Saturday, January 28, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமுஸ்லீம்களுக்கு வீடு என்ன.... உயிரையே கொடுப்போம் !

முஸ்லீம்களுக்கு வீடு என்ன…. உயிரையே கொடுப்போம் !

-

சென்னை தாம்பரம் பகுதியில் படகில் சென்று மக்களைக் காப்பாற்றும் த.மு.மு.க தொண்டர்கள்.
சென்னை தாம்பரம் பகுதியில் படகில் சென்று மக்களைக் காப்பாற்றும் த.மு.மு.க தொண்டர்கள்.

வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் முஸ்லீம் அமைப்புகளின் பங்களிப்பு குறித்து மக்கள் மனதார பாராட்டியிருந்ததை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். கழுத்தளவு தண்ணீரில் சென்று மக்களுக்கு உணவு வழங்கியதாகட்டும், சாக்கடைகளை சுத்தம் செய்ததாகட்டும் அனைத்தும் அர்ப்பணிப்போடு நடந்தன. பணியில் ஈடுபட்ட முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள், அந்த முனைப்பை இயக்கியது எது? அவர்களை சந்தித்து உரையாடினோம்.

முஸ்லீம் அமைப்புக்கள், இஸ்லாம் மதம் குறித்த விமரிசனங்கள் வினவு தளத்தில் நிறைய இருக்கின்றன. இந்துமதவெறியர் குறித்து எமது விமரிசனங்களை தேடி படிக்கும் பல முஸ்லீம் நண்பர்கள் முதலில் இதை படிக்கும் போது அதிரச்சியடைகிறார்கள். பின்னர் காலக்கிரமத்தில் அந்த விமரிசனங்களின் அடிப்படையை, நேர்மையை ஓரளவிற்கேனும் புரிந்து கொள்கிறார்கள்.

ஒரு மனிதனை மதம் சார்ந்து திரட்டக் கூடாது, அப்படி திரட்டுவது ஆளும் வர்க்கத்திற்கே இறுதியில் உதவுவதாய் இருக்கும் என்பதற்கு நிறைய வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. மத நம்பிக்கையோ, மத சடங்குகளோ, இறை வழிபாடோ அனைத்தும் ஒரு தனிநபரின் உரிமை மட்டுமே. நமது அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளுக்காக எந்த மதத்திலும் தீர்வோ, வழியோ கிடையாது. அதனால்தான் அனைத்து மதங்கள், சாதிகளைச் சார்ந்த உழைக்கும் மக்கள் வர்க்கமென்ற முறையில் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்துகிறோம்.

சென்னை மழை வெள்ள நிவாரணப் பணிகளில் இதுதான் நடந்திருக்கிறது. தாங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்காகத்தான் நிவாரணப் பணிகளை செய்தோம் என்று சில முஸ்லீம்கள் கூறினாலும் அவர்களை அப்படி சேவை செய்ய வைத்தது, மதமல்ல. கஷ்டப்படும் மக்களை நேரில் பார்த்ததாலும், பிறகு மற்ற பிரிவு மக்கள் பாராட்டுவதால் வரும் உற்சாகமுமே முஸ்லீம் அமைப்பு தொண்டர்களை இயங்க வைத்தன என்பது எமது கருத்து.

tntj-releif-work
நிவாரணப் பணியில் ஈடுபடும் டி.என்.டி.ஜே தொண்டர்கள்

மேலும் மதம் சார்ந்து மட்டும் அதிகம் போராடும் அந்த இயக்கங்கள் முதன் முறையாக ஒரு பொதுப் பிரச்சினைக்காக அனைத்து பிரிவு மக்களுக்காகவும் பெருமளவில் அணிதிரண்டு வேலை செய்திருக்கின்றனர். இந்த இணைப்பு மக்களிடம் இணக்கத்தையும், ஜனநாயகத்தையும், சகோதர உணர்வையும் ஓரளவிற்கேனும் அறிமுகப்படுத்தும்.

முஸ்லீம் மக்கள் குறித்து இந்துக்களின் பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் வன்மத்தையும் இந்த வெள்ள நிவாரணப் பணி அழித்து விட்டிருக்கிறது. ஊடகங்களில் முஸ்லீம் அமைப்புகள் குறித்த செய்திகள் பெரும்பான்மையாகவும், ஆர்.எஸ்.எஸ் குறித்த செய்திகள் சிறுபான்மையாகவும் வருவதைக் கண்டு இந்துமதவெறியர்கள் தாங்கவொண்ணா எரிச்சலில் இருக்க வேண்டும். உண்மையில் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களின் பேரைச் சொல்லி இயங்கும் மதவெறியர்களை தோற்கடித்திருக்கிறார்கள்.

தவ்ஹித் ஜமா அத் அமைப்பினரை ஆபாசமாக வசைபாடிய கல்யாணராமன் எனும் பா.ஜ.க மதவெறியனுக்கு இந்துக்களே திருப்பி அடித்திருக்கின்றனர், முகநூலில். இவையெல்லாம் தமிழக மண்ணில் இந்துமதவெறிக்கு எதிராகவும் அதே நேரத்தில் ஜனநாயக உணர்வின் அடிப்படையிலும் மக்கள் திரள்வதற்கும் சேர்வதற்கும் வழியெடுத்துக் கொடுக்கும்.

இனி அந்த இளைஞர்கள் பேசுவதைக் கேட்போம்.

சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு – மசூதி தோட்டம் பகுதி. இப்பகுதியில் கடந்த ஏழு நாட்களாக உணவு உறக்கம் மறந்து வேலை செய்து கொண்டிருக்கிறார் மனித நேய மக்கள் கட்சியின் வட்ட செயலாளர் சேட் (எ) அஷ்ரப் உசைன். நாம் சென்ற போது அங்கே போர்வைகளை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.

muslims-flood-relief-photos-21
சேட் என்ற உசைன், ஆட்டோ தொழிலாளி, மனித நேய மக்கள் கட்சியின் வட்டச் செயலாளர்.

“பாய் தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க மாடி வீடு. கீழ் வீடுகளில் தான் பாதிப்பு உங்களக்கு கொடுக்க முடியாது”- என்று உரிமையோடு ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார், உசைன். இதைக் கேட்டு மாடியில் வசிக்கும் பாய் பின்னால் செல்ல தரைதளங்களில் வசிக்கும் ஏனைய ‘இந்து’, மற்றும் ‘முஸ்லீம்கள்’ நிவாரணப் பொருட்களை பெற்று செல்கிறார்கள். அவரிடம் பேசினோம்.

கேள்வி : கடந்த ஒரு வாரமா நீஙக செய்து வரும் பணிகள் குறித்து சொல்லுங்க?

உசைன்: முதல் நாள் பகலில் தண்ணீர் கரண்டை கால் வரை தான் வந்தது. மக்களும் இதுக்கு மேல வராதுனு நெனச்சிட்டு இருந்தாங்க. நைட்டு திடீருனு தண்ணி அளவு அதிகரிக்க ஆரம்பிச்சிருச்சு. உடனடியா மக்களை வெளியேற்றினோம். நடக்க முடியாத பெரியவர்களை டிரை சைக்கிளில் ஏற்றி கூட்டிச் சென்றோம். சீக்கிரமாகவே இந்த பகுதி தண்ணீரால் சூழப்பட்டு விட்டது.

காப்பாற்றப்பட்ட மக்களை தங்க வைக்க இடமில்லை. மசூதிக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று இருந்தது. அது பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைக்க காவலாளி எதிர்ப்பு தெரிவித்தார். “போலீஸ் கேஸ் வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் மக்களை தங்க வைக்கணும்” என்று காவலாளிக்கு எடுத்துச் சொல்லி துணிந்து பூட்டை உடைத்து மக்களை தங்கவைத்தோம்.

சில பகுதிகளில் மக்கள் வெளியேற முடியாமல் மாடிகளில் சிக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இரண்டு நாட்கள் உணவு, பால் வீடு வீடாக கொடுத்தோம். இது சபரிமலை சீசன். ஏரியா இந்து சகோதரர்கள் பலர் மாலை போட்டிருந்தார்கள். அவங்களுக்கு பிரியாணி கொடுத்தால் நம்மை தப்பா நினைக்கமாட்டார்களா. அவர்களுக்காக பிரிஞ்சி , லெமன் சாதம் சமைத்து கொடுத்தோம்.

