கபாலி நெருப்பில்லடா கருப்புடா – மக்கள் கருத்து

62
44

Saravanan Savadamuthu added 2 new photos — with Shrutitv Che and 3 others.

22 hrs ·

கபாலியின் அலங்கோலங்களுக்கு யார் காரணம்..?

jazz-companyஇந்த அலங்கோலங்களுக்கு முழு முதற் காரணம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த பெருமக்கள்தான். யார்தான் லஞ்சம் வாங்கலை.. யார்தான் ஊழல் செய்யலை என்று நமது மக்கள் என்றைக்கு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள ஆரம்பித்தார்களோ.. அன்றைக்கே இந்த சமூகம் அவலத்தை நோக்கி ஓடத் துவங்கிவிட்டது. இன்றைய ‘கபாலி’ வெளியிட்டூு சூழலிலும் அதுதான் நடக்கிறது.

படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமத்தை பெற்றிருப்பது ஜெயா டிவி. தமிழக தியேட்டர் உரிமத்தை பெற்றிருப்பது ஊரை அடித்து உலையில் போடுவதில் கோபாலபுரத்தை மிஞ்சிய சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஜாஸ் நிறுவனம். பிறகென்ன கேட்கவா வேண்டும்..? அவர்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் அரசு நிர்வாகங்கள் வளைந்து கொடுத்து ஓடிக் கொண்டிருக்கின்றன.

அரசாங்க முத்திரையோடு அமைச்சரின் PA விடமிருந்து 10 கபாலி டிச்கெட் கேட்டு அபிராமி தியேட்டர் ஊழியருக்கும் செல்லும் கடிதம்
அரசாங்க முத்திரையோடு அமைச்சரின் PA விடமிருந்து 10 கபாலி டிச்கெட் கேட்டு அபிராமி தியேட்டர் ஊழியருக்கும் செல்லும் கடிதம்

‘தெறி’ படத்தின் ரிலீஸுக்கு முதல் நாள் சில தியேட்டர்களில் அதிரடி சோதனை நடத்தி ‘கூடுதல் கட்டணங்களை வசூலித்தால் தியேட்டர் சீல் வைக்கப்படும்’ என்று சில மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்தார்கள்.

‘விடியற்காலை ஷோ ஓட்ட வேண்டும்’ என்று ‘தெறி’ படத்தின்போதுஅனுமதி கேட்ட தியேட்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கேள்வி கேட்டபோது ‘காவல்துறையினரை அவ்வளவு விடியற்காலையில் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்க முடியாது’ என்றது அரசு நிர்வாகம்.

ஆனால் இன்றைக்கு அந்த சூழல் அப்படியே நேர்மாறாக இருக்கிறது. தியேட்டரிலேயே டிக்கெட் கட்டணத்தையே குறிப்பிடாமல் நுழைவுச் சீட்டை அச்சிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இது உலகத்திலேயே வேறெங்கும் நடக்காத ஒரு அதிசயம் இது.

எந்த வகையிலும் அரசு அனுமதியில்லாமல் தியேட்டர் கட்டணங்களை உயர்த்துவது நிச்சயம் சட்ட விரோதம்தான். யாரோ காசு கொடுக்கிறான் என்றாலும் அதனை அனுமதிப்பதும் ஊழல்தான்.

ஒட்டு மொத்தமாக 3 நாளைக்கான காட்சிகளை பலம் வாய்ந்த கும்பல்களின் கைகளில் கொடுத்து அவர்களிடமிருந்து டிக்கெட் விலையைவிடவும் 10 மடங்கு தொகையை வசூலித்திருக்கிறார்கள் என்றால் இதைவிட மிகப் பெரிய ஊழல் வேறென்ன இருக்க முடியும்..? கொடுக்கிறவன் இருக்கும்வரையிலும் லஞ்சமும், ஊழலும் இருந்து கொண்டேதான் இருக்கும்.

இப்போது 120 ரூபாய் டிக்கெட்டை 1000, 1500 ரூபாய்க்கு தங்களிடமிருக்கும் பணத் திமிரினால் அள்ளி வீசி டிக்கெட்டை வாங்கியிருக்கும் இதே உத்தம நண்பர்கள்தான், ஒரு போலீஸ்காரர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கினால் அதை செல்போனில் போட்டோ எடுத்து முகநூலில் போடுவார்கள்.

