சிங்கப்பூருக்கு பிழைப்பு தேடி சென்ற ஒவ்வொருவருக்கும் தனிபட்ட காரணங்கள் இருந்தாலும் தமிழர்களில் பல பேருக்கு ஒற்றுமையான ஒரு காரணம் தங்கச்சி என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் பாசத்திற்குரிய சென்டிமெண்டாக இருக்கும் இந்த தங்கச்சி விவகாரம் நிஜத்தில் பொறுப்பான அண்ணன்களின் இளமையை கேட்கும் தண்டனை எனலாம். சீர், வரதட்சணை, முறை என்று ஒன்றும் குறைவைக்க கூடாது என்றால் சிங்கப்பூருக்கு வண்டி ஏற வேண்டும். அப்படி சென்றவர்களில் ஒருவர் தனபால்.

தினமும் அரைப் பட்டினி வயிற்றோடு பாடுபட்டு இரண்டு பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து கரை சேர்த்த களைப்பில் பெற்றோர்கள் இருந்தனர். மீதமுள்ள கடைக்குட்டி பெண் கல்யாணத்திற்காவது மகன் பொறுப்பேற்க மாட்டானா என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது. பட்டப்படிப்பு முடித்து வேலை கிடைக்காமல் சோர்ந்து போன தனபாலும் இறுதியில் கைக்கெட்டும் சொர்க்கமான சிங்கப்பூருக்கு சென்றார்.
இவ்வளவு வறுமையிலும் அவர் பட்டப்படிப்பை முடித்தது எப்படி? பகுதி நேரமாக வேலை செய்து படிப்புக்கான செலவு தேவைகளை ஏற்பாடு செய்து கொண்டார். இத்தகைய பொறுப்புணர்வே அவரை சிங்கப்பூரை நோக்கியும் ஓட வைத்தது.
எதிரே நின்ற தங்கைக்காக சிங்கப்பூர் சென்று ஏழு வருட கட்டிட தொழிலாளியாக பணி முடித்து பிறகு ஊர் திரும்பி தங்கைக்கு மட்டுமல்ல தானும் மணமுடித்து மனைவி குழந்தையுடன் வாழ்கிறார். இனி சிங்கப்பூர் அனுபவம் குறித்து அவரே பேசுகிறார்.
எப்ப சிங்கப்பூர் போனீங்க?
“1998-இல் சிங்கப்பூர் போனேன். ரெண்டு வருசத்துக்கு ஒருவாட்டி விடுமுறைக்கு ஊருக்கு வந்து போவேன். 2005-ல நிரந்தரமா வந்துட்டேன்.”

இரண்டு வருசத்துக்கு ஒரு தடவதான் விடுமுறையா?
“வருசத்துக்கு ஒரு தடவ விடுமுறை உண்டு. வந்து போகலாம். ஆனா ஒரு வருசத்துக்கு ஒரு தடவ விசாவ புதுப்பிக்கணும். அதுக்கும், வந்து போகும் செலவு கணக்கும் பாத்தா நம்ம சம்பாத்தியத்துக்கு கட்டுபடியாகாது.”
நீங்க சிங்கப்பூர் போக எவ்வளவு செலவாச்சு?
“சிங்கப்பூருக்கு போன செலவு அத்தனைக்கும் கடன்தான். ஏஜெண்டுக்கு மட்டும் 1,65,000. விமான டிக்கெட்டுலேருந்து பொட்டி ஜட்டி வரைக்கும் எல்லாம் ஆச்சு ரெண்டு லட்சத்துக்கு.”
எவ்வளவு சம்பளம்?
“தினக்கூலிதான். படிச்சிட்டு நல்ல அட்மிசன் லெவல்ல வேலை பாத்தா மாதச் சம்பளம் மதிப்பு எல்லாம் இருக்கும். தொழிலாளியா போனா எல்லா துன்பமும் பட்டாகணும். வேலை நேரம் போக ஓவர் டைம் பாத்தாத்தான் சம்பளம் கொஞ்சமாவது கட்டுப்படியாகும். அதுவும் நாம நெனச்சா மாதிரி பாக்க முடியாது. மேனேஜருக்கு வேண்டியவனுக்கும், வேலை சுறுசுறுப்பா செய்றவனுக்கும் தான் ஓவர் டைம் கெடைக்கும். வேலை நெருக்கடியா இருந்தாத்தான் மத்தவனுக்கும் ஓ.டி. கிடைக்கும். அப்ப நமக்கு உடம்பு சரி இல்லாம இருந்தாலும் செய்ய முடியாதுன்னு சொல்ல முடியாது. இதையெல்லாம் கூட்டி கழிச்சு பாத்தா 15,000 முதல் 20,000 வரை இந்திய பணம் மாதம் கிடைக்கும்”
எத்தன வருசத்துல கடன அடைச்சிங்க?

“குடும்பத்துல வேற செலவு இல்லன்னா ஒரு வருசத்துல கடனை அடைச்சிருப்பேன். போன மறுவருசமே தங்கச்சி கல்யாணம் வந்துருச்சு. நல்ல மாப்பிள்ளை விட்டா கிடைக்காதுன்னு வீட்ல ஒரே புலம்பல். சிங்கப்பூர்ல இருக்குற நம்பிக்கையில தங்கச்சிக்காக வட்டிக்கி வாங்கும்படியா போச்சு.”
மொத்தமா கடன் எவ்வளவு வாங்கினிங்க? வட்டியோட சேத்து எவ்வளவு அடைச்சிங்க?
“சிங்கப்பூர் போறதுக்கு வட்டிக்கு பணமா 50,000-ம். சொந்தக்காரங்க அஞ்சு பேருகிட்ட நகையா வாங்கி அடகு வச்சுட்டு அதுல 1,50,000-ம் புரட்டிட்டு போனேன். யாருக்கு நகைங்க அவசரமா தேவைப்படுதோ அவுங்களுக்கு முதல்ல திருப்பிக் கொடுத்தேன். தங்கச்சி கல்யாணத்துக்கு நகையோடோ சேத்து 2 லட்சம் கடன் வாங்குனேன். மொத்தம் நாலு லட்சம் கடனுக்கு வட்டி மட்டும் 2 லட்சம் கிட்டக்க வந்துருச்சு. அஞ்சு வருசத்துல அசல் வட்டின்னு ஆறு லட்ச சொச்சம் அடைச்சேன்.”
நீங்க என்ன படிச்சிருக்கிங்க?
“நான் பி.எஸ்.சி முடிச்சிட்டு ஒரு சில டிப்ளம்பா கோர்ஸ்சும் முடிச்சேன். அதுல ஒண்ணுதான் ஏ.சி சர்வீஸ் பத்தினது. சிங்கப்பூர்ல கட்டிட தொழில்தான் முதன்மையானது. அதுல ஏ.சி சம்மந்தமான வேலையின்னு இடைத்தரகர் சொல்லிதான் போனேன். ஆனா தொடப்பத்த கையில கொடுத்து பூச்சுப்பூசும் போது விழுவுற சிமெண்ட்ட கூட்டுன்னு சொன்னானுங்க. ஏன்னு வாய தொறந்தா ஊருக்கு அனுப்பிடுவானுங்கன்னு மட்டும் புரிஞ்சுச்சு. கடனா, தொடப்பமான்னு பாத்தா தொடப்பந்தான் செயிச்சுச்சு.”

படிச்சுட்டு இந்த வேலையா பாக்க போனிங்க?
“கலெக்டருக்கே படிச்சிருந்தாலும் ஒர்க்கர் விசாவுல போனா கக்கூசு கூட கழுவ சொல்லுவானுங்க. மறுக்க மடியாது.”
படிச்ச உங்கள கூட்ட சொன்னப்ப உங்க மனநிலை எப்படி இருந்துச்சு?
“நீங்க கேக்குற அளவுக்கு எனக்கு ஒன்னும் பாதிப்பா இல்லைங்க. நான் பள்ளிக்கூடம் படிக்கும் போதே கல்லு கடைக்கி வேலைக்கி போவேன். மரம் ஏறுவேன். கல்லூரி முடிஞ்சதும் பைனான்ஸ்காரங்களுக்கு கணக்கு எழுதுவேன். தண்டல் வசூலுக்கும் போவேன். அப்படி, எந்த வேலையா இருந்தா என்ன நமக்குத் தேவை காசு.”
கடைசி வரைக்கும் ஏ.சி சம்மந்தமான வேலை கிடைக்கவே இல்லையா?
“நான் மறந்தாலும் நீங்க மறக்க மாட்டிங்க போலருக்கே. இதுலயும் பல ப்ரோமோசன் கெடைச்சுது. ஒரு நாள் பெயிண்ட் அடிச்ச தொழிலாளி ஊருக்கு போயிட்டாருன்னு என்ன அடிக்க சொன்னானுங்க. அடிச்சேன். பரவாயில்லையே அவனவிட நீ கீழ ஒழுகாம நீட்டா ஆடிக்கிறியே நீயே அடின்னானுங்க.

நாலு வருச்ம கழிச்சு வேறொரு கம்பனி. அங்க போனதும் “ஏற்கனவே என்ன வேலை செஞ்சுருக்க” அப்படின்னானுங்க. “சிமெண்டு கூட்டுனேன்”னு சொன்னேன். அப்படியா “சரி மரம் வேலை நடக்கும் போது விழும் தூள்கள கூட்டுன்”னு திரும்பவும் தொடப்பத்த கையில கொடுத்துட்டானுங்க.
