சின்டெல் ஆட்குறைப்பு, டி.சி.எஸ் போனஸ் மோசடி

கட்டாய ஆட்குறைப்பு
வேலைநீக்கப்படும் ஊழியர்களை ஈவு இரக்கமின்றி அடுத்த 15 நிமிடத்தில் அலுவலகத்தைவிட்டு வெளியேற ஆணையிடுகிறது நிர்வாகம் (படம் : நன்றி cartoonstock.com)

டி.சி.எஸ் ஆட்குறைப்புப் பிரச்சனைகளுக்குப் பிறகு இனி வேலை நீக்கம் இருக்காது என பல ஐ.டி ஊழியர்கள் நினைத்துக் கொண்டிருக்க, நிறுவனங்களோ ரகசியமாக ஆட்குறைப்பு செய்து வருகின்றன.

டி.சி.எஸ், ஐ.பி.எம்.-ன் வரிசையில் தற்போது அமெரிக்க வாழ் இந்தியர்களின் நிறுவனமான சின்டெல் ஆட்குறைப்பு செய்துவருகிறது. உலகெங்கிலும் மொத்தம் 24,000 ஊழியர்களுடன் செயல்பட்டுவரும் இந்நிறுவனம் இந்தியாவில் மட்டும் 3,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் நடைமுறையில் இருப்பதாக அதன் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

லாப வெறியைத் தவிர ஆட்குறைப்புக்கு வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்பதை ஆண்டுதோறும் உயர்ந்து வரும் சின்டெல் நிறுவனத்தின் லாப விகிதம் தெரிவிக்கிறது. 2014 நிதி ஆண்டில் நிறுவனத்தின் லாபம் மட்டும் $24.97 கோடியாக (சுமார் ரூ 1500 கோடி) உயர்ந்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டைவிட $3 கோடி (சுமார் ரூ 185 கோடி) அதிகம்.

கட்டாய பதவிவிலகல்
காலையில் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள், தாம் எப்போது எச்.ஆர் அறைக்க்கு அழைப்படுவோம் என்ற அச்ச உணர்வுடனே தான் வருகிறார்கள்.

இவ்வாறு ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சி ஆண்டுக்காண்டு கொழுக்கும் இந்நிறுவனம் காரணம் ஏதுமின்றி ஊழியர்களை வேலையிலிருந்து துரத்தியடிக்கிறது. எச்.ஆர் அறைக்கு அழைக்கப்படும் ஊழியர்களிடம் கட்டாயப் பணிவிலகல் கடிதத்தில் கையொப்பம் வாங்கப்படுகிறது. தங்களது உரிமைகளைப் பற்றி அறிந்திராத ஊழியர்களோ நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். கேள்வி கேட்கத் துணியும் சிலரிடமும் ஊழியர்களிடம் “விடுப்பு எடுத்தீர்கள்” என்பது போன்ற உப்புச்சப்பில்லாத காரணத்தை கூறி திமிர்தனமாக பதிலளிக்கிறார்கள் எச்.ஆர்.-கள். இதைப்பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறோம்.

எதிர்த்துக் கேள்விகேட்க துணியும் சிலரை மிரட்டுகிறார்கள் எச்.ஆர்கள். கேள்விகேட்பதை குற்றச்செயலாகச் சித்தரிக்கிறார்கள்.

இச்செய்தியை அறிந்ததும் சின்டெல் ஊழியர்களிடம் பேச சிறுசேரி சின்டெல் அலுவலகத்திற்கு சென்றோம். நம்மிடம் பேசிய பலரும் வேலைநீக்கம் பற்றிய தங்கள் பயத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள். எத்தனை பேர் வேலைநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து பலரும் மாறுபட்ட எண்ணிக்கையை தெரிவித்தார்கள். ஆயினும் 1,000 முதல் 3,000 வரை ஊழியர்கள் நீக்கப்படவிருக்கிறார்கள் என்பது ஊழியர்களின் கணிப்பாக இருக்கிறது.

ஆட்குறைப்பு எந்திரம்
எத்தனை பேர் வேலைநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து பலரும் மாறுபட்ட எண்ணிக்கையை தெரிவித்தார்கள்.