படம் வெளியீடும் தேதி உறுதி செய்யப்படுவதற்கு முன்பே ஆல்பர்ட் தியேட்டரில் ரிசர்வ் செய்ய்ப்பட்டது.

 

இன்றைக்கு அவர்கள் இந்தக் கபாலிக்கு செலவழித்திருக்கும் ஒவ்வொரு ரூபாயும், சக சாமான்ய மக்களு்ககு எதிராக அவர்கள் வீசியிருக்கும் விஷ அம்புகள்தான்..!

யார் இதைக் கேட்பது..? இதைச் செய்ய வைத்திருப்பதே மாநில முதலமைச்சரும், அவருடைய உடன் பிறவா குடும்பத்தினரும்தான். அவரது அனுக்கிரஹம் இல்லாமல் யாரும் இதை செய்திருக்க முடியாது..!

கொடுமை.. கொடுமை என்று கோவிலுக்கு போனால்.. அங்கேயும் ஒரு கொடுமை தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஆடியது என்பார்களே.. அது இதுதான்..!

தியேட்டர் கட்டணங்களில் இத்தனை ஊழல்களை திரைப்படத் துறையினரே செய்துவிட்டு, ‘திருட்டு டிவிடியில் படம் பார்க்காதீர்கள்’ என்றும், ‘திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் இணையத்தளங்களை செயல்படவிடக் கூடாது’ என்றும் சொல்வதெல்லாம் தனக்கு வந்தால் மட்டுமே அது ரத்தம்.. அடுத்தவனுக்கு வந்தால் அது தக்காளி ரசம் என்பதுதான்..!

120 ரூபாய் டிக்கெட்டை கொடுத்துவிட்டு “படம் பார்க்க வா..” என்று சொல்லியும் கேட்காமல், திருட்டு டிவிடியில் படம் பார்த்தால் அது தவறு என்று சொல்வதுகூட ஒரு விதத்தில் நியாயம்.

ரீலிஸ் தேதிக்கு முந்தைய நாளில் இரவு 11 மணியிலிருந்து திரையிடப்பட்டது.
கனடாவில் விடிய விடிய கபாலி – ஏமாறுவதில் உள்நாடு வெளிநாடு வேறுபாடில்லை.

ஆனால் அநியாயமாக 1000 ரூபாய்க்கு டிக்கெட் விலையை ஏற்றி வைத்துவிட்டு “நீ திருட்டு டிவிடியில் பார்க்காதே…” என்று சொல்வது எந்த வகையில் நியாயம்..?

இங்கே யார் நீதி, தர்மம், நியாயமெல்லாம் பேசுவது என்கிற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது..!

தயாரிப்பாளர் தாணுவும், ரஜினியும் பிலாத்து மன்னனை போல “எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்று கை கழுவ முடியாது.. இந்தப் பாவத்தில் அவர்களுக்கும் பெரும் பங்குண்டு..

இ்பபோதுவரையிலும் அவர்களிடமிருந்து ஒரு செய்திகூட வரவில்லை. ஒரு தடுப்பாணைகூட வரவில்லை. ஆக.. இந்தக் கோல்மாலில், ஊழலில், முறைகேட்டில் அவர்களுக்கும் மறைமுகமான ஒப்புதல் உண்டு என்பதாகத்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை நோக்கிய பாதை அல்ல.. அழிவை நோக்கிச் செல்லும் பாதை.. பணம் படைத்தவனும், அதிகாரம் படைத்தவனும் மட்டும்தான் கோடம்பாக்கத்தில் இனிமேல் நீடிக்க முடியும் என்பதை இந்தக் ‘கபாலி’ சுட்டிக் காட்டியிருக்கிறான்..!

இப்படி படத்திற்கு முன்பேயே விமர்சனம் எழுத வைத்தது ஒன்றுதான், இந்தப் படத்தின் மூலம் சாமான்யனுக்கு கிடைத்திருக்கும் லாபம்..!

