Saturday, December 7, 2024
முகப்புஇதரEnglishகோவன் கைதை கண்டித்து இலண்டனில் ஆர்ப்பாட்டம்

கோவன் கைதை கண்டித்து இலண்டனில் ஆர்ப்பாட்டம்

-

Parai Voice of freedom condemns Kovan’s arrest – Protest for justice

பறை விடுதலைக்கான குரல்

கோவன் அண்ணா கடந்த வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எதற்காக கைது செய்யப்பட்டாரோ அந்தப் பாடலை கீழே உள்ள சுட்டியில் கேட்கலாம்.

அந்தப் பாடலில் அவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து பாடுகிறார். ஜெயலலிதா எவ்வளவு நல்லவர் அல்லது கெட்டவர் என்று நான் பேசப் போவதில்லை. ஜனநாயகம் நிலவுவதாக சொல்லப்படும் நாட்டில் மக்களுக்கு அடிப்படை பேச்சுரிமை இல்லை. கலைஞர்கள் சமூக, அரசியல் பிரச்சனைகள் பற்றி எழுதவோ பாடவோ சுதந்திரம் இல்லை என்பதுதான் பிரச்சனை.

உங்களால் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாது என்றால், நீங்கள் அரசியல்வாதியாக இருக்கக் கூடாது. இல்லா விட்டால், இது போன்று அதிகார முறைகேடு, மனித உரிமை மீறலில்தான் கொண்டு விடும்.

கோவன் அண்ணா ஒரு கலைஞர். அவரைப் போன்ற கலைஞர்களை இன்று காண்பது அரிது. அவர் சமூக, அரசியல் பிரச்சனைகள் பற்றியும் உலகை எப்படி மாற்றுவது என்றும் பாடல்கள் எழுதி பாடுவதோடு நின்று விடுவதில்லை. அவர் களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறார். எனவே கலைஞர்களாகிய நாம் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று கருதுகிறேன்.

தமிழ்நாடு போலீஸ் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு
நவம்பர் 9, 2015 அன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அனைவரும் கலந்து கொள்ளுங்கள்

இடம்.
இந்திய தூதரகம்,
இந்தியா ஹவுஸ்,
ஆல்ட்விச்,
லண்டன்,
WC2B 4NA

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க