privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசமூக நீதி அரசியல் சாதியை ஒழித்ததா, வளர்த்ததா ?

சமூக நீதி அரசியல் சாதியை ஒழித்ததா, வளர்த்ததா ?

-

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் படுகொலைகள் : சமூக நீதி அரசியல் சாதியை ஒழித்ததா, வளர்த்ததா?

“யாராவது ஒருவர் அந்தக் கொலைகாரர்கள் மீது கல்லை விட்டெறிந்திருந்தால் கூட என் கணவனைக் காப்பாற்றியிருப்பேனே” என்று கதறினாள் உடுமலையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா. அந்த உடுமலை படுகொலைக் காட்சி, தமிழகத்தின் இன்றைய அரசியல் சமூக சூழ் நிலைக்கு ஒரு சாட்சி. கண் முன்னே நடக்கும் பல வகை அநீதிகளைக் கண்டும் காணாமலும், சகித்துக் கொண்டும், அங்கீகரித்துக் கொண்டும் செல்லப் பழகியிருக்கும் தமிழ்ச் சமூகம், கையில் வீச்சரிவாளேந்திய ரவுடிகள் கும்பலுக்கு எதிராக கல்லெறிந்திருக்குமா என்ன?

சங்கர்-கவுசல்யா
சாதி-தீண்டாமையை மறுத்துக் காதல் மணம் புரிந்துகொண்ட சங்கர்-கவுசல்யா தம்பதியினர் (கோப்புப் படம்)

ஒருவேளை, அது ஒரு இளம் காதல் தம்பதிகளுக்கு எதிரான சாதி ஆணவப் படுகொலை என்று தெரிந்திருந்தால், மக்கள் தலையிட்டிருப்பார்களோ என்று சிலருக்குத் தோன்றலாம். அப்படித் தெரிந்திருந்தால் நிச்சயமாகத் தலையிட்டிருக்க மாட்டார்கள் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. கோகுல் ராஜ் படுகொலை உள்ளிட்ட சாதி ஆணவப் படுகொலைகள் அனைத்திலும் இறுக்கமானதொரு மவுனம்தான் தமிழ்ச்மூகத்தின் எதிர்வினையாக இருந்து வருகிறது.

அந்தக் கண்காணிப்பு காமெராவில் படுகொலைக் காட்சி பதிவாகாமல் இருந்திருந்தால், ஒருவேளை அது ஒளிபரப்பப்படாமல் இருந்திருந்தால், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பார்களா என்பதும் கூட சந்தேகமே. இதுவரை நடந்துள்ள சாதி ஆணவக் கொலைகளில் குற்றவாளிகளைப் பிடிப்பதில் போலீசு இத்தனை சுறுசுறுப்பைக் காட்டியதில்லை. பட்டப்பகலில் நகரின் நடுவே ஒரு படுகொலையை நடத்திவிட்டு, மிகவும் அலட்சியமாக அந்தக் கொலைகாரர்கள் அங்கிருந்து புறப்பட்டு செல்லும் காட்சி, போலீசின் அதிகாரத்தையும், ஜெ. அரசின் யோக்கியதையையும் எள்ளி நகையாடும் வித்தில் அமைந்து விட்டதால், தனது ‘கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத்தான் போலீசார் சுறுசுறுப்பு காட்டியுள்ளனர் என்பதே உண்மை.

தன்னுடைய தந்தையும், தாயும், பாட்டியும், தாய் மாமனும்தான் இந்தக் கொலைக்கு காரணமானவர்கள் என்றும், அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் கவுசல்யா. தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ் ஆகியோரைப் போல சங்கரும் கண் மறைவாகப் படுகொலை செய்யப்பட்டிருந்தாலோ, கவுசல்யா தைரியமாகவும் நேர்மையாகவும் குற்றவாளிகளை அடையாளம் காட்டாமல் இருந்திருந்தாலோ கதை வேறாக இருந்திருக்கும்.

கொலையாளிகள்
சங்கரையும், கவுசல்யாவையும் துடிதுடிக்க வெட்டிப் போட்டுவிட்டு குற்றவாளிகள் தப்பிச் செல்வதை பார்த்து நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் இழிந்த நிலை.

சாதி ஆணவக் கொலையாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று மார்க்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் 2011-ல் வழங்கிய ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பு, உயர்நீதி மன்றங்களுக்கும் கீழமை நீதிமன்றங்களுக்கும் வழிகாட்டியது. இருப்பினும் மத்திய சட்டக் கமிசன் அமைத்த குழு இதனை ஏற்கவில்லை. திருமணங்களைத் தடுக்கும் நோக்கத்துக்காகக் கூட்டப்படும் காப் பஞ்சாயத்துக்களைத் தடுப்பது குறித்து மட்டுமே அது பேசியது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் ஆணவக்கொலை குறித்த விவரங்களை அனுப்பக் கோரியது இந்தக் கமிசன். 22 மாநிலங்கள் அனுப்பி விட்டன. ஆனால் ஜெ. அரசு மட்டும் இதுவரை தமிழகத்தின் ஆணவக் கொலை குறித்த விவரங்களை அனுப்பவில்லை.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்றுள்ள ஆணவக்கொலைகள் 81. கொல்லப்பட்டோரில் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் காதலித்த ஆதிக்க சாதிப் பெண்கள் என்று கூறியிருக்கிறார், எவிடென்ஸ் கதிர். இது மட்டுமல்ல; ஆண்டுக்கு சுமார் 1000 பெண்கள் தமிழகத்தில் கொலை செய்யப்படுவதாகவும், இவர்களில் 17% பேர் காதலித்த குற்றத்துக்காக கொலை செய்யப்படுகின்றனர் என்றும் அவர் கூறுகிறார். ஆண்டொன்றுக்கு தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 7000. அவர்களில் 28% பேர் காதல் தொடர்பான பிரச்சினையால் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் அவர் கூறுகிறார். (https://minnambalam.com/k/1458000002)

இத்தகைய கொலைகள் சாதிக்காரர்கள் மற்றும் உறவினர்களால்தான் செய்யப்படுகின்றன என்பதால், இவற்றுக்கு சாட்சி சொல்ல யாரும் வருதில்லை. இது தீண்டாமைக் கொலைதான் என்ற போதிலும், கொல்லப்படும் பெண்கள் ஆதிக்க சாதியில் பிறந்தவர்கள் என்பதால், பதிவாகும் வழக்குகளும் தீண்டாமைக் குற்றத்தின் கீழ் கொண்டு வரப்படுவதில்லை. தலித் இளைஞர்கள் கொல்லப்படும்போது அதை எதிர்த்து தலித் அமைப்புகள் குரல் கொடுப்பதால், அந்த அநீதி வெளியே தெரியவாவது செய்கிறது. பரிதாபத்துக்குரிய இந்தப் பெண்களின் கொலைகளைக் கேட்பாரில்லை என்று இந்த அநீதியின் கொடிய பரிமாணத்தை சுட்டிக்காட்டுகிறார் கதிர்.

கவுசல்யா
சாவின் பிடியிலிருந்து தப்பிப் பிழைத்த கவுசல்யா, சாதி ஆணவக் கொலைகாரர்களைத் துணிவோடு அடையாளம் காட்டியிருக்கிறார்.

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிக்க அதிகரிக்க அவற்றுக்கெதிரான அறிக்கைகள் கூட அடங்கி, மவுனம் வலுப்பெறத் தொடங்கி விட்டது. அ.தி.மு.க. நேரடியாகவே சாதி ஆதிக்க சக்திகளுக்குத் துணை நிற்கிறது. தி.மு.க. எச்சரிக்கையாக கொலையை மட்டும் கண்டிக்கிறது. பெரியார் இயக்க வாசனையைக்கூட தமிழ் மண்ணிலிருந்து ஒழிக்கும் பொருட்டு, சாதிச் சங்கங்களை கூர் தீட்டி விடுகிறது பா.ஜ.க.

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் ஆகியோரது கொலைகளில் வன்னியர், கவுண்டர், தேவர் என்ற தமிழகத்தின் மூன்று பெரும் ஆதிக்க சாதிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று சாதிகள் மட்டுமின்றி, பொதுவில் எல்லா ஆதிக்க சாதிகளுமே தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான மனோபாவத்தில் ஒன்றுபட்டிருக்கின்றனர் என்பதே உண்மை. ஆகையினால், சாதி கூடாது என்று தனிப்பட்ட முறையில் கருத்து கூறுவோர் கூட, சாதி ஒழிப்பைப் பேசுவதற்கான தைரியம் இல்லாமல், காதலை மதிக்குமாறு சாதி வெறியர்களிடம் ஈன சுரத்தில் வேண்டுகோள் விடுகின்றனர். ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமெனக் கோருகின்றனர்.

ஏற்கெனவே தீண்டாமைக் குற்றங்களுக்காகப் பதியப்படும் வழக்குகளில் 10% கூட தண்டிக்கப்படுவதில்லை. தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க, வன்கொடுமைச் சட்டத்தில் புதிய பிரிவுகள் சேர்க்கப்படுகின்றனவேயன்றி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. காரணம், ஓட்டுக் கட்சிகள் மட்டுமின்றி, அதிகார வர்க்கமும் நீதித்துறையும் சாதிவெறியர்களுக்குத் துணை நிற்கின்றன. கயர்லாஞ்சி படுகொலை வழக்கில் கீழ்நிலையிலிருந்து மேல்நிலை வரையிலான போலீசு அதிகாரிகள் தலித்துகளாக இருந்தபோதிலும், குற்றவாளிகள் தப்புவிக்கப்பட்ட கொடுமையை ஆனந்த் தெல்தும்ப்டே அம்பலப்படுத்தியிருக்கிறார். நேர்மையான அதிகாரியாக இருக்கும் பட்சத்தில் விஷ்ணுப்பிரியாவுக்கு நேர்ந்த கதிதான் அவர்களுக்கு நேர்கிறது.

ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அதிகாரிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பிற்படுத்தப்பட்டோர் என்ற பெயரில் இட ஒதுக்கீடு பெற்று போலீசு மற்றும் அரசு பதவிகளில் அமர்கின்றவர்கள், தமக்குக் கிடைத்த அதிகாரத்தை சாதிவெறியர்களுக்கு ஆதரவாகவும் தலித் மக்களுக்கு எதிராகவும்தான் பயன்படுத்துகிறார்கள். இது மறுக்கவியலாத உண்மை. அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதை சாதி ஒழிப்புக்கான வழியாக முன்வைத்துப் பேசுபவர்கள், இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

இளவரசன்-திவ்யா அல்லது சங்கர்-கவுசல்யா போன்ற எண்ணற்ற காதலர்கள், சாதி தமது வாழ்க்கைக்குப் பொருத்தமற்றது என்று நிராகரிக்கிறார்கள். அதாவது, சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக ‘கீழே’ சாதி மெல்ல மெல்ல அழியத்தான் செய்கிறது. இட ஒதுக்கீட்டின் மூலம் டாக்டர், வக்கீல், பொறியாளர், பேராசிரியர் என்ற பதவிகளைப் பெற்றவர்களும், ஓட்டுக்கட்சித் தலைவர்களும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், ரியல் எஸ்டேட் முதலாளிகள், கல்வி வள்ளல்கள் போன்றவர்களும்தான் ‘மேலிருந்து’ சாதியை நிலைநாட்ட வெறித்தனமாக முயற்சிக்கின்றனர்.

இட ஒதுக்கீட்டின் காரணமாக கல்வி – வேலைவாய்ப்பினைப் பெற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தினர் தாங்கள் சாதிவெறியர்களில்லை என்பது போல நடிக்கின்றனர். சாதிவெறிக் கொலைகாரர்களை, மூடநம்பிக்கைக்குப் பலியான முட்டாள்களாகக் கருதி அனுதாபத்துடன் அறிவுரை கூறுகின்றனர். தமிழினவாதிகளோ, இதனை இரண்டு தமிழ்ச்சாதிகளுக்கு இடையிலான மோதல் என்பதாக திசை திருப்புகின்றனர். சமூகரீதியில் பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய சாதி என்று சொல்லி இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொண்டு, அதன் மூலம் கிடைத்த அதிகாரத்தையும் சமூகத் தகுதியையும், தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கப் பயன்படுத்துவதென்பது கீழ்த்தரமானதொரு கிரிமினல் குற்றம் என்று, இந்த பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பிறந்த ‘நல்லவர்கள் எனப்படுவோர் கூட கருதுவதில்லை. இதுதான் ஆதிக்க சாதி மனசாட்சியின் யோக்கியதை! அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளின் சமூக அடித்தளம் இதுதான்.

சங்கர் ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் மகன். முதல் தலைமுறைப் பட்டதாரி. தனது வாழ்க்கையையே அடமானம் வைத்துக் கடன் வாங்கி, பிள்ளையைப் படிக்க வைத்த அந்தக் குடும்பத்தின் ஏக்கம், எதிர்பார்ப்பு ஆகிய அனைத்தையும், அந்த இளம் தம்பதியின் காதலையும் வெட்டி வீழ்த்தி விட்டு வீரநடை போட்டிருக்கிறது தேவர் (அகமுடையார்) சாதி வெறி. கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீசில் சரணடைவதற்கு ஒரு மாவீரனைப்போல அழைத்துவரப்பட்டான் யுவராஜ். இளவரசனைக் காவு கொடுத்த ‘அன்பு’மணியைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

இந்தச் சாதிகளில் பிறந்த எத்தனை பேர், தத்தம் சாதிகளைச் சேர்ந்த வெறியர்களை எதிர்த்து வெளிப்படையாகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்? அவ்வாறு பேச மறுக்கும் யோக்கியர்களுக்கும் தன்னை யோக்கியன் என்று சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க.காரனுக்கும் என்ன வேறுபாடு? முத்துக்குமாரசாமி மரணத்துக்குக் காரணமான குற்றவாளி தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி மட்டும்தானா? ‘பிழைக்கத் தெரியாத’ அந்த மனிதனின் மரணத்தை இயல்பாக எடுத்துக்கொண்ட பிழைக்கத் தெரிந்த அரசு ஊழியர்களுக்கு அந்தக் கொலைக் குற்றத்தில் பங்கில்லையா? ஆணவக் கொலைகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் இந்தச் சமூகம் ஜெயலலிதாவின் ஆணவத்திற்குப் பணிந்து கிடப்பதில் வியப்பென்ன?

சாதி என்பது தன் இயல்பிலேயே ஒழுக்கக்கேடான, ஜனநாயக விரோதமான ஒரு நிறுவனம். சாதி வெறி தாழ்த்தப்பட்டோரை மட்டும்தான் பதம் பார்ப்பதில்லை. அரியானா மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஜாட் சாதியினர் நிகழ்த்தும் வன்முறை என்பது அங்கே அன்றாட நடப்பு. லவ் ஜிகாத் என்ற பெயரில் அந்த சாதிவெறியை இந்துவெறியாக மாற்றி முஸ்லீம்களுக்கு எதிராகத் திருப்பியது பாரதிய ஜனதா. விளைவு – முசாபர்பூர் கலவரம். அதே ஜாட் சாதியினர் தங்களை பிற்படுத்தப்பட்ட சாதியாக அறிவிக்க கோரி சமீபத்தில் நடத்திய போராட்டத்தில், அரியானா மாநிலமெங்கும் ஜாட் அல்லாத 30-க்கும் மேற்பட்ட மற்ற சாதியினரின் கடைகள், சொத்துகள் சூறையாடப்பட்டன.

