privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விபொது நுழைவுத் தேர்வு : ஏழைக்கு எதற்கடா மருத்துவக் கனவு ?

பொது நுழைவுத் தேர்வு : ஏழைக்கு எதற்கடா மருத்துவக் கனவு ?

-

ரு வழக்கில் விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பே தீர்ப்பைக் கூறும் விந்தையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது, உச்சநீதி மன்றம். தரம், தகுதி என்ற மோசடியான வாதங்களுக்குப் பின்னே ஒளிந்துகொண்டும், தனியார் கல்வி முதலாளிகள் அடிக்கும் கொள்ளை குறித்து முதலைக் கண்ணீர் வடித்தும் “விசாரணைக்கு முன்பே தீர்ப்பு” என்ற இந்த முறைகேடைத் தமது கட்டளையில் புகுத்தியுள்ளனர்,உச்சநீதி மன்ற நீதிபதிகள்.

நீதிபதி அனில் ஆர்.தவே
பொது நுழைவுத் தேர்வு குறித்த மறுசீராய்வு மனுவை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் முன்பாகவே, அத்தேர்வை உடனடியாக இந்த ஆண்டு தொடங்கியே நடத்துமாறு முறைகேடாக உத்தரவிட்ட அரசியல் சாசன அமர்வின் தலைமை நீதிபதி அனில் ஆர்.தவே

பொது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (National Eligibility cum Entrance Test) நடத்தும் அறிவிக்கையை கடந்த 2010-ஆம் ஆண்டில் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசு கூட்டணி அரசு வெளியிட்டது. இதற்கு எதிராகத் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட சில மாநில அரசுகளும், வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட சிறுபான்மை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் வழக்கு தொடுத்தன. அப்பொழுது இவ்வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, “மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நாடெங்கும் ஒரே மாதிரியான தேர்வை நடத்துவது மாநில அரசுகளின் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையில் தலையிடுவதாகும்; இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு இத்தேர்வை நடத்துவதற்கான அதிகாரம் கிடையாது” எனப் பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பளித்து, மைய அரசின் அறிவிக்கைக்குத் தடைவிதித்தது. நீதிபதிகள் அல்தாமஸ் கபீரும், விக்கிரமஜித் சென்னும் நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும்; நீதிபதி அனில் ஆர்.தவே இத்தேர்வை ஆதரித்தும் தீர்ப்புக் கூறியிருந்தனர்.

தேர்வைத் தடை செய்த பெரும்பான்மை தீர்ப்புக்கு எதிராக காங்கிரசு கூட்டணி அரசு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனுவைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு, ஆந்திர மாநில அரசுகள் விடுத்த கோரிக்கையை காங்கிரசு கூட்டணி அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குப் பின் வந்த பா.ஜ.க. கூட்டணி அரசும் அம்மனுவைத் திரும்பப் பெறவில்லை. தகுதித் தேர்வுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த அனில் ஆர்.தவே தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்விடம் இச்சீராய்வு மனு பரிசீலனைக்கு வைக்கப்பட, அவ்வமர்வு இம்மனுவை விசாரணைக்கு அனுமதித்த கையோடு, தகுதித் தேர்வுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து, தகுதித் தேர்வை நடத்தும் அனுமதியையும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு வழங்கி உத்தரவிட்டது.

உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர்
நாடெங்கும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை நடத்துவது மாநில அரசுகள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையைப் பறிப்பதாகும் எனக் குறிப்பிட்டு, தேசிய தகுதி-நுழைவுத் தேர்வுக்குத் தடை விதித்த உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர்

இந்த ஆண்டு தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்தும் வாய்ப்பில்லை எனத் தமிழக ஆட்சியாளர்கள் நொண்டிச் சமாதானம் கூறிக் கொண்டிருந்த வேளையில், சங்கல்பம் என்ற தன்னார்வ அமைப்பு, “நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகும் மைய அரசு அத்தேர்வை நடத்தாமல் மெத்தனம் காட்டுவதாக”க் கொளுத்திப் போட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவையும், நுழைவுத் தேர்வு உத்தரவுக்கு எதிராகத் தமிழ்நாடு, உ.பி., தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல்லூரி சங்கமும் தாக்கல் செய்த மனுக்களையும் விசாரித்த உச்சநீதி மன்றம், நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே இரண்டு கட்டங்களாக நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

எந்த வழக்கிலும் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால், அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு அந்த விசாரணையின் முடிவில்தான் தீர்ப்பு வழங்குவது நீதியான, சட்டரீதியான நடைமுறை. ஆனால், இந்த வழக்கில் மறுஆய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கையோடு, நுழைவுத் தேர்வை ரத்து செய்தது தவறு, நுழைவுத் தேர்வு தொடர வேண்டும் என உத்தரவிட்டுவிட்டு, வழக்கை பிறகு விசாரிக்கிறோம் எனக் கூறியிருப்பது வலிந்து திணிக்கப்பட்டுள்ள முறைகேடு, கயமைத்தனம்.

“தகுதி மற்றும் நுழைவுத் தேர்வைத் தடை செய்து வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்பு அவசரகதியில் வழங்கப்பட்ட தீர்ப்பு” என விமர்சித்துள்ள அரசியல் சாசன அமர்வு, விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே தகுதித் தேர்வை நடத்துவதற்கு அனுமதி அளித்ததற்கான காரணத்தைக் கூற மறுத்துவிட்டது. காரணமே கூறாமல் ஜெயாவிற்குப் பிணை வழங்கியதைப் போல, காரணமே கூறாமல் தகுதித் தேர்வுக்கு அனுமதி வழங்கி கட்டப் பஞ்சாயத்தைச் செய்திருக்கிறது, உச்சநீதி மன்றம். ஆதிக்க சாதி, மேல்தட்டு நலன் சார்ந்த வழக்குகளில் உச்சநீதி மன்றம் சட்டரீதியான நடைமுறைகளைக் கடாசிவிட்டு, கட்டப் பஞ்சாயத்து செய்து வருவதற்கு இந்த வழக்கு இன்னுமொரு உதாரணம்.