கொஞ்ச நாள் பொறுத்து ஆசாரி வேலை செஞ்ச தாய்லாந்து நாட்டுக்காரர் ஊருக்கு போய்ட்டார். என்ன மரம் அறுக்கச் சொன்னானுங்க. தாய்லாந்து ஆசாரி படிக்காத ஆள். அவருக்கு அளவு எடுத்து எழுதிக் கொடுக்க ஒரு உதவியாளர் இருந்தாரு. எனக்கு அது தேவைப்படல. நானே அளவு குறிச்சு வேகமாவும் வெட்டி தள்ளிட்டேன். ஒடனே அந்த வேலையை எனக்கு குடுத்துட்டானுங்க.”
திரும்பி வந்த தாய்லாந்துக்காரர் என்ன விரோதி மாதிரி பாத்தாரு. இங்க வாடாப்பான்னு கூப்புட்டு நீயும் நானும் இங்க ஒரே இனம்தான். எம்மேல கோபம் வேண்டாம். ஒன்னோட வேலையை தட்டி பறிச்சிட்டதா நினைக்காதே இத விட எனக்கு பெருக்குறதுதான் ஈசி. ஓனருட்ட சொல்லி எனக்கு பெருக்குற வேலையையே வாங்கி குடுத்துருன்னு சொல்லி நட்பானேன். ஓனரு ஒத்துக்க மாட்டேன்னுட்டான்.”
பெருக்குறதுக்கும் அறுக்குறதுக்கும் கூலி வித்தியாசம் எவ்வளவு?

“ஒரு மண்ணும் கிடையாது. அதே கூலிதான் ஒரு பத்து பைசா கூட அதிகம் தர மாட்டாங்க. மொத்தமா அவங்க எடுத்த குத்தகை மிஷினுங்கதான் தொழிலாளிங்க. எந்த மிஷினு எந்த வேலைக்கி பொருத்தமா இருக்குன்னு அவந்தான் முடிவு பண்ணனும். நமக்கு வாய் தொறக்குற வாய்ப்பெல்லாம் கிடையாது.
ஒரு ஓனரு ஒரு கட்டிடத்தையே காண்ட்ராக்ட் எடுத்துருப்பான். இல்ல ஒரு சில வேலைகளை மட்டும் எடுத்துருப்பான். நாம எந்த முதலாளிகிட்ட வேலை பாக்குறோமோ அவனோடோ காண்ட்ராக்ட் முடிஞ்சு போச்சுன்னா அடுத்து அவன் வேலை குடுக்குற வரைக்கும் சும்மாதான் இருக்கனும். அதிகப்படியான நாள் இழுத்துட்டு போச்சுன்னா சில பேர் சாப்பாட்டுக்கு காசு தருவாங்க. இல்லன்னா அதுவும் நாமதான் பாத்துக்கனும்.”
இதுதான் வேலையின்னு சொல்லி கூட்டிட்டு போயிட்டு வேற வேலையை கொடுத்து தரகர்கள் ஏமாத்துறாங்களா?
“அரசாங்க வேலையின்னு கூட்டிட்டு போயியா ஏமாத்துறாங்க. அப்படியெல்லாம் கிடையாதுங்க. சிங்கப்பூருல கட்டுமான நிறுவனம்தான் அதிகம். கட்டுமான பணிக்குதான் வேலைக்குன்னு கூட்டிட்டு போறாங்க அதுல இருக்குற கொத்தனார், ஆசாரி, பிளம்பிங்கு, ஒயரிங்கு, சென்ட்ரிங்கு எல்லாந்தான் அத்துபடி அதுல ஏதாவது ஒரு வேலைதான், இதுல என்ன ஏமாத்தறது.”

இவ்வளவு சிரமம் இருந்தும் ஏன் சிங்கப்பூரை நாடி போறாங்க?
“இந்த பகுதியில 90-கள்ல சிங்கப்பூர் போறது ஒரு ஃபேசனாவே இருந்துச்சு. பள்ளி இறுதியாண்டுல கோட்டை விட்டவங்க, கல்லூரி படிப்ப பாதியில விட்ட இளைஞர்கள் விவசாய வேலை பாக்காம வெட்டியா சுத்தறத தடுக்க நினைச்சுதான் சிங்கப்பூர் அனுப்புனாங்க. திரும்பி வரமுடியாமல் கஸ்டத்த உணர்வாங்கன்னு பெத்தவங்க நினச்சாங்க. பசங்களுக்கும் வெளிநாடு, விமானப் பயணம்னு ஒரு கவர்ச்சிய ஏற்படுத்துச்சுன்னு சொல்லலாம். அதனாலதான் திருவாரூரு, தஞ்சாவூரு, பட்டுக்கோட்டை ஆட்கள் அதிகம்”
சிங்கப்பூர் அனுபவத்துல எது முக்கியம்?
“ஊர்ல இருக்கும் போது சாராய வியாபாரிங்க கூட பழக்கம் இருந்தும் கூட குடிக்காமதான் இருந்தேன். அப்டிபட்ட என்னை குடிகானா ஆக்குன பெருமை சிங்கப்பூரையே சாரும்.”
சிங்கப்பூர் பற்றிய உங்கள் கருத்து என்ன?

“எந்த வளமும் இல்லாத ஒரு தீவுதான் சிங்கப்பூர். அத்தியாவசிய தேவைக்குக் கூட ஒரு பிடி தானியம் பயிரிட முடியாது. ஆனா கடந்து போகும் மந்த நாட்டவர்கள் இளைப்பாரும் ஒரு இடமா அமைச்சதுதான் அதன் சிறப்பு. அதை பயன்படுத்தி எந்த வகையில முன்னேத்திக்கலான்னு புத்திசாலித்தனமா செயல் பட்டுருக்காங்க.”
உங்களைப் போல உழைப்பாளியின் இரத்தத்தை உறிஞ்சிதானே இந்த சிறப்பெல்லாம்?
“இது ஏதோ சிங்கப்பூர்ல மட்டும் நடக்கறது மாறி பேசிரிங்க. எங்கயுமே உழைக்கிறவங்களுக்கு இதுதானே கதி.”
சிங்கப்பூர் போனதுல தங்கச்சி கல்யானம் செஞ்சிங்க வேற என்ன பொருளாதாரத்துல முன்னேற்றம்னு சொல்லுங்க?
“ஆறு லட்சம் கடன அடைச்சது போக, ஒரு ஏக்கருக்கு குறைவா நிலம் வாங்கினேன். இதையும் சேத்தா சிங்கப்பூர் போயி நான் சம்பாதிச்சது என்ன ஒரு ஏழு லட்சம் வரும். கடன் போக இந்த நிலந்தான் இப்ப மிச்சம். இதை ஊர்ல இருக்கும் போது குத்தகைக்கு எடுத்தே சம்பாதிச்சிருப்பேன். அப்டி பாத்தா சிங்கப்பூர்ல நான் அடைஞ்ச வருமானத்தையும் சந்தோசத்தையும் விட ஊருலேயே இருந்துருந்தா நல்லா சம்பாரிச்சி சிறப்பா வந்துருப்பேன். என்ன ஒன்னு, கொஞ்ச நாள் அதிகம் ஆகும் அவ்ளவுதான். எல்லா வசதியும் இருந்து மொதல் போட்டு சிங்கப்பூர் போறவங்க கொஞ்சம் காசு பாக்கலாம். வட்டிக்கி கடன்பட்டு லேபரா போயி குடும்பத்துல A to Z-வரைக்கும் நாமதான் நல்லது கெட்டது பாக்கனும்ணு சிங்கப்பூரு ஓடுனா கணக்குதான் வரும். வசதி வராது.”

நீங்க சிங்கப்பூர் போயி கடைசியில என்னதான் சம்பாதீச்சிங்க?
“இந்த கேள்வியதாங்க எங்க வீட்டுக்காரம்மா நிதமும் கேக்குது.”
– சரசம்மா
(ஊர், பெயர் அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)
_________________________________
சிங்கப்பூரில் ஓரளவு நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்பவர்களே அதன் அருமை பெருமை பற்றி அளந்து விடுகிறார்கள். அங்கே கடுமுழைப்புடன் வேலை செய்யும் தொழிலாளிகள் மீதான சுரண்ட்லை இவர்கள் வசதியாக மறைத்து விடுகிறார்கள்.
சிங்கப்பூர் சுரண்டல் என்பது ஒரு விசச்சூழல். ஒன்றில் மாட்டிக் கொண்டால் அதன் தொடர் விளைவாக முழுச்சுற்று முடித்து கையில் ஒன்றுமில்லாமல்தான் வரவேண்டும். அதற்குள் சிங்கப்பூர் பொருளாதாரம் ஒரு தொழிலாளியின் ஆகச் சிறப்பான இளைமைப் பருவ உழைப்பை திருடி விடும்.
