privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்விஷாலின் கருணை, யமுனையின் துயரம் - குறுஞ்செய்திகள்

விஷாலின் கருணை, யமுனையின் துயரம் – குறுஞ்செய்திகள்

-

விக்ஸ் ஆக்‌ஷன் 500 மட்டும்தான் பக்க விளைவை ஏற்படுத்துகிறதா?

பக்க விளைவை ஏற்படுத்துவதால் இந்தியாவில் விக்ஸ் ஆக்‌ஷன் 500 க்கு தடை
பக்க விளைவை ஏற்படுத்துவதால் இந்தியாவில் விக்ஸ் ஆக்‌ஷன் 500 க்கு தடை

ஓவியம்: சர்தார்

—————————————————-

நடிகர் விஷாலிடம் இருப்பது கருணையா, பாராமுகமா?

நடிகர் விஷாலிடம் இருப்பது கருணையா, பாராமுகமா?
நடிகர் விஷாலிடம் இருப்பது கருணையா, பாராமுகமா?

ஞ்சை மாவட்ட விவசாயி பாலன் அடிபடும் வீடியோவை பார்த்து நடிகர் விஷால் கண்கலங்கி “மீதி கடனை நானே அடைக்கிறேன்” என்று அறிவிக்கிறார். இதற்காகவே காந்திருந்த ஊடகங்களில் பாலன் மறைந்து விஷாலின் கருணை செய்திகள் கண்களை பறிக்கின்றன. நடந்திருப்பது ஒரு அநீதி. முக்கால் பங்கு தொகையை அடைத்து விட்டு மீதியை அறுவடை முடிந்து அடைக்கிறேன் என்று நேர்மையாக வாழும் ஒரு விவசாயியை தனியார் வங்கிகளும், போலிசும் சேர்ந்து அடிக்கின்றன. இந்த கயவர்களை கண்டிக்காமல் விவசாயி பாலனுக்கு பணம் கொடுப்பேன் என்று சொன்னால் என்ன பொருள்? அடித்தது நியாயம்தான், அடிபட்டது பாவம்தான் என்று அந்த ஒரு இலட்சத்தை கொடுத்து விட்டால் பாவமும் போய்விடும், நியாயமும் சமாதானமாகும் என்கிறார் விஷால்.

ஊடக அறத்தின் படி கடன் கொடுத்து அடியும் கொடுத்த கோடக் மகேந்திரா வங்கியின் பெயரை எந்த பத்திரிகைகளும் சொல்லவில்லை. அந்த வங்கியின் அடியாளாக ஆட்டம் போட்ட தஞ்சை போலீசின் பெயரையும் அவர்கள் வெளியிடவில்லை. இப்போது விஷாலின் கருணையில் கோடக் மகேந்திராவும், தஞ்சை போலிசாரும் மறைந்து கொள்கிறார்கள். இப்படித்தான் இந்த நாட்டில் விவசாயிகள் கொல்லப்படுகிறார்கள்.

தஞ்சையில் விவசாயிகளும், அவர்களை ஆதரிக்கும் கட்சிகளும் கோடக் மகேந்திரா வங்கி மற்றும் போலீசை கைது செய்யக் கோரி போராடுகிறார்கள். அந்த போராட்டம் வீண், பிடி இந்தா ஒரு இலட்சம் என்று டிவிட்டர் செய்தியால் போராடும் மக்களின் சுயமரியாதையை கேலி செய்கிறார் விஷால்.

அடித்தவர்களை தட்டிக் கேட்காமல் அடிபட்டவருக்கு தானமளிப்பது கருணையா, பாராமுகமா?

