Thursday, May 30, 2024
முகப்புசமூகம்நூல் அறிமுகம்சென்னை புத்தகக் காட்சியில் புதிய கலாச்சாரம் நூல்கள் !

சென்னை புத்தகக் காட்சியில் புதிய கலாச்சாரம் நூல்கள் !

-

புதிய கலாச்சாரம் - மே 2015 வெளியீடு
புதிய கலாச்சாரம் – மே 2015 வெளியீடு

மாட்டுக்கறி பார்ப்பன மதவெறி

புதிய கலாச்சாரம் – மே 2015 வெளியீடு
வெளியீடு எண் : 1

இந்தியாவின் உழைக்கும் மக்கள் குறிப்பாக நகர்ப்புறத் தொழிலாளிகள் உண்ணும் மாட்டுக்கறியை மராட்டியத்தில் தடை செய்திருக்கிறார்கள். ஏற்கனவே குஜராத்தில் இருக்கும் இத்தடைச்சட்டம் இனி இந்தியாவெங்கும் கொண்டு வரப்படலாம்.

இதன்படி, இனி நாம் எதை உண்பது என்பதை இனி பார்ப்பனக் கூட்டம் கும்பல்தான் முடிவு செய்யுமா என்பதே நம் முன் உள்ள கேள்வி.

பக்கங்கள் : 80
விலை: ரூ. 20.00

 

 

புதிய கலாச்சாரம் - ஜூன் 2015 வெளியீடு
புதிய கலாச்சாரம் – ஜூன் 2015 வெளியீடு

குற்றங்களின் அம்மா

புதிய கலாச்சாரம் – ஜூன் 2015 வெளியீடு
வெளியீடு எண் : 2

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை இவர் ‘முதல் குமாரசாமி’  அல்ல. கடந்த 20 ஆண்டுகளில் நீதிபதிகளாகவும், அமைச்சர்களாகவும், கவர்னர்களாகவும், அதிகாரிகளாகவும் இருந்த குமாரசாமிகளின் துணையோடு கிரிமினல்தனமான வழிகளை பயன்படுத்தித்தான் எல்லா வழக்குகளிலிருந்தும் ஜெயலலிதா தப்பியிருக்கிறார். அ.தி.மு.க கொள்ளைக் கூட்டத்தின் கிரிமினல்தனங்களுக்கு அடிபணிந்து செல்ல தமிழ்ச் சமூகத்தைப் பழக்குவதிலும் வெற்றி கண்டிருக்கிறார்.  இதுதான் இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய அபாயம்.

பக்கங்கள் : 80
விலை: ரூ. 20.00

 

புதிய கலாச்சாரம் - ஜூலை 2015 வெளியீடு
புதிய கலாச்சாரம் – ஜூலை 2015 வெளியீடு

பன்றித்தீனி

புதிய கலாச்சாரம் – ஜூலை 2015 வெளியீடு
வெளியீடு எண் : 3

மெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு இணையானது நுகர் பொருள் படையெடுப்பு. தொலைக்காட்சிகளின் விளம்பரங்கள் வழியாக சிறுவர்களின் சிந்தனையில் பதிகின்றன இந்த துரித உணவு வகைகள்.  உடலையும் உள்ளத்தையும் மெல்லக் கொல்லும் நஞ்சாக ஊடுறுவுகின்றன. துரித உணவுகள் தோற்றுவிக்கும் உடல் பருமன், ஆரோக்கியமின்மை, நோய்வாய்ப்படல் ஆகியவை மட்டுமல்ல பிரச்சினை; இவற்றுக்கு அடிமையாகும் சிறுவர்கள், உடலுழைப்பே இல்லாமல், விளையாட்டிலும் ஆர்வமிழந்து, டிஜிட்டல் உலகில் முடங்கிக் கொள்வதுடன், கட்டுக்கடங்கா பிடிவாதத்தையும் வன்முறைப் போக்கையும் வெளிப்படுத்துகிறார்கள்.

