Thursday, June 30, 2022
முகப்பு சமூகம் சாதி – மதம் அர்ச்சகர் அடையாளத்தை துறந்தார் ரங்கநாதன் - ஆர்ப்பாட்டம்

அர்ச்சகர் அடையாளத்தை துறந்தார் ரங்கநாதன் – ஆர்ப்பாட்டம்

-

சென்னை

சென்னையில் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனுடன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே உச்சிக் குடுமி நீதிமன்றத்தை கண்டித்தும், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும், அதற்கு துணை போகும் பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் விண்ணதிர முழக்கங்கள் முழங்கின.

ஆர்ப்பாட்டத்தின் முத்தாய்ப்பாக அர்ச்சக மாணவர் ரங்கநாதன் பெரியார் சாலைக்கு மாலை அணிவித்து பின்னர் தனது உருத்ராட்சக் கொட்டை மாலை, தீட்சை ஆகியவற்றை துறந்து இனி பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிக்கும் சுயமரியாதை போராட்டங்களில் ஈடுபடுவதாக உரையாற்றினார். அதன் பிறகு தோழர் ராஜூ உச்சநீதிமன்றத்தின் அயோக்கியத் தீர்ப்பை விளக்கி உரையாற்றினார். அனவரையும் கைது செய்து கொண்டு சென்ற போலீசு மாலையில் விடுவித்தது.

இது தொடர்பான வீடியோவை வெகு விரைவில் வெளியிடுகிறோம்.

ச்சநீதி மன்ற தீர்ப்பை கண்டித்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
சென்னை

திருச்சி

னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில்,  பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாத மாணவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்வது, அரசியல் சட்டத்தின் பிரிவு 25, 26 க்கு விரோதமானது என்றும், இந்து மத நம்பிக்கைக்கும், மரபுகளுக்கும் எதிரானது என்றும் கூறி மேற்படி மாணவர்களின் நியமனத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்கள் மதுரை அர்ச்சகர்கள்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் சார்பில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், மக்கள் கலை இலக்கியக் கழகமும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தலையிட்டு நடத்தினர். அந்த வழக்கு இத்தனை ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு இப்போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருகிறது.

இந்த அநீதியான தீர்ப்பை கண்டித்து 17-12-2015 திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலர் தோழர் ஜீவா தலைமையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

 1. மதமற்றவர்கள் , இனமற்றவர்கள் , சாதியற்றவர்கள் என்ற முத்திரை உடையவர்களாகிய கம்யுனிஸ்டுகள் அதாங்க ம க இ க , நமக்காக நம் மத உரிமைகளுக்காக போராடிக்கொண்டு உள்ள போது, போராடவேண்டிய தமிழர்களாகிய நாம் என்ன பார்பனனின் மயிரை பிடுங்கி கொண்டு இருக்கோமா?

  • The so called secualrists, AETHISTS(DK,DMK,AIADMK), COMMUNISTS and P.A.L.A and also those who all are against HINDU in the name of progressive writers and intellectuals can target only HINDU RELIGION. They do not have the guts to go against other religions not only of vote bank politics but also they are aware what will happen to them if they speak against ISLAM or CHRISTIANITY. people are aware of these kind of pseudo secularists and aethists. THE COWARDS ALONE CAN BEAT A DEAD SNAKE.

 2. இங்கதாண்டா நீங்க தோத்து போரிங்க. ஒரு சராசரி இந்துவுக்கு சாமி சிலைக்கு போட்ட அழுகிபோன மாலைகூட புனிதம்தான். அர்ச்சகராகி விட்டேன் என்று சொன்ன ஒருவர் ருத்ராட்ச மாலையை எடுத்து எறிவது என்ன மாதிரி சிக்னலை கொடுக்கும் என்று அறியவில்லையா? மற்ற விசயங்களில் பாப்பானை எதிர்க்கும் இந்துக்கள் கூட இந்த விசயத்தில் அமைதியாக இருப்பது இதனால்தான். இது பார்பனியத்துக்கு எதிரான செயலாய் தெரிவதைவிட ஈசனுக்கு எதிரான செயலாத்தான் பார்க்கப்படும். பாப்பானே இருந்துட்டு போகட்டும் என்று நினைக்கும் அளவுக்கு இந்த செயல் இருக்கிறது.