இந்தப் போராட்டத்தின்போது, டில்லி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த பல இளம் தம்பதிகளைக் கடத்திச் சென்று, கணவனின் கண் முன்னாலேயே மனைவியை வல்லுறவு செய்தனர் ஜாட் சாதிவெறியர்கள். வல்லுறவுக்கு ஆளான பெண்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். சாதிவெறிக் காலிகள் பெண்களைக் கடத்திச் செல்லும் காட்சி, உடுமலை கொலையைப் போல, நெடுஞ்சாலைக் கண்காணிப்பு காமெராக்களில் தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. கண்ணால் கண்ட சாட்சியாக கணவனும் இருக்கிறான். ஆனால் ஜாட் சாதி வெறியர்களுக்கு எதிராகப் புகார் கொடுக்கும் துணிவு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இல்லை.

இப்படி அரியானாவின் சமூகத்தையே அச்சுறுத்தும் ஜாட் சாதியை சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்ட சாதியாக அறிவிக்க இருக்கிறது அம்மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி. இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

– சூரியன்
_____________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016
_____________________________

inner_design2

 

  1. http://www.frontline.in/social-issues/in-the-name-of-honour/article8408999.ece
    கட்டுரை கவுசல்யாவை அகமுடையார் சாதி என சொல்கிறது. ஆனால் மேற்படி ஃபிரண்ட்லை கட்டுரை அவரை அகமுடையார் சாதியின் உட்சாதியான மணியக்கார சாதி என்கிறது. மணியக்காரர், பிள்ளை, முதலி, ரெட்டி என அகமுடையார் சாதியின் வேளாண் சமூக மாற்றத்திற்கு பிந்தைய பிரிட்டிஷ் காலத்தில் சிலருக்கு பட்டங்கள் தரப்பட்டாலும் அது சாதிப்பெயராக இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த சாதியே ஜமீன்களது கிராம பிரதிநியான பதவியின் பெயரால் அழைக்கப்பட்டதுதான். இதில் பல்வேறு சாதியினர் இருந்தனர். இவர்களுக்குள்ளேயே ஜமீன்களது காலத்துக்கு பின்னர் கொடுக்கல் கொள்வினையின் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. மெயின் ஸ்ட்ரீம் அகமுடையார் சாதியினர் இவர்களோடு கொள்வினை கொடுப்பினை செய்வது கிடையாது. எனவே இச்சாதியினை தேவர் சாதியின் பிரதிநிதியாக பார்ப்பது ஒரு தவறான புரிதல் என்றுதான் கருதுகிறேன்.

  2. சாதியையும் சாதி உணர்வையும் ஒழிப்பதற்க்கு கம்மூனிஸ்த்துல சிறந்த வழி இருந்தா தெளிவா சொல்லி மக்களை புரிய வைக்கலாமே

  3. சுத்த அகமுடையர் (தேவர்) சாதிப் பெண்கள் வேறு சாதிப் பையன்களைக் காதலிக்க மாட்டார்களோ? கலப்பட சாதி என்பதால் தான் காதல் கத்தரிக்காய் என்று கொளசல்யா போய்விட்டாரோ?கட்டுரைக்குப் பதில் சொல்வதை விட்டுவிட்டு சுத்த வர்ண ஆராய்ச்சியில் இறங்குகிறீர்களே!

    • சுத்த அகமுடையார் சாதி பெண்கள் வேறு சாதி பையன்களை காதலிக்க மாட்டார்கள் என நான் எங்குமே சொல்லவில்லை. காதல் என்பது கலப்பட சாதிகளுக்கு வரும் என்று சொல்லுமளவுக்கு சாதியின் மீது பற்றோ வெறியோ எனக்கு எந்த காலத்திலும் இல்லை. இங்கு நான் அப்படி சொல்லவும் இல்லை. இது வர்ண ஆராய்ச்சியும் அல்ல. அதே நேரத்தில் முக்குலத்து சாதிகளில் ஒன்றாக இந்த சாதியினர் இல்லை என்பதைத்தான் சொல்லி இருக்கிறேன். மற்றபடி சாதிகள் தோன்றுவதும், அழிவதும் பற்றிய ஆய்வுகள் ஒரு மேட்டிமைத்தனமானது என நீங்கள் கருதினால் சமூக மாற்றத்திற்கு அது கிஞ்சித்தும் உதவப்போவது இல்லை என்பது என் ஆணித்தரமான கருத்து

    • http://tdharumaraj.blogspot.in/2014/11/5_30.html இந்த இணைப்பில் அம்பேத்கரின் ‘இந்தியாவில் சாதிகள்: அவற்றின் தொழிற்படுமுறை, தோற்றம் மற்றும் வளர்ச்சி’ என்ற கொலம்பிய பல்கலையில் 1916ல் நிகழ்த்திய உரையின் சில பகுதிகள் தரப்பட்டுள்ளது. தொகுதி 1 ல் பிரிண்டிலும் இருக்கிறது. இதுகுறித்த வாசிப்புகள் உங்களது பார்வையை சரிப்படுத்தும் என நினைக்கிறேன்

  4. சரிங்க சூரியன் இட ஒதுக்கீடு வேண்டாங்க….. IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளது போன்று சமுகத்தில் அனைத்து வாய்ப்புகளும் பிராமணர்களுக்கு சென்று அடையட்டும்….அது சரி சமுக நீதியில் தலித் மக்களுக்கு உள்ள இட ஒதுகிட்டையும் எதிர்கின்றிக்ளா ? அதனை பற்றிய விவரங்கள் உங்கள் கட்டுரையில் இல்லை….என்ன நேரடியாகவே பிற்படுத்தபட்ட மக்களுக்கான இட ஒதுக்கிட்டை எதிர்கின்றிகள்…. இது உங்களின் தனிபட்ட கருத்தாக இருக்காது…. ஆனால் உங்கள் அமைப்பின் கருத்தாக தான் இருக்க முடியும்…. மகஇக தலைமையும் பார்பனர்…..பின்ன என்ன வேறு எப்படிபட்ட நடுநிலைமையான கட்டுரையை வினவு கிட்ட இருந்து எதிர்பார்க்க முடியும்?

    • ரவிக்குமார் நீங்கள் என்ன ஆதிக்க சாதி சங்கத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்தால் உரையாடுவதற்கு வசதியாக இருக்கும். இல்லை என்றால் கட்டுரையை நிதானமாக படியுங்கள்!
      “சாதி என்பது தன் இயல்பிலேயே ஒழுக்கக்கேடான, ஜனநாயக விரோதமான ஒரு நிறுவனம். சாதி வெறி தாழ்த்தப்பட்டோரை மட்டும்தான் பதம் பார்ப்பதில்லை. அரியானா மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஜாட் சாதியினர் நிகழ்த்தும் வன்முறை என்பது அங்கே அன்றாட நடப்பு. லவ் ஜிகாத் என்ற பெயரில் அந்த சாதிவெறியை இந்துவெறியாக மாற்றி முஸ்லீம்களுக்கு எதிராகத் திருப்பியது பாரதிய ஜனதா. விளைவு – முசாபர்பூர் கலவரம். அதே ஜாட் சாதியினர் தங்களை பிற்படுத்தப்பட்ட சாதியாக அறிவிக்க கோரி சமீபத்தில் நடத்திய போராட்டத்தில், அரியானா மாநிலமெங்கும் ஜாட் அல்லாத 30-க்கும் மேற்பட்ட மற்ற சாதியினரின் கடைகள், சொத்துகள் சூறையாடப்பட்டன.

      இந்தப் போராட்டத்தின்போது, டில்லி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த பல இளம் தம்பதிகளைக் கடத்திச் சென்று, கணவனின் கண் முன்னாலேயே மனைவியை வல்லுறவு செய்தனர் ஜாட் சாதிவெறியர்கள். வல்லுறவுக்கு ஆளான பெண்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். சாதிவெறிக் காலிகள் பெண்களைக் கடத்திச் செல்லும் காட்சி, உடுமலை கொலையைப் போல, நெடுஞ்சாலைக் கண்காணிப்பு காமெராக்களில் தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. கண்ணால் கண்ட சாட்சியாக கணவனும் இருக்கிறான். ஆனால் ஜாட் சாதி வெறியர்களுக்கு எதிராகப் புகார் கொடுக்கும் துணிவு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இல்லை.

      இப்படி அரியானாவின் சமூகத்தையே அச்சுறுத்தும் ஜாட் சாதியை சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்ட சாதியாக அறிவிக்க இருக்கிறது அம்மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி. இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.”

      • என்னுடைய கருத்துகளில் எங்கேயாவது சாதிவெறியை தெரிந்தோ தெரியாமலோ கூட வெளிகாட்டி இருக்கேனா? பின்பு என்னத்துக்கு என் சாதியை கேட்கின்றிகள்…. வெட்கமாக இல்லை உங்களுக்கு? இட ஒதுகீட்டை ஆதரிக்கின்றோம் அல்லது இல்லை என்று தெளிவாக கூறகூட இயலாதவர்கள் நீங்கள்… அதே நேரத்தில் பெரியாரையும் அவரின் க்ருத்துகளையும் உயர்த்தி பிடிப்தாக நாடகம் ஆடும் கயவர்கள் நீங்கள்….

        இட ஒதுக்கீடு பிற்பட்ட மக்களுக்கு மட்டும் தான்வேண்டாம் என்கின்றிக்லா அல்லது தலித் மக்களுக்கும் வேண்டாம் என்று கூற ஏதாவது முன் உதரணங்களை காட்டபோகின்றிக்லா? (சங்கர் கிராமத்தில் பள்ளர் மக்கள் அவர்களுக்கும் சமுக ரீதியில் கீழ் உள்ள மக்களை தாகிய விசயத்தில்)

        அதுவெல்லாம் இருக்கட்டும்…. இதுக்கும் பதில் கூறுங்கள்….

        ஆச்சிரியமான வகையில் தமிழக பிஜேபி-யின் தேர்தல் அறிக்கை சமுக நீதி அடிப்படையிலான இட ஒதுகீட்டை எதிர்க்கின்றது….. , மகஇகவும் எதிர்கின்றது….. அவர்கள் பிஜேபி பொருளாதாரத்தின் அடிப்டையில் இட ஒதுகீட்டை ஆதரிகின்றார்கள்…. சூரியன் அப்ப உங்க அமைப்பு?…

      • ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மட்டுமே கொண்டு சாதி அரசியலையோ, இட ஒதுக்கீடு அரசியலையோ விமரிசிக்க கூடாது! இட ஒதுக்கீடு என்பது எந்த ஒரு சாதியினரும் , மற்றொரு ஆதிக்க சாதியினரால் சுறண்டபடல் கூடாது என்றநோக்கத்தில் கொண்டு வரப்பட்டது! தற்போது அரசு பதவிகளிலும், கல்வி சாலையிலும் மட்டுமே (தப்பும் தவறுமாகவேனும்) கடை பிடிக்க படுகிறது! பார்ப்பனர் தந்திரமே சாதி அடுக்குகளை பிரித்து ஒருவருக்கு ஒருவர் எதிராக திருப்பி விடுவது தான்! இன்று ஜாட் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் , அவர்கள் தாழ்த்தப்பட்ட , இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை எதிர்க்க பார்ப்பன்ரோடு கைகோர்ப்பர்! இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டாலோ , பார்பனர் தூண்டுதலால் தாழ்த்தப்பட்டவர்கள் அங்கலாய்ப்பர்! ஆடுகள் முட்டிகொண்டு சாய்ந்தால் ஓனாய்களுக்குதானே லாபம்?

        மேலும் இட ஒதுக்கீட்டால் , யாரும் அடுத்தவர் உரிமையை முற்றிலும் பறிக்க முடியாது! பார்ப்பனரும் அவர்கள் ஜனதொகைக்கேற்ப பதவி பெறுவதில் நமக்கென்ன ஆட்சேபணை? அவர்கள் நம் முதுகில் சவாரி செய்ய அனுமதியோம், அதே சமயத்தில் யார் முதுகிலும்நாமும் சவாரி செய்ய விழையோம்!

  5. எதற்கெடுத்தாலும் சமூகநீதியையும், இட ஒதுக்கீடையும் குறை கூறுவது பார்ப்பனீயத்தின் வாடிக்கை! வழக்கம்போல அவர்கள் நேரடியாக எதிர்க்காமல், புரட்சியா, பதவியா என்று குழம்பி பார்ப்பன சதியில் வீழ்ந்த கம்யூனிஸ்டுகள்(?) மூலம் சிகண்டி யுத்தம்தான் செய்கிறார்கள்! படித்தவர்களே குழம்பும்போது, பாமரர் இவர்கள் வலையில் மாட்டுவது ஆச்சரியமல்ல!

    சமூகநீதிக்கு குரல்கொடுக்க வக்கில்லாதவர்கள் , கம்யூனிசத்திற்கு புரட்சி செய்வார்களா? இவர்கள் புரட்சியெல்லாம் பார்பனர்களுக்கு சாதமாக வோட்டை பிரிப்பது தானே! மேற்கு வங்கத்திலும் , கேரளாவிலும் டாடாவிற்கு ஆதராவாக பணம் பெற்று கொண்டு, ஏழை விவசாயிகளின்நிலத்தை பிடிங்கி தானம் செய்தது சந்தி சிரித்த கதை தமிழக மக்களுக்கு தெரியாது!

    பெரியார்-அம்பேத்கரை ஆதரிக்காமல் பார்பன தலைமையில் என்றுமே கம்யூனிசம் வளராது! புத்த தேவ் பட்டாசார்யா சொன்னது போல தோழர்கள் தற்போது சித்தாந்தத்தை மாற்றி கொண்டு விட்டார்களா?

    • ஐயா Ajathasathru,

      உங்கள் பின்னுட்டம் சரியானது தான். ஆனாலும் கோபப்படாமல் பொறுமையாக சிந்தித்து இந்த சமூகநீதிக்கு எதிரான கட்டுரைக்கு நீண்ட பதில் அடி கொடுக்கும் படி கேட்டுகொள்கின்றேன்..

    • அஜாதசத்ரு, சமூகநீதி அரசியல் சாதியை வளர்த்ததா, ஒழித்ததா என்று கேட்பதே பார்ப்பன சதி என்றால் உங்களை சாதிவெறிப் படுகொலைகளை ஆதரிக்கும் ஆதிக்க சாதி வெறியர் என்று ஏன் அழைக்க கூடாது? கட்டுரையை நிதானமாக படியுங்கள்…

      “இட ஒதுக்கீட்டின் காரணமாக கல்வி – வேலைவாய்ப்பினைப் பெற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தினர் தாங்கள் சாதிவெறியர்களில்லை என்பது போல நடிக்கின்றனர். சாதிவெறிக் கொலைகாரர்களை, மூடநம்பிக்கைக்குப் பலியான முட்டாள்களாகக் கருதி அனுதாபத்துடன் அறிவுரை கூறுகின்றனர். தமிழினவாதிகளோ, இதனை இரண்டு தமிழ்ச்சாதிகளுக்கு இடையிலான மோதல் என்பதாக திசை திருப்புகின்றனர். சமூகரீதியில் பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய சாதி என்று சொல்லி இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொண்டு, அதன் மூலம் கிடைத்த அதிகாரத்தையும் சமூகத் தகுதியையும், தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கப் பயன்படுத்துவதென்பது கீழ்த்தரமானதொரு கிரிமினல் குற்றம் என்று, இந்த பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பிறந்த ‘நல்லவர்கள் எனப்படுவோர் கூட கருதுவதில்லை. இதுதான் ஆதிக்க சாதி மனசாட்சியின் யோக்கியதை! அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளின் சமூக அடித்தளம் இதுதான்.

