Friday, September 17, 2021
முகப்பு அரசியல் ஊடகம் இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக RSS-க்கு ஆப்பு !

இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக RSS-க்கு ஆப்பு !

-

வின்.டிவி-யின் விவாத நிகழ்ச்சியில் பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் கலந்து கொண்ட வீடியோ தொகுப்பு இது. வின் டி.வி நெறியாளராக இருக்கும் தம்பி நிச்சயமாக அம்பிதான் எனுமளவுக்கு பாசிசக் கருத்துக்களை பத்தாம் வகுப்பிலேயே உருப்போட்டவர் போலும். மாணவர்களுக்கு அரசியல் கூடாது, அப்சல் குருவை ஆதரித்தால் தூக்கில் போடுவது சரி – விட்டால் நானே போடுவேன், கண்ணையா குமாரை கைது செய்தது சரி, தேச துரோக முழக்கங்கள் போட்டார்கள் என்பதாகவே முதலுரை, இடையுரை, முடிவுரை என எல்லா உரைகளிலும் முழங்கினார்.

இருப்பினும் தோழர் கணேசன் இடைமறிப்பை போதுமான அளவுக்கு அனுமதித்தார் அல்லது அனுமதிக்கப்பட்டார் என்பதையும் நாம் நன்றியுடன் கூற வேண்டும். சங்க வானரப்படை சார்பாக வந்த நரசிம்மன் என்பவர் நெற்றியில் நாமமும், பேச்சில் விசமுமாக இருந்தார் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. ஆக ஆர்.எஸ்.எஸ் அம்பியும், வின்.டிவி தம்பியும் என்ன பேசியிருப்பார்கள் என்பதை பாண்டேக்களை அறிந்தவர்களுக்கு போரடிக்கும் விசயம்.

இந்த வீடியோவின் இரண்டாம் பாகத்தில் தோழர் கணேசன் , அம்பி – தம்பி கூட்டணியை உலுக்கு உலுக்கு என்று உலுக்கினார். முத்தாய்ப்பாக ஆர்.எஸ்.எஸ் கூட்டம்தான் இந்த நாட்டின் பயங்கரவாதிகள் என்ற உண்மையை ஓங்கிச் சொன்னார். எள்ளும் கொள்ளும் வெடித்த நரசிம்மன் நிகழ்ச்சி முடியும் போது கொஞ்சம் விறைப்போடு காக்க காக்க போலிசு மாதிரி முன் வந்த போது தோழர் கணேசன் எடுத்த விசுவரூபத்தைக் கண்டு பின்வாங்கினார். அதே போல விவாதத்தை நடத்திய தம்பியிடம், நீங்களும் ஆர்.எஸ்.எஸ் கூட்டமும் ஒரு கருத்தை விவாதம் என்று திணிப்பதற்கு என்னை ஏன் அழைத்தீர்கள் என்று கேட்டார். பரபரப்பான காட்சிகள் இரண்டாம் பாகத்தில். அதை விட பரபரப்பு ஆஃப் லைனில் நடந்ததால் அதை இங்கே வெளியிட முடியவில்லை.

எனினும் பாண்டேக்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒரு ஆர்.எஸ்.எஸ் அம்பி பயங்கரவாதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறார்.

 1. தேசவிரோதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் ஒவ்வொரு அமைப்பையும் அதன் நிதி நிர்வாகத்தையும் அரசாங்கம் கண்காணிக்க வேண்டும்.ஜனநாயக நாட்டை சீர்குலைக்க இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் பதிலடி கொடுக்க வேண்டும்.

 2. சரியாக சொன்னீர்கள் சிரினீவாசன், கண்டிப்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை தடை செய்வதுடன் அதன் நிதி வரவுகளை கண்காணித்து பறிமுதல் செய்ய வேண்டும். ஏனெனில் வெள்ளையனுக்கே விளக்கு பிடித்தவர்கள். அதே போன்று மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு பின்னுள்ள மர்மங்களை ஆராய வேண்டும். கல்யாண வீட்டிலேயே ஒப்பாரிக்கு வைக்கும் இந்த நடிகர்களுக்கு இழவு வீட்டில் அழுவதற்கு சொல்லியா தர வேண்டும். இவர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய தரகு முதலாளிகளுடன் உள்ள கள்ள உறவினை அம்பலப்படுத்தினால் இவர்களின் தேசபக்தி கோவணம் கலண்டு அம்மனமாக நிற்பார்கள். (ஆப்பு கரெக்டா சீனி அங்கிள்)

  • Karuppan, Srinivasan had expressed his views in a very decent manner. But the words used by you are not as decent as Srinivasan. Words used by you shows your true colour (caste).