* * *

நீதிபதிகள் அல்தாமஸ் கபீரும் விக்கிரமஜித் சென்னும் பொது நுழைவுத் தேர்வைத் தடை செய்து வழங்கிய பெரும்பான்மை தீர்ப்பில், “சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளுவதற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சாசன உரிமையைத் தகுதித் தேர்வு ரத்து செய்துவிடும்” என வாதிட்டபொழுது, “தகுதித் தேர்வு மருத்துவக் கல்விக்கு மாணவர்களைச் சேர்ப்பதில் காணப்படும் ஊழலை ஒழிக்கும்” என நீதிபதி அனில் ஆர்.தவே தனது சிறுபான்மை தீர்ப்பில் கூறியிருந்தார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தேசியத் தகுதி–நுழைவுத் தேர்வை நடத்த அனுமதித்த உச்சநீதி மன்ற உத்தரவைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தினர் புதுச்சேரியில் நடத்திய ஆர்ப்பாட்டம்

“பொது நுழைவுத் தேர்வு கவர்ச்சிகரமானது என்றாலும், அது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இடையே காணப்படும் பிளவை, தகுதி என்ற பெயரில் மேலும் ஆழப்படுத்தும்” என அல்தாமஸ் கபீர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டபொழுது, “சாதி, மதம், இனம், பாலினம், சமூக ஏற்றத்தாழ்வுகள் என எந்தவொரு சலுகைக்கும் இடம் கொடுக்காமல், தகுதியான மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார், அனில் ஆர்.தவே.

தகுதித் தேர்வு குறித்த முந்தைய வழக்கில் நீதிபதி அனில் ஆர்.தவே தனது சிறுபான்மை தீர்ப்பில் கூறியிருந்த கருத்துக்களை, அவர் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக ஏற்றுக் கொண்டு, தகுதித் தேர்வு நடத்துவதற்கு அனுமதி அளித்துவிட்டு, இச்சீராய்வு மனுவை உச்சநீதி மன்றத்தின் வேறொரு அமர்வு விசாரித்து இறுதித் தீர்ப்பை வழங்கும் எனக் கூறியிருக்கிறது. இது, “மாப்பிள்ள அவருதான், ஆனா, சட்ட என்னுது” என்ற நகைச்சுவையைத்தான் நினைவுபடுத்துகிறது.

“மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இனி ஏகப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது. மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இனி தகுதியும் திறமையும் மட்டும்தான் அளவுகோலாக இருக்கும்” என்ற நியாய வாதங்களை முன்வைத்து இத்தீர்ப்புக்குப் பட்டுக்குஞ்சம் கட்டப்படுகிறது.

இட ஒதுக்கீடு காரணமாகத்தான் தகுதி, திறமை வாய்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர முடியவில்லை என்ற காரணத்தைக் கூறி, அக்கல்வியில் தனியார்மயம் புகுத்தப்பட்டதை ஆதரித்த பார்ப்பன-ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த நகர்ப்புற நடுத்தர வர்க்கக் கும்பல், இப்பொழுது கட்டணக் கொள்ளை என்ற தீமையை ஒழிக்கப் பொது நுழைவுத் தேர்வு என்ற இன்னொரு தீமையைச் சமூகத்தின் மேல் திணிக்கிறது. வியாபம் ஊழல் சந்தி சிரித்த பிறகும், பொது நுழைவுத் தேர்வு மருத்துவக் கல்வியில் காணப்படும் ஊழலை, கொள்ளையை ஒழித்துவிடும் எனப் பேசுவபவர்கள் ஒன்று, கற்பனையில் மிதக்கும் கேணையர்களாக இருக்க வேண்டும்; இல்லையென்றால், மோசடிப் பேர்வழிகளாகத்தான் இருக்க முடியும்.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேதான் தேசாய்
தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிப்பதற்குக் கோடிக்கணக்கில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேதான் தேசாய்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஊழலும் கொள்ளையும் தலைவிரித்தாடுவதற்கு இந்திய மருத்துவ கவுன்சில்தான் காரணம் எனக் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, இப்பிரச்சினையை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக் குழு. சில ஆண்டுகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த கேதான் தேசாய் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம், இந்திய மருத்துவக் கவுன்சில் என்பது ஊழல் பேர்வழிகளின் கூடாரம் என்பதை அம்பலப்படுத்திக் காட்டியது. இந்நிலையில் தேசிய தகுதி-பொது நுழைவுத் தேர்வை நடத்தும் பொறுப்பை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் உச்சநீதி மன்றம் ஒப்படைத்திருப்பது திருடன் கையில் பெட்டிச் சாவியைக் கொடுத்திருப்பதற்கு ஒப்பானது.

* * *

மிழகம் உள்ளிட்டு மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள் மைய அரசுக்கு ஒதுக்கப்பட்டு, அந்த இடங்கள் மத்திய பள்ளிக் கல்வி வாரியம் நடத்திவரும் பொதுநுழைவுத் தேர்வு மூலம் இட ஒதுக்கீடு இன்றி நிரப்பப்படும் நடைமுறை ஏற்கெனவே இருந்து வருகிறது. இப்பொழுது உச்சநீதி மன்றம் அனுமதித்திருக்கும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மருத்துவ கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்களையும் மத்திய அரசு அபகரித்துக் கொள்ளும்.