      சங்கர் ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் மகன். முதல் தலைமுறைப் பட்டதாரி. தனது வாழ்க்கையையே அடமானம் வைத்துக் கடன் வாங்கி, பிள்ளையைப் படிக்க வைத்த அந்தக் குடும்பத்தின் ஏக்கம், எதிர்பார்ப்பு ஆகிய அனைத்தையும், அந்த இளம் தம்பதியின் காதலையும் வெட்டி வீழ்த்தி விட்டு வீரநடை போட்டிருக்கிறது தேவர் (அகமுடையார்) சாதி வெறி. கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீசில் சரணடைவதற்கு ஒரு மாவீரனைப்போல அழைத்துவரப்பட்டான் யுவராஜ். இளவரசனைக் காவு கொடுத்த ‘அன்பு’மணியைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

      இந்தச் சாதிகளில் பிறந்த எத்தனை பேர், தத்தம் சாதிகளைச் சேர்ந்த வெறியர்களை எதிர்த்து வெளிப்படையாகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்? அவ்வாறு பேச மறுக்கும் யோக்கியர்களுக்கும் தன்னை யோக்கியன் என்று சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க.காரனுக்கும் என்ன வேறுபாடு? முத்துக்குமாரசாமி மரணத்துக்குக் காரணமான குற்றவாளி தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி மட்டும்தானா? ‘பிழைக்கத் தெரியாத’ அந்த மனிதனின் மரணத்தை இயல்பாக எடுத்துக்கொண்ட பிழைக்கத் தெரிந்த அரசு ஊழியர்களுக்கு அந்தக் கொலைக் குற்றத்தில் பங்கில்லையா? ஆணவக் கொலைகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் இந்தச் சமூகம் ஜெயலலிதாவின் ஆணவத்திற்குப் பணிந்து கிடப்பதில் வியப்பென்ன?”

      • வினவு சார்பாக பதிலளித்த நண்பருக்கு! இட ஒதுக்கீட்டில் ப் அலன் பெற்ற அனைவருமே சாதியை வளர்ப்பவர்கள் என்ற கருத்தையே உங்கள் கட்டுரை தலைப்பு சுட்டுகிறது! இட ஒதுக்கீடு சாதியை ஒழிக்கவில்லை, மாறாக சாதிகளை வளர்க்கிறது என்ற பொருளில் அல்லவா வாதிக்கின்றீர்! இட ஒதுக்கீட்டால் பதவியும், பொருளாதார சுதந்திரமும் பெற்றதால் தானே காதல் திருமணம் செய்ய தைரியம் வருகிறது? //

        “இந்தச் சாதிகளில் பிறந்த எத்தனை பேர், தத்தம் சாதிகளைச் சேர்ந்த வெறியர்களை எதிர்த்து வெளிப்படையாகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்? அவ்வாறு பேச மறுக்கும் யோக்கியர்களுக்கும் தன்னை யோக்கியன் என்று சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க.காரனுக்கும் என்ன வேறுபாடு? முத்துக்குமாரசாமி மரணத்துக்குக் காரணமான குற்றவாளி தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி மட்டும்தானா? ‘பிழைக்கத் தெரியாத’ அந்த மனிதனின் மரணத்தை இயல்பாக எடுத்துக்கொண்ட பிழைக்கத் தெரிந்த அரசு ஊழியர்களுக்கு அந்தக் கொலைக் குற்றத்தில் பங்கில்லையா? ஆணவக் கொலைகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் இந்தச் சமூகம் ஜெயலலிதாவின் ஆணவத்திற்குப் பணிந்து கிடப்பதில் வியப்பென்ன?”//

        உங்கள் ஆதங்கம் சரி! ஆனால் அதற்கு இட ஒதுக்கீட்டை இழுப்பது சரியல்ல!
        மக்கள் விழிப்புணர்வு பேற பெரியார்-அம்பேத்கர் இயக்கங்களின் அயராத உழைப்பு இன்னமும் தேவை! பல்லாயிரம் ஆண்டுகளாக சுய சிந்தனையின்றி அடிமைப்பட்டிருந்த தமிழன் , இட ஒதுக்கீட்டால் இப்போது தான் காலில் செருப்பும் , தோளில் துண்டும் போட தைரியம் பெற்றுள்ளான்! பக்கவாதம் வந்து வீழ்ந்தவனை எழுப்பி நடமாட முயற்சிக்கிறோம்! ஏன் ஓடவில்லை என அங்கலாய்க்க இது சமயமல்ல!

      • தலித் மக்களுக்கு அளிக்கபடும் குறைந்தபச்ச இடஒதுகீடையெ பொறாமையுடன் பார்க்கும் ,குறை கூறும் பிற்படுத்தபட்ட ,மிகவும் பிற்படுத்தபட்ட சமுக மக்கள் …, வினவு கூறுவது போன்று இவர்களுக்கு சமுக நீதியை விலக்கினால் ஏற்படபோகும் பாரிய சமுக பிரச்சனைகளுக்கு பொறுப்பு ஏற்குமா? பெரியாரும் அம்பேத்காரும் அவர்களின் கருத்தாகங்களும் நடைமுறைக்கு உள்ளாக்க வேண்டிய தவிர்க்கவே இயலாத முதன்மையான தேவைகள் என்பதனை வினவு போன்ற புரசி இணைய தளங்கள் உணரவேண்டும்……எனது கருத்துகளை வரையறை படுத்தவேண்டுமானால் கீழ் உள்ள படி….

        “””” இந்திய கம்யுனிஸ்டுகளின் செயல் திட்டத்தில் சாதியத்தை ஒழிக்க பெரியாரையும் -அம்பேத்காரையும் யாராலும்புறகணிக்க முடியாது…. வர்க்க புரச்சியின் நீண்ட செயல்திட்டத்தில் சாதியமும், மதவாதமும் அழித்து ஒழிக்கப்டவெண்டும் எனில் கம்யுனிஸ்டுகளாகிய நாம் பெரியாரையும் -அம்பேத்காரையும் நாம் ஆயுதமாக தான் பயன்படுத்தியாகவேண்டும்…. சாதியமும் ,மதவாதமும் உலக கம்யுனிஸ்டுகள் இதுவரையில் காணாத சுமையை இந்திய சமுகம் கம்யுனிஸ்டுகள் மீது ஏற்றிவைத்து உள்ளது….””””

    • அதாவது ஒடுக்கப்பட்டவர்களை மென்மேலும் ஒடுக்கி கொண்டே , ஐய்யா நான் ஐயர்களால் பாதிக்க பட்டவன் , எனக்கு சமுதாயத்தின் உதவி தேவை என்று கேட்கலாமா ?

      எந்த ஒரு கிராமத்தில் ஒடுக்கப்பட்டவர்களை கோவிலுக்குள் விடவில்லையோ அந்த கிராமத்தல் உள்ள அனைவருக்கும் இட ஒதுக்கீடு பெரும் தகுதியை ரத்து செய்ய வேண்டும் .

      தவறை உணர்ந்து திருந்துபவர்களுக்கு தான் உதவி சென்று சேர வேண்டுமே ஒழிய , தவறி செய்து கொண்டே முதலி கண்ணீர் விடுபவர்களுக்கு அல்ல

      கருத்து என்ன என்பதை விவாதிக்காமல் , கருத்தை கூறியவர் ஜாதியை சிந்திக்கும் உங்களை போன்றவர்கள் சமூக நீதி காவலன்கள் போலவும் , பிராமணர்களை எதிப்பது போலவும் செய்யும் பாசாங்கு சகிக்கவில்லை

      • தமிழ் நாட்டின் கல்வி,வேலை வாய்ப்பு ஆகியவற்றில் ராஜராஜன் ஆட்சியில் இருந்தது போல வேதபாட சாலைகள், கடிகைகள் என்று பார்பனர்கள் மட்டுமே அனுபவிக்கும் படியான நிலையை உருவாக்கி அதன் மூலம் பட்ட விருத்தி,பாரதவிருதி,அர்ச்னாபோகம்,சாலபோகம் என்று பார்பன பண்டாரங்கள் மட்டும் தமிழ் நாட்டின் வளங்களை அனுபவிக்கும் படியான நிலையை உருவாக்க நினைக்கும் இந்த பின்னுட்டகாரருக்கும் (ராமருக்கும்) இந்த கட்டுரையாளருக்கும் (சூரியன்) எனது ஆழ்ந்த அனுதாபங்கள்…… நீங்கள் நினைபது நடக்காது…..

        இது காரும் வினவின் கட்டுரைகளை எதிர்த்து வந்த ராமன் இந்த கட்டுரையில் மட்டும் வினவுடன் ஒருங்கிணைவது ஒன்றும் ஆச்சிரியம் தரும் விஷயம் அல்ல…

        சாத்தான் வேதம் ஓதும் போது அதனை நின்று கேட்டு இன்பம் அடைய பார்பனர்களால் மட்டுமே முடியும்…. வினவில் எதோ ஒரு சாத்தான் பிற்பட்ட மக்களின் அடிப்படை உரிமையாகிய சமுக நீதிக்கு எதிராக பேசும் போது இன்பம் அடையும் இந்த ராமன்…., நாளை வேறு ஒரு காரணத்தை காட்டி ஒடுக்கபட்ட தலித் மக்களின் அடிப்படை உரிமையாகிய இட ஒதுகீட்டுக்கு எதிராக பேசுமானால் அதனையும் இந்த ராமன் இன்பமாக தான் கேட்டு மகிழ்வார்…..

        மேலும் பேசுவோம்……
        //கருத்து என்ன என்பதை விவாதிக்காமல் , கருத்தை கூறியவர் ஜாதியை சிந்திக்கும் உங்களை போன்றவர்கள் சமூக நீதி காவலன்கள் போலவும் , பிராமணர்களை எதிப்பது போலவும் செய்யும் பாசாங்கு சகிக்கவில்லை//

        • //ஒரு காரணத்தை காட்டி ஒடுக்கபட்ட தலித் மக்களின் அடிப்படை உரிமையாகிய இட ஒதுகீட்டுக்கு எதிராக பேசுமானால் //

          தலித் மக்கள் தொழில் உரிமை , சொத்து உரிமை , கல்வி உரிமை என அணைத்தும் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டவர்கள் . அவர்களுக்கு இட ஒதுக்கீடு எனபது சமுதாயத்தின் கடமை , அவர்களது உரிமை .

          சொத்துரிமை பெற்ற ஒருவன் , தனது கிராமத்தின் கோவிலுக்குள் சக மனிதனை விடமாட்டேன் என்று கூறுபவன், இரட்டை குவளை முறை வேண்டும் என்பவன் , எங்ஙனம் சமுதாயத்தின் உதவியை நாடலாம் ? பிராமணர்கள் என்னை படிக்க விடவில்லை என்று கூறுபவன் , சாதி என்னை மனிதனாக மதிக்கவில்லை என்று கூறுபவன் , அந்த சாதி அவமதிப்பை இன்னொருத்தனுக்கு செய்ய நினைப்பானா ?

          அப்படி சாதி அவமதிப்பை இன்னொருத்தருக்கு செய்பவனுக்கு இடஒதுக்கீடு என்னும் சமுதாய உதவி எதற்கு ?

          தலித்களின் இடஒதுக்கீட்டை காப்பதர்காகவா நீங்கள் எனக்கு எதிர் கருத்து போட்டீர்கள் ? அவர்கள் பெயரால் இடஒதுக்கீடு என்னும் சலுகையை நிலை நிறுத்த தானே ?

          அக்கறை இருப்பது போலவே நடிக்கும் முதலை கண்ணீர் புரியாதா ?

      • /அதாவது ஒடுக்கப்பட்டவர்களை மென்மேலும் ஒடுக்கி கொண்டே , ஐய்யா நான் ஐயர்களால் பாதிக்க பட்டவன் , எனக்கு சமுதாயத்தின் உதவி தேவை என்று கேட்கலாமா ?/

        பேஷா கேட்டிஙக போஙகோ! இட ஒதுக்கீடு என்பது பிட்சை கேட்பது இல்லை அய்யனே! அது எங்கள் உரிமை! பார்ப்பனர்கள் மட்டுமல்ல, வேறு எந்த ஒரு சாதியும் , இனமும் மற்றொரு சாதியின் மேல் ஆதிக்கம் செலுத்த வழியில்லாமல் செய்வதே அதன் நோக்கம்! இதுவரை, அம்பேட்கர் ,காந்தி,நேரு பெரியார் போன்ற அரசியல் சார்ந்தவர்களும், அரசியல் சாராத ஆனால் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களும் ஆதரித்த கொளகையே!

        ஆனால் , எதையும்நேரடியாக எதிர்க்க துணியாத பார்பனீயம் தனக்கு சாதகமான சூழ்னிலை வரும்வரை காத்திருந்து, பதுங்கி பாய்கிறது!

        • //வேறு எந்த ஒரு சாதியும் , இனமும் மற்றொரு சாதியின் மேல் ஆதிக்கம் செலுத்த வழியில்லாமல் செய்வதே அதன் நோக்கம்//

          நல்லது . அந்த நோக்கத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு , அனைவரும் சமம் என்று சிந்திப்பவர்களுக்கு மட்டும் அது சென்று சேர வேண்டும் என்கிறேன் . நெல்லுக்கு தண்ணீர் கட்டினால் போதும் புல்லுக்கு வேண்டாம் என்கிறேன் 🙂

  6. //இட ஒதுக்கீட்டின் மூலம் அதிகாரமிக்க பதவிகளைப் பெற்றவர்களும் ஓட்டுக் கட்சித் தலைவர்களும் ரியல் எஸ்டேட் முதலாளிகள், கல்வி வள்ளல்கள் போன்றவர்களும்தான் சாதியை நிலைநாட்ட வெறித்தனமாக முயற்சிக்கின்றனர்.

    இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் படுகொலைகள் : சமூக நீதி அரசியல் சாதியை ஒழித்ததா, வளர்த்ததா?//

    அகில இந்திய அளவில் ஆதிக்க சாதிகளும், அன்னிய முதலாளித்துவ சக்திகளும் கைகோர்த்து கொண்டு கிளப்பிவிடும் அபாயங்களே இன்றைய சாதி கலவரஙகளும், இனவாத, மதவாத கலவரங்களும் ! அண்ணன் சீமானின் புதிய அவதாரமும் தானாக முளத்தது அல்ல! பிண்ணனியில் இருப்பவர்களை அடையாளம் கண்டு கொண்டு மக்களை மேலும் விழிப்புணர்வுடன் இருக்கச்செய்வதே இன்றைய சமூக ஆர்வலர்களின் கடமை!

