privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திடாஸ்மாக்கை மூடு என்று எழுதினால் பள்ளிச் சுவர் அசிங்கமாகுமா ?

டாஸ்மாக்கை மூடு என்று எழுதினால் பள்ளிச் சுவர் அசிங்கமாகுமா ?

-

திருவாரூர்

20-01-2016 – காலை 08.35 மணி…அரசு மேல்நிலைப் பள்ளி, அம்மையப்பன், திருவாரூர் மாவட்டம்.

tvr-govt-school-anti-tasmac-campaign-17அலங்கோலமாகக் கிடந்த பள்ளியின் சுற்றுச்சுவரில் (திருவாரூர் – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள) அழகாக வண்ணம் பூசி மக்கள் அதிகாரம் அமைப்பினர் டாஸ்மாக்கை மூடச் சொன்னது “குற்றமாம்” !

உதவித் தலைமையாசிரியர் R.முருகபூபதி அவர்கள் திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளியை பள்ளியின் கிளர்க் S.தொட்சிணாமூர்த்தி அவர்களின் மூலம் அழைத்து வரச்சொல்லி ஆபீஸ் ரூமில் வைத்து, “பள்ளிச் சுற்றுச்சுவரில் எழுதுவது தவறு. பள்ளிச் சுற்றுச்சுவரை அசிங்கப்படுத்திட்டீங்க. எழுதுவதை நிறுத்துங்கள், எழுதக்கூடாது போலீசுக்கு சொல்லுவேன், பெட்டிஷன் எழுதுவேன்” என்று மிரட்டியிருக்கிறார்.

tvr-govt-school-anti-tasmac-campaign-18பள்ளியின் சுற்றுச்சுவரிலேயே ப.உ.த.ஆசிரியர் R.முருகபூபதிக்கு இவ்வளவு “அக்கறை” இருக்கிறது என்றால் பள்ளியின் மேல் “எவ்வளவு” அக்கறை இருக்கும் என புல்லரித்துப் போகாதீர்கள்!

எழுதியதற்கு பக்கத்திலேயே ஏற்கனவே இருந்த 25 அடி நீளமுள்ள பள்ளியின் சுற்றுச்சுவரை காணவில்லை. காணாமல் போய் சுமார் ஒரு வருடம் கடந்துவிட்டது. ப.உ.த.ஆசிரியர் R.முருகபூபதிக்கு இது தெரியாதா? காணாமல் போன சுவரை இன்றுவரை ஏன் கண்டுபிடிக்க அவரால் இயலவில்லை?

tvr-govt-school-anti-tasmac-campaign-11வினவில் ஏற்கனவே “பாம்புகள் படையெடுக்கும் அம்மையப்பன் பள்ளி” என்ற தலைப்பில் படித்திருப்பீர்கள். மாணவிகள் கழிவறைக்குச் செல்லும் வழியில், பாழடைந்த கட்டி சுமார் 15 வருடங்களே ஆன மூன்று ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த வேதியியல் ஆய்வுக்கூடக் கட்டடத்தை மாணவிகளின் உயிருக்கு ஆபத்தாக இருக்கிறது என்பதால் இடிக்கப் போராடினாரா இந்த வேதியியல் SORRY ப.உ.த.ஆசிரியர் R.முருகபூபதி?

போராடி அரசை இடிக்க வைத்தவர்கள் RSYF மாணவர்கள்!

வேதியியல் ஆய்வுக்கூடம் இடிக்கப்பட்ட இடம் 10 நிமிடங்கள் மழை பெய்தாலே குட்டை போல் மாறிவிடும். ஏன் குட்டை போல் மாறுகிறது?

வேதியியல் ஆய்வுக்கூடத்தை இடிப்பதற்காக இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் இன்றுவரை கட்டப்படவில்லை. (பூட்டப்படுது மெயின் கேட்… ஆனா தொறந்து கெடக்குது காம்பவுண்டு…) அதைக்கட்ட ப.உ.த.ஆசிரியர் R.முருகபூபதி ஏன் முயற்சிக்கவில்லை?