ஜெய்ஹிந்த்..!
‪#‎Kabali ‪#‎Neruppuda ‪#‎Kabalida ‪#‎KabaliMovie ‪#‎Rajini ‪#‎Thanu ‪#‎PaRanjith ‪#‎CinemaTheatreTicket ‪#‎JazzCinemas ‪#‎VCreations ‪#‎SasikalaFamily ‪#‎Jayalalitha ‪#‎Ilavarasi ‪#‎Vivek ‪#‎TNGovt ‪#‎HouseFull ‪#‎BlackTicket ‪#‎Corruption

_________________________

Raja Rajendran

July 19 at 8:54pm ·

………………

வெற்றி தியேட்டரில் காலை 4 மணி முதல் கபாலி படம் திரையிட தொடங்கியது
வெற்றி தியேட்டரில் காலை 4 மணி முதல் கபாலி படம் திரையிட தொடங்கியது டிக்கெட்டில் கட்டணம் இல்லை………………

இந்த கபாலிகர்கள் ஆடும் ஆட்டத்தைக் காண வேண்டுமே ? உச்சகட்ட அருவருப்பு.

அனைத்துக் கார்ப்பரேட் கம்பெனிகள், தகவல் தொழில்நுட்ப எம் என் சிக்கள்……..தங்கள் கைகளில் கபாலி வெளியாகும் மிகத் தரமான தியேட்டர்களின் டிக்கெட்டுகளை கைகளில் வைத்துக் கொண்டு, டிக்கெட் விலையைக் காட்டிலும் பல மடங்கு விலை உயர்த்தி, தம் தொழிலாளர்கள் கைகளில் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது, ஒரு சில தலையில் அடித்துக் கொண்டு விலையில்லாமல், விடுமுறையும் கொடுத்து தங்கள் ஊழியர்களை அப் படத்திற்கு அனுப்பி வைக்க இருக்கிறது.

Cognizant கம்பெனி 200 டிக்கெட்டுகளை ரூ.500 விலையில் AGS கம்பெனியிடம் வாங்கியதற்கான ரசீது.
Cognizant கம்பெனி தங்கள் ஊழியர்கள் வேலை நாளாக இருந்தாலும் கபாலி படம் பார்ப்பது அவசியம் என்பதால் AGS கம்பெனியிடம் 200 டிக்கெட்டுகளை ரூ.500 விலையில் வாங்கியதற்கான ரசீது.

என்ன கொடுமை என்றால், இப் பொழுது வரை தன் தலைவன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காத விரக்தியைக் கூட ஒருபுறம் தள்ளிவைத்து விட்டு, இதெல்லாம் தலைவனுக்கு பெருமை என அவன் ரசிகன், நொடிக்கு ஒரு ஸ்டேடசாய்ப் போட்டுக் கொண்டு இருக்கிறான் நெருப்புடா என்று. அட வேகாத பருப்பே ?

ஏரோப்ளேனில் கபாலி படத்தை அந்தக் கம்பெனிகாரன் ரஜினி ஃபேன் என்பதற்காகவா வரைந்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறாய் ? அது ஒரு நூதன விளம்பரம் அய்யா. அதற்கு சில லட்சங்களை அந்த ஃப்ளைட் கம்பெனிக்காரன் தயாரிப்பாளரிடமோ, விநியோகிஸ்தர்களிடமோ பெற்றிருப்பார்.

சரி, நாம அந்த பிரீமியம் டிக்கெட்டுக்குள்ள போய்டுவோம்.

சென்னை நிலவரப்படி எல்லா தியேட்டர் டிக்கெட்களையும் படச் சம்பந்தப்பட்டவர்களே முதல் மூன்று நாட்களுக்கு பல்க்காக பதுக்கி வைத்துவிட்டதாக பரவலான குற்றச் சாட்டு எழுந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.

இனி அது கள்ளத்தனமாய் 500 முதல் 2000 வரை, படம் சக்சஸ் என்றால் 5000 வரை கூட விற்கப்படப் போகிறது, ஆனால் அரசுக்கு அதே 30 ரூபாய் மட்டுமே ஒரு டிக்கெட்டுக்கு வரியாக கிட்டும்.

யார் ஏமாளி ? அரசா ? சாமானியர்களான நாமா ?

