Friday, October 18, 2019
முகப்பு செய்தி வெறியேறிய காவிக் குரங்குகள் !

வெறியேறிய காவிக் குரங்குகள் !

-

Hindu-Cartoon-16-02-2016-On-JNU
படம் நன்றி: The Hindu

தி இந்து ஆங்கில நாளேட்டில் 16-02-2016 அன்று சுரேந்திரா வரைந்த கருத்துச் சித்திரம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மோடி கும்பல் நடத்திவரும் பாசிசத் தாக்குதலின் பின்னணியை விளக்கியிருந்தது.

‘முடிச்சாச்சு சார்! அனைவரது கவனமும் ஜே.என்.யு மீது இருக்கிறது’ என்று சங்கபரிவார வானரம் ஒன்று மோடியிடம் கூறுகிறது. மோடி நிற்கும் மேடையில் தற்பொழுது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் ரூபாயின் பாதாள வீழ்ச்சி, பங்குச்சந்தை தள்ளாட்டம், பதன்கோட் தாக்குதல், இந்துப் பாசிசம் ரோகித் வெமுலாவைக் கொன்றது, பாராளுமன்றத்தில் ஏகாதிபத்திய தரகுமுதலாளிகளுக்காக நிறைவேற்றப்படவேண்டிய மசோதாக்கள், வர இருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் ஆகியவற்றை சுட்டுவதோடு, மக்களை திசைதிருப்பவே ஜே.என்.யுவில் தேசபக்தி வேடம் போடப்படுகிறது என்பதை இந்த கார்ட்டூன் எடுத்துரைக்கிறது.

அதுவும் ஆர்.எஸ்.எஸ் வானரத்தின் வாலில் எரியும் தீ எப்படி ஜே.என்.யுவில் கச்சிதமாக பற்ற வைக்கப்பட்டிருக்கிறது என்பதை குறிப்பாக காட்டுகிறது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் ஜெஜ்ரிவால் இந்து ஆங்கில நாளேட்டின் இந்தக் கருத்துச் சித்திரத்தை ரீ-டிவிட் செய்திருக்கிறார். விளைவு?

டெல்லியின் இந்து சேனா கும்பல், கெஜ்ரிவால் இந்துக்களின் கடவுளை அவமதித்துவிட்டார் என்று டெல்லி மந்திர் மார்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறது. கருத்துச்சித்திரம் இந்து ஆங்கில நாளேட்டினுடையது என்ற அறிவு கூட இல்லாமல் காவிக் கும்பல் கள் குடித்த ஓநாயாக டெல்லியில் எந்த அளவிற்கு இரத்தவெறியுடன் அலைந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள்.

அதிலும் தில்லி பா.ஜ.க தலைவர் சதிஷ் உபாத்யா நுண்ணுணர்வோடு ஒரு பிட்டைப் போட்டிருக்கிறார். அதாவது ஜே.என்.யுவில் தீ வைத்திருக்கும் காவி ரவுடியாக இந்துக்கள் வணங்கும் அனுமனை வரைந்து அவமதித்து விட்டார்கள் என்று சீறியிருக்கிறது இந்த கொழுப்பேறிய தண்டச் சப்பாத்தி! .

யது குலப் பெண்களின் தாவணியைப் பிடித்து இழுத்தும் வெண்ணெய் திருடித் தின்றும் லீலைகள் புரியும் கண்ணனே பார்ப்பன பாசிசத்தை நிறுவுவதற்காக தர்மம் தாழ்ந்து அதர்மம் தலைதூக்கும் போது அவதரிப்பேன் என்று சொன்னது இந்த தடிமாட்டுக்குத் தெரியவில்லை. தேசபக்தியைக் காப்பாற்றி அசுரர்களைக் கொல்வதற்கு அந்த மைனர் கண்ணனே ஏகபத்தினி ராமனின் பாடிகார்டு அனுமனை அனுப்பி பாரதமாதாவை ரக்ஷித்திருக்கிறான் என்று நியாயமாக சுரேந்திராவுக்கு கட் அவுட் வைத்து பூஜித்திருக்க வேண்டும். மோடியை விஷ்ணு அவதாரம் என்று கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்திய ஓவியருக்கு பாரத ரத்னாவே கொடுத்திருக்க வேண்டும்.

இந்த அறிவுகூட இல்லாத இப்பேற்பட்ட முட்டாள்களை வைத்து இந்து ராஷ்டிரத்தை எப்படி கட்டியமைப்பது என்று அரவிந்தன் நீலகண்டன், குருமூர்த்தி போன்றவர்களே தலையில் அடித்துக் கொண்டு புலம்புவார்கள். அதிலும் பாருங்கள், வானரங்கள் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் விமரிசக்கப்பட்டு தீப்பிடித்து எரிவதாக காட்டப்படுவதை எதிர்க்கவில்லை. ஒருவேளை இதெல்லாம் உண்மைதானே என்று சகஜமாக இருக்கலாம்.

abvp cartoon

பாரதமாதாவை பிளாட்டு போட்டு விற்று வரும் பார்ப்பனிய இந்துமதவெறியர்கள், சீதையைக் கொன்ற ராமனின் பாடிகார்டுக்காக கொதிப்பதில் வியப்பில்லையே?

_____________________________

சுவரொட்டிகளை தின்னும் போலீசு!

பிப். 19 2009 சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடுத்தது. இன்றைக்கு வரைக்கும் நீதி கிடைக்கவில்லை.

Prpc_Feb19_poster vinavuஇன்று விடிகாலை 4 மணியளவில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் உயர்நீதி மன்ற பகுதியை சுற்றி கண்டன சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்தார்கள். எப்படியோ மோப்பம் பிடித்து வந்த பூக்கடை காவல்நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் சுவரொட்டியை ஒவ்வொன்றாக கிழித்துக்கொண்டிருந்தார். தூரத்திலிருந்து கவனித்த தோழர்கள், அருகில் சென்று “ஏன் கிழிக்கிறீர்கள்?” என்றதற்கு, ‘சினிமா போஸ்டரை கிழிக்கிறோம்” என பம்மி பதில் சொன்னது. “கண்ணு தெரியலையா? படிக்க தெரியாதா?” என எகிறியதும் போலீசு பின்வாங்கியது.

வழக்குரைஞர்கள் ஒன்றிணைந்து போராடும் பொழுது தான் 2009 தாக்குதலுக்கு நீதி கிடைக்கும். சுவரொட்டியின் மீது கைவைக்க பயமும் வரும்!

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான குறுஞ்செய்திகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க