privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஃபேசியல் மட்டுமா சுதந்திரம் ? திருச்சி மகளிர் தின அரங்கக் கூட்டம்

ஃபேசியல் மட்டுமா சுதந்திரம் ? திருச்சி மகளிர் தின அரங்கக் கூட்டம்

-

பெண் விடுதலையை முன்னெடுப்போம் சமூக விடுதலையை சாதிப்போம்!

ப்பெல்லாம் யாருங்க
சாதி பாக்குறா?
என்று நடிப்பது போலவே
பெண்கள் விசயத்திலும்
இந்தச் சமூக அமைப்பு நேர்மையாயில்லை.

wld-trichy-notice-3ஒருபக்கம்
பூமாதா, பாரத மாதா – என்று
புகழ்ந்து பேசிக் கொண்டே,
‘பொம்பளயா லட்சணமா இரு’!
என்ற போட்டு மிதிக்கும் ஆணாதிக்கம்!

புவியீர்ப்பு விசையே
காரித் துப்புமளவுக்கு
‘அம்மா’வின் காலுக்கு
அறிவியல் ஆச்சர்யங்களாய்
உடலை வளைக்கும்
அமைச்சர்கள், அதிகாரிகள்…

‘ஆம்பள சிங்கங்கள்’
பொது வெளியில்
போராடும் பெண்களை
“பொம்பளைக்கு என்னா திமிரு”
என்று அடக்கும் கேவலங்கள்.

கடவுளை
விழுந்து விழுந்து
கும்பிடலாம்
ஆனால்,
கருவறைக்குள்
பெண் நுழைந்தால் – பூசை செய்தால்
தீட்டு என்கிறது மதம்!

கணினிக்குள்
புகுந்து புறப்படலாம்
ஆனால், சமூகப் பிரச்சினைகளுக்கு
பெண் குரல் கொடுத்தால்
பூட்டு என்கிறது அரசு! பூணூல், முகநூல்
இரண்டுமே
இறுக்குகிறது பெண்ணை,
சாதி வெறி, மத வெறி, பாலியல் வெறி
அனைத்தும்
சிதைக்கிறது பெண்ணை.

wld-trichy-notice-2பெண்களின் சுயமரியாதைக்கான
சுயசார்பு, அரசியல் உரிமைகள், வாழ்வாதாரம்
அனைத்தையும் பிடுங்கிவிட்டு
அடிமைகளாக்கும்
பன்னாட்டு நிதி மூலதனம்

பீட்சா-பர்கர், ஷாப்பிங் ட்ரெண்ட்,
நேச்சுலர் ஸ்பா என்ற அள்ளிவிட்டு
வளர்ச்சி, முன்னேற்றம் என மயக்கும்
நுகர்வுமய தந்திரம்,
சோசியலை இழந்துவிட்டு – வெறும்
ஃபேசியல் மட்டுமா சுதந்திரம்?

ஏகாதிபத்திய சந்தைப் பொருளாதாரம்
இந்துமதவெறி கந்தைக் கலாச்சாரம்
இரண்டுமே பெண்ணின் பெரும் பகை!

சுயதொழில்களை வாழவிடாமல்
பன்னாட்டு பிராண்டுகளை ஏவி
அழித்துவிட்டு
ஓட்டுக்கு ஆள்பிடிக்கவும் கடன் வாங்கவும்
உரிமைகளை மழுங்கடிக்கும்
சுயஉதவிக் குழுக்கள்

எட்டு மணிநேர வேலை
பணிப் பாதுகாப்பு, நிரந்தரம் எதுவுமில்லாமல்
ஐ.டி, கால் சென்டர்… அவுட் சோர்சிங் முதல்
நைட்டி எக்ஸ்போர்ட்… காண்ட்ராக்ட் வரை
பெண்களை “ஷாக் இன் இந்தியா”வில்
பொசுக்கும்
மேக் இன் இந்தியா சுரண்டல்கள்

முறைகேட்டை தட்டிக் கேட்டால்
படிக்கும் கல்லூரியிலேயே
பிணமாக்கப்படும் எஸ்.வி.எஸ் மாணவிகள்

முறையாகப் பணி செய்தால்
காவல் துறையிலேயே
தற்கொலை மரணமாகும்
டி.எஸ்.பி விஷ்ணுபிரியாக்கள்!

குடிகெடுக்கும் டாஸ்மாக்கை
மூடச் சொன்னால்
மண்டையைத் திறக்கும் போலீசு.
நீதிதேவதைகளின் கண்களை கட்டிவிட்டு
பாலியல் குற்றமிழைக்கும் நீதிபதிகள்!

மொத்த அரசுக் கட்டமைப்புமே
பெண்களுக்கு எதிரியாக
அச்சுறுத்துகின்றது,
பெண்களுக்கு மட்டும்தானா?
உழைக்கும் வர்க்கமான
ஆண்களின் மீதும்
ஒடுக்குமுறைகள் தொடருகின்றன

எனவே
இது “பொம்பள சமாச்சாரம்”
என எந்த ஆணும் ஒதுங்கிக் கொள்ள உரிமையில்லை

பாலினச் சமத்துவத்தோடு
ஒடுக்குமுறைகள், சுரண்டலுக்கு எதிராக
உழைக்கும் வர்க்கமாக
நாம் ஒன்று சேர்ந்தால்
சமூக விடுதலை சாத்தியமே

எப்படி?
என்ன செய்ய வேண்டும்?

எந்த வேலையாக இருந்தாலும் – உங்கள்
சொந்த வேலையாக வாருங்கள்…

சந்திப்போம்! சாதிப்போம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சமூக விடுதலையே பெண் விடுதலை! குருதியில் மலர்ந்த மகளிர் தினம்

அரங்குக் கூட்டம்

 

மார்ச் 8 மாலை 6.00 மணி

தமிழ்ச்சங்க கட்டிடம்
தேவர் ஹால் எதிரில்
சிங்காரத் தோப்பு, திருச்சி

தலைமை
தோழர் நாகேஸ்வரி
அமைப்புக்குழு உறுப்பினர், பெ.வி.மு, திருச்சி

சிறப்புரை
முனைவர் இரா சக்குபாய்,
மேனாள் தலைவர்-பேராசிரியர், பெரியார் உயராய்வு மையம்,
பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி

தோழர் துரை.சண்முகம்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை

ம.க.இ.க மையக் கலைக்குழுவின்
புரட்சிகர கலை நிகழ்ச்சி

பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி
தொடர்புக்கு செல் 9750374810

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க