privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதோழர் கோவன் கைதுக்கு தொடரும் கண்டனங்கள்

தோழர் கோவன் கைதுக்கு தொடரும் கண்டனங்கள்

-

Gopalan TN

இரண்டு பாடல்களையும் கேட்டேன். வினவின் முயற்சி பாராட்டுக்குரியது. அருவருப்பான அம்சம் ஏதுமில்லை. ஒரு தலைமுறையினை சீரழித்துக்கொண்டிருக்கும் இவ்வரசை சாடக்கூட ஜனநாயகத்தில் நமக்கு உரிமை இல்லையா என்ன.

Feroz Babu Gvr Chennai
இரு பாடல்களின் வரிகளை அப்படியே பகிர்ந்துகொள்ளவிரும்புகிறேன். எல்லோரும் அப்படிச் செய்யவேண்டும். ஊருக்கு ஊர் கூடி பாடத் தெரிந்தவர்கள் பாடவேண்டும்.
எனக்குப் பாடவராது ! எனவே முழுவதுமாகப் பாடல்கள் கிடைத்தால் எங்காவது பொதுவில் படிக்கலாம் என நினைக்கிறேன்

Venkada Prakash with Sridharan Kathamuthu and 3 others
தெரியுமா! கோவன் கைதாம்!
ஏனாம்!?
கோவம் வந்துச்சாம்!
ஓ ! யாருக்காம்!?
கோவனுக்காம்!
அட!
ஏன் உனக்கும் வருதா!?
பின்ன? என்ன இருந்தாலும் அஜீத்து ஓட்டுப்போட வந்துருக்கணும்லா!?

Arul Ezhilan

arul-ezhilanஇயக்கப் பின்னணி எதுவுமில்லாமல் ரோமன் கத்தோலிக்க மரபில் வளர்க்கப்பட்ட எனக்கு சமூக உணர்வையும், அரசியல் உணர்வையும் ஊட்டியது தோழர் கோவனின் குரல்! அந்த விடுதலைப் பாடகரின் குரல் ஒலிக்காத மேடைகள் இல்லை…. எல்லா கட்சிகளும்,அமைப்புகளும் அவரது பாடல்களை பயன்படுத்திக் கொண்டன,தேவாலயங்களில் கூட புரட்சிகரப் பாடல்கள் ஒலிக்கத் துவங்கியது கோவன் குழுவினர் பாடத் துவங்கிய பின்னர்தான்.இவர்தான் கோவன் என்பது தெரிந்த பின்னர் அவரது கலை நிகழ்ச்சிகள் எதையும் தவறவிட்டதில்லை…. 20 ஆண்டுகள் ஆகி விட்டாலும் கூட “தொழுகை முடிந்த வாசலிலே அந்த யாருக்கும் கேட்கலியே”இன்னும் சன்னமாக என் ஆன்மாவோடு பயணிக்கிறது அந்த குரல்! ..செவ்வணக்கம் தோழர்.

Aloor Sha Navas
என் குருதியில் கலந்தவர் கோவன்!

ஆளூரில் பள்ளிக்கூட மாணவனாக இருக்கும்போதே கோவனின் குரல் எனக்கு அறிமுகமாகி விட்டது.

‘அண்ணன் வர்ராரு, அசுரகானம், காவி இருள்’… போன்ற ம.க.இ.க வின் இசைப்பாடல் தொகுப்புகளின் வழியே கோவன், என் போன்ற ஆயிரமாயிரம் இளைஞர்களை வந்தடைந்தார். அன்றிலிருந்து இன்றுவரை அப்பாடல்கள் அனைத்தும் எம்மை வழி நடத்திக் கொண்டிருக்கின்றன. தேர்தல் அரசியலுக்கு வந்தபிறகும் கூட, சமரசமின்றி ஆதிக்க எதிர்ப்பில் நாம் உறுதியுடன் நிற்பதற்கு, அப்பாடல்கள் ஊட்டிய கருத்தியலே காரணம்.