“என் பிரண்டு சார். காலையில நல்லா பேசிட்டுதான் இருந்தோம். ஆனா, அவன் மதியம் சாப்பிட வரல. போன் பண்ணிப் பார்த்தேன் சுச் ஆஃப் ஆகியிருந்தது. அப்புறம் தான் தெரிஞ்சது அவன வேலைய விட்டு அனுப்பிட்டாங்கன்னு.” என்று தனது அனுபவத்தைக் கூறினார் ஓர் ஊழியர். இரவு பகல் பாராமல் வேலைநேரத்தையும் தாண்டி உழைத்த ஊழியர்களுக்கு நிர்வாகம் கொடுக்கும் நேரம் 15 நிமிடம். அதற்குள் இடத்தைக் காலிசெய்ய வேண்டும்.

வேலைநீக்கப்படும் ஊழியர்களை ஈவு இரக்கமின்றி அடுத்த 15 நிமிடத்தில் அலுவலகத்தைவிட்டு வெளியேற ஆணையிடுகிறது நிர்வாகம். இதை உத்திரவாதப்படுத்த செக்யூரிட்டி ஒருவரும் ஊழியர்களுடன் அனுப்பி வைக்கப்படுகிறார். குற்றவாளியைப்போல அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள் சின்டெல் ஊழியர்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த இந்த கொடூரமான வேலைநீக்க முறை ‘வளர்ச்சி நாயக’னின் ஆட்சியில் இப்போது நம் கண்முன்னே நிகழ்கிறது.

காலையில் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள், தாம் எப்போது எச்.ஆர் அறைக்க்கு அழைப்படுவோம் என்ற அச்ச உணர்வுடனே தான் வருகிறார்கள்.

சின்டெல் ஆட்குறைப்பு
அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த இந்த கொடூரமான வேலைநீக்க முறை ‘வளர்ச்சி நாயக’னின் ஆட்சியில் இப்போது நம் கண்முன்னே நிகழ்கிறது.

இதை தொடர்ந்து, “கட்டாயப் பணிவிலகல் கடிதத்தில் கையெழுத்திடவேண்டாம்” என்றும், “பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவில் அணிதிரண்டு வேலைநீக்கத்தை முறியடிக்க முடியும்” என்று நம்பிக்கையூட்டியும் பு.ஜ.தொ.மு- ஐ.டி ஊழியர் பிரிவின் சார்பாக ஐ.டி காரிடாரில் ஏப்ரல் 28 முதல் சுவரொட்டி பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பல சின்டெல் ஊழியர்கள் நமது சுவரொட்டியை புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் பரவலாக பகிர்ந்தார்கள். டி.சி.எஸ் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, வேலைநீக்கம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவராமல் பார்த்துக்கொண்டிருந்த சின்டெல் நிர்வாகத்திற்கு நமது சுவரொட்டிகளும், வாட்ஸ் ஆப் செய்திகளும் திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல் இருந்துள்ளன.

இதைத் தொடர்ந்து நமது சுவரொட்டிகளை கிழிப்பதற்கென ‘தனிப்படை’ அமைத்து சுவர்களைச் சுரண்டிக்கொண்டிருக்கிறது சின்டெல் நிர்வாகம்.

“எம்ப்ளாய்ஸ் தம் அடிக்குற இடத்தில நீங்க போஸ்டர் ஒட்டிருந்தீங்கல்ல. அங்க வந்த எச்.ஆருங்க இதை பாத்துட்டு செக்யூரிட்டியை வெச்சி கிழிச்சிட்டாங்க” என்று நமக்குத் தகவல் தந்தனர் ஊழியர்கள்.

இதே சுவரொட்டியை டி.சி.எஸ் சென்னை-1 (துரைப்பாக்கம்) அலுவலகத்திலும் ஒட்டியிருந்தோம். காலையில் செக்யூரிட்டிகள் புடைசூழ நுழைவாயிலுக்கே வந்த டி.சி.எஸ் நிர்வாகி ஒருவர் போஸ்டரை புகைப்படம் எடுத்துக்கொண்டு செக்யூரிட்டிகளை கொண்டு கிழித்ததாக நமது சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஊழியர்களை ஒடுக்குவதில் ஐ.டி நிறுவனங்கள் தங்களுக்குள் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். ஐ.டி நிறுவனங்கள் தங்களுக்கென்று நாஸ்காம் என்ற பெயரில் சங்கம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் டி.சி.எஸ், ‘அனைவருக்கும் மெகா போனஸ்’ என்ற பெயரில் ஊழியர்களிடம் செய்த பித்தலாட்டத்தை பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அம்பலப்படுத்தி சுவரொட்டி ஒட்டியிருந்தது.

