privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககோவனுக்கு ஆதரவாக வீதி நாடகக் கலைஞர்கள் !

கோவனுக்கு ஆதரவாக வீதி நாடகக் கலைஞர்கள் !

-

1. வீதி நாடக கலைஞர்கள் கூட்டியக்கம், தமிழ்நாடு

தோழர் கோவன் கைதுமிழக அரசே!
புரட்சிப் பாடகர் கோவனை
விடுதலை செய்!

மக்கள் கலைஞர்களைக் கண்டு
அஞ்சிநடுங்குவது அரசுக்கும்,
ஆட்சியாளர்களுக்கும் இது முதன்முறை அல்ல…

உலகம் அறிந்த மக்கள் நாடகக் கலைஞன்
பிரக்ட்டின் நாடகத்தைக் கண்டு சர்வாதிகாரி
ஹிட்லர் அஞ்சி நடுங்கியது
உலகறிந்த வரலாறு

ஏகாதிபத்திய, வெள்ளைய ஆட்சிக்கு எதிராக
மேடைகள் தோறும் விடுதலைப் பாடல்களை
பாடியதற்காக 19 முறை சிறையில் அடைத்தும்
சாகும்வரை விடுதலை உணர்வை ஊட்டிய
தமிழகத்தின் விடுதலைப் போராட்ட கலைஞன்
தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸை,
குரலை அறிந்திருப்போம்.

தமிழக மக்கள் அறிந்த கலைஞன்
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் முற்போக்கு
நாடகங்களை தடுக்கவே உருவாக்கப்பட்டதுதான்
நாடக அரங்கேற்றத் தடைச்சட்டம் 1950.
கலை ஆயுதத்தின் வீரியம்
ஆட்சியாளர்களுக்குத் தெரியும்.
இப்படி அடக்குமுறையின் போதெல்லாம்
அதை நிறைவேற்றியவர்கள்
ஆளும் வர்க்கத்தின் காவல்துறைதான்.

ஜெ.ஜெ ஹிட்லர்
படம் : ஓவியர் முகிலன்

இன்று கொலைகாரர்கள், கொள்ளைக் காரர்கள்
கள்ளன் போலீஸ் விளையாட்டு விளையாடுகிறார்கள்
அவர்களை காவல்துறையால் பிடிக்க முடியவில்லை
தாலி அறுக்கும் குடியைப் பற்றி பாடினால்
நடுராத்திரியில் கைதுசெய்து ரகசிய இடத்தில்
விசாரணை நடத்துகிறது காவல்துறை.

தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற கருப்புச் சட்டம் மூலம்
நெருப்பை பொட்டலம் கட்ட நினைக்கிறது அரசு…
கலைஞனின் கலைக்குரல் காற்றில் கலந்து
விட்டால் அது மக்களின் மூச்சுக் காற்றாக
மாறிவிடும் என்று ஆட்சியாளர்களுக்கு தெரியாதா என்ன?

கலைமாமணிக்கும், தேசிய விருதுக்கும்
பாட்டெழுதி பணம் சம்பாதிக்கவும், புகழ் சேர்க்கவும்
தனது குரல் ஆயுதத்தை பயன்படுத்துபவரல்ல
மக்கள் கலைஞன் கோவன்
நான்கு அறைச்சுவர்களுக்குள் குளுகுளு என்று
அமர்ந்து எழுதியதல்ல அவரது பாடல்கள்…

“நாங்க படிக்கிற பாட்டு போராடத் தூண்டும் பாட்டு
சேத்த தொட்டு, நாத்த நட்டு, வாய்க்கா வரப்புல
எடுத்த மெட்டு..” என்று மக்களின் பிரச்சனைகளை
களத்தில் நின்று பாடுபவர் தோழர் கோவன்.

அதிகார ஆட்சியாளர்களின் கனவு மக்கள்
கலைஞன் கோவனை சிறைக்குள் அடைத்து விட்டால்
பிரச்சனை முடிந்து விடும் என்று

கோவனின் வாயில் முழங்கிய வார்த்தைகள் இன்று
லட்சக்கணக்கான மக்களின் வாய்களில் ஒலிக்கத்
தொடங்கி விட்டது.
இருண்ட காலத்தின் பாடல் ஒலிக்குமா? ஒலிக்கும்
இருண்டகாலத்தைப் பற்றி… என்றால் பிரக்ட்.
தமிழகத்தின் இருண்ட காலத்தில் பாடல்
ஒலிக்கின்றது. இருண்ட காலத்தைப் பற்றி…
டாஸ்மாக் என்ற இருண்ட காலத்தைப் பற்றி
இனி நாமும் பாடுவோம்!

