அம்மா போங்கு பாடல் வெளியிடப்பட்ட ஒரு நாளிலேயே பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். வினவு யூ டியூப் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் மட்டும் சுமார் 30,000-ம் (தற்போது 1,40,000) பேர் பார்த்துள்ளனர். இது போக பல்வேறு நபர்களின் பேஸ்புக் பக்கத்திலும் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. சன் செய்தியில் இப்பாடலை காட்டியதாக கூறுகின்றனர். வாட்ஸ் அப்பிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்தமாக சில இலட்சம் மக்கள் பாடலை பார்த்துள்ளனர். இங்கே சமூக வலைத்தளங்களில் மக்கள் தெரிவித்துள்ள சில கருத்துக்களை தொகுத்திருக்கிறோம்.
Venkat Ramanujam
கோவனின் “version 2 #Bongu Song” பார்த்திர்களா ..
மண்ணின் மைந்தர் “கலாமை” , தானே தந்த ” செயற்கை வெள்ளைத்தை” வீட்டுக்குளே உக்கார்ந்து புறக்கணித்த மாதிரி இவரையும் சும்மா விட்டு இருக்கலாமோ என்று#jayalalitha நினைக்கலாம்.
Music makes pleasantly one humming but words are more damaging .
“மீனு வெறுத்த பூனையா நீங்க – இதுக்கு டேபிள் தட்ட கேணையா நாங்க ”
“பிராந்தி கணக்கு சொல்றிங்க – குமாரசாமி கணக்கு தோத்துருச்சி போங்க ”
“திங் பண்ண ஐஞ்சு வருஷம் ஏங்க – நாங்க பூட்டிகிறோம் கொடநாடு போங்க ”
மனுஷன் மேய்ந்து பிரிச்சி தெறிச்சு “வூடு கட்டி நாஸ்தி” பண்ணி இருக்கார் ..
#tnelections2016 #media #tamilnadu #vinavu
J Mohaideen Batcha
நேரம் பார்த்து ஆப்படித்த கோவன்:
நேத்து சன் டிவில போட்டாங்க… ஃபர்ஸ்ட் லுக்கிலேயே புடிச்சிப் போச்சு.
சில மாதங்களுக்கு முன் மதுவிலக்கு பாடலுக்காக ஜெ. யால் கைதான கோவன் மீண்டும் ஒரு செம சாங் வெளியே விட்டிருக்கிறார். மனுசன் ரெண்டில் ஒன்னு பாத்துடனும்ன்னு சும்மா வெளாசி தள்ளியிருக்கிறார். ரகளையான அந்த பாடலை கண்டு அதிமுக வட்டாரங்கள் பம்மிப்போய் கிடக்கிறதாம்.
நீங்களும் ஒரு தரம் கேட்டா மீண்டும்.. மீண்டும் கேட்பீர்கள்.. கைது செய்ததற்கு சரியான நேரத்தில் ஆப்பு வைத்திருக்கிறார் கோவன்.
தேர்தலுக்கான மிகச்சிறந்த அதிமுக ஆப்பு சாங்.
இன்னொரு முறை கேளுங்க..!
Arunachalam Sivakumar
தீ பரவட்டும்
எளிய வார்த்தைகளில் ஜெயாவின் பித்தலாட்ட அறிவிப்பை எள்ளி நகையாடி, வரும் தேர்தலில் வரவிருக்கும் மக்கள் தீர்ப்பின் முன்னோட்டமாக, “நீங்க கொடநாடு போலாம்” என்று தெளிவாக கூறியிருக்கிறார் கோவன்….
Troll Jaya 2.0
Bongu… amma… Bongu…
மக்கள் மன்றத்தின் கோவனின் கலக்கலான வழக்கமான ஜெயலலிதாவுக்கு செருப்படி கொடுக்கும் பாடல்…
Rajan Kurai Krishnan
இவ்வளவு சுவாரசியமாக ஆனால் தீவிரமாக அரசியல் விமர்சனம் செய்யமுடிவது மகிச்சியாக இருக்கிறது. இந்த வீடியோ பாடல் ஒரு புதிய பாணி அரசியல் பிரசாரத்தை துவங்குகிறதோ என்று தோன்றுகிறது. பாராட்டுக்கள்.
Saravanapriyan Raja
மீனை வெறுத்த பூனையா நீங்க???!
இதுக்கு டேபிள் தட்ட கேனையா நாங்க..?!
நல்லா கேளுங்க,
அடிமை மொன்னை நாயிங்களுக்கு சூடு சொரணை இருக்கான்னு பாப்போம்.
Thadeus Anand
Kovan has outdone himself this time.
Abul Hassan Raja
ம.க.இ.க-வுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மதுவை எதிர்ப்பதில்..ஜெயலலிதாவை எதிர்ப்பதில் அவர்களது பங்களிப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது..
அதிலும் கோவன்..சான்ஸ்லஸ்..
ஊத்திக் கொடுத்த உத்தமியை அடுத்து இப்போது போங்கு..அம்மா போங்கு பாடலுடன் களமிறங்கியிருக்கிறார்..