   • தேசம் தேசவிரோதம், எதுவென்பது நீங்களும் சீனிவாசனும் உருவாகியதை நான் ஏற்க வேண்டும் இல்லையெனில் தேசவிரோத பட்டம் சுமக்க வேண்டும். இது டீஜென்ட்டா…அதுசரி சுப்பிரமணியசாமியை கண்டித்தால் அனைத்தையும் மூடிக்கொள்ளும், கண்டிப்பவர்களை ஏசுகின்ற நீங்கள் டெல்லியில் வழக்குரைஞர்கள் போர்வையில் காவி- காலிகளின் தாக்குதலை கள்ள மவுனமாக ரசிக்க செய்வது எது? சாதியில்லாமல்….அது சரி உங்களுக்கு வந்தால் ரத்தம். அடுத்தவனுக்கென்றால் தக்காளி சட்னி……

 3. முதலில் தேசம்ன்னா என்ன? வாழும் மக்களை தவிர்த்து தனியாக தேசம் தனியாக அந்தரத்தில் தொங்குகிறதா.மக்கள் மீது பற்று, பாசம்,அவர்களின் நலனில் அக்கறை,அவர்களின் முன்னேற்றம்,இது குறித்து பேசுவது,அதற்காக போராடுவது மட்டுமே தேசபக்தியாக இருக்க முடியும்.அதை விடுத்து ஒரு பகுதி மக்களை தேசவிரோதிகள் என்று கற்பித்து,அவர்களை கொலை செய்வதும்,பெண்களை மானபங்கபடுத்துவதும்,கற்பழிப்பதும்,கற்பிணிகளின் வயிற்றை கிழித்து கருவிலிருந்து சிசுவை வாளால்குத்தி தீயால் எரிப்பவர்களும் தேசபக்தர்களா? இவர்கள்தான் தேசவிரோதிகள்.இவர்கள்தான் அன்னியநாட்டிலிருந்து அதிகம் நிதி பெறுகிறார்கள்.இவர்கள்தான் ஜனநாயகத்தையும் நாட்டையும் சீர்குலைக்கிறார்கள்.இவர்கள்தான் RSS ஆர்.எஸ்.எஸ்,பாஜக,ஏவிபிபி.பஜ்ரங்தள் முதலிய பார்ப்பன பாசிஸ்ட்கள்.இவர்களைதான் தடுக்கவேண்டும்,ஒழிக்கவேண்டும்.இவர்களே தேசவிரோதிகள்.

  • முதலில் தேசம்ன்னா என்ன? வாழும் மக்களை தவிர்த்து தனியாக தேசம் தனியாக அந்தரத்தில் தொங்குகிறதா.மக்கள் மீது பற்று, பாசம்,அவர்களின் நலனில் அக்கறை,அவர்களின் முன்னேற்றம்,இது குறித்து பேசுவது,அதற்காக போராடுவது மட்டுமே தேசபக்தியாக இருக்க முடியும்.” சரியாகச் சொன்னீர்கள்.

  • கருப்பன்,புதுநிலா you both are well versed in divesion tactics from the main stream. keep attacking on RSS and other fringe elements that alone every one can do. If RSS is so dangerous why the KHAN + CROSS govt or any state govt have not banned it? If they can ban SIMI, IM etc like MUSLIM outfits. You all have right to oppose MODI, BJP etc but not against the interests and integrity of OUR COUNTRY. A POTENT INDIAN WILL NEVER INDULGE IN ANY SUCH ACTS.தேச விரோத சிந்தனைகளை செயல்களை கருத்துரிமை என்ற பெயரில் யார் ஆதரித்தாலும் அது தவறு.பயம் என்பதே இல்லாமல் இவர்கள் இங்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில் செயல்படுவதால் வருங்கால மாணவ சமுதாயம் செய்வதறியாது சீரழிகிறது.

 4. Vinavu always blames America for terrorism… They don’t blame pakistan for terrorism. If Country goes to the hands of people like vinavu…நாடு வெளங்கிடும்

  • பொண்டாட்டி புள்ள பெத்தாலும் பாகிஸ்தான் பெயரை சொல்றவங்க தான் ஆட்சியில இருக்காங்க, நாடு வெளங்கிடுச்சா என்ன?

   • integrity of OUR COUNTRY இதுக்கு என்னண்ணே அர்த்தம். வெள்ளைக்காரனுக்கு அப்போதும் இப்போதும் சொம்படிக்கும் வேலை செய்வது integrity of OUR COUNTRY

    • \\integrity of OUR COUNTRY இதுக்கு என்னண்ணே அர்த்தம்// very good this only I expected.we know the difference between mother and wife. we know the difference between food and …. BUT INTEGRITY, தேசம் தேசவிரோதம் ..அது அது என்னண்ணே அர்த்தம்.அது ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.க, ஏ.பி.வி.பி கும்பலின் பார்பன பாசிச….சரியா

 5. இந்த தளத்தை நடத்துபவர்தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் intoleranceக்கு சரியான உதாரணம். தன்னால் பதில் சொல்ல முடியாத பின்னூட்டத்தை எவ்வளவு முறை மறுபடியும் மறுபடியும் அனுப்பினாலும் அனுமதிக்கவேயில்லை