கோவனை சிறை வைக்கிறீர்கள். கோவனின் புரட்சிப் பாடல்களை என்ன செய்வீர்கள்? அது என்னையும் கடந்து, என் நான்கு வயது மகன் வரை ஊடுருவிச் செல்கிறதே! அதை எப்படித் தடுப்பீர்கள்?

‘கிளைகளை வெட்டும் தோட்டக்காரனே, வேர்களை என்ன செய்வாய்?’ எனக் கேட்டார் கவிக்கோ. அதையே அரசை நோக்கியும் கேட்கிறோம்.

E.V.K.S.Elangovan (official)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 31.10.2015

சமீபகாலமாக நாடு முழுவதும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆதரவு பெற்ற மதவாத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டு வருகிற கொடுமை நிகழ்ந்து வருகிறது. அவ்வரிசையில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி போன்ற அறிஞர் பெருமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கொலைவெறித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலை குறித்து நாட்டிலுள்ள வரலாற்று ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோர் தங்களது விலைமதிக்க முடியாத விருதுகளை பா.ஜ.க. ஆட்சியாளர்களின் முகத்தில் வீசி எறிந்து எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் படுகொலை செய்யப்படுகிற வகையில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சமூக அவலங்களை சித்தரித்தும் கலை இரவு நிகழ்ச்சிகள் மூலமாக கிராமிய பாணியில் தாரை தப்பட்டைகளுடன் பாடல்களை பாடி எழுச்சியை ஏற்படுத்திய மக்கள் கலை இலக்கிய அமைப்பைச் சேர்ந்த சிவதாஸ் என்கிற கோவன் தேசதுரோக குற்றம் இழைத்ததாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை பாவலர் வரதராஜன் எப்படி பாடி நாட்டு மக்களை ஈர்த்தாரோ, அதற்கு சற்றும் குறையாமல் மக்கள் உணர்ச்சிகளை தூண்டுகிற வகையில் பொது பிரச்சினைகளை முன்வைத்து பாடல்களை இயற்றி, அவர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழக மக்களிடையே பேரெழுச்சி ஏற்படுத்தியதை சகிக்க முடியாத அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

‘இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்” என்ற கொடுமை ஹிட்லர் ஆட்சியில்தான் நடந்தது. அத்தகைய கொடுமையான நடவடிக்கைகள் தற்போது ஹிட்லர் ஆட்சியை மிஞ்சும் வகையில் ஜெயலலிதா ஆட்சியில் தற்போது நடந்து வருகிறது. பத்திரிகைகள் மிரட்டப்படுகின்றன. ஆட்சிக்கு எதிராக செய்தி வெளியிடுகிற பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டிய அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் அச்றுத்தப்படுகின்றன. எந்த தொலைக்காட்சியாவது ஆட்சியாளர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டால் கேபிள் தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டிலே தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதை உறுதி செய்கிற வகையில்தான் கிராமிய பாடகர் கோவன் கைது நிகழ்ந்துள்ளது. அச்சமும், பேடிமையும், அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் மக்கள் கொண்டிருந்தால் இன்றைய கொடுங்கோல் ஆட்சி, நாளை பேயாட்சியாக மாற வழிவகுத்துவிடும். இதை உடனடியாக தடுத்து நிறுத்த கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கிற வகையில் வருகிற 2.11.2015 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கு பாடம் புகட்டுகிற வகையில் பெருந்திரளான பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

தமிழச்சி (Tamizachi)

இந்திய சட்டத்தை எழுதியவர்களில் ஒருவரான தோழர்‪#‎அம்பேத்கர்‬, சட்டத்தின் திருத்த முடியாத பக்கங்கள் தனியார் உரிமைகளில் தலையீடுவதாக சுட்டிக்காட்டினார்.

