முகப்புஉலகம்ஈழம்ஈழப் போர்க்குற்ற விசாரணை: தோல்வியில் முடிந்த தமிழினவாதிகளின் உத்திகள்

ஈழப் போர்க்குற்ற விசாரணை: தோல்வியில் முடிந்த தமிழினவாதிகளின் உத்திகள்

-

மிழீழ விடுதலைக்கான புலிகளின் ஆயுதப் போரைப் போலவே, ஈழ இறுதிப் போரில் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பது, ஈழத்தின் திறந்தவெளியில் சிறைப்பட்டுக் கிடக்கும் அகதிகளை விடுவிப்பது, ஒரு பொதுவாக்கெடுப்பு மூலம் தமிழீழத்தைப் பெறுவது முதலானவற்றை அமெரிக்க வல்லரசின் தலைமையில் சர்வதேச சமூகத்தைக் கொண்டு சாதிப்பது என்ற இனவாதிகளின் உத்திகளும் சோகமான முடிவுகளை எட்டியிருக்கின்றன.

வவுனியா மாணிக்ஃபார்ம் முகாமில் தமிழ் அகதிகள்
வவுனியா மாணிக்ஃபார்ம் முகாமில் தமிழ் அகதிகள் (கோப்புப் படம் இணையத்திலிருந்து)

ஈழச் சிக்கலுக்குச் சர்வதேச சமூகம் மூலமான தீர்வுகளுக்குச் சாதகமாக அமெரிக்க வல்லரசின் நிலைப்பாடுகள் இருக்கும் என்று இனவாதிகள் கற்பிதம் கொண்டிருந்ததும் பொய்த்துப் போனது. சீனா – ராஜபக்சே கூட்டுக்கு எதிராக அரசியல் காய்களை நகர்த்தினால், சீன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தால், அமெரிக்க வல்லரசு மட்டுமல்ல, இந்திய வட்டார வல்லரசுகூட ஈழச் சிக்கலில் தமக்குத் துணை நிற்கும் என்று உலகின் மாபெரும் அரசியல் சிந்தனையாளர் என்று தாம் போற்றிய பிரபாகரனைப் போலவே இனவாதிகள் நம்பினர். அவர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்குப் பாராட்டும் அவரது தூதருக்கு நன்றியும் செலுத்தினார்கள். ஆனால், இனவாதிகளின் உத்திகள் எல்லாம் வெறுங்கனவாய்ப் போயின.

இனப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பது போன்ற அமெரிக்க நாடகங்கள் எல்லாம் தனது விசுவாசிகளான சிறீசேனா – ரணில் கும்பல் ஆட்சியைப் பிடிப்பது வரைதான் நீடித்திருந்தன. இப்போது ஈழத் தமிழினத்துக்கு எதிராக இலங்கையின் சிங்கள இனவெறி அரசே முன்மொழிந்தவாறு அமெரிக்க வல்லரசு கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா, சீனா உட்பட சர்வதேச சமூகம் முழுவதும் கைகோர்த்துக் கொண்டு, அக்டோபர் முதலன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளன.

முந்தைய தீர்மானங்களில் இடம் பெற்றிருந்த சர்வதேச நீதி விசாரணை கிடையாது; இனப் படுகொலைகள், போர்க் குற்றங்கள் போன்ற சொற்களும் நீக்கப்பட்டு, விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசு இரண்டினதும் மனித உரிமை மீறல்களை இலங்கையின் சட்ட முறைமைகளுக்குட்பட்டு, அந்நாட்டு நீதி அதிகாரிகளின் விசாரணையின் கீழ் நடத்தப்படும். அச்சமயம் இலங்கை அரசின், காமென்வெல்த் நாடுகள் போன்றவற்றின் நீதிபதிகள், சட்ட வழக்குரைஞர்கள் உடனிருப்பார்கள். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தீர்மானத்தின் அமலாக்கம் பரிசீலிக்கப்படும். இவை தவிர, ஈழத்தின் திறந்தவெளிச் சிறைகளில்/முகாம்களில் வதியும் அகதிகள் விடுதலை, இராணுவ வெளியேற்றம், பறிக்கப்பட்ட நிலங்கள் ஒப்படைப்பு மற்றும் அரசியல் உரிமைகள் ஆகியவை குறித்த பேச்சுக்கள் எதுவும் கிடையாது.

என்றாலும் அந்தத் தீர்மானத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு ஆளும் தமிழ்தேசக் கூட்டமைப்பின் பிரமுகர்கள் தனித்தனியான முறையில் கூறிவருகிறார்கள். ஆனால், அந்தத் தீர்மானத்தின் மீது வடக்கின் அதிகாரபூர்வ ஆட்சியாளர்களோ ஒப்புக்கு அதிருப்தியும் அவநம்பிக்கையும் தெரிவித்தாலும், மாற்றுத் தீர்வு எதையும் முன்வைக்கவில்லை.

அந்தத் தீர்மானத்தைத் தமிழகக் கட்சிகள் அனைத்தும் நிராகரித்து, அதற்கு எதிராக ஓட்டளிக்குமாறு இந்திய அரசைக் கோரி ஒருமனதாகச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றின. அதைக் கழிப்பறைக் காகித அளவுக்குக்கூட இந்திய அரசு மதிக்கவில்லை. கடனுக்குத் தீர்மானம் நிறைவேற்றியதோடு கண்டன அறிக்கை தவிர, வேறு எதையும் அக்கட்சிகள் செய்யவில்லை. தமிழக இனவாதக் குழுக்கள் சடங்குத்தனமான அடையாளப் போரட்டங்களுக்கு மேல் எதுவும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. ஈழத் தமிழினம் ஆளும் சிங்கள இனவெறிக்கு எதிராகத் தமது இனவுரிமைக் கோரிக்கைகளோடு, இலங்கையின் உழைக்கும் மக்களோடு வர்க்கரீதியில் இணைந்து நீண்டகால நோக்கில் ஜனநாயகத்துக்காகப் புரட்சி வழியில் போராடுவதுதான் ஈழச் சிக்கலுக்குத் தீர்வாகும்.
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

 1. சரி இனிமேல் என்ன செய்யலாம்?
  கொழுக்கட்டை வேகவேண்டும்….
  கட்டுமரம்+புரட்சிதலைவி,தமிழ் இனத்தை அவித்து சாப்பிட்ட இழிபிறவிகள்

  • தெருவாளர்கள் சாமான், பொய்கோ, சாதிதாசு, தெருமா, நொட்டமாறன் – ஈழத் தமிழ் இனத்தை பன்னீரில் குளிப்பாட்டப் போவதாகக் கூறிக் கொண்டு ஊரை ஏமாற்றி அவ்வினத்தை பொறித்து சாப்பிட்ட கிரிமினல்கள்.
   கண்முன் தெரியும் எதிரிக்கு சேவகம் செய்த கட்டுமரத்தயும், புர்ச்சித் தலைவலியையும் மாறி மாறி துதி பாடி நக்கிப் பிழைத்த இந்த ஓநாய்க் கூட்டம் எப்போது மக்களின் கோபவெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுகிறதோ அப்போது தான் தமிழகம் தப்பும்.

