privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்அமெரிக்கா - அகதிகள் - காஷ்மீர் : கேலிச்சித்திரங்கள்

அமெரிக்கா – அகதிகள் – காஷ்மீர் : கேலிச்சித்திரங்கள்

-

“தற்போது நீங்கள் ‘கருப்பின’ அமெரிக்காவில் நுழைகிறீர்கள்!”

"தற்போது நீங்கள் 'கருப்பின' அமெரிக்காவில் நுழைகிறீர்கள்!"
“தற்போது நீங்கள் ‘கருப்பின’ அமெரிக்காவில் நுழைகிறீர்கள்!”

 

சமீபத்தில் அமெரிக்க போலீசு இரண்டு கருப்பின ஆண்களை சுட்டுக் கொன்றது, அங்கே அலையலையாக எதிர்ப்புகளையும்,போராட்டங்களையும் உருவாக்கியிருக்கிறது.

கேலிச்சித்திரம்: Victor Ndula, Kenya
நன்றி: Cartoon Movement

—————————————————————

காஷ்மீர் முற்றுகை!

காஷ்மீர் முற்றுகை!
காஷ்மீர் முற்றுகை!

காஷ்மீர் மக்கள் மீது இந்தியா தொடுத்துள்ள கொடூரமான போர்! 45-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொலை1600-க்கும் மேற்பட்டோர் காயம்! இணையம், தொலைபேசிக்கு தடை!, ஊடகங்கள், செய்திகளுக்கு தடை! மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்களும் கூட இராணுவத்தால் தாக்கப்படும் நிலை! மாநிலம் முழுக்க போலிசின் சோதனையும், கைதும் பிரம்மாண்ட அளவில்! நீரும் மின்சாரமும் கூட தடை செய்யப்பட்டிருக்கிறது! முழுமையான ஊடரங்கு சட்டம் அமலில்!
ஆனாலும் காஷ்மீர் மக்கள் “ஆசாதி – விடுதலை” என்ற முழக்கத்துடன் தெருவிற்கு வருகின்றனர்.

கார்ட்டூன் நன்றி: Rebel Politik Arun

———————————————————-

அமெரிக்காவில் ஆயுதவிற்பனை!

அமெரிக்காவில் ஆயுதவிற்பனை!
அமெரிக்காவில் ஆயுதவிற்பனை!

ஆர்லாண்டோ படுகொலையை அடுத்து துப்பாக்கிகள் எளிதாக கிடைப்பது குறித்த விவாதங்கள் வழக்கம் போல நடக்கின்றன. விற்பனையும் வழக்கம் போல !

கேலிச்சித்திரம்: எகிப்தின் Sherif Arafa
நன்றி: Cartoon Movement

—————————————————-

மத்திய தரைக் கடல் – அகதிகளின் நரகம்

மத்திய தரைக் கடல் - அகதிகளின் நரகம்
மத்திய தரைக் கடல் – அகதிகளின் நரகம்

விடியலைத் தேடி செல்லும் அகதிகள் கடலில் கொல்லப்படுவதால் இனி மத்திய தரைக் கடலை, மேற்குலகம் உருவாக்கிய அகதிகளின் நரகம் என அழைக்கலாம?


கார்ட்டூன் நன்றி: Miguel Villalba Sánchez (Elchicotriste),Spain
நன்றி: Cartoon Movement

——————————————————–

அமெரிக்காவின் தேசியக் கொடி எது?

அமெரிக்காவின் தேசியக் கொடி எது?
அமெரிக்காவின் தேசியக் கொடி எது?

அடுத்த அதிபர் ஹிலாரி கிளிண்டனா, டொனால்ட் ட்ரம்பா? கேள்விக்கு விடை விரைவில் தெரியும். ஆனால் கேள்விக்கிடமற்ற உண்மை அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கம்!

வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் மற்றும் படங்கள்.

  1. பாக்கிஸ்தான் செய்யும் பொய் பிரச்சாரத்தை தமிழில் படிப்பது போல் இருக்கிறது… காஷ்மீரில் நடப்பது ஒரு மதவெறியால் தூண்டப்பட்ட பிரிவினை வாதம். இன்று காஷ்மீர் பிரிவினையை ஆதரிக்கும் கூட்டம் நாளை ஒட்டு மொத்த இந்தியாவை துண்டாடவும் தயங்க போவதில்லை. இந்தியா ராணுவம் என்பது ஏதோ வானத்தில் இருந்து குதித்த ராணுவம் அல்ல, அதில் நம்மோடு படித்தவர்கள், நம் மாமன் மச்சான்கள், நம் உறவினர்கள், நம் நண்பர்கள் தான் இருக்கிறார்கள்… அவர்களுக்கும் குடும்பம் தாய் தங்கைகள் இருக்கிறார்கள், அவர்களுக்கும் மகன் மகள்கள் இருக்கிறார்கள். மதவெறி பிடித்த கூட்டம் கல்லெறியும் போது முடிந்தளவுக்கு ராணுவத்தினர் பொறுமை காக்கிறார்கள் ஆனால் மதவெறி பிடித்த கூட்டம் சட்டத்தை மதிக்காமல் வன்முறையில் இறங்கும் போது தான் ராணுவம் கலவரத்தை அடக்க துப்பாக்கியால் சுட வேண்டியிருக்கிறது.

  2. சுப்ரமணியனா ? சுப்ரமணியன் சுவாமியா ?மத வெறிக் கூட்டம் கல்லெறிகிறது.தேச பக்திக் கூட்டம் சுட்டுத் தள்ளுகிறது.கல்லெறி பட்டு கணக்கிலடங்காத நமது மாமன் மச்சான்கள் செத்துக்கிடக்கின்றனர்.பாடைகட்ட நாம் புறப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.அப்புறம் ஒட்டுமொத்த இந்தியாவைக் கட்டி அழவேண்டும்.சுப்ரமணி தேச பக்தி ஒப்பாரி ஒன்று தீட்டித் தருவார்.அப்புறம் காஷ்மீரைக் கபளீகரம் செய்துவிட்டு ஏப்பம் விட வேண்டும்.இதுதான் இந்தியாவை ஏப்பம்விடுகிறவர்களின் திட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க