Thursday, May 30, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்RSS பயங்கரவாதம் - வாயில் சாணி திணித்த கொடுமை !

RSS பயங்கரவாதம் – வாயில் சாணி திணித்த கொடுமை !

-

தாக்குதலுக்கு உள்ளாகி முகம் வீங்கிய நிலையில் இருவர் தரையில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு முன்னால் உள்ள பையில் சாணி வைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே தண்ணீரும் வைக்கப்பட்டிருக்கிறது. “வேகமாக வேகமாக”  எனச்  சுற்றியுள்ள கூட்டம் வெறிக்கூச்சலிடுகிறது. உயிருக்கு பயந்த நிலையில் யாரும் துணைக்கு வரமாட்டார்களா என்ற ஏங்கிய கண்களுடன் கையில் சாணியை எடுத்து வாயில் வைக்கிறார்கள் இருவரும். சுற்றியுள்ள கூட்டமோ “கோ மாதா கீ ஜெய்”, “ஜெய் ஸ்ரி ராம்”  என கூச்சலிடுகிறது. வாயில் சாணியுடன் இருவரையும் தங்களுடன் ஜெய் சொல்ல வைக்கிறது அந்த வெறிக் கும்பல்.

மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்ற காரணத்திற்காக “குர்கான் கவ் ரக்ஷ தல்”(Gurgaon Gau Rakshak Dal – குர்கான் பசு பாதுகாப்பு இயக்கம்)  என்ற இந்துவெறிக் கும்பல்  ரிஸ்வான், முக்தியார் என்ற இரு இளைஞர்கள் வாயில் சாணி திணித்தது தான் மேற்கண்ட சம்பவம்.

வாயில் சாணி திணிக்கப்பட்ட இளைஞர்கள்
இந்துமதவெறியர்களால் வாயில் சாணி திணிக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்கள்

செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக இந்துமதவெறியர்களால் தலித்கள் கொல்லப்பட்ட ஹரியானாவில் தான் இதுவும் நடந்துள்ளது. இளைஞர்கள் வாயில் சாணி தினித்ததோடு அதை வீடியோவும் எடுத்து பரப்பியிருக்கிறது அந்த வெறிபிடித்த கும்பல்.

இது குறித்து பேட்டியளித்துள்ள அக்கும்பலின் தலைவன் தர்மேந்திர யாதவ், “ மாட்டுக்கறி கடத்தப்படுவதாக எங்களுக்கு கிடைத்த தகவலையடுத்து இவ்வாகனத்தை 7 கி.மீ துரத்தி சென்று பிடித்தோம். காரில் 700 கிலோ மாட்டுக்கறி இருந்தது. இவர்களுக்கு பாடம் கற்பிக்கவும், தூய்மைபடுத்தவும் மாட்டுச்சாணியை தின்ன வைத்தோம்” என திமிராக கூறியுள்ளான்.

சாணி திணித்த இந்துவெறிக் கூட்டம் யாரும் கைது செய்யப்படாத நிலையில் பசு வதை தடைச் சட்டத்தின்படி சாணி திணிக்கப்பட்ட இளைஞர்களை கைது செய்துள்ளது ஹரியானா பா.ஜ.க அரசு. தற்போது அடிமாடுகளை வெட்டிய ‘குற்ற’த்திற்காக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் இவ்விரு இளைஞர்கள். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கூட்டமோ இவ்வீடியோவை பரப்பி வெற்றி கொண்டாடுகிறார்கள்.

மத்தியில் மோடி ஆட்சியேற்ற பிறகு பார்ப்பனிய இந்துமதவெறி பாசிஸ்டுகளின் காட்டுமிராண்டித்தனம் தலைவிரித்தாடுகிறது. மாட்டுக்கறி தொடர்பாக இவ்வாண்டில் இது போன்று 74 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன, மனித உரிமை அமைப்புகள். ஹிட்லரின் ஆட்சியை போன்று மக்கள் மீதான பாசிஸ்டுகளின் சட்ட மற்றும் சட்டத்திற்கு புறம்பான (extrajudicial) அமைப்புகளின் கண்காணிப்புகள், தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. புற்றீசல் போல பல்கி பெருகியிருக்கும் இந்துத்துவ பாசிச  அமைப்புகள் ஒருங்கே போலீசாகவும் நீதிமன்றமாகவும் செயல்பட்டுவருகிறார்கள்.  சட்டத்தின் ஆட்சி என்பதை காலில் போட்டு அவர்களே மிதித்துவிட்டார்கள். இனியும் சட்டத்தையோ, நீதிமன்றங்களையோ நம்புவது பைத்தியக்காரதனமின்றி வேறேதுவாகவும் இருக்க முடியாது.

