privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பார்ப்பனியத்திற்கு எதிராக குஜராத் தலித் மக்கள் போர்க்கோலம் !

பார்ப்பனியத்திற்கு எதிராக குஜராத் தலித் மக்கள் போர்க்கோலம் !

-

மாட்டுக்கறிக்கு தடை, பசு புனிதம் என தனது பார்ப்பன இந்துமத பாசிச நடவடிக்கைகளை மக்களிடம் திணித்து வந்த ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து மத வெறி அமைப்புகளுக்கு குஜராத் தலித்துகள் தக்க பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திவ்ய பாஸ்கர் என்ற குஜராத் பத்திரிக்கையில் வெளியான செய்தி
திவ்ய பாஸ்கர் என்ற குஜராத் பத்திரிக்கையில் வெளியான செய்தி

கடந்த வாரத்தில் குஜராத் மாநிலத்தின் உனா பகுதியில் மாட்டுத்தோலை உரித்ததற்காக சிவசேனா மற்றும் பசு பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பார்ப்பன இந்துமத வெறி அமைப்பினரால் தலித்துக்கள் கட்டிவைத்து அடிக்கப்பட்டனர். பின்னர் ஊர்வலமாக காவல் நிலையத்திற்கு இழுத்து செல்லப்பட்டனர். இளைஞர்கள் மாட்டை கொன்றார்களா இல்லையா என்பதை தான் போலீசாரும் விசாரித்து வந்தனர். இது பற்றிய செய்தியை வினவில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். இக்காட்டுமிராண்டிதனத்தை கண்டித்து குஜராத் மாநிலத்தில் தலித்துக்கள் ஆரம்பித்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கடந்த திங்களன்று சுரேந்தர் நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செத்த மாடுகளால் நிரம்பி வழிந்தது. சுமார் 15 லாரிகளில் செத்த மாடுகளை அள்ளிவந்து ஆட்சியர் அலுவலகத்தில் கொட்டினர் தலித் மக்கள். இப்போராட்டத்தில் 1500-க்கு மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். இதே போல கோன்டல் துணை ஆட்சியர் அலுவலகம் மாட்டு எலும்புகளால் நிரம்பியுள்ளது. அரசு அலுவலகங்களில் வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டுள்ள வண்டிகளில் செத்த மாடுகளை போட்டு செல்கிறார்கள் தலித் மக்கள். மாநிலம் முழுவதும் இதை பின்பற்றவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெருக்களில் செத்த கால்நடைகளை போட்டு போராடும்படி அழைப்பு விடுத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் தாங்கள் நடத்தும் போராட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு மாட்டுத் தலையோடும் மக்கள் வருகிறார்கள். செத்த மாட்டின் தலையை தனியே எடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு கொண்டு வந்திருந்ததை புகைப்படத்தோடு முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது திவ்ய பாஸ்கர் என்கிற குஜராத்தி பத்திரிகை. ஆர்.எஸ்.எஸ் சொல்லிவரும் பார்ப்பன இந்து மத ஆச்சாரங்களின் மீது காறி உழிழ்ந்துள்ளார்கள் குஜராத் தாழ்த்தப்பட்ட மக்கள். ”நாங்கள் இனி செத்த விலங்குகளை அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபடமாட்டோம். அரசு இவ்வேலைக்கு சிவசேனாவின் சிவசைனிக்குகளையும், பசு பாதுகாப்பாளர்களையும் நியமித்து செத்த மாட்டை அப்புறப்படுத்தட்டும்” என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

குஜராத்தில் தலித்துக்கள் அரசு அலுவலகங்களில் செத்த மாடுகளால் நிரப்பினர்
குஜராத்தில் தலித்துக்கள் அரசு அலுவலகங்களில் செத்த மாடுகளால் நிரப்பினர்

முன்னதாக தலித் குடும்பத்தினர் தாக்கப்பட்டதற்கு மறுநாள் உனா பகுதியில் கண்டன ஊர்வலம் மற்றும் சாலை மறியல் நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் வண்னம் ராஜ்கோட் மாவட்டத்தில் விசமருந்தும் தற்கொலைப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது மாட்டின் உயிரைவிட தலித்துகளின் உயிர் கீழானதா என ஆத்திரத்தில் கல்வீச்சு மற்று பேருந்துக்கு தீவைப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. 19-ம் தேதி பேசான் பகுதியில் நடந்த விசமருந்தும் போராட்டத்தில் ஹேமந்த் சொலான்கி என்பவர் இறந்தார். அம்ரிலி பகுதியில் நடந்த போராட்டத்தின் போது போலீசுடன் நடந்த மோதலில் போலீஸ் ஒருவர் உயிரிழந்தார்.  மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் போராட்டம் பரவி வருகிறது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட கிரி ரத்தோட் என்ற தலித் உரிமை ஆர்வலர் கூறுகையில், “உனா பகுதியில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டது குஜராத்தில் நிகழ்ந்துவரும் தலித்துக்கள் மீதான எண்ணற்ற தாக்குதலில் ஒரு பகுதிதான். குஜராத்தில் தலித்துக்கள் மிக மோசமான நிலையில் வசிக்கிறார்கள். அரசு அவர்களைக் காப்பாற்ற தவறிவிட்டது” என்கிறார். தலித்துக்கள் மீதான தாக்குதல் வாடிக்கையானது தான் என்றாலும் இந்த சம்பவம் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் மற்றொரு ஆர்வலர் பார்மர்.