“இந்தியாவின் பெரும்பாலான ‪#‎மாநில_சட்டமன்றங்கள்‬ பொது மக்களின் உரிமைகளை ஒழுங்குப்படுத்துவதில் தமது சட்ட அதிகாரங்களை ஈடுபடுத்துகின்றன” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

கடைசியாக, “மக்களுக்கு பயன்படாத ஒரு சட்டம் இருக்குமானால் இந்திய சட்டப்புத்தகத்தை கொளுத்தும் முதல் ஆளாக நான் இருப்பேன்” என்றார்.

அம்பேத்கர் கூறியபடி மாநில சட்டமன்றங்களின் தனி மனித உரிமைகளில் எப்படி ஊடுறுவுகின்றன என்பதற்கு‪#‎டாஸ்மார்க்கை_மூடு‬ என்று பாடியதற்காக தோழர் கோவனை மீது இந்திய தண்டனை சட்டத்தின் [124A, 153A, 505]‪#‎தேசத்துரோகம்‬, இரு குழுக்களுக்கிடையே வன்முறையை தூண்டுதல், ‪#‎கலகம்_விளைவித்தல்‬ என்னும் பிரிவுகளின் கீழ்‪#‎கைது‬ செய்யப்பட்டு, ‪#‎புழல்_சிறை‬ யில் அடைக்கப்பட்டுள்ளதை உதாரணமாக பார்க்கலாம்.

இரு குழுக்களுக்கு இடையே ‪#‎கலகம்‬ விளைவித்தல் என்றால், குடிப்பவர்கள் / குடிக்காதவர்களுக்கு இடையே தோழர் கோவனை கலகம் விளைவித்தார் என்று பொருட் கொள்ள முடியுமா?

ஒருவேளை ‪#‎மாநில_அரசு_அதிகாரம்‬ அதையே வலியுறுத்துகிறது என்று வைத்துக் கொண்டாலும், ஜெயாவின் அரசு குடிக்காரன்களுக்கு மட்டுமான அரசா? குடிக்காதவர்களுக்கான அரசு இல்லையா?

இங்கே தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட‪#‎மக்களாட்சி‬ நடக்கிறதா? குடிக்காரன்களால் தேர்ந்தெடுக்கப்ட்ட‪#‎குடிமகன்கள்‬ ஆட்சி நடக்கிறதா?

அரசு மக்களுக்காக இல்லை. சட்டம் தனிமனி மனிதனுக்கான உரிமையை வழங்கவில்லை என்றால் வேறு எதற்காக மக்களுக்கு ‪#‎அரசு‬, ‪#‎சட்டம்‬, ‪#‎காவல்துறை‬?
‪#‎தமிழச்சி‬

Barathi Thambi shared Alagesa Pandian’s post.

’மச்சி ஓபன் தி பாட்டில்’ என்று பாடினால் வரிவிலக்கு.
‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடினால் கைவிலங்கு.
சாராயக் கடையை மூடச் சொல்வது தேசத் துரோகம் என்றால் ஊற்றிக்கொடுப்பதுதான் தேசபக்தியா?

Yuga Bharathi
தோழர் கோவனின் கைதுக்கு காரணம் சமூக அக்கறை.மக்களுக்காகப் பாடினால் கைது.மக்களைப் பாடினால் கொலை.இந்த நாடும் அரசும் நாசமாய்ப் போகட்டும்.

Rk Rudhran

rudranமதுவை எதிர்த்து ப்ரச்சாரம் செய்ய நிச்சயம் தோழருக்கு உரிமை உண்டு. ஓரிடத்தில், மாட்டிறைச்சி எதிர்ப்பை நீங்கள் எதிர்ப்பது போலத்தான் இதுவும் என்று படித்தேன்…ஹ்ம்ம்ம்… குடிப்பவன் தானும் நாசமாகி தன் கும்பத்தையும் நாசமாக்குவான், மாடு தின்பவன், தானும் உண்டு தன் குடும்பத்துக்கும் அவரது சுவைக்கேற்ற உணவைத் தருவான்.

மாடுகள் பலவற்றை மறைக்கின்றன.