  7. வினவின் சமுக நீதி :

    பிற்பட்ட மக்களுக்கு இட ஒதுகீடு வேண்டாம்

    அவிங்க மாடு மேய்கட்டும் ,

    விவசாயம் மட்டும் பண்ணட்டும்,

    தென்னைமரம் மட்டும் ஏறட்டும்,

    சட்டிபானை மட்டும் செய்யட்டும் செம செம.

    …..
    ……
    …….

    கலக்குங்க வினவு.

    • என்னை விட உயர்ந்ததாக கூறி கொள்ளும் சாதியை சேர்ந்த பூசை தொழில் செய்தவர்கள் என்னை மதிக்க வேண்டும். ஆனால் நான், என்னை விட ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களை மதிக்க மாட்டேன் என்று கூறுபவர்கள் , சக மனிதனை மதிக்க மாட்டேன் என்பவர்கள் என்ன தொழில் செய்தால் என்ன ?

  8. “தன்னுடைய தந்தையும், தாயும், பாட்டியும், தாய் மாமனும்தான் இந்தக் கொலைக்கு காரணமானவர்கள் என்றும், அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் கவுசல்யா.”

    பெற்று, சீராட்டி பாராட்டி வளர்த்து பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்து, அதுவும் போதாதென்று, எதிர்க்கால வாழக்கையில் உணவு, துணிப் போன்ற தன்னுடைய அடிப்படை தேவைகளுக்காக யாரிடமும் கையேந்தி நிற்காமல் குலப் பெருமை காப்பாள் என்றெண்ணி சீமைக்கு உயர்கல்வி கற்க அனுப்பி வைத்த, அதுவும் பல லட்சங்களை பிடுங்கிக்கொண்டு போகும் பொறியியல் கல்வி படிக்க நம்பிக்கையோடு அனுப்பி வைத்த அந்த அப்பாவி தாய்க்கும் தந்தைக்கும் இதுவும் வேண்டும் இதற்க்கு மேலும் வேண்டும்.

    • மன்னிக்கவும் சகோதரி…. கீழ் உள்ள கருத்தை வெளியிட்டுவதற்காக……:

      உங்கள் கணவரை யாராவது வெட்டி கொன்றலோ வெட்டி கொன்றவர்கள் உங்கள் பொற்றோராக இருந்து அதனை நீங்கள் கவுசல்யா எதிர்த்தது போன்று நீங்கள் எதிகாமல் இருந்தாலோ அதனால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை….. அதே நேரத்தில் நீங்கள் திருமணம் செய்து கொண்டவர் தலித் சமுகத்தை சேர்ந்தவராக இருந்து அந்த திருமணம் காதல் திருமணமாக இருந்து…., சாதிய எதிர்ப்பு திருமணத்தை காரணம் காட்டி உங்கள் பெற்றோர் உங்கள் காதல் கணவரை வேட்டிகொல்வார்கள் எனில் அது உங்களின் தனிபட்ட பிரச்சனை அல்ல…. அது சமுக பிரச்சனை தான்…. கவுசல்யாவின் கருத்தை எதிர்ப்பதன் முலம்ஆணவ-கவுரவ கொலையை ஆதரிகின்ற நிலையில் உள்ளிர்கள என்பதனை நினைவு படுத்த விரும்புகிறேன்…….

      வேறு வழி இன்றி தான் மேல் உள்ள கருத்துகளை கூறி உள்ளேன்…. அதற்காக மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்….

      //பெற்று, சீராட்டி பாராட்டி வளர்த்து பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்து, அதுவும் …….

      • // கவுசல்யாவின் கருத்தை எதிர்ப்பதன் முலம்ஆணவ-கவுரவ கொலையை ஆதரிகின்ற நிலையில் உள்ளிர்கள என்பதனை நினைவு படுத்த விரும்புகிறேன்//

        மன்னிக்கவும் சகோதரரே …. மிகவும் தவறான புரிதல். நான் கலப்பு திருமணத்திற்கு எதிரானவள். தமிழ் சமுகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் நடந்தேற வேண்டும் என்கிற அவா எனக்கும் உண்டு. நடந்த படுகொலை கண்டிக்க பட வேண்டியது தான். ஆனால், அதற்காக நமக்கு வாழ்வில் தேவையானதை அக்கறையுடன் பார்த்து பார்த்து செய்த பாசமிகு பெற்றோர்களை பதறடித்து விட்டு, அவர்களை சமுகத்தில் நடமாட முடியாத அளவிற்கு அவமானத்தில் நிர்கதியாய் நிற்க வைத்து விட்டு, தன சுகமே பெரிதென நினைக்கும் இதுப் போன்ற அடாது செயல்களை நான் எப்போதுமே ஆதரித்தது கிடையாது. முடிந்த அளவு போராடி, அவர்களை சமாதான படுத்தி பெற்றோரின் சம்மதத்தை பெற முயசிக்க வேண்டும். காதலிக்கும் முன்பே இந்த காதல் கல்யாணத்தில் முடிவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என்பதை தெரிந்துக் கொண்டு தான் காதலிக்க துவங்க வேண்டும். அதை மீறி காதலித்து இது திருமணம் வரை செல்லாது என்று தோன்றினால், முடியவில்லை என்றால் நம் பெற்றோர்களுக்காக மனதினை கல்லாக்கிக் கொண்டு அந்த காதலை Break-up செய்வது தான் சரியான வழி. ஒத்து வராது என்று தெரிந்தால் ஜனநாயகப் பூர்வமாக அவரவர் பாதையில் பிரிந்து செல்வது தான் நல்ல தீர்வு.

        //உங்கள் கணவரை யாராவது வெட்டி கொன்றலோ வெட்டி கொன்றவர்கள் உங்கள் பொற்றோராக இருந்து அதனை நீங்கள் கவுசல்யா எதிர்த்தது போன்று…….//

        மீண்டும் மன்னிக்கவும்.. அந்த அளவிற்க்கெல்லாம் நான் யாருக்கும் தொல்லை கொடுக்க மாட்டேன் என்றே நினைக்கிறன்.

        • *நான் கலப்பு திருமணத்திற்கு எதிரானவள்

          அவசரத்தில் ஏற்ப்பட்ட ஒரு சிறு தட்டச்சு பிழை “நான் கலப்பு திருமணதிற்கு எதிரானவள் அல்ல” என்று புரிந்து கொள்ளவும்

        • நடந்த ஆணவ படுகொலையை கண்டிக்கும் உங்கள் மனம், சாதிய மறுப்பு திருமணங்களை அவா உள்ள உங்கள் மனம் சிறப்படைய எனது வாழ்த்துகள்…. அதே நேரத்தில் இரண்டு மனம் வேண்டும்…. சேர்த்து வாழ ஒன்று, பிரிந்து வாழ ஒன்று கேட்டு பேசினீர்களே அங்கு தான் தர்க்கம்-லாஜிக் இடிகின்றது…..சங்கர்-கவுசல்யா தம்பதியினர் ஒன்றும் க்ள்ளகாதலில் ஈடுபடவில்லை… அவர்கள் சட்டபூர்வமாக தான் திருமணம் செய்து வாழ்ந்தனர்….. அப்படி இருக்கும் போது கவுசல்யாவின் பெற்றோருக்கு அந்த திருமண பந்தம் எப்படி அவர்களை அவமானத்தில் நிறுத்தும்….? என்ன காரணத்தை கூற வருகின்றிர்கள் ?

          நீங்கள் கூறவரும் காரணம் சமுக நிலைகளில் சங்கர் சாதி ரீதியாக குறைந்த நிலையில் இருபது தானே? அவர் சமுக நிலையில் தாழ்ந்து இருந்தாலும் அவர் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை CAMPAS INTERVIEW மூலம் பெற்று வரும் மாதங்களில் சென்னையில் வேலைக்கு சேர்ந்து விட்டுப்போன மனைவியின் படிப்பை தொடர முயன்றுகொண்டு இருந்தார் என்பது கவுசல்யாவின் பத்திரிக்கை பேட்டிகள் மூலமாக காணமுடிகின்றது…..அத்தகைய நிலையில் கவுசல்யாவின் குடும்பமே சதி திட்டம் தீட்டி சங்கரை கொன்று , கவுசல்யாவை படுகாயம் செய்து உள்ளது எனில் அந்த பெண் வேறு எப்படி தன் ஆறமையை ,கோபத்தை வெளிக்காட்ட முடியும்? இப்படி தானே?

          “தன்னுடைய தந்தையும், தாயும், பாட்டியும், தாய் மாமனும்தான் இந்தக் கொலைக்கு காரணமானவர்கள் என்றும், அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் கவுசல்யா.”

          என்ன தவ்று கண்டிர்கள் சகோ…?

        • சாதி வெறியர்கள் படிக்காதவர்கள் என்று தான் இது வரையில் நினைத்து இருந்தேன்…. இப்போது புரிகின்றது படித்தாலும் சாதிவெறி உங்களை விட்டு அகலாது என்று…..என்ன அவமானத்தை கவுசல்யா அவரின் பெற்றோருக்கு தேடி கொடுத்தார்….? எது கவுசல்யா செய்த அடாத செயல் ? பெற்றவர்கள் சாதி வெறியர்களாக இருக்கும் நிலையில் என்னத்துக்கு அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும்? காதல் என்பது முன் நிபந்தைகளுடன் வருமாயின் அதற்கு பெயர் காதல் கிடையாது…. பெற்றோர சம்மதிக்க வில்லை என்றால் காதலை Break-up செய்வது தான் சிறந்து என்றால் அந்த சாதி வெறி பெற்றோரின் சாதி வெறிக்கு கவுசல்யா அடிபணிந்து போகவேண்டுமா? பெற்றோரின் சாதி வெறியின் காரணமாக ஜனநாயகப் பூர்வமாக அவர்கள் பிரியவேண்டும் என்றால் அதன் பொருள் சாதி வெறிக்கு அடிபணிந்து போ என்று நீங்கள் கட்டளை இடுவதாகவே அர்த்தம் ஆகின்றது…. தொடருங்கள் சகோ…வாழை பழத்தில் ஊசி ஏத்துவது போன்ற உங்கள் சாதிவெறி கொடும் செயலை…

          என்ன பெற்றோரின் சாதி வெறிக்கு மணமக்கள் அடிபணியா விட்டால் சங்கரை வெட்டி கொன்றது போன்று தான் கொல்வோம் என்பது தானே நீங்கள் கூற வரும் சாதிவெறி பாடம்? சமுகம் இப்படியே இருக்காது…. ஒடுக்கப்படவர்கள்-தலித் திருப்பி அடிக்கும் போது சாதி வெறி உள்ள உங்களுக்கும் வலிகதான் செய்யும் சகோ…. ரத்தமும ஒரே நிறம்…. யார் கையில் கதியை எடுத்து வீசினாலும் அது எதிராளியை வெட்ட தான் செய்யும்…. வெள்ளையனுக்கு எதிரான போராட்டத்தில் புலி தேவனுடன் இணைந்து வெள்ளையனுக்கு ஆப்படித்த வீர மரபு ஒடுக்கப்படவர்கள்-தலித் மக்களுக்கும் உண்டு என்ற உண்மையை கூற விரும்புகின்றேன்….

          //ஆனால், அதற்காக நமக்கு வாழ்வில் தேவையானதை அக்கறையுடன் பார்த்து பார்த்து செய்த பாசமிகு பெற்றோர்களை பதறடித்து விட்டு, …………………….அந்த காதலை Break-up செய்வது தான் சரியான வழி. ஒத்து வராது என்று தெரிந்தால் ஜனநாயகப் பூர்வமாக அவரவர் பாதையில் பிரிந்து செல்வது தான் நல்ல தீர்வு.//

          • சகோ. ரவி குமார் மற்றும் Ajathasathru

            //என்ன பெற்றோரின் சாதி வெறிக்கு மணமக்கள் அடிபணியா விட்டால் சங்கரை வெட்டி கொன்றது போன்று தான் கொல்வோம் என்பது தானே நீங்கள் கூற வரும் சாதிவெறி பாடம்?//

            மன்னிக்கவும்.. நான் கூற வருவதை நீங்கள் இன்னும் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை. நான் சாதியை கௌரவ கொலைகளை ஆதரித்து எங்குமே ஒரு வார்த்தையை கூட பயன்படுத்ததாத போது எதற்க்காக என் மீது சாதி சாயம் பூச வேண்டும்? நான் பேசும் பொருள் வெறும் தாய் தந்தை பாசம் இவைகளை அடிப்படையாகக் கொண்டு தான்.

            //என்ன அவமானத்தை கவுசல்யா அவரின் பெற்றோருக்கு தேடி கொடுத்தார்….? எது கவுசல்யா செய்த அடாத செயல் ? //

            என்ன விடயத்திற்காக நம்பி அனுப்பி வைத்தார்களோ(கல்வி கற்க) அதை முழுவதுமாக கை கழுவி விட்டு, ஒருவனை அழைத்து வந்து இவனை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று அட்டுழியம் செய்தது எந்த வகையில் நியாயம். இது நம்பி படிக்க அனுப்பிய பெற்றோர்களுக்கு செய்த துரோகம் இல்லையா?. படித்து முடித்து பட்டம் வாங்கி வருவாள் என்று எதிர்ப்பார்த்த பெற்றோர்களின் கனவை சிதைத்தது தவறு இல்லையா? காதலிப்பதர்க்காகவா இவ்வளவு செலவு செய்து படிக்க அனுப்பியது? இங்கு பிரச்சனை சாதியை பற்றியல்ல. சங்கர் ஒரு வேளை ஆதிக்க சாதியை சேர்ந்தவராகவே இருந்தாலும் கூட இவர்கள் செய்தது தவறு தான். நிற்க

            இப்பொழுது சங்கரின் விடயத்திற்கு வருவோம். சங்கரின் வாழ்நிலையை பற்றி வினவு கூறியது இதை..

            //சங்கர் ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் மகன். முதல் தலைமுறைப் பட்டதாரி. தனது வாழ்க்கையையே அடமானம் வைத்துக் கடன் வாங்கி, பிள்ளையைப் படிக்க வைத்த அந்தக் குடும்பத்தின் ஏக்கம், எதிர்பார்ப்பு ………..//

            ஒரு அப்பாவி சுமை தூக்கும் தொழிலாளியின் மகன் தான் சங்கர். மகன் கல்வி கற்று வேலைக்கு சென்று வாங்கிய கடனை அடைப்பான், இப்பொழுது இருப்பதை போல் அல்லாமல் இன்னும் நல்ல வாழ்க்கை தரத்திற்கு குடும்பத்தை அழைத்து செல்வான் என்று நம்பிதான் கடன் பட்டு அவர் தந்தை படிக்க வைத்தார். இதை கொஞ்சமாவது உணர்திருந்தால் சங்கர் தேவை இல்லாத இந்த “இன கவர்ச்சி” காதல் வலையில் விழுந்திருக்க மாட்டார். தன் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமை தான் அவர் மனதில் இருந்திருக்கும். வினவு கூறுவதுப் போல் அல்லாமல், ஒரு அப்பாவி ஏழை தந்தையின் கனவுகளை அழித்ததில் பெரும் பங்கு சாதி வெறிக்கு உண்டென்றால் ஒரு சிறு பங்காவது சங்கர் கெளசல்யாவிடம் இருக்காத தான் செய்கிறது. எது சரி, எது தவறு என்பதைக் கூட முடிவெடுக்க தெரியாத வயதில் இப்பொழுது திருமணத்திற்கு என்ன அவசரம். எவ்வளவோ கடமைகள் சங்கருக்கு இருக்கிறது. படித்து வேலைக்கு போய் சம்பாதித்து, குடும்ப நிலையை ஓர் அளவிற்காவது முன்னேற்றி விட்டு, பிறகு திருமணம் செய்துக் கொள்ளட்டும். ஏன் வேலை பார்க்கும் இடத்தில் காதல் வராதா. ஆனால் நிச்சயம் நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளப் போவது கிடையாது. என்னை வேண்டுமானால் சமுக விரோதியாக எண்ணுவீர்கள்.

