தமிழகத்தில் மாஃபியா ஆட்சி பாகம் -2
தோழர் கோவன் கைதை ஒட்டி அ.தி.மு.க மற்றும் போலிசு செய்து வரும் அவதூறு பிரச்சாரங்களை அம்பலப்படுத்துகிறார், தோழர் மருதையன்.
தமிழகத்தில் மாஃபியா ஆட்சி பாகம் -2
தோழர் கோவன் கைதை ஒட்டி அ.தி.மு.க மற்றும் போலிசு செய்து வரும் அவதூறு பிரச்சாரங்களை அம்பலப்படுத்துகிறார், தோழர் மருதையன்.
நான் கோவன் பாடிய பாட்டில் எந்தத் தரக்குறைவையும் காணவில்லை. ஜெயலலிதா ஊற்றிக் கொடுப்பது போன்று காட்டியதில் எந்தப் பிழையும் இல்லை. உள்ளபடியே அது இத்தகைய கவர்ச்சி ஆளுமைகள் குறித்து மக்களிடம் நிலவும் படிமங்களை அடித்து நொறுக்க உதவும். ஆனால் ஜெயலலிதாவை அவள், இவள் என ஒருமையில் விளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை ஆனந்த விகடன் தலையங்கமும் சுட்டிக் காட்டியுள்ளது. இது ஆணாதிக்க வெளிப்பாடோ எனக் கூட எண்ண வேண்டியுள்ளது.
நலங்கிள்ளி, ஆண்டவனையும், ஆள்பவனையும் ஒருமையில் விளிப்பது தமிழ் மரபுதான். நடப்பியலில் கொடும் நடத்தை கொண்டவர்களை ஹிட்லர், ராஜபக்ஷே,மோடி,யுவராஜ் போன்றவர்களைக் கூட அப்படி விளிக்கலாம். தவறில்லை. ஆண்களை அவன் இவன் என்று விளிப்பதால் இது பெண்ணாதிக்கம் என்று பொருள் கொள்ள வேண்டாம். ஆ.விகடன் ஒன்றும் அறம் சார்ந்த விழுமியங்களுக்கு அப்பாடக்கர் அல்ல! நன்றி
மதிப்பு என்பது கேட்டுப் பெறுவது இல்லை…. ஒவ்வொருவர் மனதுக்கும் தெரியும் மதிக்கப்பட வேண்டியவர்கள் யார் என்று. அது சிந்திப்பவரின் மன நிலையைப் பொறுத்தது.
என்ன இருந்தாலும் ஒரு மானில முதல்வரை அப்படி காட்டி இருக்க கூடாது. சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு. அதற்க்குட்பட்டு விமர்சனம் செய்ய வேண்டும்.முதல்வரும் மனிதர்தான். அவருக்கும் வசிக்க இடம் வேண்டும். அதற்க்கு போயசில உல்லாசம் என்று பாடினால் எப்படி?
போயசில உல்லாசம் என்று பாடாமல், எப்படி பாடுவது?
கொடநாட்டில் கும்மாளம் என்று பாடலாமா?
அவர் க்கேக்குர கேல்விக்கு இப்பவும் யாரும் பதில் சொல்லநாதி இல்ல.
அருமையான விளக்கம். பாடலில் தவறு ஏதுமில்லை. நாட்டு நடப்பைத்தான் எழுதியுள்ளார்கள். எல்லாவற்றிலும் தனக்குப் பெருமை தேடிக்கொள்வது. சிறுமை ஏற்படும் போது சினப்படுவது. இது எந்த விதத்தில் நியாயம்?