ஒரு சந்தர்ப்பவாத வெறியாட்டமும் நியாய போராட்டமும் ஒன்றெனக் காட்டும் விஷத்தையாவது நாம் அடையாளம் காண்போம்.

ஆடு மாடு கோழி எதையும் நான் தின்பதில்லை, ஆனாலும் மாட்டிறைச்சி அரசியலை எதிர்க்கிறேன். மதுவை அவ்வப்போது நான் விரும்புவதும் உண்டு, ஆனாலும் தோழர் கோவனின் போராட்டத்தை ஆத்ரிக்கிறேன், அவரது கைதை கண்டிக்கிறேன்.

Alagappan Abdul Kareem

கோவன் கைது தொடர்பாக இன்று புதியதலைமுறையில் நடந்த நேர்படப் பேசு நிகழ்ச்சியில் கோவன் கைதை நியாயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே மூன்று அதிமுகவினரை கலந்து கொள்ளச் செய்துள்ளனர்.

திமுகவின் சார்பில் மனுஷ்யபுத்திரன், காங்கிரஸின் ஜோதி ஆகியோருடன் அதிமுக சார்பில் காசிநாத பாரதியும் கலந்து கொண்டார்.

காவல்துறையின் சார்பில் கருத்து கேட்பதற்காக அதிமுகவில் இணைந்துள்ள ஆர். நட்ராஜ் மற்றும் வழக்கறிஞர் ராஜசேகர் என்பவரும் கலந்து கொண்டனர்.

நட்ராஜும் ராஜசேகரும் காசிநாத பாரதிக்கு சற்றும் சளைக்காமல் ஜெயாவுக்கு ஆதரவாகக் களமாடினர்.

புதியதலைமுறை….

உங்க ஊடக நேர்மைல கொள்ளிய வைக்க…

‪#‎ஊடகம்‬ ‪#‎கோவன்‬

Suguna Diwakar

suguna-diwakarஎனக்குத் தோழர் கோவனோடு பழக்கமில்லை என்றாலும் 15 ஆண்டுகளுக்கும் மேல் அவர் குரல் பரிச்சயம். சாதியம், மதவாதம், உலகமயமாக்கலுக்கு எதிராக உரத்து ஒலிக்கும் குரல் அவருடையது. வெறுமனே பாட்டுப் பாடுவதோடு நின்றுவிடாமல் உடல் மொழியிலும் கலைத் தெறிப்பையும் கருத்தியல் வெளிப்பாட்டையும் பிரதிபலிக்கும் அற்புதமான அரசியல் பாடகன். ம.க.இ.க.வின் சில நிலைப்பாடுகளில் உடன்பாடில்லாத பலரும்கூட கோவனின் பாடல்களுக்கு ரசிகர்கள். ஒருபுறம் உரத்து ஒலிக்கும் அவரது பாடல்களின் இன்னொருபுறம் நெகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

‘சம்மதமா சொல் சம்மதமா’ என்று முஸ்லீம்கள் இந்துத்துவப் பயங்கரவாதத்தால் வேட்டையாடப்படுவதைச் சொல்லும் பாடலாக இருந்தாலும் ’சொல்லாத சோகம்…’ என்று முஸ்லீம்களைத் தேசத் துரோகிகளாகக் கட்டமைக்கும் கற்பிதங்களுக்கு எதிராக முஸ்லீம்களின் தியாகங்களை விளக்கும் பாடலாக இருந்தாலும் ‘அந்த நந்தன் கதை சொன்னா நாவும் தடுமாறுமய்யா’ என்று பார்ப்பனப் பயங்கரவாதத்துக்குப் பலியானவர்களின் கதை சொல்லும் பாடலாக இருந்தாலும் கோவனின் பாடல்கள் மனதைப் பிசைய வைக்கும் மாயக்குரலை உள்ளடக்கியவை. உணர்ச்சியும் நெகிழ்ச்சியுமுடைய தனித்துவக் குரல் அவருடையது. அசுர கானம், இருண்ட காலம், காவி இருள், அண்ணன் வர்றாரு என்று விரியும் ம.க.இ.க. மய்யக் கலைக்குழுவின் ஒலிநாடாக்கள் எத்தனையோ பேருக்கு அரசியல் உணர்வை ஊட்டியிருக்கின்றன. அதற்கு கோவனின் பாடல்களும் பாடல்களுக்கு இடையில் அரசியலை விவரிக்கும் தொனியும் மிக முக்கியமானது. சந்தேகமில்லாமல் கோவனைத் ‘தமிழ்நாட்டின் கத்தார்’ என்றழைக்கலாம்.

