But, I have never experienced any. Do they bully you all? Do they betray you in any possible way?

    Looks like many of you are suffering through Inferiority Complex. Do they make you feel inferior?
    I think we have smart / intelligent / calibered tamils everywhere (in all communities); no need to develop any type of complex.

    Remember what Emerson said: In my walks, every man I meet is my superior in some way, and in that I learn from him

    So, let’s build attitude to learn and achieve progress…..

    Good Luck!!

    May God bless India!!

    • I think you must be an ivory-tower-living-person like. What we mean by Brahminism is the ideology that divides society on caste lines and infuse greater disparity in it.

      Of course most Brahmins by nature are timid and slightly effeminate in their behaviour. But that doesn’t excuse the social status they enjoy as being top in the hierarchy.

      What is it that prevents them from coming out of the caste fold? Why are there less number of people among Brahmin community who shed away the Brahmin identity? What is it that makes you people difficult to fathom the fact that when you call yourself as Brahmins you are relegating other caste groups as subordinates or less value group? Why is socialism tastes bitterly for you?

      What you people believe in is not democracy but a privileged democracy that lets the anachronistic Brahmin ideology works to favour your condition?

      Yesterday in puthiyathalaimurai nerpada pesu debate, Brahmin leader narayanan, said DMK leader Karunanithi should possess a special qualification to write about Ramanujan. We say this outragious remark as Brahminism and wants to be ridden off.

      • Let me respond to all your objections…
        //Of course most Brahmins by nature are timid and slightly effeminate in their behaviour. But that doesn’t excuse the social status they enjoy as being top in the hierarchy.//

        This is your illusion; they are very insignificant in numbers. They can’t get into any Govt/PSU jobs any more; we have made education very challenging for them. They are not in Politics. In TN, I think it’s very rare to find them holding any position.

        What special status are they enjoying? Can you elaborate?

        //What is it that prevents them from coming out of the caste fold? Why are there less number of people among Brahmin community who shed away the Brahmin identity?//

        It’s your perception; in my opinion I don’t see them (most of them) any different from others.
        How is their Brahmin identity hurting / affecting others? Wearing that identity they are losing a lot.

        What is it that makes you people difficult to fathom the fact that when you call yourself as Brahmins you are relegating other caste groups as subordinates or less value group?//

        This is the issue I mentioned earlier: your Inferiority complex. Nobody can relegate others especially with your consent. If someone tries, you deal with that individual. In my experience, some sections of society (with the help of Dravidar Kazhagam, Krishnasami, Thirumavalavan, etc) are finding excuse and trying to earn free brownie points.
        Get out of your complex; you are NOT different from others. Remember: your genes are 99.95% (or more) similar to that of so called upper caste.

        //Why is socialism tastes bitterly for you?//
        How do you say this? They do blend with society, don’t they? Give me valid examples.

        //Yesterday in puthiyathalaimurai nerpada pesu debate, Brahmin leader narayanan, said DMK leader Karunanithi should possess a special qualification to write about Ramanujan. We say this outragious remark as Brahminism and wants to be ridden off.//
        This is Politics; Narayanan may have something against Karunanidhi and let him make his comments.
        It’s a long debate on a separate topic.
        He has his freedom to reveal this thoughts. But, what’s important is: you are more than welcome to ignore them if you don’t like. Don’t let them affect you in any way.

        Let me share my observations:
        In the last 10 years, if there is one community which has come forward to reduce caste barrier, it’s the ‘Brahmin’. How? Just check the number of Inter-caste marriages / population ratio. They score very high. Remember: After Brahmin inter-caste wedding, there will be no honor killing.
        Usually the couple is accepted after a while. I have seen many.

  11. இந்தியாவில் ஜாதி அமைப்பை ஒழிக்க முடியாது…. பொருளாதார ரீதீயாக ஒரு ஜாதி முன்னேரினால் தான் அந்த சமூகத்தின் மேல் உள்ள ஆதிக்கம் ஒழியும்… அதுவரையிலும் ஜாதியும் அதன் அடக்குமுறையும், ஆதிக்கமும், அதனால் உண்டாகும் அழிவையும் “எவனாலும்” தடுக்க முடியாது…. இது ஆனானப்பட்ட அம்பேத்காரே தோற்ற களம்.. இதில் அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியாது….சென்னையில் இருந்து கொண்டு எல்லா மசுரையும் பேசலாம்… த்த்தா… எவனுக்காவது தைரியம் இருந்தா “பாப்பாபட்டி” இல்லை ” கீரிப்பட்டியிலே” போயி உன்னோட “மறுபதிப்பு” மூளையை காட்டு… செட்டோட “வெட்டிவானுங்க”… ஒரு பதிப்பிற்க்கே இவ்வளவு செய்யும் “ஜாதி” நடைமுறையில் இதைவிட மேலை வேலை செய்யும்… செய்து கொண்டிருக்கிறது…. இது உலகம் முழுவது வெவ்வேறு வடிவத்தில் உள்ளது… அமேரிக்காவில் நிறவெறி, பாகிஸ்தானில் மதப் பிரிவு, ரஷ்யாவில் இடரீதியான் வேற்றுமை என எல்லா இடத்திலும் உள்ளது…. இந்தியாவில் இது ரத்ததில் கலந்துவிட்டது… அதை மாற்ற முடியாது.