இந்த சுரண்டலுக்கு அடிநாதமாக இருப்பது சிங்கப்பூர் பற்றிய கதைகள்தாம். அந்தக் கதைகளை நம்பி தொழிலாளிகள் கடன் வாங்கி செல்கிறார்கள். சென்ற பிறகு அந்த கனவு மறைந்து கடனை அடைப்பதற்காக கிடைக்கும் தொழிலை செய்ய வேண்டியிருக்கிறது. ஓவர்டைம் என்பது இங்கே ஒரு தொழிலாளியின் விருப்பத்திலிருந்து தீர்மானிக்கப்படுவதில்லை. முதலாளி சொன்னால் செய்ய வேண்டும். அதே போன்று வேலை இல்லை என்றால் தானே தனது செலவுகளை பார்த்துக் கொள்ள வேண்டும். வேலை இருக்கும் போது தொழிலாளியை தங்க வைத்து, சோறு போட்டு வேலை வாங்கும் வேலையை கம்பெனியே செய்து விடும்.
இந்த மாறுபாடு ஏன்? இங்கே உதிரிப்பாட்டாளிகளை தங்க வைத்து நேரம் காலம் பார்க்காமல் வேலை வாங்கும் அதே உத்திதான் சிங்கப்பூரிலும். இன்னும் மருத்துவம், விடுமுறை, பொதுவான உரிமைகள் எதுவும் ஒரு தொழிலாளிக்கு கிடையாது. வேண்டுமென்றால் அதிக பணம் செலவழிக்க வேண்டும். இருப்பினும் சிங்கப்பூர் கம்பெனியின் நிறுவன முதலாளி மரணத்தின் போது மன்னார்குடியில் மலர் அஞ்சலி போடவில்லையா என்று சிலர் கேட்கலாம். அடிமைகளாக இருக்கும் போது ஆண்டைகளுக்கும் கொஞ்சம் மதிப்பு இருக்கத்தான் செய்யும். அது அடிமைத்தனத்திலிருந்து வரும் அவலம். அதற்காக பரிதாபப்படலாமே ஒழிய பெருமைப்படமுடியாது.
ஆகவேதான் சிங்கப்பூர் சென்று ஆறு, ஏழு வருடம் வேலை பார்த்து திரும்பும் ஒரு தொழிலாளிக்கு கடைசியில் ஏதும் மிஞ்சுவதில்லை. ஆனால் அவரிடமிருந்து எடுக்கப்பட்ட உழைப்பை வைத்து சிங்கப்பூர் முதலாளிகள் தங்களது வங்கி கணக்கை கூட்டிக் கொள்வார்கள்.
வீட்டு வேலை செய்யும் பெண்கள், தினக்கூலிகளாய் வாழும் தொழிலாளிகளின் கதைகளை இது வரை பார்த்து விட்டோம். அடுத்த பகுதியில் சிங்கப்பூரில் கொடிகட்டும் விபச்சாரம், சூதாட்டம், மற்றும் தொழிலாளிகளின் சமூக வாழ்க்கை குறித்து பார்க்கலாம்.
– வினவு
இப்படி கடன் பட்டு வெளிநாடு சென்று உழைத்து பணம் சேர்ப்பதற்கு பதில் வினவில் வேலை செய்திருந்தாலே சகல சவ்ரியங்களுடனும் குடும்பத்துடன் குதுகலமாக இருந்துகொண்டு அக்கா தங்கைகளை கரை ஏற்றி காணி நிலமும் வாங்கி இருக்கலாம் என தனபால்கள் புரிந்துகொள்ளும் காலம் எக்காலமோ ?
ஒருவேளை அப்படி வினவில் இணைந்து வாழ்ந்தவர்களின் கட்டுரைகள் அடுத்தடுத்து வந்தால் தனபால்கள் எதற்கு வெளிநாட்டுக்கு போகப்போகிறார்கள்?வினவு அலுவலகத்திற்கு முன்னாள் அல்லவா குவிந்திருபார்கள்?
ஒருவேளை சம்பந்தப்பட்டவர்களுக்கு வருமான வரி துறையினரால் தொல்லைகள் வரக்கூடும்என பாதுகாப்பு கருதி அத்தகையோர் வாழ்கையை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்களோ?
மேலும் இப்படி வெளிநாடு சென்று உழைத்து கஷ்டப்படுபவர்களை மேலும் கஷ்டப்படுத்த விரும்பாமல் வெளிநாட்டில் இருந்து தரும் நன்கொடைகளை வினவு ஏற்றுகொள்ளாமல் இருக்கலாமே?
ஏம்ணே சுத்தி வளைச்சு வாரீங்க! விபச்சாரம், போதை மருந்து, ரவுடியிசம், ஃபோர்ஜரி, ஃபிராடுன்னு ஏகப்பட்ட தொழில்ல இறங்குனா மாளிகை என்ன ஒரு ஊரையே விலைக்கு வாங்கலாம்ல. சிங்கப்பூர்ல் கூட விபச்சாரத்துக்கு ஏகப்பட்ட டிமாண்டாம்ல! தொழில மத்தவங்களுக்கும் சொல்லிக்க கொடுக்கலாம்ணே!
இந்த கொடுமைகளுக்கு என்றுதான் முடிவோ?
எல்லா வளமும் இருந்தும் சோவியத்தில், சீனாவில் மார்க்சியவாதிகள் கிழிச்சது தெரியாதா?? ஒரு வளமும் இல்லாமல் எப்படி சாதித்தார்கள் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இதில் இந்தியாவில் புரட்சி வேறா?? உலகில் உள்ள மற்ற நாடுகளை விட , சட்டத்தின் ஆட்சி இங்கு வெளிப்படையாக உள்ளது.
சிங்கப்பூர்ல தொழிலாளிகளுக்கு குறைந்த பட்ச சம்பளத்துக்கு சட்டம் கிடையாது. முதலாளிக்கு குறைவான வரி எப்போதும் உண்டு.
இங்கு பேட்டியளித்த முன்னால் சிங்கப்பூர் ஊழியர் உண்மையை பேசியிருக்கிறார்.அதனை நேர்மையாக கட்டுரையாளரும் வெளிப்படுத்தியிருக்கிறார்.இருவருக்குமே பாராட்டுக்கள்.அந்த ஊழியர் மிகச்சரியான ஒரு வகைமாதிரி என்பதால் அவரது உயர்வை அல்லது உயரமுடியாத சூழலை அவரது இந்த பேட்டியிலிருந்தே பரிசீலிக்கலாம் . அந்த நண்பரை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் போது நம் தமிழகத்திலிருந்து அங்கு செல்லும் பலருடைய பொதுவான பல ஒற்றுமைகள் இருப்பதால் அது அவரை மட்டுமே குறை காணுகின்ற செயலாக அவர் கருதிக்கொள்ள வேண்டாம் என அவரை வேண்டுகிறேன்.