மதுவிலக்கில் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் டாஸ்மாக்கை எதிர்த்த ஒரு கலைவெளிப்பாட்டுக்கான கைது என்பது அரச பயங்கரவாதம்தான். டாஸ்மாக்கை எதிர்த்துப் பாடுவதற்கு தேசத் துரோக வழக்கு ஒருபுறம் என்றால் ‘இரண்டு பிரிவுகளுக்கு இடையில் மோதலைத் தூண்ட வாய்ப்புள்ளதாக’க் குற்றம் சாட்டுவது அநீதியானது. ‘இரண்டு பிரிவுகள்’ என்றால் என்ன? குடிப்பவர்கள், குடிக்காதவர்களா? உண்மையிலேயே சாதிய மோதல்களையும் மத மோதல்களையும் இனவாத மோதல்களையும் தூண்டும் குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் தைரியமாக நடமாடும்போது எதிர்ப்புக்குரலுக்கு சிறை வாய்த்திருக்கிறது.
இந்தியா முழுவதும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் மோடியின் அரசுக்குச் சவால் விடுகிறார்கள் எனில் கோவன் என்னும் ஒற்றைக் கலைஞனின் இரண்டு பாடல்கள் ஜெயலலிதா அரசுக்குச் சவால் விட்டிருக்கிறது.

கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கைது செய்வது என்பது விதையை மண்ணுக்குள் மறைக்கப் பார்ப்பதுதான். மீண்டும் வீரியத்துடன் முளைப்பார் கோவன். எழுச்சி இசை மழை பொழியும்!

Raj Arun

ரிட்டையர்ட் ஐ ஏ எஸ் அதிகாரி முருகனை இன்னைக்கு சமூக ஆர்வலர்னு தந்தி டீவியில் கேப்சன் கொடுக்குறாங்க.

இப்படி தான் கிஷோருக்கு அந்த கேப்சனை கொடுத்து நாறடச்சிசாங்க.

இந்த முருகன் ஒரு விவாதத்தில்

முன்னையெல்லாம் வீட்டுக்கு உறவினர்கள் வந்தா பெண்கள் உள்ள போய் ஒழிஞ்சுவாங்க, ஆனா இப்ப அப்படி இல்ல. அதுனாலயே பாலியல் குற்றங்கள் நடக்கதுன்னு பேசிய ஆளு.

வினவு குழுமத்தின் மீது எனக்கு எப்பொழதும் பெரிய மரியாதை உண்டு.
இப்பொழது அது பல மடங்கு கூடிவிட்டது

Abdul Hameed Sheik Mohamed

டாஸ்மாக்கை எதிர்ப்பது தேச துரோகம் என்றால் அந்த தேச துரோகத்தை தினமும் செய்ய விரும்புகிறேன்.
மக்களின் துயரத்தை பாடுவது சமூக ஒழுங்கை சீர்குலைக்கும் எனில் அந்த சமூக ஒழுங்கு குலைவதே நல்லது
– இன்று புதிய தலைமுறையில் நான் சொன்னது.