இன்னொரு தேசதுரோக வழக்கு வாங்க வாழ்த்துகள்..
வரிகள்..பல்லவி..சரணம்..எல்லாமே அருமை..
படிப்படியா கொறக்கிறதா நீங்க – அத கேக்க சொல்லோ
சிரிப்பு வருது ஏங்க
மீனை வெறுத்த பூனையா நீங்க
இதுக்கு டேபிள் தட்ட கேனையா நாங்க..
மூடச்சொல்லி பாடினது நாங்க – அதுக்கு
கேசுமேல கேஸ போட்டுட்டீங்க
மதுவிலக்கா ஒங்க கொள்க ஏங்க – அத
கேட்டதுமே மெர்சலாயிட்டேங்க..
பிராந்தி பீரு கணக்கு சொல்லுறீங்க
குமாரசாமி கணக்கு தோத்துருச்சி போங்க..
Priya Rajasekar
“மீனு வெறுத்த பூனையா நீங்க – இதுக்கு டேபிள் தட்ட கேணையா நாங்க ”
“பிராந்தி கணக்கு சொல்றிங்க – குமாரசாமி கணக்கு தோத்துருச்சி போங்க ”
“திங் பண்ண ஐஞ்சு வருஷம் ஏங்க – நாங்க பூட்டிகிறோம் கொடநாட்டு போங்க ”
– தோழர் கோவனின் போங்கு பாடலில் .தெறி!
Selvasundaram Balasubramanian
சதிகாரி,சண்டாளி ஆட்சியில் இருந்த போது எத்தனை பேர் குடியைக் கெடுத்து, டாஸ்மாக்கை மூடு என்று சொன்னவர்களை எல்லாம் அடித்து நொறுக்கி,ஒரு பேச்சுக்குக் கூட மக்களின் மன நிலைக்கு மதிப்பளித்து மதுவிலக்கைப் பற்றிப் பேசாத தாடகை,தேர்தல் வந்தவுடன் மதுவிலக்கைப் படிப் படியாக அமல் படுத்தப் போகிறாயா?
சாக்ரடீஸ் கு.பா
மீண்டும் கோவன்……
மீனை வெறுக்கும் பூனையா நீங்க …
இதுக்கு டேபிள் தட்ட கேனையா நாங்க….
பழச விட புதுசு நச்சுன்னு இருக்கு……
Vasudevan Jayakumar
அருமையான இசை
ஆழமான வரிகள்
இறுதிவரிகள்
ஈன மானமற்ற ஆட்சியை
உறுதியாய் அகற்றும்.
வசந்தவாசல் சலீம்
பாடலும், இசையும், கருத்தும் அருமை!
Sathish Kumar
All must watch
அனைவரும் அவசியம் பார்க்கவும்.
ஒவ்வொரு வரியும் செருப்படி!
Barath Kawin
Kovan was arrested for his protest against government’s liquor policy.
Jayalalitha – will implement liquor van step by step if she wins 2016 election. Still she didn’t turn off against Kovan.
மாவீரன் சித்திரைவேல் படிப்பகம் தூத்துக்குடி
நம்ம சன் & கலைஞர் டிவி’ல ஒரே ஒருநாள் டெலிகாஸ் பண்ணுனா போதும்.எல்லாம் ஓவர் ஓவர்!
masilan @masilan
Where local meets Santosh Narayan. Little polish of sounds it can be used in Sun Music.
KRS | கரச @kryes
பாடல்கள் எழுதுவது கோவன்! ஆனால், வினவுக்கு, இசையமைப்பது யார்? அறிந்து கொள்ள ஆவல்:) உண்மையுள்ள வரிகளை மூழ்கடிக்காத, எளிய அற்புத இசை!
KRS | கரச @kryes
மீனை வெறுத்த பூனையா நீங்க? Table தட்டும் கேணையா நாங்க?? — வினவு: இயல் + இசைக் குழு, மிகமிக நேர்த்தி:)
Raju N @naaraju
கோவனோட ‘அம்மா போங்கு’ பாட்டை/அருமை,அட்டகாசம்ன்னு பாராட்டற ஆட்கள், அது கலைஞருக்குச் சாதகமாப் போயிடுமேன்னு குமுறுறாங்க..டெலிகேட் பொசிஷன்.
Raju N @naaraju
கம்யூனிஸ்ட்கள் இவ்வளவு அப்டேட் ஆவார்களெனக் கனவிலிலும் நினைத்ததில்லை. https://youtu.be/fhT0V6VkMnM
jmbatcha @jmbatcha
நேற்று சன் டிவில போட்டாங்க… சில மாதங்களுக்கு முன் மதுவிலக்கு பாடலுக்காக கைதான கோவன் மீண்டும் ஒரு செம சாங்…
karunai mani @karunaimoney
தேச துரோகப் பாடல் சென்று தற்போது பாப்பாத்தி ஜெயா துரோக பாடல் வழக்கு போடலாம் என எதிர் பார்த்து பரவலாக பரப்பப்படும்…
______________________
இந்த பாடலை கேட்ட உடன் அதற்கு வாழ்த்து சொல்லி பின்னுட்டம் எல்லாம் எழுதாமல் முக நூல் பக்கத்தில் நண்பர்களுக்கு இந்த பாடலை பரப்பிக்கொண்டு இருந்தேன்….. அண்ணன் கேவனுக்கும் அவரின் குழுவினருக்கும் வாழ்த்துகள்….வார்த்தைகளை பாடுவதில் அதில் ஒரு கிண்டல்,….. என்னமா ஒரு நக்கல் அண்ணன் கோவனின் வார்த்தைகளில்…..
