privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதோழர் கோவன் கைது - திருச்சி, தஞ்சை, கடலூர் போராட்டங்கள்

தோழர் கோவன் கைது – திருச்சி, தஞ்சை, கடலூர் போராட்டங்கள்

-

1. தஞ்சை

கோவன் கைது - தஞ்சை ஆர்ப்பாட்டம்மழைச்சாரலில் நனைந்து திரண்டு நின்ற மக்கள்

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் தோழர் கோவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரியும், தேசத்துரோக வழக்கைத் திரும்பப் பெறக்கோரியும், ஜனநாயக சக்திகளின் குரல் தஞ்சையில் ஓங்கி ஒலித்தது.

தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் 31-10-2015 அன்று மாலை மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களும், ஐநூறுக்கும் குறைவில்லாத பொதுமக்களும் கொட்டும் மழையிலும் திரண்டு நின்ற காட்சி தோழர் காளியப்பனைக் கைது செய்ய முகாமிட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினருக்கு நிச்சயம் அதிர்ச்சியூட்டியிருக்கும்.

ம.க.இ.க தஞ்சை கிளைச் செயலர் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைப் பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பாளர் தோழர்.மாரிமுத்து தொடங்கி வைத்து உரையாற்றினார். “இயற்கை வளத்தைக் காக்கவும், விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கவும் ஒலித்த குரல் உங்கள் அடக்குமுறைகளினால் ஓய்ந்து விடாது. எங்களது போராட்டம் உங்களது அராஜகத்திற்கு முடிவுகட்டும்” என்று எச்சரித்தார்.

அடுத்து கண்டன உரையாற்றிய அகில இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலர் ஆர்.கே.செல்வகுமார், “தோழர் கோவன் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மீது எதிரிகளால் தொடுக்கப்படும் இந்தத் தாக்குதல்கள் தோழர்கள் மிகச் சரியாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதாக உள்ளது” என்றும், “மக்கள் அதிகாரமாய் ஒன்றிணைந்து முன்னேறுவோம்” என்றும் கூறினார்.

கடந்த கால பாசிச ஜெயா அரசின் அடக்குமுறையை நினைவு கூர்ந்து உரையாற்றிய மக்கள் அதிகாரம் தஞ்சை தோழர் அருள் உங்களது அதிகாரத் திமிரும், அடக்குமுறையும் எங்களின் உறுதிக்கு மேலும் வலு சேர்க்கும் என்று சூளுரைத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தஞ்சை நகரச் செயலர் தனது கண்டன உரையில், “ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதிலேயே கவனமாக இருக்கும் ஜெயலலிதா அடக்குமுறையை ஒரு வழிமுறையாகக் கொண்டு டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் பின்பற்றுகிறார். சசிபெருமாள் மரணம் உரம் சேர்த்ததைப்போல, தோழர் கோவனின் குரல் போராட்டக் களத்திற்கு உரமிட்டிருக்கிறது” என்பதை சுட்டிக்காட்டினார்.

“மது ஒழிப்பிற்காக ஒருகோடி செலவு செய்து பிரச்சாரம் செய்வதாகக் கூறும் அரசு, கோவனைக் கைது செய்தது ஏன்? அவர் மதுஒழிப்பைத் தானே பிரச்சாரம் செய்தார்” என்று ஜெயா அரசின் நகைக்கத் தக்க முரணை சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன்.

“பாடல் வெளிவந்து ஒன்றரை மாதம் ஆகிறது. இப்போது விழித்துக்கொண்டு அடக்குமுறையை ஏவுகிறது. அரசு நான்குஇலட்சம் பேர்கள் கேட்ட பாடலை, பதினான்கு இலட்சம் பேர்களைக் கேட்க வைத்த அம்மா மற்றும் அதிகார வர்க்கத்துக்கு நன்றி” தெரிவித்து உரையைத் தொடங்கிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆசாத் அ.தி.மு.க அடிமைகளையும், அதிகாரிகளையும் தோலுரித்தார்.

“படைப்பாளிகள் சுதந்திரம் எங்கே உள்ளது?” என்று கேள்வி எழுப்பிய தோழர் பாரிவேந்தன் அச்சுறுத்துவது மூலம் போராளிகளை ஒடுக்கி விட முடியாதென்று கூறினார்.

மதுவைத் தொடாதே மனிதனாவாய்! மதுவை நினைக்காதே மாமனிதனாவாய்!” என்று எழுதிப்போட்டு விளம்பரம் செய்யும் காவல்துறை மது ஒழிப்புப் பிரச்சாரத்தை முடக்குவது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய ஏ.ஐ.டி.யு.சி யின் மாவட்டத்தலைவர் சேவைய்யா தோழர் கோவனை விடுதலை செய்ய வேண்டும், வழக்கை வாபஸ் பெற வேண்டும், தோழர் காளியப்பன் உள்ளிட்ட தோழர்களைத் தேடுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிந்தார்.

