முன்னுரை
இன்று காஷ்மீர் தீவிரவாதம் பற்றி நாளேடுகளில் படிக்கின்ற வாசகர்கள் பலர் காஷ்மீர் என்றென்றைக்கும் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்து வருகிறது என்று கருதக்கூடும். அது உண்மையல்ல. காஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு என்ற உண்மையை வரலாற்று விவரங்களிலிருந்து சுருக்கமாகத் தருகிறது இக்கட்டுரை. செப்டம்பர், 1999-ல் புதிய ஜனநாயகம் வெளியிட்ட”காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?” என்ற சிறு வெளியீட்டிலிருந்து இதனைத் தொகுத்துத் தருகிறோம்.
================================
ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்தின்கீழ் இருந்த இந்தியாவின் பகுதி (பிரிட்டிஷ் இந்தியா) 1947 ஆகஸ்ட் 15-இல் மவுண்ட் பேட்டன் திட்டத்தின்படி, இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகத் துண்டாடப்பட்டது. நூற்றுக்கணக்கான சமஸ்தானங்கள் தொடர்பாக ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சூழ்ச்சிகரமான ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா, அல்லது தனிநாடாக இருந்து கொள்வதா என்பதை அந்தந்த சமஸ்தான மன்னர்களே தீர்மானித்துக் கொள்வார்கள் என்பதுதான் அந்தத் திட்டம்.
அப்பொழுது காஷ்மீர் சமஸ்தானத்திற்கு டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இராஜபுத்திர அரசர் ஹரிசிங் என்பவர் மன்னராக இருந்தார். இவர் இந்து; மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். இவர் இந்தியா, பாகிஸ்தான் எதனுடனும் சேராமல் தனி நாடாக இருக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ஆளும் வர்க்கங்களும், ஆட்சியாளர்களும் ஆசை காட்டுதல், திரைமறைவுச் சூழ்ச்சிகள், மிரட்டுதல், நேரடியாகப் படையெடுத்தல் போன்ற எல்லா வழிமுறைகளையும் கையாண்டு எப்படியாவது காஷ்மீரைத் தங்களது ஆதிக்கத்தில் கொண்டுவந்துவிட வேண்டுமென்று முயன்று கொண்டிருந்தார்கள்.
1947-க்கு முன்பிருந்தே காஷ்மீர் தனி நாடாகவே இருக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து 1932-இல் அமைக்கப்பட்ட “அனைத்து ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு” என்ற கட்சி போராடி வந்தது. இதன் தலைவர்தான் ஷேக் அப்துல்லா.
ஆரம்பத்தில் முஸ்லிம் மத உணர்வைப் பயன்படுத்தி செல்வாக்கு தேட முயன்ற தேசிய மாநாட்டுக் கட்சி, பின்னர் மத வேறுபாடின்றி போராட ஆரம்பித்தது. 1944-இல் “புதிய காஷ்மீர்” என்ற பெயரில் ஒரு கொள்கை அறிக்கை வெளியிட்டது. அதில், “காஷ்மீர், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்ட தனிநாடாக வேண்டும்; சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவை மற்றும் அதற்குப் பொறுப்பான அமைச்சரவை; கேந்திர தொழிற்சாலைகள் தேசியமயம்; ஏகபோக தனியார் முதலாளித்துவம் ஒழிக்கப்படும்; தேர்ந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் ஆண்களோடு சமமாக பெண்களுக்கு உரிமை” – போன்ற திட்டங்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன.
ஆரம்பத்திலிருந்தே ஷேக் அப்துல்லாவைத் தனது செல்வாக்கிற்குள் கொண்டுவர முயன்றார் முகமது அலி ஜின்னா. காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்ள ஷேக் அப்துல்லாவைப் பயன்படுத்த ஜின்னா எண்ணினார். ஊசலாட்டத்தைக் காண்பித்தாலும் ஷேக் அப்துல்லா, ஜின்னாவின் வலையில் விழவில்லை. “எல்லா மதத்தினரும் சமமாகவும் இணக்கமாகவும் வாழுகின்ற சுதந்திர தனி நாடாகவே காஷ்மீர் இருக்க விரும்புகிறது. இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ அது சேர விரும்பவில்லை” என அறிவித்து ஷேக் அப்துல்லா மக்களைத் திரட்டினார். காஷ்மீர் மக்களும் இதையே விரும்பினர். 1947 ஆகஸ்டில், காஷ்மீர் தனி நாடாகவே இருக்கும் என மன்னர் ஹரிசிங் அறிவித்திருந்தார்.