 2. இந்திய அரசின் தேவையை அமெரிக்க அரசின் தீர்மானம் நிரறவேற்றியது. இந்த அரசுகள் நடத்திய குற்றங்களுக்கு நீதி விசாரணை கோர பைத்தியமா?.இந்திய இந்துத்வ ஆரியம் சிங்கள பௌத்த ஆரியம் அமெரிக்க முதலாளித்துவ நாட்டாமையும் நடத்தும் கூட்டாட்சியில் நடக்கிறது காட்டுத் தர்பார்.

  ஈழத் தமிழன் இனி வருந்திப் பயனில்லை. இந்திய மக்கள் இனித் தமக்காக அழுகின்ற காலம் வருகிறது. 1990ல் திறந்த பொருளாதாரக் கொள்கையால் சாம்பாரில் போடும் பருப்பும் வெங்காயமும் தாகத்துக்கு தண்ணீரும் தேடி அலையும் காலம் இது. இன்னும் இருக்கு…

 3. சர்வ தேச சமுகம் ஈழ பிரச்சனையில் இருந்து விலகி சென்று இருக்கலாம். அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுடன் கைகோர்த்து வெற்று தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கலாம். ஆனாலும் தமிழ் ஈழத்துக்கான தேவைகள் இன்னும் சிறிது கூட குறையவில்லை. முதலில் இனப்போராட்டம் அதன் பின்பு தான் வர்க்க போராட்டம் என்று எல்லாம் இனவாதம் பேசுவோர் முடிவு செய்ய மாட்டார்கள் என்பதனை வர்க்க போராளிகள் உணரவேண்டும். அவர்களுக்கு தேவை தமிழ் ஈழத்துக்கான முயற்சிகள் மட்டுமே. வர்க்க போர் மட்டுமே இன விடுதலையையும் சாத்தியமாக்கும் என்பது உண்மை தான் என்றாலும் சென்னையில் இருந்து கொண்டு நாம் அவர்களை பார்த்து “”ஈழத் தமிழினம் ஆளும் சிங்கள இனவெறிக்கு எதிராகத் தமது இனவுரிமைக் கோரிக்கைகளோடு, இலங்கையின் உழைக்கும் மக்களோடு வர்க்கரீதியில் இணைந்து நீண்டகால நோக்கில் ஜனநாயகத்துக்காகப் புரட்சி வழியில் போராடுவதுதான் ஈழச் சிக்கலுக்குத் தீர்வாகும்.”” என்று அவர்களுக்கான கொள்கை முடிவை நாம் எடுப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும். ?

  அவர்கள் அவர்களின் அரசியல் தலைவிதியை விதியை அவர்களே தீர்மானிக்கட்டும். வழி காட்ட நாம் ஒன்றும் வர்க்க போரில் வெற்றி பெற்றவர்கள் அல்லவே!.

 4. மனோ இன்னமும், இந்தியா, பாரதமாதா என்று கண்ணில் நீர் வற்றும் அளவுக்கு
  கதறி அழும் தெண்டங்களை என்ன செய்வது?

 5. //தோல்வியில் முடிந்த தமிழினவாதிகளின் உத்திகள்// கம்யூனிச சீனா ரஷ்யா மற்றும் கியூபா போன்ற நாடுகள் இனப்போராட்டத்தின் போது எடுத்த நிலைகளை கண்னை மூடிக்கொண்டு கடந்து போனது எவ்வாறு? அமெரிக்காவாவது தொடரந்து இந்த சிக்கலை சர்வதேச அளவில் கொண்டு செல்ல தீர்மானம் வழி உதவியது ஆனால் கம்யூனிசவாதிகளின் செயல் இனஅழிப்பின் ஈடுபட்டவர்களுக்கே உதவிய செயல் மன்னிக்க கூடியதும் அல்ல மற்க்ககூடியதும் அல்ல. கம்யூனியமும் ஆதாயத்தை அடிப்படையாக கொண்டதே அது பணமாக வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். அமெரிக்காவின் மறுபக்கம் கம்யூனிசம். இது ஈழம் தொடர்பில் மட்டுமே குறிபிபடபடும் கருத்தாகும்.

  • குறிப்பாக 58 ஆவது நிமிடத்தில் இருந்து அவரின் நேர்காணலை கேளுங்கள் .உங்கள் கம்யுனிச எதிர்ப்புக்கு பதில் கிடைக்கும்

 6. //சந்தானம்
  March 14, 2013 at 9:58 am
  Permalink 5
  இலங்கை விவகாரத்தினையொட்டி அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் மீது கியூபா, வெனிசூலா ஆகிய நாடுகள் எடுக்கும் நிலைப்பாட்டின் நியாயம் புரிந்துகொள்ளமுடிகிறது. சரி, ஏன் கியூபாவும், வெனிசுலாவுமே ஒரு சரியான, நியாயமான தீர்மானத்தை கொண்டுவரக்கூடாதா?

  Reply
  rachinn
  March 15, 2013 at 11:05 am
  Permalink 5.1
  nalla kelvi!// ஏற்கனவே கட்டுரை குறித்து எழுப்பட்டுள்ள கேள்வி. கட்டுரையில் பதில் இல்லை என்பதற்றகு சான்று.