இந்த போராட்டம் எதிர்பார்த்த ஒன்றுதான் என்கிறார் மற்றொரு மனித உரிமை செயற்பாட்டாளர் ஜிங்னேஷ் மெவானி. “கடந்த 2004 முதல் தலித்கள் மீதான வன்முறை குஜராத்தில் அதிகமாக வளர்ந்துவருகிறது. இக்குற்றங்களில் தண்டிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையோ குறைந்துவருகிறது. ஆக எங்குமே நீதி கிடைக்காத போது ஆத்திரம் அதிமாகத்தான் செய்யும்” என்கிறார் இவர். இந்து மத வெறியர்களால் தாக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் தலித் இளைஞர்கள் நடைபெற்று வரும் போராட்டத்தை நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். “எங்களை தாக்கியவர்கள் தண்டிக்கபடவேண்டும்” என்கிறார்கள் அவ்விளைஞர்கள்.

தலித் மக்கள் இந்துமத வெறியர்களை எதிர்த்து போராடிவரும் போது ராம்விலாஸ் பஸ்வான், அதுவாலே, மாஞ்சி போன்ற தலித் பிழைப்புவாத தலைவர்களோ ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பார்ப்பன பாசிச கும்பலிடம் நத்தி பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது தலித்திய அரசியலின் தோல்வியைக் காட்டுகிறது. தற்போது மக்கள் அரசு, நீதிமன்றம்,கட்சிகள், ஊடகங்கள் யாரையும் நம்பவில்லை. தங்கள் மீது இழைக்கப்பட்ட வன்முறையை ஒழிக்க அவர்களே போராட்ட ஆயுதத்தை ஏந்தியிருக்கிறார்கள். தலித் மக்களின் மீதான வன்முறைக் கொடுமையை இந்த அமைப்புக்குள்ளேயே தீர்த்து விடலாம் என்ற மனப்பால் குடித்த ‘தலித்தியம்’ மற்றும் ஓட்டுக் கட்சி தலித் இயக்கங்களின் தோல்வியையும் இது காட்டுகிறது.

2002- கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஈடுபடுத்திய ஆர்.எஸ்.எஸ் வானரங்கள் தற்போது இஞ்சி தின்ற குரங்காய் முழிக்கின்றன. இந்தியா முழுவதும் மாட்டுக்கறி தொடர்பாக முஸ்லீம்களும், தலித் மக்களும் தாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தலித் மக்கள் திருப்பித் தாக்கி வருகின்றனர். அதுவும் இந்துத்துவத்தின் கோட்டையான குஜராத்திலேயே, மோடியை உற்பத்தி செய்து அனுப்பிய காவி வெறி மண்ணிலேயே இந்த போராட்டம் நடைபெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்கது. எந்த மாட்டைப் புனிதம் என்று பசப்பினார்களோ அதே மாட்டிறைச்சி இன்று குஜராத் முழுவதும் அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் அலையலையாகக் கொட்டப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த போராட்டம் பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டமாக இந்தியா முழுவதும் மாறும் போது இந்து மதவெறியர்களுக்கான கல்லறை நிச்சயம் கட்டப்படும். போராடும் தலித் மக்களுக்கு தோள் கொடுப்போம்! பார்ப்பனியத்தை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் கொட்டுவோம்.

– ரவி

மேலும் படிக்க
An assault on Dalits may have triggered the biggest lower-caste uprising in Gujarat in 30 years
Dalits’ flogging in Una sparks angry protests in Saurashtra
Angry Dalits Are Dumping Cow Carcasses At Govt Offices After Flogging By Self-Styled ‘Gau Rakshaks’

  1. Another video has been aired by today morning in the news media. The new media is showing, how the leather factory labors are tortured by the same group of thugs. Please post an article about the same and create a sequel of articles about attacks on Dalits in Gujarat.

