privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்இந்துத்துவத்தை அம்பலப்படுத்தும் 17 நூல்கள் - அறிமுகம்

இந்துத்துவத்தை அம்பலப்படுத்தும் 17 நூல்கள் – அறிமுகம்

-

1. இந்துத்துவத்திற்க்கு எதிராக 5 நூல்கள் – விடியல் பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடு!

vidiyal bagavath geetha
இந்திய வரலாற்றில் பகவத்கீதை

i. இந்திய வரலாற்றில் பகவத்கீதை – பிரேம்நாத் பசாஸ்
தமிழில் – கே.சுப்ரமணியன்
இந்தியர்களின் மனக்கட்டமைப்பில் பகவத்கீதையின் பார்ப்பனியம் எவ்வாறு தத்துவம், தனிநபர் மற்றும் அரசியல் ஆகிய கூறுகளின் வழி உள்வாங்கப்பட்டுள்ளது என்பதைத் துணிச்சலுடன் கூறும் ஆய்வு நூல்.

_____________________________________

vidiyal RSS danger
ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம்

 

 ii.ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம் விடுதலை கே.இராசேந்திரன்

இந்துத்துவ அரசியலின் போலிப் பரப்புரைகளின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் நூல், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மூலம் பார்ப்பனியத்தை சூத்திரர்களிடமும், தலித்துகளிடமும் கொண்டு சேர்க்கும் தந்திரத்தை விவரிக்கும் நூல்.

_________________________

vidiyal Science
அறிவியலா? அருஞ்செயலா?

iii. அறிவியலா? அருஞ்செயலா?
ப.பிரேமானந்து, தமிழில் சிங்கராயர்

150 வகையான தெய்வீக மோசடிகள் மற்றும் அற்புதங்களின் மோசடியை அறிவியல் வழி விளக்கும் நூல், மூட நம்பிக்கைகளுக்கும் கடவுள் – மதத்துக்கும் உள்ள தொடர்பை எளிய கேள்விகளின் மூலம் புரிய வைக்கும் முயற்சி.

_____________________________________

vidiyal Parpaniyathin vettri
பார்ப்பனியத்தின் வெற்றி

iv.பார்ப்பனியத்தின் வெற்றிபாபா சாகேப் பி.ஆர்.அம்பேத்கர்

இன்றளவும் அதிகார வர்க்கமாக உள்ள பார்ப்பனியத்தை அடையாளம் காண, அதன் அஸ்திவாரத்தைப் புரிந்து கொள்வது அவசியம். மனுதர்மமே பார்ப்பனியம் என்னும் வரலாற்றைப் அம்ப்லப்படுத்தும் ஆய்வு நூல். இத்தகைய புரிதல் இல்லாமல் பார்ப்பனிய ஒழிப்பின் தேவை ஆழ்மனதில் பதியாது.

________________________________

vidiyal pen yen adimaiyanala
பெண் ஏன் அடிமையானாள்?

v. பெண் ஏன் அடிமையானாள்?தந்தை பெரியார்.

நவீன கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளும், 33 விழுக்காடு இட ஒதுக்கீடும் பெண்களை விடுதலை செய்யப் போதுமானவையா? சமூக அடிக்கட்டுமானத்தில் மாற்றங்கள் இல்லாமல் பெண் விடுதலை சாத்தியமா? மதம், பண்பாடு போன்றவற்றை ஏற்றுக் கொண்டு அணுகுவது சரியா? 80 ஆண்டுகளுக்கு முன்பு பதிப்பிக்கப்பட்டு இன்றும் பெண்களால் வாசிக்கப்பட வேண்டிய பெரியாரின் புரட்சிகரக் கருத்துப் பெட்டகம்.

இந்துத்துவத்திற்க்கு எதிராக 5 நூல்கள் – விடியல் பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடு!