ஓ.எம்.ஆர் கந்தன்சாவடி அருகிலிலுள்ள பகுதிகளிலும் மீட்பு பணியில் ஈடுபட்டோம். விநாயகபுரம் பகுதியில் கரண்டைகாலுக்கு மேல்வரை சேறு. அன்சர்பாஷா, அலாவுதீன் மற்றும் பகுதி இளைஞர்கள் சிறப்பாக உதவினார்கள்.

muslims-flood-relief-photos-13
நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சேற்றுப் புண்!

(நாம் பார்த்த வரை மீட்பு பணியில் ஈடுபட்ட முஸ்லீம் இளைஞர்கள் பலரும் காலில் சேற்றுப்புண் மற்றும் மீட்பு பணியின் போது அடிபட்ட காயங்களோடு இருப்பதைப் பார்க்க முடிந்தது.)

கேள்வி : நீங்க என்ன தொழில் செய்யறீங்க? இந்த உதவி வேலைகள் செய்யுறதால உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பில்லையா?

உசைன்: ஆட்டோ வெச்சிருக்கேன். 7 நாள் வேலைக்கு செல்லவில்லை. பலரும் உதவி செய்து வருகிறார்கள். தனிப்பட்ட முறையில் சில நகைகளை அடகுவைத்திருக்கிறேன்.

கேள்வி: மறுமையில் சொர்க்கம் கிடைக்குமுனு உதவி செய்யுறதா சில முஸ்லீம் தொண்டர்கள் சொல்லுறாங்க. உங்க கருத்து என்ன?

உசைன்: மனுசனுக்கு மனுசன் மனிதநேயம் தான் சார் முக்கியம். மார்க்கம் இரண்டாவதுதான். எங்க மார்க்கமும் மனிதநேயத்தை தான் சொல்லுது. இப்போ உங்க அப்பா அம்மாவை உங்க கண் முன்னால யாராவது அடிச்சா எந்த உணர்ச்சி வருமோ அப்படி தான் சார் மக்கள் இப்படி துயரப்படும்போது இருக்கும்.

கேள்வி: எப்போதும் அடித்தட்டு மக்கள் பகுதியிலேயே வெள்ளம் வருதே, போயஸ் தோட்டம் பகுதியில வெள்ளம் ஏன்
வருவதில்லை?

உசைன் : சட்டம்னா என்ன சார்? இங்க எல்லாருக்கும் ஒரே சட்டம் கிடையாது. கனிமொழி எவ்ளோ கொள்ளையடிச்சி இப்போ வெளியே இருக்கு. ஜெயலலிதாவ ஒரு நீதிபதி ஜெயில்ல போட்டா இன்னொருத்தர் விடுதலை பண்ணிட்டார். போலீஸ் நினைத்தால் தவறுகளை தடுக்க முடியும் ஆனா அவர்களுக்கு கட்டிங் செல்கிறது. அரசு மருத்துவமனைக்கு போங்க. குழந்தை பிரசவத்துக்கு ஆண் குழந்தைக்கு 2000, பெண் குழந்தைக்கு 1000 ரூபா கொடுக்கணும். அதை கொடுக்கலேன்னா நம்மை மதிக்கவே மாட்டாங்க. என் காலுல் அடிபட்ட போது அரசு மருத்துவமனையில் கட்டு போடவே பல மணி நேரம் ஆக்குறாங்க. சாதாரண ஜனங்கள்னாலே அலட்சியம் தான்.

முஸ்லீம்ல கூட கொஞ்சம் பேரு பாதுகாப்பா வெளியூருக்கு கிளம்பிட்டாங்க. திருநெல்வேலி அங்க இங்கனு. போன் போட்டு திட்டுனேன். அங்கயும் தண்ணிவந்துட்டா எங்கடா போவீங்கணு.

கேள்வி: முஸ்லீம்களில் பலர் கோவில் பிரசாதம் சாப்பிடுவதில்லை. ஆனால் இந்த நிவாரணப் பணிகளில் பல கோவில்கள் மற்றும் சிலைகளை சுத்தம் செஞ்சுருக்கீங்க? அதை எப்படி பாக்குறீங்க?

உசைன்: பல அமைப்புகள் நிவாரணப் பணி செய்யுறாங்க. இந்து, முஸ்லீம் என்று தனித்தனியாக பிரிச்செல்லாம் சுத்தம் செய்ய முடியாது. இஸ்லாம் ஒரிறை கொள்கை கொண்டது. பிரசாதம் சாப்பிடக் கூடாது தான். ஆனா சில சமயங்களில் நண்பர்களில் மனது கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சாப்பிட்டிருக்கிறேன். ஐந்து வேளை தொழுவதால் மட்டும் யாரும் சொர்க்கத்திற்கு போக முடியாது. அடுத்தவர் மனது புண்படுத்தக்கூடாதுனும் மார்க்கம் சொல்கிறது. சமூகத்திற்கு என்ன செய்தோம், குடும்பத்தை எப்படி வழிநடத்தினோம்னு பல விசயம் இருக்கிறது.

muslims-flood-relief-photos-19
நிவாரணப் பொருட்களை பெற்றுச் செல்லும் பெண்கள்!

கேள்வி : இப்போது முஸ்லீம் அமைப்புகள் பாராட்டப்படுவதற்கு காரணம் வெள்ளம் என்ற அனைத்து மக்களுக்குமான பொதுப்பிரச்சனையில் இறங்கி உதவி செய்திருப்பதால் தான். ஆனால் சில முஸ்லீம் அமைப்புகள் மதம் சார்ந்த பிரச்சனையை மட்டும், முஸ்லீம் மக்களுக்கான கோரிக்கைகளை மட்டும் எடுத்து போராடுவது சரியா?

உசைன்: பிராபகரன் பையன் கொல்லப்பட்ட செய்த வந்த போது நாங்கள்தான் முதலில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டோம். எங்களுக்கு அடுத்து தான் வை.கோ-வே வந்தார். பொதுப் பிரச்சனைகளுக்கும் செல்கிறோம். நாலு பேரும் நமக்கு தேவைதான். மற்ற சமுதாயத்தை சேக்காம பண்றது தவறு.

கேள்வி : அப்படியே சென்றாலும் விஸ்வரூபம் பிரச்சனைக்கும், கார்டூன் பிரச்சனைக்கும் திரள்கிற பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பொதுப் பிரச்சினைகளுக்கு வருவதில்லையே ?

உசைன்: எங்க பகுதியிலிருந்து எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே அளவு எண்ணிக்கையில தான் செல்கிறோம். ஆனாலும் நபிகள் நாயகம் கார்டூன் எல்லாம் உணர்வு ரீதியான பிரச்சினை அதனால் மக்கள் அதிகமாக வருவாங்க.

கேள்வி : நீங்கள் பொதுப் பிரச்சனைக்கு வருவதாக சொல்கிறீர்கள். நல்ல விசயம்தான். சில முஸ்லீம் அமைப்புகள் பொதுப் பிரச்சனைக்கு வரலேன்னாலும், உங்கள மாரி வாரவங்களை முஸ்லீம் இல்லைன்னு சொல்றாங்களே?

உசைன்: தவ்ஹீது ஜமாதை தானே சொல்கிறீர்கள். ஒருத்தர் முஸ்லீமா இல்லையா என்பதை அல்லா தான் முடிவு பண்ணனும். நானும் நீயும் முடிவு பண்ண முடியாது. அங்க பள்ளம் இருக்குப்பா பாத்துப்போ என்று சொல்லத்தான் முடியும். கேக்கமாட்டேன் போய் விழுவேனு போனா நாம என்ன செய்ய முடியும். ஆனா வெள்ள நிவாரண பிரச்சனையில அவங்க நல்லா செயல் படுறாங்க. முதல் முறையா ஒரு சமூக பிரச்சனையில தவ்ஹீது ஜமாதை பாக்குறேன். இதை முதல்லயே செஞ்சிருந்தா எங்கேயோ போயிருப்பாங்க. இத தொடர்ந்து செய்யனும்.

