Thursday, May 8, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்வியூ.ஜி.சி விதிகளை மீறும் கல்வி நிறுவனங்களை இழுத்து மூடு

யூ.ஜி.சி விதிகளை மீறும் கல்வி நிறுவனங்களை இழுத்து மூடு

-

UGC விதிமுறைகளை மீறி நடக்கும், கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் நர்சிங் நிறுவனங்களை இழுத்து மூடு!  –  பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

sai-catering-rsyf-demo-11UGC விதிமுறைகளைகளை மீறி மோசடி செய்யும் கல்வி நிறுவனங்களை இழுத்து மூட வலியுறுத்தி புரட்சிகர மாணவர்  – இளைஞர் முன்னணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், 24.04.2015 அன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்பதற்காக, தேர்வு நடத்துவது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டால் சஸ்பெண்ட் செய்து விடுவதாக வீடுகளுக்கு போன் செய்து மாணவர்களை மிரட்டுவது என்று அமிர்தா, அன்னம்மாள், மற்றும் சாய் நிறுவன நிர்வாகங்கள் மாணவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

sai-catering-rsyf-demo-21இருந்தாலும் அதையும் மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னை மாநகரப் பொருளாளர் தோழர் ராஜா தலைமையில் UGC விதிகளை மதிக்காமல், நிறுவனங்களை நடத்தி மாணவர்களை ஏமாற்றிய நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

sai-catering-rsyf-demo-09இழுத்து மூடு ! இழுத்து மூடு !
தமிழக அரசே இழுத்து மூடு !
மாணவர்களை சுரண்டிக் கொழுக்கும்
பெற்றோர்களின் பணத்தைப் பறிக்கும்
கேட்டரிங் பார்மசி பயிற்சி நிறுவனங்களை
இழுத்து மூடு ! இழுத்து மூடு !
தமிழக அரசே இழுத்து மூடு !

கைது செய் ! சிறையிலடை !
மாணவர்களின் சம்பளத்தை
திருடித்தின்ற முதலாளிகளை
மாணவர்களின் சான்றிதழை
தரமறுக்கும் அயோக்கியர்களை
கைது செய் ! சிறையிலடை !

தடை செய் !    தடை செய் !
யூ.ஜி.சி விதிமுறைகளை மீறி
கேட்டரிங், பார்மசி படிப்புக்களை
நடத்துகின்ற கல்வி நிறுவனங்களை
தடை செய் !    தடை செய் !

பெற்றோர்களே ! மாணவர்களே !
படிக்கும் போதே ஹோட்டல் வேலை
படித்த உடனே கப்பல் வேலை
கலர் கலராய் மோசடி செய்யும்
தனியார் கல்வி நிறுவனங்களை
இழுத்து மூடும் அதிகாரத்தை
கையில் எடுப்போம் ! கையில் எடுப்போம் !

அணி திரள்வோம் ! அணி திரள்வோம் !
அமைப்பாக அணி திரள்வோம் !
திரும்பப் பெறுவோம் ! திரும்பப் பெறுவோம் !
கட்டிய பணத்தையும் சான்றிதழ்களையும்
திரும்பப் பெறுவோம் !  திரும்பப் பெறுவோம் !
ஒழித்துக்கட்டுவோம் ! ஒழித்துக்கட்டுவோம்
கல்வி தனியார்மயத்தை ஒழித்துக் கட்டுவோம் !

தோழர் ராஜா தனது உரையில், “இது போன்ற தனியார் கல்வி நிறுவனங்கள்,  கவர்ச்சியான விளம்பரங்களை செய்து, மாணவர்களையும், பெற்றோர்களையும் கவர்ந்து, ஏமாற்றி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றனர். இப்படிப்பட்ட நிறுவனங்களின் போலியான விளம்பரங்களை நம்பி பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதியில் நிற்கின்றனர். அவர்கள் ஒரு சங்கமாக இணைத்து போராடாமல், கல்வி தனியார் மயத்தை வீழ்த்த முடியாது” என்றார்.

sai-catering-rsyf-demo-02சென்னை மாநகர இணை செயலாளர் தோழர் மருது, கண்டன உரை ஆற்றினார். அவரது உரையில், “டி. வி விளம்பரங்கள், மாணவர்களை கவரும் வகையில் உள்ளன. ஆனால் உண்மையில், இப்படிப்பட்ட நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் கொத்தடிமை நிலையில் தான் உள்ளனர். பகுதி நேர வேலை என்ற பெயரில் ஹோட்டல்களுக்கு  வேலைக்கு அனுப்பி, தட்டு கழுவுவது போன்ற வேலைகளை செய்ய வைத்து சம்பளத்தையும் பறிக்கின்றனர்.

UGC விதிமுறைகளை மீறி நடத்தப்படும் நிறுவனங்கள் என்றாலும், திட்டமிட்டே இந்த அரசு அவற்றை ஊக்குவிக்கிறது. தனியாரால் நடத்தப்படும் இது போன்ற பொறியியல், கேட்டரிங் நிறுவனங்கள் யாரும் நுழைய முடியாத மர்மக் கோட்டையாகவே உள்ளன. இப்படிப்பட்ட நிறுவனங்களை நடத்த எந்தத் தகுதியும் தேவையில்லை. 10/10 அறை இருந்தால் போதும் என்ற நிலை தான் உள்ளது. இப்படிப்பட்ட நிறுவனங்களில் மாணவர்கள் கொத்தடிமைகளாக மாட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

sai-catering-rsyf-demo-05இந்நிலைமை யூ.ஜி.சிக்கோ, கல்வித் துறைக்கோ, அரசுக்கோ தெரியாமல் இல்லை. தெரிந்தே நடக்கும் இந்த பகற்கொள்ளைக்கு அடிப்படையே கல்வி தனியார்மயம்தான். இந்தக் கொள்ளையை நடத்துவதற்கு அனுமதி அளித்த அரசிடமே இனியும் கெஞ்சுவது நியாயமில்லை. அதிகாரத்தை கையில் எடுக்காமல் தீர்வு இல்லை. அப்படிப்பட்ட போராட்டங்களை வழி நடத்துவதை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி முன்னெடுக்கும்” என்று கூறினார்.

sai-catering-rsyf-demo-06ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கேட்டரிங் மாணவர்கள் கல்வி தனியார்மயத்தினால் பாதிக்கப்பட்ட இத்துறை மாணவர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்; தன்மானத்துடன் தங்களின் வாழ்வுரிமைக்காக போராடுகிறார்கள்;  தங்களுடைய உரிமைக்காக மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இது போன்ற நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் உரிமைக்கான போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள், மாணவர் வர்க்கமாக பு.மா.இ.மு தலைமையில்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தமிழகம் முழுவதும் உள்ள கேட்டரிங் மாணவர்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க சங்கமாக அணிதிரளாமல் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை அறிவிக்கும் விதமாக இப்போராட்டம் அமைந்தது.

–    தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.
9445112675