முழுத்தொகுப்பு விலை: ரூ.300.00

வெளியீடு: விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி.நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் – 641015,
தொலைபேசி – 0422-2576772, 9789457941
மின்னஞ்சல் முகவரி: vidiyal@vidiyalpathippagam.org

_____________________________________________________________

education communally future
கல்வி
வகுப்புவாதம்
எதிர்காலம

2. கல்வி வகுப்புவாதம் எதிர்க்காலம்:

இனவாத வெறுப்பை உருவாக்கி ஆரிய நாகரிகத்தை நிலை நிறுத்தும் திட்டத்திற்காக நாஜிக்கள் ஒட்டுமொத்த கல்வித்திட்டத்தையும் மாற்றினர். இந்திய நாஜிக்களான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க கல்வியை காவிமயமாக்கும் திட்டங்களை விளக்கும் சிறுநூல்.

விலை: ரூ. 20.00
வெளியீடு: இந்திய மாணவர் சங்கம், தமிழ் மாநிலக்குழு.

_________________________________

 

 

 

 

rss politics
ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல்

 

 

 

 

 

 

 

 

3. ஆர்.எஸ்.எஸ். சின் அரசியல் – சி.சொக்கலிங்கம்

பண்பாட்டுக் காவலர்களாக பசப்பித்திரியும் ஆர்.எஸ்.எஸ். சின் ‘தேசபக்தி’ வேடத்தையும், அந்நிய, உள்நாட்டு மேட்டுக் குடிகளின் நலன்களே அவர்களின் கோசங்கள் என்பதையும் ஆதாரத்தோடு நிறுவும் சிறு நூல்.

விலை: ரூ.25.00
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.

______________________________________

bigotry and cow flesh
மதவெறியும் மாட்டுக்கறியும் – ஒர் ஆவணத் தொகுப்பு

4. மதவெறியும், மாட்டுக்கறியும் (ஓர் ஆவணத் தொகுப்பு)தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கி.வீரமணி, டி,என்.ஜா

மாட்டிறைச்சியைக் கொண்டு இந்துத்துவத்தை திரைகிழிக்கும் பெரியார், அம்பேத்கர் கட்டுரைகளும், புனிதப் பசுவின் புனைகதைகள் வழி மகாபாரதத்தின் மாபாதகர்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் டி.என்.ஜா வின் வரலாற்று வழி பார்வைகள், பார்ப்பனர் நடத்திய பசுவதையை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் பகுதிகள் அடங்கிய ஒரு தொகுப்பு.

விலை: ரூ 30.00
வெளியீடு: திராவிடர் கழக(இயக்க) வெளியீடு, சென்னை – 7.

____________________________________

another name violent sangparivar
வன்முறையின் மறுபெயரே சங்கபரிவார்க் கும்பல்

 

 

 

 

 

 

 

  5. வன்முறையின் மறுபெயரே சங்பரிவார்க் கும்பல் – தொகுப்பாசிரியர் கி.வீரமணி

சங்பரிவார்க் கும்பல் தாமே கலவரத்திற்கு வித்திட்டுவிட்டு, மற்றவர்கள் மீது பழிப்போட்டு மக்களிடையே கலவரத்தை உருவாக்கும் சம்பங்களின் ஆவணமாக இந்நூல்.

விலை: ரூ 35.00
வெளியீடு: திராவிடர் கழக வெளியீடு.

________________________________________

 

sanskrit domination
சமற்கிருத ஆதிக்கம்

6. சமற்கிருத ஆதிக்கம் (ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு) – பதிப்பாசிரியர் கி.வீரமணி

சமூகத்தில் சமற்கிருத மயமாக்கலை திணிப்பதன் மூலம், பார்ப்பன – இந்துத்துவ மேலாதிக்கத்தை நிறுவத் துடிக்கும் காலம் காலமாக இந்துத்துவ முயற்சிகளை மதம், வழிபாடு, இசை, ஆடல் இன்னும் பிற வழிகளில் வாலாட்டும் சமஸ்கிருதமயத்தை ஆய்வு நோக்கில் எடுத்துரக்கும் 22 கட்டுரைகளின் தொகுப்பு.