முதலில் இது ரஜினி படம் அப்படித்தான் இருக்கும் என்றெல்லாம் உணர்ச்சிவசப்படுவதை தணியுங்கள். அல்ரெடி வேதாளம் அஜித்துக்கும் இதே நிகழ்ந்து, இனி அஜித் படங்கள் எல்லாவற்றுக்கும் இதே நிகழப் போகிறது. ரஜினியை போலவே அஜித்தும் எப்போதும் தொடர்பு எல்லைகளுக்கு வெளியே இருப்பவர்தான், கேட்க நாதி ஊடகங்களுக்கு கூட இருக்காது 🙁

இப்படி விட்டுக்கொண்டே இருந்தால், அடுத்து விஜய், சிவ கார்த்திகேயன் என்று அந்தக் காட்டேரிகள் தொடர்ந்து நம்மைச் சுரண்டத்தான் செய்யப் போகின்றன.

கபாலியின் கோமாளிகள்
கபாலியின் கோமாளிகள்

நண்பர் ஒருவர் அழைத்தார். மச்சி, ஈகா தியேட்டர்ல டிக்கெட் இருக்காமாம், ஆனா ஒரு டிக்கெட் 1500 ரூபாயாம். எவ்வளவு லாபம் எனப் பாருங்கள். தியேட்டருக்கு வெளியே ப்ளாக் விற்பவர்கள் டபுள் ரேட் சொன்னாலே அது அநீதி என்று சக ப்ளாக் விற்பவர்களே சண்டை போடுவதைக் கண்டிருக்கிறேன்.

எத்தனை முறை பார்த்தாலும் அவர்களின் தரம் சற்றும் உயர்ந்திருக்காது, அவர்களை அந்த நிலையிலேயே உயராமல் பார்த்துக் கொண்டிருக்கும் அருகாமை காவல் நிலையங்கள்.

இன்று அந்தக் கலாச்சாரம் முற்றிலும் அருகிப் போய்விட்டது, ஆனால் இந்த நவீன கள்ள டிக்கெட் விற்பனையாளர்களுக்கு சிறிதேனும் பிசினஸ் எதிக்ஸ் இருக்கிறதா எனப் பார்த்தீர்களா ?

ஒரு டிக்கெட்டுக்கு 1000 முதல் 1300 வரை லாபம் வேண்டுமாம். இப்படி பத்து டிக்கெட் விற்றால் 10000 – 13000 வரை லாபம் என்றால்………..பல லட்சம் டிக்கெட் விற்றால் எத்தனை சைபர்களை சேர்ப்பது என கற்பனை செய்து பாருங்கள்.

இதுதான் சுரண்டல், அப்பட்டமான கொள்ளை.

rasigan
கபாலி படத்தின் ரசிகர் ஷோ பார்க்க முடியாமல் போன பூம்புகார் ரஜினி ரசிகர் மன்றம் இப்படத்தை பார்க்க விரும்பவில்லை என அறிவித்துள்ளது

மலை, மணல், ஏரி, காடு, சுகாதாரம், கல்வி என்று கொள்ளையிட்ட கூட்டம் நம் கேளிக்கை மீதும் கை வைத்து விட்டதே ?

கபாலிக்காக எல்லாச் சட்டங்களும் வளைந்து கொடுக்கும், இயைந்து குனிந்து கும்பிடு போடும்.

முதல் மூன்று கோல்டன் நாட்களுக்கு கார்ப்பரேட் கம்பெனிகளைத் தாண்டி எந்த ஆன்லைன் கொம்பர்களுக்கும் டிக்கெட் கிட்டாது.

ரசிகமன்றத் தலைவர்களுக்கு எலும்புத் துண்டுகளாய் சில ஊரோர பாடாவதி திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு டிக்கெட்டுகளை வீசியெறிவார்கள்.

ரஜினிக்காவா இப்படி நடைபெறுகிறது ?

இல்லை ஆகப் பெரிய வெற்றியைக் கொடுத்துவிட்ட ரஞ்சித்திற்காகவா ??

ஒருவேளை விளம்பரம் செய்வதில் மன்னரான தயாரிப்பாளர் தாணுதான் இந்த தில்லாலங்கடி செய்கிறாரோ ???

படத்தின் மொத்த விநியோக உரிமையைப் பெற்றிருக்கும் நிறுவனம் அம்மாவின் வலதுகரத்தின் இரு கரங்களாக இருப்பதால் இருக்கலாம் !

கபாலி கோமாளிகள்
சென்னை காசி தியேட்டரில் ரஜினி ரசிகர்கள் – ஊடகங்களுக்கு காத்திருக்கிறார்கள்.