 7. ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? என்பது தான் தலைப்பு ஆனால் அதே பேட்டியில் திரு மருதையன் தெளிவாக 58 வது நிமிடத்திற்கு முன்னதாக கூறுவது ” .. இதற்கு குறைவான காரிய சாத்தியம் என்ற பெயரில் வேறு கோரிக்கைகள் நியாயத்தை நோக்கியதாக இருக்காது” என்று ஆனால் சிறிய இலங்கையையே படிய வைக்க முடியாத நிலையை தான் கட்டுரை தலைப்பே வெளிக்காட்டுகிறது. 58 நிமிடத்தில் இருந்து அவர் கூறம் காரணம் எதுவும் பொருத்தமானதாக இல்லை. அமெரிக்கா பிடிக்கைவில்லை என்றால் அதை விட சிறந்த தீர்மானத்தை இந்நாடுகள் கொண்டுவரவில்லை மாறாக கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய ஒரு தீர்மானத்தை எதிர்பதை அந்நாடுகளில் எந்தவித அறிவிப்பும் இன்றி நியாப்படுததுகிறார். மாறாக அவர்களது நிலையை கண்டிக்க வில்லை. சீானா கியூபா போன்ற நாடுகளில் நிலை நியாயமானது என்பது தனக்கு வந்தால் இரத்தம் அடுத்தவனுக்கு என்றால் தக்காளி சட்னி என்பதாகத்தான் உள்ளது. கம்யூனிசம் ஒரு வகை முதலாளித்துவம் தான் அங்கும் ஆதாயம் இருந்தால் தான் காரியம். எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு. அமெரிக்காவை எதிர்க்க அதை விட வலுவான தீர்மானத்தை இவர்கள் தரவேண்டியதுதானே இதை ஏன் இங்குள்ள கம்யூனிஸ்டுகள் அந்த நாடுகளுக்கு எதிராக தூதரங்கள் முன் போராடிவில்லை.

  • முதலில் சீனா மற்றும் இந்தியா பற்றி :

   முதலில் சீனா ஒன்றும் கம்யுனிச நாடு இல்லை என்பதையாவது புரிந்துகொள்ளுங்கள். அங்கு அரசே தரகு முதலாளியாக செய்ல்பட்டுக்கொண்டு அந்நிய முதலீடுகளை அனுமதித்துக்கொண்டு உள்ளது. மேலும் அது ஆசிய பிராந்தியத்தில் தன் அரசியல் , ராணுவ ஆளுமையை இந்தியாவிற்கு எதிராக நிலை நாட்ட பனிப்போரை நடத்திக்கொண்டு உள்ளது. அத்தகைய போக்கிற்கு சாதகமான செயலாக தான் இலங்கை அரசுக்கு தேவையான உள்கட்டுமானங்களை(துறைமுகம், தொழில்சாலை….) அமைத்து கொடுக்கும் போட்டியில் இந்தியாவுடன் இறங்கியுள்ளது. இந்தியாவும் அதன் முதலாளித்துவ வர்க்கமும் அது போன்றே தனியார் வர்த்தக நிறுவனங்களை இலங்கையில் அமைத்துக்கொண்டு உள்ளது. இந்தியாவும் சரி , சீனாவும் சரி அவற்றின் வர்த்தக நலன்களை முன்னிட்டு இலங்கைக்கு எதிராக எந்தவிதமான தீர்மானங்களையும் ஐநா சபையில் கொண்டுவராது. ஒரு வேலை ஏதாவது தீர்மானங்களை கொண்டுவருவார்கள் என்றால் அது இன்றைய உப்பு சப்பு இல்லாத வெற்று தீர்மானங்களை போன்றே பயன் அற்றதாக தான் இருக்கும். இன்றைய அமெரிக்க தீர்மானம் உப்பு சப்பு இல்லாத வெற்று தீர்மானமாக இருப்பதால் தானே அதனை இலங்கையில் தன் பொருளாதார, அரசியல், வர்த்தக நலன்களை பேணிக்காக வேண்டி இந்தியாவும் , சீனாவும் ஆதரிக்கின்றன. இந்த கருத்தில் உங்க்களுக்கு எதேனும் வேறுபாடு உள்ளதா ant ?

   அடுத்து கம்யுனிச நாடுகளை பற்றி :

   கம்யுனிஸ்டுகள் இன்று உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் ஒரு…. ஒரேஒரு நாடு கியூபா மட்டும் தான். அதுவும் பூகோலா அமைப்பில் அமெரிக்கவிற்கு கீழ் உள்ள அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டு உள்ள தென் அமெரிக்க நாடு தான் இந்த கீயுபா. அவர்கள் தனித்து விடப்பட்டவர்கள். அவர்கள் தேசத்தின் நலன்களை, அவர்களின் தொழிலாளர் வர்க்க ஆட்சியை அவர்கள் பாதுகாத்துகொள்ளவே அவர்கள் உலக அளவில் உள்ள நாடுகளுடன் விட்டுக்கொடுத்து தங்களின் வெளியுறவு கொள்கையை வகுத்துக்கொண்டு உள்ளார்கள். உலகில் சோசியலிச ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிக பச்சம் 1 கோடி கீயூபா மக்கள் மீதி முதலாளித்துவ அதிகாரத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் எப்படி மோத முடியும்.

   மேலும் இன உரிமைகள் , ஒரு இனத்துக்கான் நாடு போன்ற கொள்கைகள் ஆகியவை 99.99% முதலாளித்துவ நாடுகள் மட்டுமே ஆளுமையில் உள்ள ஐநா சபையில் ஏற்றுகொள்ளபட்ட அம்சம். அப்படி இருக்கும் போது 99.99% உள்ள முதாளித்துவ நாடுகள் தானே ஈழ தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஐநா சபையில் மீட்டு எடுத்து அவர்களுக்கு தனி நாடு அமைத்து தரவேண்டும். அதனை பற்றி எந்த கேள்வியையும் எழுப்பாமல் 0.01% உள்ள சோசியலிச நாடான கீயூபாவை பார்த்து நீங்கள் கை நீட்டி கேள்வி கேட்பதில் ஏதாவது பொருள் உள்ளதா ant ?

   [அமெரிக்க பொருளாதார தடையை எதிர்கொண்ட கீயுபாவுக்கு இந்திய மார்சிய கம்யுனிஸ்டுகள் இந்திய மக்களிடம் இருந்து அரிசியை தானமாக பெற்று அனுப்பிவைத்த பின்னியில் அவர்களின் உலக ஆளுமையை பற்றி யோசித்து பாருங்கள் ]

  • அரசியல் சூழ்நிலை இப்படி இருக்கும் போது தமிழ் ஈழத்துக்கு ஆதரவான தீர்மானங்களை ஐநா சபையில் கொண்டு வர வேண்டிய கடமை 99.99% உள்ள முதாலாளித்துவ நாடுகளையே சார்ந்தது ஆகும். அத்தகைய முதலாளித்துவ நாடுகளில் வாழும் மக்கள் தான் தன் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடி தங்களின் அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து சுதந்திர தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக தீர்மானங்களை ஐநா சபையில் கொண்டுவர முயலவேண்டும். மக்கள் தான் தங்கள் போராட்டங்கள மூலமாக தமது முதலாளித்துவ அரசுகளை அடி பணியவைக்க வேண்டும் . அதை எல்லாம் விட்டுவிட்டு 0.01% சோசியலிச நாடான கீயுபாவுகுக்கு எதிராக நாம் எதற்காக போராடவேண்டும்? ஒருவேளை உலகில் பொரும்பான்மை அரசுகள் கம்யுனிச அரசுகளாக இருப்பின் நீங்கள் கூறுவது சரியாக இருக்கும்.