1947 அக்டோபர் 22-இல் பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்து ஆக்கிரமித்தன. மன்னர் ஹரிசிங்கின் இராணுவம் பலவீனமான நிலையில் இருந்ததால், பாகிஸ்தான் படைகள் வேகமாக முன்னேறின. பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லாமல் காஷ்மீரைச் சூறையாடி முன்னேறி, தலைநகர் சிறீநகரையே வளைத்துக் கொண்டன பாகிஸ்தான் படைகள். ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர்கள்தான் பாக் படையை எதிர்த்து ஆங்காங்கே போராடினர்.
மன்னர் ஹரிசிங் இந்தியாவின் இராணுவ உதவியை நாடினார். இதன் பொருட்டு காஷ்மீரை இந்தியாவுடன் இடைக்காலமாக (தற்காலிகமாக) இணைத்தார். 1947 அக்டோபர் 26-இல் இணைப்புக்கான ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். ஷேக் அப்துல்லாவும் அந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்ட பின்னரே, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உடனே பாகிஸ்தான் படையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி பின்னோக்கி விரட்ட இந்தியப் படைகள் அனுப்பப்பட்டன. சிறீநகர் முற்றுகையை உடைத்து இந்தியப் படைகள் முன்னேறின.
காஷ்மீர் இந்தியாவுடன் இடைக்காலமாகத்தான் (தற்காலிகமாக) இணைக்கப்பட்டது. அதாவது, காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு -ஆகிய மூன்று விசயங்களை மட்டும் இந்தியா கவனித்துக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டது. மற்றபடி இந்த இணைப்பு ஒப்பந்தம் வேறு எதையும் குறிக்கவில்லை. தற்காலிகமாக காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகிவிட்டது என்ற பாத்தியதையை அந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு அளிக்கவில்லை.
மவுண்ட் பேட்டனின் ஆலோசனையின் பேரில் ஒரு நிபந்தனையும் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. அதாவது, “படையெடுப்பாளர்கள் துரத்தப்பட்டு அமைதி சூழ்நிலை நிலைநாட்டப்பட்டபின், காஷ்மீர் மக்களது விருப்பத்தின் அடிப்படையில் காஷ்மீரின் இணைப்பு பற்றி இறுதி முடிவெடுக்கப்படும்” என்பதே அது. ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேல், பின்னாளில் ஜனசங்கத் தலைவராக மாறிய ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகிய அமைச்சர்கள் உள்ளிட்ட மத்திய அமைச்சரவையின் ஏகமனதான ஒப்புதலோடுதான் அந்த ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக் கொண்டது. (ஆதாரம்: “காஷ்மீர் – உண்மையில் நடந்தது என்ன?” என்ற நூலில் பக்கம் 12-24, ஆசிரியர்: அஜித் பிரசாத் ஜெயின், 1950-இன் ஆரம்ப ஆண்டுகளில் நேரு அமைச்சரவையில் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர்.)
இதற்கிடையே பாகிஸ்தானின் போர் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி ஐ.நா.சாசனத்தின் 3-வது விதியைக் காட்டி ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் இந்தியா முறையிட்டது. ஐ.நா. சபையின் தலையீட்டால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இரு நாட்டுப் படைகளும் ஆக்கிரமித்திருந்த காஷ்மீரத்தின் பகுதிகள் அந்தந்த அரசின் – படைகளின் ஆதிக்கத்தில் இருக்கும். ஐ.நா.சபையின் மேற்பார்வையில் காஷ்மீரின் எதிர்காலம் குறித்து “காஷ்மீர் மக்களிடையே ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீரின் எதிர்காலம் பற்றித் தீர்மானிக்கப்படும்” என்று ஐ.நா. சபை தீர்மானித்தது. இதை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டன. இவ்வாறுதான் காஷ்மீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பங்கு போட்டுக் கொண்டன.