Abu Haashima

அரசாங்கம் மனசுவச்சா
ஒரு சாதாரண ஆளைக்கூட
ஒரேநாளில்
ரொம்ப பிரபலமான ஆளா
ஆக்கிவிட முடியும்.
சமீபத்திய உதாரணம் …
கோவன் !
ஈவிகேஎஸ் இளங்கோவனிலிருந்து
ஈத்தாமொழி இளங்கோவன்வரை
ஒருத்தர் பாக்கியில்லாம
அத்தனை பேரும்
பாடகன் கோவனின்
பரம ரசிகர்களாயிட்டாங்க.
டீக்கடையில கூட
கோவன் பாட்டை போடுய்யான்னு
பட்டைய கெளப்புறாங்க.
இன்றைய நிலவரப்படி
தமிழ்நாட்டின் நம்பர் ஒன்
சூப்பர் சிங்கர்
கோவன்தான் !
டாப் 1 பாடல்
மூடு டாஸ்மாக்கை மூடு

கருப்பு கருணா

karuppu-karunaம க இ க வுடன் உடன்படமுடியாத பல விஷயங்கள் இருக்கலாம்.ஆனால் கோவனின் பாடல்களில் ஒலிக்கும் ஆவேசத்துடனும் ஆன்மவலியுடனும் உடன்படாதிருப்பவன் கலைஞனாக இருக்க முடியாது.

ஒத்த குவார்ட்டரை பத்தி பாடுனாக்கூட ராஜதுரோக வழக்கு போடுவீங்கன்னா..நான் தெரியாமத்தான் கேக்குறேன்..ஒங்க ராஜ்ஜியமே அந்த குவாட்டருக்குள்ளதான் கீதா..?

கருத்துரிமையின் குரல்வளையை நெறிப்பதை இன்று நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால்…குறித்து வைத்துக்கொள்ளுங்கள்…நாளை உங்கள் குரல்வளையும் நெறிக்கப்படலாம்..

Sam Ponraj
Now our TN state govt competing with the Central govt. Thanks folks for voting ‪#‎ADMK‬
Tamil Nadu police on Friday imposed sedition charges against Kovan for the songs he had penned against the government, criticising its liquor policies and the Chief Minister J Jayalalithaa.

Shankar Raj
Wonder why The Hindu did not cover Tamil folk singer Kovan’s arrest or comment on it in its national editions. And Ram & co speak of ‘honest’ journalism.

Chezhian Ramalingam
So again Jaya back into her 91-96 term.. As usual arresting activist Kovanaround 2 AM as a dictator and buying the luxe cinemas by claiming false case against Satyam Reddy.. varaey va… தமிழகம் முழுவதும் சொத்துக்கள் வளைப்பு:
மீண்டும் திரும்புகிறதா 1991-96 கலாச்சாரம்? any ADMK supporter ???

Sathyamurthi Thambusamy
This is not about politics. It is about free speech. If you protest and people in power do not like it ( Gujarat, TN) they haul you on sedation. Given a choice I would rather wish my children live in less prosperous India than one without freedom of speech …

For all good things in India, we are very intolerant of criticism, we need to mature and grow up! just sample the vitriol educated bhakts generate on twitter …

BTW I am not sure shutting all of these shops solves anything but Govt and society at large not think of steps to crub access to school kids and support system for addicts and the addicts is morally not right.

