Friday, December 9, 2022
முகப்புசெய்திசென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம் - படங்கள்

சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம் – படங்கள்

-

நீதிமன்ற அடக்குமுறை விதிகளுக்கு எதிராக 25-06-2016 திங்கள்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற பகுதியை முற்றிலுமாக முடக்கிய வழக்கறிஞர் போராட்டம்.

ஜூலை 25 முற்றுகைப் போர் வெல்லட்டும்!
வழக்குரைஞர் வாய்ப்பூட்டு சட்டம் தகர்த்தெறியப்படட்டும்!
—————————————————————————
நீதிபதிகள் மன்னர்கள் அல்ல!
வழக்குரைஞர்கள் அடிமைகள் அல்ல!

ஜூலை 25, 2016
வழக்குரைஞர்கள் சட்டத் திருத்த விதிகளை திரும்பப் பெறக் கோரி……
சென்னை உயர்நீமன்ற முற்றுகைப் போராட்டம்

IMG_20160725_104632

IMG_20160725_092117IMG_20160725_092132IMG_20160725_092213IMG_20160725_094747chennai-highcourt-siege-5chennai-highcourt-siege-3

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

படங்கள்: வினவு செய்தியாளர்கள்

 

 1. முற்றுகைப் போராட்டம் குறித்து சில குறிப்புகள்

  1. வழக்கறிஞர்களை காட்டிக்கொடுத்து பதவியை அடைய நினைக்கும் பார்கவுன்சில் செல்வத்தையும், பிரபாகரனையும் வழக்கறிஞர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள்.

  2. செல்வம், பிரபாகரன் – இருவருடைய ஊர்க்காரர்களும் சொந்த ஊரின் பெயரை கெடுக்கிறார்கள் என ரெம்பவும் நொந்துகொண்டார்கள். ஊர்ப்பக்கம் வரட்டும். பார்த்துக்கொள்கிறோம் என்றார்கள்.

  3. நீதிபதிகளின் யோக்கியதையை வண்டி வண்டியாக சொன்னார்கள். இவ்வளவு ’சிறந்த தகுதிகள்’ கொண்டவர்களிடமா மக்கள் நீதிக்காக பல ஆண்டுகள் காத்து கிடக்கிறார்கள் என நினைக்கும் பொழுதே சோர்வாகிபோனது.

  4. நேர்மையான நீதிபதியை எப்படி தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதை வழக்கறிஞர்கள் அருமையாக சொன்னார்கள்.

  5. உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழிக்காக போராடிய சென்னை பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவனை வழக்கறிஞர் என நினைத்து (!) இடைநீக்கம் செய்து, பார்கவுன்சில் ஊருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஊரிலிருப்பவர்கள் இப்பொழுது தன்னை வழக்கறிஞர் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என பார்கவுன்சிலை அந்த மாணவர் செமையாக கலாய்த்தார்.

  6. ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் சொன்னதை ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களும் ஒற்றுமையுடன் கட்டுப்பட்டார்கள். அருமையான தலைமை.

  7. தில்லி வழக்கறிஞர்கள் தமிழக வழக்கறிஞர்களின் மீதான அடக்குமுறையை கண்டித்து ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் இந்த போராட்டம் பற்றிப் பரவவேண்டும்.

  8. ஒரு போராட்டம் நடந்தால் ஆளும்கட்சியை சேர்ந்தவர்களை தவிர மற்ற கட்சித் தலைவர்கள் எல்லாம் வாழ்த்து சொல்ல வருவார்கள். அப்படி யாரையும் காணோம். என்ன ஆனார்கள்?

  9.இந்த போராட்டத்தின் துவக்கம் முதலே கீழமை நீதிமன்ற கூட்டமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர்கள் தான் முன்னணியில் நிற்கிறார்கள். இப்படி ஒரு கூட்டமைப்பு தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாதாம். தமிழ்நாட்டை ஏன் சோதனை களமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் என? இப்பொழுது தான் புரிகிறது.

  இப்படை தோற்கின் எப்படை வெல்லும்! போராட்டம் வெற்றியடைய வாழ்த்தும்….

  Selvam Ramki

 2. வழக்கறிஞர் சட்டத்திருத்தம் தற்போது நிறுத்தி வைக்கப்படுகிறது என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவித்துள்ளார்.

  வழக்கறிஞர்களுக்கான சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி தமிழக வழக்கறிஞர்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஜூலை 25-ம் தேதி (நேற்று) சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

  நேற்று முன்தினம் இரவு இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா, 126 தமிழக வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்ததால் வழக்கறிஞர்களின் போராட்டம் சூடு பிடித்தது.

  இந்த போராட்டத்தின் எதிரொலியாக தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் அனைத்து நீதிபதிகளும் பங்கேற்ற முழு அமர்வு கூட்டம் நேற்று மாலை சுமார் முக்கால் மணி நேரம் நடந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதி எஸ்.மணிக்குமார் தலைமையில் வழக்கறிஞர் சட்டதிருத்தம் தொடர்பான 5 நீதிபதிகள் அடங்கிய விதிகள் குழு கூட்டமும் நடந்தது. அதில் வரும் ஜூலை 29-க்கு முன்பும் கூட இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்தை முழுமையாக வாபஸ் பெறும் வரை வழக்கறிஞர்களின் போராட்டம் தொடரும் என வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திருமலைராஜன் அறிவித்தார்.

  இந்த போராட்டத்தின் எதிரொலியாக வழக்கறிஞர் சட்டத்திருத்தம் தற்போது நிறுத்தி வைக்கப்படுகிறது என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவித்துள்ளார்.

  http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/article8901706.ece?homepage=true

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க