விலை: ரூ 110.00
வெளியீடு: திராவிடர் கழக(இயக்க) வெளியீடு, சென்னை – 7.

________________________________

 

 

 

 

 

agamangal block tamil
தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?

 

 

 

 

7. தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா? – தமிழண்ணல்

”பார்ப்பனர்களை விடப் ‘பார்ப்பனியம்’ என்ற பகுத்தறிவுக்கும் உயரிய உலகியலுக்கும் நாகரிகத்திற்கும் பொருந்தாத கோட்பாடுகள், பார்ப்பனரல்லாதாரிடமே இன்று மேலோங்கிக் காணப்படுகின்றன..” என்று புதிய பார்ப்பனர்களையும் புரட்டிப்பொட்டு வழிபாட்டு உரிமை வழி பார்ப்பன ஆக்கிரமிப்பை பகுத்துக் காட்டும் நூல்.

விலை: ரூ 25.00
வெளியீடு: தமிழ்த்துவ வெளியீடு, மதுரை – 20.
_______________________________

 

 

 

hindu a illusion
ஹிந்து மாயை

 

8. ஹிந்து மாயை – சு. அறிவுக்கரசு

இந்து – இந்தியா என்ற பார்ப்பன நூலில் இறுக்கப்படும் சமுதாயத்தின் பழைய வரலாற்று விவரங்களை விவாதத்திற்கு வைத்து எளிய நடையில் உண்மைகளை விழிப்படைய வைக்க எழுதப்பட்ட 14 கட்டுரைகளின் தொகுப்பு.

விலை: ரூ 11.00
வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம், சென்னை – 5.

 _______________________________

 

 

 

hindu nationalism
’இந்து’ தேசியம்

 

 

 

 

9. இந்து தேசியம் – தொ.பரமசிவன்

காஞ்சி மடமே ஆட்டைய போட்ட இடம்தான், காஞ்சி மடம் மட்டுமா? இந்து மதமே இரவல் பெயர்தான்… என பல வரலாற்று, இலக்கியச் செய்திகளின் வழி பார்ப்பன தேசியத்தை பாடாய் படுத்தும் நூல் தொகுப்பு.

விலை: ரூ 130.00
வெளியீடு: கலப்பை, சென்னை – 26.

___________________________

 

 

 

 

india toward what
இந்தியா எதைநோக்கி?
ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி – இந்துத்துவா10. இந்தியா எதை நோக்கி?

10.ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி – இந்துத்துவா
ராமச்சந்திர குஹா, லீனா ரெகுநாத், தினேஷ் நாராயணன், வெங்கிடேஷ் இராமகிருஷ்ணன்.

தொகுப்பும் மொழியாக்கமும் – செ.நடேசன்

அசிமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமல்ல, மோடியின் தேவையான நேரத்து மவுனங்களும் கூட பல பிரிவாக பிரிந்து நின்று மக்களின் பன்முகத் தன்மை வாய்ந்த சமூகப்பரிமாணத்தை திட்டமிட்டு சிதைத்து அழிக்கும் சமகால இந்துத்துவ பாசிசத்தை, அதன் அபாயத்தை எச்சரிக்கும் நூல்.

விலை: ரூ 150.00
வெளியீடு: எதிர், பொள்ளாச்சி.