பாசறை செல்வராஜ்

ம.க.இ.க.தோழர் கோவன் சிறப்பான பாடகர் தோழரை1987களில் இருந்தே தெரியும் அந்த காலங்களில் பேசும் அளவுக்கு பழக்கம் இல்லை ஆனாலும் நான் வனத்துறையில் பணியாற்றுகிறபோது வனஊழியர்/வனத்தோட்டக் காவலர் சங்கத்தின் பொதுச்செயளாலராகவும் பிறகு மாநிலத் தலைவராகவும் பணியாற்றிய போது சங்கத்தின் வேளையாக தொடர்ந்தாற்போல் திருச்சி செல்லவேண்டிய வாய்புகள் இருக்கும் அந்த நேரங்களில் திருச்சியில் பலயிடங்களில் ம.க.இ.க, பாடல்கள் பாடுவதை பார்பேன் 1990களுக்கு பிறகு பல பாடல்கேசட்டுகளை வெளியிட்டார்கள் அதில் அரிசன்னு பேருவைக்க யாரடா நாயே, அண்ணன் வர்ராரு, ஊரான் ஊறான் தோட்டத்திலே போன்ற பல பாடல்கள் மக்களிடத்தில் விழிப்புனர்வை உருவாக்கின
தமிழகத்தில் பல தலித் அமைப்புகள் இருந்தாலும் 1994காலங்களில் காஞ்சிபுரத்தை மைய்யமாக கொண்டு இயங்கிய அம்பேத்கர்பாசறை அமைப்போடு நல்ல உறவுகளோடு இருந்தது ம.க.இ.க தஞ்சையில் நடத்திய கலையிரவு நிகழ்வுகளில் தொடர்ந்து என்குடும்பத்தோடு பங்கெடுத்துள்ளேன் பாசறையின் அமைப்புகள் இருந்த கிராமங்களில் ம.க.இ.க பாடல்கள் ஒளிக்காத கிராமமே இல்லாத நிலையிருந்தது

மேலும் கோவன்உள்ளிட்ட பெண் தோழர்கள் எல்லாகிராமங்களிலும் வந்து நேரடியாக பாடியிருக்கின்றார்கள் பாசறை மாநிலத்துணைத்தலைவர் வழக்கறிஞர் ராமன் திருமணத்தில் இரவு கலைநிகழ்சி நடத்தினார்கள் வேலூர்மாவட்டம் அரக்கோனம் பக்கத்தில் உள்ள கணபதிபுரம் கிராமத்தில் அம்பேத்கர்பாசறை நடைத்திய கோவில்நுழைவு போராட்டத்தை புதியஜனநாயகம் இதழில் வெளியிட்டு அம்பேத்கர்பாசறைக்கு ஒரு கவுரவம் வழங்கினார்கள்

காஞ்சிபுரத்தில் 1995காலக் கட்டத்தில் திடிர்பணக்கார அரசியல் ரவுடிகளை ஒழித்துக்கட்டுவோம் என்ற இயக்கம் ம.க.இ.க.வால் நடத்தப்பட்டடது அதற்கு பாசறையின் முழுஆதரவு
இணைந்து பணியாற்றியுள்ளோம் அந்த வகையில் தோழர்.கோவன் நெருக்கமாக தெறியும் நல்லமனிதர் சமூகத்தின் மீது மிக அக்கறையோடு மட்டுமில்லாமல் அற்பணிப்போடு பணியாற்றக்கூடிய தோழர்.கோவன்

நான் கடைசியாக பென்னகரம் இடைத்தேர்தல் நேரத்தில்நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்தேன். தொடர்ந்து ம.க.இ.க.நிகழ்வுகளில் பார்த்துக்கொள்வேன் சென்னையில் உள்ள கீழைக்காற்று புத்தகளாயத்திற்கு செல்கின்றபோது கலைக்குழுவினரை விசாரித்துக்கொள்வேன்

தமிழக அரசே!
தோழர் கோவனை விடுதலைசெய்
பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு தடைபோடாதே
அமைதி காக்கும் மக்கள் நீண்ட நாள் அமைதி காக்கமாட்டார்கள்..,

சிங்கை பிரபாகரன்

டாக்டர் நோயாளியிடம் : உன் உடல் பலவீனமாகஇருக்குது, இனிமேல குடிக்கறதை நிறுத்திக்கோ உனக்கு எதாவது ஆச்சுனா பிள்ளைகுட்டியெல்லாம் அனாதையாகிடுவாங்க அதனால இனிமேல குடிக்காதே குடிக்காதே!

நோயாளி :இனி மேல சத்தியமா குடிக்கமாட்டேன் அய்யா!

டிரிங். டிரிங், டிரிங் டிரிங் (செல் அழைப்பு மணி ஓலிக்கிறது) ஹலோ

டாக்டர் மனோஜ் ஸ்பீகிங் …………..