அதிமுக அடிமைகள் ஜூட் வாங்க சண்டைக்கு
Kafila.org has also published the song’s youtube link on its wwebsite:
https://kafila.org/2016/04/22/folk-singer-kovan-lampoons-jayalalithas-promise/
Unfortunately however, Comrade Kovan has been described as a dalit activist by Kafila, limiting the broader politics and ideology of PALA and Comrade Kovann.
Another funny fact is that, DMK and other vote-grabbers make use of Kovan’s song as an advantage for them, without realizing the fact that Kovan & PALA’s sharp knife will turn against them with the same vigor at the right time!
ஓட்டுக் கட்சிகள் அனைத்தையும், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அதிகாரவர்க்கம், நீதித்துறை என அனைத்தும் மக்கள் விரோதமாக மாறி விட்ட சூழலில் தேர்தல் ஒரு தீர்வு கிடையாது என்னும் விதத்தில் ஒரு பாடலை உடனடியாகத் தயாரித்து விடலாமே ..
இச்சூழலில் இது மிகவும் அவசியமானது.
சாராயக்கடையை எவன் வந்தாலும் மூட மாட்டான், ஆயிரம் காரணம் சொல்லுவான், அவனுக்கு அதில் பொருளாதார ஆதாயம் உண்டு. இன்று தேர்தல் அறிக்கையில் மது விலக்கு பேசும் கூட்டம் கடந்த 3 ஆண்டுகளாக மதுவிலக்குக்காக எத்தனைப் போராட்டங்களைக் கையில் எடுத்திருக்கிறது ?
இந்த தேர்தல ஆணையம் 500 கோடிக்கு மேல் செலவழிக்கிறது மக்களை ஏமாற்றி தேர்தலில் ஓட்டுப் போட வைக்க ..
மகஇக, வினவு , மக்கள் அதிகாரம் போன்ற புரட்சிகர அமைப்புகள் இந்தத் தருணத்தில் மக்களிடையே இவர்கள அனைவரையும் அம்பலப்படுத்தும் விதமாக ஒரு பாடல் தோழர் கோவனைக் கொண்டு பாட வைத்து வெளியிடலாமே …
நீங்கள் ஆயிரம் கட்டுரைகள் எழுதினாலும், ஒரு பாடல் உங்களைத் தமிழகம் முழுக்கக் கொண்டு செல்லும். ஆங்கிலத்தில் சப் டைட்டிலுடன் வெளியிட்டால், இந்தியாவே திரும்பிப் பார்க்கும்.
தேர்தல குறித்த மாயையிலிருந்து கோவன் குரல், மக்களைத் தட்டி எழுப்பட்டும் ..
மூடு டாஸ்மாக்கை – 2 பாடல்களைப் போல், ஓட்டுப் போடாதே – என்று 2 பாடல் வெளியிட்டால் போதும் அதன் வீச்சு, பெரும் அளவில் விளம்பரத்திற்கான அவனது 500 கோடியையும் விளம்பரம் செய்ய வரும் சினிமாக் கேடிகளையும் அடித்துச் சென்று விடும்
– கண்டிப்பாக செய்யுங்கள் தோழர்களே …
– செய்வீர்களா ?.. செய்வீர்களா …
“ஓட்டுப் போடாதே – என்று 2 பாடல் வெளியிட்டால் போதும் அதன் வீச்சு,”
Nothing will happen,in 1982 Assam election,there was little voting BUT ELECTION SUCCESSFUL.
மீண்டும் சன் டீவியில் கோவனின் பாடலை ஒளிபரப்பினார்கள் ஒருவர் தப்படிக்கிறார் 2 பெண்கள் ஒரு ஆண் கோரஸ் பாடுகிறார்கள் மைக் இல்லாமல் கோவன் பாடுகிறார் ”
படிப்படியா கொறக்கிறதா நீங்க – அத கேக்க சொல்லோ
சிரிப்பு வருது ஏங்க
மீனை வெறுத்த பூனையா நீங்க
இதுக்கு டேபிள் தட்ட கேனையா நாங்க..
மூடச்சொல்லி பாடினது நாங்க – அதுக்கு
கேசுமேல கேஸ போட்டுட்டீங்க
மதுவிலக்கா ஒங்க கொள்க ஏங்க – அத
கேட்டதுமே மெர்சலாயிட்டேங்க..
அதுக்கு வடிவேலு இசுக்குனு முழிக்கிற போட்டா போட்டிங்களே எப்பா சிரிச்சி சிரிச்சு வயுரு புண்ணாகிடிச்சு…