“தற்போது நீங்கள் ‘கருப்பின’ அமெரிக்காவில் நுழைகிறீர்கள்!”

சமீபத்தில் அமெரிக்க போலீசு இரண்டு கருப்பின ஆண்களை சுட்டுக் கொன்றது, அங்கே அலையலையாக எதிர்ப்புகளையும்,போராட்டங்
கேலிச்சித்திரம்: Victor Ndula, Kenya
நன்றி: Cartoon Movement
—————————————————————
காஷ்மீர் முற்றுகை!

காஷ்மீர் மக்கள் மீது இந்தியா தொடுத்துள்ள கொடூரமான போர்! 45-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொலை1600-க்கும் மேற்பட்டோர் காயம்! இணையம், தொலைபேசிக்கு தடை!, ஊடகங்கள், செய்திகளுக்கு தடை! மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்களும் கூட இராணுவத்தால் தாக்கப்படும் நிலை! மாநிலம் முழுக்க போலிசின் சோதனையும், கைதும் பிரம்மாண்ட அளவில்! நீரும் மின்சாரமும் கூட தடை செய்யப்பட்டிருக்கிறது! முழுமையான ஊடரங்கு சட்டம் அமலில்!
ஆனாலும் காஷ்மீர் மக்கள் “ஆசாதி – விடுதலை” என்ற முழக்கத்துடன் தெருவிற்கு வருகின்றனர்.
கார்ட்டூன் நன்றி: Rebel Politik Arun
———————————————————-
அமெரிக்காவில் ஆயுதவிற்பனை!

ஆர்லாண்டோ படுகொலையை அடுத்து துப்பாக்கிகள் எளிதாக கிடைப்பது குறித்த விவாதங்கள் வழக்கம் போல நடக்கின்றன. விற்பனையும் வழக்கம் போல !
கேலிச்சித்திரம்: எகிப்தின் Sherif Arafa
நன்றி: Cartoon Movement
—————————————————-
மத்திய தரைக் கடல் – அகதிகளின் நரகம்

விடியலைத் தேடி செல்லும் அகதிகள் கடலில் கொல்லப்படுவதால் இனி மத்திய தரைக் கடலை, மேற்குலகம் உருவாக்கிய அகதிகளின் நரகம் என அழைக்கலாம?
கார்ட்டூன் நன்றி: Miguel Villalba Sánchez (Elchicotriste),Spain
நன்றி: Cartoon Movement
——————————————————–
அமெரிக்காவின் தேசியக் கொடி எது?

அடுத்த அதிபர் ஹிலாரி கிளிண்டனா, டொனால்ட் ட்ரம்பா? கேள்விக்கு விடை விரைவில் தெரியும். ஆனால் கேள்விக்கிடமற்ற உண்மை அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கம்!
வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் மற்றும் படங்கள்.