privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பல்லவி ஜோஷி விலகல், வியாபம் ஊழல் படுகொலைகள்

பல்லவி ஜோஷி விலகல், வியாபம் ஊழல் படுகொலைகள்

-

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் 06-07-2015 அன்று வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்….

புனே: மாணவருக்கு ஆதரவாக மோடி அரசைக் கண்டித்து பல்லவி ஜோஷி விலகல்!

pallavi-joshiபுனே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிலையத்தின் தலைவராக, பா.ஜ.க தலைவர் கஜேந்திர சவுஹானை நியமித்த மோடி அரசைக் கண்டித்து, அக்கல்லூரியின் மாணவர்கள் போராடி வருகிறார்கள். மாணவர்களுக்கு தோள் கொடுக்கும் முகமாக நடிகை பல்லவி ஜோஷி, இந்த கல்லூரியின் நிர்வாக ரீதியான உறுப்பினர் பதவியை விட்டு விலகியிருக்கிறார்.

தமிழ் சினிமாக்களில் வீரம் பேசும் நடிகர்களோ, இல்லை முற்போக்கு பேசும் இயக்குநர்களோ, அவர்களின் சங்கங்களோ யாரும் கல்வி, கலைகளை காவி மயமாக்கும் பா.ஜ.கவிற்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. பூனா கல்லூரியின் கலைத்தரத்தை கொண்டாடும் படைப்பாளிகள் முதலில் தமது சுயமரியாதைத் தரத்தை உணர்ந்து கொள்ளட்டும்.

“வியாபம்” ஊழல் – மர்ம மரணங்களா? அப்பட்டமான கொலைகளா ?

வியாபம் ஊழல் தொடர்பான சமீபத்திய மரணங்களில் முன்னாள் மருத்துவக் கல்லூரி டீன், பத்திரிகையாளர், பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் சேர்ந்திருக்கிறார்கள். வெளியாகும் ஊழலை மறைப்பது, திசை திருப்புவது, நீதியை விலைக்கு வாங்குவது எல்லாம் ஜெயா சொத்து குவிப்பு வழக்கில் பார்த்து விட்டோம். என்றாலும் இதெல்லாம் இனி பழைய கதை. ஒரு ஊழல் வழக்கை வென்று காட்ட சாட்சிகளையே கொன்று அதை மர்ம மரணங்கள் என்று போடும் சாதனையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

யார்? சாட்சாத் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கூட்டம்தான். வியாபம் ஊழல் குறித்த விரிவான விவரங்களை அறிந்து கொள்ள வினவு தளத்தில் வெளியான கட்டுரையை படியுங்கள்!

கட்டுரையிலிருந்து சில பகுதிகள்….

“வியாபம் ஊழலை ஊழல்களின் தாய் என்று வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன. வியாபம் ஒரு பிரம்மாண்டமான ஊழல் – ஆனால், இங்கே பிரம்மாண்டம் என்பது இந்த ஊழலில் புரளும் பணத்தின் அளவை மட்டும் கொண்டு தீர்மானிக்கப்படவில்லை.

முன்னெப்போதும் இல்லாத வகையில் வியாபம் ஊழல் புகாரில் இதுவரை சுமார் 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது பட்டியலில் உள்ள சுமார் 300 பேர் தலைமறைவாக உள்ளனர். மத்திய பிரதேச ஆளுனர் ராம் நரேஷ் யாதவ், முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.சி சுதர்ஷன், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது மனைவி சாதனா உள்ளிட்டோர் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள பெரும் புள்ளிகளில் சிலர்.

தமக்கு வேண்டியவர்கள், தாம் கைநீட்டி லஞ்சம் பெற்றுக் கொண்டவர்களை இந்த ‘பெரும்’ புள்ளிகள் தேர்வுகளில் வெற்றி பெற இடைத்தரகர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 1800 பேரில் பாரதிய ஜனதாவின் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா, ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.கே ஷிவாரே, புகழ்பெற்ற மருத்துவர் வினோத் பண்டாரி மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சுரங்க முதலை சுதீர் ஷர்மா ஆகியோர் அடங்குவர்.

வேறெந்த வழக்கிலும் நடந்திராத வகையில், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் வழக்கின் சாட்சிகள் உள்ளிட்ட 40 பேர் மர்மமான முறைகளில் இறந்துள்ளனர் – அதாவது கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு இறந்தவர்களில் மாநில ஆளுனர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவும் அடங்குவார்.”

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்