கேள்வி : மக்கள் அரசு மீது குற்றம் சாட்டுகிறார்களே, உங்க கருத்து என்ன?

உசைன்: யாருக்கும் அறிவிக்காமல் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத தவறு. இவ்வளவு தண்ணீர் வரும் என்று மக்களுக்கு தெரியாது. கால் அளவு தண்ணீர் வரும் என்று தான் நினைத்தார்கள். நாங்கள் அழைக்கும்போது கூட மக்கள் முதலில் வெளியேறவில்லை. காரணம் இவ்வளவு பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அப்படி மக்கள் வரவிட்டால் கூட அரசின் கடமை அறிவிப்பதுதானே. அதை ஏன் செய்யவில்லை. அதனால் இது அரசின் மீதான தவறுதான்.

கேள்வி : நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் கட்சி இதுவரை இதை கண்டிக்கவில்லையே?

உசைன்: அது பற்றி தெரியவில்லை. நிவாரணப்பணியில் இருக்கிறேன். கட்சி தலைவர்களை சந்தித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. இது கண்டிக்க வேண்டிய ஒன்று. நாங்கள் கண்டிக்கச் சொல்லி வலியுறுத்துவோம்.

கேள்வி : அப்படி கண்டிக்காவிட்டால் என்ன செய்யவீர்கள்?

உசைன் : மக்களுக்கு வேலை செய்யத்தான் கட்சி. எங்கள் கட்சியில் அனைவரும் கருத்து சொல்ல முடியும். 17 வயது பையன் கூட சொல்லலாம். அப்படி சொல்லுவோம். கேட்கவில்லை என்றால் வெளியேறிவிடுவேன். இது அரசின் தவறுதான்.

அப்துல் மஜித், எஸ்.டி.பி.– சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா.

muslims-flood-relief-photos-12
இடமிருந்து இரண்டாவதாக நிற்பவர் (சட்டை, பேண்ட் அணிந்திருப்பவர்) அப்துல் மஜித், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தென் சென்னை வர்த்தக பிரிவில் பொறுப்பு வகிக்கிறார்.

சைதாப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதிக்கு சென்ற போது கழுத்தளவு தண்ணீரில் முஸ்லீம் இளைஞர்கள் உணவு கொண்டு தந்ததை மக்கள் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்கள். விசாரித்த போது அப்பகுதியில் இருக்கும் எஸ்.டி.பி.ஐ -யின் ஆட்டோ சங்கமும் அதோடு தொடர்புடைய இளைஞர்கள் குறித்தும் கூறினார்கள். அவர்களிடம் பேசினோம். அக்கட்சியின் அப்துல் மஜித், தென்சென்னை வர்த்தக அணியை சேர்ந்தவர் பேசினார்.

“செவ்வாய் இரவு இப்பகுதி முழுவதும் வெள்ளம் நிறைந்து விட்டது. மக்கள் மாடிகளில் தஞ்சம் புகுந்திருந்தார்கள். செய்தி அறிந்ததும் உடனடியாக கிச்சடி தயார் செய்தோம். ரப்பர் டியூப்கள் தயார் செய்து அதை கொண்டு உணவுப் பொருட்களை வீட்டிற்கு வீடு கொண்டு சேர்த்தோம். சிறிய குறுகலான சந்துகளில் கயிறு கட்டி சென்றோம். தண்ணீர், வத்திபெட்டி, சின்ன டார்ச், மெழுகுவர்த்திகளை விநியோகித்தோம். இரவு எங்களால் முடிந்த அளவுக்கு செய்தோம். மறுநாளும் தொடர்ந்தோம்.

தெருவில் மக்கள் அடித்துக்கொள்ளும் வகையில் கொடுக்ககூடாது என்பதால் வீடு வீடாக கொண்டு சென்றோம். மழை முடிந்ததும் சாக்கடை அள்ளும் பணியில் ஈடுபட்டோம். சந்துகளில் இருந்த குப்பைகள், சாக்கடைகளை வாரி அரசு ஊழியர்கள் கொண்டு செல்ல வசதியாக தெருமுனைகளில் குவித்து வைத்தோம்.

மக்களை எங்களை பாராட்டும் போது இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.”

கேள்வி : முஸ்லீம் அமைப்புகளை மக்கள் பாராட்டுவதற்கு காரணம் பொதுப் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதால் தான். ஆனால் சில அமைப்புகள் மதம் சார்ந்த பிரச்சனையை மட்டும் , இஸ்லாமியர்கள் சார்ந்த கோரிக்கைகளை மட்டும் எடுத்து போராடுவது சரியா?

மஜித்: எங்கள் அமைப்பை பொறுத்தவரை நாங்கள் எல்லா அரசியல் விசயங்களுக்கு குரல் கொடுக்கிறோம். சமீபத்தில் கூட டாஸ்மாக் பிரச்சனைக்கு ஒரு மாதமாக போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தினோம். ஈழம் முதலிய எல்லா விசயங்களுக்கும் போராடுகிறோம்.

சங் பரிவாரம் நாட்டின் பல பகுதிகளிலும் வெற்றி பெறுகிறான். ஏன் கேரளாவில் கூட கால் ஊன்றிவிட்டான். தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை. இதற்கு இஸ்லாமிய அமைப்புகளா காரணம்? இல்லை. பெரியார் நாடு என்பதால் தான் முடியவில்லை. முஸ்லீம் நினைத்து மட்டும் சி.எம் ஆக முடியுமா சார். நடக்ககூடிய காரியமா? மற்றவர்களுடன் சேர்ந்து செய்வது தான் காலத்தின் கட்டாயம். சங் பரிவாரத்திற்கு எதிரானவர்களை அனைவரையும் இணைத்து பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு ஏற்படுத்தி போராடுகிறோம்.

muslims-flood-relief-photos-17
நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள்.

கேள்வி : ஆனால் சில இஸ்லாமிய அமைப்புகள் மதப் பிரச்சினைகளைத்தானே பிரதானமாக செய்கிறார்கள்.? இப்போது கூட தவ்ஹித் ஜமாஅத் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தப் போகிறார்கள்.?

மஜித் : மார்க்கம் தனிப்பட்ட விசயம். அரசியல் பொதுவான விசயம். நான் விரலை ஆட்டி தொழுவேன். தொப்பி போட்டு தொழுவேன், போடாமல் தொழுவேன். இப்படி செய்தால் தான் முஸ்லீம் செய்யாவிட்டால் முஸ்லீம் கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது.

கேள்வி : மற்ற கடவுள்களுக்கு படைக்க்ப்பட்ட பிரசாதங்களை சாப்பிடக் கூடாத நீங்கள் கோயிலை சுத்தப்படுத்துவது மார்க்கப்படி சரியா?

மஜித் : இஸ்லாம் ஒரிறை கொள்கை கொண்டது. சிலை வணக்கம் தான் செய்யக்கூடாது. கோவிலை சுத்தம் செய்வதில் பிரச்சனை இல்லை. இஸ்லாமியர் ஒருவர் அப்படி வணங்கினாலும் அவரை இஸ்லாமியரல்ல என்று சொல்ல நமக்கு உரிமை கிடையாது. அதை அல்லா தான் முடிவு செய்வான். அவரை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்றெல்லாம் யாரும் சொல்ல முடியாது.

கேள்வி : மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்கிறீர்கள். சரியானதுதான். இதற்கு காரணமான அரசுக்கு எதிராகவும் போராடுவீர்களா?

மஜித் : இந்த அரசு மக்களை அலட்சியமாகத்தான் கருதுகிறது. கடந்த நாலரை ஆண்டுகளில் தொழில் பாதிப்பு, வருவாய் இழப்பு என பல வகைகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். டாஸ்மாக்கிற்கு எதிராக பலரும் போராடினார்கள். அரசு அதை மதிக்கவிலை. இந்த அரசுக்கு மக்கள் மீது அக்கறையில்லை.

