privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்சின்டெல் ஆட்குறைப்பு, டி.சி.எஸ் போனஸ் மோசடி

சின்டெல் ஆட்குறைப்பு, டி.சி.எஸ் போனஸ் மோசடி

-

கட்டாய ஆட்குறைப்பு
வேலைநீக்கப்படும் ஊழியர்களை ஈவு இரக்கமின்றி அடுத்த 15 நிமிடத்தில் அலுவலகத்தைவிட்டு வெளியேற ஆணையிடுகிறது நிர்வாகம் (படம் : நன்றி cartoonstock.com)

டி.சி.எஸ் ஆட்குறைப்புப் பிரச்சனைகளுக்குப் பிறகு இனி வேலை நீக்கம் இருக்காது என பல ஐ.டி ஊழியர்கள் நினைத்துக் கொண்டிருக்க, நிறுவனங்களோ ரகசியமாக ஆட்குறைப்பு செய்து வருகின்றன.

டி.சி.எஸ், ஐ.பி.எம்.-ன் வரிசையில் தற்போது அமெரிக்க வாழ் இந்தியர்களின் நிறுவனமான சின்டெல் ஆட்குறைப்பு செய்துவருகிறது. உலகெங்கிலும் மொத்தம் 24,000 ஊழியர்களுடன் செயல்பட்டுவரும் இந்நிறுவனம் இந்தியாவில் மட்டும் 3,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் நடைமுறையில் இருப்பதாக அதன் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

லாப வெறியைத் தவிர ஆட்குறைப்புக்கு வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்பதை ஆண்டுதோறும் உயர்ந்து வரும் சின்டெல் நிறுவனத்தின் லாப விகிதம் தெரிவிக்கிறது. 2014 நிதி ஆண்டில் நிறுவனத்தின் லாபம் மட்டும் $24.97 கோடியாக (சுமார் ரூ 1500 கோடி) உயர்ந்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டைவிட $3 கோடி (சுமார் ரூ 185 கோடி) அதிகம்.

கட்டாய பதவிவிலகல்
காலையில் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள், தாம் எப்போது எச்.ஆர் அறைக்க்கு அழைப்படுவோம் என்ற அச்ச உணர்வுடனே தான் வருகிறார்கள்.

இவ்வாறு ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சி ஆண்டுக்காண்டு கொழுக்கும் இந்நிறுவனம் காரணம் ஏதுமின்றி ஊழியர்களை வேலையிலிருந்து துரத்தியடிக்கிறது. எச்.ஆர் அறைக்கு அழைக்கப்படும் ஊழியர்களிடம் கட்டாயப் பணிவிலகல் கடிதத்தில் கையொப்பம் வாங்கப்படுகிறது. தங்களது உரிமைகளைப் பற்றி அறிந்திராத ஊழியர்களோ நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். கேள்வி கேட்கத் துணியும் சிலரிடமும் ஊழியர்களிடம் “விடுப்பு எடுத்தீர்கள்” என்பது போன்ற உப்புச்சப்பில்லாத காரணத்தை கூறி திமிர்தனமாக பதிலளிக்கிறார்கள் எச்.ஆர்.-கள். இதைப்பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறோம்.

எதிர்த்துக் கேள்விகேட்க துணியும் சிலரை மிரட்டுகிறார்கள் எச்.ஆர்கள். கேள்விகேட்பதை குற்றச்செயலாகச் சித்தரிக்கிறார்கள்.

இச்செய்தியை அறிந்ததும் சின்டெல் ஊழியர்களிடம் பேச சிறுசேரி சின்டெல் அலுவலகத்திற்கு சென்றோம். நம்மிடம் பேசிய பலரும் வேலைநீக்கம் பற்றிய தங்கள் பயத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள். எத்தனை பேர் வேலைநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து பலரும் மாறுபட்ட எண்ணிக்கையை தெரிவித்தார்கள். ஆயினும் 1,000 முதல் 3,000 வரை ஊழியர்கள் நீக்கப்படவிருக்கிறார்கள் என்பது ஊழியர்களின் கணிப்பாக இருக்கிறது.

ஆட்குறைப்பு எந்திரம்
எத்தனை பேர் வேலைநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து பலரும் மாறுபட்ட எண்ணிக்கையை தெரிவித்தார்கள்.

