Wednesday, May 7, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபாசிச ஜெயாவை முறியடிப்போம் ! புதுவையில் ஆர்ப்பாட்டம் !

பாசிச ஜெயாவை முறியடிப்போம் ! புதுவையில் ஆர்ப்பாட்டம் !

-

ம.க.இ.க. கலைக்குழு தோழர்.கோவன் கைது! பாசிச ஜெயாவின் போலிசு வெறியாட்டம்!

  • நாட்டைக் கூறுபோடுபவர்கள் ஆட்சியாளர்களே! புரட்சியாளர்கள் அல்ல!
  • டாஸ்மாக் மூலம் மக்களை சீரழிக்காதே என பாடல் பாடியதற்காக ம.க.இ.க கலைக்குழுவின் புரட்சி பாடகர் தோழர் கோவன் தேசத் துரோக வழக்கில் கைது! ஜெயா போலீஸ் வெறியாட்டம்
  • மக்களின் தாலியறுக்கும் சாராயக் கடையை மூடு என்று சொல்வது தேச துரோகமா?
  • நாட்டுப் பற்றாளர்களை, பகுத்தறிவாளர்களை ஒடுக்க நினைக்கும் அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவோம்!
  • வீதியில் இறங்கி போராடுவோம்

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

தமிழக மக்களை போதையில் சீரழிக்கும் அம்மாவின் டாஸ்மாக்கை மூடச்சொல்லிய ‘குற்றத்திற்காக’ மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழுவின் புரட்சிப் பாடகர் தோழர் கோவன் நேற்று (30-10-2015) அதிகாலை 02.30 மணி அளவில் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயா போலீஸ்தமிழக மக்களின் தாலியறுக்கும் அம்மாவின் டாஸ்மாக்கை மூடச் சொல்லி பாடியது தான் இவர் செய்த ‘தேசத் துரோக’ ‘பிரிவினையைத் தூண்டிய’ குற்றம். தமிழகத்தின் உழைக்கும் மக்களைச் சீரழிக்கும் டாஸ்மாக்கை மூடச்சொல்வது தேசத் துரோகக் குற்றம்.

சாராயத்தை ஊத்திக் கொடுத்து மக்களை சீரழிக்காமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஆட்சி நடத்தும் அம்மா ஆட்சியின் காட்டு தர்பாருக்கு இந்தக் கைது நடவடிக்கை ஒரு துலக்கமான உதாரணம். இன்று நாட்டில் நடக்கும் இந்த காட்டு தர்பார் ஆட்சியை புரட்சிகர, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும். தேசத் துரோகம் புரிபவர்களும், பிரிவினையை உண்டாக்குபவர்களும் ஆட்சியாளர்கள் தான், புரட்சியாளர்கள் அல்ல என்பதை பறைசாற்ற வேண்டும்.

எனவே, இந்தக் கைதைக் கண்டித்தும், மக்களை சீரழிக்கும் டாஸ்மாக் உள்ளிட்ட அரசு மதுபானக் கடைகளை மூடும் போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் என்பதை விளக்கும் விதமாகவும் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் இன்று மாலை 05.30 மணிக்கு முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

கருத்துரிமை பறிப்புக்கு எதிராக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்ள உழைக்கும் மக்களே அணி திரள்வீர்!

ndlf-puduvai-kovan-notice

தலைமை : தோழர் M.K.K. சரவணன், தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி

கண்டன உரை : தோழர் R. லோகநாதன், இணைச்செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி

நன்றியுரை : தோழர் K. மகேந்திரன், கிளைச் செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருபுவனை கிளை

ndlf-puduvai-kovan-poster-2தொடர்புக்கு,

தோழர். பழனிசாமி, 95977 89801.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.