முஸ்லீம் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து பகுதி மக்களான ‘இந்துக்கள்’ சிலரிடம் கருத்து கேட்டோம்.

muslims-flood-relief-photos-2
முஸ்லீம்களுக்கு வீடு என்ன உயிரையே கொடுப்போம் என்று சொன்ன அம்மா.

முஸ்லீம்கள் என்றால் பயங்கரவாதிகள், குண்டு வைப்பார்கள், நம்மிடம் ஒட்டமாட்டார்கள் என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால்
இப்பொழுது உங்கள் தெரு சாக்கடையை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டோம்.

தாங்கள் அப்படி கருதவில்லை என்று பலர் கூறினார்கள். முன்னாடி எங்களுக்கு அப்படிதான் சொன்னாங்க. நாங்களும் அப்படி தான் நினைத்திருந்தோம். வீடு வாடகைக்கு விடும்போது கூட யோசிப்போம். அத எல்லாம் காதால்தான் கேட்டிருந்தோம். அது தவறு என்பதை இப்போ கண்ணால் பாக்றோம் என்றார்கள்.

அப்படியானல் இனி வாடகைக்கு வீடு கொடுப்பீர்களா? என்று கேட்ட போது, “வீடென்ன உயிரையே கொடுப்போம்” என்றார் ஒரு பெண்மணி.

–    வினவு செய்தியாளர்கள்

 1. அட வீணா போன வினவே

  செத்த வீட்ல உன்னோட ஒன்னத்தும் ஒதவாத அரசியல் பேசுறியேடா

  இந்த நேரத்துலயும் தவ்ஹீத் ஜமாஅத்த சொரிற உனக்கும் கல்யாண ராமனுக்கு எந்த வித வித்தியாசமும் இல்லை. அவன் காவி தீவிரவாதி நீ சிகப்பு தீவிரவாதி.

  என்ன சொன்ன முதல் முறையா தவ்ஹீத் ஜமாஅத் பொது விசயத்துக்கு இறங்கி இருக்கா சூனாமி வந்தப்ப நீ எங்க போய் _______ இருந்தே….. போ போய் கேட்டு பாரு சூனாமியே நேர்ல கண்ட நாகை போன்ற கடலோர மாவட்ட மக்கள்டே களத்துல முதலில் யார் வந்து நின்னது யாருனு.

  அப்ப சமுக வலைதளம் இல்ல அதான் வழக்கமா ஊடகத்தின் பாரபட்சத்தால் அதிகம் செய்தி வெளிவரல இன்னக்கி சமுகவலைதளம் வெளிகொண்டு வந்துவிட்டது.

  நீ என்ன தான் அரசியலை மையமாக கொண்டு இயங்கும் இஸ்லாமிய கட்சியே சார்ந்தவர்களை பேட்டி என்ற பெயரில் எடுத்து போட்டு தவ்ஹீத் ஜமாஅதின் செயல்பாடுகளை மட்டம் தட்ட நினைத்தாலும் தெரிந்து கொள்.

  தவ்ஹீத் ஜமாஅத் களத்தில் நிற்க்க முக்கிய காரணம் மர்மை வெற்றிக்கும் அல்லாஹ்வின் திருப்பொருத்தை நாடியும் நபிகள் நாயகம் காட்டி தந்த மனிதநேயத்தின் அடிப்படையில் தான்.

 2. மதம் என்றாலே அபின் என்ற போதையில் இருக்கும் வினவிற்கு முஸ்லிம்களை நிவாரணப்பணியில் ஈடுபடுத்தியது இஸ்லாம் இல்லை என்ற தன் சொந்த கருத்தை கூறி இல்லாத ஒன்றை பரப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது…..மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் மதசார்பற்ற முஸ்லிமை தவிர அனைத்து முஸ்லிம்களும் இஸ்லாம் என்ற பதிலை தவிர வேறொன்று இல்லை என்றே கூறுவார்கள்….

 3. Vவர்க்க அடிப்படையில் மனிதர்களை பிரித்துப் பார்து அரசியல்நடதுபவர்கள் பலநேரஙளிள் சிலை வணங்கி ஜாதி பார்க்கும்பார்பனர்களை விடகேவலமாக சிந்திப்பவர்கலள் என்று உனர்த்தும் பதிப்புகளில் இதுவும் ஒன்று.

  வர்க்க பேத புரட்சிகள் 19ம்நூற்றான்டின் கன்டுபிட்ப்பு என்பதும் அதை முன்னின்று பின்னின்ட்றுநடதியது மன்னரட்சியை வீழ்தி தஙகளது ஆதிக்கம்நிலை பெற யூத வங்கி முதலாலிதுவம் என்பதும் புரியாத போதயில் இன்னும் எத்தனை காலம் இருப்பார்கல் என தெரியவில்லை.

  இறை மற்றும் மறுமையின் சிந்தனை எத்தனை சுயனலமட்ரவனாக ஆக்கும் என்ட்ர உஙலின் ஆஷரியதை உன்மயாக சொல்வதை விடுது இப்படி வர்க்க இன அபின் போதயில் உளராதீர்கள்

 4. இந்த கட்டுரையில் அப்படியென்ன பிரச்சனை பாய்களுக்கு ? வினவை இவர்கள் ஆள் ஆளுக்கு வெட்டி கூறுபோடுவதை பார்த்தால் நான் மீண்டும் ஒருமுறை இந்த கட்டுரையை ஊன்றி படிக்கவேண்டுமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. எப்படி இருப்பினும் மார்க்க முதன்மை நெறியாளர் அவர்களை இந்த கட்டுரை எந்த வகையிலும் சிருமைப்டுத்த வில்லையே! பின்பு ஏன் இப்படி கடும் கோபத்துடன் பின்னுட்டம் இடுகின்றார்கள் பாய்கள்?

 5. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்க மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட,ஈடுபடும் அனைவருமே சமூகத்தின் பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவர்கள்.ஆனாலும் முசுலிம்கள் ஆற்றிய பணிகள் பரவலாக பேசப்படுகிறது.அதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம்.

  ஒன்று மீட்பு பணியில் அவர்களது பங்கு மகத்தானது.இப்போது வழங்கப்படும் நிவாரணங்களை விட ஆபத்தான கட்டத்தில் மக்களின் உயிர் காத்த அவர்களின் மகத்தான பணி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.[அதற்காக இப்போது நடைபெறும் நிவாரணப்பணிகளை குறைத்து மதிப்பிடுவது நோக்கமில்லை].இரண்டு,முசுலிம்கள் பற்றி தவறான பிம்பம் பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.அதனால்தான் ”இப்படிப்பட்டவர்களையா மதவெறியர்கள்,தீவிரவாதிகள்,மற்ற பிரிவு மக்களோடு ஒட்ட மாட்டார்கள் என்றெல்லாம் கருதியிருந்தோம் என்ற ஆச்சரியம்,இப்போது உண்மையை விளங்கி கொண்ட மன நிறைவு ஆகியனவே முசுலிம்கள் ஆற்றிய பணிகள் பரவலாக பேசப்படுவதன் காரணங்களாக இருக்க வேண்டும்.

  அடுத்து இன்னொரு உண்மையையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.இப்படி தங்கள் உயிருக்கும் உடல்நலத்திற்கும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை பொருட்படுத்தாமல் செயலாற்றிய பிள்ளைகளை உருவாக்கித்தந்த ஒட்டு மொத்த முசுலிம் சமூகமும் பாராட்டுக்குரியது.மழையில் நனையாதே,சளி பிடிக்கும் என்று பொத்தி பொத்தி பிள்ளைகளை வளர்க்கும் இன்றைய காரியவாத சமூகத்தில் அந்த முசுலிம் பிள்ளைகளை அனுப்பி வைத்த பெற்றோரும் நன்றிக்குரியவர்கள்.முசுலிம் சமூகத்தின் மனித நேயம் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.ஆம்,மக்களுக்கு பயன் தரும் நன்னீரிலும் கடல் நீரிலும்தான் மீன்களும் பயிர்களும் விளையும்.