இதனாலும், பொது நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி இந்தி, ஆங்கில மொழிகளில் நடத்தப்படுவதாலும் தமிழக மாணவர்களுக்குத் தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது இனி குதிரைக் கொம்புதான். தமிழகத்திலுள்ள ரயில்வே உள்ளிட்ட மைய அரசு அலுவலங்களில் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் திணிக்கப்படுவதைப் போன்ற நிலை தமிழக மருத்துவக் கல்லூரிகளிலும் ஏற்படும். ரயில்வே ரிசர்வேஷன் கவுண்டர்களில் இந்தி தெரியாத பயணிகள் திண்டாடுவதைப் போல், இந்தி தெரியாத நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் திண்டாடும் நிலைமையும் உருவாகக்கூடும்.

இது மட்டுமின்றி, தமிழ் அல்லது தாய்மொழி வழியில் மாநிலப் பாடத் திட்டங்களைப் பயிலும் ஏழை, கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு இருந்துவந்த கொஞ்சநெஞ்ச வாய்ப்பும் முற்றிலுமாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் தனியார் கல்வி மோகத்தில் ஏற்கெனவே சிக்கிக் கொண்டுள்ள பெற்றோர்கள், மாணவர்களிடம் தாய்மொழி வழிக் கல்வி, மாநிலப் பாடத் திட்டம் ஆகியவையெல்லாம் இனி கதைக்கு உதவாது என்ற நஞ்சை உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு இன்னும் ஆழமாகப் பாய்ச்சுகிறது.

neet-politics-5தமிழக அரசின் விதிகளின்படி இளங்கலை பொது மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு முற்பட்ட, பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களும்; மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களும்; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்களையும் பிளஸ் டூ தேர்வில் எடுத்திருக்க வேண்டும். பொது நுழைவுத் தேர்வு நடைமுறைக்கு வரும்பொழுது இந்த விதி செல்லாக்காசாகிவிடும்.

உச்சநீதி மன்றம் அனுமதித்திருக்கும் பொதுநுழைவுத் தேர்வை எழுதுவதற்கு இக்குறைந்தபட்ச மதிப்பெண்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 65 சதவீதம் என்றும்; மற்றவர்களுக்கு 75 சதவீதம் என்றும் அதிகரித்து நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பெண்கள்கூட பொது நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க மட்டும்தான். மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தர வரிசை நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான குறுக்குவழியில் நுழைவுத் தேர்வை முழுமையான தகுதித் தேர்வாக மாற்றிவிட்டது, உச்சநீதி மன்றம்.

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டபொழுது, மாணவர்களைத் தரவரிசைப்படுத்துவதற்கு நுழைவுத் தேர்வு மதிப்பெண்களோடு, பிளஸ் டூவில் அவர்கள் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. 2007-ஆம் ஆண்டு தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு, பிளஸ் டூவில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. மத்தியப் பள்ளிக் கல்வி வாரியத்தால் தற்பொழுது நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வில் பிளஸ் டூ மதிப்பெண்களுக்கு 40 சதவீத வெயிட்டேஜ் கொடுக்கப்படுகிறது.

இந்த நடைமுறையை முற்றாகக் கைகழுவிவிட்டதன் மூலம், பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ படிப்பை இரண்டாம்பட்சமாக மாற்றி, பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்குத் தனியார் பயிற்சிப் பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் வகுப்புகளை முதல் இடத்திற்குக் கொண்டுவந்துவிட்டது, உச்சநீதி மன்றம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் கொள்ளையைத் தடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு பொது நுழைவுத் தேர்வைத் திணிக்கும் உச்சநீதி மன்றம், அதன் வழியே தனியார் பயிற்சிப் பள்ளிகளின் கொள்ளையைத் தேசியமயமாக்கியிருக்கிறது.

சமச்சீர் கல்வியால்தான் தமிழகப் பள்ளிக் கல்வியின் தரமே பாழ்பட்டுவிட்டதாக வீண்பழிபோட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளி முதலாளிகள், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு மாறுவதன் மூலம் அல்லது மருத்துவக் கல்வி தகுதித் தேர்வுக்கு ஏற்ப நாங்கள் எக்ஸ்ட்ரா பாடங்களை நடத்துகிறோம் என்ற பெயரில் கட்டணக் கொள்ளையை அதிகப்படுத்தத் துணிவார்கள். மருத்துவக் கல்வி மயக்கத்தில் கிடக்கும் நகர்ப்புற நடுத்தர வர்க்கப் பெற்றோர் இந்த வலையில் சிக்க வைக்கப்படுவார்கள். உச்சநீதி மன்றம் அனுமதித்துள்ள தகுதித் தேர்வு இப்படி புதுப்புது வழிகளில் தனியார் பள்ளி முதலாளிகளும், தனியார் பயிற்சிப் பள்ளிகளும் கொள்ளையடிப்பதற்கான வாசல்களைத் திறந்துவிடுமே தவிர, கட்டணக் கொள்ளையை ஒழிப்பதற்குப் பயன்படப் போவதில்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மருத்துவக் கல்வியிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. மேலும், முசுலீம்களுக்கு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் இட ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இச்சமூக உரிமையெல்லாம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இட ஒதுக்கீடை உடனடியாகக் கைவிட ஆளுங்கும்பல் தயாராக இல்லையென்றாலும், பத்தாயிரக்கணக்கில் பணத்தைக் கட்டி ஆங்கில வழிப் பள்ளிகளிலும், தனியார் பயிற்சிப் பள்ளிகளிலும் படித்தால்தான் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நிலை, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடைப் பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்கும் சலுகையாக மாற்றிவிடும்.