அதன் பின்னர் நேரு முதல் இன்றைய மோடி வரையிலான எல்லா பிரதமர்களும், எல்லா அரசுகளும் காஷ்மீர் மக்களை முதுகிலும் நெஞ்சிலும் குத்தி வருகின்றனர் என்பதுதான் வரலாறு. 1947 இல் பாகிஸ்தான் படைகளிடமிருந்து விடுதலை பெறுவதற்கு காஷ்மீர் மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் உள்ளே சென்றது இந்திய இராணுவம். இன்று இந்தியாவிடமிருந்து விடுதலை கேட்கும் காஷ்மீர் மக்களை ஒடுக்குவதற்கு இந்திய இராணுவத்தின் பெரும்பகுதி காஷ்மீரில் நிரந்தரமாகவே நிலை கொண்டிருக்கிறது.
_____________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2016
_____________________________
இந்த கதை இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திற்க்கும் பொருந்தும்… ஜதராபாத் செய்யாத வேலையா? இப்பொழுது ஜதராபாத் எப்படி உள்ளத்… கர்நாடககாரனுக்கு காவேரி போல, பாகிஸ்த்தானுக்கு காஷ்மீர்… ஒன்றுக்கும் உதவாத ஊரை ஏன் பாகிஸ்த்தான் சொந்தம் கொண்டாட துடிக்க வேண்டும்?? காஷ்மீர் மக்களின் ஆதரவும், துணையும் இல்லாமல் இந்தியா நான்கு போரில் பாகிஸ்தானை வீழ்த்தி இருக்க முடியுமா? பின்லேடனுக்கே ஆதரவு கொடுத்த பாகிஸ்தானால் தான் காஷ்மீரில் இவ்வளவு குழப்பமும்…. இப்படியே போனால் அடுத்த அணுகுண்டு சோதனையை இந்தியா, இந்திய மக்களின் ஆதரவுடன், காஷ்மீரிலே தான் நடத்தும்… வினவு வரலாற்ற ஒழுங்காக படிக்கவில்லை… இந்தியா சுதந்திரம் அடையும் பொழுது, மூன்று நாடுகளின் கீழ் பல மாநிலங்கள் இருந்தன, ( டச், பிரான்ஸ், பிரிட்டன் ), அதனை ஒடுக்கி ஒன்றினைக்கப்படது தான் “இந்திய துணை கண்டம்” (நாடு அல்ல ).. ஒரு “கண்ட” திற்குறிய எல்லா லட்சனகளும் பொருந்தியாதால் இந்தியாவை “துணை கண்டம்” என்றழைத்தனர்.. இதில் ஒரு சிறிய மாநிலம் சுதந்திரம் கேட்பது வேடிக்கையானது.. உலகத்தில் உள்ள எல்லோருக்கு தெரியும் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது…. இந்தியாவின் விளையாட்டு பொருள் “காஷ்மீர்”.
வினவு வரலாறைப் படிக்கிறது இருக்கட்டும், நீங்க கட்டுரைய படிசீங்களா இந்தியனாரே ?
முழுசா படிச்சிட்டு வாங்க பேசுவோம் .. எப்போ காஷ்மீர் மக்கள் மத்தியில, ஐ.நா முன்னிலையில தேர்தல் நடத்தப்போறீங்க ?
எவ்வுளவு பொய்களை கூச்சமே இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறீர்கள், அப்படி என்னையா இந்தியா உங்களை போன்றவர்களுக்கு துரோகம் செய்தது ஏன் இப்படி இந்த மாதிரி பொய்களை பரப்பி கொண்டு இருக்கிறீர்கள்.
ஜ.நா தீர்மானத்தின்படி பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை இந்தியாவிடம் திருப்பி கொடுக்க வேண்டும், அதன் பிறகு ஜ.நா மேற்பையாளர்கள் முன்னணியில் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடந்த வேண்டும்.