   • திருத்தம் :

    அரசியல் சூழ்நிலை > உலக அரசியல் சூழ்நிலை

    0.01% சோசியலிச ?> உலகில் 0.01% அளவில் மட்டுமே உள்ள சோசியலிச…..

 8. //அவர்கள் தேசத்தின் நலன்களை, அவர்களின் தொழிலாளர் வர்க்க ஆட்சியை அவர்கள் பாதுகாத்துகொள்ளவே அவர்கள் உலக அளவில் உள்ள நாடுகளுடன் விட்டுக்கொடுத்து தங்களின் வெளியுறவு கொள்கையை வகுத்துக்கொண்டு உள்ளார்கள்.// கம்யூனிஸ்டுகள் செத்தால் மட்டுமே அவர்கள் காதுகள் செயல்படும்!! அவர்கள் நோக்கம் அதிகார பசி என்பதால் அதை தக்க வைத்துக் கொள்ள பேரம் பேசும் வியாபாரிகள் தான். ஒரு மானிட இனமே அழிக்கப்படும் போது அமெரிக்கா கொண்டு வந்த ஒரு நீரத்து போன தீர்மானத்தை கூட எதிர்த்தவர்கள் மனித தன்மையாற்றவர்கள். அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுவது என்றால் ஒரு வலுவான தீர்மானத்தை முன் மொழியலாமே! ஏன் எதிர்து வாக்களிக்க வேண்டும் அதை கம்யூனிஸ்டுகள் எதிர்காததன் காராணம் என்ன? கொள்கை பாசமா? 6,00,00,000 தமிழர்கள் இருந்தும் உலக மக்கள் தொகையில் 1% சிங்களர்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமாயின் … கம்யூனிசம் பலம் இழந்ததா?
  //முதலில் சீனா ஒன்றும் கம்யுனிச நாடு இல்லை // இது இஸ்லாமிர்களின் வாதம் முறை எப்பபோது வன்முறைக்கு மார்க்கத்தில் பதில் இல்லையே அப்போது வன்முறையாளர் இஸ்லாமியரல்ல என்றும் இஸ்லாத்தில் வன்முறை கிடையாது என்று வாதிடுவதும் தொன்றுதொட்டு பின்பற்றப்படுவது அவர்களுடன் வாதம் செய்து அந்த தாக்கம் கம்யூனிஸ்டுகளுக்கும் வந்துவிட்டது. இங்கு “இஸ்லாம்“ என்பதற்கு பதில் கம்யூனிசம் என்று இருந்தால் அதுவே பொறுத்தமானதாகும்.
  //[அமெரிக்க பொருளாதார தடையை எதிர்கொண்ட கீயுபாவுக்கு இந்திய மார்சிய கம்யுனிஸ்டுகள் இந்திய மக்களிடம் இருந்து அரிசியை தானமாக பெற்று அனுப்பிவைத்த பின்னியில் அவர்களின் உலக ஆளுமையை பற்றி யோசித்து பாருங்கள் ]// ”இந்திய மக்களிடம் இருந்து” இதில் தமிழர்களும் அடங்கும் அவர்களுக்கு கம்யூனிஸ நாடு செய்யத நன்றி கடனை நினைத்தால் தாங்கள் தான் குற்றவாளி! யாருக்கு உதவி தேவை என்பதை அறிந்து உதவியிருக்க வேண்டும்.

  • இன்னமோ ஈழ படுகொலைக்கு காரணம் கம்யுனிஸ்டுகள் தான் ,சுதந்திர தமிழ் ஈழம் கிடைக்காமைக்கு காரணம் கம்யுனிஸ்டுகள் தான் என்ற மன பிழர்வுடன் , வெறியுடன் பதில் அளித்து உள்ளீர்கள் ant . விவாதம் என்றால் தரவுகள் வேண்டும் …, லாஜிக் வேண்டும்.., கருத்து பரிமாற்றம் வேண்டும். எதுவுமே உங்கள் விவாதத்தில் இல்லை. சரி முதலில் இதற்கு பதில் அளியுங்கள்.

   1. திரு மருதையன் அவர்களீன் பேட்டியில் 58 ஆவது நிமிடத்தில் இருந்து உங்கள் கேள்விகளுக்கான விடை இருக்கிறது என்று கூறினேன். அதனை அந்த ஆடியோவை கேட்ட நீங்கள் அவர் பேட்டியில் கூறிய காரணங்கள் எதுவும் பொருத்தமானதாக இல்லை என்று கூறினிர்கள். எப்படி பொருத்தமாக இல்லை என்று விளக்கவேண்டியது அவரின் கருத்தை ஏற்காத உங்களின் கடமை தானே தவிர என்னுடைய கடமை அதுவல்ல. சரி இப்போதாவது கூறுங்கள் ஏன் திரு மருதையன் அவர்களீன் கருத்து ஏற்பு உடையதாக இல்லை என்று? அந்த அடிப்படையில் அவரின் கருத்தை மறுதளிக்கின்றிர்கள்.

   2. இன்று அமேரிக்கா கொண்டு வந்து உள்ள இலங்கை தொடர்பான நீர்த்து போன தீர்மானத்தை உலக நாடுகள் முழுவதுமே ஏற்றுக்கொண்டு உள்ள நிலையில் அதனை யார் எதிர்கிறார்கள் என்று கூற வேண்டியதும் உங்கள் கடமையாகிறது. உங்களை பொறுத்த வரையில் சீனா இன்றும் கம்யுனிச நாடு தான் என்றால் அது இன்றைய தீர்மானத்தை எதிர்த்ததா என்று பதில் கூற வேண்டியதும் உங்களின் கடமையாகின்றது.