தனியார்மயம்-தாராளமயத்திற்குப் பிறகு மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒவ்வொன்றாகப் பறித்து, அவற்றை முனிசிபாலிட்டி ஆபீசைப் போல மாற்றும் சதித் திட்டத்தைப் படிப்படியாக அரங்கேற்றி வருகிறது, மைய அரசு. மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பறித்து, நாடெங்கும் ஒரேமாதிரியான பொது சரக்கு சேவை வரியைக் கொண்டுவருவது, மாநில அரசுகளின் மோட்டார் வாகனச் சட்டம், சாலை வரிச் சட்டங்களைப் பறித்து ஓட்டுநர் உரிமம் வழங்குதை மையப்படுத்துவது என்ற வரிசையில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை உரிமையும் மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது.

உயர் கல்வித் திட்டத்திலும், மாணவர் சேர்க்கையிலும் மூக்கை நுழைப்பதன் பின்னே, இட ஒதுக்கீடு, மாநில அரசுகளின் பாடத் திட்டங்கள் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கமும் மறைந்திருக்கிறது. எம்.பி.,பி.எஸ்., மாணவர் சேர்க்கையில் இதுகாறும் நடைமுறையில் இருந்து வந்த அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகள், சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகளில் ஏற்கெனவே இட ஒதுக்கீடு ஒழித்துக் கட்டப்பட்டிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மாநில அரசுகளின் உரிமை பறிப்பு, மாநில பாடத் திட்டங்கள் ஒழிப்பு, இட ஒதுக்கீடு ஒழிப்பு இவற்றின் வழியாக “ஏக இந்தியா” என்ற தனது பார்ப்பன-பாசிச நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ள முனைகிறது, காங்கிரசு, பா.ஜ.க. பின்னுள்ள ஆளுங்கும்பல். தரம், தகுதி, கட்டணக் கொள்ளையைத் தடுப்பது என்ற மயக்கு வார்த்தைகளைக் காட்டி அறிமுகப்படுத்தப்படும் தேசிய தகுதி-நுழைவுத் தேர்வின் பின்னே மறைந்துள்ள தீய நோக்கங்கள் இவைதான்.

– திப்பு
___________________________
புதிய ஜனநாயகம், மே 2016
___________________________

  1. CET will bring a sub ranking for TN and as per the available scheme of reservations, seats will be distributed to TN Candidates. As the medical colleges get approval for more medical seats in TN only on the basis of doctors per population. Hence no one in Tamilnadu could fear about losing medical seats to others like AP which are having a better education standard. In TN, in the name of “Samacheer Kalvi: students have been deprived of good education and they could not contest in any All India level examination.
    If CET is allowed , more medical seats 1500-2000 may be available for counseling and poor and middle class who aspire to become a doctor could get more opportunity of getting a medical seat as alongwith 2000 seats offered by govt colleges, private colleges also must surrender seats around 1000-1500 for counseling. Politicians oppose it as they get 1-2 free seats in every private medical colleges and they could offer them to party cadre. Moreover these private medical colleges offer huge donation to political parties during the time of election and in other period also. Hence attention is diverted in this issue. Dont publish articles like above. You have quoted that the interests of minority institutions are affected by that decision. But in reputed colleges like CMC vellore , Churches decide the entry of students for Graduate and post graduate medical education . Entrance examination by private colleges are mere eye wash. Please understand this

  2. தகுதி கெட்ட வார்த்தை ஆகி விட்டது இது மருத்துவ துறையில் தரவீழ்ச்சியை ஏற்படுத்தும்

  3. பொதுவாக நுழைவுத்தேர்வைப் பற்றி விவாதிப்பவர்கள் ’தெரிந்தே’ தவற விடுகின்ற ஒரு அம்சத்தை நீங்களும் தெரியாமல் தவறவிடுகிறீர்கள் என சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.அந்த அம்சம் இது நாள் வரை சரிபாதி இடங்களை மட்டும் மாநில அரசுக்கான இடங்களாக தந்து விட்டு மீதியுள்ள 50% இடங்களை 50லட்சம் முதல் 1கோடி வரை விலை நிர்ணயித்து கொள்ளை அடித்த தனியார் மருத்துவ கல்லூரிகளின் அடாவடியாகும்.இந்த தனியார் கல்லூரிகளை பல்வேறு மாநிலங்களில் அரசியல்வாதிகள், சாமியார்கள், பெரும் பணமுதலைகள் நடத்திவருவன.தமிழகத்தைப் பொறுத்தவரை பச்சமுத்துவின் எஸ் ஆர் எம்,உடையார் குடும்பத்தின் ராமச்சந்திரா,கற்பகவிநாயகர்,வினாயகா மிஷன்,ஆதிபராசக்தி என 30க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவ மற்றும் பல்மருத்துவ கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில் தமிழ்நாடு அரசின் பங்காக 50 சதவிகித இடங்களையும் தராமல் முழுமையாக லவட்டிக் கொள்ளும் ’தனியுரிமையை’ ராமச்சந்திரா,எஸ் ஆர் எம்,அண்ணாமலை பல்கலை (தற்போது தமிழக அரசின் நிர்வாகத்தில்)சட்டத்தின் சந்து பொந்துகளின் வழியே அடைந்திருக்கின்றன. இதனையெல்லாம் தான் இந்த நுழைவுத்தேர்வு முறையிலான தேர்வு முறை கட்டுப்படுத்த போகிறது.மாநில உரிமைகளில் தலையிடும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு காட்டுகின்ற அதே வேளையில் தனியார் கல்லூரிகளின் சேர்க்கை அதிகாரத்தை வரம்பிடுகின்ற இந்த வாய்ப்பை வரவேற்கவும் வேண்டியுள்ளது.அதே சமயம் தற்காலத்தில் சில பெயர்பலகை அமைப்புகள் திடீரென சமூக ஆர்வம் பெருக்கெடுத்து பொது நல வழக்குகளை தொடுப்பதும் அதை உடனே விசாரணைக்கு எடுத்து நீதிபதிகள் அதிரடி உத்தரவுகளை பிறப்பிப்பதும் சாதாரணமாகி வருகிறது.பெருத்த ஆரவாரமும்,அதிரடி உத்தரவுகளுக்குமான புயலுக்கு பின்னே ஏற்படும் அமைதி ஏன் என்று தெரியாமல் அப்பாவி பொதுஜனம் விழிப்பதும் தொடர்கிறது.ஆக இங்கும் ஒரு அமைதி வரக்கூடும்.இப்போதும் ஊடகங்கள் விவாதிக்கிற இந்த பிரச்சினையில் தனியார் கல்லூரிகளின் பாத்திரம் இடம்பெறுவதில்லை என்பதை கவனிக்க தவறவேண்டாம்