டிக்கெட் விலை 1000 என்ன 10000 கொடுத்தும் கூட முதல் நாளில் பார்த்தே ஆகிவிட வேண்டும் என்கிற வெறியை உங்களுக்குள் திணிக்க வேண்டிய வேலைகளைப் பார்க்க பலர் உள்ளனர்.

மகிழ்ச்சி.

தலைவர் படம் என்றால் அப்படித்தான் இருப்போம், அப்படித்தான் செலவழிப்போம் என நாம் பொங்கவும் செய்வோம்.

பொங்க வேண்டும், அப்பத்தான் ஏழை கம்பெனி ஜாஸ் சினிமாக்கள் வீட்டில் உலை பொங்கும்.

என்ன…….. விழாக்காலங்களில் ஆம்னி பஸ் டிக்கெட் கொள்ளை, ஸ்வீதா ரயில் டிக்கெட் விலை, ப்ரீமியம் தட்கால்களுக்கும் இதே போல் பொங்குவோம்,

தலையில் இப்படி கொள்ளியை வைத்துச் சொறிந்துக் கொள்ளும் நம்மைப் பார்த்து கபாலி நெருப்புடா என்று அப்போது சரியாகக் கத்துவார்

________________

நாஞ்சில் மனோ

5 hrs ·

கபாலி படம் பார்த்த சில போராளீஸ் உன்மத்தம் பிடிச்சாப்ல இருக்குறது தெரியுதா ?

அப்போ என்னமோ நடந்துருக்கு, நான் படத்தை சொன்னேன்.

_________________________

Albert arockyaraj 10 hrs ·

ரொம்ப நாளா இந்த சினிமா விமர்சனம் எல்லாம் எழுதாம இன்னைக்கு கபாலி முதல் நாள் முதல் ஷோ பார்த்துட்டு எவ்வளவோ எழுதனும்ன்னு நினைச்சுகிட்டு போனேன் அம்புட்டுலயும் மன்னல்லி போட்டுட்டான் இந்த ரஞ்சித் பய…

ஒரு கட்டத்துல உண்மைலேயே நாம படத்துக்கு தான் வந்திருக்கோமான்னு எனக்கே சந்தேகமாகிடுச்சு தியேட்டர்ல அப்படி ஒரு மயான அமைதி,

படத்தை பத்தி சொல்லனும்னா ஜெயில இருந்து வருவாரு கொலை பன்னுவாரு குடும்பத்த கண்டுபுடிப்பாரு கொலை பன்னுவாரு அம்புட்டு தான்..

மெட்ராஸ் படத்துல நடிச்ச அத்தனை பேரும் நடிச்சிருக்காங்க நடுவுல ரஜினி கெஸ்ட் ரோல் பன்னிருக்காரு..

படம் ஏதோ டான் படம்ன்னு சொல்லி எடுத்து அதுல புரட்சிய தெளிக்கிறேன்னு எதையோ தெளிச்சிருக்காரு ரஞ்சித்து கண்டிப்பா இன்னொரு பிரச்சனைய கிளப்புவானுக…

downloadநீ என்ன ஆண்ட பரம்பரையா நீங்க மட்டும் தான் ஆளணுமான்னு வில்லன் சொல்றதும்

நான் ஆண்ட பரம்பரையில்லைடா ஆளுவேன்டான்னு ரஜினி பதில் சொல்றதும் ஆகா ஆகா என்ன புரட்சி…

ஆனா இந்த வசனம் எதுக்கு அந்த இடத்துல சம்பந்தமே வந்துச்சு? யோசிச்சு யோச்சிச்சு பாக்குறேன் ஒன்னும் புடிபடல…

இப்படி புரட்சி கருத்துகள பேசுனதாலயோ இல்லை படம் ஊத்திக்கும் அம்புட்டு டிஸ்ட்ரிபியுட்டரும் வீட்டு வாசல வந்து உட்க்காந்திருவாங்கன்ற தாலையோ தான் போல தலைவரு அமெரிக்கால போய் உட்காந்துகிட்டாரு…

காமடி இல்லை… பாட்டு ஏற்கனவே நிறைய கேட்டதால புடிச்சிருந்துச்சு… ஒரு நல்ல ஸ்டன்ட் இல்லை… எந்த நடிகருமே ஒழுங்கா நடிச்ச மாதிரி தெரியல… ரஜினுக்கு வயசானது ரொம்ப தெரிஞ்சது… எந்திரன்ல இருந்த ஒரு எனர்ஜி இல்லை…

மொத்ததுல ரஞ்சித்து ரஜினிய வச்சு செஞ்ச்சிருக்கான்… இனி பேஸ்புக் நண்பர்கள் வச்சு செய்யலாம்… மகிழ்ச்சி….