            முடிவாக, கௌசல்யாவின் பெற்றோர் செய்தது தவறு தான். அதற்க்கான தண்டனையை நிச்சயம் அவர்கள் பெறுவர். அதனால், சங்கரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பு சரி ஆகி விடுமா. இந்த முதிர்சியற்ற காதலால், தேவை இல்லாத ஒரு உயிர் இழப்பு, இரண்டு குடும்பங்களின் நிம்மதியும் சிதைந்து விட்டது, கௌசல்யாவின் படிப்பும் பாழாகி போனது தான் மிச்சம். சமுகம் மாறும் வரை கொஞ்சக் காலம் காத்திருக்கத் தான் வேண்டும்.

            • உண்மையில் நடுநிலைமை என்று இதுவரை நான் கேள்விப்பட்டதிலேயே மிகச்சரியான நிலைப்பாடு ரெபக்கா மேரியினுடையது தான்.

        • அன்பு ரெபேக்கா மேரி என்னை மன்னியுங்கள் கெளசல்யவின் மன நிலையை ஒரு பெண்ணாக சற்றும் புரிந்து கொள்ளாமல் பேசியது என்னை அதிகம் வருத்தியதால் சற்று கோவமாக பின்னூட்டமிட்டு விட்டேன் ஒரு ஆணுக்கு இருக்கும், கவுசல்யாவிம் மீது இர்கக்கம் கூட இல்லாமல் பேசுவது வேதனை அளிக்கிறது…

    • ஏம்மா ………. ரபேக்கா மேரி பெத்த பிள்ளையையே கொலை செய்ய தூண்டிய தாயயும் தகப்பனையும் எப்பிடி அப்பாவின்றிக நீங்க உண்மை கிறிஸ்த்துவளாக இல்லாவிட்டாலும் கிறிஸ்துவளா ……… ஏசு நாடார் கூட …… மன்னிக்க மாட்டார்…

      • சகோதரர் ஜோசப் ….

        நீங்கள் என்னிடம் மன்னிபெல்லாம் கேட்க்க வேண்டாம். உங்கள் கோபம் நியாயமானதே.

        //கெளசல்யவின் மன நிலையை ஒரு பெண்ணாக சற்றும் புரிந்து கொள்ளாமல் பேசியது என்னை அதிகம் வருத்தியதால் சற்று கோவமாக பின்னூட்டமிட்டு விட்டேன் …..//

        அந்த பெண்ணின் மனநிலையை புரிந்து கொண்டதால் தான் நான் அவ்வாறு கூறினேன். வேறு நான் எப்படி பேச வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் எந்த இடத்திலும் சாதியை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கௌசல்யாவின் மனநிலையில் இருந்து சொல்கிறேன். அவர்களிடம் இருந்தது ஒரு இன கவர்ச்சி தான். அதற்க்கு பெயர் நிச்சயமாக காதல் கிடையாது. திருமணம் ஆகும் பொழுது அந்த பெண்ணிற்கு வெறும் 19 வயதுதான். 19 வயதில் காதலைப் பற்றியும், வாழ்கையை பற்றியும் ஆண் பெண் உறவை பற்றியும் அப்படி என்ன அவருக்கு பெரிய புரிதல் ஏற்பட்டு விட்டது. அவர் எதற்க்கா கோவைக்கு வந்தார், காதல் செய்வதற்கா? முதலில் தன் பெற்றோருக்கு அவர் உண்மையாக நடந்து கொண்டிருக்க வேண்டும்.

        அதற்காக, கௌசல்யாவின் குடும்பம் செய்ததை நிச்சயம் பொறுத்துக் கொள்ள முடியாது. பிடிக்கவில்லை என்றால், எதற்கும் பயனில்லாத சாதி தான் முக்கியம் என்று நினைத்தால் அவரை குடும்பத்தில் இருந்து தனிமை படுத்தி விலக்கி வைத்து இருக்கலாம். அதை விட்டு ஒரு அப்பாவி இளைஞரான சங்கரை படுகொலை செய்ததை நிச்சயம் பொறுத்துக் கொள்ள முடியாது. கௌசல்யாவின் குடும்பத்தார் நிச்சயம் இதற்கான தண்டனையை அடைந்தே தீர வேண்டும். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால் இழந்த அனைத்தையும் திரும்ப பெற முடியுமா என்றால், முடியாது என்பது தான் உண்மை. சங்கரின் தந்தை, காதல் செய்வதற்காக கடன் வாங்கி அவரை படிக்க அனுப்பவில்லை. வீட்டில் ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் என்கிற ஒரு ஏழை தந்தையின் நியாமான கனவு நிறைவேறத் தான் கடன் வாங்கி கஷ்ட பட்டு படிக்க வைத்தார். இதனை சங்கர் கொஞ்சமாவது உணர்திருந்தால், இவ்வளவு நாசங்கள் ஏற்பட்டிருக்காது.

        சாதி என்பது நிச்சயம் இந்த சமுகத்தில் இருந்து விரைவில் மறைந்து விடும். சமுகம் கொஞ்ச கொஞ்சமாக முற்போக்காக மாறிக் கொண்டு தான் வருகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் சாதி என்பது உலர்ந்து இல்லாமல் ஆகி விடும். அது வரை கொஞ்சம் பொறுத்திருப்போம் என்று தான் கூறுகிறேன். முடியாதவர்கள் தக்க பாதுகாப்போடு இருக்க வேண்டும். என்னை கேட்டால் படிக்கும் காலத்தில் காதல் வேண்டாம். ஒரு நல்ல வேலையில் அமர்ந்த பிறகு காதலை பற்றி யோசிக்கலாம். இது என்னுடைய கருத்து அவ்வளவே.

        நான் உண்மையான கிறிஸ்தவச்சியா இல்லையா என்பது என் மனசாட்சிக்கு தெரியும். உங்கள் மனதினை நான் எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விவாதத்தில் இருந்து இத்தோடு விலகுகிறேன் நன்றி.

        • என்னங்க இப்பிடி பன்றீங்க நேத்து வரைக்கும் அப்பாவி பெற்றோர் அப்பிடினுட்டு இப்ப அவுங்க தண்டிக்கப்படனுமுனு சொல்லுறீங்க கவுசல்யாவை தனிமை படுத்தி இருக்கலாம் அதாவது கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் பூட்டி வைத்தி இருக்கலாம் கொடிய சினிமா வில்லன் டயலாக்கா ,கல்லூரி வந்து விட்டால் படிப்புடன் காதலும் வருவது சகஜம்தானே எத்தன சினிமால பாத்து இருப்பீங்க ஆனா ரெபெக்கா மேரி வரக்கூடது படிப்புதான் முக்கியம் அப்பிடின்றீக ஆனா கவுசல்யாவுக்கு சங்கருக்கும் வந்து தொலைச்சிடுச்சே என்ன செய்ய 2 பெரும் ரிஜிஸ்தார் மேரேஜ் பன்னிக்கிட்டாக இந்திய அரசின் இனக்கவர்ச்சி திருமண சட்டத்தின் படி ,இதுக்க கவுசல்யாவின் அப்பாவி அப்பா அரிவாளோட ஆள் அனுப்பிட்டாரு வந்தவங்க சங்கர மட்டும் சரியா போட்டுட்டு கவுசல்யாவ போடுரதுக்குள்ள கூட்டம் கூடிடிச்சு ஓடிட்டானுக ,சகோகதரி வந்து சங்கர் மாறி பசங்களுக்கும் கவுசல்யா மாறி பொண்னுகளுக்கும் அட்வைஸ் பன்றாங்க என்னடா இப்பிடி கல்யானம் பன்னிக்கிட்டு அவஸ்த வடுறீங்க படிச்சி சம்பாதிச்சு அப்புறமா கல்யாணம் பன்னிக்க வேண்டாமா ,என்ன சரிதானே சகோதரி சீரியஸ எடுத்துக்காம விவாதத்த தொடருங்கள்…

          • சகோ. ஜோசப் …

            நீங்கள் கேட்டுக் கொண்டதால் கடைசியாக ஒரு பதிவு..

            //கவுசல்யாவை தனிமை படுத்தி இருக்கலாம் அதாவது கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் பூட்டி வைத்தி இருக்கலாம் கொடிய சினிமா வில்லன் டயலாக்கா//

            தனிமை படுத்தி வைப்பதென்றால், வீட்டுக்குள் பூட்டி வைப்பது என்ற அர்த்தமல்ல. காதல் திருமணம் செய்பவர்களை பார்த்து தமிழ் சினிமாவில் ஒரு டயலாக் கூறுவார்கள் இல்லையா, அதே போன்று “இனி உனக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது, இனி நீ யாரோ நாங்கள் யாரோ செத்தாலும் இனி எங்க மொகத்துல முழிக்காத எப்படியோ போ” என்று கூறி அவர் காதல் கணவரோடு அனுப்பி இருக்கலாம் என்று கூற வந்தேன். போட்டு தள்ளுவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை தானே. எதிர்க்காலத்தில் பகையை மறந்து சேர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. எங்கள் ஊரிலும் இதுப் போன்ற சில நிகழ்வுகள் நடந்துள்ளன.

            //என்னங்க இப்பிடி பன்றீங்க நேத்து வரைக்கும் அப்பாவி பெற்றோர் அப்பிடினுட்டு இப்ப அவுங்க தண்டிக்கப்படனுமுனு சொல்லுறீங்க//

            இதென்ன வம்பா போச்சு.. வேற என்ன சொல்லனும்னு நினைக்கிறீங்க. ஏதோ மகள் தங்களுக்கு துரோகம் செய்து விட்டாள் என்றெண்ணி உணர்ச்சி வேகத்தில் இப்படி செய்து விட்டார்கள். அதற்காக அவர்களை அப்படியே விட்டு விட வேண்டும் என்றா கூற முடியும். கௌசல்யாவின் பெற்றோர் செய்தது தவறு தான், அதற்கான தண்டனையை சட்டப் பூர்வமாக அவர்கள் பெற்றே ஆக வேண்டும் தான்.

            //சகோகதரி வந்து சங்கர் மாறி பசங்களுக்கும் கவுசல்யா மாறி பொண்னுகளுக்கும் அட்வைஸ் பன்றாங்க என்னடா…//

            பிஞ்சில் பழுத்தது வெம்பித் தான் போகும். இன்றைய நிலையில் ஆண் 30 வயதிலும், பெண்ண 24 வயதிக்கு மேலும் திருமணம் செய்துக் கொள்வது தான் சிறந்தது. இதற்க்கு மேல் இதில் விவாதிக்க ஏதுமில்லை. இருந்தாலும் விவிலியத்தில் இருந்து உங்களுக்காக ஒரு நற்செய்தி.

            Children, obey your parents in the Lord, for this is right. “Honor your father and mother” (this is the first commandment with a promise), “that it may go well with you and that you may live long in the land.” Ephesians 6:1-4

            இதன் தமிழாக்கம் இது தான் …

            பிள்ளைகளே,உங்கள் பெற்றோருக்கு கீழ்படியுங்கள், உன் தந்தையையும், தாயையும் மதித்து நட. இதனால் நீ நலம் பெறுவாய் மண்ணுலகில் நீடூழி வாழ்வாய்.-எபிசெயர் 6:1-4 .

            நன்றி வருகிறேன்..

  9. * குலப் பெருமை

    குடும்பப் பெருமை எனப் பாடம் கொள்க, இதை படித்து விட்டு எத்தனை பேர் என் மீது கல் எரிய போகிறார்களோ.

    • உங்கள் தலைக்கு நேராக நீங்கள் கல்லை தூக்கி போட்டால் அது கல்லாக தான் உங்கள் தலையில் விழும்…., பூவாக மாறி விழும் விழவேண்டும் என்று எப்படி எதிபார்கின்றிகள் சகோ….?

    • நாங்கள் கல்லெறிவதற்க்கு நீங்க யேசுநாதர் முன் மன்டியிட்ட மங்கை இல்லை தனக்கு இழைக்கப்பட இருக்கும் கொடுமைக்காக யேசுநாதரிடம் கூட சரனடய தெரியாத சாதிய காரிய வாதங்களில் மூழ்கி திளைக்கும் அற்ப யூத ஜாதி வெறி அடிமை பெண்தான் நீங்கள் உங்கள் மீது யேசுநாதரே கல்லெறிவார்…

  10. சமூக நீதி அரசியல் என்பது ஏதோ பெரியார் அம்பேத்கரின் அடியொற்றி வந்ததொரு மாற்றம் என்பது போல இங்கே விவாதிக்கும் நண்பர்கள் பதிவிட்டு வருகின்றனர். “சமூக நீதி அரசியல்” என்பது நக்சல் மற்றும் இடதுசாரி இயக்கங்களின் பின்னடைவு, ford foundation போன்ற NGOக்களின் படையெடுப்பு முதலிய மாற்றங்களைத் தொடர்ந்து 80களின் இறுதியில் உருவான சொல்லாடல்தான். அதனால் நேரடியாகப் பயனடைந்தவர்கள் ப.ம.க. போன்ற ஆதிக்க சாதிவெறிக் கட்சிகள்தான். இந்த அடிப்படையில்தான் கட்டுரையின் தலைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    இங்கு இட ஒதுக்கீடு பற்றிய பிரச்சனை பிரதானமாகப் பேசப்படவில்லை. ஆனால் “இட ஒதுக்கீடு சாதி ஏற்றதாழ்வுகளை ஒழித்துவிடும்” என்ற சீர்திருத்தவாதிகளின் வாதத்தைத்தான் கட்டுரை கேள்விக்குள்ளாக்குகிறது.

    தலித் நடுத்தர வர்க்கம் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வளர்ச்சிக்கு உதவாமல் தன்னலவாதிகலாய் வாழ்வதை அம்பேத்கரும் கூடத்தான் கண்டித்திருக்கிறார். இதற்கு அம்பேத்கர் இட ஒதுக்கீடு கூடாது என்று சொன்னார் என்றோ,, அல்லது அவரும் ஆர்.ஆர்.எஸ்-உம் ஒன்று என்றோ கூற முடியுமா? ரவிக்குமார், அஜாத சத்ரு போன்றோர் கூறுவது அப்படித்தான் அபத்தமாக உள்ளது.