  • யோசித்து சொல்லுங்கள், இறைப் பற்று இருப்பவன் எல்லாம் ஆகமம் படிக்க வருவானா? சமூகப் பற்றுள்ள நாமெல்லாம் நம்மை சமூகப் பணிக்கு அர்ப்பணித்துக் கொள்கிறோமா? பற்றுதலின் அளவுப்படிதானே எல்லாம் தீர்மானிக்கப்படுகிறது. என் கடன் பணி செய்து கிடப்பதே என அவன் பற்றற்றான் தாள் பற்றினான்.
   காலப்போக்கில் சீரழிவ்தற்கு சகல வாய்ப்பு வசதிகளும் அங்கு இருப்பினும் தில்லை பழனி திருவரங்கம் போன்ற கோயில்களில் பணியமர்த்தப்பட்டு கல்லா கட்டலாம் என்ற எண்ணம் அவர்கள் ஆகமக் கல்வி பயிலச் சேரும்போது இருந்திருக்காது என்பது என் துணிபு. நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
   ஈடுபாடோடு பயின்று தேர்ந்த அந்த மாணவர்களை ஈடேற்ற அந்த ஈசனே இறங்கி வந்தாலும் சண்டாளா விலகிச் செல் எனும் சமூகத்தின் ஈசன் கண்ணைத் திறக்க அதிகாரம் பெற்ற அர்ச்சகர்கள் ரெங்கநாதன் கண்ணைத் திறந்திருக்கிறார்கள்.
   நியாயமான எதிர்பார்ப்புகள் அனியாயமாக மறுக்கப்படும்போது அழுகிப்போன மாலையையும், அழுகிப்போன சமுதாயத்தையும் கட்டி அழுதுகொண்டிருக்கும் சராசரி இந்துவின் சுயமரியாதையை, சமத்துவ உணர்வைத் தட்டி எழுப்புவதுதான் அனியாயத்துக்கு எதிராகப் போராடுவதுதான் தன் பணி எனத் தேர்ந்திருக்கிறார். தன் எதிர்ப்பை ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார். இச்செயல் போராட்ட வடிவம் பற்றியதல்ல. செல்லாக்காசைச் சுமக்க விரும்பாத்து மட்டுமல்ல, தன் விருப்பத்தைப் பிறப்பின் அடிப்படையில் செல்லாக் காசாக்கிவிட்ட்தால் வந்த உள்ளக் குமுறலின் வெளிப்பாடு.
   இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களால் தன்னுடைய அடிமைத்தனத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடியாது.
   – குறுக்கு சால்