நேரு காலத்தில் இந்தியா வாக்கெடுப்பு நடத்த தயாராக இருந்தும் பாகிஸ்தான் அப்போது அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஜியா பாகிஸ்தானின் அதிபராக இருந்த காலத்தில், பங்களாதேஷ் தோல்விக்கு பழி தீர்க்க காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பிரிவினையை தூண்டி விட்டார்கள்.
இதில் பஞ்சாப் மக்கள் பாகிஸ்தானின் தீய நோக்கத்தை புரிந்து கொண்டு தீவிரவாத பாதையில் இருந்து விலகி வந்தார்கள்.
ஆனால் காஷ்மீரில் இஸ்லாமியர்கள் மத்தியில் மதவெறி தூண்டி விட பட்டு,______ (பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் ஒரு ஹிந்து கூட கிடையாது), காஷ்மீரை முற்றிலும் இஸ்லாமியர்களின் மாநிலமாக மாற்றி இருக்கிறார்கள். _______
_______
நீங்கள் குறை சொல்ல வேண்டுமானால் பாகிஸ்தானை தான் குறை சொல்ல வேண்டும் ஆனால் இளிச்சவாய தேசமான இந்தியாவின் மீது குறை சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.
மனசாட்சியோடு பேசுங்கள். தீவிரவாதிகளுக்காக பேசாதீர்கள்.
உலகமரியாத குழந்தைகள் நீங்கள்
ஆகவே இந்திய அரசின் யோக்கியதை உங்களுக்கு தெரியாது
__________
இவர்கள் காஸ்மீர் மக்களுக்கு ஏதோ உரிமை இருப்பது போலவும் தமிழ் நாடு ஹைதராபாத் பஞ்சாபி மக்கள் எல்லாம் முட்டாள்கள் போலவும் கட்டுரை எழுதுகிறார்கள் . உண்மையில் வஞ்சிக்கப்பட்டது யார் என்றால் பஞ்சாபி சீக்கிய மக்கள் தான்.
சீக்கியர்களின் பஞ்சாபை இரண்டாக பிளந்ததோடு அல்லாமல் ,குறு நானக்கின் சமாதி பாகிஸ்தான் வசம் போனதோடு அல்லாமல் , அதை மூடியும் வைத்துவிட்டார்கள் . காபாவை அப்படி வைத்துவிட முடியுமா ?
அடுத்து தனி நாடாக போயிட்டாள் மக்கள் சுபிட்சமாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடுவார்கள் என்று அதிகார ஆகாஷை உள்ளவர்களால் நம்ப வைக்கப்படுகிறார்கள். தமிழ் நாட்டில் அண்ணாவும் இதே கோரிக்கை வைத்து இருந்தார் .
அப்படி தனி நாடு மக்கள் வாழ்வை உயர செய்யும் என்றால் மார்க்ஸ் சொல்லி இருக்க மாட்டாரா ?
ராமா,
மார்க்ஸ் சொல்றது இருக்கட்டும். இப்போ இங்கே யாரு உங்க கிட்ட வந்து காஷ்மீர தனியா பிரிச்சிக் கொடுன்னு சொன்னது?. வினவா ?..எங்க சொன்னாங்க ? எடுத்துக் காமிங்க பாஸ்.
காஷ்மீர்ல ஒப்பந்தம் போட்ட மாதிரி மக்கள் மத்தியில் தேர்தல் நடத்துயான்னு சொன்னா, பஞ்சாப்ல பாதி போச்சு, மண்டை மயித்துல மீதி போச்சுன்னு கதை பேசுறீங்களே ..
இந்திய ராணுவ பொறுக்கி ___ வெளியேத்துன்னு சொல்றோம், அங்க இருக்குற ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை இரத்து செய்யுன்னு சொல்றோம்.
இதுல என்ன தப்பு இருக்கு ?
இதுல என்ன அதிகார ’ஆகாஷை’ இருக்குமோ புரியலையே ?