டி.சி.எஸ் மெகா போனஸ் மோசடி
டி.சி.எஸ், ‘அனைவருக்கும் மெகா போனஸ்’ என்ற பெயரில் ஊழியர்களிடம் செய்த பித்தலாட்டத்தை பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அம்பலம்.

எதுவாயிருப்பினும் ஐ.டி ஊழியர்கள் தங்களது உரிமைகளை தெரிந்துகொள்வதும், அதற்காக சங்கமாகத் திரள்வதும் தங்களது சுரண்டலுக்கும், கேள்வி கேட்பாரற்ற தமது அதிகாரத்திற்கும் ஆபத்து என்பதாலேயே ஒரு போஸ்டரைக் கூட ஐ.டி நிறுவனங்களினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. செக்யூரிட்டிகளுடன் நிர்வாகிகளும் களத்திற்கு நேரடியாக வந்து போஸ்டர் கிழிக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து கிழித்த இடத்தில் அதற்கு மறுநாள் சுவரொட்டி ஒட்டப்பட்டதோடு மட்டுமில்லாமல் பு.ஜ.தொ.மு பற்றிய சிறிய ‘அறிமுகத்தை’யும் செக்யூரிட்டிகள் வாயிலாக நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளோம்.

டி.சி.எஸ் வேலைநீக்கத்துடன் அனைத்தும் முடிந்துவிட்டது, இனி தங்களுக்கு பிரச்சனையில்லை என்று பலர் தங்களுக்கு தாங்களே கூறிக்கொண்ட சமாதானம் இனியும் செல்லுபடியாகாது என்பதை சின்டெல் வேலைநீக்கம் உணர்த்துகிறது. கார்ப்பரேட்டுகளின் லாப வெறி என்றுமே அடங்கப்போவதில்லை. மேலும் மேலும் அடிமைத்தனத்துடன் பல மணிநேரம் உழைப்பதன் மூலம் வேலையைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பது முட்டாள் தனம். அடிமைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் கார்ப்பரேட்டுகள் இல்லை.

தொழிற்சங்கத்தில் இணைந்து வேலை உரிமைக்காகப் போராடுவதுதான் அறிவுப்பூர்வமான, சாத்தியமுள்ள ஒரே தீர்வு. ஐ.டி ஊழியர்கள் இனியும் தாமதிப்பது தற்கொலைக்கு சமம். டி.சி.எஸ் ஆட்குறைப்பைத் தொடர்ந்து ஐ.டி ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவில் தங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

தொடர்புக்கு :

தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com
பேஸ்புக் : https://www.facebook.com/NDLFITEmployeesWing

பத்திரிகை செய்தி (ஆங்கிலத்தில்)

Illegal layoff by Syntel – 3000 employees sacked

After the layoff of thousands of employees by TCS last year, several IT companies have been resorting secret retrenchment of employees.At present, US based Syntel is laying off employees. Syntel has planned and enforcing layoff of 3,000 employees. This has been going on for the past one month, and 1000s have already lost their jobs. But, this news is not released to any media outlet by the company. Company management is not even allowing our union posters about this issue in public places. They send their security personnel to tear off our posters.

Syntel does not even give the minimum 30 days notice period before termination. Employees are ordered to leave the office within 15 minutes. An employees is called into HR office and forced to sign their resignation letter. Unaware of their rights, the employees meekly sign and leave their employment. When an employee tried to question this practice, HR personnel responded coldly, saying “You took too many leave”. As far as the company is concerned even questioning them is a criminal offence.

Syntel is doing this entirely for their profit motive. A perusal of their financial statements reveal that the company’s revenues in 2004 increased by 11% compared to the previous year to reach $911.5 million. Net profits soared to $249 million from $219.9 million for the year ago period. Employees who made this growth possible are being sent off now.

NDLF – IT Employees Wing strongly condemns Syntel’s illegal and unethical layoff and its treatment of their employees like common criminals.

We call upon IT employees to refuse to sign resignation letters under compulsion and join hands with NDLF – IT Employees Wing to fight this corporate terror.

Corporate companies are showered with public funds in terms of cheap priced land and tax waivers when they start business in SIPCOT or SEZ. But they refuse to follow Indian labour laws. IT companies go further and argue that labour welfare laws do not apply to them.

Madras High Court issued an order to the Tamil Nadu government to take a policy decision on our petition demanding implementation of Industrial Disputes Act in IT sector. We demand that Tamil Nadu government should take immediate action this and bring IT companies under ID Act.