“சிறையிலிருக்க வேண்டிய மக்கள் விரோதிகள் வெளியில் இருப்பதையும், மக்களுக்காக வாழ்பவர்கள் சிறையிலிருப்பதையும், எத்தனை நாள் சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம்” என்ற கேள்வியை எழுப்பிய கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிஸ்ட், மக்கள் விடுதலை மாவட்ட செயலர் இரணியன் அடக்குமுறைகளுக்கெதிராக ஒன்றுபட்டுப் போராட அறைகூவல் விடுத்தார்.

தமிழர் தேசிய முன்னணியின் தேசியச் செயலாளர் சதா முத்துக்கிருஷ்ணன், “கோவன் கைது செய்யப்பட்டிருப்பது, காளியப்பன் தேடப்படுவது ஆகியவை மிக மோசமான நடவடிக்கைகள். அதனை எதிர்த்துத் தமிழர் தேசிய முன்னணி சார்பாகக் கடும் கண்டனத்தை பதிவு செய்வதாக” அறிவித்தார்.

விடுதலைத் தமிழ்ப்புலிகள் அமைப்பின் குடந்தை அரசன், “நான் அதிமுக அணியில் இருக்கும் ஒரு நபர்தான் என்றாலும், இதில் நான் உணர்வுப்பூர்வமாகப் பங்கேற்கிறேன். அதிமுக.விற்கு எதிராக நான் பங்கெடுக்கும் முதல் நிகழ்ச்சி இது. ‘அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே?’ என்று பாடி உணர்வூட்டிய கோவனையும், ம.க.இ.க.வையும் என்னால் மறக்க முடியாது. ம.க.இ.க மீது கைவைத்திருப்பது ஜெயலலிதாவிற்கு சனி பிடித்துவிட்டதைப் பறைசாற்றுகிறது” என்றும், கடந்த கால இருண்ட காலம் பாடல்களை அம்மையாருக்கு நினைவூட்டுவதாக அறிவித்தார்.

“ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. எந்த அரசு வந்தாலும் மது கொள்கைக்கு ஆதரவாகத்தானிருக்கும். நம்மைப் போன்றவர்கள் போராடினால்தான் டாஸ்மாக்கை விரட்ட முடியும்” என்று கூறிய ம.தி.மு.க.வின் தோழர் விடுதலை தமது கட்சியின் தலைவர் வை.கோ அவர்கள் இன்று ஒரு மேடையில் கோவன் பாடிய அதே பாடலைப் பாடி, தன்னையும் கைது செய்யச் சொன்னதைச் சொல்லி, தோழர் கோவனின் கைதுக்கு மதிமுக.வின் சார்பாகக் கண்டனத்தைப் பதிவு செய்தார்.

“தோழர் கோவனின் கைது ஜனநாயக சக்திகளிடம் ஒன்றிணைப்பை உருவாக்கியுள்ளது. தமிழகம் மட்டுமல்ல: இந்தியா முழுவதும் எழுத்தாளர்கள் படைப்பாளிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மோசமான நிலைமையை எடுத்துக் காட்டுகிறது. மதவெறியைத் தூண்டும் மாட்டுக்கறி பிரச்சனை, எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்கள், கோவன் கைது இவைகள் தனித்தனியானவை அல்ல. இவைகளுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் காலத்தின் கட்டாயம்” என்றதோடு மாநிலச் செயலரின் கண்டனத்தையும் பதிவு செய்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)இன் மாவட்டச் செயலர் ஆர்.மனோகரன்.

இறுதியாக நிறைவுரை ஆற்றிய மக்கள் அதிகாரம் திருச்சி தோழர் தர்மராஜ், “டாஸ்மாக்கை மூடக்கூடாது என்று பிடிவாதமாய் இந்த அரசு உள்ளது. அதற்குக் காரணம் வருமானம் மட்டுமல்ல. மக்களின் சிந்தனையை மழுங்கடிப்பது, மயக்கதில் ஆழ்த்துவது மூலம்தான் தங்களது கொள்ளையை, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமென்பதில் கவனமாக இருக்கிறார்கள். அதற்காகத்தான் இவை போன்ற அடக்குமுறையும் அரங்கேறுகிறது. இந்த அடக்குமுறைகளைச் சட்டப்பூர்வ சமாதான வழிகளில் ஒழித்துவிட முடியாது. போராட்டக் களத்தில்தான் துடைத்தெறிய முடியும். தோழர் கோவனின் கைது மக்கள் அதிகாரமாய் ஒன்றுபட வேண்டுமென்ற அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆகவே மக்கள் அதிகாரமாய் ஒன்றிணைவோம்” என்று அறைகூவல் விடுத்தார்.

ஒரு சுவரொட்டி கூட அச்சிட்டு ஒட்ட முடியாத நிலையில் சாரல் மழையில் இரண்டரை மணிநேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செவிவழிச்செய்தியின் மூலம்தான் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானவர்கள் அணிதிரண்டிருக்கிறார்கள் என்று குறிப்பாகச் சொல்ல வேண்டிய ஒன்று.

