Saturday, February 4, 2023
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

-

puthiya-jananayagam-august-2015
புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. தமிழ்நாடு மின்சார வாரியம் – அம்மா “கமிசன்” மண்டி!
நீங்கள் செலுத்தும் மின்கட்டணத்தில் அம்மாவுக்குச் செல்லும் கமிசன் எவ்வளவு?

2. அவசரநிலை ஆட்சிக்குத் தயாரிப்பு!

3. ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்
போலீசின் கொட்டடிக் கொலைக்கு எதிராக நடந்த முசுலீம்களின் போராட்டத்தை, இந்துக்களுக்கு எதிரானதாக, லவ்-ஜிகாத்தாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் திசை திருப்புவதற்கு பத்திரிகைகளும் சென்னை உயர்நீதி மன்றமும் துணை போயின.

4. யாகூப் மேமன் தூக்கு : இந்து மனசாட்சிக்கு இன்னுமொரு பலி!
இந்திய நீதியின் மீது அப்பாவித்தனமாக பெருநம்பிக்கை வைத்திருந்த குற்றத்துக்கு யாகூப் மேமனுக்குக் கிடைத்த தண்டனை தூக்கு.

5. வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்!
ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.

6. கிரீஸ் : மேல்நிலை வல்லரசுகளின் நவீன ஆக்கிரமிப்புப் போர்!
மேல் நிலை வல்லரசுகளின் ஆதிக்கத்தின் கீழ் நாட்டின் இறையாண்மை, மக்களின் ஜனநாயக உரிமை என்பதற்கெல்லாம் எந்தப் பொருளும் கிடையாது என்பதை கிரீஸ் மக்களின் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

7. சமூகப் பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு : தீவிரமடையும் வறுமைக்குத் தீர்வு என்ன?
‘வளர்ச்சி’யின் மறுபக்கம் : 10.69 கோடி கிராமப் புறக் குடுமங்களுக்கு சொந்தமாக ஒரு துண்டு நிலம் கூட இல்லை. தினக்கூலிகளாகப் பிழைப்பை நடத்தும் இவர்கள் குடிசை வீடுகளில் வறுமையில் உழல்கின்றனர்.

8. கர்நாடகா லோக் ஆயுக்தா: ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈறும் பேனும்
லோக்பால், லோக் ஆயுக்தா ஆகிய நிறுவனங்கள் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனிதப் பசுக்களாக இருக்க முடியும் என்ற மாயையை கர்நாடகா லோக் ஆயுக்தாவில் நடந்துள்ள ஊழல் தகர்த்து விட்டது.

9. மேக் இன் இந்தியா : நாடு வல்லரசாகாது : கொத்தடிமை தேசமாகும்!
ஈவிரக்கமற்ற உழைப்புச் சுரண்டலையும், சுற்றுச் சூழல் நாசத்தையும் ஏற்படுத்துகின்றன “சீனப் பாதையில்” சென்று, கொடிய வறுமை தாண்டவமாடும் வங்கதேசத்தின் இடத்தைப் பிடிப்பதே மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டம்.

10. “அச்சத்தைக் கைவிடு! துணிந்து போராடு!!” – உதவி பேராசிரியர் விக்ரமின் கலகக்குரல்

11. அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல! – 4
மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் அரசுக் கட்டமைப்பு

12. பள்ளித் தலமனைத்தும் ‘பார்’ செய்குவோம்!

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

 1. அவசரநிலை ஆட்சிக்குத் தயாரிப்பு! : Admin comment session is closed in that topic குஜராத்தை ஆண்டது போன்றே அதனை முன் உதாரணமாக கொண்டு இந்தியாவை ஆள முனையும் மோடிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். குஜராத்தின் சமுக மத ஆளுமை பண்புகளை அப்படியே பிரதி எடுக்கும் மக்கள் அல்லர் அனைத்து இந்தியர்களும் என்பதை இன்றைய பிகார் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. மோடியின் வினைகளும் , பிகாரிகளின் எதிர் வினைகளும் அப்பட்டமாக மோடியை கோமாளியாகவோ அல்லது அதற்கும் இன்னும் மேலான கிறுக்கு மன நிலை மனிதனாகவோ தான் மக்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது.