  2. “அடங்க மறு அத்து மீறு திமிறி எழு திருப்பி அடி “போராடும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாழ்துக்கள் இப்பிடித்தான் இருக்கனும் இங்கயும் போராட்டம் பரவ வேண்டும்

  3. ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.. ஆர்.எஸ்.எஸ் காவிகளுக்கும், தலித்துகளுக்கும் இடையில் நடக்கும் இந்த அரசியல் சண்டையில், சம்மந்தமே இல்லாமல் எந்த பாவமும் அறியாத அப்பாவி ஜீவனான பசு மாடு மாட்டிக் கொண்டு தவியாய் தவிக்கிறது.

  4. என்னம்மா இது என்னனே தெரியாம கமன்ட் போடிறீங்க தாழ்த்தப்ப்ட்ட மக்கள் செத்த மாட்டின் தோலை உரித்ததற்க்காக மாட்டை விட கேவலமாக தாக்கப்பட்டதன் எதிரொலிதான் செத்த மாட்டை அரசு அலுவலகங்களி போட்டு போராட்டம் பன்றாங்க அவ்வளவுதான் செத்த மாட்டுமேல இவ்வளவு அக்கற படுற நீங்க தாழ்ப்பட்ட அந்த வாலிபர்கள் தாக்கப்படத மூடி மறிக்கிற மாறி பேசுறீஙளே

  5. //தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாழ்துக்கள் //

    எதற்கய்யா.. வாயில்லா அப்பாவி ஜீவன்களை கொன்று போட்டதற்காகவா. புரட்சிக்கு பிறகான சோவியத் சோஷலிச ருஷ்யாவில் உள்ள நிலங்களை பணக்கார விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பிடுங்கி கூட்டு பண்ணை அமைக்க வேண்டும் என்று கூறியபோது, ருஷ்யாவில் உள்ள பெரிய நிலவுடைமையாளர்கள் அனைவரும் ஒன்று கூடி நிலத்தில் உழ பயன்படும் மாடு குதிரை போன்ற அனைத்தும் கால் நடைகளையும் ஒன்று விடாமல் வெட்டி வீசி தங்கள் எதிர்ப்பினை காண்பித்தார்களாம். அதற்கு சற்றும் குறைவில்லாத ஒன்றை தான் குஜராத் தலித்துகளும் செய்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் செய்ததை விட, இந்த தலித்துகள் செய்த செயல் தான் மிகவும் குரூரமாக இருக்கிறது. இன்று அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் தலித் மக்களின் இந்த செயலை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.

    உன்னுடைய எதிரி ஆர்.எஸ்.எஸ் காவிக் கூட்டங்கள் தானே தவிர அப்பாவி பசு மாடுகள் அல்ல. உண்மையில் இந்த தலித்துகளுக்கு திராணி இருந்திருந்தால் குஜராத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் அலுவலகங்களையும் அரை டவுசர்களையும் அடித்து நொறுக்கி இருக்க வேண்டுமே தவிர, அடித்தால் திருப்பி எந்த எதிர்ப்பும் காட்ட தெரியாத ஒரு சாதுவான விலங்கை கொன்று வீசி இருக்கக் கூடாது.

    //அடங்க மறு அத்து மீறு திமிறி எழு திருப்பி அடி “//

    பதிலுக்கு அவர்களும் திருப்பி அடிப்பார்கள் . போலீசு, ராணுவம் என்று மொத்த அரசு இயந்திரமே அவர்களின் கைகளில் இருக்கிறது. இப்படி சொல்லி சொல்லியே உசுப்பேத்தி விடும் வேலையை நிறுத்தி விட்டு இதற்கு உருப்படியான தீர்வு ஏதாவது இருக்கிறதா என்று யோசியுங்கள்.

  6. குஜராத்தில் நடந்த சம்பவம் முற்றிலும் கண்டனத்திற்கு உரியது ஆனாலும் காங்கிரஸ் கட்சி இதை கையிலெடுத்து பாஜக ஆட்சியில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல முயற்சித்து வருகிறது பாஜக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினருக்கும் தலித் மக்களுக்கும் எதிராக ஆட்சி நடப்பது போல காண்பித்து மக்களிடையே பிரிவினையை வளர்க்கிறது இது மிகவும் ஆபத்தான அணுகுமுறை.

  7. ஏன்மா ஆர் எஸ் எஸ் லூஸு மாறியே எல்லாறும் செத்த மாட்டத்தான் கொண்டு வந்து அரசு அலுவல்கத்துல போட்டு இருக்கங்க இருக்குற மாட்ட அடுச்சு கொன்னு இல்ல இது கூட புரியல இதுக்கு 8 பத்தில இந்த அம்மா விளக்கம் எழுதிட்டு வருது
    அந்த வாசகத்த கண்ன வச்சு நல்லா படிங்க திருப்பி அடினுதான் சொல்லி இருக்கு சும்மா இருக்குறவன அடிக்க சொல்லல ஏற்கனவே அடி பட்டவங்க திருப்பி அடிக்கிறாங்க அக்கா அவ்வளவுதான்

Leave a Reply to Rebecca Mary பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க