  • சகோதரர் திப்பு,
   ஆபத்தான கட்டத்தில் மக்களைக் காப்பாற்றியவர் பலர். அதில் முசுலீம் சகோதரர்களும் அடக்கம். சளி பிடித்தாலும் பரவாயில்லை, போய் மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று வந்த பிள்ளைகளில் எல்லா மதமும் அடக்கம். இதன்றி அழுத்தம் கொடுப்பது உண்மையும் அல்ல, பணிவும் அல்ல.

   • \\உண்மையும் அல்ல, பணிவும் அல்ல.//

    தோழர்,

    பின்னூட்டத்தின் முதல் வரியே ”வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்க மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட,ஈடுபடும் அனைவருமே சமூகத்தின் பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவர்கள் ஆனாலும் முசுலிம்கள் ஆற்றிய பணிகள் பரவலாக பேசப்படுகிறது” என்றுதான் ஆரம்பிக்கிறேன்.கவனிக்கவும்.நாங்கள்தான் உசத்தி என்று பேசுவதாக கருதப்பட்டுவிடக்கூடாது என்ற கவனத்துடன்தான் எழுதியிருக்கிறேன்.

    • சகோதரர் திப்பு

     //ஒன்று மீட்பு பணியில் அவர்களது பங்கு மகத்தானது.இப்போது வழங்கப்படும் நிவாரணங்களை விட ஆபத்தான கட்டத்தில் மக்களின் உயிர் காத்த அவர்களின் மகத்தான பணி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது//
     இதில் தாங்கள் குறிப்பிட்ட கவனம் புரியவில்லை. மக்களைக் காப்பாற்றியவர்களில் முக்கியமானவர்கள் அந்தந்த பகுதி இளைஞர்கள், இரண்டாவதாக மீனவர்கள், மூன்றாவதாக மற்ற அனைவரும்…

     இசுலாமிய சகோதரர்களின் சேவை பேசப்படுவதற்கு தமிழகத்தின் பெரியாரிய, இடதுசாரிய இயக்க சிந்தனைகளே பிராதான காரணியாக கருதுகிறேன். அது மிகச்சரியானது என்றே கருதுகிறேன். ஆனால் உங்கள் பொருளில் இல்லை..

     • பணிவன்று என்று கொந்தளித்த தாங்களே பெருமையல்ல என்று மனமிரங்கி வந்திருப்பதால் தொடர்கிறேன்.

      முசுலிம்களின் மீட்பு பணி மகத்தானது என எழுதியதில் பெருமை தொனிக்கிறது என்கிறீர்கள்.முசுலிம்களின் பணி ஏன் பரவலாக பேசப்படுகிறது என்பதற்கான காரணமாகத்தான் அப்படி எழுதியிருக்கிறேன். பெருமைக்காக அல்ல.இதற்கு ஒரு நிகழ்வை பதிவு செய்வது தகுந்த விளக்கம் பெற உதவும்.

      டிசம்பர் 1-ம் தேதி இரவு யூனுஸ் என்ற நுங்கம்பாக்கத்தை சேர்ந்த இளைஞரும் அவரது மூன்று நண்பர்களும் [அதில் ஒருவர் இந்து சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது] சொந்த செலவில் ஏழு படகுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு மீனவ சகோதரர்களையும் அழைத்துக்கொண்டு ஊரப்பாக்கம் பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.அப்போது கழுத்தளவு நீரில் மகப்பேறு வலியால் துடித்துக்கொண்டிருந்த சித்ரா என்கிற பெண் ஒருவரை காப்பாற்றி இருக்கிறார்கள்.அதே நாளில் அந்த பெண்மணி ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார்.தங்களை காப்பாற்றிய யூனுசுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அந்த பெண்குழந்தைக்கு யூனுஸ் என்றே பெயர் சூட்டி இருக்கிறார்கள் அந்த பெற்றோர்.

      யூனுசின் உதவிக்கு அதை விட மிகப்பெரிய கைம்மாறு செய்திருக்கிறார்கள் அந்த இந்து சகோதர சகோதரியர்.அந்த குழந்தை வாழப்போகும் வரவிருக்கும் நூறாண்டு காலத்திற்கும் அந்த குழந்தையும்,அதன் பெயரும் தமிழகத்தின் மத நல்லிணக்கத்திற்கு உயிர் வாழும் சாட்சியமாக இருக்கப்போகிறது.

      இது போன்ற நிகழ்வுகள் ஏராளம் நடந்திருக்கின்றன.அதனால்தான் முசுலிம்களின் மீட்பு பணி மகத்தானது என காரணம் சொன்னேன்.நீங்களோ மட்டம் தட்டும் விதத்தில் ”மக்களைக் காப்பாற்றியவர்களில் முக்கியமானவர்கள் அந்தந்த பகுதி இளைஞர்கள், இரண்டாவதாக மீனவர்கள், மூன்றாவதாக மற்ற அனைவரும்…”என்கிறீர்கள்.வினவிலேயே முதலில் மீனவர்களும் முசுலிம்களும்தான் வந்தார்கள் என்று ஒரு பதிவு வந்துள்ளது.எதையும் எண்ணிப்பார்த்து எழுதுங்கள்.யாரையும் குறைத்து மதிப்பிடுவது என் நோக்கமில்லை.இதை முதல் பின்னூட்டத்திலேயே சொல்லியிருக்கிறேன்.நம் மக்களை காப்பாற்றிய பகுதி இளைஞர்கள், மீனவர்கள்,வட இந்தியர்கள் அனைவருமே நன்றிக்குரியவர்கள்.

      \\இசுலாமிய சகோதரர்களின் சேவை பேசப்படுவதற்கு தமிழகத்தின் பெரியாரிய, இடதுசாரிய இயக்க சிந்தனைகளே பிராதான காரணியாக கருதுகிறேன்//

      என்ன பேசுகிறீர்கள்.ஒரு சேவையை பாராட்டுவதற்கு கூட கொள்கை பின்புலம் இருக்க வேண்டுமா.நன்றியுணர்வு என்பது மனிதர்களின் இயல்பு தோழரே.வியாசனுக்கு கிடைத்தது தமிழுணர்வு.உங்களுக்கு பெரியாரிய ,பொதுவுடைமை கொள்கைகளா.

      பெரிதும் இந்து சகோதரர்கள் இட்டுள்ள முகநூல் பதிவுகளை தொகுத்து தந்திருக்கும் இந்த பதிவுகளை பாருங்கள்.

      http://vanjoor-vanjoor.blogspot.in/2015/12/3.html

      http://vanjoor-vanjoor.blogspot.in/2015/12/2.html

      http://vanjoor-vanjoor.blogspot.in/2015/12/1.html

      தங்களின் மீதி கேள்விகளுக்கும் வியாசனுக்கும் நாளை மறுமொழி இடுகிறேன்.