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்யப்படுவதே இல்லை. கக்கூசுக் கதவுகள் ப.உ.த.ஆசிரியர் R.முருகபூபதியைப் போன்று ‘முடிந்தால் மூடிப்பார்’ என்று முறுக்கிக்கொண்டு நிற்கிறது. சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவர்கள் கழிப்பறை ஓராண்டாக “பொதுக் கழிப்பறையாக” மாறிவிட்டது…

கழிவறைக்கு வரும் மாணவர்கள் இதன் வழியே வெளியேறினால் சிதறிச் சாவார்கள் என்பதும் ப.உ.த.ஆசிரியர் R.முருகபூபதிக்கு தெரியாதா?

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

வடக்கு மெயின் பில்டிங் போர்டிகோ பில்லர் கம்பி வெளியே தெரிகிறது…
மாணவிகள் கழிவறையோ கதவின்றி பராமரிப்பும் இல்லாமல் திறந்தே கிடக்கிறது…
மாணவர்கள் கழிவறை எதிரேயுள்ள, ஸ்டோர் ரூமாக “மாறிய” பில்டிங்கில் மரம் முளைத்திருக்கிறது…

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புதிதாக கட்டப்பட்ட வேதியியல் ஆய்வகச் சுவர் மற்றும் பில்லர் மிக மோசமான நிலையில் உள்ளது…
ஆசிரியர்கள் கழிவறையோ காட்டுக்குள் இருக்கிறது. கக்கூசுக்குப் போய் வருவதே ஆசிரியர்களுக்கு “சவாலான பணி” என்பதை அறியமுடிகிறது…மாணவர்கள் கழிவறை எதிரே “வற்றாத வாய்க்கால்” ஒன்று ஓராண்டாக ஓடிக்கொண்டிருக்கிறது (உபயம்- பஞ்சாயத்து ஆபீஸ்).
வகுப்பறை ஜன்னல் கதவுகள் பலவற்றைக் காணோம். பல உடைந்து தொங்குகிறது. மீதமுள்ள பொரும்பாலான கதவுகளை மூடவே முடியாது…

வகுப்பறையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்துகொண்டே இருக்கிறது. உள்ளிருந்து செங்கல் எட்டிப் பார்க்கிறது…
கவுருமண்டு லட்சணம் அம்மையப்பன் பள்ளியில் SORRY அரசுப் பள்ளி அத்தனையிலயும் அம்மணமா தெரியுது!
மாணவர்கள் அமரும் பென்ஞ்கள் 75% துருபிடித்தும் நெளிந்தும் உள்ளது…
கம்யூட்டர் லேப் பல ஆண்டுகளாக பயன்பாட்டிலேயே இல்லை..!
எப்படித்தான் பிராக்டிக்கல் “நடத்துராங்களோ” அது ப.உ.த.ஆசிரியர் R.முருகபூபதிக்கே வெளிச்சம்…
இதையெல்லாம் சரிசெய்ய துப்பில்லாத ப.உ.த.ஆசிரியர் R.முருகபூபதி அவர்கள் சொல்கிறாராம், காம்பவுண்டில் எழுதக்கூடாது என்று..!

இப்படி சீரும் சிறப்புமாக பள்ளிக்கூடத்தைப் பராமரிக்க, ரசீது கொடுக்காமல் மாணவர்களிடம் பணம் வசூலிப்பதில் ப.உ.த.ஆசிரியர் R.முருகபூபதியும் அவருடைய “கவுரவ” ஆலோசகர் பள்ளியின் தலைமையாசிரியர் பா.சோழனும் கில்லாடிகள்..!ஆசிரியரின் பணி என்ன? ஆசு+இரியர்=ஆசிரியர், குற்றம் நீக்குபவர் என்று பொருள். மாணவக் கண்மணிகளை சீரழிக்கும் SORRY தமிழகத்தையே சீரழிக்கும் டாஸ்மாக் என்ற குற்றத்தை ஆசிரியர்கள் தானே முன்னின்று மூடவேண்டும்.

எங்கள் மாணவச் செல்வங்களை “கொள்ளையடிக்கும்” டாஸ்மாக்கை மூடு என்று களமிறங்குமா ஆசிரியச் சமுதாயம்?

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருவாரூர்

2. கரூர் சுவரெழுத்து பிரச்சாரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
கரூர்

3. உடுமலை பிரச்சாரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
உடுமலை

4. வேதாரண்யம் சுவரெழுத்து பிரச்சாரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
வேதாரண்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க