அந்த ஊழியர் ஒரு ஒரு பட்டதாரி,கூடுதலாக தொழில் படிப்பின் அவசியம் அறிந்து ஒரு குளிர்சாதன பழுது பார்ப்பு பட்டயம் பெற்றிருக்கிறார்.மேலும் சில பட்டயப் படிப்பும் பயின்றுள்ளார்.இங்கு கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால் அவர் படித்த பட்டப் படிப்பிற்கு ஏற்ற வேலையை தேடும் முனைப்பு அவருக்கு இருக்கவில்லை.அவரே சொல்லுவது போல “படிச்சிட்டு நல்ல “அட்மிநி ஸ்ட்ரேசன்”(திருத்தம் என்னது)லெவல்ல வேலை பாத்தா மாதச் சம்பளம் மதிப்பு எல்லாம் இருக்கும். தொழிலாளியா போனா எல்லா துன்பமும் பட்டாகணும்”.ஆக அலுவலக பணிக்கான நோக்கத்தில் அதற்கான தகுதியோடு அவர் வெளிநாடு செல்லவில்லை.சில பட்டயங்கள் படித்திருக்கிறார் ஆனால் அதில் அவர் அனுபவம் பெற்றிருக்கவில்லை.ஏதோ ஒரு வேலையை எதிர்பார்த்துதான் அவர் சென்றிருக்கிறார். இது தான் முழுக்க முழுக்க
இந்த நிலையில் அங்கு வருபவர்கள் நிலை என்னவாக இருக்க முடியும்? இன்னொரு செய்தி 3வருடம் கலை மற்றும் வணிகவியல் படித்தவர்களுக்கு மேற்படிப்போ குறிப்பிட்ட ஒரு துறை சார் அனுபவமோ இல்லாமல் எந்த வேலையும் இங்கு கிடையாது எனவே 5வருடம் பொறியியல் அல்லது 3 வருடம் பொறியியல் டிப்ளமோ படித்து விட்டு உடனேயே சிங்கப்பூர் வர வேண்டுமென ஏஜெண்டை பார்க்க செல்வார்கள். சிங்கப்பூர் சட்டப்படி ஒருவர் பட்டம் அல்லது பட்டய படிப்பு முடித்தபின் குறைந்தது 2 வருடம் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.அப்போது தான் அவரது படிப்பிற்கு ஏற்ற s பாஸ் அல்லது எம்பிளாய்மென்ட் பாஸ் பெற முடியும்.ஆனால் நம் நண்பர் ஏஜென்டிடம் எவ்வளவு செலவுன்னாலும் பரவாயில்லை உடனே சிங்கப்பூர் போக வேண்டும் என்பார்.அந்த முகவர் நேர்மையானவராக இருந்தால் முடியாது என்று சொல்லி விடுவார்.பிறகென்ன நண்பர் வேறொரு ‘ நல்ல’ முகவரை போய் பார்ப்பார்.அந்த ‘நல்ல’ முகவர் எந்த வேலைன்னாலும் பார்ப்பிங்களா என்று கேட்பார்.நண்பர் எதற்கும் அஞ்சாமல் “பொழைக்க போற நாட்டிலே என்ன வேலைன்னா என்ன சார்” என்று தானாகவே ஒரு தத்துவத்தை கூறி விட்டு முகவர் விரித்த வலையில் விழுவார்.முகவரும் உழைப்பின் அருமையை கூறி ஒரே வருடத்தில் படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு மாறிக் கொள்ளலாம் என்று பொய்யான ஒரு தேறுதலையும் சொல்லுவார். முகவர் இவர் படித்த பெற்ற எல்லா காகிதங்களையும்( நகல்களைத்தான்) தூக்கி குப்பையில் போட்டு விட்டு வொர்க் பெர்மிட்டுக்கு விண்ணப்பிக்க செய்வார்.நம்ம நண்பர் தனக்கு வேலை கிடைத்து விசா வந்து டிக்கெட் எடுத்து விமானம் ஏறுகின்ற முதல் நாள் வரை இது பற்றியெல்லாம் யாரிடமும் மூச்சு காட்டாமல் (பொறமை புடிச்ச பயலுவலுக்கு சொல்லக் கூடாது என்று) நமுட்டு சிரிப்புடன் நடமாடுவார். முதல் நாள் சொல்லி விட்டு அடுத்தநாள் கிளம்ப போகிற நண்பருக்கு கம்பெனி நல்ல கம்பெனியா நெட்ல போட்டு பார்த்தியா சம்பளம் பற்றி ஒப்பந்தம் எல்லாம் பார்த்தாயா என்று கேட்பவர்களுக்கு ஏஜென்ட் தங்கமான மனுசன்னு ஒரே வரி பதில் தான்.அல்லது அண்ணன் இருக்காப்பல அவரு நல்ல கம்பெனின்னு சொன்னாரு என்கிற பதில் தான் வரும்.அந்த அண்ணனுக்கு ‘சிங்கப்பூர் யதார்த்தத்தில்’ புரிந்து கொண்ட வகையில் நல்ல கம்பெனியாகத்தான் தெரியும்.இப்படியெல்லாம் சாகச பயணம் மேற்கொண்டு சென்னை ஏர்போர்ட் வரை 2 கார் வழியனுப்ப, சிங்கப்பூர் வந்திறங்கும் நம் நண்பர், அங்கு ஊழியர்களாகவும் பகுதி நேர கங்காநிகலாகவும் உள்ளவர்கள் வந்து திறந்த வெளி வேனில் அழைத்து செல்லும் போது தான் முதலில் சற்று சூடு உரைக்கும்.அதன் பின் எல்லாமே எதிர்பராததுதான் நடக்கும்.ஏனென்றால் இது எதையும் சற்று தெளிவாக முன்கூட்டியே அறிய வாய்ப்பிருந்தும் தமது ரகசியம் பேணும் சாதுர்யத்தால் அறிந்திருக்க மாட்டார்கள்.இன்னும் கூட நிறைய எழுதலாம்.சிங்கப்பூர் ‘சுரண்டல்’ என்பது ஏதோ எல்லா விபரங்களும் மறைக்கப்பட்டு பொறி வைத்து பிடிக்கப்படுகிறார்கள் என்பது போல சொல்வது உண்மையல்ல .விட்டில் பூச்சிகளாக தாமே போய் விழுகிறார்கள் என்பதற்காக இதனை சொல்கிறேன்.
Whatever u said was right. But the fact is that they are not aware of the real situation. Even though if we say anything, they will not listen to us. they will see only money.
One of friend used to go to abroad (Not Singapore). the agent took 2 lakhs from Him in Chennai & sent him (by Train – Unreserved coach) to Delhi saying that u will get direct flight in Delhi only. When he went to delhi, one more agent invited him in delhi & was demanding another 1 Lakh money. When he said I have already paid 2 lakhs, the Delhi agent told him that “that 2 lakhs form the Chennai agent & for me you have to give me additional 1 Lakh”. he didn’t pay it. The delhi agent kept him in a very small room for 25 days & didn’t give enough money for daily food. atlast I sent 2,000 rupees to Him by one of my friend in Delhi & then He had returned to Chennai.
At last what happened is his parents were scolding like anything. they said we spent 2 lakhs rupees & why did u spoil it.
Still now they have anger on me, But not on the Chennai & delhi agents….
This is True…….
சிங்கப்பூர்ல எச்சி துப்புறதக்கூட கண்டுபிடிச்சு தண்டிக்கிற அரசாங்கம், விட்டில் பூச்சியாக சிக்குற தொழிலாளிங்கள காப்பாத்தாம, நல்லா சுரண்டுங்கன்னு கண்டுக்காம இருக்குறதுக்கு என்ன சார் காரணம்?
குடும்பத்திற்காக(தங்கச்சிக்காக)சிங்கப்பூருக்கு மட்டுமல்ல, அமெரிக்காவிற்கும் ப்ளைட் ஏறிய அண்ணன் களும் உண்டு நமது சமுகத்தில்.
//வீட்டு வேலை செய்யும் பெண்கள், தினக்கூலிகளாய் வாழும் தொழிலாளிகளின் கதைகளை இது வரை பார்த்து விட்டோம். அடுத்த பகுதியில் சிங்கப்பூரில் கொடிகட்டும் விபச்சாரம், சூதாட்டம், மற்றும் தொழிலாளிகளின் சமூக வாழ்க்கை குறித்து பார்க்கலாம்.
//
வெள்ளை சட்டையில் கரும்புள்ளியை பூதகண்ணாடி கொண்டு தேடி தேடி , பாருங்க பாருங்க இது கருப்பு சட்டை தான் என்பதற்கு ஆதாரம் என்று கூறுவதற்கு பதில்
வெள்ளை சட்டை எப்படி இருக்கும் பாருங்க என்று காடிநீங்கன்னா நாங்களும் தெருஞ்சுகுறோம்
காபிலிசம் லவ் ஸ்டோரி ராமா, எல்லா நாட்டுலயும் கஷ்டப்படுற தொழிலாளி கருப்பு புள்ளியாவும், உக்காந்து துன்னுற முதலாளி வர்க்கம், அப்பால அந்த வர்க்கத்தோட கால நக்குற லவ் ஸ்டோரி வர்க்கம் வெள்ளையாவும்தான் தெரியும்.
திரு.ராமன் உங்களது கருத்தையே நானும் வழிமொழிகிரேன்.
இது நரகம்,அது நரகம் என்று சொல்லிகொண்டிருப்பதர்க்கு பதிலாக எது சொர்க்கம் என்று காட்டிவிட்டால் பிறகு யாரும் அழைக்காமலேயே அனைவரும் சொர்கத்திற்கு வந்துவிடுவார்கள் தானே?
சொர்கத்தை வரையறுக்கும் வகையில் மதவாதிகளின் கருத்தைத்தான் வினவும் பின்பற்றிகொண்டிருக்கிறது.
@ Ram and Velumani Saravanakumar, Capitalists like you are justifying dog like system of this Modern world. Instead of blaming Aunthor for showing truth, why you dont agree that Capitalism is bane of Human society. Do you think Humans are God of World? You are crazier people
@ Ananth then what is your suggestion? Is Communism a boon to our society? Show one country which follows proper communism or a country that prospers with communist ideologies. Then we can as well introspect that country with a microscope like vinavu does on Singapore.
கடந்த நூறு ஆண்டுகளில் சோசலிசம் பூத்துக்குலுங்கும் ஏதாவது சொர்க்கத்தை இந்த பூமியில் எங்கேயாவது உருவாகியிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள். அப்படியே இருந்தாலும் சிங்கப்பூரில் இருப்பதை விட ஆயிரம் குறைகள் அதிகம் இருக்கும்.
சொர்க்கத்த படைக்குற சோசலிசத்துக்கு கிடைச்ச பின்னடைவ கேலி பண்ணி, சிங்கப்பூர் மாதிரி நரகத்த படைச்சுட்டு அதுதான் சொர்க்கம்ணு உங்கள மாதிரி கோயிந்துகளை நம்ப வச்சு கொண்டாட வெக்கிறான் பாரு அங்க நிக்கிறான் சிங்கப்பூர் கவர்ன்மெண்ட், வெல்டன் பீரியசாமி
These people have formed “Singapore Appreciation Club”But,till date no one club member could tell why migrant labourers are transported in open lorries like cattle.Only solace is that Rajan admits that sort of transport in his latest comment.
Sooriyan,
What about our country?
Even in our country the labourers are taken to work locations by open lorries.
Every country is not perfect. Every place is not ideal.
There is always room for improvements.
Overall, when you compare the standard of living of all citizens, Singapore is definitely better placed than us. So, before criticizing others we need to introspect and see how we stand, where we stand.
Vinavu friends are always talking about an Ideal world, Ideal system.
Unfortunately, the world is not perfect. It is not ideal. There are imperfections.
Instead of dreaming for an Ideal world, let us make some incremental changes,
Let us treat all people equally.
Let the labourers get their salaries proportionate to their efforts.