 6. உண்மையில் தமிழ் முஸ்லீம்கள் தமிழ்நாட்டு வெள்ளத்தின் போது ஆற்றிய சமூக சேவைப் பணிகள் தமிழர்கள் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியதொன்று. ஆனால் உண்மையில் அவர்களின் இந்த தொண்டுணர்வுக்கும், சேவை மனப்பான்மைக்கும் வெறும் மதவுணர்வு தான் காரணம் எனக் கூறுவது விவாதத்துகுரியது மட்டுமன்றி அவர்களின் உண்மையான மனிதநேயத்தைக் கொச்சைப்படுத்துவதும் கூட. அது மட்டுமன்றி, இவ்வளவு திட்டமிட்ட அரபுமயமாக்கலின் பின்பும், சக மனிதன் அதுவும் இன்னொரு தமிழன் துன்பப்படுவதை பார்த்துக் கொண்டு சகித்துக் கொள்ள முடியாதளவுக்கு இன்னும் அவர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழினவுணர்வு தான் அதற்குக் காரணமென்றும் கூட வாதாடலாம். ஏனென்றால் தமிழ்நாட்டு முஸ்லீம்களிடம் காணப்படும் இந்த மனிதநேயம், முகம்மது நபியினதும், இஸ்லாத்தினதும் பிறப்பிடமான அரேபியாவிலோ அல்லது அரபுக்களிடமோ காணப்படுவதாகத் தெரியவில்லை. 21வது நூற்றாண்டிலும் பெண்களைக் கூடக் கல்லெறிந்து கொல்லத் தூண்டும் காட்டுமிராண்டித்தனமும், அவர்களின் வீடுகளில் வேலைக்காகப் போகும் ஏழை, அபலைப் பெண்களை, அதுவும் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும் கூட, நாள் முழுவதும் தூக்கமின்றி, வேலை வாங்கி, உணவுமின்றி துன்புறுத்துவது மட்டுமன்றி, சித்திரவதை (பாலியல் உட்பட) செய்யும் கொடுமை தாண்டமாடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். சவுதி அரேபியாவுக்கு வேலைக்குப் போகும் எத்தனையோ அபலை, ஏழை இலங்கைப் பெண்கள் சவப்பெட்டிகளில், உருக்குலைந்து திரும்பி வருகிறார்கள். அதிலும் சிலர் திரும்பி வருவதேயில்லை. ஆகவே தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழ்நாட்டு வெள்ளத்தில் காட்டிய மனிதேநேயத்துக்குக் காரணம் வெறுமனே மதம் தான் என்பது விவாதத்துக்குரியது. அது மட்டுமன்றி, அதற்கு முழுக்காரணமும் அவர்களின் மதம் தானென்றால்,. அதை நாங்கள் அரபுக்களிடமோ அல்லது ஏனைய முஸ்லீம்களிடமோ ஏன் காண முடிவதில்லை. தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழ்நாட்டு வெள்ளத்தில் காட்டிய மனிதநேயத்துக்குக் முழுக் காரணம்மும் மதம் தானென்றால் இன்றைக்கு சிரியாவின் அரபுக்கள் எல்லாம் உயிர் போனாலும் பரவாயில்லை என்று கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குப் படையெடுக்க மாட்டார்கள் மாறாக, சவூதி அரேபியாவிலோ, அல்லது கதாரிலோ அல்லது மத்திய கிழக்கின் எண்ணெய் வளமுள்ள பணக்கார நாடுகளில் குடியேறியிருப்பார்கள்.

  அத்துடன் தமிழ்நாட்டு வெள்ளத்தில் முஸ்லீம்கள் மட்டுமன்றி சீக்கியர்களும், சில இந்து நிறுவனங்களும், ஏன் மார்வாடிகளும் கூடத் தான் உதவிப் பணிகளைச் செய்திருக்கிறார்கள் (BBC யில் கூட செய்தியுள்ளது) ஆனால் முஸ்லீம்கள் குழுக்கள் அதிகளவில் பணிகளைச் செய்திருக்கலாம் அல்லது , அவர்களின் பணிகள் அதிகளவில் விளம்பரப்படுத்தப் பட்டதும் கூட அதற்குக் காரணம் என்றும் கூறலாம்.

  • அன்பு நண்பரே இஸ்லாம் தான் இதற்கு தூண்டுகோள் என்பதை விபரமாக விளக்கியுள்ளேன் எனது தளத்தில் காணவும் வினவுக்கு விளக்கம் என்ற தலைப்பில்…..

   • சென்னை வெள்ள நிவாரண பணிக்கு முஸ்லிம்களின் பங்குக்கு மார்க்கம் மட்டுமே காரணம் என்றால் (முஹம்மது அலீம் வினவுக்கு விளக்கம்) வியாசனின் விவாத பொருட்களையும் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டியுள்ளது ஆகின்றது.

    [1] சேவை மனப்பான்மைக்கும் வெறும் மதவுணர்வு தான் காரணம் எனக் கூறுவது விவாதத்துகுரியது மட்டுமன்றி அவர்களின் உண்மையான மனிதநேயத்தைக் கொச்சைப்படுத்துவதும் கூட.

    [2]தமிழ்நாட்டு முஸ்லீம்களிடம் காணப்படும் இந்த மனிதநேயம், முகம்மது நபியினதும், இஸ்லாத்தினதும் பிறப்பிடமான அரேபியாவிலோ அல்லது அரபுக்களிடமோ காணப்படுவதாகத் தெரியவில்லை. 21வது நூற்றாண்டிலும் பெண்களைக் கூடக் கல்லெறிந்து கொல்லத் தூண்டும் காட்டுமிராண்டித்தனமும், அவர்களின் வீடுகளில் வேலைக்காகப் போகும் ஏழை, அபலைப் பெண்களை, அதுவும் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும் கூட, நாள் முழுவதும் தூக்கமின்றி, வேலை வாங்கி, உணவுமின்றி துன்புறுத்துவது மட்டுமன்றி, சித்திரவதை (பாலியல் உட்பட) செய்யும் கொடுமை தாண்டமாடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

    [3]சவுதி அரேபியாவுக்கு வேலைக்குப் போகும் எத்தனையோ அபலை, ஏழை இலங்கைப் பெண்கள் சவப்பெட்டிகளில், உருக்குலைந்து திரும்பி வருகிறார்கள். அதிலும் சிலர் திரும்பி வருவதேயில்லை. ஆகவே தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழ்நாட்டு வெள்ளத்தில் காட்டிய மனிதேநேயத்துக்குக் காரணம் வெறுமனே மதம் தான் என்பது விவாதத்துக்குரியது. அது மட்டுமன்றி, அதற்கு முழுக்காரணமும் அவர்களின் மதம் தானென்றால்,. அதை நாங்கள் அரபுக்களிடமோ அல்லது ஏனைய முஸ்லீம்களிடமோ ஏன் காண முடிவதில்லை.

    [4]தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழ்நாட்டு வெள்ளத்தில் காட்டிய மனிதநேயத்துக்குக் முழுக் காரணம்மும் மதம் தானென்றால் இன்றைக்கு சிரியாவின் அரபுக்கள் எல்லாம் உயிர் போனாலும் பரவாயில்லை என்று கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குப் படையெடுக்க மாட்டார்கள் மாறாக, சவூதி அரேபியாவிலோ, அல்லது கதாரிலோ அல்லது மத்திய கிழக்கின் எண்ணெய் வளமுள்ள பணக்கார நாடுகளில் குடியேறியிருப்பார்கள்.

    மேலும் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் அரபுமயமாக்கபட்டார்கள் என்ற வியாசனின் கருத்தை மறுதலிக்கின்றேன்.சவுதி அரேபிய முஸ்லிம்களின் ரவுடித்தனம் என்றுமே எமது தமிழ் முஸ்லிம்களின் மனதுள் நுழையாது என்பதில் இந்த கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். அரபுமயமாக்கபட்டார்கள் என்ற கருத்து தமிழ் மறந்த இலங்கை வடகிழக்கு முஸ்லிம்களுக்கு ஒருவேளை பொருந்தலாமே தவிர தமிழ் நாட்டு முஸ்லிம் மக்களுக்கு சிறிதும் பொருந்தாது. மதம் மட்டுமே ஒரு மனிதனின் எண்ணத்தையும் , உணர்வுகளையும் தீர்மானிக்க இயலாது. அவர்கள் இனம் ,மொழி , அவர்கள் விரும்பும் அரசியல் கொள்கைகள் கூட அவர்களின் எண்ணத்தையும் , செயலையும் முடிவு செய்யும் காரணிகளாகும்.

    • நண்பர் இனியன்,நீங்களுமா

     முதலில் சேவை மனப்பான்மையை பரிசீலிக்கலாம்.ஒரு மனிதனின் விழுமியங்கள் வெறுமனே வெற்றிடத்திலிருந்து தோன்றி வளர்வதில்லை.அவன் வாழும் சமூக சூழல்,ஏற்றுக்கொண்ட கொள்கைகள்,போன்றவையே அவற்றை தீர்மானிக்கின்றன.மனித நேயம்,மக்கள் மீது நேசம் ஆகியன எல்லோருக்கும் ஏதோ ஒரு அளவில் இருந்தாலும் அனைவரிடமும் அது செயலூக்கம் பெறுவதில்லை.அதனை அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே தீர்மானிக்கின்றன.இதனை ஒரு சான்று மூலம் பார்க்கலாம்.

