Wednesday, September 23, 2020
முகப்பு போலி ஜனநாயகம் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு : உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

அவமதிப்பு வழக்கு : உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

-

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – செப்டம்பர் 16, 2015 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

 • ஆத்திரம் கொண்ட ஊழல் நீதிபதிகளின் சர்வாதிகார சதிராட்டம்
 • நீதிமன்ற வளாகம் முழுதும் போலீஸ் குவிப்பு
 • நீதிமன்ற அறைக்குள் வழக்குரைஞர்களையே அனுமதிக்காத அநீதி
 • 75 வயது முதிய வழக்கறிஞர் சங்க செயலரை ஒன்றரை மணி நேரம் நிற்க வைத்து விசாரித்த கொடுமை
 • சிறையில் தள்ளுவேன் என்று மிரட்டல்
 • சென்னை உயர்நீதிமன்றத்தை மத்திய போலீஸ் படையிடம் ஒப்படைக்க சதி

நீதிமன்ற பாசிசம்

மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் வாஞ்சிநாதன்
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இந்திரா

நேர்காணல்

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
  இந்த 54 நிமிட வீடியோவை ஒரு சிலராலே டவுன்லோட் செய்து பார்த்து உணர்வு பெற முடியும். ஆனால் ஒரு சிலருக்காக இது இல்லையே.
  வினவின் பரந்துபட்ட வாசகர்கள், வழக்குரைஞர்கள் வெளியிடும் விவரங்களை கிரகித்து கொள்ள இந்த விவாதத்தின் சாராம்சத்தை குறைந்த பட்சம் ஒரு கட்டுரையாக வெளியிடுங்கள்!
  இது போன்ற வீடியோ பதிவுகள் அனைத்திற்கும் அதுதான் பொருத்தமான ஒரு தீர்வாக இருக்கும்.
  நன்றி!

 2. நேர்காணலின் உள்ளடக்கம் சிறப்பாக இருக்கிறது ஆனால் தொழில்முறையில் வடிவம் இல்லாததால் கேட்பவர் கவனத்தை முழுமையாக ஈர்க்கவில்லை.ஒரே ஒரு ஒலிவாங்கியை வைத்துக் கொண்டு அதைக் கையாள்வதில் கவனம் செலுத்தாமல் இருப்பது ஒலிப்பதிவில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகிறது.எதிர்காலத்தில் இதனை கவனத்தில் கொள்ளும்படி கேடுக்கொள்கிறேன். நீதிமன்ற ஊழலை அம்பலப்படுத்துவதை தலைமை நீதிபதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ராஜா,கர்னன் போன்ற நீதிபதிகள் இயற்கை வளக் கொள்ளையர்களுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவிக்கின்றனர்.ஊரறிந்த ஊழல் ரகசியம் கவுலுக்கு மட்டும் தெரியாத ரகசியம் என்ன?பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தால் பங்கு வாங்க மாட்டார்களா ? நீதி மன்றங்களை ஊழல் பங்குச் சந்தைகள் என்றே சொல்லலாம். நேர்மையான நீதிபதிகள் சொல்லட்டும்.

 3. சவுக்கு தளத்தை எந்த இரண்டு நீதிபதிகள் குறிவைத்து இதே மிரட்டல் பாணியில் உத்தரவுகள் பிறப்பிப்பது, தளத்தை முடக்குவது என செயல்படுகிறார்களோ அதே நிதிமான்கள் தான் மதுரை வழக்குரைஞர் சங்க தலைவரை மிரட்டுகிறார்கள்.சவுக்கு சங்கர் என்ற தனி நபரை துரத்தி கொண்டிருப்பதில் ஒரு மகிழ்வை அனுபவிக்கும் அவர்கள் இப்போதும் அதே பாணியில் ஒரு சில நிர்வாகிகளை தனித்து பிரித்து பயமுறுத்த எண்ணுகிறார்கள் என தோன்றுகிறது.ஆனால் அவர்கள் தேன் கூட்டில் கைவைத்திருக்கிறார்கள். பொதுவாக நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் அடிக்கடி அடித்துக் கொள்வதாக ஒரு கருத்து மக்களிடையே உருவாகியிருப்பதால் ஊடகங்கள் அதையே பொதுமைப்படுத்தி இந்த பிரச்சினையில் ஊழல் நீதிபதிகள் பக்கம் நியாயம் இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றன.எனவே நீதிமன்ற வளாகங்களில் போராடும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும். நீதிமன்றத்திற்கு வெளியில் மக்கள் முன்னால் தான் அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். நீதி வெல்லட்டும்!!

 4. காவல்துறை முன்பு நடவடிக்கை எடுத்த போது வக்கீல்களுடன் சேர்ந்து கொண்டு காவல்துறையினர் ஆஜராகி மன்னிப்பு கேட்க வேன்டும் என்று கூறி அசிங்கப் படுத்தினார்கள் , இன்றைக்கு அதே நீதிபதிகள் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் எங்களுக்கு மத்திய பாதுகாப்பு படை வேண்டும் என்கிறார்கள் .நியாமாரே ?

 5. தமிழை வழக்காடு மொழியாக்க கோரி ஒரு பிரிவு வழக்குரைஞர்கள் நீதிபதிகளின் அறைக்குள் போய் போராடுவதாக ஒரு செய்தி வருகிறது.அப்படி ஒரு போராட்டம் உண்மையில் நடக்கிறதா? அப்படி நடத்துவது உண்மையானால் யார் நடத்துகிறார்கள்? அது அறிவிக்கப்பட்ட நோக்கத்திற்காக மட்டுமே நடத்தப்பட்ட போராட்டமா அல்லது ஊழலுக்கு எதிரான போரட்டம் என்று செய்தி வரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு ஊழல் நீதிபதிகள் தரப்பிலிருந்து செட்-அப் செய்யப்பட்ட போராட்டமா?அல்லது இந்த வழக்கின் நடைமுறைகளை எதிர்த்து நடத்துகின்ற பதிவில் குறிப்பிடப்படும் போராட்டத்தையே ஊழல் நீதிபதிகளுக்கு எதிரான போராட்டம் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட்டுக்கொண்டு தமிழ் வழக்காடு மொழி கோரிக்கை என்று சொல்லி செய்தி பரப்புவதின் மூலமாக தமிழ் வழக்காடு மொழிக்கான கோரிக்கையை கொச்சைபடுத்துகின்ற வேலையையும் சேர்த்து செய்கிறார்களா? இது பற்றியெல்லாம் தெரிந்தவர்கள் பகிரவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க