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்காக சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி மாவட்டம் திண்ணியத்தில் தலித் இளைஞர்  வாயில் ஆதிக்க சாதியினர் மலம் திணித்த சம்பவம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதே போன்று இங்கு முஸ்லீம் இளைஞர்கள் சாணி தினிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருக்கிறார்களா இல்லைய என்று ஆராய்ச்சி செய்பவர்களுக்கு அந்த ஐ.எஸ்-ஐவிட கொடூரமான இந்த மதவெறிக் கும்பல் கண்ணில் படவேபடாது. என்ன இருந்தாலும் இது நாட்டை ஆட்சி செய்யும் தீவிரவாதமல்லவா!

எறும்புக்கும் மாவுகோலம் போட்டு பசியாற்றுவதாக பீற்றிக் கொள்ளும் பார்ப்பன இந்துமதம்தான் தாழ்த்தப்பட்ட மக்களை நாயினும் கேவலமாக நடத்தியது. இதுதான் பாரதீய பண்பாட்டின் வரலாறு. இப்பண்பாட்டில் தலித்துகளை விட  ஈயும் எறும்பும் மாடும் நாயும் தான் முக்கியமானவை. அந்த பார்ப்பனியத்தின் தொடர்ச்சியாகத்தான் திண்ணியத்தையும், தற்போது ஹரியானாவையும் பார்க்க வேண்டும். மலம்/சாணி திணிப்பு என்பது பாரதீய பண்பாடாக நாடெங்கிலும் ஆதிக்க சாதிகளால் செயல்படுத்தப்பட்டு வருவது இதைத்தான் காட்டுகிறது.

மனித உணர்ச்சி, பண்பாடு , நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாத காட்டுமிராண்டிகளான இந்துத்துவ கூட்டத்திற்கு அவர்கள் மொழியில் அளிக்கப்படும் பதில் தான் புரியும் என்றால் அதை செய்வதை தவிர வேறு வழியேதுமில்லை.

– ரவி

மேலும் படிக்க:

 1. ஜ எஸ் தீவீரவாதிகள் “செக்ஸ்” அடிமைகளாக பள்ளி மாணவிகளையும், கிராமபுர பெண்களையும் அடைத்து வைத்து வருடக்கணக்கில் அவர்களை பாலியல் வன்புணர்வு செய்வதோடு, அவர்களை அடிமைகளாக காசுக்கும் விற்ற போது, இந்த வீரம் ரவிக்கு எங்கே போனது… ஏன் அதை பற்றி எந்த கட்டுரையும் எழுதவில்லை??? தனி மனித தாக்குதலை, பாரதத்தின் கலாச்சாரத்தோடு ஒப்பிடாதே அறிவு கெட்ட கூ…

  • என் நண்பன் இந்தியனின் உணர்ச்சியை யாரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்களே வினவு கூட்டத்தாரே!! ..

   மாட்டைக் கொன்றவனுக்குத் தண்டனையாக மாட்டுச்சாணத்தை வாயில் திணிப்பது பாரதக் கலாச்சாரத்தில் உண்டு. அதனைத் தவறு என்று எழுதினால் என் நண்பனுக்கு கோவம் வருமா இல்லையா ?.

   வேண்டுமானால் பல்லாயிரக்கணக்கான மனிதர்களைக் கலவரத்தைத் தூண்டுவிட்டு கொன்ற மோடி, அத்வானி, ஜோஷி, வாஜ்பாய் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். கிரிமினல்களின் வாயில் மனித மலத்தைத் திணித்துக் கொள்ளுங்கள் !!! .. மலத்திற்கு மலமும் ஆச்சு, பாரத கலாச்சாரத்தைக் காத்த மாதிரியும் ஆச்சு..

   அதை விட்டுட்டு இந்தியக் கலாச்சாரத்தை குத்தம் சொல்லக் கூடாது.

   நண்பா இந்தியா .. நீ ஒண்ணும் கவலப்படாத .. நான் எப்பவுமே உன் சைடு தான் …

 2. ஒரு சார்பாக கட்டுரை எழுதுபவனின் வாயிலும் சாணியை ஊற்ற வேண்டும்…

  • ஐயோ என் செல்லாக்குட்டி நண்பா !!!

   ரொம்பக் கோவப் படுறீயே …
   உன் கோவம் புரியுது.. சாணி ஊத்துறது இந்தியக் கலாச்சாரம் இல்லையா … விட முடியுமா ..