பக்கங்கள் : 80
விலை: ரூ. 20.00

புதிய கலாச்சாரம் - ஆகஸ்ட் 2015 வெளியீடு
புதிய கலாச்சாரம் – ஆகஸ்ட் 2015 வெளியீடு

டாஸ்மாக்: அம்மாவின் மரண தேசம்

புதிய கலாச்சாரம் – ஆகஸ்ட் 2015 வெளியீடு
வெளியீடு எண் : 4

“டாஸ்மாக்கை மூடு” என்ற குரல் தமிழகம் முழுவதும் எழத் தொடங்கியவுடன், ஆங்காங்கே மக்கள் போராடத் தொடங்கியவுடன், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு, படிப்படியாக மதுவிலக்கு”என்று விதம் விதமாக எல்லோரும் பேசத் தொடங்கி விட்டார்கள். கடையை மூடுவதற்கு தேர்தல் வரை எதற்கு காத்திருக்க வேண்டும்? பல ஊர்களில் பெண்கள் திரண்டு வந்து போராடி டாஸ்மாக் கடைகளை உடைப்பதையும் பூட்டுவதையும் நாம் பார்க்கவில்லையா?

பக்கங்கள் : 80
விலை: ரூ. 20.00

 

 

புதிய கலாச்சாரம் - செப்டம்பர் 2015 வெளியீடு
புதிய கலாச்சாரம் – செப்டம்பர் 2015 வெளியீடு

அறிவியலா ? இறையியலா ?

புதிய கலாச்சாரம் – செப்டம்பர் 2015 வெளியீடு
வெளியீடு எண் : 5

அறிவியலை நேரடியாக தடை செய்வது மதங்களென்றாலும், அறிவியலின் அறிவார்ந்த கண்ணோட்டமும், சமூகப் பயன்பாடும் மக்களுக்கு போய்ச் சேரக்கூடாது என்பதில் முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் உறுதியாக இருக்கின்றனர். மக்களை கண்காணிப்பதோ, குண்டு போட்டு அழிப்பதோ இல்லை மெல்லக் கொல்லும் வாழ்வியல் பிரச்சினைகளோ அனைத்திலும் கூட அறிவியலை அவர்கள் கேடாக பயன்படுத்துகிறார்கள்.

பக்கங்கள் : 80
விலை: ரூ. 20.00

 

 

புதிய கலாச்சாரம் - அக்டோபர் 2015 வெளியீடு
புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2015 வெளியீடு

எது காதல் ?

புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2015 வெளியீடு
வெளியீடு எண் : 6

செல்பேசிக்கு மட்டுமல்ல, காதலுக்கும் ‘கண்டிசன்ஸ் அப்ளைஸ்’ அதிகம். காதலோடு மல்லுக் கட்டும் பணம் போலவே பார்ப்பனியமும் பகை கொண்டிருக்கிறது. முன்னெப்போதைக் காட்டிலும் ‘கௌரவக் கொலைகள்’ அதிகரித்திருக்கின்றது. தலித் இளைஞர்கள் பகிரங்கமாக தலை துண்டிக்கப்படுகின்றனர். ஆதிக்க சாதிவெறியின் அரிவாளை எதிர்த்துப் போராட வேண்டிய காதல் வெள்ளித் திரையில் வெளிநாடு பறந்து ரோசாப்பூ கொடுப்பதையே கிராபிக்சில் சித்திரிக்கிறது.

பக்கங்கள் : 80
விலை: ரூ. 20.00

 

புதிய கலாச்சாரம் - நவம்பர் 2015 வெளியீடு
புதிய கலாச்சாரம் – நவம்பர் 2015 வெளியீடு

ஊடகங்களை நம்பலாமா ?

புதிய கலாச்சாரம் – நவம்பர் 2015 வெளியீடு
வெளியீடு எண் : 7

கிராமம் ஒன்றில் எலும்பும் தோலுமாக இருக்கும் சிறுமி ஒருத்தி தவழ்ந்து போகிறாள். அவள் எப்போது சாவாள் என ஒரு கழுகு காத்திருக்கிறது. இடையூறு ஏதுமின்றி கழுகும் சிறுமியும் கேமராவின் சட்டகத்தினுள் வரும் வரை அவர் காத்திருந்து புகைப்படம் எடுக்கிறார். நியூயார் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியாகும் அந்தப் படம் 1994-ம் ஆண்டு புலிட்சர் பரிசைப் பெறுகிறது. பிறகு படத்தில் இருக்கும் அந்தச் சிறுமி என்ன ஆனாள் என்று பலரும் கேட்கிறார்கள். படம் எடுத்த உடன் திரும்பிய கார்ட்டருக்கு இது குறித்து தெரியாது.