  “மரபணுக்களில் உள்ள குறைபாடு” என்ற மோடியின் ஒரு சிறு விமர்சனத்துக்கே ஐப்பது இலசம் பிகாரிகளின் மயிர் மாதிரிகளை மோடி பரிசாக பெற்றுக்கொள்ளும் நிலையில் ஆனந்த தாண்டவம் அடைகின்றார். பின்பு இருக்காதா பின்பு ? “மேக் இன் இந்தியா ” என்றவருக்கு ஐப்பது இலசம் பிகாரிகளின் மயிர் மாதிரிகள் கிடைக்க போகின்றது என்றால் அதனையும் வெளி நாட்டுக்கு விற்று காசு பார்க்கும் மன நிலையில் நாட்டை விற்கும் மனிதர் தானே மோடி !

  வினவில் பிற ஊடகங்களில் பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் மோடிக்கு ஆதரவு கொடுத்த நடுத்தர வர்க்கம் இப்போதும் மோடிக்கு ஆதரவு கொடுகுமா என்ன ?

  • கூடுதலாக, மோடியின் குஜராத்தின் யோக்கியதை பற்றி இன்றைய தினமணி செய்தியிலிருந்து…
   “குஜராத்தில் படெல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க எதிர்ப்பு” என்ற செய்தியில், ‘இதர பிற்படுப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் தங்களுடைய சமூகங்களையும் சேர்க்க வேண்டும்’ என்று படேல், பிராமணர், க்ஷத்திரியர் ஆகிய சமூகங்களைச் சேர்ந்தவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக, 7 அமைச்சர்கள் அடங்கிய குழுவை மாநில அரசு அமைத்திருப்பது கண்டனத்திற்குரியது. முஸ்லிம்களை, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எதிரிகளாக பொது வகுப்பினர் சித்தரிக்கின்றனர். ஆனால், எங்களது உண்மையான எதிரிகள் யார் என்பது இப்போது புரிகிறது என்கிறார் அல்பேஷ் தாக்குர்.”
   இதுதான் மோடியின் குஜராத்! இந்து என்பதெல்லாம் பார்ப்பன, பனியா, படேல் போன்ற உயர்சாதியினரைத்தான் குறித்துள்ளனர் என குஜராத்திகள் உணரத்தொடங்கியுள்ளனர். குஜராத்திகளின் இந்த உணர்வு மோடிக்கு எதிராக இருக்கும் அதே வேளையில், ஜனநாயக உணர்வின் வெளிப்பாடாக இல்லாமல் இருப்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
   இது போன்று பல துறைகளில் மோடி-ஆர்.எஸ்.எஸ். கும்பல் செய்துள்ள திட்டங்கள், பிரித்தாளும் சூழ்ச்சிகள் அவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளன.
   கல்வி மற்றும் இதர அரசு கட்டுமானங்களில் ஆர்.எஸ்.எஸ்.-காரர்களை புகுத்தும் திட்டத்திற்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டங்கள் வளர்ந்து வருகின்றனர். சென்னை IITயில் மண்ணைக் கவ்வியது. தற்போது, புனே திரைப்படக் கல்லூரியின் தலைவராக ஆர்.எஸ்.எஸ். காரனை நியமித்ததற்கு எதிரான அந்த மாணவர்களின் போராட்டம் போன்றவை ஒருசில உதாரணங்கள்.
   இது போன்று நாடு முழுவதும் கிளம்பும் எதிர்ப்புகளை சமாளிக்க, தனது ஆளுகையின் கீழ் நிலைநிறுத்த அவசர நிலை ஆட்சியை மோடி அரசு கொண்டுவரலாம். அதனால், பாசிச ஆட்சி (அவசர நிலை ஆட்சி)யை நேரடியாக எதிர்த்துதான் முறியடிக்க முடியும். அந்தக் கடமை இன்னும் நமக்காக காத்துக்கிடக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க