    • சமுக நீதி அரசியல் என்பது நீங்கள் கூறுவது போன்று 80களில் உருவான ஒன்று அல்ல… அம்பேத்கார் பெரியார் போன்ற சமுக சீர்திருத்த தலைவர்களால் இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் அதற்கு பின்னும் வலியுறுத்தப்பட்டு தமிழ் நாட்டில் இட ஒதுகீடு செயலாக்கம் பெற்றது…..அதன் தொடர்சியாக தான் திரு வி.பி சிங் ஆட்சியில் இந்திய அளவில் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் பிற்பட்ட சமுக மக்கள் வாய்ப்புகளை பெற்றனர்…..அந்த நிலையில் பார்பனர்கள் எதிர்ப்பு தெரிவிக்க செருப்பு தைக்க தான் நாங்க போகனுமா என்று போராட்டங்கள் மூலம் action காட்டி செருப்பு தைக்கும் தொழிலாளர்களை இழிவு செயத்தையும் பார்த்தோம். இன்னும் உயர் கல்வி நிறுவனங்களில் சமுக நீதியை நடைமுறை படுத்த அந்த நிறுவனங்களின் தலைமைகள் கொடுக்கும் இடையூறுகளை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்……அம்பேத்கார்-பெரியார் மாணவர் அமைப்புகள் தடை செய்யப்ட்டதையும் கண்டோம்……

      வெறுமனே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தான் சமுக நீதி அரசியல் செயல்பாட்டுக்கு காரணம் என்று வரையறை செய்வது சமுக மாற்றத்தை கேவலபடுத்தும் செயல் அன்றி வேறு ஏதும் இல்லை….
      //ford foundation போன்ற NGOக்களின் படையெடுப்பு முதலிய மாற்றங்களைத் தொடர்ந்து 80களின் இறுதியில் உருவான சொல்லாடல்தான்.//

      இந்த கட்டுரை கொடுக்கும் கருத்தாக்கம் என்ன? பிற்பட்ட மக்களுக்கு அளிக்கபடும் இட ஒதுக்கீடு தான் தலித் மக்கள் கொல்லபடுவதற்கு பிரதான காரணம் என்று பறைசாற்றுகின்றது…. அதே பாணியில் கூறுவது என்றால் இது வரையில் இந்திய கம்யுனிஸ்டு கட்சிகளின் சீரழிவுக்கு தொழிலாளர்களுக்கு சிறிதும் தொடர்பற்ற பார்பன தலைமை தான் காரணம் என்பது தான் 100% உண்மை… அப்படி என்றால் இந்த அமைப்பு மகஇக தன் பார்பன தலைமையை அமைப்பை விட்டு வெளியேறுமா?
      //இங்கு இட ஒதுக்கீடு பற்றிய பிரச்சனை பிரதானமாகப் பேசப்படவில்லை. ஆனால் “இட ஒதுக்கீடு சாதி ஏற்றதாழ்வுகளை ஒழித்துவிடும்” என்ற சீர்திருத்தவாதிகளின் வாதத்தைத்தான் கட்டுரை கேள்விக்குள்ளாக்குகிறது.//

      சரியான விஷயம் தான்…. அதே நேரத்தில் அம்பேத்காரோ அல்லது பெரியாரோ வினவு போன்று இட ஒதுகீட்டுக்கு எதிராகவா நின்றார்கள் ? சிந்தியுங்கள் நண்பரே….
      //தலித் நடுத்தர வர்க்கம் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வளர்ச்சிக்கு உதவாமல் தன்னலவாதிகலாய் வாழ்வதை அம்பேத்கரும் கூடத்தான் கண்டித்திருக்கிறார்//

  11. கட்டுரையில் எனக்கு கொஞ்சம் சந்தேகம்.
    1. கருணாநிதி கொலையை மட்டும் கண்டித்தார் எனில் அவரை பெரியாரின் காலி பெருங்காய டப்பாவாக கூட மதிப்பிட இயலுமா?
    2.கயர்லாஞ்சியில் தலித் அதிகாரிகளால் பெற்றுத்தர முடியாத நீதி, இடைநிலை சாதிகளின் அதிகாரிகளது பக்கச் சாய்வால் தான் மறுக்கப்படுவதாக பார்ப்பது சரியான மதிப்பீடு தானா?
    3.சாதி வெறி இட ஒதுக்கீடு மூலம் பயன்பெற்றவர்கள், ரியல் எஸ்டேட் என பட்டியிலிடப்பட்டுள்ளவார்களால் மட்டும் தான் வெறியூட்டப்படுகிறதா.. அல்லது தன்னளவிலேயே முன்னரே இருந்து இருந்து வருகிறதா.. அல்லது சாமான்ய மக்களிடம் அது மறைந்து வருவதற்கு ஏதேனும் புள்ளிவிபரம் இருக்கிறதா?
    4.சுயசாதி எதிர்ப்பில்லாத அதே வேளையில் ஜனநாயகத்தின் விழுமியங்களில் நம்பிக்கையுடைய ஒருவனும், அதிமுக வின் அயோக்கியத்தனத்தை எதிர்க்காமல் தெரிந்தே அந்த கட்சியில் போய் சேர்ந்த ஒரு தொண்டனுக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருப்பதாகத்தானே படுகிறது. எனது புரிதல் தவறா?

  12. இந்த கட்டுரையில் வினவின் கருத்துக்கு எதிராக பின்னுடம் அளிக்கும் போது அத்தகைய நபர்களை பார்த்து உன் சாதி என்ன என்று கேள்வி எழுப்பியும் , நீ சாதி வெறியன் தானே என்று வக்கிரமாக பேசியும் உள்ள வினவுக்கு insider என்ன சொல்லப்போகின்றார்? அறிவாளி போன்று போர்ட் foundation என்று எல்லாம் பேச தெரியும் insider அவர்களே…., வினவின் வக்கிரத்தை ஆத்ரிகின்றிக்லா?

    • நண்பர் ரவிக்குமார்,

      உங்களது பின்னூட்டத்தில் நீங்கள் “நேரடியாகவே பிற்படுத்தபட்ட மக்களுக்கான இட ஒதுக்கிட்டை எதிர்கின்றிகள்…. இது உங்களின் தனிபட்ட கருத்தாக இருக்காது…. ஆனால் உங்கள் அமைப்பின் கருத்தாக தான் இருக்க முடியும்…. மகஇக தலைமையும் பார்பனர்…..பின்ன என்ன வேறு எப்படிபட்ட நடுநிலைமையான கட்டுரையை வினவு கிட்ட இருந்து எதிர்பார்க்க முடியும்?” என்று எழுதியுள்ளீர்கள். இது நீங்கள் உணர்ச்சிவயப்பட்டு எழுதிய கருத்தாகத் தெரிகிறது. “பார்ப்பனத் தலைமை” என்பது ம.க.இ.க. அமைப்பின் மீது பரவலாக வைக்கப்படும் விமர்சனம்தான். ஆனால் அவ்வாறு சொல்லும் யாரும் அதற்கு ஆதாரம் தருவதில்லை. பொதுவாக முற்போக்கு அரசியல் இயக்கங்களின் மீது எனக்கு உள்ள மதிப்பீட்டின் படி இவ்வமைப்பினர்தான் சாதி பார்ப்பனியம் குறித்த விடையங்களில் மிகவும் நேர்மையான நிலைப்பாட்டை எடுப்பதாகக் கருதுகிறேன். வேறெந்த இடதுசாரி இயக்கமும் சாதி பார்ப்பனியம் குறித்து இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்கவில்லை. தனிப்பட்ட ஒரு நபர் பார்ப்பனராகப் பிறந்து இவ்வமைப்பில் முக்கியப் பொறுப்பில் உள்ளார் என்பதாலேயே அதனை “பார்ப்பனத் தலைமை” என்று சொல்வது சரியா? அப்படிச் சொன்னால் பார்ப்பனியம் சொல்லும் அதே அளவுகோலில் பிறப்பின் அடிப்படையில் ஒரு மனிதனின் சாதியையும் குணத்தையும் நிர்ணயிக்கும் அதே கேவலமான வேலையை நாமும் செய்யவில்லையா?

      அதேபோல், நான் “சமூக நீதி அரசியல்” குறித்துச் சொல்லியிருப்பதை உரிய பின்புலத்தில் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். தமிழகத்தில் வன்னியர் சாதிச் சங்கம் வளர்ந்து அது அரசியல் கட்சியாக உருபெற்றது பெரியார் அல்லது அம்பேத்கரின் சீதிருத்தத்தை பின்பற்றியல்ல, இடைநிலைச் சாதிகளின் திரளாகவே அது இருந்தது. அது பெரியார் சொன்னது போன்ற சாதிமறுப்புத் திரளல்ல. இந்திய அளவில் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டதும் இதே சூழலில்தான். இடதுசாரி இயக்கங்களின் பின்னடைவை ஒட்டி இவ்வாறான திரட்சியை “நுண்ணரசியல்” என்று பின் நவீனத்துவ அறிவாளிகளும் கொண்டாடினர். அவர்கள் இட ஒதுக்கீடும் அதிகாரப் பகிர்வும் சமூக நீதியைக் கொண்டுவரும் என்றும் வாதித்தனர். இதற்கெல்லாம் ford foundation போன்ற தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி செய்தன என்பதை உங்களால் மறுக்க முடியுமா? பெரியாரும் அம்பேத்கரும் இட ஒதுக்கீட்டை ஆதரித்தனர். ஆனால் அது மட்டுமே போதுமானதென்று கருத முடியுமா? அதிலுள்ள போதாமைகளை விமர்சிக்கும் ஒரு கட்டுரையை கொண்டு இவ்வமைப்பு இட ஒதுக்கீட்டிற்கு எதிரி என்று நாம் எப்படி முடிவுகட்ட முடியும்?

      • நண்பர் insider ,

        பெரியாரும் அம்பேத்கரும் இட ஒதுக்கீட்டை ஆதரித்தனர். ஆனால் அது மட்டுமே போதுமானதென்று கருத முடியுமா? என்ற உங்கள் கருத்தில் 100% உடன்படுகின்றேன்…..அரசு வேலை வாய்ப்புகளில் ,கல்வியில் அளிக்ப்படும் பிற்பட்ட சாதியினருக்கான இட ஒதுகீடு என்பது மிக நீண்ட கொடுங்கோடைகாலத்தில் என் வயலுக்கு என் கிணற்றில் வற்றி பின் ஊற்றெடுக்கும் சிறு நீரை பாச்சுவது போன்றது தான்….அந்த நீர் கொண்டு 5 ஏக்கர் நிலத்துக்கும் தண்ணீர் அளிக்கமுடியாது தான் ஆனால் சிறு பரப்புக்கு நீர் அளித்து சில பாத்தி கிரை செடிகளையாவது உயிர்பிக்க முடியும்….. சிலர் ஒரு சிலர் வேலை வாய்ப்புகளை,கல்வியை பெறுகிறார்கள் எனில் அதில் எனக்கு சிறு மகிழ்ச்சியே….. இந்த வினவு கட்டுரை போதாமைகளை விமர்சிக்கும் கட்டுரையாக இருந்தால் நானும் அதனை ஆதரிப்பேன்…. ஆனால் இந்த கட்டுரை இட ஒதுக்கீட்டின் தேவையின்மையை பற்றி தான் பேசுகிறது…. ஒரு பாத்திக்காவது நீர் கிடைகின்றதே என்று சந்தோஷபட்டேன். ஆனால் இவர்கள்-வினவு அந்த பாத்திக்கும் நீர் எதற்கு என்று தானே தடை செய்ய முயலுகிறார்கள்….

        உங்களின் கருத்தான அதாவது வினவின் கருத்தான இடஒது கீட்டின் தேவை இன்மையை பேசும் போது அதற்கு ஆதாரம் கொடுக்க தொடர்பற்ற விசயங்களை தொடபுள்ளது போன்று பேசும் திறமையுடன் செயல்படுகின்றிகள்….மண்டல் கமிசன் 1979ல் திரு மராஜீ தேசாய் அவர்களின் ஆட்சியில் தொடங்க பட்ட ஒன்று…. அது பாராளுமன்றத்தில் தொடங்கப்பட போர்ட் அரகட்டளை தான் பின்னணியில் இருந்ததா? ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள் நண்பரே…. அந்த மண்டல் கமிசன் OBC என்ற வரையறை செய்ய 11 அம்சங்களை தன்னகத்தே கொண்டு உள்ளது….அனைத்து அம்சங்களையும் விவாதிப்பதை விட மிகமுக்கியமான சமுக வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசியமான அம்சங்களை மட்டும் விவாதிக்லாம். மண்டல் கமிசன் கொடுத்த அறிக்கைகளில் சமுக , கல்வி , பொருளாதாரம் ஆகியவற்றின் பின்னியில் தான் OBC நிர்ணயிக்க பட்டு உள்ளது… உதாரணத்துக்கு

        Castes/classes considered as socially backward by others

        Castes/classes where the number of children in the age group of 5–15 years who never attended school is at least 25 per cent above the state average.

        Castes/classes where the average value of family assets is at least 25 per cent below the state average

        இத்தகைய நிலைகளில் உள்ள சாதியினருக்கு மண்டல் கமிசன் அடிப்படையில் கல்வி,வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிப்பதில் என்ன தவறு கண்டீர் insider மற்றும் வினவு ?

        …………………

        தொடருகின்றேன்…..

      • இன்சைடர் நண்பா

        ரவிக்குமார்ங்குற பேருல பேசுறவற பாத்தா இங்க செந்தில்குமரன், சரவணன், தமிழ்ங்குற பேருல பின்னூட்டத்தில் ரம்பம் போடும் ஒரு அரைகுறை ……..முற்போக்கு டவுசர் பாய் போல இருக்கு. இப்ப இவரு பா.ம.கவுல சேந்துட்டாரு போல. இவருக்கு இன்னதான் மல்லுக்கட்டி விளக்கினாலும், இன்னொரு பழம் எங்கனு கேட்டா அதான் இதுன்னு ஒத்தை பழத்தையே காட்டி கொல்லுவாரு, ஏற்கனவே தமிழ்நாட்டுல வெயிலு கொல்லுதுங்கிறதுனால இப்படியான பாவப்பட்ட ஜனமங்க கொஞ்சம் லூசாத்தான் இருக்கும், கண்டுக்காம லூசுலு வுடுங்க, இல்லேன்னா உங்கள டைட்டாக்கியிருவாங்க…………

        • அண்ணே கா.சூ , என்ன சாமி உங்களுக்கு பிரச்சனை. சரவணன் இங்க தான் இருக்கேன். வினவில் இந்த கட்டுரையில் கூட பின்னுட்டம் அளித்துக்கொண்டு தான் இருக்கேன். வாங்க என்கிட்ட வந்து பேசுங்க. அறிவற்று அம்மணமாக நீங்கள் திரிவதை விட பாதி அறிவுடன் அரை டவுசரில் திருவது ஒன்றும் தவறு இல்லை தானே.?இதுவரைக்கும் நீங்கள் எதுவும் பின்னுட்டம் அளித்ததாக தெரியவில்லை சாமி. ஒத்த பின்னுட்டம் அளிங்க பாப்போம். அப்புறமா உங்களை பார்த்து வினவுல எல்லாரும் சிரிப்பாங்க.