 _____________________________

 

 

liberal tamil oppose manudarmam
மநு தர்மத்திற்கு எதிரான முற்போக்கு தமிழ் மரபு

 

 

 

 

 

 

11. மநு தர்மத்திற்கு எதிரான முற்போக்குத் தமிழ்மரபு – சி.இளங்கோ

பார்ப்பன மனு கொடுங்கோண்மைக்கு எதிராக காலந்தோறும் போராடிய பெளத்த – சமண மரபுகள் தொடங்கி தமிழக பக்தி மரபு, சித்தர் மரபு வரை உள்ள எதிர்ப்புக்குரலை அளவிட்டுக்காட்டும் நூல். காலனிய சீர்திருத்த இயக்கங்கள், பாரதிதாசன், திரு.வி.க, பெரியார், சிங்காரவேலர் வரை வர்க்கப் போராட்டத்தின் முற்போக்கு மரபையும் குறிப்புகளாக பதிவு செய்கிறது இந்நூல்.

விலை: ரூ 50.00
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம், சென்னை – 24.

____________________

face communal need talk
வகுப்புவாதத்தை எதிர்கொள்ள கருத்தாயுதம்

12. வகுப்பு வாதத்தை எதிர் கொள்ள கருத்தாயுதம் – பாலகோபால்

ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழக(APCLC)ப் போராளியான டாக்டர் பாலகோபால் எழுதியுள்ள 36 தலைப்புகளில் ஆன கட்டுரைகளின் தொகுப்பு. இந்துவெறி பாசிசத்துக்கு எதிராக சகல தரப்பு மக்களும் போராட வேண்டிய அவசியத்தை கால நியாயத்தோடு எடுத்து வைக்கிறது இந்நூல். இந்துப் பாசிசம் சுரண்டலுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாகும் உழைக்கும் மக்களுக்கு பெரும் ஆபத்தானது என்ற வர்க்கக் கண்ணோட்டத்தின் வழியாக இந்துப் பாசிசத்தின் சுரண்டும் வர்க்க அரசியல் நோக்கத்தையும் அம்பலப்படுத்துகிறது இந்நூல்.

விலை: ரூ 250.00
வெளியீடு: சிந்தன் புக்ஸ், சென்னை – 86.

 _______________________

babar and ramar need in poor india?
பட்டினி இந்தியாவில் பாபர் மசூதியும், இராமர் கோவிலும்

 

 

 

 

 

 

13. பட்டினி இந்தியாவில் பாபர் மசூதியும் இராமர் கோயிலும் – பேராசிரியர் வெ.சிவப்பிரகாசம்

அம்பானிகள், அதானிகள், டாட்டாக்கள், பிர்லாக்கள் இவர்களின் கங்காணிகளாக இருந்து ஆளும் காவிக்கும்பலின் வரலாற்று மோசடிகளையும், அதன் வழி வழியான பொய்ப் பிரச்சாரங்களையும் பட்டியலிட்டு கோயிலை வைத்து பார்ப்பன கும்பலின் அரசியல் மேலாதிக்கத்தை சமகால ஏராளமான அரசியல் குறிப்புகளுடன் ஆய்வு செய்து இந்துத்துவத்தை பிரித்து மேய்கிறது ஆசிரியரின் எளிய நடையுன் கூடிய இந்நூல்.

விலை: ரூ 160.00
வெளியீடு: கலாம் பதிப்பகம், சென்னை – 4.

______________________________

நூல்கள் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
பதிப்பகம் மற்றும் விற்பனையகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை
சென்னை – 600 002
Ph : 044 – 28412367

மற்றும் நூல்களை வெளியிட்டிருக்கும் பதிப்பகத்தார், அரசியல் – முற்போக்கு நூல்களை விற்பனை செய்யக்கூடிய தமிழகத்தின் அனைத்து கடைகளிலும் இந்நூல்கள் கிடைக்கும்.