S. Karpagavinayagam,
Organizer,
New Democratic Labour Front – IT Employees Wing
Telephone
: 90031 98576
Email : combatlayoff@gmail.com
FB : https://www.facebook.com/NDLFITEmployeesWing

சந்தா

19 மறுமொழிகள்

  1. 21வது நாளாக தொடரும் வேலை நிறுத்தப் போராட்டம் அனைவரின் ஆதரவையும் எதிர்ப்பாக்கும் தொழிலாளிகள்.தொழிலாளர்களின் கோரிக்கைகள் வென்றேடுக்கும்வரை போராட்டம் தொடரும்….தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக…..தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைவீர் தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பீர்…..
    காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் அமைந்துள்ள SPEL semiconductor(SPIC GROUP) நிறுவனத்தில் பணிநீக்கம் மற்றும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கவும் கோரி 14/04/2015 முதல் தொடர் வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் 236 தொழிலாளிகள் ஈடுப்பட்டுள்ளனர்….. அனைவரும் ஆதரவு தாரீர். நன்றி வணக்கம்

  2. தனியார் வந்தால் தான் தரம்,சேவை,போட்டி என்று பிரச்சாரம் செய்தார்கள். ஐ.டி.துறையில் அதனால் தான் அதிக சம்பளம்,திறமைக்கு வேலை, என்று முழங்கிய அறிவிலிகள் எங்கே? அதியமான், இராமன் இதற்கு ஓடி ஒளிவர்.

    • சொசியளிசதினால் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தோம் . இத்துணை பேருக்கும் வேலை எனபது சோசியலிசத்தில் சாத்தியம் இல்லை .

      லாபம் காட்ட வேண்டும் என்னும் அக்கறை இல்லாததால் , ஊழியர் தேர்வு முறையில் ஊழல் , சாதி அதிகார துஸ்பிரயோகம் போன்றவை நடந்து வந்தன .

      சாதி கேட்காமல் காசு கேற்காமல் வேலை கிடைத்தது . அதுவே பெரிய முன்னேற்றம் தான்
      ஊழியர் அதிக சம்பளம் பெறும்போது வருமானவரி வாங்கிய அரசாங்கம் அவர் வெளெய் இழக்கும்போது , அதுத வேலை பெரும் வரை ஒரும் தொகை கொடுத்து காப்பாற்ற வேண்டும்

      அது சரி , இன்றைக்கும் அக்ரி வேலைக்கு கூட காசு கொடுத்து சேர வேண்டிய நிலையில் அரசாங்கம் நடக்கிறது. இப்பொழுது இவ்வளவு இளைஞர்களுக்கு போனஸ் கிடைக்கவில்லை என்பதை விட முதலில் வேலை கிடைத்திருக்குமா ?

      • திறமை , தகுதி பார்த்துதான் வேலை கிடைக்கிறது என்று கூறுகிறீர்களே, திடீரென்று ஒரு நாள் கூப்பிட்டு ‘இனிமேல் நீ வேலைக்கு வர வேண்டாம் ‘ என்று கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியில் அனுப்புகிறார்களே , அப்போது தெஇர்யவில்லையா தகுதியும் திறமையும்? என்பதுதான் அடிப்படையான கேள்வி.

        இதற்கு பதில், ‘ஆமாம். லாப வெறி கண்ணை மறைப்பதால், தெரியவில்லை’ என்பது முதலாளிகள் சொல்லாமல் சொல்லும் பதில்.

        உங்களுக்கு வேறு பதில் இருப்பின் , அவ்வாறு வெளியில் தள்ளப்பட்டவர்களிடம் பேசிப் பாருங்களேன்.

        நிலைமையின் உண்மையான முகம் தேர்ந்தவர்கள் உள்ளுக்குள் மருகுகிறார்கள், அமைதி காக்கிறார்கள். சப்பை கட்டு கட்டுவதில்லை . பூ
        இன்று வேலை போகுமோ, நாளை வேலை போகுமோ என்று அஞ்சியபடியே எந்த வகையில் சேர்த்து?

        • அரசு பணியாளர்கள் தவிர அணைத்து துறையிலும் எல்லா காலத்திலும் இதுதான் நிலைமை .