  13. சகோ ரெபெக்கா மேரி!
    காதல் கத்தரிக்காய் எல்லாம் சினிமாவிலேயே இருக்கட்டும்! நேர்மையான புரிந்துணர்வு இருந்தால், சமூகத்தையே எதிர்த்து போராடி வெற்றி பெறலாம்! அவ்வாறு வெற்றவர்கள் அனேகம்! இப்போது இந்துத்வா சதியில், சாதி பெருமை ஊக்குவிக்கபடுகிறது! வறுமையில் வாடும்போது துணைக்கு வராத சாதி, கலப்பு திருமணம் செய்த தம்பதியினரின் பெற்றோர்களை குறிவைத்து ‘அவமானப்’படுத்துகிறது! தற்போதைய அரசியல் சூழ்னிலையே காரணம்! இதையும் சமாளித்து எழும் சமூகநீதியும், கலப்பு திருமணமும்! திராவிட இயக்கங்களின் கடந்த கால பணியை மக்கள் உணர இது ஒரு சந்தர்ப்பம்!

  14. //வேறெந்த இடதுசாரி இயக்கமும் சாதி பார்ப்பனியம் குறித்து இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்கவில்லை.//

    இடது சாரி என்று சொல்லிகொள்ளும் இயக்கங்கள் தான் இருக்கின்றன. அவைகள் உண்மையில் இடது சாரிகள் தானா என்பதை , அவர்கள் கடந்த காலத்தில் யார் யார் காலை நக்கினார்கள் என்பதை கொண்டுதானே எடை போட முடியும்?

    // தனிப்பட்ட ஒரு நபர் பார்ப்பனராகப் பிறந்து இவ்வமைப்பில் முக்கியப் பொறுப்பில் உள்ளார் என்பதாலேயே அதனை “பார்ப்பனத் தலைமை” என்று சொல்வது சரியா? அப்படிச் சொன்னால் பார்ப்பனியம் சொல்லும் அதே அளவுகோலில் பிறப்பின் அடிப்படையில் ஒரு மனிதனின் சாதியையும் குணத்தையும் நிர்ணயிக்கும் அதே கேவலமான வேலையை நாமும் செய்யவில்லையா?//

    பார்பனீயம் தன் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள பிறப்பின் அடிப்படையில் சாதிகளை நியாயப்படுத்துகிறது! அந்த மதிரியான, பிறப்பின் அடிப்படையை கொண்டு மட்டும் நாம் முடிவு செய்வதில்லையே! இட ஒதுக்கீடுக்கு எதிரான அ வர்களின் போக்கை வைத்து தானே முடிவுக்கு வருகிரோம்!

    ஆர் கேநகர் இடை தேர்தலை அனைத்து கட்சிகளும் , ஜனனாயகத்திற்கும்,நீதிக்கும் எதிரான , சட்ட விரோதமாக திணிக்கப்பட்ட இடை தேர்தல் என்று புறக்கணித்தநேரத்தில் , இந்த இடதுகள் , ஜெயாவின் தேர்வை ஜனனாயக முறையில் நியாயபடுத்தவே, நானும் இருக்கிறேன் என்று போட்டியிட்டது! என்னே அவர்களின் சென்சோற்று நன்றி! இதற்கு பார்பன பற்றன்றி வேறு என்ன? மே.வ மற்றும் கேரளா போல தமிழ்னாட்டு டாட்டா அம்மையார்தானோ?

    • அஜாதசத்ரு,

      நீங்கள் சந்தர்ப்பவாதமாக பேசுவதில் வல்லவராக இருக்க வேண்டும். இல்லையேல் பொதுவான அரசியல் அறியாத அப்பாவியாக இருக்க வேண்டும். இடதுசாரி என்று பொதுவாக சேறடிப்பது, ம.க.இ.கவைத் திட்ட வேண்டுமென்றால் மே.வங்கம், கேரளாவிற்கு போவது, போலிக் கம்யூனிஸ்டுகளை உதாரணமாக காட்டுவது எல்லாம் அறிவு நாணயமற்ற செயல். ஜெயலலிதாவிற்கு சமூகநீதிகாத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்தவரே உங்கள் தானைத்தலைவர் கி. வீரமணிதான். தமிழகத்தில் பார்ப்பனியத்திற்கு எதிரான வீரம் செறிந்த போராட்டத்தை அது ஸ்ரீரங்கம் கருவறை நுழைவு போராட்டம், தில்லைப் போராட்டம், அனைத்து சாதி அர்ச்சகர் போராட்டம் என்று மட்டுமல்ல, பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் வானரங்களை நேருக்கு நேர் எதிர்த்து போராடுவதும் ம.க.இ.க சார்ந்த அமைப்புகள்தான். ஜெயாவை நக்கிப் பிழைத்தவர்கள் உங்கள் தலைவர்கள்தான். இட ஒதுக்கீடு குறித்து ஆயிரம் முறை விளக்கம் சொன்ன பிறகும் அதை எதிர்ப்பதாக திசை திருப்புவது, இல்லையேல் பார்ப்பனத் தலைமை என்று எல்லா சந்தர்ப்பவாதிகளும் இறுதியில் தப்பித்துக் கொள்ளும் மொக்கையை எடுத்துப் போடுவது இதெல்லாம் நிறையப் பார்த்தாயிற்று.

      இட ஒதுக்கீடுக்கு எதிரான போக்கை வைத்து மதிப்பிடும் நீங்கள் இட ஒதுக்கீட்டை நெஞ்சார ஆதரிக்கும் பா.ம.கவின் வன்னிய சாதிவெறிக்கு பாராட்டு விழா எப்போது நடத்தப் போகிறீர்கள்? தேவர் சாதிவெறியோ இல்லை வன்னிய சாதி வெறியோ இல்லை கவுண்டர் சாதி வெறியோ இவர்களை பெயர் சொல்லி கண்டிக்க துப்பில்லாமல் உங்கள் தலைவர்கள் கள்ள மவுனம் சாதிப்பதை காப்பாற்றவே நீங்கள் பார்ப்பன சதி என்று தப்பிக்கீறீர்கள். இதுதான் அசல் பார்ப்பனியம். பூணூல் என்பது உங்களுக்கு உடலில் தடித்த தழும்பாகவே இருக்கிறது. முடிந்தால் அறுவை சிகிச்சை செய்யுங்கள்.

  15. கட்டுரையில் ஒரே ஒரு தவறு உள்ளது.

    \\அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதை சாதி ஒழிப்புக்கான வழியாக முன்வைத்துப் பேசுபவர்கள்,//

    இட ஒதுக்கீடு சாதியை ஒழிக்க வல்லது,தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டால் அது சாதியை ஒழித்து விடும் என்று சமூக நீதி வேண்டுவோர் வாதிடுவதில்லை.சாதி இருக்கும் வரை அதன்பேரில் ஒடுக்குமுறை தொடரும்வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்பதே அவர்களின் வாதம்.அண்ணல் அம்பேத்கரும் இட ஒதுக்கீடு கொண்டு வருவது சாதியை ஒழிப்பதற்காகத்தான் என்று கூறியதில்லை.சாதி ஒழிப்பையே தலையாய நோக்கமாக கொண்டிருந்த அம்பேத்கர் அதற்காக முன்வைத்த தீர்வு சாதி மறுப்பு திருமணங்கள்தான்,இட ஒதுக்கீடு அல்ல.

    மேலும் இட ஒதுக்கீடு என்பதே இருக்கின்ற குறைவான இடங்களை எண்ணிக்கையில் மிகையான மக்களுக்கு சமூக ரீதியாக பகிர்ந்தளிக்கும் ஏற்பாடுதான்.அதில் நலிந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.பசி ஏப்பக்காரனுக்கு முதல் பந்தி.புளிச்ச ஏப்பக்காரனுக்கு கடைசி பந்தி.

    மற்றபடி கட்டுரை அற்புதமாக இன்றைய தமிழ் சமூகத்தின் சாதிய மனப்பாங்கை படம் பிடித்து காட்டுகிறது.

    \\ஒருவேளை, அது ஒரு இளம் காதல் தம்பதிகளுக்கு எதிரான சாதி ஆணவப் படுகொலை என்று தெரிந்திருந்தால், மக்கள் தலையிட்டிருப்பார்களோ //

    தலையிட்டிருப்பார்கள்.கவுசல்யா விரும்புவது போல ஓரிரு கற்கள் வீசப்பட்டிருக்கும்.ஆனால் அவை கொலையாளிகளை நோக்கி பறந்திருக்காது.கவுசல்யாவை நோக்கி பறந்திருக்கும்.இதனை புரிந்து கொள்ள ஒரு தகவல்.தேர்தல் வரலாற்றில் இது வரை ஒரு பொது தொகுதியிலிருந்து தலித் ஒருவர் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.தனித்தொகுதி ஏற்பாடு மட்டும் இல்லையென்றால் சட்டம் இயற்றும் அவைகளில் ஒரு தலித் கூட இடம் பெற முடியாது.அதனால்தான் திருமாவே ஆர்.கே.நகர் வேண்டாமென்று பாதுகாப்பான தொகுதி தேடி காட்டுமன்னார்கோவிலுக்கு போக வேண்டியிருக்கிறது.

    \\\இட ஒதுக்கீட்டின் காரணமாக கல்வி – வேலைவாய்ப்பினைப் பெற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தினர் தாங்கள் சாதிவெறியர்களில்லை என்பது போல நடிக்கின்றனர்.//

    உண்மை.இந்த நன்றி கொன்ற நயவஞ்சகர்களை நாள் தோறும்,நாடெங்கும் காணலாம்.என்ன.சற்றே பேச்சுக்கொடுத்து அவர்களை பேச வைக்க வேண்டும்.

  16. வினவு! உங்களின்நீண்ட இந்த விளக்கம் தேவையற்றது!நீங் களும் என்னுடைய வினவிற்குநேரடியாக பதிலளிக்கவில்லை! “மற்ற” இடது சாரி இயக்கங்கள் என்று யாரை குறிப்பிட்டீர்கள் என்பது தானே எனது கேள்வி!அறிவு நாணயத்தை பற்றிநான் யாரிடமும் சாண்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை! 1980 முதல் புதிய கலாசார வாசகனாகிய நான், மற்றவர் அறிவு நாணயங்களையும் அறிந்தவன்! தோழடர் மருதையனின் பெரியார் பற்றிய கட்டுரை உட்பட! வினவு கடைசியில் இந்த ‘தரத்திற்கு’ இறங்கியது பற்றி வேதனைதான்! பா ம க வும், பார்ப்பனீய அரசியல் தான்! நான் பார்பனீயம் என்பது சாதீயம் நிலைக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் தான்! மற்ற உங்கள் குற்ற சாட்டுகளுக்கு எனது முந்தைய பதிவுகளும், படித்த அன்பர்களுமே பதிலளிக்க முடியும்!

    பாவம் கடைசியில் விமவு, பார்பனீயத்திற்கு வக்காலத்து வாங்கும் கதிக்கு வந்து விட்டதே!

  17. நண்பர் ரவிக்குமார்,
    வினவு இட ஒதுக்கீடு தேவையற்றது என்று எப்போதும் சொன்னதாகத் தெரியவில்லையே? அல்லது இந்தக் கட்டுரைதான் அப்படிச் சொல்கிறதா?
    ம.க.இ.க.வின் “ஆண்ட பரம்பரையா? அடிமைப் பரம்பரையா?” என்ற பாடல் தொகுப்பைக் கேட்டிருக்கிறீர்களா? இல்லை எனில் அவசியம் கேளுங்கள். இட ஒதுக்கீடு கோரும் இடைநிலைச் சாதிகள் கலெக்டர் ஆபீசில் தான் மிகவும் பின்தங்கி உள்ளதாகவும், ஊருக்குள் வந்து “நான்தான்டா ஆண்ட பரம்பரை” என்றும் ரெட்டைப் பேச்சுப் பேசுவது சரியா? இந்த இரட்டை நிலையை யாரும் கேள்வி கேட்கவே கூடாதா? அவ்வாறான கேள்விகளை எழுப்பாமல் எப்படி சாதியை ஒழிக்க முடியும்?
    ford foundation மண்டல் கமிஷன் அமைக்க நிதி உதவி செய்தது என்று நான் எப்போது சொன்னேன்? நான் “சமூக நீதி அரசியல்” குறித்துச் சொல்லியிருப்பதை உரிய பின்புலத்தில் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். தமிழகத்தில் வன்னியர் சாதிச் சங்கம் வளர்ந்து அது அரசியல் கட்சியாக உருபெற்றது பெரியார் அல்லது அம்பேத்கரின் சீதிருத்தத்தை பின்பற்றியல்ல, இடைநிலைச் சாதிகளின் திரளாகவே அது இருந்தது. அது பெரியார் சொன்னது போன்ற சாதிமறுப்புத் திரளல்ல. இந்திய அளவில் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டதும் இதே சூழலில்தான். இடதுசாரி இயக்கங்களின் பின்னடைவை ஒட்டி இவ்வாறான திரட்சியை “நுண்ணரசியல்” என்று பின் நவீனத்துவ அறிவாளிகளும் கொண்டாடினர். அவர்கள் இட ஒதுக்கீடும் அதிகாரப் பகிர்வும் சமூக நீதியைக் கொண்டுவரும் என்றும் வாதித்தனர். இதற்கெல்லாம் ford foundation போன்ற தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி செய்தன என்பதை உங்களால் மறுக்க முடியுமா? பெரியாரும் அம்பேத்கரும் இட ஒதுக்கீட்டை ஆதரித்தனர். ஆனால் அது மட்டுமே போதுமானதென்று கருத முடியுமா? அதிலுள்ள போதாமைகளை விமர்சிக்கும் ஒரு கட்டுரையை கொண்டு இவ்வமைப்பு இட ஒதுக்கீட்டிற்கு எதிரி என்று நாம் எப்படி முடிவுகட்ட முடியும்?

    நண்பர் அஜாதச் சத்ரு, நான் “மற்ற எந்த இடதுசாரி இயக்கத்தையும் விட” என்று சொன்னது தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ள வலது இடது கம்ம்யூநிஸ்ட் கட்சிகளை அல்ல. இந்திய அளவில் “நான் ஒரு இடதுசாரி” என்று சொல்லிக்கொண்டாலே நீங்கள் தலித் விரோதியாகப் பார்க்கப்படுவீர்கள். இதற்கு இடதுசாரி இயக்கங்களின் கடந்தகாலச் செயல்பாடும் மிக முக்கியமான காரணம். வர்க்கப் போராட்டம், புரட்சி ஆகிய இலக்குகளை நோக்கி மிகுந்த நேர்மையுடனும் காத்திரமாகவும் செயல்பட்ட தீவிர இடதுசாரி இயக்கங்கள் கூட சாதி பார்ப்பனியம் விடயத்தில் அவ்வளவு கவனம் செலுத்தவில்லை. ஆனால் ம.க.இ.க. இந்த விதத்தில் முற்றிலும் மாறுபட்டது. இதைத்தான் நான் ஒப்பிட்டுக் காட்ட விரும்பினேன்.

  18. நன்றி! இன்சிடைர்! இட ஒதுக்கீட்டிற்கு அப்பாற்பட்டும் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய கருத்தும்!நடுவில் குட்டையை குழப்பி ,நாம் எடுத்து வைக்கும் மிகச்சிறிய முன்நகர்வையும் , பின்னுக்கு தள்ளும் குளறுபடிகளை நாம் ஏற்றுகொள்ள கூடாது!