Let the workers act responsibly.
Let peace prevail.
One step at a time, One by One, Bit by Bit, Changes can happen.
If an Ideal world is not possible, atleast, we can try to make it a better world than it is present now.
கற்றது கையளவு அவர்கள் சூரியனுக்கு எழுதியது முழுக்கவும் முதலைக்கண்ணிரே. முன்னேற்றங்கள் சிறுகச்சிறுக நடக்கவேண்டும் என்று கதறுகிற இந்த மாமனிதர் தன் கம்பெனியில் இன்னும் தொழிலாளர் நலச்சட்டங்களையே அமல்படுத்தவில்லை. தொழிற்சங்கம் அமைப்பது என்னவாயிற்று என்ற கேள்விக்கு இன்றுவரைக்கும் அன்னாரடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை என்றால் இவரது நாடகத்தின் தன்மை எந்தளவுக்கு என்று வாசகர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இந்த இலட்சணத்தில் தான் அன்னார் அவர்கள் “Let us treat all people equally.
Let the labourers get their salaries proportionate to their efforts.
Let the workers act responsibly.
Let peace prevail.” என்று கதையளக்கிறார்.
ஒரு லயன்ஸ் கிளப், லேடிஸ் கிளப், மனமகிழ் மன்றம் அளவிலான பொழுதுபோக்குகள் தான் அன்னார் முன்வைக்கும் சமூக மாற்றங்கள். ஆற்றுமணல் கொள்ளைக்கும் தண்ணீர் சுரண்டலுக்கும் அன்னார் அவர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தை நாட வேண்டும் என்று சு.சாமி போல பேசியவர் தான் இந்த கற்றது கையளவு.
ஆனால் மூலதனத்தையும் முதலாளியையும் ஒழிக்காமல் தொழிலாளிகளுக்கு விடிவு காலம் ஏது? இனியும் இந்த யோக்கியர் சீர்திருத்தம் பற்றி பேசுவாரேயானால் தொழிற்சங்கத்திலிருந்து ஆரம்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தென்றல்,
Let the workers act responsibly. என்று எழுத்த்தெரிந்த இந்த யோக்கியர் Employers க்கென்று எதுவுமே எழுதவில்லை பாருங்கள். இப்படியும் சில மனிதர்கள்!
PK,
//Let us treat all people equally.
Let the labourers get their salaries proportionate to their efforts.
Let the workers act responsibly.
Let peace prevail.//
இது தான் நான் எழுதியது.
எழுதிய நான்கு வரிகளில் தொழிலாளிகள் பொறுப்பாக செயல்பட வேண்டும் என்று சொன்னதை மட்டும் மறைந்த முன்னாள் அமைச்சர் SDS அவர்கள் வேனில் தொங்கியது போல தொங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். மற்ற மூன்று வரிகளை படிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்.
நான் ஆரம்பத்தில் இருந்து பல்வேறு பதிவுகளில் சொல்வதை எல்லாம் விட்டு விடுங்கள்.
எத்தனை பதிவுகளில் எத்தனை பின்னூட்டங்களில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, நல்ல வசதிகள் செய்து தர வேண்டும் என்று எத்தனையோ முறை சொல்லி வருகிறேன். ஒன்று நீங்கள் வினவுக்கு புதிதாக வந்திருக்க வேண்டும், இல்லை என்றால் கண்ணை மூடிக்கொண்டு நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பவரை போல இருக்க வேண்டும்.
கொஞ்சம் கண்ணை திறந்து உங்களை சுற்றி என்ன நடக்கிறது, உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் என்ன நடக்கிறது என்று சுற்றி பாருங்கள்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
சிவப்பு நிற கண்ணாடியை அணிந்து கொண்டு பார்த்தால் பார்ப்பது அனைத்தும் சிவப்பாகவே தோன்றும். கம்மியுநிசத்தை பற்றி கேள்வி எழுப்பினால் உடனே அவரை முதலாளித்துவ அடிவருடி என்று ஏசாமல் கொஞ்சம் நிதானமாக யோசித்து பின் ஒரு முடிவுக்கு வாருங்கள்.
கம்மியுநிசத்தை கேள்வி கேட்பதாலேயே ஒருவர் அயோக்கியராக இருப்பார் என்று ஏன் ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்? உங்கள் சித்தாந்தத்தின் மேல் உங்களுக்கு அளவுக்கு அதிகமான பற்று இருக்கட்டும். அது பற்றி கேள்வி எழுப்புபவரை அயோக்கிய சிகாமணி என்று நீங்கள் நினைத்தால் அது உங்களது முதிர்ச்சியற்ற நிலையை தான் காட்டுகிறது.
எந்த ஒரு நாணயத்துக்கும் மறுபக்கம் என்ற ஒன்று உண்டு.
உங்கள் சித்தாந்தத்தில் குறைகளே இல்லை என்று கூறுவது இந்த மதவாதிகள் சொல்வார்களே, எங்கள் மதம் மட்டும் தான் பெரியது. எங்கள் கடவுள் மட்டும் தான் உண்மையான கடவுள். மற்ற கடவுள்கள் எல்லாம் சாத்தானின் அவதாரம் என்று கூறுவார்களே, அதைப்போல உள்ளது.
உலகில் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உண்டு.
இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரே தீர்வு என்றிராமல் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளும் உண்டு.
கம்மியுனிசம் மட்டும் தான் சர்வேரோக நிவாரணி என்று காம்றேடுகளான நீங்கள் கருதுகிறீர்கள்.
அது உங்கள் கருத்து.
முதலாளித்துவம் மட்டும் தான் தீர்வு என்று கார்பெரேட்டுகள் கருதுகிறார்கள்.
அது முதலாளிகளின் கருத்து.
உலகம் கருப்பு வெள்ளை இல்லை. மற்ற நிறங்களும் உள்ளது.
கட்டுப்பாடில்லாத பேராசை கொண்ட முழு முதலாளித்துவத்துக்கும், மக்களின் சுதந்திர உணர்வுக்கு பூட்டு போடும் சர்வாதிகார கம்மியுநிசத்திற்கும் இடையில் எங்களை போன்ற பொதுமக்களும் இருக்கிறார்கள். இந்த இரண்டு துருவங்களுக்கு இடையேயும் வழிகள் உண்டு. அது துருவத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் அறிய மாட்டார்கள். துருவங்களில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்களை சுற்றி இருப்பது மட்டும் தான் உலகம் என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். கம்மியுநிசவாதிகளே, முதலாளித்துவ வாதிகளே, உங்கள் துருவங்களை விட்டு வெளியே வாருங்கள், பூமத்திய ரேகை பக்கம் கொஞ்சம் எட்டி பாருங்கள். உலகம் மிகப்பெரிது, உங்கள் கருத்து மட்டும் தான் உண்மை, மாற்று கருத்து இருக்கவே கூடாது என்ற முதிர்ச்சியற்ற நிலையில் இருந்து கொஞ்சம் இருபக்கம் இருக்கும் நல்லவை, கெட்டவை இரண்டையும் பகுத்தறியும் திறனை வளர்க்க பாருங்கள் pk.
க கை,
சுட்டிக்காட்டியும் புரியவில்லை. பத்தி பத்தியாக பிரசங்கம் வேறு. Please spare us your lessons. I am reading these for nearly 3 years.
இந்த 4 வரிகளில் முதலில் வரியில் us என்றும் அடுத்த வரியில் labourers என்றும் அடுத்த வரியில் workers என்றும் எழுதியிருக்கிறீர்கள்.
முதலில் வரும் us யார்.
முதலாளிகள் தகுந்த சம்பளத்தை கொடுக்காமல் Labourers எப்படி வேலைக்குத்தகுந்த சம்பளத்தை பெறுவார்கள்.
தொழிலாளர்களுக்கு labourers என்றும் workers என்றும் எழுதத்தெரிந்த உங்களுக்கு Employers என்று எழுதாதது நாணயமற்ற செயல் என்பது விளங்காதது ஏன்.
தொழிலாளர்கள் மட்டும் தான் பொறுப்பாக நடந்து கொள்ளவேண்டுமா.
முதலாளிகள் ஏற்கனவே பொறுப்பாகத்தான் நடந்து கொள்கிறார்களா.
இந்த லட்சணத்தில் லிட்டர் கணக்காக முதலைக்கண்ணீர் வேறு. குஷ்டம்டா.
This is enough, This critic is enough for Mr. KK 🙂
//இந்த லட்சணத்தில் லிட்டர் கணக்காக முதலைக்கண்ணீர் வேறு. குஷ்டம்டா.//
pk அவர்களுக்கு இன்னும் பொறுமையாக, விளக்கமாக சொல்கிறேன்:
//Let the labourers get their salaries proportionate to their efforts.//
இது முதலாளிகளுக்கானது.
Employers என்று அதில் பதிவிடவில்லையே ஒழிய அதை படிக்கும் அனைவரும் அது முதலாளிகளுக்கான வரி என்பது தெளிவாகவே விளங்கும். உங்களுக்கு விளங்கவில்லை எனில் இனி இப்படி எழுதுகிறேன்.
Let Employers pay the labourers salaries proportionate to their efforts.
//Let the workers act responsibly.//
இது தொழிலாளிகளுக்கனாது.
