privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகாஷ்மீர் போராட்ட செய்திகளுக்கு தடை போடும் ஃபேஸ்புக்

காஷ்மீர் போராட்ட செய்திகளுக்கு தடை போடும் ஃபேஸ்புக்

-

facebook blocks kashmir newsபாசிசக் கோமாளி மோடிக்கு சொம்படித்தால்தான் தனது வியாபாரத்தை கனஜோராக நடத்தமுடியும் என்பதை வெட்கம் கெட்டு ஒத்துக் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக். தமிழகம், இந்தியா ஏன் உலக அளவிலும் கூட காஷ்மீர் போராட்டச் செய்திகள், படங்களை வெளியிட்டமைக்காக பல தனிநபர்கள் மற்றும் காஷ்மீர் ஊடக நிறுவனங்களின் ஃபேஸ்புக் கணக்குகள், பக்கங்கள் தடை செய்யப்பட்டு, மறைந்து போயிருக்கின்றன.

காஷ்மீர் மக்கள் பலர் இது குறித்து ஃபேஸ்புக்கின் செய்திகளைத் தாங்கிய ஸ்கிரீன் ஷாட்டுகளை படங்களாக வெளயிட்டுள்ளனர். அதில் சம்பந்தப்பட்டவர்களுடைய பதிவுகள் ஃபேஸ்புக்கின் சமூக ஒழுங்கு விதிகளை மீறியிருப்பதாக அறிவித்திருக்கிறது அமெரிக்க மார்க்கின் கம்பெனி. கொல்லப்பட்ட புர்ஹான் வானியின் புகைப்படத்தை ஃபேஸ்புக் முகப்பு படங்களாக வைத்திருந்தோரின் பக்கங்களில் அந்தப் படம் விரைவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.

ஹுரியத் மாநாட்டு பேரவையின் தலைவர் சையத் அலி கிலானி கைது செய்யப்பட்ட வீடியோவை உள்ளூர் தினசரியான “காஷ்மீர் மானிடர்” வெளியிட்டிருந்தது. உடனே அந்த வீடியோவும் நீக்கப்பட்டது. இதற்கு முன்னரெல்லாம் இப்படி நடந்ததில்லை என்கிறார் அந்நாளிதழில் வேலை செய்யும் முபாஷி புகாரி எனும் பத்திரிகையாளர்.

இலண்டனில் இருக்கும் வெஸ்ட்மினிஸ்டர் பல்கைலையில் பேராசிரியராக இருக்கும் தைபைஷ் ஆனந்தின் கணக்கு முடக்கப்பட்டதும் அவர் ஃபேஸ்புக்கில் புகார் தெரிவித்தார். அதற்கு அவரது பதிவு தவறுதலாக ஃபேஸபுக் ஊழியர்களால் நீக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். அவர்களது சமூக ஒழுங்கு விதிமுறையின் கீழ் தனது கணக்கு ஒரு நாளைக்கு முடக்கப்பட்டதை பார்த்தால் இதெல்லாம் ஃபேஸ்புக்கில் வேலை செய்யும் அதிதீவிர இந்திய தேசபக்தர்களின் கைங்கரியமாக இருக்கலாம் என்கிறார் அந்த பேராசிரியர்.

அதே போன்று பர்ஹான் ஆதரவு பதிவுகளை போட்டற்காக கலிபோர்னியா பல்கலையின் விரிவுரையாளர் ஹுமா தாரின் கணக்கும் முடக்கப்பட்டது. #காஷ்மீர், #புர்ஹான் வானி குறிச்சொற்கள் – ஹேஷ் டாஹ்குகளை வைத்து ஃபேஸ்புக் நமது கணக்குகளை கண்டுபிடித்து முடக்குகிறது, மறைக்கிறது எனகிறார் அவர்.

காஷ்மீரை அடிப்படையாகக் கொண்ட ஜாஜீர் டாக்கீஸ் எனப்படும் நகைச்சுவை ஃபேஸ்புக் பக்கம், 27,500க்கும் மேற்பட்ட வாசகர்களைக் கொண்டதும் ஜூலை 13 அன்று முடக்கப்பட்டது. பிறகு கணக்கு மீண்டாலும் அதில் ஏற்கனவே வெளியிடப்பட்ட பதிவுகள் எதுவும் இல்லை. இப்பக்கத்தை நிர்வகித்த மூவரின் கணக்குகளும் முடக்கப்பட்டதல் அவர்கள் இதற்காக ஃபேஸ்புக்கிற்கு புகார் கூட கொடுக்க முடியவில்லை. இது குறித்து ஃபேஸ்புக்கிற்கு தனி மின்னஞ்சல் அனுப்பினால் பதிலேதுமில்லை என்கிறார்கள் இப்பக்கத்தை நடத்துபவர்கள்.

இதைப் பார்க்கும் போது ஃபேஸ்புக்கின் உரிமையாளர் மார்க் சக்கெர்பெர்க் திடீரென்று காஷ்மீர் உயர் போலிஸ் அதிகாரியாக புதிய பொறுப்பு எடுத்துக் கொண்டாரோ என்று கேட்கிறார் தாரிக் ஜமீல் எனும் பேஸ்புக் பயனாளர்.

ஏற்கனவே காஷ்மீரில் தொலைபேசி, செலபேசி, இணையம், செய்தித்தாட்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட நிலையில் சில இடங்களில் பி.எஸ்.என்.எல்லை மட்டும் விட்டு வைத்திருந்தார்கள். அதன் வழியாக இணையத்தில் செய்திகள் வெளியானதும் ஃபேஸ்புக் மூலம் தடை செய்கிறார்கள். அதே நேரம் காஷ்மீருக்கு வெளியே அந்த தடையை இந்திய அரசு அல்ல ஃபேஸ்புக்கே பொறுப்பேற்றுக் கொண்டு செய்கிறது.

இந்த இலட்சணத்தில் கருத்து சுதந்திரம், அமெரிக்க ஜனநாயகம், இணையக் குடிமக்கள், கட்டற்ற இணையம் என்று அனைவரும் பேசுகிறார்களே அதற்கு என்ன பொருள்? காஷ்மீரின் படங்களோ செய்திகளோ இணையத்தில் வெளியாகக் கூடாது என்று மோடிக்கு போட்டியாக மார்க்கும் எண்ணுவதன் ரகசியம் என்ன? இந்தியாவில் இணையத்தின் வளர்ச்சியையம் அதன் வணிக அளவையும் புரிந்து கொண்டு ஃபேஸ்புக் இன்று நீல வர்ணத்தில் காவியை ஏற்றுகிறது போலும்.

காஷ்மீர் செய்திகள் – படங்களுக்கு ஏவப்படும் இந்த அடக்குமுறை நாளையே தண்டகாரன்யா, வடகிழக்கு மாநிலங்கள், தமிழகம் என்று பரவலாம். நம்மை வைத்து வயிறு வளர்க்கும் அந்த அமெரிக்க நிறுவனங்கள் நாம் அடிபடும் போது ரசிக்கின்றன. இதுதான் அமெரிக்கத் தரமாக இருக்குமோ?

நன்றி:

இந்தியன் எக்ஸ்பிரஸ் Kashmir: Facebook faces criticism for blocking profiles, removing posts

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க