_________________________________

    • கிடைக்கும், தொடர்பு கொள்ளுங்கள்
      இந்த 17 புத்தகங்களும் கீழைக்காற்று விற்பனையகத்தில் கிடைக்கும். கீழ்க்கண்ட முகவரி, தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
      கீழைக்காற்று,
      பதிப்பகம் மற்றும் விற்பனையகம்,
      10, அவுலியா தெரு, எல்லீசு சாலை
      சென்னை – 600 002
      Ph : 044 – 28412367

    • இந்த 17 புத்தகங்களும் கீழைக்காற்று விற்பனையகத்தில் கிடைக்கும். கீழ்க்கண்ட முகவரி, தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
      கீழைக்காற்று,
      பதிப்பகம் மற்றும் விற்பனையகம்,
      10, அவுலியா தெரு, எல்லீசு சாலை
      சென்னை – 600 002
      Ph : 044 – 28412367

  1. இது இந்துக்களின் நாடு…வெகு விரைவில் மற்றவர்களை நாடு கடத்துவோம்… மறுத்தால் அடித்து துரத்துவோம்…ஜெய் ஷிந்த்… இந்துக்கள் பொறுமையோடு இருப்பதால் தான் இது போல “புத்தகம்” போட முடிகிறது… அரபு நாடுகளை போல. இந்தியாவும் இருந்தால் போட்டவன், படிப்பவன் எல்லோருக்கும் காய் அடித்து இருப்போம்… வெகு விரைவில் ஷியா அரசாங்கம் போல, ஒரு தனி இந்து அரசாங்கமாக இந்தியா விளங்கும்..

    • ”இந்தியன்’ – உங்களுடைய பெயரே போலி. இந்த மாதிரியான போலிகளால்தான் ‘நாடு கடத்துவோம்… மறுத்தால் அடித்து துரத்துவோம்’ என்றெல்லாம் பின்னூட்டமாக வெற்றுக் கூச்சல் போட முடிகிறது. மாறாக, குறிப்பிட்டுள்ள புத்தகங்களில் ஏதேனும் ஒன்றையாவது வாங்கிப் படித்துவிட்டு அதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை உறித்துத் தொங்கவிட வேண்டியதுதானே.

      வினவுக்கு ஒரு வேண்டுகோள் – இந்த மாதிரியான வெட்டிச் சவடால்களையும், மிரட்டல்களையும் முற்றாக தடை செய்யவும். நேர்மையான விவாதங்களுக்கு மத்தியில் இதுபோன்ற பின்னூட்டங்களை அனுமதித்து, வாசகர்களைப் படிக்க நிர்ப்பந்திப்பது கால வீண்.

      • பெறும் பணமுதலைகள் தங்கள் நலன்களை பாதுகாத்துகொள்ள மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளை வளர்க்க பாடுபடுகிறார்கள்.எனவே கார்ப்ரேட்க்கும் சாது சாமிகளுக்கும் உள்ள நெறுக்கத்தை விளக்கும் புத்தகங்களையும் அடையாளம் காட்டினால் நன்று.

  2. அருமை இந்தியன் ! தாமதம் இல்லாமல் விரைந்து முதலில் அதைச் செயுங்கள்.செய்வீர்களா?செய்வீர்களா?செய்வீர்களா? நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள்! சம்பளம் மட்டும் ஒழுங்காக வருகிறதா பார்த்துக்கொள்ளுங்கள்!வார்த்தைச் செருப்பால் விளாசுகிறவர்கள் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.புறமுதுகிடாத வீவீவீரப் பரம்பரை அல்லவா நீங்கள்!ஹம்ம்…!

  3. இந்தியன் என்ற வெத்துவேட்டுக்கெல்லாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மறுப்பு எழுத வேண்டுமா என்ன?எந்த சரக்கும் இல்லாமல் சும்மா திசை திருப்புவதற்க்கென்றே சிலதுகள் இறக்கிவிடப்பட்டிருக்கின்றது.அதில் ஒன்றுதான் தன் பெயரை மறைத்துக்கொண்டு ஊளையிடுகின்ற இந்தியன்.இதுகளையெல்லாம் கவனிப்பதே நமக்கு பெரிய இழுக்கு.

Leave a Reply to செங்கதிர்செல்வன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க