Shankar A

20 hrs ·

நெருப்புடா….
முடிஞ்சா நெருங்குடா.
ஜாஸ் சினிமாஸ்டா
ஜெயலலிதா டா

Editör Gowtham

July 16 at 2:57pm ·

‪#‎TamilRockers கபாலியில் ரஜினிக்கு அடுத்து பெரிய ட்ரெண்டாக சில நாட்களாக ஒடிக்கோண்டிருக்கிறது… இதில் ஆச்சர்யம் ‪#‎WeSupportTamilRockers என்ற ஹேஷ்டேக் முலம் அவர்களுக்கு ஆதரவும் பெருகியிருப்பது…

இதற்கு முக்கிய காரணம் கபாலி டிக்கெட்களுக்கான விலையாகத்தான் இருந்திருக்க வேண்டும்…

கேரளத்து படங்கள் மட்டும் தலைகீழாய் நின்று தண்ணி குடித்தாலும் அவ்வளவு எளிதில் அவர்களுக்கு கிடைப்பதில்லை.. அதன் சூட்சமமும் புரியவில்லை

Kabilan Krs

July 16 at 5:50pm ·

தம்பு கருத்துக்கு 1000likes அப்பால கேரளாவுள்ள எல்லா தியேட்டரிலும் அரசு அனுமதித்த கட்டணம் தான்.. 50, 80 அதிகபட்சம் கொச்சினில் 110 என்று கேள்வி..
இவனுங்கள்ள தியேட்டரில் கவுண்டரில் முறையாக அரசு அனுமதித்த டிக்கெட்ட விற்றக சொல்லு… மாட்டாங்க..

சத்தியம் மற்றும் நகர்புறத் தியேட்டரிகளிளேயே காம்போ விற்க சொல்லி.. வர்புற்தல் வேறயாம்..

என்னத்த சொல்ல…

Kabilan Krs

July 15 at 11:52am ·

அதிகாரபூர்வமற்ற தகவல்கள்…
கபாலி 21 மாலையே சென்னையில் வெளியாக இருக்கிறது. முதல் காட்சிக்கான டிக்கெட் கட்டணம் நான்கு இலக்கங்களில்.. அதனை தொடர்ந்து 22 அதிகாலை 4மணிக்கு அடுத்த காட்சி டிக்கெட் விலையோ குறைந்தது 500 ஒவயாயாம்…. எந்திரனில் ஆரம்பித்துவைத்து கொலை ஜாரி கொள்ளை இதிலும் தொடர்கிறது.. அதிக பணம் கொடுத்து பார்த்துட்டு படம் நல்லா இல்லேன்னா திட்டுன்னா…. என்னமோ போடா மாதவா..

Rajesh Kumar குப்புற படுக்கறதுல கூட குறியீடு ஆராயும் கோஷ்டி எல்லாம் வீக்கெண்ட்லதான் படத்துக்கே போகுது.. அடுத்த வாரம் எதிர்பார்க்கலாம்..

Like · Reply · 4 · 43 mins

தியேட்டரில் காத்து கிடக்கும் ஊடகங்கள் மற்றும் ரசிக பட்டாளம். சென்னை காசி தியேட்டரில் ரஜினி ரசிகர்களுக்கு டிக்கெட் இல்லை என்பதால் பேனர்களை இறக்கி கிழித்தனர், ரசிகர்கள். அத்தனை டிக்கெட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் தொகையில் கொடுக்கப்பட்டதால் ரசிகர்களுக்கு டிக்கெட் இல்லையாம்! இந்த இடத்தில் என்.டி.டி.வி போன்ற தில்லி சேனல்கள் காத்துக் கிடந்த காட்சியும் காணக்கிடைத்தது.

துக்கக் குறிப்பு: கபாலி ‘அருள்’ பாலித்தால் நமத்துப் போன கபாலி திரைப்படம் குறித்த விமரிசனம் இன்றே வெளியிடப்படும்.

சந்தா