    • Indian,

      If you decide to live in your ignorant, caste-hatred world, it’s your choice.
      Hope people like you are minority.
      The world is moving on; people are busy working towards progress.
      You enjoy your hatred…

  12. கேள்வி கேட்பது உங்களுகு பிடிக்காது. உங்களையே கேள்விக்குள்லாக்குவது சுத்தமா பிடிக்கது.நடைமுறைநிருபித்திரிக்கிரது

  13. இதில் வருகிற பார்ப்பனீயச் சூழ்ச்சிகள் பற்றிய கருத்துக்கள் உண்மையானவை. அதனால் மிகவும் பாதிக்கப் பட்ட படித்த தமிழர்களில் நானும் ஒருவன். என் அனுபவங்கள் 1960 களில் நடந்தவை. அன்று முதல் இன்று வரை பார்ப்பனீய எதிர்ப்பு என்ற எதிர்மறைக் கருத்தை மட்டுமே சொல்லி வருவது தவறாகத் தோன்றுகிறது. பார்ப்பனீய ஒற்றுமை தமிழனிடம் காணவில்லை. அதற்காக எழுதுவோம். அய்யரா? அய்யங்காரா? அல்லது வடகலை நாமமா? தென்கலை நாமமா கோயில் யானைக்கு? என்று சண்டையிடும் பார்ப்பனர் தேவைப்படும் போது பாரப்பனராக இணைந்து விடும் ஒற்றுமை ஏன் தமிழனிடம் இல்லை?
    பார்ப்பனன் சாதியால் மக்களைப் பிரித்தான் என்பது புரியாமல் சாதிச் சண்டை போட்டுத் தமிழன் தன் ஒற்றுமை இழந்து நிற்கிறான் பார்ப்பனன் நம்மைப் பார்த்து நகைக்கிறான்.
    பல சாதி பார்ப்பனன் தேவையானால் ஒன்றுபடுகிறான். பல சாதி தேவையை மறந்து தங்களுக்குள் சண்டையிட்டுத் தன் வலிமை இழக்கிறான்.
    பார்ப்பனன் இணைவதற்கு அடிப்படை அவாள் அனைவருக்கும் ஒரு வேதம். அவன் அதை மதிக்கிறான்.
    தமிழன் ஒன்றுபட தமிழ்மறை இல்லையா? அதை முன்னிறுத்திக் கருத்திடுங்கள்.
    put forth positive thoughts, negative thoughts will never help

  14. விச்சன்,

    நீங்கள் பழைய கதைகளை விட்டு விடுங்கள். நிறைய முறை விவாதித்தாகி விட்டது.
    தமிழ் நாட்டில் உள்ள எல்லா பார்பனரும் தமிழர்களே…

    //பார்ப்பனன் இணைவதற்கு அடிப்படை அவாள் அனைவருக்கும் ஒரு வேதம். அவன் அதை மதிக்கிறான்.//
    வேதங்கள் அனைவருக்கும் பொது. சாதி வித்தியாசங்கள் ஒரு போதும் கிடையாது

    //அன்று முதல் இன்று வரை பார்ப்பனீய எதிர்ப்பு என்ற எதிர்மறைக் கருத்தை மட்டுமே சொல்லி வருவது தவறாகத் தோன்றுகிறது//
    பார்ப்பனீயத்தினால் நீங்கள் சமீபத்தில் அனுபவித்த கஷ்டங்கள் என்ன?

    //பார்ப்பனன் சாதியால் மக்களைப் பிரித்தான் என்பது புரியாமல் சாதிச் சண்டை போட்டுத் தமிழன் தன் ஒற்றுமை இழந்து நிற்கிறான் பார்ப்பனன் நம்மைப் பார்த்து நகைக்கிறான்.//
    டயலாக் வேண்டாம்; உங்களால் இதை நிரூபிக்க முடியுமா? தகுந்த உதாரணங்கள் உள்ளனவா?

    இந்த பதிப்பை படியுங்கள்:
    http://www.jeyamohan.in/67150

Leave a Reply to தென்றல் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க