இந்திய ராணுவத்தை பொருக்கி என்று கூறிய, இணையத்தில் மறைந்து கல் வீசும், ஒரு தவறான கம்ம்யூனிஸ்த்தால் வழி நடத்தப்பட்ட ____ எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் .
இந்தியா என்னும் பல தேசங்களின் கட்டமைப்பை கட்டி காக்க காஸ்மீர் மக்களுக்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை . இதில் நியாயம் தருமம் பேச தேவை இல்லை . இன்றைக்கு காஸ்மீர் இஸ்லாமியர்களுக்கு வாக்கெடுப்பு உரிமை கொடுத்தால் , ( அது சட்டப்படி இருந்தாலும் ) , நாளை ஹைதராபாத் இசுலாமியர்கள் அதே உரிமையை கேட்பார்கள் . அது தமிழ் நாடு தனி நாடு, பஞ்சாப் ,மேகாலயா என்று அடுத்து அடுத்து சீட்டு காட்டாய் விழும் .
ஒரு தேசம் என்பதை கட்டி காப்பது எளிது அல்ல . வேண்டுமானால் இராக் சிரியா சென்று பார் .ஏன் பாகிஸ்தான் இரண்டாக பிளந்தது என்று யோசி__ .
______இந்திய குடிமகனாக இருக்கும் படச்சத்தில் , காஸ்மீர் மக்களுக்கு இந்திய கூட்டமைப்பில் என்ன இன்னல்கள் தரப்படுகிறது , அவர்கள் தனியாக சென்றால் என்ன நன்மை . தனியாக செல்ல கேட்கும் காரணங்கள் என்ன என்பதை பட்டியல் இடு . இந்தியாவில் உள்ள மற்ற நாடுகள் ஏன் தனியாக போக கூடாது , அவர்களுக்கு ஏன் அந்த உரிமை இல்லை என்று சிந்தி .நுனி கிளையில் அமர்ந்து அடிக்கிளை வெட்டுவது மடத்தனம் .
_____ இந்திய குடிமகனாக இல்லாத பட்சத்தில் ____ போன்ற நியாயம் பேசும் __ உள்நோக்கமேயென்ன என்று அனைவரும் அறிவோம்
\\இணையத்தில் மறைந்து கல் வீசும், //
மறைந்து கொள்ள முடியாத வெட்ட வெளி இது.IP யை வைத்து எங்கிருந்து கல் வந்தது என எளிதாக கண்டுபிடிக்கலாமே .மெத்த படித்த மேதாவிகளுக்கு இந்த எளிய உண்மை எட்டவில்லையே.
\\இந்தியா என்னும் பல தேசங்களின் கட்டமைப்பை கட்டி காக்க காஸ்மீர் மக்களுக்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை . இதில் நியாயம் தருமம் பேச தேவை இல்லை //
அப்படி ஒரே போடா போட்டுட்ட பிறகு விவாதம் என்ன வேண்டிக்கிடக்கு.அதர்மத்தின் படியும் அநியாயமாகவும்தான் காசுமீரை இந்தியா பிடித்து வைத்துள்ளது என ஒப்புக்கொண்டதற்க்கு நன்றி
காஸ்மீர் மட்டும் இலை சார் இன்னும் பல தேசங்களை புடுச்சு வெச்சுகிறோம் . ஹைதராபாத்தை ராசாவோட பணத்தை கொள்ளை அடுச்சு அவர் நாட்டையும் புடுங்கி கிட்டோம் .