   நான் தான் ரவிக்கு மேல் பாராவுல அட்வைஸ் பண்ணிருக்கேன்ல .. இனிமே சாணி ஊத்துனது தப்புன்னு எழுத மாட்டாரு… மனுச மலத்தை ஆர்.எஸ்.எஸ் காரனுங்க வாயில ஊத்தனும் தான் சொல்லுவாறு..

 3. சத்திரிய ,பார்ப்பன அடிமை சாதிய பயல்க இதைப்பற்றி ஒன்னும் குறை சொல்ல மாட்டானுங்க ” ஒரு மனிதனை தள்ளி வைக்க பூஜை ” இதைப்பற்றி கேள்வி கேட்க மாட்டாங்க ?? பார்ப்பன பயல்களுக்கு கூட்டி கொடுத்து பிறந்த பயல்களுக்கு எப்படி ரோசம் வரும் ? சக மனிதனை மதிக்க தெரியாத பார்ப்பன அடிமைகள் ” ஸ்வாதி கொலைக்கு ” அனுதாபம் சொல்லுதுங்க.

 4. வாயில் மலத்தை திணிக்கும் இது போன்ற மனித தனிமையற்ற செயலுக்கு வக்காலத்து வாங்கும் இந்தியன் பா.ஜ.க பாணியில comment போடுறார்.

  நீ ஏண்டா அம்மனமா திரியுற…. அவன் திரிஞ்சப்ப நீ ஏண்டா கேட்கல

 5. சட்டத்தை மக்கள் கையில் எடுத்து கொள்வது தவறு

  திருப்பூர் வெறியர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்

  இதுவே பன்றிகறியாகவும் ஊர் காஷ்மீராகவும் இருந்தால் இதை விட கொடூரம் அரங்கேறியிருக்கும்

  • அங்கயூம் R.S.S அப்பாவி முஸ்லிம் சகேதரன் மேல் குற்றம் சாட்டி காவி ரணுவம் முலம் அப்பாவிகளை கொண்ணு இருப்பாங்க

   • no human being in the planet is entitled to hurt others either physically or verbally, and police and court alone empowered to resolve any dispute between the civilians..

  • Pork is forbidden for Muslims. But in general, Muslims won’t attack others for slaughtering and eating pigs. Pork is freely available in many Islamic nations. And your comparison is just accepting that there is no difference between Islamic terrorists and Hindu outfits.

  • ரெங்கி மாமா ..

   காஷ்மீர்ல பன்னியக் கொன்னவங்க வாயில சாணிய ஊத்துன கேசுல அடியேன் தான் ஆஜாரானீங்க போல ..

   ஆர்.எஸ்.எஸ். காரனுக்கு மண்டபத்துல வச்சி பிளான் எழுதிக் கொடுக்குறது ரெங்கி மாமா தானா ?.

 6. வரலாற்றை கவனிங்கள் இந்த 28% மாட்டின் ரத்ததை பாலாக குடிக்கும் இந்த சைவர்களின் அட்டுழியம் 72% அசைவத்தை விட மிக அதிகம்.

  பொதும் நிறுத்துக. வாழ விடுங்கள். ஏற்கனவே இந்தியாவில் புரத சத்து இல்லாமல் மக்கள் வாடுகிறார்கள்.

  இப்படித் தான் மனிதனுக்கும் விலங்குக்கும் வித்தியசாம் தெரியாதவர்கள் அல்லது தெரியாத மாதிரி நடிப்பவர்கள் இவர்கள். இவர்களிடம் அறிவுப்புர்வமாக வாதம் செய்தால் கயவத்தனமாக வேதம்
  என்பார்கள், மனு (௮)நீதி என்பார்கள், ஜீவகாருண்யம் என்பார்கள், அறிவியல் என்பார்கள் கடைசியில் கயவத்தனமாக போலிவாதத்தை வைத்து முடிப்பார்கள். இனிமேல் உங்க பப்பு வேகாது. மக்கள் விழித்து கொண்டார்கள்.

  சைவம் என்ற பேயரில் சக மனிதனை மனிதாபிமானம் இல்லாமல் அட்டூழியம் செய்தது இப்பழுதும் தந்திரமாக செய்தது கொண்டிருப்பதை உலகம் குறீப்பீடு கொண்டிருக்கிறது. உலக அளவில் உங்கள் முகத்திரை கிழிகிறது.

 7. தயவு செய்துபுரிந்துகொள் நான் உனக்காக சிந்திக்கவில்லை
  உன்னையே சிந்திக்க சொல்லுகிறேன்

  நீயாக சிந்தித்தால் நிச்சயம் அசைவம் தவிர்ப்பாய்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க