பக்கங்கள் : 80
விலை: ரூ. 20.00

 

புதிய கலாச்சாரம் - டிசம்பர் 2015 வெளியீடு
புதிய கலாச்சாரம் – டிசம்பர் 2015 வெளியீடு

ஹாலிவுட் கவர்ச்சி ஆக்கிரமிப்பு

புதிய கலாச்சாரம் – டிசம்பர் 2015 வெளியீடு
வெளியீடு எண் : 8

ஹாலிவுட் திரைப்படமான “டாப் கன்” ஓடிய திரையரங்குகள் அருகே ஆளெடுப்பு அலுவலகங்களை திறந்தது, அமெரிக்க இராணுவம். பதிலுக்கு அப்படத் தயாரிப்புக்கு இராணுவத்தின் பிரம்மாண்டமான தளவாடங்கள், படை வீரர்கள் திறந்து விடப்பட்டனர். இப்படி காசு கொடுத்தும், படம் காட்டியும் செய்யவில்லை என்றால் ஈராக்கிலோ, ஆப்கானிலோ சாவதற்கு ஏழை அமெரிக்கர்கள் கிடைக்க மாட்டார்கள்.

பக்கங்கள் : 80
விலை: ரூ. 20.00

 

 

 

புதிய கலாச்சாரம் - பிப்ரவரி 2016 வெளியீடு
புதிய கலாச்சாரம் – பிப்ரவரி 2016 வெளியீடு

அகதிகளா தலித் மக்கள் ?

புதிய கலாச்சாரம் – பிப்ரவரி 2016 வெளியீடு
வெளியீடு எண் : 9

“கடந்த காலங்களை திரும்பிப் பார்க்கும் போது யாராலும் போற்றப் படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது.” – தற்கொலை என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹைதராபாத் பல்கலை நிர்வாகத் தால் கொலை செய்யப்பட்ட ரோகித் வெமுலாவின் வார்த்தைகள் இவை. தலித் மக்கள் மீதான அடக்குமுறை இல்லாத மாநிலமோ வருடமோ இந்தியாவில் இல்லை. இசையமைப்பாளர் இளையராஜாவின் பண்ணைப் புரத்திலேயே இன்றும் தலித் மக்களுக்கு தனித் தேநீர்க் குவளைதான்.

பக்கங்கள் : 80
விலை: ரூ. 20.00

 

 

புதிய கலாச்சாரம் - மார்ச் 2016 வெளியீடு
புதிய கலாச்சாரம் – மார்ச் 2016 வெளியீடு

காவி பயங்கரவாதம்

புதிய கலாச்சாரம் – மார்ச் 2016 வெளியீடு
வெளியீடு எண் : 10

தாத்ரியில் மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம் பெரியவரைக் கொன்றது, பகுத்தறிவாளர் தபோல்கர் – எழுத்தாளர் கல்புர்கி, பன்சாரே ஆகியோரைச் சுட்டுக் கொன்றது, சமூக வலைத்தளங்களில் எதிர்த்து எழுதுபவரை கைது செய்வது, பூனாவில் ஒரு ஐ.டி துறை முசுலீம் இளைஞரை வாட்ஸ் அப் வதந்தியைக் காட்டிக் கொன்றது, சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை, ஐதராபாத் பல்கலையில் ரோஹித் வெமுலாவைத் தூக்கிலேற்றியது, உஸ்மானியா – ஜே.என்.யூ பல்கலைகளில் அசுரர் தினம் கடைபிடிக்க தடை, பூனா திரைப்படக் கல்லூரியின் முதல்வராகத் திணிக்கப்பட்ட இந்துமதவெறிக் கோமாளியை நீக்கப் போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறை, கர்வாப்சி எனும் கட்டாய மதமாற்றம், ஊடகங்களில் எதிர்க்கருத்துக்களை எழுதுபவர்களை அடக்க கமிட்டிகள், தற்போது ஜே.என்.யூ மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை!