          சொசில்யலிச காலத்தில் மிக குறைந்த தனியார் தொழில் நிறுவனங்களே இருந்தன . அங்கே அதிகாரத்தை எதிர்த்து பேச கூட முடியாது. பேசினால் வேலை போய் விடும் , வேறு வேலை கிடைப்பது குதிரை கொம்பு! அனால் இப்போது பிடித்தால் வேலை , இல்லை என்றால் அடுத்த கம்பெனி என்று மாறுகிறார்கள் . அந்த சுதந்திரத்தின் விலை தற்காலிகம்.

          நிரந்தர வேலை என்று எதுவும் இல்லை .. அதாவது உங்கள் நிறுவனத்திற்கு போட்டியே இல்லை,உற்பத்தி பொருளுக்கு தேவை அதிகம் ஆகிக்கொண்டே போகிறது என்னும் போது அது அந்த குறிப்பிட்ட காலத்திற்கு வேலை மட்டும் நிரந்தரமாக(!) இருக்கும் .

          சோசியலிச போட்டோபிலிம்ஸ் கம்பெனியில் செருகிறீர் . எல்லோரும் டிஜிட்டல் போடோவிற்கு மாறிவிடுகிறார்கள் . என்ன ஆகும் ? நிரந்தரம் எங்கே வந்தது ?

          சோசியலிச பெட்ரோல் எடுக்கும் கம்பெனியில் செருகிறீர் . எல்லோரும் டெஸ்லா பாட்டரிக்கு மாறிவிடுகிறார்கள் . என்ன ஆகும் ? நிரந்தரம் எங்கே வந்தது ?

          எங்க ஊரு அண்ணாச்சி கடையே , போட்டியால் மூடி விட்டார் என்றால் பாருங்கள்
          அனால் எங்கள் ஊரில் ஒருவர் ஹார்டுவேர் கடை வைத்து சம்பாதித்து கார் வாங்கிவிட்டார் .

          மாற்றம் மட்டுமே நிலையானது

          //இன்று வேலை போகுமோ, நாளை வேலை போகுமோ என்று அஞ்சியபடியே எந்த வகையில் சேர்த்து?//
          நானும் அப்படி தற்காலிகமாகத்தான் தான் பணியாற்றி வருகிறேன்.
          பணி இருக்கும்போது பெரிய வீடு , கார் என்று கடன் வாங்கி அவர்களே தலைக்கு மேல் கத்தியை தொங்க விடுகிறார்கள். அவன் வேலை விட்டு தூக்கவிட்டலும் நீ அந்த கம்பெனியில் எத்துனை நாள் இருப்பாய்? எதற்கு வீடு ? என்று கேட்டால் , வீடு பேரு அடையவே விரும்புகிறார்கள் 🙂

          //, திடீரென்று ஒரு நாள் கூப்பிட்டு ‘இனிமேல் நீ வேலைக்கு வர வேண்டாம் ‘ என்று கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியில் அனுப்புகிறார்களே , அப்போது தெஇர்யவில்லையா தகுதியும் திறமையும்///

          காதல் திருமணத்தில் விவாக ரத்து எப்படி என்கிறீர் ?

          இந்த இண்டர்வ்யூ ஜட்ஜெமென்ட் எனபது மிகவும் சிக்கலான விஷயம் . நிறிய பேர் ஏட்டளவில் படித்து நன்றாக பேசுவார்கள் . அனால் வேலை ஒன்றுமே நகராது . எனது பணி இடத்தில இப்படி பலரை சந்தித்து உள்ளேன் . இதில் ஒருவர் புத்தகம் வேறு எழுதி இருந்தார் . அடேங்கப்பா பெரிய ஆளோட ஒர்க் பண்றோம் என்று நினைத்தால் , அவருக்கு செயல் ளவில் ஒன்றுமே முடியவில்லை . அவரும் என்னை போலவே தற்காலிக பணியாளர் . அவரை உடனே தூக்கி விடவில்லை , அவருக்கு எளிதான பணிகளை செய்யும் படி ஒர்க் கொடுத்தார்கள் அதையும் செய்யாமல் போனதால் பின்னர் வேறு வழி இன்றி நீக்கப்பட்டார் .