“என் பிரண்டு சார். காலையில நல்லா பேசிட்டுதான் இருந்தோம். ஆனா, அவன் மதியம் சாப்பிட வரல. போன் பண்ணிப் பார்த்தேன் சுச் ஆஃப் ஆகியிருந்தது. அப்புறம் தான் தெரிஞ்சது அவன வேலைய விட்டு அனுப்பிட்டாங்கன்னு.” என்று தனது அனுபவத்தைக் கூறினார் ஓர் ஊழியர். இரவு பகல் பாராமல் வேலைநேரத்தையும் தாண்டி உழைத்த ஊழியர்களுக்கு நிர்வாகம் கொடுக்கும் நேரம் 15 நிமிடம். அதற்குள் இடத்தைக் காலிசெய்ய வேண்டும்.

வேலைநீக்கப்படும் ஊழியர்களை ஈவு இரக்கமின்றி அடுத்த 15 நிமிடத்தில் அலுவலகத்தைவிட்டு வெளியேற ஆணையிடுகிறது நிர்வாகம். இதை உத்திரவாதப்படுத்த செக்யூரிட்டி ஒருவரும் ஊழியர்களுடன் அனுப்பி வைக்கப்படுகிறார். குற்றவாளியைப்போல அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள் சின்டெல் ஊழியர்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த இந்த கொடூரமான வேலைநீக்க முறை ‘வளர்ச்சி நாயக’னின் ஆட்சியில் இப்போது நம் கண்முன்னே நிகழ்கிறது.

காலையில் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள், தாம் எப்போது எச்.ஆர் அறைக்க்கு அழைப்படுவோம் என்ற அச்ச உணர்வுடனே தான் வருகிறார்கள்.

சின்டெல் ஆட்குறைப்பு
அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த இந்த கொடூரமான வேலைநீக்க முறை ‘வளர்ச்சி நாயக’னின் ஆட்சியில் இப்போது நம் கண்முன்னே நிகழ்கிறது.

இதை தொடர்ந்து, “கட்டாயப் பணிவிலகல் கடிதத்தில் கையெழுத்திடவேண்டாம்” என்றும், “பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவில் அணிதிரண்டு வேலைநீக்கத்தை முறியடிக்க முடியும்” என்று நம்பிக்கையூட்டியும் பு.ஜ.தொ.மு- ஐ.டி ஊழியர் பிரிவின் சார்பாக ஐ.டி காரிடாரில் ஏப்ரல் 28 முதல் சுவரொட்டி பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பல சின்டெல் ஊழியர்கள் நமது சுவரொட்டியை புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் பரவலாக பகிர்ந்தார்கள். டி.சி.எஸ் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, வேலைநீக்கம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவராமல் பார்த்துக்கொண்டிருந்த சின்டெல் நிர்வாகத்திற்கு நமது சுவரொட்டிகளும், வாட்ஸ் ஆப் செய்திகளும் திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல் இருந்துள்ளன.

இதைத் தொடர்ந்து நமது சுவரொட்டிகளை கிழிப்பதற்கென ‘தனிப்படை’ அமைத்து சுவர்களைச் சுரண்டிக்கொண்டிருக்கிறது சின்டெல் நிர்வாகம்.

“எம்ப்ளாய்ஸ் தம் அடிக்குற இடத்தில நீங்க போஸ்டர் ஒட்டிருந்தீங்கல்ல. அங்க வந்த எச்.ஆருங்க இதை பாத்துட்டு செக்யூரிட்டியை வெச்சி கிழிச்சிட்டாங்க” என்று நமக்குத் தகவல் தந்தனர் ஊழியர்கள்.

இதே சுவரொட்டியை டி.சி.எஸ் சென்னை-1 (துரைப்பாக்கம்) அலுவலகத்திலும் ஒட்டியிருந்தோம். காலையில் செக்யூரிட்டிகள் புடைசூழ நுழைவாயிலுக்கே வந்த டி.சி.எஸ் நிர்வாகி ஒருவர் போஸ்டரை புகைப்படம் எடுத்துக்கொண்டு செக்யூரிட்டிகளை கொண்டு கிழித்ததாக நமது சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஊழியர்களை ஒடுக்குவதில் ஐ.டி நிறுவனங்கள் தங்களுக்குள் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். ஐ.டி நிறுவனங்கள் தங்களுக்கென்று நாஸ்காம் என்ற பெயரில் சங்கம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் டி.சி.எஸ், ‘அனைவருக்கும் மெகா போனஸ்’ என்ற பெயரில் ஊழியர்களிடம் செய்த பித்தலாட்டத்தை பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அம்பலப்படுத்தி சுவரொட்டி ஒட்டியிருந்தது.

டி.சி.எஸ் மெகா போனஸ் மோசடி
டி.சி.எஸ், ‘அனைவருக்கும் மெகா போனஸ்’ என்ற பெயரில் ஊழியர்களிடம் செய்த பித்தலாட்டத்தை பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அம்பலம்.