//Let us treat all people equally.//
இது அனைவருக்குமானது – முதலாளிகள், தொழிலாளிகள், மதம், சாதி, எல்லா வகை மனிதர்களுக்கும் பொருந்தும்.
// Let peace prevail.//
இதுவும் அனைவருக்கும் பொருந்தும்.
//Vinavu friends are always talking about an Ideal world, Ideal system.
Unfortunately, the world is not perfect. It is not ideal. There are imperfections.
Instead of dreaming for an Ideal world, let us make some incremental changes,//
இது வினவில் இப்போது பின்னூட்டமிடும் pk, தென்றல், தமிழ், sooriyan, போன்ற நண்பர்களுக்கு. (சூரியன் பெயரை தமிழில் எழுதினால் அவர் கோபித்து கொள்வார், சூரியன், உங்களுக்கு தமிழே வராதா 🙂 )
அம்மா எப்ப தாலியறுக்கும்ணு ஒரு குழந்தை கேட்பதை அயோக்கியத்தனம்ணு எடுத்துக்க முடியாட்டாலும் அது அப்பாவித்தனம்ணு ஒத்துக்காம அறிவுன்னு வாதாடுனா எப்படி சார்?
இப்ப சொல்லுங்க… கம்யூனிசத்த கேள்வி கேக்குற நீங்க அறிவா இல்ல அப்பாவியா?
தென்றல்,
1. முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நான் அன்று குறிப்பிட்ட அந்த கம்பெனியில் உள்ள ஆயிரக்ககணக்கான தொழிலாளிகளில் நானும் ஒருவனாக இருந்தேன். முதலாளி அல்ல. அந்த கம்பெனி நட்டமடைந்து மூடப்பட்டது. இன்று வரையும் நான் தொழிலாளி தான். ஆனால் சிறுக சிறுக சேர்த்து ஒரு நாள் ஒரு தொழிலை தொடங்க முயற்சிப்பேன். தாங்கள் சொல்லும் கருத்துக்களில் சிலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், பெரும்பாலும் உழைப்புக்கேற்ற ஊதியம், திறமைக்கு ஏற்ற முன்னேற்றம் இவற்றில் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்.
2. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று யோசிக்காமல் கொஞ்சம் பொறுமையாக நான் சொன்னதை யோசித்து பாருங்கள். எரிவதை நீக்கினால் கொதிக்கிறது அடங்கும் என்பார்கள். மணல் என்ற ஒன்றின் டிமாண்ட் மிக அதிகமாக இருப்பதால் தான் மணல் கொள்ளையர்கள் நம் ஆறுகளை மலடாக்கி வருகிறார்கள்.ஏன் மணல் என்ற பொருளின் தேவை இல்லை என்ற நிலை வந்தால் எப்படி இருக்கும். நான் சொன்னது நடைமுறையில் இல்லாத ஒன்றும் அல்ல. மீண்டும் சொல்கிறேன். LGS Construction technology என்று கூகுளில் தேடிப்பாருங்கள். மிக குறைந்த செலவில், குறைந்த நேரத்தில், தரமான கட்டிடங்களை ஸ்டீல் மற்றும் சிமன்ட் போர்டு, ஜிப்சம் போர்டு, போன்ற பொருட்களை கொண்டு மணலே இல்லாமலும் வீடு கட்டலாம். இன்னொரு முக்கிய விடயம், இந்த வகை கட்டிடங்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. கான்கிரீட் தேவையும் மிக மிக குறைவு. ஒரு பிரச்சினைக்கு தீர்வு என்பது நீங்கள் யோசிக்கும் தீர்வாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே. மாற்று தீர்வு ஒன்றும் இருக்கலாம் அல்லவா. அதைத்தான் நான் பரிந்துரைத்தேன். பெரியாரும் எரிகிறதை நீக்கினால் கொதிப்பது அடங்கும் என்ற இந்த வழிமுறையை தான் பெரியார் அவர்களும் பின்பற்றினார். கடவுள் என்ற ஒரு நம்பிக்கை இருப்பதால் தானே அந்த கடவுள் பெயரை வைத்து ஏமாற்றுகிறார்கள், சாதிக்கொடுமைகளை நடத்துகிறார்கள். அந்த கடவுள் என்ற ஒரு நம்பிக்கையே இல்லை என்றால் பின் கடவுள் பெயரைக்கொண்டு ஏமாற்ற முடியாதல்லவா. அதே போல தான் மணல் என்ற ஒன்றின் தேவை மிக மிக அதிகமாக இருப்பதால் மணல் கொள்ளையர்கள் அளவுக்கதிகம் ஆட்டம் போடுகிறார்கள். அந்த மணலே இல்லாமலும் வீடு கட்டலாம். இதில் தான் அறிவியலை, தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று சொன்னேன்.
3.முதலைக்கண்ணீர்,நாடகத்தன்மை, யோக்கியர் என்றெல்லாம் சீண்டுகிறீர்கள். சரி, எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு விட்டு விடுவேன். ஆனால் சு.சாமி போல பேசியவன் என்று சொன்னீர்களே, அதைத்தான் தாங்கவே முடியவில்லை. அய்யகோ என் செய்வேன் 🙂
கற்றது கையளவு அவர்களே!
குறிப்பிட்ட அந்தக் கம்பெனியில் தாங்களும் ஒரு தொழிலாளி என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. உங்களது வாக்குமூலத்தில் தொழிலாளர்களின் மனதிற்கு ஏற்ப, கனிவுடன் வேலை வாங்கும் மேலாளர் என்றே குறிப்பிட்டிருந்தீர்கள். எங்களது மொழியில் இதற்கு கங்காணி என்று பெயர். இது குறித்த உரையாடலை தாங்கள் ஒன்றும் மறந்துவிடவில்லையே!
அந்தக் கம்பெனி நட்டமடைந்து மூடப்பட்டது என்று கேட்கிற பொழுது கனிவாகப்பேசி வேலை வாங்கத் தெரிந்தவர் தன் தலைமைக்கு இலாபத்தை எவ்வாறெல்லாம் பிழிந்து கொடுத்திருப்பார்! இன்றைக்கு நட்டம் என்கிறாரே நட்டம் யாருக்கு தலைமைக்கா? தொழிலாளிக்கா? அல்லது இடையில் தரகு வேலை பார்த்த மேலாளர்களுக்கா? ஒரு சிங்கப்பூர் ஏஜண்டைப்போல அல்லவா இருக்கிறது உங்களது மொழி!
1. “தாங்கள் சொல்லும் கருத்துக்களில் சிலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், பெரும்பாலும் உழைப்புக்கேற்ற ஊதியம், திறமைக்கு ஏற்ற முன்னேற்றம் இவற்றில் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்.”
மேற்கண்ட இந்தக் கருத்தும் முழுக்கவும் நாடகமே! ஒரு வரியில் சொல்லுங்களேன். தொழிலாளர் நலச்சட்டங்களையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையையும் அமல்படுத்துவேன் என்று! இதைவிடுத்து தங்களுக்கு சம்பந்தமில்லாத முழுநம்பிக்கையை வெளிப்படுத்தினால் தொழிலாளர்கள் மீது இருக்கிற வெறுப்புணர்வும் மனவக்கிரமும் தெரியாமல் போய்விடுமா என்ன?
தாங்கள் தங்களது அயர்லாந்து நண்பரின் வாக்குமூலத்தில் என்ன சொல்லியிருந்தீர்கள்? அங்கெல்லாம் தொழிலாளிகள் நன்றாக இருக்கிறார்கள். சீனாவில் அப்படியா என்று முதலாளித்துவ சீனாவை கம்யுனிச நாடு என்று நினைத்துக்கொண்டு அறிவாளித்தனமாக கேள்வி ஒன்றை எழுப்பியது ஞாபகம் இருக்கிறதா? தொழிலாளர் நலன் குறித்த கரிசனத்தைத் தாங்கள் அக்கணம் வெளிப்படுத்தியிருந்தீர்கள். இங்கே அதியமான் உங்களது கருத்தை பொய்யாக்கும் விதத்தில் சீன முதலாளித்துவம் சிறப்பானது என்று காத்திரமான பின்னூட்டம் ஒன்றை இட்டிருக்கிறார். சந்தர்ப்பவாதியான தங்களால் இதுகுறித்து ஏனோ உரையாற்ற முடியவில்லை! என்னிடம் சொல்லியது போன்று அயர்லாந்து ஆட்டையில் வரக்காணோமோ! சரி அதை விடுங்கள்.
ஆனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு அயர்லாந்து போன்று இறையாண்மை என்று ஏதும் கிடையாதா? இங்கெல்லாம் தாங்கள் அயர்லாந்திற்கு சொன்ன தொழிலாளர் நலச்சட்டங்களோ தொழிற்சங்கமுமோ இருக்கமுடியாதா?
இதை வலியுறுத்த உங்களுக்கு துப்பில்லையென்றால் இந்த நாட்டில் தொழிலாளர் மீதான சுரண்டல் எந்தளவுக்கு இருக்கும் என்பதும் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான சட்டங்கள் மலம் துடைத்த காகிதமாக நினைக்கும் உங்களைப்போன்ற மேட்டுக்குடிகளின் மனவக்கிரமும் எவ்வளவு பருண்மையானதாக இருக்கும் என்பதை அம்பலப்படுத்துகிறதல்லவா தங்களின் மறுமொழி! பிறகு ஏன் இத்துணை பாசாங்கு?
