Friday, December 9, 2022
முகப்புகட்சிகள்அ.தி.மு.கசொகுசா போகும் முதல்வருக்காக ஏழைங்க நாங்க சாகணுமா ?

சொகுசா போகும் முதல்வருக்காக ஏழைங்க நாங்க சாகணுமா ?

-

சொகுசா போகும் முதல்வருக்காக ஏழைங்க நாங்க சாகனுமா? ஒரு உசுரு போயிருச்சு! இன்னொரு உசுரு ஊசலாடுது! -ஜெ. தொகுதியில் மக்களின் துயரம்!

*****
rknagar-protest-against-death-caused-by-jaya-traffic-changes-2ஜெவுக்காக வேகத்தடைகள் அகற்றம்!

தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா நடைபெற்ற பொழுது ஆர்.கே. நகர் தொகுதி ஜெயலலிதா போட்டியிடும் தொகுதி என்பதால் “சிறப்பாக” கவனிக்கப்பட்டது. இதனால் இன்றைய நாள் வரைக்கும் துயரங்களை சுமக்கிறார்கள்.

தேர்தல் சமயத்தில், சாக்கடை சரியில்லை, சாலை சரியில்லை என அரசு அதிகாரிகளை சந்தித்தால், தேர்தல் வரைக்கும் எங்களால் எதுவும் செய்யமுடியாது என தேர்தல் விதிமுறைகளை சுட்டிக்காட்டி பேசும் அரசு அதிகாரிகள் தான், ஜெயலலிதா சிறை சென்று குமாரசாமியின் தயவால் வெளியே வந்த பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலின் பொழுது, வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பொழுது, ஒரு ராத்திரியில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை புதுப்பித்து குளு குளு ஏ.சி, கால் தரையில் படாமல் இருக்க வேண்டுமென்பதற்காக சிவப்பு கம்பளம், புதிய கழிப்பறை என எல்லாவற்றையும் கட்டினார்கள்.

ஜெயலலிதா அலுங்காமல் குலுங்காமல் பயணிக்க வேண்டும் என சட்டமன்ற தேர்தலின் போது அவர் பயணித்த RK நகர் தொகுதி வழிகளில் இருந்த அத்தனை வேகத்தடைகளையும் அகற்றினார்கள்.

அப்படி வேகத்தடை அகற்றப்பட்ட ஒரு பகுதி காசிமேடு சூரியநாராயணா பூங்கா, தெரசா பள்ளி. ஜெயலலிதாவிற்காக அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனும், சிறு சிறு விபத்துகளுடன் சாலையை கடந்து வந்தனர். தெரசா பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வீடு வந்து சேரும் வரை அவர்களது பெற்றோர்கள் பதற்றத்துடன் இருந்தனர்.

rknagar-protest-against-death-caused-by-jaya-traffic-changes-1அதிகாரிகளின் மெத்தனம்

இந்த அபாயத்தை உணர்ந்த பகுதி மக்கள், அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க கோரி, பகுதி இளைஞர்கள் ஒரு இயக்கம் போல இயங்கி பகுதிவாழ் பொதுமக்கள் 1500 பேரிடம் கையெழுத்து வாங்கி, புகார் மனுவுடன் மாநகராட்சி மண்டல அதிகாரியை சந்தித்து விஜயகுமாரிடம் அளித்தனர். நான்கு மாதம் காலமாக அப்பகுதி மக்கள் பலமுறை அலைந்து அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.

விபத்தல்ல கொலைகள்!

இந்நிலையில் 25-07-2016 அன்று விக்னேஷ் என்ற 23 வயது இளைஞர் நண்பனுடன் பைக்கில் செல்லும் போது பேருந்து மோதி மரணம் அடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்திய சில மணி நேரத்தில் அதே இடத்தில் மற்றொருவரும் விபத்தில் சிக்கி சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். ஒரே நாளில் நடந்த இரண்டு சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

rknagar-protest-against-death-caused-by-jaya-traffic-changes-3“இது விபத்தல்ல! அதிகாரிகளின் மெத்தனத்தால் நடந்த கொலை!” என நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மறுநாள் 26-07-2016 அன்று திரண்டு ஒன்றரை மணிநேரம் பிரதான சாலையை மறித்து மறியல் செய்தனர். எப்பொழுதும் பிரச்சனையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உரிய அதிகாரிகள் வரமாட்டார்கள். பாய்ந்து குதற போலீசு தானே வந்து சேரும். அதே போலவே போலீசு வந்து கலைந்து செல்லும்படி மிரட்டியது.

’அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை வந்து போகும் முதல்வருக்காக எங்க உயிருபோகுனுமா?’ என ஆவேசமாக போலீசை நோக்கி கேள்வி எழுப்பியதில், தடுமாறிப்போன காவல் உதவி ஆணையாளர் ஸ்டிபன் மற்றும் ஆய்வாளர் ஆபிரகாம் புருஸ் ஒரு வாரத்தில் வேகத்தடை அமைத்தது தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என எச்சரித்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

போராட்டமே தீர்வு!

”கடந்த ஆண்டு இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை ஜெயிக்க வைக்க தொகுதி மக்களை விட பெரும் எண்ணிக்கையில் அதிகாரிகளும், அமைச்சர் பெருமக்களும், அதிமுககாரர்களும் தெருக்களில் சுற்றித் திரிந்தார்கள். வெள்ளம் வந்த பொழுது, ஒரு நாயும் எங்களை வந்து காப்பாத்த வரல்லை! அதனால் எங்கள் ஓட்டு ஜெயலலிதாவிற்கு இல்லை” என பத்திரிக்கைகளுக்கு தைரியமாய் பதிலளித்த ஆர்.கே. நகர் எளிய மக்கள் தான் இப்பொழுது போராடுகின்றனர்.

rknagar-protest-against-death-caused-by-jaya-traffic-changes-4அதிகாரிகளோ, ஜெயலலிதாவோ யாரும் வந்து காப்பாத்த போவதில்லை. தெருவில் இறங்கி போராடினால் தான் நமது உரிமைகளை பெறமுடியும் என்பதை கடந்த நான்கு மாத கால அனுபவத்தின் மூலம் சொந்தமாய் உணர்ந்திருக்கிறார்கள். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, அவர்கள் அதிகாரிகள் யாரையும் நிம்மதியாய் தூங்கவிடப்போவதில்லை.

மக்கள் எழுப்பிய முழக்கங்கள்:

சாலை மறியல், சாலை மறியல்!
வேகத்தடை போடக் கேட்டு
சாலை மறியல், சாலை மறியல்!

உடனே அமைத்திடு, உடனே அமைத்திடு!
வேகத்தடையை உடனே அமைத்திடு!

விக்னேஷ் இறப்பு விபத்தல்ல
அரசின் பச்சை படுகொலை!

வேகத்தடையை போட
சட்டம் ஒன்று இயற்றுனுமா?
கோடிக்கணக்கான பட்ஜெட்டா
மாதகணக்கா போடனுமா?

rknagar-protest-against-death-caused-by-jaya-traffic-changes-5த்தூ…..த்தூ….காரி துப்பு!
அரசு நிர்வாகத்தை காரி துப்பு!

பொறுத்து பொறுத்து பார்த்தாச்சு!
சாவு நிறையை பார்த்தாச்சு!
ஒன்றே தீர்வு, ஒன்றே தீர்வு!
போராட்டம் தான் ஒன்றே தீர்வு!

5 வருஷம் கழிச்சு
சொகுசா போகும் முதல்வருக்காக
ஏழைங்க நாங்க சாகனுமா?
எங்களுடையை உசிரை விட
முதல்வர் சொகுசு முக்கியமா?

மக்கள் மனுவுக்கு பயமில்லை!
மக்கள் கோரிக்கைக்கு பயமில்லை!
உருவாக்குவோம் உருவாக்குவோம்!
மக்கள் போராட்டத்தின் மூலம்
பயத்தை நாம் உருவாக்குவோம்!

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

  1. இப்பொழுது இளைஞர்கள் சிறிய சந்து போன்ற ரோட்டில் இருந்து மெயின் ரோட்டிற்கு மெர்ஜு ஆகும் போது , மெயின் ரோட்டில் என்ன வருகிறது என்று கூட திரும்பி பார்க்காமல் மச மச வென்று ரோட்டில் சென்று இணைகிறார்கள் .

    ஏன் இந்த அளவுக்கு சாலை விதிகள் சீரழிந்தது என்று தெரியவில்லை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க