எதுவாயிருப்பினும் ஐ.டி ஊழியர்கள் தங்களது உரிமைகளை தெரிந்துகொள்வதும், அதற்காக சங்கமாகத் திரள்வதும் தங்களது சுரண்டலுக்கும், கேள்வி கேட்பாரற்ற தமது அதிகாரத்திற்கும் ஆபத்து என்பதாலேயே ஒரு போஸ்டரைக் கூட ஐ.டி நிறுவனங்களினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. செக்யூரிட்டிகளுடன் நிர்வாகிகளும் களத்திற்கு நேரடியாக வந்து போஸ்டர் கிழிக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து கிழித்த இடத்தில் அதற்கு மறுநாள் சுவரொட்டி ஒட்டப்பட்டதோடு மட்டுமில்லாமல் பு.ஜ.தொ.மு பற்றிய சிறிய ‘அறிமுகத்தை’யும் செக்யூரிட்டிகள் வாயிலாக நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளோம்.

டி.சி.எஸ் வேலைநீக்கத்துடன் அனைத்தும் முடிந்துவிட்டது, இனி தங்களுக்கு பிரச்சனையில்லை என்று பலர் தங்களுக்கு தாங்களே கூறிக்கொண்ட சமாதானம் இனியும் செல்லுபடியாகாது என்பதை சின்டெல் வேலைநீக்கம் உணர்த்துகிறது. கார்ப்பரேட்டுகளின் லாப வெறி என்றுமே அடங்கப்போவதில்லை. மேலும் மேலும் அடிமைத்தனத்துடன் பல மணிநேரம் உழைப்பதன் மூலம் வேலையைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பது முட்டாள் தனம். அடிமைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் கார்ப்பரேட்டுகள் இல்லை.

தொழிற்சங்கத்தில் இணைந்து வேலை உரிமைக்காகப் போராடுவதுதான் அறிவுப்பூர்வமான, சாத்தியமுள்ள ஒரே தீர்வு. ஐ.டி ஊழியர்கள் இனியும் தாமதிப்பது தற்கொலைக்கு சமம். டி.சி.எஸ் ஆட்குறைப்பைத் தொடர்ந்து ஐ.டி ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவில் தங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

தொடர்புக்கு :

தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com
பேஸ்புக் : https://www.facebook.com/NDLFITEmployeesWing

பத்திரிகை செய்தி (ஆங்கிலத்தில்)

Illegal layoff by Syntel – 3000 employees sacked

After the layoff of thousands of employees by TCS last year, several IT companies have been resorting secret retrenchment of employees.At present, US based Syntel is laying off employees. Syntel has planned and enforcing layoff of 3,000 employees. This has been going on for the past one month, and 1000s have already lost their jobs. But, this news is not released to any media outlet by the company. Company management is not even allowing our union posters about this issue in public places. They send their security personnel to tear off our posters.

Syntel does not even give the minimum 30 days notice period before termination. Employees are ordered to leave the office within 15 minutes. An employees is called into HR office and forced to sign their resignation letter. Unaware of their rights, the employees meekly sign and leave their employment. When an employee tried to question this practice, HR personnel responded coldly, saying “You took too many leave”. As far as the company is concerned even questioning them is a criminal offence.

Syntel is doing this entirely for their profit motive. A perusal of their financial statements reveal that the company’s revenues in 2004 increased by 11% compared to the previous year to reach $911.5 million. Net profits soared to $249 million from $219.9 million for the year ago period. Employees who made this growth possible are being sent off now.

NDLF – IT Employees Wing strongly condemns Syntel’s illegal and unethical layoff and its treatment of their employees like common criminals.

We call upon IT employees to refuse to sign resignation letters under compulsion and join hands with NDLF – IT Employees Wing to fight this corporate terror.

Corporate companies are showered with public funds in terms of cheap priced land and tax waivers when they start business in SIPCOT or SEZ. But they refuse to follow Indian labour laws. IT companies go further and argue that labour welfare laws do not apply to them.

Madras High Court issued an order to the Tamil Nadu government to take a policy decision on our petition demanding implementation of Industrial Disputes Act in IT sector. We demand that Tamil Nadu government should take immediate action this and bring IT companies under ID Act.

S. Karpagavinayagam,
Organizer,
New Democratic Labour Front – IT Employees Wing
Telephone
: 90031 98576
Email : combatlayoff@gmail.com
FB : https://www.facebook.com/NDLFITEmployeesWing