Tuesday, January 26, 2021
முகப்பு கலை கவிதை புரட்சிக்கு குறைவாக எதையும் ஏற்காத பிடிவாதக்காரர் !

புரட்சிக்கு குறைவாக எதையும் ஏற்காத பிடிவாதக்காரர் !

-

ப்ரல்- 22, லெனின் பிறந்தநாள்
புரட்சி பிறக்கட்டும்

லெனின்
“நீ என்ன செய்தாய் புரட்சிக்கு?” எனும் நேர் கொண்ட பார்வை லெனின் !

புரட்சிக்கு குறைவாக
எதையும் ஏற்காத
பிடிவாத புரட்சியாளரின்
பிறந்த நாளை
எப்படிக் கொண்டாடுவது?

அவரைப் பற்றி பேசலாம்
அதை
லெனின் காதுகள் சகிப்பதில்லை…
அவர் வாழ்வை வியக்கலாம்
ஆனால்
அது லெனினுக்குப் பிடிப்பதில்லை…

என்னதான் பேசினாலும்
இறுதியில்,
” நீ என்ன செய்தாய் புரட்சிக்கு?”
எனும்
நேர் கொண்ட பார்வை லெனின் !

ஒரு தொழிலாளியிடம்
இன்று நீ
அரசியல் பேசி
வர்க்க உணர்வுக்கு
கொண்டு வரும்
பிரசவ வலியில்…
லெனின் பிறக்கிறார்!

ஒரு தொழிற்சங்கத்தின்
கிளை தொடங்கும்
உற்சாக உதடுகளில்
லெனின் சிரிக்கிறார்!

இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை!
விழுந்து எழுந்து விடாப்பிடியாய் நடை பழகும் குழந்தையின் உறுதியைக் கொண்டிருக்கும் ஒரு தோழனின் தன் முயற்சியில் லெனின் தவழ்கிறார்.

விழுந்து எழுந்து
விடாப்பிடியாய்
நடை பழகும் குழந்தையின்
உறுதியைக் கொண்டிருக்கும்
ஒரு தோழனின்
தன் முயற்சியில்
லெனின் தவழ்கிறார்!

சுயநலன் மறுத்ததற்காய்
சொந்தம் விலகி,
சுகம் ஒன்றே குறிக்கோளாய்
சுற்றம் நழுவி,
குடும்பமே கூட வராது
குறை சுமத்தும் தருணத்திலும்
உழைக்கும் மக்களுக்காய்
உணர்ச்சி குன்றாது
அடியெடுக்கும் கால்களில்
லெனின் நடக்கிறார்!

புவியில்
ஒரு புல்லின் அழகையும்
சீரழிக்கும் முதலாளித்துவத்தின்
வேரழிக்க துடி துடிக்கும்
இதயத்தில்
லெனின் வாழ்கிறார்!

எறும்பின் உழைப்பையும்
சுரண்டும்
இயற்பகை ஏகாதிபத்தியத்தின்
கொடுங்கரம் முறிக்கும்
விசையின் இயற்பெயர்
விளாதிமிர் இலியிச் லெனின்.

லெனின்
கார்ப்பரேட் பயங்கரத்தை அழி! கம்யூனிச ஆசான் லெனின் முகத்தில் விழி!

கார்ப்பரேட் பயங்கரத்தை
அழி!
கம்யூனிச ஆசான்
லெனின் முகத்தில் விழி!
காவிப் பாசிசம் நொறுக்கு
லெனின் பிறந்த நாள்
அதற்கு!

வாடும் மலரில்
நீர் தெளித்துக் கொண்டே
சுடு சொல்லை
உதடுகளில் தெளிக்கும்
உழைப்பாளி பெண்….

கொதிக்கும் வெயிலில்
உருகும்
வாழ்க்கைத் துளிகளை
கூச்சமின்றி திருடும்
அதிகாரத்திற்கு எதிராக
மனதில் வெடிக்கும்
சாலையோர உழைப்பாளி…

லெனின் மீண்டும் இளமையாகி விட்டார்....
“இந்த அரசை ஒழிக்காமல் இனி வாழ்க்கையில்லை!”

இன்னும்… மாணவர், மீனவர்
விவசாயி தொழிலாளி என
கோடிக்கணக்கான குரல்கள்
குவியும் ஒரு சொல்;
“இந்த அரசை ஒழிக்காமல்
இனி வாழ்க்கையில்லை!”

இதற்குப் பெயர்தான் புரட்சி
இதற்குப் பெயர்தான் லெனின்

லெனின்
உங்களுக்கு பிடிக்குமெனில்
போராட்டக் களங்கள்
புதிதாய் பிறக்கட்டும்!

– துரை.சண்முகம்

 1. கம்யூனிச பாதையில் சென்று, கம்யூனிசத்தால் வளமாக உள்ள நாடு ஏதாவது உண்டா?
  இதனால் தோல்வி அடைந்த நாடுகள் உள்ளன (ரஷ்யா , கிழக்கு ஐரோப்பிய நாடுகள்).

  • @ உமா ஷங்கர்…………..

   //கம்யூனிச பாதையில் சென்று, கம்யூனிசத்தால் வளமாக உள்ள நாடு ஏதாவது உண்டா?//

   கவலையை விடுங்கள்.. மோடி பிரதமராகி விட்டாறல்லவா!!!! ரஷ்யாவில் புரட்சிக்கு முன்பு எளிய மக்களையும் விவசாயிகளையும் கசக்கி பிழிந்த சார் மன்னனை காட்டிலும் ஒரு கேவலமான கொடும்பாவி நமக்கு இப்போது தானே பிரதமராக வாய்திருக்கிறார். So, சீனா,ரஷ்யாவை போன்று தோல்வி அடையாத ஒரு சிறந்த சோஷலிசம் சமுகம் விரைவில் இந்தியாவில் ஏற்ப்பட்டு விடும்.

 2. உலகில் இதுவரை எங்குமே கம்யூனிசம் வரவில்லை, ரசியாவிலும் சீனாவிலும் இருந்தது சோசலிச சமூகமே அன்றி கம்யூனிச சமூகம் அல்ல. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அந்த சோசலிசம் கூட வரவில்லை. இந்த அடிப்படையான விசயம் கூட தெரியாமல் கம்யூனிசத்தை எதிர்க்க வேட்டியை மடித்துக்கட்டிகொண்டு நிற்பது ஏன் ?

 3. அப்போது இவ்வளவு நாள் ஆளே இல்லாத கடையில் தான் டீ ஆற்றிக்கொண்டிருந்தீர்களா ? 🙂

  உங்கள் பெயருக்கு என்ன அர்த்தம் ஆலம்பன பரீஷை அவர்களே,

  • கிண்டல் செய்வதிலும் சாமார்த்தியம் இருக்கணும் க கை !சோசலிசத்துக்கும் ,கம்யூனிசத்துக்கும் உள்ள வேறுபாடு தெரியாம உளறக்கூடாது

 4. உற்பத்தி சோசலிசப் பாதையில் இருந்தவரையில் (ஸ்டாலின்) ரஷ்யா வளமாகத்தான் இருந்தது. அதனை முதலாளித்துவ பாதைக்கு திருப்பிவிடப்பட்ட பிறகே மக்கள் தங்களது வளமான வாழ்வை இழந்தனர்.

 5. according to Individuals….. If they don’t have Money, they talk about communism/socialism etc….if they have money(even from lower middle class) they are against it…. simple logic……

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க