          அதற்காக வேலை நீக்கப்பட்டவர்கள் அனைவரும் திறமை அற்றவர்கள் என்பதுவும் தவறு . மேலாளரோடு ஒத்து போகாமல் , நீக்கபட்டவர்களும் தெரியும் . கம்பெனி எனபது ஒத்த பர்சனாலிட்டி உடைய மக்களை மட்டும் சேர்த்து வேலை வாங்கும் இடம் அல்ல . சிக்கலான விஷயம்

          //‘ஆமாம். லாப வெறி கண்ணை மறைப்பதால், தெரியவில்லை’ //
          டாடா போனஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லைஎ

      • //சொசியளிசதினால் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தோம் . இத்துணை பேருக்கும் வேலை எனபது சோசியலிசத்தில் சாத்தியம் இல்லை .
        லாபம் காட்ட வேண்டும் என்னும் அக்கறை இல்லாததால் , ஊழியர் தேர்வு முறையில் ஊழல் , சாதி அதிகார துஸ்பிரயோகம் போன்றவை நடந்து வந்தன//
        இராமனுக்கு தெரிந்த பார்ப்பன தரகு முதலாளித்துவ சோசலிசம். ஆம் அதனால் தான் பிச்சை எடுக்கும் நிலை உங்களுடைய பிரச்சனை சாதி பார்த்து வேலை தருவது தான் இழிவிர்க்கு காரணமான பார்ப்பன அரசு அல்ல
        //.சாதி கேட்காமல் காசு கேற்காமல் வேலை கிடைத்தது . //எந்த காலத்தில் இருக்கேல் அதான் Resumeஐ பார்த்துன்டு நம்மவானு தான் கம்யுட்டர்லையே தெரியுதோனோ அதுவே பெரிய முன்னேற்றம் தான்:)

      • கிடைத்த வேலைக்கு உத்திரவாதம் இல்லை அதற்கு என்ன பதில் திரு.இராமன் அவர்களே?

  3. சோசியலிசம்
    ————–
    படிப்பு + (திறமை இருந்தால் நல்லது ) + சாதி + பணம்+ அதிகார மட்ட தொடர்பு [ஆதிக்க சாதி] = நிரந்தர வேலை[குறைந்த சம்பளம்], ஆனால் மிக குறைந்த பணி இடங்கள் = வேலை போனால் மீண்டும் கிடைப்பது மிக அரிது

    இருபதாயிரம் பேருக்குதான் வேலையே

    முதலீட்டுதுவம்
    —————-
    படிப்பு + திறமை [ அணைத்து சாதி] = உத்திரவாதம் இல்லாத வேலை[அதிக சம்பளம் ] = மிக அதிகமான பணி இடங்கள் = வேலை போனால் மீண்டும் கிடைப்பது எளிது

    பத்து லட்சம் பேருக்கு வேலை , ஐம்பதாயிரம் பணி நீக்கம்

    //கிடைத்த வேலைக்கு உத்திரவாதம் இல்லை அதற்கு என்ன பதில் திரு.இராமன் அவர்களே?//
    அங்கே வேலையே கிடைக்காது என்கிறேன். இங்கே வேலை கிடைத்து இருகிறதே!

    • 1. இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 96%.
      வெறும் 4% பேர் தான் மாதச் சம்பளம் வாங்குபவர்கள்.
      இந்த 4%பேரில் பெரும்பான்மையினர் அரசு அலுவலர்கள்.
      ஒன்றுமே இல்லாத ஒன்றுக்கு சமன்பாடு காட்ட முடிகிறதென்றால் இராமனுக்கும் தன் புத்தி, சொல்புத்தி ஏதாவது இருக்கிறதா?

      2. சோசலிசத்தில் சாதியா? இராமன் பார்த்த சோசலிசம் தினுசான சோசலிசமாக இருக்கிறதே? பாலியல் கனா கண்டவன் வெளியே சொல்லமாட்டான் என்ற கிராமங்களில் ஒரு சொலவடை சொல்வார்கள். அதுபோல இராமனும் இவர் கண்ட இந்திய சோசலிசம் குறித்து நமக்கு விளக்க மாட்டார் போலும்!

    • @Raman,Bolivia follows socialism.How come Moralis could give total employment through public sector?Without cutting welfare measures,how it remains as a country with maximum savings as reported by IMF?How it could bring an end to illiteracy as reported by UNESCO?How the national wealth changed from top 20% of the population to bottom 20% of the population as reported by UNDP?How it could succeed in establishing growth and democracy with focus on poverty alleviation during the past 9 years(2005-2014)?How women empowerment has been done in the real sense by having 28% women in parliament,47% in senate and 50% in the cabinet?Are you aware that Evo Moralis is the first President from tribal community and he has 3 women ministers(out of 10 women ministers) also from tribal community.He has won for the third time in Oct,2014 by getting 60% votes,defeating his rival candidate propped up by American corporates.Another important information for you,Bolivians never believe the stories dished out by the media still controlled by right wing corporates.All such developments could be achieved by Bolivia since Moralis nationalized Telecommunication,tin and zink which were in the hands of Italian corporates before 2005.One more thing,Bolivia is the only Latin American country having lowest inflation.GDP doubled between 2006 and 2012.Production of natural gas was doubled after nationalization.All growth made possible after ensuring decent pension for the elderly and medical facilities for pregnant ladies.There was four fold increase in issue of land pattas for small farmers.Moralis says that he was inspired by Fidal Castro,Hugo Chaves and Che Quvera.He strives for cooperation among all Latin American countries.He gratefully acknowledges for assistance rendered by Venezuela and Cuba in providing educational facilities to his countrymen.