    இன்னொரு கோணத்திலும் இந்த பிரச்சினையை பார்க்க வேண்டியுள்ளது.தமிழக அரசு மதிப்பெண்கள் அடிப்படையில் ஒற்றைச்சாளர முறையில் இடங்களை வழங்குவது ஒரு வெளிப்படைத்தன்மை உள்ள ஏற்பாடு என்கிற அளவில் சரியானதே.ஆனாலும் அந்த வகையில் இடங்களை யார் அடைவது என்பதை அறிவதற்கு சில புள்ளிவிபரங்களை சில தனிநபர்கள் இயக்கங்கள் வெளியிட்டு வருகின்றனர்.அதன்படி கோழிப்பண்ணை பள்ளிகளான நாமக்கல், ராசிபுரம், ஊத்தங்கரை போன்ற ஊர்களில் இயங்கும் பள்ளிகளின் மாணவர்களே அந்த இடங்களில் பெரும்பகுதியை ஆக்ரமிக்கிறார்கள்.அந்த பள்ளிகளின் பயிற்சி முறை கண்டுள்ள வெற்றி என்று இதனை குறுக்கி பார்க்க முடியாதபடி அவர்களின் பள்ளிகளில் தேர்வுகளில் முறைகேட்டிலும் ஈடுபடுகின்றனர் என்பது கடந்த வருடம் வாட்ஸ்-அப் முறையில் நடந்த சம்பவம் வெளிக்காட்டியது. இப்போதும் ஊரைவிட்டு தள்ளி ஒதுக்குபுறமாக அமைந்த அந்த பள்ளிகளில் தேர்வு அறையிலேயெ ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான விடைகள் பகிரப்படுவதாகவும் ஊடக விவாதங்களில் வெளிப்படையாக குற்றம் சாட்டுகின்றனர். அதை மறுப்பார் இல்லை.எனவே தேர்வு முறைகளில் முறைகேட்டில் ஈடுபடக்கூடிய பள்ளி மாணவர்களே மதிப்பெண் முறையில் இடம் பிடிக்க முடிகின்றது. நியாயமாக வெறித்தனமாக படித்து மதிப்பெண் எடுக்க முடிந்த வெகு சில மாணவர்களும் ஒரளவு செல்ல வழியிருக்கின்றது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்றாலும் அது சொற்பமே.
    ஆக எல்லா வழிகளும் சாமானியர்களுக்கு அடைக்கப்பட்டே இருக்கிறது என்பதே உண்மை.

  4. நான் கொடுத்த முதல் பின்னூட்டத்தை ஏன் வெளியிடவில்லை? இது தான் வினவு கருத்து சுதந்திரத்தை மதிக்கிற லட்சணமா?

