Wednesday, October 4, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது !

மூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது !

-

kovan-2
தோழர் கோவன்

மிழக மக்களை மதுவால் கொல்லும் ஜெயா அரசின் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு “மக்கள் அதிகாரம்” அமைப்பினர் நடத்திய போராட்டங்களை அறிவீர்கள். இதன் அங்கமாக இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. “மூடு டாஸ்மாக்கை மூடு, ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்களும் வினவுத் தளத்தில் வெளியிடப்பட்டு இலட்சக்கணக்கானோரை சென்றடைந்தன. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் இன்றளவும் இப்பாடல்கள் மிகப் பிரபலமாக மக்களால் கேட்கப்படுகின்றன. டாஸ்மாக்கை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் இப்பாடல்களை வரவேற்றிருக்கின்றனர்.

மதுக்கடைகளை மூட மாட்டோம், தமிழக மக்களை வதைக்காமல் விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு ஏற்கனவே அடக்குமுறைகளை ஏவிவிட்டிருந்தது. டாஸ்மாக் கடைகளை அடித்து உடைத்த மாணவர்கள் – மக்கள் அதிகாரம் தோழர்களை கைது செய்து பல நாட்கள் சிறையில் அடைத்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இன்று 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் தோழர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் அவரைக் கைது செய்து செய்தனர். தற்போதைய நிலவரப்படி அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதே நேரம் தோழர் கோவனை கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்ல போலிசு மறுக்கிறது.

தமிழக மக்களை தாலியறுக்கும் டாஸ்மாக் கடைகளை மூடு என்று சொல்வது தேசத்துரோகமா?

பாசிச ஜெயா அரசின் ஒடுக்குமுறையை அனைவரும் கண்டிப்போம். டாஸ்மாக்கை மூடும் போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம்.

 

Revolutionary Singer arrested for song demanding shutdown of liquor shops

People’s Power, a mass organization in Tamil Nadu, has been conducting agitations demanding shutdown of liquor outlets run by state owned TASMAC. As part of this campaign, two popular video songs by People’s Art and Literary Association (PALA) “Moodu Tasmac-i Moodu – Shutdown TASMAC…” (https://www.youtube.com/watch?v=yZLrn1dKOF8)” and “oothi kodutha uthami… – the lady who served liquor makes merry in Poes garden” (https://www.youtube.com/watch?v=TH4oihCsZ3s) were released in Vinavu (vinavu.com) newszine and reached lakhs of viewers.

Inspite of sustained and widespread struggles and demand by all sections of society, the Jayalalithaa government stubbornly refuses to change its liquor policy which has impoverished the working population and degenerated popular culture in Tamil Nadu. Students and People’s Power activists who fought against TASMAC were arrested and jailed for many weeks.

Now, Comrade Kovan the lead singer of PALA cultural troupe has been arrested by the police at around 2.30 midnight today (30-10-2015) from his house at Trichy. He is charged under section 124A (sedition), 153 (attempt to create enmity between social groups) and 502/1 (sale any printed or engraved substance containing defamatory matter) by the Chennai city crime branch police. A special squad of around 10 policemen swooped into his house, roughed him up and took him into custody. His whereabouts are not known. The local police is also in the dark.

In the increasingly bizarre universe called Indian democracy, demanding shutdown of liquor shops has joined the long list of “seditious” activities, like drawing a cartoon, posting in Facebook or writing a magazine article.

We will not be cowed down by this oppression. The songs of PALA will continue to reverberate.

We call upon all democratic forces to fight these fascist oppression by spreading this message and the songs.

People’s Art and Literary Association,
Tamil Nadu

 1. தோழர் கோவன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசு உடனடியாக தோழர் கோவனை விடுதலை செய்ய செய்ய வேண்டும் என்ற குரல் தமிழகமெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்

 2. ஒய்திஸ் கொலை வெறி என்று பாடல் பாடி மணவர்களையும்,இளைஞர்களையம் பெண்கள் மீது கொலை வெறியை தூண்டிய கூத்தாடி தனுஷ்சுக்கு அரசு மரியாதை பிரதமர் வீட்டில் விருந்து.

  வீதிக்கு வீதி டாஸ்மாக் சாரயைக் கடையை திறந்து தமிழக மக்களை கொன்று குவிக்கும் ஜெயாவின் கொலை வெறியை அம்பலப்படுத்தி பாடல்கள் பாடி மக்களின் துயரங்களையும், துன்பங்களையும் மக்களுக்கு உணர்த்திய தோழர் கோவனுக்கு தேச துரோகி, பிரிவினைவாதி என்ற பிரிவின் கீழ் வழக்கு.