—————————————————-

கொலையின் கொடூரங்களை மறைக்கும் தினமணி

கொலையின் கொடூரங்களை மறைக்கும் தினமணி
கொலையின் கொடூரங்களை மறைக்கும் தினமணி

றுத்தலும், மறைத்தலும் அவர்களுக்கு புதிதல்ல. கொல்லப்பட்டவர் தலித், கொன்றவர்கள் தேவர் சாதி வெறியர்கள் என்பதை மறைக்கிறது தினமணி. இதுதான் பார்ப்பனியத்தின் ‘சமூக நல்லிணக்கம்’! தேர்தல் நேரத்தில் ‘அம்மாவின்’ நற்பெயர் சந்தி சிரிப்பது அரசவை புலவராக இருக்கும் வைத்தி மாமாவுக்கு அடுக்காது. சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் நடந்த படுகொலை என்று எழுதும் தினமணி இது தேவர் சாதி வெறியர்களால் நடந்தது என்பதை மறைக்கிறது. அப்படி திருமணம் செய்தால் இதுதான் பாடம் என்ற மறைமுக எச்சரிக்கையும் இதில் உண்டு. ஒரு கொடூரத்தை கண்டிக்காமல் ஒரு முரண்பாட்டினால் நடந்த தவிர்க்க முடியாத விளைவாக காட்டுவது, பகிரங்கமாக அந்த கொடூரத்திற்கு உதவுவதாக மட்டுமே இருக்கும். கொல்லப்பட்ட சங்கருக்கு நிதியுதவியை பெரிதாக காட்டும் தினமணி நீதியை காலில் போட்டு மிதிக்கிறது. காலில் பிறந்தவர்களுக்கான நீதியை அதே காலில் போட்டு மிதிப்பது தலையில் பிறந்தவர்களுக்கு முரணல்லவே!

—————————————————-

யமுனைக் கரையில் காவி பயங்கரவாதம் !

யமுனைக் கரையில் காவி பயங்கரவாதம் !
யமுனைக் கரையில் காவி பயங்கரவாதம் !

“தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவை ஆதரித்து ஜே.என்.யூ மாணவர்கள் முழக்கமிட்டிருப்பது நீதித்துறையை அவமதிக்கும் செயல்” என்று ரவுடி ஹெச்.ராஜாவுக்கு போட்டியாக கிளம்பியவர் டபுள் ஸ்ரீ ரவி சங்கர். வாழும் கலை எனும் சிட்டுக் குருவி லேகியத்தை விற்றே ஒரு ஆன்மீகக் கார்ப்பரேட் கம்பெனியை உருவாக்கியிருக்கும் டபுள் ஸ்ரீ, பா.ஜ.கவின் ஆன்மீகத் பிரிவு அடியாள் தலைவராகவும் சேவையாற்றுகிறார். அதன் அங்கமாக வாழும் கலை லேகியத்தின் 35-ம் ஆண்டு நிறைவை மாபெரும் கும்பமேளாவாக கொண்டாட நினைத்தார். கும்பமேளா என்றால் கங்கா, யமுனைதானே? இந்த முறை யமுனை நதிக் கரையில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மூன்று நாள் மேளாவாம். 150 நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கில் பக்தர்களாம். மேளா நாளை முதல் ஞாயிறு வரை.

யமுனை நதிக் கரையின் வெள்ள வடிகாலை இந்த கார்ப்பரேட் லேகிய கும்பல் சேதப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை ஒட்டி தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு குழுவைப் போட்டு விசாரித்தது. அதன்படி இந்த டபுள் ஸ்ரீ கும்பல் யமுனைக் கரையில் ஏற்படுத்தப் போகும் சேதத்தின் மதிப்பு 120 கோடி ரூபாயாம். அதில் ஐந்து கோடி ரூபாயை அபராதமாக போட்டு விட்டு பசுமைத் தீர்ப்பாயம் மேளாவை நடத்த அனுமதித்து விட்டது. மோடி அரசின் அமைச்சர்கள் மேளாவுக்காக லோலோ என்று அலைந்து திரிந்து வேலை பார்க்கின்றனர்.

இராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் கிட்டத்தட்ட ஈவன்ட் மேனேஜராகவே பணியாற்றுகிறார். யமுனை நதிக்கரையில் இறக்கி விடப்பட்ட இந்திய இராணுவம் பாலம் கட்டுவது முதல் பக்தர்களின் பாதுகாப்பு வரை முழுமையாக கடமையாற்றுகிறது. என்ன இருந்தாலும் பா.ஜ.க சாமியார் என்பதால் பாதுகாப்பு படையின் பக்தியும் அதிமிருக்கத்தான் செய்யும்!

பேயாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரம்! காவி ஆண்டால் யமுனை நாஸ்தியாகத்தானே செய்யும்!

—————————————————-

வினவு ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள், கேலிச்சித்திரங்கள்.

இணையுங்கள்:

வினவு குறுஞ்செய்திகள்

வினவு களச்செய்திகள்

வினவு கேலிச்சித்திரங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க