privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமக்கள் அதிகாரம் : சட்டமன்ற முற்றுகை !

மக்கள் அதிகாரம் : சட்டமன்ற முற்றுகை !

-

ஆளத்தகுதியற்ற அரசு இது ! மக்களே டாஸ்மாக்கை மூடுங்கள்!

– சட்டமன்றத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அறிவிப்பு!

ந்த அரசு டாஸ்மாக் கடைகளை மூடாது என்று சட்ட மன்றத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் அறிவித்துள்ளார். தமிழக மக்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கக்கூடிய மதுவிலக்கு என்ற ஒற்றைக் கோரிக்கையை தூக்கியெறிந்து விட்டு குடிப்பவனை திருத்துங்கள் என்கிறார் அமைச்சர். இரண்டு மாதமாக மக்கள் பல இடங்களில் தன்னெழுச்சியாக போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

மக்கள் அதிகாரம் சென்னை பேரணி - முற்றுகை
டாஸ்மாக்கை மூட முடியாது என்று திமிர்த்தனமாக அறிவித்த நத்தம் விஸ்வநாதனை கண்டிக்கின்றோம்!

மக்கள் அதிகாரம் அமைப்பானது,  “இந்த அரசு ஆளத்தகுதியிழந்து விட்டது, டாஸ்மாக் மட்டுமல்ல மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க இந்த அரசுக்கட்டமைப்பு லாயக்கற்றது. மக்கள் தான் தங்கள் அதிகாரத்தை கையிலெடுத்து போராட வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வந்தது. மக்கள் அதிகாரம் சார்பிலும் மக்கள் தன்னெழுச்சியாகவும் போராடி தமிழகம் முழுவதும் சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

தமிழகம் முழுவதும் போராடிய மக்களின் உணர்வை சிறிதும் மதிக்காமல் சாராயத்துறை அமைச்சர் போலவே சட்ட மன்றத்தில் பேசி இருக்கிறார் நத்தம் விசுவநாதன். இதுதான் அரசின் கொள்கை.யார் செத்தாலும் எனக்கு கவலை இல்லை. மிடாசில் வருமானம் குறையக்கூடாது என்பதே ஒரே கவலை .

இதைக்கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் சென்னை பேரணி - முற்றுகை
மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் பெருகுமாம் மானக்கேடு ! மானக்கேடு !

டாஸ்மாக்கை மூட முடியாது என்று
திமிர்த்தனமாக அறிவித்த
நத்தம் விஸ்வநாதனை
கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம் !

மதுவிலக்கே இல்லாத போது
மதுவிலக்குத் துறை எதற்கு?
வெட்கக்கேடு ! வெட்கக்கேடு !

மதுவிலக்கு கொண்டு வந்தால்
கள்ளச்சாராயம் பெருகுமாம்
மானக்கேடு ! மானக்கேடு !

குடி கொடுத்து குடிகெடுக்கும்
பாசிச ஜெயா அரசிடம்
கெஞ்சாதே ! கெஞ்சாதே !

மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்து
போராட அஞ்சாதே !

மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவோம் !

என்ற முழக்கங்களோடு பேரணி தொடங்கியது.

மக்கள் அதிகாரம் சென்னை பேரணி - முற்றுகை
பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தோழர் அமிர்தா

மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் அமிர்தா தலைமையில் மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட 100 பேர் பாரிமுனை பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சட்டமன்றத்தை முற்றுகையிடச் சென்றனர். அவர்களை போலீசு தடுத்து நிறுத்திய போலீசு ”நாங்களும் உங்களுக்கு சப்போர்ட் பண்றோம், உங்களுக்கு நாங்க எதிரி அல்ல” என்று கூறி இதற்கு மேல் செல்ல வேண்டாம் என்றது.

குடி கொடுத்து குடிகெடுக்கும்
பாசிச ஜெயா அரசிடம்
கெஞ்சாதே ! கெஞ்சாதே !

மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்து
போராட அஞ்சாதே !

மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவோம் !

என்று முழக்கமிட்டபடி சட்டமன்றம் நோக்கி முன்னேறிச்சென்றவர்களை கைது செய்தது போலீசு.

மக்கள் அதிகாரம் சென்னை பேரணி - முற்றுகை
கள்ளச்சாராயம் தடுக்கமுடியாத ஒன்று என சொல்வதற்கு எதற்கு முதல்வர்? எதற்கு அமைச்சர்? எதற்கு அரசு?

அப்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தோழர் அமிர்தா “பெண்களின் தாலியறுக்கும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. அதைக் கொஞ்சமும் மதிக்காமல் தான் மக்களின் சேவகன் என்ற உணர்வே இல்லாமல் நத்தம் விசுவநாதன் திமிராக சட்டமன்றத்தில் அறிவிக்கிறார்.

இதிலிருந்து தெரிவது என்னவெனில் இந்த அரசுக்கு டாஸ்மாக்கை மூட வக்கில்லை, ஆளத்தகுதி இழந்துவிட்டது. ஆகவே, மக்களே டாஸ்மாக்கை மூடுங்கள் என்கிறோம்.

டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என்று ஒரு அமைச்சர் வெட்கமில்லாமல் சொல்கிறார் கள்ளச்சாராயம் தடுக்கமுடியாத ஒன்று என சொல்வதற்கு எதற்கு முதல்வர்? எதற்கு அமைச்சர்? எதற்கு அரசு? என்று கேள்வியெழுப்பி ஆளத்தகுதி இழந்த இந்த அரசை தூக்கியெறிவோம் ! மக்கள் அதிகாரத்தை கட்டியமைப்போம்” என்று கூறினார்.

மழைவர ஆரம்பித்த போதும் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் கலையாமல் உறுதியான முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனர். பாரிமுனைப்பகுதியில் கொடுக்கப்பட்ட பிரசுரங்களை பொதுமக்கள் வாங்கிச் சென்று இப்போராட்டத்திற்கு சுற்றிலும் நின்று ஆதரவளித்தனர்.

– தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்
9176801656

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க