  இனியும் அரசின் கொளை வெறியையும் , ஒடுக்குமுறைகளயும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது வீதியில் இறங்குவோம் .

 3. இதுவரை கமுனிசம் என்றால் என்ன அவர்கள் யார் அவர்களது பணி என்ன என்று கூட தெரியாமல் இருந்த பாமரமக்கள் முதல் கணினி துறைகளில் வேலைபர்பாற்பவர்கள் வரை, நீதி, ஜனநாயக கருத்துகளை கொண்டு சென்ற போராளி இவர். இவரது கைது வன்மையாக கண்டிக்கதக்கது.

 4. அடக்குமுறையால் டாஸ்மாக் எதிர்ப்பு குரலை நசுக்க முடியாது. டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களைத் தடுக்கவும் முடியாது. புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள், பாடல்கள், கருத்துகள், உரைகள் எல்லாமே மக்கள் மொழியில் இருக்கின்றன. மக்களது உணர்வாக இருக்கின்றன. அதனை எந்த ஜெயா அரசினாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ம.க.இ.க.வின் இந்த இரு பாடல்வரிகளும் சூழலும் ஜெயா அரசை ஈட்டிமுனையாக கீரியுள்ளது என்பதை தான் தோழர்.கோவன் கைது செய்யப்பட்டிருப்பது காட்டுகிறது. மக்களின் உணர்வுக்குப் பணிந்து, டாஸ்மாக் கடைகளை மூடாமல் எதிர் நடவடிக்கைகளில் இறங்கும் ஜெயா அரசின் செயல்பாடு, ஜெய அரசை மட்டுமல்ல, இந்த அரசு கட்டமைப்பையே தூக்கி எறிய மக்களை விரைந்து அணிதிரட்டும்!

 5. ஓப்பன் த டாஸ்மாக்கு… ஓப்பன் த டாஸ்மாக்குனு கருத்து மிக்க பாடல்கள் ஒலித்த தமிழகத்தில்,இந்த மாதிரியான பாடல்கள் ஒலிப்பது சட்டப்படி குற்றமே….போல..சிவப்பை கண்டால் இந்த அரசு பயப்படுகிறது

 6. குடி என்பது தேச பக்தி, குடிக்காத என்றால் தேச திரோகம் இதுதான் இந்தியா.

 7. கருத்துரிமையின் குரல்வளை நெரிக்கப்படுகிரது. எதிர்த்தெழுவோம்.

 8. தமிழக அரசின் மதுக்கடைகளை எதிர்த்து ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் மூலமாக, “மூடு டாஸ்மாக்கை மூடு”, “ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்களும் வினவுத் தளத்தில் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது 124 ஏ – தேசத்துரோக நடவடிக்கை, 153 – சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 – அவதூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  கருத்துரிமை, பேச்சுரிமையை கூட கொடுக்க இயலாத கையாலாகாத மக்களாட்சி அரசின் வெளிப்பாடுதான் இந்த செயல். தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களை கூட ஆதரித்து பேச, எழுத, செயல்பட உரிமை கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வழங்கிய ஜனநாயகத்தின் நேர்மை இதுதானா?

  எதை ஆதரிக்க வேண்டும்? எதை எதிர்க்க வேண்டும் என்பதை கூட ஆளும் அரசாங்கங்கள் முடிவெடுத்தால், அது எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்? சர்வாதிகாரத்தின் உட்சம் இது. நாட்டுப்புற பாடகர் தோழர் கோவனை அரசு விடுதலை செய்ய அனைத்து தமிழ் அமைப்புகளும் மிகப்பெரிய அளவிலான போரட்டக்களங்களை உருவாக்க வேண்டும்.

  நம்மை அடிமை படுத்திய அந்நியன் அன்று, பேச்சுரிமையை அடக்க பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மீது வாய்ப்பூட்டு சட்டம் தான் போட்டான். இன்று தேவரது ஜெயந்தி நாளில் அவருக்கு போட்ட வாய்பூட்டு சட்டத்தை விட மோசமான கைதை அரங்கேற்றிய அரசாங்கத்தின் நோக்கம் தான் என்ன? குடிபோதைக்கு அடிமையாகி தமிழன் தன் சுயத்தை இழக்க வேண்டும் என்பது தானா? தமிழனின் சிந்தனையை மழுங்கடித்தால் தானே, அந்நியர்கள் ஆட்சியில் அமர முடியுமென்ற ராஜதந்திரமா? தமிழனே போதையிலிருந்து விழித்தெழுந்து தமிழ் மண்ணை தமிழனே ஆள வழிவகை செய்!