//காஸ்மீர் மட்டும் இலை சார் இன்னும் பல தேசங்களை புடுச்சு வெச்சுகிறோம் . //
ஒம்மவாளொட நலனுக்காக புடிச்சு வச்சுண்டு அப்பாவி காஷ்மீர் மக்கள ஏன் ஓய் சுட்டுத்தள்றேள்…
உங்கள் சோழ தேசமே எங்கள் நாட்டு அடிமை தானே . உங்களுக்கு சுதந்திரம் வேண்டாமா ? 🙂
காஷ்மீரில் இந்தியா வஞ்சிக்கப்பட்ட வரலாறை சொல்வதற்கு ஒருவரும் இல்லை. தீவிரவாதிகள் கொலைகாரர்கள் தேசவிரோதிகள் திருடர்களுக்கு எல்லாம் பலரும் குரல் கொடுக்கிறார்கள் ஆனால் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கு மத ஒற்றுமைக்கு ஒருவரும் குரல் கொடுப்பது இல்லை, ஒரு பக்கம் இனவாதம் அடிப்படையில் பிரிவினை பேசி கொண்டு இருக்கிறார்கள் இன்னொரு பக்கம் மதவெறி பிடித்து பிரிவினை தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள், இது எல்லாம் தவறு என்று சொல்வதற்கு ஒருவரும் இல்லை இந்த நாட்டில்…
காஷ்மீர்ல ஒப்பந்தம் போட்ட மாதிரி மக்கள் மத்தியில் தேர்தல் நடத்து, இந்திய ராணுவ பொறுக்கி ________ வெளியேத்துன்னு சொல்றோம், அங்க இருக்குற ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை இரத்து செய்யுன்னு சொல்றோம்.
இதுல என்ன தப்பு இருக்கு ?
இது பாதி உண்மையும் பாதி பொய்யுமாகத் திரித்து எழுதப்பட்டது. காஷ்மீரம் இந்தியாவுடன் இறுதியாக இணைக்கப்பட்டதாகத்தான் மகாராஜா சிங் கையெழுத்திட்டார். காஷ்மீரத்தில் வாழும் இந்துக்களையெல்லாம் விரட்டி அடித்துவிட்டு அதை தீவிர இசுலாமியநாடாக மாற்ற விழையும் காஷ்மீர முச்லிம் மக்கள் ஒரு 15 % அல்லது 20% சதவிகிதம் பேர் தான் இருப்பார்கள். எனவே இந்திய அரசுக்கு எதிராகவும் , இந்திய ராணுவத்தை இழிவு படுத்தியும் எழுதாதீர்கள் . அது தேசத்துரோகச் செயாலகும்
வந்துட்டாருய்யா தேசபக்திமான்.
தேசதுரோகம்னா என்னன்னு தெரியுமா தியாகராஜரே …
அதுக்கு தேசம்னா என்னானு தெரியனும். இந்தியா ஒரு ஜனநாயக நாடுன்னு சொல்லிறீங்கல்ல ?.. ஜனநாயக முறைப்படி சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவதில் என்ன சிக்கல் இருக்கு ?
காஷ்மீர் இந்த நாட்டுக்கு சொந்தம்னு சொல்றீங்க .. அப்போ காஷ்மீரிகள் இந்தியர்கள்னு தான் சொல்ல வர்றீங்க. எவனாவது சொந்த நாட்டு மக்களையே இராணுவத்தை விட்டு கொலை செய்ய கற்பழிக்க விடுவானா ?. அப்படி செய்யிறவன், பெத்த தாயையும் , சகோதரிகளையும் கற்பழிக்கக் கூடத் தயங்காதவனா தான இருக்க முடியும். அவன் தான தேச துரோகியா இருக்க முடியும்.
இப்போ சொல்லுங்க தியாகராஜரே .. எந்த ____தேசதுரோகின்னு ..
உலகத்துல எல்லா நாடும் நூறு சத்தம் நியாயமாக நடந்துட்டு இருக்கா ?
_______
வாக்கெடுப்பு கிடையாது , பெல்லட் அடி தான் கிடைக்கும்
\\ உலகத்துல எல்லா நாடும் நூறு சத்தம் நியாயமாக நடந்துட்டு இருக்கா ? //
ராமனின்ப க்கத்து வீட்டுக்காரன்,எதுத்த வீட்டுக்காரன்,எல்லோரும் பேருந்து விபத்து நடந்த இடத்துலேர்ந்து ஆளுக்கொண்ணா தூக்கிட்டு போனாங்க என்றால் இவரும் காயம்பட்டு கிடைக்கும் ஒரு பயணியின் கைப்பேசியை திருடிக்குவார் போல.