    “சமச்சீர் கல்வி திட்டம் சிறப்பானது என வாதிடும் வினவு கும்பலுக்கு இரண்டு கேள்விகள்.
    1) புதுச்சேரி அரசு பள்ளிகளில் இவ்வளவு காலம் தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வி வாரியத்தின் பாடத்திட்டம் (Tஅமில் ணடு ஸ்டடெ Bஒஅர்ட் ஸ்ய்ல்லபுச்) தான் பின்பற்றப்பட்டது. இந்த சமச்சீர் கல்வி திட்டம் என்னும் கூத்து வந்தவுடன் புதுச்சேரி அரசானது தனது பள்ளிகளில் சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தை படிப்படியாக புகுத்தி வருகிறது. அப்படியானால் புதுச்சேரி அரசாங்கத்தினர் முட்டாள்களா? அவர்களும் அங்கிருக்கும் கல்வியாளர்களை கலந்து ஆலோசித்து தானே இந்த முடிவை எடுத்து இருப்பார்கள். தமிழக அரசு பள்ளிகளில் இருப்பதை விட புதுவை அரசு பள்ளிகளில் கல்வித்தரம் அதிகம் என அங்கு உள்ளவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். அங்கு அரசு பள்ளியில் படிப்பதற்கும் தனியார் பள்ளியில் படிப்பதற்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லை என அவர்கள் கூறுவதுண்டு. அரசு பள்ளிகளும் தரமானவை என அவர்கள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட புதுவை அரசு பள்ளிகளில் இப்போது சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் படிப்படியாக புகுத்தப்பட்டு வருகிறது. இப்படி போனால், எதிர்காலத்தில் புதுவை மாணவர்களுக்கு தமிழ் உணர்வையும் சமூக நீதி சார்ந்த சிந்தனையையும் எங்ஙனம் ஏற்படுத்த முடியும்?
    2) சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் ஏதோ மேட்டுக்குடியினரின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளின் பாடத்திட்டம் என வாதிடப்பட்டு வருகிறது. தில்லியில், ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளில் (Cஒர்பொரடிஒன் ஸ்ச்கோல்ச்) சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் தான் பின்பற்றப்படுகிறது. ஆனால் பயிற்று மொழியாக இந்தி உள்ளது. பாடப்புத்தகங்களும் இந்தியில் தான் உள்ளன. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
    இந்திய அரசியல் சட்டப்படி மத்திய அரசு தான் அதிக அதிகாரங்களை கொண்டுள்ளது. மாநில அரசுக்கு குறைவான அதிகாரங்கள் தான் உள்ளன. கல்வி என்பது மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகிய இரண்டின் அதிகாரங்களுக்கு கீழ் உள்ள ஒரு துறை. அதாவது Cஒன்சுர்ரென்ட் ளிச்ட் எனப்படும் பொதுப்பட்டியலில் கல்வி வருகிறது (வருகிறது என சொல்வதை விட மாநில அரசு அதிகாரத்தின் கீழ் மட்டும் இருந்த கல்வி, அவசர நிலை காலத்தில், பொதுப்பட்டியலுக்கு கொண்டு போகப்பட்டது என சொல்வது தான் சரி). ஆகையால் கல்வி சார்ந்த விடயங்களில், பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், மத்திய அரசோடு மாநில அரசுகள் ஒத்துப்போய் தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசை தனக்கு ஏற்றவாறு இணங்கச்செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அரசியல் ரீதியில் நெருக்கடி கொடுத்து கல்வி என்னும் துறையை பொதுப்பட்டியலில் இருந்து மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இவற்றில் எதையும் செய்யாமல் நான் பாட்டுக்கு எதை வேண்டுமானாலும் செய்வேன் (அது சரியாகவே இருந்தாலும்) என நடந்தால் தமிழக மாணவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே அனைத்திந்திய அளவில், மத்திய அரசு அல்லது தனியார் துறை சார்ந்த உயர்கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வுகள் ஆகியவற்றில் தமிழக மாணவர்கள், மற்ற மாநில மாணவர்களை காட்டிலும், பின் தங்கி இருக்கிறார்கள். மத்திய அரசு உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் மாநில அரசு உயர் கல்வி நிலையங்களை காட்டிலும் கல்வியின் தரம் அதிகம். கட்டணமும் ஒப்பீட்டளவில் குறைவு. உள்கட்டமைப்பு வசதிகளும் அதிகம். கல்வி உதவித்தொகை கிட்டுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம். இவற்றில் படித்தவர்களுக்கு ஒப்பீட்டளவில் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை உண்டு. ஆனால் தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசின் நிறுவனங்களிலேயே, உயர்கல்வியாக இருந்தாலும் வேலைவாய்ப்பாக இருந்தாலும், தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதற்கு மாநில அரசின் கல்வி சார்ந்த கொள்கைகளே பெருமளவுக்கு காரணம்.
    இந்த சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு கருணாநிதியின் குடும்ப சுயநலம் தான் காரணம் என கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் சங்கிலித்தொடராக சர்வதேச பள்ளிகளை (ஈன்டெர்னடிஒனல் ஸ்ச்கோல்ச்) திறந்து கல்லா கட்ட மாறன் சகோதரர்கள் எண்ணி இருந்தார்களாம். அதற்கு ஏற்றாற்போல் மற்ற தனியார் பள்ளிகளை ஒழிக்க அவை பின்பற்றும் மெட்ரிகுலேசன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டங்கள் ஒழிக்கப்பட்டு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் என்னும் ஒன்று திணிக்கப்பட்டதாம். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.”

    • சிபிஎஸ்சி யை ஒப்புகொண்டால் எப்படியாவது அதில் ஹிந்தி நுழைந்துவிடும். அப்போ திராவிட கட்சிகளின் (கன்றாவி) கொள்கைகள் பாதிக்கப்படும், மேலும் பார்ப்பனிய பனியா பாசிச போன்ற வசவு சொற்கள் இங்கே அதிகம் விவாதிக்கப்படும்.

      எதிர்ப்பு காட்டுவோர் குழந்தைகள் எந்த பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ?