  – இரா.ச.இமலாதித்தன்

 9. This approach is followed by State and central. Whoever raised against Government even for good cause they will receive the badge of treason.Columbus and vasco da gama comes towards india not to sell their goods but to take its wealth.So think about of our country’s resources .Currently government is expecting investment from other countries in the name of development. Lets consider our wealth is already taken by British. Then how come we are seeing billionaires in north india.When a Government is trying to earn revenue by selling liquors how come they will come up with good development plan for fellow citizens. Looks like politicians or bureaucrats doesn’t know how to earn revenue. And intelligence agency is functioning against tamil people with the direction from Central by bringing more number of nuclear and related stations in the cost of people welfare and livelihood. Dividing the peoples in various ways. Not bother about Massacre of tamil peoples in srilanka in the name of war and assisting the srilankan government. And making them audit to Liquors. Judiciary eventhough know about it wants to go hand in hand with central plan. When Film release get judiciary immediate attention and giving the rule amid of other pending cases, why cauvery issues are still in court. If somebody argue its financial loss for producers and few peoples depending on it, think about of or farmers they continuously betrayed by this judiciary. When the policies are framed in favour of foreign countries and to the business men looks like we are still not get independence. There is no People unity is the main strength for the folks who rules it. So they will always try to divide us. Please aware of this and try to ged rid of their plan.

  Not to talk always about past history. Come up with thinking which can unite peoples. Only unity wins everywhere.

 10. மதுவை எதிர்த்து பாடிய தோழருக்கு NSA ….

  ஊத்திக்கொடுக்கும் ஜெயாவுக்கு ?

  பிடித்தது சனி ….

  இன்னும் 7 மாதத்துக்கு விடாத அடங்காத சனி….

  Nov …Dec …..Jan …..May பிரச்சாரம் தொடர் பிரச்சாரம் …

  திருவரங்க பெருமாளின் தீண்டாமை கருவறையில் நுழைந்தவர்களுக்கு

  ஜெயாவின் ஏவல் நாய்களின் வழக்குகள் மயிருக்கு சமம்….

  இன்னும் ஏழூ மாதம் தான் இருக்கு ஜெயா கொட்டம் அடங்க….

  “”பாசிச ஜெயாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து

  தூக்கி எறிவோம்….””

  வரும் மே மாதம் வரையில்

  இது தான் மக்களின் கோஷமாக இருக்க வேண்டும்

 11. ம க இ க பிரச்சார சுவர் ஓட்டிகளில் …… இப்படி இத்தின சுருக்கமாக பிரச்சாரம் இருந்தால் மக்களை எளிதில் சென்றடையும் [With Comrade Photo]:

  மதுவை எதிர்த்து பாடிய தோழருக்கு NSA ….

  ஊத்திக்கொடுக்கும் ஜெயாவுக்கு ?

  பாசிச ஜெயாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து

  தூக்கி எறிவோம்

  Posters in lakes should be posted in Tamilnadu with the above message along with comrade photo

 12. தமிழக அரசே!
  மகஇக மைய கலைக்குழு தோழர் கோவனை உடனே விடுதலை செய்!
  மகஇக மாநில இணை செயலர் தோழர் காளியப்பனை கைது செய்ய முயற்சி செய்யாதே!

 13. டாஸ்மார்க்கை மூடச்சொன்ன இரண்டு பாடல்களுக்காக தேசத்துரோக நடவடிக்கைப் பிரிவின் கீழ் தோழர் கோவன் கைதா? என்னய்யா இது…..ஒரு ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்கு வந்த கேட்டைப் பார்க்கவே பொறுக்குதில்லை. டாஸ்மார்க்கை மூடவேண்டும். தோழர் கோவன் உடனே விடுதலை செய்யப்படவேண்டும்.

 14. எத்தனையோ பாடல் வரிகள் எள்ளி நகையாடும் விதமாக உள்ளதை விடவா மோசமாக உள்ளது கோவனின் பாடல் வரிகள் ? நல்லதை சொல்லாதே,நல்லதை செய்யாதே,நல்லதைப் பார்க்காதே…என்பதைத்தான் இனிமேல் அரசு விளம்பரமாக்க வேண்டும். கலையை அழித்து விடாதீர்கள். விருதைத் திருப்பி அளித்த கலைஞனுக்கு நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க