     கல்விக்கொள்ளையை எதிர்த்து அதனால் பெரிதும் பாதிக்கப்படாத அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் குறிப்பாக இடது சாரி இயக்க மாணவர்கள் போராடி காவல்துறையினரின் குண்டாந்தடி தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.பாதிக்கப்படும் தனியார் பொறியியல்,மருத்துவ கல்லூரி மாணவர்களோ மௌவுனமாக அந்த கொடுமையை சகித்துக்கொள்கிறார்கள்.
     புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும்,இந்திய மாணவர் சங்கமும் போராடுவதற்கு காரணம் அவர்களின் மனித நேயம் பொதுவுடைமை சித்தாந்தத்தால் செயலூக்கம் பெறுகிறது.

     இதையே இப்போது வெள்ள நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்ட முசுலிம் இளைஞர்களுக்கு பொருத்திப்பாருங்கள்.அவர்களின் மனித நேயம் செயலூக்கம் பெறுவதற்கு அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கை [அதாங்க இசுலாமிய மதம்] தவிர வேறு எது காரணமாக இருக்க முடியும்.

     பி.கு.
     தமிழின உணர்வு என்ற வியாசனின் வாதத்தை மேற்கோள் காட்டாதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.மனித நேயத்திற்கு மொழி,இன,வர்க்க பேதங்கள் கிடையாது என்ற எளிய உண்மை கூட புரியாமல் பேசுகிறார்.சென்னையில் வாழும் வட இந்தியர்கள் கூட மிக சிறப்பாக துயர் துடைப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.அவர்களை தூண்டியது என்ன உணர்வு.

     • நண்பர் திப்பு ,

      ஒவ்வொரு நற் செயலுக்கும் பின்னணியில் பொதுவாக மதம் மட்டுமே காரணம் எனில் கிருஸ்துவ பின்னணியில் உள்ள அமேரிக்கா என்றுமே உலக ஏகாதிபத்தியமாக இருந்து இருக்காது. உலக ரச்சகனாக தான் அது பைபிள் கோட்பாடுகளை நடைமுறை படுத்தி இருக்கும். ஆனால் நடைமுறையில் ?

      மேலும் இந்த கட்டுரை கூறும் விசயத்தில் நான் உடன் படுகிறேன்.அதாவது “சென்னை மழை வெள்ள நிவாரணப் பணிகளில் இதுதான் நடந்திருக்கிறது. தாங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்காகத்தான் நிவாரணப் பணிகளை செய்தோம் என்று சில முஸ்லீம்கள் கூறினாலும் அவர்களை அப்படி சேவை செய்ய வைத்தது, மதமல்ல. கஷ்டப்படும் மக்களை நேரில் பார்த்ததாலும், பிறகு மற்ற பிரிவு மக்கள் பாராட்டுவதால் வரும் உற்சாகமுமே முஸ்லீம் அமைப்பு தொண்டர்களை இயங்க வைத்தன என்பது எமது கருத்து.” என்ற விசயத்தில் நான் 100% உடன்படுகின்றேன்.

      //அவர்களின் மனித நேயம் செயலூக்கம் பெறுவதற்கு அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கை [அதாங்க இசுலாமிய மதம்] தவிர வேறு எது காரணமாக இருக்க முடியும்.//

     • பி.கு: நண்பர் திப்பு ,குறிப்பிட்ட ஒரு மதத்தை தவிர்த்து நாம் விவாதத்தை பொதுமை படுத்திக்கொண்டால் நலமாக இருக்குமென்று நினைக்கிறன். மனிதர்களின் நற்செயல்களுக்கு மதம் மட்டுமே காரணமாக அமையுமா? என்று விவாதத்தை பொதுமை படுத்திகொள்ளலாம் என்று நினைகின்றேன்.

      • வினவு குறிப்பிடும் ”உற்சாகம்” ஏற்கத்தக்கதுதான்.அதை சொந்த முறையில் நானே உணர்ந்திருக்கிறேன்.அவ்வாறு பலரையும் உற்சாகப்படுத்தியிருக்கிறேன்.ஆனால் முஸ்லிம்களை சேவை செய்ய வைத்தது சிரமப்படும் மக்களை நேரில் பார்த்ததுதான் , மதமல்ல என்று சொல்லுவது ஏற்புடையது அல்ல.

       மக்களின் துயரங்களை பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே உதவிக்கு ஓடோடி செல்வதில்லை.சாலை விபத்தில் சிக்கி காயம்பட்டோரை காண்பவர்கள் பலரும் ”அய்யோ பாவம்”என்று ”உச்”கொட்டிக்கொண்டே நகர்ந்து செல்கிறார்கள்.ஒரு சிலர்தான் அவர்களை தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.அந்த ஒரு சிலரை இயக்குவது எது.அதுதான் சமூகத்திலிருந்து அவர்கள் கற்று வளர்த்துக்கொண்ட விழுமியங்கள்.இங்கு அது இசுலாமிய மதமாக இருக்கிறது.அவ்வளவுதான்.

       \\ மனிதர்களின் நற்செயல்களுக்கு மதம் மட்டுமே காரணமாக அமையுமா? //

       நல்ல கேள்வி.நிச்சயம் மனிதர்களின் நற்செயல்களுக்கு மதம் மட்டுமே காரணமல்ல.ஒரு மனிதனின் பண்புருவாக்கத்தில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.மதமும் ஒரு காரணம் என்ற அளவில் ஏற்கலாம்.ஒரு தனி மனிதனின் பண்பு,குணநலன்கள அவன் வாழும் சமூகத்தின் விழுமியங்களையே பிரதிபலிக்கின்றன.

       • சகோதரர் திப்பு,

        வினவு கட்டுரை சொல்லும் மனித நேய காரணத்தை ஏற்கிறேன், நானே உணர்ந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த வரியிலேயே அந்த மனிதாபிமானம் இசுலாமிய மதமாக இருக்கிறது என்கிறீர்கள். மதம்தான் காரணமென்று வெளிப்படையாக சொல்லுவது தவறல்ல. விளக்கவும்.

        நீங்கள் சொல்வது போல மதம்தான் காரணம் என்றால் இந்த உலகில் மனிதநேயம், மனிதாபிமானம் அனைத்திலும் இசுலாம்தான் நெம்பர் ஒன்றாம் இடத்தில் இருக்க வேண்டும். சரிதானே?

        • \\இசுலாம்தான் நெம்பர் ஒன்றாம் இடத்தில் இருக்க வேண்டும்//

         இசுலாமியர்கள் அனைத்து பகுதிகளிலும் மத நெறிகளை முறையாக பின்பற்றி நடந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும்.

         • சகோதரர் திப்பு

          //இசுலாமியர்கள் அனைத்து பகுதிகளிலும் மத நெறிகளை முறையாக பின்பற்றி நடந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும்.// இதில் இசுலாமியர்கள் வார்த்தையை நீக்கிவிட்டு இந்துக்கள், கிறித்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள்,போட்டுவிட்டு அவரவர் தரப்புகளும் எப்போதும் இந்தவாறு பேசத்தானே செய்கிறார்கள்? என்ற படியால் இசுலாமியர்கள் பின்பற்றி நடந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் என்ன விசேஷம் சகோதரரே? அப்படியும் தாங்கள் எதிர்காலத்தில் ஜோசியம் மாதிரி நல்லவற்றை எதிர்பார்க்கிறீர்கள், இசுலாமிய பொற்கால சிறப்புக்கு ஒரு இறந்த காலம் கூடவா இல்லை?

          தங்களைப் போன்ற சகோதரர்களின் அடி மனத்திலும் இத்தகைய பொற்கால மத நம்பிக்கை இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது.

          • நான் உங்களுக்கு அளித்த அதிர்ச்சி இருக்கட்டும்.நீங்கள் அளிக்கும் அதிர்ச்சியையும் பார்ப்போம்.