தோழர் கோவன் சிறையில் அடைக்கப்பட்ட அதே இரவில் மூத்த தோழர் டேப் காதர் இயற்கை எய்தினார். இறுதி காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு புரட்சிகர தோழர்களுக்கு உத்வேகம் ஊட்டிய தோழர் டேப் காதருக்கு ஆர்ப்பாட்ட இறுதியில் அஞ்சலி செலுத்தியதோடு ஆர்ப்பாட்டம் நிறைவு செய்யப்பட்டது.

மக்கள் அதிகாரத்தின் நவம்பர் 2 ஆர்ப்பாட்டத்திற்கு எப்படி செல்வது? என்ற கேள்வியை எழுப்பியபடியே கொட்டும் மழையிலும் அடுத்தகட்ட போராட்டம் பற்றி வினவிக் கொண்டிருந்தார்கள் கிளர்ச்சியாளர்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செய்தி
வினவு செய்தியாளர்

2. திருச்சி

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த திருச்சி தில்லைநகர் காந்திபுரம் பகுதி பொது மக்கள் இன்று 01-11-2015 காலை 10 மணி அளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

தோழர் கோவன் கைதுகூடுதலாக அப்பகுதி பெண்கள் கூறுகையில், “தோழர் கோவன் அவர்களை எங்களுக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். மக்களுடன் மிகுந்த பாசத்துடன் குடும்ப உறுப்பினராக பழகக்கூடியவர். எங்களது பகுதியில் நடக்கும் நல்லது,கெட்டது நிகழ்வுகள் எது நடந்தாலும் அவரை கட்டாயம் அழைப்போம். அவரும் மறுப்பு சொல்லாமல் எங்கள் மேல் உள்ள பாசத்தால் பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் கலந்து கொள்வார்.

அவர் இயங்கி வரும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் அனைத்து கருத்துகளையும் எங்களிடம் கூறி பலரை சமூக பணியாற்ற மாற்றியுள்ளார். அவரின் புரட்சிகட்ர பாடல்கள் எங்களை நிறைய தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

இப்படிப்பட்டவரை குடிக்கு எதிராக பாடல்கள் பாடிய குற்றத்திற்காக இரவு நேரத்தில் முன் அறிவிப்பின்றி வீடு புகுந்து கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சென்னை புழல் சிறையில் அடைத்த தமிழக முதல்வரை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, டாஸ்மாக் கடைகளை திறந்து குடும்பத்தையே குடிக்க வைத்து சீரழித்த அரசின் மேல் நாங்கள் மிகுந்த கோபத்துடன் இருக்கின்றோம். இந்நிலையில் மக்கள் கோபங்களை பாடலாக்கி பாடிய மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் மீது அரசு காட்டும் அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கின்றோம், அவரை உடனடியாக விடுதலை செய்யும் வரை எங்களது போராட்டம் ஓயாது” என தெரிவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இவர்களுடன் அப்பகுதி தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் தோழர்.கமலக்கண்ணன் கலந்து கொண்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி.
தொடர்புக்கு: 9095604008.

3. கடலூர்

மூடு டாஸ்மாக்கை மூடு!
பாடு அஞ்சாதே பாடு!
கருத்துரிமையை பறிக்காதே
மக்கள் பாடகர் கோவனை விடுதலை செய்

ஆர்ப்பாட்டம்

02-11-2015 காலை 10 மணி உழவர் சந்தை, கடலூர்

தலைமை
தோழர் ராமலிங்கம், மக்கள் அதிகாரம், கடலூர்

கண்டன உரை

திரு இள புகழேந்தி, தி.மு.க
மாநில மாணவரணி செயலாளர்திரு ஆ. வந்தியத்தேவன், ம.தி.மு.க
மாநில வெ.பி. செயலாளர்திரு பா. தாமரைச் செல்வன், வி.சி.க
மாவட்டச் செயலாளர்தோழர் வ.கடல்தீபன், நாம் தமிழர் கட்சி,
மாவட்டச் செயலாளர்திரு A.G.தஷ்ணா, தே.மு.தி.க
நகர செயலாளர்தோழர் சுப்புராயன், சி.பி.எம்
நகர செயலாளர்தோழர் குலோப், சி.பி.ஐ
மாவட்ட இணைச் செயலாளர்திரு குமார், தலைவர்
வெண்புறா பொதுநல இயக்கம், கடலூர்
தோழர் செந்தில்குமார், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
மாவட்ட தலைவர் (வழக்குரைஞர்)திரு M.G.பஞ்சமூர்த்தி,
வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், மருங்கூர்திரு சிறுத்தொண்ட நாயனார், (ஓய்வு)
தலைமை ஆசிரியர், பவழங்குடி.திரு வை.வெங்கடேசன்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், கடலூர்.திரு பூங்குன்றன்,
ம.வா.ப.இயக்கம், அய்யம்பேட்டைதிரு லோகநாதன்,
ம.வா.பா.இயக்கம், பெரியப்பட்டுதிரு தென்சிவக்குமார்,
மாவட்ட தலைவர், தி.க., கடலூர்.திரு தோழர் பாலு, ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், கடலூர்.

தகவல்
மக்கள் அதிகாரம்,
கடலூர்