  5. சிபிஎஸ்சி யை தமிழ்நாடு ஒப்புக்கொள்ள வேண்டும் என நான் சொல்லவில்லை (அது தேசியம் என்னும் பெயரில் வட இந்திய ஆதிக்கத்துக்கு முழுமையாக வழிவகுத்து விடும்). சிபிஎஸ்சியின் தரத்துக்கு இணையாக நமது மாநிலத்தின் பள்ளி பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர்களை நியமிப்பதில் தரக்கட்டுப்பாடுகளை கடுமையாக கடை பிடிக்க வேண்டும் (அப்போது தான் திறமையான அர்ப்பணிப்பு கொண்ட ஆசிரியர்கள் கிடைப்பார்கள்). ஆந்திராவில் அப்படி தான் செய்து உள்ளார்கள். அதனால் தான் ஐ.ஐ.டி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களிலும் மத்திய அலுவலகங்களிலும் தெலுங்கு பின்னணி கொண்டவர்கள் அதிகம். நமது அண்ணா பல்கலைக்கழகம் சர்வதேச தரவரிசையில் முதல் இருநூறு இடங்களுக்குள் வந்திருந்தால் கூட நாம் ஐ.ஐ.டிக்களை மதிக்க தேவையில்லை. ஏனெனில் ஆகா ஓகோ என புகழப்படுகிற ஐ.ஐ.டி க்கள் சர்வதேச தர வரிசை பட்டியலில் இருநூறு இடங்களுக்கு அப்புறம் தான் உள்ளன.
    தனியார் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதை விட அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதை தான் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் விரும்புகிறார்கள். ஏனெனில் இங்கு தான் கட்டணம் குறைவு. தகுதியான ஆசிரியர்களும் உள்ளனர். பொறியியல் கல்லூரிகள் விடயத்திலும் அப்படியே. ஆனால் தமிழக அரசு நடத்தும் அதுவும் இலவச கல்வி கொடுக்கும் அரசு பள்ளிகள் குறித்து ஏன் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நல்ல எண்ணம் இல்லை?. லட்சலட்சமாக கொட்டிக்கொடுத்து தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை ஏன் சேர்க்கிறார்கள்?. இன்னொரு பக்கம் மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள், சைனிக் பள்ளிகள் (இன்னும் சொல்லப்போனால் நவோதயா பள்ளிகளில் கூட) ஆகியவற்றில் சேர்வதற்கு ஏன் மாணவர்களும் பெற்றோர்களும் ஆளாய்ப்பறக்கிறார்கள்? தமிழக அரசு நடத்தும் (அதுவும் இலவசமாக கல்வியை கொடுத்தும்) அரசு பள்ளிகள் குறித்து ஏன் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நல்ல எண்ணம் இல்லை?.
    தமிழகத்தில் மருத்துவ மற்றும் பொறியியல் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்ட காலகட்டத்தில் நிறைய அரசு பள்ளி மாணவர்கள் இடம் பிடித்தார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஆகையால் முன்பை போல் மாநில அளவில் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு பள்ளி இறுதி ஆண்டு மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். நுழைவு தேர்வு என்பது இன்றிமையாத தீமை.

  6. வேலியே பயிரை மேய்வது முதல்முறையல்ல! அங்கிங்கெனாதபடி எங்கும் ஆர் எஸ் எஸ் பயம்! மேலும்நிறைய கவர்னர் பதவிகள் காத்திருக்கின்றனவே! அயோத்தி தீர்ப்பு முதல், தில்லை கொவில் தீர்ப்பு, திருபவனந்தபுரம் கொவில் வழக்கு கிடப்பு இன்னும் பல உதாரணஙள் , கடைசியில் ஊழல் மகாராணியார் வழக்கும் உண்டே!

    • \\அங்கிங்கெனாதபடி எங்கும் ஆர் எஸ் எஸ் பயம் // ஆஹா என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு

  7. கண்ணை மூடிக்கொண்டிருப்பவருக்கு அது “கண்டுபிடிப்பு” தான்! கண்ணை திறந்து பார்க்க முடிந்தவருக்கு “உள்ளங்கைநெல்லிக்கனி” ! வினோத “தீர்ப்பு” எழுதிய நீதிபதிகள், பதவி ஓய்வு பெற்றதும் சென்ற இடம் எது? அயொத்தி வழக்கின்தீர்ப்பு, சிதம்பரம் கோவில் வழக்கின்தீர்ப்பு,அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கின்தீர்ப்பு, இன்னும் மருத்துவ கல்லூரிநுழைவு தேர்வு இருதி தீர்ப்பும் பட்டியலில் சேரக்கூடும்!

    எல்லாவற்றுக்கும் மேலாக அம்மா சொத்து குவிப்பு வழக்கும், சங்கரராமன் கொலையுண்ட வழக்கும் மணிமகுடம்!

    ஒரு வேளை “அம்பேத்கரின் அர்சியல் சட்டம்” புறந்தள்ளப்பட்டு மனுனீதி சட்டம் , ராணுவ ஆட்சி போல செயல் படுத்தபடுகிறதோ என்ற அய்யம் எழுகிறது!

    • I Completely agree by the comments published by selambananramasamy. Instead of discussing the merits and demerits of NEET you continue to publish irrelevant comments like \\அயொத்தி வழக்கின்தீர்ப்பு, சிதம்பரம் கோவில் வழக்கின்தீர்ப்பு,அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கின்தீர்ப்பு….,// These cases are filed and counter filed only in the rule of KHANCROSS AND DRAVIDIAN PARTIES. where BJP or RSS came here? why you all people forget Raja’s 2G,BSNL SCAM etc.

  8. இப்போதைய மருத்துவ கல்லூரிநுழைவு தேர்வு முதல் , சீனுவாசன் குறிப்பிட்ட ராஜா வழக்கு வரை எல்லாம் ஆர் எஸ் எஸ் வகையறா திட்டமிட்டபடி தொடரப்பட்ட வழக்குகளே!நடுவில் சசி அன்ட் கோ வை கழட்டிவிட சொத்து குவிப்பு குற்றசாட்டை கையிலெடுக்க ,நீதி துறையின் போதாத காலம், அம்மாவையும் கவிழ்த்துவிட , உச்சநீதி மன்றமே இப்போது அரண்டு போயிருக்கிறது! சு சாமி உட்பட எல்லோரும் மவுனம் காக்கிரார்கள், ஒரு வேளை மரணித்தநீதி தேவனுக்கோ? போன்றோரால்

  9. Merits and De-merits of NEET? Already private Deemed Universities are having their own CET! Of course , they mint money , as expected when they are conferred “Deemed University” status by earlier BJP govt.

    Now under the pretext of curbing donation raj, Center is intervening in State aided medical institutions too! that is the De-merit! Vyapam scandal in BJP ruled states, shall enlighten us against this type of centralised corruption!

    The HURRY by which earlier SC-Bench’s interim order is reversed, raises everybody’s eyebrow!

    Having tasted blood from giving permissions to private medical colleges, now the regime wants control over All India Admissions too!