கோவனின் குரல்தான் எங்கள் குரல், மக்களின் குரல்…
மக்களின் பிரச்சனைகளை நாடகமாக, பாடலாக வீதிகள் தோறும் எடுத்துச் செல்வோம்.

வீதி நாடகக் கலைஞர்கள் கூட்டியக்கம் – தமிழ்நாடு
8110091098

2. மூத்த வழக்கறிஞர் லஜபதிராய், உயர்நீதிமன்றம், மதுரை கிளை

கோவனை விடுதலை செய்திகாரத்தை காயப்படுத்தாத பாடலை உண்மையான கலையாக கருத முடியாது!
கடமை தவறும் அரசை யார் கேள்வி கேட்பது?

”தோழர் கோவன் ஒரு மக்கள் பாடகர். தமிழகத்தின் புனிதமான (?) காலடியில் புரண்டு சனநாயகம் பெற்றெடுத்த பண்ணையடிமைத் தலைவர்களைப் போல புனித காலைப் போற்றி பாட அவர் அரண்மனை விகடகவிஅல்ல.அவர் உண்மையான கலைஞர்.

அவரது பாடல் அதிகாரத்தை காயப்படுத்தியது. அவ்வாறு காயப்படுத்தாத பாடலை உண்மையான கலையாக கருத முடியாது. அவரது பாடல் மக்களை சாராயத்திற்கு எதிராக புரட்சி செய்ய சொன்னது . அரசியலமைப்பு சட்டமும் அதைத்தானே சொல்கிறது.மக்களின் உடல் நலத்தை காப்பது அரசின் கடமை அல்லவா ? கடமை தவறும் அரசை யார் கேள்வி கேட்பது?

நீதித்துறையும் , நிர்வாகமும் அதிகாரத்திற்கு கால் அமுக்கி கொண்டிருக்கும் இன்றைய சூழலில் சாமானிய மக்களுக்காக குரல் கொடுப்பது சமூக ஆர்வலர்களின் கடமை இல்லையா?

என்ன நோக்கத்திற்காக தோழர் கோவன் போராடினாரோ அதற்காக அவருடன் துணை நிற்போம்.”

3. Veera Balu முகநூலில்)

ரம்பு மீறி குடிக்க வைத்து
வேட்டி விலக
வீழ்ந்துகிடக்க விடுவது
நாகரீகம்

தோழர் கோவன்
படம் : ஓவியர் முகிலன்

விலகிய வேட்டியை சரிசெய்து
விழுந்து கிடப்பவனை
வீட்டில் சேர்ப்பது
ஆபாசம்

முட்டக் குடிக்க வைத்து
கெட்டவார்த்தை பேசி
வீதிகளில் அலைய விடுவது
நாகரீகம்

கெட்டவார்த்தை பேசியவன்
சட்டை பிடித்து
சட்டென்று அறைந்து
சுயத்தை உரைப்பது
ஆபாசம்

குடிவெறி புகுத்தி
குடும்பங்கள் அழிப்பது
நாகரீகம்

குடிகளின் நலன் காக்க
குடி ஒழிக்க
குரல் கொடுப்பது
ஆபாசம்

ஊத்திக் கொடுத்து
ஊரான் வாழ்க்கையெல்லாம்
ஊத்தி மூடிவது
நாகரீகம்

ஊறிப்போன குடிவெறிக்கு எதிராக
உரத்து குரல் கொடுப்பது
ஆபாசம்

பத்து ஊருக்கு
ஒத்தப் பள்ளிக்கூடம்
ஒத்த ஊருக்கு
பத்து மதுக்கூடம்
இது நாகரீகம்

மதுக்கூடம் ஒழி
கல்விக்கூடம் திற
இது ஆபாசம்

குடும்பத் தலைவன்
குடித்துக் களித்திட
குடும்பச் சிலுவையை
குழந்தைகள் சுமந்திட விடுவது
நாகரீகம்

ஊட்டப்படும் குடிவெறிக்கெதிராய்
ஊர் திரட்டி கோசம் போடுதல்
ஆபாசம்

எலும்பில்லாத நாக்குகள்
எப்படியும் பேசும்
எலும்பு துண்டுகளின்
சுவை கண்ட நாக்குகளோ
இப்படித்தான் பேசும்

அம்மணப் பேய்களை
ஆராதிக்கும் தேசம்
ஆடை பூட்டவரும் கோவன்களை
ஆபாசம் என்றே ஏசும்…..

4. விவசாயிகள் விடுதலை முன்னணி, தேனி

kovan-vivimu-theni-posterஇவண்

விவசாயிகள் விடுதலை முன்னணி, தேனி மாவட்டம்