   3.உலகில் உள்ள 99.99% முதலாளித்துவ நாடுகளின் பாராளுமன்றமாகிய ஐநா-வில் இந்த முதலளித்துவ நாடுகள் ஏன் இலங்கையில் நடைபெற்ற மனித படுகொலைக்கு எதிராக அவர்கள் அனைவரும் ஒருமித்து இலங்கை அரசை தண்டிக்கும் வகையில் தீர்மானத்தை கொண்டு வரவில்லை என்பதை கம்யுனிச எதிர்ப்பு புலியாகிய நிங்கள் தான் பதிலை கூறவேண்டும். எண்ணிக்கையில் 99.99 % முதலாளித்துவ நாடுகள் கொண்டுவரும் தீர்மானம் ஐநா சபையில் நிறைவேறுமா ? அல்லது 0.01% கியூபா கம்யுனிஸ்டுகள் கொண்டுவரும் தீர்மானம் ஐநா சபையில் நிறைவேறுமா ? என்று நீங்கள் தான் பதிலை அளிக்க வேண்டும்.

   4. சீனாவை கம்யுனிச நாடாக தாங்கள் அங்கிகாரம் கொடுத்ததை நினைத்தால் உங்களின் அரசியல் அறிவின் மீது தான் சந்தேகம் ஏற்படுகிறது. அவர்களின் அரசியல் சாசனத்தில் கம்யுனிசம் என்ற சொல் இருபதால் மட்டுமே அவர்களின் நாடு இன்றும் கம்யுனிச நாடாகாது. இந்திய அரசியல் சாசனத்தில் சோசியலிசம் என்ற சொல் இருபதால் அதானிக்கு காவடி எடுக்கும் மோடி பிரதமராக உள்ள இந்தியா என்ன சோசியலிச நாடா? இந்திய அரசியல் சாசனத்தில் மதசார்பின்மை என்ற சொல் இருபதால் இந்தியா அரசும் ஆளும் வர்க்கமும் மத சார்பற்றதாகவா இருக்கிறது. ?

   5. அதிகார பசி , பேரம் பேசும் வியாபாரிகள் இந்த உங்களின் சொற்தொடர்கள் எல்லாம் அதானிக்கு காவடி எடுக்கும் மோடிக்கு பொருந்துமே தவிர கியுபா கம்யுனிஸ்டுகளுக்கு பொருந்தாது. தன்னையும் தன் மக்களையும் காத்துக்கொள்வது தான் ஒரு அரசின் கடமை என்றால் அத்தகைய கடமையை செய்யும் அரசாக தான் கியூபாவின் அரசு உள்ளது. காரணம் அது தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதியாக உள்ள அரசு.

   6. கியுபாவின் மக்களுக்கு தமிழ் மக்கள் அரசி கொடுத்ததையே வெறிகொண்டு தாக்கி பேசும் நீங்கள் அந்த கியுபா மக்கள் உலகம் முழுவதும் ஆற்றும் இலவச மருத்துவ சேவைகளை பற்றி அறிந்தது உண்டா?

   7.ஆமாம் ant.., கட்டுரை தலைப்பை மட்டுமே படித்துவிட்டு பின்னுடம் இடும் பழக்கத்தை மாற்றிகொண்டிர்களா இல்லையா?

  • அமெரிக்காவின் இன்றைய தீர்மானமும் சில சந்தேகங்களும் :

   1. அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் ஐநாவின் மனித உரிமை கவுன்சிலில் தற்போது கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில்…… “ஐநா சபையின் கீழ் மனித உரிமைகளுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற படுகொலைகள் விசாரிக்கப்படவேண்டும் என்ற முந்தைய தீர்மானம்” திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இதற்கான காரணத்தை சோசிலிச ஒற்றை நாடான கியூபா வின் மீது வன்மத்துடன் கடித்து குதறுபவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

   //Recalling also Human Rights Council resolutions 19/2 of 22 March 2012, 22/1 of 21 March 2013, and 25/1 of 27 March 2014 on promoting reconciliation and accountability in Sri Lanka,//

   2. அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் ஐநாவின் மனித உரிமை கவுன்சிலில் தற்போது கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில்…… முந்தைய தீர்மானங்களை திரும்பப்பெருகின்றார்கள் என்றால் அதற்கான காரணங்கள் என்ன?அரசியல், பொருளாதார வர்த்தக விடயங்களில் இன்றைய இலங்கை அரசு அமெரிக்காவுக்கும் அதன் தெற்காசிய எடுபிடி பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கும் அடிபணிந்து விட்டது என்பதை தவிர வேறு என்ன என்ன துணைக்காரணங்கள் இருக்க முடியும்? என்பதனையும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
   (i) அமேரிக்கா இன்று கொண்டு வந்து உள்ள தீர்மானத்தை முழுமையாக படித்து பார்க்கும் போது நமக்கு குறிப்பாக ஈழ தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது.
   (II) இன்றைய அமெரிக்க தீர்மானம் “Reaffirming its commitment to the sovereignty, independence, unity and territorial integrity of Sri Lanka” என்று கூறுவதன் மூலம் ஈழ தமிழ் மக்களின் சுய நிர்ணய அரசியல் உரிமையை மறுதளிகிறது . இலங்கையில் நிகழ்ந்துள்ள இன படுகொலைக்கு பின்பும் தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் தான் ஒரே நாட்டில் வாழ வேண்டும் என்று ஈழ தமிழ் மக்களை நிர்பந்தம் செய்கிறது.

   இப்படி ஐநா சபையில் அமெரிக்கா முன்பு கொண்டு வந்து உள்ள தீர்மானத்தையே அதுவே இன்று திருப்ப பெற்றுகொண்டு உள்ள நிலையில் இந்த மாற்றங்களுக்கு காரணமாக இருப்பது அமெரிக்காவின் பொருளாதார நலன்கள் தான்.

 9. //இன்னமோ ஈழ படுகொலைக்கு காரணம் கம்யுனிஸ்டுகள் தான் ,சுதந்திர தமிழ் ஈழம் கிடைக்காமைக்கு காரணம் கம்யுனிஸ்டுகள் தான் என்ற மன பிழர்வுடன் , வெறியுடன் பதில் அளித்து உள்ளீர்கள்// எனது பின்னூட்டதில் அவ்வாறு ஒரு போதும் கூறவில்லை. மன பிறழ்வுடன் தாங்கள் வாசித்தருந்தால் ஒருவேளை அப்படி தோன்றியிருக்லாம்.