           பாபர் மசூதி பிரச்னை தீவிரமடைந்த 80-களின் கடைசியில் அதற்கு கூறு கெட்டதனமான தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டது.இருசாராருக்கும் பொதுவாக அங்கு பிரமாண்டமான மருத்துவமனை அமைக்கவேண்டும்.அது மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக திகழும் என்று ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டது.அதை மதசார்பற்ற,இடதுசாரி இயக்கங்கள் பலவும் ஆதரித்த போது ம.க.இ .க.மட்டுமே அப்படி செய்வது முசுலிம்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதாகும்,மசூதியை மீண்டும் முசுலிம்களிடம் ஒப்படைப்பதே சரியான தீர்வாகும் என்று ஏடுகளில் எழுதியும் பேசியும் அதை எதிர்த்தது.

           அப்படிப்பட்ட இயக்கத்திலிருந்து வரும் நீங்கள் ஒரு வேலையை செய்தவன் அதை செய்ய காரணம் என்னுடைய மதத்தின் போதனைதான் என்று சொன்னாலும் அதை ஏற்க மாட்டேன்,அவன் ஆழ் மனதில் புகுந்து வேறொரு காரணம் கண்டுபிடிப்பேன் என்று அடம்பிடிப்பதற்கு என்ன காரணம்.நிச்சயம் அது இசுலாமிய மதத்தின் மீதான வன்மம் என சொல்ல மாட்டேன்.ஆனால் அதன்பால் உங்களுக்கு ஒரு வெறுப்பு இருப்பதை உணர முடிகிறது. அது தேவையில்லை தோழர்.மதம் தனிநபர்களின் சொந்த வாழ்வோடு நின்று விடும்போது அதில் உங்களுக்கு என்ன பிரச்னை.இதயமற்ற உலகின் இதயமாக கடவுள் இருக்கிறார் என்றுதானே மார்க்சும் சொல்லியிருக்கிறார்

         • \\இசுலாம்தான் நெம்பர் ஒன்றாம் இடத்தில் இருக்க வேண்டும்//

          இசுலாமியர்கள் அனைத்து பகுதிகளிலும் மத நெறிகளை முறையாக பின்பற்றி நடந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும்.

          இதிலிறுந்தே தெரிகிறது திப்பு எனபவர் உனது கம்மூனிஸ கோமனத்த அவிழ்த்து விட்டி விட்டார் ஒன்று கம்மூனிஸம்தான் சிறந்த சித்தாந்தம் என்று திப்புவிற்கு மறுப்பு எழுதி இருக்க வேண்டும் இல்லனா இசுலாமிய நெறிகள்தான் சிறந்தது என்று ஒப்புக்கொன்று இருக்க வேண்டும் இரண்டும் இல்லாமல் மானமோ சுரனயோ அற்று உனது கோமனத்த மழை வெள்ள பாதிப்பை பயன் படுத்தி அவிழ்க்க நினைப்பத ஒப்புக்கொள்வதாகவே நான் நினைக்கிறேன் அல்லது எங்களுக்கு கம்மூனிஸ் கோவனத்தை விட இசுலாமிய ஆதரவு முகமுடிதான் தேவை என்றால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது நல்லது அதை விடுத்து இசுலாம் நெறிமுறைகள என்றால் என்ன என்று திப்புவிற்கு நான் கேட்ட கேள்விக்களில் எவ்வித ஆபாசமோ அருவறுப்போ இல்லாத போது அதை வெளியிட தயங்குவது ஏன்

        • தோழர்,

         திரிக்க வேண்டாம்.”உற்சாகம்” என்பதை ஏற்கிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.பாராட்டுதலும் அதனால் உற்சாகமாக மேலும் பணி செய்வதும் முதலில் பணி செய்த பின் வருவது,அந்த பணியை செய்ய வைத்தது எது என்பதுதான் கேள்வி..

        • \\மதம்தான் காரணமென்று வெளிப்படையாக சொல்லுவது தவறல்ல. விளக்கவும்.//

         தோழர்,

         மதம் காரணமில்லை என்ற முன்முடிவோடு நீங்கள் எழுதுகிறீர்கள்.அதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் ”மக்களின் துன்பத்தை நேரில் கண்டதால் வந்த மனித நேயம் ” என்று ”தீர்ப்பு”தான் வழங்குகிறீர்கள்.

         நான் மதம்தான் காரணம் என்று வெளிப்படையாகவே சொல்கிறேன். ”மனித நேயம்,மக்கள் மீது நேசம் ஆகியன எல்லோருக்கும் ஏதோ ஒரு அளவில் இருந்தாலும் அனைவரிடமும் அது செயலூக்கம் பெறுவதில்லை.அதனை அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே தீர்மானிக்கின்றன.இதனை ஒரு சான்று மூலம் பார்க்கலாம்”.என்று ஏற்கனவே விளக்கியும் இருக்கிறேன்.

         நீங்கள் சொல்வது போல் பெருமை அடிப்பதாக படிப்பவர்கள் கருத வாய்ப்புண்டு என்பதால் இது குறித்து மேலும் விவாதிக்க விருப்பமில்லை.

         • சகோதரர் திப்பு நீங்கள் பெருமை அடிப்பதாக அடியேன் கருதவில்லை. இருந்த போதும் இந்த உதவிடும் செயலுக்கு மதம்தான் காரணம் என்று பகிரங்கமாக ஏற்றதற்கு நன்றி. அந்த காரணம் நான்றிந்த வரை மறுமையில் சொர்க்கம் என்ற உத்தரவாதத்தைத்தான் அஸ்திவாரமாக வைத்திருக்கிறது. இந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சகோதரர் மனிதநேயம் முதலாவது, மார்க்கம் இரண்டாவது என்கிறார். தாங்கள் முதலாவதாக கருதுகிறீர்கள்.

          இறுதியாக ஒன்று. தீண்டாமை, ஆணாதிக்கம், இதர பண்ணையார் கொடுமைகள், மத வன்மங்கள் அனைத்தையும் எதிர்ப்பதற்கு ஒரு மதமும், புனித நூலும், புனித வரலாறும் தேவைப்படும் என்றால் கண்ணெதிரே எந்த முசுலீம் சகோதரரும் அநியாயத்தை எதிர்க்க முடியாது என்றாகிறது.

          முசுலீம் சகோதரர்கள் எப்படி மழையால் தத்தளித்த மக்களை காப்பாற்றினார்களோ அப்படித்தான் முழு சமூகமும் மழையில்லாத நேரத்தில் மற்ற மக்களை காப்பாற்ற வேலை செய்கிறது. சென்னை முழுவதையும் பிரம்மாண்டமான குப்பைகளை அன்றாடம் எடுத்து, கழிவில் முங்கி நமக்காக பணி செய்யும் அருந்ததிய சமூகத்தின் சேவையெல்லாம் நமக்கு பொருட்டே இல்லையா சகோதரரே?

     • சகோதரர் திப்பு
      கல்வி கொள்ளையை எதிர்த்து போராடுவதற்கு முசுலீம் பிள்ளைகள் ஏன் வரவில்லை? இந்த விவகாரத்தில் மனித நேயம் இல்லையா? மீட்பு பணிக்கு இசுலாமிய மதம்தான் காரணமென்று தாங்கள் வலியுறுத்துகிறீர்கள். சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த இளம் பிள்ளை ரிசானா சபீக்கை கொன்ற போது கூட இங்கேயுள்ளவர்கள் அச்சிறுமியை விலைமாது, ஷரியத் மேலானது, தலை வெட்டுவது சரியானது என்று வாதிட்டதுகூட இசுலாம் உருவாக்கிய மனிதாபிமானம்தானா? வெள்ள நிவாரணம், ரிசானா கொலை இரண்டையும் ஒரு மனம் மனிதாபிமானமாக செய்கிறதா? சகோதரர் விளக்கமளிக்க வேண்டும்.

      • \\கல்வி கொள்ளையை எதிர்த்து போராடுவதற்கு முசுலீம் பிள்ளைகள் ஏன் வரவில்லை?//

       கல்விக்கொள்ளையை எதிர்த்து முசுலிம்கள் போராடுவதே இல்லை என்று சொல்ல வருகிறீர்களா.