 3. 17 பெரிதா 25 பெரிதா என்றால் ஈசியா 25 தான் ஓய் பெரிது என்கிறது;
  சமத்துவம் பெரிதா சம்பிரதாயம் பெரிதா என்றால் சம்பிரதாயம்தான் பெரிது என்கிறது;
  தீண்டாமைக் குற்றமா தீட்டுக் குத்தமா என்றால் தீட்டுக் குத்தம்தான் தீர்க்கப்பட வேண்டியது என்கிறது;
  இதற்குமேல் என்ன வேண்டும் வழக்கை அங்கீகரித்து அரசாணையை ரத்து செய்யவேண்டியதுதானே. நியமனங்கள் கூடாது எனக் கூற வேண்டியதுதானே.
  ஆனால்….. அரசியல் அமைப்பின் ஆன்மாவைக் குறிவைக்கும் கூர் அம்புகளுக்கு நெஞ்சைத் திறந்து தன்னை அடையாளம் காட்ட நாங்கள் என்ன அனுமாரா என்று சமூராய் வீரனாய் பாய்ந்து பின்னோடும்போது வீங்கிப் புடைக்கும் திரையால் தன்னை காப்பாற்றிக்கொள்ள முயல்கிறது.
  இதை திக வும், சுப வீ யும் வரவேற்கிறார்கள், பிராமிணர் சங்கமும் வரவேற்கிறது. வின் வின் பாலிசின்னு ஏதோ சொல்றாங்களே அது இதுதானோ?
  அரசாணை ரத்து செய்யப்படவில்லை; நியமனம் கூடாது எனக் கூறவில்லை; ஆகமவிதிப்படிதான் நியமனம் என்கிறது.. மீண்டும் ஒரு சுற்று…. சுற்றலாம் எதைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு.. ஆகமத்தையும் ஆதி மரபுகள் சம்பிரதாயத்தையுமா…
  வெளி வாசலுக்கும் வெளியிலிருந்து [கோபுர தரிசனம்] சமையக்கட்டு வரை [கர்ப்பக்கிரகம்] வர்ண சாதி வரிசை சொல்லும் ஆகமம். சமையல் கட்டுக்குள் செல்லும் சமையக்காரனுக்கு மட்டும் [அர்ச்சகன்] சாதி சொல்லவில்லை என்கிறார்களே.. ஒரு எழவும் புரியில. ஒருக்கால் சொல்லியிருந்தால் இந்த எழவை இன்னேரம் எடுத்திருக்கலாமோ என்னவோ.
  எனினும், ஆகமத்தைக் கற்று தீட்சை பெற்று அதன் வழி பூசை செய்ய ஆசைப்படுபவர்கள்தானே மாணவர்கள்; வர்ண சாதி அமைப்புதான் இந்துத்துவத்தின் ஆன்மா, இந்துத்துவம்தான் எங்கள் ஆன்மா என்போர் ஆட்சியல்லவா நடக்கிறது. எனவே அம்பலப்படுத்தலுக்காகவேனும் இன்னொரு சுற்று சுற்றலாமா? குழப்பமாக இருக்கிறதே. அல்லது…
  அனிகிலேஷன் ஆஃப் காஸ்ட்டை அவர் கையிலே கொடுத்து விரிவான அளவில் அரசியல் சாசனத்தின் 25வது சரத்தையேனும் கொளுத்தினால் என்ன?
  மேலும்
  பத்து விரலால் பத்து ஈ பிடிக்கும்படியான நிலையை உருவாக்கி இருக்கிறார்களோ? அதுவும் தக்க தருணம் பார்த்து டாஸ்மாக் வெள்ளத்தில் முக்களித்துக் கொண்டிருந்த தமிழகம் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் போது எதிர்வினை பிசுபிசுத்துப் போகும் என்ற எதிர்பார்ப்பில் வீசப்பட்டதோ இந்த தீர்ப்பு.
  உடனடி எதிர்வினையான இந்தப் போராட்டம் வரவேற்கத் தக்கது. ஆனால் வீச்சான ஒரு வெளிப்பாடு அவசியம் எனக் கருதுகிறேன்.
  – குறுக்கு சால்

 4. இவரு அர்ச்சகர் அடையாளத்தை துறந்தோன இந்த உலகம் என்ன இருன்டுட போகுதா … போங்கய்யா.. This case itself is a waste case

 5. இதனை நான் வரவேற்கின்றேன்.
  இந்து மதம் வர்ண அடிப்படையில் தான் கட்டப்பட்டுள்ளது. முடியுமானால் சைவம் வர்ண அடிப்படையிலானது அல்ல ஆகவே சைவம் இந்து மதத்திற்குள் வராது என்று முதலிலிருந்து தொடங்க வேண்டும். அல்லகு இந்து மதத்தைத் துறக்க வேண்டும்.
  அர்ச்சகராவதற்கு ஆகமங்கள் படித்தவர் அதனைத் துறந்திருக்கின்றார். அவர் இப்போது துறந்திருப்பது அர்ச்சகர் அடையாளத்தை மட்டுமா அல்லது இந்து அடையாளத்தையும் சேர்த்துத்தானா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க