    ஓட்டு கட்சிகள் அனைத்தும் ஒழுக்கமற்றவையாக கூடும் என்பதை ஓமந்தூரார் முதல் பெரியார் வரை அறிவுறுத்தியெ சென்றுள்ளனர்! ஆனால், இன்றைய அரசியலில் உள்ள கண்ணுக்கு தெரியாத அபாயங்களையும் சமாளிக்கும் தற்காலிக நடைமுறை உத்தியும இளவட்டங்கள் அறிய பதிவிட வேண்டியது நமது கடமையன்றோ!

    பரோடா அரசரின் இட ஒதுக்கீடு ஆணை, அண்ணல் அம்பேத்கரின் ஆங்கில படிப்பும் அதன் பயனாய் விளைந்த வாய்ப்பும், குஜராத் பார்பனர் மகாத்மா பூலே யின் மனிதநேயமும், மெட்ராஸ் ப்ரெசிடென்சியில் நீதி கட்சியின் இட ஒதிக்கீடும், அல்லாடியின் கில்லாடிதனத்தால் பறி போன அனைத்து இட ஒதுக்கீடுகளும் மீண்டும் சட்டத்தில் இடம்பெற உதவிய பார்ப்பனர் காகா கலெல்கர், பி பி மண்டல் , வி பி சிங் சரித்திரம் முழுமையும் , அவற்றை குலைக்க முயலும் ஆஎஸ் எஸ் கும்பலின் பன்ச தந்திரங்களும் புராண , இதிகாசங்களைபோல நம் இளைஞ்ர்கள் அநைவரும் தெரிந்துன் கொள்ள வேண்டியதல்லவா?

  19. உண்மைதான், ஆனால் அத்தகைய வரலாற்றைத் தெரிந்துகொள்வதன் நோக்கம் சாதி ரீதியாக திரள்வதாக இருக்கக் கூடாது, ஏனெனில் ப.ம.க., அனைத்து சமுதாயப் பேரவை, கொங்கு கட்சிகள் முதலானவை, தலித் இயக்கங்கள் அனைத்தும் பெரியாரையோ அம்பேத்கரையோ அல்லது வேறெந்த தலைவர்களையோ கொண்டாடுவது அவர்கள் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தார்கள் என்பதற்காக என்ற ரீதியில் மாறிவிடக் கூடாது. இட ஒதுக்கீடு பொருளாதாரச் சுதந்திரம், கல்வி அறிவு முதலானவற்றை இதுகாறும் அடிமைப்பட்டுக் கிடந்த சாதிகளிடையே கொண்டு சேர்த்திருப்பது உண்மைதான். ஆனால், இந்த (ஆரோக்கியமான) மாற்றங்கள் எவையும் சாதியை ஒழிக்கவோ, சாதி ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்க்கவோ பயன்படவில்லை என்பதையும் நாம் புரிந்துகொண்டால்தான் நிலவும் அமைப்பின்மீதான நம்பிக்கையிலிருந்து வெளியேறி நிதர்சனமான மாற்றுவழிகளைத் தேட இயலும்…
    இக்கட்டுரை அத்தகைய தேடளுக்கானதொரு உந்துதல் என்பது எனது உறுதியான கருத்து.

    • ஒரு உதவி தேவை.. அப்படி உந்துதலை கட்டுரையின் எப்பகுதி தருகிறது என்பதை சுட்டிக்காட்டினால் அடியேனும் அதனை அடியொற்றி நடைபயில பயில்வேன். முடிந்தால் விளக்கியும் சொல்லுங்கள்.
      பொதுவில், இப்போதுதான் பேரா. அரசு அவர்கள் சாதி குறித்து மாற்றுவெளியிலிருந்து ஒரு ஆய்வு சிறப்பிதழ் கொணர்வதாக கேள்விப்பட்டேன். இக்கட்டுரையையும், திமுகவை வெறுப்பவர்கள் யார், ஏன் வெறுக்கிறார்கள் என்ற இன்னொரு கட்டுரையையும் அனுப்பி வைத்தால் நல்ல பயனிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. நிற்க. இக்கட்டுரைகளுக்கிடையிலான முரண்பாடே வாசகரை குழப்புகின்ற வாய்ப்புகளை அதிகம் தருவதால் வாய்ப்புள்ள இடங்களில் வாசகர் வட்டம் நிகழ்ச்சிகளை நடத்தி யாராவது வந்து பேசி விளங்க வைத்தால் சிறப்பாய் இருக்கும் என நினைக்கிறேன்.

    • //..ஏனெனில் ப.ம.க., அனைத்து சமுதாயப் பேரவை, கொங்கு கட்சிகள் முதலானவை, தலித் இயக்கங்கள் அனைத்தும் பெரியாரையோ அம்பேத்கரையோ அல்லது வேறெந்த தலைவர்களையோ கொண்டாடுவது அவர்கள் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தார்கள் என்பதற்காக என்ற ரீதியில் மாறிவிடக் கூடாது.// இவர்கள் இட ஒதுக்கீட்டினால் பயனடைந்தார்கள் என்பதே அவர்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது! பெரியார் காலத்திலேயே பெரியாரை கைவிட்டவர்கள், அம்பேத்கரை எப்போது ஏற்றனர்?

      நீதிக்கட்சியுடன் செர்ந்து ஜெயித்தவர்கள், கட்சி மாறி ராஜாஜி பக்கம் சாய்ந்து விட்டனரே! அந்த பார்ப்பனீய பாதிப்பும் இந்த இரண்டு சாதிக்காரர்களிடம் மலிந்துள்ளது! மூன்றாவது பெரிய ஆதிக்க சாதியான முக்குலத்தோர் தங்களை ஆண்ட சாதி என்ற இறுமாப்புடனேயே இன்னும் உள்ளனர்! அ தி மு க செல்வாக்கே இந்த அடிப்படையில்தான்! இவர்களிடம்தான் இடதுகள் கூட்டணி கண்டு பதவி சுகமும் அனுபவித்தார்கள்! மாறாக ஒரு சிலரே பெரியார் பேச்சையும், எழுத்தையும் புரிந்து கொள்ள ஆரம்பித்தனர்! கலப்பு திருமணம், சுய மரியாதை திருமணம் சட்ட அஙிகாரமும் அரசு உதவி தொகையும் பெற்றது! சமூதாய மாற்றம் பெருமளவில் ஏற்படததற்கு காரணம் ,அகில இந்திய பார்ப்பன கட்சிகளே!

      தமிழ்னாட்டில் பெரியாரினால்தான் கலப்பு திருமணங்கள் ஆதரிக்கப்பட்டது. எமர்ஜென்சியின்போது பார்பனீயம் தலையெடுத்து அகில இந்திய அளவில் பிராமணரல்லா தலைவர்களை ஒடுக்கியது! தமிழ்னாட்டில் அ தி மு க என்று அண்ணாவின் பெயரிலேயே கட்சி கண்டு , பார்பனீய ஆட்சியை அரங்கேற்றியாய்விட்டது!

      கட்டுண்டோம்! இனியும் பொறுத்திருப்போமா?

  20. //இட ஒதுக்கீடு பொருளாதாரச் சுதந்திரம், கல்வி அறிவு முதலானவற்றை இதுகாறும் அடிமைப்பட்டுக் கிடந்த சாதிகளிடையே கொண்டு சேர்த்திருப்பது உண்மைதான். //

    நன்றி!

    //ஆனால், இந்த (ஆரோக்கியமான) மாற்றங்கள் எவையும் சாதியை ஒழிக்கவோ, சாதி ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்கவோ பயன்படவில்லை //

    சாதி முற்றிலும் ஒழிக்கபடவில்லை என்பதும் சரியே! ஆனால் ஏற்றத்தாழ்வுகள் குறைந்து விட்டது கண்கூடு! தாழ்த்தப்பட்டவரிடம் சுயமரியாதையும், விழிப்புணர்வும் அதிகரித்துள்ளதால், எதிர்வினையாக ஆதிக்க சக்திகள் சிலகாலம் ஆட்டம்போடும்! ஆட்சி மாறினால் அடிபணியும்! ஒரு முழு புரட்சி ஏற்பட இப்போதிருக்கும் புரிந்துணர்வு போதாது என்பது எனது எளிமையான கருத்து!

    முற்றாக இட ஒதுக்கீட்டினால் சாதி வளரவில்லை, மாறாக இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் சக்திகளே சாதீய வெறியை வளர்க்கின்றன என்பது எனது கருத்து! கருத்து மறுபட அனைவருக்கும் உரிமை உண்டு! அதற்காக ‘வினவு’ தோழர் வீரமணியை இழுப்பதும் தேவையற்றது! அவலைநினைத்து உரலை இடிப்பது போல! அம்மையார் பெரியார் திடலுக்கு வந்து , பெரியார் படத்திற்கு மாலையிட்டு ,நானும் பெரியார் சிஷ்யைதான் என்றதும் , பெரியார் அறக்கட்டளைக்கு நன் கொடையும் அளித்தார், இட ஒதுக்கீட்டையும் 69 சதவீதம் ஆக்கினார்! இதெல்லாம் கருணாநிதியை பீட் செய்ய வேண்டும் என்ற உத்தியினாலேயே! பின்னாளில் , அவரே கோர்ட் மூலம் தடையும், க்ரீமி லேயெர் மூலம் பயனடைவோர் குறப்பும் ஏற்பட காரணமானார் ! புரட்டு நடிகன் எம் ஜி ஆரின் வழிமுறையும் அப்படித்தானே!

  21. அன்பர் மணி அவர்களே! கட்டுரையில் தலைப்பை தவிர மற்றவை ஏற்கெனவே அரைத்த மாவுதான்! மக்களை முட்டாளாக்கும் முயற்சிக்கு , சுயனலவாதிகளை தூண்டிவிட்டுபயன்படுத்திகொள்வது பார்பனீய மதவாத அரசியலே! கட்டுரையில் அதைப்பற்றி விரிவாக அலச முயலாமல், பொத்தாம்பொதுவாக ‘இடஒதுக்கீடு சாதியை வளர்த்ததா’ என்ற தலைப்புக்கு என்ன அவசரம்/அவசியம்?

    முதல் பத்தியான,
    / “யாராவது ஒருவர் அந்தக் கொலைகாரர்கள் மீது கல்லை விட்டெறிந்திருந்தால் கூட என் கணவனைக் காப்பாற்றியிருப்பேனே” என்று கதறினாள் உடுமலையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா. அந்த உடுமலை படுகொலைக் காட்சி, தமிழகத்தின் இன்றைய அரசியல் சமூக சூழ் நிலைக்கு ஒரு சாட்சி. கண் முன்னே நடக்கும் பல வகை அநீதிகளைக் கண்டும் காணாமலும், சகித்துக் கொண்டும், அங்கீகரித்துக் கொண்டும் செல்லப் பழகியிருக்கும் தமிழ்ச் சமூகம், கையில் வீச்சரிவாளேந்திய ரவுடிகள் கும்பலுக்கு எதிராக கல்லெறிந்திருக்குமா என்ன?/
    என்பதே முத்தாய்ப்பாக இருந்திருக்க வேண்டும! நமது மக்கள் ஆண்டாண்டு காலமாய் தொடரும் அடக்கு முறையினாலேயே “ராமன் ஆண்டால் என்ன – ராவணன் ஆண்டால் என்ன ” விரக்தியும், “நம்மால் வன்முறை கும்பலை எதிர்க்க முடியுமா?நமக்கேன் வம்பு?” என்ற கையறுநிலையும் பெற்றனர்! அதை மாற்றி தன்மானத்தை ஊட்டவேண்டியதே முதல் பணி! வினவு அதை நிறைவேற்றுமா? மற்றாக பார்பனீயத்தை எதிர்த்து ஒருவர் எழுத , அதை மறுத்து ஒன்று எழுதி தன் “நடுவு”நிலையை காட்டுமா?

    • மன்னிக்கவும். கட்டுரை புதிய ஜனநாயகத்தில் வெளிவந்துள்ளது. அதுபற்றிய விளக்கங்களை வாசகர் வட்டத்தில் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். பலருக்கும் அதில் உடன்பாடிருக்கும். மற்றபடி உங்கள் விருப்பத்துக்கு வளைந்து பேச ஒரு அமைப்போ பத்திரிகையோ வேண்டும் என நீங்கள் கருதினால் அதற்காக முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

  22. நாற்பது ஆண்டுகளுக்கு முன், அரசு பணியாக தூத்துகுடி சென்றிருந்தேன். புகைவண்டி நிலயத்திலிருந்து என்னை அழைத்து சென்றவர், நான் முன்பதிவு செய்த தங்கும் விடுதியின் பின்புறமாக அழைத்து சென்றார்; ஏனென்று கேட்டதில், முன் பக்கம் அப்போது தான் ஒரு கொலை நடந்து, பிணம் வழியில் கிடப்பதாகவும், போலிசு வர பத்துமணிக்கு மேலாகுமென்றும் கூறினார்! இந்தியா முழுவதும் இதே இன்றளவும் இதேநிலைதான் ! குறிப்பாக கிராமப்புறங்களில் அந்தந்த பகுதியின் ஆதிக்க தலைமைக்கு போட்டி என்று வரும்போது, கோவிலில் யாருக்கு முதல் மரியாதை என்ற சாக்கில், பல தலைகள் உருளும்! பட்டணத்தில் சட்டம் ஒழுங்கு இருந்தது, சந்திரலேகா என்ற அய் ஏ எஸ் அதிகாரி மீது ஆசிட் வீச மும்பை சுர்லா வரும் வரை!

    இப்போதுநாடு முழுவதும் காசுவாங்கி கொண்டு கலவரம் செய்யவும், தேவைப்பட்டால் தலையெடுக்கவும் வடமானில வீரர்கள் ரெடி! சேலம் ஆடிட்டர் கொலை வழக்கிலிருந்து திருச்சி பிரமுகர் கொலை வரை எல்லாமே மூடு மந்திரமாக உள்ளது ! போலிசு துறையோ அம்மாவின் காலடியில்! அம்மாவுக்கு எல்லாம் தெரியும் என்று தோட்டகலை சொன்னது சரியே! மக்கள் என்ன செய்வார்கள் !

  23. சமுக பொருளாதார அடிப்படையில் ஆய்வு செய்தால் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் எல்லா பிற்பட்ட சாதியிலுமே உள்ளார்கள். உண்மையில் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் போய் சேரவேண்டும் எனில் அந்த பலன்களை பெற்றவர்களே மீண்டும் அந்த பலனை பெராதவகையில் சட்டங்கள் மாற்றி அமைக்கப்படவேண்டும்.ஆணவ படுகொலைகளை செய்பவருக்கும் அவர் சார்ந்த குடும்ப உறுபினருக்கும் இட ஒதுக்கீட்டினை முழுமையாக தடை செய்ய சட்டங்கள் நிறைவேற்றபட வேண்டும். இத்தகைய சட்ட திருத்தங்களை கோராமல் இட ஒதுகீடு தான் சாதியை ஒழிக்குமா என்ற கேள்வி உள்நோக்கம் கொண்டது மட்டும் அல்லாமல் பார்னியத்துக்கு துணைபோகும் செயல்.

Leave a Reply to SRINIVASAN பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க