 6. ஏன் காந்தியை கொன்ன கோட்சே படத்துக்கு ஏன் மலர் தூவி நமஸ்காரம் பண்ணனும். விவாதத்துல ஒரு நேயர் கேட்ட இந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு கண்ணையா குமார் பிரச்சினையை பத்தி பேசுங்கப்ப தேச பக்தர்களா

 7. கோட்சே,திபு சுல்தான்,அப்சல் குரு,யாகுப் மேமன் யார் ஆதரித்தாலும் அது தவறு.படிக்கும் மாணவர்களை படிக்க விடாமல் கம்யுனிஸ்டுகள் இந்த நாட்டிற்கு எதிராக அவர்களை தூண்டி விடும் செயல இது.

      • மக்கா, மருது பாண்டியர், தீரன் சின்னமலை, கட்டபொம்மன்,அஷ்வகுல்லா கான், ஜான்சிராணி, அசரத் பேகம் உள்ளிட்டவர்கள் எல்லாம் எந்த நாட்டு சமூக சேவகர்களோ அதே நாட்டு சமூக சேவகர் தான் திப்புவும். ஆனால் கொடுமை என்னவென்றால், தொண்டைமானும் கோட்சேவும் கூட அதே நாடு தான்.

       இப்போ உமது டவுட்டு எல்லாம் தீர்ந்ததா?

      • மக்கா சிறினிவாசலு, நீர் எழுதினத நீரே படித்து பாரும். கோட்சே, யாகூப், அப்சல் எல்லாம் 1947க்கு பின்னாடி. திப்பு 1947க்கு முன்னாடி. திப்பு யாருக்கு தேசதுரோகி மக்கா?

 8. வின் டிவி விவாதத்த இந்து பாசிசத்தின் பிரச்சார மேடையா பயன்படுத்திகிட்டாரு நரசிம்மன் (அம்பி).

  விவாதத்துக்கான பேசுபொருளான ஜெ.என்.யு பிரச்சனைய கணேசன் பேசவரும்போதெல்லாம் இடைமறித்து திசைதிருப்பிவிட்டார்.

  அதேமாதிரி இங்க நடக்கிற மறுமெழிகள் விவதத்துலயும், சீனிவாசன், ஏற்கனவே நரசிம்மன் பேசி முடிச்சதத்தான் தொடர்கிறாரே தவிர இந்த பதிவ பத்தியோ, நடக்கிற பிரச்சனைகள பத்தியோ பேசாம தேசபக்தி பற்றி எல்லாருக்கும் வகுப்பெடுத்துகிட்டிருக்காரு.

  இதுக்கு ரவி வக்காலத்து வேர …

 9. பார்ப்பனிய பாசிசமே இந்திய தேசத்தின் அடையாளம்னும் அதுக்கு எதிரான ஜனநாயகவாதிகளையெல்லாம் தோச விரோதிகளா சித்தரிக்கிறத்தும், பா.ஜ.க, ஏபிவபி, ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பொது விவாத யுத்தி.

  மதவெறியையே தேசபக்தியாகவும், சாதிய ஒடுக்குமுறையையே தர்மமாகவும் கொண்ட இவர்களின் கண்களுக்கு பொதுமக்களும், மாணவர்களும் தேசவிரோதிகளாகத்தெரிவது ஆச்சரியமில்லை.

  இந்துத்துவ பாசிஸ்டுகள் தங்களுக்கான சவக்குழியை தாங்களே தோண்டிக்கொண்டிருக்கின்றனர் என்பதற்கான உதாரணங்களே

  மாணவர்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் எதிராக அடுத்தடுத்து நடத்தப்படும் ஒடுக்குமுறைகள்.

  இதற்கு தக்க எதிர்வினையை மாணவர்களும், பொதுக்களும் நிகழ்த்திக்காட்டுவார்கள் என்பது மட்டும் உறுதி.

  • யாருக்கு மதவெறி யாருக்கு தேசபக்தி என்பது உலக மக்கள்கு தெரியும்.நிங்கல் ஒன்றும் யாருக்கும் பாடம் எடுக்க தேவை இல்லை.\\மாணவர்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் எதிராக அடுத்தடுத்து நடத்தப்படும் ஒடுக்குமுறைகள்.//தூ. அப்சல் குரு இறப்புக்கு இரங்கல் தெரிவித்து ஒரு கூட்டம்,மற்ற மாணவர்களின் ஆதரவுடன் சிலர் மட்டும் முகமூடி அணிந்து கோசம். அதில் இவர் தலைமை. அங்கு தேச விரோத கோஷங்கள் எழுப்படுகிறன, இந்தியாவை விமர்சித்து போஸ்டர்கள் , இவர் மட்டும் கோஷம் எழுப்பவில்லை என்பது மட்டுமே இவர்களால் கூற முடியும் மற்றவை பற்றி இவர்களின் பதில் என்ன ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க