மறு முனை : கமிசனர் அலுவலகத்திலிருந்து பேசுறேன், உங்களை கைது செய்ய மேலிடத்திலிருநது உத்தரவு!

டாக்டர் :என்ன தவறு செய்தேன்?

மறுமுனையில் :குடிக்ககூடாது என்று நோயாளிகளுக்கு அறிவுரை கூறினீர்களாமே இது தேச விரோத செயல் அல்லவா! அந்த குற்றத்திற்காக “அம்மா உத்தரவின்படி “கைது செய்கிறோம்!
டாக்டர் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!
‪#‎KOVAN‬

Marx Anthonisamy

ஜெயாவின் பாசிச முகம் வெளிப்படும் இன்னொரு தருணம்..

டாஸ்மாக் எதிர்ப்புப் பாடல்கள் பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் கோவனைக் கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிப்போம்.

தேசத் துரோகச் சட்டம் அவர் மீது போடப்பட்டுள்ளது. காவல்துறையினர் அதற்கு இப்படி விளக்கம் சொல்கிறார்கள். “சும்மா பாடுனா பரவா இல்லீங்க. ஜெயா மாதிரி ட்ரெஸ் பண்ணிகிட்டு ஒருத்தர் வாயில சாராயத்தை ஊத்ரமாதிரி பண்றதெல்லாம் நாங்க அனுமதிக்க முடியாது”

அதுக்காக இவர்கல் தேசத் துரோகச் சட்டத்தைப் பயன்படுத்துவார்களாம். ‘இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா’ காலம் நினைவுக்கு வருகிறது.

ஒரு அரசாங்கமே சாராயக்கடை நடத்த்ம், டார்கெட் நிர்ணயித்து சாராயம் விற்கும். தட்டிக் கேட்டால் தேசத் துரோகச் சட்டம்.

ஜெயா ஆட்சியின் பாசிசத்தை எதிர்ப்போம். மக்கள் கலைஞர் கோவனை விடுதலை செய்யக் குரல் கொடுப்போம்.

Arunan Kathiresan

“தேசத் துரோகத்தில்” இறங்கிய பாட்டு !

மதுவிற்கு எதிராகப் பாட்டு எழுதியதற்காக மகஇக பாடகர் கோவன் கைது  செய்யப்பட்டிருக்கிறார் . மகஇகவின் சில தடாலடிச் சிந்தனைகளோடு நமக்கு  உடன்பாடில்லை. ஆனால் மது எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு என்று தமிழக அரசிலேயே தனி இலாகா இன்னும் இருக்கும்போது (டி ஒ ஐ ஏடு) அத்தகைய பிரச்சாரப்பாடலை இயற்றியதற்காகக் கோவன் கைது செய்யப்பட்டிருப்பது அபத்தமானது. அதில் ஆட்சியாளர்கள் பற்றி அவதூறு இருப்பதாக அரசு கருதினால், இருக்கிறது அவதூறு வழக்கு. அது இந்த அரசுக்கு கைவந்தகலையும்கூட. அதைவிடுத்து பாடகரைக் கைது
செய்ததும்,அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததும் ஏற்கவே முடியாத செயல்.
ஏற்கெனவே நாடெங்கும் நடந்துவரும் கருத்துரிமை பறிப்பு வேலையில் இதுவும் சேரும்

Shankar A

ஜெயலலிதாவின் அழிவுகாலம் தொடங்கிவிட்டதன் அறிகுறியே தோழர் கோவனின் கைது.
தெருவெங்கும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழகத்தையே தள்ளாட வைத்த ஜெயலலிதாவை ஊற்றிக் கொடுத்த உத்தமி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது ? மதுவை எதிர்த்து ஒரு பாடலைப் பாடியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டமென்றால், ஜெயலலிதா எந்த அளவுக்கு பாசிசமயமாகி விட்டார் என்பதையே இது காட்டுகிறது.