  //விவாதம் என்றால் தரவுகள் வேண்டும் …, லாஜிக் வேண்டும்.., கருத்து பரிமாற்றம் வேண்டும். எதுவுமே உங்கள் விவாதத்தில் இல்லை.// தர்க்க அறிவுடன் எனது பின்னூட்டங்களை அனுகியிருந்தால் மேற்கண்ட தவறான முடிவுக்கு வந்திருக்க இயலாது. உரிற தரவுகள் வழங்கப்படடுள்ளது மறுப்பு தெரிவிக்கும் பகுதிகள் தனியாக எடுத்தாளப்பட்டு அவற்றுக்கு பதிளலிக்கப்பட்டுள்ளது. தங்கள் அவற்றை வாசித்து பார்த்தால் தான் மேற்கண்டவை உள்ளன எனதெரியும். தங்கள் கருத்து அவற்கை அறிந்ததாக தெரியவில்லை.

  // வெறியுடன் பதில் அளித்து உள்ளீர்கள்// எனது பதிலில் எந்த பகுதி வெறியுடன் உள்ளது என்று குறிப்பிட்டால் மட்டுமே அதற்கு பதிலளிக்க முடியும்.

  //1. திரு மருதையன் அவர்களீன் … அவர்களீன் கருத்து ஏற்பு உடையதாக இல்லை என்று? அந்த அடிப்படையில் அவரின் கருத்தை மறுதளிக்கின்றிர்கள்.// அவரது கருத்தைத்தான் அதில் கூறுகிறார் அந்நாடுகளின் நிலைபாடுகளை அவை தெளிவுபடுத்தவில்லை. மாறாக அவர்கள் எதிர்த்து வாக்களித்ததை நியாயப்படுத்தவே செய்கிறார். ஒவ்வொருநாடும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு நிலைபாட்டை கடைபிடிக்கின்றனர். கம்யூனிஸ்டுகள் எதிர்பதற்க்கு உள்ள காரணம் அவர்களுக்கு நியாயமாக இருப்பதை போலவே மற்ற நாடுகளும் தங்கள் தரப்பில் உள்ள நியாயமான கராணங்களுக்காக முடிவுகள் செய்கிறார்கள். முதலாளித்துவ நாடுகள் எடுக்கும் முடிவை மட்டுமே விமர்சிப்பது சரியல்ல.

  //2. இன்று அமேரிக்கா கொண்டு வந்து உள்ள இலங்கை தொடர்பான நீர்த்து போன தீர்மானத்தை … உங்களின் கடமையாகின்றது.// அமெரிக்க தீர்மானம் வரைவு வெளியானயுடனேயே கம்யூனிச நாடுகள் தங்கள் இலங்கை ஆதரவு நிலைபாட்டை தெளிவுபடுத்திவிட்டன. முதலாவது, அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்த நாடுகளில் பட்டியல் இங்கு காணலாம்.
  http://www.tamilwin.com/mshow-RUmsyDRbLWjt1.html

  //இலங்கைக்கு ஆதரவாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்கு எதிராகவும் 22 நாடுகள் ஒப்பமிட்டு கூட்டறிக்கையொன்றை வெளியிட்டது … அந்த அறிக்கையில் ஒப்பமிட்ட 22 நாடுகளில், 8 நாடுகள் மட்டுமே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய உறுப்பு நாடுகளாகும். சீனா, ரஸ்யா, பாகிஷ்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, மாலைதீவு, கியூபா ஆகிய நாடுகளே அவை. இவற்றில் பிலிப்பைன்ஸ் தவிர்ந்த மற்றெல்லா நாடுகளுமே, கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவை. //
  http://www.tamilmirror.lk/131434

  சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசே ஆதரித்துள்ளதால் எதிர்த்து வாக்களித்தல் என்ற பதம் தேவையற்றது. இது முழுவதும் இலங்கைக்கு ஆதரவான தீர்மானமாக இறுதியில் மறியிருந்தது. முதலாளித்துவ நாடுகள் கம்யூனிச நாடுகளுடன இணைந்து விட்டனர் மனித உரிமைய குழியல் புதைக்க.

  //3.உலகில் உள்ள 99.99% முதலாளித்துவ நாடுகளின் பாராளுமன்றமாகிய ஐநா-வில் .. என்று நீங்கள் தான் பதிலை அளிக்க வேண்டும்.// இலங்கைக்கு ஆதரவன கம்யூனிஸ நாடுகளின் நிலையை அணைத்து முதலாளித்துவ நாடுகளும், ஏன் இலங்கையே, ஏற்றுக் கொண்டுவிட்தை மேற்கண்ட நிகழ்வு உறுதிபடுத்தவில்ல்லையா?

  உலக மக்கள தொகையில் 1% உள்ள சிங்களர்கள் தமிழர்களை படுகொலை செய்ய முடியும் என்றால் எவ்வாறு. கம்யூனிஸடுகள் செத்தால் தான் கம்யூனிஸ்ட் நாடுகள் ஆதரவாளிக்குமா?

 10. //இலங்கை அரசை தண்டிக்கும் வகையில் தீர்மானத்தை கொண்டு வரவில்லை என்பதை கம்யுனிச எதிர்ப்பு புலியாகிய நிங்கள் தான் பதிலை கூறவேண்டும்//

  ஏற்கனவே கொண்டுவந்த அரைகுறை தீர்மானத்தை கூட எதிர்த்தவர் அவர்களுக்கு ஆதரவான தீர்மானம் என்றதும் ஆதரித்தவர்கள் இங்கு யார் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக உள்ளனர். கம்யூனசத்தை நான் எதிரப்பதாக கூறியது தவறானதாகும் எங்கும் அவ்வாறு குறிப்பிடவில்லை. கம்யூனிஸ்டுகளின் கம்யூனிச நாடுகளில் சந்தர்ப்பவாத நிலைபாடுகளைதான விமர்சனம் செய்துள்னேன். //கம்யூனியமும் ஆதாயத்தை அடிப்படையாக கொண்டதே அது பணமாக வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். அமெரிக்காவின் மறுபக்கம் கம்யூனிசம். இது ஈழம் தொடர்பில் மட்டுமே குறிபிபடபடும் கருத்தாகும்// என தெளிவுபda கூறியுள்ளேன். விவாதத்தில் கருத்துகளை உள்வாங்கினால் மட்டுமே கேள்விகள் தர்க முறையில் சரியாக இருக்கும்.