தென்றல் அவர்களே,
தொழிலாளர் நலன் பற்றிய முழு சட்டங்கள் எனக்கு தெரியாது. தொழிலாளர் நல சட்டம் பற்றிய முழு விவரம் எனக்கு மட்டுமல்ல நம் நாட்டில் தொண்ணூறு விழுக்காடு மக்களுக்கு தெரியாது தான். எனக்கு தெரிந்த வரை அவர்களுக்கு pf, esi, பணியிடத்தில் உள்ள பாதுகாப்பு நலன் (Health and Safety procedures), பணியாளர்களுக்கு பணியில் ஏதாவது காயமோ அசம்பாவிதமோ ஏற்பட்டால் அவர்களுக்கு இன்சூரன்சு வசதி இவை போன்ற வசதிகள் அந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டன. வேலையை விட்டு அவர்களாகவே நீக்கினால் மூன்று மாத சம்பளம் கொடுக்கப்படும். செய்யும் வேலையை திறமையாக செய்து நிறுவனத்திற்கு அதிக இலாபம் கொண்டு வரும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
மற்றபடி முழு தொழிலாளர் நல சட்டங்கள் பற்றி எனக்கு தெரியாது, அங்கு வேலை செய்தவர்களில், மனிதவளத்துரையினர் தவிர ஏனையோருக்கு முழு சட்டங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முழு தொழிலாளர் நல சட்டங்கள் அனைத்தும் காப்பாற்ற படுகிறதா என்று அறியும் நிலையில் அங்கு நாங்கள் இல்லை. அந்த சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரமும் எனக்கு இல்லை.
கற்றது கையளவு அவர்களே!
\\ முதலைக்கண்ணீர்,நாடகத்தன்மை, யோக்கியர் என்றெல்லாம் சீண்டுகிறீர்கள். சரி, எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு விட்டு விடுவேன். ஆனால் சு.சாமி போல பேசியவன் என்று சொன்னீர்களே, அதைத்தான் தாங்கவே முடியவில்லை. அய்யகோ என் செய்வேன் \\
1. என் செய்வேன் என்று கதறுவதற்கு முன் சு.சாமி தாங்கள் சொன்னதைத் தான் சொன்னார் என்பதை அறிந்திருக்க வேண்டாவா?
2. ஏன் தண்ணீரையும் மணலையும் சுரண்டுபவனுக்கே தாங்கள் சொல்லும் ஐடியா தெரியவில்லை? ஏன் போராடுகிற மக்களுக்கு எதிராக முதலாளிகளுக்கு இப்படி விளக்கு பிடிக்கிறீர்கள்?
3. சான்றாக மேல் நிலை வல்லரசுகள், தங்களது நாட்டில் தொழிற்சாலை அமைப்பதற்கு நீர் மற்றும் இயற்கை வளங்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிற அதே நேரம், இந்தியா போன்ற நாடுகளை வரைமுறையின்றி சுரண்டலாம் என்றிருக்கும் பொழுது, மணற்கொள்ளைக்கு எதிராக மக்கள் போராடினால் மணல் இல்லாமல் வீடுகட்டுவது எப்படி என்றா முதலாளிக்கு வகுப்பெடுப்பீர்கள்? என்ன ஒர் அயோக்கியத்தனம் இது! தெரிந்தே தான் வாழ்கிற சமூகத்திற்கு துரோகமிழைக்கின்ற மேட்டுக்குடியின் மனவக்கிரமின்றி இது வேறென்ன?
4. இது போதாது என்று எறிகிற கொள்ளியை பிடுங்கினால் பிரச்சனை தணியும் என்று புளகாங்கிதம் வேறு! உங்களது ஐடியாபடி நுகர்வுக்கலாச்சாரத்தால் நிகழ்த்தப்படும் பாலியல் வண்புணர்வு, பலாத்காரம் போன்ற கொடுஞ்செயல்களுக்கு எதிராக அறிவியல் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து வீதி தோறும் விபச்சார விடுதிகளை திறந்துவிட்டால் நமது சகோதரிகளின் மீது வன் கொடுமை நிகழ்த்தப்படாது என்றும் அதற்காக இவர்கள் அர்த்தமற்று நுகர்வுக் கலாச்சாரத்தை எதிர்த்து போராட வேண்டாமென்றும் சொல்கிறது உங்களது நியாயவாதம்! அப்படித்தானே? இது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல் அல்லவா உள்ளது?
இது அர்த்தமற்ற பிதற்றல் தென்றல்.
எதற்கு எதனுடன் உவமானம் செய்வது என்ற ஒரு எல்லை உண்டு. அது உங்களிடம் இல்லை.
மணல் இல்லாமல் நீர் இல்லாமல் குறைந்த செலவில் மிக விரைவில் வீடு கட்டுவதால் நாட்டுக்கு நன்மை தான். ஆறுகள் காப்பாற்றப்படும்.
மக்களும் சொந்த வீடு என்ற ஒரு இலட்சியத்திற்காக வாழ்நாள் முழுதும் வாயை கட்டி வயிற்ரை கட்டி சேமிக்கும் காசு மிச்சபட்டால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
மற்றபடி மணல் கொள்ளையை எப்போது நான் ஆதரிப்பதாக பேசியிருக்கிறேன்?
முதலாளிகளை எதிர்க்கிறேன் பேர்வழி என்று புதிய தொழில்நுட்பத்திற்கு தடை போடுகிறீர்கள். 🙂
கொஞ்சம் துருவத்தில் இருந்து பூமத்திய ரேகைக்கு அருகில் வாருங்கள்.
//வீதி தோறும் விபச்சார விடுதி…// சீ, நீரெல்லாம் ஒரு மனிதரா. எதற்கு எதனை உவமானம் செய்வது என்று ஒரு எல்லை இல்லையா. நரகல் வார்த்தைகள்.
தென்றல் அவருடைய ஐக்யூ பற்றிய சந்தேகம் வருகின்றது. மனிதன் இயற்கையை எவ்வாறு டெக்னாலஜி துணையோடு பாதுகாக்க முடியும் என்று நீங்கள் கூறினால் அவர் உளறுகிறார் .
இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டுமான துறையில் இருக்கும் நண்பரிடம் IIT ஜிப்சம் வீடு பற்றி கேட்டேன் .அந்த செய்தியை கேட்டு பதறி அவரும் பல எஞ்சிநீர்களிடம் கேட்டு இருக்கிறார் . எல்லோரும் கூறிய பதில் , “வீட்டின் மதிப்பில் ஐந்து அல்லது பாத்து சதம் கிடைகிறது . பாத்து லட்சத்திற்கு வீடு கட்டினால் லாபம் குறைவு . ஆகையால் அதனை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த மாட்டோம் என்று கூறி இருகிறார்கள்” …
ஏற்கனவே வீடு கட்டியவர்களும் தங்கள் வீடு விலை குறைவதை விரும்ப மாட்டர்கள் .எல்லோரும் வீடு விலைஉயர்ந்தது என்று நடித்து கொண்டு இருப்பார்கள் ..
வெளிநாட்டு கம்பெனி பெரிய முதலீட்டுடனும் டேக்னாலஜியுடனும் சேர்ந்து கூடிய விரைவில் சாம்பிள் மாடல்கள் வைத்து கார் மாடல் போல விற்பான் .. அப்போது இவர்கள் பன்னாட்டு நிறுவனம் கொள்ளை அடிக்கிறது என்று ஒப்பாரி வைப்பார்கள் ..
ராமன்,
வீடு கட்டும் செலவில் 10 சதம் கமிஷன் அடிக்கும் உங்கள் எஞ்சினியர் நண்பர்கள் தானே விலை குறைவதை விரும்பவில்லை. நாளை வெளிநாட்டு கம்பெனி இதில் இறங்கிவிட்டால் ஒப்பாரி வைக்கப்போவது உங்கள் எஞ்சினியர் நண்பர்களா. இல்லை நாங்களா.
கமிஷனை ஏற்றிக்கொள்வதற்காகவே செலவை ஏற்றுபவர்களுக்கு தென்றல் அவர்கள் அழகாக பெயர் வைப்பார்.
பின்னூட்டங்களில் வேண்டுமென்றே குழப்பும் நோக்கில் எந்த நாணயமும் இல்லாமல் எழுதும் உங்களுக்கு அவர் ஏற்கனவே தகுந்த பெயர்களை வைத்தி ருக்கிறார். தொடரட்டும் உங்கள் தரகு.
pk அவர்களே,
வெளிநாட்டுக்காரன் வந்து கட்ட வேண்டிய அவசியம் இல்லை.
அந்த தொழில்நுட்பத்தை நம்ம ஆட்களும் கற்று கொண்டு கட்டலாம்.
செல்போன், கணினி போல இதுவும் ஒரு புதிய தொழில்நுட்பம். கட்டிடக்கலையில் ஒரு புதிய வழி, அவ்வளவு தான். இதற்கும் முதலாளித்துவத்திற்கும் கம்மியுநிசத்திற்கும் சம்மந்தமில்லை.
நடுத்தர குடும்பங்கள் வாயை கட்டி வயிற்ரை கட்டி காட்டப்படும் வீடு குறைந்த விலையில் கட்ட முடிந்தால், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படாமல் விரைவில் கட்ட முடிந்தால் நல்லது தானே.