பக்கங்கள் : 80
விலை: ரூ. 20.00

புதிய கலாச்சாரம் - ஏப்ரல் 2016 வெளியீடு
புதிய கலாச்சாரம் – ஏப்ரல் 2016 வெளியீடு

பெண்: வலியும் வலிமையும்

புதிய கலாச்சாரம் – ஏப்ரல் 2016 வெளியீடு
வெளியீடு எண் : 11

பார்ப்பன இந்துமதவெறியும், ஆதிக்க சாதிவெறியும் இணைந்து இந்தியாவெங்கும் பெண்ணை பாரம்பரிய அடிமைகைளாக தக்க வைக்க முயல்கின்றன. முதலாளித்துவமும், நுகர்வுக் கலாச்சாரமும் அவளை சந்தையின் அடிமையாக்கி நுகர்வில் கரைத்து வருகின்றன. இந்த இரு முனைத் தாக்குதலில் மிதிபடும் பெண்களின் வலி என்ன?

இந்த நூலில் இடம்பெறும் பெண்களின் கதைகள்  அந்த வலியை ஆழமாக உணர்த்துகின்றது.

பக்கங்கள் : 80
விலை: ரூ. 20.00

 

 

புதிய கலாச்சாரம் - ஜூன் 2016 வெளியீடு
புதிய கலாச்சாரம் – ஜூன் 2016 வெளியீடு

தொழிலாளி : வியர்வையின் மணம்

புதிய கலாச்சாரம் – ஜூன் 2016 வெளியீடு
வெளியீடு எண் : 12

ரலாறு நெடுக மனித உழைப்பு கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையைப் புரிந்து கொண்டு மூலக்கனிவளங்களை வெட்டியெடுத்து பலவித கருவிகளை உண்டாக்கிச் சிறுகச் சிறுக உருவாகி வளர்ந்ததன் நீட்சியே இன்று நாம் காணும் உலகம். விண்ணை முட்டும் கட்டிடங்களும் தேசத்தின் குறுக்கு நெடுக்காக ஓடும் சாலைகளும் அதன் மேல் ஊர்ந்து செல்லும் வாகனங்களும் பறக்கும் விமானங்களும் மிதக்கும் பிரம்மாண்டமான கப்பல்களும் அந்த வரலாற்றின் சாட்சியங்கள் !

பக்கங்கள் : 80
விலை : ரூ. 20.00

 

39-வது சென்னை புத்தகக் காட்சியில்

புதிய கலாச்சாரம் நூல்கள் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று – கடை எண் 72 – 73

தீவுத்திடல், சென்னை – 2
ஜூன் 1-13, 2016

வேலை நாட்கள் : மதியம் 2 முதல் இரவு 9 வரை
விடுமுறை நாட்கள் : காலை 11 முதல் இரவு 9 வரை

உழைக்கும் மக்களுக்கான தேடல்கள் ஒரே கூரையின் கீழ் – வாருங்கள்!

கீழைக்காற்று
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – -2
தொ.பே 044 – 2841 2367

  1. புதிய தலைப்புகளில் பல புதிய வெளியீடுகள் பலவற்றை எதிர்பார்த்தேன். கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது..

  2. இங்கு நீங்கள் குறிப்பிடும் எல்லா புத்தகங்களையும் ஒரு செட்டு எடுத்து வைங்க பாஸ் … இறுதி நாளுக்கு முன் தினம் 12/6/2016 அன்று தான் என்னால வரமுடியும்…. அன்னிக்கி வரும் போது இல்லையின்னு சொல்லிறாதிங்க தல ….

    அருந்ததி ராய் அக்கா புத்தகம் ஏதாவது இருக்கா? தோழர்களுடன் ஒரு பயணம் போன வருடம் வாங்கிட்டேன்… வேறு புத்தகம் ஏதாவது இருக்கா?

    உங்கள் கடையில் இருந்து புத்தகங்கள் தொடர்பாக இன்னும் நிறையவிவரங்கள் எதிர்பார்கின்றேன்….

    உங்கள் கடையில் கிடைக்கும்அனைத்து புத்தகங்களின் விலை பட்டியலை நீங்க வெளியிட்டு இருக்கவேண்டும்….

    இன்னும் 6 நாள் இருக்கு இப்ப கூட உங்கள் கடையில் கிடைக்கும் புத்தகங்கள் அவற்றை பற்றிய அறிமுகம் …விலை ஆகியவற்றை வெளியிடலாம் அல்லவா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க