    • \\as expected when they are conferred “Deemed University” status by earlier BJP govt.// The state with the most Deemed universities is Tamil Nadu with 28 deemed universities. what initiative the Dravidian parties took to curb this? \\Center is intervening in State aided medical institutions too!// It is not the center but the Supreme Court Judgement, Moreover the center is fighting for the rights of several states including Tamil Nadu to exclude from NEET. \\Vyapam scandal in BJP ruled states, shall enlighten us against this type of centralised corruption!// Cases of irregularities in the VYAPAM tests had been reported since the mid-1990s, and the first FIR was filed in 2000, IT IS NOT NOW.

  10. அய்யா சீனுவாசன்! இது உங்களுக்கே அபத்தமா படவில்லை? தமிழ்னாட்டில் மட்டும் 28 சுயநிதி கல்லூரிகள் ஏற்பட வழிவகுத்து ,அனுமதியும் கொடுத்தது யார்? இங்கு இருப்பது ஒரே ஒரு திராவிடியன் கட்சி தானே? மற்றவை பார்பனியம் ஸ்தாபித்த போலிகள் தானே? அவர்கள் எப்படி தடை செய்வார்கள்? வற்றின் கட்டணகொள்ளையை தடுக்க கூட மானில அரசுக்கு உரிமையில்லை என “அவாள்” உத்தரவு ஆயிற்றே!

    பிள்ளையை கிள்ளிவிட்டு பின்னர் தொட்டிலை ஆட்டும் பாசாங்கு , பார்பனர்களுக்கு கைவந்த கலை ஆயிற்றே! சமீபத்திய “மஞ்சு விரட்டு” விவகாரம் போல கல்வி கொள்கையிலும் ஒரு பார்ப்பன செட் அப்பு தென்படுகிறதே!

    வியாபம் 1990 முதல்நடந்து கொண்டுள்ளது ! 2000த்தில் வழக்கு பதியப்பட்டும் இன்னும் குற்றவாளிகளைநெருங்க முடியவில்லை! தமிழ்னாட்டிலும் கடந்த 5 ஆண்டுகளாக அதே போன்ற ஊழல்கள்நடக்கின்றன! மானில அரசின் தேர்வுகளில் கேளித்தாள்கள் அவுட் ஆகியும் , தேர்வி ரத்து செய்யபட்டும் வரலாறு படைத்த தேர்வானைய தலைவர் ஓய்வுக்கு பின்னர் அரசின் மந்திரியாகிறார்!

    மத்தியிலும் வியாபம் ஓய்ந்து விடவில்லை, மீண்டும் புத்துயிர் தரும் முயற்சியே நடக்கிறது!

    350 கோடி புகழ் மருத்துவ செயலாளர் , அவர் மீதான வழக்கு ‘கிடப்பில்’ இருக்கும்போதே, குஜராத் மருத்துவ கழக தவராகவும், பின்னர் இந்திய மருத்துவ கழக தலைவராகவும், அத்ற்கும் பின்னர் அகில உலக மருத்துவ கழக தலைவராவதும் எப்ப்டி? ஆர் எஸ் எஸ் ஆதரவின்றி இவை சாத்தியமா? சும்மாவா சொன்னார்கள் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று!

    • \\இங்கு இருப்பது ஒரே ஒரு திராவிடியன் கட்சி தானே? மற்றவை பார்பனியம் ஸ்தாபித்த போலிகள் தானே?//அய்யா Ajathasathru! இது உங்களுக்கே அபத்தமா படவில்லை?இதை படிக்கும் மக்கள் வாயால் கூட சிரிக்க மாட்டாரகல்.

  11. உங்கள் தேர்தல் தில்லுமுல்லுகளை கண்டு மக்கள் அப்படித்தான் சிரிக்கிரார்கள்!

  12. எலெக்டிங்? சும்மா கிண்டல் பண்ணாதீங்க! இந்த ஆட்சி தேர்தல் ஆணையம் செலக்டிங் செய்தது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே! பார்ப்பன அதிகரத்தில் என்று நீதியுடன் ஆட்சிநடந்தது? தேர்தல்களும் விதிவிலக்கு அல்ல! எமெர்ஜெசி முறையில் தேர்தலை நடத்திய பிரவீண்குமார், ஆதாரங்களை அழிக்கும் அதிகாரிகள் ,நீதியை வளைக்கும்நியாயவான் இன்னும் எத்தனையோ பார்பன கொடுமைகள் அரங்கெற்றப்பட்டன , பட இருக்கின்றன!நடுனிலைகள் என்று சொல்லிகொண்டு பார்பன சதிக்கு துணை போகும் ஊடகங்கள் , வலைப்பதிவு பிரச்சாரங்கள் , இளைஙர்களை கவரும்மோகவலைகள் இன்னும் எத்தனையோ கொடுமகளையும் தாண்டி 40% வாக்குகளை எதிர்க்கட்சி பெற்றுள்ளதே ! பாராட்டுகள்!

  13. அதானியிடம் பல்லாயிரம் கோடிகள், அம்பானியிடமும் பல்லாயிரம் கோடிகள், அய் பி எல்லிலும் பல்லாயிரம் கோடிகள் , கங்கையில் போட்டது பல்லாயிரம் கோடிகள் (ஆனால் கங்கா மாதா இன்னும் சுத்தமாகமில்லை, கும்பகோனம் மகாமகத்தில் குளிக்க கங்கை வரவில்லையோ!), வியாபம் ஊழல் பல்லாயிரம் கோடிகள், அர்ஷதமேதா பல்லாயிரம் கோடிகள், அண்ணன் மல்லய்யா பல்லாயிரம் கோடிகள் ! பார்பனீய அதிகார வர்க்கத்தின் ஊழல் பல்லிளிக்கவில்லை?

Leave a Reply to Ajathasathru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க