மிஸ்டர் லவ் ஸ்டோரி, மனிதன் இயற்கையை டெகனாலாஜி துணையோட காப்பாத்துறான்னு உளறுனா எப்படி? உங்க வாதப்படியே ஏழைங்க, தொழிலாளிங்க மாதிரி பன்னாடைங்களெல்லாம் சமூகத்திலேயே சேத்தி இல்லை. பிறவு நீங்க பில் கேட்ஸ், அம்பானி மாரி ஆளுங்களத்தான் மனிதன்னு சொல்றீங்களா?
கற்றது கையளவு,
முதலாளிகளும் ,உங்களை போன்ற முதலாளிகளின் அடுத்த நிலை உயர் அதிகாரிகளும் AC கார்களை வீடு விட்டு அலுவலகம் செல்ல பத்து நிமிட பயணத்துக்கு கூட கூட பயன்படுத்துவிங்க. அதே சமயம் தொழிலாளர்கள் வாழ்விடங்களில் இருந்து தொழில் சாலைக்கு தினம் தினம் பயணிக்க திறந்த நிலை லாரிகளா ? ஏன் இப்படி கற்றது கையளவு ? ஒரு விடயம் தெரியுமா? நீங்கள் சிலேகித்து நேசிக்கும் சிங்கபூரின், தொழிலாளர்களின் திறந்த நிலை லாரி பயணம் என்பது இந்தியாவில் குறிப்பாக சென்னையில் சாத்தியமே இல்லையே கற்றது கையளவு ? தொழிலாளர்களுக்கு வேலை நிரந்தரம் இன்றி, குறைந்த சம்பளம் வழங்க்கும் போர்ட்,ஹுண்டாய் சென்னை தொழில்சாலைகள் கூட மூன்று ஷிபிட்க்கும் பஸ் வசதி செய்து கொடுத்து உள்ளனவே ! போர்ட்,ஹுண்டாய் மட்டும் அல்ல க கை , சென்னையில் இதுவரை, கடந்த ஆண்டுவரையில் 100% அளவிற்கு உற்பத்தி திறனுடன் இயங்கிய நோக்கியா கூட அதிகபச்சம் 60 km சுற்றளவுக்கு தொழிலாளர்களுக்கு பஸ் வசதி செய்து கொடுத்து தான் இருந்தது. சென்னையை பொருத்தவரையில் அங்கு அளிக்கபடும் தொழிலாளர்களுக்கான பேருந்து வசதி என்பது சிங்கபூரை காட்டிலும் மிகவும் சிறப்பு உடையதாக தானே உள்ளது ? நினைத்து பாருங்கள் க கை , தமிழ் நாட்டில்நடைமுறையில் உள்ள தொழிலாளர் நல சட்டங்கள் , தொழிலாளர்களை திறந்த நிலை லாரிகளில் தினமும் தொழில்சாலைக்கு பயணிக்க அனுமதிக்குமா ?
அதே நேரத்தில் உங்கள் கனவுலக நாடான சிங்கபூரில் அவர்கள் நாட்டு சட்டங்கள் தொழிலாளர்களை நிலை லாரிகளில் பயணிக்க அனுமதிக்கிறதே அது எப்படி ? எச்சை துப்பினால் கூட தண்டிக்கும் சிங்கபூரின் சட்டம் அந்த எச்சைக்கு உரிய மரியாதையை கூட கொடுக்க மாட்டேன் என்கிறதே தொழிலாளர்களுக்கு ! அது… அது ஏன் அப்படி கற்றது கையளவு ?
சமுக ,அரசியல், பொருளாதார சிக்கல்களுக்கான தீர்வான சோசியலிசத்தை தான் தூர துப்பி எறிந்து விட்டிர்கள் க கை.. உங்களின் மனசாட்சியாவது மிச்சம் உங்களிடம் இருக்கின்றதா ?
ஐயா தமிழ்,
எல்லாம் அனுமானத்திலேயே எடை போடுகிறீர்கள். நான் காரில் பவனி வருகிறேன் என்று எப்போது சொன்னேன்.
என்னிடம் காரும் இல்லை, சொந்த வீடும் இல்லை. போதுமா.
நம்பிக்கை மட்டும் உள்ளது.
சிங்கப்பூரை எனது கனவுலக நாடாக நான் சொன்னேனா?
இந்தியாவில் லாரியில் யாருமே இதுவரை பயணித்ததில்லை என்று சொல்ல வருகிறீர்களா?
ஏன், நானும் தான் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊர் வர திறந்த லாரியின் பின்பகுதியில் பயணித்தவன் தான். ஏதோ சிங்கப்பூரில் மட்டும் தான் இது நடப்பதாக நண்பர் சூரியன் சொல்வதற்கு தான் நான் பதில் கூறினேன்.
சிங்கப்பூருக்கு வக்காலத்து வாங்க வில்லை, மற்ற நாடுகளை மேம்போக்காக குறை சொல்லும்போது நமது நாட்டு நிலையையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்க தான் சொன்னேன்.
சோசலிசம் பேசம் தாங்கள் சோஷலிச நாடுகளில் இன்று தேனும் பாலும் ஓடுகிறதா, அங்கு அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனாரா, அனைவரும் ஏசி காரில் பவனி வருகிறார்களா, சொல்ல முடியுமா? நீங்கள் நோக்கியா, போர்டு கம்பெனிகள் அவர்களின் தொழிலாளிகளுக்கு பேருந்து வசதி செய்து கொடுத்ததை சொல்கிறீர்கள். அதே நோக்கியா, போர்டு போன்ற கம்பெனிகள் சிங்கப்பூரில் தொழிலாளிகளை திறந்தவெளி லாரியில் பயணிக்க வைக்கிறார்களா சொல்லவும். APPLE to APPLE Comparison செய்யுங்களேன். எல்லா ஊரிலும் நல்ல கம்பெனிகளும் உள்ளது, மோசமான கம்பெனிகளும் உள்ளது. சிங்கப்பூரில் ஏதோ ஒரு டுபாக்கூர் கம்பெனி அவர்களின் தொழிலாளிகளை திறந்தவெளி லாரியில் அழைத்து சென்றார்கள் என்றால் உடனே சிங்கப்பூரில் உள்ள அனைத்து கம்பெனிகளில் இருக்கும் அனைத்து தொழிலாளிகளும் அதே திறந்தவெளி லாரியில் தான் பயணிக்க வைக்கப்படுகிறார்கள் என்று பொதுப்படையாக சொல்வீர்களோ?
குறையில்லாத நாடு என்று தற்போது உலகில் எந்த நாடும் இல்லை. இருக்கும் குறைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைக்க முயலலாம். அதே சமயம் நமது நாட்டோடு ஒப்பிட்டு பார்த்தால் சிங்கப்பூரில் மக்கள் நம்மை விட நன்றாகவே வாழ்கிறார்கள். அவர்களின் சராசரி வாழ்க்கை நம்முடைய சராசரி வாழ்க்கையை விட நன்றாகவே உள்ளது. மறுக்க முடியுமா நண்பரே?
நீங்கள் பூலோக சொர்க்கபுரியாக நினைத்துக்கொண்டிருக்கும் கியூபா, வெனிசியுலா போன்ற நாடுகளுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறீர்களா? அங்கு இருக்கும் அனைத்து மக்களும் ஆனந்தமாக உள்ளார்கள் என்று தங்களால் அடித்து சொல்ல முடியுமா? அங்கு இருக்கும் அனைத்து நிறுவனங்களும் ஒட்டு மொத்தமாக தொழிலாளிகளை ஏசி வண்டியில் அழைத்து செல்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?
முதலில் நமது காலில் உள்ள அழுக்கை நாம் சுத்தம் செய்த பின்னர் அடுத்தவன் காலில் உள்ள அழுக்கை கிண்டல் செய்யலாம்.
கற்றது கையளவு,
குதர்க்கமான வாதத்தின் உச்சமாக உள்ளது உங்கள் பதில்கள் . ஒவொன்றாக பார்ப்போமா ? முதலில் AC கார் உலா பற்றி பாப்போம். நான் பயன் படுத்தியுள்ள சொற்கள் “முதலாளிகளும் ,உங்களை போன்ற முதலாளிகளின் அடுத்த நிலை உயர் அதிகாரிகளும் AC கார்களை வீடு விட்டு அலுவலகம் செல்ல பத்து நிமிட பயணத்துக்கு கூட கூட பயன்படுத்துவிங்க.” இதில் உங்களை போன்ற என்ற வார்த்தைகளை வசதியாக மறந்துவிட்டு உங்களை மட்டுமே என்று நினைத்துகொண்டால் அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. 1000க்கு மேற்பட்ட தொழிலாளர்களை நீங்கள் நிர்வாகம் செய்ததாக நீங்களே கூறியதை என்ன வசதிக்காக இப்போது மறந்து விட்டிர்கள் ககை ?
சிங்க்கபூரை பொறுத்தவரையில் அதனை தமிழ் நாட்டின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அளவுடன் தான் ஒப்பிட முடியும். என் கேள்வி என்னவென்றால் தொழில் சாலை தொழிலாளர்களை சென்னை மற்றும் காஞ்சிபுரம