Thursday, April 15, 2021
முகப்பு செய்தி புதுவையில் மாட்டுக்கறி விருந்து - அனைவரும் வருக !

புதுவையில் மாட்டுக்கறி விருந்து – அனைவரும் வருக !

-

மோடி பதவி ஏற்ற நாள் முதல், ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பல் நாட்டைக் காவிமயமாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. கஞ்சனுக்கு புதையல் கிடைத்தது போல், தனக்குக் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, சமஸ்கிருத வாரம், இந்தித் திணிப்பு, முசாபர் கலவரம் என ஒட்டு மொத்தமாக நாட்டைக் காவிமயமாக்க தொடர்ந்து வெறிகொண்டு அலைகிறது மதவெறிக்கும்பல்.

புதுவை பு.ஜ.தொ.மு மாட்டுக்கறி விருந்துஅதன் தொடர்ச்சியாக, உத்திரப்பிரதேச மாநிலம், தாத்ரி பகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி, முகமது அக்லாக் எனும், இஸ்லாமியர் மாட்டுக்கறி உண்டார் என்ற வதந்தியை உருவாக்கி அவரைக் கொலை செய்துள்ளது சங்க பரிவாரக் கும்பல். இப்பிரச்சினையைக் காரணம் காட்டி, உ.பி. மட்டுமல்லாது காஷ்மீர் உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளனர்.  காஷ்மீரில் மாட்டுக் கறி விருந்து வைத்த எம்.எல்.ஏ., பாஜக எம்.எல்.ஏ.க்களால அடித்து விரட்டப்பட்டுள்ளார். கேரளாவில், மாட்டுக்கறி உண்டதற்காக, எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, பகுத்தறிவாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோரைக் கொன்று மூடநம்பிக்கை மற்றும் சாதி- மதவெறிக்கு எதிராக பேசக்கூடாது என்று தடை போட்ட மதவெறி ரவுடிக் கும்பல், மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்று சொல்வதன் மூலம், தனது இந்து மதவெறிக்கு அடங்கி நடக்க வேண்டும் என மிரட்டுகிறது. நாடே பார்ப்பன பாசிசமாக மாறி நம் எதிரே நிற்கிறது.

கார்ப்பரேட் பயங்கரவாதத்திற்கு காவடி தூக்கி முக்குக்கு முக்கு சாமியாடும் மோடி, காவி பயங்கரவாதிகள் முக்குக்கு முக்கு வெறிகூச்சல் போடுவதை மௌனம் காப்பதன் மூலம் தனது பாசிச முகத்தை மறைக்க முயல்கிறார். ஆயினும், இன்று ஒட்டுமொத்தமாக அம்பலப்பட்டு அம்மணமாகி நிற்கிறது இந்துமதவெறி.

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

இச்சூழலில்,

 • மாட்டுக்கறிக்குத் தடை!
 • கருத்துச் சுதந்திரத்திற்கு கல்லறை!
 • பகுத்தறிவாளர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை!
 • பரவுகிறது பார்ப்பன அபாயம்!

உழைக்கும் மக்களே,

 • கன்றுக்குட்டிக்கு தரும் பாலை தடுத்து அதிலிருந்து கிடைக்கும் வெண்ணெய் – நெய்யைத் தின்று கொழுக்குது பார்ப்பனக் கும்பல்!
 • மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் இலாபம் பார்ப்பது பார்ப்பனக் கும்பல்!
 • அதிக ஊட்டச்சத்து, குறைந்த விலையுள்ள ஏழைகளின் உணவான, மாட்டுக்கறியைத் தடுப்பது அயோக்கியத்தனம்!
 • இந்தியாவில் மாட்டுக்கறிக்குத் தடை! மாட்டுக்கறி தின்னும் அமெரிக்க ஒபாமா முதல் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இந்தியாவில் கடை! இதுவே மோடியின் இரட்டை வேடம்!
 • இன்று மாட்டுக்கறி! நாளை ஆடு – கோழிக்கறி! மொத்தத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளின் டப்பா – புட்டி உணவிற்கு மாற்றுது ஆர்.எஸ்.எஸ். நரி!
 • மாட்டுக்கறி உணவிற்கு தடை, பகுத்தறிவாளர்கள் படுகொலை, தாழ்த்தப்பட்ட பழங்குடிகள், சிறுபான்மையினர் மீது கொலைவெறி! மொத்தத்தில் நாடே பார்ப்பானுக்கு அடிமை! எனும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பலின் அகண்ட பாரத கனவுக்கு முடிவு கட்டுவோம்!
 • மாட்டுக்கறி உண்போம்! இந்து மதவெறி அரசியலின் தோலுரிப்போம்!

ஆகிய முழக்கங்களை முன்வைத்து

ஆர்ப்பாட்டம் – மாட்டுக்கறி விருந்து!

நாள்: 20.10.2015, செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி
இடம்: மூப்பனார் காம்ப்ளக்ஸ், வில்லியனூர், புதுச்சேரி.

தலைமை:
தோழர். எம்.கே.கே.சரவணன், தலைவர், புஜதொமு, புதுச்சேரி

கண்டன உரை:
தோழர். ரா.லோகநாதன், இணை செயலாளர், புஜதொமு, புதுச்சேரி.

நன்றியுரை:
தோழர். கே. மகேந்திரன், கிளைச் செயலாளர், புஜதொமு, திருபுவனை கிளை, புதுச்சேரி.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் 501 பேருக்கு மாட்டுக்கறி உணவு (பீப் பிரியாணி) விருந்து

கலந்து கொள்வோம்! விருந்து உண்போம்! பாசிசத்திற்கு எதிராய்!

கருத்துக்கும், விருந்துக்கும் அழைக்கும்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு. தோழர். பழனிசாமி, 9597789801.