  4. @Sooriyan

    Bolivia System
    ——

    Has he nationalized all hospitals :- No
    has he made health care free for every one :- No
    Has he nationalized all Banks :- No
    Has he nationalized all Private Schools and colleges :- No
    Has he nationalized all grocery shops, pharmacies : No
    Has he excluded all private companies in oil field:- No he still wants them to explore
    Is petrol free ? : No

    So Evo Morales is way smarter than Chavez and Castro. Basically he dint listen to them. he exercies caution while dealing with private entities rather than totally boycotting them.Looks like Kamaraj like leader who understands the system properly..

    When comparing how Chavez and Castro ruined their countries by totally beleiving into some isms…This guy stands unique

    Revenue
    ——-
    Revenue increase is due to Hydrocarbon price increase. Basically they are commodity economy. Any nationalization will work till the machines and process set up by capitalist works. Yes, Inital successfull runs are due to those setup.

    Though production increased now, it will slowly degrade over the period in the long term.
    Allawaitng is corruption,mismanagement with zero service attitude.

    Telecom takeover will also be the same case. It can make profit but people will not get the service.

    He will be able to get some more mileage out of the system, if he keeps his expenditure in check and looks like that is what he is doing it.

    Regarding Pension and other perks for employees, Welfare schemes, they will work as long as commoidity prices stay high.Nothing will last for eternity.

    When Chavez took over venezula and when oil price went up he too was able to deliver populist program and grow the economoy. End game is known incase of socialist countries.

    • @Raman,Why you are becoming a doomsayer to socialistic regimes.It is nothing but your prejudices and preconceived notions about them.How come machines installed during capitalist regime will become non-functional when operated by workers in the socialistic regime?How do you assume that socialistic regimes will not upgrade/replace the machines?How do you assume corruption,mismanagement and zero service attitude in the socialistic regimes?Even now BSNL` strives to provide good service in spite of lack of further investment by Govt of India for the past decade.I am having BSNL broadband connection only and am fully satisfied with their services.Private courier service cannot beat Speedpost with prompt and accurate delivery of passports and cheque books from banks.Certainly,Vinavu readers will follow Bolivians in not believing wrong information dished out by right wing media/persons like you.
      Do you have any account with ICICI Bank and had any experience in dealing with the bank during any hurdle in operating your account?If not,you are lucky.Otherwise,you will be dialing their customer service indefinitely without any solution.On the other hand,grievance redressel in nationalized banks is much better.It is better to shed your prejudices/bias at least to preserve your good health.

      • BSNL
        ——

        I wanted BSNL to give me net connection , The guy in exchange told me , they dont have wires and advised not to go with them. Still I paid, they gave connection after 3 years and connection was spotty and eventually cancelled it

        I wanted BSNL to detect money from my bank directly, they will take money from bank and will disconnect the service , we have to call the service every month and explain . this was going on for years. I finally emailed to all the heads of BSNL and it got resolved.

        Now Landline connection is still there but it is not working. They put towers near my villege and when I asked for SIM card, they said I wont get it.

        What if BSNL is THE only company socialism allows, corrpution to even get sim card.
        Corruption to fix the broken land line wires.

        ICICI
        —–
        I know you dont like their service. Atleast there I can call them , what is in Indian bank? you can check the balance and cannot do any transfer …

        Now think of Only govt banks, and all employees are govt employees, How will they treat me?
        Did they even provide a customer care number?

        Sir, you are thinking socialism means subsidized flight ticket. Beyond that you dont have much knowledge in socialism. You practice capitalism in every part of your progress and still not aware of it.