நாங்க ரொம்ப கெட்டவங்க சார் . காலிஸ்தான் நாகலாந்து ஹைதராபாத் தமிழ்நாடு ( சேர சோலா பாண்டிய ) அப்படின்னு பல நாடுகளை புடுச்சு வெச்சு அட்டூழியம் பண்றோம் . உங்க அளவுக்கு நியாயமான ஆள்களோ , நியாயமான புத்தகத்தோட வழிகாட்டுதலோ எங்களுக்கு இல்லைங்க
வணக்கம் அந்நியர், நீங்கள் எழுதும் எழுதும் அந்நியமே. காஸ்மீரது மக்கள் கோரிக்கையை ஏற்று கொண்டால், மற்ற மாநிலத்து மக்களும், மொழியால், மதத்தால் என்று ஒவ்வொவரு காரணத்திற்க்கவும் சுதந்திரம் கேட்க தொடக்கி விடுவார்கள். இந்திய நாட்டில் காஸ்மீரது மக்கள் மட்டும் வேதனையை அனுபவிப்பது போல ஒரு கட்டுரை வேறு. ஏன் சீனா அக்கிரமித்து வைத்துள்ள திபெத் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்து கட்டுரை வெளியிடுங்களேன்.
அதுதான் சர்வ ரோக சஞ்சீவினி கோ மாதா இருக்கிறாளே! பாகிஸ்தானுக்குள் பத்திவிடுங்கள் அம்ப்பிகளே!எல்லாம் சரியாகிவிடும்.
காஸ்மீர தனி நாடா ஒரு இசுலாமிய முரட்டு முட்டாள் தேசம் புதிதாக உற்ப்பத்தி ஆகும் அது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமியுமே தவிர காஸ்மீர் மக்கள் எல்லாம் நலம் வளம் பெற்று வாழ்ந்து விடுவார்களா…
இந்திய அரசும் (முட்டாள் தேசன்) அப்படித்தானய்யா இருக்கு
வழக்கம் போல கட்டுரை எழுதும் வினவு உழைக்கும் மக்களை ஏய்க்கும் ஏகாதிபத்திய கைக்கூலி இசுல்லமிய அரசு ,அமெரிக்க கூலிப்படை தீவிரவாதிகள் என்றெல்லம் எழுதும் அதை தவிர்த்து மக்களுக்கு எல்லாம் ஒன்னும் நடக்காது ,காஸ்மீர் தனி நாடாக ஆன பிறகு இது தேவயா
கால கொடுமை, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியில் எந்த பிரச்சனையும் இல்லாமல் அதுவும், காஸ்மீர் நாடு உருவாக வேண்டும் என்று எவரும் போராட்டம் நடத்தவும் இல்லை, இதில் பத்தி காஸ்மீரத்தை சீனாவிற்கு தாரை வார்த்து விட்டார்கள். எல்லை பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள், மற்றும் கண்காணிப்பு இல்லையென்றால் ஆக்ரமிப்பு செய்யும் பாகிஸ்தான் ராணுவம் என்று பல பிரச்சனைகளுடன், வீரத்துடனும், தீரத்துடனும் எல்லையை காப்பற்றும் ராணுவ வீரர்கள், இழிவு படுத்துவதே வேலையாக இருக்கிறது. இன்று காஸ்மீரத்தை விடு கொடுத்தால், நாளை காலிஸ்தான், நாளை மாரு நாள், மொழி வாரி நாடுகள் என்பதற்கு தூபம் போடுவதற்கு சமம், தங்களின் மதத்திற்கஎ போராடும் இவர்களை, ஆடு மந்தையில் வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம். எம் மதமும் சம்மதம் என்று உள்ள ஒரே நாடு இந்தியா மட்டும் தான். அதன் பான் முக தன்மையை எவ்வாறு வலுப்படுத்துவ.து என்று ஆலோசனையை நீங்கள் வழங்கலாம், அதை விட்டுவிட்டு அபத்தமான போராட்டத்தி ஆதரிப்பது மகா கேவலம்