privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபென்னாகரம் டாஸ்மாக்கை முற்றுகையிட்ட பெண்கள் !

பென்னாகரம் டாஸ்மாக்கை முற்றுகையிட்ட பெண்கள் !

-

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலைய டாஸ்மாக்கை முற்றுகையிட வீறு கொண்டு போராடிய பெண்கள் கைது !

வயிறு முட்ட குடிப்போம்! அரசுக்கு வருவாய் ஈட்டுவோம்!!” என்று அரசின் ஆளும் வர்க்க கருத்தை அம்பலப்படுத்தும் வகையிலும் டாஸ்மாக்கை முற்றுகையிட புறப்பட்டும், மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 35-க்கும் மேற்பட்ட பெண்கள் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள பிள்ளையார் கோயில் அருகில் இருந்து ஊர்வலமாக டாஸ்மாக்கை நோக்கி சென்றனர்.

  • “வயிறு முட்ட குடிப்போம் அரசுக்கு வருவாய் ஈட்டுவோம்”
  • “மூடு டாஸ்மாக்கை, எவன் வருவான் பார்ப்போம்”
  • “நம்ம ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது”
  • “பச்சையப்பன் மாணவர்களை பு.மா.இ.மு தோழர்களை விடுதலை செய்”

என முழக்கமிட்டுக் கொண்டே ஊர்வலமாக சென்றனர்.

மக்கள் அதிகாரம், பென்னாகரம்பேருந்து நிலையத்தை நெருங்கிய போது 500-க்கும் மேற்பட்ட மக்களும் வறட்சி நிவாரணம் கோரி சி.பி.ஐ ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்கள் என பெரும் திரளான மக்கள் ஆச்சரியத்தோடு நின்று கவனித்தனர். நான்கு ஆண் போலீசும் ஒரு பெண் போலீசும் தோழர்களை தடுக்கவே மேலும் மக்கள் கூட்டம் தோழர்களை சூழ்ந்துக்கொண்டது. தோழர் பழனியம்மாள் டாஸ்மாக் சாரயத்தால் பெண்கள் பொது இடத்தில் அவதிப்படுது பற்றியும் குடும்பம் சீர்குலைவது பற்றியும் மக்களிடம் உரையாற்றினார்.

போலீசு அவர்களை கைது செய்ய தள்ளிய போது, அதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞர், “பெண்கள் போராடுவது சரிதானே ஏன் அவர்களை கைது செய்கிறீர்கள்” என்று போலீசிடம் கேட்டார்.

மக்கள் அதிகாரம், பென்னாகரம்
பெண் தோழர் ஒருவர் தன்மீது கைவைத்து இழுக்க முயன்ற ஆண் எஸ்.ஐ-டம் ஆக்ரோசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உடனே “இவனை கைது செய்யுங்கள்” என்று ஒரு போலீசுகாரர் அதிகாரத் திமிரோடு பேசினார்.

அதற்கு அந்த இளைஞர், “டாஸ்மாக்கை எதிர்த்து போராடினால் குற்றமா? வேண்டுமானால் என்னை கைது செய்து கொள்ளுங்கள்” என்று தைரியமாக பேசினார்.

தொடர்ந்து கைது செய்ய முயலவே அதை கவனித்துக் கொண்டிருந்த தோழர் ஒருவர், “இரண்டு நாட்களுக்கு முன்பு இளங்கோவன் உருவ பொம்மையை எரித்த போது அ.தி.மு.கவினரை கைது செய்யாமல் இப்போது மட்டும் ஏன் கைது செய்றீங்க” என்று ஆவேசத்தோடு பேசி வலுக்கட்டயமாக வேனில் ஏற்றுவதை தடுத்தார்.

பெண் தோழர் ஒருவர் தன்மீது கைவைத்து இழுக்க முயன்ற ஆண் எஸ்.ஐ-டம் ஆக்ரோசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது “ஏறுடி வேனில்” என்று திமிராக ஒருமையில் பேசினார் எஸ்.ஐ முருகன். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்த பெண் தோழரும் “கையை எடுய்யா? பெண்மீது கைவைக்க யார் உனக்கு கொடுத்தது” என்று ஆவேசமாக பேசியதைக் கேட்ட மற்ற ஒட்டு மொட்ட போலிசும் பம்மியது.

இவ்வாறு ஒருமணி நேரம் நடந்த போராட்டத்தில் பெண் போலீசு வந்தும் அவர்களுடன் பெரும் போராட்டம் நடந்த பிறகு தோழர்கள் கைதாகினர். இதில் ஒரு தோழர் கைகுழந்தையுடன் கைதாகி உள்ளார். பெண்கள் டாஸ்மாக் எதிராக இவ்வாறு வீறுகொண்டு போராடியதை நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஆச்சரியத்தோடு கவனித்துச் சென்றனர்.

தகவல்

மக்கள் அதிகாரம், தருமபுரி
8148573417

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க