  //4. சீனாவை கம்யுனிச நாடாக தாங்கள் அங்கிகாரம் கொடுத்ததை நினைத்தால் உங்களின் அரசியல் அறிவின் மீது தான் சந்தேகம் ஏற்படுகிறது. … மோடி பிரதமராக உள்ள இந்தியா என்ன சோசியலிச நாடா? இந்திய அரசியல் சாசனத்தில் மதசார்பின்மை என்ற சொல் இருபதால் இந்தியா அரசும் ஆளும் வர்க்கமும் மத சார்பற்றதாகவா இருக்கிறது. ?//

  ஒரு நாடு கம்யூனிச நாட இல்லையா எனபதை தீர்மானிக்கும் அதிகாரம் தங்களுக்கு மட்டுமே உள்ளது என நிகை்கிறீர்கள். மோடி பிரதமராகி ஒராண்டே ஆகிறது அதனால் இந்தியாவை சோசியலிச நாடா என்று கேட்கும் உங்க அரசியல் அறிவின் மீதுதான் சந்தேகம் எழுகிறது.

  //5. அதிகார பசி , பேரம் பேசும் வியாபாரிகள் இந்த உங்களின் சொற்தொடர்கள் எல்லாம் அதானிக்கு காவடி எடுக்கும் மோடிக்கு பொருந்துமே தவிர கியுபா கம்யுனிஸ்டுகளுக்கு பொருந்தாது. // உங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக் என்றால் அது தக்காளி சட்னி.

  //தன்னையும் தன் மக்களையும் காத்துக்கொள்வது தான் ஒரு அரசின் கடமை என்றால் அத்தகைய கடமையை செய்யும் அரசாக தான் கியூபாவின் அரசு உள்ளது.// கியூபா அரசுக்கு உள்ள கடமையை அது செய்வது போல் தான் மற்ற அரசுகளும் அவர்கள் கடமைகளை செய்கின்றனர் அவர்கள் கம்யூனிஸ் அல்லர் கம்யூனிச நாடு இல்லை என்பாதால் கடமையாதா?

  // காரணம் அது தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதியாக உள்ள அரசு// தொழிலாளர் வர்கத்தின் பிரநிதிதயாக உள்ள அரசு அந்த அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள மனிததன்மையற்ற செயலுக்கு துணைபோகலாமா. ! ?

  //6. கியுபாவின் மக்களுக்கு தமிழ் மக்கள் அரசி கொடுத்ததையே வெறிகொண்டு தாக்கி பேசும் நீங்கள் அந்த கியுபா மக்கள் உலகம் முழுவதும் ஆற்றும் இலவச மருத்துவ சேவைகளை பற்றி அறிந்தது உண்டா?//

  நான் வெறிகொண்டு பேசவில்லை. நான் முன்வைத்துள்ள கேள்விக்கு தங்களிடம் பதில் இல்லாத காரணத்தால் அல்லது குற்ற உணர்சியால் வெறியாக தெரிகிறது. குற்ற உணர்வு நீங்கும் போது இத்தகைய தோற்றம் ஏற்றபடாது? தாக்குதலுக்கு ஆதரவளித்துவிட்டு மருத்துவ சேவை மனித தன்மையுடyaதல்ல.

  //7.ஆமாம் ant.., கட்டுரை தலைப்பை மட்டுமே படித்துவிட்டு பின்னுடம் இடும் பழக்கத்தை மாற்றிகொண்டிர்களா இல்லையா?//
  திரு மருதையன் கருத்தோடு தலைப்பு முரண்பட்டுள்ளது என்பதே கருத்தாகும். கட்டுரைமட்டுமல்ல தலைப்பையும் சேரத்தே வாசித்தறிகிறேன்.
  தர்க்க முறையில் பதிலும் உரிய ஆதரங்களும் எவற்றுக்கு பதலளிக்கபடுகிறது என்ற விவரம் ஸ்லஷ் அடைப்புகளுக்குள்யும் வழங்கியுள்ளேன். நீங்கள் கொடுத்த இணைப்பு வீடியோவில் எனது கேள்விகளுக்கு பதில் இல்லை என்பற்கு ஆதரமான இரு வாசர்கள் பின்னூட்டத்தையும் இணைத்துள்ளேன் அவர்களது அரசியல் அறிவே இதற்கு சட்சியுமாகும்.

 11. Ant,

  உங்களுடைய வாதங்கள் என் வாதத்தால் முறியடிக்க பட்டு இருப்பினும் மீண்டும் மீண்டும் உங்களின் பழைய வாதத்தையே முன் வைக்கின்றிர்கள். விவாதத்தில் எந்த விதமான முன்னேற்றமும் இன்றி அரைத்த மாவையே அரைக்கும் மொக்கை செயலில் ஈடு பட்டுக்கொண்டு உள்ளீர்கள். புதியதாக ஏதாவது இரண்டொரு கருத்துகள் உங்கள் பின்னுட்டத்தில் இருக்கிறதா என்று பார்த்து அவற்றுக்கு மட்டும் பதில் அளிக்க முயலுகிறேன்.

  [1]உலகின் மிகப்பெரிய அடாவடி ,போலிஸ்கார நாடான அமெரிக்காவின் தீர்மானத்தை சோசியலிச நாடான கீயூபா ஆதரிக்க வேண்டும் என்பதே கயவாளித்தனம் இன்றி வேறு என்னவாக இருக்கும் ? ராஜபச்சே ஆட்சி காலத்தில் அவனுக்கு ஆயுதங்களை கொடுத்து அவனை விடுதலை புலிகளை அழிக்கின்றோம் என்ற பெயரில் இன படுகொலையை நடத்த ஊக்குவித்த நாடுகளில் முதன்மையானது அமெரிக்காவும் ,இந்தியாவும், சீனாவும் தானே? அப்படி இருக்க ராஜபச்சே என்ற இன படுகொலையாளனை ஆய்தம் கொடுத்து ஊக்குவித்தவர்களும் குற்றவாளிகள் என்னும் போது இவர்கள் கொலைகார இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமை தீர்மானங்களை கொண்டு வருகின்றார்கள் எனில் அப்படி செய்ய அவர்களுக்கு என்ன தார்மிக உரிமை உள்ளது.? //ஏற்கனவே கொண்டுவந்த அரைகுறை தீர்மானத்தை கூட எதிர்த்தவர்….