  5. @Raman,Whatever faults you find in BSNL are because the Govts have made them to face natural death.They want BSNL to die in order to promote private players. This fact has been already told by me.I am also having BSNL land line for more than 15 years and I do not face any problem.I can list out lot of faults on private players like Airtel,Aircell also.Airtel offered 4 numbers HD channels with one year subscription for their Dishtv.After one month,they disconnected the four HD channels.I wrote up to their Corporate office with no result.Privatization is not the panacea for all our difficulties with these service providers.Do not ask me to use only B/W tv only, just because I advocate socialism.
    Indian Bank as well as all nationalized banks have facilities for internet banking.At our office,we do all our online transactions with State Bank of India only.All nationalized banks have call centers.
    How can you call all my practices as capitalist?Do you mean to say that all socialistic country men are living like cave men?I have listed already what a socialist govt can do in Bolivia.Man.I travel to my son”s place once in two/three years not necessarily in Air India but also in British Airways and I pity your understanding that I praise socialism only because of subsidized flight ticket.Only a capitalist like you will be selfish and praise that system after enjoying the benefits of capitalism without thinking about fellow countrymen.

    • //Whatever faults you find in BSNL are because the Govts have made them to face natural death.They want BSNL to die in order to promote private players.//

      Blatant lie.

      We had to wait four years to get BSNL connection.At that time there was no private players.

      //d 4 numbers HD channels //

      Ha ha .. now you cant even bear removing 4 channels. Socialism gave only DD,whether you like it or not you have to.Today you have choice to move to TATA/SunDirect.

      Capitalism provides choice in life. Socialism gives no choice.

      //Indian Bank as well as all nationalized banks have facilities for internet banking.At our office,we do all our online transactions with State Bank of India only//

      When did they start offering those services? After ICICI like private players.See competetion has improved your quality of life…

      //what a socialist govt can do in Bolivia//

      Sir, I have clearly stated it is not yet socialist. When they fully become socialist, I will learn when I read the riot for food news.

      What will happen if no buyers for Bloivia’s lithiyam and gas?
      1) Aluminium based battery technolgy is being experimented.Thay has the potential to replace lithiam
      2) Tesla Battery based cars (Now lithiam tomorrow aluminiam ) will reduce gas requirement

      where will the money come for socialist Bolivia? sell liqors ?

      • @Raman,I didn”t know that your clock stopped in the 90s itself.You are talking about the days of the Telephone department wings like Chennai Telephones etc.After that period only,BSNL and MTNL came.They were providing good services and earned profit.After advent of private players,Central Govt started neglecting BSNL and MTNL.Huge properties of VSNL were sold to Tatas.Govt itself wanted to help private players to expand their operations.For the past two decades,no further investments were made in BSNL and even the vast network of its towers were leased out to private players.Raman,you have a problem.You do not read news pertaining to public sector at all as if they are untouchables.When some one tells about the latest position,you call the information as blatant lies.
        What you are trying to convey?Simply because the privatization gives choices for consumers,these private players can do any damn thing.
        Now you are waiting for the news of food riots in Bolivia.Earlier I called you as sadist.I am correcting myself.You seems to be a psycho.

  6. @Soorian

    Your argument is now because of privatization , BSNL is not able to service.
    My argument is During socialist period what was the status of Your socialist Telephone company ? Pathetic service.

    Either You are pretending that you cant understand or that is your maximum capacity.

    //Now you are waiting for the news of food riots in Bolivia.//

    Character assassination is your main skill right? 🙂

    I meant when Bolivia becomes fully socialist , when wealth distribution is not sustainable , there will be riot for food on streets. And that has happened in Ukraine,china, korea and Venezuela. That will happen here too and that is an indicator. I would suggest you to educate yourself in history.

    Insanity is doing the same thing and expecting different result. 🙂

    • I have given year war functioning of BSNL.Before colour TV came and before private channels were started,Doordharshan was giving only OLIYUM OLIYUM and Sunday only cinema as entertainment.That does not mean Doordharshan gave poor service. Farmers were benefited by their VAYALUM VAZHVUM.Technological advancements may change things. Sometimes,the technological advancements are counter productive also.Now,private channels especially Tamil channels provide entertainment and entertainment only.The educational programmes are missing. Whether it is Pongal or New Year,we have to listen to cine stars only.I am contented with my capacity and knowledge of history.You better improve yourself.Remove the KADIVALAM from your eyes and welcome any information with open heart.On many previous occasions,you could not offer reply to my comments-for example-MRNEGS,Golden quadrilateral etc.You constantly expose your sadist behaviour.When it is pointed out,you used to weep.Weep for a week and come back with the same venom.I am ready to counter your arguments.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க