  [2]நான் சுட்டிகாட்டிய காட்டிய அரசியல் சாசனத்தையும் அவற்றின் கூறுகளையும் ஆனால் எதார்த்தத்தில் அவற்றுக்கு எதிராக நாடுகள் நடந்து கொள்ளும் போக்கையும் அடிப்படையில் வைத்துதான் சீனா கம்யுனிச நாடு அல்ல , இந்தியா சோசியலிச மத் சார்பற்ற நாடு அல்ல என்ற முடிவுக்கு வந்தேன் என்பதனை உங்களால் புரிந்து கொள்ள முடியாமைக்காக நான் வருந்துகின்றேன். //ஒரு நாடு கம்யூனிச நாட இல்லையா எனபதை தீர்மானிக்கும் அதிகாரம் தங்களுக்கு மட்டுமே

  [3] இலங்கைக்கு இராணுவ தளவாடங்களை அனுப்பி அந்த நாட்டின் இன சிறுபான்மை மக்களான தமிழ் மொழி பேசுவோரை அழிக்கச்சொல்வது தான் நீங்கள் சுட்டிகாட்டும் முதலாளித்துவ நாடுகளின் கடமையா?
  அமெரிக்காவும் ,இந்தியாவும், சீனாவும் இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பி வைத்ததன் மூலம் எவ்விதத்தில் அவர்கள் தங்கள் மக்களுக்கான கடமையை ஆற்றியுள்ளார்கள் என்பதனை நீங்கள் தான் விளக்கவேண்டும். நேரடியாகவே கேட்கிறேன் : ஈழ தமிழ் மக்களை கொல்ல ஆயுதங்கள் கொடுத்து உதவும் இவர்களை ஆதரிப்பது தான் நீலிக்கன்னிர் வடித்துகொண்டே பேசும் உங்களின் கடமையா?
  //கியூபா அரசுக்கு உள்ள கடமையை அது செய்வது போல் தான் மற்ற அரசுகளும் அவர்கள் கடமைகளை செய்கின்றனர் அவர்கள் கம்யூனிஸ் அல்லர் கம்யூனிச நாடு இல்லை என்பாதால் கடமையாதா?//

  [4] மனிதாபி மானம் அற்று இன சிறுபான்மை மக்களான தமிழ் மொழி பேசுவோரை அழிக்க ஆயுதம் கொடுத்த கொடுத்த நாதரிகளை ஆம் அமெரிக்கா ,இந்தியா, சீனா நாடுகளை பார்த்து தானே நீங்கள் இந்த கேள்வியை இருக்கவேண்டும்?
  //தொழிலாளர் வர்கத்தின் பிரநிதிதயாக உள்ள அரசு அந்த அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள மனிததன்மையற்ற செயலுக்கு துணைபோகலாமா. ! ?

  தொடரும் …

 12. /உங்களுடைய வாதங்கள் என் வாதத்தால் முறியடிக்க பட்டு இருப்பினும் மீண்டும் மீண்டும் உங்களின் பழைய

  வாதத்தையே முன் வைக்கின்றிர்கள்.//

  தாங்கள் அவ்வாறு கற்பனை செய்து கொள்வதற்கு உரிமையுள்ளது அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம்

  எனக்கில்லை.

  //விவாதத்தில் எந்த விதமான முன்னேற்றமும் இன்றி அரைத்த மாவையே அரைக்கும் மொக்கை செயலில் ஈடு

  பட்டுக்கொண்டு உள்ளீர்கள்.//

  தங்கள் பதில்களை பற்றிய மற்றவர்களின் என்னத்தை பிரதிபலித்துள்ளீர்கள்.

  //புதியதாக ஏதாவது இரண்டொரு கருத்துகள் உங்கள் பின்னுட்டத்தில் இருக்கிறதா என்று பார்த்து அவற்றுக்கு

  மட்டும் பதில் அளிக்க முயலுகிறேன்.//

  [1], [2], [3], [4], என பதிலளிக்க நான்கு கருத்துகள் புதிதாக உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளதற்கு நன்றி.

  //1]உலகின் மிகப்பெரிய அடாவடி ,போலிஸ்கார நாடான அமெரிக்காவின் தீர்மானத்தை சோசியலிச நாடான

  கீயூபா ஆதரிக்க வேண்டும் என்பதே கயவாளித்தனம் இன்றி வேறு என்னவாக இருக்கும் ?//

  கம்யூனிச கியூபா ரஷ்யா சீனாவின் நிலையை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்பது என்ன தனம்?

  //ராஜபச்சே .. இவர்கள் கொலைகார இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமை தீர்மானங்களை கொண்டு

  வருகின்றார்கள் எனில் அப்படி செய்ய அவர்களுக்கு என்ன தார்மிக உரிமை உள்ளது.? //

  அப்ப ஆதரவாகத்தான தீர்மானம் கொண்டுவரனுமா?

  //[2]நான் சுட்டிகாட்டிய காட்டிய அரசியல் … என்ற முடிவுக்கு வந்தேன் என்பதனை உங்களால் புரிந்து கொள்ள

  முடியாமைக்காக நான் வருந்துகின்றேன்.

  மோடி பிரதமராக உள்ள இந்தியா என்ன சோசியலிச நாடா? //

  மோடி பிரதமராக உள்ளதாலேயே இந்தியா சோசியலிச நாடல்லாமல் போய்விடுமா?

  //[3] இலங்கைக்கு இராணுவ தளவாடங்களை அனுப்பி அந்த நாட்டின் இன சிறுபான்மை மக்களான தமிழ் மொழி

  பேசுவோரை அழிக்கச்சொல்வது தான் நீங்கள் சுட்டிகாட்டும் முதலாளித்துவ நாடுகளின் கடமையா?//

  என்னுடைய பின்னூட்டத்தில் அவ்வாறு ஒரு போதும குறிப்பிடவில்லை.

  //அமெரிக்காவும் ,இந்தியாவும், சீனாவும் இலங்கைக்கு … வடித்துகொண்டே பேசும் உங்களின் கடமையா?//
  அமெரிக்வையோ இல்லை இந்தியாவைபோ நாம் எதிர்கவில்லை குறைந்தது இந்நாடுகள் கொண்டுவந்து நீதி

  விசாரனையை கூட எதிர்த்த நிலையை என்னவென்பது அதை ஆதரிக்கும் உங்களின் பரிதலை என்னவென்பது?

  //[4] மனிதாபி மானம் அற்று இன சிறுபான்மை மக்களான தமிழ் மொழி பேசுவோரை அழிக்க ஆயுதம் கொடுத்த

  கொடுத்த நாதரிகளை ஆம் அமெரிக்கா ,இந்தியா, சீனா நாடுகளை பார்த்து தானே நீங்கள் இந்த கேள்வியை

  இருக்கவேண்டும்?//

  ”இந்திய மக்களிடம் இருந்து” இதில் தமிழர்களும் அடங்கும் அவர்களுக்கு கம்யூனிஸ நாடு செய்யத நன்றி

  கடனோடு ஒப்பிடும் போது யாரைத்தான் நம்புவது?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க